Thursday, March 03, 2011

தங்கமணி சபதம்...(ஹி ஹி)


தங்கமணி ரங்கமணியின் மற்ற கலாட்டாக்களை படிக்க இங்கே கிளிக்கவும்

முன் குறிப்பு :
என் இனிய ப்ளாக் குல மக்களே... இதுல வர்ற தங்கமணி நான் இல்ல... Just an imaginary character. நெறைய பேரு இது நான்னு நெனைச்சுட்டு இதுல வர்ற ரங்கமணிக்கு ஓவரா அனுதாபம் தெரிவிச்சு... விட்டா அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கற அளவுக்கு போறதா நியூஸ் வந்தது.... அதான் இந்த முன் குறிப்பு  இப்போ... மேட்டர் மனசிலாயோ... ஒகே ஒகே...:-)))   

இனி தங்கமணி ரங்கமணி வீட்டுல என்ன நடக்குதுன்னு வேடிக்கை பார்ப்போம்...

அன்று ஞாயிற்றுகிழமை என்பதால் குடும்ப சகிதமாய் உணவருந்தி கொண்டிருந்தனர் ரங்கமணி அண்ட் பாமிலி

ரங்கமணி தான் ஆரம்பித்தார் "தங்கம்... இந்த அரைச்சு விட்ட கொழம்பு நீ முன்னயெல்லாம் ரெம்ப நல்லா செய்வ... இப்ப அந்த டேஸ்ட் இல்ல தெரியுமா?" என வம்பிழுக்க

"ம்... நான் எப்பவும் போல தான் செய்யறேன்... உங்களுக்கு தான் expectation கூடி போச்சு"

"இல்ல...நீ என்ன சொன்னாலும் மொதலாட்டம் இல்ல" என மீண்டும் சொல்ல கடுப்பான தங்கமணி

"ம்... இது Law of Diminishing marginal Utility னு economicsல சொல்லுவாங்க... படிச்சுருக்கீங்களா?"

"என்ன தங்கம், ஏதோ டாக்டர் வாய்ல நுழையாத பேர நோய் சொல்லி பயப்படுதற மாதிரி சொல்ற"

"ஐயோ... அதில்ல... as increasing amounts of a good or of a service are consumed, past some point of consumption the utility (usefulness) of successive increases drops இதான் விளக்கம்... உங்களுக்கு புரியாப்ல Layman termsல சொல்லணும்னா... ஒண்ணு சும்மா சுலபமா கிடைக்குதுன்னு ஓவரா அதையே சாப்ட்டா கொஞ்ச நாளுல அந்த டேஸ்டை நாக்கு உணராம போயி அது முன்னி மாதிரி இல்லைன்னு தோணுமாம்... புரிஞ்சதா?"

"என்னமோ ஒளர்ற" என சிரிக்க

"யாரு ஒளர்றா... உங்களுக்கு தெரியலைன்னா ஒத்துக்கோங்க" என சீண்ட

"யாரு... யார பாத்து... நாங்கெல்லாம் சயின்ஸ் மேஜர் தெரியும்ல... இந்த கம்மி மார்க் வாங்கின குரூப் தான் economics commerce படிக்கற குரூப்..."

"எப்பவும் சயின்ஸ் விட ஆர்ட்ஸ் தான் ஒசத்தி தெரியுமா?" என் டென்ஷன் ஆனார் தங்கமணி

"இல்ல சயின்ஸ் தான்"

"இல்ல ஆர்ட்ஸ் தான்"

"ஈஸ்ட் ஆர் வெஸ்ட் சயின்ஸ் இஸ் பெஸ்ட்"

"நார்த் ஆர் சவுத் ஆர்ட்ஸ் இஸ் வொர்த்"

"சயின்ஸ் இல்லையேல் ஆர்ட்ஸ் இல்லை"

"ஆர்ட்ஸ் இல்லையேல் சயின்ஸ் குப்பை"

பக்கத்தில் அவர்கள் மகள் அனு வைத்து விளையாடி கொண்டிருந்த பொம்மை கிடாரை வாங்கிய ரங்கமணி அதை கழுத்தில் மாட்டி கொண்டு இரண்டு கைகளையும் விரித்து "சரஸ்வதி சபதம்" நாரதர் ஸ்டைலில் கையில் சப்லாங்கட்டை இருப்பது போல் போஸ் கொடுத்து நின்று தங்கமணியை பார்த்து பாடினார்

"ஆர்ட்ஸ்ஆ சயின்ஸ்ஆ சொல்லடி... சயின்ஸ் இல்லாமல் ஆர்ட்ஸ் இல்லை புரிஞ்சுக்கணும்... ஆர்ட்ஸ்ஆ சயின்ஸ்ஆ சொல்லடி.. " என பாட நம்ம தங்கமணி மட்டும் சும்மாவா இருப்பாங்க, அவங்களும் பாடினாங்க

"ஆர்ட்ஸ்ஆ சயின்ஸ்ஆ சொல்லுறேன்... ஆர்ட்ஸ் இல்லாமல் சயின்ஸ் வெறும் நியூசன்ஸ் தான்... ஆர்ட்ஸ்ஆ சயின்ஸ்ஆ சொல்லுறேன்..."

"அப்படியா... அப்போ உன் ஆர்ட்ஸ்ன் பெருமை பற்றி ஒன்று இரண்டு என வரிசைபடுத்தி பாடு பாப்போம்" என சவால் விட்டார் ரங்கமணி

"ம்க்கும்... வேற வேலை இல்ல உங்களுக்கு" என தங்கமணி எழுந்து உள்ளே போக முயல

"அப்போ நீ தோத்துட்டேன்னு ஒத்துக்கோ... சயின்ஸ் தான் பெஸ்ட் ஒகேவா" என ரங்கமணி கை உயர்த்தி காட்ட

"நிச்சியமா இல்ல... எப்பவும் என்னைக்கும் ஆர்ட்ஸ் இல்லாம சயின்ஸ் ஒண்ணும் பண்ண முடியாது"

"கிட்சன்ல வெச்சுருக்கியே கிரைண்டர் மிக்சி இதோ இந்த fan ... இதெல்லாம் இல்லாம ஒரு நாள் இருக்க முடியுமா உன்னால... சயின்ஸ் இல்லாம இதெல்லாம் எப்படி வரும்"

"அதெல்லாம் இல்லாமையும் அந்த காலத்துல வாழ்ந்துட்டு தான் இருந்தாங்க...ஆனா ஆர்ட்ஸ் அதாவது கலை/கணக்கு/கற்பனை நிறைந்த ஆர்ட்ஸ் இல்லாம காட்டுவாசிங்களா இருந்த ஆதி மனுஷன் கூட வாழலை"

"ஏன்? நீ போய் பாத்துட்டு வந்தியோ?" என சிரித்து கொண்டே ரங்க்ஸ் கேட்க

"இல்ல... உங்க பாட்டி அன்னிக்கி சொன்னாங்க... உங்க பரம்பரைய பத்தி" என தங்கமணி சரியான பதிலடி கொடுக்க

"சரி நீ பேச்சை மாத்தாதே... சயின்ஸ் தான் பெஸ்ட் ஒத்துக்கோ"

"இல்லேன்னு நான் நிரூபிச்சுட்டா?"

"நான் மீசை எடுத்துக்கறேன்"

"ம்... அந்த மூஞ்சிய நான் இல்ல தினமும் பாக்கணும்... உங்களுக்கு பனிஷ்மென்ட் மாதிரி வேற எதாச்சும் சொல்லுங்க"

"அதுக்கெல்லாம் அவசியமே இருக்காது, எப்படியும் சயின்ஸ்க்கு தான் வெற்றி"

"அதெல்லாம் அப்புறம் பாப்போம்... மொதல்ல சொல்லுங்க என்ன பெட்டுன்னு"

"ம்... ஒரு மாசம் நான் எந்த நடிகை பேட்டியும் பாக்கலை... போதுமா"

"ஒகே டீல்...இன்னும் 24 மணி நேரத்துல ஆர்ட்ஸ் இல்லாம முடியாதுன்னு உங்க வாயிலையே ஒத்துக்க வெக்கறேன்"

"இரு இரு... பெட்டுன்னா ரெண்டு பக்கமுமில்ல இருக்கணும்... நீ தோத்துட்டா என்னனு சொல்லு?"

"நான் தோத்துட்டா இனிமே நீங்க சொல்ற எதுக்கும் மறுத்து பேசல... போதுமா"

"ஆஹா... லைப் டைம் ஆபர்... ரங்கமணி உனக்கு லாட்டிரி தான் போ... ஹா ஹா அஹ" என ரங்கமணி குதூகளித்து கொண்டிருந்தார்

__________________________

மறுநாள் காலை லேட்டாக எழுந்த ரங்கமணி சமையல் அறையில் இருந்த தங்கமணியிடம் "என்ன தங்கம் நீ? ஏன் நீ எழுப்பல... மணி எட்டாக போகுது... எப்ப கெளம்பி எப்ப நான் ஆபீஸ் போறது" என டென்ஷன் ஆக

"ஏன் அலாரம் வெச்சுருந்தீங்க தானே?" என பூடகமாய் கேட்க

"என்னைக்கி நான் அலார சத்தத்துல எழுந்துருக்கேன்... நீ தானே எழுப்புவ"

"அதாவது அலாரம் அடிச்சாலும் பிரியோஜனமில்ல நான் வந்து தான் எழுப்பணும் இல்லையா"

"பின்ன... அந்த அலார சத்தமெல்லாம் கேட்டு எவன் முழிக்கறது"

"ரெம்ப தேங்க்ஸ்ங்க..."

