Tuesday, March 01, 2011

ஜில்லுனு ஒரு காதல் (பகுதி 10)


                        
 பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5   பகுதி 6    பகுதி 7    பகுதி 8    பகுதி 9

"சொல்லு மீரா... யாரையாச்சும் லவ் பண்றயா?" என்றான் சதீஷ் மீண்டும்

"ஹா ஹா... ஏன் இந்த கேள்வி திடீர்னு?" என சிரித்தாள் மீரா

"சும்மா...இன்னைக்கி வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல் கொஸ்டின்னு வெச்சுக்கோயேன்... ஏன் நான் கேக்கக்கூடாதா?" என புதிர் போட்டான்

"ம்... இதுக்கு முன்னாடி வந்த வேலண்டைன்ஸ் டேல எல்லாம் நீ கேட்டதில்லையே" என அவளும் விடுவேனா என்பது போல் சீண்டினாள்

"இஷ்டம் இல்லைனா சொல்ல வேண்டாம்" என்றவனின் முகத்தில் சற்று முன் இருந்த கேலி போய் கோபம் வந்திருந்தது

"இப்பவெல்லாம் நீ ஓவரா கோபப்படறே என்கிட்ட" என்றவளின் முகம் சோர்ந்து போனது

அதை கண்டு வருந்திய போதும் "கோபபட்ற மாதிரி நீ நடந்துக்கற...என்ன செய்யறது?" என்றான் சதீஷ் விடாமல்

"ஒகே... நான் மோசம் தான் விடு" என்றாள்

"இன்னும் என் கேள்விக்கு நீ பதில் சொல்லல... சொல்ற எண்ணமும் இல்லைனு புரியுது" என்றான் கோபம் குறையாத குரலில்

"ச்சே ச்சே...அதெல்லாம் ஒண்ணுமில்ல சதீஷ்... உன்கிட்ட சொல்லாம இருப்பேனா... அப்படி யாரும் எதுவும் இல்ல போதுமா" என்றாள் சாதரணமாய்

பொய் சொல்லும் கலை சிறுவயது முதலே மீராவிற்கு கைவர பெற்றதில்லை என்பதை அறிந்தவன் என்பதால் அவள் முகத்தில் இருந்து ஏதேனும் படிக்க இயலுமா என்பது போல் அவளை இமைக்காமல் பார்த்தான்

"ஹலோ...என்ன பேஸ் ரீடிங் ட்ரை பண்றயா" என சிரித்தாள் மீரா, அவன் மனதை படித்தவள் போல்

அவளோடு சேர்ந்து சிரித்தவன், அவள் கூறியது உண்மை தான் என்ற புரிந்த நிம்மதியில் மௌனமானான்

அவர்கள் இருவரும் வெளியே வருவதை பார்த்த ஸ்டீவ் வேகமாய் மறைந்து நின்றான். ஆனால் அவர்களை கண்ணிமைக்காமல் கவனித்தவனுக்கு மனதில் ஒரு நிம்மதி பரவியது போல் உணர்ந்தான்

ஸ்டீவின் கண்கள் அவர்களுக்குள் காதல் பகிர்ந்து கொண்ட அன்னியோன்யம் இல்லாததை கண்டுகொண்டது. அந்த வரை நிம்மதி என நினைத்தான். இனி மேலும் தாமதிக்காமல் அவளிடம் தன் மனதை கூறி விடவேண்டுமென திட்டமிட்டான். அதற்கான சந்தர்ப்பமும் விரைவிலேயே கிடைத்தது

****************************

அன்று பிப்ரவரி மாதத்தின் கடைசி சனிக்கிழமை. மிக மெல்லிய பனிப்பொழிவு இருந்த போதும், எங்கும் மக்கள் வெள்ளம் தான். அதுவும் "டௌன்டவுன்" என்றழைக்கப்படும் நகரின் மையப்பகுதியில் இளைய சமுதாயத்தின் மொத்த பிரதிநிதிகளையும் அங்கு பார்க்க முடியும் வார இறுதி நாள் இரவுகளில்

ஸ்டீவ், சதீஷ், மீரா, மது நால்வரும் ஒரு கான்செர்ட் பார்க்க வந்திருந்தனர். அது ஒரு பியுசன் (Fusion) வகை கான்செர்ட் என்பதால் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே கூட்டம் அலை மோதியது

"நல்லவேள மொதலே டிக்கெட் வாங்கினோம்" என்றாள் மது

"ம்... நான் சொன்னப்ப கிண்டல் பண்ணினீங்க இந்த குளிர்ல யார் வருவான்னு" என சதீஷ் வேண்டுமென்றே ஸ்டீவ் கூறியதை சொல்லி காண்பித்தான்

"ஒகே பாஸ்... வாபஸ் வாங்கிக்கறேன் போதுமா" என்றான் ஸ்டீவ் சிரித்து கொண்டே

இது போல் இருவரும் இயல்பாய் விளையாட்டாய் பேசி பல நாட்கள் ஆகி இருந்த காரணத்தால் மீரா ஆச்சிரியமும் மகிழ்ச்சியுமாய் இருவரையும் பார்த்தாள். அது ஏன் தனக்கு சந்தோசத்தை அளிக்கிறது என அப்போது அவளுக்கு யோசிக்கவும் தோன்றவில்லை

அவள் பார்வையை மற்றும் சிரிப்பை ஸ்டீவ் கண்டுகொண்டான். இயல்பான அவளின் மகிழ்ந்த முகத்தை, சிரிக்கும் ஆதரங்களை திருட்டுத்தனமாய் ரசித்தான். இதற்காகவேனும் சதீஷிடம் முன் போல் இயல்பாய் இருக்கவேண்டுமென அவனுக்கு தோன்றியது

மீரா மட்டுமல்ல சதிஷிர்க்கு கூட ஸ்டீவ் அப்படி பேசியது ஆச்சிர்யம் தான். சில நாட்களாய் ஸ்டீவ் மீராவிடமும் சற்று விலகியே இருப்பதை அவன் கவனித்து வந்தான்

தன் நோக்கமும் அது தானே என நினைத்த சதீஷ் பழைய மகிழ்ச்சி திரும்ப "அப்படியே ஆகட்டும் சீடா... மறந்தேன் மன்னித்தேன்" என ஏதோ பழைய சினிமா பாணியில் கேலியாய் கூறினான்

நால்வரும் சிரிக்க, அதை தடை செய்வது போல் மதுவின் செல்போன் அலறியது

"எஸ் மது ஹியர்..."

"..."

"ஓ... நான் இங்க கான்செர்ட்க்கு வந்தேன் பூர்ணிமா"

"..."

"இப்பவா? நான் எப்படி...? ஒகே...நீ ஈட்டன் சென்டர்லையே (Eaton Center) வெயிட் பண்ணு. நான் ஒரு ட்வென்டி மினிட்ஸ்ல வந்துடறேன்"

"..."

