Thursday, March 31, 2011

அலைபாயுதே...(கவிதை)உகோஸ்லாவியா முக்கியமா
உன்பொண்டாட்டி முக்கியமாஎன்ற
உலகமுக்கிய சர்ச்சையை
உலகதொலைகாட்சியில் பார்த்தவேளையில்
எனக்கும் உகோஸ்லாவியாதான் முக்கியமென்றாய்
எனைசீண்டுவதில் தான்எத்தனை சுகமுனக்கு
உகோஸ்லாவியா முக்கியமென்றால்
உரசாமல் தள்ளிநில்லேன் என்றேன்
"உரசாமல் உறைவதெப்படி?" என்றாய்
உறைவதிப்போ என் முறையானது
உரசாமலே உறையவைக்க எங்குகற்றாய்!!!


உன்அம்மாவா தங்கையா இல்லைநானா
உண்மையைசொல் யார்முதல் உனக்கென
கேள்விகேட்டு நான்கோபமாய் நிற்க
குறுநகையில் சற்று தவிக்கவைத்து
"பதிலேகேள்வி கேட்டால்எப்படி?"யென்றாய்
பதிலுக்குபதிலையே லஞ்சமாய்பெற்றாய்!!!

...

Monday, March 28, 2011

பாடம் படிக்கும் நேரம் இது... சைலன்ஸ்...:)


"இன்னும் என்ன தூக்கம் இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா? எந்திரி... ஒழுங்கா படிக்கற வேலைய பாரு"

"ஏய், என்ன டிவி இப்ப? படிக்கற வேலை இல்லையா? இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"

"குரூப் ஸ்டடினு ஆட்டம் போடற வேலை எல்லாம் வேண்டாம்... ஒழுங்கா இங்கயே படி.  இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"

"என்ன எந்த நேரமும் போன்.. படிக்கற எண்ணம் இருக்கா? இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"

"பக்கத்து வீட்டு அக்கா கல்யாணத்துக்கா... ஒண்ணும் வேண்டாம்? நாங்க போய்க்கறோம்... நீ படி.. இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"

"என்னது ஸ்கூட்டி வேணுமா... வாங்கலாம் வாங்கலாம்... மொதல்ல படி.. இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"

"இப்படி கொறிச்சா படிக்க எங்க தெம்பு இருக்கும்... ஒழுங்கா கை நெறைய எடுத்து சாப்பிடு... இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"

"ரஜினி படமா? எங்கயும் ஓடிடாது... அப்புறம் பாக்கலாம்.. இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"

"கிரிக்கட்டா? சச்சின் ஆடி ரன் எடுத்தா உனக்கா மார்க் போடுவாங்க.. .எல்லாம் அப்புறம்... மொதல்ல படி... இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"

என்ன இதெல்லாம்னு யோசிக்கறீங்களா? வீட்டுல 10th / +2 படிக்கற புண்ணியாத்மா யாராச்சும் இருந்தா கேட்டு பாருங்க... அவங்க காதுல தினமும் விழற டயலாக்ஸ் தான் இதெல்லாம்

கொஞ்சம் விட்டா "என்னது பல்லு விளக்கணுமா... இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா? எல்லாம் பரீட்சை முடிஞ்சு பண்ணிக்கலாம்... "னு சொல்லிடுவாங்க போல... ஸ்ஸ்ஸ்பப்பா....

ஒரு கட்டத்துல நடு தூக்கத்துல எழுப்பினாலும் "இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?" னு நமக்கு நாமே சொல்ற நிலைமை ஆகி போய்டும்...:)

என்னமோ நாட்டமை தீர்ப்பு சொன்ன மாதிரி "ஆரும் இவ கூட பேசக்கூடாது பழகக்கூடாது, வூட்டுல இப்படி ஒரு ஜென்மம் இருக்கறதே மறந்துரோணும்... மீறினா உன்னையும் சேத்து ஸ்டடி ரூம்ல போட்டு பூட்டிருவோம்"ங்கற ரேஞ்சுக்கு நம்ம உடன் பிறப்புகள வேற மெரட்டி வெச்சுருப்பாங்க...

அது தான் பெரிய தண்டனை... பாசமலரை வம்பு பண்ணாம நமக்கு ஒரு நாள் விடியுமா... என்னமோ உள்நாட்டு சதி செய்யற தீவிரவாதிகள் ரேஞ்சுக்கு பிளான் பண்ணி அப்பவும் உடன்பிறப்புகள் கூட அலப்பறை பண்ணுறது தனி ரீல்...:)

இதெல்லாம் கூட பரவால்லைங்க... இன்னும் நம்மள கடுப்பேத்தறது வெளிய இருக்கற சோசியல் சர்விஸ் மக்கள் தான்...இப்படி தான் ஒரு நாள், நான் 10த் படிக்கறப்ப....

(அப்பாவியின் வாழ்க்கை ஏட்டில் சில வருடங்கள் முன்பு ஒரு நாள்.... கொசுவத்தி அப்படியே வளையம் வளையமா சுத்தி டைம் ட்ராவல் பண்ண உங்கள கூட்டிட்டு போகுது...:)

"பால்காரர் பெல் சத்தம் கேக்குது... நான் மாவு கையோட இருக்கேன், கொஞ்சம் பால் வாங்குடி" னாங்க அம்மா

நானும் நல்ல பொண்ணா "சரிம்மா"னு போனேன்

"ஒரு லிட்டர்ங்க அண்ணா" னு நான் சொல்ல

"சரி பாப்பா... அது சரி... இந்த வருஷம் நீ கவர்மன்ட் பரீட்சை எழுதற இல்ல... நல்லா படிம்மா" ஒரு ப்ரீ அட்வைஸ் குடுத்தாரு பால்கார அண்ணா

"எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை அட்வைஸ்"னு சொல்ல வாய் வரைக்கும் வந்தது...

பொறுத்தார் பூமி ஆள்வார்னு படிச்சது ஞாபகம் வந்து, பிற்காலத்துல நம்ம சேவை இந்த நாட்டுக்கு தேவைனு மக்கள் எல்லாம் கம்பல் பண்ணினா அரசியல் பிரவேசம் பண்ண வேண்டிய கட்டாயம் வந்தா என்ன செய்யறதுனு மக்கள் சேவைக்காக என் கோபத்தை கட்டுப்படுத்திக்கிட்டேன்.... :)

("அட்வைஸ்" ஆங்கில வார்த்தைனு யாருப்பா அங்க சவுண்ட் குடுக்கறது... சரி சரி... அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா....ஹி ஹி)

இன்னொரு நாள் பொரி விக்கற ஆயா வந்தது...

"பொரிக்காரம்மா வந்துருக்கு... கொஞ்சம் அரிசி டின்னுல இருக்கற படி (ஒரு விதமான அளவை) எடுத்துட்டு வா சாமி" என பாட்டி கேட்க

"படிப்பில் இருந்து எனக்கு விடுதலை அளித்த 'படி'யே நீ வாழ்க"னு மனசுக்குள்ள நெனச்சுட்டு ஸ்டெடி ரூம்ல இருந்து ஆர்வமா வந்தேன்...:)

சாதாரணமா யாராச்சும் இப்படி எதுனா வேலை சொன்னா "வேற வேலை இல்ல போங்க"னு எஸ்கேப் ஆவேன்... ஆனா இப்போ யாரும் கூப்ட்டா தேவலைனு நிலைமை... ஹ்ம்ம்.... இதான் "கரையும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்"ங்கறது போல...:)

நான் படிய எங்க பாட்டிகிட்ட குடுத்துட்டு திண்ணைல உக்காரவும், பொரி விக்கற ஆயா என்னை பாத்து "சரி கண்ணு... நீ போய் படி... கவர்மண்ட் பரீட்சை அல்ல இந்த வருஷம்"னு, என்னை என்னமோ தூக்கு தண்டனை கைதிய பாக்கற மாதிரி பாவமா பாத்துச்சு

எனக்கு செம கடுப்பு ஆய்டுச்சு... "உனக்கெப்படி ஆயா நான் கவர்மண்ட் பரீட்சை எழுதறேன்னு தெரியும்"னு பல்ல கடிச்சுட்டு கேட்டேன்

"அது கண்ணு...அம்மா பொரி கொஞ்சம் கூட போட சொல்லிச்சு... புள்ள ராத்திரில படிக்கைல கொறிக்க எதுனா வேணும்னா ஆகும்னு... அப்பத்தான் சொன்னாக... சரி கண்ணு நீ போய் படி" னுச்சு ஆயா மறுபடியும்

எனக்கு வந்த ஆத்தரத்துல, பொரி மூட்டைய ஒத்தை விரல்ல சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு தூக்கி அடிக்கணும்னு தோணுச்சு.. again ..... yes yes ..... அதே தான்... "பொறுத்தார் பூமி ஆள்வார்" தான் என் கைய கட்டி போட்டுடுச்சு...

இல்லேனா அன்னிக்கி அங்க ஒரு ரணகளம் ஆகி இருக்கும் ஐ சே....:)

இப்படி நண்டு சிண்டுனு பெருசு சிறுசுனு வயசு வித்தியாசம் இல்லாம, வழில போற வர்றவங்க எல்லாம் "என்ன பாப்பா... இந்த வருஷம் கவுர்மன்ட் பரிட்சையா நல்ல படிக்கோணும் என்ன" அப்படின்னு கடுப்பேத்திட்டு போவாங்க... அப்படியே கேப்டன் ரேஞ்சுக்கு கண்ணு சிவக்கும் நமக்கு கோபத்துல

ஹ்ம்ம்.... எல்லா கலவரமும் முடிஞ்சு.... பரீட்சை கடைசி நாள்... வீட்டுக்கு வந்ததும் புக் எல்லாம் தூக்கி கடாசிட்டு "இனி ரெண்டு மாசத்துக்கு டிவி ரிமோட் எனக்கு தான்"னு பந்தாவா டீபாய்ல கால தூக்கி வெச்சுட்டு சவுண்ட் விட்ட நாள்...  ஆஹா... ஆஹா... "என்ன சுகம் என்ன சுகம்"  (பின்னால் வரப்போகும் விபரீதத்தை அறியாமல்...:)

உடனே எங்க மம்மி வந்து "சவுண்ட் விட்டது போதும்... ரெண்டு மாசம் கழுத மேய்க்கற எண்ணமெல்லாம் வேண்டாம்... போய் கம்ப்யூட்டர் க்ளாஸ் பத்தி விசாரிச்சுட்டு வா" னு சொல்ற வரைக்கும் எல்லாம் நல்லா தான் போச்சு...ஹ்ம்ம்...

இதெல்லாம் இப்ப யோசிச்சு பாத்தா காமெடியா தோணினாலும் அப்ப எவ்ளோ எரிச்சலா இருந்ததுன்னு உணர முடியுது... "மூத்தோர் சொல்லும் முதி நெல்லிக்காயும்..." எல்லாம் சரிதான்னாலும், ரெம்பவும் பிள்ளைகளை இப்படி படுத்தறது கூட தப்போன்னு எனக்கு தோணுது

10th ல இவ்ளோ ரகளை பண்ணின எங்க மம்மி, +2 ல என்ன நினைச்சாங்களோ  "நீயே படி" னு விட்டுட்டாங்க... உண்மைல அப்படி விட்டப்ப தான் நானே பொறுப்பு உணர்ந்து நல்லா படிச்சேன்... நல்ல மார்க் கூட +2 ல தான் வந்தது

இது எல்லாருக்கும் பொருந்தும்னு நான் சொல்ல வரலை... சில பிள்ளைகள் "சொன்னா தான் படிப்பேன்"ங்கற வகையாவும் இருக்கலாம்... அவங்களுக்கு கொஞ்சம் உந்துதல் தேவை தான்

ஆனா பொதுவா, எதுவும் கட்டாயமா திணிக்கப்படறப்ப அதுல முழு ஈடுபாடு இல்லாம போய்டும்... கடமைக்கு செய்யற எண்ணம் தான் வரும்ங்கறது என்னோட கருத்து... அட்லீஸ்ட் என்னை பொறுத்த வரை...

இன்னும் ஒரு விஷயம் "ரெம்ப நேரம் படிக்கற புள்ளை தான் நல்ல மார்க் வாங்கும்" ங்கறது "வெள்ளை காக்கா பறக்குது" அளவுக்கு தான் உண்மை

மைண்ட்வாய்ஸ் - இப்படியும் சொல்லலாம் "அப்பாவி சூப்பரா இட்லி பண்ணினா" னு சொல்ற அளவுக்கு உண்மைன்னு

அப்பாவி - ஏய் மைண்ட்வாய்ஸ், சீரியஸா பேசிட்டு இருக்கறப்ப குறுக்க குறுக்க சின்னபுள்ளதனமா... கிர்ர்ரர்ர்ர்....

அத விடுங்க, எவ்ளோ நேரம் படிக்கராங்கங்கர்து விஷயம் இல்லிங்க... முழு ஈடுபாடோட ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் படிச்சாலும் எதேஷ்டம் தான்

எப்பவும் படிப்புனு இருக்கற பிள்ளைகள விட "கொஞ்சம் டிவி, கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் விளையாட்டு, கொஞ்சம் பிரெண்ட்ஸ்... இதெல்லாம் விட கொஞ்சம் அதிகமா படிப்பு"னு இருக்கற பிள்ளைகள் இன்னும் பிரகாசிக்கறாங்கனு நான் மட்டும் சொல்லலைங்க, புள்ளிவிவரங்கள்  கூடசொல்லுது

பெற்றோர்கள் முக்கியமா பிள்ளைகள மத்த பிள்ளைகளோட ஒப்புமைப்படுத்தி பேசறது ரெம்பவும் தப்புங்க. அது அவங்களோட தன்னம்பிக்கைய குலைக்க வாய்ப்பு இருக்கு

மார்க் குறைந்தாலும் improvement எழுதி சரி பண்ணிக்கலாம்... ஆனா பதின்ம வயதுல தன்னம்பிக்கை போய்ட்டா அது பிற்கால வாழ்கையையும் பாதிக்கும்

பிள்ளைகளுக்கு பரீட்சை டிப்ஸ் சொல்ல நெறைய பேரு இருக்காங்க.. என்னோட பார்வைல, ஒரு மாணவியா இருந்தப்ப எனக்கு தோணின விஷயங்கள் வெச்சு பெற்றோருக்கு ஒரு மெசேஜ் எழுதணும்னு தோணுச்சு அவ்ளோ தான்...

மைண்ட்வாய்ஸ் - "என்ன ஆச்சு... திடீர்னு அட்வைஸ் அம்புஜமா மாறிட்ட நீ?"

அப்பாவி - மைண்ட்வாய்ஸ் ஒரு விஷயம் சொல்லட்டுமா.... அட்வைஸ் பண்றது ரெம்ப சுலபம், அதை பாலோ பண்றது நெம்ப கஷ்டம்... அதான் for a change, சுலபமான வேலை மட்டும் செய்யலாம்னு வந்துட்டேன்....ஹி ஹி....

ஜோக்ஸ் அபார்ட்... பொறுமையா படிச்சதுக்கு நன்றிங்க.... :)
 
பின் குறிப்பு:-
priya.r சொன்னது… "இதோ பாரு அப்பாவி ;நீ பதிவு ஜோஸ்யர் கிட்டே நிறைய கமெண்ட்ஸ் வரதுக்கு ஐடியா கேளு ;வேண்டாங்கலே... அதுக்காக இந்த டிராமா எல்லாம் ரெம்ப ஓவர்ப்பா... ஒரு வாரம் ஒரு நாள் பின்னாடி போடுவே ! அதை கேட்டு ஒரு இருவது கமெண்ட்ஸ்... ஒரு வாரம் ஒரு நாள் முன்னாடி போடுவே ! அதை ஏன்னு கேட்டு ஒரு பத்து கமெண்ட்ஸ்... இதெல்லாம் முடிஞ்சு ஒரு நாள் பதிவே போடாமே போட்டாச்சுன்னு சொல்ல போறே"

போன வாரம் எந்த நேரத்துல இந்த ப்ரியா அக்கா இப்படி சொன்னாங்களோ... இந்த வாரம் நிஜமாவே "ஜில்லுனு ஒரு காதல்" எழுத முடியலைங்க... (அவ்வவ்வ்வ்வ்.....) மன்னிக்கணும்... ஆனா நான் எந்த ஜோசியரையும் கேட்டு செய்யல... நெஜமாவே எழுத முடியல அக்கோய்...

அடுத்த வாரம் நேரத்தோட போட்டுடறேன்... இந்த வாரம் எல்லாரும் ஜாலியா நிம்மதியா என்ஜாய்...:)

கொஞ்ச நாள் முன்னாடி எழுதி டிராப்ட்ல இருந்த இந்த பதிவை இப்போதைக்கு "ஆறுதல் பரிசு" மாதிரி வெச்சுக்கோங்க... நன்றி...:)

Thursday, March 24, 2011

ஸ்வேகா...


"நம்ம ஜூனியர் ஸ்வேகா ஸ்டெப்ஸ்'ல கால் ஸ்லிப் ஆகி விழுந்துட்டாளாம்... ஒரு வாரம் ரெஸ்ட்ல இருக்க சொல்லி இருக்காங்க போல" என என் தோழி கூற

"அடப்பாவமே... அம்மா இல்லாத பொண்ணு பாவம்... நல்லா பேசுவா... அவ க்ளாஸ்மேட்ஸ்கிட்ட போன் நம்பர் வாங்கி பேசணும்" என்றேன் நான்

***********************************************************************

அன்று மாலை....

"ஹலோ ஸ்வேகா இருக்காங்களா?"

"நீங்க?"

