Thursday, February 17, 2011

நாலு பேரு நாலு விதமா...(ஹி ஹி ஹி)


தலைப்பை பாத்ததும் "என்னாச்சு அப்பாவி? உன் அலப்பறை தாங்க முடியாம எல்லாரும் கன்னா பின்னான்னு திட்டிட்டாங்களா?"னு சந்தோசமா துக்கம் விசாரிக்கற தோழிகளே, தோழர்களே, ப்ளாக் குல திலகங்களே...

இன்னும் சிலர் "எங்கயோ நல்லா அடி வாங்கி இருக்கா" அப்படின்னு சந்தோசமா நீங்க சிரிக்கறது நல்லாவே கேக்குது... ஆனால்... பின்னால் வரப்போகும் விபரீத்ததை அறியாமல்னு இப்ப இங்க டயலாக் போட்டா எப்படி இருக்கும்...ஹா ஹா ஹா...

அப்படி எல்லாம் ஒண்ணும் யாரும் என்னை திட்டல... ஹி ஹி ஹி

வேற என்ன தான் நடந்ததுன்னு "நாலு பேரு நாலு விதமா... " னு என்னமோ சொல்றன்னு கேக்கறீங்களா... சொல்றேன் சொல்றேன்

நேத்தைக்கு ட்ரெயின் பிளாட்பார்ம்ல ட்ரெயின்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தப்ப....

(பின்ன ட்ரெயின் பிளாட்பார்ம்ல ப்ளைட்டுக்கா வெயிட் பண்ணுவாங்க - மைண்ட்வாய்ஸ்)

ஹேய்... மைண்ட்வாய்ஸ்... உஷ்...

என்ன சொல்லிட்டு இருந்தேன்... ஆங்... நேத்தைக்கு ட்ரெயின் பிளாட்பார்ம்ல ட்ரெயின்க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தப்ப என்னை கடந்து போன சிலரோட பேச்சு என் காதுல விழுந்தது...

(காதே விழுந்துருந்தா புண்ணியமா போய் இருக்கும்... ஹும் - மைண்ட்வாய்ஸ்)

காதுல விழுந்தத கேட்டுட்டு ட்ரெயின்ல ஏறி ஜன்னலோர சீட் பிடிச்சு உக்காந்ததும் அப்படியே ஒரு கற்பனை... இந்த இடத்துல நீங்க மணிரத்னம் சினிமா சீன் போல ஒரு மெல்லிய வெளிச்சம், விதம் விதமான மனிதர்கள்னு கற்பனை பண்ணிக்கலாம்... தப்பில்ல

(இது வேறயா... நல்லவேள, மணிரத்னம் கேக்கற தூரத்துல இல்ல... இல்லேனா கொல கேஸ் ஆகி போயிரும்... - மைண்ட்வாய்ஸ்)

சரி அத உடுங்க... என் மனசுல தோணின கற்பனை என்னன்னா எந்த situation ல என்னை கடந்து போன மக்கள் அந்த டயலாக் பேசி இருப்பாங்கன்னு தான்...

அப்படியே ஒரு ரீல் சுத்துச்சு மனசுல... நான் தான் மனசுல பட்டதெல்லாம் உங்ககிட்ட ஷேர் பண்ணிகரவளாச்சே... அதுக்கு தானே ப்ளாக்... சரி சரி நோ டென்ஷன்...

முதல்ல என் காதுல விழுந்தத சொல்லிடறேன்... அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் கிளியரா சொல்லிடறேன்... நான் யார் பேசறதையும் ஒட்டு கேக்கல... நான் சிவனேன்னு நின்னுட்டு இருந்தேன்.. அவங்களா போற போக்குல பேசினது என் காதுல விழுந்தது, அப்புறம் என் கற்பனை குதிரை பறந்தது... இதுல என் தப்பு எதுவுமில்ல... சொல்லிட்டேன்... ஆமா...

ஒகே... மேட்டர்க்கு போவோம்

மொதல்ல காதுல விழுந்தது... ஒருத்தர் தனக்கு தானே பேசிகிட்டது, உன்னை மாதிரியானெல்லாம் கேட்டா அப்புறம் என் மைண்ட்வாய்ஸ்கிட்ட புடுச்சு குடுத்துடுவேன்

Actually, அவர் காதுலே எதையோ மாட்டிகிட்டு போன்ல பேசினார்னு அப்புறம் புரிஞ்சது... ஹி ஹி ஹி... போன்ல யார்கிட்டயோ தெலுகுல மாட்லாடிட்டு போனார்

வாட்? நீ எந்த ஊர்ல இருக்கேன்னு டென்ஷன் ஆகாதீங்க? கனடா ஒரு மல்டி-கல்சுரல் பிளேஸ்... எல்லா மக்களும் உண்டு...

"இக்கட்னே, டொரோண்டோலோ மாவாடு சதுவுகுண்டாடு... தரவாத்த...". இவ்ளோ தான் கேட்டது...அதுக்குள்ள அவர் கிராஸ் பண்ணி போய்ட்டார்

"என்னது மாவடுவா... என்ன ஊறுகாய் போட போறியா? என்னது திருவாத்தனா... என்னத்துக்கு திட்டற நீ இப்போ?" அப்படின்னு நீங்க டென்ஷன் ஆகரீங்கன்னா உங்களுக்கு ஜெமினி டிவி பரிச்சயம் இல்லைன்னு அர்த்தம்... உங்களுக்காக இதோ மொழி பெயர்ப்பு

"இங்கதான் டொரோண்டோல எங்க பையன் படிச்சுட்டு இருக்கான்... அப்புறம்.."  இதான் அவர் பேசினது

அவங்க conversation என்னவா இருந்துருக்கும்னு என்னோட கற்பனை: (தெலுகு பாவம் விட்டுடுவோம்... தமிழ்லயே கொல்றேன் ச்சே... சொல்றேன்...)

கிருஷ்ணா: ஹலோ பிரசாத், சௌக்கியமா?

பிரசாத்: சௌக்கியம் கிருஷ்ணா.. .அங்க எப்படி?

கிருஷ்ணா: எல்லாம் சௌக்கியம்... அப்புறம் இந்தியால இருக்கியா இல்ல ப்ராஜெக்ட்ஆ?

பிரசாத்: இந்தியால தான்... இப்ப ப்ராஜெக்ட் ஒண்ணும் பெருசா இல்ல... அப்புறம் பசங்க எங்க படிக்கறாங்க?

