Tuesday, March 08, 2011

ஜில்லுன்னு ஒரு காதல்... (பகுதி 11)
பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8    பகுதி 9    பகுதி 10

"Meera...that was so rude" என்றான் ஸ்டீவ், அவள் பேசியது தவறு என மனதில் தோன்றியதை தனிச்சையாய் கூறுபவன் போல்

ஆனால் தான் இயல்பாய் கூறிய அந்த ஒரு வார்த்தை தன் மொத்த கனவையும் குலைக்க போவதை ஸ்டீவ் அப்போது அறிந்திருக்கவில்லை

"You didn't say that when he talked about my country...men for men... right?" என அவள் கோபம் இப்போது ஸ்டீவின் மீது திரும்பியது

விவாதம் போன திசையை ரசிக்காத எட்வர்ட் "hey guys cool... Mee-raa I didn't mean it that way" எனவும், அவன் பேச்சே காதில் விழாதவள் போல் எழுந்து நடக்க ஆரம்பித்தாள் மீரா

இப்போது அவள் கோபம் எட்வர்டின் மீது விட ஸ்டீவின் மேல் அதிகமாய் இருந்தது. எப்படி அவன் தனக்கு எதிராய் பேசலாம் என்பதே கோபத்திற்கு மேலும் தூபமிட்டது

அவள் பின்னோடு வந்த ஸ்டீவ் "மீரா என்ன இது? ஏன் இப்படி ஓவர் ரியாக்ட் பண்ற... தட்ஸ் வாஸ்...." மறுபடியும் rude என்ற வார்த்தையை பிரயோகித்து அவள் கோபத்தை அதிகரிக்க வேண்டாம் என்ற எண்ணத்துடன் நிறுத்தினான்

"ஆமாம் நான் பேசினா அது rude ... அவன் சொன்னப்ப உனக்கு அது தோணலையா... ஏன் தோணனும்... அவன் பேசினது உன் நாட்டை பத்தி இல்லையே" என்றாள், கிட்டத்தட்ட கத்தினாள் எனலாம்

ஓரிருவர் நின்று வேடிக்கை பார்க்க, அப்போது தான் 'தான்' குரல் உயர்த்தியதை உணர்ந்தவள் போல் மீரா கான்செர்ட் நடக்கும் இடத்தை விட்டு வெளியேறினாள்

விடாமல் அவளை தொடர்ந்து வந்த ஸ்டீவ், ஏன் இப்படி வீண் பிடிவாதம் செய்கிறாள் என கோபம் வர, அவள் கைகளை பற்றி நிறுத்தியவன் "என்ன மீரா இது? ஏன் இப்படி ஷைல்டிஸா பிஹேவ் பண்ற" என்றான்

"நான் எப்படி பிஹேவ் பண்ணனும்னு நீ சொல்லி தர வேண்டிய அவசியம் இல்ல ஸ்டீவ்" என்றாள் அவன் பற்றியிருந்த தன் கையை விலக்கிக்கொள்ள முயன்றவாறே, ஆனால் அவன் பிடியை விடுவதாய் இல்லை

"மீரா... அவன் சாதாரணமாத்தான் கேட்டான்... நீ தான் ஓவர் ரியாக்ட் பண்ணின... கொஞ்சம் நான் சொல்றத..." அவனை அதற்கு மேல் மீரா பேச விடவில்லை

"என்னோட நாட்டை ஒருத்தன் தப்பா பேசறதை எதிர்த்தா அது ஓவர் ரியாக்ட் பண்றதா அர்த்தமா? ஹும்... நீ மட்டும் இல்ல நெறைய பேர் இப்படி தான்... இப்படி பேசினா சீன் போடற, நல்லவ வேஷம் போடறேன்னு சொல்றீங்க... ஆமா... நான் ஓவர் ரியாக்ட் தான் பண்ணினேன்... நான் அப்படி தான்... ஆனா அவன் பேசினது உனக்கு சரின்னு தோணுது இல்ல... அதான் சொல்றேன் எவ்ளோ முன்னேறின நாட்டுல இருந்தாலும் இந்த மேல்-ஷாவனிசம் மாறாது"

"What the hell is this to do with Male-Chauvinism?" என கோபமாய் கூறியவன், அவள் முகம் போன போக்கில் மனம் வேதனையுற "மீரா, திரும்பவும் நீ ஓவரா ரியாக்ட் பண்ற... நீ பேசினா மாதிரி அவன் பேசி இருந்தா உன் பக்கம் தான் நான் பேசி இருப்பேன்" என்றான், அவளை சமாதானம் செய்யும் எண்ணத்துடன் மெல்ல அவள் கைகளை பற்றி தன் கைக்குள் பதித்தவாறே

சட்டென அவன் கையை உதறியவள் "நிச்சியம் சதீஷ் இருந்திருந்தா இப்படி பேசி இருக்க மாட்டான்" என்றாள், வேண்டுமென்றே அவனை புண்படுத்தும் நோக்கத்துடன்

முன் சதீஷும் ஸ்டீவும் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என்பதற்காகவே பலமுறை இருவரையும் சமாளித்து பேசியவள் இப்போது தன் கோபத்தை தணித்துக்கொள்ள அதையே வேறு விதமாய் கையாண்டாள், இது தான் கோபம் கண்ணை மறைக்கும் என்பது போலும்

அவள் நினைத்தது போலவே அது ஸ்டீவை புண்படுத்தியது, அதுமட்டுமின்றி அவன் கோபத்தை பன்மடங்காக்கியது. சதீஷின் மேல் மனதில் கனன்று கொண்டிருந்த கோபம் மொத்தமும் வெடித்து கிளம்பியது

சாதாரணமாய் சதீசோடு ஒப்பீடு செய்வதையே விரும்பாதவன் இன்று இப்படி ஒரு தருணத்தில் மீரா இவ்வாறு பேசியதில் ரௌத்திரமானான் ஸ்டீவ். கோபம் அவன் கண்ணையும் மறைத்தது

"ஏய்...how dare you compare me with that idiot Sathish?" எனவும்

"அவசியமில்லாம அவன பத்தி பேசாத..." என விரல் சுட்டி மிரட்டுவது போல் கோபமாய் பேசினாள் மீரா

தான் உயிராய் நேசிப்பவள் இன்னொருவனை தாங்கி பேசுவதை பொறுத்துக்கொள்ள இயலாமல் அவளை வேதனைப்படுத்துகிறோம் என்பது கூட புரிந்துக்கொள்ள கூடிய மனநிலையில் இல்லாத ஸ்டீவ், அவள் மிரட்டலாய் சுட்டிய விரலை நசுக்கி விடுபவன் போல் அழுத்தினான்

"அப்படி தான் பேசுவேன்... அவன் ஒரு இடியட், ஸ்டுபிட்..."

"ஸ்டாப் இட் ஸ்டீவ்... இப்ப பிரச்சன உனக்கும் எனக்கும் தான்"

"அதே தான் நானும் சொல்றேன்... Then why the hell did you compare me with that loser?" என்றான் அவளை குற்றம் சாட்டும் குரலில்

"நீ தான் அப்படி பேச வெச்ச...கைய விடு ஸ்டீவ், வலிக்குது" என்றவள், அவன் முரட்டுத்தனமாய் தன் கையை அழுத்தி கொண்டிருந்ததில் தன்னையும் அறியாமல் வலியில் கண்ணில் நீர் துளிர்க்க, கையை விலக்கிக்கொள்ள முயன்றாள்

அவள் கண்ணில் நீரை பார்த்ததும் சுயநினைவுக்கு வந்தான் ஸ்டீவ். அவன் நகம் பதிந்து அழுத்தியதில் கன்றி சிவந்திருந்த அவள் விரல்களை விட்டவன், அவளை துன்புறுத்திய தன் செய்கையில் தன் மீதே கோபம் கொண்டான்

சில நொடிகள் இருவரும் ஒன்றும் பேசவில்லை. தங்கள் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சி போல் மௌனமாய் இருந்தனர்

அதன் பின் ஸ்டீவ் தான் மௌனத்தை உடைத்தான். "மீரா... " என மெல்ல அவளை நெருங்கி அவள் கைகளை பற்ற முயல, அவள் விலகி நின்றாள்

