Tuesday, February 22, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 9)
பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8

"மீரா Monday evening என்ன பிளான்... நாம எங்கயாச்சும் வெளிய போலாமா?" என காதலர் தினத்திற்கான திட்டத்தை செயல்படுத்த முனைந்தான் ஸ்டீவ்

அவளிடமிருந்து அப்படி ஒரு பதில் வருமென தெரிந்திருந்தால் கேட்டே இருக்க மாட்டேன் என அதன் பின் வருந்தினான்

"சாரி ஸ்டீவ்... சதீஷ் கேட்டான்... ஒகேனு சொல்லிட்டேன்" என்றாள் மீரா

மீரா கூறிய பதிலில் நிலை குலைந்தவன், கோபத்தில் அவள் மனம் புண்பட பேசி விடுவோமோ என அஞ்சியவன் போல் மௌனத்தை ஆயுதமாக்கினான் ஸ்டீவ்

"ஒகேனு சொன்னது டின்னர்க்கு மட்டும் தானா இல்லை வாழ்க்கைக்குமா?" என மனதில் தோன்றிய கேள்வியை கேட்க இயலாமல் முகம் இறுக நின்றான் ஸ்டீவ்

அவனின் முக இறுக்கத்திற்கான காரணம் புரியாத மீரா "ஸ்டீவ் என்னாச்சு?" என வினவ, அந்த நேரத்தில் கூட குழப்பத்தில் கோடிட்ட அவள் நெற்றியை, முடிச்சிட்ட புருவங்களை எப்படி தன்னால் ரசிக்க முடிகிறது என தன் மீதே கோபம் கொண்டான் ஸ்டீவ்

ஒருத்தி மீது மனம் பதிந்து விட்டால் அவளின் ஒரு ஒரு செய்கையையும் மனம் ரசிக்கும், அது தன்னை துன்புறுத்தும் செய்கை என்றாலும் கூட என எப்போதோ படித்த ஆங்கில கவிதை ஒன்று நினைவில் வந்து தொலைத்தது அவனுக்கு. அதை படித்த போது, இது என்ன பைத்தியகாரத்தனமான சிந்தாந்தம் என நண்பர்களிடம் வாதாடி இருக்கிறான் ஸ்டீவ்

ஆனால் அந்த நிலை தனக்கே வருமென அவன் நினைத்து கூட பார்த்ததில்லை. இப்போது யோசித்தபோது அதை எழுதியவன் நிச்சியம் அனுபவித்து தான் இதை எழுதி இருக்க வேண்டுமென தோன்றியது ஸ்டீவிர்க்கு

"ஸ்டீவ்...?" என மீராவின் அழைப்பில் சுயநினைவுக்கு வந்தவன், ஒரு முடிவுக்கு வந்தான். எதற்கு தினம் தினம் இந்த கொல்லும் அவஸ்தை, நேரடியாய் அவள் மனதில் உள்ளதை கேட்டு விடுவது தான் சரி என உறுதியாய் நினைத்தான்

அதே உறுதியுடன் "Can you give me a straight answer Meera?" என்றான் பொறுமை இழந்த குரலில்

"என்ன ஸ்டீவ்? கேளு" என்றாள் மீரா, எதுவும் புரியாத குழப்பம் மேலிட

"நீ சதீஷை லவ் பண்றயா?" என உதடு வரை வந்த வார்த்தைகளை வெகு பிரயத்தனப்பட்டு அவசரமாய் நிறுத்தினான் ஸ்டீவ்

"ஒருவேளை அவள் 'ஆமா நான் சதீஷை லவ் பண்றேன்' என்று கூறிவிட்டால் அதன் பின் என்ன இருக்கிறது. எதுவும் முடிவாய் அறியாத வரை மட்டுமேனும் சிறு நம்பிக்கையில் இருக்கலாம்" என மனதில் தோன்றியதும், ஸ்டீவ் அதற்கு மேல் பேச விருப்பம் இல்லாதவன் போல் அமைதியானான்

இது வரை தன் வாழ்வில் எந்த ஒரு விசயத்தையும் இப்படி கோழைத்தனமாய் தள்ளி போட்டதில்லை என தோன்றியதும், தன்னை கோழையாக்கிய மீராவின் மீது காதல் உள்ள அளவு கோபமும் தோன்றியது

இதையே வேறு யாரேனும் தங்கள் வாழ்வில் நடந்த சம்பவமாய் கூறி இருந்தால், மிக சுலபமாய் "என்ன இது? Too unpractical .... காதலிக்கறயா இல்லையான்னு கேட்டுட்டு போயிட்டே இருக்க வேண்டியது தானே. ரெம்ப நாள் காத்திருந்து இல்லேன்னு சொல்லிட்டா அப்ப என்ன பிரயோஜனம்... This is all waste of time" என தானே குதர்க்கமாய் பேசி இருப்பேன் என நினைத்தான் ஸ்டீவ்

ஆனால் தனக்கு என வரும்போது தான், இல்லாத இலக்கணங்களும் நம்பிக்கைகளும் தோன்றி காதல் வேள்வியை முடியும் மட்டும் நீட்டிக்க சொல்கிறது என தோன்றியது ஸ்டீவிர்க்கு

உள்மனதுடன் போராடிய அவன் முகபாவனையில் இருந்து எதையும் உணர முடியாத மீரா "என்ன ஸ்டீவ்? ஏதோ கேக்கணும்னு..." என மீரா தயக்கத்துடன் நிறுத்த

"ஒண்ணுமில்ல... " என்றவனின் முகத்தில் இருந்த கோபமும் பதட்டமும் மீராவிற்கு ஏதோ பிரச்சனையோ என தோன்றியது

"ஸ்டீவ்... ஏன் இப்படி...ஏதோ கோபமா பேசற... எனக்கு ஒண்ணும் புரியல" என புரியாத பார்வை பார்க்க அது இன்னும் அவன் கோபத்தை வளர்த்தது

தன் கண்களில் வழியும் காதலை இவள் உணரவில்லை எனில் இவள் மனதில் தான் இல்லை என்று தானே அர்த்தம் என தோன்றியதும் மிகவும் சோர்வானான் ஸ்டீவ்

ஆனால் அதை அவள் வாய்வழியாய் கேட்க விரும்பாதவன் போல் மௌனமானான். சோர்வும் இயலாமையும் கோபமாய் உருவெடுத்தது

அத்தனை கோபத்திலும் கூட அவள் வருந்தும்படி பேசிவிட கூடாதென மிகவும் கட்டுப்படுத்தி நின்றான்

இன்னும் அவளருகில் நின்றால் தன்னால் இதே போல் பொறுமையாய் இருக்க முடியாது என உணர்ந்தவனாய் "ஒகே...அப்புறம் பாக்கலாம்" என அவள் பதிலுக்கு கூட காத்திராமல் அங்கிருந்து விரைந்து சென்றான் ஸ்டீவ்

அவன் சென்று சிறிது நேரம் ஆகியும் மீரா குழப்பம் விலகாமல் நின்றாள். அவனின் கோபத்திற்கான காரணம் அறியாமல், அவன் கோபம் தன்னை ஏன் இத்தனை பாதிக்கிறது எனவும் புரிந்து கொள்ள முடியாமல் தவித்தாள்

திடீரென சதீஷின் காரணமற்ற கோபமும் நினைவில் வந்தது. சில நாட்களாகவே சதீஷ் மறைமுகமாய் ஸ்டீவ் மீது காட்டும் வெறுப்பை அவள் உணராமல் இல்லை

பள்ளி நாட்கள் முதலே அது அவளுக்கு பழகியது தான். பள்ளி இறுதி வகுப்பில் உடன் பயின்ற மாணவன் ஒருவன் மீராவிடம் உரிமையாய் பேசியதற்கு சதீஷ் அவனை அடித்தது நினைவுக்கு வந்தது

அந்த சம்பவத்தில் மீரா சதீஷிடம் மிகவும் கோபம் கொண்டு ஒரு வாரம் பேசாமல் இருந்தாள். அப்போது இனிமேல் இது போல் நடந்து கொள்ளமாட்டேன் என பல முறை சதீஷ் மன்னிப்பு கேட்டபின் தான் மீரா அவனிடம் பழையபடி பேசினாள்

ஆனால் புதியதாய் சந்திக்கும் எவரிடமும், மீராவின் மீது அவனுக்கு மட்டுமே உரிமை அதிகம் என தன் செய்கையால் சதீஷ் நிலைநாட்ட தவறியதில்லை. என்ன வெறித்தனமான அன்போ என சில நேரம் சலிப்பு கூட வரும் மீராவிற்கு. ஆனால் சதீஷின் தூய்மையான அன்பில் அந்த சலிப்பும் கோபமும் மறைந்து விடும்

அன்று ஸ்டீவின் வீட்டிற்கு படிக்க சென்ற ஒரு நாளில் தான் எல்லோருக்கும் முன் ஸ்டீவின் வீட்டிற்கு சென்று அவனுடன் அரட்டை அடித்தது தெரிந்தால், தேவையின்றி சதீஷ் ஸ்டீவின் மீது வன்மம் வளர்க்கலாம் என தோன்றியதால் தான், அப்போது தான் அவளும் வந்ததாய் பொய் உரைத்தாள் மீரா