"ஒகே பூர்ணிமா...சி யு தென்" என பேசியை அணைத்தவள் "சாரி கைஸ்.. நான் ஒரு பிரெண்ட்கிட்ட சில புக்ஸ் கேட்டு இருந்தேன்... அவ இப்ப ஈட்டன் சென்டர்ல இருக்காளாம்... போகணும்... இன்னும் கான்செர்ட் ஆரம்பிக்க கொஞ்சம் டைம் இருக்கே... போயிட்டு உடனே வந்துடறேன்... மீரா நீ வாயேன் எனக்கு தனியா போக போர் அடிக்குது" என மீராவை அழைத்தாள் மது

"ஐயோ...இந்த குளிர்லையா...நான் இல்ல" என்றாள் மீரா அவசரமாய்

"ஏன் மீரா... உனக்கு ஸ்னோ பிடிக்கும் தானே"

"ஸ்னோ பிடிக்கும் மது... ஆனா ஓவரா குளிருது... சாரி மது" என்றாள் பாவமாய்

மீரா வரவில்லை என்றதும் ஸ்டீவின் மனம் வேகமாய் கணக்கு போட்டது. சதீஷ் மதுவுடன் சென்றால் இது தான் சந்தர்ப்பம் மீராவுடன் பேச என நினைத்தான்

அதை செயல்படுத்தும் நோக்கத்துடன் முக்கியமாய் போனில் ஏதோ பார்ப்பதை போன்ற பாவனையுடன் மதுவை பார்க்காமல் நின்றான், தன்னை "வா" என மது அழைப்பாளோ என பயந்தவன் போல்

அவன் எதிர்பார்த்தது போலவே சதீஷ் "நான் வரேன் மது... மீரா நீ இங்க இருக்க ஒகேவா" என கேட்டான் ஒரு கண்ணால் ஸ்டீவை பார்த்தபடியே

"ம்... நான் என்ன கொழந்தையா... " என சிரித்தவள் சதீஷின் பார்வை போன திசையை உணர்ந்து "இவ்ளோ கூட்டத்துல தொலஞ்சு போய்ட மாட்டேன்" என்றாள் இயல்பாய், ஆனால் கவனமாய் ஸ்டீவின் பேரை சொல்ல தவிர்த்ததை ஸ்டீவ் சதீஷ் இருவருமே கண்டுகொண்டனர். அது ஒருவனுக்கு கோபத்தையும் மற்றவனுக்கு மகிழ்ச்சியையும் தந்தது

முன் போல் என்றால் சதீஷ் யோசித்திருப்பான், இப்போது கடந்த சில நாட்களாய் ஸ்டீவின் ஒதுக்கத்தை கண்ணுற்றதால் "ஒகே மீரா... செல்போன் இருக்கில்ல" என கேட்டு உறுதி செய்து கொண்டு மதுவுடன் சென்றான்

சதீஷின் செய்கை ஸ்டீவிர்க்கு கோபத்தை மூட்டியது. அதை விட மீராவும் அவனை ஒட்டியே பேசியது இன்னும் கோபத்தை அதிகமாக்கியது. தனிமையில் அவளிடம் காதல் சொல்ல நினைத்திருந்தவனுக்கு இப்போது கோபமே முன் நின்றது

"என்ன உன் பாடிகார்ட் எல்லா பத்திரமும் சொல்லிட்டு போயாச்சா?" என்றான் கோபமாய் மீராவை பார்த்தபடி

"அவன் புதுசா அப்படி இல்ல ஸ்டீவ்... சின்னதுல இருந்தே கொஞ்சம் ப்ரொடக்ட்டீவ டைப் தான்" உன்மேல் சதீசுக்கு எந்த தனிப்பட்ட பகையும் இல்லை என சொல்ல முயன்றாள் மீரா

"ஆமா... ஆனா என்னை மட்டும் வில்லன பாக்கற மாதிரி தான் லுக் விடுவான்... அதுக்கு நீயும் சப்போர்ட்.. ஏன் மீரா...என்னை பாத்தா உனக்கு அப்படி தான் தோணுதா" என்றான் அவளை குற்றம் சாட்டும் குரலில்

"அப்படி எல்லாம் இல்ல ஸ்டீவ்... நீயா எதையோ கற்பனை பண்ணிக்கற... " என்றவளின் குரலில் வருத்தம் மிகுந்து இருந்தது. அது அவனையும் பாதித்தது

"ச்சே...நான் நினைத்தது என்ன...செய்வது என்ன" என தனக்குள்ளயே நொந்து கொண்டான் ஸ்டீவ். மீராவுடன் இப்போதெல்லாம் தனிமை அமைவதே எப்போதாவது தான், இந்த சந்தர்பத்தில் கூட அவளுடன் சண்டை போடுகிறேனே என தன் மீதே கோபம் வந்தது

தனக்கும் சதீசுக்குமான பனிப்போரில் அதிகம் பாதிக்கப்படுவது மீரா தான் என தோன்றியதும் அவள் மீது இருந்த கோபம் விலகி பாவமாய் பார்த்தான்

இனி என்ன செய்வது என அறியாமல் திகைத்து நிற்கும் சிறுகுழந்தை போல் அவள் நின்ற தோற்றம் அவளை அப்படியே தோளில் சாய்த்து கொள்ளவேண்டும் போல் தோன்றியது ஸ்டீவிர்க்கு

வருத்தத்தில் சிரிப்பு மறைந்த அவள் கண்களில் சற்று முன் போல் சிரிப்பை வரவழைத்து பார்ப்பது தான் இப்போது அவசியம், மற்றதெல்லாம் பிறகு தான் என நினைத்தான்

தன்னை இப்படி அலைகளைப்பவள் மீது கோபம் வராமல் நாளுக்கு நாள் காதல் கூடுவது எப்படி சாத்தியம் என அவனுக்கு வியப்பாகவும் இருந்தது. இது தான் "லவ் இஸ் ப்ளைண்ட்" என்பதோ என நினைத்ததும் தன்னையும் அறியாமல் சிரித்தான்

அவன் சிரித்ததும் சற்று நிம்மதியானாள் மீரா, ஆனாலும் அதை காட்டிகொள்ளாமல் "ஏன் சிரிக்கற? என்னை திட்டினா உனக்கு சந்தோசமா இருக்கா ஸ்டீவ்?" என பரிதாபமாய் முகத்தை வைத்து கொண்டு கேட்டாள்

சற்று முன் நினைத்ததை அப்படியே கூறிவிட்டால் என்ன என ஒரு கணம் நினைத்தான் ஸ்டீவ். ஆனால் அவள் பரிதாபமான பாவனையை ரசித்தவன் மற்றதெல்லாம் மறந்து தான் போனான்

"இல்ல மீரா... உன்னை திட்டறது எப்பவும் எனக்கு சந்தோஷம் இல்ல... அது உனக்கும் தெரியும்..." என அவள் கண்ணோடு கண் நோக்கி ரகசியம் போல் மனதோடு பேசும் பாவனையில் ஆனால் அவளுக்கும் கேட்கும் விதமாய் கூறினான்

அவன் பார்வையும் பேச்சும் புரியாதவளாய் அதே நேரம் ஏதோ புரிவது போலவும் தோன்றிய மெல்லிய உணர்வில் மௌனமாய் நின்றாள் மீரா

ஏனோ அந்த மௌனமான நேரம் "இது தான் தருணம் அவளிடம் தன் மனம் திறந்து பேச" என தோன்ற செய்தது ஸ்டீவிர்க்கு
 
"மீரா...நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..." என ஸ்டீவ் ஏதோ சொல்ல வர அதே நேரம்
 
"Hey guys...you're here... yo...surprise" என அவர்கள் உடன் பயிலும் மாணவன் எட்வர்ட் உற்சாகமாய் ஸ்டீவின் தோளில் கை போட "அடச்சே... இவன் எங்க வந்தான் இந்த நேரத்துல..." என சற்று சத்தமாகவே முணுமுணுத்தான் ஸ்டீவ்