அவளின் அந்த செய்கை அவனை மிகவும் வேதனைப்படுத்தியது. ஏதோ பலகாலம் காதலர்களாய் சேர்ந்தே இருந்து இன்று அவள் விலகி நிற்பது போல் மனம் துவண்டான்

"மீரா நான்..." என்றவனை பேசாதே என்பது போல் கை உயர்த்தியவள் விலகி நடக்க துவங்கினாள்

ஒரு கணம் செய்வதறியாது நின்றவன் விரைந்து அவள் முன் சென்று மறிப்பது போல் நின்றான். அவனை தாண்டி அவள் நடக்க முயல "என்ன மீரா இது? உன் மேல தப்பிருந்தாலும் உன் பக்கம் பேசணும்னு சொல்றியா... எனக்கு அப்படி வேஷம் போடத்தெரியாது மீரா" என்றான் அமைதியாய், தன் செயலை நியாயப்படுத்த முயல்பவன் போல்

"அப்படினா இப்பவும் என் மேல தான் தப்புன்னு சொல்ற, இல்லையா ஸ்டீவ்?" என்றவளின் குரலில் கோபத்தைவிட "எப்படி நீ இப்படி செய்யலாம்" என்ற வேதனை அதிகமாய் இருந்தது. இதற்கு அவள் கோபமாய் பேசுவதே மேல் என நினைத்தான் ஸ்டீவ்

அந்த வேதனையை போக்க முயல்பவன் போல் அவளை நெருங்கி நின்றவன் "அதில்ல மீரா... அவன் சாதாரணமா அந்த படத்த பத்தி தான் கேட்டான்... நீ பெர்சனலா அட்டாக் பண்ணி அப்படி பேசினது...."

"தப்பு தான், இல்ல?...என் தப்பு தான் இல்லையா?" என அவனை பேசவிடாமல் இடைமறித்தாள் "அவன் என் உணர்வுகள ஹர்ட் பண்ணினது உனக்கு பெருசா தெரியல... நான் பேசினது தான் தப்பு, இல்ல?" என்றாள் தன் பக்க நியாயத்தை உரைப்பவள் போல்

இது இதோடு முடியும் விவாதம் அல்ல என உணர்ந்த ஸ்டீவ், அவளோடு சண்டை போட மனம் இல்லாதவனாய் "லீவ் இட் மீரா... அவனுக்காக நாம ஏன் சண்டை போடணும்... Lets talk something else" என்றான் பெருமூச்சுடன்

"அப்படி விட முடியாது ஸ்டீவ். அவன் அந்த எட்வர்ட் he is nobody to me... I don't care what he does.... நீ என் பிரெண்ட்... நீ எப்படி என்னை ஹர்ட் பண்ணலாம்? So that means I'm nothing to you...அப்படித்தானே" என்றாள் கோபமாய்

என்ன வார்த்தை சொல்லிவிட்டாள் என வேதனை மிக "You're everything to me Meera" என சொல்லத்துடித்த நாவை, இது அதற்கான தருணமல்ல என அடக்கினான் ஸ்டீவ். முதலில் இந்த பிரச்சனையை முடித்து, அவள் உணர்வுகளை தான் மதிப்பவன் என்பதை அவளை உணரசெய்யவேண்டுமென முனைந்தான்

"என்ன பேசற மீரா? you know what you mean to me... " என்றவன் அதற்கு மேல் என்ன பேசுவதென தெரியாமல் ஒரு கணம் திகைத்தவன்

 "மீரா... just listen... உன்னோட உணர்வுகள மதிக்கக்கூடாதுனு நான் நினைக்கல... நீ அப்படி பேசினப்ப தப்புன்னு மனசுக்கு பட்டதை சொன்னேன்... அது உன்னை இவ்ளோ பாதிக்கும் எனக்கு தெரியல. I rest my case with this" என்றான் இதற்கு மேல் இது விசயமாய் சொல்ல எதுவும் இல்லை என்பது போல்

மீண்டும் மீண்டும் தன்னையே குற்றம் சாட்டியது போல் அவன் பேசியது அவளை வேதனைப்படுத்தியது. தான் பேசியது தவறென்றால் எட்வர்ட் பேசியது மட்டும் எப்படி சரியாகும்

"உன் நாடு மொத்தமும் சேரி தானா" என அவன் கேட்க, அது தன்னை எத்தனை பாதித்தது என்பதை அவனுக்கு புரிய வைக்கும் நோக்கத்துடன் அவன் நாட்டை தான் விமர்சித்தது எந்த வகையில் தவறாகும் என நினைத்தாள்

நம் வீட்டை பற்றியோ, நம் தாயை பற்றியோ பேசினால் வரும் கோபம் இயல்பானது என்றால், நம் நாட்டை பற்றி விமர்சிப்பதை கண்டு எழும் கோபம் மட்டும் ஏன் வேறு விதமாய் விமர்சிக்கப்படுகிறது என கேள்வி தோன்றியது மீராவின் மனதில்

எட்வர்ட் விமர்சிக்கும் எண்ணத்துடன் கேட்கவில்லை என்றாலும் அவன் கேட்ட விதம் தவறு தானே, அறிந்து கொள்ளும் ஆவல் என்பதை விட ஒருவிதமான ஏளனம் அவன் குரலில் ஒலித்ததே. அது தவறு தானே, அப்படியெனில் தன் கோபமும் சரி தான் என தன்னை தானே பரிசீலனை செய்து கொண்டாள் மீரா

எது எப்படி என்றாலும் சதீஷ் இருந்திருந்தால் நிச்சியம் என் பக்கம் தான் பேசி இருப்பான் என நினைத்தாள்

"என்ன சொன்ன?" என ஸ்டீவ் கோபமாய் கேட்க, அப்போது தான் வெறுமனே நினைக்கவில்லை, வாய் விட்டே சதீஷ் பற்றி கூறி இருக்கிறேன் என்பதை மீரா உணர்ந்தாள்

ஆனால் தான் கூறியதில் தவறேதும் இல்லையே என நினைத்தவள் "ஆமா உண்ம தான்... என்னை எது பாதிக்கும்னு சதீஷ்க்கு தெரியும். என்னை வேதனைப்படுத்தற மாதிரி அவன் எப்பவும் நடந்துக்க மாட்டான்" என்று அவள் சாதரணமாய் கூற, ஸ்டீவ் ஆவேசமாய் அவள் தோள் பற்றி உலுக்கினான்

"வில் யு ஸ்டாப் இட் மீரா... வேணும்னே என்னை provoke பண்றதுக்கு பேசற நீ... அந்த பைத்தியக்காரன் சதீஷ் மாதிரி சொல்றதுக்கு எல்லாம் ஜால்ரா போட எனக்கு தெரியாது" என்றான் அவளை பற்றியிருந்த கையை விலக்காமலே

"அவன பத்தி பேசற தகுதி உனக்கில்ல...ஸ்டாப் இட் ஸ்டீவ்" என்றாள் அவன் கையை விலக்கி

இன்னும் பிடியை இறுக்கியவன் "ஆமா... ஊர்ல ஒரு பொண்ணு விடாம சைட் அடிக்கற அந்த பெர்சனாலிட்டி பத்தி பேசற தகுதி எனக்கு இல்ல தான்" என்றான் கேலி போல்

"அது அவன் பர்சனல்... ஆனா உணர்வுகளை மதிக்க தெரிஞ்சவன்... உன்னை மாதிரி காயப்படுத்தமாட்டான்" என்றாள்

மீண்டும் மீரா சதீஷை உயர்த்தியும் தன்னை தாழ்த்தியும் பேசியது அவனை மிருகமாக்கியது "This is the limit Meera... don't poke me... ச்சே... உன்னை என் லைப்ல சந்திக்காமலே இருந்திருக்கலாம்னு தோணுது..." உச்சபட்ச கோபத்தில் என்ன பேசுகிறோம் என்றே உணராமல் வார்த்தைகளை விட்டான் ஸ்டீவ்

அந்த வார்த்தை மீராவை நிலைகுலைய செய்தது. ஆனால் அதற்கான காரணத்தை ஆராயும் மனநிலையில் அவள் அப்போது இருக்கவில்லை

ஒரு கணம் அவனை ஆழ்ந்து நோக்கியவள் "எனக்கும் அதே தான் தோணுது ஸ்டீவ்... இப்ப ஒண்ணும் கெட்டு போய்டல... நாம சந்திக்காததாவே நினைச்சுக்கறேன்... இனி எனக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல... Goodbye..." என்றவள் அவன் பதிலுக்கு கூட காத்திராமல் அங்கிருந்து வேகமாய் நடந்தாள்

