Thursday, March 24, 2011

ஸ்வேகா...


"நம்ம ஜூனியர் ஸ்வேகா ஸ்டெப்ஸ்'ல கால் ஸ்லிப் ஆகி விழுந்துட்டாளாம்... ஒரு வாரம் ரெஸ்ட்ல இருக்க சொல்லி இருக்காங்க போல" என என் தோழி கூற

"அடப்பாவமே... அம்மா இல்லாத பொண்ணு பாவம்... நல்லா பேசுவா... அவ க்ளாஸ்மேட்ஸ்கிட்ட போன் நம்பர் வாங்கி பேசணும்" என்றேன் நான்

***********************************************************************

அன்று மாலை....

"ஹலோ ஸ்வேகா இருக்காங்களா?"

"நீங்க?"

"நான் அவ சீனியர் பேசறேன் அங்கிள்"

"இரும்மா.. அவகிட்ட போன் தரேன்"

"ஹலோ"

நான் பேசுகிறேன் என்று சொன்னதும் "ஹாய் அக்கா... நான் எதிர்பாக்கவே இல்ல நீங்க கூப்பிடுவீங்கன்னு... சோ ஹாப்பி அக்கா...தேங்க்ஸ் அக்கா" என அன்று பேசி முடிக்கும் முன் ஒரு நூறு அக்கா சொல்லி இருப்பாள் ஸ்வேகா

இப்படி தான் ஆரம்பித்தது எங்களுக்கு இடையிலான நெருக்கம்

அதன் பின் தினமும் கல்லூரியில் சமயம் கிடைக்கும் போதெல்லாம் என்னை தேடி வந்து விடுவாள். அது தவிர வீட்டுக்கு வந்ததுமே போன் வரும்... என் அம்மா "இப்போ தானேடி காலேஜ்ல பாத்து இருப்பீங்க அதுக்குள்ள என்ன?" என கேட்கும் படி ஆனது

கல்லூரியிலும் அவளை பார்த்ததுமே "உன் உடன் பிறப்பு வந்தாச்சு" என எல்லாரும் கேலி செய்யும் படி ஆனது நிலைமை

***********************************************************************

அன்று அவளின் பிறந்த நாள். கட்டாயம் அவள் வீட்டுக்கு நான் வரணும் என என் அம்மாவிடம் கேட்டு அனுமதி வாங்கினாள்

"நீங்க தான் அக்கா இன்னிக்கி VIP கெஸ்ட்" என்றாள். நான் மற்றும் அவளின் உடன் பயிலும் நெருங்கிய தோழி மட்டுமே, வேறு யாரும் இல்லை

கேக் கட் செய்து முதலில் எனக்கு ஊட்டினாள். அதற்காக அவர் தங்கை கோவித்து கொண்டதாய் பின்னொரு நாளில் என்னிடம் கூறி சிரித்தாள்

"அக்கா அக்கா அக்கா... என் பொண்ணுக்கு அக்கா'மேனியா பிடிச்சுடுச்சு போ...ஹா ஹா" என சிரித்தார் அவளின் அப்பா அன்று

"என்னாச்சு அங்கிள்" என நான் கேட்க

"அதை ஏம்மா கேக்கற... பேச்சுக்கு பேச்சு அக்கா தான்... போன ஜென்மத்துல நெஜமாவே அக்கா தங்கையா இருந்து இருப்பீங்க போல" என அவள் அப்பா சொல்ல, ஸ்வேகாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம்

ரத்த உறவுகளுள் இருக்கும் அன்பு ஒரு விதம். நட்பு என்பது ஒரு விதம். இது இரண்டும் சேர்ந்தது போல் எதிர்பார்ப்பு சிறிதும் அற்ற இவளின் அன்புக்கு என்ன விளக்கம் இருக்க முடியுமென நானும் பலமுறை எனக்குள் கேட்டும், பதில் பெற முடிந்ததில்லை

***********************************************************************

இரண்டு வருடங்கள் போன இடம் தெரியவில்லை. எனக்கு கல்லூரி முடியும் நாள். அன்று ஸ்வேகா அழுதது இன்னும் என் கண்ணில் நிற்கிறது

அதன் பின் தினமும் போன் செய்வாள். குறைந்தது அரைமணி நேரமேனும் என்னிடம் பேசினால் தான் ஆச்சு என்பாள். சில நேரம் எனக்கு பேச விசயமே இருக்காது. சிலசமயம் அசுவாரஷ்யமாய் அவள் பேசுவதற்கு சும்மாவேனும் "ம்" கொட்டி கொண்டிருப்பேன்

ஒரு நாளும் அதற்கு கோவித்து கொண்டதில்லை. இரண்டு வாரத்திற்கு ஒருமுறையேனும் நேரிலும் வந்து பார்த்து விடுவாள். ஒரு வருடம் இப்படி ஓடியது

"நீங்க படிக்கற காலேஜ்ல நானும் PG சேரணும்... அங்க மெரிட் சீட் மட்டும் தான்னு சொன்னாங்க அக்கா... அதுக்கே ஒழுங்கா படிச்சுட்டு இருக்கேன்" என்றாள், இயல்பிலேயே மிக நன்றாக படிப்பவள் தான் அவள்

சொன்னது போல் நான் இரண்டாம் வருடம் போன போது அவள் அங்கு முதல் வருடத்தில் வந்து சேர்ந்தாள்

"உங்க அக்கா கல்யாணம் பண்ணிட்டு போனா நீயும் கூடவே போவியோ" என அவளின் அப்பா வழக்கம் போல் கேலி செய்தார்

