Wednesday, March 16, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 12)பகுதி 1    பகுதி 2    பகுதி 3    பகுதி 4    பகுதி 5    பகுதி 6    பகுதி 7    பகுதி 8    பகுதி 9    பகுதி 10    பகுதி 11 


"ஸ்டீவ்... சீக்கரம் கிங் ஸ்ட்ரீட்ல இருக்கற Tim Hortonsகிட்ட உடனே போ... மீரா needs help" என்றாள் மது பதட்டமான குரலில்

ஒருகணம் உயிர் போனது போல் செயலற்று நின்றான் ஸ்டீவ்

"மது...என்ன...என்னாச்சு மீ...மீராவுக்கு?" என்றவனின் குரல் அவனுக்கே கேட்காதது போல் ஒலித்தது

"ஸ்டீவ்... இப்ப பேச நேரமில்ல... நாங்க வந்துட்டு இருக்கோம்... please go there now.." என்றாள் கட்டளை போல், அதோடு அழைப்பும் துண்டிக்கப்பட்டது

அதற்கு மேல பேசவும் தெம்பில்லாதவனாய், மொத்த சக்தியையும் திரட்டி வேகமாய் நடக்கலானான்

"என்னால் தானே அவள் கோபமாய் சென்றாள்...என்னால் தானே இந்த விபரீதம்... கொஞ்சம் பொறுமையாய் பேசி இருக்கலாமே நான்... சண்டை வந்தாலும் சரி என அவள் பின் சென்றிருக்க வேண்டும்... அவளை அந்த மனநிலையில் தனியே விட்டது தன் தவறு" என பலதும் யோசித்து வேதனையில் உழன்றான் ஸ்டீவ்

பழகிய இடம் என்பதால் கால்கள் தன்னால் இட்டு சென்றது. சுய நினைவே அற்றவன் போல் மீராவே மனம் முழுதும் ஆக்கிரமித்து இருக்க கால் போன போக்கில், ஆனால் வேகமாய் நடந்தான்

அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடதென உலகின் எல்லா தெய்வங்களையும் வேண்டினான் ஸ்டீவ். இனி வாழ்வில் எப்போதும் அவளுடன் சண்டை போடுவதில்லை என உறுதி கொண்டான்

அவள் தனக்கு இல்லை என்றாலும் சரி, ஆனால் அவளுக்கு எதுவும் ஆகி இருக்க கூடாதென மனம் வேண்டியது

அவன் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த போது கண்ட காட்சியில் அவனையும் அறியாமல் "மீரா..." என கத்தினான்

கண்களில் நீர் பெருக ஓடி வந்தவனை கண்டதும் ஆம்புலன்ஸ்ல் மீராவை கிடத்தி கொண்டிருந்த பணியாள் "do you know her?" என கேட்டான்

"yes...she is...she is..." என அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாறிய ஸ்டீவ், மீண்டும் அவன் கவனம் மீராவின் புறம் திரும்ப, முதலுதவிக்காக போடபட்டிருந்த கட்டையும் மீறி அவள் நெற்றியில் ரத்தம் வழிய கண்டதும் அதிர்ந்தவன்

"மீரா... மீரா... கண்ணை தெற மீரா... ப்ளீஸ் மீரா..." என சுயநினைவின்றி கிடந்தவளின் முகத்தை பற்றினான்

அதற்குள் ஆம்புலன்ஸ் பணியாள் "Don't move her man. She needs to be examined first...are you coming with us?" என கேட்க "Yes" என்றான் ஸ்டீவ் உடனேயே

அம்புலன்ஸ் நகரத்துவங்க "Is she alright? Is she going to be...alright?" என்றான் ஸ்டீவ் நடுங்கிய குரலில்

"We hope so...we did needed first aid " என்றான் இயந்திரத்தனமான குரலில், இது போல் தினமும் பல கேஸ்கள் பார்க்கும் அவனுக்கு இது வழக்கமான ஒரு நடைமுறை

"What happened? Did she tripped or ....?" என ஸ்டீவ் கேள்வியாய் அவனை பார்க்க "I have no permissions to say any. Please talk to the cop" என அம்புலன்ஸ் பின் வந்து கொண்டிருந்த போலீஸ் வண்டியை காட்டினான்

அப்போது தான் ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தான் ஸ்டீவ். அதற்கு மேல் எதுவும் பேசாமல் மீராவின் சில்லிட்ட கையை மெல்ல பற்றியவன் "மீரா... ப்ளீஸ் மீரா... என்னை அழ வெக்காத மீரா... ப்ளீஸ்... கண்ண தெற மீரா ப்ளீஸ்" என மெல்லிய குரலில் அவன் விசும்ப

அந்த நிலையை பார்த்த ஆம்புலன்ஸ் பணியாளின் முகத்தில் கனிவு தோன்றியது "she will be alright" என ஆதரவாய் ஸ்டீவின் தோளில் கை பதித்தான்

மீராவை எமர்ஜன்சி என்ட்ரன்ஸ் வழியே உள்ளே கொண்டு சென்றனர்... ஒரு கட்டத்திற்கு மேல் எத்தனை கெஞ்சியும் ஸ்டீவ் உள்ளே அனுமதிக்கபடவில்லை

செய்வதறியாமல் அவன் அமர்ந்திருக்க, அதே நேரம் மதுவிடமிருந்து அழைப்பு வந்தது

"ஹலோ... மது"

"ஸ்டீவ்...எங்க இருக்க? மீரா உன்னோட தான் இருக்காளா?"

"ம்... இங்க St.Michaels Hospitalல இருக்கோம் மீரா...சாரி மது... அது வந்து... " என அவன் தடுமாற, அவன் மனநிலையை புரிந்து கொண்ட மது

"ஒகே ஸ்டீவ் நாங்க ஹாஸ்பிடல்க்கு வந்துடறோம்" என அவள் பேசியை அணைக்கும் முன் "ஹாஸ்பிடல்ஆ? மீராக்கு என்னாச்சு?" என சதீஷ் கத்துவது ஸ்டீவின் காதில் கேட்டது

அந்த கணம் "சதீஷை எப்படி சமாளிக்க போகிறேன்" என்ற கவலை ஸ்டீவின் மனதில் உதித்தது... "ஆனால் இப்போது மீரா உடல்நிலை தான் முக்கியம், மற்ற எதையும் சந்திக்க தான் தயார்" என நினைத்தான்

அவனை நோக்கி வந்த போலீஸ் அதிகாரியை பார்த்ததும் எழுந்து நின்றான் ஸ்டீவ்

***********************************

"என்ன மது? மீராவுக்கு என்னாச்சு? கேக்கறதுக்கு மொதல்ல பதில் சொல்லு" என்றான் சதீஷ் பதட்டமாய்

"தெரியல சதீஷ். போன்ல பேசற நேரம் நேர்ல போலாம்னு தான் நான் எதுவும் கேக்கல... டோண்ட் வொர்ரி சதீஷ்.... மீராவே தானே நமக்கு போன் பண்ணினா... பேச பேச லைன் கட் ஆய்டுச்சு... ஒண்ணும் ஆகாது... " என்றாள் மது, தன் மனதில் இருந்த பதட்டத்தை மறைத்தவாறே