University Avenue என்று அழைக்கப்படும் அந்த தெருவில் வேகமாய் நடந்து கொண்டிருந்தாள் மீரா, கோபம் மொத்தத்தையும் நடந்தே தீர்ப்பவள் போல்

"எப்படி அவன் அது போல் ஒரு வார்த்தை சொல்லலாம். என்னை சந்திக்காமலே இருந்திருக்கலாம் என எண்ணும் அளவிற்கு தன்னை வெறுக்கிறானா?" என்ற எண்ணம் அவளை வேறு எதை பற்றியும் யோசிக்க விடாமல் செய்தது

"அவன் தன்னை பாதிக்கும்படி பேசினான் என கோபம் கொள்ளும் உரிமை தனக்கில்லையா?" என அவன் மீது மீண்டும் மீண்டும் குற்றம் காண முயன்றாள்
 
ஸ்டீவ் சற்று நேரம் மரத்து போன உணர்வில் நின்றான். தன்னிலைக்கு வரவே அவனுக்கு சற்று நேரம் பிடித்தது

"கோபத்தில் என்ன வார்த்தை கூறிவிட்டேன்" என்பதை உணரவே அவனுக்கு சிறிது நேரமானது. எத்தனை கனவுகள், எல்லாம் ஒரு வார்த்தையில் சிதைத்துவிட்டேனே என சுயகோபத்தில் செய்வதறியாமல் நின்றான்

தான் அப்படி கூறியது தவறு தான் என்ற போதும் அவள் சதீஷோடு தன்னை ஒப்பிட்டு பேசியது மட்டும் சரியா என இன்னும் அவள் மீது கோபம் குறையாத மனநிலையிலேயே இருந்தான்

ஆனாலும் தான் கூறிய வார்த்தை தந்த பாதிப்பில், அவள் வேதனை நிறைந்த கண்களுடன் தன்னை பார்த்தது கண் முன் தோன்ற, அவளை அப்போதே மீண்டும் பார்க்க வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு

ஆனால், அவள் பின்னோடு தேடி செல்ல முனைந்த கால்களை கட்டுப்படுத்தினான். இப்போது இருக்கும் மனநிலையில பேசினால் சண்டை மேலும் பெரிது தான் ஆகும் என உணர்ந்தவன் போல் வேறுபக்கம் திரும்பி நடக்க துவங்கினான்

மனம் சோர்வுற்றிருக்க, உடல் அதற்கு மேல் ஒத்துழைக்க மறுத்தது. நடக்கும் தெம்பு கூட இல்லாதவன் போல் கான்செர்ட் நடக்கும் அரங்கின் வாசல் பக்கம் இருந்த படிகளில் சென்று அமர்ந்தான்

எத்தனை நேரம் அப்படி இருந்தானோ, திடீரென செல்பேசி அழைக்க எடுத்து பார்த்தவன், அதில் சதீஷின் எண் வர கோபத்தில் பேசியை வீசி உடைக்க தோன்றியது

மணி அடித்து ஓய்ந்து மீண்டும் அடித்தது. இந்த முறை மதுவின் எண் வர ஏதேனும் பிரச்சனையோ என மனதில் உறைக்க "ஹலோ... " என்றான்

"ஸ்டீவ்... King Streetல இருக்கற Tim Hortonsகிட்ட உடனே போ... மீரா needs help" என்றாள் மது பதட்டமான குரலில்

ஒருகணம் உயிர் போனது போல் செயலற்று நின்றான் ஸ்டீவ்

யார்நீ என்றபோதில்
யாவும்நீயே என்றுரைக்க
இயலாமல் நின்றேனே
இதயத்தை கொன்றேனே!!!

உன்னையே உணர்ந்தஎன்னை
உணர்வுகளை உணராதவனென்றாய்
உனக்காக பொறுத்தேன்
உன்னுள்நான் உள்ளநம்பிக்கையில்!!!

உனக்கு நிகராய் என்னால்
உயிரையே கூறமுடியாதபோது
என்னிலும்மேலாய் ஒருவனைசொல்ல
எப்படிபொறுப்பேன் சொல்லடியே!!!

ஆபத்தென்று அறிந்தநொடி
அத்தனையும் மறந்தேனடி
என்காதலியாய் நீவேண்டாம்
என்கண்முன் இருந்தால்போதுமடி!!!

இனி...

அடுத்த பகுதி படிக்க

(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)

88 பேரு சொல்லி இருக்காக:

vinu said...

me firstttttttttu

எல் கே said...

இதுதான் பெருசா ??? சரி சரி அனாமிகா வந்து கமென்ட் போட்டப் பிறகு நான் வரேன்

vinu said...

me seconduuuuuuuuuuuuu

vinu said...

irrunga poi padichuttu varrean he he he he he innum padikkalay

Balaji saravana said...

அப்பாவி அசத்திட்டீங்க! எதிர்பாராத இடத்துல இந்தப் பகுதி முடிஞ்சிருக்கு! ஒரு ரியல் ”வாய்க்கா தகறாரு” பார்த்த ஃபீல் ;)

vinu said...

ஆபத்தென்று அறிந்தநொடி
அத்தனையும் மறந்தேனடி
என்காதலியாய் நீவேண்டாம்
என்கண்முன் இருந்தால்போதுமடி!!!


appaadi oru valiyaa steve enga machchaan satheesu valiyil irrunthu vilagittaaaaaaaaaaaaaaaru.

Vasagan said...

Wow, story 401 kku vanthutuchu.Mothalakku pirakku kathala ?

கீறிப்புள்ள!! said...

இந்த எபிஸோடு ரொம்ப நல்லா இருக்கு அப்பாவி.. என்னது இது L.K.G, U.K.G எல்லாம் படிக்காம டைரக்ட்-ஆ பதினோறாம் வகுப்பு பரிச்சைக்கு அப்பியர் ஆகறையே கீறிபுள்ள-ன்னு டவுட் ஆக வேணாம்.. எல்லாத்தையும் படிச்சிட்டு தான் வரேன்.. மற்ற பகுதியில பிரியா & அனாமிகா தேவையான அளவுக்கு கலாய்ச்சனால நான் என்டர் தி டிராகன் ஆகல.. :))

தி. ரா. ச.(T.R.C.) said...

I endorse what LK may say finally

கீறிப்புள்ள!! said...

/"நிச்சியம் சதீஷ் இருந்திருந்தா இப்படி பேசி இருக்க மாட்டான்" என்றாள், வேண்டுமென்றே அவனை புண்படுத்தும் நோக்கத்துடன்//
எங்க அடிச்சா எவ்ளோ வலிக்கும்ன்னு போலீஸ்-க்கு அப்றமா பெண்களுக்கு தான் தெரியும் போல.. ;))

/"You're everything to me Meera" என சொல்லத்துடித்த நாவை, இது அதற்கான தருணமல்ல//
ஸ்டீவ்: இந்த மாதிரி நல்ல நேரம், ராவு காலம் எல்லாம் பாத்து தான் மச்சி நாம உருப்படாம போறது..

/நம் வீட்டை பற்றியோ, நம் தாயை பற்றியோ பேசினால் வரும் கோபம் இயல்பானது என்றால், நம் நாட்டை பற்றி விமர்சிப்பதை கண்டு எழும் கோபம் மட்டும் ஏன் வேறு விதமாய் விமர்சிக்கப்படுகிறது//
இந்த வரிகள் ரொம்ப பிடிச்சது..ஒவ்வொருத்தருக்கும் இந்த கோவம் கண்டிப்பா இருக்கனும்.. இதுக்கு கொஞ்சம் சம்பந்தப்பட்டதுன்னு நினைக்கிறன்.. இத படிங்க சிஸ்டர்..
http://minnalkeeetru.blogspot.com/2011/03/blog-post.html

/அந்த வார்த்தை மீராவை நிலைகுலைய செய்தது.//
ஆனா இந்த வார்த்தைகள் எங்கள ஸ்டேடி ஆக்கிருச்சு.. ஹி ஹி ஹி.. :)

/என்காதலியாய் நீவேண்டாம்
என்கண்முன் இருந்தால்போதுமடி!!!//
சூப்பர் :))

பாமர ரசிகன் said...