"நான் அவ சீனியர் பேசறேன் அங்கிள்"

"இரும்மா.. அவகிட்ட போன் தரேன்"

"ஹலோ"

நான் பேசுகிறேன் என்று சொன்னதும் "ஹாய் அக்கா... நான் எதிர்பாக்கவே இல்ல நீங்க கூப்பிடுவீங்கன்னு... சோ ஹாப்பி அக்கா...தேங்க்ஸ் அக்கா" என அன்று பேசி முடிக்கும் முன் ஒரு நூறு அக்கா சொல்லி இருப்பாள் ஸ்வேகா

இப்படி தான் ஆரம்பித்தது எங்களுக்கு இடையிலான நெருக்கம்

அதன் பின் தினமும் கல்லூரியில் சமயம் கிடைக்கும் போதெல்லாம் என்னை தேடி வந்து விடுவாள். அது தவிர வீட்டுக்கு வந்ததுமே போன் வரும்... என் அம்மா "இப்போ தானேடி காலேஜ்ல பாத்து இருப்பீங்க அதுக்குள்ள என்ன?" என கேட்கும் படி ஆனது

கல்லூரியிலும் அவளை பார்த்ததுமே "உன் உடன் பிறப்பு வந்தாச்சு" என எல்லாரும் கேலி செய்யும் படி ஆனது நிலைமை

***********************************************************************

அன்று அவளின் பிறந்த நாள். கட்டாயம் அவள் வீட்டுக்கு நான் வரணும் என என் அம்மாவிடம் கேட்டு அனுமதி வாங்கினாள்

"நீங்க தான் அக்கா இன்னிக்கி VIP கெஸ்ட்" என்றாள். நான் மற்றும் அவளின் உடன் பயிலும் நெருங்கிய தோழி மட்டுமே, வேறு யாரும் இல்லை

கேக் கட் செய்து முதலில் எனக்கு ஊட்டினாள். அதற்காக அவர் தங்கை கோவித்து கொண்டதாய் பின்னொரு நாளில் என்னிடம் கூறி சிரித்தாள்

"அக்கா அக்கா அக்கா... என் பொண்ணுக்கு அக்கா'மேனியா பிடிச்சுடுச்சு போ...ஹா ஹா" என சிரித்தார் அவளின் அப்பா அன்று

"என்னாச்சு அங்கிள்" என நான் கேட்க

"அதை ஏம்மா கேக்கற... பேச்சுக்கு பேச்சு அக்கா தான்... போன ஜென்மத்துல நெஜமாவே அக்கா தங்கையா இருந்து இருப்பீங்க போல" என அவள் அப்பா சொல்ல, ஸ்வேகாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்

ரத்த உறவுகளுள் இருக்கும் அன்பு ஒரு விதம். நட்பு என்பது ஒரு விதம். இது இரண்டும் சேர்ந்தது போல் எதிர்பார்ப்பு சிறிதும் அற்ற இவளின் அன்புக்கு என்ன விளக்கம் இருக்க முடியுமென நானும் பலமுறை எனக்குள் கேட்டும், பதில் பெற முடிந்ததில்லை

***********************************************************************

இரண்டு வருடங்கள் போன இடம் தெரியவில்லை. எனக்கு கல்லூரி முடியும் நாள். அன்று ஸ்வேகா அழுதது இன்னும் என் கண்ணில் நிற்கிறது

அதன் பின் தினமும் போன் செய்வாள். குறைந்தது அரைமணி நேரமேனும் என்னிடம் பேசினால் தான் ஆச்சு என்பாள். சில நேரம் எனக்கு பேச விசயமே இருக்காது. சிலசமயம் அசுவாரஷ்யமாய் அவள் பேசுவதற்கு சும்மாவேனும் "ம்" கொட்டி கொண்டிருப்பேன்

ஒரு நாளும் அதற்கு கோவித்து கொண்டதில்லை. இரண்டு வாரத்திற்கு ஒருமுறையேனும் நேரிலும் வந்து பார்த்து விடுவாள். ஒரு வருடம் இப்படி ஓடியது

"நீங்க படிக்கற காலேஜ்ல நானும் PG சேரணும்... அங்க மெரிட் சீட் மட்டும் தான்னு சொன்னாங்க அக்கா... அதுக்கே ஒழுங்கா படிச்சுட்டு இருக்கேன்" என்றாள், இயல்பிலேயே மிக நன்றாக படிப்பவள் தான் அவள்

சொன்னது போல் நான் இரண்டாம் வருடம் போன போது அவள் அங்கு முதல் வருடத்தில் வந்து சேர்ந்தாள்

"உங்க அக்கா கல்யாணம் பண்ணிட்டு போனா நீயும் கூடவே போவியோ" என அவளின் அப்பா வழக்கம் போல் கேலி செய்தார்

"அந்த வீட்டிலேயே இன்னொரு பையன் இருந்தா நல்லதா போச்சுனு அக்காவுக்காக போனாலும் போய்டுவா" என அவள் தங்கையின் கேலியும் சேர்ந்தது

முதுகலை படிப்பில் ஒரு வருடம் பழைய கதை தொடர்ந்தது. தினமும் கல்லூரியில் பின் வீட்டிற்கு வந்து போனிலும் பேச்சும் அரட்டையும்

ஆரம்பம் என்பது உண்டென்றால் முடிவும் உண்டே. அந்த கல்லூரி வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. ஆனால் அன்று அவள் முன் போல் அழவில்லை

மாறாக "நாம தான் எப்பவும் ஒண்ணா இருப்போமே அக்கா... கூட இருந்தாலும் இல்லாட்டியும்" என்றாள். அவள் பக்குவப்பட்டிருந்தது எனக்கு நிம்மதி அளித்தது

எனக்கு கல்லூரி ஒன்றில் விரிவுரையாளர் வேலை கிடைக்க தனக்கே கிடைத்தது போல் அப்படி ஒரு சந்தோஷம் ஸ்வேகாவின் பேச்சில்

"அடடா... வர்றவங்க போறவங்க கிட்டயெல்லாம் ஒரே அக்கா புகழ் தான்...ஹா ஹா" என சிரித்தார் அவள் அப்பா

அவள் சொன்னது போல் எங்கள் நட்பு தொடர்ந்தது

***********************************************************************

அன்று எனக்கு திருமணம் நிச்சியம் ஆனதை அவளிடம் கூற முதலில் சந்தோஷம் அதன் பின் சோகம்

"ஊரை விட்டு போனப்புறம் என்னை மறந்துடுவீங்களா?" எங்களின் ஐந்து வருட நட்பில் முதல் முறையாய் அவளிடமிருந்து எதிர்பார்ப்பான ஒரு வார்த்தை அன்று தான் கேட்டேன்

"மறந்தா போன் பண்ணி ஒரு வழி பண்ணிட மாட்டியா?" என கேலி போல் பேச்சை மாற்றினேன் நான்

கூடவே இருந்த போது கூட தோன்றாத ஒரு அபரிதமான நெருக்கத்தை அவளை விட்டு பிரிய போகிறோம் என்ற போது நான் உணர்ந்தேன்

அன்று அவளின் பிறந்த நாள். என்ன பரிசு வேண்டும் என கேட்ட அவள் தந்தையிடம் "அக்காவுடன் ஒரு நாள் தங்க வேண்டும்" என்று கேட்டாள்

மகளை தன் உடன் பிறந்தவர்களின் வீட்டுக்கு கூட அனுப்ப தயங்கும் தந்தை என்ன செய்திருப்பார் என நினைக்கிறீர்கள்

அம்மா இல்லாத பிள்ளைகள் என அந்த குறை தெரியாமல் இருக்க மகள்கள் கேட்டது பெற்று தரும் தந்தை அவளின் அந்த ஆசையையும் நிறைவேற்றினார்

அவரும் அவளோடு வந்து என் பெற்றோரை சந்தித்து அளவளாவி பிறந்த நாளை கொண்டாடி விட்டு மகளை எங்கள் வீட்டில் விட்டு சென்றார். அன்றிரவு வெகு நேரம் என்னோடு பேசி கொண்டே இருந்தாள்

இனி பேச வாய்ப்பே கிடைக்காது என்பது போல் அவள் அம்மாவை பற்றி அவளுக்கு இருந்த பிள்ளை பருவ நினைவுகள், அப்பா பற்றி, தங்கை பற்றி, தோழிகள் பற்றி என விடிய விடிய பேசினாள்

மறுநாள் மாலை நேரம் போல் அவளின் வீட்டு டிரைவர் அழைத்து செல்ல வர, செல்லவே மனமின்றி கண்ணீரோடு கிளம்பினாள்

***********************************************************************

என் திருமண தினத்தன்று என் உடன் பிறந்த தங்கையின் கண்ணீர் அளவு அவளிடமும் கண்டேன்

திருமணத்திற்கு பின் ஒரு மாதம் விடுமுறை முடிந்து என்னவர் துபாய் சென்றுவிட, எனக்கு விசா வர இரண்டு / மூன்று மாதம் ஆகும் என்ற நிலைமை. அந்த சமயத்தில் ஒரு நாள் ஸ்வேகாவின் தந்தையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, உடனே மருத்துவமனைக்கு வரும்படி

அங்கு அவளை சென்று பார்த்ததும் என்னையும் அறியாமல் கண்ணில் நீர் நிறைந்தது. என்னை கண்டதும் அவளுக்கு உடல் வலியை மீறி ஒரு மகிழ்வான சிரிப்பு

"என் பொண்ணுக்கு அக்காவ பாத்ததும் தான் சிரிப்பு வருது... ஒரு வாரமாச்சு அவ சிரிப்ப பாத்து" என்றார் அவள் அப்பா

"ஒரு வாரமா ஏன் என்கிட்ட சொல்லலை" னு சண்டை போட்டேன் அவரிடம்

"வீட்டுக்கு போயிட்டு உனக்கு கூப்பிடலாம்னு இருந்தேன்மா... ஆனா இவ தான் பாக்கணும்னு அடம்" என்றார் மகளை அன்பாய் பார்த்தப்படியே

அதற்குள் நர்ஸ் வந்து அழைக்க வெளியே வந்தோம். அதற்கே காத்திருந்த நான் "என்னாச்சு அங்கிள்?" என கேட்க, அவரும் அதற்கே காத்திருந்தது போல் அழுதார்

என் தந்தையின் வயதுடைய ஒருவர் சிறுபிள்ளை போல் அழுவதை காணும் மனோதிடம் அப்போது எனக்கு இருக்கவில்லை. சற்று சமாதானம் ஆனதும் "ப்ளட் கேன்சரா இருக்கும்னு சொல்றாங்க... ஒண்ணும் புரியலம்மா... அவ அம்மாவை வாரி குடுத்த அதே நோய்க்கு இவளையும் குடுத்துடுவேனோனு பயமா இருக்கு" னு அழுதார்

எனக்கு என்ன சமாதானம் சொல்வதென புரியவில்லை. எனக்கு யாரேனும் சமாதானம் சொன்னால் தேவலை என்ற நிலைமை. ஆனால் தீர்க்கமாய் அழக்கூடாதென நின்றேன். நான் அழுதால் தான் ஏதோ ஆகிவிடும் என்பது போல் இரும்பாய் இருந்தேன்

அந்த சமயம் நர்ஸ் வந்து "ப்ளட் ட்ரான்ஸ்பிளான்ட் செய்யணும்.... ப்ளட் பேங்க்ல இல்ல.... யாரையாச்சும் வர சொல்லுங்க" என கூற, சற்றும் எதிர்பாராத விதமாய் என்னுடைய ரத்த வகை தான் அவளுடயதாகவும் இருந்தது . அது வரை ரத்த வகை பற்றி கேட்டுகொண்டதில்லை

சினிமாவில் இது போல் காட்சிகள் வந்த போதில் கேலி செய்து சிரித்தவள் தான் நானும், அன்று பேச்சற்று நின்றேன்

"என் ரத்தத்தை தருகிறேன்" என்றபோது அவள் அப்பா முதலில் மறுத்தார்

"நீ மணமானவள்... இன்னும் எங்கள் வீட்டு பெண்ணில்லை... அவரிடம் கேட்க வேண்டாமா" என தயங்கினார்

"அவர் நிச்சியம் சந்தோசப்படுவார்... எனக்கு அவரை தெரியும்" என நான் உறுதியாய் கூற, பின் சம்மதித்தார்

மகிழ்வாய் ஸ்வேகாவிடம் என்னை அழைத்து சென்றவர் "ஏய் குட்டி (அப்படி தான் மகளை அழைப்பார்), உன் அக்கா உனக்கு ப்ளட் குடுக்க போறாளாம்... உனக்கு இப்போ எல்லாம் சரி ஆய்டுமே... கரெக்ட் தானே" என தன் துக்கத்தை மறைத்து கேலி செய்து சிரித்தார்

அவர் சொன்னது போலவே அவள் முகத்திலும் அப்படி ஒரு சந்தோஷம். அன்று டாக்டர் அனுமதித்த நேரம் வரை அவளுடன் இருந்து விட்டு வீட்டுக்கு வந்தேன்

அவளுக்கு நிச்சியம் சரி ஆகி விடும் என்று நம்பினேன். ஆனால் நாளுக்கு நாள் நிலைமை பின்னடைந்து கொண்டே போனது

எனக்கு துபாய் செல்ல விசா வந்தது. அதே நேரம், ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் அவளின் வாழ்வு என கெடு விதிக்கப்பட்டது

மீண்டும் அவளை காண்பேன் என்ற நம்பிக்கையோடு அவளிடம் விடை பெற்று துபாய் கிளம்பினேன். அடிக்கடி தொலைபேசியில் பேசினேன். என்னிடம் பேசும் போது நம்பிக்கையாய் பேசுபவள் அதன் பின் சோர்ந்து போவதாய் அவள் அப்பா கூறினார்

ஒருமுறை அவளை பார்க்க சென்ற என் பெற்றோரிடம் நானும் அவரும் இருப்பது போல் பெரிய புகைப்படம் வேண்டுமென கேட்டாளாம். புதியதாய் ஒன்றை எடுத்து அனுப்பினோம்

சில நாட்கள் "அக்கா பேசினால் தான் மருந்து எடுத்து கொள்வேன்" என அடம் பிடிக்கிறாள் என அவள் தங்கையிடமிருந்து அழைப்பு வரும்

"நீ இப்படி செஞ்சா நான் எப்படி நிம்மதியா இருப்பேன்... ஒழுங்கா சாப்பிடணும் சரியா.. இல்லேனா நான் இனிமே பேசவே மாட்டேன்" என்றேன் ஒரு நாள் சற்று கோபமாய், அப்படி சொன்னாலேனும் சரியாய் சாப்பிடுவாள் என எண்ணி

எந்த நேரத்தில் அப்படி கூறினேனோ, நான் கூறிய அந்த நேரத்தில் எந்த தேவதை "ததாஸ்து" கூறியதோ, மெய்யாகவே அதன் பின் அவள் குரலை நான் கேட்கவில்லை

இதே நாள் மார்ச் 24 , அன்று "அவள் இனி இல்லை" என்ற செய்தி எனக்கு வந்தது. இத்தனை விரைவில் அவள் இல்லாமல் போவாள் என நான் எண்ணவும் இல்லை. அழவும் தோன்றவில்லை. "ஏன் சென்றாய்" என கோபம் தான் மேலோங்கியது

"இன்னும் இரண்டு மாதத்தில் நான் வருவேன் என்று கூறினேனே...அதற்குள் என்ன அவசரம் என சென்றாய்" என ஆதங்கம் தான் மனம் முழுக்க வியாபித்திருந்தது

இரண்டு நாட்கள் அவள் தந்தையிடம் பேச இயலவில்லை, நான் அழைத்த போது அவர் பேசும் நிலையில் இருக்கவில்லை. இரண்டு நாள் கழித்து அவள் அப்பாவே எனக்கு அழைத்தார்

"என்ன அங்கிள் இது? ரெண்டு வருஷம் இருப்பானு டாக்டர் சொன்னதா சொன்னீங்களே...இப்படி ஆறே மாசத்துல.." எனக்கு அதற்கு மேல் பேச இயலவில்லை

"என்னமா செய்யறது... நமக்கு குடுத்து வெச்சது அவ்ளோ தான்" என்றார் விரக்தியாய். எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை

மீண்டும் அவரே தொடர்ந்தார் "நேத்தைக்கி அவ அஸ்திய கரைக்க ஆத்துக்கு உங்க வீட்டு வழில தான் போனோம்... இந்த அஸ்திக்கு உயிர் இருந்தா அவ அக்கா வீட்டுக்கு போகாம இந்த ரோடை கிராஸ் பண்ண விடமாட்டா என் பொண்ணுனு, என் கூட வந்த ஸ்வேகாவோட மாமாகிட்ட சொன்னேன்..." என்று அவர் சொல்லவும் எனக்கு இரண்டு நாளாய் கட்டுப்படுத்தி இருந்த துக்கம் மொத்தமும் வெடித்து கிளம்பியது

என் அழுகையை நிறுத்த வெகு நேரமானது. அவளை முதல் முதல் சந்தித்தது முதலான எல்லா நிகழ்வுகளும் கண் முன் விரிய மொத்தமாய் அழுது தீர்த்தேன்

"உன்னை அழ வெக்கணும்னு நான் இதை சொல்லல புவனா... அவ ஆத்ம சாந்திக்கு தான் சொன்னேன்... அவ எப்பவும் உன்னோட இருப்பா"னு தன் துக்கத்தையும் மறந்து, எனக்கு ஆறுதல் சொன்னார் அந்த தந்தை... Hats off to that dad....!!!

அவர் என்ன நினைச்சு அப்படி சொன்னாரோ எனக்கு தெரியாது. ஆனா எனக்கு ரெம்ப சந்தோசமா இருந்தாலும் சரி, வருத்தமா இருந்தாலும் சரி அந்த நிமிஷம் ஒரு ப்ளாஷ் மாதிரி அவ நினைப்பு வந்துட்டு போகும் கண் முன்னாடி, இன்னைக்கி வரைக்கும் அப்படி தான்

அவளை இறுதியா பாக்க முடியலயேங்கற வருத்தம் எனக்கு இப்பவும் இருக்கு. நமக்கு நடக்கற ஒரு ஒரு விசயத்துக்கும் ஏதோ காரணம் இருக்குனு நம்பறவ நான். அந்த வகைல யோசிச்சு பாத்தா, அவளோட சிரிச்ச முகம் மட்டுமே என் நினைவில் இருக்கணும்னு தான் கடவுள் அப்படி செய்தாரோனு கூட தோணும்

நான் வருத்தமா இருக்கறது ஸ்வேகாவுக்கு எப்பவும் பிடிக்காது. இதை எழுதி என்னை நானே இன்னும் வருத்திக்க கூடாதுன்னு தான் முதல்ல நினைச்சேன்... அந்த தயக்கத்துல தான் இது வரைக்கும் அவள பத்தி எழுதலை, யார்கிட்டயும் ஸ்வேகா பத்தி நான் அதிகம் பேசினது கூட இல்ல.

ஆனா அவளுக்கு நான் பெருசா ஒண்ணும் செஞ்சதில்ல... அதனால இந்த நாளுல, அவ என் மேல காட்டின எதிர்பார்ப்பில்லா அன்புக்கு ஒரு சிறு காணிக்கையா இந்த பதிவை சமர்ப்பிக்கறேன்...

பொறுமையா படிச்ச உங்களுக்கும் மிக்க நன்றி

அருகில் இருந்தபோதில்
அறியவில்லையடி உன்நேசம்

பிரியும் நொடிபொழுதில்
புரிந்தும் பயனில்லைஎன்றநிலை !!!

இன்னொருபிறவி உனக்கிருந்தால்
இன்றேவந்துவிடு என்மகளாய்
ஒரேயொருவாய்ப்பு கொடுஎனக்கு
ஒருஜென்ம கடனைதீர்த்திடவே !!!

...

Monday, March 21, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 13)

பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி  6   பகுதி 7   பகுதி 8   பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12
    

அதே நேரம் "Who is with patient Meera Rangarajan?" என குரல் கேட்க மூவரும் விரைந்து சென்றனர்

எல்லாருக்கும் முன் விரைந்து சென்றான் சதீஷ். மீரா சோர்ந்து படுத்திருந்த கோலத்தை கண்டதும் மூவருக்கும் கண்ணில் நீர் துளிர்த்தது

அவள் அருகே சென்றால் தன் வசம் இழந்து விடுவோம் என பயந்தவன் போல் அறை வாசல் கதவருகிலேயே நின்றான் ஸ்டீவ். அதுவரை இருந்த மன உறுதி கூட அவளை கண்டதும் போனது போல் உணர்ந்தான்

அதிகம் தொந்தரவு செய்யாமல் விரைவில் பார்த்து விட்டு சென்று விடுமாறு கூறிய டியூட்டி நர்ஸ், அன்று இரவு மருத்துவமனையில் தங்க வேண்டி இருக்கும், காலை டாக்டர் வந்து பார்த்து விட்டு வீட்டுக்கு போகலாமா இல்லையா என சொல்லுவார் என்றுரைத்தார்

அதோடு யாரேனும் ஒருவர் மட்டும் இரவு மீராவுடன் தங்கலாம் என கூறிவிட்டு சென்றார்

"மீரா..." என சதீஷ் அவள் கை தொட்டு அழைக்க, மெல்ல கண் விழித்தாள் மீரா

ஒரு கணம் மிரட்சியுடன் சுற்றிலும் பார்த்தவள், தான் இருக்கும் நிலை புரிந்ததும் "சதீஷ்...." என்றாள் மெல்லிய குரலில், அதற்கே முழு சக்தியும் பிரயோகித்தது போல் மூச்சு வாங்க "தண்ணி வேணும்" என ஜாடை காட்டினாள்

மெல்ல தலையை தூக்க செய்து தாங்கி பற்றியவாறே தண்ணீர் புகட்டினான் சதீஷ். கொஞ்சம் அருந்தியதுமே "போதும்.." என்றாள்

"இன்னும் கொஞ்சம் மீரா..." என வற்புறுத்தி குடிக்க செய்தான் சதீஷ்

"சதீஷ் நான்..." என மீரா ஏதோ சொல்ல வர "இப்ப எதுவும் பேச வேண்டாம் மீரா... ரெஸ்ட் எடு... " என்றான் சதீஷ்

"இல்ல சதீஷ்... நான்..." என்றவள் அதற்குள் கண்ணை இறுக்க மூடினாள். அவளையும் அறியாமல் வலியில் கண்ணில் நீர் பெருகியது

"என்னாச்சு மீரா? மீரா..." என பதட்டமான சதீஷ், அவள் தலையை ஆதரவாய் தொட

"பெய்ன் கில்லர் குடுக்க சொல்லி கேளு சதீஷ்.... வலி தாங்க முடியல...நெத்தில ஸ்டிட்ச் பண்ணின எடம் ரெம்ப வலிக்குது" என நடுங்கிய குரலில் தேம்பினாள்

