Thursday, February 10, 2011

காதலே... என் காதலே... (காதலர் தின சிறப்பு சிறுகதை...)"ஜனனி... செமையா பசிக்குது... என்ன செஞ்ச?" என்றவாறே வீட்டினுள் நுழைந்தான் கிருஷ்ணா

"இப்பதான் வந்தேன் கிருஷ்ணா... செம டையர்ட்..." என்றாள் ஜனனி

"பசிக்குது... சீக்கரம் எதாச்சும் செய்"

"எனக்கும் தான் பசிக்குது... நீ ஒரு நாள் செஞ்சு குடேன் கிருஷ்ணா... ப்ளீஸ்" என்றாள் சோம்பல் முறித்தவாறே

"ஒரு முடிவோட தான் இருக்கியா?" என்றான் பசியில் விளைந்த கோபத்துடன்

"ஆமா.." என்றாள் அவன் கோபத்தை கண்டுகொள்ளாமல்

"என்ன உன்னை நம்பிட்டு இருக்கேன்னு நெனச்சு strike பண்றயா?"

"இல்லையா? அப்ப நீயே செய்"

"Hei...its not rocket science... you know I can do it" என கேலிப்பார்வை  பார்த்தான்

"Really? Please carry on... I'm not in your way"

"எங்க அக்கா அப்பவே சொன்னா... என்னமோ ப்ளாக்ல கிறுக்கறா நானும் கிறுக்கறேன்ங்கற... இதெல்லாம் கறிக்கு உதவுமாடா கிருஷ்ணானு...நான் தான் கேக்கல... ச்சே" என்றான் சலிப்பாய்

"ஓஹோ... இதெல்லாம் வேறயா? என்ன சொன்ன... கிறுக்கினேனா? அந்த கிறுக்கலுக்கு தானே அன்னிக்கி...சூப்பர், awesome, அண்டாரசம்னு கமெண்ட் போட்ட....அப்ப நல்லா இருந்ததோ?"

"என்ன பண்றது? ஏதோ புதுசா கிறுக்க வந்திருக்கே லூசுன்னு பரிதாபம்... பேருக்கு ரெண்டு கமெண்ட் போட்டேன்... how nice / born genius னு நீ என் ப்ளாக்ல பீட்டர் விடல... எலிசபெத் ராணி பேத்தினு நெனப்பு... பின்னாடி தானே தெரிஞ்சுது பக்கா லோக்கல் பார்ட்டினு"

"தெரிஞ்சதல்ல... அப்ப ஏன் தினமும் சாட், SMS னு உயிர வாங்கின?"

"உன் ப்ளாக்ல போட்ட சமையல் குறிப்பெல்லாம் பாத்து வேற எதுக்கில்லைனாலும் சாப்பாட்டு பிரச்சனை வராதுனு நம்பி ரூட் போட்டேன்... பாச்சிலர் புத்தி... ஆனா அதெல்லாம் சும்மா எங்கயோ சுட்டு போட்ட போஸ்ட்னு இப்பதானே புரியுது"

"வேண்டாம்.. கோபத்த கிளறாத... நான் என்ன உன் சமையல்காரியா?"

"அத உடு... அதெப்படி... மூணு நிமிசத்தில் முப்பது சமையல்னு ஒரு போஸ்ட் போட்டியே... ச்சே... எத்தன பேரு அதை பாத்து உன்னை சமையல் ராணினு ஏமாந்து போய் இருப்பாங்க பாவம்...என் பாடு எனக்கில்ல தெரியும்"

"என்ன ஆச்சு உன் பாடு இப்ப... ஒரு நாள் டையர்ட்னு கொஞ்சம் உக்காந்தா இவ்ளோ பேச்சா...?"

"எல்லாம் என்னை சொல்லணும்... எங்க போச்சு புத்தி... ப்ளாக் படிச்சமா, மொக்க போஸ்ட்னாலும் ஆஹா ஓஹோனு நாலு கமெண்ட் போட்டமா, திருப்பி நாலு கமெண்ட் வாங்கினமானு இல்லாம இப்படியா ஒருத்தன் வாழ்கையவே அடமானம் வெப்பான்....ச்சே..."

"யாரு மொக்க போஸ்ட் போட்டா... தர்மஅடி வாங்கினதுல ஆரம்பிச்சு தர்மபாஸ் ஆன கதை வரைக்கும் மொக்கை போஸ்ட் போட்டது நானா... சாட்சாத் நீ...இந்த கிருஷ்ணா தானே..."

"அதுக்கு ச்சோ ஸ்வீட்... சோன்பப்டி மீட்னு நீ கமென்ட் போடல... இப்ப மொக்கையா? நீ மட்டும் என்ன... பட்டாம்பூச்சி புடிச்சேன் பறக்கவிட்டேன்னு... அதெலாம் ஒரு மேட்டர்னு லூசு மாதிரி எழுதல"

"வேண்டாம் கிருஷ்... டென்ஷன் பண்ணாத"

"ஏய்... எங்க அப்பா அம்மா அழகா கிருஷ்ணானு கடவுள் பேரு வெச்சு இருக்காங்க... ஏண்டி இப்படி கிருஷ்னு சுருக்கி கொல்ற?"

"ஓஹோ... நான் இப்ப கிருஷ்னு கூப்ட்டா கொல்ற மாதிரி இருக்கோ... ஒரு நாள் ஏதோ typo error ல தெரியாம nice post krishனு நான் கமெண்ட் போட்டதுக்கு அடுத்த நாள் நீ என்ன எழுதின?"

"என்ன எழுதினேன்?"

"என்னனு கூட ஞாபகம் இல்லையோ?
கிருஷ் -
அவள் அழைத்தபின் தான் தெரிந்தது
அழகிய பெயர் எனது என
கிருஷ்என அழைத்து
Crush என்மேல்என சொல்லாமல்சொன்னாளோ!!!
னு நீ மொக்கையா கவிதைங்கற பேருல கிறுக்கல"

"ஓ... இப்ப கிறுக்கல்னு தோணுதோ... இவ்ளோ அழகான ஒரு லவ் ப்ரோபோசல் நான் பாத்ததில்லைனு நாம லவ் பண்ண ஆரம்பிச்சப்புறம் நீ சொல்லல..."

"உண்மையா சொன்னேன்னு நெனச்சேன்... இப்பதானே தெரியுது எல்லாம் பொய்னு" என்றாள் சீண்டலாய், அது அவன் கோபத்தை  அத்தனை  தூண்டுமென எதிர்பார்க்கவில்லை

"ஆமாண்டி எல்லாம் பொய் தான்...உன்னை லவ் பண்றேன்னது பொய்... பின்னாடியே சுத்தி சுத்தி வந்தது பொய்... ரசிச்சு ரசிச்சு பேசினது பொய்... அன்பு ஆசை காதல் கண்றாவி எல்லாமே பொய்" என்றான் தன் அன்பை பொய் என அவள் கூறிய கோபத்தில்

"ஓ...எல்லாமே பொய்யா?" என்றாள், அப்படி ஒரு கோபத்தை எதிர்பாராத அதிர்ச்சி அவள் குரலில் தெரிந்தது

ஆனாலும் மனம் இறங்காமல் "ஆமா...பொய் தான்... இப்ப என்ன செய்லாங்கற?"

"அப்ப நாம காதலிச்சது, கல்யாணம் பண்ணிகிட்டது...எல்லாமும் ஒரு மிஸ்டேக்னு சொல்ற... அப்படி தானே?" என்றாள் அந்நியமான குரலில். அது இன்னும் அவன் கோபத்தை தூண்டியது

"Not just a mistake...Himalayan Blunder" என கோபத்தில் வார்த்தைகளை விட்டான். அவளால் அந்த வார்த்தைகளை தாங்க இயலவில்லை

"அப்படினா பிரிஞ்சுடலாம்... மொத்தமா... " என்றாள் சட்டென

சென்ற தலைமுறையில் "பிரிஞ்சுடலாம்" என்ற வார்த்தை Unparlimentary Words என்பார்களே அது போல் இருந்தது. இன்று விளையாட்டுக்காக கூட அதிகம் பயன்பாட்டில் உள்ளது வருத்தமான ஒன்று. சில விளையாட்டுக்கள் விபரீதங்களிலும் முடிவதுண்டே... 