"அந்த வீட்டிலேயே இன்னொரு பையன் இருந்தா நல்லதா போச்சுனு அக்காவுக்காக போனாலும் போய்டுவா" என அவள் தங்கையின் கேலியும் சேர்ந்தது

முதுகலை படிப்பில் ஒரு வருடம் பழைய கதை தொடர்ந்தது. தினமும் கல்லூரியில் பின் வீட்டிற்கு வந்து போனிலும் பேச்சும் அரட்டையும்

ஆரம்பம் என்பது உண்டென்றால் முடிவும் உண்டே. அந்த கல்லூரி வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. ஆனால் அன்று அவள் முன் போல் அழவில்லை

மாறாக "நாம தான் எப்பவும் ஒண்ணா இருப்போமே அக்கா... கூட இருந்தாலும் இல்லாட்டியும்" என்றாள். அவள் பக்குவப்பட்டிருந்தது எனக்கு நிம்மதி அளித்தது

எனக்கு கல்லூரி ஒன்றில் விரிவுரையாளர் வேலை கிடைக்க தனக்கே கிடைத்தது போல் அப்படி ஒரு சந்தோஷம் ஸ்வேகாவின் பேச்சில்

"அடடா... வர்றவங்க போறவங்க கிட்டயெல்லாம் ஒரே அக்கா புகழ் தான்...ஹா ஹா" என சிரித்தார் அவள் அப்பா

அவள் சொன்னது போல் எங்கள் நட்பு தொடர்ந்தது

***********************************************************************

அன்று எனக்கு திருமணம் நிச்சியம் ஆனதை அவளிடம் கூற முதலில் சந்தோஷம் அதன் பின் சோகம்

"ஊரை விட்டு போனப்புறம் என்னை மறந்துடுவீங்களா?" எங்களின் ஐந்து வருட நட்பில் முதல் முறையாய் அவளிடமிருந்து எதிர்பார்ப்பான ஒரு வார்த்தை அன்று தான் கேட்டேன்

"மறந்தா போன் பண்ணி ஒரு வழி பண்ணிட மாட்டியா?" என கேலி போல் பேச்சை மாற்றினேன் நான்

கூடவே இருந்த போது கூட தோன்றாத ஒரு அபரிதமான நெருக்கத்தை அவளை விட்டு பிரிய போகிறோம் என்ற போது நான் உணர்ந்தேன்

அன்று அவளின் பிறந்த நாள். என்ன பரிசு வேண்டும் என கேட்ட அவள் தந்தையிடம் "அக்காவுடன் ஒரு நாள் தங்க வேண்டும்" என்று கேட்டாள்

மகளை தன் உடன் பிறந்தவர்களின் வீட்டுக்கு கூட அனுப்ப தயங்கும் தந்தை என்ன செய்திருப்பார் என நினைக்கிறீர்கள்

அம்மா இல்லாத பிள்ளைகள் என அந்த குறை தெரியாமல் இருக்க மகள்கள் கேட்டது பெற்று தரும் தந்தை அவளின் அந்த ஆசையையும் நிறைவேற்றினார்

அவரும் அவளோடு வந்து என் பெற்றோரை சந்தித்து அளவளாவி பிறந்த நாளை கொண்டாடி விட்டு மகளை எங்கள் வீட்டில் விட்டு சென்றார். அன்றிரவு வெகு நேரம் என்னோடு பேசி கொண்டே இருந்தாள்

இனி பேச வாய்ப்பே கிடைக்காது என்பது போல் அவள் அம்மாவை பற்றி அவளுக்கு இருந்த பிள்ளை பருவ நினைவுகள், அப்பா பற்றி, தங்கை பற்றி, தோழிகள் பற்றி என விடிய விடிய பேசினாள்

மறுநாள் மாலை நேரம் போல் அவளின் வீட்டு டிரைவர் அழைத்து செல்ல வர, செல்லவே மனமின்றி கண்ணீரோடு கிளம்பினாள்

***********************************************************************

என் திருமண தினத்தன்று என் உடன் பிறந்த தங்கையின் கண்ணீர் அளவு அவளிடமும் கண்டேன்

திருமணத்திற்கு பின் ஒரு மாதம் விடுமுறை முடிந்து என்னவர் துபாய் சென்றுவிட, எனக்கு விசா வர இரண்டு / மூன்று மாதம் ஆகும் என்ற நிலைமை. அந்த சமயத்தில் ஒரு நாள் ஸ்வேகாவின் தந்தையிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது, உடனே மருத்துவமனைக்கு வரும்படி

அங்கு அவளை சென்று பார்த்ததும் என்னையும் அறியாமல் கண்ணில் நீர் நிறைந்தது. என்னை கண்டதும் அவளுக்கு உடல் வலியை மீறி ஒரு மகிழ்வான சிரிப்பு

"என் பொண்ணுக்கு அக்காவ பாத்ததும் தான் சிரிப்பு வருது... ஒரு வாரமாச்சு அவ சிரிப்ப பாத்து" என்றார் அவள் அப்பா

"ஒரு வாரமா ஏன் என்கிட்ட சொல்லலை" னு சண்டை போட்டேன் அவரிடம்

"வீட்டுக்கு போயிட்டு உனக்கு கூப்பிடலாம்னு இருந்தேன்மா... ஆனா இவ தான் பாக்கணும்னு அடம்" என்றார் மகளை அன்பாய் பார்த்தப்படியே

அதற்குள் நர்ஸ் வந்து அழைக்க வெளியே வந்தோம். அதற்கே காத்திருந்த நான் "என்னாச்சு அங்கிள்?" என கேட்க, அவரும் அதற்கே காத்திருந்தது போல் அழுதார்