"எதுக்கு?" என ரங்கமணி முழிக்க

"சயின்ஸ் எல்லாம் சும்மா ஆர்ட்ஸ் தான் முக்கியம்னு நீங்களே ஒத்துகிட்டதுக்கு"

"என்ன என்ன? நான் எப்ப ஒத்துகிட்டேன்?" என பதட்டமாக

"இப்ப தான்..." என தங்கமணி சிரிக்க

"இப்பவா...நான் ஒண்ணும் சொல்லலியே"

"ஓ... இந்த gents க்கு எல்லாமே உப்பு புளி போட்டு விளக்கணுமல்ல மறந்துட்டேன்... சரி நானே சொல்றேன்... அதாவது உங்க சயின்ஸ் கண்டுபிடிச்ச அலாரம் பிரயோஜனமில்ல, ஆர்ட்ஸ் அதாவது Humanresource அதாவது நான், நான் வந்து தான் எழுப்பணும்னு நீங்க தானே இப்ப சொன்னீங்க" என தங்கமணி சிரித்து கொண்டே கூற

ரங்கமணிக்கு அப்போது தான் விஷயம் எங்கே போகிறது என்பது புரிந்தது. ஒரு கணம் அசடு வழிந்தாலும் 'மீசையில் மண் ஒட்டாது' என்ற கதையாய் சுதாரித்து கொண்டார்

"ச்சே ச்சே... அப்படி ஒண்ணுமில்ல... அலாரம் அடிச்சப்ப ஞாபகம் ஆச்சு... எப்பவும் போல நீ வந்து எழுப்பற வரை படுக்கலாம்னு கொஞ்சம் கண்ணசந்தேன்..." என சமாளிக்க

"ஹா ஹா... இந்த சமாளிப்பெல்லாம் என்கிட்ட வேண்டாம்... ஒத்துக்கோங்க... இல்லேனா Humanresource அதாவது என்னை அவமதிச்சீங்கன்னு நான் சமைக்காம strike பண்ணுவேன்... உங்க சயின்ஸ் கண்டுபிடிச்ச மிக்சி கிரைண்டர் எல்லாத்தையும் ஒடச்சு சாப்பிடுங்க"

"அடிப்பாவி... இப்படி எல்லாம் ப்ளாக்மெயில் பண்ணுறியே... திஸ் இஸ் டூ மச்"

"ச்சே ச்சே... இதுல ப்ளாக்மெயில் எங்க வந்தது... உண்மைய தானே சொல்றேன். ஆர்ட்ஸ் இல்லாம சயின்ஸ் இல்ல... கரெக்ட் தானே" என நமட்டு சிரிப்பு சிரிக்க

"முடியாது... ஒத்துக்க மாட்டேன்"

"அப்ப நாளைக்கும் நான் எழுப்ப மாட்டேன்... டெய்லி லேட் லேட்டா ஆபீஸ் போங்க... அதோட விளைவு மெமோ வரும்... ப்ரமோஷன் லேட் ஆகும்... உங்களுக்கு டென்ஷன் ஆகும்... குடும்பத்துல சண்டை வரும்... கொழந்த படிப்பு கெடும்... மேற்படிப்புக்கு நெறைய டொனேசன் கட்ட வேண்டி வரும்.... அவ எதிர்காலத்துக்கு இருக்கற சேமிப்பு கொறையும்... அப்புறம்...." என்று தொடர்ந்து கொண்டே போன தங்கமணியை

"ஸ்டாப்...ஸ்டாப்..." என நிறுத்தினார் ரங்கமணி "அடிப்பாவி... ஒரு சின்ன அலாரம்ல ஆரம்பிக்கற பிரச்சனைய கொஞ்சம் விட்டா ஐ.நா சபைல கொண்டு போய் தான் நிறுத்துவ போல இருக்கே... எப்பா சாமி...இப்படி ஒரு கற்பனை திறன் இந்த ஜென்மத்துல எங்களுக்கு வராதுடா சாமி...  இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்...  இதுக்கெல்லாம் உங்க அம்மா வீட்டுலையே ஸ்பெஷல் Training எதுனா குடுத்துடுவாங்களோ?"

"ம்... ஆண்கள சமாளிக்க பெண்களுக்கு கடவுளே குடுத்த வரம் இது... அதெல்லாம் விடுங்க... ஆர்ட்ஸ் இல்லையேல் சயின்ஸ் இல்லைங்கரத ஒத்துகறீங்களா இல்லையா" என தங்கமணி பாயிண்ட்ஐ பிடிக்க

"ஆள விடு தாயே... ஒத்துக்கறேன்... மீ எஸ்கேப்" என ஓடினார்

ஓடினவர் நேரா நம்மகிட்ட என்னமோ சொல்லணும்னு வந்துருக்கார்... ஏதோ கருத்து சொல்லணுமாம்... கேட்டுகோங்க

"ஹலோ... மைக் டெஸ்டிங்... ம்... ம்க்கும்... அன்பார்ந்த ப்ளாக் குல மக்களே... என்னோட வாழ்க்கை அனுபவத்துல சொல்றேன்... கல்யாணம் பண்றப்ப செய்வாய் தோஷ ஜாதகம் செய்வாய் தோஷ ஜாதகத்தோட, இல்லாத ஜாதகம் இல்லாததோட இப்படி எந்த பொருத்தம் பாக்கரீங்களோ இல்லையோ... ஆர்ட்ஸ் படிச்ச பொண்ணை சயின்ஸ் படிச்ச பையனுக்கோ சயின்ஸ் படிச்ச பொண்ணை ஆர்ட்ஸ் படிச்ச பையனுக்கோ மேட்ச் பண்ணாதீங்கோ... அப்புறம் என் கதி தான் சொல்லிட்டேன்... ஐயோ... தங்கமணி வர்ற சத்தம் கேக்குது.. மீ எஸ்கேப்" என ஓடியவர் "போச்சே... அநியாயமா ஒரு மாசத்துக்கு நடிகை பேட்டி போச்சே.." னு முணுமுணுத்துட்டே போறார்

ஹையோ ஹையோ... இது வேணுமா?

இதனால நான் சொல்ல வர்ற மெசேஜ் என்னனா "எப்பவும் உங்க வீட்டு அம்மணிக சொல்றது தான் கரெக்ட்ஆ இருக்கும்...அதை மொதலே ஒத்துக்கிட்டா damage இல்லாம போகும்... இல்லைனா இதான் முடிவு.... ஹா ஹா ஹா"

ஒகே... ரைட்... கருத்து சொல்லியாச்சு... இனி மீ எஸ்கேப்...

தங்கமணி ரங்கமணியின் மற்ற கலாட்டாக்களை படிக்க இங்கே கிளிக்கவும்
...

111 பேரு சொல்லி இருக்காக:

மகி said...

நான்தான் பர்ஸ்ட் கமெண்ட்டா?!!!!!!

மகி said...

/"எப்பவும் உங்க வீட்டு அம்மணிக சொல்றது தான் கரெக்ட்ஆ இருக்கும்...அதை மொதலே ஒத்துக்கிட்டா damage இல்லாம போகும்... இல்லைனா இதான் முடிவு../ஜூப்பர் புவனா! நிதர்சனமான உண்மையை ஒரு வீட்டில் நடக்கும் அன்றாட நிகழ்ச்சியைக் கொண்டு தெளிவாக எடுத்துக்காட்டியதுக்கு நன்றி!
(அவ்வ்வ்வ்வ்வ்வ்...உரைநடைத் தமிழ் ரெம்ப வேகமாப் போகுதே,ஜோடா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!)
:)))))))))

Chitra said...

இதனால நான் சொல்ல வர்ற மெசேஜ் என்னனா "எப்பவும் உங்க வீட்டு அம்மணிக சொல்றது தான் கரெக்ட்ஆ இருக்கும்...அதை மொதலே ஒத்துக்கிட்டா damage இல்லாம போகும்... இல்லைனா இதான் முடிவு.... ஹா ஹா ஹா"


.....ha,ha,ha,ha,ha... Yes dear! Ok, dear! Whatever you say, dear! சொல்லக் கத்துக்கணும்.

பாமர ரசிகன் said...

எல்லா வீட்டு ரங்கமணிகளுக்கும் இதுதான் நிலைமை, தங்கமணிகள் மிரட்டியே சாதிச்சிருவாங்க...

எல் கே said...

// நாங்கெல்லாம் சயின்ஸ் மேஜர் தெரியும்ல... இந்த கம்மி மார்க் வாங்கின குரூப் தான் economics commerce படிக்கற குரூப்..."///

இது ஒன்னு போதுமே இது உன்னோட ஒரிஜினல் கதைன்னு ப்ரூவ் பண்ண

எல் கே said...

//ஆர்ட்ஸ் படிச்ச பொண்ணை சயின்ஸ் படிச்ச பையனுக்கோ சயின்ஸ் படிச்ச பொண்ணை ஆர்ட்ஸ் படிச்ச பையனுக்கோ மேட்ச் பண்ணாதீங்கோ... ///

ஆமாம். இதுதான் நீ எழுதி இருஜ்க்ஜற உருப்படியான வார்த்தை

எல் கே said...

அனாமிகா எங்க போய்ட

அனாமிகா துவாரகன் said...

I am here. I am here. I am here. Bit busy, preparing for a conference. =((

அனாமிகா துவாரகன் said...

கார்த்தி சார்,
இவ இருக்காளே. ஸ்டாட்ல எங்களுக்கு நல்ல உள்குத்து வைச்சுட்டு, அப்புறம் கோவிந்த் மாமாவோட நொந்த கதையை எழுதி இருக்கா பாருங்க. தெய்வமே, எங்கேயோ போட்டே. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

எங்களுக்கு எக்பக்டேஷன் கூடிடுச்சா. இருடிம்மா, இரு. அப்படியே ஜேர்மனி போயிட்டு, கனடா வரேன். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

அனாமிகா துவாரகன் said...