அதற்கு மேல் எதுவும் பேசக்கூட தைரியம் அற்றவனாய் மௌனமாய் வந்தான் சதீஷ்

************************************

ஸ்டீவை பார்த்ததும் அத்தனை நேரம் இருந்த பதட்டம் பயம் எல்லாமும் கோபமாய் உருவெடுக்க "டேய்...என்ன பண்ண... என்ன பண்ணின மீராவ...சொல்லு" என அவன் சட்டையை பற்றி உலுக்கினான் சதீஷ்

"சதீஷ்...நான்..." என ஸ்டீவ் தடுமாற

"சதீஷ்... ப்ளீஸ்...சீன் கிரியேட் பண்ணாத...ப்ளீஸ் அவன விடு... மொதல்ல மீராவ பாக்கலாம் வா" என மீராவின் பெயரை சொல்லி சதீஷை திசை திரும்ப முயன்றாள் மது

அவள் எதிர்பார்த்தது போலவே மீராவை பார்க்கும் ஆவலில் அவன் பிடி தளர்ந்தது

அதற்குள் "இல்ல மது...மீராவை இப்ப பாக்க விட மாட்டேங்கறாங்க..." என்றான் ஸ்டீவ் தயக்கமாய், சொல்லும் போதே அவன் கண்கள் பனித்தது

"பாக்க விடலையா... என்னாச்சு... சொல்லு... மீராவுக்கு என்னாச்சு" என மீண்டும் சீறினான் சதீஷ்

"சதீஷ்... ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இரு...எல்லாரும் நம்மளையே பாக்கறாங்க" என அவனை அடக்கியவள் "அந்த பக்கம் போலாம்... " என சற்று நடமாட்டம் குறைவாய் இருந்த வெய்டிங் ஏரியாவிற்கு இருவரையும் அழைத்து சென்றவள் "ம்...சொல்லு ஸ்டீவ் என்னாச்சு?" என்றாள்

"அது... மீரா... வழில போயிட்டு இருந்தப்ப... யாரோ ரெண்டு muggers (பிக் பாக்கெட்காரர்கள்) அவ பேக்கை snatch பண்ண பாத்து இருக்காங்க... இவ குடுக்கல போல இருக்கு... defend பண்ணி இருக்கா..." என்றவன், அந்த நேரத்தில் எத்தனை பயந்திருப்பாள் என்ற நினைவில் மனம் வேதனையுற பேச இயலாமல் நிறுத்தினான்

"மீரா உன்கூட தானே இருந்தா... இது நடந்தப்ப நீ என்ன பண்ணிட்டு இருந்த" என முறைத்தான் சதீஷ்

இந்த கேள்வியை எதிர்பார்த்து இருந்தபோதும் தங்களுக்குள் நடந்த விவாதம் பற்றி கூற தயங்கியவனாய் மௌனம் காத்தான் ஸ்டீவ்

"ஸ்டீவ்..." என அதட்டலுடன் அவன் அருகே செல்ல முயன்ற சதீஷை தடுத்தாள் மது "இரு சதீஷ் அவன் சொல்லட்டும்...சொல்லு ஸ்டீவ்... நீ எங்க போன"

"அது... நான்...கான்செர்ட் ஹால்ல தான் இருந்தேன்... " என்றான்

"மீரா ஏன் அங்கிருந்து கிளம்பினா?" மதுவே கேட்டாள் சதீஷ் கேட்கும் முன்

விசாரணை கைதி போல் தான் நடத்தப்படுவது வேதனை தந்தபோதும், தன் மீதுள்ள தவறு மனதை உறுத்த "அது... ஒரு சின்ன arguement ...நான்..." என ஸ்டீவ் மேலே கூறும் முன் சதீஷின் கை ஸ்டீவின் கன்னத்தில் பதிந்து இருந்தது

இப்படி ஒரு தாக்குதலை எதிர்பாராத ஸ்டீவும் மதுவும் அதிர்ச்சியில் நின்றனர். மீண்டும் சதீஷ் ஸ்டீவை தாக்க முனைய "ப்ளீஸ் சதீஷ் நான் சொல்றத கொஞ்சம் கேளு" என தடுத்தாள் மது

"இல்ல மது... எனக்கு தெரியும்... எனக்கு நல்லாவே தெரியும்... ஸ்டீவ் தான் நிச்சியமா ஏதோ செஞ்சுருப்பான்னு... இவன" என மீண்டும் கை ஒங்க "கொஞ்சம் பொறுமையா இரு சதீஷ்... மீராவுக்கு என்னாச்சுனு தெரிஞ்சுக்கறது இப்ப முக்கியம்" என்றாள் மது

"சொல்லு ஸ்டீவ்... அப்புறம் என்ன நடந்தது...நீ அங்க இல்லைனா உன்கிட்ட இதெல்லாம் யார் சொன்னது... மீராவா?" என மது கேட்க, மது கூட தன்னை நம்பாமல் குற்றவாளி போல் நடத்துவது ஸ்டீவை வேதனைப்படுத்தியது

"இல்ல...Officer (போலீஸ்) தான் சொன்னாரு...அது... மீரா 'ஹெல்ப்'னு கத்தினதும் அந்த திருடன் பாக்கெட் நைப் (கத்தி) காட்டி இருக்கான்..." எனவும் "ஐயோ... கத்தியா... Is Meera alright? சொல்லு ஸ்டீவ் ப்ளீஸ்" என்றான் சதீஷ் மற்றதெல்லாம் மறந்து

"கத்திய பாத்து மீரா பயந்து சத்தம் போடவும் அந்த திருடன் மீராவை கீழ தள்ள முயற்சி செஞ்சப்ப அவன் கைல இருந்த கத்தி மீரா நெத்தில பட்டிருக்கு...நல்ல வேளை ஆழமா காயம் படல.. ப்ளட் லாஸ் தான் கொஞ்சம்...." என அவளை ரத்தம் வழிய பார்த்த நினைவில் ஒரு கணம் பேச இயலாமல் நின்றவன் மீண்டும் தொடர்ந்தான்

"டாக்டர் ஆபத்து இல்லை சரி ஆய்டும்னு சொன்னாரு... ஆனா டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு பாக்க விடல இன்னும்... மீராவுக்கு எதுவும் ஆகாது சதீஷ்... ஐ அம் சாரி சதீஷ்... நான் வேணும்னு எதுவும் செய்யல... சாரி" என்றவன் அதற்கு மேல் என்ன சொல்வது என தெரியாமல் மௌனமானான் ஸ்டீவ்

சற்று நேரம் அங்கு நிசப்தம் நிலவியது

"மீரா சின்ன வலி கூட தாங்க மாட்டா மது...கத்தி பட்டு... ச்சே... எப்படி... " பேச இயலாமல் தடுமாறினான் சதீஷ், கண்ணில் பெருகிய நீரை மறைக்க எழுந்து ஜன்னல் பக்கம் சென்று நின்றான்

இந்த நிலைக்கு தானும் ஒரு வகையில் காரணம் என்ற குற்ற உணர்வு ஸ்டீவை கொன்றது. அந்த நினைவில் சதீஷை சமாதானம் செய்யும் எண்ணத்துடன் அவனருகே சென்றவன் "சதீஷ்... "என அவன் தோள் தொட "கெட் லாஸ்ட்" என்றான் சதீஷ் கோபமாய்

"சதீஷ் ப்ளீஸ்..."