"What do you mean?"என்றான் கிருஷ்ணா அவள் சொன்னது புரியாதவன் போல்

"I mean divorce... தினம் தினம் இப்படி சின்ன சின்ன விசியத்துக்கெல்லாம் சண்டை போடறது விட இது மேல்... என்னமோ நான் உன்னை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்ட மாதிரி பேச்சு... ச்சே... divorce...thats right...lets go on our seperate paths..." என்றாள்

"Very well said... நம்ம கல்யாணம் ஆகி இந்த ஒரு வருசத்துல.... நீ சொன்ன உருப்படியான ஒரு...." அவள் கண்களில் நீர் படலம் கண்டதும் சட்டென பேச்சை நிறுத்தினான்

ஒரு கணம் யோசனையாய் நோக்கியவன், அதற்கான காரணத்தை உணர்ந்ததும் தன்னையே சபித்து கொண்டான். சரியாய் திருமணமாகி ஒரு வருடமாக போகிறது அவர்களுக்கு இன்னும் நான்கு நாட்களில்

காதலர் தினம் அன்று தான் திருமணம் செய்வோம் என பெற்றோரிடம் பிடிவாதம் செய்து அதே நாளை மணநாளாய் குறித்தனர் கிருஷ்ணாவும் ஜனனியும்.போன வருடம் இந்த நேரம் திருமண நாளை எதிர்நோக்கி ஆர்வமும் காதலுமாய் காத்திருந்த தருணங்கள் இருவர் கண் முன்னும் நிழலாடியது

இந்த நேரத்தில் ஒன்றுமில்லாத சண்டையை இவ்வளவு தூரம் இழுத்து அவள் மனதை புண்படுத்தி விட்டோமே என வருந்தினான் கிருஷ்ணா. சமாதானம் செய்வோம் என்ற எண்ணத்துடன் அவன் "ஜனனி... " எனவும்

"போதும் கிருஷ்ணா... பேசின வரைக்கும் போதும்" என்றவள் கண்களில் திரையிட்ட நீரை அடக்கி, அறைக்குள் சென்று தாளிட்டு கொண்டாள்

விளையாட்டாய் ஆரம்பித்த விவாதம் இப்படி ஆகுமென இருவருமே நினைக்கவில்லை

"ச்சே... ஏன் இப்படி ஆகணும்? முதல் anniversary மறக்க முடியாத சர்ப்ரைஸ் குடுத்து அவள சந்தோசப்படுத்தனும்னு எப்படி எல்லாம் நெனச்சேன்... இப்படி ஆய்டுச்சே... எவ்ளோ பீல் பண்ணி இருப்பா... பாவம் என் ஜனனி... மொதல்ல சமாதானம் செய்யணும்...அழுதுட்டு இருப்பாளோ..." என அவன் நினைத்த அதே நேரத்தில்

"ச்சே... நான் தான் அவசரப்பட்டு பொய் அது இதுனு வார்த்தைய விட்டுட்டேன்... ரெம்ப பீல் பண்ணிதான் அவன் அப்படி பேசிட்டான்... போய் சாரி கேக்கணும்" என எழுந்தாள்

ஏதோ தயக்கம் தடுக்க அறைக்கதவில் சாய்ந்து நின்றாள். அதே தயக்கம் தடுக்க அவனும் கதவின் இந்த புறம் சாய்ந்து நின்றான்

அவர்கள் இடையே இருந்தது அந்த கதவு மட்டுமல்ல, தயக்கம், அதன் மற்றொரு பெயர் ஈகோ... எத்தனையோ குடும்பங்களை பிரித்து நிறுத்திய அதே ஈகோ இங்கும் தன் வேலையை காட்ட துவங்கியது

"நான் ஏன் சமாதானம் செய்யணும்...அவ தானே என் காதலை கூட பொய்னு சொன்னா... என்னதான்  சட்டுன்னு divorce னு எப்படி அவ வாய்ல வரலாம்... எவ்ளோ பிளான் வெச்சுருந்தேன் முதல் வெட்டிங் டேக்கு...எல்லாத்தையும் கெடுத்துட்டா ராட்சசி" என திட்டியவன் மற்றொரு அறையில் சென்று லேப்டாப்பில் மூழ்கினான்

"நான் எதுக்கு சாரி சொல்லணும்... எல்லாம் பொய்யாமே... சின்ன பிரச்சனைய பெருசாக்கினது அவன் தானே... எவ்ளோ கனவு கண்டிருப்பேன் முதல் கல்யாண நாளை பத்தி... எல்லாம் கெடுத்துட்டான் ராஸ்கல்" என திட்டியவள் அழுது சோர்ந்து போய் உறங்கினாள்

அடுத்து வந்த இரண்டு நாட்களும் ஒரே வீட்டில் இரு தீவுகளாய் வாழ்ந்தனர் இருவரும்

அன்று பிப்ரவரி 14 - காதலர் தினம் மட்டுமல்ல, அவர்களின் மணநாளும் கூட. கிருஷ்ணா அறையைவிட்டு வெளியே வந்த போதே ஜனனி கிளம்பி விட்டிருந்தாள்

"ஜடம்... சரியான அழுத்தம் பிடிச்சவ..." என திட்டி கொண்டே வேலைக்கு கிளம்பினான். ஆபீஸ் சென்றதும் தன் தமக்கையிடம் இருந்து வந்திருந்த ஈமெயில் பார்த்ததும் என்னமோ போல் ஆனான். அந்த ஈமெயில் ஜனனிக்கும் சேர்த்தே அனுப்பப்பட்டு இருந்தது

"டியர் கிருஷ்ணா / ஜனனி,
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். அம்மா அப்பாவுக்கு பின் நான் ரெம்பவும் ரசிச்சு பாக்கற ஜோடி நீங்க தான். சில சமயம் நீங்க ஒருத்தர் மேல ஒருத்தர் காட்டுற அன்பை பாத்து கொஞ்சம் பொறாமை கூட வரும் என்னையும் அறியாம... :). இன்னும் உலகம் மொத்தத்தையும் பொறாமை கொள்ள செய்யும் படி, வாழ்க பல்லாண்டு உங்கள் காதல். மீண்டும் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...
என்றும் உங்கள் இருவரின் நலம் விரும்பும்,
ப்ரியா அக்கா" 
 
படித்ததும் ஜனனிக்கு கண்களில் நீர் நிறைந்தது. கிருஷ்ணாவிற்கோ அப்போதே ஜனனியை பார்க்க வேண்டும் போல் தோன்றியது. போனை கையில் எடுத்தவன் அவள் எண்ணை அழுத்த துவங்கினான். மீண்டும் ஏதோ யோசனையுடன் பாதியில் நிறுத்தினான்
 
இருவருக்கும் பழைய நினைவுகள் போட்டி போட்டுகொண்டு முன்னே வந்து நெஞ்சை அடைப்பது போல் தோன்றியது. இரண்டு வருடம் முன்பு இதே காதலர் தினத்தன்று தான் தன் மனதை ஜனனியிடம் வெளிப்படையாய் தெரிவித்தான் கிருஷ்ணா
 
சில பேச்சுகளின் போதும், தன் பதிவுகளிலும் குறிப்பாய் அவர்களுக்கு மட்டும் புரிந்த சங்கேத பாஷையில் உணர்த்தி இருந்தாலும் அன்று தான் உரிமையாய் அவள் கை பற்றி தன் காதலை கூறினான் கிருஷ்ணா. அதற்கே காத்திருந்தவள் போல் மௌன புன்னகையால் தன் சம்மதம் சொன்னாள் ஜனனி
 
அந்த நாளின் நினைவாய் அதே நாளில் அடுத்த வருடம் தங்கள் திருமணம் இருக்க வேண்டுமென அப்போதே முடிவு செய்தனர். ஒரு வருடம் காதலும் தவிப்புமாய் சுற்றி திரிந்த நினைவுகள் இருவரையும் ஆட்கொண்டது. பிரியா அக்காவின் மடல் இருவரின் மனநிலையையும் மாற்றியது
 
அதே நேரம் ஜனனியின் செல்பேசி அழைக்க, பேசியவள் முகம் மாறினாள்
 
*********************


ஜனனி வீட்டினுள் நுழைய, சமையல் அறையில் இருந்து ஏதோ சத்தம் கேட்டது. ஒரு கணம் பதறி நின்றாள். இத்தனை விரைவில் கிருஷ்ணா வந்திருக்க வாய்ப்பில்லையே என நினைத்த நொடி....

"ஹாய் ஜானு..." என கிருஷ்ணாவின் குரல் கேட்க, ஒரு கணம் பேச இயலாமல் அவனை பார்த்தாள்

பொதுவாய் ஜனனி என்று தான் அழைப்பான் கிருஷ்ணா, ஜானு என்ற அழைப்புகள் சிறப்பான தருணங்களில் மட்டுமே. கடைசியாய் அவன் எப்போது அப்படி அழைத்தான் என்று கூட நினைவில் இல்லை அவளுக்கு

இருவரும் மகிழ்வாய் அமர்ந்து பேசியும் தான் எத்தனை நாட்கள் ஆனது. இயந்திரகதியான வாழ்வில் எதை எல்லாம் இழந்து கொண்டு இருக்கிறோம் என இருவரும் ஒரே போல் நினைத்தனர் அந்த கணம்

மெதுவாய் அவளை நெருங்கி, அவள் கை பற்றி இதழ் பதித்தவன் "Happy Anniversary ஜானும்மா" என்றான் கண் நிறைந்த காதலோடு

ஜனனிக்கு சந்தோசத்தில் மனம் நிறைந்த போதும், அவன் மனம் புண்பட தான் பேசிய குற்ற உணர்வில் "I'm sorry Krishna...நான்..." என்றவளை பேச விடாமல் உதட்டில் விரல் வைத்து "உஷ்..." என்றான்

"No sorries and thanks between us... Did we not agree on that 2 years before the same day my love?" என அவன் கேட்க

"ம்..." என்றவள் பேச இயலாமல் ஒரு கணம் அவனை பார்த்தவள், அப்போது தான் அவனை சரியாய் பார்த்தவளாய் "என்ன இது? கை எல்லாம் என்னமோ..."