கோவிந்த் மாமா வைச்ச பெட்டே வேற. பெட் என்னன்னா, அவரு ஒரு மாசத்துக்கு ஸ்போட்ஸ் சானல் பாக்கக் கூடாது என்பது தான். மாமாவ டிகிரேட் பண்ண தங்கஸ் போட்ட சதி தான் நடிகைகள் பேட்டி பாக்கறது.

ஹல்லோ இட்லி லான்ட் இட்லி மாமி,
விட்டா இன்னும் எழுதுவே போல. பிரியாக்கா இவங்கள கொஞ்சம் கவனியுங்க.

அனாமிகா துவாரகன் said...

ஒரு இஞ்சினியரை இப்படி தாக்கிய அப்பாவியை எதிர்த்து உண்ணும் விரதம் ஆரம்பிக்கிறேன். (க்ரஷ். ஆப்பிள் கடிக்கற சத்தம்) ஹா ஹா ஹா.

BalajiVenkat said...

Science o arts o motha oru ponna paarungappa....

Gopi Ramamoorthy said...

ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு வந்தால் கீழே உள்ள விதிகளைப் பயன்படுத்தவும்:

விதி 1. தங்கமணி சொல்வதுதான் எப்போதுமே சரி

விதி 2. தங்கமணி சொல்வது ஒருவேளை சரியில்லை என்று உங்களுக்குப் பட்டால் விதி ஒன்றை apply செய்யவும்

Gopi Ramamoorthy said...

"Enginering is nothing but art of approximation" #தங்கமணி தரப்பிற்கு பாயின்ட் எடுத்துக் கொடுப்போர் சங்கம்

vanathy said...

ஆனா ஆர்ட்ஸ் அதாவது கலை/கணக்கு/கற்பனை நிறைந்த ஆர்ட்ஸ் இல்லாம காட்டுவாசிங்களா இருந்த ஆதி மனுஷன் கூட வாழலை"//
100% true.

தங்கமணி, எப்படி இப்படி போட்டு தாக்குறீங்க??

உங்க தம்பி என்னவோ பொலம்பிட்டே இருக்காரே என்னவாம்??? மீ எஸ்ஸ்ஸ்ஸ்...

Gopi Ramamoorthy said...

law of diminishing marginal utility பத்தி எல்லாம் சொல்லி ஏன் எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க?

ஒரு நாலு நாள் சமைக்கலைன்னா தானா தெரியப் போகுது. காஞ்சு போன பிட்சாவும், நமத்துப் போன சாண்ட்விச்சும் சாப்பிட்டுவிட்டு நாக்கு செத்துப் போயிடும். பழைய சோறு இருந்தாலும் பரவாயில்லை போடு தாயே என்று கெஞ்ச ஆரம்பிப்பார்.

மார்க்கெட்ல கிடைக்கிற substitutes, complement products வீட்டு சமையல் கூட என்னைக்கும் போட்டி கூடப் போடமுடியாதுன்னு தெரிய வைங்க #டேய் கோபி, உனக்கு என்னாச்சு, சேம் சைட் கோல் அடிக்கிறியே:-)

Gopi Ramamoorthy said...

நீங்க டிஸ்கில சொல்லும்போதே தெரிஞ்சு போச்சு.எங்க அப்பா குதிருக்குள்ள இல்லை, அதுவும் பத்தாம் நம்பர் குதிருக்குள்ளே இல்லவே இல்லைன்னு:-)

எல் கே said...

//காஞ்சு போன பிட்சாவும், நமத்துப் போன சாண்ட்விச்சும் /

அப்பாவி பண்ற இட்லிக்கு அது ஆயிரம் மடங்கு நல்லது

எல் கே said...

///அவரு ஒரு மாசத்துக்கு ஸ்போட்ஸ் சானல் பாக்கக் கூடாது என்பது தான். மாமாவ டிகிரேட் பண்ண தங்கஸ் போட்ட சதி தான் நடிகைகள் பேட்டி பாக்கறது. ///

என்ன ஒரு வில்லத்தனம் ??

புதுகைத் தென்றல் said...

அப்பாடி மனசுக்கு நிம்மதியா இருக்கு. இதை எதிரித்து எந்த ரங்கமணியாவது பதிவு போடுவாங்க...

சான்சே இல்லை....

தெய்வசுகந்தி said...

சூப்பர் புவனா!!! //இதுல வர்ற தங்கமணி நான் இல்ல..// நம்பிட்டோம்:-)))

Ramani said...

மிகப் பிரமாதம்.இயல்பான வார்த்தைகளோடு
ஆகப் பெரிய விஷயங்களை தொட்டுச் செல்லும் நேர்த்தி சூப்பர்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிபார்த்து....

தவமணி said...

ஆர்ட்ஸா இருந்தா என்ன?, சயின்சா இருந்தா என்ன? எந்த சண்டையா இருந்தாலும் சரி கடைசில அந்தர் பல்டி அடிச்சு சரண்டர் ஆவறதென்னமோ இந்த அப்பாவி ரங்கமணிகள்தானே....

எல் கே said...

//புதுகைத் தென்றல் சொன்னது…
அப்பாடி மனசுக்கு நிம்மதியா இருக்கு. இதை எதிரித்து எந்த ரங்கமணியாவது பதிவு போடுவாங்க...

சான்சே இல்லை..../

viraivil varum

"குறட்டை " புலி said...

எப்பவும் 50 ஆர்ட்ஸ் + 50 சயின்ஸ் தான் வாழ்க்கை.

middleclassmadhavi said...

கலாட்டா கலக்கல்!

கே. ஆர்.விஜயன் said...

கலக்கல் பதிவு.

கீறிப்புள்ள!! said...

/எப்பவும் உங்க வீட்டு அம்மணிக சொல்றது தான் கரெக்ட்ஆ இருக்கும்...அதை மொதலே ஒத்துக்கிட்டா damage இல்லாம போகும்... //
என்ன ஒரு பகிரங்கமான மிரட்டல் :( நிஜமாவே உங்க ரங்கமணி பாவம் தான்.. :(((

கீறிப்புள்ள!! said...

/அவரு ஒரு மாசத்துக்கு ஸ்போட்ஸ் சானல் பாக்கக் கூடாது என்பது தான்//
அதுவும் World Cup டைம்-ல எல்லாம் பிளான் பண்ணி Bet வெச்சிருக்கீங்க.. :OOO இது தெரியாம ரங்கு அப்பாவியா lock ஆயிட்டாரே.. ஹா ஹா ஹா!!

திவா said...

ஆர்க்யூமென்ட் எப்படியோ! ஆனா கடேசி பாய்ன்ட் ரொம்ப நல்ல பாய்ன்ட் ன்னு என் தங்கமணி சொன்னதை நானும் ஆ...மோதிக்கிறேன்!

புதுகைத் தென்றல் said...

எல் கே சொன்னது…

//புதுகைத் தென்றல் சொன்னது…
அப்பாடி மனசுக்கு நிம்மதியா இருக்கு. இதை எதிரித்து எந்த ரங்கமணியாவது பதிவு போடுவாங்க...

சான்சே இல்லை..../

viraivil varum //

காத்திருக்கிறோம்....

தி. ரா. ச.(T.R.C.) said...

இந்த கம்மி மார்க் வாங்கின குரூப் தான் எcஒனொமிcச் cஒம்மெர்cஎ படிக்கற குரூப்..."

இது நிச்சியம் மைன்ட் வாய்ஸோட (ரங்கமணி) வாய்ஸுதான். அதான் உண்மை பேசறது.
@ATM இதே மாதிரி தான் தினமும் நடக்குமா. நல்ல வேளை நம்ப தங்கமணி இந்த பிளாக்கெல்லாம் படிக்கரதில்லை.இல்லைன்ன நமக்கும் காஞ்சிப் போன பிரட்தான்

siva said...

ME THE FIRST....

மோகன் குமார் said...

தங்கமணி அப்பாவி அல்ல

raji said...

//ம்... ஆண்கள சமாளிக்க பெண்களுக்கு கடவுளே குடுத்த வரம் இது...//

fantastic

கடவுள் மட்டும் நமக்கு அந்த வரம் குடுக்கலைன்னா

என்ன ஆவறது நம்ம நிலைமை?

முத்துலெட்சுமி/muthuletchumi said...

சே ஒரே மாதிரி படிச்சவங்க வாழ்க்கை சப்பு ந்னு இருக்கும்..
டேஸ்ட் இந்த ஜோடிகிட்டத்தான் இருக்கு :)

சுசி said...

முடிவு சூப்பர்.

Vasagan said...

Appavai chancea illa ,
Anamica thurpthiya.

to mappilai
enathai solla ena argument seithalum intha thankamanikalai hmm ....

Thodarum... after a nap.

priya.r said...

என்னோட வாக்கும் தங்கமணிக்கு தான்
ஹி ஹீ ஆர்ட்ஸ் குரூப் படித்துட்டு இதுக்கு கூட
ஆதரவு கொடுக்கலைன்னா எப்படி ?!

இராஜராஜேஸ்வரி said...

..இப்படி ஒரு கற்பனை திறன் இந்த ஜென்மத்துல எங்களுக்கு வராதுடா சாமி//
கற்பனைத்திறன் வாழ்க!.

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

தங்கமணி சபதம் இந்த படம் எப்ப வந்துச்சு.
நான் சரஸ்வதி சபதம் பாத்துருக்கேன்.

Vasagan said...

\"தங்கம்... இந்த அரைச்சு விட்ட கொழம்பு "\
மாப்பிள்ளை மைன்ட் வாய்ஸ் " அரைச்சு சிங்ல ஊத்தி கழுவிட்டு கொழம்புனு ஒன்னு செய்வேயே "

Vasagan said...

"ஆள விடு தாயே... ஒத்துக்கறேன்... மீ எஸ்கேப்"

எங்களுடைய கடைசி ஆயுதம்

மிக மிக அப்பாவி ரங்கமணிகளின் சங்கம் .