ஸ்டீவ் அப்படி கூறியதை வியப்பாய் பார்த்த மீரா, அதை கேட்காதவள் போன்ற பாவனையுடன் "Hei Edward... nice to see you" என்றாள் சம்பிரதாயமாய்

"I don't think everyone feels so Meer... what do you say man?" என ஸ்டீவின் முகத்தில் வெளிப்படையாய் தெரிந்த எரிச்சலை பார்த்தவாறே கேலியாய் கூறினான் எட்வர்ட்

கோபத்தை முகத்தில் இருந்து மறைக்க முயன்றவாறே "Not at all Ed...didn't expect to see you here..thats all" என்று சமாளித்தான் ஸ்டீவ்

"Edward.. call me Meera...not Meer...it's a simple two syllable name you know...mee-raa" என எப்போதும் போல் இந்த ஊர் மக்கள் பலரும் தன் பெயரை சுருக்குவது பிடிக்காதவளாய் அதே நேரம் சிரித்து கொண்டே கேலியாய் கூறினாள்

"You know what meer...sorry mee-raa... I really try...sometimes not working you know..." என சிரித்தான் எட்வர்ட்

"Okay.. I appreciate you trying Edward..." என்றாள், கேலியாய் அவனுக்கு மரியாதை செய்வது போல் மெல்ல தலை தாழ்த்தி அழகாய் சிரித்தவாறே

அந்த கணம் அப்படியே அவளை தன் கைக்குள் வைத்து கொள்ள வேண்டும் போல் உணர்ந்தான் ஸ்டீவ்

அதே நினைவில் தனிச்சையாய் எழுந்த கையை எட்வர்டின் தோளில் பதித்தான் இயல்பான செய்கை போல், ஆனாலும் அவளை விட்டு பார்வையை விலக்கிக்கொள்ளவில்லை

மீரா ஸ்டீவின் இமைக்காத பார்வை தன்னை குறுகுறுப்பது போல் உணர்ந்தாள். "ஏன் இப்படி பாக்கறான்? ஆனாலும் பொண்ணுகள ஓவரா சைட் அடிக்கறதுல இவன் சதீஷை மீறிடுவான் போல" என மனதிற்குள் நினைத்து சிரித்து கொண்டாள் மீரா

அவள் அப்படி நினைத்ததை மட்டும் வாய் விட்டு சொல்லி இருந்தால் அங்கு ஒரு குருசேத்ரமே நடந்திருக்கும் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. சதீஷை எந்த காரணத்திற்காகவும் தன்னோடு ஒப்புமைப்படுத்தி பேசப்படுவதை அதுவும் மீரா பேசுவதை ஸ்டீவ் சுத்தமாய் வெறுத்தான்

"Then, whats up guys?" என ஆரம்பித்த எட்வர்ட் "Actually, I wanted to ask you something Meer...sorry...mee-raa" என அவள் பெயரை சரியாய் சொல்லிவிட்டேனா என கேட்பது போல் பார்த்தான் எட்வர்ட்

"Not bad Edward... ha ha...okay...what do you want to ask me?"

"I saw a movie yesterday in some movie channel...a bit old I guess.. Slumdog Millionaire"

"Yeah...an Oscar award winner" என்றாள் மீரா பிறந்த நாட்டின் மீது கொண்ட பெருமிதத்துடன். அவளுக்கு "தான்" இந்திய நாட்டின் பிரஜை என்பதில் எப்போதும் பெருமை உண்டு

தேசபற்று என கொடி பிடிக்கும் ரகம் இல்லை என்றாலும், அவசியம் இன்றி தன் நாட்டையோ தங்கள் பாரம்பரியத்தையோ அல்லது கலாச்சாரத்தையோ பழிப்பவர்களை திட்டி தீர்த்து விடுவாள்

சதீஷ் கூட கேலி செய்வான் "அநேகமா நீ தான் போன ஜென்மத்துல ஜான்சி ராணியா இருந்து இருப்பேன்னு தோணுது... ஆனாலும் ஓவர் ரியாக்ட் பண்ற மீரா. மத்தவங்க அப்படி பேசறது தப்புதான்னாலும் அது அவங்க அறியாமைனு விட்டுடு... why do you bother to explain those idiots?" என்பான்

"நான் அப்படி தான்... எனக்கு என் வீடும் நாடும் பெருசு தான்... என்ன பிரச்சனைகள் இருந்தாலும் that is where I belong... அப்படி பேசறவங்களுக்கு நான் பதில் சொல்லாம இருந்தா நானும் அதை ஒத்துக்கிட்டதா அர்த்தம்....என்னால அப்படி இருக்க முடியாது" என கோபமாய் கூறுவாள்

"What about that movie?" என ஆர்வமாய் கேட்டாள் மீரா எட்வர்டிடம்

"Yeah, heard about Oscar... Is your country really slum like that everywhere? I mean... all country?" என்று தயக்கமாய் எட்வர்ட் நிறுத்த கணநேரத்தில் மீராவின் முகம் சிவந்தது

மீராவை பற்றி இந்த விசயத்தில் அறிந்திராத ஸ்டீவ் அந்த பேச்சு போகும் திசையை பெரிதாய் எடுத்துக்கொள்ளாமல் வழக்கம் போல் மௌனமாய் மீராவை ரசித்து கொண்டிருந்தான்

அதே நேரம் மீராவின் கோபம் எல்லை மீறி இருந்தது "Edward....May I ask you something too? I heard your country is a landmark for AIDS... Does everyone have AIDS in your country?" என்றாள் பற்களை கடித்து கோபத்தை அடக்கியவாறே

அப்படி ஒரு தாக்குதலை எதிர்பாராத எட்வர்ட் என்ன பேசுவது என தெரியாமல் விழித்தான். எட்வர்ட் தயக்கமாய் ஸ்டீவை பார்க்க "Meera...that was so rude" என்றான் ஸ்டீவ், அவள் பேசியது தவறு என மனதில் தோன்றியதை தனிச்சையாய் கூறுபவன் போல்

ஆனால் தான் இயல்பாய் கூறிய அந்த ஒரு வார்த்தை தன் மொத்த கனவையும் குலைக்க போவதை ஸ்டீவ் அப்போது அறிந்திருக்கவில்லை

அக்ஹிம்சைதான் கொள்கைஎனக்கு
ஆனால்வன்முறையும் பிடிக்கும்
உனக்குஎனக்கும் இடையில்
உருவாகும் தருணத்தில்!!!

காதலில் வன்முறை
காட்டாற்று வெள்ளம்போல
வெள்ளமில்லாகாடு செழிக்காது
வன்முறையில்லா காதல்ரசிக்காது!!!

உன்னையும் ரசிக்கும்ஆவலில்
உன்னையே மறக்கிறேனே
இதைகேட்கும் உன்கோபத்தை
இப்போதும் ரசிக்கிறேனே!!!

இனி...

அடுத்த பகுதி படிக்க

(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்...)

65 பேரு சொல்லி இருக்காக:

பிரதீபா said...

he he

Chitra said...

அதே நேரம் மீராவின் கோபம் எல்லை மீறி இருந்தது "Edward....May I ask you something too? I heard your country is a landmark for AIDS... Does everyone have AIDS in your country?" என்றாள் பற்களை கடித்து கோபத்தை அடக்கியவாறே


........quite interesting....