"அது என்னமோ இல்லடி... என் காதலிக்காக நான் பண்ண சமையல் கலையின் விளைவு" என அவன் குறும்பாய் பார்க்க

"ஏன் இந்த வேண்டாத வேலை, நல்ல நாளும் அதுவுமா" என அவள் கேலியாய் சிரிக்க

"என்ன நக்கலா? நான் என் பொண்டாட்டிய இம்ப்ரெஸ் பண்ணனும்னு அவ பழைய ப்ளாக் போஸ்ட்ல இருந்த ரெசிபி எல்லாம் தேடி எடுத்து பண்ணிட்டு இருக்கேன் யு நோ...?" என அவன் கண்ணடித்து சிரிக்க, அவள் எதுவும் பேசாமல் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்

பேசவேண்டிய அவசியமின்றி, உணர்ச்சிமயமாய் அப்படியே நின்றனர் இருவரும். சற்று நேரத்திற்கு பின் "ஒரு நிமிஷம் ஜனனி" என அவளை விட்டு நகர்ந்து அறைக்குள் சென்று வந்தவன் கையில் ஏதோ மறைத்து வைத்து கொண்டு "என்ன கிப்ட்னு கண்டுபிடி பாக்கலாம்?" என்றான்

"ம்... தெரியல... குடு கிருஷ்ணா ப்ளீஸ்..." என அவன் கையில் இருந்ததை பறித்து கொள்ள முயன்றாள்

"No Way... guess பண்ணினா தான் கிப்ட்..." என அவன் கையை மேலும் மறைத்தான்

"ம்... என்ன....ஹும்... போ... எனக்கு வேண்டாம்...நீயே வெச்சுக்க..." என அவள் விளையாட்டாய் கோபித்துக்கொள்ள

"ஒகே ஒகே... கை நீட்டு" என்றவன் அவள் கையில் அதை வைக்க

"ஓ...வாவ்...ஏய்...கிருஷ்ணா... எப்படி..." என அவள் தடுமாற

"நோ டென்ஷன் செல்லமே... அன்னிக்கி ஷாப்பிங் மால்ல சுத்திட்டு இருந்தப்ப இதை நீ ரெம்ப ஆசையா பாத்தத கவனிச்சேன்... அப்பவே டிசைட் பண்ணிட்டேன்... இந்த டைமண்ட் ட்ராப்ஸ் தான் வெட்டிங் டேக்கு வாங்கணும்னு" என்றவன் "போடு...எப்படி இருக்குனு பாக்கலாம்" என்றான் ஆசையாய்

அவள் போட்டு காட்டவும் "இப்ப தான் இந்த கம்மலுக்கு தனி அழகு வந்திருக்கு நீ போட்டுகிட்டதும்" என ரசனையுடன் கூற

"நானும் உனக்கு ஒரு கிப்ட் கொண்டு வந்து இருக்கேன்...என்னனு சொல்லேன் கிருஷ்..." என கேள்வியாய் பார்க்க

"ம்... கைல ஒண்ணும் பார்சல் காணோம்... So, Bagல தான் இருக்கணும்... இந்த குட்டி ஹான்ட்பாக்ல என்ன இருக்கும்? ம்ம்ம்... . மூவி டிக்கெட்ஸ், எதாச்சும் கிப்ட் கார்டு, இல்லேனா மோதிரம்" அவள் இல்லை என தலை அசைக்கவும்

"ம்... வேற என்ன... எங்காச்சும் ட்ரிப் புக் பண்ணியா...?" என அவன் ஆர்வமாய் கேட்க

"இல்ல..." என மர்ம புன்னகை பூத்தாள்

"ப்ளீஸ்டி நீயே சொல்லேன்...ப்ளீஸ்..." என அவன் கெஞ்ச, மெல்ல அவன் கை பற்றி தன் வயிற்றில் வைத்தவள், மர்ம புன்னகை பூத்தாள்

ஒரு கணம் கேள்வியாய் அவளை பார்த்தவன், சட்டென புரிய "ஏய்... ஜானு... நீ... ஜானு...ஜானு..." என மகிழ்ச்சி கரை புரள அவளை அணைத்து முத்த மழை பொழிந்தான்

அவனால் பேசவும் இயவில்லை. சற்று மனம் சமன்பட்டதும் "எப்படி தெரியும்? செக் பண்ணினயா? என்ன சொன்னாங்க? அதான் கொஞ்ச நாளா டையார்ட் டையார்ட்னு சொல்றயா? அது புரியாம நான்...ச்சே" என அவனது கேள்விகளும், பரபரப்பும், தவிப்பும் அவன் அன்பை பறைசாற்ற, கண் நிறைந்தது ஜனனிக்கு

"ம்... திடீர்னு இன்னிக்கி காலைல தான் டவுட் வந்தது... அதான் நேரமே கெளம்பிட்டேன் செக் அப் போலாம்னு... கொஞ்சம் முன்னாடி தான் லேப்ல இருந்து போன் வந்தது... உடனே கிளம்பி வந்தேன்...கிப்ட் பிடிச்சு இருக்கா கிருஷ்?" என கேட்க

"என்னடி இப்படி கேக்கற... I'm in cloud nine... எப்படி சொல்றதுனே தெரியலடி... பறக்கற மாதிரி இருக்கு...தேங்க்ஸ்டி செல்லம்" எனவும்

"No sorries and thanks between us... Did we not agree on that 2 years before the same day my love?" என வேண்டுமென்றே அவன் கூறியதை இப்போது அவள் திருப்பி கேட்டு சிரிக்க

"உன்னை பேச விடறதே தப்பு..." என அவளை அணைத்து இதழ் பதித்தவன் "ஹாப்பி வேலண்டைன்ஸ் டே மை டியர்" என்றான்

காதல் அவர்களுக்குள் இருந்த ஈகோவை வென்றது... மகிழ்ச்சி திரும்பியது...

நாமும் ஈகோ என்ற மாய வலையை தகர்ப்போம்... வாழ்வில் மகிழ்ச்சியை மட்டும் கொண்டாடுவோம்...

Happy Valentines day to one and all...!!!

நாளும்நம் சண்டையில்
நீயேதான் வெல்கிறாய்
களிப்பில்சிரிக்கும் உன்கண்களை
காணவே வலியதோற்கிறேன்!!!

(முற்றும்...)

109 பேரு சொல்லி இருக்காக:

Vasagan said...

I dedicate this wonderful story to my loving wife.

Mahi said...

அழகான கதை புவனா!உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்! :)

அருள் சேனாபதி said...

வெகு இயல்பான கதை !!!

நன்றி !!!

Porkodi (பொற்கொடி) said...

this is ambi's life story. :D

Porkodi (பொற்கொடி) said...

erkanave blogs ellam kaathu thaan vangudhu, neenga vera comment potta kadhal la mudiyum nu tension panringa, velangidum. ;-)

Porkodi (பொற்கொடி) said...

happy valentine's to you and rangu! indha week fulla paduthama samtha irundhu avara sandhosha paduthunga! :)

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - வாவ்... :)

@ Mahi - தேங்க்ஸ் மகி... :)

@ அருள் சேனாபதி - நன்றிங்க அருள் :)

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi (பொற்கொடி
//this is ambi's life story. :D //
why this kola veri? நான் ஏதோ ஓட்டை கிளாஸ்ல சிங்கள் டீ ஆத்திட்டு இருக்கேன்... இப்படி பெரிய எடத்து வம்புல மாட்டி உடறது ஞாயமா?....ஹா ஹா ஹா... :))))))

//erkanave blogs ellam kaathu thaan vangudhu, neenga vera comment potta kadhal la mudiyum nu tension panringa, velangidum. ;-) //
என்ன கொடி இது? flight ல accident ஆகுதுன்னு flightல ஏறாமயேவா இருக்கோம்... கொஞ்சம் கொல வெறி example ஆகி போச்சோ...எல்லாம் ஒரு கொல கதைய படிச்சு தான் இப்படி... :)))))

//happy valentine's to you and rangu! indha week fulla paduthama samtha irundhu avara sandhosha paduthunga! :)//
first பார்ட் ஒகே...செகண்ட் பார்ட் கொஞ்சம் கஷ்டம்...ஹா ஹா ஹா... தேங்க்ஸ் கொடி... யு டூ... :))))

என்ன ஆளே காணோம் நாலு நாளா... ஆணி அதிகமா?

Vasagan said...

Porkodi (பொற்கொடி) சொன்னது…
happy valentine's to you and rangu! indha week fulla paduthama samtha irundhu avara sandhosha paduthunga! :)

repeeeeeetttttii

கொடிம்மா

\அன்னிக்கி ஷாப்பிங் மால்ல சுத்திட்டு இருந்தப்ப இதை நீ ரெம்ப ஆசையா பாத்தத கவனிச்சேன்... அப்பவே டிசைட் பண்ணிட்டேன்... இந்த டைமண்ட் ட்ராப்ஸ் தான் வெட்டிங் டேக்கு வாங்கணும்னு"\

அப்பாவி இப்பவே மாப்பிளைக்கு ஆப்பு வச்சாச்சு

முனியாண்டி said...

ரெம்ப ரசித்தேன் சில இடங்களில் நான் வெளிப்பட்டதால்.

Chitra said...

நாளும்நம் சண்டையில்
நீயேதான் வெல்கிறாய்
களிப்பில்சிரிக்கும் உன்கண்களை
காணவே வலியதோற்கிறேன்!!!...Lovely!!!!

HAPPY VALENTINE'S DAY!!!

நசரேயன் said...

அப்புறமா கதைய படிப்பேன்

எஸ்.கே said...

அழகான காதல் கதைதான்!
அன்பான காதல்வாழ்வு, சண்டை/ஊடல், பின் சேர்தல் எல்லாம் படிக்க ரொம்ப அருமையா இருந்தது!

Porkodi (பொற்கொடி) said...

ama bayangra aani.

although, i dont quite agree with no sorry/thanks policy. appa-amma kitta thanks sollama irukalam, yenna namma porandhadhula irundhu avanga senjadhuku thanks sollave namaku neram pathadhu. nammala thappavum nenaka matanga.. aana spouse is a relationship that comes from nowhere and becomes the most important - so, while we may think the other person understands our love and everything even without saying, it may be the other way. and so we should not take things for granted and be sure to express verbally when we are indeed thankful or sorry. adhuku thaan pala peruku ego thadukkum.