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா... சூப்பர் கலாட்டா தான் போங்க..

அதிலும்.. நம்ம கட்சி வின் பண்ணினதுல.. டபுள் ஹாப்பி.. ;-))))

அனாமிகா துவாரகன் said...

நான் ஒருத்தி தான் ரங்கமணிகளையும் எஞ்ஜினியர்களையும் சப்போட் பண்ணிட்டு இருக்கேனா? கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்கப்பா. அப்பாவி தங்கமணி ப்ளொக் ஹக் பண்ண யாரு ரெடி?

Vasagan said...

"எப்பவும் சயின்ஸ் விட ஆர்ட்ஸ் தான் ஒசத்தி தெரியுமா?"
\ priya.r சொன்னது… என்னோட வாக்கும் தங்கமணிக்கு தான் ஹி ஹீ ஆர்ட்ஸ் குரூப் படித்துட்டு இதுக்கு கூட ஆதரவு கொடுக்கலைன்னா எப்படி ?!\

சுனாமி
அக்காவும் தங்கையும் ஒன்னா சேர்ந்துத்டாங்க, ஊரிகாடு அக்காவும் அப்பாவி பக்கம் ஏன்னு கேட்டா

"கலை/கணக்கு/கற்பனை நிறைந்த ஆர்ட்ஸ் இல்லாம காட்டுவாசிங்களா இருந்த ஆதி மனுஷன் கூட வாழலை"

அப்பாவிக்கு தான் கணக்குகோட அருமை தெரிஞ்சிருக்குன்ற.

நான் அப்பாவி ரங்கமணிகளின் சங்கத்துல active member.

So சயின்ஸ் groupkku நீ ஒருத்தி தான் இருக்க, நீதான் வந்து சயின்ஸ் குரூப் மானத்தை காப்பத்தனும்.

அப்பாவி தங்கமணி said...

@ மகி - எஸ் எஸ்...வடை உங்களுக்கே மகி...:) ஐயையோ...என்னாச்சு திடீர்னு திருவிளையாடல் தமிழ்ல பிச்சு வாங்கறீங்க... குளிர் ஜாஸ்தியாப்பா... ஐயோ நீங்க போட்ட கமெண்ட்க்கும் இந்த கொஸ்டின்க்கும் எந்த சம்மந்தமும் இல்ல...சும்மா பொதுவா கேட்டேன் மகி...:)))

@ Chitra - அது... சூப்பர் சித்ரா... ஹா ஹா...:)

@ பாமர ரசிகன் - ச்சே ச்சே...என்னங்க நீங்க... சபதத்துல தோத்ததுக்கு நாங்க என்ன செய்ய...:)

@ எல் கே - அடப்பாவமே... அப்படி பாத்தா ப்ளாக் எழுதற பாதி பேர் வீட்டுல இந்த மாதிரி ஜோடி தான் தெரியுமா...ஹா ஹா...:)) உருப்படியான வார்த்தையா... திவ்யாம்மா, கொஞ்சம் வந்து என்னனு கேளுங்க...:))) ... அனாமிகா அண்டார்டிக்கா போய்ட்டா...:))

Vasagan said...

சுனாமி
சரி சரி விடு Surrender ஆகிடுவோம். நமக்கும் ஒரு காலம் வரும் பொறுத்திரு.

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா -
//I am here. Bit busy, preparing for a conference. =(( //
ஐயோ பாவம் கான்பரன்ஸ்க்கு வர்றவங்க...:)))

//அப்படியே ஜேர்மனி போயிட்டு, கனடா வரேன்//
ஆஹா...வாருங்கள் அம்மணியே...உங்கள் வரவு நல்வரவு ஆகுக..:)
(ஐயையோ...வரேன்னு சொல்றாளே... என்னையும் சேத்து கனடால இருந்து தொரத்தி விட்டுடுவாங்க போல இருக்கே... என்ன பண்ணலாம்... ஐ ஒரு ஐடியா...)
ஹாய் அனாமிகா, வா வா சீக்கரம் வா. தினமும் மூணு வேலையும் உனக்கு என் கையாலே சமைச்சு போட காத்துட்டு இருக்கேன்... அரிசி இட்லி, கோதுமை இட்லி, ராகி இட்லி எல்லாம் செய்யலாம் மெனு போட்டு வெச்சுட்டேன் இப்பவே...:))
(இனியும் மேடம் வரேன்னு சொல்றாங்களான்னு பார்ப்போம்...:)))

//கோவிந்த் மாமா வைச்ச பெட்டே வேற//
பெட் வெச்சாலும் வெக்கலைனாலும் அவர் ஸ்போர்ட்ஸ் சேனல் பாக்கறத நிறுத்த போறதில்ல... ஹா ஹா...:)

//ஒரு இஞ்சினியரை இப்படி தாக்கிய அப்பாவியை எதிர்த்து உண்ணும் விரதம் ஆரம்பிக்கிறேன்//
ஆரம்பி ஆரம்பி... :))))

அப்பாவி தங்கமணி said...

@ BalajiVenkat - அது மேட்டர் என்னன்னா... நல்ல விஷயங்கள் கண்ணுக்கு லேட்டாதான் தெரியுமாம்... அதனால உனை போல் ஒரு நல்லவர் தேவதை கண்ணுக்கு பட கொஞ்சமே கொஞ்சம் லேட் ஆகும்... ஆனா நவீன சம்யுக்தை குதிரைல ஏறி பிரிதிவிராஜன தேடி வருவாள் விரைவில்னு என் பட்சி சொல்லுது... பீ ரெடி பிரதர்...:)

@ Gopi Ramamoorthy -
//தங்கமணி சொல்வது ஒருவேளை சரியில்லை என்று உங்களுக்குப் பட்டால் விதி ஒன்றை apply செய்யவும்//
அட அட அட... அப்படி போடுங்க... உங்க தங்கமணி நம்பர் கொஞ்சம் தாங்க... அவங்ககிட்ட க்ளாஸ் எடுக்கணும்..ஹா ஹா...:)

//தங்கமணி தரப்பிற்கு பாயின்ட் எடுத்துக் கொடுப்போர் சங்கம் //
ச்சே...சூப்பர்ங்க... வாழ்க வாழ்க...:)

@ vanathy - ஹி ஹி ஹி...எல்லாம் ஒரு flow ல வர்றது தாங்க... :) தம்பி எப்பவும் அப்படித்தானே வாணி... வீட்டுல கமெண்ட் படிக்க மாட்டாங்கன்னு ஒரு தைரியம் தான்..ஹா ஹா...:)

அப்பாவி தங்கமணி said...

@ Gopi Ramamoorthy -
//ஒரு நாலு நாள் சமைக்கலைன்னா தானா தெரியப் போகுது//
அடடா... எப்படி இப்படி? ப்ரூட்டஸ்களுள் ஒரு புத்தரா.... சூப்பர்... உங்களுக்கு ஸ்பெஷல் பரிசு உண்டு எங்கள் சங்கத்தில்...:)

//டேய் கோபி, உனக்கு என்னாச்சு, சேம் சைட் கோல் அடிக்கிறியே//
அதான் எனக்கும் டவுட்... ஒருவேள வீட்டுக்கும் போன சாப்பாடு கிடைக்குமோங்கர பயமா இருக்குமோ...:)))

//பத்தாம் நம்பர் குதிருக்குள்ளே இல்லவே இல்லைன்னு//
அதென்ன பத்தாம் நம்பர்... நெஜமா புரிலங்க?

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே -
//அப்பாவி பண்ற இட்லிக்கு அது ஆயிரம் மடங்கு நல்லது//
grrrrrrrrrrrrrrrrrrrrrrr.....

//என்ன ஒரு வில்லத்தனம் ?? //
அடாடா... நீங்க எல்லாம் பண்ற வில்லத்தனத்த விடவா பாஸ்...:)

அப்பாவி தங்கமணி said...

@ புதுகைத் தென்றல் - ஹா ஹா ஹா... தேங்க்ஸ் அக்கா... இப்படி எதாச்சும் போஸ்ட் போட்டாதான் உங்கள இந்த பக்கம் பாக்க முடியுது... இதிலேயே எனக்கு புரிஞ்சு போச்சு... நீங்களும் என்னை மாதிரியே ரெம்ப நல்லவங்கன்னு...:))

@ தெய்வசுகந்தி - ஹா ஹா... தேங்க்ஸ்ங்க சுகந்தி... எஸ் எஸ்...நான் அவள் இல்லை...:)

@ Ramani - ரெம்ப நன்றிங்க..

@ தவமணி - ஆஹா...ச்சே ச்சே... நாங்க சான்ஸ் குடுத்தும் ஜெயக்கலியே நீங்க...எங்க தப்பு என்ன சொல்லுங்க...ஹா ஹா...:)

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - வரட்டும் வரட்டும்.... பார்ப்போம்...:)

@ "குறட்டை" புலி - 50/50 இது மேட்டர்... நன்றிங்க...:)

@ middleclassmadhavi - தேங்க்ஸ் மாதவி...:)

@ கே. ஆர்.விஜயன் - ரெம்ப நன்றிங்க விஜயன்

@ கீறிப்புள்ள!! - ஆஹா... யாருங்க மெரட்டினது இங்க... நடந்த விசயத்த சொன்னோம்... உங்களுக்கு சம வாய்ப்பு குடுத்தும் சபதத்துல தோத்துட்டு இப்படி பழி போடறது ஞாயமா brother...ஹா ஹா...:)

அப்பாவி தங்கமணி said...