அதை பற்றி ஸ்டீவ் அதன் பின் கேட்டால் எப்படி சமாளிப்பது என கலங்கி கொண்டும் இருந்தாள், நல்லவேளை அவன் எதுவும் கேட்காமல் போக, மறந்து விட்டான் போலும் என நிம்மதியானாள்

ஏனோ ஸ்டீவும் சதீஷும் எதிரிகளாய் நிற்பதை அவளால் கற்பனை கூட செய்ய இயலவில்லை.அதற்கான காரணமும் அவளுக்கு புரியவில்லை

ஆனால் இன்று ஸ்டீவ் தன் மீது கோபம் கொண்டதற்கு என்ன காரணம் என்ற குழப்பம் அவளை தூங்க விடாமல் துரத்தியது. அதே நேரம் ஸ்டீவும் அவளின் நினைவில் உறக்கம் தொலைத்திருந்தான். ஆனால் சதீஷ் நிம்மதியான உறக்கத்தில் இருந்தான்

******************************************

அன்று வேலன்டைன்ஸ் டே. பல்கலைகழக வளாகம் சிகப்பு ரோஜாக்களாலும் சிரிப்பு ததும்பிய முகங்களாலும் நிறைந்து இருந்தது

மேற்கத்திய கலாசாரத்தில் அது காதலர் தினமாய் மட்டும் பார்க்கப்படவில்லை, அன்பை பரிமாறிக்கொள்ளும் தினமாய் தான் பார்க்கப்பட்டது. அதில் காதல் என்ற அன்பும் ஒருவகை மட்டுமே. எனவே காதல் ஜோடிகள் மட்டுமின்றி எல்லோரும் கையில் பூக்களுடனும் பரிசு பொருட்களுடனும் வலம் வந்தனர்

ஸ்டீவ் இந்த வருடத்தின் இந்த நாளை பற்றி நிறைய கற்பனை கொண்டிருந்தான். ஒன்று, இந்த நாளிற்கு முன்பே தன் மனதை மீராவிடம் கூறி ஜோடியாய் இந்த நாளை திட்டமிட்டு கொண்டாடுவது அல்லது இந்த நாளில் நிச்சியமாய் மனம் விட்டு மீராவிடம் பேசுவது என டிசம்பர் விடுமுறையில் ஊரில் இருந்தபோதே ஸ்டீவ் முடிவு செய்திருந்தான்

பல இரவுகள் அந்த கற்பனையில் லயித்தும் இருந்தான். ஆனால் அது எதுவும் நிறைவேறாதது மட்டுமின்றி அடிப்படையே ஆட்டம் கண்டு விடுமோ என அச்சமும் மனதில் தோன்றி அலைகழித்தது

அன்று வேண்டுமென்றே மீராவிடம் மட்டுமின்றி யாரிடமும் பேசுவதை தவிர்த்தான் ஸ்டீவ். வீட்டிலேயே இருந்து விடலாம் என்று தான் முதலில் நினைத்தான். ஆனால் அன்று மீராவை பார்க்காமல் இருக்கவும் மனம் ஒப்பவில்லை

"If you live to be a hundred, I want to live to be a hundred minus one day so I never have to live without you" A. A. Milne என்ற கவிஞன் எழுதிய வாசகம் கண் முன் வந்தது. இதை பாடமாய் படித்த பள்ளி பிராயத்தில் சிரிப்பும் விளையாட்டுமாய் இதை விமர்சித்ததும் நினைவில் வந்தது

எந்த நாட்டில் பிறந்தால் என்ன, எந்த மொழியை பேசினால் என்ன, எந்த நூற்றாண்டில் வாழ்ந்தால் தான் என்ன, காதல் என்ற உணர்வு ஆட்கொண்டு விட்டால் கிளியோபேட்ராவின் காதலன் ரோமானிய பேரசர் ஜூலியஸ் சீசரும் ஒன்றே, நம் ஊர் பார்வதியின் காதலன் தேவதாஸும் ஒன்றே

அன்று ஓரிருமுறை மீராவும் மதுவும் ஸ்டீவிடம் பேச முயற்சித்தும் அவன் நழுவினான். ஆனால் அன்று இரவு உணவுக்கு மீராவும் சதீஷும் சென்ற போது அவர்கள் அறியாமல் அவர்களை பின் தொடர்ந்தான்

இது தவறு, சிறிதும் நாகரீகமற்ற செயல் என அறிவு உணர்த்திய போதும், அதை கேட்கும் மனநிலையில் காதல் வயப்பட்ட ஸ்டீவின் மனம் இருக்கவில்லை. எனக்கு உரிமையானவளை பாதுகாக்கவே செல்கிறேன் என உறுத்திய மனதிற்கு சமாதானம் கூறிக்கொண்டான்

*****************************************

வடஇந்திய உணவு வகைகள் மீராவிற்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதிலும் Chaats என்றழைக்கப்படும் வகை உணவுகளை விரும்பி உண்பாள்

அவளது விருப்பம் அறிந்த சதீஷ், பிரபலமான வடஇந்திய உணவகமான "Brar's Sweets & Restaurant"க்கு அழைத்து வந்திருந்தான். அங்கு buffet முறை மிகவும் பிரசித்தி பெற்றது. இனிப்புகளுக்கு முக்கியத்துவம் கொண்ட உணவகம் அது. Chaats வகைகளுக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்பட்டிருக்கும்

அன்று "வேலன்டைன் டே" காரணமாய் சற்று கூட்டமும் கூடவே இருந்தது. எல்லா மேஜையின் மீதும் ஒரு சிறிய கண்ணாடி குவளையில் ஒற்றை சிகப்பு ரோஜா வைக்கப்பட்டு நேர்த்தியாய் அதே வண்ணத்தில் போடப்பட்டிருந்த மேஜை விரிப்புகள் ரசனையை தூண்டின

அறிந்தோ அறியாமலோ மீராவும் அதே சிவப்பு வண்ணத்தில், தங்கநிற  பட்டு நூலால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட சல்வாரை அணிந்து இருந்தாள்

அதை கவனித்த சதீஷ் "என்ன மீரா ஒரே மேட்ச் மேட்ச்ஆ இருக்கே?" என கேலியாய் வண்ணத்தை காட்டி சிரிக்க "Seventh Sense Sathish..." என அவனோடு ஒத்து கேலி செய்தாள் அவளும்

சதீஷ் எதிர்பார்த்தது போல் சாட்ஸ் வகை உணவை தான் ரசித்து உண்டாள் மீரா. "நல்ல Chaat சாப்ட்டு எவ்ளோ நாள் ஆச்சு சதீஷ்...தேங்க்ஸ்" என அவள் நன்றியும் கூற அது அவனை மேலும் மகிழ்ச்சிப்படுத்தியது

ஆனால் அந்த இருவரின் மகிழ்ச்சி நிறைந்த முகங்கள், உணவகத்துக்கு வெளியே உறையும் பனியில் நின்று அவர்களை பார்த்து கொண்டிருந்த ஸ்டீவை அளவில்லா கோபத்தில் ஆழ்த்தியது

இது தான் சமயமென சதீஷ் பேச்சை துவங்கினான் "மீரா நான் உன்கிட்ட ஒண்ணு கேக்கலாமா?" என தயக்கமாய் நிறுத்தினான்

இது போல் சதீஷ் தன்னிடம் தயங்கியது இல்லை என்பதால் அவனை ஆச்சிர்யமாய் பார்த்த மீரா "என்ன?" என்பது போல் கேள்வியாய் நோக்கினாள்

அவளை நேரே பார்க்க இயலாதவன் போல் கண்ணாடி குவளையில் இருந்த ரோஜாவை கையில் எடுத்து ஆராயும் பாவனையுடன் பார்வையை பூவில் பதித்தபடி "அது....நீ யாரையாச்சும் லவ் பண்றயா?" என கேட்டான்

மீரா வியப்பும் சிரிப்புமாய் அவனை பார்த்தாள். அவளிடமிருந்து பதில் வராமல் போக சதிஷின் பார்வையும் இப்போது அவள் முகத்தில் நிலைத்தது

அவளின் முகத்தில் இருந்து எதையும் அறிந்து கொள்ள முடியாமல் "உன் பதிலுக்கு காத்திருக்கிறேன்" என உணர்த்துவது போல் தன் கையில் இருந்த ரோஜாவால் மெல்ல அவள் கையில் அடித்தான் சதீஷ்

அந்த காட்சி ஸ்டீவின் முகத்தில் அறைந்தது. அவர்கள் பேசுவது தன் காதில் விழாத போதும், சதீஷின் செய்கை பல விசயங்களை சொல்லாமல் சொல்வது போல் நினைத்தான்

அந்த நிமிடமே உள்ளே சென்று அவர்களை அதற்கு மேல் பேச விடாமல் தடுத்தால் என்ன என்று கூட தோன்றியது

காதல், ஒருவனை கவிஞனாய் மட்டுமல்ல, சுயநலவாதியாய், சுயம் இழந்தவனாய், ஏன் அடிப்படை சபை நாகரீகம் மீறுபவனாய் கூட மாற்றும் என்பதை அன்று தான் உணர்ந்தான் ஸ்டீவ்

இனி...

(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்...)

அடுத்த பகுதி படிக்க

105 பேரு சொல்லி இருக்காக:

மகி said...