Vasagan sir, appavi's rangu is super appavi - ivanga enna aapu vechalum sandhoshama ethuparam! just like my rangu! =)

Charles said...

நல்ல கதை. பழைய நியாபகங்கள் மனதை கிளறின... வாழ்க உங்கள் எழுத்து பணி...

Balaji saravana said...

ரொம்ப அழகான காதல் கதை, ஊடலும் பின் கூடலும் காதல் உணர்ச்சிகளின் சரியான கலவையுமாக கதை! செம! :)

ஸ்ரீராம். said...

ஆசம்... அண்டாரசம்...., சோ ச்வீட் சோன்பப்டி மீட்...
ஆஹாஹா...என்ன என்ன வார்த்தைகளோ...

ச்சே...இந்த அக்காவோட மெயில் மட்டும் வரலைன்னா இன்னொரு தொடர்கதை கிடைச்சிருக்கும்...

இந்த ஜோக்ஸ் எல்லாம் தளளி வச்சிட்டு சொன்னா... மறுபடி ஒரு ர.ச., ல. கதை படித்த உணர்வு...

எல் கே said...

ஹ்ம்ம் பொற்கொடி சொன்னா மாதிரி அம்பியோட கதைதான் இது. அம்பியோட தம்பி உறுதி பண்ணுவார்.. அப்புறம் இந்த காதலர் தினத்துக்கு ரங்க்ஸ் கிட்ட டைமண்ட் ட்ராப்ஸ் கேட்டு கிடைக்காம போச்சுன்னு கேள்விப் பட்டேன் ???

தெய்வசுகந்தி said...

அழகான கதை! கவிதையும் சூப்பர்!!

Vasagan said...

Kodimma,
\Vasagan sir, appavi's rangu is super appavi - ivanga enna aapu vechalum sandhoshama ethuparam! just like my rangu! =)\

I know, but puthichalika.like me.

தங்கைகளுக்கு கிடைத்த ரங்குடுவை போல் மகளுக்கும் கிடைக்க my friend ஆணை முகத்துனிடம் சொலியிருக்கேன்.

அது சரி நீ பக்கத்துக்கு இலைக்கு பாயசம் கேட்டுச்சா. like appavi.

\although, i dont quite agree with no sorry/thanks policy. appa-amma kitta thanks sollama irukalam, yenna namma porandhadhula irundhu avanga senjadhuku thanks sollave namaku neram pathadhu. nammala thappavum nenaka matanga.. aana spouse is a relationship that comes from nowhere and becomes the most important - so, while we may think the other person understands our love and everything even without saying, it may be the other way. and so we should not take things for granted and be sure to express verbally when we are indeed thankful or sorry. adhuku thaan pala peruku ego thadukkum.\

ennaku enmo theriyale, its may be subjective. In my twenty one years of married life naan neriya thapu seithu irrukalaam. naan eaappavathu thanks or sorry sonaal ennudiya wife "ennachuinka unkalluku endru ketpaal".
"ippati sonnal yaro third person solara mathri irrunkka eanpaal".

(P.S) seyitha thappuku adi vankarathu thani.

S.Sudharshan said...

இது உங்கட சொந்த கதையா ? உணர்ந்து எழுதியது போல இருக்கு .. கவிதை அருமை :)

Porkodi said...

Vasagan sir, andha dialogue naanum solluven - ana ennai ariyama niraya thadavai thank panni irukken/vaangi irukken - on both occasions i see some visible satisfaction/happiness that the other person acknowledges. namma basic instinct adhu!

P.S: unga ponnuku enna 10 vayasa?! illena epdi naan ungluku thangai aaven?! :D

மனம் திறந்து... (மதி) said...

ரொம்ப நல்லா இருக்கு! அகலத்தைக் குறைத்து இன்னும் கொஞ்சம் ஆழத்தை எட்டியிருக்கலாம்னு எனக்குத் தோணுது! கடைசியில், மெசேஜையும் தவிர்த்திருக்கலாமோ?!

கோவை ஆவி said...

//. மூணு நிமிசத்தில் முப்பது சமையல்னு ஒரு போஸ்ட் போட்டியே... ச்சே... எத்தன பேரு அதை பாத்து உன்னை சமையல் ராணினு ஏமாந்து போய் இருப்பாங்க பாவம்...//

yaarayo thaakki yeluthi irukkiramaathiri irukku..
kadhai nalla irundhadhu..

சௌந்தர் said...

பதிவுலக காதல் இப்படி தான் இருக்குமா...இதுல உங்கள் காதலும் இருக்கா....எல்லா ஜோடியை போல தான் சூப்பர்...!!!

மனம் திறந்து... (மதி) said...

வீட்லே சண்டை போட்டீங்க, சரி! சமாதானக் கொடி தூக்க இவ்ளோ பெரிய (வலைப்) பூ ரெடி பண்ணீங்க, சரி! அதை அவருக்கே நேரா அனுப்பாம...எங்க காதுல சுத்தி வேடிக்கை பாக்கறீங்களே... அங்க தான் இடிக்குது அம்மணீ ...! சுருக்கமா சொல்லப் போனா, அப்பாவி நாங்க தான்....சத்தியமா நீங்க இல்ல!!!!!!!!!

பத்மநாபன் said...

கதை அருமை..

ஊடலும் கூடலுமாய் காதலாகி கசிந்துருகிய கதை..

கதவுக்கு முன்னும் பின்னுமாய் காதலர்கள் --இது எவ்வளவு வருடமானலும் தொடரும் காதல் கதை..

எத்தனையோ ரசனகள் கூடியது காதல் ..அதனால் தான் பாரதி ..ஆதலினால் காதல் செய்யச்சொன்னான்

வள்ளுவர் ஒரு அதிகாரமே ஒதுக்கினார்..

Arun Prasath said...

நல்ல வேலை நெகடிவ் எண்டிங்ன்னு நெனச்சேன்...

அனாமிகா துவாரகன் said...

அடிப்பாவி அக்கா. கோவிந்த் மாமாகிட்ட டைமன்ட் ட்ராப்ஸ் வேணும்ன்னா கேளு. எதுக்கு இப்டி கதை கத்தரிக்காயுனு ரூட்டு போடறே. ஆனாலும் நீ ரொம்பவே விபரமானவ அக்கா.

அப்புறம் போர்க்கொடி மேடம் சாரி நம்ம 001, அவங்க ரங்ஸ்கிட்ட போடற ஐஸை பாத்தியாக்கா?

பாவம் மாம்ஸ் எல்லாம்.

வாசு மாம்ஸ், டெடிக்கேட் பண்ணினா மட்டும் போதாது, ஒரு டயமன்ட் ட்ராப்ஸ் வாங்கி கொடுக்கவும் என் பெயரில. பில் மட்டும் நீங்க போட்டுடுங்கோ. ஹி ஹி.

அப்புறம் செய்த தப்புக்கு அடி வாங்கறதெல்லாம் இப்டி பப்ளிக்ல சொல்லுவீங்களா மாம்ஸ். நம்ம ஊரு பொண்ணுங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க தான். இந்த அப்பாவி, அநன்யாக்கா மாதிரி ஆளுங்களால தான் ரொம்ப கெட்டுப் போய்ட்டாங்க. அதிலேயும் இந்த அநன்யாக்கா இருக்காங்களே. ரூலர், பூரிக்கட்டை எல்லாம் அவங்க ஹான்ட்பாக்ல வச்சுட்டு திரிவாங்க. சரியான மோசம் இந்த பொம்மனாட்டிங்க.

அனாமிகா துவாரகன் said...

ரொம்பவே லவ் ஸ்டோரி எல்லாம் படிச்சு போர். ஏதாவது கத்தி குத்து, கொலை அப்படின்னு எழுதுக்கா. கொஞ்சம் திரில்லா இருக்கும்.

MANO நாஞ்சில் மனோ said...

அசத்தல்......

A.சிவசங்கர் said...

காதலர் தின கதையில கத்தி குத்து தேவையா துவாரகன் .இது சுப்பர் தானே

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

"இட்லி மாமி" இருங்கோ, படிச்சிட்டு வரேன்!!!

தங்கம்பழனி said...

நன்றி!வணக்கம்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

//"ஜனனி... செமையா பசிக்குது... என்ன செஞ்ச?"//
தங்கமணி மைன்ட் வாய்ஸ் - இட்லி
//"Hei...its not rocket science... you know I can do it"//
தங்கமணி மைன்ட் வாய்ஸ் - அதானே இட்லி ஊத்துவது பெரிய கம்ப சூத்திரமா?
//"வேண்டாம் கிருஷ்... டென்ஷன் பண்ணாத"//
தங்கமணி மைன்ட் வாய்ஸ் - ஐயோ!!! உண்மைய கண்டுபிடிசுட்டானே
மாமி; இருங்கோ கொஞ்ச நேரத்துல வாரேன்.

பிரதீபா said...

காதலர் தின வாழ்த்துக்கள் அக்கோய்..

அருள் குமார் said...

காதலர்களுக்கு இடையே சண்டை வளருவதை அழகாக காட்டி இருக்கீங்க. ஈகோ மட்டும் இல்லாமல் இருந்தால் வாழ்க்கை நல்லா இருக்கும் அப்படிங்கிற விஷயம் தான் கதையீன் கரு.


//தன் தமக்கையிடம் இருந்து வந்திருந்த ஈமெயில் பார்த்ததும் என்னமோ போல் ஆனான்.,.....