....http://www.avert.org/india-hiv-aids-statistics.htm
....ம்ம்ம்ம்ம்ம்......

நசரேயன் said...

//லவ் இஸ் ப்ளைண்ட்//

நோ .. லவ் இஸ் ஜவ்வு நத்திங் பட் ஜில்லுனு ஒரு ஜவ்வு

நசரேயன் said...

//தன்னை இப்படி அலைகளைப்பவள் மீது கோபம் வராமல் நாளுக்கு நாள் காதல் கூடுவது எப்படி சாத்தியம் என அவனுக்கு வியப்பாகவும் இருந்தது.//

வேற வேலை வெட்டி இல்லனா இப்படிதான் யோசிக்கதோணும்


//"மீரா...நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..."//

சீக்கிரம் சொல்லிட்டா.. நாங்க அடுத்த பொழப்ப பார்ப்போம்

//"You know what meer...sorry mee-raa... I really try...sometimes not working you know..."//

please try with appavi idly, then you will never be able to speak at all.

நசரேயன் said...

வாசகர் கேள்வி:

ஸ்டீவ் மீராவை கொன்னு .. சதீஷ் மதுவை கொன்னு ..
ரெண்டு பேரும் காதல் பட முருகன் மாதிரி டொரோண்டோ யாங்கி தெருவிலே அலையுற மாதிரி முடிவு இருக்குமா ?

நசரேயன் said...

//
காதலில் வன்முறை
காட்டாற்று வெள்ளம்போல
வெள்ளமில்லாகாடு செழிக்காது
வன்முறையில்லா காதல்ரசிக்காது!!!
//

அடுத்த பகுதியிலே அருவா, கத்தி, சுத்தி எல்லாம் இருக்குமா ?

பாமர ரசிகன் said...

கவிதை நல்ல இருக்கு...

அன்னு said...

இந்தா பாருங்க, நான் ஓட்டு போட்டது நல்ல இருக்குன்னு சொல்லியில்லை, சீக்கிரம் கதைய நகுத்துங்கன்னு, சரியா??? :))

எல் கே said...

இப்பதான் கதை சூடு பிடிக்க ஆரமிச்சு இருக்கு

அனாமிகா துவாரகன் said...

//நோ .. லவ் இஸ் ஜவ்வு நத்திங் பட் ஜில்லுனு ஒரு ஜவ்வு //
ஹி ஹி.

ஏனோ மீராவ எனக்கு பிடிக்கவே இல்லை. என்ன தான் கடும் குளிர் என்றாலும், நல்ல பிரன்ட்டு கேட்டால் இவங்க போகமாட்டாங்களாம். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

கதையை முடிச்சுட்டு கோல் பண்ணுக்கா. படிக்கறேன். நற நற என்று பற்களை கடித்துக்கொண்டு எழுதுகிறேன்.

அனாமிகா துவாரகன் said...

உங்க காமடி டச் மிச்சிங்க்கா.

Vasagan said...

\அவன் பார்வையும் பேச்சும் புரியாதவளாய் அதே நேரம் ஏதோ புரிவது போலவும் தோன்றிய மெல்லிய உணர்வில் மௌனமாய் நின்றாள் மீரா \

கொஞ்சம் முன்னேற்றம்

Vasagan said...

\மீரா ஸ்டீவின் இமைக்காத பார்வை தன்னை குறுகுறுப்பது போல் உணர்ந்தாள். "ஏன் இப்படி பாக்கறான்? ஆனாலும் பொண்ணுகள ஓவரா சைட் அடிக்கறதுல இவன் சதீஷை மீறிடுவான் போல" \

முதல் கமெண்ட் வாபஸ்

Vasagan said...

மீரா தேராது போல Steve க்கு வேற பொண்ணை பார்க்கவேண்டியதுதான்

Vasagan said...

\அக்ஹிம்சைதான் கொள்கைஎனக்கு
ஆனால்வன்முறையும் பிடிக்கும்
உனக்குஎனக்கும் இடையில்
உருவாகும் தருணத்தில்!!!\
கவிதை அருமை, ஆனால் இந்த episode க்கு ஒத்துவராத மாதிரி தோணுது, ஏன இன்னும் நண்பர்கள் தானே காதலர்கள் ஆகவில்லையே.

எல் கே said...

அனா, அப்பாவிக்கு என்ன தண்டனை குடுக்கலாம்

Vasagan said...

\அனாமிகா துவாரகன் சொன்னது…

உங்க காமடி டச் மிச்சிங்க்கா.\

குழந்தைக்காகவும் LK யோட தொடர்க்காகவும் அப்பாவி தங்கமணி பெயர் எதனால் வந்தது. தகுந்த ஆதரங்களுடன் விளக்கவும்.ஹி ஹி பக்கத்துக்கு இலைக்கு பாயசம் இல்லை.

Vasagan said...

Caption படம் ஏனோ மனத்துக்கு கஷ்டமாக இருக்கிறது .

Vasagan said...

\எல் கே சொன்னது…

அனா, அப்பாவிக்கு என்ன தண்டனை குடுக்கலாம் \
|குழந்தைக்காகவும் LK யோட தொடர்க்காகவும் அப்பாவி தங்கமணி பெயர் எதனால் வந்தது. தகுந்த ஆதரங்களுடன் விளக்கவும்\

LK அப்பாவிக்கு தண்டனை கொடுத்தாச்சு. ஆனா நாம்தான் படணும்

கோவை ஆவி said...

//வெள்ளமில்லாகாடு செழிக்காது
வன்முறையில்லா காதல்ரசிக்காது!!! //

Simply Superb!!

தங்கம்பழனி said...

சும்மா ஜில் ஜில்..ன்னு இருக்கு..!

asiya omar said...

ஜிவ்வென்று இருக்கு. அடுத்த வாரம் தவறாமல் வந்திடுறேன்பா.

siva said...

present teacher..

அமைதிச்சாரல் said...

//காதலில் வன்முறை
காட்டாற்று வெள்ளம்போல
வெள்ளமில்லாகாடு செழிக்காது
வன்முறையில்லா காதல்ரசிக்காது//

பின்னாடி பூரிக்கட்டை அடிவாங்க வேண்டியிருக்கும்கறதை, மீரா சூசகமா சொல்லிட்டா.ஸ்டீவ்வ்வ்வ்.... ஓடி தப்பிச்சுக்கோ!!. வேற நல்ல பொண்ணா பாரு :-)))))))))

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

கதை சூப்பர், ஆனா கொஞ்சம் ஜவ்வு மாதிரி தெரியுது சகோ.

இன்னும் எத்தனை செவ்வாய் கிழமை தொடரப் போவுதோ தெரியல. jokes apart. very interesting story.

Jaleela Kamal said...

போன தொடரும் படிச்சாச்சு, கொஞ்சம் ஜவ்வாதா இருக்கு, சரி அடுத்து என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்

சே.குமார் said...

nalla poguthu.... ennnum valarattum

middleclassmadhavi said...

மீராவ இப்போ தான் பிடிக்குது!..

இராஜராஜேஸ்வரி said...

அக்ஹிம்சைதான் கொள்கைஎனக்கு
ஆனால்வன்முறையும் பிடிக்கும் //
Is it?? good....

Balaji saravana said...

வீ வாண்ட் ஸ்பீட் அப்பாவி! :)

சுசி said...

அடடா.. இப்டி சண்டையா போச்சே..

priya.r said...