அவள் அழுவதை காண பொறுக்காதவனாய், கண்ணீரை மறைக்க முகத்தை வேறு புறம் திருப்பினான் சதீஷ்

அந்த நிலையில் அவளை கண்டதும் ஸ்டீவ் தன்னையே வெறுத்தான். தான் சற்று பொறுமையாய் இருந்திருந்தால் மீராவுக்கு இந்த வேதனை வராமல் தவிர்த்து இருக்கலாமே என சுயகோபத்தில் செய்வதறியாது நின்றான்

அவளருகே சென்று அணைத்து ஆறுதல் சொல்ல ஏங்கிய மனதை கட்டுப்படுத்தியவன், அதற்கு மேல் அவளின் வேதனையை காண சகியாதவனாய் வெளியேறினான் ஸ்டீவ்

மது ஆதரவாய் மீராவின் கை பற்றி "நான் நர்ஸ்கிட்ட கேக்கறேன் மீரா... கேட்டா கண்டிப்பா பெய்ன் கில்லர் தருவாங்க" என்றவள், சதீஷிடம் திரும்பி "நீ இரு சதீஷ், நான் நர்ஸ கூட்டிட்டு வரேன்" என்றபடி வெளியேறினாள்

அறைக்கு வெளியே வந்தவள், ஸ்டீவ் வேகமாய் செல்வதை பார்த்ததும் "ஸ்டீவ்... நில்லு... " என அழைத்தபடியே வேகமாய் நடந்து அவன் தோள் பற்றி நிறுத்தினாள்

மூச்சு வாங்க நின்றவள் "எங்க போற நீ இப்ப?" எனவும்

"எ...என்னால மீராவ அப்படி பாக்க முடியல மது.. அவள விட்டு விலகி நிக்கவும் முடியல... இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா I don't think I can stay away from her... நான் கிளம்பறேன் மது... அப்பறம் போன் பண்றேன்" என்றான்

கஷ்டப்பட்டு உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முயன்ற வேதனை அவன் கண்களில் தெரிய "ஸ்டீவ்... முழுசா என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது... ஆனா அவ இப்படி கஷ்டப்படணும்னு நெனச்சு நீ எதுவும் செஞ்சிருக்கமாட்ட... அவளுக்கும் அது தெரியும்.... just relax... அதான் ஆபத்தில்லாத காயத்தோட போச்சே... she'll be fine very soon... சரியா?" என ஆதரவாய் நண்பனின் தோளில் தட்டினாள் மது

"இல்ல மது... அவ கோவிச்சுட்டு போனப்ப நானும் பின்னாடி போனா மறுபடி வேண்டாத சண்டை வரும்னு தான் நான் போகல... இப்படி ஆகும்னு...ச்சே..." என மீண்டும் அவன் வேதனையில் பேச இயலாமல் நிற்க

"ரிலாக்ஸ் ஸ்டீவ்... நீ வீட்டுக்கு போ... அனேகமா சதீஷ் தான் நைட் இங்க இருப்பேன்னு சொல்லுவான்... நான் வீட்டுக்கு போனதும் உனக்கு கால் பண்றேன் சரியா" எனவும்

"முடிஞ்சா அவகிட்ட நான் சாரி சொன்னேன்னு சொல்றியா? ப்ளீஸ் மது" என சிறு பிள்ளை போல் பாவமாய் ஸ்டீவ் கேட்க "ஒகே நான் சொல்றேன்" என அவனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தாள் மது

நர்சை அழைத்து வலி இல்லாமல் இருக்க மருந்து கொடுக்குமாறு கேட்க, அவசியமென்றால் கொடுக்கலாம் என டாக்டர் சார்ஜ் சீட்டில் பரிந்துரைத்த அளவு பார்த்து மருந்து செலுத்தினார் நர்ஸ்

அதன் பின் வலி சற்று மட்டுப்பட, உறங்கினாள் மீரா

"நைட் வேணா நான் இங்க இருக்கட்டுமா சதீஷ்?" என மது கேட்க "இல்ல மது... நான் இருக்கேன்... என்னால வீட்ல போய் நிம்மதியா தூங்க முடியாது... இங்க இருந்தா கூட கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பேன்" என்றான் சதீஷ் அவசரமாய்

"சரி... நான் காலைல போன் பண்றேன்... நம்ம ஊர் மாதிரி காயம் ஆறும் வரை நாமளே கேட்டாலும் இங்க ஹாஸ்பிடல்ல வெச்சிருக்க மாட்டாங்க சதீஷ்... அனேகமா நாளைக்கு டாக்டர் வந்து பாத்ததும் போக சொல்லிடுவாங்கனு நினைக்கிறேன்... அதுக்குள்ள நைட்ல எதுனா ஹெல்ப் வேணும்னா எந்த டைம்னாலும் கூப்பிடு சதீஷ் சரியா?" என கிளம்பினாள் மது

அன்றிரவு முழுதும் ஸ்டீவ் உறங்கவில்லை. மீராவை சந்தித்த நாளில் இருந்து உறங்காத இரவுகளின் எண்ணிக்கை அதிகரித்து தான் போனது தன் வாழ்வில் என நினைத்தான் ஸ்டீவ்

மீண்டும் மீண்டும் அவள் வலியில் விசும்பிய முகமே கண் முன் வர அவளை அப்போதே பார்க்க வேண்டும் போல் தோன்றியது. உரிமையாய் சதீஷ் அவள் அருகில் இருக்கிறானே தன்னால் அது இயலவில்லையே என சுய பச்சாதாபம் எழுந்தது

இப்படியே தவிப்பும் வேதனையுமாய் அன்றிரவு நகர்ந்தது

*********************************************

காலை "பார்வையாளர் நேரம்" எட்டு மணி முதல் தான் என்றபோதும் அதற்கு வெகு முன்பே ஸ்டீவ் மருத்துவமனை முன் நின்றிருந்தான்

சரியாய் எட்டானதும் உள்ளே சென்றான். அதே நேரம் "Right on time" என சிரித்தபடி மதுவும் அவனோடு வந்து சேர்ந்து கொண்டாள்

"ஹாய் மது... " என்றான் ஸ்டீவ்

"ஹாய் ஸ்டீவ்... நேரத்துலையே வந்துட்ட போல... இல்ல நைட்ல இருந்தே இங்க தான் இருக்கியா" என மது கேலியாய் சிரிக்க

"கொஞ்சம் முன்னாடி வந்தேன்... " என முறுவலித்தான் ஸ்டீவ்

மீரா இருந்த அறை கதவை மெல்ல தட்டிவிட்டு "ஹாய்" என்றபடி மது முன் செல்ல, ஸ்டீவ் தொடர்ந்தான்

"ஹாய் மது" என்றான் சதீஷ், ஸ்டீவ் என்ற ஒருவன் இருப்பதையே உணராதவன் போல். அதை கவனிக்கும் மனநிலையில் ஸ்டீவ் இருக்கவில்லை

உள்ளே நுழைந்ததுமே அவன் பார்வை மீராவை வருடியது. நேற்று பார்த்ததை விட சற்று தேறி இருந்தாற்போல் இருந்தாள் மீரா

"நைட் நல்லா ரெஸ்ட் எடுத்தியா மீரா?" என்றபடி ஸ்டீவ் அவளருகில் செல்ல

வேகமாய் அவனை மறிப்பது போல் வந்து நின்ற சதீஷ் "Stay away from her" என்றான் மிரட்டல் போல்

மீராவும் மதுவும் என்ன செய்வதென புரியாமல் ஒருவரை ஒருவர் பார்க்க, மது சற்று சுதாரித்து "சதீஷ் என்ன இது?" என்றாள்

"அவன இங்கிருந்து போக சொல்லு மது... இனியும் அவன் மீராவை தொந்தரவு பண்ணினா நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன்...he hurted her enough..." என்றவன்

முன் தினம் "மீரா சொல்லட்டும் போறேன்" என ஸ்டீவ் கூறியது  நினைவிற்கு வர, அவள் பக்கம் திரும்பி  "மீரா, நீயே அவன போக சொல்லு..." என்றான்

மீரா தனக்கு ஆதரவாய் பேச வேண்டுமென இருவருமே அவளை ஆர்வமாய் பார்க்க, என்ன செய்வதென புரியாமல் விழித்தாள் மீரா

"சொல்லு மீரா... இனி கண் முன்னாடி வர வேண்டாம்னு அவன்கிட்ட சொல்லு" என்றான் சதீஷ் மீண்டும்

"சொல்லி விடு பார்ப்போம்" என்பது போல் சவாலாய் அவள் கண்ணோடு கண் பார்த்தான் ஸ்டீவ்

மீராவிற்கு உடல் வலியை விட இந்த இருவரின் உரிமை போராட்டம் தந்த வலியை அதிகமாய் உணர்ந்தாள். அதுவே வார்த்தைகளாகவும் வெளிப்பட்டது

"என்னை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க ப்ளீஸ்..." என இருவருக்கும் பொதுவாய் பதில் கூறியவள் அதற்கு மேல் பேச இயலாமல், கண்ணீரை மறைக்க முகம் திருப்பினாள்

அவள் தன்னை தாங்கி பேசுவாள் என எதிர்பார்த்த ஸ்டீவ் அந்த வார்த்தையில் மனம் துவள "என்னால உன் நிம்மதி கெட வேண்டாம் மீரா... நான் போய்டறேன்... " என்றபடி ஒரு கணமும் தாமதிக்காமல் வெளியேறினான் ஸ்டீவ்

அவன் பின்னோடு வந்த மது "ஸ்டீவ்.... " என சமாதானமாய் ஏதோ சொல்ல வர "வேண்டாம் மது... don't say anything... I just..." என ஒரு கணம் தன்னை நிதானப்படுத்தியவன் "I just want to be alone for sometime.. bye Madhu" என அவள் பதிலுக்கு கூட காத்திராமல் வேகமாய் நடந்தான்

அதற்கு மேல் அவனை தடுப்பது சரியில்லை என தோன்ற, கண் மறையும் வரை அவன் செல்வதை பார்த்து நின்றுவிட்டு மீரா இருந்த அறைக்குள் சென்றாள் மது

எதுவும் நடக்காதது போல் சதீஷ் மௌனமாய் செய்தித்தாளில் மூழ்கி இருக்க, மீரா கண் மூடி படுத்திருந்தாள்

இமைக்குள் அசைந்த விழிகள் அவள் உறங்கவில்லை என்பதை உணர்த்தியது. ஆனாலும், மது அவளிடம் எதுவும் பேச முயற்சிக்கவில்லை

சற்று நேரம் செல்ல, டாக்டர் வந்து பார்த்தார். எக்ஸ்ரே எல்லாம் "நார்மல் தான்" என கூறியவர் சில மருந்துகள் மட்டும் சில நாட்கள் தொடர்ந்து எடுக்கும் படி அறிவுறுத்தினார்

அதோடு இன்னும் ஒரு வாரத்திற்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து நெற்றி கட்டை மாற்றி செல்ல வேண்டுமென கூறினார். அதுவரை வீட்டில் ஓய்வில் இருப்பது நல்லது என்றும் பரிந்துரைத்தார்

மதியம் போல் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தனர் மூவரும். மீராவின் அறைக்கு சென்றதும் கையோடு வாங்கி சென்றிருந்த உணவை உண்ணசெய்து, மருந்து கொடுத்தாள் மது

"நீ வேணா கிளம்பு மது... நான் இருக்கேன்" என சதீஷ் கூற

அதற்குள் மீரா "இல்ல சதீஷ், நான் நைட் எழுந்தப்ப எல்லாம் நீ முழிச்சுட்டு இருந்தத பாத்தேன்... நீ போய் ரெஸ்ட் எடு..." என்றவள் அதோடு "மது, நீ கூட கிளம்பு. நான் எப்படியும் இனி தூங்கதானே போறேன்... நாளைக்கி பாக்கலாம்" என்றாள்

"இல்ல மீரா... இன்னைக்கி உன்னோட நைட் ஸ்டே பண்றேன்னு அம்மாகிட்ட சொல்லிட்டு தான் வந்தேன்... " எனவும்

"ஒண்ணும் பிரச்சனை இல்ல மது... I can manage" என்றாள் மீரா

"என்ன மீரா? விளையாடறயா? தனியா எப்படி? அதெல்லாம் வேண்டாம்... இன்னிக்கி ஒரு நாள் மட்டுமாச்சும் மது சொல்ற மாதிரி, அவ இங்க இருக்கட்டும்" என்றான் சதீஷ்

அவன் பிடிவாதம் அறிந்த மீரா "சரி... அப்ப நீ கிளம்பு... போய் தூங்கு..." என்றாள்

கிளம்ப மனமே இல்லாதவன் போல் பல முறை பத்திரம் சொல்லி சதீஷ் கிளம்பிய சிறிது நேரத்தில், மதுவின் செல்போன் அலறியது. ஸ்டீவின் எண் பேசியில் ஒளிர, தயக்கமாய் மீராவை பார்த்தபடியே "சொல்லு ஸ்டீவ்" என்றாள் மது

"பேச கேட்பானோ" என தயங்கியவள் போல் மீரா கண் மூடி படுத்தாள்

"வீட்டுக்கு வந்தாச்சா மது?" என ஸ்டீவ் கேட்க

"ம்...கொஞ்ச நேரமாச்சு ஸ்டீவ்" என்றாள்

"மீரா தூங்கறாளா?" என ஸ்டீவ் கேட்க

"ஆமாம்" என பொய் உரைத்தாள் மது, மீராவின் தயக்கம் புரிந்தவள் போல்

"நெஜமா தூங்கறாளா?" என மீண்டும் கேட்டான் நம்பாதவனாய்

"அது..." என மது நிறுத்த

"இட்ஸ் ஒகே மது... அவளுக்கு என்கிட்ட பேச விருப்பம் இருக்காதுன்னு தெரியும்... இருந்தாலும்.... just trying my luck..." என ஒரு கணம் பேசாமல் நின்றவன் "ஒகே மது... see you then" என அழைப்பை துண்டித்தான்

ஸ்டீவின் நிலையை பார்க்க பாவமாய் இருந்த போதும், ஏனோ மீராவை பார்க்கவும் பாவமாய் தோன்றியது மதுவிற்கு

இருவரின் போராட்டத்தில் மிகவும் பாதிக்கப்படுவது அவள் தானே என பரிதாபம் சுரந்தது. இருவரையும் விட்டுக் கொடுக்காமல் பொதுவாய் அவள் அன்று காலை மருத்துவமனையில் பேசியது நினைவு வர, உறங்குவது போல் பாவனையில் இருந்தவளை இரக்கத்துடன் பார்த்தாள் மது

அடுத்து வந்து ஒரு வாரமும் டாக்டர் அறிவுறுத்தியபடி மீரா வீட்டில் தான் இருந்தாள். அவளோடே இருப்பேன் என பிடிவாதம் செய்த சதீஷை வகுப்புகள் தவற விடக்கூடாது என வற்புறுத்தி அனுப்பி வைத்தாள் மீரா

அப்படியும் காலை பல்கலைகழகம் செல்லும் முன் அவளை வந்து பார்த்தவன், மீண்டும் மாலை வந்து உறங்கும் நேரம் வரை அவளோடே இருந்தான் சதீஷ்

மதுவும் தினமும் மாலை வந்து பார்த்து சென்றாள். ஸ்டீவின் நிலை தான் சோதனையாய் இருந்தது. அவன் பல முறை முயன்றும் மீரா அவன் செல்பேசி அழைப்புகளை எடுக்கவில்லை

நேரில் சென்று பார்த்து தேவையின்றி அன்று போல் அவளை வேதனைப்படுத்த மனமில்லாதவனாய் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டான்

அடுத்து வந்த ஞாயிறன்று, காலை முதல் மீராவோடு இருந்த சதீஷும் மதுவும் மாலை நெருங்க கிளம்பி சென்றனர். இரவு நெருங்க, உறங்க ஆயுத்தமானாள் மீரா

இந்த ஒரு வாரமாய் தொடரும் வழக்கம் போல் அந்த நேரத்தில் ஸ்டீவ் அழைத்தான். அழைப்பை துண்டித்தாள் மீரா, அதுவும் வழக்கம் போலவே

எப்போதும் மீண்டும் மீண்டும் சில முறையேனும் முயற்சிப்பவன், அன்று அதன் பின் அழைக்கவில்லை. ஏனோ அவன் மீண்டும் அழைக்கணும் என எதிர்பார்ப்பவள் போல் செல்பேசியை கையிலேயே வைத்திருந்தாள் மீரா

பேச விருப்பமில்லாமல் துண்டிப்பவள் ஏன் அழைப்பை எதிர்ப்பார்க்க வேண்டும் என தனக்கு தானே கேட்டு கொண்டாள். ஆனால் பதில் தான் கிடைக்கவில்லை

சிறிது நேரத்தில் செல்பேசி சிணுங்கியது. அழைப்போ என நினைத்து துண்டிக்க போனவள் "You've got a message" என்ற வாசகத்தில் விரலசைவை நிறுத்தினாள்

"Read Message" என இயக்கியவள், அதன் பின், ஒரு முறை அல்ல இரு முறை அல்ல மீண்டும் மீண்டும் பல முறை, பேசியில் வந்த செய்தியை படித்தாள். ஒரு ஒரு முறை படித்த போதும் கண்ணில் நீர் பெருகியது

ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் சத்தமாய் அழுதாள்

வேதனை தன்னைதீர்த்திட
வேண்டும்உன் தரிசனமென்றேன்
எனைகாண்பதே உன்வேதனைஎன்றாய்
என்னசெய்வேன் சொல்!!!

உனைஅழச்செய்ய மனமின்றி
ஊமையாய் எனக்குள்அழுதேனடி
உன்னை மறந்திடமுடியுமெனில்
உனக்காக அதையும்செய்வேனடி !!!