மீ தி பர்ஸ்ட்! :)
படிச்சிட்டு வரேன்.

priya.r said...

Am i first aa second aa

priya.r said...

mahi 50 : 50 vaichuggalaamaa

மகி said...

ம்ம்..சஸ்பென்ஸ் நல்லாஆஆஆஆவே நகருது புவனா! :)

priya.r said...

அடியே அனாமி ! ரெண்டு மணி நேரமா நீ முழிச்சுருந்து என்ன பிரயோசனம்
பாரு வடை போய்டுச்சு

மகி said...

ப்ரியாக்கா,இன்னும் தூங்கலையா? கதைக்காக காத்திருந்தீங்களோ? எனக்கு மணி காலை 9.30தான்.நீங்க,தூக்கம் தொலைத்து தங்கமணியின் கதைக்காக காத்திருந்திருக்கீங்க! 50 : 50 என்ன, 100%-ம் உங்களுக்கே! என்சாய்! :) :)

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

ஆஜர் !!!

காற்றில் எந்தன் கீதம் said...

naan padichitten nalla irukku . seekirama aduththa paham veliyidungal please.....

ஹுஸைனம்மா said...

ஆஹா, ஸ்டார்ட்டாயிடுச்சா ட்ரபுள்!! (கதயச் சொன்னேன்ப்பா..)

priya.r said...

ஏன் அப்பாவி! மீரா தனது நிகழ்வுகளை சொல்வது போல கதையை கொண்டு

போய் இருந்தா இன்னும் சுவையாக இருந்து இருக்குமோ

இருந்தாலும் பதிவு நல்லா தான் இருக்கு

priya.r said...

தேங்க்ஸ் மகி !

இதை இதை தான் எதிர்பார்த்தேன்

ஹி ஹீ ஆளுக்கு பாதியே வைச்சுகுவோம் :)

priya.r said...

அப்பாவி துரோகி

எங்கே எனது கவிதை !

பிரதீபா said...

அக்கோய், நிறைய இன்பர்மேஷன் இருக்கற மாதிரி இருக்கே .. உங்க உணவு ஆர்வத்தை பாராட்டறேன். :)

priya.r said...

செல்லாது செல்லாது

கவிதை போடாம பதிவு வந்தா அது செல்லவே செல்லாது

நாட்டாமை தீர்ப்பை மாத்து ........................

priya.r said...

கதை சுமாரா இருந்தா கூட உன்ற கவிதை சூப்பர் ஆ இருக்கும்

என்று நினைத்து ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விட்டாயே அப்பாவி :(

priya.r said...

கதையை பற்றி சில வரிகள்

ஸ்டீவ் தனது காதலை சொல்ல வந்தான் .,வந்து விட்டான் வர போகிறான்

மீரா ஏதாவது சாப்பிட போனாள்;போகிறாள் ;போக போகிறாள்

அப்பாவி & நம்மை பற்றி சில வரிகள்

அப்பாவியும் மொக்கை போட்டார் ;போடுகிறார் ;இன்னும் போடுவார்

நாமும் எவ்வளோ வலித்தாலும் படித்து மகிழ( !) வந்தோம் ,வருகிறோம் ,இன்னும் வருவோம்

ஹ ஹா ஹா

Krishnaveni said...

Nice story, continue....

எஸ்.கே said...

சதீஷா? ஸ்டீவா?

முடிவு விரைவில் duckworth lewis முறைப்படி:-))

அமைதிச்சாரல் said...

என்னப்பா.. காதலர்தினத்துல ச்சாட்டா!! ஒரு ஐஸ்க்ரீம், சாக்லெட், இதெல்லாம் வாங்கிக்கொடுக்காத கஞ்சப்பிசினாறி சதீஷ் ஒழிக.. ரோஜாப்பூவக்கூட ரெஸ்டாரண்டுலேர்ந்து சுடறான் :-)))

யக்கா.. கவிதய எங்கேக்கா??..

//காதல், ஒருவனை கவிஞனாய் மட்டுமல்ல, சுயநலவாதியாய், சுயம் இழந்தவனாய், ஏன் அடிப்படை சபை நாகரீகம் மீறுபவனாய் கூட மாற்றும்//

இதோ இருக்கே.. ஆனா எண்டர் தட்ட மறந்துட்டீங்க போலிருக்கு :-)))))

Chitra said...

அமைதிச்சாரல் சொன்னது…

என்னப்பா.. காதலர்தினத்துல ச்சாட்டா!! ஒரு ஐஸ்க்ரீம், சாக்லெட், இதெல்லாம் வாங்கிக்கொடுக்காத கஞ்சப்பிசினாறி சதீஷ் ஒழிக.. ரோஜாப்பூவக்கூட ரெஸ்டாரண்டுலேர்ந்து சுடறான் :-)))


.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... ஜில்லுனு ஒரு லொள்ளு!

priya.r said...

ட்ரிங் ட்ரிங்

அப்பாவி : ஹலோ அப்பாவி ஸ்பீகிங்

எதிர்குரல் : மேடம் நாங்க தினத்தந்தில இருந்து பேசறோம் !

அப்பாவி : பேசுங்க பேசுங்க காசா பணமா

பத்திரிகை : மேடம் ! உங்க கதை சூப்பர் ஆ இருக்குங்க

அப்பாவி : எந்த கதையை சொல்லறீங்க ! சொந்த கதையை சொல்லறீங்களா

இல்லே சுனாமி ப்ளோக்ல வந்த என் சோக கதையை சொல்லறீங்களா

பத்திரிகை: இருங்க முதலில் பேச வந்த மேட்டரை பேசி கொள்ளலாம்

அப்பாவி : சொல்லுங்க சீக்கிரமா சொல்லுங்க மீ வெரி பிஸி யு நோ

பத்திரிகை: சிந்துபாத் கதைக்கு ஒரு மாற்று ஏற்பாடு பண்ணனும்னு

ரொம்ப நாளா தேடி கடைசியில் உங்களை தேர்தெடுத்து இருக்கோம்

அப்பாவி : அப்படி என்னங்க என் கதையில் விசேஷம்

பத்திரிகை : ஒரு விசயமும் இல்லாதது தாங்க விசேஷமே!

அப்பாவி : டென்சனுடன் ! கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க சார்

பத்திரிகை : அதாவதுங்க மேடம் நாங்க பல தலைமுறையா சிந்து பாத் கதையை நடத்தி கொண்டு வாரோம்

அதோட மொக்கையா உங்க கதை இருக்குன்னு ப்ளாக் உலக வாசகர்கள் சொல்லறாங்க .சோ

ப்ளீஸ் மேடம் உங்க கதையை கொடுத்து எங்க பத்திரிகையை வாழ வைங்க மேடம் !

அப்பாவி : சார் ! இது ராங் நம்பர் !

.

.

அப்பாவியின் மைன்ட் வாய்ஸ் : நான் இதுக்கு தான் தலை தலையா அடிச்சு கிட்டேன் ;எங்க இந்த அப்பாவி கேட்டா

பாருங்க ஜனங்களே ராங் நம்பர் கூடவே இந்த அளவுக்கு பேசரவ என் கூட எந்த அளவுக்கு பேசுவா

அப்பாவி! உன் குத்தமா என் குத்தமா யாரை நான் குத்தம் சொல்ல .................................

Vasagan said...

\உணவகத்துக்கு வெளியே உறையும் பனியில் நின்று அவர்களை பார்த்து கொண்டிருந்த ஸ்டீவை அளவில்லா கோபத்தில் ஆழ்த்தியது\

ஜில்லுனு ஒரு காதல் சூடான காதலாகிகொண்டு இருக்கு.

கோவை ஆவி said...

paavanga.. idhayam murali rangukku kondupoi vittudaadheenga..

கோவை ஆவி said...

stevukku meera illattiyum paravailla sumaethaa koodavaavathu serthu vachudunga..

Charles said...

அஹா... கவிதை என்ன ஆச்சு? அதனால இன்னக்கு ஓட்டு போட மாட்டோம்... :( (அதெல்லாம் போட்டாச்சு.. ஹி ஹி ஹி ). எல்லாரும் Steve கூட
மீரா சேரணும்னு சொல்றாங்க. ஆனா என் சாய்ஸ் சதிஷ் தான். அடுத்த பகுதிக்காக இப்போவே Waiting...

Sathish said...

சார்லஸ் என் சாய்சும் சதீஷ் தானுங்க, ஏன்னா சதீஷ் நல்லா பேருங்க.....

vgr said...

en ma ippadi?

siva said...

மீ தி பர்ஸ்ட்! :)
--- noooooooooooooooooooo
மீ தி பர்ஸ்ட்! :)
மீ தி பர்ஸ்ட்! :)
மீ தி பர்ஸ்ட்! :)
மீ தி பர்ஸ்ட்! :)
மீ தி பர்ஸ்ட்! :)
மீ தி பர்ஸ்ட்! :)
vadai enakkuthaan..

siva said...

அதோட மொக்கையா உங்க கதை இருக்குன்னு ப்ளாக் உலக வாசகர்கள் சொல்லறாங்க .சோ
///
இதை வன்மையாக கண்டிக்கிறோம் ..

இங்ஙனம்
அகில உலக
அப்பாவி தங்கமணி இட்லி கடை சங்கம்
425 கிளை,

siva said...