உன்னையும் ரசிக்கும்ஆவலில்
உன்னையே மறக்கிறேனே
இதைகேட்கும் உன்கோபத்தை
இப்போதும் ரசிக்கிறேனே!!!

வாவ் ! பிடித்து இருக்கு அப்பாவி சூப்பர் பா .,ஹய்யோ மைசூர் பா இல்லை பா
நல்லா இருக்குன்னு சொன்னேன் பா

priya.r said...

"சொல்லு புவி !யாரையாச்சும் லவ் பண்றயா?" என்றாள் அபி அன்று மீண்டும்

"ஹா ஹா... ஏன் இந்த கேள்வி திடீர்னு?" என சிரித்தாள் புவி

"சும்மா...இன்னைக்கி வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷல் கொஸ்டின்னு வெச்சுக்கோயேன்... ஏன் நான் கேக்கக்கூடாதா?" என புதிர் போட்டா அபி என்று செல்லமாக அழைக்கப்படும் அப்பாவி தங்கமணி

"ம்... இதுக்கு முன்னாடி வந்த வேலண்டைன்ஸ் டேல எல்லாம் நீ கேட்டதில்லையே" என அவளும் விடுவேனா என்பது போல் சீண்டினாள்

"இஷ்டம் இல்லைனா சொல்ல வேண்டாம்" என்றவளின் முகத்தில் சற்று முன் இருந்த கேலி போய் கோபம் வந்திருந்தது

"இப்பவெல்லாம் நீ ஓவரா கோபப்படறே என்கிட்ட" என்றவளின் முகம் சோர்ந்து போனது

அதை கண்டு வருந்திய போதும் "கோபபட்ற மாதிரி நீ நடந்துக்கற...என்ன செய்யறது?" என்றாள் அபி விடாமல்

"ஒகே... நான் மோசம் தான் விடு" என்றாள்

"இன்னும் என் கேள்விக்கு நீ பதில் சொல்லல... சொல்ற எண்ணமும் இல்லைனு புரியுது" என்றாள் கோபம் குறையாத குரலில்

"ச்சே ச்சே...அதெல்லாம் ஒண்ணுமில்ல அபி ... உன்கிட்ட சொல்லாம இருப்பேனா... அப்படி யாரும் எதுவும் இல்ல போதுமா" என்றாள் சாதரணமாய்

பொய் சொல்லும் கலை சிறுவயது முதலே புவிக்கு கைவர பெற்றதில்லை என்பதை அறிந்தவள் என்பதால் அவள் முகத்தில் இருந்து ஏதேனும் படிக்க இயலுமா என்பது போல் அவளை இமைக்காமல் பார்த்தாள்

"ஹலோ...என்ன பேஸ் ரீடிங் ட்ரை பண்றயா" என சிரித்தாள் புவி , அவள் மனதை படித்தவள் போல்

அவளோடு சேர்ந்து சிரித்தவள் , அவள் கூறியது உண்மை தான் என்ற புரிந்த நிம்மதியில் மௌனமானாள்

ஹி ஹீ எப்படி அப்பாவி நாங்க மாற்றி சொல்லும் கதை !
நோ நோ சிவ ராத்திரி அன்னைக்கு திட்ட கூடாது ஹ ஹா
மீண்டும் வருவேன் !

vgr said...

eppo mudiyum inda kadai? :)

But you see...why do u have make meera a saint....she is beautiful, she is brilliant, she has culture, values, virtues...what not? anything that is good...is in meera. I understand that its a writer's intuition to keep the protagonist in a positive light...but this is too much :)
In fact kadai karan johar padam mari...iruku :) too cheesy!!

Anonymous said...

ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏய், யாரு கரன் ஜொகோர் படம் மாதிரி இருக்குன்னு சொல்லறது. பாவம், கரன் ஜொகோரை விட்டுடுங்க. அப்பாவி இந்தியா போனப் போ, ஏதோ நடந்திடுச்சு. அதனால தான் இவ்ளோ தள்ளாட்டம். இப்பத் தான் பேய் ஓட்டறவன் கிட்ட கூட்டிட்டுப் போய் பேய் ஓட்டிட்டு வரேன். இனி ஒழுங்கா எழுதுவாங்க.

Ana

Anonymous said...

நானும் மூணு மணி வரை முழிச்சு இருந்து கம்ளைன் பண்ணிட்டு இருக்கேன். மீராவ ரொம்ப அப்பாவின்னு காட்ட நினைக்கறாங்க. பட், அவுட் கம் என்னன்னா, நமக்கு படிக்கும் போது மீரா இன்னசன்ட்டுன்னு படல. சரியான ஒரு இரிட்டேட்டிங் கரக்டராகத் தான் தோன்றது. ஸ்டீவுக்கு மது ரொம்ப நல்ல சொய்ஸ்.

Vasagan said...

\priya.r சொன்னது…

"சொல்லு புவி....\
Priyamma

ஏன்ன்ன்ன் , சிவராத்திரி அதுவுமா சிவனை கும்பிடாம அப்பாவி Blog யை படித்தால் இப்படி தான் கனவு வரும்.

Vasagan said...

\நானும் மூணு மணி வரை முழிச்சு இருந்து கம்ளைன் பண்ணிட்டு இருக்கேன். \
சுனாமி
யாரு சிவன் கிட்டயா, அந்த சிவனே வந்தாலும் எங்க புவனேஸ்வரி இடம் செல்லாது.

vinu said...

echu kichumeee ippo mr.steve enna solla varrraaruuu.....

meerraa enna solla varraanga.....

kadaiciyaa neenga enna solla vareengaaa

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

அடடா ஒரு நான்கு பகுதி படிக்க முடியாம போச்சேன்னு ரொம்ப வருத்தமா வந்தேன்.
நல்ல வேலை கதை அங்கயே தான் இருக்கு.எல்லாம் புரியுது.

Charles said...

ஆகா.. நான் நினைச்சது நடக்கும் போல இருக்கே? Thanks to Edward.. :D மறுபடியும் கவிதை.. நன்றி அப்பாவி மேடம்... ஒரு காலத்தில் நானும் கவிதை எழுதி இருக்கேன். இப்போ இருக்குற work busy-la யோசிச்சாலும் ஒண்ணும் முடியல.. பாருங்க நேத்து போட்ட கதையை இன்னிக்கு தான் படிக்க முடியுது. எப்படியோ உங்கள் எழுத்து பணி மென் மேலும் தொடர வாழ்த்துக்கள்..

அப்பாவி தங்கமணி said...