@ திவா - இது சூப்பர்... திவாண்ணா... சாப்பாட்டு பிரச்சனை இனி இல்லை... ஹா ஹா ஹா...:)

@ புதுகைத் தென்றல் - அப்படி சொல்லுங்க அக்கா..:)

@ தி. ரா. ச.(T.R.C.) - TRC மாமா என்ன கொடும இது? நீங்க ஆர்ட்ஸ் தானே... ஏன் சயின்ஸ்க்கு சப்போர்ட்? இருங்க அடுத்த முறை ஊருக்கு வர்றப்ப இதுக்காகவே சென்னைல டென்ட் போடறேன்... மாமிய என் ப்ளாக்க்கு அறிமுகம் செய்யறேன்... ஹா ஹா...:)

@ siva - ஊருக்கு லாஸ்ட்...:)

@ மோகன் குமார் - நான் ஒரு அப்பாவிங்க...நல்லா படிச்சவங்க நானூறு பேரு சொன்னாங்க...நான் ஒரு அப்பாவிங்க...:)

அப்பாவி தங்கமணி said...

@ raji - அழகா சொன்னீங்க ராஜி...தேங்க்ஸ்...ஹா ஹா...:)

@ முத்துலெட்சுமி/muthuletchumi - அது ஒத்துக்க வேணும்ங்க ஒரு வகைல... இல்லேன்னா இந்த சண்டைக்கு எல்லாம் வாய்ப்பே இருக்காதே...ஹா ஹா...:)

@ சுசி - ஆரம்பத்த பத்தி ஒண்ணும் சொல்லலியே சுசி... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... தேங்க்ஸ்ப்பா...:)

@ Vasagan - ஹா ஹா ஹா... உண்மைய சொன்னா ஒத்துக்கணும்... நோ டென்ஷன்..:))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - ஹய்யா.... சூப்பர் அக்கா... :)))
(அன்பார்ந்த ப்ரியா அக்காவின் கமெண்ட் ரசிகர்களே... அக்கா இன்னைக்கு கொஞ்சம் பிஸியாம்... நாளைக்கு மிச்ச கமெண்ட் வரும்னு சொல்ல சொன்னாங்க...:)))

@ இராஜராஜேஸ்வரி - ஹா ஹா... தேங்க்ஸ்ங்க...:)

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - இந்த படம் நேத்து தாங்க ரிலீஸ் ஆச்சு...அப்பாவி சேனல்ல... நீங்க பாக்கலையா...?...:)

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan -
//மாப்பிள்ளை மைன்ட் வாய்ஸ் " அரைச்சு சிங்ல ஊத்தி கழுவிட்டு கொழம்புனு ஒன்னு செய்வேயே //
புதுசா இருக்கே...ரெசிபி குடுங்க...ட்ரை பண்றேன்...ஹா ஹா...:)

//எங்களுடைய கடைசி ஆயுதம்//
வேற வழி... ஜெயக்கலைனா இதான்...:)

//மிக மிக அப்பாவி ரங்கமணிகளின் சங்கம்//
ரங்கமணிகள் பாக்கறதுக்கு அப்பாவிக மாதிரி தெரிவாங்க...ஆனா செம உஷார்... தங்கமணிக பாக்கறதுக்கு சிம்மமா தெரிஞ்சாலும் பொட்டி பாம்பா இருப்போம்... இது universal truth ...:)

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - எஸ் எஸ்...எப்பவும் நாம ஜெயக்கர கட்சி தானே ஆனந்தி...:)

@ அனாமிகா - உன் நெலம இப்படி ஆகி போச்சே அனாமிகா... இந்த விசயத்துக்கு நீ ஆள் சேத்தறது ரெம்ப கஷ்டம்... anyway, try your best...just kidding... :))

@ Vasagan - ஹா ஹா... அக்கா என் கட்சி தான்... சொல்லியாச்சு... இப்ப என்ன பண்ணுவீங்க...இப்ப என்ன பண்ணுவீங்க...:)

Vasagan said...

ரங்கமணிகள் பாக்கறதுக்கு அப்பாவிக மாதிரி தெரிவாங்க...ஆனா செம உஷார்... தங்கமணிக பாக்கறதுக்கு சிம்மமா தெரிஞ்சாலும் பொட்டி பாம்பா இருப்போம்... இது universal truth ...:)
ithu iraivan enkaluku kotutha varam illaina unkala samalika mudiyuma

ஹேமா said...

கடைசியா சொன்ன நீதி ரொம்பப் பிடிச்சிருக்கு.ஆனா வெளில தெரியாம வீட்டுக்குள்ளயே இருக்கட்டும்.
அப்புறம் அதுக்கும் “தலையணை மந்திரம் போடுறா”ன்னும் திட்டுவாங்க தங்கமணி !

Vasagan said...

Captionla உன்னுடைய படம் so cute

so expressive

அவ்வளவு பெரிய Accountany புக் முன்னாடி ஞே னு முழிச்சிட்டு இருந்துட்டு இப்போ எங்களை (சயின்ஸ் குரூப்) போட்டு தாக்குறே, கலிகாலம்.

எல் கே said...

//அப்பாவி தங்கமணி ப்ளொக் ஹக் பண்ண யாரு ரெடி//


அனாமிகா இந்த விஷயத்தில் என்ன உதவி வேண்டுமானாலும் நான் பண்ணுவேன். என்ன பண்ணனும்னு சொல்லு தூகிடுவோம்

geethasmbsvm6 said...

ஆர்ட்ஸ் படிச்ச பொண்ணை சயின்ஸ் படிச்ச பையனுக்கோ சயின்ஸ் படிச்ச பொண்ணை ஆர்ட்ஸ் படிச்ச பையனுக்கோ மேட்ச் பண்ணாதீங்கோ... //

ஹிஹிஹி, பிரச்னையே இல்லை, நாங்க ரெண்டு பேருமே வணிகவியல் தான் படிச்சோம். ஜாலி! ஆனாலும் அவர் தூங்கினா நானும் எழுப்ப மாட்டேன்னு சொல்லிக்கிறேன். அதிலே நான் உங்க கட்சி தான், (ரகசியமா வச்சுக்கவும்.)

கீறிப்புள்ள!! said...

/அவ்வளவு பெரிய Accountancy புக் முன்னாடி ஞே னு முழிச்சிட்டு இருந்துட்டு இப்போ எங்களை (சயின்ஸ் குரூப்) போட்டு தாக்குறே, கலிகாலம்.//
ஹா ஹா ஹா!! எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா இப்டிதான் இவ்ளோ பெரிய புக்க படிச்சு புரிஞ்சுக்க வாய்ப்பே இல்ல!! டெய்லி தலைக்கு வெச்சு படுத்துகிட்டா எல்லாம் direct-ஆ தலைல எறிடுமில்லன்னு சொல்லுவாங்க..அப்பாவி-யும் அதே போல தான் போல..சயின்ஸ் குரூப்க்கு சிக்ஸர் அடிக்கும் சங்கம்!!

அமைதிச்சாரல் said...

//ஈஸ்ட் ஆர் வெஸ்ட் சயின்ஸ் இஸ் பெஸ்ட்//

இதை உங்களைச்சுத்தி 1,000000000000000000000000000000000000000000000 பேர் நின்னு கோஷம் போடறதா நினைச்சுக்கோங்க :-)))

'சயின்ஸ் படிச்சவன் வாழ்க்கையை ரசிக்கத்தெரிஞ்சவனா இருப்பான்----- இதை நான் சொல்லலீங்க, ஒரு அறிஞர் சொல்லியிருக்கார்.

நம்ம தினப்படி வாழ்க்கையிலும் சயின்ஸ் இரண்டறக்கலந்துருக்கு, உதாரணத்துக்கு சமைக்கிறதையே எடுத்துக்கோங்க... physics, chemistry, biology-ன்னு எல்லாமே அப்ளை ஆகுது. மேத்ஸைப்பத்தி சொல்லவே வாணாம்... அரிசியும் உளுந்தும் தப்பான கணக்குல சேர்த்தா, அப்றம் பஞ்சு மாதிரி இட்லிய எதிர்பார்க்கமுடியுமோ??..

கலைகளையும், வாழ்க்கையையும் ரசிக்கிறதுக்கு அடிப்படைத்தேவைகளான அன்பு,பாசம்,காதல் போன்ற உணர்வுகள்கூட மூளையில் சுரக்கும் கெமிக்கல்களால்தான் தெரியுமோ :-)))

அதனால நான் சொல்லவருவது என்னவென்றால், ஈரேழு பூலோகங்களிலும்,பதினஞ்சாவதான ப்ளாக் உலகத்திலும் சிறந்தது சயின்சே.. சயின்சே.. சயின்சே :-))

geethasmbsvm6 said...

அரிசியும் உளுந்தும் தப்பான கணக்குல சேர்த்தா, அப்றம் பஞ்சு மாதிரி இட்லிய எதிர்பார்க்கமுடியுமோ??.//

ஆஹா., அமைதிச்சாரல், அமைதியா வந்து புயல் மாதிரியான கருத்தைச் சொல்லிட்டாங்களே! ஹையா, ஹையா,ஜாலியோ ஜாலி! :)))))))

Priya said...

கலக்கலா இருக்கு... Enjoyed:)

Gopi Ramamoorthy said...

\\அரிசியும் உளுந்தும் தப்பான கணக்குல சேர்த்தா, அப்றம் பஞ்சு மாதிரி இட்லிய எதிர்பார்க்கமுடியுமோ??..\\

இட்லி மாதிரி ஒரு டிபன் ஐட்டம் சாப்பிடனும்னு முதலில் தோன்றுவது கலையுள்ளம் கொண்ட மூளைக்குத்தான்!

முதல் முறை இட்லி செய்யும்போது இந்தக் கணக்கு எல்லாம் சரியாய் இருந்திருக்காது. சுவையை விரும்பிய மனிதனின் நாக்கு பலவிதமான permuetation, combination போட்டு இட்லிக்கான அரிசி, உளுந்து விகிதத்தைக் கண்டுபிடிக்க உதவி இருக்கிறது என்பது என் கருத்து.