வழக்கம் போல
கதையின் வேகம் அருமை
சுத்தி இருக்கும்
மூன்று பேரை வைத்தே நான்கு மாதம் அல்ல நான்கு வருடங்கள்
செல்ல எங்கள் சங்கம் வாழ்த்துகிறது
அத்துடன்
விரைவில் தங்களுக்கு மானியம் வழங்கவும் உத்தரவு இட படுகிறது

siva said...

mahi 50 : 50 வைச்சுக்கலாமா//

இருவருக்கும் கிடையாது
சின்ன பிள்ளை சிவாவுக்கு மட்டும்தான் எல்லாம்

siva said...

சார்லஸ் என் சாய்சும் சதீஷ் தானுங்க, ஏன்னா சதீஷ் நல்லா பேருங்க...//
அப்பாவி என்னைய மின்ட்ல வச்சுக்கோங்க
சதீஷ் அப்புறம் ஸ்டீவ் ரெண்டு பேருமே நல்ல இல்லை
சிவா பேருதான் நல்ல இருக்கு

siva said...

stevukku meera illattiyum paravailla sumaethaa koodavaavathu serthu vachudunga..
//hilo boss avasara padakoodathu orrila erunthu oru mama payan kathila varuvar avar perukooda sivanu ninkren wait boss kathila oru twist varum paarunga//

siva said...

ஜில்லுனு ஒரு காதல் சூடான காதலாகிகொண்டு இருக்கு.
///
வாசகன் மாமா நீங்கதான் அழகா கமெண்ட் போட்டு இருக்கேள்
வாழ்க வளமுடன் //

அனாமிகா துவாரகன் said...

//"என்ன ஸ்டீவ்? கேளு" என்றாள் மீரா, எதுவும் புரியாத குழப்பம் மேலிட//
வாட்? ஏங்க்கா, எம்.பி.ஏ படிக்கறப் பொண்ணுக்கு இது கூட புரியாதா? ரொம்ப ஓவர்க்கா. அப்பாவின்னு காட்டறதுக்கு ஓவர் சீன் போடறீங்க. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

எதுவுமே இந்த பார்ட்டில் பிடிக்கல. :@:@:@:@:@:@ ஐயாம் சோ அங்ரி.

//அன்று ஓரிருமுறை மீராவும் மதுவும் ஸ்டீவிடம் பேச முயற்சித்தும் அவன் நழுவினான். ஆனால் அன்று இரவு உணவுக்கு மீராவும் சதீஷும் சென்ற போது அவர்கள் அறியாமல் அவர்களை பின் தொடர்ந்தான் //
ஹொலிவுட் சிக்ஃப்லிக்ஸ் பாதிப்பு? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

//"Brar's Sweets & Restaurant"//
விளம்பரத்துக்கு எவ்ளோ காசு கொடுத்தாங்கக்கா.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

லாஸ்ட்லி,
ஏன்க்கா. ஏன் இப்படி வீணான ஒரு சந்தர்ப்பதை திணிச்சு எழுதி இருக்கே. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ஸ்டீவுக்கு கோவம் வர வைக்கறதுக்கு வாலன்டைன்ஸ் டே அன்று இவங்க இரண்டு பேரும் தனிய போவாங்களா? பொதுவா ப்ரென்ட்ஸ்சுன்னா, மூணு பேராவது போவாங்க. இல்லேன்ன்னா இரண்டு பொண்ணுங்க சேர்ந்து மட்டும் போவாங்க. ஒரு பொண்ணும் பையனும் போவதில்லை.

வீ ஒப்செக்ட் திஸ் எபிசோட். திருப்ப எழுதுக்கா. இல்லன்னா நான் அழுவேன்.

அனாமிகா துவாரகன் said...

I AM ANGRY..... :@:@:@:@:@:@:@:@:@:@:@

அனாமிகா துவாரகன் said...

ஏய்ய் புவனி. எங்கேருக்க. மரியாதையா ஒன்லைன்ல வந்து என்னக்கு ஆறுதல் சொல்லு.

siva said...

இல்லன்னா நான் அழுவேன்.
---please dont cry...

siva said...

ஏன்க்கா. ஏன் இப்படி வீணான ஒரு சந்தர்ப்பதை திணிச்சு எழுதி இருக்கே. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ஸ்டீவுக்கு கோவம் வர வைக்கறதுக்கு வாலன்டைன்ஸ் டே அன்று இவங்க இரண்டு பேரும் தனிய போவாங்களா? பொதுவா ப்ரென்ட்ஸ்சுன்னா, மூணு பேராவது போவாங்க. இல்லேன்ன்னா இரண்டு பொண்ணுங்க சேர்ந்து மட்டும் போவாங்க. ஒரு பொண்ணும் பையனும் போவதில்லை. ///kirrrrrrrrr

siva said...

romba detail kekka koodathu...amam choliten..

நசரேயன் said...

//என்னப்பா.. காதலர்தினத்துல ச்சாட்டா!! ஒரு ஐஸ்க்ரீம், சாக்லெட், இதெல்லாம் வாங்கிக்கொடுக்காத கஞ்சப்பிசினாறி சதீஷ் ஒழிக.. ரோஜாப்பூவக்கூட ரெஸ்டாரண்டுலேர்ந்து சுடறான் :-)))
//

எப்படி இப்படி ?

நசரேயன் said...

என மனதில் தோன்றிய கேள்வியை கேட்க இயலாமல் அப்பாவியின் இட்லியை சாப்பிட்டதுபோல முகம் இறுக நின்றான் ஸ்டீவ்

//அந்த நேரத்தில் கூட குழப்பத்தில் கோடிட்ட அவள் நெற்றியை, முடிச்சிட்ட புருவங்களை எப்படி தன்னால் ரசிக்க முடிகிறது என தன் மீதே கோபம் கொண்டான் ஸ்டீவ்//

காதலுக்கு கண் இல்ல ?

//"ஒருவேளை அவள் 'ஆமா நான் சதீஷை லவ் பண்றேன்' என்று கூறிவிட்டால் அதன் பின் என்ன இருக்கிறது//

மீரா இல்லானா ஜீரா, ஜீரா இல்லைனா சிலேபி .. அப்படியே போய்கிட்டே இருக்க வேண்டியதான்

// தன்னை கோழையாக்கிய மீராவின் மீது காதல் உள்ள அளவு கோபமும் தோன்றியது//

நல்லவேளை உங்க இட்லி பக்கத்திலே இல்ல, இருந்து இருந்தா மீரா மண்டையிலே ரத்த சட்னி வந்து இருக்கும்

//தன் கண்களில் வழியும் காதலை இவள் உணரவில்லை எனில் இவள் மனதில் தான் இல்லை//

அதென்ன நயாகரா நீர் வீழ்ச்சியா ?

அப்பாவி தங்கமணி said...

@ மகி - ஆஹா...வடை உங்களுக்கா... ஒகே மகி...:)

@ priya.r - பாதி வடைக்கு சமரசமா...ஒகே ஒகே...:)))

@ மகி - தேங்க்ஸ் மகி

அப்பாவி தங்கமணி said...

@ அருள் சேனாபதி (பவானி நம்பி) - attendance noted ....:)

@ காற்றில் எந்தன் கீதம் - நன்றிங்க...அடுத்த செவ்வாய் அடுத்த பாகம் போட்டுடறேன்..

@ ஹுஸைனம்மா - ஹ்ம்ம்...நீங்க கதைய தான் சொன்னீங்கனு எனக்கு தெரியுமே... ஹா ஹா...:))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - அக்கா, மீராவின் மனதில் உள்ளதை அவள் பார்வையில் சொல்லி ஆயிற்று...அவள் மனதில் வேறு எதுவும் இல்லை என்பதால் அவள் கோணத்தில் கதையை நகர்த்த இயலவில்லை... மீராவின் மனதில் சதீஷ் அல்லது ஸ்டீவின் மேல் அல்லது இவர்கள் இருவரும் அன்றி வேறு யாரின் மேலேனும் சலனம் வந்தால் கதையை அவள் கோணத்தில் சொல்ல துவங்குவேன்... தெளிவா குழப்பிட்டேனா... தேங்க்ஸ் டு மீ...:)))

//எங்கே எனது கவிதை//
அட நிஜமாவே என் கவிதை படிக்கறீங்களா... யாரும் கண்டுகரதில்லையே எதுக்கு வேலை மெனக்கெட்டு அதை வேற எழுதணும்னு விட்டுட்டேன்... ஹா ஹா.... உண்மைய சொல்லணும்னா எப்பவும் எபிசொட் எழுதி முடிச்சதும் தானே நாலு வரி தோணும், இன்னைக்கி ஒண்ணும் தோணல... ஒருவேள ஸ்டீவோட சோகம் என்னையும் தொத்திகுச்சு போல...:))

அப்பாவி தங்கமணி said...