அடுத்த பகுதி படிக்க
இனி...
(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)

Wednesday, March 16, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 12)பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11 


"ஸ்டீவ்... சீக்கரம் கிங் ஸ்ட்ரீட்ல இருக்கற Tim Hortonsகிட்ட உடனே போ... மீரா needs help" என்றாள் மது பதட்டமான குரலில்

ஒருகணம் உயிர் போனது போல் செயலற்று நின்றான் ஸ்டீவ்

"மது...என்ன...என்னாச்சு மீ...மீராவுக்கு?" என்றவனின் குரல் அவனுக்கே கேட்காதது போல் ஒலித்தது

"ஸ்டீவ்... இப்ப பேச நேரமில்ல... நாங்க வந்துட்டு இருக்கோம்... please go there now.." என்றாள் கட்டளை போல், அதோடு அழைப்பும் துண்டிக்கப்பட்டது

அதற்கு மேல பேசவும் தெம்பில்லாதவனாய், மொத்த சக்தியையும் திரட்டி வேகமாய் நடக்கலானான்

"என்னால் தானே அவள் கோபமாய் சென்றாள்...என்னால் தானே இந்த விபரீதம்... கொஞ்சம் பொறுமையாய் பேசி இருக்கலாமே நான்... சண்டை வந்தாலும் சரி என அவள் பின் சென்றிருக்க வேண்டும்... அவளை அந்த மனநிலையில் தனியே விட்டது தன் தவறு" என பலதும் யோசித்து வேதனையில் உழன்றான் ஸ்டீவ்

பழகிய இடம் என்பதால் கால்கள் தன்னால் இட்டு சென்றது. சுய நினைவே அற்றவன் போல் மீராவே மனம் முழுதும் ஆக்கிரமித்து இருக்க கால் போன போக்கில், ஆனால் வேகமாய் நடந்தான்

அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடதென உலகின் எல்லா தெய்வங்களையும் வேண்டினான் ஸ்டீவ். இனி வாழ்வில் எப்போதும் அவளுடன் சண்டை போடுவதில்லை என உறுதி கொண்டான்

அவள் தனக்கு இல்லை என்றாலும் சரி, ஆனால் அவளுக்கு எதுவும் ஆகி இருக்க கூடாதென மனம் வேண்டியது

அவன் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த போது கண்ட காட்சியில் அவனையும் அறியாமல் "மீரா..." என கத்தினான்

கண்களில் நீர் பெருக ஓடி வந்தவனை கண்டதும் ஆம்புலன்ஸ்ல் மீராவை கிடத்தி கொண்டிருந்த பணியாள் "do you know her?" என கேட்டான்

"yes...she is...she is..." என அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாறிய ஸ்டீவ், மீண்டும் அவன் கவனம் மீராவின் புறம் திரும்ப, முதலுதவிக்காக போடபட்டிருந்த கட்டையும் மீறி அவள் நெற்றியில் ரத்தம் வழிய கண்டதும் அதிர்ந்தவன்

"மீரா... மீரா... கண்ணை தெற மீரா... ப்ளீஸ் மீரா..." என சுயநினைவின்றி கிடந்தவளின் முகத்தை பற்றினான்

அதற்குள் ஆம்புலன்ஸ் பணியாள் "Don't move her man. She needs to be examined first...are you coming with us?" என கேட்க "Yes" என்றான் ஸ்டீவ் உடனேயே

அம்புலன்ஸ் நகரத்துவங்க "Is she alright? Is she going to be...alright?" என்றான் ஸ்டீவ் நடுங்கிய குரலில்

"We hope so...we did needed first aid " என்றான் இயந்திரத்தனமான குரலில், இது போல் தினமும் பல கேஸ்கள் பார்க்கும் அவனுக்கு இது வழக்கமான ஒரு நடைமுறை

"What happened? Did she tripped or ....?" என ஸ்டீவ் கேள்வியாய் அவனை பார்க்க "I have no permissions to say any. Please talk to the cop" என அம்புலன்ஸ் பின் வந்து கொண்டிருந்த போலீஸ் வண்டியை காட்டினான்

அப்போது தான் ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தான் ஸ்டீவ். அதற்கு மேல் எதுவும் பேசாமல் மீராவின் சில்லிட்ட கையை மெல்ல பற்றியவன் "மீரா... ப்ளீஸ் மீரா... என்னை அழ வெக்காத மீரா... ப்ளீஸ்... கண்ண தெற மீரா ப்ளீஸ்" என மெல்லிய குரலில் அவன் விசும்ப

அந்த நிலையை பார்த்த ஆம்புலன்ஸ் பணியாளின் முகத்தில் கனிவு தோன்றியது "she will be alright" என ஆதரவாய் ஸ்டீவின் தோளில் கை பதித்தான்

மீராவை எமர்ஜன்சி என்ட்ரன்ஸ் வழியே உள்ளே கொண்டு சென்றனர்... ஒரு கட்டத்திற்கு மேல் எத்தனை கெஞ்சியும் ஸ்டீவ் உள்ளே அனுமதிக்கபடவில்லை

செய்வதறியாமல் அவன் அமர்ந்திருக்க, அதே நேரம் மதுவிடமிருந்து அழைப்பு வந்தது

"ஹலோ... மது"

"ஸ்டீவ்...எங்க இருக்க? மீரா உன்னோட தான் இருக்காளா?"

"ம்... இங்க St.Michaels Hospitalல இருக்கோம் மீரா...சாரி மது... அது வந்து... " என அவன் தடுமாற, அவன் மனநிலையை புரிந்து கொண்ட மது

"ஒகே ஸ்டீவ் நாங்க ஹாஸ்பிடல்க்கு வந்துடறோம்" என அவள் பேசியை அணைக்கும் முன் "ஹாஸ்பிடல்ஆ? மீராக்கு என்னாச்சு?" என சதீஷ் கத்துவது ஸ்டீவின் காதில் கேட்டது

அந்த கணம் "சதீஷை எப்படி சமாளிக்க போகிறேன்" என்ற கவலை ஸ்டீவின் மனதில் உதித்தது... "ஆனால் இப்போது மீரா உடல்நிலை தான் முக்கியம், மற்ற எதையும் சந்திக்க தான் தயார்" என நினைத்தான்

அவனை நோக்கி வந்த போலீஸ் அதிகாரியை பார்த்ததும் எழுந்து நின்றான் ஸ்டீவ்

***********************************

"என்ன மது? மீராவுக்கு என்னாச்சு? கேக்கறதுக்கு மொதல்ல பதில் சொல்லு" என்றான் சதீஷ் பதட்டமாய்

"தெரியல சதீஷ். போன்ல பேசற நேரம் நேர்ல போலாம்னு தான் நான் எதுவும் கேக்கல... டோண்ட் வொர்ரி சதீஷ்.... மீராவே தானே நமக்கு போன் பண்ணினா... பேச பேச லைன் கட் ஆய்டுச்சு... ஒண்ணும் ஆகாது... " என்றாள் மது, தன் மனதில் இருந்த பதட்டத்தை மறைத்தவாறே

அதற்கு மேல் எதுவும் பேசக்கூட தைரியம் அற்றவனாய் மௌனமாய் வந்தான் சதீஷ்

************************************

ஸ்டீவை பார்த்ததும் அத்தனை நேரம் இருந்த பதட்டம் பயம் எல்லாமும் கோபமாய் உருவெடுக்க "டேய்...என்ன பண்ண... என்ன பண்ணின மீராவ...சொல்லு" என அவன் சட்டையை பற்றி உலுக்கினான் சதீஷ்

"சதீஷ்...நான்..." என ஸ்டீவ் தடுமாற

"சதீஷ்... ப்ளீஸ்...சீன் கிரியேட் பண்ணாத...ப்ளீஸ் அவன விடு... மொதல்ல மீராவ பாக்கலாம் வா" என மீராவின் பெயரை சொல்லி சதீஷை திசை திரும்ப முயன்றாள் மது

அவள் எதிர்பார்த்தது போலவே மீராவை பார்க்கும் ஆவலில் அவன் பிடி தளர்ந்தது

அதற்குள் "இல்ல மது...மீராவை இப்ப பாக்க விட மாட்டேங்கறாங்க..." என்றான் ஸ்டீவ் தயக்கமாய், சொல்லும் போதே அவன் கண்கள் பனித்தது

"பாக்க விடலையா... என்னாச்சு... சொல்லு... மீராவுக்கு என்னாச்சு" என மீண்டும் சீறினான் சதீஷ்

"சதீஷ்... ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இரு...எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க" என அவனை அடக்கியவள் "அந்த பக்கம் போலாம்... " என சற்று நடமாட்டம் குறைவாய் இருந்த வெய்டிங் ஏரியாவிற்கு இருவரையும் அழைத்து சென்றவள் "ம்...சொல்லு ஸ்டீவ் என்னாச்சு?" என்றாள்

"அது... மீரா... வழில போயிட்டு இருந்தப்ப... யாரோ ரெண்டு muggers (பிக் பாக்கெட்காரர்கள்) அவ பேக்கை snatch பண்ண பாத்து இருக்காங்க... இவ குடுக்கல போல இருக்கு... defend பண்ணி இருக்கா..." என்றவன், அந்த நேரத்தில் எத்தனை பயந்திருப்பாள் என்ற நினைவில் மனம் வேதனையுற பேச இயலாமல் நிறுத்தினான்

"மீரா உன்கூட தானே இருந்தா... இது நடந்தப்ப நீ என்ன பண்ணிட்டு இருந்த" என முறைத்தான் சதீஷ்

இந்த கேள்வியை எதிர்பார்த்து இருந்தபோதும் தங்களுக்குள் நடந்த விவாதம் பற்றி கூற தயங்கியவனாய் மௌனம் காத்தான் ஸ்டீவ்

"ஸ்டீவ்..." என அதட்டலுடன் அவன் அருகே செல்ல முயன்ற சதீஷை தடுத்தாள் மது "இரு சதீஷ் அவன் சொல்லட்டும்...சொல்லு ஸ்டீவ்... நீ எங்க போன"

"அது... நான்...கான்செர்ட் ஹால்ல தான் இருந்தேன்... " என்றான்

"மீரா ஏன் அங்கிருந்து கிளம்பினா?" மதுவே கேட்டாள் சதீஷ் கேட்கும் முன்

விசாரணை கைதி போல் தான் நடத்தப்படுவது வேதனை தந்தபோதும், தன் மீதுள்ள தவறு மனதை உறுத்த "அது... ஒரு சின்ன arguement ...நான்..." என ஸ்டீவ் மேலே கூறும் முன் சதீஷின் கை ஸ்டீவின் கன்னத்தில் பதிந்து இருந்தது

இப்படி ஒரு தாக்குதலை எதிர்பாராத ஸ்டீவும் மதுவும் அதிர்ச்சியில் நின்றனர். மீண்டும் சதீஷ் ஸ்டீவை தாக்க முனைய "ப்ளீஸ் சதீஷ் நான் சொல்றத கொஞ்சம் கேளு" என தடுத்தாள் மது

"இல்ல மது... எனக்கு தெரியும்... எனக்கு நல்லாவே தெரியும்... ஸ்டீவ் தான் நிச்சியமா ஏதோ செஞ்சுருப்பான்னு... இவன" என மீண்டும் கை ஒங்க "கொஞ்சம் பொறுமையா இரு சதீஷ்... மீராவுக்கு என்னாச்சுனு தெரிஞ்சுக்கறது இப்ப முக்கியம்" என்றாள் மது

"சொல்லு ஸ்டீவ்... அப்புறம் என்ன நடந்தது...நீ அங்க இல்லைனா உன்கிட்ட இதெல்லாம் யார் சொன்னது... மீராவா?" என மது கேட்க, மது கூட தன்னை நம்பாமல் குற்றவாளி போல் நடத்துவது ஸ்டீவை வேதனைப்படுத்தியது

"இல்ல...Officer (போலீஸ்) தான் சொன்னாரு...அது... மீரா 'ஹெல்ப்'னு கத்தினதும் அந்த திருடன் பாக்கெட் நைப் (கத்தி) காட்டி இருக்கான்..." எனவும் "ஐயோ... கத்தியா... Is Meera alright? சொல்லு ஸ்டீவ் ப்ளீஸ்" என்றான் சதீஷ் மற்றதெல்லாம் மறந்து

"கத்திய பாத்து மீரா பயந்து சத்தம் போடவும் அந்த திருடன் மீராவை கீழ தள்ள முயற்சி செஞ்சப்ப அவன் கைல இருந்த கத்தி மீரா நெத்தில பட்டிருக்கு...நல்ல வேளை ஆழமா காயம் படல.. ப்ளட் லாஸ் தான் கொஞ்சம்...." என அவளை ரத்தம் வழிய பார்த்த நினைவில் ஒரு கணம் பேச இயலாமல் நின்றவன் மீண்டும் தொடர்ந்தான்

"டாக்டர் ஆபத்து இல்லை சரி ஆய்டும்னு சொன்னாரு... ஆனா டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு பாக்க விடல இன்னும்... மீராவுக்கு எதுவும் ஆகாது சதீஷ்... ஐ அம் சாரி சதீஷ்... நான் வேணும்னு எதுவும் செய்யல... சாரி" என்றவன் அதற்கு மேல் என்ன சொல்வது என தெரியாமல் மௌனமானான் ஸ்டீவ்

சற்று நேரம் அங்கு நிசப்தம் நிலவியது

"மீரா சின்ன வலி கூட தாங்க மாட்டா மது...கத்தி பட்டு... ச்சே... எப்படி... " பேச இயலாமல் தடுமாறினான் சதீஷ், கண்ணில் பெருகிய நீரை மறைக்க எழுந்து ஜன்னல் பக்கம் சென்று நின்றான்

இந்த நிலைக்கு தானும் ஒரு வகையில் காரணம் என்ற குற்ற உணர்வு ஸ்டீவை கொன்றது. அந்த நினைவில் சதீஷை சமாதானம் செய்யும் எண்ணத்துடன் அவனருகே சென்றவன் "சதீஷ்... "என அவன் தோள் தொட "கெட் லாஸ்ட்" என்றான் சதீஷ் கோபமாய்

"சதீஷ் ப்ளீஸ்..."

"மொதல்ல இங்கிருந்து போய்டு... இனி உனக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல... ஜஸ்ட் கெட் லாஸ்ட்... இனி மீராவோட நீ பேச முயற்சி செய்யறதை நான் பாத்தா you will be in trouble... get lost this minute" என மிரட்டல் போல் சதீஷ் கூற

"சதீஷ்..ப்ளீஸ்... என்மேல..."

"உன்மேல தப்பா இல்லையானு எந்த விளக்கமும் எனக்கு தேவை இல்ல... போய்டு... என்னை மிருகமாக்காத போ" என்றான் சதீஷ், அவன் முகத்தை கூட பார்க்க விருப்பம் அற்றவன் போல் வேறு புறம் திரும்பி

"மீரா கண் முழிச்சதும் பாத்துட்டு போறேன்" என்றான் ஸ்டீவ் தீர்மானித்தவன் போல்

"தேவை இல்ல.... அவள பாத்துக்க எனக்கு தெரியும்..."

"பாத்ததும் போய்டறேன்..." என்றான் ஸ்டீவ் மீண்டும்

"சொல்றது காதுல விழலயா... நீ அவள பாக்கறது அவசியம் இல்ல..." என்ற சதீஷ், அதோடு நில்லாமல் ஸ்டீவை வெளியே செல்லும் பாதை நோக்கி இழுக்க முயல அது வரை பொறுமையாய் இருந்த ஸ்டீவ் சதீஷின் கையை கோபமாய் உதறினான்

"அதை சொல்ல நீ யாரு... அவளுக்கு கார்டியனா?" என ஸ்டீவ் கோபமாய் கேட்க

"ஆமா கார்டியன் தான்... இப்ப போறியா?"

"முடியாது... மீரா சொல்லட்டும்... அப்ப போறேன்.."

"ஒகே... வேற வழி இல்ல... அவளை நீ Harass(eve-teasing) பண்றேன்னு நான் போலீஸ் கம்ப்ளைன்ட் பண்றேன்... அப்ப போலீஸ் மரியாதையோட நீ இங்க இருந்து போலாம்" என்றான் மிரட்டலாய்

"பண்ணு... ஐ டோண்ட் கேர்... மீரா யாருக்கு எதிரா சாட்சி சொல்றானு பாக்கலாம்" என்றான் ஸ்டீவ் தானும் சளைக்காமல்

சற்று முன் இருவரும் வேதனையில் உருகி நின்றதென்ன, இப்போது மீண்டும் பழைய படி போட்டியில் சண்டை போடுவதென்ன என சலித்தாள் மது

"Will you both please stop it? கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம இந்த நேரத்துல கூட ரெண்டு பேரும்... ச்சே... " என மது கோபமாய் இருவரையும் பார்க்க

"இல்ல மது அவன் தானே..." என ஸ்டீவ் தன் பாக்க நியாயத்தை கூற முயல்பவன் போல் ஆரம்பிக்க

"போதும் ஸ்டீவ்...ச்சே.. " என கோபத்தில் நின்றவள், ஏதோ நினைத்தது போல் "ஸ்டீவ்...நீ கிளம்பு மொதல்ல... " எனவும்

"மது..நீ கூட..."

"இல்ல ஸ்டீவ்... இந்த நேரத்துல நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கறது சரியா தோணல... மீரா கண் முழிக்கரப்பவும் அவ முன்னாடி இதையே தான் செய்வீங்க ரெண்டு பேரும்... அது நல்லதில்ல... நீ கிளம்பு ஸ்டீவ்" என்றாள் மது தீர்மானம் போல்

"மது...நான்..."

"இல்ல ஸ்டீவ்... இப்ப மீராவோட ஹெல்த் தான் முக்கியம்... மத்ததெல்லாம் அப்புறம் பாக்கலாம்... நான் சொல்றத கேக்க மாட்டயா... கிளம்பு ப்ளீஸ்..." என மது கூற, அதற்கு மேல் மறுத்து பேச இயலாமல், அங்கிருந்து செல்லவும் மனமில்லாமல் பேசாமல் நின்றான்

"ஸ்டீவ்..." என மது எதோ சொல்ல வர, ஸ்டீவ் அவளை விட்டு சதீஷ் அருகில் சென்று நின்றான். சதீஷ் அங்கு ஸ்டீவ் நிற்பதையே பொருட்படுத்தாதவன் போல் நின்றிருந்தான்

"இங்க பாரு சதீஷ், நம்ம பிரச்சன இப்ப வேண்டாம்... மீரா கண் முழிச்சதும் பாத்துட்டு உடனே போய்டறேன்... ஐ ப்ராமிஸ்... பேசக்கூட மாட்டேன்... " அனுமதியா இல்லை தீர்மானமா என கூற இயலாதபடி ஸ்டீவ் பேச, சதீஷ் பதில் ஏதும் கூறாமல் நகர்ந்தான்

மீண்டும் சண்டை போடாமல் இருந்ததே போதுமென நிம்மதியானாள் மது

அதே நேரம் "Who is with patient Meera Rangarajan?" என குரல் கேட்க மூவரும் விரைந்து சென்றனர்

உணர்வின்றி உனைகாண
உள்ளமெல்லாம் பதைத்ததடி
உதிரம்பெருக கண்டநொடி
உயிரும்தான் போனதடி 
உனக்குள் நானிருந்தால்
உண்மையை உரக்கசொல்
உரிமையை பறைசாற்ற
உன்னிடம்இதை கேட்கவில்லை
உணர்வற்று தவிக்கும்இதயத்திற்கு
உயிரூட்டவே கேட்கிறேன்!!!

இனி...

அடுத்த பகுதி படிக்க

(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)

Thursday, March 10, 2011

அப்பாவியை கலாய்ப்போர் சங்கம் IN காபி வித் மைண்ட்வாய்ஸ்.. :))
முன் குறிப்பு:
இந்த பதிவு சிரிக்க மட்டும், யாராச்சும் சீரியஸ் ஆனா, நான் அதை விட சீரியஸ் ஆய்டுவேன், ஆமா சொல்லிட்டேன்...:)))

டொன் டொன் டோடைன்....டொன் டொன் டோடைன்....டொன் டொன் டோடைன்....(ஓபனிங் மீசிக்...)

மைண்ட்வாய்ஸ் என்ட்ரி, எல்லா கேமராவும் மைண்ட்வாய்ஸ் பக்கம் ஜூம் ஆகுது... மைண்ட்வாய்ஸை க்ளோஸ்-அப்பில் பார்த்த கேமராமேன் மயங்கி விழ தண்ணி தொளிச்சு அவரை எழுப்பறாங்க...

ஹாய் ஹாய் ஹாய்... நான் தான் உங்கள் மைண்ட்வாய்ஸ்... வணக்கம் அண்ட் வெல்கம் டூ உங்கள் அபிமான காபி வித் மைண்ட்வாய்ஸ். என்னை பத்தி இங்க வர்ற எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும். அதுக்கு மேல மறுபடி சொல்லி மொக்கை போட்டு உங்கள போர் அடிக்க நான் அப்பாவி இல்லையே...

(மொத்த ஆடியன்ஸ்'ம் சத்தமாக சிரிப்பு)

ஒகே... ப்ரோக்ராம்க்கு போலாம்... இன்னிக்கி நம்ம ப்ரோக்ராம்ல கெஸ்ட்டா வர போறவங்க அஞ்சு பேரு... என்னை போலவே இந்த அஞ்சு பேரும் உங்களுக்கு பரிச்சயம் ஆனவங்க தான்... உலகமே அப்பாவியை கலாய்க்கும் என்பது உண்மை தான்னாலும்.... (அதற்குள் ஆடியன்ஸ் மறுபடியும் சத்தமா சிரிப்பு)

நன்றி நன்றி (னு தலை வணங்குது மைண்ட்வாய்ஸ்) எங்க விட்டோம்...ம்ம்... உலகமே அப்பாவியை கலாய்க்கும் என்பது உண்மை தான்னாலும், இவங்க அஞ்சு பேரு அதை ஒரு சமுதாய கடமையா நெனச்சு செஞ்சுட்டு வராங்க... அப்பாவியை கலாய்க்கும் எல்லார் பத்தியும் சமீபத்துல நடத்தின புள்ளிவிவர கணக்குப்படி இந்த அஞ்சு பேர் டாப் அஞ்சு இடத்தை பிடிச்சு இருக்காங்க... அவங்கள உங்கள் சார்பாவும் கௌரவிக்கும் விதமாத்தான் இந்த சிறப்பு காபி வித் மைண்ட்வாய்ஸ்... உங்கள போலவே நானும் அவங்கள சந்திக்க ஆர்வமா இருக்கேன்... (கொஞ்சம் "நீயா நானா" கோபிநாத் சாயல் வருதோ...:)

இதோ... (என மைண்ட்வாய்ஸ் பின் மேடை நோக்கி கை காட்ட.... என்னமோ சந்திராயன்ல இருந்து எறங்கற ரேஞ்சுக்கு அஞ்சு பேரு கைய அசைச்சுட்டு உள்ள என்ட்ரி குடுக்கறாங்க...)