நானும் பி.காம். படிச்ச ஒரு மக்கு மாணவன் என்பதையும் இங்கே பதிவு செய்துவிடுகிறேன்.

மனம் திறந்து... (மதி) said...

//"நான் மீசை எடுத்துக்கறேன்"

"ம்... அந்த மூஞ்சிய நான் இல்ல தினமும் பாக்கணும்... உங்களுக்கு பனிஷ்மென்ட் மாதிரி வேற எதாச்சும் சொல்லுங்க"//

(ஒரு நிமிஷம் யோசித்துவிட்டு) "ஹைய்யா...அப்ப நீ மீசை வச்சுக்கோ!" :)))))))))

தி. ரா. ச.(T.R.C.) said...

@Gopi B.com patichjale makkunna CA paticha makku makkua

Gopi Ramamoorthy said...

@TRC, அதுல சந்தேகமே வேணாம்:-)

தி. ரா. ச.(T.R.C.) said...

@gopi naan ennai sonnen unnai sollalai

அமைதிச்சாரல் said...

//சுவையை விரும்பிய மனிதனின் நாக்கு பலவிதமான permuetation, combination போட்டு இட்லிக்கான அரிசி, உளுந்து விகிதத்தைக் கண்டுபிடிக்க உதவி இருக்கிறது//

சுவையை விரும்பறதுக்கும்,வெறுக்கறதுக்கும் கூட மூளையின் கெமிஸ்ட்ரிதான் உதவிக்கு வருது :-))))))

'காம்பினேஷன்' இதுலயும் சயின்ஸ்தானே அப்ளை ஆகுது :-)))))

Gopi Ramamoorthy said...

\\சுவையை விரும்பறதுக்கும்,வெறுக்கறதுக்கும் கூட மூளையின் கெமிஸ்ட்ரிதான் உதவிக்கு வருது :-))))))\\


மனசு சொல்றதைத்தானே மூளை கேக்குது:-) (எனக்கு மூளைங்கிற ஒண்ணு இல்லைங்கறது வேற விஷயம்). மனசு சயின்ஸா ஆர்ட்டா?

Gopi Ramamoorthy said...

@TRC, நீங்க சொன்னது எனக்கும் பொருந்துது.என்னையும் ஆட்டத்துல சேத்துக்கோங்க:-)

அமைதிச்சாரல் said...

//மனசு சொல்றதைத்தானே மூளை கேக்குது.. மனசு சயின்ஸா ஆர்ட்டா?//

நிச்சயமா ஆர்ட்டா இருக்க வாய்ப்பில்லை.. விதவிதமான டிசைன்கள்ல இட்லி சுடறத விட்டுட்டு இன்னும் ரவுண்டு ரவுண்டாவே சுடறோமே... இது ஒண்ணு போதாதா :-))

கலை ரசனையோட இட்லி சுடறதுக்கு, மனசை சொல்லச்சொல்லுங்கப்பா :-))

Vasagan said...

\\மனசு சொல்றதைத்தானே மூளை கேக்குது.. மனசு சயின்ஸா ஆர்ட்டா?//
மனசு கண்டிப்பா ஆர்ட்ஸ் தான் மனசுக்கு எந்த lawum தேவை இல்லை. புத்திக்கு கண்டிப்பா லா தேவை. எப்பவும் 50 ஆர்ட்ஸ் + 50 சயின்ஸ் தான் வாழ்க்கை. குறட்டை புலி சொன்னது 100 % கரெக்ட். கணவன் மனைவியில் மனைவி கலையாகவும் கணவன் சயின்ஸ் ஆகவும் இருந்தால் வாழ்கை ஒரு வரம்.

Gopi Ramamoorthy said...

@அமைதிச் சாரல், வட்ட வட்டமா சுடுவது ஒரு வசதிக்காக. அதுல என்ன பெரிய சயன்ஸ்:-௦)

சொல்லப் போனா மங்களூர் பக்கம் புட்டு மாதிரி சுடுவாங்க இட்லியை.

விதவிதமா ரவா இட்லி, காஞ்சிபுரம் இட்லி, தஹி இட்லின்னு செஞ்சு சாப்பிடனும்னு தோனுவது மனசுக்குத்தானே:-)

முருகன் இட்லி கடைக்குப் போய் ஆறு வித சட்னி, மிளகாய்ப் பொடி எண்ணெயோடு சாப்பிடனும்னு தோனுவது மனசுக்குத்தானே:-)

இவ்ளோ ஏன்? இட்லி உப்மா மாதிரி வருமா? சூரிய வம்சம் படத்துல ரெண்டு சீனை இட்லி உப்மாவை வெச்சே ஓட்டி இருப்பாங்க:-) பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பதை இட்லி உப்மாவை வெச்சே விக்ரமன் விளக்கி இருப்பார்:-)

சயன்ஸ்ல பாருங்க, பெரும்பாலும் ஒன்னும் ஒன்னும் ரெண்டுன்னு முடியும். மாற்றுக் கருத்தே இருக்கமுடியாது பெரும்பாலும். ரொம்ப போரிங்:-)

ஆர்ட்ஸ் அப்படிக் கிடையாது. நிறைய கருத்து இருக்கமுடியும். ஆர்ட்ஸ் தாம்பா பெஸ்ட்:-)

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அப்பாவி தங்கமணி அறிவியல் முறைப்படி ராக்கெட் விடறதைப் பத்தி (?!) ஒரு பதிவு போட்டிருந்தால் பதிவு இவ்ளோ சுவாரஸ்யமா இருக்குமா:-)

Gopi Ramamoorthy said...

@வாசகன், நீங்க சொல்றது சரியாப் படுது:-)

Gopi Ramamoorthy said...

@அமைதிச்சாரல், பதிவுல இருக்கிற அலாரம் மேட்டருக்கே வருவோம்.

அலாரம் அறிவியல்தான். ஆனா அதுல snooze option வைத்தது என்னைப் போன்ற சோம்பேறிகளுக்காகத்தான்.நேர்மையா சொல்லுங்க. snooze option இல்லன்னா நாம் அலாரம் வைப்போமா?:-))))

டயத்துக்கு எழுந்துக்கனும்னு புத்தி சொல்லுது. நான்கைந்து முறை snooze பண்ணிப் பண்ணித் தூங்குன்னு மனசு சொல்லுது:-)))

ஆக மனசு என்ன சொல்லுதோ அதைத்தான் புத்தி கேட்டாக வேண்டி இருக்கு:-)))))))

Gopi Ramamoorthy said...

@அப்பாவி, குடுத்த காசுக்கு மேல நிறைய கூவிட்டேன். ஏதோ பாத்துப் போட்டுக் குடுங்க:-)

அனாமிகா துவாரகன் said...

மனசு என்று ஒன்று உறுப்பு இல்லை. மூளை எனபது ஒரு உறுப்பு. மனசும் இதயமும் ஒன்றில்லை. அப்படியே இரண்டும் ஒன்றாக இருந்தாலும் இதயத்துக்கு சிந்திக்கத் தெரியாது.

இஞ்சினியர்களுக்கு பிடிக்காத ஒரே க்ரூப் எக்கவுன்ட் ஆளுங்க தான். எந்த இஞ்சினியரைக் கேட்டாலும் சொல்லுவாங்க. முடிஞ்சா இவனுங்கள எல்லாம் கொன்னு போட்டுடுவோம்னு. நல்ல ப்ரொஜக்ட்டுக்கு வேலை செய்ய காசு பட்ஜட் போட்டா, ஏதோ இவங்களுக்குத் தான் எல்லாம் தெரியற மாதிரி , எக்கசக்க எடத்தில கத்தரி போட்டு டென்ஷன் படுத்துவாங்க. அந்த டென்ஷனிலேயே ப்ரொஜட் நொந்து நூடில்ஸாயிடும்.

அனாமிகா துவாரகன் said...

@ Gopi,
//குடுத்த காசுக்கு மேல நிறைய கூவிட்டேன். ஏதோ பாத்துப் போட்டுக் குடுங்க:-) //
Rotfl

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - அப்படி சொல்லுங்க...அப்ப நாங்க அப்பாவிகனு ஒத்துக்கறீங்க தானே...:))

@ ஹேமா - ஹா ஹா ... ஒகே ஒகே...:)

@ Vasagan - ஹி ஹி... ஞே னு முழிச்சிட்டு இருந்தாலும் தாக்கறதுல பி.ஹெச்.டி ஆச்சே...:)

@ எல் கே - அடப்பாவி... இப்பவே சொல்லிட்டேன்...என் ப்ளாக் மேல ஒரு சின்ன கீறல் விழுந்தா கூட உன்மேல தான் கேஸ் போடுவேன்...:))

அப்பாவி தங்கமணி said...

@ geethasmbsvm6 - மாமி, நீங்க ரெண்டு பேரும் அமைதியா...அதாங்க பி(Be ).காம்...(calm)...நானும் கூட அதே தான் யு.ஜில... ஹா ஹா... ஒகே ஒகே... ரகசியம் பரம ரகசியம்...:))

அப்பாவி தங்கமணி said...