என் தந்தையின் வயதுடைய ஒருவர் சிறுபிள்ளை போல் அழுவதை காணும் மனோதிடம் அப்போது எனக்கு இருக்கவில்லை. சற்று சமாதானம் ஆனதும் "ப்ளட் கேன்சரா இருக்கும்னு சொல்றாங்க... ஒண்ணும் புரியலம்மா... அவ அம்மாவை வாரி குடுத்த அதே நோய்க்கு இவளையும் குடுத்துடுவேனோனு பயமா இருக்கு" னு அழுதார்

எனக்கு என்ன சமாதானம் சொல்வதென புரியவில்லை. எனக்கு யாரேனும் சமாதானம் சொன்னால் தேவலை என்ற நிலைமை. ஆனால் தீர்க்கமாய் அழக்கூடாதென நின்றேன். நான் அழுதால் தான் ஏதோ ஆகிவிடும் என்பது போல் இரும்பாய் இருந்தேன்

அந்த சமயம் நர்ஸ் வந்து "ப்ளட் ட்ரான்ஸ்பிளான்ட் செய்யணும்.... ப்ளட் பேங்க்ல இல்ல.... யாரையாச்சும் வர சொல்லுங்க" என கூற, சற்றும் எதிர்பாராத விதமாய் என்னுடைய ரத்த வகை தான் அவளுடயதாகவும் இருந்தது . அது வரை ரத்த வகை பற்றி கேட்டுகொண்டதில்லை

சினிமாவில் இது போல் காட்சிகள் வந்த போதில் கேலி செய்து சிரித்தவள் தான் நானும், அன்று பேச்சற்று நின்றேன்

"என் ரத்தத்தை தருகிறேன்" என்றபோது அவள் அப்பா முதலில் மறுத்தார்

"நீ மணமானவள்... இன்னும் எங்கள் வீட்டு பெண்ணில்லை... அவரிடம் கேட்க வேண்டாமா" என தயங்கினார்

"அவர் நிச்சியம் சந்தோசப்படுவார்... எனக்கு அவரை தெரியும்" என நான் உறுதியாய் கூற, பின் சம்மதித்தார்

மகிழ்வாய் ஸ்வேகாவிடம் என்னை அழைத்து சென்றவர் "ஏய் குட்டி (அப்படி தான் மகளை அழைப்பார்), உன் அக்கா உனக்கு ப்ளட் குடுக்க போறாளாம்... உனக்கு இப்போ எல்லாம் சரி ஆய்டுமே... கரெக்ட் தானே" என தன் துக்கத்தை மறைத்து கேலி செய்து சிரித்தார்

அவர் சொன்னது போலவே அவள் முகத்திலும் அப்படி ஒரு சந்தோஷம். அன்று டாக்டர் அனுமதித்த நேரம் வரை அவளுடன் இருந்து விட்டு வீட்டுக்கு வந்தேன்

அவளுக்கு நிச்சியம் சரி ஆகி விடும் என்று நம்பினேன். ஆனால் நாளுக்கு நாள் நிலைமை பின்னடைந்து கொண்டே போனது

எனக்கு துபாய் செல்ல விசா வந்தது. அதே நேரம், ஒன்று அல்லது இரண்டு வருடங்கள் அவளின் வாழ்வு என கெடு விதிக்கப்பட்டது

மீண்டும் அவளை காண்பேன் என்ற நம்பிக்கையோடு அவளிடம் விடை பெற்று துபாய் கிளம்பினேன். அடிக்கடி தொலைபேசியில் பேசினேன். என்னிடம் பேசும் போது நம்பிக்கையாய் பேசுபவள் அதன் பின் சோர்ந்து போவதாய் அவள் அப்பா கூறினார்

ஒருமுறை அவளை பார்க்க சென்ற என் பெற்றோரிடம் நானும் அவரும் இருப்பது போல் பெரிய புகைப்படம் வேண்டுமென கேட்டாளாம். புதியதாய் ஒன்றை எடுத்து அனுப்பினோம்

சில நாட்கள் "அக்கா பேசினால் தான் மருந்து எடுத்து கொள்வேன்" என அடம் பிடிக்கிறாள் என அவள் தங்கையிடமிருந்து அழைப்பு வரும்

"நீ இப்படி செஞ்சா நான் எப்படி நிம்மதியா இருப்பேன்... ஒழுங்கா சாப்பிடணும் சரியா.. இல்லேனா நான் இனிமே பேசவே மாட்டேன்" என்றேன் ஒரு நாள் சற்று கோபமாய், அப்படி சொன்னாலேனும் சரியாய் சாப்பிடுவாள் என எண்ணி

எந்த நேரத்தில் அப்படி கூறினேனோ, நான் கூறிய அந்த நேரத்தில் எந்த தேவதை "ததாஸ்து" கூறியதோ, மெய்யாகவே அதன் பின் அவள் குரலை நான் கேட்கவில்லை

இதே நாள் மார்ச் 24 , அன்று "அவள் இனி இல்லை" என்ற செய்தி எனக்கு வந்தது. இத்தனை விரைவில் அவள் இல்லாமல் போவாள் என நான் எண்ணவும் இல்லை. அழவும் தோன்றவில்லை. "ஏன் சென்றாய்" என கோபம் தான் மேலோங்கியது

"இன்னும் இரண்டு மாதத்தில் நான் வருவேன் என்று கூறினேனே...அதற்குள் என்ன அவசரம் என சென்றாய்" என ஆதங்கம் தான் மனம் முழுக்க வியாபித்திருந்தது