"மொதல்ல இங்கிருந்து போய்டு... இனி உனக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல... ஜஸ்ட் கெட் லாஸ்ட்... இனி மீராவோட நீ பேச முயற்சி செய்யறதை நான் பாத்தா you will be in trouble... get lost this minute" என மிரட்டல் போல் சதீஷ் கூற

"சதீஷ்..ப்ளீஸ்... என்மேல..."

"உன்மேல தப்பா இல்லையானு எந்த விளக்கமும் எனக்கு தேவை இல்ல... போய்டு... என்னை மிருகமாக்காத போ" என்றான் சதீஷ், அவன் முகத்தை கூட பார்க்க விருப்பம் அற்றவன் போல் வேறு புறம் திரும்பி

"மீரா கண் முழிச்சதும் பாத்துட்டு போறேன்" என்றான் ஸ்டீவ் தீர்மானித்தவன் போல்

"தேவை இல்ல.... அவள பாத்துக்க எனக்கு தெரியும்..."

"பாத்ததும் போய்டறேன்..." என்றான் ஸ்டீவ் மீண்டும்

"சொல்றது காதுல விழலயா... நீ அவள பாக்கறது அவசியம் இல்ல..." என்ற சதீஷ், அதோடு நில்லாமல் ஸ்டீவை வெளியே செல்லும் பாதை நோக்கி இழுக்க முயல அது வரை பொறுமையாய் இருந்த ஸ்டீவ் சதீஷின் கையை கோபமாய் உதறினான்

"அதை சொல்ல நீ யாரு... அவளுக்கு கார்டியனா?" என ஸ்டீவ் கோபமாய் கேட்க

"ஆமா கார்டியன் தான்... இப்ப போறியா?"

"முடியாது... மீரா சொல்லட்டும்... அப்ப போறேன்.."

"ஒகே... வேற வழி இல்ல... அவளை நீ Harass(eve-teasing) பண்றேன்னு நான் போலீஸ் கம்ப்ளைன்ட் பண்றேன்... அப்ப போலீஸ் மரியாதையோட நீ இங்க இருந்து போலாம்" என்றான் மிரட்டலாய்

"பண்ணு... ஐ டோண்ட் கேர்... மீரா யாருக்கு எதிரா சாட்சி சொல்றானு பாக்கலாம்" என்றான் ஸ்டீவ் தானும் சளைக்காமல்

சற்று முன் இருவரும் வேதனையில் உருகி நின்றதென்ன, இப்போது மீண்டும் பழைய படி போட்டியில் சண்டை போடுவதென்ன என சலித்தாள் மது

"Will you both please stop it? கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம இந்த நேரத்துல கூட ரெண்டு பேரும்... ச்சே... " என மது கோபமாய் இருவரையும் பார்க்க

"இல்ல மது அவன் தானே..." என ஸ்டீவ் தன் பாக்க நியாயத்தை கூற முயல்பவன் போல் ஆரம்பிக்க

"போதும் ஸ்டீவ்...ச்சே.. " என கோபத்தில் நின்றவள், ஏதோ நினைத்தது போல் "ஸ்டீவ்...நீ கிளம்பு மொதல்ல... " எனவும்

"மது..நீ கூட..."

"இல்ல ஸ்டீவ்... இந்த நேரத்துல நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கறது சரியா தோணல... மீரா கண் முழிக்கரப்பவும் அவ முன்னாடி இதையே தான் செய்வீங்க ரெண்டு பேரும்... அது நல்லதில்ல... நீ கிளம்பு ஸ்டீவ்" என்றாள் மது தீர்மானம் போல்

"மது...நான்..."

"இல்ல ஸ்டீவ்... இப்ப மீராவோட ஹெல்த் தான் முக்கியம்... மத்ததெல்லாம் அப்புறம் பாக்கலாம்... நான் சொல்றத கேக்க மாட்டயா... கிளம்பு ப்ளீஸ்..." என மது கூற, அதற்கு மேல் மறுத்து பேச இயலாமல், அங்கிருந்து செல்லவும் மனமில்லாமல் பேசாமல் நின்றான்

"ஸ்டீவ்..." என மது எதோ சொல்ல வர, ஸ்டீவ் அவளை விட்டு சதீஷ் அருகில் சென்று நின்றான். சதீஷ் அங்கு ஸ்டீவ் நிற்பதையே பொருட்படுத்தாதவன் போல் நின்றிருந்தான்

"இங்க பாரு சதீஷ், நம்ம பிரச்சன இப்ப வேண்டாம்... மீரா கண் முழிச்சதும் பாத்துட்டு உடனே போய்டறேன்... ஐ ப்ராமிஸ்... பேசக்கூட மாட்டேன்... " அனுமதியா இல்லை தீர்மானமா என கூற இயலாதபடி ஸ்டீவ் பேச, சதீஷ் பதில் ஏதும் கூறாமல் நகர்ந்தான்

மீண்டும் சண்டை போடாமல் இருந்ததே போதுமென நிம்மதியானாள் மது

அதே நேரம் "Who is with patient Meera Rangarajan?" என குரல் கேட்க மூவரும் விரைந்து சென்றனர்

உணர்வின்றி உனைகாண
உள்ளமெல்லாம் பதைத்ததடி
உதிரம்பெருக கண்டநொடி
உயிரும்தான் போனதடி 
உனக்குள் நானிருந்தால்
உண்மையை உரக்கசொல்
உரிமையை பறைசாற்ற
உன்னிடம்இதை கேட்கவில்லை
உணர்வற்று தவிக்கும்இதயத்திற்கு
உயிரூட்டவே கேட்கிறேன்!!!

இனி...

அடுத்த பகுதி படிக்க

(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)

61 பேரு சொல்லி இருக்காக:

அப்பாவி தங்கமணி said...

அப்பாவி அப்டேட்:
மன்னிக்கணும், இந்த வாரம் குடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை. ஒரு நாள் லேட்டா போஸ்ட் போடறேன்... மன்னிச்சுகோங்க எசமான்... ஊர விட்டு தள்ளி வெச்சு போடாதீக.... :)
இப்படிக்கு,
நானொரு அப்பாவிங்க...
நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க...
நானொரு அப்பாவிங்க... :)))

ஹுஸைனம்மா said...

......... (பேச்சே வரலை, அழுதுகிட்டிருக்கேன்)

அப்பாவி தங்கமணி said...

// ஹுஸைனம்மா சொன்னது…
......... (பேச்சே வரலை, அழுதுகிட்டிருக்கேன்)//

ஏன்? ஒருவேள "இந்த வாரம் போஸ்ட் இல்ல ஐ ஜாலி" இருந்த நெனப்புல மண்ணை போட்டுட்டேனோ...:))))

பிரதீபா said...