கிருஷ்ணா: இங்க தான் டொரோண்டோல எங்க பையன் படிச்சுட்டு இருக்கான்... அப்புறம் பொண்ணு வாட்டர்லூ யூனிவர்சிட்டில"

எப்படி நம்ம கற்பனை? ஹி ஹி ஹி...ஒரு எபக்ட்க்கு நானே பேர் எல்லாம் சேத்துட்டேன்... never mind...:)

அடுத்தது... இது ஒரு தொரசாணி அம்மணி... அதாங்க வெள்ளைகார லேடி... லேடினு சொல்ல முடியாது ஒரு காலேஜ் பொண்ணு போல இருந்தது... புல் மேக்கப், நேரா அழகி போட்டிக்கு போலாம்... கூட ஒரு பையன் அவன்கிட்ட அந்த பொண்ணு கோவமா பேசினது இதான்

"where the hell .....?" இவ்ளோ தான் காதுல விழுந்தது...அம்மணி ஓவர் fast ... அதுக்குள்ள நாலடி தள்ளி போய்டுச்சு... அப்புறம் ஒண்ணும் காதுல விழல...

அந்த அம்மணி "where the hell .....?"னு சொல்றத கேட்டதும் "Here it is ... Toronto" னு சொல்லணும்னு நாக்கு துடிச்சது... கண்ட்ரோல் பண்ணிகிட்டேன்

என்ன இருந்தாலும் "பொறந்த ஊர பழிச்சாலும் பொழைக்க வந்த ஊர பழிக்க கூடாது"னு பழமொழி இருக்கில்ல (இது யாரு சொன்ன பழமொழினு குறுக்கு கேள்வில்லாம் கேக்க கூடாது... அப்பப்ப தோணறத எடுத்து விடறது தான்... இதுக்கெல்லாம் ப்ராஜெக்ட் ரிப்போர்ட்ல போடறாப்ல reference லிஸ்ட் போடவா முடியும்... ஹி ஹி...)

சரி... அந்த அம்மணி ஏன் எதுக்கு அப்படி கோபமா பேசி இருக்கும்னு ஒரு கற்பனை


Rose : whats plans for weekend?

Jack : nothing much...you...?

Rose : mmm.... am thinking... shall we meet my parents this weekend?

Jack : aaa... I just remembered something.... actually I got other plans

Rose : you didn't say that when I asked before

Jack : I didn't remember

Rose : I know... you're trying to avoid my family (கோபமுகம்)

Jack : not really hon (சமாதான முயற்சி..)

Rose : then where the hell are you going?

இப்படி தான் இருக்கும்னு தோணுச்சு... சும்மா ஒரு மூவி எபக்ட்க்கு Rose / Jackனு சேத்துட்டேன்... டைடானிக் ரசிகர்கள் என்னை மன்னிப்பீர்களாக... How is my கற்பனை? கா.து எல்லாம் not allowed ...ஒகே? ஒகே...

அவ்ளோ தாங்க முடிஞ்சு போச்சு பதிவு...

நாலு பேரு நாலு விதமானு சொன்னியே ரெண்டு தானே சொன்னே இப்போனு கேக்கறீங்களா... ஹி ஹி ஹி

அது அப்படி டாபிக் நல்லா இருந்தது போட்டுட்டேன்... actually logically physically பூச்சிகொல்லி... ச்சே... ரைமிங் யோசனைல ஏதோ ஒளறிட்டேன் சாரி... நான் சொல்ல வந்தது என்னன்னா... இந்த டாபிக் logically ஒரு வகைல கரெக்ட் தான்

எப்படினா... டயலாக் ரெண்டு தான்னாலும் கிருஷ்ணா / பிரசாத் & Rose / Jack னு நாலு பேரு இருக்காங்களே... சோ நாலு பேரு நாலு விதமா பேசினாங்கங்கறது கரெக்ட் தானே... ஒகே ஒகே... கல்லெல்லாம் வீசறதுகுள்ள மீ எஸ்கேப்...

(மைண்ட்வாய்ஸ் - ஈஸ்வரா.... இவ கொடுமைக்கு ஒரு அளவே இல்லையா...  ஒட்டு கேட்டதுகெல்லாம் போஸ்ட் போடறா... நான் மட்டும் கனடா பிரதமரா இருந்தா அப்பாவி தங்கமணிய ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ண சொல்லி ஆர்டர் போட்டுடுவேன்... வெளிய போனாதானே கற்பனை குதிரை பறக்குது ஓடுது எல்லாம்... அந்த ஆண்டவன் கூட இவகிட்ட இருந்து நம்மள காப்பாத்த முடியாது போல இருக்கு... ஹும்... )
 
...

97 பேரு சொல்லி இருக்காக:

கோவை ஆவி said...

Me first??

அமைதிச்சாரல் said...

ஹவுஸ் அரெஸ்ட் செஞ்சாலும், காவலுக்கு நிக்கிறவங்க பேசறதையும் ஒரு போஸ்டா போட்டுட மாட்டீங்களா :-))))))))

இந்த இடுகையின் கடைசிவரியை கன்னாபின்னான்னு ரிப்பீட்டுறேன் :-))))))))))

அருள் சேனாபதி said...

இதுக்குத் தான், நாலு பக்கமும் பராக்கு பார்க்கப் படாதுன்கிறது!!!

Very funny imaginations though. Enjoyed!!!

கோவை ஆவி said...

kittathatta Venkat prabhu padam paartha effect irundhadhu... (Onnumae illaama oru pakkaththa ottiteengalae!!)

Mahi said...

தங்கமணி & மைண்ட்வாய்ஸ் அலப்பறை கலக்கல்!!!

(ஒட்டு)கேட்ட விஷயங்கள விட மைண்ட்வாய்ஸ் ஜூப்பரா இருக்குங்கம்மிணி! :)

/கல்லெல்லாம் வீசறதுகுள்ள மீ எஸ்கேப்.../அவ்வ்வ்! கல்லாவது,இன்னொண்னாவது!!நீங்க பேச ஆரம்பிச்சா பறந்துவர கல்லெல்லாம் பொடிப்பொடியாப் போயிருமே புவனா!!!! ;)

தக்குடு said...