@ பிரதீபா - பேசாம திட்ட வந்ததை திட்டிடு தீபா...:)

@ Chitra - தேங்க்ஸ் சித்ரா

@ நசரேயன் - ஹா ஹா ஹா... செம கமெண்ட்ஸ்...அதுவும் ஸ்டீவ் அண்ட் சதீஷ் முருகனா யங் ஸ்ட்ரீட் கற்பனை...ஹா ஹா ஹா... ஆமாம் கோடாலி, வீச்சருவா எல்லாமும் வரும்...உங்க ஊர் சந்தைல தான் வாங்க போறோம்...:)

@ பாமர ரசிகன் - நன்றிங்க

@ அன்னு - ஓ...இதுக்கு இப்படி ஒரு மீனிங் இருக்கா? சரிங் ஆத்தா... பாயிண்ட் நோடேட்... :)))

@ எல் கே - மேல இருக்கற படத்த பாத்து சொல்றியோ... ஜஸ்ட் கிட்டிங்...தேங்க்ஸ்...:)

@ அனாமிகா - எல்லாரும் உன்னை போலவே நட்புக்கு இலக்கணமா இருக்க முடியுமா தெய்வமே? அடக்கொடுமையே கதை எக்கசக்க டென்ஷன்ல இருக்கறப்ப காமடி எங்க போய் நுழைக்கறது? நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன், இதான் நான் ப்ளாக்ல எழுதற கடைசி தொடர் கதை... ஹா ஹா ஹா...This kind of stories run based on thoughts and not much facts. I don't think this kind would win in a blog as this needs much more patience for readers to wait...:))))

@ Vasagan - ஹா ஹா ஹா... மீரா தேறாதா? ஸ்டீவ் குடுத்து வெச்சது அவ்ளோ தான் அப்போ... :)..... இந்த கவிதை ஸ்டீவின் மனநிலையை குறிப்பது பார்த்தால் பொருந்தும் என நினைக்கிறேன்.. என்னெனில் அவன் தான் "காதலில் விழுந்தேன்"னு இருக்கானே...:)

@ எல் கே - தண்டனையா? அது சரி..:)

@ Vasagan - அந்த பத்ரகாளி போஸ்ட் மறுபடி பப்ளிஷ் பண்ணிடறேங்க..:)... கேப்சன் படம் நெகடிவா போய்டுச்சோ... இனி கவனமாய் பார்க்கிறேன்... நன்றி... :)

@ தங்கம்பழனி - நன்றிங்க..

@ asiya omar - தேங்க்ஸ் ஆசியா..:)

@ siva - அட்டெண்டன்ஸ் நோடேட்...

@ அமைதிச்சாரல் - ஹா ஹா ஹா... :)

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - நன்றிங்க..

@ Jaleela Kamal - பாருங்க பாருங்க...நன்றிங்க..:)

@ சே.குமார் - நன்றிங்க

@ middleclassmadhavi - எனக்கு மொதல் எபிசொட்ல இருந்தே பிடிச்சது... ஹா ஹா... நன்றிங்க..:)

@ இராஜராஜேஸ்வரி - தேங்க்ஸ்...:)

@ Balaji saravana - யு வான்ட் ஸ்பீட்???? அப்படினா Sandra Bullock தான் கூப்பிடணும்...ஹா ஹா...ஜஸ்ட் கிட்டிங்... ஐ வில் ட்ரை மை பெஸ்ட்... :)))

@ சுசி - ஆமாங்க... சண்டயாத்தான் போச்சு...:)

@ priya.r - ஹா ஹா...தேங்க்ஸ் அக்கா.. கதை எல்லாம் நல்லா மாத்தி தான் சொல்றீங்க... திட்டகூடாதுனு வேற சொல்லியாச்சு...சரி பொழச்சு போங்க...:)

@ vgr - எப்போ முடியும்னு எனக்கும் தெரியலங்க... writing episode by episode... I don't think I portraited Meera as a Saint, may be more innocent. Also, I don't think anything good is all Meera is how it is shown, she is somewhat shorttempered, not good with personal judgement, kind of wavering mind which are all the reasons why she didn't realise about Steve attraction towards her. May be a little too much in positive side, but I felt thats needed for the story. Karan Johar? thanks, I'll take it as a compliment....:)... //too cheesy!!// thank god someone said this, I really wanted to hear this honestly as I like it to be that way... Thanks for the elaborate comments, helped me analyze in this point of view...:))))

@ அனாமிகா - ஆஹா...என்ன புதுசா மதுவை உள்ள தள்ற நீ... :)

@ Vasagan - ஹா ஹா ஹா... எஸ் எஸ்... புவனத்துக்கு ஈஸ்வரினு டயலாக் வேணா விட்டுக்கலாம்...:)

@ vinu - எல்லாரும் சொல்ல வர்றது என்னன்னா... சரி வேண்டாம் விடுங்க... புரிந்தது புரிந்ததாககவே இருக்கட்டும், புரியாதது புரியாததாகவே இருக்கட்டும், எது புரிந்ததோ அது நன்றாகவே புரிந்தது, எது புரியவில்லையோ அது நன்றாகவே புரியவில்லை... இப்ப உங்களுக்கு எதுனா புரிஞ்சது? இல்லை தானே? அதான் எனக்கு வேணும்... ஹா ஹா...:))))

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - அங்கேயே தான் நிக்குது...இல்லிங்க கொஞ்சம் தள்ளி வந்துடுச்சு... :)

@ Charles - ஒரு காலத்துல எழுதி இருந்தா நிச்சியம் மறுபடி எழுதலாம்... நான் கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் கழிச்சு மறுபடி ஆரம்பிச்சேன்... இட்ஸ் நெவெர் லேட்... நன்றிங்க...:)

வல்லிசிம்ஹன் said...

சஸ்பென்ஸ் தாங்கலியே தங்கமணி. மீரா , கிருஷ்ணனுக்குத்தானே. ராஜாவுக்கு இல்லன்னு முடிவெடுத்திட்டேன்.
என் பதினெட்டு வயசிலியே மணியனின் காதல் கதைகளின் படக் படக் கஷ்டப்படுத்தும். இந்தக் கதை அதைத் தூக்கிச் சாப்பிட்டுடும் போல இருக்கு:)
வாழ்த்துகள்.

சௌந்தர் said...

ஆனால் தான் இயல்பாய் கூறிய அந்த ஒரு வார்த்தை தன் மொத்த கனவையும் குலைக்க போவதை ஸ்டீவ் அப்போது அறிந்திருக்கவில்லை////

முடிக்கும் போது இப்படி ஒன்னு சொல்லிடுங்க ....

Lakshmi said...

கதை இப்பதானே சூடு பிடிக்கவே ஆரம்பிச்சிருக்கு.

priya.r said...

//நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன், இதான் நான் ப்ளாக்ல எழுதற கடைசி தொடர் கதை... ஹா ஹா ஹா...This kind of stories run based on thoughts and not much facts. I don't think this kind would win in a blog as this needs much more patience for readers to wait...:))))//

அப்பாவீஈஈஈஈஈஈஈஈஈஈஇ

என்ன வார்த்தை சொல்லி விட்டாய் !
என் சொன்னாய்
எதற்கு சொன்னாய்
எதனால் சொன்னாய்

இந்த பதிவுலகம் எப்படி இதை தாங்கும்.....................................
உனக்கு என் கண்டனங்கள்...................
வாசக பெருமக்களும் அப்பாவிக்கு தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்கலாம்

தக்குடு said...

//vgr சொன்னது…
eppo mudiyum inda kadai? :)//

ஹா! ஹா! ஹா! யோவ் vgr, நீங்களும் என்னல்லாமோ கேள்வி எல்லாம் கேட்டுத்தான் பாக்குரீரு! ஆன நம்ப 'இட்லி மாமி' பொதிகைல வரும் 'எதிரொலி' ஆள் மாதிரி "நல்ல கேள்வி! உண்மைலயே யோசிக்கவேண்டிய விஷயம்!"னு பீலிங்கோட சொல்லிட்டு "ஹம்ம், அடுத்த கடிதத்தை படிங்கம்மா!!"னு நிர்மலாபெரியசாமி கிட்ட சொல்லறமாதிரி //மீராவின் கண்களையே கேள்வியோடு பார்த்தான் ஸ்டீவ்//னு எழுதி காமெடி பண்ணறாங்க!!..;))

ஸ்வர்ணரேக்கா said...