கதை சூடு பிடிக்க ஆரம்பிச்சிருச்சி...

ஹுஸைனம்மா said...

எதிர்பாரா திருப்பம்.

(எனக்கு ஏன் குஷி படம் ஞாபகம் வருது இப்ப?) :-)))))))

priya.r said...

ஏன்! அப்பாவி ஏன்! நல்லா தானே போய் கிட்டு இருந்தது ;மீராவுக்கும் ஸ்டீவ் க்கும் ஏன் மோதலை உண்டு பண்ணி இருக்கே !
ஹும்..........எப்படியும் இதை வைச்சு இன்னும் பத்து எபிசொட் ஓஓஓஓஓஒட்ட போறே தானே :(

priya.r said...

// Meera...that was so rude" என்றான் ஸ்டீவ், அவள் பேசியது தவறு என மனதில் தோன்றியதை தனிச்சையாய் கூறுபவன் போல்

ஆனால் தான் இயல்பாய் கூறிய அந்த ஒரு வார்த்தை தன் மொத்த கனவையும் குலைக்க போவதை ஸ்டீவ் அப்போது அறிந்திருக்கவில்லை//
ஆரம்பிட்ச்சுட்டையா! ஹய்யோ ஹய்யோ
நீ குலைச்சது ஸ்டீவ் கனவு மட்டும் இல்லே அப்பாவி ;ஒட்டு மொத்த சுனாமி கனவையும் தான் .,குழந்தை எப்படி இதை எப்படி தாங்கிக்க
போறாளோ!

priya.r said...

//"You didn't say that when he talked about my country...men for men... right?" என அவள் கோபம் இப்போது ஸ்டீவின் மீது திரும்பியது

விவாதம் போன திசையை ரசிக்காத எட்வர்ட் "hey guys cool... Mee-raa I didn't mean it that way" எனவும், அவன் பேச்சே காதில் விழாதவள் போல் எழுந்து நடக்க ஆரம்பித்தாள் மீரா //

பேசாம எட்வர்டுக்கு எட்டப்பன் என்ற பெயரை கொடுக்கலாம் ;பாவி இப்படி ஏற்கனவே இருந்த குழப்பத்தை இன்னும் அதிகபடுத்தி
விட்டானே !

priya.r said...

"ஆமாம் நான் பேசினா அது rude ... அவன் சொன்னப்ப உனக்கு அது தோணலையா... ஏன் தோணனும்... அவன் பேசினது உன் நாட்டை பத்தி இல்லையே" என்றாள், கிட்டத்தட்ட கத்தினாள் எனலாம்//

பார்த்து அப்பாவி ! நீ rude ஆ கதை எழுத போறேன்னு யாராவது சொல்லிட போறாங்க ;அப்புறம் அதுக்கு ஒரு மொக்கை பதிவு போட்டு தான் உன்ற மனசை நீ ஆத்திக்க முடியும் !

priya.r said...

//விடாமல் அவளை தொடர்ந்து வந்த ஸ்டீவ், ஏன் இப்படி வீண் பிடிவாதம் செய்கிறாள் என கோபம் வர, அவள் கைகளை பற்றி நிறுத்தியவன் "என்ன மீரா இது? ஏன் இப்படி ஷைல்டிஸா பிஹேவ் பண்ற" என்றான்

"நான் எப்படி பிஹேவ் பண்ணனும்னு நீ சொல்லி தர வேண்டிய அவசியம் இல்ல ஸ்டீவ்" என்றாள் அவன் பற்றியிருந்த தன் கையை விலக்கிக்கொள்ள முயன்றவாறே, ஆனால் அவன் பிடியை விடுவதாய் இல்லை //

நல்ல வேளை! ஸ்டீவ் இன்னும் எங்க சுனாமியை பார்க்கலே ! ஹ ஹா

priya.r said...

ஹலோ ஸ்டீவ் ! என்ன எங்க மீரா ஓவர் ரியாக்ட் பண்றாளா ..............................
எங்க அப்பாவி கூட தான் ஓவர் ரியாக்ட் பண்ணுவா ! இதை எல்லாம் நாங்க சொல்லியா காண்பிக்கிறோம்!

priya.r said...

@ஹுசைனம்மா

அது வேற ஒண்ணுமில்லைங்கோ

எல்லாம் ஈகோ பிரச்னை தான் !
ஒரு சின்ன சந்தேகம் ! உங்களுக்கு குறைஞ்ச பட்சம் ஒரு ஆறு வித்தியாசம் கூடவா தோணலிங்க :)

priya.r said...

அப்பாவி ! நீ வந்து ஜில்லுன்னு ஒரு காதல் ன்னு சொல்லி கிட்டு இருக்கே
ஆனா படிக்க வரவங்களோ கதை சூடு பிடிக்க ஆரம்பிசுட்டுச்சு அப்படின்னு சொல்லறாங்களே
எனக்கு இப்போ ஒரு உண்மை தெரிஞ்சாகனும் !

priya.r said...

சரி அப்பாவி ! இன்னைக்கு womensday க்கு ஏதோ உனக்கு கிப்ட் கிடைச்சுதாம்
தங்கத்துக்கு வைரம் கிடைச்சுதா ;அட சொல்லி போடு கண்ணு :)

Krishnaveni said...

Kadhai mudiya poguthaa thangam??????????

priya.r said...

//ஆபத்தென்று அறிந்தநொடி
அத்தனையும் மறந்தேனடி
என்காதலியாய் நீவேண்டாம்
என்கண்முன் இருந்தால்போதுமடி!!!//
கவிதையை படித்த நொடி
கலக்கம் தோன்றுதடி
மீராவுக்கு ஆபத்தாஎன்று
மனம் பதைக்குதடி
அப்பாவி நீ அதற்கு
அனுமதி கொடுக்காதடி
இதெல்லாம் ஒரு கவிதையா
என்று நொந்து போகாதடி

வரட்டுமாடி
குட் நைட் டி :) :)

அமைதிச்சாரல் said...

//நம் வீட்டை பற்றியோ, நம் தாயை பற்றியோ பேசினால் வரும் கோபம் இயல்பானது என்றால், நம் நாட்டை பற்றி விமர்சிப்பதை கண்டு எழும் கோபம் மட்டும் ஏன் வேறு விதமாய் விமர்சிக்கப்படுகிறது//

கோபப்படலைன்னாத்தான் விமர்சிக்கணும்..

//(எனக்கு ஏன் குஷி படம் ஞாபகம் வருது இப்ப?) :-))))))//

எனக்கும்தான் ஹுஸைனம்மா ;-). அப்படீன்னா அடுத்தாப்ல சந்திரமண்டலத்துல டூயட்டுதான் :-))

priya.r said...

//Kadhai mudiya poguthaa thangam?????????? //

ஹய்யோ வேணி !

என்ன கேள்வி கேட்டு போட்டீங்க

இது மெகா சீரியல்

2021 வேலன்ஸ்டே அன்னைக்கு ஸ்டீவ் வந்து மீரா கிட்டே காதலை சொல்ல போறதா ஒரு ப்ளாக் வழி (வலி!) செய்தி

Chitra said...

தான் உயிராய் நேசிப்பவள் இன்னொருவனை தாங்கி பேசுவதை பொறுத்துக்கொள்ள இயலாமல் அவளை வேதனைப்படுத்துகிறோம் என்பது கூட புரிந்துக்கொள்ள கூடிய மனநிலையில் இல்லாத ஸ்டீவ், அவள் மிரட்டலாய் சுட்டிய விரலை நசுக்கி விடுபவன் போல் அழுத்தினான்


....அடேங்கப்பா.... இந்த வரிகளில் எத்தனை விஷயங்கள் ஒளிந்து இருக்கின்றன.

Vasagan said...

Sis
Reflective ! and wonderful expression.

இன்றைக்கு கலாய்க்க மனசு வரலை.
சுனாமி மாதிரி
நாளை வந்தாலும் வருவேன், வராமலும் இருப்பேன் .

ராவி said...

Excellent Writing. Keep it up!!!!!!!!!!!

என்ன ஆகி இருக்கும் ???
Tim Hortons coffee காலில் கொட்டி?????

மகி said...

புவனா, 'ல்'-ஐக் காணமே?காக்கா தூக்கிட்டுப் போயிருச்சா?! :) :)

கோவை ஆவி said...