கடைசியா இருக்கிற அந்த உ கவிதை சூப்பர்.

Sathish A said...

ஒருதனனுக்கு இதுதான் சான்சு, அடிசுடான்ப்பா...

நசரேயன் said...

// "இந்த வாரம் போஸ்ட் இல்ல ஐ ஜாலி" இருந்த நெனப்புல மண்ணை போட்டுட்டேனோ//

தனியா வேற சொல்லனுமா ?

கோவை ஆவி said...

உங்க போஸ்டை காணோமின்னு
உள்ளத்தில் பொங்கிய
உவகையை நெஞ்சத்தின்
உள்ளேயே அடக்கிக்கொண்டு
உண்மையில் பதிவைக் காணாது
உள்ளம் வருந்துகிறோம் என்று-பொய்
உரைக்க மனம் ஒப்பவில்லை.

Vasagan said...

Hospital , சண்டைகாட்சி, செண்டிமெண்ட் , தெய்வீக காதலன், உ பாடல்,படம் நூறு நாள் ஓடும்.


கோவை ஆவி
உ வுக்கு உ கவிதை சூப்பர்.

எல் கே said...

ஒன்னும் பண்றதுக்கு இல்லை. சண்டை கூட நல்ல எழுதறியே அப்பாவி

எல் கே said...

//மன்னிக்கணும், //

முடியாது, இதுக்கு தண்டனை அனாமி சொல்லுவா

sulthanonline said...

"அடுத்த வாரமாவது மீராவ கண் திறக்க வைப்பாங்களா இல்ல இன்னும் ரெண்டு வாரத்திற்கு சுயநினைவில்லாமல் மீரா இருக்கிறாள் னு எபிசோடை இழுக்கிறாங்களா" அப்பாவி மேடம் கைல தான் இருக்கு.!? விதியேன்னு படிப்போம்! இறுதியில் உள்ள கவிதை சூப்பர்.

vinu said...

அப்பாவி அப்டேட்:
மன்னிக்கணும், இந்த வாரம் குடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை. ஒரு நாள் லேட்டா போஸ்ட் போடறேன்... மன்னிச்சுகோங்க எசமான்... ஊர விட்டு தள்ளி வெச்சு போடாதீக.... :)
இப்படிக்கு,
நானொரு அப்பாவிங்க...
நல்லா படிச்சவங்க நாலு பேரு சொன்னாங்க...
நானொரு அப்பாவிங்க... :)))

chellaathu chellaathu............
angittu yaarupaaa piraaathu kuduththu irrukkaaa.............


aaanga inth pullaya aduththu 4 naalaykku blogg vuttu thalli vaikku.......

aarum ivanga blogula vanthu commentu podakk koodaathu..........

aarum ivanga kittea aduththa post paththi visaarikkak koodaathu...........

ivanga intha punishmentla irrunthu release aaganumnaaa aduththa vaaraththukkullea rendu episode podanumnu panjaayaththu theeeerpu.......

intha theeerpa mathikkaaty "steve" 3 maasam meereekittea pesakk koodaathunnu theeerpu alikkurom.........

[he he he he he epuudi neeenga pannuna thappaala naan sathees - meeravai serththu vachchuttomulley]

siva said...

நல்ல வேளை ஆழமா காயம் படல.. ப்ளட் லாஸ் தான் கொஞ்சம்..//

அது எப்படி லேசான காயம்
பட் ப்ளெட் லாஸ்ட் அதிகம்னு சொல்றீங்க ...
ம்ம்ம் எதை எல்லாம் நான் ஒத்துக்கவே முடியாது ..

siva said...

"டாக்டர் ஆபத்து இல்லை சரி ஆய்டும்னு சொன்னாரு... ஆனா டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு பாக்க விடல இன்னும்..//


கொஞ்சம் ஓவரா தெரியல உங்களுக்கே ...
பதிவர்களே எதை எல்லாம் கேட்க ஒரே அணியில் திரள்வீர்

siva said...

@anamikka akka..neenga oru koodai paarcel anukondu podunga..appvioda blog collose...engio ellam bam vidikkuthu...enga vidikka mattuthey...:)

siva said...

Hospital , சண்டைகாட்சி, செண்டிமெண்ட் , தெய்வீக காதலன், உ பாடல்,படம் நூறு நாள் ஓடும்.
///ethukuthan avorda padam paakathenganu chonna kekanum...//

அனாமிகா துவாரகன் said...

//"அது... ஒரு சின்ன arguement ...நான்..." என ஸ்டீவ் மேலே கூறும் முன் சதீஷின் கை ஸ்டீவின் கன்னத்தில் பதிந்து இருந்தது
//

எவன்டா எங்க ஸ்டீவ் மேல கையை வைச்சது. இந்த சதீஸ் போட்டுத் தள்ளிட்டு தான் மறுவேலை. அப்படியே இந்த புவனாவையும் சப்வேல வைச்சு தூக்கிடறேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இராஜராஜேஸ்வரி said...

மீராவின் கால்ஷீட் கிடைக்காவிட்டால் கத்திபட்ட காயத்திற்கு நூறு நாள் கோமாவில் கிடத்தி சீன் போடுவீர்களா??????

அனாமிகா துவாரகன் said...

இந்த சண்டை இன்னும் ஒரு 10 எபிசோட்ல போகும். சோ, நான் இரண்டு மாசம் கழிச்சு வந்து பாக்கறேன். பாய் பாய்

அனாமிகா துவாரகன் said...

@ இராஜராஜேஸ்வரி,
//மீராவின் கால்ஷீட் கிடைக்காவிட்டால் கத்திபட்ட காயத்திற்கு நூறு நாள் கோமாவில் கிடத்தி சீன் போடுவீர்களா?????? //
எப்புடீங்க. இப்படி எல்லாம் யோசிக்கறீங்க.

தங்கம்பழனி said...

திரைப்படம் பார்ப்பது போல் இருந்தது. கதையும், கதாபாத்திரங்களின் உரையாடல்களும்.. கற்பனைச் சிறகை விரிய வைத்தது..! ஜில்லுனு ஒரு காதல்..!!

Anonymous said...

அப்பாவி அக்கா,சஸ்பென்ஸ் தாங்க முடியல .சீக்கரம் முழு கதையும் எழுதி முடிங்க.இப்படிக்கு அப்பாவி தங்கமணி
ரசிகர் மன்ற உறுப்பினர் .latha

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//மீராவின் கால்ஷீட் கிடைக்காவிட்டால் கத்திபட்ட காயத்திற்கு நூறு நாள் கோமாவில் கிடத்தி சீன் போடுவீர்களா??????//

மிகச் சரியாக யூகித்த பதிவர் இராஜராஜேஸ்வரிக்கு படம் முடிந்தவுடன் பால்கனியில் சத்யம் தியோட்டரில் குடும்பத்துடன் பார்க்க இலவச டிக்கெட் அனுப்பி வைக்கப்படும், கொரியர் சார்ஜஸ் மட்டும் ஒரு டிக்கெட்டிற்கு 150 ரூபாய் கொடுத்தனுப்புமாறு அப்பாவி ரசிகர்கள் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மனம் திறந்து... (மதி) said...