படித்ததும் ஜனனிக்கு கண்களில் நீர் நிறைந்தது. கிருஷ்ணாவிற்கோ அப்போதே ஜனனியை பார்க்க வேண்டும் போல் தோன்றியது //எங்க கதை இங்கயே சப்புன்னு முடிந்து விடுமோனு பயந்தேன், நல்ல வேலை வேறு ஒரு நல்ல காரணத்தால் அவர்கள் இணைந்தார்கள் .//நாமும் ஈகோ என்ற மாய வலையை தகர்ப்போம்... வாழ்வில் மகிழ்ச்சியை மட்டும் கொண்டாடுவோம்... //
கடைசில் இந்த அறிவுரை இல்லாமல் வாசகரையே ,சிந்தனையை தூண்ட வச்சு இருக்கணும். அப்படி இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.

கோவை2தில்லி said...

காதலர் தினத்துக்காக அழகான காதல் கதை சூப்பர்.

சி.பி.செந்தில்குமார் said...

ரைட்டு.. ஒரு டவுட்டு.. பிப்ரவரி 14க்கு வேற சரக்கு கைவசம் இருக்கா?

Vasagan said...

\மனம் திறந்து... (மதி) சொன்னது…

வீட்லே சண்டை போட்டீங்க, சரி! சமாதானக் கொடி தூக்க இவ்ளோ பெரிய (வலைப்) பூ ரெடி பண்ணீங்க, சரி! அதை அவருக்கே நேரா அனுப்பாம...எங்க காதுல சுத்தி வேடிக்கை பாக்கறீங்களே... அங்க தான் இடிக்குது அம்மணீ ...! சுருக்கமா சொல்லப் போனா, அப்பாவி நாங்க தான்....சத்தியமா நீங்க இல்ல!!!!!!!!! \

இப்படியா உண்மையெல்லாம் publicka உடைகிறது. மாப்பிளையும் வேற வழி இல்லாம டைமண்ட் ட்ராப்ஸ் வாங்கி கொடுத்திருகார்.

Vasagan said...

சுனாமி

\பில் மட்டும் நீங்க போட்டுடுங்கோ\

\பாவம் மாம்ஸ் எல்லாம்.\

என்னையும் சேர்த்துதான?

Priya said...

அழகான கதை புவனா!
கவிதை அருமை!
உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!

ManiSekaran said...

wow.. Very fantastic story.. Keep it up...

ManiSekaran

S.Menaga said...

nice story..happy valentine's day!!

priya.r said...

ஹி ஹீ கொஞ்சம் ரொமாண்டிக்கா இருக்குப்பா ,வாழ்த்துக்கள் !

priya.r said...

//அடிப்பாவி அக்கா. கோவிந்த் மாமாகிட்ட டைமன்ட் ட்ராப்ஸ் வேணும்ன்னா கேளு. எதுக்கு இப்டி கதை கத்தரிக்காயுனு ரூட்டு போடறே. ஆனாலும் நீ ரொம்பவே விபரமானவ அக்கா. //

என்னா அறிவு ! எவ்வளோ விவரம் ! என்னமா குழந்தை கணிக்கிறா ..................

//அப்புறம் போர்க்கொடி மேடம் சாரி நம்ம 001, அவங்க ரங்ஸ்கிட்ட போடற ஐஸை பாத்தியாக்கா?

பாவம் மாம்ஸ் எல்லாம். //

008 உம் இதை ஆமோதித்து கையெழுத்து இடுகிறார்

priya.r said...

//ரொம்பவே லவ் ஸ்டோரி எல்லாம் படிச்சு போர். ஏதாவது கத்தி குத்து, கொலை அப்படின்னு எழுதுக்கா. கொஞ்சம் திரில்லா இருக்கும்.//

ஏண்டி ! இப்படி உனக்கு ஒரு கொலை வெறி !

ஆமா நீ 001 ப்ளாக் பக்கம் ஒரு கொலைக்கு கூட இச்சே மழைக்கு கூட ஒதுங்கனது இல்லையா !

போய் படித்து பாரு;இத மாதிரி கேள்வி இனி வாழ் நாள் பூரா கேட்கவே மாட்டே!

@ அப்பாவி

அனாமி கேட்கறதை சீரியஸ் ஆ எடுத்துக்காதே !

priya.r said...

//காதல் அவர்களுக்குள் இருந்த ஈகோவை வென்றது... மகிழ்ச்சி திரும்பியது...

நாமும் ஈகோ என்ற மாய வலையை தகர்ப்போம்... வாழ்வில் மகிழ்ச்சியை மட்டும் கொண்டாடுவோம்... //

இந்த வரிகளுக்காக உன்னை எங்கள் சங்கம் பாராட்டுகிறது அப்பாவி

நானும் தான் ! எனது பாராட்டை தெரிவித்து கொள்கிறேன் ........

priya.r said...

ஈகோ இல்லாத உலகம் வேண்டும் என்று கூட பாடலாம்

அப்பாவி !

இந்த தடவையும் 50 சவரன் எனக்கே !

priya.r said...

// எங்க அக்கா அப்பவே சொன்னா... என்னமோ ப்ளாக்ல கிறுக்கறா நானும் கிறுக்கறேன்ங்கற... இதெல்லாம் கறிக்கு உதவுமாடா கிருஷ்ணானு...நான் தான் கேக்கல... ச்சே" என்றான் சலிப்பாய்

"ஓஹோ... இதெல்லாம் வேறயா? என்ன சொன்ன... கிறுக்கினேனா? அந்த கிறுக்கலுக்கு தானே அன்னிக்கி...சூப்பர், awesome, அண்டாரசம்னு கமெண்ட் போட்ட....அப்ப நல்லா இருந்ததோ?"

"என்ன பண்றது? ஏதோ புதுசா கிறுக்க வந்திருக்கே லூசுன்னு பரிதாபம்... பேருக்கு ரெண்டு கமெண்ட் போட்டேன்... how nice / born genius னு நீ என் ப்ளாக்ல பீட்டர் விடல... எலிசபெத் ராணி பேத்தினு நெனப்பு... பின்னாடி தானே தெரிஞ்சுது பக்கா லோக்கல் பார்ட்டினு"

"தெரிஞ்சதல்ல... அப்ப ஏன் தினமும் சாட், SMS னு உயிர வாங்கின?"

"உன் ப்ளாக்ல போட்ட சமையல் குறிப்பெல்லாம் பாத்து வேற எதுக்கில்லைனாலும் சாப்பாட்டு பிரச்சனை வராதுனு நம்பி ரூட் போட்டேன்... பாச்சிலர் புத்தி... ஆனா அதெல்லாம் சும்மா எங்கயோ சுட்டு போட்ட போஸ்ட்னு இப்பதானே புரியுது"

"வேண்டாம்.. கோபத்த கிளறாத... நான் என்ன உன் சமையல்காரியா?"

"அத உடு... அதெப்படி... மூணு நிமிசத்தில் முப்பது சமையல்னு ஒரு போஸ்ட் போட்டியே... ச்சே... எத்தன பேரு அதை பாத்து உன்னை சமையல் ராணினு ஏமாந்து போய் இருப்பாங்க பாவம்...என் பாடு எனக்கில்ல தெரியும்"

"என்ன ஆச்சு உன் பாடு இப்ப... ஒரு நாள் டையர்ட்னு கொஞ்சம் உக்காந்தா இவ்ளோ பேச்சா...?"

"எல்லாம் என்னை சொல்லணும்... எங்க போச்சு புத்தி... ப்ளாக் படிச்சமா, மொக்க போஸ்ட்னாலும் ஆஹா ஓஹோனு நாலு கமெண்ட் போட்டமா, திருப்பி நாலு கமெண்ட் வாங்கினமானு இல்லாம இப்படியா ஒருத்தன் வாழ்கையவே அடமானம் வெப்பான்....ச்சே..."

"யாரு மொக்க போஸ்ட் போட்டா... தர்மஅடி வாங்கினதுல ஆரம்பிச்சு தர்மபாஸ் ஆன கதை வரைக்கும் மொக்கை போஸ்ட் போட்டது நானா... சாட்சாத் நீ...இந்த கிருஷ்ணா தானே..."

"அதுக்கு ச்சோ ஸ்வீட்... சோன்பப்டி மீட்னு நீ கமென்ட் போடல... இப்ப மொக்கையா? நீ மட்டும் என்ன... பட்டாம்பூச்சி புடிச்சேன் பறக்கவிட்டேன்னு... அதெலாம் ஒரு மேட்டர்னு லூசு மாதிரி எழுதல"//

சிரிச்சு சிரிச்சு .,இதுக்கு மேல சிரிக்க முடியலைப்பா !!!!! :)

என்னமா எழுதரே !

அதுவும் "மூணு நிமிசத்தில் முப்பது சமையல்னு" அப்புறம்

ச்சோ ஸ்வீட்... சோன்பப்டி மீட்னு

சான்சே இல்லை புவனா ....................

யு ஆர் ராக்கிங் மை டியர் !!!!!!!!!!!!

Porkodi said...

enake theriyama naan epo 001 aanen???!!! :O edavadhu padhavi pramanam kudukradha irundha sollitu kodukkavum! :)

anamika, ice illa, en rangu nijamave appavi thaan. naanum appavi thaan! made for each other! :P

அனாமிகா துவாரகன் said...

@A.சிவசங்கர்,
அழகா அனாமிகான்னு எங்கப்பா பெயர் வச்சா துவாரகன்னு கூப்பறீங்க.
1 - மெஹந்தி போட்ட கை போட்டு யாராவது பையன் புரோபைல் படம் போடுவாங்களா?