@ பிரதீபா - ஹா ஹா... தேங்க்ஸ் பிரதீபா...நான் எப்பவும் போற restaurant தான் அது...you're right about that...:))))

@ priya.r - நோ டென்ஷன் நோ டென்ஷன்... அடுத்த பார்ட்ல கவிதை போட்டுடறேன் கண்டிப்பா... உன் ஆர்வம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது ப்ரியா.... ஹ்மம்ஹ்ம்ம் (ஆனந்த கண்ணீர்...:)))

//அப்பாவியும் மொக்கை போட்டார் ;போடுகிறார் ;இன்னும் போடுவார்//
என்னை பத்தி அழகா ஒரு வரில சொன்னதுக்கு மிக்க நன்றி... (ப்ரியா அக்கா என் மேல கண்ணு படுதுன்னு திருஷ்டி கழிக்க நான் சொன்ன மாதிரியே இந்த லைன் போட்டதுக்கு தேங்க்ஸ்... எப்பூடி....:-)))))

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி...:))

@ எஸ்.கே - ஹா ஹா ஹா...சீசனுக்கு தகுந்த கமெண்ட்... அதை விடுங்க...இந்தியா வேர்ல்ட் கப் ஜெயக்குமா இல்லையா? அதை சொல்லுங்க மொதல்ல...:))

@ அமைதிச்சாரல் - எக்கோவ்... அது buffetனு சொன்னனே...அதுலயே ஐஸ்கிரீம் எல்லாம் உண்டு யு நோ... infact இந்த கடைல நாலு வகை ஐஸ்கிரீம் இருக்கும் தெரியுமா....எல்லாம் உண்ட அனுபவம் தான்...:) ரோஜாப்பூ சுட்டானா இல்ல மீராவையே சுட்டானானு அடுத்த பார்ட் பாருங்க தெரியும்... :) (கவிதை பத்தி அடித்த கமெண்ட் செம...ஹா ஹா ஹா...:)))

அப்பாவி தங்கமணி said...

@ Chitra - சூப்பரா சொன்னீங்க சித்ரா... ஜில்லுனு ஒரு லொள்ளு...ஹா ஹா ஹா...

@ priya.r - ஹா ஹா ஹா... சூப்பர் ப்ரியா... எப்படியோ என்னை சிந்துபாத் ரேஞ்சுக்கு யோசிச்சதுக்கு நன்னிஹை அக்கோவ்..:)))

@ Vasagan - ஹா ஹா...ஒகே...:)

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - இதயம் முரளியா? ஆஹா... அது சரி... ஹா ஹா அஹ... நீங்க இன்னும் சுமேதா ரசிகர் மன்றம் maintain பண்றீங்களா... நன்னிஹை...:)))

@ Charles - நம்பவே முடியல...நெறைய பேர் (ஒகே ஒகே ஒண்ணு ரெண்டு பேர்) கவிதை போடாததை கவனிச்சு கேக்கறது... நன்றிங்க... என்னமோ எழுத தோணலைங்க... அடுத்த எபிசொட்ல போட்டுடறேன்... உங்கள் வோட்டு சதீசுக்கா...? ஒகே... மீரா என்ன சொல்றான்னு பார்ப்போம்... :)))

@ Sathish - ஹா ஹா ஹா... இது சூப்பர்ங்க... :))

அப்பாவி தங்கமணி said...

@ vgr - ஏங்க, என்ன ஆச்சு...????

@ siva - அது சரி...எப்ப பாரு ஊருக்கு கடைசீல வந்து மீ தெ பர்ஸ்ட்...ஹா ஹா... கண்டிச்சதுக்கு நன்றிங்க.... மானியமா? ஒகே குடுங்க... வடை பஞ்சயாத்துக்கு நான் வர்ல...:) சிவா பேரு தான் நல்லா இருக்கா? ஹ்ம்ம்... நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்...ஹா ஹா... என்னது ட்விஸ்ட் வருமா? அப்படியா? அந்த ட்விஸ்ட் என்னனு நீங்களே சொல்லிடுங்க சார்...:)

அனாமிகா துவாரகன் said...

REWRITE IT

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா -
//வாட்? ஏங்க்கா, எம்.பி.ஏ படிக்கறப் பொண்ணுக்கு இது கூட புரியாதா?//
Okay, I will come to your point. Before that, give me an answer to this. For example, you know someone who you don't have any intention of any sort. But that someone is interested in you which you don't have a clue about. In that case, would you be able to identify his intensions with simple friendly clues...just a kostin...no tension okay... :)))
(In my opinion, whether the girl is an MBA or MBBS doesn't matter, as education has nothing to do with understanding the love)

//எதுவுமே இந்த பார்ட்டில் பிடிக்கல. :@:@:@:@:@:@ ஐயாம் சோ அங்ரி//
ha ha ha... okay... I will try my best in the next episode Anamika...:))

//ஹொலிவுட் சிக்ஃப்லிக்ஸ் பாதிப்பு//
இருக்கலாம்... :)))

//விளம்பரத்துக்கு எவ்ளோ காசு கொடுத்தாங்கக்கா//
நல்ல ஐடியா சொன்ன...அடுத்த வாட்டி போறப்ப கேக்கறேன்...:))

//ஏன் இப்படி வீணான ஒரு சந்தர்ப்பதை திணிச்சு எழுதி இருக்கே//
வீணான சந்தர்ப்பம் இல்லை...ஆனா அப்படி தோணி இருந்தா எழுதின விதம் justified or impressiveஆ இல்லைன்னு அர்த்தம்... thats my fault for sure... will make it up in next part... thanks for your honest opinion Anamika ...:))

//திஸ் எபிசோட். திருப்ப எழுதுக்கா//
ஆஹா.... நோ வே... அது கஷ்டம்ப்பா... :)))

//வந்து என்னக்கு ஆறுதல் சொல்லு//
ஆணி ஓவர்...சாரி... ஆன்லைன் வர முடியல...இங்கயே ஆறுதல் சொல்லிடறேன்... ஆறுதல்...ஒகேவா....:)))

அப்பாவி தங்கமணி said...

@ நசரேயன் -
//என மனதில் தோன்றிய கேள்வியை கேட்க இயலாமல் அப்பாவியின் இட்லியை சாப்பிட்டதுபோல முகம் இறுக நின்றான் ஸ்டீவ்//
இல்லையே...அதை விட கொஞ்சம் நல்லாவே இருந்தான் ஸ்டீவ்...:)))

//காதலுக்கு கண் இல்ல ?//
கண்ணில்லாம எப்படிங்க ரசிக்க முடியும்...லாஜிக் இடிக்குதே... :)))

//மீரா இல்லானா ஜீரா, ஜீரா இல்லைனா சிலேபி .. அப்படியே போய்கிட்டே இருக்க வேண்டியதான்//
உங்க ஊட்டு போன் நம்பர் சொல்லுங்க... கொஞ்சம் உங்க தங்கமணிகிட்ட பேசணும்...:))))

//நல்லவேளை உங்க இட்லி பக்கத்திலே இல்ல, இருந்து இருந்தா மீரா மண்டையிலே ரத்த சட்னி வந்து இருக்கும்//
ஐயையோ... நோ நோ... நோ voilence ...திஸ் இஸ் லவ் ஸ்டோரி யு சி... :)))

//அதென்ன நயாகரா நீர் வீழ்ச்சியா//
அதை விட பெருசுன்னு சொல்றாங்க... :)))

அன்னு said...

//எந்த நாட்டில் பிறந்தால் என்ன, எந்த மொழியை பேசினால் என்ன, எந்த நூற்றாண்டில் வாழ்ந்தால் தான் என்ன, காதல் என்ற உணர்வு ஆட்கொண்டு விட்டால் கிளியோபேட்ராவின் காதலன் ரோமானிய பேரசர் ஜூலியஸ் சீசரும் ஒன்றே, நம் ஊர் பார்வதியின் காதலன் தேவதாஸும் ஒன்றே//

த்சொ..த்சொ... ஃபீலிங்கா இல்ல ஃபீலிங்கான்னு கேக்கறேன்.. படிக்கற எங்களுக்குதான்யா அந்த ஃபீலிங்கு வரணும்...அவ்வ்வ்வ்வ்வ்வ்.... :)

asiya omar said...

தொடருங்க,அருமையாக எழுதறீங்க.

அனாமிகா துவாரகன் said...

வாடிம்மா. வா.

யாரும் கொஞ்சம் (ரொம்ப ரொப கொஞ்சமே) வித்தியாசமாக நடக்கத்தொடங்கினாலும், டான்னு ஒரு லைட் எரியும். எம்.பி.ஏ படிக்கறதுக்கு இந்தியால எப்படியோ தெரியாது. இங்கெல்லாம் வேக் எக்ஸ்பீரியன்ஸ் (ப்ரொப்பர் எக்ஸ்பீரியன்ஸ்) வேணும். நிறைய பேருங்க கூட நிறைய பிரசன்டேஷன் வேலை புடலங்காய் வேலை எல்லாம் பண்ணனும். நிறைய பேரோட இன்டரக்டிவ் பண்ணனும். எம்.பி.பி.எஸ் பொண்ணுங்களுக்கு புரியணுமோ இல்லயோ, எம்.பி.ஏ படிக்கறவங்களுக்கு புரியணும். ஹை ஸ்கூல் பொண்ணுங்களுக்கு புரியறது இவங்களுக்கு புரியாதாம். வேண்டாம். அழுதுடுவேன். விட்டுடுக்கா.

அனாமிகா துவாரகன் said...

என் டென்ஷன் எனக்கு. பிரட்டை முள்ளு கரண்டியால் குத்தி குத்தி பீஸ் பீஸ் ஆக்கிட்டு இருக்கேன்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

எப்பவும் போல் அழகா இருக்குங்க உங்க கதை நடை... ஆனா என்னா... இப்பிடியே சஸ்பென்ஸ் வச்சு வச்சு.................. எங்கள படுத்துங்க...