@ கீறிப்புள்ள!! - நல்லா சொன்னீங்க பிரதர்... அதுவும் அந்த Jain & Narang எழுதின Advanced Accountany ஒரு தலைகாணி புக் ஒண்ணு இருக்கு...ஸ்ஸ்ஸ்ப்பா...அதை பஸ்ல தூக்கிட்டு போனா luggage சார்ஜ் கேக்காத கொறை தான்...:))

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் -
//'சயின்ஸ் படிச்சவன் வாழ்க்கையை ரசிக்கத்தெரிஞ்சவனா இருப்பான்----- இதை நான் சொல்லலீங்க, ஒரு அறிஞர் சொல்லியிருக்கார்//
அந்த அறிஞர் டெல்லில இருக்கார் தானே... என்கிட்டயேவா... நம்பிட்டேன் நம்பிட்டேன்...:))

//அரிசியும் உளுந்தும் தப்பான கணக்குல சேர்த்தா, அப்றம் பஞ்சு மாதிரி இட்லிய எதிர்பார்க்கமுடியுமோ??..//
சரியான கணக்குல போட்டா மட்டும் வந்துருமாக்கும்...அப்புறம் கை பக்குவம்னு ஒண்ணு சொல்றமே...அது ஆர்ட்ஸ் தானே அக்கா... இப்ப என்ன பண்ணுவீங்க? இப்ப என்ன பண்ணுவீங்க?....:)))

//கலைகளையும், வாழ்க்கையையும் ரசிக்கிறதுக்கு அடிப்படைத்தேவைகளான அன்பு,பாசம்,காதல் போன்ற உணர்வுகள்கூட மூளையில் சுரக்கும் கெமிக்கல்களால்தான் தெரியுமோ :-)))//
போச்சுடா...நீங்க கலா மாஸ்டர்க்கு சொந்தமா... இல்ல கெமிஸ்ட்ரி பத்தி பேசறீங்களே அதான் சொன்னேன்...கெமிக்கல் மேட்டர் தான்னாலும் உணர்வுனு ஒண்ணு இருக்கே...அதை தாண்டின பின்ன தானே இதெல்லாம்...

//அதனால நான் சொல்லவருவது என்னவென்றால், ஈரேழு பூலோகங்களிலும்,பதினஞ்சாவதான ப்ளாக் உலகத்திலும் சிறந்தது சயின்சே.. சயின்சே.. சயின்சே :-)) //
என்னோட ரிப்ளை எல்லாம் பாருங்க...இல்லை இல்லை இல்லை...ஹா ஹா ஹா... :)

@ geethasmbsvm6 - ஹா ஹா ஹா..சண்டைய வேடிக்கை பாக்க உங்களுக்கும் பிடிக்குமா..மீ டூ... ஹா ஹா....:))


@ Priya - தேங்க்ஸ் ப்ரியா :)

அப்பாவி தங்கமணி said...

@ Gopi Ramamoorthy -
//இட்லி மாதிரி ஒரு டிபன் ஐட்டம் சாப்பிடனும்னு முதலில் தோன்றுவது கலையுள்ளம் கொண்ட மூளைக்குத்தான்//
இது மேட்டர்...:)

//பலவிதமான permuetation, combination போட்டு //
அட்ரா சக்க...அட்ரா சக்க...சூப்பர்...:))

//நானும் பி.காம். படிச்ச ஒரு மக்கு மாணவன் என்பதையும் இங்கே பதிவு செய்துவிடுகிறேன்//
அட நம்ம சங்கத்துக்கு ஆள் சேந்துட்டே போகுதே...மீ டூ...:)))

அப்பாவி தங்கமணி said...

@ மனம் திறந்து... (மதி) - ஹா ஹா..உங்களுக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் தோணும்...:))

@ தி. ரா. ச.(T.R.C.) - ஐயையோ..நான் ஒண்ணும் சொல்லலை... :))

@ Gopi Ramamoorthy - :)

@ தி. ரா. ச.(T.R.C.) - :))

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் -
//சுவையை விரும்பறதுக்கும்,வெறுக்கறதுக்கும் கூட மூளையின் கெமிஸ்ட்ரிதான் உதவிக்கு வருது//
போச்சுடா...விட்டா "பேஷ் பேஷ் காபி நன்னா இருக்கு" னு சொல்றது கூட கெமிஸ்ட்ரி தான்னு சொல்லுவீங்க போல...:)

//'காம்பினேஷன்' இதுலயும் சயின்ஸ்தானே அப்ளை ஆகுது //
ஆனா அதை யோசிக்கறது ஆர்ட்ஸ் தானே...:))

@ Gopi Ramamoorthy -
//மனசு சொல்றதைத்தானே மூளை கேக்குது//
அப்படி போடுங்க..:)

//எனக்கு மூளைங்கிற ஒண்ணு இல்லைங்கறது வேற விஷயம்//
இல்லாதவங்க இல்லைனு ஒத்துக்க மாட்டாங்க... So , objection overruled ....:)))

//மனசு சயின்ஸா ஆர்ட்டா//
ஆஹா... இதென்ன புது பஞ்சாயத்து...:)))

//@TRC, நீங்க சொன்னது எனக்கும் பொருந்துது.என்னையும் ஆட்டத்துல சேத்துக்கோங்க//
அடாடா...என்ன ஒரு ஆர்வம்...:))

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் -
//நிச்சயமா ஆர்ட்டா இருக்க வாய்ப்பில்லை.. விதவிதமான டிசைன்கள்ல இட்லி சுடறத விட்டுட்டு இன்னும் ரவுண்டு ரவுண்டாவே சுடறோமே... இது ஒண்ணு போதாதா//
இந்த கமெண்ட் பாத்துட்டு கோவிந்த்(ரங்க்ஸ்) இட்லி வட்டமா இருக்கறதுக்கு குடுத்த scientific reason இதோ:-
"Area to Cirumference ratio is higher in circle than in any other shapes. Higher the ratio, more the possibility for heat to emerge, which helps steaming faster"

(இப்ப சொல்லுங்க மக்களே, இப்ப கூடவா தோணல "ஐயோ பாவம் இந்த பொண்ணுன்னு"....ஸ்ஸ்ஸ்பப்பா... ஹா ஹா ஹா)

ரங்க்ஸ் சொன்ன இந்த மேட்டர் இங்க போடறது சேம் சைடு கோல்னு எனக்கு தெரியும்...ஆனா மனசாட்சிக்கி துரோகம் பண்ண முடியல... ஹ்ம்ம்... என் நல்ல மனசை யார் புரிஞ்சுக்கறா...:)))

//கலை ரசனையோட இட்லி சுடறதுக்கு, மனசை சொல்லச்சொல்லுங்கப்பா//
ha ha...:)

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - //கணவன் மனைவியில் மனைவி கலையாகவும் கணவன் சயின்ஸ் ஆகவும் இருந்தால் வாழ்கை ஒரு வரம்//
சூப்பர்...:))

அப்பாவி தங்கமணி said...

@ Gopi Ramamoorthy -
// வட்ட வட்டமா சுடுவது ஒரு வசதிக்காக. அதுல என்ன பெரிய சயன்ஸ்//
இல்லிங்க அது சயன்ஸ் தானாம்...ரங்க்ஸ் சொல்றார் விளக்கத்தோட...மேல அமைதி அக்காவுக்கு போட்ட பதில்ல எழுதி இருக்கேன் பாருங்க... சாரி சேம் சைடு கோல் போட்டதுக்கு...:)))

//விதவிதமா ரவா இட்லி, காஞ்சிபுரம் இட்லி, தஹி இட்லின்னு செஞ்சு சாப்பிடனும்னு தோனுவது மனசுக்குத்தானே//
இது வேணா நிஜம்... வகை வகையா வேணும்னு தோணறது மனசுக்கு தான்... நோ அப்ஜக்சன்...:))

//முருகன் இட்லி கடைக்குப் போய் ஆறு வித சட்னி, மிளகாய்ப் பொடி எண்ணெயோடு சாப்பிடனும்னு தோனுவது மனசுக்குத்தானே//
நல்லா கிளப்புறீங்க டென்சனை... ஹ்ம்ம்... இட்லி அண்ட் ஆறு வித சட்னி...ஹ்ம்ம்... பெருமூச்சு தான் விடணும்...:))

//இவ்ளோ ஏன்? இட்லி உப்மா மாதிரி வருமா? சூரிய வம்சம் படத்துல ரெண்டு சீனை இட்லி உப்மாவை வெச்சே ஓட்டி இருப்பாங்க//
ஹா ஹா ஹா ஹா ஹா...:))

//சயன்ஸ்ல பாருங்க, பெரும்பாலும் ஒன்னும் ஒன்னும் ரெண்டுன்னு முடியும். மாற்றுக் கருத்தே இருக்கமுடியாது பெரும்பாலும். ரொம்ப போரிங்//
சயன்ஸ் போரிங்....இதை கன்னா பின்னான்னு ரிப்பீட்டுறேன்...:))

//அப்பாவி தங்கமணி அறிவியல் முறைப்படி ராக்கெட் விடறதைப் பத்தி (?!) ஒரு பதிவு போட்டிருந்தால் பதிவு இவ்ளோ சுவாரஸ்யமா இருக்குமா//
அட...நல்ல ஐடியா சொல்லி இருக்கீங்க...சீக்கரம் ஒரு போஸ்ட் போடறேன்... பாருங்க மகா ஜனங்களே, இவர் தான் ஐடியா குடுத்தார், இதுல என் தப்பு எதுவும் இல்லை..ஹா ஹா...:)))

//ஆனா அதுல snooze option வைத்தது என்னைப் போன்ற சோம்பேறிகளுக்காகத்தான்.//
ரிப்பீட் inifinity டைம்ஸ்... இது மட்டும் இல்லைனா என் கதி...:)))

//டயத்துக்கு எழுந்துக்கனும்னு புத்தி சொல்லுது. நான்கைந்து முறை snooze பண்ணிப் பண்ணித் தூங்குன்னு மனசு சொல்லுது:-)))//
மனசே ரிலேக்ஸ் ப்ளீஸ்...:))

//அப்பாவி, குடுத்த காசுக்கு மேல நிறைய கூவிட்டேன். ஏதோ பாத்துப் போட்டுக் குடுங்க//
கண்டிப்பா... செக்கு ஸ்பீட் போஸ்ட்ல வந்த்துட்டே இருக்கு பாருங்க...:)))

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா -
//மனசு என்று ஒன்று உறுப்பு இல்லை//
கரெக்ட் அது ஒரு உணர்வு...:)

//இதயத்துக்கு சிந்திக்க தெரியாது//
கரெக்ட்...ஆனா செயல்படுத்த தெரியும்...:)

//இஞ்சினியர்களுக்கு பிடிக்காத ஒரே க்ரூப் எக்கவுன்ட் ஆளுங்க தான்//
காலங்காலமா இந்தியா பாகிஸ்தான்னு தெரிஞ்சுது தானே...