இரண்டு நாட்கள் அவள் தந்தையிடம் பேச இயலவில்லை, நான் அழைத்த போது அவர் பேசும் நிலையில் இருக்கவில்லை. இரண்டு நாள் கழித்து அவள் அப்பாவே எனக்கு அழைத்தார்

"என்ன அங்கிள் இது? ரெண்டு வருஷம் இருப்பானு டாக்டர் சொன்னதா சொன்னீங்களே...இப்படி ஆறே மாசத்துல.." எனக்கு அதற்கு மேல் பேச இயலவில்லை

"என்னமா செய்யறது... நமக்கு குடுத்து வெச்சது அவ்ளோ தான்" என்றார் விரக்தியாய். எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை

மீண்டும் அவரே தொடர்ந்தார் "நேத்தைக்கி அவ அஸ்திய கரைக்க ஆத்துக்கு உங்க வீட்டு வழில தான் போனோம்... இந்த அஸ்திக்கு உயிர் இருந்தா அவ அக்கா வீட்டுக்கு போகாம இந்த ரோடை கிராஸ் பண்ண விடமாட்டா என் பொண்ணுனு, என் கூட வந்த ஸ்வேகாவோட மாமாகிட்ட சொன்னேன்..." என்று அவர் சொல்லவும் எனக்கு இரண்டு நாளாய் கட்டுப்படுத்தி இருந்த துக்கம் மொத்தமும் வெடித்து கிளம்பியது

என் அழுகையை நிறுத்த வெகு நேரமானது. அவளை முதல் முதல் சந்தித்தது முதலான எல்லா நிகழ்வுகளும் கண் முன் விரிய மொத்தமாய் அழுது தீர்த்தேன்

"உன்னை அழ வெக்கணும்னு நான் இதை சொல்லல புவனா... அவ ஆத்ம சாந்திக்கு தான் சொன்னேன்... அவ எப்பவும் உன்னோட இருப்பா"னு தன் துக்கத்தையும் மறந்து, எனக்கு ஆறுதல் சொன்னார் அந்த தந்தை... Hats off to that dad....!!!

அவர் என்ன நினைச்சு அப்படி சொன்னாரோ எனக்கு தெரியாது. ஆனா எனக்கு ரெம்ப சந்தோசமா இருந்தாலும் சரி, வருத்தமா இருந்தாலும் சரி அந்த நிமிஷம் ஒரு ப்ளாஷ் மாதிரி அவ நினைப்பு வந்துட்டு போகும் கண் முன்னாடி, இன்னைக்கி வரைக்கும் அப்படி தான்

அவளை இறுதியா பாக்க முடியலயேங்கற வருத்தம் எனக்கு இப்பவும் இருக்கு. நமக்கு நடக்கற ஒரு ஒரு விசயத்துக்கும் ஏதோ காரணம் இருக்குனு நம்பறவ நான். அந்த வகைல யோசிச்சு பாத்தா, அவளோட சிரிச்ச முகம் மட்டுமே என் நினைவில் இருக்கணும்னு தான் கடவுள் அப்படி செய்தாரோனு கூட தோணும்

நான் வருத்தமா இருக்கறது ஸ்வேகாவுக்கு எப்பவும் பிடிக்காது. இதை எழுதி என்னை நானே இன்னும் வருத்திக்க கூடாதுன்னு தான் முதல்ல நினைச்சேன்... அந்த தயக்கத்துல தான் இது வரைக்கும் அவள பத்தி எழுதலை, யார்கிட்டயும் ஸ்வேகா பத்தி நான் அதிகம் பேசினது கூட இல்ல.

ஆனா அவளுக்கு நான் பெருசா ஒண்ணும் செஞ்சதில்ல... அதனால இந்த நாளுல, அவ என் மேல காட்டின எதிர்பார்ப்பில்லா அன்புக்கு ஒரு சிறு காணிக்கையா இந்த பதிவை சமர்ப்பிக்கறேன்...

பொறுமையா படிச்ச உங்களுக்கும் மிக்க நன்றி

அருகில் இருந்தபோதில்
அறியவில்லையடி உன்நேசம்

பிரியும் நொடிபொழுதில்
புரிந்தும் பயனில்லைஎன்றநிலை !!!

இன்னொருபிறவி உனக்கிருந்தால்
இன்றேவந்துவிடு என்மகளாய்
ஒரேயொருவாய்ப்பு கொடுஎனக்கு
ஒருஜென்ம கடனைதீர்த்திடவே !!!

...

64 பேரு சொல்லி இருக்காக:

Vasagan said...

புவனா
படிக்கும் போது கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை, இன்றைய நாள் உனக்கு எப்படி இருக்கும் என்று புரிகிறது.

பிரதீபா said...

கண்ணில் நீர் நிறைந்து. ஸ்வேகாவின் ஆத்மாவிற்கு அஞ்சலிகள்.

அமைதிச்சாரல் said...

ஆத்மார்த்தமான அஞ்சலிகள் புவனா.. இவ்வளவு பாசம் வெச்சிருந்தவங்க கண்டிப்பா நீங்க விரும்பற ரூபத்துல உங்க வீட்டுக்கு நிச்சயமா வருவாங்க, பாருங்க...

கீறிப்புள்ள!! said...

அக்கா.. கண்களில் நீருடன் எழுதுகிறேன்.. உங்கள் நிலையை உண்மையாகவே புரிந்து கொள்ள முடிகிறது.. என் இரண்டு நெருங்கிய நண்பர்களை ஒரே சமயத்தில் தண்ணிருக்கு இழந்தேன்.. வேறு ஒன்றும் சொல்ல இயலவில்லை..

மகி said...

கதையோன்னு நினைத்து படிக்க ஆரம்பிச்சேன்,கடைசியிலே இப்படி ஆகிடுச்சே புவனா?! :( ஸ்வேகாவின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனைகள்!