அவ்வ்வ்வ்வ்வ்.... அடுத்த செவ்வாய் வரை வெயிட் பண்ணனுமா... சரி ரைட்ட்டு..... ;-))

worth to wait.. tataa for now. :)

தங்கம்பழனி said...

ஜில்லுன்னு தான் இருக்கு..! எப்படியும் ரசிச்சு படிக்கணும் ரொம்பவும் பிடிச்சிருக்கு.. அப்படி நம்ம பக்கம் வந்துட்டு போலாமே..! www.thangampalani.blogspot.com

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

இப்பவே கண்ண கட்டுதே, இன்னும் எத்தனை பகுதிகள் இப்படி சஸ்பன்ஸா வரும்னு தெரியிலையே.

நன்றாக இருக்கிறது சகோ அப்பாவி

sulthanonline said...

இந்த வாரம் "காதலை சொல்லுவான்" னு எதிர்பார்த்தா, "ஆனா சொல்லமாட்டான்" னு அ.த சொல்லுறாங்க. சஸ்பென்ஸ் வைக்காம சீக்கிரம் சொல்ல சொல்லுங்க மேடம் .

பத்மநாபன் said...

'தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தாத்தான் தெரியும் '' இப்படி ஸ்டீவ் புலம்பி தள்ளற மாதிரி நிலைமை ஆயிடுச்சு ... சதீஷும் மீராவும் ரொம்பவே ஸ்டீவை படுத்தறாங்க... ஜில்லு சூடாயிட்டு வருது

சுசி said...

//காதல், ஒருவனை கவிஞனாய் மட்டுமல்ல, சுயநலவாதியாய், சுயம் இழந்தவனாய், ஏன் அடிப்படை சபை நாகரீகம் மீறுபவனாய் கூட மாற்றும் என்பதை அன்று தான் உணர்ந்தான் ஸ்டீவ் //

ஸ்டீவ் மட்டுமா?? ஹூம்..

MANO நாஞ்சில் மனோ said...

//என்னப்பா.. காதலர்தினத்துல ச்சாட்டா!! ஒரு ஐஸ்க்ரீம், சாக்லெட், இதெல்லாம் வாங்கிக்கொடுக்காத கஞ்சப்பிசினாறி சதீஷ் ஒழிக.. ரோஜாப்பூவக்கூட ரெஸ்டாரண்டுலேர்ந்து சுடறான் :-)))


.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... ஜில்லுனு ஒரு லொள்ளு! //

ஹா ஹா ஹா ஹா லொள்ளுனு ஒரு ஜில்லு....

priya.r said...

அப்பாவி ! இன்னைக்கு உன்னோட எந்த பழைய பதிவை படித்தாலும் ரொம்பவே பிடித்து இருக்கு
இதற்கு ஏதாவது நிவாரணம் உண்டா.........................

priya.r said...

அல்லது நீ ஒரு வேளை லேடி பாலசந்தரோ!
அதான்பா., அட்வான்ஸ்டு திங்கிங் உள்ளவரோ ;எழுதியதற்கு பிறகு ஒரு வருடம் கழித்து படிக்க வேண்டுமோ
அப்போ தான் அதில் உள்ள நல்ல விசயங்களை தெரிந்து கொள்ள முடியுமோ

அப்பாதுரை said...

கதையோட காதல் தத்துவங்களையும் கலந்து தரீங்க.. நல்லா இருக்கு.

priya.r said...

@ அனாமி & அப்பாவி

சகோதரிகளுக்குள் சச்சரவு இருக்கலாம்

சண்டை இருக்கலாமா

தி. ரா. ச.(T.R.C.) said...

following every post.e booka varumaa?

priya.r said...

இரண்டு MBA பட்டதாரிகளும் இப்படி ஏட்டிக்கு போட்டியில் இறங்கலாமா

@ அனாமி
நாம் எப்போ கதை எழுதி இருக்கோம் .,ஆனா அப்பாவி கதை எழுதுகிறாள் இல்லையா
கொஞ்சம் முன்னே பின்னே அப்படி இப்படி இருந்தாலும் எதிர்காலத்தில் சரியாகி விடும்
என்ன இருந்தாலும் குஸ்தி சண்டை காரி மாதிரி நீ வாடிம்மா வா என்று சொல்லலாமா
ஆமா எதுக்கு பிரட்டை முள்ளு கரண்டியால் குத்தி குத்தி பீஸ் பீஸ் ஆக்கிட்டு இருக்கே
காலை உணவுக்கு தானே இந்த ஏற்பாடு எல்லாம் !
ரெம்ப டென்ஷன் ஆகாதேப்பா
உனக்கு இருக்கிற அறிவுக்கு நீ தான் அடுத்த ஆஸி பிரதமர் கண்ணு

priya.r said...

@ அப்பாவி
என்ன இருந்தாலும் சின்ன பொண்ணு கிட்டே போய்
In that case, would you be able to identify his intensions with simple friendly clues...just a kostin...no tension ஒகே இப்படியெல்லாம் கேட்கலாமா
whether the girl is an MBA or MBBS doesn't மேட்டர் அப்படின்னு நீ எதுக்கு சொல்லோனும்
என்ன இருந்தாலும் அனா உன் செல்லம் இல்லையா .,ஹ ஹா

priya.r said...

@அப்பாவி
நீ எதார்த்தமா தான் கேட்கிறே .,அன்னைக்கு பாரு
அந்த கெக்கே பிக்குனி அக்கா கிட்டே உங்களுக்கு விருப்பம் இருந்தா உங்க உண்மையான பேரை சொல்லறீங்களா
அப்படின்னு கேட்டே ;அதுக்கு அப்புறம் அவங்க எப்போ கமெண்ட்ஸ் போட வருவாங்கன்னு நானும் தான் பார்த்து கிட்டே இருக்கேன்
இப்போ நான் என்ன சொல்ல வரேன்னா முடிஞ்சா அவங்க கிட்டே ஒரு சாரி கேளு .,
இல்லை இல்லை ரெண்டு சாரி கேளு
.
.
ஹி ஹீ கொடுத்தாங்கன்னா ஆளுக்கு ஒண்ணு வைத்து கொள்ளலாம் ஹ ஹா

அனாமிகா துவாரகன் said...

ஓ ஷூட். பிரியாக்காவுக்கா அனாமி எழுதுவதுன்னு. கொழந்த கிட்ட இப்டி கேள்வி எல்லாம் கேட்காதேன்னு திட்டற மாதிரியும் இதுக்கு ஆன்சர் சொல்ற மாதிரியும் எழுதணும்னு ஆரம்பிச்சு அரைகுறையாக முடிச்சுட்டேன். வாடிம்மா வா இஸ் யுவர் லைன் பிரியாக்கா. சொதப்பிட்டேன். இருங்க சரியான வேர்ஷனை எழுறேன்.

அனாமிகா துவாரகன் said...

வாடிம்மா. வா. கொழந்த கிட்ட கேட்கற‌ கேள்வியா இது. அனாமி கொழந்த ஓன்னு அழறா. பெரிய பசங்க விசயம் எல்லாம் இந்த இட்லி மாமி கேட்கறாளேன்னு.

அவளுக்காக நான் பதில் சொல்றேன்:

யாரும் கொஞ்சம் (ரொம்ப ரொப கொஞ்சமே) வித்தியாசமாக நடக்கத்தொடங்கினாலும், டான்னு ஒரு லைட் எரியும். எம்.பி.ஏ படிக்கறதுக்கு இந்தியால எப்படியோ தெரியாது. இங்கெல்லாம் வேக் எக்ஸ்பீரியன்ஸ் (ப்ரொப்பர் எக்ஸ்பீரியன்ஸ்) வேணும். நிறைய பேருங்க கூட நிறைய பிரசன்டேஷன் வேலை புடலங்காய் வேலை எல்லாம் பண்ணனும். நிறைய பேரோட இன்டரக்டிவ் பண்ணனும். எம்.பி.பி.எஸ் பொண்ணுங்களுக்கு புரியணுமோ இல்லயோ, எம்.பி.ஏ படிக்கறவங்களுக்கு புரியணும். ஹை ஸ்கூல் பொண்ணுங்களுக்கு புரியறது இவங்களுக்கு புரியாதாம். வேண்டாம். நானே அழுதுடுவேன். சின்னப் பொண்ணையும் விட்டுடு.

அனாமிகா துவாரகன் said...

@ பிரியாக்கா,
ரொம்ப எதிர்பாத்திட்டே இருந்தேன்க்கா. மே, பி நாங்க ரொம்ப டென்ஷன் கொடுக்கறமோன்னு இருக்கு. இந்த எபிசோட் இவங்க எழுதின மாதிரியே இருக்கல. ரொம்ப லேட்டா படுத்து, எழுந்த உடனேயே காபியுன்டன் படிக்க வந்தால் சப்புன்னு ஆச்சு. ரொம்ப பீலிங்கஸ். டென்ஷன்ல காலையில பிரட்டை போட்டு குத்து குத்துன்னு குத்தினேன். மத்தியானமும் சன்விச் தான். அதை வேற குத்தின குத்தில காய்கறி எல்லாம் மிக்சியில் போட்ட மாதிரி ஆச்சு. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

@ எ.டி.எம்.
நெசமாவே ரொம்ப சப்புன்னு ஆச்சுக்கா. எனக்கு அழுகை அழுகையா வருது.

priya.r said...