//தெலுகுல மாட்லாடிட்டு போனார்//

தெலுங்கு கனடால கேக்கலைனா தான் அதிசயம். துரையை ஏமாத்தி விசாவே இல்லாம கள்ள லாரிலையாவது ஏறிப் போற கூட்டம் இந்த குல்டி கூட்டம்நு பெங்களூர்ல என்னோட தோழி சொல்லுவா..:)

உங்க அலப்பறை தாங்காமதான் ஒபாமா மாமா கனடாலேந்து US வரவா எல்லார் கிட்டையும் வசூல் பண்ணலாம்னு முடிவு எடுத்து இருக்கார்...:P

ஹேமா said...

தங்கமணி...சரில்ல.ரொம்ப ஒட்டுக்கேக்கிறீங்க.காதில புண் வந்திடும் !

பிரதீபா said...

http://media.photobucket.com/image/hitting%20head%20on%20wall/yukimoriko/angrygirl.gif?o=1

இனிமே இந்தப் பக்கம் வருவியா, வருவியா..

Porkodi said...

//Onnumae illaama oru pakkaththa ottiteengalae!//

ennanga aavi.. pudhusa varra madhri aacharya padringa??

Vasagan said...

தங்கைமணி
Trainla போகும் போது எதாவது படிச்சிட்டு போவேன். But குழந்தைகள் வந்ததுநா அதுகளை பார்க்காது ( பார்த்தால் ரியல்ட்டி கிடைக்காது) காதை மட்டும் தெறந்து வச்சுருவேன். ஒரு தடவை U of T இல இருந்து Dundas வரும் போதுனு நினைகிறேன் ஒரு குழந்தை 4 வயசு இருக்கும் கைல one toy , கூட ஒரு வயசானவங்க , train ல பேசிகிட்டே இருந்தாள் Dundas ல இறங்க போது அது பேசிகிட்டே போனதுல எனக்கு எப்பவும் மறக்கமுடியாத வார்த்தைகள்
'I've been having a lot of dreams '
'I've to do many things'
அப்பாவி மாதிரி ability இருந்தால் அழகான ஒரு கதை எழுதி இருக்கலாம்.
உன்னால் மட்டும் எப்படி? good skill, keep it up.

கும்மி தொடரும்.

Chitra said...

அவ்ளோ தாங்க முடிஞ்சு போச்சு பதிவு...


...what the hell was this? ha,ha,ha,ha,ha,ha,ha,ha...

Charles said...

ஆகா இப்படி கூட பதிவு போடலாமா? என்னமோ போங்க... ஆனா கற்பனை நல்லா இருந்தது. (உங்களுக்கு சொல்லனுமா?) அதை விட லாஸ்ட் மைண்ட்வாய்ஸ் நல்லா இருந்தது..
ha ha ha

Vasagan said...

பதிவு தலைப்பை பார்த்த உடன் இது ஒரு எதிர் பதிவாக இருக்குமா என்று எதிர் பார்த்தேன்(No No சிண்டுமுடிதல்) இல்லையா குழந்தை.

Vasagan said...

\எங்கயோ நல்லா அடி வாங்கி இருக்கா\

சே சே இதை எல்லாமுமா நம்புவோம்.
அடி குடுத்துதான் பழக்கம் அப்படின்னு solikiruvom

siva said...

what is this....?..@#$$%%%$%^^$$##$%^&*#@3...kakakapo...

Vasagan said...

(பின்ன ட்ரெயின் பிளாட்பார்ம்ல ப்ளைட்டுக்கா வெயிட் பண்ணுவாங்க - மைண்ட்வாய்ஸ் )


(காதே விழுந்துருந்தா புண்ணியமா போய் இருக்கும்... ஹும் - மைண்ட்வாய்ஸ்)

(இது வேறயா... நல்லவேள, மணிரத்னம் கேக்கற தூரத்துல இல்ல... இல்லேனா கொல கேஸ் ஆகி போயிரும்... - மைண்ட்வாய்ஸ்)

(மைண்ட்வாய்ஸ் - ஈஸ்வரா.... இவ கொடுமைக்கு ஒரு அளவே இல்லையா... ஒட்டு கேட்டதுகெல்லாம் போஸ்ட் போடறா... நான் மட்டும் கனடா பிரதமரா இருந்தா அப்பாவி தங்கமணிய ஹவுஸ் அர்ரெஸ்ட் பண்ண சொல்லி ஆர்டர் போட்டுடுவேன்... வெளிய போனாதானே கற்பனை குதிரை பறக்குது ஓடுது எல்லாம்... அந்த ஆண்டவன் கூட இவகிட்ட இருந்து நம்மள காப்பாத்த முடியாது போல இருக்கு... ஹும்... )


மாப்பிளை விடுங்க இது எல்லாம் நம்ம வீர வாழ்க்கைல் சகஜம்.

siva said...

(பின்ன ட்ரெயின் பிளாட்பார்ம்ல ப்ளைட்டுக்கா வெயிட் பண்ணுவாங்க - மைண்ட்வாய்ஸ் )//

மைன்ட் வாயிஸ்
இங்க மட்டும் இல்லை வாசகன் மாமா
வீட்டில இட்லி சுடரப்ப்வும்
சட்னி சியும்போதும்
ஆணிபிடுங்கும்போதும்
...எக்ஸ்ட்ரா .....எக்ஸ்ட்ரா ..

siva said...

'I've been having a lot of dreams '---to read your blog..but after that i will plan to put so many comments..(ennaikku annipidungalai..)
but
after i read your blog
'I've to do many things' ...really

beautiful

wonderfull

colorfull

blog.

ηίαפּάʞиίнτ ™ said...

:-/

Vasagan said...

அது எப்புடி எல்லா damage உம் பண்ணினுட்டு அப்பாவியா

beautiful

wonderfull

colorfull

blog.
உனு போடுறிய. நல்ல பையன், தங்கமானவன் சிவா.

Elangovan said...

மூக்கு பொடப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க தோணும்... :)

எப்படில்லாம் போஸ்ட்டுக்கு மேட்டர் ரெடி பண்றாங்க பாருங்கப்பா...

Gopi Ramamoorthy said...

:-)

சௌந்தர் said...

அவ்ளோ தாங்க முடிஞ்சு போச்சு பதிவு... ///

யப்பா ரொம்ப சந்தோஷம்....

மீக்கு தெலுங்கு தெலுசா....

சௌந்தர் said...

பிரதீபா சொன்னது…
http://media.photobucket.com/image/hitting%20head%20on%20wall/yukimoriko/angrygirl.gif?o=1

இனிமே இந்தப் பக்கம் வருவியா, வருவியா..////

பிரதீபா...வேண்டாம் வேண்டாம் நிறுத்துங்க...அப்பாவி ப்ளாக் தடை பண்ணிடாங்க

பத்மநாபன் said...