சூப்பர் சூப்பர்.. சண்டை போட்டுகிட்டாங்களா? இப்படி ஏதாவது நடக்கும்னு நினைச்சேன்..

Charles said...

கதை ரொம்ப நல்ல போகுது. மனப்போராட்டங்களை எழுத்தில் வடிக்க உங்களுக்கு சொல்லி தரணுமா என்ன? கடைசி twist எதிர் பாராதது. என்னதான் சொன்னாலும் மீரா க்கு ஒண்ணும் ஆக கூடாது. ஏதோ பார்த்து பண்ணுங்க. அப்புறம் வழக்கம் போல கவிதை நல்லா இருந்தது.

வல்லிசிம்ஹன் said...

ஜில்லுனு போகிறதேன்னு நினைச்சால் , புயலைக் கொண்டு வரீங்களேப்பா. நியாயமா.
டிம் ஹார்ட்டன் காஃபி சாப்பிட இப்ப ஆசை வந்துவிட்டது:)

asiya omar said...

இனி மீராவை ஸ்டீவ் கவனிக்கிறேன் பேர்வழின்னு செம இண்ட்ரெஸ்டாக போகும்னு நினைக்கிறேன்.தொடருங்க,அப்பாவி.கதையை வேகம் குறையாம அழகாக கொண்டு போறீங்க.

கீறிப்புள்ள!! said...

/அவளை வேதனைப்படுத்துகிறோம் என்பது கூட புரிந்துக்கொள்ள கூடிய மனநிலையில் இல்லாத ஸ்டீவ், அவள் மிரட்டலாய் சுட்டிய விரலை நசுக்கி விடுபவன் போல் அழுத்தினான்//
எங்க அடிச்சா எவ்ளோ வலிக்கும்ன்னு தெரியாதது தான் ஆண்களின் பிரச்சனையோ?? நைட் புரண்டு புரண்டு தூங்கும் போது யோசிச்சது.. ஐயோ கடவுளே தூங்கும் போது கூட இந்த கதை துரத்துதே!! என்ன கொடுமை இது.. :(((

இராஜராஜேஸ்வரி said...

Internationality womens day - China, Armenia, Russia, Azerbaijan, Belarus, Bulgaria, Kazakhstan, Kyrgyzstan, Macedonia, Moldova, Mongolia, Tajikistan, Ukraine, Uzbekistan and Vietnam மற்றும் சில நாடுகளில் அதிகாரப்பூர்வ விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது//. Try these country.

இராஜராஜேஸ்வரி said...

"ஸ்டீவ்... King Streetல இருக்கற Tim Hortonsகிட்ட உடனே போ... மீரா needs help" என்றாள் மது பதட்டமான குரலில்

ஒருகணம் உயிர் போனது போல் செயலற்று நின்றான் ஸ்டீவ் //
We also Tension.

சே.குமார் said...

விறுவிறுப்பா போகுது...
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு...

Anonymous said...

hi buvana madam,I read your blog regularly.The story is very intresting.Pls write daily 1 part.Thanks.my name is vimala

அமைதிச்சாரல் said...

ஏன் அப்பாவி.. ரெண்டுபேரும் சண்டை போட்டுக்கிட்டதாலதான் ஜில்லு ஜிலுவாகிடுச்சா :-))))))))))))

பாயிண்ட் பிடிச்சுக்கொடுத்திருக்கேன். நாம பேசிவெச்சுக்கிட்டபடி அந்த செக்கை ஞாபகமா அனுப்பிடுங்க :-))))))

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

/என்காதலியாய் நீ வேண்டவே வேண்டாம்
என்கண்முன் இருந்தால்போதுமடி!!!//

அப்படின்னு எழுதுனா சூப்பரா இருக்கம்ல

சூப்பர், தொடருங்கள் சகோ

தக்குடு said...

@ அப்பாவியோட தங்கமணி - நானும் ஒரே விஷயத்தை வெச்சுண்டு பிடிவாதச்சண்டை போடரவாளை ரசிக்க மாட்டேன். குடும்பம் எனும் பெரிய வைக்கோல்போர்ல தூக்கி எறியப்படும் சின்ன தீக்குச்சிக்கு சமமானது இந்த பிடிவாத சண்டை.

in between, திருப்பூர் சூறா'வலி' ப்ரியா அக்காவோட புள்ளகுட்டிகளுக்கு எல்லாம் பரிட்சை முடிஞ்சாச்சு போலருக்கு!!..:))

priya.r said...

அப்பாவி ! இந்த கொசு தொல்லை தாங்க முடியலைடீ
.
.
தக்குடு தம்பி என்னாது! வலி யா ! நானே மாடல் எக்ஸாம் முடிந்த காப்லே
ஏதோ வந்து கம்மேன்ட்டிட்டா வலியா மில்லே
பார்த்து நீ ஒரு வழியாகி போய்ட போறீங்க :) ஹ ஹா

priya.r said...

//புவனா, 'ல்'-ஐக் காணமே?காக்கா தூக்கிட்டுப் போயிருச்சா?! :) :) //

ஏனுங் மகி ! இங்க கதைய வே காணோம்ன்னு நாங்க தேடிகிட்டு இருக்கோமாம் :)

priya.r said...

//hi buvana madam,I read your blog regularly.The story is very intresting.Pls write daily 1 part.Thanks.my name is vimala //

வாங்க விமலா ! தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

தாங்கள் எங்கள் புவனா அவர்களின் மற்ற எல்லா பதிவுகளையும் படித்து ரசித்து கமெண்ட் இட வேண்டுமாய்

எங்கள் சங்கத்தின் சார்பாக கேட்டு கொள்கிறோம்

தங்கள் கமெண்ட்ஸ் படித்த மகிழ்ச்சியில் திருமதி புவனா அவர்கள் மிக்க மகிழ்ச்சி கொண்டு தங்களின் கோரிக்கையை

நிறைவேற்றுவார் என்று நாங்களும் உங்களை போலவே நம்புகிறோம் :) :)

Anonymous said...

Hi Priya ,I like Bhuvanas all love stories and Thangamani and Rangamani jokes too.I like writing style of Bhuvana and ur comments too. I dont know how to type tamil. Thank You

priya.r said...

தேங்க்ஸ் விமலா.,நீங்க உங்க மனசுலே மட்டும் வைச்சுகோங்க எனக்கும் புவனாவின் எழுத்துக்கள் ரொம்ப பிடிக்கும் !

அப்புறம் தமிழில் எழுதுவது ஒன்னும் பெரிய விஷயம் இல்லேப்பா

http://www.google.com/transliterate/indic/தமிழ் போய் amma என்று டைப் செய்தால் அம்மா என்று வரும்

அப்புறம் அப்படியே எழுத ஆரம்பித்து விடுவீர்கள் .,

இங்கே விரைவில் ஒரு தமிழில் ஒரு கமெண்ட்ஸ் போடுங்க பார்க்கலாம் !

Anonymous said...

நன்றி பிரியா.புவனா அக்கா எழுதற எல்லாமே நானும் என் வீட்டுக்காரரும் ரசிச்சு சிரிச்சு படிப்போம் .
அப்புறம் கமெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்கும்.

ஜெய்லானி said...

உள்ளேன் டீச்சர் :-)

priya.r said...

//பெயரில்லா சொன்னது…
நன்றி பிரியா.புவனா அக்கா எழுதற எல்லாமே நானும் என் வீட்டுக்காரரும் ரசிச்சு சிரிச்சு படிப்போம் .
அப்புறம் கமெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்கும்.//ஆமாம் விமலா! புவனா அக்காவின் கதைகளை குடும்பத்தோடு படித்து ரசிக்கலாம்

இனிமேல் நானும் புவனா அக்கா என்றே சொல்லி கொள்ளட்டுமா

சாரி டி புவனா .,உன்ற பெருமை தெரியாம ஏதேதோ கமெண்ட்ஸ் போட்டுட்டேன்

எல்லா புகழும் புவனா அக்காவுக்கே !

priya.r said...

ஹய்! முதல் முதலா ஒருத்தரை தமிழில் எழுத வைக்க உதவி செய்து இருக்கேனே !

விமலாவின் தமிழ் ஆர்வம் வாழ்க

ஐம்பதும்(50 ) எனக்கேவா !

priya.r said...