HAYYO ENTRA KUZHANTHAI IPPADI AZHARAALE!!

priya.r said...

தெரியுது அனாமி
நேத்து பாவம் நீ 3 வரை முழிச்சு கிட்டு இருந்தே தானே
உன்ற மெயில் பார்த்தேனே
ஒரு சின்ன உதாரணம்
நீ கிரிக்கெட் யையே எடுத்துக்கோ
நம்ம அப்பாவி சச்சின் மாதிரின்னு நினைச்சுக்கோ
சில சமயம் சச்சினும் சொதப்பறது இல்லையா
அது மாதிரி தெரியாம ஒன்னும் ரெண்டு நடக்கறது இல்லையா
என்ன நான் சொல்றது

priya.r said...

//வாடிம்மா. வா. கொழந்த கிட்ட கேட்கற‌ கேள்வியா இது. அனாமி கொழந்த ஓன்னு அழறா. பெரிய பசங்க விசயம் எல்லாம் இந்த இட்லி மாமி கேட்கறாளேன்னு.

அவளுக்காக நான் பதில் சொல்றேன்:

யாரும் கொஞ்சம் (ரொம்ப ரொப கொஞ்சமே) வித்தியாசமாக நடக்கத்தொடங்கினாலும், டான்னு ஒரு லைட் எரியும். எம்.பி.ஏ படிக்கறதுக்கு இந்தியால எப்படியோ தெரியாது. இங்கெல்லாம் வேக் எக்ஸ்பீரியன்ஸ் (ப்ரொப்பர் எக்ஸ்பீரியன்ஸ்) வேணும். நிறைய பேருங்க கூட நிறைய பிரசன்டேஷன் வேலை புடலங்காய் வேலை எல்லாம் பண்ணனும். நிறைய பேரோட இன்டரக்டிவ் பண்ணனும். எம்.பி.பி.எஸ் பொண்ணுங்களுக்கு புரியணுமோ இல்லயோ, எம்.பி.ஏ படிக்கறவங்களுக்கு புரியணும். ஹை ஸ்கூல் பொண்ணுங்களுக்கு புரியறது இவங்களுக்கு புரியாதாம். வேண்டாம். நானே அழுதுடுவேன். சின்னப் பொண்ணையும் விட்டுடு.//

அனாமி இப்படி நானா எழுதினேன்
ஹி ஹீ என்ர கண்ணே பட்டுடும் போல இருக்கே
என்னைக்காவது நான் ஆன்லைன் பத்திரிகை ஆரம்பிதேன்னு வை !
நீ தாண்டி செல்லம் என்ர எடிட்டர்

priya.r said...

அனாமி
உன்ர கருத்தில் இருந்தும் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு

படிப்பு என்பது அந்த அந்த துறை சம்பந்த பட்ட அறிவை வளர்த்து கொள்ள மட்டும் தான்பா
ஆனால் புத்தி கூர்மை ,உள்ளுணர்வு ,சமயோதிக திறன் இதற்கும் படிப்புக்கும் சம்பந்தமே இல்லைப்பா
ஸ்கூல் பெண்ணிடம் இருக்கும் கணிக்கும் ஆற்றல் சில சமயம் கல்லூரி பிரின்சிஇடம் கூட இருப்பது இல்லை
படிப்பு அந்த துறை சார்ந்த ஏட்டு அறிவையும் ,கலை,இலக்கிய ,விஞ்சான ,தொழில் நுட்ப அறிவை தரும் என்பது தான் உண்மை அனா
இதை நான் நடைமுறை வாழ்க்கையில் கண்டு கொண்டு தான் இருக்கிறேன் அனா

Thanks for sharing Ana&Appavi

priya.r said...

பாரு அனாமி உனக்கு மலர் போன்ற உள்ளம்

(இதுவும் இறைவன் கொடுத்த வரம் )

அதனாலே தான் சின்ன சின்ன விஷயங்கள் கூட உனக்கு ரெம்ப பெரிய விசயமா படுது

ஒன்னும் இல்லே ! பாரு அடுத்த செவ்வாய் குள்ளே ஒன்னு ரெண்டு மொக்கை பதிவு அப்பாவி போட தான்

போறா;அவளை அப்போ கவனிச்சுக்கலாம் !

அப்பாவி ! அன்னைக்கு இருக்குடி உனக்கு ஆப்பு !

ஹய் அனாமி சிரிச்சுட்டா ;அனாமி சிரிச்சுட்டா

priya.r said...

தோ பாரு அனாமி

உனக்கு ஏன் இந்த பதிவு பிடிக்கலே அப்படின்னு ஒரளவு ஊகிக்க முடியுது

மீரா ஸ்டீவ் காதலிக்கனும் என்பது தானே உனது விருப்பம்

விரைவில் உனது விருப்பம் நிறைவேறும் போதுமா

@ அப்பாவி
Kindly do the needful at the earliest dear

vanathy said...

நல்லா போகுது காதல் கதை, தங்ஸ். அடுத்த பாகம் எப்போ???

priya.r said...

@அப்பாவி

நீ வேற கோட்சுக்காதே!

இப்போ உனக்கு என்ன வேணும்

சதிஷுக்கு ஆரு ஜோடின்னு தானே

காதலுக்காக ஜாதி மாறி ,மதம் மாறி ,ஏன் ஸ்டேட் டே மாறி

பட்சே இங்கே ப்ளாக் மாறி !

என்ன புரியலையா ...........

கொடி ப்ளோக்ல இருக்கிற அனுபமா வை சதீஷ் காதலிக்கட்டுமே ! ஹ ஹா

Anonymous said...

//எம்.பி.பி.எஸ் பொண்ணுங்களுக்கு புரியணுமோ இல்லயோ, எம்.பி.ஏ படிக்கறவங்களுக்கு புரியணும். //

எல்லா படிப்பும் ஹெல்ப் பண்ணும்னு சொல்லலேக்கா. எம்.பி.ஏ. தான் பெட்டிக்குலரா சொன்னேன். இவங்க தானே நிறைய கேஸ் ஸ்டடி, புடலங்காய் ஸ்டடி எல்லாம் பண்ணறவங்க. கொஞ்சமாவது அனலெட்டிக் ஸ்கில் இருக்க வேண்டாமா? மீரா அவ்ளோ லூசா?

ஸ்டீவுக்கு மீரா வேண்டாம். எனக்கு மீராவே பிடிக்கல. மது ஒக்கே. இல்லேன்னா ஸ்டீவ் ரெவரென்டாகவே போகட்டும். இந்த மீரா வேண்டாம்.

- Ana

Anonymous said...

-அனலெடிக்கல் ஸ்கிள்ஸ்-

Vasagan said...

Steve உம் நேர சொல்லபோறது இல்லை, அவன் என்ன hints கொடுத்தாலும் மீராவும் தத்தியா இருந்தா சுனாமிக்கு அழுகை வராமல் என்ன செய்யும். சரி சரி கண்ணை தொடைசிட்டு படிப்ப பார்.

ஹலோ kid . அப்பாவி கதை எல்லாம் ஆராய்ச்சி பண்ணகூடாது அனுபவிக்கனும்.

ஊரிக்காட்டு அக்காவும் ஒருகாலத்துல தத்தியா இருந்தா ஹ்ம் இப்போசுற்றிள்ளும் என்ன நடக்குதுன்னு பார்க்க முடியுதா பார்த்தா அங்க என்ன பார்வைன்னு கரெக்டா pointai பிடிச்சுர.

Anonymous said...

//அப்பாவி ! அன்னைக்கு இருக்குடி உனக்கு ஆப்பு !

ஹய் அனாமி சிரிச்சுட்டா ;அனாமி சிரிச்சுட்டா //
This really made me smile.
-Ana

Anonymous said...

வாசு மாமா,
ஆயுள் நூறு உங்களுக்கு. நீங்க எப்டி இன்னும் எதுவும் பதில் போடலேன்னு நினைச்சுக்கொண்டு தான் கடைசி பின்னூட்டத்தைப் போட்டேன். அக்கா அப்பாவியா ஆக்ட் கொடுத்தத நம்பின்ன நீங்க ரொம்பவே அப்பாவி தான். ஹா ஹா ஹா.

Vasagan said...

\அக்கா அப்பாவியா ஆக்ட் கொடுத்தத நம்பின்ன நீங்க ரொம்பவே அப்பாவி தான்\

Amen.

அப்பாவி தங்கமணி said...