Vasagan said...

\ அமைதிச்சாரல் சொன்னது…

இவ்வளவு பாசம் வெச்சிருந்தவங்க கண்டிப்பா நீங்க விரும்பற ரூபத்துல உங்க வீட்டுக்கு நிச்சயமா வருவாங்க, பாருங்க... \

True. கண்டிப்பா இது நடக்கும்.

Chitra said...

அந்த வகைல யோசிச்சு பாத்தா, அவளோட சிரிச்ச முகம் மட்டுமே என் நினைவில் இருக்கணும்னு தான் கடவுள் அப்படி செய்தாரோனு கூட தோணும்


......நீங்களே உங்களை ஆறுதல் படுத்திக் கொண்டு வருவது தெரிகிறது. பதிவை வாசித்ததும், ரொம்ப கஷ்டமாக இருக்குதுங்க.... அவங்க ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.

ப்ரியமுடன் வசந்த் said...

:(

நம் மேல் அதீத அன்பு வைத்துள்ளவர்களின் இழப்பை சரி செய்துகொள்வதுபோல் நமக்கு நாமே ஆறுதல் செய்துகொள்வது கொடுமை..!

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

Sorry for the loss.

May God help her soul RIP.

Porkodi (பொற்கொடி) said...

ulagathula ellarkume indha madhri anubavam onnu irundhe theeranum polarku.. :( -http://wikimaniac.blogspot.com/2006/10/blog-post.html

ஹேமா said...

எப்பவும் கலகலன்னு பதிவு தாற உங்ககிட்டயிருந்து இப்பிடியொரு பதிவு எதிர்பாக்கல.மனசுக்குப் பாரமாயிருக்கு !

viji said...

Dear,
I too beleive that Swetha will definitly come near you.
viji

Sathish A said...

கள்ளங்கபடம் இல்லாத ஒரு அன்பு, ஆழ்ந்த அனுதாபங்கள்...

ஸ்ரீராம். said...

ரொம்ப நெகிழ்ச்சியாய் இருந்தது. கண் கலங்க வச்சிட்டீங்க. கவிதையிலும் ஆழம் தெரிகிறது.

Charles said...

வார்த்தைகள் வரவில்லை.... நமது அன்பிற்கு உரியவர்கள் திடீரென இல்லை என்ற நினைப்பே வலி தரக்கூடியது. என் வாழ்விலும் ஒரு நொடியில் வாழ்கையை புரட்டிய வலிகள் நினைவுக்கு வந்தன.. உங்கள் ஸ்வேகாவின் ஆத்மாவிற்கு அஞ்சலிகள்...( ஸ்வேகா எப்போதும் உங்கள் அருகில் இருக்கிறார் என்ற நம்பிகையுடன்...)

vanathy said...

இழப்பின் வலி எனக்கும் புரியுது, தங்ஸ். என் நெருங்கிய உறவினர் பெண் இறந்தபோது நானும் மிகவும் கலங்கிப் போனேன்.

வெங்கட் நாகராஜ் said...

நெகிழ்வான பதிவு! ஸ்வேகாவின் ஆன்மா சாந்தியடைய என்னுடைய பிரார்த்தனைகள்.

sulthanonline said...

ஸ்வேகா மீது நீங்கள் வைத்த அன்பை உங்கள் எழுத்துக்களில் எனது கண்ணீரின் மூலம் அரிந்துகொண்டேன். :( நிச்சயம் உங்களிடம் வருவார்கள்.

raji said...

நீங்கள் மன வருத்தம் அடைவதை உங்கள் ஸ்வேகா விரும்ப மாட்டார்.
ஸ்வேகா இப்பொழுது அன்பின் வடிவில் இருக்கிறார்.
உங்கள் அன்பை ஸ்வேகா போன்று இறக்கும் தறுவாயில் இருப்பவர்களுக்கும்
இன்னும் பலவிதங்களில் கஷ்டப்படுபவர்களுக்கும் அளியுங்கள்.
உங்கள் ஸ்வேகா உங்களிடமிருந்து பௌதீக வடிவில்தான் நீங்கியுள்ளார்.ஆன்ம வடிவில் அல்ல.

ஆறுதல்கள்

vinu said...

here it's morning 7 i abt to leave to office; enakku vaalthu solli irrukeengannu ingey vanthu paarthaa ippudi alavachchup poteengaley akka!

there is nothing can compare with some one special in our life at all time!

my hearty tears!

don't worry akkaa! me be there! all time @your door steps!

luv U!

To sweaga: Hi sweaga, hope you doing great there in heaven! i peg you purdon! i belive; you already read this post/article. there is nothing more important, than we spent time with/to whom very special in our life! so hope you will back soon, in my akkaa's life! as delay as you, i'll take the place!

-vinu

எல் கே said...

முதல் முறையா உன் பதிவை படிச்சிட்டு கண்கலங்கினேன் இன்று

அனாமிகா துவாரகன் said...

டுபாய், விசா என்று எல்லாம் படிக்கும் போதே கொஞ்சம் உங்க கதைன்னு தான் தோனிச்சு. கடைசியில் இப்படி வரும் என்று நினைக்கவில்லை. கன்சருடன் போராடும் பெண்ணிற்கான பிறந்த நாள் வாழ்த்தாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வர! முடியவில்லை. படிச்சு நாலைஞ்சு மணி நேரமாச்சு. இன்னும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

சி.பி.செந்தில்குமார் said...

>>நமக்கு நடக்கற ஒரு ஒரு விசயத்துக்கும் ஏதோ காரணம் இருக்குனு நம்பறவ நான்

குட்

சி.பி.செந்தில்குமார் said...