புவனா அக்கா

புவனா அக்கா

கொஞ்சம் வந்து கமெண்ட்ஸ் எல்லாம் படிச்சுட்டு

பதில்களை போட ஆரம்பிங்க அக்கா சீக்கிரம் வாக்கா !

Vasagan said...

Bhuvanakka rasicar mandra Thalaivi(தலைவலி என்று யாரும் படிக்க கூடாது )Priyaakka Valka

Bhuvanakka rasicar mandra urupinar

Vasagan said...

காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு
புவனாக்காவின் பதிவை படித்து பல்லை கடித்து கடித்து டென்டிஸ்ட்யிடம் சென்ற மின்னல் என்ற சுனாமி என்ற அனாமிகா அக்கா அவர்களை தேடி கண்டு பிடிபவர்களுக்கு அப்பாவியின் விலை மதிப்பற்ற பாதி இட்லி (ஹி ஹி முழு இட்லிக்கு ட்ரை செய்தது) வழங்கப்படும்.
இப்படிக்கு
மின்னல் என்ற சுனாமி என்ற அனாமிகா அக்கா அவர்களின் அன்பு தம்பிகள்
L K and Vasagan

middleclassmadhavi said...

//என்காதலியாய் நீவேண்டாம்
என்கண்முன் இருந்தால்போதுமடி!!!//
என்ன நடக்கப் போவுதோ... :))

Anonymous said...

புவனா அக்கா, சீக்கிரம் அடுத்த பார்ட் போடுங்க .
இப்படிக்கு புவனாக்கா ரசிகர் மன்ற உறுப்பினர் ,விமலா

priya.r said...

உங்களுக்கு இன் டைரக்ட் ஆ எவ்வளவோ எச்சரிக்கை செய்தும் விதி வலியது ன்னு இப்போ புரியுது
பாவம் விமலா நீங்க :(இருந்தாலும் உங்களை இருகரம் கூப்பி வருக வருக என்று வரவேற்கும்
புவனாக்கா (அ) ரசிக (ரசிகை) மன்ற தலைவி
பின்குறிப்பு : தங்கள் முகவரி பேங்க் அக்கௌன்ட் எண் போன்றவற்றை
புவனாக்காவுக்கு அனுப்பினால் 1000 usd தங்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைக்க படும்
தாங்கள் எந்த அளவு அக்காவின் புகழை பரப்புகிறீர்களோஅதை பொறுத்து மாத சன்மானம் அதிகபடுத்தி
தரப்படும் என்று தங்கமணிகளின் சங்கம் சார்பாகவும் தெரியபடுத்தி கொள்கிறோம்

priya.r said...

சங்கத்தின் கவலையை புவனா அக்கா அவர்களுக்கு தெரிவிக்கும் கடிதம்

அனன்யா
காயத்ரி
குந்தவை
கொடி
அனாமிகா

இவர்களை பற்றி தாங்கள் கூறவும்
இவர்களை தாங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்க எனக்கும் சற்று பயமாக தான் இருக்கிறது
ஒருவேளை மனதை தைரிய படுத்தி கொண்டு கேட்டால் அந்த லிஸ்ட்லில் எனது பேரும் வரும் என்று எனது
மனசாட்சி வேறு அறிவுறுத்துகிறது :(

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹ்ம்ம்ம்... நல்ல எழுதுறீங்க புவனா... இருந்தாலும், இந்த ஸ்டீவ் லூசு.. அப்படி சொல்லி இருக்க வேண்டாம்..

ஒரே ஒரே பீலிங்க்ஸ்..போங்க..
சரி மீராவுக்கு என்ன ஆச்சு????? அவ்வ்வ்வ்

சரி ரைட்ட்டு.. எப்படியும் அடுத்த வாரம் தான் சொல்லுவீக... அப்போ வர்ட்டா... ;-)))

அப்பாவி தங்கமணி said...

@ vinu - ஆமாங்க...வடை உங்களுக்கே... :)

@ எல் கே - உன்னோட போஸ்ட் விட பெருசு தான்....:)) .... அனாமிகா எங்கயோ ஊர் சுத்த போய்ட்டா... வர கொஞ்ச நாள் ஆகும்...:)))

@ Vinu - இல்ல யு தி third ...:)) ஆஹா... படிக்காமையே இம்புட்டு பேச்சா...:)))

@ Balaji saravana - நன்றிங்க பாலாஜி... வாய்க்கா தகராறா...இல்ல பாஸ் இது வாழ்க்கை தகராறு...ஹா ஹா... .:))

@ vinu - அப்படியா சொல்றீங்க... எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா... அடுத்த வாரம் பார்ப்போம் என்ன ஆகுதுன்னு...:)

@ Vasagan - இல்லிங்க DVP பக்கம் போற மாதிரி இருக்கே எனக்கு...ஹா ஹா...:)

@ கீறிப்புள்ள!! - டபுள் ப்ரோமோசன் பாத்து இருக்கேன் நீங்க நேரா 11 வது ப்ரமோஷன்ஆ ஒகே ஒகே...நன்றிங்க..:)

@ தி. ரா. ச.(T.R.C.) - இதெல்லாம் அநியாயம்... இதென்ன share forfeiture transaction ஆ நடக்குது...:))

அப்பாவி தங்கமணி said...

@ கீறிப்புள்ள!! -
//எங்க அடிச்சா எவ்ளோ வலிக்கும்ன்னு போலீஸ்-க்கு அப்றமா பெண்களுக்கு தான் தெரியும் போல//
ரெம்ப அனுபவம் போல...ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங் பிரதர்...:))

//ஸ்டீவ்: இந்த மாதிரி நல்ல நேரம், ராவு காலம் எல்லாம் பாத்து தான் மச்சி நாம உருப்படாம போறது//
இது வேணா ஒத்துக்கலாம்...:))

//இந்த வரிகள் ரொம்ப பிடிச்சது//
நன்றிங்க.... உங்க பதிவு ரெம்ப நல்லா இருக்குங்க... Thanks for sharing here...:)

//ஆனா இந்த வார்த்தைகள் எங்கள ஸ்டேடி ஆக்கிருச்சு//
அப்படியா? அப்படினா யு turn எடுக்க வேண்டியது தான்...ஹா ஹா

//சூப்பர் :)) //
மிக்க நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ பாமர ரசிகன் - பையர் சர்விஸ் கூப்பிட்டுடுவோம்... :))

@ ஹுஸைனம்மா - நன்றிங்க அக்கோவ்....:)... என்னாது குஷி படம் ஞாபகம் வருதோ... அதுல வந்த சண்டைக்கு காரணமென்ன இதுல இருக்கற காரணம் என்ன... why why why...why this kola veri??????.... :))))

@ priya.r - please take diversion...see wholesale comments at the end....:))

@ Krishnaveni - அதை நீங்க தான் சொல்லணும் வேணி... முடிக்கனுமா வேண்டாமா....:))
(Based on how much I know you I assume you'll say "drag few more episodes"...right?...:))))

@ அமைதிச்சாரல் - நன்றிங்க அக்கா... உங்களுக்கும் குஷி படமா... நான் டென்ஷன் ஆய்டுவேன் ஆமா சொல்லிட்டேன்...ஹா ஹா...:))

@ Chitra - ஒளிஞ்சுட்டா இருக்கு...இல்லையே சித்ரா... தெரியுதே...ஹா ஹா...:))))

@ Vasagan - ரெம்ப நன்றிங்க...:)))

@ ராவி - வாங்க ரவி, ரெம்ப நாளா காணோமே? சௌக்கியமா? காபி காலில் கொட்டியா....ஹா ஹா... தெரில இருங்க கேட்டு சொல்றேன்...:)

அப்பாவி தங்கமணி said...