சரி, அது கூட வேண்டாம்.

2 - என்னை சுனாமி, அனாமின்னு இவங்க பேசறதையாவது வச்சு அனாமிகா என்பது என்னோட பெயர்னு புரிந்து கொண்டிருக்கலாம்.

இல்லேன்னா

3 - என்னோட பெயரைத் தட்டிப்பார்த்தா பொண்ணுன்னு காட்டும். It won't take even two seconds.

எதையுமே செய்யாமல் துவாரகன்னு கூப்பிட்டு கடுப்பேத்தறீங்களே. உங்கள என்ன பண்ணறதுன்னு தெரியல்ல. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

அனாமிகா துவாரகன் said...

ஏங்க்கா என்ன திட்டிட்டே இருக்கீங்க. லவ் லவ் லவ். செம போர்.

போர்க்கொடி பக்கம் போய் பார்த்தேன்க்கா. எதுவுமே புரியல. சரி நாய்க்கு எதுக்கு போர்த்தேங்காய்னு விட்டுட்டு வந்திட்டேன்.

Vasagan said...

சுனாமிக்காக
Next post Appavi Thankamani in முண்ணுறு நிமிசத்தில் மூணு இட்லி.

தோழி பிரஷா said...

அழகான கதை... உங்களுக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்!

asiya omar said...

கதை அருமை.வாழ்த்துக்கள்.

priya.r said...

//ஏங்க்கா என்ன திட்டிட்டே இருக்கீங்க. லவ் லவ் லவ். செம போர்.

போர்க்கொடி பக்கம் போய் பார்த்தேன்க்கா. எதுவுமே புரியல. சரி நாய்க்கு எதுக்கு போர்த்தேங்காய்னு விட்டுட்டு வந்திட்டேன்//

எங்கேடி திட்டினேன் ! இப்படி தான் அம்மா ,அக்கா,சொல்லறதை எல்லாம் தப்பு தப்பா எடுத்துக்குறே !

நானும் கொடி ப்ளோக்குக்கு போனப்போ திருகுறள் மாதிரி ரெண்டே வரியிலே ஒரு பதிவு போட்டதை பார்த்து கொஞ்ச நாலு எட்டி பார்க்கலே ! இப்போவும் பயந்து கிட்டே ஒரு கதையை படிச்சு கிட்டு வரேன்

priya.r said...

//சுனாமிக்காக
Next post Appavi Thankamani in முண்ணுறு நிமிசத்தில் மூணு இட்லி. //

அதிலே ஒண்ணு சரியா வேகலே ! ஹ ஹா

அன்னு said...

இது என்ன எப்ப பாத்தாலும், தீபாவளி சிறப்பு சிறுகதை, பொங்கல் சிறப்பு சிறுகதை, இப்ப என்னடான்னா காதலர் தின சிறப்பு சிறுகதைன்னு போயிகிட்டு இருக்கு? சன் டிவிக்கு ஏதும் மாறிட்டீங்களா?? இல்ல, அடுத்ததா அப்பாவி டிவின்னு ஏதும் ஆரம்பிக்க ஐடியாவா? அதுக்கு நாங்கதான் கிடச்சோமோக்கா??

அன்னு said...

//நாமும் ஈகோ என்ற மாய வலையை தகர்ப்போம்... வாழ்வில் மகிழ்ச்சியை மட்டும் கொண்டாடுவோம்... //

எப்படி இதெல்லாம்?? கண்ணு நிறைஞ்சு கண்ணீரே வந்திருச்சு தெரியுமா?? யாருமே இந்த மாதிரி ஒரு தத்துவத்தை சொன்னதில்லை புவனா...ரியலி, ரியலி யூ ஆர்...கிரேட்ட்..!!

இப்படி தத்துவம் எல்லாம் பாக்காம இருக்கணும்னா மொத வேலையா Hacking கத்துக்கணும்...ச்சே...!!

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - ரிபீட் வேறயா....ஹா ஹா ஹா...
//அப்பாவி இப்பவே மாப்பிளைக்கு ஆப்பு வச்சாச்சு//
ஹி ஹி ஹி... ரகசியத்த கண்டுபிடிச்சா மனசுக்குள்ள தான் வெச்சுக்கணும்... :))))

@ முனியாண்டி - ரெம்ப நன்றிங்க...:)

@ Chitra - ரெம்ப தேங்க்ஸ் சித்ரா உங்க வாழ்த்துக்கும்...:)

அப்பாவி தங்கமணி said...

@ நசரேயன் - இல்ல இப்பவே படிக்கணும்...இல்லேனா கனவுல மாடு முட்டும்....ஹா ஹா ...:)

@ எஸ்.கே - ரெம்ப நன்றிங்க எஸ்.கே

@ Porkodi (பொற்கொடி) - ஆணியோ ஆணி...ஒகே... Ofcourse I expect it too madam... பின்ன...தேங்க்ஸ் சாரி இல்லைனா அப்புறம் எப்படி சண்டை சமாதானம் எல்லாம்...you know what I mean....ஹா ஹா ஹ...:)))) But couple in this story I imagined were different...ஹா ஹா...:)

//Vasagan sir, appavi's rangu is super appavi - ivanga enna aapu vechalum sandhoshama ethuparam! just like my rangu! =) //
Porkodi....ahaa ......ha ha ha... okay okay... :))))

அப்பாவி தங்கமணி said...

@ Charles - ரெம்ப நன்றிங்க சார்லஸ்

@ Balaji saravana - ரெம்ப தேங்க்ஸ்ங்க பாலாஜி

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம். -
//ஆஹாஹா...என்ன என்ன வார்த்தைகளோ//
ஹி ஹி ஹி

//ச்சே...இந்த அக்காவோட மெயில் மட்டும் வரலைன்னா இன்னொரு தொடர்கதை கிடைச்சிருக்கும்//
ச்சே... எனக்கு கூட தோணலியே... பாருங்க சும்மா இருக்கறவளுக்கு ஐடியா குடுக்கறதே நீங்க தான்...ஹா ஹா..:)

//இந்த ஜோக்ஸ் எல்லாம் தளளி வச்சிட்டு சொன்னா... மறுபடி ஒரு ர.ச., ல. கதை படித்த உணர்வு//
அது அப்படியே வருதுங்க... என்ன செய்யறது... ஒரு பத்து நாள் சேந்தாப்ல பொற்கொடி ப்ளாக் படிச்சா மாறுமோ... :))))

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - ஆஹா... நீயும் பத்தவெக்கறியே கார்த்தி... :))))
//அப்புறம் இந்த காதலர் தினத்துக்கு ரங்க்ஸ் கிட்ட டைமண்ட் ட்ராப்ஸ் கேட்டு கிடைக்காம போச்சுன்னு கேள்விப் பட்டேன் ???//
அப்படியா... எனக்கு யாரும் சொல்லலியே...:)))

அப்பாவி தங்கமணி said...

@ தெய்வசுகந்தி - தேங்க்ஸ்ங்க சுகந்தி

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan -
//I know, but puthichalika.like me.//
கொடி அப்படி ஒண்ணும் சொல்லலியே...சொன்னியா என்ன கொடி?....:)

//தங்கைகளுக்கு கிடைத்த ரங்குடுவை போல் மகளுக்கும் கிடைக்க my friend ஆணை முகத்துனிடம் சொலியிருக்கேன்//
நானும் சொல்லிடறேன்...:)

//(P.S) seyitha thappuku adi vankarathu thani.//
அது மேட்டர்....:)))

அப்பாவி தங்கமணி said...

@ S.Sudharshan - சொந்த கதை எல்லாம் இல்லிங்க... எல்லாம் கற்பனை...கற்பனை தவிர வேறில்லை... நன்றி படித்ததற்கு.:)

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi - //P.S: unga ponnuku enna 10 vayasa?! illena epdi naan ungluku thangai aaven?! ://
இந்த கோணத்துல இதை நான் யோசிக்கவே இல்லையே கொடி... இதுக்கு தான் உன்னை போல விவரமான பிரெண்ட் வேணுங்கறது... என்ன தான் நீ என்னை விட கொஞ்சம் சின்ன பொண்ணா இருந்தாலும் என்னால பாராட்டாம இருக்க முடியல... :))))

@ மனம் திறந்து... (மதி) - நன்றிங்க படிச்சதுக்கும் கருத்துக்கும்... :)

@ கோவை ஆவி - //yaarayo thaakki yeluthi irukkiramaathiri irukku..kadhai nalla irundhadhu.. //
ஏன் பிரதர்... இல்ல ஏன்-னேன்....நல்லாதானே போயிட்டு இருக்கு... ஹா ஹா ஹா... தேங்க்ஸ் ஆனந்த்...:)

அப்பாவி தங்கமணி said...

@ சௌந்தர் - ஆஹா... வேண்டாம் வம்பு...இது கற்பனை... கற்பனை தவிர வேறில்லைனு டிஸ்கி போடணும் போல இருக்கே...:)))

@ மனம் திறந்து... (மதி) - ஹா ஹா ஹா... டூ லேட்....:)))))))))))

@ பத்மநாபன் -
//ஆதலினால் காதல் செய்யச்சொன்னான்//
உண்மைய சொல்லணும்னா...மொதல்ல "ஆதலினால் காதல் செய்வீர்!" தான் தலைப்பா வெச்சேன்... அப்புறம் ஏன் வம்புனு மாத்திட்டேன்...ஹா ஹா... ரெம்ப நன்றிங்க அண்ணா...