உறுதிமொழியை உடைச்சதுக்கு
உருப்படியா பதிலில்லை!
உன்னை நம்பி உக்காந்து
உசுப்பேறி ஓஞ்சிபோனோம்!

உங்களை நான் ஏமாத்த
உண்மையா நினைக்கலைன்னு,
உள்மனசு அறியாத
உடான்ஸ் விட்டாக்கா
உம்மாச்சி ஓடிவந்து
உடனே கண்ணைக் குத்தும் !

உட்டுடுங்கோ, திருந்திட்டேன்னு
உருகி உருகி நடிச்சாலும்
உங்களைத்தான் இனி இந்த
உலகமே நம்பாதே!

middleclassmadhavi said...

நான் நிசமா உங்கள் பதிவை செவ்வாயன்று தேடினேன் - ஒண்ணுமில்லை, மைன்ட் வாய்ஸ என் ப்ளாக் பக்கம் கூட்டிப் போய்ட்டேன்!!

Sri Seethalakshmi said...

today's episode is fantastic, specially the fight sequence is amazing...
waiting for 22nd march :-)

கீறிப்புள்ள!! said...

/ஜில்லுனு ஒரு காதல்//
ஜில்லுனு ஒரு'தலை' காதல்-ன்னு டைட்டில் வெச்சிருக்கணும் நீங்க.. :(( அநியாயத்துக்கு எங்க ஸ்டீவ்-வ அழ விடறீங்க நீங்க.. "கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் கனடா வேந்தன்" :((

உ-கவிதை உருக்கம்...
மற்ற ரெண்டு உ-கவிதை தாறு மாறு.. ஹா ஹா ஹா.. :))

@அனாநீ
/எவன்டா எங்க ஸ்டீவ் மேல கையை வைச்சது. இந்த சதீஸ் போட்டுத் தள்ளிட்டு தான் மறுவேலை.//
நான் ரெடி நீங்க ரெடியா.. ஹா ஹா ஹா.. :)))

/இந்த சண்டை இன்னும் ஒரு 10 எபிசோட்ல போகும்.//
இல்லைங்க கண் முழிச்சதும் நம்ம 'ஜோ' அக்கா 'காக்க காக்க-ல' சூர்யா-ட்ட பேசின மாதிரி.. "நான் பாத்தன் ஸ்டீவ் நீ அழுதத நான் பாத்தன்.." அப்டின்னு டயலாக் வெக்கலன்னா அப்பாவிய நீங்க என்ன பண்ணுவீங்கன்னு அவங்களுக்கு தெரியும்.. அதனால சரியா எழுதிருவாங்க.. ஹா ஹா ஹா..

சே.குமார் said...

இறுதியில் உள்ள கவிதை சூப்பர்.

சுசி said...

:))

asiya omar said...

மீரா கண்ணை திறந்த பிறகு இருக்கு எல்லாருக்கும்...

Balaji saravana said...

என் ஃபெவரிட் சதீஷ் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா ஹீரோவா மாறிக்கிட்டு வர்றான், யார் பேச்சையாவது கேட்டு நடுவுல எதாவது பண்ணி அவன கழட்டி வுட்டீங்க.. அவ்ளோ தான்..அதகளமாயிடும்.. சொல்லிட்டேன்!.. :)

priya.r said...

கதாசிரியை திருமதி புவனி அவர்கள் கதையின் இந்த பகுதியில் நம்மை ஆளுமை படுத்தி இருக்கிறார் எனலாம்
கதையின் ஓட்டத்தோடு நம்மையும் பயணிக்க வைக்கிறார்
நாமும் பயனிப்போமே !

priya.r said...

ஸ்டீவ்... சீக்கரம் கிங் ஸ்ட்ரீட்ல இருக்கற Tim Hortonsகிட்ட உடனே போ... மீரா needs help" என்றாள் மது பதட்டமான குரலில்//

நாமும் பதட்டமாகிறோம்

ஒருகணம் உயிர் போனது போல் செயலற்று நின்றான் ஸ்டீவ் //
நமது நிலையும் அவ்வாறு தான்

"மது...என்ன...என்னாச்சு மீ...மீராவுக்கு?" என்றவனின் குரல் அவனுக்கே கேட்காதது போல் ஒலித்தது//
பாவம் அவனுக்காக நாமும் பரிதாப படுகிறோம்

"ஸ்டீவ்... இப்ப பேச நேரமில்ல... நாங்க வந்துட்டு இருக்கோம்... please go there now.." என்றாள் கட்டளை போல், அதோடு அழைப்பும் துண்டிக்கப்பட்டது //
அடடா இந்த மர்மத்தை நம்மால் தாங்க முடியவில்லையே !

அதற்கு மேல பேசவும் தெம்பில்லாதவனாய், மொத்த சக்தியையும் திரட்டி வேகமாய் நடக்கலானான் //
நாமும் உடன் நடக்கிறோம்

"என்னால் தானே அவள் கோபமாய் சென்றாள்...என்னால் தானே இந்த விபரீதம்... கொஞ்சம் பொறுமையாய் பேசி இருக்கலாமே நான்... சண்டை வந்தாலும் சரி என அவள் பின் சென்றிருக்க வேண்டும்... அவளை அந்த மனநிலையில் தனியே விட்டது தன் தவறு" என பலதும் யோசித்து வேதனையில் உழன்றான் ஸ்டீவ் //
பாவம் ;அவன் வேதனையான மனநிலை நமக்கும் துயரத்தை தருகிறது

பழகிய இடம் என்பதால் கால்கள் தன்னால் இட்டு சென்றது. சுய நினைவே அற்றவன் போல் மீராவே மனம் முழுதும் ஆக்கிரமித்து இருக்க கால் போன போக்கில், ஆனால் வேகமாய் நடந்தான்

அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடதென உலகின் எல்லா தெய்வங்களையும் வேண்டினான் ஸ்டீவ். இனி வாழ்வில் எப்போதும் அவளுடன் சண்டை போடுவதில்லை என உறுதி கொண்டான் //
நாமும் அவனுக்காக பிராத்தித்து கொள்கிறோம்

அவள் தனக்கு இல்லை என்றாலும் சரி, ஆனால் அவளுக்கு எதுவும் ஆகி இருக்க கூடாதென மனம் வேண்டியது//
அடடா ! நாமும் வேண்டி கொள்கிறோம்
அவன் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்த போது கண்ட காட்சியில் அவனையும் அறியாமல் "மீரா..." என கத்தினான்//
ஹய்யோ ! மீரா வுக்கு என்ன ஆயிற்று !

Free Traffic said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

priya.r said...