காதை எப்பவும் தீட்டீ வச்சுக்கனும் சொல்றது இதுக்குத்தானா... இதை வச்சும் பதிவை தேர்த்தற உங்க துணிச்சலுக்கு பாராட்டு ....

Arun Prasath said...

மைண்ட்வாய்ஸ் - ஈஸ்வரா.... இவ கொடுமைக்கு ஒரு அளவே இல்லையா... ஒட்டு கேட்டதுகெல்லாம் போஸ்ட் போடறா...//

நான் உங்க மைன்ட் வாய்ஸ் ரசிகர் ஆகிட்டேன்... :)

middleclassmadhavi said...

//(இது யாரு சொன்ன பழமொழினு குறுக்கு கேள்வில்லாம் கேக்க கூடாது// நாங்க பழமொழிய எல்லாம் ஆராய மாட்டோம், அனுபவிப்போம், சும்மா சொல்லிகிட்டே இருங்க!!

siva said...

உனு போடுறிய. நல்ல பையன், தங்கமானவன் சிவா.///

THANKYOU appdiey namma kadai pakkamum konjam vanthu vaalthi vittu porathu...:)

சி.கருணாகரசு said...

நாலு பேரு நாலு விதமாதான் பேசுவாங்க அதை 400 பேருக்கா சொல்லுவாங்க.....

priya.r said...

கிருஷ்ணா: ஹலோ பிரசாத், சௌக்கியமா?

பிரசாத்: சௌக்கியம் கிருஷ்ணா.. .அங்க எப்படி?

கிருஷ்ணா: எல்லாம் சௌக்கியம்... அப்புறம் இந்தியால இருக்கியா இல்ல ப்ராஜெக்ட்ஆ?

பிரசாத்: இந்தியால தான்... இப்ப ப்ராஜெக்ட் ஒண்ணும் பெருசா இல்ல... அப்புறம் பசங்க எங்க படிக்கறாங்க?

கிருஷ்ணா: இங்க தான் டொரோண்டோல எங்க பையன் படிச்சுட்டு இருக்கான்... அப்புறம் பொண்ணு வாட்டர்லூ யூனிவர்சிட்டில"

பிரசாத் : பையனுக்கு இப்போ பரவா இல்லையா !

கிருஷ்ணா : பரவா இல்லை .,ஒரு மாதத்திலே சரியாய்ட்டான்

பிரசாந்த் : அப்படி என்னதான் நடந்தது

கிருஷ்ணா : யாரோ சில விசமிகள் அவன் இ மெயிலுக்கு ஒரு லிங்க் கொடுத்து அனுப்பி இருக்காங்க
அதை படித்ததிலே இருந்து தான் இப்படி ஆகிட்டான்;

பிரசாத் : அப்படி என்ன அது ஏதாவது பயப்படும் படியா ஏதாவது ?

கிருஷ்ணா : ஏதோ அப்பாவி தங்கமணி லிங்க் காம் .,

பிரசாத் : அய்யோ ! அந்த லிங்கா !!!!!!!!!! (மயக்கமாகிறார் ) :(

priya.r said...

Rose : whats plans for weekend?

Jack : nothing much...you...?

Rose : mmm.... am thinking... shall we meet my parents this weekend?

Jack : aaa... I just remembered something.... actually I got other plans

Rose : you didn't say that when I asked before

Jack : I didn't remember

Rose : I know... you're trying to avoid my family (கோபமுகம்)

Jack : not really hon (சமாதான முயற்சி..)

Rose : then where the hell are you going?

Jack: I like to see one indian guy

Rose:for what

Jack: He is hubby of appavi., having some tips about how do manage our better half

Rose: get lost!

கோவை2தில்லி said...

அப்பாவி அண்ட் மைண்ட்வாய்ஸ் கலக்கலோ கலக்கல். யாரோ பேசின இரண்டு வார்த்தைகளை வெச்சுக்கிட்டு பதிவு போட்டுட்டீங்களே! சூப்பர் :)

திவா said...

கடவுளே!
கடவுளே!கடவுளே!
கடவுளே!கடவுளே!கடவுளே!
கடவுளே!கடவுளே!கடவுளே!கடவுளே!
கடவுளே!கடவுளே!கடவுளே!கடவுளே!கடவுளே!

திவா said...

priya!

ROTF

priya.r said...

//தலைப்பை பாத்ததும் "என்னாச்சு அப்பாவி? உன் அலப்பறை தாங்க முடியாம எல்லாரும் கன்னா பின்னான்னு திட்டிட்டாங்களா?"னு சந்தோசமா துக்கம் விசாரிக்கற தோழிகளே, தோழர்களே, ப்ளாக் குல திலகங்களே...

இன்னும் சிலர் "எங்கயோ நல்லா அடி வாங்கி இருக்கா" அப்படின்னு சந்தோசமா நீங்க சிரிக்கறது நல்லாவே கேக்குது... ஆனால்... பின்னால் வரப்போகும் விபரீத்ததை அறியாமல்னு இப்ப இங்க டயலாக் போட்டா எப்படி இருக்கும்...ஹா ஹா ஹா... //

கொன்னுட்டீங்க போங்க ..ஹ ஹா

//அப்படி எல்லாம் ஒண்ணும் யாரும் என்னை திட்டல... ஹி ஹி ஹி//
உங்களை போய் யாராவது திட்ட தான் முடியுமா .,நீங்க யாரு ..............இட்லி மாமியா கொக்கா ( மலை முழுங்கி மகா தேவி ன்னு யாருப்பா அது சொல்றது !)

Vasagan said...

\பிரசாத் : அப்படி என்ன அது ஏதாவது பயப்படும் படியா ஏதாவது ?

கிருஷ்ணா : ஏதோ அப்பாவி தங்கமணி லிங்க் காம் .,

பிரசாத் : அய்யோ ! அந்த லிங்கா !!!!!!!!!! (மயக்கமாகிறார் ) :( \


\Rose : then where the hell are you going?

Jack: I like to see one indian guy

Rose:for what

Jack: He is hubby of appavi., having some tips about how do manage our better half

Rose: get lost! \


Thankai 8 adi Akka 16 adi. Puthu palamozhi.

priya.r said...

@திவா சொன்னது…
priya!