@ Arun Prasath - ச்சே ச்சே... எனக்கு நெகடிவ் எண்டிங் பிடிக்கவே பிடிக்காதுங்க அருண்... தேங்க்ஸ்...::)

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா -
//அடிப்பாவி அக்கா. கோவிந்த் மாமாகிட்ட டைமன்ட் ட்ராப்ஸ் வேணும்ன்னா கேளு. எதுக்கு இப்டி கதை கத்தரிக்காயுனு ரூட்டு போடறே. ஆனாலும் நீ ரொம்பவே விபரமானவ அக்கா //
அப்பாடா இன்னைகாச்சும் உண்மைய பேசினையே....அதான் என்னை விபரமானவனு சொன்னியே... ஹா ஹா... (இப்படி ரூட் போட்டாலாச்சும் கிடைக்குதான்னு பார்ப்போம்... ஹா ஹா...:)))

//அப்புறம் போர்க்கொடி மேடம் சாரி நம்ம 001, அவங்க ரங்ஸ்கிட்ட போடற ஐஸை பாத்தியாக்கா//
ஹா ஹா ஹா

//பாவம் மாம்ஸ் எல்லாம்//
எல்லாம் நேரம்...

//பில் மட்டும் நீங்க போட்டுடுங்கோ//
இது உலக விவரம்...:)

//இந்த அப்பாவி, அநன்யாக்கா மாதிரி ஆளுங்களால தான் ரொம்ப கெட்டுப் போய்ட்டாங்க//
அடிப்பாவி...அனன்யா வந்தா இருக்கு உனக்கு கதை... அவ இப்ப ப்ளாக் பக்கம் வர்றதில்லைனு தைரியமா சொல்றயா...ஹா ஹா...:))

//ரொம்பவே லவ் ஸ்டோரி எல்லாம் படிச்சு போர். ஏதாவது கத்தி குத்து, கொலை அப்படின்னு எழுதுக்கா. கொஞ்சம் திரில்லா இருக்கும்//
அந்த கொலை எல்லாம் எழுதறதுக்கு தான் கழகத்துல பொற்கொடி அம்மணி இருக்காக... அவங்க வந்து போற எடத்துல இதை எல்லாம் நான் எழுதி கொலை பண்ணினா நிஜமாவே கொல விழும்... :)))

அப்பாவி தங்கமணி said...

@ MANO நாஞ்சில் மனோ - நன்றிங்க

@ A.சிவசங்கர் - நல்லா சொன்னீங்க சிவசங்கர்...நன்றிங்க...:))

@ பாலகுமாரன், வத்திராயிருப்பு. - வாங்க வாங்க... :)

அப்பாவி தங்கமணி said...

@ தங்கம்பழனி - அடபாவமே... கதை அவ்ளோ கொடுமையா... வந்த வேகத்துல ஓடிட்டீங்க போல...:)

@ பாலகுமாரன், வத்திராயிருப்பு. - ஹா ஹா ஹா... மைண்ட்வாய்ஸை நான் மறந்தாலும் நீங்க மறக்க மாட்டீங்க போல இருக்கே.... சூப்பர் கற்பனை... :))

@ பிரதீபா - நன்றிங்க அம்மணி... :))

அப்பாவி தங்கமணி said...

@ அருள் குமார் - ரெம்ப நன்றிங்க அருள் குமார்... அந்த கடைசி வரி கூடுதல் தான்னு நீங்க சொன்னப்புறம் எனக்கும் தோணுது... நன்றி... :))

@ கோவை2தில்லி - நன்றிங்க ஆதி...:)

@ சி.பி.செந்தில்குமார் - ஆஹா...இன்னுமா... இதுக்கு மேல போட்டா எல்லாரும் சேந்து ஆள் வெச்சு அடிப்பாங்க...ஹா ஹா ஹா... நன்றிங்க... :)

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - //இப்படியா உண்மையெல்லாம் publicka உடைகிறது. மாப்பிளையும் வேற வழி இல்லாம டைமண்ட் ட்ராப்ஸ் வாங்கி கொடுத்திருகார்//
அப்படியா... இன்னும் தரலியே... closet closet ஆ தேட வேண்டியது தான்... ஹா ஹா... :))

@ Priya - ரெம்ப நன்றிங்க ப்ரியா... :)

@ ManiSekaran - ரெம்ப நன்றிங்க மணிசேகரன்...

@ S.Menaga - தேங்க்ஸ்ங்க...படிச்சதுக்கும் வாழ்த்துக்கும்... :)

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//ஹி ஹீ கொஞ்சம் ரொமாண்டிக்கா இருக்குப்பா ,வாழ்த்துக்கள் //
கொஞ்சமா? அது சரி... :)

//என்னா அறிவு ! எவ்வளோ விவரம் ! என்னமா குழந்தை கணிக்கிறா//
கணிக்கறா சரி... யாரோ கொழந்தைன்னு சொன்னீங்களே... யாரு அது? ஹையோ ஹையோ... :))

//008 உம் இதை ஆமோதித்து கையெழுத்து இடுகிறார் //
Revision ப்ளீஸ்...யாரு நம்பர் என்னனு மறந்து போச்சு... உங்க சங்கத்து போர்டுல ஓட்டிடுங்க....:)

//ஏண்டி ! இப்படி உனக்கு ஒரு கொலை வெறி//
நல்லா கேளுங்க... கொஞ்சம் முன்னாடி என்னமோ கொழந்த கலந்தனு கொஞ்சல் வேற... ஹ்ம்ம்... :)

//இந்த வரிகளுக்காக உன்னை எங்கள் சங்கம் பாராட்டுகிறது அப்பாவி //
என்னா ஒரு பெருந்தன்மை... ஹ்ம்ம்... நன்றிங்கோ அம்மணி உங்களுக்கும் உங்க சங்கத்துக்கும்... ஹா ஹா..:)

//இந்த தடவையும் 50 சவரன் எனக்கே//
உனக்கே உனக்கா... ஒகே ஒகே... :)

//சான்சே இல்லை புவனா ...................யு ஆர் ராக்கிங் மை டியர் !!!!!!!!!!!! //
ஐயையோ... ப்ரியாகுள்ள ஏதோ ஆவி பூந்துடுச்சா? பின்ன எப்படி இப்படி பாராட்டலாம்... (எதுக்குன்னு எனக்கு தெரியும்... தயக்கம்-கோபம்-சமாதானம் அந்த மேட்டர் தானே...சரி சரி... பொழச்சு போங்க... ஹா ஹா...தேங்க்ஸ் ப்ரியா...:)

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi -
//enake theriyama naan epo 001 aanen???!!! :O edavadhu padhavi pramanam kudukradha irundha sollitu kodukkavum! :)//
ஹையோ ஹயோ...சூப்பர் சங்கமப்பா...:)

//naanum appavi thaan! made for each other! //
ஒரு நாளைக்கி how many பொய் allowed உங்க ஊர்ல... சும்மா ஒரு பொது அறிவு கேள்வி... நீங்க எழுதினதுக்கும் இதுக்கும் நோ ரிலேசன்...:))))

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan -
//சுனாமிக்காக - Next post Appavi Thankamani in முண்ணுறு நிமிசத்தில் மூணு இட்லி//
ஆஹா... மீ எஸ்கேப்... :)

@ தோழி பிரஷா - நன்றிங்க தோழி...

@ asiya omar - நன்றிங்க ஆசியா...:)

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//அதிலே ஒண்ணு சரியா வேகலே ! ஹ ஹா//
என்ன அது ப்ரியா அரைச்ச மாவு....:)))

@ அன்னு - //அப்பாவி டிவின்னு ஏதும் ஆரம்பிக்க ஐடியாவா//
இது நல்ல ஐடியாவா இருக்கே.. தேங்க்ஸ் அன்னு... சும்மா இருக்கறவளுக்கு ஐடியா குடுக்கறதே உங்க வேலையா போச்சு...அப்புறம் என்னை திட்ட கூடாது சொல்லிட்டேன்... ஹா ஹா ஹா... :)))

//இப்படி தத்துவம் எல்லாம் பாக்காம இருக்கணும்னா மொத வேலையா Hacking கத்துக்கணும்...ச்சே//
ஏன் இந்த கொல வெறி? இப்பவே சொல்லிட்டேன்..என் ப்ளாக்க்கு மட்டுமே எதுனா ஆச்சு... நீங்க தான்... நீங்களே தான்... ஏன்னா நீங்களே confession குடுத்துடீங்க... ஹா ஹா ஹா... இப்படியா வந்து சிக்குவீங்க என்கிட்ட... அன்னு அன்னு.... :))))

siva said...

naanthan fistu...

siva said...

நல்ல இருக்கு
ஆனால் எனக்குதான்
காதல் பிடிக்காதே

:(((

அனாமிகா துவாரகன் said...

//எங்கேடி திட்டினேன் ! இப்படி தான் அம்மா ,அக்கா,சொல்லறதை எல்லாம் தப்பு தப்பா எடுத்துக்குறே !/
ஹி ஹி.

@ போர்கொடி, சாரி தானைத் தலைவி001,
மாமா அப்பாவின்னு சொன்னீங்க. நம்பிட்டேன். அடுத்ததா உங்கள மாதிரின்னு சொன்னது தான் இடிக்குது. ஏனுங்க. உங்க புளொக் படிக்கறதுன்னா ரொம்பவே அறிவாலியாக இருக்கனுமாமே. நிசமா? இருங்க வந்து பார்க்கறேன். எனப் போல சின்ன கொழந்தைகளுக்கும் புரியற மாதிரி எழுதறது.