கண்களில் நீர் பெருக ஓடி வந்தவனை கண்டதும் ஆம்புலன்ஸ்ல் மீராவை கிடத்தி கொண்டிருந்த பணியாள் "do you know her?" என கேட்டான் //
சொல்லு ஸ்டீவ் அவள் ஏன் உயிர் என்று சொல்லு

//"yes...she is...she is..." என அதற்கு மேல் பேச முடியாமல் தடுமாறிய ஸ்டீவ், மீண்டும் அவன் கவனம் மீராவின் புறம் திரும்ப, முதலுதவிக்காக போடபட்டிருந்த கட்டையும் மீறி அவள் நெற்றியில் ரத்தம் வழிய கண்டதும் அதிர்ந்தவன்

"மீரா... மீரா... கண்ணை தெற மீரா... ப்ளீஸ் மீரா..." என சுயநினைவின்றி கிடந்தவளின் முகத்தை பற்றினான் //

அட்சோ ! என்ன இது .,கதாசிரியை நம்மையும் கலங்க வைக்கிறாரே//அதற்குள் ஆம்புலன்ஸ் பணியாள் "Don't move her man. She needs to be examined first...are you coming with us?" என கேட்க "Yes" என்றான் ஸ்டீவ் உடனேயே

அம்புலன்ஸ் நகரத்துவங்க "Is she alright? Is she going to be...alright?" என்றான் ஸ்டீவ் நடுங்கிய குரலில் //
நமக்கும் இந்த கேள்வியை தானே கேட்க லாம் என்று நினைத்தோம் ;எப்படி நம்மை இந்த புவனி இப்படி புரிந்து வைத்து இருக்கிறார்

"We hope so...we did needed first aid " என்றான் இயந்திரத்தனமான குரலில், இது போல் தினமும் பல கேஸ்கள் பார்க்கும் அவனுக்கு இது வழக்கமான ஒரு நடைமுறை

"What happened? Did she tripped or ....?" என ஸ்டீவ் கேள்வியாய் அவனை பார்க்க "I have no permissions to say any. Please talk to the cop" என அம்புலன்ஸ் பின் வந்து கொண்டிருந்த போலீஸ் வண்டியை காட்டினான் //
நடந்தது என்ன என்று இன்னும் நம்மை ஒரு சஸ்பென்ஸ் லிலேயே கொண்டு போகும் இந்த புவனியை என்ன செய்யலாம் ?!

priya.r said...

//உணர்வின்றி உனைகாண
உள்ளமெல்லாம் பதைத்ததடி
உதிரம்பெருக கண்டநொடி
உயிரும்தான் போனதடி
உனக்குள் நானிருந்தால்
உண்மையை உரக்கசொல்
உரிமையை பறைசாற்ற
உன்னிடம்இதை கேட்கவில்லை
உணர்வற்று தவிக்கும்இதயத்திற்கு
உயிரூட்டவே கேட்கிறேன்!!!//


மருதாணி வாய்த்த கைகாரி

மல்லிகை பூ மனசு காரி

மணிமணியாய் வார்த்தைகளால்

மனசை தான் கவர்ந்தாளே

மாபெரும் சபைதனில் நீ நடந்தால்

மாலைகள் விழ வேண்டும் ;ஒரு

மாற்று குறையாத கவிதாயினி என்று

மாநிலம் புகழ வேண்டும் புவனி உன்னை

இந்த மண்ணுலகம் புகழ வேண்டும்!

siva said...

appavi vaalga

appavi vaalga

adutha tamilaga mudalvar vaalga

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அந்த கணம் "சதீஷை எப்படி சமாளிக்க போகிறேன்" என்ற கவலை ஸ்டீவின் மனதில் உதித்தது.//
ஹை நானும் கதையில இருக்கனா

வல்லிசிம்ஹன் said...

ஆஹா டிராமா ஜாஸ்தியாயிட்டே வரதே. பொறுக்க முடியவில்லை புவனா. தயவு செய்து இரண்டு ஜோடியை சேர்த்து வைத்துவிடுங்கள்.:)))

அமைதிச்சாரல் said...

//உனக்குள் நானிருந்தால்
உண்மையை உரக்கசொல்
உரிமையை பறைசாற்ற
உன்னிடம்இதை கேட்கவில்லை
உணர்வற்று தவிக்கும்இதயத்திற்கு
உயிரூட்டவே கேட்கிறேன்//

பின்றீங்க அப்பாவி :-))

siva said...

லை. அப்படியே இந்த புவனாவையும் சப்வேல வைச்சு தூக்கிடறேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
//

தைரியம் இருந்த ஒரு அடி இல்ல நூறு அடி அடிங்க பார்ப்ஹூம் ..அவங்க மேல கைய வச்சு பாருங்க ..அப்பரம் இந்த பதிவு உலகமே பத்திக்கிட்டு எரியும்...

அப்பாவி நீங்க கவலபட்தீங்க
appavi rasikar mannram
243vathu kilai..

Vasagan said...

சுனாமி
\அப்பாவியை சப்வேல வைச்சு தூக்கிடறேன்,\

முடியுமா இல்லை முடியுமான்னு கேட்கிறேன், ஹி ஹி சப்வேல்ல heavy duty cranes not allowed.

அப்பாவி தங்கமணி said...

@ பிரதீபா - உசுர குடுத்து எழுதின கதைய பத்தி ஒத்த வார்த்த சொல்ல மனசு வரல இந்த பொண்ணுக்கு... கடைசியா இருக்கிற அந்த உ கவிதை சூப்பராம்...அவ்வ்வ்வவ்வ்வ்வ்.....

@ Sathish A - அடிச்சவர் உங்க பேர்ல இருக்கறவர்னு குஷியா இருக்கீங்க போல இருக்கே சதீஷ்...:))

@ நசரேயன் - அதெப்படி எனக்கு பல்பு குடுக்கற நேரத்துல கரெக்டா ஆஜர் ஆகரீங்க..:))

அப்பாவி தங்கமணி said...

@ கோவை ஆவி - ஏன் பிரதர் ஏன்? நல்லாதான போயிட்டு இருக்கு...ஏன் ஏன் ஏன்?????..... சொந்த மண்ணுல இருந்தே இப்படி சுனாமி கிளம்பும்னு நான் எதிர்ப்பாக்கலையே பிரதர் எதிர்ப்பாக்கலையே.... ஹ்ம்ம்.... ஒரே பீலிங்க்ஸ் ஆகி போச்சு...

இதுக்கு தண்டனையா (பரிகாரமா) அடுத்த வாரம் நோ கவிதை அப்படின்னு நான் சொல்லுவேன்னு நீங்க எதிர்பாத்தா... ஐ அம் சோ சாரி யுவர் ஹானர்..:)))

உங்களுக்கு கலாய்க்க ஒரு "உ" கவிதை சிக்கின மாதிரி எனக்கு ஒரு "அ" கவிதை சிக்காமையா போகும்... அப்ப கவனிச்சுக்கறேன்... இந்த நாள்... உங்க டைரில குறிச்சு வெச்சுகோங்க ஆனந்த்... குறிச்சு வெச்சுகோங்க....ஹா ஹா அஹ.... :))))

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - ஆஹா... கடைசீல என்னையும் "பேரரசு" ரேஞ்சுக்கு கொண்டு போயிட்டீங்களே... ஞாயமா இது ஞாயமா?.....:)))))))

@ எல் கே - "நல்லா எழுதறே"ன்னா சொன்ன? டைபிங் மிஸ்டேக் ஒண்ணுமில்லையே... ஜஸ்ட் செக்கிங்... ஹா ஹா ஹா...:)))... ஆஹா.. தண்டனையா... மீ எஸ்கேப்...:))

@ sulthanonline - விதி என் கைல இல்லீங்க... மீராவோட டாக்டர் கைல இருக்கு... :)))... கவிதைய பாராடினதுக்கு மிக்க நன்றி...