ROTF


Thanks Sir ! எல்லா புகழும் கீதா மாமிக்கே !

priya.r said...

@வாசகன்

//Thankai 8 adi Akka 16 adi. Puthu palamozhi. //

அனாமி 32 அடி!

எல்லாம் நீங்க கொடுத்த ட்ரைனிங் தான் !

priya.r said...

@திவா சார் !

எல்லோரும் கடவுளுக்கு சர்க்கரை பொங்கலை பிரசாதமா படைப்பாங்க.,நம்ம அப்பாவி என்ன செய்தாங்கன்னா அந்த கடவுளுக்கு ஒரு நாள்

பிரசாதம்மா இட்லி யை வைத்து இருக்காங்க ;அதை சாப்பிட்டவர் போனவர் தான் .............

திரும்பவும் ஏன் சார் கடவுளை கூப்பிட்டு சங்கட படுத்தறீங்க !

priya.r said...

இருந்தாலும் ஒரு ரெண்டு வரியை வைத்து திரை கதை வசனம் ஒலி ஒளி எடிட்டிங் டைரக்சன் அமைக்கும் உனது திறமை வியக்க வைக்கிறது .........

(உண்மையை சொல்லு TR உன்ற சொந்தகாரர் தானே )

priya.r said...

//சரி அத உடுங்க... என் மனசுல தோணின கற்பனை என்னன்னா எந்த situation ல என்னை கடந்து போன மக்கள் அந்த டயலாக் பேசி இருப்பாங்கன்னு தான்..//.

விடுப்பா ! அந்த ஜனங்களுக்கு முன்ன பின்ன தெரியுமா என்ன ;நீ இப்படி எல்லாம் பதிவை போடுவேன்னு .........

priya.r said...

//அப்படியே ஒரு ரீல் சுத்துச்சு மனசுல... //

ரீல் சுத்தின காலம் எல்லாம் மலையேறி போச்சாம் .,இப்போ எல்லாம் CD தானாம்

நான் தான் மனசுல பட்டதெல்லாம் உங்ககிட்ட ஷேர் பண்ணிகரவளாச்சே...//

அதனாலே எங்க பட்டு போல மனசு பட்டு போகுதுன்னு நோக்கு தெரியாதா

அதுக்கு தானே ப்ளாக்... சரி சரி நோ டென்ஷன்...

அழுகை அழுகையா வருது அப்பாவி

அனாமிகா துவாரகன் said...

யக்கோவ், தனி ஆளா செஞ்சுரி அடிக்கறீங்க. புரொபசர்ங்களோட அராத்து தாங்க முடியல. இவங்க பொண்டாட்டிங்கள சொல்லணும். 9மணி வரைக்கும் லாப்ல இருத்தி வச்சுட்டாங்க. மத்தியானம் வயத்துக்கு பூசை கூட போட முடியல. கர்ர்ர்ர்ர்ர்ர்ர். பசியில் பாதி உயிர் போயிட்டு. மீதிய கைல பிடிச்சுன்டு இதைப் படிக்கவா விடவான்னு யோசிச்சுட்டு இருக்கேன். நான் வரலேன்னாலும் தனி ஆளா சமாளிக்கறதுக்கு வேர்சுவல் பூச்செண்டு அனுப்பறேன். ஹி ஹி.

priya.r said...

//முதல்ல என் காதுல விழுந்தத சொல்லிடறேன்... அதுக்கு முன்னாடி ஒரு விஷயம் கிளியரா சொல்லிடறேன்... நான் யார் பேசறதையும் ஒட்டு கேக்கல... நான் சிவனேன்னு நின்னுட்டு இருந்தேன்.. அவங்களா போற போக்குல பேசினது என் காதுல விழுந்தது, அப்புறம் என் கற்பனை குதிரை பறந்தது... இதுல என் தப்பு எதுவுமில்ல... சொல்லிட்டேன்... ஆமா...//

என்னமா பொய் சொல்றாங்க ! இதை நாங்க நம்புவோமாக்கும்!

//ஒகே... மேட்டர்க்கு போவோம்//

அட்சோ ! இனிமேல் தான் மேட்டர் ஆ !

/மொதல்ல காதுல விழுந்தது... ஒருத்தர் தனக்கு தானே பேசிகிட்டது, உன்னை மாதிரியானெல்லாம் கேட்டா அப்புறம் என் மைண்ட்வாய்ஸ்கிட்ட புடுச்சு குடுத்துடுவேன்//

ஏற்கனவே உங்களை பத்தி நாங்க அனாமி ப்ளோக்ல நல்லாவே தெரிஞ்சு கிட்டோம் அப்பாவி ! ஹ ஹா

இத்துடன் விடை பெறுகிறேன் அப்பாவி

போன வாரம் இதே நாள் நீ பண்ணிய அராஜகம் இன்னும் மறக்கலே அப்பாவி!( இது தொடரும் )

priya.r said...

kannu ! eppadaa vanthe

priya.r said...

என்னப்பா பண்றது !

நம்ம டீம் ஆளுங்க வர வரைக்கும் மட்டை போட்டு கிட்டு இருக்கேன்

ஆனா அப்பாவி பவுண்சேர் ஆ வீசிக்கிட்டு இருக்காளே

priya.r said...

வர வர நம்ம டீம் பட்ச்மேனுங்களும்(Batsman ) சரி பட்ச்வோமன்களும்( batswomen ) சரி

சரியாவே வரதில்லை! நீயாவது வந்தே

அனாமிகா துவாரகன் said...

இன்னிக்கு மட்டும் சமாளியுங்கோக்கா. நாளைக்கு சப்போட்டுக்கு வரேன். 12.30. சப்பாத்தி போடறேன்னு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் ஆரம்பிச்ச தடியன்கள் இப்ப தான் சமைச்சு முடிச்சாங்க‌. பசியில உயிர் போறது. சாப்பிட்டு தூங்கப்போறேன்.

அனாமிகா துவாரகன் said...

12.30 now

அனாமிகா துவாரகன் said...

பசங்க எல்லாம் நல்லவங்கனு உடனேயே கணக்கு போடாதீங்க. அவனுங்களுக்கு வேண்டிய ஆடு, மாடு, கோழி, பன்றி, வான்கோழி, எக்சட்றா எக்சட்றா எல்லாம் சமைச்சு பிரீசரில போடறதுக்காக சமைக்கறாங்க. சப்பாத்திய முதல்ல போடுங்கடான்னா, அவனுங்க அதைத் தான் கடைசியா போட்டிருக்காங்க. ஓக்கே குட் நைட் ஆல்.