@ மகி - இல்ல Groundhog தூக்கிட்டு போய்டுச்சு... இப்ப அதானே தலைய தூக்கி பாத்துச்சாம்...கிர்ர்ரர்ர்ர்ர்..... கதைய படிங்கன்னா சின்னபுள்ளத்தனமா தலைப்ப PHD பண்ணிக்கிட்டு....ஹா ஹா... :)
(ஆனா உங்க கமெண்ட் பாத்து எனக்கு ஒரு சிறுகதைக்கு மேட்டர் கிடைச்சுடுச்சு... நீங்க தான் ஐடியா குடுத்தீங்க... அதனால போஸ்ட் போடறப்ப யார் திட்டினாலும் உங்களுக்கு தான் forward பண்ணுவேன்...:)))

உங்க கமெண்ட் பாத்து எங்க ஊட்டுக்காரர் சொன்ன கமெண்ட் "ஜில்லுனு போயிட்டு இருந்த கதை சூடு பிடிக்கறதால ஒரு ஒரு எழுத்தா உருகிட்டு வருதோ??"
(ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா...முடியல இவரோட...ஹா ஹா ஹா... இதுல பெரிய கொடுமை என்னன்னா...அவர் போஸ்ட் படிக்கராரோ இல்லையோ கமெண்ட் மிஸ் பண்றதில்ல...:)))

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - ஓ... பக்கத்து ஊருங்கரதால உங்களுக்கு மொதலே நியூஸ் வந்துடுச்சு போல இருக்கு ஆனந்த்...:)))
(மத்தவன் சண்டை போட்டா என்ன ஒரு சந்தோஷம்...ஹ்ம்ம்...:)))

@ Charles - நன்றிங்க சார்லஸ்... மீராவுக்கு ஒண்ணும் ஆக கூடாதுன்னு தான் நானும் நினைக்கிறேன்...பார்ப்போம் விது என்னனு...:))

@ வல்லிசிம்ஹன் - எப்பவும் ஜில்லுனே இருந்தா அருமை தெரியாம போய்டுமே வல்லிம்மா...:))... காபி தானே...வாங்க அதை விட சூப்பர் காபி நான் போட்டு தர்றேன்...:))

@ asiya omar - நன்றிங்க ஆசியா..:))

@கீறிப்புள்ள!! - கேள்வியும் நீங்களே பதிலும் நீங்களேவா? ஹா ஹா... துரத்துதா... மத்திரித்து கட்டுங்க போய்டும்...ஹா ஹா...:))

@ இராஜராஜேஸ்வரி - ஆஹா...எல்லாமும் விவகாரம் புடிச்ச ஊரா இருக்குங்களே ராஜி... :)))..... மீ டூ டென்ஷன்... :))... நன்றிங்க...

@ சே.குமார் - மிக்க நன்றிங்க குமார்

அப்பாவி தங்கமணி said...

@ விமலா - முதல் கமெண்ட்க்கு நன்றிங்க விமலா... டெய்லி ஒரு பார்ட் போடணும்னு எனக்கும் ஆசை தான்... ஆபீஸ்ல உட மாட்டேங்கறாங்களே...ஹா ஹா...Thanks a lot for reading my blog regularly....மேடம் எல்லாம் வேண்டாம்... ஜஸ்ட் புவனா இஸ் குட்... ஓ... எல்லாமும் படிச்சு இருக்கீங்க போல... தேங்க்ஸ்ங்க...தமிழ் க்ளாஸ் எல்லாம் எடுத்துட்டாங்க போல இருக்கே ப்ரியா அக்கா... ஹா ஹா...

ரசிகர் மன்றமா ... எனக்கு தெரிஞ்சு கலாய்ப்போர் சங்கம் தானே இருக்கு..ஹா ஹா...

புவனா அக்காவா... ஆஹா... விமலா, நமக்குள்ள ஒரு டீலிங் போட்டுக்கலாம்... நானும் உங்களுக்கு அக்கா இல்ல, நீங்களும் எனக்கு அக்கா இல்ல...நாம எல்லாம் யூத்... ப்ரியா தான் ஒன்லி அக்கா... டீலா? நோ டீலா?....:)))

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - அப்படி தான் போலனு ரங்க்ஸ் கூட சொல்றார்...இந்த சயின்ஸ் படிச்ச கேஸ் எல்லாம் ஒரே மாதிரி யோசிக்குதே...ஸ்ஸ்ஸ்பப்பா...:)))

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - ஏன் "வேண்டவே வேண்டாம்"....ஹா ஹா ஹா...நன்றிங்க பிரதர்...

@ தக்குடு - மறைமுகமா திட்டினதுக்கு நன்றிங்க தம்பி...ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... நன்றி உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி கமெண்ட் போட்டதுக்கு...:)))
(ப்ரியா அக்காவே அவங்க சம்பத்தபட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டாங்க...:))))

@ ஜெய்லானி - நல்லவேள வந்தீங்க... காணாமல் போனோர் பற்றிய அறிவிப்பு குடுக்கணுமோனு நெனச்சேன்..ஹா அஹ... :))

@ Vasagan - எப்போ இருந்து இதெல்லாம்...aஹா ஹா...:))......மிஸ்.அனாமிகா மிஸ்ஸிங்ஆ? ஹா ஹா... மேடம் ஒரு கான்பரன்ஸ்ல பிஸியாம்... போன வாரமே லீவ் லெட்டர் குடுத்தாச்சு...:))

@ middleclassmadhavi - அதாங்க எனக்கும் தெரில...:))

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - ஆமாங்க ஸ்டீவ் லூசு கோபத்துல ஒளரிருச்சு....இப்ப உக்காந்து பொலம்பிட்டு இருக்கு... மீராவுக்கு வேற என்னமோ ஏதோ....ஹ்ம்ம்... அடுத்த வாரம் தான் தெரியும்ப்பா...:))))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - வாங்க நம்ம பஞ்சாயத்த பாப்போம் இனி..:))

//மீராவுக்கும் ஸ்டீவ் க்கும் ஏன் மோதலை உண்டு பண்ணி இருக்கே//
அதுக ரெண்டும் லூசுக மாதிரி சண்டை போட்டா நான் என்னக்கா செய்ய....:)))

//எப்படியும் இதை வைச்சு இன்னும் பத்து எபிசொட் ஓஓஓஓஓஒட்ட போறே தானே//
இங்க பாருங்க மக்களே.... சும்மா இருக்கரவள கிளப்பி விடறதே இந்த ப்ரியா அக்கா... அப்புறம் யாரும் என்னை திட்டாதீங்க... சொல்லிட்டேன்...:)))

//நீ குலைச்சது ஸ்டீவ் கனவு மட்டும் இல்லே அப்பாவி ;ஒட்டு மொத்த சுனாமி கனவையும் தான்//
அவ பேரே சுனாமினு வெச்சாச்சா...ஹா ஹா அஹ...:))

//பேசாம எட்வர்டுக்கு எட்டப்பன் என்ற பெயரை கொடுக்கலாம்//
அட,ஆரம்ப எழுத்து கூட ஒரே மாதிரி இருக்கே...ஹா ஹா ஹா...:))

//அப்புறம் அதுக்கு ஒரு மொக்கை பதிவு போட்டு தான் உன்ற மனசை நீ ஆத்திக்க முடியும்//
அப்படினா இப்போ மொக்கை இல்லாத பதிவு போடறேன்னு ஒத்துக்கறீங்களா...இதான் போட்டு வாங்கறது.. ஹா ஹா அஹ..

//ஸ்டீவ் இன்னும் எங்க சுனாமியை பார்க்கலே//
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...:)))

//எங்க அப்பாவி கூட தான் ஓவர் ரியாக்ட் பண்ணுவா ! இதை எல்லாம் நாங்க சொல்லியா காண்பிக்கிறோம்//
அதானே...ஸ்டீவை கொஞ்ச நாள் உங்ககிட்ட ட்ரைனிங்க்கு அனுப்பனும்..:)))

//உங்களுக்கு குறைஞ்ச பட்சம் ஒரு ஆறு வித்தியாசம் கூடவா தோணலிங்க//
அதானே... எனக்கு அறுபது வித்தியாசம் கூட தோணுது...வேணும்னா அதை ஒரு போஸ்ட்டா போடட்டும்மா... :)))
(இனி சொல்லுவீங்க...:)))

//எனக்கு இப்போ ஒரு உண்மை தெரிஞ்சாகனும்//
ஜில்லு பாதி சூடு பாதி கலந்து செய்த கதை இது...:)))
(ச்சே..என்னமோ ரெசிபி மாதிரி ஆகி போச்சே...:))

//தங்கத்துக்கு வைரம் கிடைச்சுதா ;அட சொல்லி போடு கண்ணு//
ஹும்... வைடூரியம் கிடைச்சது...:))