கலகலப்பா படிச்சுட்டு வந்து கலங்க வெச்சுட்டீங்களே..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஹ்ம். :(
அன்பில் கரைந்த நினைவுகளின் காணிக்கை .

திவா said...

மனதை தொட்ட பதிவு!
அட ஏடிஏம் க்கு இப்படி எழுதக்கூட தெரியுமா?

இராஜராஜேஸ்வரி said...

சினிமாவில் இது போல் காட்சிகள் வந்த போதில் கேலி செய்து சிரித்தவள் தான் நானும், அன்று பேச்சற்று நின்றேன் //
நிஜவாழ்க்கை சினிமாவைவிட நம்பமுடியாததுதான்.

சௌந்தர் said...

என்ன அழுவ வைச்சுடிங்க புவனா உங்க மேல இன்னும் மரியாதையை வருது

Lakshmi said...

mமதை கலங்க வைத்தபதிவு. அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்.உங்க இருவர் அன்பையும் அழகா வெளிப்படுத்தி இருக்கீங்க. இதைவிட அற்புதமா எப்படி அஞ்சலி செய்திருக்கமுடியும்?.

Mythili said...

arputhamana pathivu, ungal anbin malar meendum malarum Thai Magal uravaga. All the best.

Mythili

தக்குடு said...

//அவ எப்பவும் உன்னோட இருப்பா//

Mythili said //ungal anbin malar meendum malarum Thai Magal uravaga//

With tears & hope,
Thakkudu

Kavitha said...

May her soul rest in peace. Indha post neenga avalukku seidha miga periya anjali.

sawme said...

புரியாத பிரியம் பிரியும் போது புரியும்.... :( take care....appaavii...

சுசி said...

புவனா.. வார்த்தையே வரலப்பா..

மெய்சிலிர்த்து, நெஞ்சு அடைச்சுப் போய் உக்காந்திருக்கேன்..

கண்டிப்பா உங்க பந்தம் தொடரும் புவனா.. ஸ்வேகா உங்க கூடவே இருக்காப்பா..

தப்பா எடுத்துக்காதிங்க.. பஸ்ல ஷேர் பண்ணிக்கறேன்..

கோவை2தில்லி said...

மனதை கலங்க வைத்த பதிவு புவனா. ஸ்வேகாவின் ஆத்மாவுக்கு அஞ்சலிகள். நிச்சயமா ஸ்வேகா நீங்கள் எதிர்பார்க்கும் ரூபத்தில் உங்களிடம் வந்து சேருவார்.

ஹுஸைனம்மா said...

வழக்கமான கதையாக நினைத்துப் படிக்கத் துவங்கினேன். எதிர்பார்க்கவேயில்லை. துவங்கிய புதிய உறவு ஒருபுறமும், முடியப் போகும் பழகிய நட்பு மறுபுறமென உங்கள் நிலையை உணர முடிகிறது. அந்தத் தந்தையின் நிலையோ....

பத்மநாபன் said...

இது கதை என்றாலே மனம் கலங்கும் ...உண்மை நிகழ்வை தாங்க மனம் பட்ட பாடு புரிந்தது.... பகிரும் போது, இன்பம் இரட்டிப்பாகும் துக்கம் பாதியாக குறையும் எனும் சொல்மொழிக்கு ஏற்ப விரைவில் அந்த இழப்பின் சோகம் மறைந்து ...அவரின் அன்பான நினைவுகள் என்றும் இருந்திட ஆறுதல்கள் ....

asiya omar said...

என்ன எழுத,மனசு தாங்கலை புவனா.

கோவை ஆவி said...

Bhuvana,
I really started reading this, thinking this might be a story. Then slowly I got acquainted into that so much as if I had a friend like her. But when I read the end I was broken. Her thoughts were all around us, though we never met her.

We pray for her soul to rest in peace.

ARUL KUMAR said...

ரொம்ப உருக்கமாக இருந்தது . முதலில் எதோ ஒரு சிறு கதை தான் என நினைத்தேன். கடைசயில் அது உண்மை என்று தெரிய வந்த போது சோகம் மனதை அடைத்தது என்னவோ உண்மை.

//நேத்தைக்கி அவ அஸ்திய கரைக்க ஆத்துக்கு உங்க வீட்டு வழில தான் போனோம்... இந்த அஸ்திக்கு உயிர் இருந்தா அவ அக்கா வீட்டுக்கு போகாம இந்த ரோடை கிராஸ் பண்ண விடமாட்டா என் பொண்ணுனு, //

இந்த வரிகளை படித்த போது உள்ளம் உருகி போனது. உங்கள் சோகம் புரிகிறது.

priya.r said...

இது நடந்து ஒரு சில வருடங்கள் ஆகி இருக்குமா
இன்னும் இந்த நினைவை வைத்து இருக்கும் உனது மென்மையான மனது
எங்களை மேலும் நெகிழ்ச்சி குள்ளாக்குகிறது புவனா

ஸ்ரீ கண்ணன் உனது வேண்டுதலை நிறைவேற்ற நாங்களும் பிராத்தித்து
கொள்கிறோம் .

அப்பாதுரை said...

எப்படித் தொடப்படுகிறோம் என்பது உடலுக்குத் தெரியும்; எப்படியெல்லாம் தொடப்படுகிறோம் என்பது உணர்வுக்கு மட்டுமே தெரியும்.

உங்கள் நட்பு உங்களை தொட்டிருப்பது புரிகிறது. அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

விக்னேஷ்வரி said...