அனாமிகா துவாரகன் said...

Vasagan maamzலாப்ல லேட் நைட் வரை இருந்தார். (இந்த புரொபசர்களே சுத்தம்). சோ இப்ப தூங்கிட்டு இருப்பார்னு நினைக்கறேன். அப்பாவி இன்னிக்கு வேலைக்கு லீவோன்னு எனக்கொரு சந்தேகம். பார்க்கலாம்.

அனாமிகா துவாரகன் said...

Good Night!

priya.r said...

ஏண்டி அனாமி

வந்தது தான் வந்தே!

பதிவை பத்தி ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போடி

இல்லன்னா என்னையும் தான் இந்த அப்பாவி திட்டுவா

priya.r said...

வெள்ளிகிழமை போய் நான் வெஜ் பேரெல்லாம் சொல்லி கிட்டு

அப்பாவி ! ப்லோகை தண்ணி போட்டு கழுவு !

Vasagan said...

illa mozhichachu, Kalliyil irendu pasanka defence irukku

Vasagan said...

intha Weekendum labthan

priya.r said...

அய்யயோ ! வடிவேலு சொன்ன அர்த்தம் இல்லைப்பா!

தண்ணீர் வைத்து ப்ளாக் வீட்டை மெழுகு என்று தான் அர்த்தம்

priya.r said...

இதோ பாரு அப்பாவி

அனாமி வந்தா ;நாலஞ்சு கமெண்ட்ஸ் போட்டா

போய்ட்டா ;அவ்வளோ தான் !

அவளா வந்தா அவளாவே போய்ட்டா

இனி திருச்சி(திருப்பி ) வருவா வராமலும் போவா

இதை பத்தி என்னை ஏதாவது சேர்த்து சொன்னே

அப்புறம் நான் ரெம்ப சிரிச்சுருவேன் ! ஹ ஹா

இளங்கோ said...

நல்ல வேளை தெலுங்கு, இங்க்லீஷ் அப்படின்னு தப்பித்தோம். ஜெர்மன், பிரெஞ்ச் இல்ல ஆப்ரிகா நாட்டு மொழி ஒண்ணும் நீங்க கேட்கல, தப்பித்தோம்.
:)

தெய்வசுகந்தி said...

ha ha ha!! எப்படி புவனா இப்படியெல்லாம் யோசிக்கறீங்க? :-))!!!

Jaleela Kamal said...

hihihihi

mmm
eppaadiyoo oru pathivu theerussi

சுசி said...

அவ்வ்வ்வ்.. நான் பாவம்..

என்னா மொக்கைடா சாமி :)

Priya said...

எப்படியெல்லாம் கற்பனை பண்ணுறிங்க:)ம்ம்.. நைஸ்!

siva said...

today world cup..

What is the result will be??????

anybody know astrolagy?

please let me knew

thank

you

siva said...

why appavi akka bowling is no ball and bouncer..

thats why priya.r akka cant bat well like..great wall dravid.

ok...appavi akka unga blog very use full.

thank you.

அன்னு said...

ottu ketkarathe thappu athilum athai oru pathiva ve4ra podareengala? ippadiye sechittirunga, kadasila naalu per naalu vithamaa pesathaan poraanga. he he he

ஸ்ரீராம். said...

ஒட்டு கேட்டீங்க...

வோட்டு போட்டுட்டேன்.

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

ம்முடியல!!!

அப்பாதுரை said...

சிரிப்பு வருது

சிவகுமாரன் said...

ஹவுஸ் அரெஸ்ட் பண்ணினா இன்னும்ல பதிவா போட்டு படுத்துவீங்க ... ஹி ஹி சும்மா ஜோக்குக்கு

வெட்டிப்பையன்...! said...

மைன்ட் வாய்ஸ்ஸ தனியா போஸ்ட் போட வச்சா கண்டிப்பா தங்கமணி தோத்து போயிரும் ....

மைன்ட் வாய்ஸ் --கலக்கல் .

priya.r said...

வாம்மா மின்னல் .,

நாலு பேரு நாலு விதமா பேசறதுக்குள்ளே வந்து பதிலை போடு ஆத்தா(பத்ரகாளி ! ) ஹ ஹா

Avargal Unmaigal said...

அப்பாவி தங்கமணி என் மைண்ட் வாய்ஸ் சொல்லுது நீங்க குசும்பு தங்கமணி என்று ஏதாவது தங்கமணி பத்தி பேசிவாங்கிகட்டிகாத என்றும் சொல்லுது அதனால் என் மைண்டை கண்ரோல் பண்ணி வந்தமோ கமெண்ட் போட்டோம என போகிறேன். ஆமா நீங்க என்ன wikileaks க்கு போட்டியா ஒட்டுகேட்டு எழுத ஆரம்பிச்சிட்டீங்களா. மவளே ஜெயிலுக்கு போக ரெடியா ஆகிக்கோங்க

இராஜராஜேஸ்வரி said...

என்ன இருந்தாலும் "பொறந்த ஊர பழிச்சாலும் பொழைக்க வந்த ஊர பழிக்க கூடாது"னு பழமொழி இருக்கில்ல (இது யாரு சொன்ன பழமொழினு குறுக்கு கேள்வில்லாம் கேக்க கூடாது../
எப்பவும் எதுக்கும் கேக்கவே மாட்டோம். படிச்சு சிரிச்சு மெச்சிக்குவோமில்ல...