@ vinu - தள்ளி வெக்கரீங்களா? கமெண்ட் கூட இல்லையா... ஐயையோ.... ஸ்டீவை பாத்தா பாவமா இல்லையா பிரதர்... ஊரு விட்டு ஊரு வந்து காதலுக்கு மரியாதை செய்யற பையன் இல்லையா... கொஞ்சம் தீர்ப்ப பாத்து சொல்லுங்கப்பு... வேணும்னா மீட்டர்க்கு மேல மேட்டர் தள்ளிடறோம்....ஹா ஹா அஹ...:)))

அப்பாவி தங்கமணி said...

@ siva -
//அது எப்படி லேசான காயம் .... பட் ப்ளெட் லாஸ்ட் அதிகம்னு சொல்றீங்க ...ம்ம்ம் எதை எல்லாம் நான் ஒத்துக்கவே முடியாது ///
ஸ்ஸ்ஸ்பப்பா... இப்பவே கண்ண கட்டுதே... இதுல கிராஸ் கொஸ்டின் வேறயா? ஹா ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங் .... உங்கள போலவே இன்னும் சிலருக்கும் (!!!) சந்தேகம் இருக்கலாம் ... அதனால விளக்கம் சொல்லிடறேன்...பேசாம இருக்கரவள பேச வெக்கறது யாருன்னு பாருங்க மக்களே... :)))

அதாவது, லேசான காயம்னு ஏன் சொல்றோம்னா, நரம்புக்கோ எலும்புக்கோ பாதிப்பு இல்லாம மேலாப்ல தோலுக்கு மட்டும் தான் காயம்னு அர்த்தம். உள்ள காயம் பட்டா தான் ரிஸ்க். ப்ளட் லாஸ் அதிகம் தான், ஏன்னா, தோல் கிழிக்கப்பட்டதால அடுத்து உடனடியா இருக்கறது சதையும் ரத்தமும் தானே... அதான் அது அதிகம் லாஸ் ஆகி போச்சு... இன்னும் விளக்கமா சொன்னா நானே மயக்கம் போட்டுடுவேன்... வேண்டாம் உட்டுடுவோம்...ஒகே வா...:))

//கொஞ்சம் ஓவரா தெரியல உங்களுக்கே//
இதுல என்னங்க ஓவரு? எனக்கு நிஜமா ஒண்ணும் புரிலையே பிரதர்... ஆபத்து இல்லை...ஆனா ஸ்டிட்ச் போட்டு இருக்கறதால கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கனும்னு டாக்டர் சொல்றாரு அவ்ளோ தாங்க.. (ஐயையோ என்னையே குழப்புராங்களே...அவ்வ்வ்வ்...:))))

//neenga oru koodai paarcel anukondu podunga..appvioda blog collose...engio ellam bam vidikkuthu...enga vidikka mattuthey...:)//
நோ நோ நோ... நோ வன்முறை பிரதர்... என்ன பிரச்சனைனாலும் பேசி தீத்துப்போம்... இப்படி தீத்து போடற பேச்சு வேண்டாமுங்கோ...:)))))

///ethukuthan avorda padam paakathenganu chonna kekanum...//
ஆமா... அதான் நானும் சொல்றேன்...:))

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - ஐயையோ... பின்"லேடி" வந்துடுச்சு.... மீ எஸ்கேப்... ஸ்டீவ், யு டூ எஸ்கேப்...:))

@ இராஜராஜேஸ்வரி - ஆஹா... சும்மா இருக்கறவளுக்கு ஐடியா குடுக்கறது நீங்க தான்... அப்புறம் என்னை குறை சொல்ல கூடாதுங்க...ஹா ஹா அஹ...:)))

@ அனாமிகா - பத்து எபிசொட் போடலாம்னு சொல்றியா? ம்ம்ம்... எனக்கு அப்படி தோணல...Did I give a clue? May be or may not.....:)))))

@ தங்கம்பழனி - ரெம்ப நன்றிங்க

@ ரசிகர் மன்ற உறுப்பினர் .latha - சீக்கரம் எழுதத்தான் நானும் முயற்சி பண்ணிட்டு இருக்கேங்க லதா... உங்களுக்கும் அக்காவா...ஹா ஹா ஹா... ஜோக்ஸ் அபார்ட்... உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிப்பா..:))))

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - ஹா ஹா ஹா... அப்ப அப்படியே கதைய கொண்டு போலாம்னு சொல்றீங்களா பிரதர்?....:))))

@ மனம் திறந்து... (மதி) - ஐயையோ... இன்னொமொரு "உ" கவிதையா... உலகம் தாங்காது பிரதர்... இனி ஜென்மத்துல "உ" கவிதை எழுத மாட்டேன்...ஹா ஹா ஹா... :))))

@ middleclassmadhavi - ஹா ஹா ஹா... விதி வலியது... அந்த மைண்ட் வாய்ஸை அங்கேயே அடச்சு வெச்சுடுங்க வெளிய உடாதீங்க மாதவி... ஹா ஹா ஹா...:))

@ Sri Seethalakshmi - தேங்க்ஸ் சீதா...:))))

அப்பாவி தங்கமணி said...

@ கீறிப்புள்ள!! -
//கடன்பட்டார் நெஞ்சம்போல கலங்கினான் கனடா வேந்தன்//
ஹா ஹா ஹா...எப்படி இப்படி எல்லாம்... :)))

//மற்ற ரெண்டு உ-கவிதை தாறு மாறு.. ஹா ஹா ஹா.. :))//
அட... நமக்கு சப்போர்ட் பண்ணகூட ஒரு தம்பி இருக்காரே... சூப்பர்... நன்றி நன்றி...:)))
// நான் ரெடி நீங்க ரெடியா.. ஹா ஹா ஹா.. :)))


ஐயையோ... நான் இல்ல...:))

//"நான் பாத்தன் ஸ்டீவ் நீ அழுதத நான் பாத்தன்.." அப்டின்னு டயலாக் வெக்கலன்னா அப்பாவிய நீங்க என்ன பண்ணுவீங்கன்னு அவங்களுக்கு தெரியும்.. அதனால சரியா எழுதிருவாங்க..//
தம்பி, நீங்க நல்லவரா கெட்டவரா...........(இதுக்கு நேரடியா மெரட்டுற அனாமிகாவே பரவால்ல போல இருக்கே...ஹா ஹா ஹா...))