:(

இன்னொருபிறவி உனக்கிருந்தால்
இன்றேவந்துவிடு என்மகளாய்
ஒரேயொருவாய்ப்பு கொடுஎனக்கு
ஒருஜென்ம கடனைதீர்த்திடவே !!! //
கண்டிப்பா உங்களுக்கே பொண்ணா வந்து பொறப்பாங்க. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

Matangi Mawley said...

sometimes, a few things makes us realize that life's short and everyone around you matter! made me think of a few incidents that had made me realize this fact over and over again... a favourite teacher's 1st class- which i bunked- whose class i could never attend again- since she passed away the next day in an accident!

the post really moved me...

சே.குமார் said...

படிக்கும் போது கண்ணீர் வருவதை தடுக்க முடியவில்லை.
ஸ்வேகாவின் ஆத்மாவிற்கு அஞ்சலிகள்.

கமலேஷ் said...

யாரையும் கலங்கடிக்கும் ஒரு நிகழ்வு..
அந்த புனித ஆத்மா இந்த வரிகளில் அமைதி அடையட்டும்.

ரங்கன் said...

எப்போ ஒரு மனுஷன் தன்னை நேசிக்கறவங்க மனசுல இருந்து மறைஞ்சு போறானோ அப்போதான் அது நிஜமான மரணம்..

எங்கையோ கேட்ட வரி இது..!!

இப்போ சொல்லுங்க..ஸ்வேகா இறந்தா போய்ட்டாங்க..?!

ம்ம்??

:)

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - தேங்க்ஸ்ங்க அண்ணா...

@ பிரதீபா - ரெம்ப நன்றி தீபா

@ அமைதிச்சாரல் - உங்கள் ஆசி பலிக்கட்டும்...நன்றிங்க அக்கா

@ கீறிப்புள்ள!! - தேங்க்ஸ் பிரவீன்

@ மகி - தேங்க்ஸ் மகி

@ Vasagan - நன்றி மீண்டும்

@ Chitra - கரெக்ட் சித்ரா... நன்றிங்க

@ ப்ரியமுடன் வசந்த் - சரியா சொன்னீங்க... நன்றிங்க வசந்த்

@ அருள் சேனாபதி (பவானி நம்பி) - தேங்க்ஸ்ங்க அருள்

@ Porkodi (பொற்கொடி) - you're right sis... what to do... :(... (read your post from 2006... really sad one... he could've been a national star if he was alive... great loss of our country too... I assume great souls are not allowed to live longer...thanks for sharing)

@ ஹேமா - அந்த யோசனைல தான் இந்த பதிவு போட வேண்டாம்னு நினைச்சேங்க... ஆனா எழுதினா கொஞ்சம் பெட்டரா இருக்கும்னு தான் போட்டேன்... நன்றி வாசித்ததற்கு

@ viji - thanks a lot Viji

@ Sathish A - ஆமாங்க சதீஷ்... அபூர்வம் அது போல்... நன்றிங்க

@ ஸ்ரீராம். - நன்றிங்க ஸ்ரீராம் அண்ணா

@ Charles - ரெம்ப நன்றிங்க சார்லஸ்

@ vanathy - கொடுமை தான் வாணி... நன்றிப்பா

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க வெங்கட்

@ sulthanonline - ரெம்ப நன்றிங்க சுல்தான்

@ raji - ரெம்ப நன்றிங்க ராஜி

@ vinu - Thanks a lot Vinu... that is very kind of you... great to know so many people are here to respect and console by feelings... thanks again brother

@ எல் கே - தேங்க்ஸ் கார்த்திக்

@ அனாமிகா - I think you're sensitive as me... what to do sis? Nothing can stop fate..;(... thank you ...

@ சி.பி.செந்தில்குமார் - நன்றிங்க

@ முத்துலெட்சுமி/muthuletchumi - நன்றிங்க முத்துலெட்சுமி

@ திவா - நன்றிங்க திவாண்ணா

@ இராஜராஜேஸ்வரி - சரியா சொன்னீங்கப்பா... நன்றி

@ சௌந்தர் - ரெம்ப நன்றிங்க சௌந்தர்

@ Lakshmi - நன்றிங்க லக்ஷ்மிம்மா...

@ Mythili - தேங்க்ஸ் மைதிலி... கேக்கவே நல்லா இருக்குங்க

@ தக்குடு - மெனி தேங்க்ஸ் பிரதர்

@ sawme - தேங்க்ஸ்ங்க..

@ சுசி - ரெம்ப தேங்க்ஸ் சுசி... (I was trying to find you in buzz even before, can't find pa... if you don't mind to add me, its in my real name...thanks Susi)

@ கோவை2தில்லி - thanks a lot ஆதி

@ ஹுஸைனம்மா - அந்த தந்தையின் நிலை தான் அக்கா ரெம்பவும் கலங்க செய்யும் எப்போது நினைவு வந்தாலும்... அவள் தங்கையை பற்றியும் நினைக்க வருத்தமாய் இருக்கும்... என்ன செய்ய? தேங்க்ஸ் அக்கா

@ பத்மநாபன் - //துக்கம் பாதியாக குறையும்// அந்த எண்ணத்தில் தான் தயக்கத்துடன் பகிர்ந்தேன்... நன்றிங்க அண்ணா

@ asiya omar - தேங்க்ஸ் ஆசியா

@ கோவை ஆவி - ரெம்ப நன்றிங்க ஆனந்த்

@ ARUL KUMAR - ரெம்ப நன்றிங்க அருள் குமார்

@ priya.r - ஆமாம் அக்கா, சில வருடங்கள் ஆச்சு... ஆனாலும் நீங்கா இடம் பெற்று விட்டாள் இந்த தோழி... தேங்க்ஸ் அக்கா உங்கள் பிரார்த்தனைகளுக்கு