//இதெல்லாம் ஒரு கவிதையா
என்று நொந்து போகாதடி//
சான்சே இல்ல ப்ரியா அக்கா... செமையா சிரிச்சேன்... ஹா ஹா ஹா....:)))

//2021 வேலன்ஸ்டே அன்னைக்கு ஸ்டீவ் வந்து மீரா கிட்டே காதலை சொல்ல போறதா ஒரு ப்ளாக் வழி (வலி!) செய்தி //
ஹா ஹா ஹா ஹா...:) இப்படி கிளப்பி விட்டா நெஜமாவே செஞ்சுடுவேன் சொல்லிட்டேன்...:)))) எப்பா சாமி... இந்த ப்ரியா அக்கா பண்ற வேலை சிரிச்சு சிரிச்சு வாய் எல்லாம் வலிக்குது...:)))

//ஏனுங் மகி ! இங்க கதைய வே காணோம்ன்னு நாங்க தேடிகிட்டு இருக்கோமாம்//
தேடுங்க தேடுங்க தேடிட்டே இருங்க...ஹா ஹா ஹா...:))

//இனிமேல் நானும் புவனா அக்கா என்றே சொல்லி கொள்ளட்டுமா//
என்ன கிண்டலா????????????????.....கொல விழும் சொல்லிட்டேன்...:)))

//ஹய்! முதல் முதலா ஒருத்தரை தமிழில் எழுத வைக்க உதவி செய்து இருக்கேனே !//
ப்ளாக் உலகின் அன்னை தெரசா வாழ்க வாழ்க... :)))
(அப்படியே விமலாவை ஒரு ப்ளாக் ஆரம்பிக்க வெச்சுடுங்க ப்ரியாக்கா... நமக்கும் பொழுது போகும் யு சி...:)))

// 1000 usd தங்களுக்கு அன்பளிப்பாக அனுப்பி வைக்க படும் //
சரி சரி...எனக்கு ஸ்பான்சர் நீங்க தானே... அனுப்பிடுங்க...:)))

//இவர்களை பற்றி தாங்கள் கூறவும்//
அனன்யா - அம்மணி ப்ளாக்ஐ தள்ளி வெச்சுட்டாங்க... தனி "பக்கத்துல" எங்க கலாட்டா தொடர்ந்துட்டு தான் இருக்கு...:)
காயத்ரி - அவங்க கொஞ்சம் பிஸினு நியூஸ் வந்தது...
குந்தவை - அவங்க உங்களுக்கு பயந்துட்டு தான் வரலியாம்... சொன்னாங்க...:)))
கொடி - அம்மணி ப்ராஜெக்ட்ல பிஸி... பில் கேட்ஸ்க்கு கூட appointment இல்லையாம்....:)))
அனாமிகா - சுனாமி கான்பரன்ஸ் பிஸி... லீவ் லெட்டர் வந்தாச்சு...:))

இந்த டீடைல் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா...:))))

Anonymous said...

Conference is in June, not enough time to prepare yet.
-Ana

Anonymous said...

In China now, no access to the Internet. =( Wednesday vanthu pesaren

priya.r said...

All the best Ana

We are expecting yr presence de

Take careppa

Sri Seethalakshmi said...

hai, your jillunu oru kadhal is really super.
--
seetha

அனாமிகா துவாரகன் said...

ஐயாம் பாக்.

@ கீறிப்புள்ள,
கனவிலும் இந்த கதையா? அவ்ளோ ட்ரொமடைசிங்கா? அவ்வ்வ்வ்வ்

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - வாங்க வாங்க...:)

@ priya.r - :)

@ Sri Seethalakshmi - Thank you Seetha .:)

அப்பாவி தங்கமணி said...

Hi Everyone,

Sorry couldn't post Part 12 today... I will try to post it tomorrow...

Thanks,
Appavi Thangamani

(Mindvoice: ha ha... thangamani enjaaaaaiiii..:)))

Sri Seethalakshmi said...

I'm trying 115 times, and getting the same error பக்கம் கண்டறியப்படவில்லை :-)
please sis try to post it today

அப்பாவி தங்கமணி said...

@ Sri Seethalakshmi - Thanks a lot for checking Seetha. 115 times? Wow... Thanks a bunch again...:)... Will post it today
Regards,
Appavi Sis..:)

priya.r said...

சும்மாவே பந்தா பார்வதி !
அதிலே இப்படி ஒருத்தர் (அம்மா உங்க காலை கொஞ்சம் காட்டுங்க !)
115 தடவை ன்னு சொன்னா எப்படி இருக்கும் ?
இனி வருஷம் பூரா இதை சொல்லி சொல்லியே ..........................!
கில்லி படத்திலே புவனா சொன்ன டயலாக் தான் நியாபகம் வருது !

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
ஹா ஹா ஹா...என்னடா இன்னும் நம்ம திருப்பூர் திலகவதிய காணோமேனு நெனச்சேன்... வந்துட்டாயா வந்துட்டா...:)))

//கில்லி படத்திலே புவனா சொன்ன டயலாக் தான் நியாபகம் வருது//
கில்லி படத்துல விஜய்யோட தங்கை கேரக்டர் பேரு புவனா... அது ஞாபகம் இருக்கு... என் பேரு ஆச்சே...ஹி ஹி ஹி... அதென்ன டயலாக்... நெஜமா மறந்து போச்சு... சொல்லுங்க அக்கோய்...:))

priya.r said...

கனடா நாட்டு காரிகையே !

படத்தில் தங்கை சொல்லுவா ,:" இந்த அண்ணன் பண்ணற கொடுமையை தாங்க முடியலை ;பேசாம என்னை லேடீஸ் ஹோச்டேல் லில்

சேர்த்து விட்டுட்டுங்க என்பா ;அதற்கு விஜய் நீ சேர வேண்டியது லேடீஸ் ஹோச்டேல் இல்லே புவி ;அதற்கு பேரு குழந்தைகள் காப்பகம் என்பான்.,

அங்கே புவனா சொன்னது இங்கே புவனாவை பார்த்து நாங்க சொல்ல வேண்டியதா இருக்கு ! விதி வலியது

Anonymous said...

சொன்ன வாக்கை மீறிய அ.தங்கமணியை வலைப்பதிவர் சங்கத்தில் இருந்து தள்ளி வைக்கிறோம்! இனிமேல் இவர் எழுதும் ஒவ்வொரு பதிவுக்கும் 10 மைனஸ் ஓட்டுப் போட்டு எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு சங்க உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

தலைவர்,
வில்லங்கமான போராட்டம் நடாத்தும் வலைப்பதிவர் சங்கம்.
ஆஸ்ரேலியக் கிளை.

Anonymous said...

செவ்வாய் தோறும் போடுவேன் என்று சொன்ன வாக்கை மீறிய என்று வந்திருக்க வேண்டும்.

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//கனடா நாட்டு காரிகையே//
சொல்லுங்கள் இந்திய நாட்டின் இளவஞ்சியே...:))))

// நீ சேர வேண்டியது லேடீஸ் ஹோச்டேல் இல்லே புவி ;அதற்கு பேரு குழந்தைகள் காப்பகம்//
அதாவது எனக்கு குழந்தை மனசுனு சொல்ல வரீங்க,அதானே ப்ரியா அக்கா... ஆஹா... என்ன ஒரு பாசம்... என்ன ஒரு நேசம்... ஹி ஹி ஹி...:)))

அப்பாவி தங்கமணி said...

@ பெயரில்லா - அம்மணி, நீ பேரில்லாம போட்டாலும் பேரோட போட்டாலும் நான் அறிவேன் இது யாரென...:))... மன்னிச்சுகோங்க அம்மணி... போஸ்ட் போட்டுட்டேன் இப்போ... போய் உன் திட்டும் படலத்தை ஆரம்பி இனி... :))))

siva said...

mee the first...present teacher,

அப்பாவி தங்கமணி said...

@ siva - என்ன கொடும சிவா இது....போன வாரம் போட்ட போஸ்ட்க்கு இப்ப வந்து Me the firstஆ?....:)))

Anonymous said...

nice

Anonymous said...

priya - so nice

priya.r said...

Anaami .,ithu nee thaane!

bhuvi .,vanthu confirm seiyyuppa .....

அப்பாவி தங்கமணி said...

@ பெயரில்லா - Thank you...;)

@ priya.r - Akka... I dont think this is Anami... she couldn't stop in one line we know right?...:))

Post a Comment