//அவன் எதிர்பார்த்தது போலவே சதீஷ் "நான் வரேன் மது... மீரா நீ இங்க இருக்க ஒகேவா" என கேட்டான் ஒரு கண்ணால் ஸ்டீவை பார்த்தபடியே//

-- இது சரியில்லையே... மது கூப்பிடாம சதீஷ் தானே வரேன்னு சொல்லக்கூடாதே!!!

priya.r said...

கதையை ஒரு பத்து பேர் குறை சொன்னால் மீதி 90 நல்லா இருக்கும் என்று தானே அர்த்தம்

அதை விட்டு விட்டு யாரோ ஏதோ சொன்னாங்கன்னு நீ இனி மேல் தொடர் பதிவு எழுத மாட்டேன்னு அடம் பிடித்தா என்ன அர்த்தம்

வந்து சொன்னதை வாபஸ் வாங்கு பா ப்ளீஸ் :( :(

priya.r said...

இந்த தொடர் கதையிலும் பாராட்டும் விஷயங்கள் நிறையவே இருக்கு அப்பாவி
மீரா என்ற வெகுளி பெண் ,சதீஷ் என்ற கேரக்டர் ,ஸ்டீவ் என்ற ஒரு இளைஞன் காதல் வயப்படும் சூழ்நிலைகள்
அதற்க்கான நிகழ்வுகள் ;அதிகமா இந்த மூவரை சுற்றி கதை பின்ன பட்டு இருக்கும் விதம்
என்று சொல்லி (50 ய் கொண்டு! இது ரெம்பா முக்கியம் ) செல்கிறேன்

அப்பாவி தங்கமணி said...

@ வல்லிசிம்ஹன் - ரெம்ப நன்றிங்க வல்லிம்மா... very encouraging words...:)

@ சௌந்தர் - ha ha ha... வேற எப்படி உங்கள மறுபடி வர வெக்கறது... :)

@ Lakshmi - நன்றிங்க லக்ஷ்மிம்மா...

@ priya.r - ஹா ஹா ஹா... ப்ரியா அக்கா நான் கதையே எழுத மாட்டேன்னு சொல்லலை...அப்படி எல்லாம் யாரும் சந்தோச பட்டுக்க வேண்டாம்... (ஹா ஹா ஹா)... What I meant was இந்த வகை கதைகள் கொஞ்சம் பொறுமய சோதிக்கற ரகம், மொதலே ஒரு பிரெண்ட் சொன்னார் "இந்த டைப் கதை ஒரே மூச்சா புக் மாதிரி படிக்கறதுக்கு ஒகே, தொடர்கதைனா கஷ்டம்"னு... அந்த அர்த்ததுல சொன்னேன் அக்கா... என்கிட்ட இருந்து யாரும் தப்பிக்கவெல்லாம் முடியாது... தொடர்ந்து எழுதுவேன்... வேற விதமா நான் சொன்னது மீன் பண்ணி இருந்தா சாரி... (ஐயையோ... இந்த அனாமிகா வேற இப்படி நெனச்சு கோச்சுக்க போறா... Not at all Anamikaa... you know better than that about me... :))

@ தக்குடு - ha ha ha... சூப்பர் தக்குடு... அப்படியே அந்த தூர்தர்சண் நாளுக்கு இழுத்துட்டு போய்டுச்சு இந்த கமெண்ட்... செம.... LOL ....:)))

@ ஸ்வர்ணரேக்கா - நல்ல பையன் சதீஷ், பாவம் அவ தனியா போகணுமேனு ஹெல்ப் பண்றான்னு நினைக்கிறேன்...நீங்க வேற நினைக்கற மாதிரி இருக்கே ஸ்வர்ணா...ஹா ஹா...:)

@ priya.r - என்ன அக்கா இது? அனாமிகாகிட்ட சொன்ன அதே தான் இப்பவும் சொல்றேன்... you know me better than this...right? Honestly, I appreciate negative comments which helps me analyze my writing in that way and correct myself... I never get discouraged by comments (அப்படி பாத்தா நான் நூறு போஸ்ட் போட்டு இருக்க முடியுமா சொல்லுங்க...ஹா ஹா ஹா...) நான் சொன்னது இந்த டைப் ஸ்டோரீஸ் சரி வராதுன்னு தான்... வேற டைப் தொடர்ந்து எழுதி எல்லாரையும் கொடுமை படுத்துவேன் என்பதை கொலை வெறியுடன் தெரிவித்து கொள்கிறேன்... இப்ப ஒகேவா...:))))))

Vasagan said...

\வேற டைப் தொடர்ந்து எழுதி எல்லாரையும் கொடுமை படுத்துவேன் என்பதை கொலை வெறியுடன் தெரிவித்து கொள்கிறேன்... இப்ப ஒகேவா...\

Vanmurai Varam

priya.r said...

ஹி ஹீ அது தானே பார்த்தேன் ;என்னடா என்னை தவிர ஒருத்தரும் சீரியஸா எடுதுகவே இல்லைன்னு ஒரு டவுட்ட்டும் இருக்க தான் செய்தது :)

vgr said...

AT, nan karan johar ai hate seigiren ;) but good to know...actually idellam neenga manasula nenakreenga...ana kadai la varala...unga mind'la odardu theriyudu...

Thakkudu, ennai badil poda vaithathu un comment...too funnY!!! illata J. oru. Kadal ku oru comment than :)

priya.r said...

@ அப்பாவி

அடபாவி ! சொல்லறதை கொஞ்சம் தெளிவா சொல்லி தொலைச்சா தான் என்ன !

நீ என் தொடர் கதையை எழுத வேண்டும்ன்னு நானும் மெகா சீரியல் ரேஞ்சுக்கு யோசித்து மெயில் அனுப்பலாமான்னு நினைச்சு கிட்டு இருந்தேனே .,சரி இதென்ன புதுசா சாரி பூரி எல்லாம் சொல்லிக்கிட்டு !

ஹய் ஹய் அனாமி இதுவும் ஒரு சான்ஸ்! நல்ல கோட்சுக்கோ! ஹ ஹா

priya.r said...

//வேற டைப் தொடர்ந்து எழுதி எல்லாரையும் கொடுமை படுத்துவேன் என்பதை கொலை வெறியுடன் தெரிவித்து கொள்கிறேன்... இப்ப ஒகேவா...:)))))) //

சரி சரி உனது ஜவ்வு வானம் விழும் வரை இழு ;பூமி பிளக்கும் வரை இழு

இன்று முதல் நீ ஜவ்வரசி அப்பாவி என்று புகழ படுவாய் :) :)

Vasagan said...

\ஜவ்வரசி அப்பாவி\

Priyama உன் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு :))))))
But I like it.

priya.r said...

ஹ ஹா

புரபசர் .,இதோ உங்களுக்காக ஒரு புது குறள்

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ;ஆறாதே அப்பாவிஉன்

பதிவினால் சுட்ட வடு.....

Vasagan said...

\தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ;ஆறாதே அப்பாவிஉன்

பதிவினால் சுட்ட வடு.....\
athunala thane Sunami Austrliyala breadyai potu kothi eduthukitu irukaa.

priya.r said...