எல்லாருக்கும் இத்து போன ஒரு பொக்கேவை குடுத்து வரவேற்கிறது மைண்ட்வாய்ஸ்...

வாங்க வாங்க வணக்கம்... எல்.கே, தக்குடு, ப்ரியா, அனாமிகா, வாசகன்... நீங்க அஞ்சு பேரும் வந்ததுல ரெம்ப சந்தோஷம்

அஞ்சு பேரும் கோரசாக: எங்களுக்கும் ரெம்ப ரெம்ப சந்தோஷம்

மைண்ட்வாய்ஸ் : "ஒகே ... உக்காருங்க..."

அனாமிகா: "எங்க உக்காரணும்?" (மிரட்டல் குரலில்)

மைண்ட்வாய்ஸ் : "இந்த சோபால தான் அனாமிகா" (கொஞ்சம் பயந்துட்டே சொல்லுது மைண்ட்வாய்ஸ்)

அனாமிகா: "ஏய்... லூசா நீ? இதை போய் சோபானு சொல்றியே... பாதி சோ னு வேணா சொல்லு..."

மைண்ட்வாய்ஸ் : (மனசுக்குள்) ஸ்ஸ்ஸ்பப்பா...இப்பவே கண்ண கட்டுதே...

ப்ரியா : "மைண்ட்வாய்ஸ் அவர்களே, என் தங்கை கேட்ட கேள்விக்கென்ன பதில்?"

மைண்ட்வாய்ஸ் : (மனசுக்குள்) ஹ்ம்ம்...அக்காவுக்கு தங்கச்சியே பெட்டர்... எப்படி சமாளிக்க போறனோ... அப்பாவி தங்கமணியே துணை.. (என கண்ண மூடி ஒரு நிமிஷம் கும்பிடுது மைண்ட்வாய்ஸ்)

வாசகன்: "இருங்க அம்மணிகளா... சொல்லுங்க மைண்ட்வாய்ஸ்... இந்த சோபால எப்படி?"

மைண்ட்வாய்ஸ் ஏதோ சொல்ல வர அதற்குள் எல்.கே இடைமறிக்கிறார்...

"தோழர்களே, நம்ம சங்கத்தோட மிசன் ஸ்டேட்மன்டே அப்பாவிய கலாய்க்கரத பத்தி பேசி சந்தோசப்படறது தான்... அதோட இந்த நிகழ்ச்சி மூலமா நம்ம சங்கத்துக்கு இன்னும் நாலு பேரை சேர்க்கறதும்... இடைல இந்த சோபா பிரச்சனைய பெருசுப்படுத்துறது சரியா படல... நான் சொல்றது...(என நிறுத்தி எல்.கே ஆழமாய் ஒரு ஜட்ஜ்மென்ட் லுக்கு விட...) அதற்குள்,

தக்குடு : "அதான் நாட்டாமை தீர்ப்பு சொல்லியாச்சில்ல... உக்காச்சுகுங்க எல்லாரும்... ம்ம்.. " (என சொல்லிவிட்டு நைசாய் எல்லாருக்கும் முன் நல்ல இடம் பிடித்து உட்காருகிறார் தக்குடு)

மைண்ட்வாய்ஸ்: "என்ன சாப்பிடறீங்க எல்லாரும்? காபி ஆர் டீ?" (என உபசரிக்க)

அனாமிகா: "அதான் காபி வித் மைண்ட்வாய்ஸ்னு சொல்லியாச்சில்ல... பிறகென்ன "ஆர் டீ" னு ஒரு இடை சொருகல்" (என அனாமி வழக்கம் போல் சுனாமி அவதாரம் எடுக்க மைண்ட்வாய்ஸ் நாலு அடி தள்ளி நிற்கிறது)

ப்ரியா : "இரு கண்ணு. மைண்ட்வாய்ஸ் பாவம் முதல் நிகழ்ச்சி இல்ல... மிரண்டு போய் நிக்குது... ஒண்ணும் வெவரம் தெரியல பாவம்... எல்லாரும் என்ற செல்ல தங்கச்சி உன்னை மாதிரியே அறிவா இருக்க முடியுமா சொல்லு" (என சமாதானம் செய்கிறார்)

அதற்குள் எல்லாருக்கும் காபி கோப்பை வழங்கப்படுகிறது, அதை ஒலிம்பிக்ஸ் கோல்ட் மெடல் பரிசு கோப்பை ரேஞ்சுக்கு பீலிங்கோட வாங்குகிறார் தக்குடு

மைண்ட்வாய்ஸ்: "ஒகே ப்ரோக்ராம்க்கு போலாமா?" (என பவ்யமாய் கேட்க)

எல்.கே: "அப்போ இவ்ளோ நேரம் என்ன பண்ணினீங்க?" (மறுபடியும் ஒரு ஜட்ஜ்மென்ட் லுக்)

(டென்சனான) மைண்ட்வாய்ஸ்: "எல்.கே ஒரு விஷயம் சொல்லட்டுமா, கேள்வி கேக்கறது ரெம்ப சுலபம்..."

தக்குடு: "ஆனா பதில் சொல்றது ரெம்ப கஷ்டம், எங்களுக்கும் நல்லா தெரியும். ஏன் மைண்ட்வாய்ஸ் நீயும் இந்த அப்பாவி கூட சேந்து சேந்து டயலாக் எல்லாம் காப்பி அடிக்கற...ஹையோ ஹையோ..."

வாசகன்: "சரி சரி, அமைதி அமைதி, நிகழ்ச்சிய நடத்த விடுங்க கண்ணுகளா"

மைண்ட்வாய்ஸ்: "ப்ரொபசர் சார், ஐ லைக் இட்... " (என அவருக்கு கை குடுத்து நன்றி தெரிவித்த மைண்ட்வாய்ஸ்) முன்னாடி இருக்கற வெறும் சுவத்தை பாத்து "நிகழ்ச்சிக்கு போகலாமா நேயர்களே" னு கேக்க அதற்குள்

தக்குடு: "இரு இரு, இப்ப என்னத்துக்கு ஆள் இல்லாத கடைல டீ ஆத்தற மாதிரி வெறும் செவுத்த பாத்து பேசிண்டுருக்க"

மைண்ட்வாய்ஸ்: "அது சும்மா ஆடியன்ஸ் இருக்கற மாதிரி நாம கற்பனை பண்ணிக்கணும்"

தக்குடு: "அப்ப நடுநடுல சிரிக்கற சத்தம் எல்லாம் வருமே இந்த ப்ரோக்ராம்ல... அது எப்படி?"

மைண்ட்வாய்ஸ்: "அது எபக்ட் சேத்தறது தான்"

தக்குடு: "இந்த பொழப்புக்கு !@#$%^& ....." (என ஆரம்பிக்க மைண்ட்வாய்ஸ் எழுந்து ஓடாத குறை தான்)

அதற்குள் வாசகன் ஏதோ கேக்க வரார் "தக்குடு, எனக்கு ரெம்ப நாளாவே இதை பத்தி கேக்கணும்னு... அது என்ன இப்படி  !@#$%^&  சிம்பல்ஸ் எல்லாம்..."

தக்குடு பதில் சொல்வதற்குள் இடைமறித்த எல்.கே "அது வேற ஒண்ணும் இல்லைங்ண்ணா... என்ன எழுதறதுனு வார்த்தை கிடைக்காதப்ப இப்படி போட்டு விடறது தான். படிக்கறவங்க அவங்க கற்பனைக்கு தகுந்த மாதிரி பில் பண்ணிக்க வேண்டியது தான்" (தக்குடு முறைப்பதை இக்னோர் செய்கிறார் எல்.கே)

வாசகன்: "இதானா மேட்டர்...நான் கூட இந்த பின்நவீனத்துவம்னு ஏதோ சொல்றாங்களே...அதோன்னு நெனச்சுட்டேன்"

தக்குடு பதில் சொல்ல வருவதற்குள் மைண்ட்வாய்ஸ் டென்சனாய் "எச்சூஸ்மீ... இன்னைக்கி ப்ரோக்ராம் நடத்தலாமா வேண்டாமா?" என கேட்க, வாழ்வில் ஒரே முறை டிவியில் வரும் சான்ஸ் என நாலு மணி நேரம் மேக் அப் செஞ்சுட்டு வந்த ப்ரியா அக்கா டென்சன் ஆகிறார்

ப்ரியா: "தம்பிகளா வாழ்க்கைல பொறுமை முக்கியம்...அதுவும் மீடியால ரெம்ப ரெம்ப முக்கியம்..."

தக்குடு: "இப்ப எங்க பொறுமை போய்டும் அது நிச்சியம்... "

அங்கு இன்னொரு கலவரம் உருவாகும் நிலை புரிய... மைண்ட்வாய்ஸ் சுதாரித்து "வர்றவங்க வாங்க... நான் நிகழ்ச்சிய ஆரம்பிக்கறேன்" என அறிவிப்பு விட எல்லாரும் முதல் நாள் காலேஜ் போகும் ஜூனியர்ஸ் போல் மௌனமாய் அமர்கிறார்கள்

"ஒன்ஸ் அகேயன்...வணக்கம் அண்ட் வெல்கம் டு காபி வித் மைண்ட்வாய்ஸ்... இதுவரைக்கும் அறிமுகங்கள் எல்லாம் பாத்தோம்... இனி நிகழ்ச்சிக்கு போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன பிரேக்... மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மைண்ட்வாய்ஸ்"

டைரக்டர் கட் சொல்லும் வரை பொறுமையாய் இருந்த அனாமிகா "என்னது...அதுக்குள்ள பிரேக்ஆ? இதுக்கு அப்பாவி எழுதற 'ஜில்லுனு ஒரு கருமமே' பரவால்ல... " என புலம்புகிறார்

இது தான் சமயமென ப்ரியா அக்கா "அதாண்டி நான் சொல்றது...அவ என்ன தான் மொக்க போட்டாலும் ஜவ்வு இழுத்தாலும் அவ மாதிரி  வராது...." எனவும்

தக்குடு நடுவில் புகுகிறார் "ப்ரியா அக்கா, நான் உங்கள்ட்ட ஒரு ஸ்பெஷல் கோச்சிங் க்ளாஸ் எடுக்கணும்னு நெனச்சுண்டு இருக்கேன்... எப்படி இப்படி பாராட்ட மாதிரியே பல்பு குடுக்கறேள்...ச்சே... செம டேலன்ட் தான்"

அதற்குள் டைரக்டர் "ஸ்டார்ட் கேமரா - ஏக்சன்" சொல்ல எல்லாரும் அமைதி ஆகின்றனர்

"வணக்கம் அண்ட் வெல்கம் டு... " என வழக்கமான நீண்ட டயலாக் சொல்லி மூச்சு வாங்குது மைண்ட்வாய்ஸ்....

மைண்ட்வாய்ஸ்: "ஒகே தக்குடு நீங்க சொல்லுங்க மொதல்ல... இந்த டாப் அஞ்சு பேர்ல ஒருத்தரா நீங்க வந்ததை எப்படி பீல் பண்றீங்க"

தக்குடு: "அது...அது...ஒரு...ஒரு நல்ல பீலிங்... உதாரணம் சொல்லணும்னா..."

எல்.கே: "தக்குடு வேண்டாம்....உன் உதாரணம் பத்தி எனக்கு தெரியும் தம்பி" என எச்சரிக்க

தக்குடு: "இல்ல நான் சொல்லுவேன்" என அடம் பிடிக்கிறார் தக்குடு

வாசகன்: "விடுங்க எல்.கே, வளர்ற பிள்ள சொல்லிட்டு போகட்டும்" என சப்போர்ட் செய்கிறார் (பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல்)

தக்குடு: "அது என்னனு கேட்டேள்னா... சிம்பு நயன்தாரா பிரேக் அப் ஆனப்ப எல்லா பயலுவ மனசுலயும் 'இன்னொரு சான்ஸ் இருக்குடா மச்சி'னு ஒரு பீலிங் வந்தது பாருங்கோ....அப்ப ஒரு சந்தோஷம் வந்தது பாருங்கோ..." அதற்குள் இடைமறிக்கிறார் எல்.கே

எல்.கே: "ஒகே தம்பி, எங்களுக்கு புரிஞ்சு போச்சு... உன் பீலிங் நல்லாவே புரியுது..." என காப்பாற்றுகிறார் எல்லாரையும்

அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்த மைண்ட்வாய்ஸ் மெல்ல சுதாரித்து ப்ரியாவிடம் அதே கேள்வியை கேட்கிறார்

ப்ரியா அவசர அவசரமாய் மேக் அப் சரி பார்த்து விட்டு "ஹ்ம்ம்... க்கும்... " என தொண்டையை சரி செய்ய

தக்குடு "ப்ரியா அக்கா, பாட போறேளா... என்ன ராகம்... நம்ப நித்யஸ்ரீ இருக்காளே...அதான் ஜிமிக்கி எல்லாம் போட்டுண்டு... அப்புறம் லோலா...."

அதற்குள் வழக்கம் போல் எல்.கே என்ட்ரி "தக்குடு... அவங்களுக்கு நித்யஸ்ரீனு சொன்னாலே தெரியும்... "

அதற்குள் ப்ரியா அக்கா டென்ஷன் ஆகிறார் "கேமரா என் பக்கம் வர்றதே அபூர்வம்...அந்த நேரம் பாத்து, நடுநடுல நீங்க எல்லாம் பேசி கேமராவை உங்க பக்கம் இழுக்கறீங்க... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...நான் இதை..."

"கூல் அக்கா கூல்..." என வராங்க நம்ம அனாமி

"என்ன கூல், கம்பங்கூழா...இப்படி தான் எங்க ஊர் பக்கம்..." என வாசகன் சார் ஆரம்பிக்க

"சைலன்ஸ்..." என பொறுமை போய் கத்துகிறது மைண்ட்வாய்ஸ், எங்கும் நிசப்தம்

கொஞ்சம் டென்ஷன் குறைஞ்சதும் "இங்க பாருங்க...நான் யாரை கேள்வி கேக்கறனோ அவங்க தான் பதில் சொல்லணும்... வேற யாராச்சும் பேசினா... அப்புறம் உங்கள டிஸ்கோலிபை  பண்ணிடுவோம்... ம்ம்... ப்ரியா, நீங்க சொல்லுங்க..."

ப்ரியா: "நான்...எனக்கு... ரெம்ப ரெம்ப...ஹாப்பியா...சந்தோசமா... மகிழ்ச்சியா..."

மைண்ட்வாய்ஸ்: "யு சி ப்ரியா... எல்லாம் ஒரே அர்த்தம் தான்..."

ப்ரியா: "எஸ் எஸ்... ஆனா அவ்ளோ ட்ரிபிள் சந்தோஷம்னு சொல்ல வந்தேன்"

"ஓ...வெரி குட்... வெரி குட்...வெரி எக்ஸ்ப்ரசிவ்... " என மைண்ட்வாய்ஸ் சந்தோசத்துடன் இப்போ எல்.கே பக்கம் திரும்புச்சு

"சொல்லுங்க எல்.கே... ஹொவ் டூ யு பீல் டு பி ஹியர்?" என கேட்க

"ஏன் அதை தமிழ்ல கேக்க மாட்டீங்களா?" என எல்.கே கேட்க

"உங்கள அப்பாவி நக்கீரர்னு சொல்றது தப்பே இல்லைன்னு இப்ப தோணுது... சரி விடுங்க... பதில் சொல்லுங்க" என பெருமூச்சு விடுது மைண்ட்வாய்ஸ்

"அப்பாவிய கலாய்க்கறது சந்தோஷம் மட்டுமில்ல, சமுதாயத்துக்கு நான் செய்ய வேண்டிய கடமையும் கூடனு நான் நினைக்கிறேன்... எடுத்து சொன்னாதானே நல்லது எது கேட்டது எதுனு மக்களுக்கு புரியும்" என்கிறார் எல்.கே

மைண்ட்வாய்ஸ்: "நல்லா சொன்னீங்க எல்.கே... வாசகன் சார் நீங்க சொல்லுங்க... எப்படி இருக்கு இங்க இருக்கறது?"

வாசகன்: "அப்பாவிய கலாய்க்கரதுங்கறது விட, மாப்பிள்ளைக்கு சப்போர்ட் பண்றது தான் என் முக்கிய நோக்கம்... அதனால இங்க இருக்கறது ரெம்ப சந்தோஷம்"

மைண்ட்வாய்ஸ்: "நன்றி வாசகன் சார்... கடைசியா நம்ம..." (லேசான உதறலுடன்) "ம்...அ.. அனாமிகா... சொல்லுங்க அனாமிகா?" என பாவமாய் ஒரு லுக் விடுது மைண்ட்வாய்ஸ் (கூடவே அப்பாவி தங்கமணி துணைனு ஒரு வாட்டி சொல்லுது மைண்ட்வாய்ஸ் மனசுக்குள்ள)

"கேன் யு ரிப்பீட் தெ கொஸ்டின் ப்ளீஸ்?" என ஸ்டைலா ஒரு பார்வை பார்க்கிறார் சுனாமி, மன்னிக்கவும் அனாமி

மைண்ட்வாய்ஸ் அதுலயே பயந்து வேர்த்து வடிய "ம்... நீங்க இங்க இருக்கறத பத்தி என்ன பீல் பண்றீங்க?"