//முடிஞ்சா இவனுங்கள எல்லாம் கொன்னு போட்டுடுவோம்னு//
கொன்னு போட்டுட்டா...உங்களுக்கு சம்பளம் யார் தருவாங்க மேடம்...ஆர்ட்ஸ் வேணும் யு சி..:))

//எக்கசக்க எடத்தில கத்தரி போட்டு டென்ஷன் படுத்துவாங்க. அந்த டென்ஷனிலேயே ப்ரொஜட் நொந்து நூடில்ஸாயிடும். //
பின்ன நீங்க குடுக்கற ப்ளான் அப்படியே அப்ரூவ் பண்ணினா தலைல துண்டு தான்... அப்புறம் நொந்து போறதுக்கு நூடுல்ஸ் கூட கிடைக்காது...:)))))

Vasagan said...

//முருகன் இட்லி கடைக்குப் போய் ஆறு வித சட்னி, மிளகாய்ப் பொடி எண்ணெயோடு சாப்பிடனும்னு தோனுவது மனசுக்குத்தானே//
Gopi
maranthu irunthathai gnapakapathitinka, undane toronto madurai ticketkku kasu anupaunka, unka punniyathula pilai kutti partha mathrium akidum.

Vasagan said...

/எக்கசக்க எடத்தில கத்தரி போட்டு டென்ஷன் படுத்துவாங்க. அந்த டென்ஷனிலேயே ப்ரொஜட் நொந்து நூடில்ஸாயிடும். //
100% true
nonthu nulanavarkal sankam

Vasagan said...

//இதயத்துக்கு சிந்திக்க தெரியாது//
கரெக்ட்...ஆனா செயல்படுத்த தெரியும்...:)
Hello madam செயல்படுத்த muulai vaenum

Vasagan said...

Ok final
Life is a complex number in which science is real arts is imaginary just real be bored combined with conjugate is the driving force.

Vasagan said...

\கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. அப்பாவி தங்கமணி அறிவியல் முறைப்படி ராக்கெட் விடறதைப் பத்தி (?!) ஒரு பதிவு போட்டிருந்தால் பதிவு இவ்ளோ சுவாரஸ்யமா இருக்குமா:-) \
Gopi
Appavi oru pathivu poda hints koduthutinka.
inni NASA la oru periya purachi undaka pokirathu.

Gopikaa Ramanan said...

Ungaloda indha post padichadhuku appuram enaku ennavo unga rengamani maela thaan nga romba parithaabam thonudho! Ada...naanum science group thaanungo! ;)

கோவை ஆவி said...

96 World Cup - பத்தாவது பரீட்சைக்காக பாக்க முடியல.. (அப்பதானே நல்லா படிச்சு சயின்ஸ் குரூப் கிடைக்கும்)

99 World Cup - காதலிக்கு கரடி பொம்மையும், கிரீடிங் கார்டும் வாங்க அலைஞ்சதுல பாக்க முடியல.

2003 World Cup - B .E . (சயின்ஸ்) படிச்சுட்டு சின்ன வேலைக்கு போக முடியுமா? நல்ல வேலைக்கு அலைஞ்சதுல பாக்க முடியல..

2007 World Cup - கல்யாணத்துக்கு முன்னால செட்டில் ஆயிடனும்னு வேலை வேலைன்னு பாக்க முடியல..

2011 World Cup - இப்பவாவது பாக்கலாம்னா இந்த தங்கமணி கண்டிஷன் போட்டு அதுக்கும் ஆப்பு!!


தங்கு தடையில்லாமல் தங்கமணிகள் சீரியல் பார்க்கும் போது, நாலு வருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த வேர்ல்ட் கப்ப ரங்கமணிகள் பாத்தா மட்டும் ஏன் இப்படி ஒரு காண்டு??

ஸ்ரீராம். said...

ஆர்ட்ஸோ சயன்ஸோ சரியா கணக்கு போட்டு வாழுங்கபா...! செம பின்னூட்டக் கும்மி அடிச்சிருக்கீங்க...

ஹுஸைனம்மா said...

// கோவிந்த்(ரங்க்ஸ்) இட்லி வட்டமா இருக்கறதுக்கு குடுத்த scientific reason இதோ:-
"Area to Cirumference ratio is higher in circle than in any other shapes. Higher the ratio, more the possibility for heat to emerge, which helps steaming faster"

(இப்ப சொல்லுங்க மக்களே, இப்ப கூடவா தோணல "ஐயோ பாவம் இந்த பொண்ணுன்னு"//

இதே பிரச்னைதான்ப்பா எனக்கும்!! எங்க, எப்பப் பாத்தாலும் நட்டு, ஸ்க்ரூ, போல்ட், ப்ளையர்னு பாத்துபாத்தே வெறுத்துடுச்சு!! நானும் சயின்ஸ்தான், ஆனாலும் இதெல்லாம் ஓவர் இல்லே?

Gopi Ramamoorthy said...

தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

Matangi Mawley said...

Semma thool ponga! :D :D LOL

அமைதிச்சாரல் said...

//ஆனா அதுல snooze option வைத்தது என்னைப் போன்ற சோம்பேறிகளுக்காகத்தான்//

ஹலோ.. அந்த சங்கத்துல நானும் இருக்கேன். காலைல உங்க கமெண்டு அத்தனையும் படிச்சிட்டு சிரிச்சுட்டே இருந்தேன் :-))). நம்ம எல்லோரோட உடம்புலயும் ஒரு பயாலஜிக்கல் க்ளாக் இருக்குது. அது அலாரம் அடிச்சாத்தான் நாம முழிக்கமுடியும், அது வேறவிஷயம் :-))))

//குடுத்த காசுக்கு மேல நிறைய கூவிட்டேன். ஏதோ பாத்துப் போட்டுக் குடுங்க:-) //

உங்களுக்கு இட்லிமாலை போட்டு பாராட்டப்போறாங்களாம். அதுவும் அவங்களே செஞ்ச இட்லி.. ச்சே!! அப்பாவியோட ப்ளாக்ன்னதாலயோ என்னவோ எல்லா உதாரணங்களுக்கும் இட்லியே ஞாபகம் வருது :-))))))

சப்போர்ட்டு செஞ்ச உடன்பிறவா தம்பி கோவிந்தை கன்னாபின்னானு ஆதரிக்கிறேன் :-)))))))

தக்குடு said...

அடேங்கப்பா!! திருப்பூர் சூறாவளி ப்ரியா அக்கா கமண்ட் மழை பொழியாமையே கல்லா களைகட்டிடுச்சு போலருக்கு!!!..;))

@ அப்பாவியொட தங்கமணி - மாவே இல்லாம இட்லி வார்த்த மாதிரி ஒரு சிம்பிள் கான்சப்ட்டை வெச்சுண்டு சூப்பர் கச்சேரி பண்ணியாச்சு.....;)))

Krishnaveni said...

superaa irukku thangam

Vasagan said...

தக்குடு
@ அப்பாவியொட தங்கமணி: Peyar gana poruththam.

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - நாட்டாம, தீர்ப்ப மாத்தி சொல்லுங்க..:))... ஹா ஹா ஹா... NASA புரட்சி விரைவில் நடக்கும்? பாருங்க ஐடியா குடுத்து கிளப்பி விடறதே இவங்க தான்...:)))

@ Gopikaa Ramanan - கோபிகா, இது அநியாயம்ங்க.. நீங்க சயின்ஸ்ங்கறதுக்காக இப்படி அந்தர் பல்டி அடிக்க கூடாது... என்ன இருந்தாலும் நாம எல்லாம் ஒரே செட் இல்லையா... ஐ மீன் தங்கமணி'ஸ் செட்...கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க... :))

@ கோவை ஆவி - 96 வேர்ல்ட் கப்ல பத்தாவது 99 வேர்ல்ட் கப்ல கரடி பொம்மையா? ஒகே ஒகே... :))... நாங்க சீரியல் பாக்கறதுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கு...அதாவது அதுல வர்ற சோகத்த எல்லாம் பாத்து நம்ம லைப் ஏதோ பரவால்லனு மனச தேத்திக்கற காரணம் தான் இது... எங்க நீங்க கிரிக்கெட் பாக்கறதுக்கு ஒரு valid reason சொல்லுங்க பாப்போம்...ஹா ஹா ஹா...:))

@ ஸ்ரீராம் - ஹா ஹா... நன்றிங்க..:)))

@ ஹுஸைனம்மா - ஆஹா...உங்க கிட்ட இருந்து இப்படி ஆதரவு கமெண்ட் வரும்னு எனக்கு மொதலே தெரியும் அக்கா... நன்றி நன்றி நன்றி... கரெக்ட் கரெக்ட் ரெம்ப ஓவர் தான்...:))

@ Gopi Ramamoorthy - நன்றிங்க கோபி... எல்.கே அதே தொடர் பதிவு போல இருக்கு... போட்டுடறேன்...:)

@ Matangi Mawley - தேங்க்ஸ் மாதங்கி..:)

@ அமைதிச்சாரல் - ஆதரிங்க ஆதரிங்க ....:))

@ தக்குடு - வாங்க தம்ப்ரி, தங்கள் வரவு நல்வரவு ஆகுக...:)... ப்ரியா அக்கா பசங்க பரீட்சை பிஸில இருக்காக... மாவே இல்லாம இட்லி வாக்க முடிஞ்சா நான் ஏன் போஸ்ட் போடறேன் சொல்லு... :))))

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி..:)

@ Vasagan - ஆஹா...நீங்களுமா????

Post a Comment