அப்பாவி ! உன்னைய புகழ லாம்னு நினைக்கும் போது வார்த்தைகள் ஓடி ஒளிந்து கொள்கின்றன

ஆனால் உன்னை கலாய்க்கலாம்ன்னு நினைத்தாலே வரிகள் வந்து வரிசையில் நிற்கின்றனவேஏஏ

நான் என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்

இரண்டு அப்பாவி வேண்டும் ! மொக்கை போட ஒன்று ., கவிதை போட இரண்டு.,

இரண்டு அப்பாவி வேண்டும் !

அப்பாவி தங்கமணி said...

@ VGR - ha ha...thank you... oh yes, thakkudu comments always unique right?...:)))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r & Vasagan -
அக்கா அண்ட் அண்ணா, நானும் அனாமிகாவும் out-of-court settlement நேத்து பண்ணிண்டாச்சு...
(அனாமிகா - என்ன சொல்லி மெரட்டி செட்டில்மென்ட் அப்படிங்கறதெல்லாம் சிதம்பர ரகசியம் ஒகே...ஹா ஹா)

அதோட இப்படி எல்லாம் செட்டில்மன்ட் போல பெரிய வார்த்தைகள் வந்ததால இதை பதிவுலக அரசியல் ரேஞ்சுக்கு எல்லாம் நீங்க யோசிக்க கூடாது சரியா
(அனாமிகா - அவங்களுக்கு தோணலைனாலும் நாம எடுத்து குடுக்கணும் அனாமிகா, அப்பத்தான் பதிவுலக அரசியல்ல நம்ம பேரு அடிபடும், நாமளும் பிரபல பதிவர் ஆக முடியும் யு சி...ஒகே ஒகே நீ எனக்கு பாராட்டு விழா எல்லாம் எடுக்க வேண்டாம் மேடம்....:))

இன்னொரு மேட்டர் என்னனா...நிஜ அரசியல்ல வோட்டு போடற வயசு கூட எங்க ரெண்டு பேருக்கும் இன்னும் ஆகலை யு சி... ரைட் அனாமிகா?
(மவளே சேம் சைடு கோல் போட்டியா...அப்புறம் "warm ஆ ஒரு...." அதே அதே...அப்புறம் உன் இஷ்டம்... Ball is in your court...:)))

//என்னடா என்னை தவிர ஒருத்தரும் சீரியஸா எடுதுகவே இல்லைன்னு ஒரு டவுட்ட்டும் இருக்க தான் செய்தது//
இத்தனைக்கு நடுவுலயும் மனசுக்குள்ள ஒரு மூலைல ஒரு சின்னபுள்ளதனமான சந்தோஷம் இருந்ததை உன்கிட்ட சொல்லியே ஆகணும் அக்கா... அது என்னனு "எப்பவும் நம்மள இந்த உலகம் காமடி பீஸா தானே பாக்கும்... நாம சொல்றத கூட இந்த உலகம் சீரியஸ்ஆ பாக்குதே" னு ஒரு அல்ப(!) திருப்பதி... ஒகே ஒகே நோ டென்ஷன்... இனிமே நான் சொல்றதை சீரியஸ்ஆ எடுத்துபீங்க...ஹா ஹா ஹா...:)))

//இன்று முதல் நீ ஜவ்வரசி அப்பாவி என்று புகழ படுவாய்//
ஐ... ஜவ்வரசி அப்பளம் எனக்கு ரெம்ப பிடிக்கும்... அதுவும் மிளகு ரசம் கூட...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....ஹ்ம்ம்ம்... ச்சே சும்மா இருந்தவள இப்படி கிளப்பி விடறீங்களே அக்கா...

//தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ;ஆறாதே அப்பாவிஉன்
பதிவினால் சுட்ட வடு..... //
அடராமா...ஏன் இந்த கொலைவெறி மிசஸ்.ப்ரியா... வள்ளுவர் ஆவி இன்னைக்கி கனவுல வந்து கண்ணை குத்தும் பாருங்க...ஹா ஹா அஹ..:))

//athunala thane Sunami Austrliyala breadyai potu kothi eduthukitu irukaa. //
இல்லவே இல்ல... நாங்க தான் செட்டில்மன்ட் பண்ணிட்டமே....:)))

//இரண்டு அப்பாவி வேண்டும் ! மொக்கை போட ஒன்று ., கவிதை போட இரண்டு//
இந்த ஒரு வார்த்தைக்கே மொத்த பதிவுலகமும் சேந்து உங்கள தாக்க போகுதாம்...இவ ஒருத்திய வெச்சே முடியலைன்னு ஒரே பீலிங் மக்கள்...ஹா ஹா ஹா...:))))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஆஹா.. இத எப்படிங்க படிக்காம விட்டேன்..
சரி அது போகட்டும்.. இப்போ படிச்சிட்டேன்...

ஆனாலும் இந்த அநியாயம் பண்ண கூடாது நீங்க..
அந்த ஸ்டீவ்-க்கு என்ன பிரச்சினை..??

வாயில என்ன கட்டியா?? சை... சொல்லித் தொலைக்க மாட்டீங்கிராரே... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

போங்கப்பா... நீங்க வேற.. பிரேக் போட்டு.. போட்டு.. மனுஷிய டென்ஷன் படுத்திட்டு...


கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நா வரேன்....
டூ
கா..

அனாமிகா துவாரகன் said...

@ பிரியாக்கா,
//ஹி ஹீ அது தானே பார்த்தேன் ;என்னடா என்னை தவிர ஒருத்தரும் சீரியஸா எடுதுகவே இல்லைன்னு ஒரு டவுட்ட்டும் இருக்க தான் செய்தது :) //
காமடி பீசுங்களை எல்லாம் சீரியசா எடுத்துட்டு...ஹா ஹா. தப்பு யார் மேலக்கா. ஹா ஹா ஹா.

@ கார்த்தி சார்,
இவங்களுக்கு தண்டனை என்ன கொடுக்கலாம். பேசாம எக்கவுன்டை ஹக் பண்ணலாமா? எனி கம்பியூட்டர் என் ஜினியர்ஸ் ப்ளீஸ்?

@ வாசகன் மாம்ஸ்,
இப்ப எல்லாம் பிரட்டு சாப்பிட முள்ளு கரண்டு எடுக்கறதில்லை, கடப்பாறை எடுக்கற அளவுக்கு அப்பாவி டென்ஷன் பண்ணறா.

@ இட்லி லான்டு இட்லி மாமி,
//out-of-court settlement நேத்து பண்ணிண்டாச்சு... //
அடிப்பாவி யக்கா.

//நீ எனக்கு பாராட்டு விழா எல்லாம் எடுக்க வேண்டாம் மேடம்....:))//
நினைப்பு ரொம்பத்தேன்.

//நிஜ அரசியல்ல வோட்டு போடற வயசு கூட எங்க ரெண்டு பேருக்கும் இன்னும் ஆகலை யு சி... ரைட் அனாமிகா?//
ஏங்க்கா. உனக்கு என்னாச்சு? வேண்டாம். அழுதிடுவன். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

//"warm ஆ ஒரு...." அதே அதே...//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

அப்பாவி தங்கமணி said...

@Ananthi (அன்புடன் ஆனந்தி) - ஸ்டீவுக்கு வாய்ல கட்டியா? ஹா ஹா ஹா...சிரிப்பை நிறுத்த முடியல ஆனந்தி...ஹா ஹா.... கேட்டு சொல்றேன்...:))

@ அனாமிகா - டாங்கீஸ் to the power of infinity... ha ha ha ...:)))))

Post a Comment