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - எஸ் எஸ் யு தெ பர்ஸ்ட்...:)

@ அமைதிச்சாரல் - ஹி ஹி ஹி...இப்படி எல்லாம் சொன்னா எப்படி அக்கோவ்...:))))

@ அருள் சேனாபதி - ஹா ஹா ஹா... தேங்க்ஸ்ங்க அருள்...:)

@ கோவை ஆவி - ha ha ha... should I take that as a compliment Anand...? .....ha ha..:)))

@ Mahi - அடப்பாவமே...எப்பவும் போல மைண்ட்வாய்ஸ் இஸ் டேகிங் தெ கிரெடிட்...ஹா ஹா... தேங்க்ஸ் மகி...:)

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - ஹலோ... குல்டி கூட்டம் உன்னை ஒருநாளைக்கி உன்னை மொத்த போறது நிஜம்....நானும் அதில் ஒருத்தி....ஒபமா மாமாக்கு ஐடியா குடுத்ததே நீ தானோன்னு டவுட் எனக்கு.....:)

@ ஹேமா - ஹா ஹா ஹா...நன்றிங்க...:)

@ பிரதீபா - தீபா தீபா...கூல் கூல்... ஹா ஹா ஹா... மெடிக்கல் பில் எனக்கு அனுப்பிராதீங்க அம்மணி...ஹா ஹா...:)

@ Porkodi - ஹி ஹி ஹி... அதானே...:))))

@ Vasagan - நானும் அப்படி நோட்டம் விடுவேங்க... நெறைய போஸ்ட்க்கு மேட்டர் தேத்தறதே அப்படி தான்...இதை பத்தி கூட ஒரு போஸ்ட் எழுதி வெச்சு இருக்கேன்....சீக்கரம் போடறேன்...சரி சரி ஓடாதீங்க... நோ டென்ஷன்...ஹா ஹா...தேங்க்ஸ்ங்க...:)))

அப்பாவி தங்கமணி said...

@ Chitra - ஹா ஹா ஹா...தேங்க்ஸ் சித்ரா...:)

@ Charles - ஆஹா...இப்பவும் மைண்ட்வாய்ஸ் தான் எக்ஸ்ட்ரா ஸ்கோரா? ஹா ஹா ஹா...நன்றிங்க...

@ Vasagan -
//No No சிண்டுமுடிதல்//
ஹா ஹா ஹா...nice try though ...:))

//சே சே இதை எல்லாமுமா நம்புவோம்//
அவ்ளோ நம்பிக்கையா? ஹா ஹா...

@ Siva - திட்டுறதுன்னா என்னை போல தைரியமா திட்டனும்...இப்படி புரியாத பாஷை சரி இல்ல...ஹா ஹா ஹா... :)

@ Vasagan - அடப்பாவமே...முடிவே பண்ணிட்டீங்களா? அவர் தான் மைண்ட்வாய்ஸ்....அநியாயம் இது.... கஷ்டப்பட்டு எழுதறது நானு, பாராட்டு அவருக்கா... டூ பேட் ஐ சே...(-:

@ siva - ஹா ஹா ஹா... செம செம....என்னை வாரி இருந்தாலும் செம கமெண்ட்னு பாராட்டாம இருக்கா முடியல...ஹா ஹா...:)))

அப்பாவி தங்கமணி said...

@ ηίαפּάʞиίнτ ™- :)

@ Vasagan - ஆஹா... எனக்கு தான் சப்போர்ட் பண்றீங்கன்னு நெனச்சேன்...நல்ல பையன்னு சொல்லி இப்படி வாரிட்டீங்களே...ஹ்ம்ம்..:)

@ Elangovan - ஆஹா...இப்படி ஒரு ஜோசியம் கேட்டதே இல்லையே...ஹா ஹா...:)

@ Gopi Ramamoorthy - :)

@ சௌந்தர் - தெலுகு ச்சால பாகனே தெலுசண்டி... அதி மா "அம்மநாலிக" யு சி...:))) (புரியலைனா திட்டாதீங்க...ஹா ஹா...)

//அப்பாவி ப்ளாக் தடை பண்ணிடாங்க//
எங்க? எப்போ?....:)))

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா... நீங்க எல்லாம் படிப்பீங்கன்னு ஒரு துணிச்சல் தான்...:)))

@ Arun Prasath - இட்ஸ் ஒகே... நேரவே திட்டுங்க...ஹா ஹா...:))

@ middleclassmadhavi - ஐ லைக் யுவர் ஸ்பிரிட்... தேங்க்ஸ்ங்க மாதவி...ஹா ஹா...:))))

@ siva - செய்யறது எல்லாம் நீங்க...சொல்றது மட்டும் என்னைய...என்னா விளம்பரம்னு...ஜஸ்ட் கிட்டிங்...ஹா ஹா...:)))

@ சி.கருணாகரசு - அப்ப 400 பேரு படிச்சங்கனு சொல்றீங்களா...:)))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - ஹா ஹா ஹா... சூப்பர்...எப்படி ப்ரியா இப்படி எல்லாம்... என்னை வம்பு பண்றேன்னு தெரியுது அக்கா...still , பாராட்டாம இருக்க முடியல...ஹா ஹா ஹா... செம imagination ....:)))

@ கோவை2தில்லி - நன்றிங்க ஆதி...:)

@ திவா - திவாண்ணா...என்னாச்சு என்னாச்சு என்னாச்சு??? ஹா ஹா ஹா....:))))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//கொன்னுட்டீங்க போங்க//
யாரை கொன்னேன்...ஐயோ...மீ அப்பாவி...:))

//மலை முழுங்கி மகா தேவி ன்னு யாருப்பா அது சொல்றது//
யாரோ ஒரு ப்ரியாவாம்... அந்த மகாதேவியோட சகோதேவியாம்....:)))))

@ Vasagan - நல்லா சொன்னீங்க... என் ப்ளாக்க்கு இவங்க கமெண்ட் படிக்கவே இப்ப ஒரு ரசிகர் கூட்டம் வருதுன்னா பாருங்களேன் ப்ரியாவின் புகழை...ஹா ஹா ஹா...:))))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//எல்லா புகழும் கீதா மாமிக்கே//
ஆஹா...ஏதோ உள் நாட்டு சதி இருக்கும் போலியே...ஹ்ம்ம்...:))

//எல்லாம் நீங்க கொடுத்த ட்ரைனிங் தான்//
வெளிநாட்டு சதியுமா...அடப்பாவமே...ஹ்ம்ம்...:))))

//திரும்பவும் ஏன் சார் கடவுளை கூப்பிட்டு சங்கட படுத்தறீங்க//
grrrrrrrrrrrrrrrrrrrrrrrr.........................

//உண்மையை சொல்லு TR உன்ற சொந்தகாரர் தானே//
அவர் உங்களுக்கு சொந்தகாரர்னா எனக்கும் சொந்தம் தானுங்க அக்கோவ்...:)

//அழுகை அழுகையா வருது அப்பாவி//
ரியல்லி? அவ்ளோ நல்லாவா எழுதி இருக்கேன்...தேங்க்ஸ் அக்கோவ்...:)))))

@ அனாமிகா - வெர்ச்சுவல் பூச்செண்டு?????? grrrrrrrrrrrrrrrr....