அனாமிகா: "ம்... பீல் பண்றதுக்கு என்ன... அப்படியே பறக்கற பீலிங் தான்...தக்குடு மாதிரி ஒரு உதாரணம் சொல்லணும்னா...." அதற்குள் "வேண்டாம் வேண்டாம்"னு பதறுது மைண்ட்வாய்ஸ்

ஆனா அனாமிகா ஒரு முறைப்பு காட்டியதும் "சொல்லும்மா நீ என்ன வேணா சொல்லு" னு சைலண்ட் ஆய்டுச்சு மைண்ட்வாய்ஸ்

"ம்... அதாவது...நான் சுட்ட குழி பணியாரம்... குழிலையே கருகி போய்டாம பொங்கும் காவேரியா வந்தா எப்படி இருக்கும்...அப்படி ஒரு சந்தோஷம்...ஏன்னா, அப்பாவிய கலாய்க்கறதுன்னா என்னை அண்டார்டிகாவுக்கு கூப்ட்டாலும் போவேன்... அவ்ளோ  ஏன், வேற Planetக்கு கூப்பிட்டாலும் போவேன்....ஹா ஹா ஹா" என அனாமிகா செட் அதிர சிரிக்க, கேமராமேன் இன்னொரு முறை மயக்கம் ஆகிறார்

மைண்ட்வாய்ஸ் (மனசுக்குள்) "வேற Planetல இருந்து கூப்பிடறதா? ஹ்ம்ம்.... இந்த Planetல இருந்து அனுப்ப எதுனா ஐடியா இருக்கானு நான் யோசிக்கறேன்"

அதற்குள் டைரக்டர் வந்து "ஸ்லாட் டைம் முடிஞ்சு போச்சு, மிச்சத்த அடுத்த வாரம் வெச்சுக்கலாம்" னு மைண்ட்வாய்ஸ் காதுல சொல்லிட்டு போறார்

"நேயர்களே... இந்த நிகழ்ச்சியில் இன்னும் நெறைய சுவாரஷ்யமான செக்மன்ட்டுகள் பாக்கி இருக்கின்றன... எல்லாத்தையும் இன்னைக்கே முடிக்கணும்னு தான் நினைச்சோம்...ஆனா..." என நிறுத்தி அஞ்சு பேரையும் ஒரு அர்த்த பார்வை பார்க்குது மைண்ட்வாய்ஸ்

மறுபடி கேமரா பக்கம் திரும்பி "இன்னும் அப்பாவி பதிவுகள் பற்றி இந்த அஞ்சு பேரின் கருத்து, Prank கால், சாரி & தேங்க்ஸ் எல்லாம் இருக்கு... அதை அடுத்த வாரம் பாப்போம்... அதுவரை விடுதலை பெறுவது... மன்னிக்கவும், விடை பெறுவது உங்கள் மைண்ட்வாய்ஸ்"

அஞ்சு பேரும்: "டாட்டா...பை பை" சொல்றாங்க, மறுபடியும் சந்திராயன்ல ஏற போற எபக்ட் தான்...:)

நிகழ்ச்சி முடிஞ்சு வந்து மைண்ட்வாய்ஸ் அப்பாவிகிட்ட சொன்ன வார்த்தை தான் எல்லாத்துக்கும் ஹைலைட் "அப்பாவி...உன்னை நான் எவ்வளவோ கிண்டல் பண்ணி இருக்கேன்...ஆனா இன்னிக்கி மனசுவிட்டு பாராட்ட போறேன்... அந்த அஞ்சு பேரையும் அரை மணி நேரம் வெச்சு சமாளிக்க முடியல என்னால... நீ எப்படி மாசகணக்கா... ஹ்ம்ம்..." என அப்பாவியின் கைய புடிச்சுட்டு ரெம்ப பீல் பண்ணுச்சு மைண்ட்வாய்ஸ்

அதுக்கு அப்பாவியின் பதில், மர்மமாய் ஒரு புன்னகை மட்டுமே...:)))

என்ன பிரெண்ட்ஸ், இந்த போஸ்ட் என்ஜாய் பண்ணினீங்களா? இன்னும் ஒரு எபிசொட் போடலாமா வேண்டாமாங்கறதை நீங்களும் / அந்த அஞ்சு பேரும் சொல்ற ரெஸ்பான்ஸ் பொறுத்து முடிவு செய்றேன்...:-)))

ஹாய் எல்.கே, தக்குடு, வாசகன், ப்ரியா & அனாமிகா,
உங்ககிட்ட சொல்லாம, பர்மிசன் இல்லாமையே உங்களை கலாய்ச்சு(என்னையும் கொஞ்சம் கொஞ்சம் கலாய்ச்சுருக்கேன் - நோட் தி பாயிண்ட் யுவர் ஆனர்) இதை போட்டுட்டேன்... மன்னிச்சுக்கோங்க.... நீங்க டென்ஷன் ஆகாம இருந்தா சந்தோசப்படுவேன்... ஆனா டென்ஷன் ஆனீங்கன்னா ரெம்ப ரெம்ப சந்தோசப்படுவேன்... You Know Why? சிலரை டென்ஷன் படுத்தி பாக்கறதுல ஒரு தனி திருப்தி இருக்கும், அந்த லிஸ்ட்ல நீங்களும் உண்டு... ஹா ஹா ஹா....:))))))
இப்படிக்கு,
உங்கள் பாசமலர் அப்பாவி

ஒகே மீ எஸ்கேப்..:)))

Tuesday, March 08, 2011

ஜில்லுன்னு ஒரு காதல்... (பகுதி 11)
பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8    பகுதி 9    பகுதி 10

"Meera...that was so rude" என்றான் ஸ்டீவ், அவள் பேசியது தவறு என மனதில் தோன்றியதை தனிச்சையாய் கூறுபவன் போல்

ஆனால் தான் இயல்பாய் கூறிய அந்த ஒரு வார்த்தை தன் மொத்த கனவையும் குலைக்க போவதை ஸ்டீவ் அப்போது அறிந்திருக்கவில்லை

"You didn't say that when he talked about my country...men for men... right?" என அவள் கோபம் இப்போது ஸ்டீவின் மீது திரும்பியது

விவாதம் போன திசையை ரசிக்காத எட்வர்ட் "hey guys cool... Mee-raa I didn't mean it that way" எனவும், அவன் பேச்சே காதில் விழாதவள் போல் எழுந்து நடக்க ஆரம்பித்தாள் மீரா

இப்போது அவள் கோபம் எட்வர்டின் மீது விட ஸ்டீவின் மேல் அதிகமாய் இருந்தது. எப்படி அவன் தனக்கு எதிராய் பேசலாம் என்பதே கோபத்திற்கு மேலும் தூபமிட்டது

அவள் பின்னோடு வந்த ஸ்டீவ் "மீரா என்ன இது? ஏன் இப்படி ஓவர் ரியாக்ட் பண்ற... தட்ஸ் வாஸ்...." மறுபடியும் rude என்ற வார்த்தையை பிரயோகித்து அவள் கோபத்தை அதிகரிக்க வேண்டாம் என்ற எண்ணத்துடன் நிறுத்தினான்

"ஆமாம் நான் பேசினா அது rude ... அவன் சொன்னப்ப உனக்கு அது தோணலையா... ஏன் தோணனும்... அவன் பேசினது உன் நாட்டை பத்தி இல்லையே" என்றாள், கிட்டத்தட்ட கத்தினாள் எனலாம்

ஓரிருவர் நின்று வேடிக்கை பார்க்க, அப்போது தான் 'தான்' குரல் உயர்த்தியதை உணர்ந்தவள் போல் மீரா கான்செர்ட் நடக்கும் இடத்தை விட்டு வெளியேறினாள்

விடாமல் அவளை தொடர்ந்து வந்த ஸ்டீவ், ஏன் இப்படி வீண் பிடிவாதம் செய்கிறாள் என கோபம் வர, அவள் கைகளை பற்றி நிறுத்தியவன் "என்ன மீரா இது? ஏன் இப்படி ஷைல்டிஸா பிஹேவ் பண்ற" என்றான்

"நான் எப்படி பிஹேவ் பண்ணனும்னு நீ சொல்லி தர வேண்டிய அவசியம் இல்ல ஸ்டீவ்" என்றாள் அவன் பற்றியிருந்த தன் கையை விலக்கிக்கொள்ள முயன்றவாறே, ஆனால் அவன் பிடியை விடுவதாய் இல்லை

"மீரா... அவன் சாதாரணமாத்தான் கேட்டான்... நீ தான் ஓவர் ரியாக்ட் பண்ணின... கொஞ்சம் நான் சொல்றத..." அவனை அதற்கு மேல் மீரா பேச விடவில்லை

"என்னோட நாட்டை ஒருத்தன் தப்பா பேசறதை எதிர்த்தா அது ஓவர் ரியாக்ட் பண்றதா அர்த்தமா? ஹும்... நீ மட்டும் இல்ல நெறைய பேர் இப்படி தான்... இப்படி பேசினா சீன் போடற, நல்லவ வேஷம் போடறேன்னு சொல்றீங்க... ஆமா... நான் ஓவர் ரியாக்ட் தான் பண்ணினேன்... நான் அப்படி தான்... ஆனா அவன் பேசினது உனக்கு சரின்னு தோணுது இல்ல... அதான் சொல்றேன் எவ்ளோ முன்னேறின நாட்டுல இருந்தாலும் இந்த மேல்-ஷாவனிசம் மாறாது"

"What the hell is this to do with Male-Chauvinism?" என கோபமாய் கூறியவன், அவள் முகம் போன போக்கில் மனம் வேதனையுற "மீரா, திரும்பவும் நீ ஓவரா ரியாக்ட் பண்ற... நீ பேசினா மாதிரி அவன் பேசி இருந்தா உன் பக்கம் தான் நான் பேசி இருப்பேன்" என்றான், அவளை சமாதானம் செய்யும் எண்ணத்துடன் மெல்ல அவள் கைகளை பற்றி தன் கைக்குள் பதித்தவாறே

சட்டென அவன் கையை உதறியவள் "நிச்சியம் சதீஷ் இருந்திருந்தா இப்படி பேசி இருக்க மாட்டான்" என்றாள், வேண்டுமென்றே அவனை புண்படுத்தும் நோக்கத்துடன்

முன் சதீஷும் ஸ்டீவும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என்பதற்காகவே பலமுறை இருவரையும் சமாளித்து பேசியவள் இப்போது தன் கோபத்தை தணித்துக்கொள்ள அதையே வேறு விதமாய் கையாண்டாள், இது தான் கோபம் கண்ணை மறைக்கும் என்பது போலும்

அவள் நினைத்தது போலவே அது ஸ்டீவை புண்படுத்தியது, அதுமட்டுமின்றி அவன் கோபத்தை பன்மடங்காக்கியது. சதீஷின் மேல் மனதில் கனன்று கொண்டிருந்த கோபம் மொத்தமும் வெடித்து கிளம்பியது

சாதாரணமாய் சதீசோடு ஒப்பீடு செய்வதையே விரும்பாதவன் இன்று இப்படி ஒரு தருணத்தில் மீரா இவ்வாறு பேசியதில் ரௌத்திரமானான் ஸ்டீவ். கோபம் அவன் கண்ணையும் மறைத்தது

"ஏய்...how dare you compare me with that idiot Sathish?" எனவும்

"அவசியமில்லாம அவன பத்தி பேசாத..." என விரல் சுட்டி மிரட்டுவது போல் கோபமாய் பேசினாள் மீரா

தான் உயிராய் நேசிப்பவள் இன்னொருவனை தாங்கி பேசுவதை பொறுத்துக்கொள்ள இயலாமல் அவளை வேதனைப்படுத்துகிறோம் என்பது கூட புரிந்துக்கொள்ள கூடிய மனநிலையில் இல்லாத ஸ்டீவ், அவள் மிரட்டலாய் சுட்டிய விரலை நசுக்கி விடுபவன் போல் அழுத்தினான்

"அப்படி தான் பேசுவேன்... அவன் ஒரு இடியட், ஸ்டுபிட்..."

"ஸ்டாப் இட் ஸ்டீவ்... இப்ப பிரச்சன உனக்கும் எனக்கும் தான்"

"அதே தான் நானும் சொல்றேன்... Then why the hell did you compare me with that loser?" என்றான் அவளை குற்றம் சாட்டும் குரலில்

"நீ தான் அப்படி பேச வெச்ச...கைய விடு ஸ்டீவ், வலிக்குது" என்றவள், அவன் முரட்டுத்தனமாய் தன் கையை அழுத்தி கொண்டிருந்ததில் தன்னையும் அறியாமல் வலியில் கண்ணில் நீர் துளிர்க்க, கையை விலக்கிக்கொள்ள முயன்றாள்

அவள் கண்ணில் நீரை பார்த்ததும் சுயநினைவுக்கு வந்தான் ஸ்டீவ். அவன் நகம் பதிந்து அழுத்தியதில் கன்றி சிவந்திருந்த அவள் விரல்களை விட்டவன், அவளை துன்புறுத்திய தன் செய்கையில் தன் மீதே கோபம் கொண்டான்

சில நொடிகள் இருவரும் ஒன்றும் பேசவில்லை. தங்கள் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி போல் மௌனமாய் இருந்தனர்

அதன் பின் ஸ்டீவ் தான் மௌனத்தை உடைத்தான். "மீரா... " என மெல்ல அவளை நெருங்கி அவள் கைகளை பற்ற முயல, அவள் விலகி நின்றாள்

அவளின் அந்த செய்கை அவனை மிகவும் வேதனைப்படுத்தியது. ஏதோ பலகாலம் காதலர்களாய் சேர்ந்தே இருந்து இன்று அவள் விலகி நிற்பது போல் மனம் துவண்டான்

"மீரா நான்..." என்றவனை பேசாதே என்பது போல் கை உயர்த்தியவள் விலகி நடக்க துவங்கினாள்

ஒரு கணம் செய்வதறியாது நின்றவன் விரைந்து அவள் முன் சென்று மறிப்பது போல் நின்றான். அவனை தாண்டி அவள் நடக்க முயல "என்ன மீரா இது? உன் மேல தப்பிருந்தாலும் உன் பக்கம் பேசணும்னு சொல்றியா... எனக்கு அப்படி வேஷம் போடத்தெரியாது மீரா" என்றான் அமைதியாய், தன் செயலை நியாயப்படுத்த முயல்பவன் போல்

"அப்படினா இப்பவும் என் மேல தான் தப்புன்னு சொல்ற, இல்லையா ஸ்டீவ்?" என்றவளின் குரலில் கோபத்தைவிட "எப்படி நீ இப்படி செய்யலாம்" என்ற வேதனை அதிகமாய் இருந்தது. இதற்கு அவள் கோபமாய் பேசுவதே மேல் என நினைத்தான் ஸ்டீவ்

அந்த வேதனையை போக்க முயல்பவன் போல் அவளை நெருங்கி நின்றவன் "அதில்ல மீரா... அவன் சாதாரணமா அந்த படத்த பத்தி தான் கேட்டான்... நீ பெர்சனலா அட்டாக் பண்ணி அப்படி பேசினது...."

"தப்பு தான், இல்ல?...என் தப்பு தான் இல்லையா?" என அவனை பேசவிடாமல் இடைமறித்தாள் "அவன் என் உணர்வுகள ஹர்ட் பண்ணினது உனக்கு பெருசா தெரியல... நான் பேசினது தான் தப்பு, இல்ல?" என்றாள் தன் பக்க நியாயத்தை உரைப்பவள் போல்

இது இதோடு முடியும் விவாதம் அல்ல என உணர்ந்த ஸ்டீவ், அவளோடு சண்டை போட மனம் இல்லாதவனாய் "லீவ் இட் மீரா... அவனுக்காக நாம ஏன் சண்டை போடணும்... Lets talk something else" என்றான் பெருமூச்சுடன்

"அப்படி விட முடியாது ஸ்டீவ். அவன் அந்த எட்வர்ட் he is nobody to me... I don't care what he does.... நீ என் பிரெண்ட்... நீ எப்படி என்னை ஹர்ட் பண்ணலாம்? So that means I'm nothing to you...அப்படித்தானே" என்றாள் கோபமாய்

என்ன வார்த்தை சொல்லிவிட்டாள் என வேதனை மிக "You're everything to me Meera" என சொல்லத்துடித்த நாவை, இது அதற்கான தருணமல்ல என அடக்கினான் ஸ்டீவ். முதலில் இந்த பிரச்சனையை முடித்து, அவள் உணர்வுகளை தான் மதிப்பவன் என்பதை அவளை உணரசெய்யவேண்டுமென முனைந்தான்

"என்ன பேசற மீரா? you know what you mean to me... " என்றவன் அதற்கு மேல் என்ன பேசுவதென தெரியாமல் ஒரு கணம் திகைத்தவன்

 "மீரா... just listen... உன்னோட உணர்வுகள மதிக்கக்கூடாதுனு நான் நினைக்கல... நீ அப்படி பேசினப்ப தப்புன்னு மனசுக்கு பட்டதை சொன்னேன்... அது உன்னை இவ்ளோ பாதிக்கும் எனக்கு தெரியல. I rest my case with this" என்றான் இதற்கு மேல் இது விசயமாய் சொல்ல எதுவும் இல்லை என்பது போல்

மீண்டும் மீண்டும் தன்னையே குற்றம் சாட்டியது போல் அவன் பேசியது அவளை வேதனைப்படுத்தியது. தான் பேசியது தவறென்றால் எட்வர்ட் பேசியது மட்டும் எப்படி சரியாகும்

"உன் நாடு மொத்தமும் சேரி தானா" என அவன் கேட்க, அது தன்னை எத்தனை பாதித்தது என்பதை அவனுக்கு புரிய வைக்கும் நோக்கத்துடன் அவன் நாட்டை தான் விமர்சித்தது எந்த வகையில் தவறாகும் என நினைத்தாள்

நம் வீட்டை பற்றியோ, நம் தாயை பற்றியோ பேசினால் வரும் கோபம் இயல்பானது என்றால், நம் நாட்டை பற்றி விமர்சிப்பதை கண்டு எழும் கோபம் மட்டும் ஏன் வேறு விதமாய் விமர்சிக்கப்படுகிறது என கேள்வி தோன்றியது மீராவின் மனதில்

எட்வர்ட் விமர்சிக்கும் எண்ணத்துடன் கேட்கவில்லை என்றாலும் அவன் கேட்ட விதம் தவறு தானே, அறிந்து கொள்ளும் ஆவல் என்பதை விட ஒருவிதமான ஏளனம் அவன் குரலில் ஒலித்ததே. அது தவறு தானே, அப்படியெனில் தன் கோபமும் சரி தான் என தன்னை தானே பரிசீலனை செய்து கொண்டாள் மீரா

எது எப்படி என்றாலும் சதீஷ் இருந்திருந்தால் நிச்சியம் என் பக்கம் தான் பேசி இருப்பான் என நினைத்தாள்

"என்ன சொன்ன?" என ஸ்டீவ் கோபமாய் கேட்க, அப்போது தான் வெறுமனே நினைக்கவில்லை, வாய் விட்டே சதீஷ் பற்றி கூறி இருக்கிறேன் என்பதை மீரா உணர்ந்தாள்

ஆனால் தான் கூறியதில் தவறேதும் இல்லையே என நினைத்தவள் "ஆமா உண்ம தான்... என்னை எது பாதிக்கும்னு சதீஷ்க்கு தெரியும். என்னை வேதனைப்படுத்தற மாதிரி அவன் எப்பவும் நடந்துக்க மாட்டான்" என்று அவள் சாதரணமாய் கூற, ஸ்டீவ் ஆவேசமாய் அவள் தோள் பற்றி உலுக்கினான்

"வில் யு ஸ்டாப் இட் மீரா... வேணும்னே என்னை provoke பண்றதுக்கு பேசற நீ... அந்த பைத்தியக்காரன் சதீஷ் மாதிரி சொல்றதுக்கு எல்லாம் ஜால்ரா போட எனக்கு தெரியாது" என்றான் அவளை பற்றியிருந்த கையை விலக்காமலே

"அவன பத்தி பேசற தகுதி உனக்கில்ல...ஸ்டாப் இட் ஸ்டீவ்" என்றாள் அவன் கையை விலக்கி

இன்னும் பிடியை இறுக்கியவன் "ஆமா... ஊர்ல ஒரு பொண்ணு விடாம சைட் அடிக்கற அந்த பெர்சனாலிட்டி பத்தி பேசற தகுதி எனக்கு இல்ல தான்" என்றான் கேலி போல்

"அது அவன் பர்சனல்... ஆனா உணர்வுகளை மதிக்க தெரிஞ்சவன்... உன்னை மாதிரி காயப்படுத்தமாட்டான்" என்றாள்

மீண்டும் மீரா சதீஷை உயர்த்தியும் தன்னை தாழ்த்தியும் பேசியது அவனை மிருகமாக்கியது "This is the limit Meera... don't poke me... ச்சே... உன்னை என் லைப்ல சந்திக்காமலே இருந்திருக்கலாம்னு தோணுது..." உச்சபட்ச கோபத்தில் என்ன பேசுகிறோம் என்றே உணராமல் வார்த்தைகளை விட்டான் ஸ்டீவ்

அந்த வார்த்தை மீராவை நிலைகுலைய செய்தது. ஆனால் அதற்கான காரணத்தை ஆராயும் மனநிலையில் அவள் அப்போது இருக்கவில்லை

ஒரு கணம் அவனை ஆழ்ந்து நோக்கியவள் "எனக்கும் அதே தான் தோணுது ஸ்டீவ்... இப்ப ஒண்ணும் கெட்டு போய்டல... நாம சந்திக்காததாவே நினைச்சுக்கறேன்... இனி எனக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல... Goodbye..." என்றவள் அவன் பதிலுக்கு கூட காத்திராமல் அங்கிருந்து வேகமாய் நடந்தாள்

University Avenue என்று அழைக்கப்படும் அந்த தெருவில் வேகமாய் நடந்து கொண்டிருந்தாள் மீரா, கோபம் மொத்தத்தையும் நடந்தே தீர்ப்பவள் போல்

"எப்படி அவன் அது போல் ஒரு வார்த்தை சொல்லலாம். என்னை சந்திக்காமலே இருந்திருக்கலாம் என எண்ணும் அளவிற்கு தன்னை வெறுக்கிறானா?" என்ற எண்ணம் அவளை வேறு எதை பற்றியும் யோசிக்க விடாமல் செய்தது

"அவன் தன்னை பாதிக்கும்படி பேசினான் என கோபம் கொள்ளும் உரிமை தனக்கில்லையா?" என அவன் மீது மீண்டும் மீண்டும் குற்றம் காண முயன்றாள்
 
ஸ்டீவ் சற்று நேரம் மரத்து போன உணர்வில் நின்றான். தன்னிலைக்கு வரவே அவனுக்கு சற்று நேரம் பிடித்தது

"கோபத்தில் என்ன வார்த்தை கூறிவிட்டேன்" என்பதை உணரவே அவனுக்கு சிறிது நேரமானது. எத்தனை கனவுகள், எல்லாம் ஒரு வார்த்தையில் சிதைத்துவிட்டேனே என சுயகோபத்தில் செய்வதறியாமல் நின்றான்

தான் அப்படி கூறியது தவறு தான் என்ற போதும் அவள் சதீஷோடு தன்னை ஒப்பிட்டு பேசியது மட்டும் சரியா என இன்னும் அவள் மீது கோபம் குறையாத மனநிலையிலேயே இருந்தான்

ஆனாலும் தான் கூறிய வார்த்தை தந்த பாதிப்பில், அவள் வேதனை நிறைந்த கண்களுடன் தன்னை பார்த்தது கண் முன் தோன்ற, அவளை அப்போதே மீண்டும் பார்க்க வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு

ஆனால், அவள் பின்னோடு தேடி செல்ல முனைந்த கால்களை கட்டுப்படுத்தினான். இப்போது இருக்கும் மனநிலையில பேசினால் சண்டை மேலும் பெரிது தான் ஆகும் என உணர்ந்தவன் போல் வேறுபக்கம் திரும்பி நடக்க துவங்கினான்

மனம் சோர்வுற்றிருக்க, உடல் அதற்கு மேல் ஒத்துழைக்க மறுத்தது. நடக்கும் தெம்பு கூட இல்லாதவன் போல் கான்செர்ட் நடக்கும் அரங்கின் வாசல் பக்கம் இருந்த படிகளில் சென்று அமர்ந்தான்

எத்தனை நேரம் அப்படி இருந்தானோ, திடீரென செல்பேசி அழைக்க எடுத்து பார்த்தவன், அதில் சதீஷின் எண் வர கோபத்தில் பேசியை வீசி உடைக்க தோன்றியது

மணி அடித்து ஓய்ந்து மீண்டும் அடித்தது. இந்த முறை மதுவின் எண் வர ஏதேனும் பிரச்சனையோ என மனதில் உறைக்க "ஹலோ... " என்றான்

"ஸ்டீவ்... King Streetல இருக்கற Tim Hortonsகிட்ட உடனே போ... மீரா needs help" என்றாள் மது பதட்டமான குரலில்

ஒருகணம் உயிர் போனது போல் செயலற்று நின்றான் ஸ்டீவ்

யார்நீ என்றபோதில்
யாவும்நீயே என்றுரைக்க
இயலாமல் நின்றேனே
இதயத்தை கொன்றேனே!!!