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - நன்றிங்க குமார்... (கதை பத்தி...சரி விடுங்க...:)))

@ சுசி - சுசி, இட்ஸ் ஒகே... திட்டனும்னா திட்டிருங்க அம்மணி... இப்படி ஒண்ணும் சொல்லாம போனா என்னனு நெனக்க...:))

@ asiya omar - அது... :)))

@ Balaji saravana - ஐயையோ...எல்லாரும் டிசைன் டிசைனா மிரட்டுராங்களே.....ஸ்டீவ் என்ன ஆக போறானோ தெரியல... போற போக்க பாத்தா நீ காலி அப்பாவி...:)))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//கதாசிரியை திருமதி புவனி அவர்கள் கதையின் இந்த பகுதியில் நம்மை ஆளுமை படுத்தி இருக்கிறார்//
நல்லாதானே போயிட்டு இருக்கு...ஏன் இந்த விபரீதம்...:)))

//நாமும் பயனிப்போமே//
சும்மா பயணிக்க முடியாது... டிக்கெட் எடுத்தாச்சா ப்ரியா? அதிகமில்ல ஜென்டில்வுமன் ... ஜஸ்ட் ஒரு புல் மீல்ஸ் குடுத்தா போதும்...சாப்பாட்டு பிரச்சனை தீரும்... ஹா ஹா ஹா... :)))

//நாமும் பதட்டமாகிறோம்//
டாக்டர் பில் எல்லாம் எனக்கு அனுப்பற பிளான் போல இருக்கே... அப்பாவி சுதாரிச்சுக்கோ...:)))

//இந்த மர்மத்தை நம்மால் தாங்க முடியவில்லையே//
தாங்க முடிலேனா கீழ போட்டுடுங்க... :))

//நாமும் உடன் நடக்கிறோம்//
ஒடம்புக்கு நல்லது... நடங்க நடங்க...:)))

// மீரா வுக்கு என்ன ஆயிற்று //
எல்லாமே ஆயிற்று.....:)))

//சொல்லு ஸ்டீவ் அவள் ஏன் உயிர் என்று சொல்லு//
ஸ்டீவை விட நம்ம ப்ரியா அக்கா ரெம்ப உணர்ச்சி வச படறாங்களே...:))

//நம்மை ஒரு சஸ்பென்ஸ் லிலேயே கொண்டு போகும் இந்த புவனியை என்ன செய்யலாம்?//
பாராட்டலாம் / புகழலாம் / விழா எடுக்கலாம்... ஆனா நீங்க உங்க சங்கத்து ரூல்ஸ் படி முடிந்தமட்டும் டேமேஜ் பண்ணுவீங்கனு தெரியும்...:)))

"உ" கவிதைக்கு ஒரு "ம" கவிதையா? சபாஷ்...சரியான போட்டி..:)))

அப்பாவி தங்கமணி said...

@ siva - ஸ்ஸ்ஸ்பப்பா... என்ன பிரச்சனைனாலும் பேசி தீத்துப்போம்... முதல்வர் எல்லாம் வேண்டாம்...:))

@ ஆர்.கே.சதீஷ்குமார் - ஆஹா... நெறைய சதீஷ்'கள் வர ஆரம்பிச்சுட்டீங்களே இப்போ... முதல் வருகைக்கு நன்றிங்க...:))

@ வல்லிசிம்ஹன் - அப்படியா சொல்றீங்க வல்லிம்மா? சரி பேசி பாக்கறேன்.. என்ன செய்ய முடியும்னு...:))

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ்ங்க...:))

அப்பாவி தங்கமணி said...

@ siva -
//தைரியம் இருந்த ஒரு அடி இல்ல நூறு அடி அடிங்க பார்ப்ஹூம் ..அவங்க மேல கைய வச்சு பாருங்க ..அப்பரம் இந்த பதிவு உலகமே பத்திக்கிட்டு எரியும்...//
அடபாவிங்களா...சும்மா ஒரு காமெடி பீஸா பாக்குது உலகம்னு நெனச்சா... பீஸ் பீஸா ஆக்குற நெனப்புல தான் இருக்கீகளா எல்லாரும்... நான் "அவர்" இல்லை... அப்பாவி எஸ்கேப்.... :))))))

@ Vasagan - //முடியுமா இல்லை முடியுமான்னு கேட்கிறேன், ஹி ஹி சப்வேல்ல heavy duty cranes not allowed//
உலகம் ஒரு Train Platform ...அதுல அப்பாவிய சுத்தி எல்லாரும் ப்ரூட்டஸ்'கள்.... grrrrrrrrrrrrrrrrrrrrrrrrr.....:)))))

Charles said...

இந்த வாரம் தான் correct-ஆ நியாபகம் வைச்சு செவ்வாய்கிழமை வந்து பார்த்தேன்.அனா கதை வரல. என்னவோ போங்க. வேலை ரொம்ப அதிகமோ? ம்ம்ம். எப்படியோ சதீஷ்-அ வில்லன் ஆக்கரீங்கன்னு தெரியுது. பாவம்.... கவிதை வழக்கம் போல சூப்பர்...

Krishnaveni said...

Thangam tin hortons unga fav. aaaaaa? nicely written, kadaisi kavidhai sonnathu steeve. aaaaaa? sathishaaaaa?

சிவகுமாரன் said...

விட்டுப் போனதை எல்லாம் சேர்த்து படிச்சேன். நல்லா போகுது கதை.
உ கவிதை நல்லா இருக்கு
www.arutkavi.blogspot.com

அப்பாவி தங்கமணி said...

@ Charles - வந்து பாத்ததுக்கு நன்றிங்க சார்லஸ்...:) ...கொஞ்சம் வேலை அதிகம் தான்... சதீஷ் வில்லனா? ஐயையோ...நான் அப்படி சொல்லவே இல்லையே...ஹா ஹா ஹ... நன்றிங்க கவிதைய பாராட்டினதுக்கு...:)

@ Krishnaveni - இல்லிங்க வேணி... tin hortons favourite இல்ல... I'm not a coffee lover...:)).... கடைசி கவிதை சொன்னது ஸ்டீவா சதீசா? குட் கொஸ்டின்... ஆனா மொத்த கதையையும் இப்படி ஒன் வோர்ட் ஏன்சர் மாதிரி கேட்டால் ஞாயமா? ஹா ஹா ... ஜஸ்ட் கிட்டிங்...:)

@ சிவகுமாரன் - நன்றிங்க சிவகுமாரன்

தக்குடு said...

@ அப்பாவியோட தங்கமணி - அழுகாச்சியும் லவுஸும்தான் எழுதுவேள்னு நினைச்சேன்! பரவாயில்லை சண்டை காட்சிகளும் ப்ரமாதமா வருது. Fight scean எல்லாம் எழுத்துல மட்டுமா இல்லைனா விட்டுலையும் உண்டா??..:))

அனாமிகா துவாரகன் said...

/Fight scean எல்லாம் எழுத்துல மட்டுமா இல்லைனா விட்டுலையும் உண்டா??..:)) //

You know the answer. ha ha

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - Thank you... அதெல்லாம் சிதம்பர ரகசியம் யு சி...:))

@ அனாமிகா - Brotas of the planet...:)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@நீங்க ஒரு வாரம் கதை போடததுல நா கன்பியூஸ் ஆயட்டேன் போங்க.. இப்போ தான் இந்த பதிவு, படிச்சு முடிச்சேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்

இருங்க அடுத்ததுக்கு வரேன்..

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - தேங்க்ஸ் ஆனந்தி... போன வாரம் கொஞ்சம் லேட் போஸ்ட்...:))

Post a Comment