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//இத்துடன் விடை பெறுகிறேன் அப்பாவி//
வடையுடன் விடை தருகிறேன் ப்ரியா.... :)

//தண்ணீர் வைத்து ப்ளாக் வீட்டை மெழுகு என்று தான் அர்த்தம்//
சரி சரி...நீங்க என்னை விட அப்பாவி...ஒத்துக்கறேன்...:)))

//இதை பத்தி என்னை ஏதாவது சேர்த்து சொன்னே//
எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையா????? சரி சரி...:)))

அப்பாவி தங்கமணி said...

@ இளங்கோ - அதெல்லாம் கேட்டிருந்தா எனக்கு புரியாதே....சோ நீங்க அப்பவும் தப்பிச்சு தான் இருப்பீங்க...:)

@ தெய்வசுகந்தி - ஹா ஹா...நன்றிங்க..:))

@ Jaleela Kamal - அவ்ளோ தான் மேட்டர் அக்கா...நன்றி...ஹா ஹா

@ சுசி - ஹி ஹி ஹி... நாம சேம் ப்ளட் யு சி சுசி... நீங்களே இப்படி சொன்னா எப்படி...ஹா ஹா..:)

அப்பாவி தங்கமணி said...

@ Priya - தேங்க்ஸ் ப்ரியா... :)

@ siva - ஹலோ... என்னாதிது.... அட்ரஸ் மாறி போச்சா... ?? இங்கு ஜோசியம் ஜாதகம் பார்க்கப்படும் யாராச்சும் சொன்னாங்களோ....:))))

@ அன்னு - ஹா ஹா ஹா...அந்த நாலு பேருல நீங்க தானே பர்ஸ்டு...????.... :))

@ ஸ்ரீராம் - ஹா ஹா... தேங்க்ஸ்ங்க..

@ பாலகுமாரன், வத்திராயிருப்பு.- ஆமாங்க..முடியல...அதான் பதிவா போட்டுட்டேன்...ஹா ஹா..

அப்பாவி தங்கமணி said...

@ அப்பாதுரை - சிரிப்பா வருதா? வாவ்... மிசன் accomplished ....ஹா ஹா... நன்றிங்க...:)

@ சிவகுமாரன் - ஹா ஹா ஹா...தட்ஸ் ரைட்...தெளிவா யோசிச்சு இருக்கீங்க.. :)

@ வெட்டிப்பையன் - ஆஹா... இது அநியாயம்... ஹா ஹா... :)

@ priya.r - இதோ போட்டுட்டேன்... :)

@ Avargal Unmaigal - ஹா ஹா ஹா...ஒகே ஒகே...:))

@ இராஜராஜேஸ்வரி - ஹா ஹா...நன்றிங்க ராஜேஸ்வரி...:))

Vasagan said...

@ Vasagan - அடப்பாவமே...முடிவே பண்ணிட்டீங்களா? அவர் தான் மைண்ட்வாய்ஸ்....அநியாயம் இது.... கஷ்டப்பட்டு எழுதறது நானு, பாராட்டு அவருக்கா... டூ பேட் ஐ சே...(-:

இதோ ஆதாரம்

CP24 Breaking News

அப்பாவி வீட்டுலே செய்ற சேட்டையை பார்த்து மாப்பிளை அவர் மனசுக்குல பேசுறதை ஒட்டு கேட்டு தங்கைமணி போஸ்டாக போடுகிறார்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்க பேசாம ( மைண்ட்வாய்ஸ் கூடயும் தான்) காதுல போட்டுக் கேக்கராப்பல ஐபாட் எடுத்துட்டுப் போங்க.. :)

ஜிஜி said...

ஹா..ஹா..நல்லா இருக்குங்க பதிவு.

siva said...

90..

priya.r said...

//@ priya.r - ஹா ஹா ஹா... சூப்பர்...எப்படி ப்ரியா இப்படி எல்லாம்... என்னை வம்பு பண்றேன்னு தெரியுது அக்கா...still , பாராட்டாம இருக்க முடியல...ஹா ஹா ஹா... செம imagination ....:)))//
இப்படி சொன்னா நாங்க உன்ற இட்லி கட்சியிலே சேர்ந்து உன்ற பதிவு பத்தி பாராட்டுவோமாக்கும் !


நாளைக்கு நடக்க இருக்கும் உன்ற தாக்குதலை (காதல் செவ்வாய் )

சமாளிக்கறது பற்றி கிளாஸ் நடந்து கிட்டு இருக்கு அப்பாவி !

Krishnaveni said...

kodu potta athula roadu podarathunna ithu thaana thangam, great

Vasagan said...

Priyamma,

\நாளைக்கு நடக்க இருக்கும் உன்ற தாக்குதலை (காதல் செவ்வாய் )\

What ever may be we are expecting our lovely little sister's post tomorrow.

Malar Gandhi said...

I wish you added lil more spice to this article, creating stories out of single word is in ours girl's genes,right:)

அப்பாவி தங்கமணி said...

@ vasagan - ஹா ஹா ஹா...சொன்னது தான் சொன்னீங்க ஒரு global டிவி, city டிவினு சொல்லி இருக்கலாமே... ஹா ஹா ஹா...:)))

@ முத்துலெட்சுமி/muthuletchumi - எல்லாம் ட்ரை பண்ணியாச்சுங்க...அப்பவும் எதாச்சும் கற்பனை ஓடிட்டே தான் இருக்கு... இது விதியா? விதியின் சதியான்னு புரியல...சொல்லபோனா இதை பத்தி கூட ஒரு பதிவு எழுதணும்னு நெனச்சுட்டு இருக்கேன்... ஹி ஹி ஹி...:))))

@ ஜிஜி - நன்றிங்க ஜிஜி... முதல் வருகைக்கும் மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ siva - ஒகே...:)

@ priya.r - நாளைக்கு தாக்குதலை நெனச்சு இன்னைல இருந்தே டென்ஷன் ஏன் அக்கா.... இப்படியெல்லாம் சொன்னா ஐயோ பாவம்னு விட்டுடுவேனாக்கும்...ஹா ஹா ஹா...:))

@ Krishnaveni - ஹா ஹா ஹா... தேங்க்ஸ் வேணி...:)

அப்பாவி தங்கமணி said...

@ vasagan - ஆஹா...நன்னிஹை...:)

@ Malar Gandhi - தேங்க்ஸ் மலர்... கரெக்டா சொன்னீங்க...:)))

Post a Comment