@ அப்பாதுரை - ரெம்ப நன்றிங்க

@ விக்னேஷ்வரி - ரெம்ப நன்றிங்க விக்னேஸ்வரி

@ Matangi Mawley - well said ma... life's short and lets make it sweet... this is what I think too all the time... and I'm trying to make others life pleasant too by being myself... thanks Matangi

@ சே.குமார் - ரெம்ப நன்றிங்க குமார்

@ கமலேஷ் - நன்றிங்க கமலேஷ்

@ ரங்கன் - முதல் வருகைக்கு நன்றிங்க ரங்கன். அழகா ரெண்டே வரில சொல்லிட்டீங்க... இல்ல அவ சாகல, இன்னும் வாழ்ந்துட்டு தான் இருக்கா எல்லோர் நினைவுகளிலும்... மிக்க நன்றி..:)

Ramki said...

My Heart Felt Prayers for Swega and May her soul rest in peace. My feelings to you also

Anonymous said...

hi, i never commented on any article, i started reading ur articles .....this is really touching..u have made my eyes wet...may ur wish come true.

மனம் திறந்து... (மதி) said...

உலுக்குகிறது இந்தப் பதிவு நம்மை! உண்மை உறைக்கும்போது நம் உயிர்மை புரட்டிப் போடப் படுகிறது! அப்பாவி புவனா மீண்டு வரவும், ஸ்வேகாவின் ஆத்மா சாந்தியடையவும் நெஞ்சு நெகிழ வேண்டுகிறேன்!

Malar Gandhi said...

May the soul rest in peace. I lost conscious for two days, when a significant' soul mate passed away...never had a chance to say good bye. Later after several years, convinced myself...that I could only recall the happy face...not the heartbreaking condition! time is the only medicine for fate.

வல்லிசிம்ஹன் said...

புவனா, உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவை நான் எதிர்பார்க்கவில்லை.
என்ன ஒரு சோகம்.
ஸ்வேகா எனும் உன்னத ஆத்மாவுக்கும் அவளை இழந்த உங்களுக்கும் என் அநுதாபங்கள்.
அவள் மீண்டும் உங்களிடம் வந்துவிடுவாள்.

மனம் திறந்து... (மதி) said...

அது சரி ...இங்கே ஐம்பது பேருக்கும் மேல வந்து பதில் சொல்லியிருக்காங்களே உங்க சோகத்துக்கு ...அவங்க தானாப் பேசினாங்கன்னு நினைக்கறீங்களா? அதான் இல்லே! அவங்க எல்லார் மூலமாவும் உங்களோட பேசினது ஸ்வேகாதானே! இதைக் கூடப் புரிஞ்சுக்காம , ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா நன்றியும் , பதிலும் சொல்லிட்டிருக்கீங்களே, நீங்க உண்மையிலேயே அப்பாவிதாங்க! ஹூம் ...போங்க ...போய் "ஜி .ஒ .கா 14"ஐப் பழுதுபார்த்து பப்ளிஷ் பண்ணுங்க... போங்க ! (இதுவும் ஸ்வேகா சொன்னது தான்!)

மோகன்ஜி said...

மனசு கனமாகி விட்டது... அவள் இன்னும் சாகவில்லை. மனதினுள் வாழ்ந்து கொண்டு தான் இருப்பாள். நாம் மனவெளி மனிதர்கள் தானே?

A and A said...

Very heartfelt post! I have a similar experience with one of my friend. May the soul rest in peace!

அப்பாவி தங்கமணி said...

@ Ramki - நன்றிங்க ராம்கி

@ பெயரில்லா - Thanks a lot

@ மனம் திறந்து... (மதி) - ரெம்ப நன்றிங்க மதி

@ Malar Gandhi - Thanks Malar. I console myself the same way too... thanks

@ வல்லிசிம்ஹன் - ரெம்ப நன்றிங்க வல்லிம்மா...

@ மனம் திறந்து... (மதி) - :)... நன்றிங்க மதி

@ மோகன்ஜி - ரெம்ப நன்றிங்க

@ A and A - Thank you

நிஜாம் என் பெயர் said...

u ve improved a lot in expressing ur feelings in written format, i felt it from 1st paragraph itself, this post made a impact in me, since i read the post sterday n writing feedback this day,couldnt forget.

OKKKKKAAAAAYY All is well

உங்க ஸ்டைல சொல்லனும்னா
மைன்ட் வாய்ஸ் - பீல் பண்ணுனது போதும், போய் வேலைய பாரு.

அப்பாவி தங்கமணி said...

@ நிஜாம் என் பெயர் - Thanks a lot Brother..:)

Balaji saravana said...

அந்த அன்பு தேவதை எப்பவும் உங்களுடனேயே இருக்க இறைவன் அருள் புரியட்டும். இந்த பதிவ எழுதும் போது இருந்த உங்க சூழ்நிலைய நினைச்சாலே சோகம் பீறிடுகிறது அக்கா!

அப்பாவி தங்கமணி said...

@ Balaji saravana - Thanks a lot Balaji

ANaND said...

நல்லவங்கள சாமி சீக்கிரம் கூட்டிட்டு போய்டும் னு அம்மா சொன்னாங்க ...மறுபடியும் ஸ்வேகா வருவாங்க

அப்பாவி தங்கமணி said...

@ Anand - Thank you

Anonymous said...

ஸ்வேகா முதலில். பின்னர் அனா (அனாமிகா). கான்சர் ஏன் தான் இந்த பெண்களை கொல்கிறதோ.

Post a Comment