உன்னையே உணர்ந்தஎன்னை
உணர்வுகளை உணராதவனென்றாய்
உனக்காக பொறுத்தேன்
உன்னுள்நான் உள்ளநம்பிக்கையில்!!!

உனக்கு நிகராய் என்னால்
உயிரையே கூறமுடியாதபோது
என்னிலும்மேலாய் ஒருவனைசொல்ல
எப்படிபொறுப்பேன் சொல்லடியே!!!

ஆபத்தென்று அறிந்தநொடி
அத்தனையும் மறந்தேனடி
என்காதலியாய் நீவேண்டாம்
என்கண்முன் இருந்தால்போதுமடி!!!

இனி...

அடுத்த பகுதி படிக்க

(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)

Thursday, March 03, 2011

தங்கமணி சபதம்...(ஹி ஹி)


தங்கமணி ரங்கமணியின் மற்ற கலாட்டாக்களை படிக்க இங்கே கிளிக்கவும்

முன் குறிப்பு :
என் இனிய ப்ளாக் குல மக்களே... இதுல வர்ற தங்கமணி நான் இல்ல... Just an imaginary character. நெறைய பேரு இது நான்னு நெனைச்சுட்டு இதுல வர்ற ரங்கமணிக்கு ஓவரா அனுதாபம் தெரிவிச்சு... விட்டா அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கற அளவுக்கு போறதா நியூஸ் வந்தது.... அதான் இந்த முன் குறிப்பு  இப்போ... மேட்டர் மனசிலாயோ... ஒகே ஒகே...:-)))   

இனி தங்கமணி ரங்கமணி வீட்டுல என்ன நடக்குதுன்னு வேடிக்கை பார்ப்போம்...

அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் குடும்ப சகிதமாய் உணவருந்தி கொண்டிருந்தனர் ரங்கமணி அண்ட் பாமிலி

ரங்கமணி தான் ஆரம்பித்தார் "தங்கம்... இந்த அரைச்சு விட்ட கொழம்பு நீ முன்னயெல்லாம் ரெம்ப நல்லா செய்வ... இப்ப அந்த டேஸ்ட் இல்ல தெரியுமா?" என வம்பிழுக்க

"ம்... நான் எப்பவும் போல தான் செய்யறேன்... உங்களுக்கு தான் expectation கூடி போச்சு"

"இல்ல...நீ என்ன சொன்னாலும் மொதலாட்டம் இல்ல" என மீண்டும் சொல்ல கடுப்பான தங்கமணி

"ம்... இது Law of Diminishing marginal Utility னு economicsல சொல்லுவாங்க... படிச்சுருக்கீங்களா?"

"என்ன தங்கம், ஏதோ டாக்டர் வாய்ல நுழையாத பேர நோய் சொல்லி பயப்படுதற மாதிரி சொல்ற"

"ஐயோ... அதில்ல... as increasing amounts of a good or of a service are consumed, past some point of consumption the utility (usefulness) of successive increases drops இதான் விளக்கம்... உங்களுக்கு புரியாப்ல Layman termsல சொல்லணும்னா... ஒண்ணு சும்மா சுலபமா கிடைக்குதுன்னு ஓவரா அதையே சாப்ட்டா கொஞ்ச நாளுல அந்த டேஸ்டை நாக்கு உணராம போயி அது முன்னி மாதிரி இல்லைன்னு தோணுமாம்... புரிஞ்சதா?"

"என்னமோ ஒளர்ற" என சிரிக்க

"யாரு ஒளர்றா... உங்களுக்கு தெரியலைன்னா ஒத்துக்கோங்க" என சீண்ட

"யாரு... யார பாத்து... நாங்கெல்லாம் சயின்ஸ் மேஜர் தெரியும்ல... இந்த கம்மி மார்க் வாங்கின குரூப் தான் economics commerce படிக்கற குரூப்..."

"எப்பவும் சயின்ஸ் விட ஆர்ட்ஸ் தான் ஒசத்தி தெரியுமா?" என் டென்ஷன் ஆனார் தங்கமணி

"இல்ல சயின்ஸ் தான்"

"இல்ல ஆர்ட்ஸ் தான்"

"ஈஸ்ட் ஆர் வெஸ்ட் சயின்ஸ் இஸ் பெஸ்ட்"

"நார்த் ஆர் சவுத் ஆர்ட்ஸ் இஸ் வொர்த்"

"சயின்ஸ் இல்லையேல் ஆர்ட்ஸ் இல்லை"

"ஆர்ட்ஸ் இல்லையேல் சயின்ஸ் குப்பை"

பக்கத்தில் அவர்கள் மகள் அனு வைத்து விளையாடி கொண்டிருந்த பொம்மை கிடாரை வாங்கிய ரங்கமணி அதை கழுத்தில் மாட்டி கொண்டு இரண்டு கைகளையும் விரித்து "சரஸ்வதி சபதம்" நாரதர் ஸ்டைலில் கையில் சப்லாங்கட்டை இருப்பது போல் போஸ் கொடுத்து நின்று தங்கமணியை பார்த்து பாடினார்

"ஆர்ட்ஸ்ஆ சயின்ஸ்ஆ சொல்லடி... சயின்ஸ் இல்லாமல் ஆர்ட்ஸ் இல்லை புரிஞ்சுக்கணும்... ஆர்ட்ஸ்ஆ சயின்ஸ்ஆ சொல்லடி.. " என பாட நம்ம தங்கமணி மட்டும் சும்மாவா இருப்பாங்க, அவங்களும் பாடினாங்க

"ஆர்ட்ஸ்ஆ சயின்ஸ்ஆ சொல்லுறேன்... ஆர்ட்ஸ் இல்லாமல் சயின்ஸ் வெறும் நியூசன்ஸ் தான்... ஆர்ட்ஸ்ஆ சயின்ஸ்ஆ சொல்லுறேன்..."

"அப்படியா... அப்போ உன் ஆர்ட்ஸ்ன் பெருமை பற்றி ஒன்று இரண்டு என வரிசைபடுத்தி பாடு பாப்போம்" என சவால் விட்டார் ரங்கமணி

"ம்க்கும்... வேற வேலை இல்ல உங்களுக்கு" என தங்கமணி எழுந்து உள்ளே போக முயல

"அப்போ நீ தோத்துட்டேன்னு ஒத்துக்கோ... சயின்ஸ் தான் பெஸ்ட் ஒகேவா" என ரங்கமணி கை உயர்த்தி காட்ட

"நிச்சியமா இல்ல... எப்பவும் என்னைக்கும் ஆர்ட்ஸ் இல்லாம சயின்ஸ் ஒண்ணும் பண்ண முடியாது"

"கிட்சன்ல வெச்சுருக்கியே கிரைண்டர் மிக்சி இதோ இந்த fan ... இதெல்லாம் இல்லாம ஒரு நாள் இருக்க முடியுமா உன்னால... சயின்ஸ் இல்லாம இதெல்லாம் எப்படி வரும்"

"அதெல்லாம் இல்லாமையும் அந்த காலத்துல வாழ்ந்துட்டு தான் இருந்தாங்க...ஆனா ஆர்ட்ஸ் அதாவது கலை/கணக்கு/கற்பனை நிறைந்த ஆர்ட்ஸ் இல்லாம காட்டுவாசிங்களா இருந்த ஆதி மனுஷன் கூட வாழலை"

"ஏன்? நீ போய் பாத்துட்டு வந்தியோ?" என சிரித்து கொண்டே ரங்க்ஸ் கேட்க

"இல்ல... உங்க பாட்டி அன்னிக்கி சொன்னாங்க... உங்க பரம்பரைய பத்தி" என தங்கமணி சரியான பதிலடி கொடுக்க

"சரி நீ பேச்சை மாத்தாதே... சயின்ஸ் தான் பெஸ்ட் ஒத்துக்கோ"

"இல்லேன்னு நான் நிரூபிச்சுட்டா?"

"நான் மீசை எடுத்துக்கறேன்"

"ம்... அந்த மூஞ்சிய நான் இல்ல தினமும் பாக்கணும்... உங்களுக்கு பனிஷ்மென்ட் மாதிரி வேற எதாச்சும் சொல்லுங்க"

"அதுக்கெல்லாம் அவசியமே இருக்காது, எப்படியும் சயின்ஸ்க்கு தான் வெற்றி"

"அதெல்லாம் அப்புறம் பாப்போம்... மொதல்ல சொல்லுங்க என்ன பெட்டுன்னு"

"ம்... ஒரு மாசம் நான் எந்த நடிகை பேட்டியும் பாக்கலை... போதுமா"

"ஒகே டீல்...இன்னும் 24 மணி நேரத்துல ஆர்ட்ஸ் இல்லாம முடியாதுன்னு உங்க வாயிலையே ஒத்துக்க வெக்கறேன்"

"இரு இரு... பெட்டுன்னா ரெண்டு பக்கமுமில்ல இருக்கணும்... நீ தோத்துட்டா என்னனு சொல்லு?"

"நான் தோத்துட்டா இனிமே நீங்க சொல்ற எதுக்கும் மறுத்து பேசல... போதுமா"

"ஆஹா... லைப் டைம் ஆபர்... ரங்கமணி உனக்கு லாட்டிரி தான் போ... ஹா ஹா அஹ" என ரங்கமணி குதூகளித்து கொண்டிருந்தார்

__________________________

மறுநாள் காலை லேட்டாக எழுந்த ரங்கமணி சமையல் அறையில் இருந்த தங்கமணியிடம் "என்ன தங்கம் நீ? ஏன் நீ எழுப்பல... மணி எட்டாக போகுது... எப்ப கெளம்பி எப்ப நான் ஆபீஸ் போறது" என டென்ஷன் ஆக

"ஏன் அலாரம் வெச்சுருந்தீங்க தானே?" என பூடகமாய் கேட்க

"என்னைக்கி நான் அலார சத்தத்துல எழுந்துருக்கேன்... நீ தானே எழுப்புவ"

"அதாவது அலாரம் அடிச்சாலும் பிரியோஜனமில்ல நான் வந்து தான் எழுப்பணும் இல்லையா"

"பின்ன... அந்த அலார சத்தமெல்லாம் கேட்டு எவன் முழிக்கறது"

"ரெம்ப தேங்க்ஸ்ங்க..."

"எதுக்கு?" என ரங்கமணி முழிக்க

"சயின்ஸ் எல்லாம் சும்மா ஆர்ட்ஸ் தான் முக்கியம்னு நீங்களே ஒத்துகிட்டதுக்கு"

"என்ன என்ன? நான் எப்ப ஒத்துகிட்டேன்?" என பதட்டமாக

"இப்ப தான்..." என தங்கமணி சிரிக்க

"இப்பவா...நான் ஒண்ணும் சொல்லலியே"

"ஓ... இந்த gents க்கு எல்லாமே உப்பு புளி போட்டு விளக்கணுமல்ல மறந்துட்டேன்... சரி நானே சொல்றேன்... அதாவது உங்க சயின்ஸ் கண்டுபிடிச்ச அலாரம் பிரயோஜனமில்ல, ஆர்ட்ஸ் அதாவது Humanresource அதாவது நான், நான் வந்து தான் எழுப்பணும்னு நீங்க தானே இப்ப சொன்னீங்க" என தங்கமணி சிரித்து கொண்டே கூற

ரங்கமணிக்கு அப்போது தான் விஷயம் எங்கே போகிறது என்பது புரிந்தது. ஒரு கணம் அசடு வழிந்தாலும் 'மீசையில் மண் ஒட்டாது' என்ற கதையாய் சுதாரித்து கொண்டார்

"ச்சே ச்சே... அப்படி ஒண்ணுமில்ல... அலாரம் அடிச்சப்ப ஞாபகம் ஆச்சு... எப்பவும் போல நீ வந்து எழுப்பற வரை படுக்கலாம்னு கொஞ்சம் கண்ணசந்தேன்..." என சமாளிக்க

"ஹா ஹா... இந்த சமாளிப்பெல்லாம் என்கிட்ட வேண்டாம்... ஒத்துக்கோங்க... இல்லேனா Humanresource அதாவது என்னை அவமதிச்சீங்கன்னு நான் சமைக்காம strike பண்ணுவேன்... உங்க சயின்ஸ் கண்டுபிடிச்ச மிக்சி கிரைண்டர் எல்லாத்தையும் ஒடச்சு சாப்பிடுங்க"

"அடிப்பாவி... இப்படி எல்லாம் ப்ளாக்மெயில் பண்ணுறியே... திஸ் இஸ் டூ மச்"

"ச்சே ச்சே... இதுல ப்ளாக்மெயில் எங்க வந்தது... உண்மைய தானே சொல்றேன். ஆர்ட்ஸ் இல்லாம சயின்ஸ் இல்ல... கரெக்ட் தானே" என நமட்டு சிரிப்பு சிரிக்க

"முடியாது... ஒத்துக்க மாட்டேன்"

"அப்ப நாளைக்கும் நான் எழுப்ப மாட்டேன்... டெய்லி லேட் லேட்டா ஆபீஸ் போங்க... அதோட விளைவு மெமோ வரும்... ப்ரமோஷன் லேட் ஆகும்... உங்களுக்கு டென்ஷன் ஆகும்... குடும்பத்துல சண்டை வரும்... கொழந்த படிப்பு கெடும்... மேற்படிப்புக்கு நெறைய டொனேசன் கட்ட வேண்டி வரும்.... அவ எதிர்காலத்துக்கு இருக்கற சேமிப்பு கொறையும்... அப்புறம்...." என்று தொடர்ந்து கொண்டே போன தங்கமணியை

"ஸ்டாப்...ஸ்டாப்..." என நிறுத்தினார் ரங்கமணி "அடிப்பாவி... ஒரு சின்ன அலாரம்ல ஆரம்பிக்கற பிரச்சனைய கொஞ்சம் விட்டா ஐ.நா சபைல கொண்டு போய் தான் நிறுத்துவ போல இருக்கே... எப்பா சாமி...இப்படி ஒரு கற்பனை திறன் இந்த ஜென்மத்துல எங்களுக்கு வராதுடா சாமி...  இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்...  இதுக்கெல்லாம் உங்க அம்மா வீட்டுலையே ஸ்பெஷல் Training எதுனா குடுத்துடுவாங்களோ?"

"ம்... ஆண்கள சமாளிக்க பெண்களுக்கு கடவுளே குடுத்த வரம் இது... அதெல்லாம் விடுங்க... ஆர்ட்ஸ் இல்லையேல் சயின்ஸ் இல்லைங்கரத ஒத்துகறீங்களா இல்லையா" என தங்கமணி பாயிண்ட்ஐ பிடிக்க

"ஆள விடு தாயே... ஒத்துக்கறேன்... மீ எஸ்கேப்" என ஓடினார்

ஓடினவர் நேரா நம்மகிட்ட என்னமோ சொல்லணும்னு வந்துருக்கார்... ஏதோ கருத்து சொல்லணுமாம்... கேட்டுகோங்க

"ஹலோ... மைக் டெஸ்டிங்... ம்... ம்க்கும்... அன்பார்ந்த ப்ளாக் குல மக்களே... என்னோட வாழ்க்கை அனுபவத்துல சொல்றேன்... கல்யாணம் பண்றப்ப செய்வாய் தோஷ ஜாதகம் செய்வாய் தோஷ ஜாதகத்தோட, இல்லாத ஜாதகம் இல்லாததோட இப்படி எந்த பொருத்தம் பாக்கரீங்களோ இல்லையோ... ஆர்ட்ஸ் படிச்ச பொண்ணை சயின்ஸ் படிச்ச பையனுக்கோ சயின்ஸ் படிச்ச பொண்ணை ஆர்ட்ஸ் படிச்ச பையனுக்கோ மேட்ச் பண்ணாதீங்கோ... அப்புறம் என் கதி தான் சொல்லிட்டேன்... ஐயோ... தங்கமணி வர்ற சத்தம் கேக்குது.. மீ எஸ்கேப்" என ஓடியவர் "போச்சே... அநியாயமா ஒரு மாசத்துக்கு நடிகை பேட்டி போச்சே.." னு முணுமுணுத்துட்டே போறார்

ஹையோ ஹையோ... இது வேணுமா?

இதனால நான் சொல்ல வர்ற மெசேஜ் என்னனா "எப்பவும் உங்க வீட்டு அம்மணிக சொல்றது தான் கரெக்ட்ஆ இருக்கும்...அதை மொதலே ஒத்துக்கிட்டா damage இல்லாம போகும்... இல்லைனா இதான் முடிவு.... ஹா ஹா ஹா"

ஒகே... ரைட்... கருத்து சொல்லியாச்சு... இனி மீ எஸ்கேப்...

தங்கமணி ரங்கமணியின் மற்ற கலாட்டாக்களை படிக்க இங்கே கிளிக்கவும்
...