அனாமிகா துவாரகன் said...

@சிவா,
ஏனுங்க, தம்பிக்கு எந்தவூருங்க. 100க்கப்புறம் வருவது நூத்தி ஒன்னுங்க. ஒன்னு இல்லை. அப்பாவி புளொக் படிச்சாலே இருக்கற அறிவெல்லாம் போயுடுது.

அனாமிகா துவாரகன் said...

முன்னூறு நிமிசத்தில் மூணு இட்லி. ஹா ஹா ஹா. நிலத்தில உருண்டு உருண்டு சிரிக்கறேன். முடியல. யப்பா.

Prasanna said...

நலமா..
என்ன இருந்தாலும் அடுத்த Feb 14 வரைக்கும் இத தொடர்கதையா போட்டிருக்கலாம்..
அவ்ளோ நல்லா இருக்குன்னு சொல்ல வந்தேன் :)

Vasagan said...

\@ போர்கொடி, சாரி தானைத் தலைவி001,
மாமா அப்பாவின்னு சொன்னீங்க. நம்பிட்டேன். அடுத்ததா உங்கள மாதிரின்னு சொன்னது தான் இடிக்குது. \

'என்னமா பேசர்த்து கொழந்த' சமத்து

தக்குடு said...

நல்ல கதை! பகிர்வுக்கு நன்றி! மத்ததை எல்லாம் நாம offline-ல பேசிக்கலாம் அக்கா!..:)

அப்பாதுரை said...

நல்லா இருக்கு.

சமீபத்தில் படித்து ரசித்த இன்னொரு எழுத்து:

உலகிலேயே மிகச்சிறிய காதல்கதை நான் அவளை காதலிப்பது
உலகிலேயே மிகப்பெரிய சோகக்கதை அவள் இன்னொருவனை காதலிப்பது.
(கவி அழகன்)

அன்னு said...

//ஏன் இந்த கொல வெறி? இப்பவே சொல்லிட்டேன்..என் ப்ளாக்க்கு மட்டுமே எதுனா ஆச்சு... நீங்க தான்... நீங்களே தான்... ஏன்னா நீங்களே confession குடுத்துடீங்க... ஹா ஹா ஹா... இப்படியா வந்து சிக்குவீங்க என்கிட்ட... அன்னு அன்னு.... :))))//

appaavi,naanu illai, vera yaaraavathu unga blogai hack senjaalum intha valaiyulagame kaiyeduthu kumbittu nanri sollum. he he... athu theriyaama over confidence aagidaathiinga... ha haha..

Avargal Unmaigal said...

very nice story. i really enjoyed it.

இராஜராஜேஸ்வரி said...

காதல் அவர்களுக்குள் இருந்த ஈகோவை வென்றது... மகிழ்ச்சி திரும்பியது... //
very nice said.

சே.குமார் said...

அழகான கதை.

priya.r said...

இன்னும் ஒரு சில மணி துளிகளில்
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் (!)

வள்ளென்று ஒன்று குரைக்கும் சாரி
கல்லென்று ஒரு கற்சிலை சாரி சாரி
ஜில்லென்று ஒரு காதல் பகுதி 8
வர இருக்கிறது என்பதை தயக்கத்துடன் தெரிவித்து கொள்கிறோம் .,

அப்பாவி ! நீ தான் யாரும் கேட்க கூட மாட்டுகிறாங்க என்று புகார் சொன்னே !
பாரு நாங்களும் ஆவலோடு எதிர்பர்த்து எப்படியும் நீ 11 மணிக்கு முன்பு போட போறதில்லே ;அதற்கு முன்பு ௦ தூங்க போய் விடுவோம்
இப்போ என்ன பண்ணவே ; இப்போ என்ன பண்ணுவே !

அப்பாவி தங்கமணி said...

@ siva - இன்னும் பத்து நாள் கழிச்சு வந்தா தான் பர்ஸ்ட்....:))) (காதல் பிடிக்காதா... சரி..ஒகே.... இன்னிக்கி பொய் சொல்ற கோட்டா முடிஞ்சு போச்சு இதோட...:))))

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா -
//அப்பாவி புளொக் படிச்சாலே இருக்கற அறிவெல்லாம் போயுடுது.//
அடபாவிங்களா... நீங்க மாத்ஸ் ஒழுங்கா படிக்காததுக்கு கூட நான் தான் காரணமா?....................

//முன்னூறு நிமிசத்தில் மூணு இட்லி. ஹா ஹா ஹா. நிலத்தில உருண்டு உருண்டு சிரிக்கறேன். முடியல. யப்பா//
பாத்து நிலநடுக்கம் வந்துற போகுது... :))))

அப்பாவி தங்கமணி said...

@ Prasanna - வாங்க பிரசன்னா. நலம், நீங்க நலமா? எங்க ரெம்ப ஆளா எஸ்கேப்?.அடுத்த Feb 14 வரை தொடர்கதையா? அவ்ளோ அடி வாங்க தெம்பில்ல பிரதர்... ஹா ஹா... அவ்ளோ நல்லா இருக்குனு சொன்னதை நானும் நம்பிட்டேன்...:)))

@ Vasagan - //'என்னமா பேசர்த்து கொழந்த' சமத்து// கொழந்தகுனு ஒரு இலக்கணம் இருக்கு... நீங்க அதை மொதல்ல படிக்கணும்...அப்புறம் என்ன சொல்றீங்கனு பாப்போம்... :)))

@ தக்குடு - ஆஹா... ஏதோ மிரட்டல் மாதிரி தோணுதே... அதே தானோ... ஆன கொடி போல பேசி "தீத்துக்கலாம்" னு சொல்லாம போனியே....:))) (எனக்கு எதுவும் தெரியாது, கற்பனை குதிரை போன பக்கம் நானும் போனேன்... அவ்ளோ தான்.. நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மை தவிர வேறில்ல...)

அப்பாவி தங்கமணி said...

@ அப்பாதுரை - நன்றிங்க... வாவ்...அழகான எழுத்து...கவி அழகனின் எழுத்தை பகிர்ந்து கொண்டதுக்கு மிக்க நன்றிங்க...

@ அன்னு - இப்படியே டேமேஜ் பண்ணினா உங்க ஊர்ல snow கொட்டும்னு சாபம் போடுவேன் ...ஏற்கனவே நான் சாபம் போட்டு ஒருத்தருக்கு பலிச்சுருக்கு...:)))

@ Avargal Unmaigal - Thanks a lot...glad you liked it... :)

அப்பாவி தங்கமணி said...

@ இராஜராஜேஸ்வரி - Many thanks Rajeshwari

@ சே.குமார் - ரெம்ப நன்றிங்க குமார்

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - எனக்கு எதிரி வெளில இல்லைன்னு இப்ப நல்லாவே புரியுது.... :)))) ஆனாலும் பப்ளிசிட்டி பப்ளிச்ட்டி தானே... அதனால நன்னிஹை... ஹா ஹா ஹா... :))))))

//எப்படியும் நீ 11 மணிக்கு முன்பு போட போறதில்லே ;அதற்கு முன்பு ௦ தூங்க போய் விடுவோம்
இப்போ என்ன பண்ணவே ; இப்போ என்ன பண்ணுவே//
இன்னும் அஞ்சு நிமிசத்துல போட்டுடுவேனே...அப்ப என்ன பண்ணுவீங்க அப்ப என்ன பண்ணுவீங்க...:)))))

priya.r said...

//இன்னும் அஞ்சு நிமிசத்துல போட்டுடுவேனே//

போட்டுடுவீங்களா ! அட்சட்சோ !!
எப்போ அப்பாவி இப்படி கொலைகாரியா மாறி னீங்க!

priya.r said...

//இன்னும் அஞ்சு நிமிசத்துல போட்டுடுவேனே//

போட்டுடுவீங்களா ! அட்சட் சோ !!
எப்போ அப்பாவி இப்படி கொலைகாரியா மாறி னீங்க!

priya.r said...

unga blogla comments poddu click seiyyum pothu

bx-nfjxn8 endru pala murai kanpiggirathu !
ethanaal ippadi?

அன்னு said...

//@ அன்னு - இப்படியே டேமேஜ் பண்ணினா உங்க ஊர்ல snow கொட்டும்னு சாபம் போடுவேன் ...ஏற்கனவே நான் சாபம் போட்டு ஒருத்தருக்கு பலிச்சுருக்கு...:)))//

ஏன் இப்படி... நல்லாத்தானே போயிகிட்டிருந்தது...?
:))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//போட்டுடுவீங்களா ! அட்சட் சோ !!
எப்போ அப்பாவி இப்படி கொலைகாரியா மாறி னீங்க//
உங்க கூட சேந்தபுரம் தான்... :))))

//unga blogla comments poddu click seiyyum pothu - bx-nfjxn8 endru pala murai kanpiggirathu !
ethanaal ippadi?//
என்னை திட்டி கமெண்ட் போட்டீங்களோ... ஜஸ்ட் கிட்டிங்... தெரியலயே அக்கா... sometimes refresh (F5) பண்ணினா தானே சரி ஆகி கமெண்ட் போஸ்ட் ஆய்டும்...

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - ha ha ha ha :)))))))

Rathnavel said...

வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி said...

@ Rathnavel - ரெம்ப நன்றிங்க

Thamizhmaangani said...

வாவ்!!!!!!!!!!!!:)))) awesome!!

அப்பாவி தங்கமணி said...

@ Thamizhmaangani - நன்றிங்க..:)

Post a Comment