@ பிரியா & அனாமிகா - உங்களுக்கு கடைசியா wholesale கமெண்ட் போடறேன்...:)))

@ அன்னு - உங்களுக்கு பீலிங் வராதுன்னு தெரியும்... அதான் நானே வெச்சுக்கிட்டேன்...:))

@ asiya omar - நன்றிங்க ஆசியா...:)

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - தேங்க்ஸ் ஆனந்தி...:)

@ தங்கம்பழனி - நன்றிங்க...இதோ இப்பவே வரேன் உங்க கடிக்கு...:)

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - ரெம்ப நன்றிங்க சகோ...:)))

@ sulthanonline - சரிங்க சொல்லிடறேன்... நன்றி... :)

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா...:)

@ சுசி - வேற யாரு சுசி...:))

@ MANO நாஞ்சில் மனோ - ஹ்ம்ம்... எல்லாருக்கும் அனுப்பறேன் கல்லு சீக்கரம்...ஹா ஹா ஹ...:)

@ அப்பாதுரை - நன்றிங்க..:)

@ தி. ரா. ச.(T.R.C.) - மிக்க நன்றி... நீங்க கேட்டா ebook போட்டுடலாம்... :))))

@ vanathy - தேங்க்ஸ் வாணி...அடுத்த பார்ட் வழக்கம் போல் செவ்வாய் தான்ப்பா...:))

@ Vasagan - ஹா ஹா ஹா...:)

priya.r said...

Sir

Shall we know the name of yr appaavi?!

அப்பாவி தங்கமணி said...

@ Priya & அனாமிகா -
//ஹை ஸ்கூல் பொண்ணுங்களுக்கு புரியறது இவங்களுக்கு புரியாதாம். வேண்டாம்//
எல்லாரையும் உன்னை மாதிரியே நெனச்சா எப்படி அனாமிகா...என்னை போல் உலகம் தெரியாத குழந்தைகளும் உண்டே... :))

//பிரட்டை முள்ளு கரண்டியால் குத்தி குத்தி பீஸ் பீஸ் ஆக்கிட்டு இருக்கேன்//
உன்கிட்ட யார் சிக்கினாலும் இதே கதிதான்னு சொல்றியோ...:)))

//அப்பாவி ! இன்னைக்கு உன்னோட எந்த பழைய பதிவை படித்தாலும் ரொம்பவே பிடித்து இருக்கு
இதற்கு ஏதாவது நிவாரணம் உண்டா//
பண்ணின டேமேஜ்க்கு பிளாஸ்டர் ஒண்ணும் போட வேண்டாம்...உன் செல்ல தொங்கசி பக்கமே பேசிகோங்க போங்க....(-:

//அல்லது நீ ஒரு வேளை லேடி பாலசந்தரோ//
இதான் போட்டு வாங்கறது...ஆனா நான் சிக்கரதுக்கு இன்னைக்கி தயாரா இல்ல...ஹா ஹா ஹா

//இரண்டு MBA பட்டதாரிகளும் இப்படி ஏட்டிக்கு போட்டியில் இறங்கலாமா//
ஐயோ அனாமிகா MBA வா? பாவம் MBA ....:)

//கொஞ்சம் முன்னே பின்னே அப்படி இப்படி இருந்தாலும்//
இதுக்கு நேராவே திட்டி இருக்கலாம்...:))

//என்ன இருந்தாலும் சின்ன பொண்ணு கிட்டே போய் //
எசூஸ்மீ.... யாருங்க அந்த சின்ன பொண்ணு... ஹையோ ஹையோ...:)))

//சின்னப் பொண்ணையும் விட்டுடு//
வேண்டாம் நான் அழுதுடுவேன் இப்போ...:)

//HAYYO ENTRA KUZHANTHAI IPPADI அழறாளே//
ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா....ஆண்டவா காப்பாத்து...:)

//ஹி ஹீ என்ர கண்ணே பட்டுடும் போல இருக்கே//
இந்த கொடுமை எல்லாம் படிச்சா என் கண்ணே போய்டும் போல இருக்கே...:))

//உன்ர கருத்தில் இருந்தும் எனக்கு மாறுபட்ட கருத்து உண்டு//
இது பேச்சு...:)

//@ அப்பாவி
Kindly do the needful at the earliest டியர்//
கடைசீல இதுவுமா... நல்ல பொழப்பு தான் எனக்கு...:))

//கொடி ப்ளோக்ல இருக்கிற அனுபமா வை சதீஷ் காதலிக்கட்டுமே ! ஹ ஹா //
அட நாராயணா... அனுபமா செத்து அவ திவசம் கூட வரப்போகுதாம்...(ஆனா அப்பவும் கொடியோட அடுத்த போஸ்ட் வரலைன்னு வெய்யுங்க... ) அப்ப சதீஷை ஆவிகிட்ட கோத்து விட சொல்றீங்களா... ஹா ஹா ஹா...:)))

//கொஞ்சமாவது அனலெட்டிக் ஸ்கில் இருக்க வேண்டாமா? மீரா அவ்ளோ லூசா?//
Anamika Madam...what does analytical skills to do with this? ha ha ha... Anamikaa, உனக்கு வயசு பத்தாதுன்னு இப்போ ஒத்துக்கறேன்...ஹா ஹா ஹா... :))

priya.r said...

என்ன கம்மேன்ட்லையும் wholesale ஆ
அப்போ discountum உண்டா !

priya.r said...

//...(ஆனா அப்பவும் கொடியோட அடுத்த போஸ்ட் வரலைன்னு வெய்யுங்க... ) //

மெய்யாலுமா ? அப்போ கூட வராதா :(

priya.r said...

// அப்பாவி ! இன்னைக்கு உன்னோட எந்த பழைய பதிவை படித்தாலும் ரொம்பவே பிடித்து இருக்கு
இதற்கு ஏதாவது நிவாரணம் உண்டா//
பண்ணின டேமேஜ்க்கு பிளாஸ்டர் ஒண்ணும் போட வேண்டாம்...உன் செல்ல தொங்கசி பக்கமே பேசிகோங்க போங்க....(-:/

நீ தாண்டி என்ர first செல்லம்;பாரு நான் கமெண்ட்ஸ் போடாத பதிவில் எல்லாம் போய் கமெண்ட்ஸ் போட்டு கிட்டு வரேன்
அதுக்கும் கூட சூப்பர் ஆ பதில் போடறே ;
பாரு ;நீயே சொன்ன மாதிரி உனக்கு திருஷ்டி கமெண்ட் எல்லாம் போட்டேன் தானே !
நீ தான் தேனு ,மானு ,மயிலு ,குயிலு எல்லாம் ;போதுமா.......................... உஸ்ஸ்ஸ் !

priya.r said...

உனக்கு விஷயம் தெரியாதா !

கொடி ப்ளோக்ல இருக்கும் அனு உயிரோடு தான் இருக்காளாம்

கதையோட மெயின் சஸ்பென்ஸ்யே அது தானாம்

சரி கொடியே வந்து சொன்னா சதீசுக்கு கொடுக்க உனக்கு சம்மதமா

சே.குமார் said...

சஸ்பென்ஸ்?????

தி. ரா. ச.(T.R.C.) said...

காதல், ஒருவனை கவிஞனாய் மட்டுமல்ல, சுயநலவாதியாய், சுயம் இழந்தவனாய், ஏன் அடிப்படை சபை நாகரீகம் மீறுபவனாய் கூட மாற்றும் என்பதை அன்று தான் உணர்ந்தான் ஸ்டீவ்

அதென்ன ஒருவனை? ஒருவளை மாத்தாதோ? எப்படியோ கதைக்கு திருபத்துக்கு இதுதேவையோ

priya.r said...

வாவ் ! நூறும் எனக்கே ...... இந்த நூறை வள்ளல் மனம் படைத்த மகிக்கு பகிர்த்து அளிக்க விருப்பம்

vinu said...

எந்த நாட்டில் பிறந்தால் என்ன, எந்த மொழியை பேசினால் என்ன, எந்த நூற்றாண்டில் வாழ்ந்தால் தான் என்ன, காதல் என்ற உணர்வு ஆட்கொண்டு விட்டால் கிளியோபேட்ராவின் காதலன் ரோமானிய பேரசர் ஜூலியஸ் சீசரும் ஒன்றே, நம் ஊர் பார்வதியின் காதலன் தேவதாஸும் ஒன்றே


athea athea athea; athethaaaaaaaaan; naangalum intha maasam mulusum kaathal kavithai mattumea post panni irrukom he he he he he

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//என்ன கம்மேன்ட்லையும் wholesale ஆ
அப்போ discountum உண்டா//
எல்லாம் உண்டு... விவரங்கள் இனி வரும் பதிவுகளில்...ஹா ஹா...:)))

//மெய்யாலுமா ? அப்போ கூட வராதா//
அது அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்...:)

//கொடி ப்ளோக்ல இருக்கும் அனு உயிரோடு தான் இருக்காளாம்...கதையோட மெயின் சஸ்பென்ஸ்யே அது தானாம்//
ஆஹா... இந்த கமெண்ட் மட்டும் கொடி பாத்தாங்க...அடுத்த பலி... வேண்டாம் நான் சொல்லல... :))

//வாவ் ! நூறும் எனக்கே //
ஆஹா....சூப்பர்..."வள்ளல் பேரும் அக்காக்கள்"னு புது திருப்பாவை பாடிடுவோம் அக்கா...:)))

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - எஸ் எஸ்...:)

@ தி. ரா. ச.(T.R.C.) - ஹா ஹா ஹா...நல்ல reasoning...:))) Thank you...

இராஜராஜேஸ்வரி said...

ஸ்டீவோட சோகம் //
நேற்று இல்லாத மாற்றம் என்னது??
இள்மை துள்ளிவிட்டதா??

அப்பாவி தங்கமணி said...

@ இராஜராஜேஸ்வரி - ha ha :)

Post a Comment