Tuesday, March 01, 2011

ஜில்லுனு ஒரு காதல் (பகுதி 10)


                        
 பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5   பகுதி 6    பகுதி 7    பகுதி 8    பகுதி 9

"சொல்லு மீரா... யாரையாச்சும் லவ் பண்றயா?" என்றான் சதீஷ் மீண்டும்

"ஹா ஹா... ஏன் இந்த கேள்வி திடீர்னு?" என சிரித்தாள் மீரா

"சும்மா...இன்னைக்கி வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல் கொஸ்டின்னு வெச்சுக்கோயேன்... ஏன் நான் கேக்கக்கூடாதா?" என புதிர் போட்டான்

"ம்... இதுக்கு முன்னாடி வந்த வேலண்டைன்ஸ் டேல எல்லாம் நீ கேட்டதில்லையே" என அவளும் விடுவேனா என்பது போல் சீண்டினாள்

"இஷ்டம் இல்லைனா சொல்ல வேண்டாம்" என்றவனின் முகத்தில் சற்று முன் இருந்த கேலி போய் கோபம் வந்திருந்தது

"இப்பவெல்லாம் நீ ஓவரா கோபப்படறே என்கிட்ட" என்றவளின் முகம் சோர்ந்து போனது

அதை கண்டு வருந்திய போதும் "கோபபட்ற மாதிரி நீ நடந்துக்கற...என்ன செய்யறது?" என்றான் சதீஷ் விடாமல்

"ஒகே... நான் மோசம் தான் விடு" என்றாள்

"இன்னும் என் கேள்விக்கு நீ பதில் சொல்லல... சொல்ற எண்ணமும் இல்லைனு புரியுது" என்றான் கோபம் குறையாத குரலில்

"ச்சே ச்சே...அதெல்லாம் ஒண்ணுமில்ல சதீஷ்... உன்கிட்ட சொல்லாம இருப்பேனா... அப்படி யாரும் எதுவும் இல்ல போதுமா" என்றாள் சாதரணமாய்

பொய் சொல்லும் கலை சிறுவயது முதலே மீராவிற்கு கைவர பெற்றதில்லை என்பதை அறிந்தவன் என்பதால் அவள் முகத்தில் இருந்து ஏதேனும் படிக்க இயலுமா என்பது போல் அவளை இமைக்காமல் பார்த்தான்

"ஹலோ...என்ன பேஸ் ரீடிங் ட்ரை பண்றயா" என சிரித்தாள் மீரா, அவன் மனதை படித்தவள் போல்

அவளோடு சேர்ந்து சிரித்தவன், அவள் கூறியது உண்மை தான் என்ற புரிந்த நிம்மதியில் மௌனமானான்

அவர்கள் இருவரும் வெளியே வருவதை பார்த்த ஸ்டீவ் வேகமாய் மறைந்து நின்றான். ஆனால் அவர்களை கண்ணிமைக்காமல் கவனித்தவனுக்கு மனதில் ஒரு நிம்மதி பரவியது போல் உணர்ந்தான்

ஸ்டீவின் கண்கள் அவர்களுக்குள் காதல் பகிர்ந்து கொண்ட அன்னியோன்யம் இல்லாததை கண்டுகொண்டது. அந்த வரை நிம்மதி என நினைத்தான். இனி மேலும் தாமதிக்காமல் அவளிடம் தன் மனதை கூறி விடவேண்டுமென திட்டமிட்டான். அதற்கான சந்தர்ப்பமும் விரைவிலேயே கிடைத்தது

****************************

அன்று பிப்ரவரி மாதத்தின் கடைசி சனிக்கிழமை. மிக மெல்லிய பனிப்பொழிவு இருந்த போதும், எங்கும் மக்கள் வெள்ளம் தான். அதுவும் "டௌன்டவுன்" என்றழைக்கப்படும் நகரின் மையப்பகுதியில் இளைய சமுதாயத்தின் மொத்த பிரதிநிதிகளையும் அங்கு பார்க்க முடியும் வார இறுதி நாள் இரவுகளில்

ஸ்டீவ், சதீஷ், மீரா, மது நால்வரும் ஒரு கான்செர்ட் பார்க்க வந்திருந்தனர். அது ஒரு பியுசன் (Fusion) வகை கான்செர்ட் என்பதால் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே கூட்டம் அலை மோதியது

"நல்லவேள மொதலே டிக்கெட் வாங்கினோம்" என்றாள் மது

"ம்... நான் சொன்னப்ப கிண்டல் பண்ணினீங்க இந்த குளிர்ல யார் வருவான்னு" என சதீஷ் வேண்டுமென்றே ஸ்டீவ் கூறியதை சொல்லி காண்பித்தான்

"ஒகே பாஸ்... வாபஸ் வாங்கிக்கறேன் போதுமா" என்றான் ஸ்டீவ் சிரித்து கொண்டே

இது போல் இருவரும் இயல்பாய் விளையாட்டாய் பேசி பல நாட்கள் ஆகி இருந்த காரணத்தால் மீரா ஆச்சிரியமும் மகிழ்ச்சியுமாய் இருவரையும் பார்த்தாள். அது ஏன் தனக்கு சந்தோசத்தை அளிக்கிறது என அப்போது அவளுக்கு யோசிக்கவும் தோன்றவில்லை

அவள் பார்வையை மற்றும் சிரிப்பை ஸ்டீவ் கண்டுகொண்டான். இயல்பான அவளின் மகிழ்ந்த முகத்தை, சிரிக்கும் ஆதரங்களை திருட்டுத்தனமாய் ரசித்தான். இதற்காகவேனும் சதீஷிடம் முன் போல் இயல்பாய் இருக்கவேண்டுமென அவனுக்கு தோன்றியது

மீரா மட்டுமல்ல சதிஷிர்க்கு கூட ஸ்டீவ் அப்படி பேசியது ஆச்சிர்யம் தான். சில நாட்களாய் ஸ்டீவ் மீராவிடமும் சற்று விலகியே இருப்பதை அவன் கவனித்து வந்தான்

தன் நோக்கமும் அது தானே என நினைத்த சதீஷ் பழைய மகிழ்ச்சி திரும்ப "அப்படியே ஆகட்டும் சீடா... மறந்தேன் மன்னித்தேன்" என ஏதோ பழைய சினிமா பாணியில் கேலியாய் கூறினான்

நால்வரும் சிரிக்க, அதை தடை செய்வது போல் மதுவின் செல்போன் அலறியது

"எஸ் மது ஹியர்..."

"..."

"ஓ... நான் இங்க கான்செர்ட்க்கு வந்தேன் பூர்ணிமா"

"..."

"இப்பவா? நான் எப்படி...? ஒகே...நீ ஈட்டன் சென்டர்லையே (Eaton Center) வெயிட் பண்ணு. நான் ஒரு ட்வென்டி மினிட்ஸ்ல வந்துடறேன்"

"..."

"ஒகே பூர்ணிமா...சி யு தென்" என பேசியை அணைத்தவள் "சாரி கைஸ்.. நான் ஒரு பிரெண்ட்கிட்ட சில புக்ஸ் கேட்டு இருந்தேன்... அவ இப்ப ஈட்டன் சென்டர்ல இருக்காளாம்... போகணும்... இன்னும் கான்செர்ட் ஆரம்பிக்க கொஞ்சம் டைம் இருக்கே... போயிட்டு உடனே வந்துடறேன்... மீரா நீ வாயேன் எனக்கு தனியா போக போர் அடிக்குது" என மீராவை அழைத்தாள் மது

"ஐயோ...இந்த குளிர்லையா...நான் இல்ல" என்றாள் மீரா அவசரமாய்

"ஏன் மீரா... உனக்கு ஸ்னோ பிடிக்கும் தானே"

"ஸ்னோ பிடிக்கும் மது... ஆனா ஓவரா குளிருது... சாரி மது" என்றாள் பாவமாய்

மீரா வரவில்லை என்றதும் ஸ்டீவின் மனம் வேகமாய் கணக்கு போட்டது. சதீஷ் மதுவுடன் சென்றால் இது தான் சந்தர்ப்பம் மீராவுடன் பேச என நினைத்தான்

அதை செயல்படுத்தும் நோக்கத்துடன் முக்கியமாய் போனில் ஏதோ பார்ப்பதை போன்ற பாவனையுடன் மதுவை பார்க்காமல் நின்றான், தன்னை "வா" என மது அழைப்பாளோ என பயந்தவன் போல்

அவன் எதிர்பார்த்தது போலவே சதீஷ் "நான் வரேன் மது... மீரா நீ இங்க இருக்க ஒகேவா" என கேட்டான் ஒரு கண்ணால் ஸ்டீவை பார்த்தபடியே

"ம்... நான் என்ன கொழந்தையா... " என சிரித்தவள் சதீஷின் பார்வை போன திசையை உணர்ந்து "இவ்ளோ கூட்டத்துல தொலஞ்சு போய்ட மாட்டேன்" என்றாள் இயல்பாய், ஆனால் கவனமாய் ஸ்டீவின் பேரை சொல்ல தவிர்த்ததை ஸ்டீவ் சதீஷ் இருவருமே கண்டுகொண்டனர். அது ஒருவனுக்கு கோபத்தையும் மற்றவனுக்கு மகிழ்ச்சியையும் தந்தது

முன் போல் என்றால் சதீஷ் யோசித்திருப்பான், இப்போது கடந்த சில நாட்களாய் ஸ்டீவின் ஒதுக்கத்தை கண்ணுற்றதால் "ஒகே மீரா... செல்போன் இருக்கில்ல" என கேட்டு உறுதி செய்து கொண்டு மதுவுடன் சென்றான்

சதீஷின் செய்கை ஸ்டீவிர்க்கு கோபத்தை மூட்டியது. அதை விட மீராவும் அவனை ஒட்டியே பேசியது இன்னும் கோபத்தை அதிகமாக்கியது. தனிமையில் அவளிடம் காதல் சொல்ல நினைத்திருந்தவனுக்கு இப்போது கோபமே முன் நின்றது

"என்ன உன் பாடிகார்ட் எல்லா பத்திரமும் சொல்லிட்டு போயாச்சா?" என்றான் கோபமாய் மீராவை பார்த்தபடி

"அவன் புதுசா அப்படி இல்ல ஸ்டீவ்... சின்னதுல இருந்தே கொஞ்சம் ப்ரொடக்ட்டீவ டைப் தான்" உன்மேல் சதீசுக்கு எந்த தனிப்பட்ட பகையும் இல்லை என சொல்ல முயன்றாள் மீரா

"ஆமா... ஆனா என்னை மட்டும் வில்லன பாக்கற மாதிரி தான் லுக் விடுவான்... அதுக்கு நீயும் சப்போர்ட்.. ஏன் மீரா...என்னை பாத்தா உனக்கு அப்படி தான் தோணுதா" என்றான் அவளை குற்றம் சாட்டும் குரலில்

"அப்படி எல்லாம் இல்ல ஸ்டீவ்... நீயா எதையோ கற்பனை பண்ணிக்கற... " என்றவளின் குரலில் வருத்தம் மிகுந்து இருந்தது. அது அவனையும் பாதித்தது

"ச்சே...நான் நினைத்தது என்ன...செய்வது என்ன" என தனக்குள்ளயே நொந்து கொண்டான் ஸ்டீவ். மீராவுடன் இப்போதெல்லாம் தனிமை அமைவதே எப்போதாவது தான், இந்த சந்தர்பத்தில் கூட அவளுடன் சண்டை போடுகிறேனே என தன் மீதே கோபம் வந்தது

தனக்கும் சதீசுக்குமான பனிப்போரில் அதிகம் பாதிக்கப்படுவது மீரா தான் என தோன்றியதும் அவள் மீது இருந்த கோபம் விலகி பாவமாய் பார்த்தான்

இனி என்ன செய்வது என அறியாமல் திகைத்து நிற்கும் சிறுகுழந்தை போல் அவள் நின்ற தோற்றம் அவளை அப்படியே தோளில் சாய்த்து கொள்ளவேண்டும் போல் தோன்றியது ஸ்டீவிர்க்கு

வருத்தத்தில் சிரிப்பு மறைந்த அவள் கண்களில் சற்று முன் போல் சிரிப்பை வரவழைத்து பார்ப்பது தான் இப்போது அவசியம், மற்றதெல்லாம் பிறகு தான் என நினைத்தான்

தன்னை இப்படி அலைகளைப்பவள் மீது கோபம் வராமல் நாளுக்கு நாள் காதல் கூடுவது எப்படி சாத்தியம் என அவனுக்கு வியப்பாகவும் இருந்தது. இது தான் "லவ் இஸ் ப்ளைண்ட்" என்பதோ என நினைத்ததும் தன்னையும் அறியாமல் சிரித்தான்

அவன் சிரித்ததும் சற்று நிம்மதியானாள் மீரா, ஆனாலும் அதை காட்டிகொள்ளாமல் "ஏன் சிரிக்கற? என்னை திட்டினா உனக்கு சந்தோசமா இருக்கா ஸ்டீவ்?" என பரிதாபமாய் முகத்தை வைத்து கொண்டு கேட்டாள்

சற்று முன் நினைத்ததை அப்படியே கூறிவிட்டால் என்ன என ஒரு கணம் நினைத்தான் ஸ்டீவ். ஆனால் அவள் பரிதாபமான பாவனையை ரசித்தவன் மற்றதெல்லாம் மறந்து தான் போனான்

"இல்ல மீரா... உன்னை திட்டறது எப்பவும் எனக்கு சந்தோஷம் இல்ல... அது உனக்கும் தெரியும்..." என அவள் கண்ணோடு கண் நோக்கி ரகசியம் போல் மனதோடு பேசும் பாவனையில் ஆனால் அவளுக்கும் கேட்கும் விதமாய் கூறினான்

அவன் பார்வையும் பேச்சும் புரியாதவளாய் அதே நேரம் ஏதோ புரிவது போலவும் தோன்றிய மெல்லிய உணர்வில் மௌனமாய் நின்றாள் மீரா

ஏனோ அந்த மௌனமான நேரம் "இது தான் தருணம் அவளிடம் தன் மனம் திறந்து பேச" என தோன்ற செய்தது ஸ்டீவிர்க்கு
 
"மீரா...நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..." என ஸ்டீவ் ஏதோ சொல்ல வர அதே நேரம்
 
"Hey guys...you're here... yo...surprise" என அவர்கள் உடன் பயிலும் மாணவன் எட்வர்ட் உற்சாகமாய் ஸ்டீவின் தோளில் கை போட "அடச்சே... இவன் எங்க வந்தான் இந்த நேரத்துல..." என சற்று சத்தமாகவே முணுமுணுத்தான் ஸ்டீவ்

ஸ்டீவ் அப்படி கூறியதை வியப்பாய் பார்த்த மீரா, அதை கேட்காதவள் போன்ற பாவனையுடன் "Hei Edward... nice to see you" என்றாள் சம்பிரதாயமாய்

"I don't think everyone feels so Meer... what do you say man?" என ஸ்டீவின் முகத்தில் வெளிப்படையாய் தெரிந்த எரிச்சலை பார்த்தவாறே கேலியாய் கூறினான் எட்வர்ட்

கோபத்தை முகத்தில் இருந்து மறைக்க முயன்றவாறே "Not at all Ed...didn't expect to see you here..thats all" என்று சமாளித்தான் ஸ்டீவ்

"Edward.. call me Meera...not Meer...it's a simple two syllable name you know...mee-raa" என எப்போதும் போல் இந்த ஊர் மக்கள் பலரும் தன் பெயரை சுருக்குவது பிடிக்காதவளாய் அதே நேரம் சிரித்து கொண்டே கேலியாய் கூறினாள்

"You know what meer...sorry mee-raa... I really try...sometimes not working you know..." என சிரித்தான் எட்வர்ட்

"Okay.. I appreciate you trying Edward..." என்றாள், கேலியாய் அவனுக்கு மரியாதை செய்வது போல் மெல்ல தலை தாழ்த்தி அழகாய் சிரித்தவாறே

அந்த கணம் அப்படியே அவளை தன் கைக்குள் வைத்து கொள்ள வேண்டும் போல் உணர்ந்தான் ஸ்டீவ்

அதே நினைவில் தனிச்சையாய் எழுந்த கையை எட்வர்டின் தோளில் பதித்தான் இயல்பான செய்கை போல், ஆனாலும் அவளை விட்டு பார்வையை விலக்கிக்கொள்ளவில்லை

மீரா ஸ்டீவின் இமைக்காத பார்வை தன்னை குறுகுறுப்பது போல் உணர்ந்தாள். "ஏன் இப்படி பாக்கறான்? ஆனாலும் பொண்ணுகள ஓவரா சைட் அடிக்கறதுல இவன் சதீஷை மீறிடுவான் போல" என மனதிற்குள் நினைத்து சிரித்து கொண்டாள் மீரா

அவள் அப்படி நினைத்ததை மட்டும் வாய் விட்டு சொல்லி இருந்தால் அங்கு ஒரு குருசேத்ரமே நடந்திருக்கும் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. சதீஷை எந்த காரணத்திற்காகவும் தன்னோடு ஒப்புமைப்படுத்தி பேசப்படுவதை அதுவும் மீரா பேசுவதை ஸ்டீவ் சுத்தமாய் வெறுத்தான்

"Then, whats up guys?" என ஆரம்பித்த எட்வர்ட் "Actually, I wanted to ask you something Meer...sorry...mee-raa" என அவள் பெயரை சரியாய் சொல்லிவிட்டேனா என கேட்பது போல் பார்த்தான் எட்வர்ட்

"Not bad Edward... ha ha...okay...what do you want to ask me?"

"I saw a movie yesterday in some movie channel...a bit old I guess.. Slumdog Millionaire"

"Yeah...an Oscar award winner" என்றாள் மீரா பிறந்த நாட்டின் மீது கொண்ட பெருமிதத்துடன். அவளுக்கு "தான்" இந்திய நாட்டின் பிரஜை என்பதில் எப்போதும் பெருமை உண்டு

தேசபற்று என கொடி பிடிக்கும் ரகம் இல்லை என்றாலும், அவசியம் இன்றி தன் நாட்டையோ தங்கள் பாரம்பரியத்தையோ அல்லது கலாச்சாரத்தையோ பழிப்பவர்களை திட்டி தீர்த்து விடுவாள்

சதீஷ் கூட கேலி செய்வான் "அநேகமா நீ தான் போன ஜென்மத்துல ஜான்சி ராணியா இருந்து இருப்பேன்னு தோணுது... ஆனாலும் ஓவர் ரியாக்ட் பண்ற மீரா. மத்தவங்க அப்படி பேசறது தப்புதான்னாலும் அது அவங்க அறியாமைனு விட்டுடு... why do you bother to explain those idiots?" என்பான்

"நான் அப்படி தான்... எனக்கு என் வீடும் நாடும் பெருசு தான்... என்ன பிரச்சனைகள் இருந்தாலும் that is where I belong... அப்படி பேசறவங்களுக்கு நான் பதில் சொல்லாம இருந்தா நானும் அதை ஒத்துக்கிட்டதா அர்த்தம்....என்னால அப்படி இருக்க முடியாது" என கோபமாய் கூறுவாள்

"What about that movie?" என ஆர்வமாய் கேட்டாள் மீரா எட்வர்டிடம்

"Yeah, heard about Oscar... Is your country really slum like that everywhere? I mean... all country?" என்று தயக்கமாய் எட்வர்ட் நிறுத்த கணநேரத்தில் மீராவின் முகம் சிவந்தது

மீராவை பற்றி இந்த விசயத்தில் அறிந்திராத ஸ்டீவ் அந்த பேச்சு போகும் திசையை பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் வழக்கம் போல் மௌனமாய் மீராவை ரசித்து கொண்டிருந்தான்

அதே நேரம் மீராவின் கோபம் எல்லை மீறி இருந்தது "Edward....May I ask you something too? I heard your country is a landmark for AIDS... Does everyone have AIDS in your country?" என்றாள் பற்களை கடித்து கோபத்தை அடக்கியவாறே

அப்படி ஒரு தாக்குதலை எதிர்பாராத எட்வர்ட் என்ன பேசுவது என தெரியாமல் விழித்தான். எட்வர்ட் தயக்கமாய் ஸ்டீவை பார்க்க "Meera...that was so rude" என்றான் ஸ்டீவ், அவள் பேசியது தவறு என மனதில் தோன்றியதை தனிச்சையாய் கூறுபவன் போல்

ஆனால் தான் இயல்பாய் கூறிய அந்த ஒரு வார்த்தை தன் மொத்த கனவையும் குலைக்க போவதை ஸ்டீவ் அப்போது அறிந்திருக்கவில்லை

அக்ஹிம்சைதான் கொள்கைஎனக்கு
ஆனால்வன்முறையும் பிடிக்கும்
உனக்குஎனக்கும் இடையில்
உருவாகும் தருணத்தில்!!!

காதலில் வன்முறை
காட்டாற்று வெள்ளம்போல
வெள்ளமில்லாகாடு செழிக்காது
வன்முறையில்லா காதல்ரசிக்காது!!!

உன்னையும் ரசிக்கும்ஆவலில்
உன்னையே மறக்கிறேனே
இதைகேட்கும் உன்கோபத்தை
இப்போதும் ரசிக்கிறேனே!!!

இனி...

அடுத்த பகுதி படிக்க

(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்...)