Monday, March 28, 2011

பாடம் படிக்கும் நேரம் இது... சைலன்ஸ்...:)


"இன்னும் என்ன தூக்கம் இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா? எந்திரி... ஒழுங்கா படிக்கற வேலைய பாரு"

"ஏய், என்ன டிவி இப்ப? படிக்கற வேலை இல்லையா? இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"

"குரூப் ஸ்டடினு ஆட்டம் போடற வேலை எல்லாம் வேண்டாம்... ஒழுங்கா இங்கயே படி.  இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"

"என்ன எந்த நேரமும் போன்.. படிக்கற எண்ணம் இருக்கா? இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"

"பக்கத்து வீட்டு அக்கா கல்யாணத்துக்கா... ஒண்ணும் வேண்டாம்? நாங்க போய்க்கறோம்... நீ படி.. இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"

"என்னது ஸ்கூட்டி வேணுமா... வாங்கலாம் வாங்கலாம்... மொதல்ல படி.. இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"

"இப்படி கொறிச்சா படிக்க எங்க தெம்பு இருக்கும்... ஒழுங்கா கை நெறைய எடுத்து சாப்பிடு... இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"

"ரஜினி படமா? எங்கயும் ஓடிடாது... அப்புறம் பாக்கலாம்.. இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"

"கிரிக்கட்டா? சச்சின் ஆடி ரன் எடுத்தா உனக்கா மார்க் போடுவாங்க.. .எல்லாம் அப்புறம்... மொதல்ல படி... இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"

என்ன இதெல்லாம்னு யோசிக்கறீங்களா? வீட்டுல 10th / +2 படிக்கற புண்ணியாத்மா யாராச்சும் இருந்தா கேட்டு பாருங்க... அவங்க காதுல தினமும் விழற டயலாக்ஸ் தான் இதெல்லாம்

கொஞ்சம் விட்டா "என்னது பல்லு விளக்கணுமா... இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா? எல்லாம் பரீட்சை முடிஞ்சு பண்ணிக்கலாம்... "னு சொல்லிடுவாங்க போல... ஸ்ஸ்ஸ்பப்பா....

ஒரு கட்டத்துல நடு தூக்கத்துல எழுப்பினாலும் "இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?" னு நமக்கு நாமே சொல்ற நிலைமை ஆகி போய்டும்...:)

என்னமோ நாட்டமை தீர்ப்பு சொன்ன மாதிரி "ஆரும் இவ கூட பேசக்கூடாது பழகக்கூடாது, வூட்டுல இப்படி ஒரு ஜென்மம் இருக்கறதே மறந்துரோணும்... மீறினா உன்னையும் சேத்து ஸ்டடி ரூம்ல போட்டு பூட்டிருவோம்"ங்கற ரேஞ்சுக்கு நம்ம உடன் பிறப்புகள வேற மெரட்டி வெச்சுருப்பாங்க...

அது தான் பெரிய தண்டனை... பாசமலரை வம்பு பண்ணாம நமக்கு ஒரு நாள் விடியுமா... என்னமோ உள்நாட்டு சதி செய்யற தீவிரவாதிகள் ரேஞ்சுக்கு பிளான் பண்ணி அப்பவும் உடன்பிறப்புகள் கூட அலப்பறை பண்ணுறது தனி ரீல்...:)

இதெல்லாம் கூட பரவால்லைங்க... இன்னும் நம்மள கடுப்பேத்தறது வெளிய இருக்கற சோசியல் சர்விஸ் மக்கள் தான்...இப்படி தான் ஒரு நாள், நான் 10த் படிக்கறப்ப....

(அப்பாவியின் வாழ்க்கை ஏட்டில் சில வருடங்கள் முன்பு ஒரு நாள்.... கொசுவத்தி அப்படியே வளையம் வளையமா சுத்தி டைம் ட்ராவல் பண்ண உங்கள கூட்டிட்டு போகுது...:)

"பால்காரர் பெல் சத்தம் கேக்குது... நான் மாவு கையோட இருக்கேன், கொஞ்சம் பால் வாங்குடி" னாங்க அம்மா

நானும் நல்ல பொண்ணா "சரிம்மா"னு போனேன்

"ஒரு லிட்டர்ங்க அண்ணா" னு நான் சொல்ல

"சரி பாப்பா... அது சரி... இந்த வருஷம் நீ கவர்மன்ட் பரீட்சை எழுதற இல்ல... நல்லா படிம்மா" ஒரு ப்ரீ அட்வைஸ் குடுத்தாரு பால்கார அண்ணா

"எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை அட்வைஸ்"னு சொல்ல வாய் வரைக்கும் வந்தது...

பொறுத்தார் பூமி ஆள்வார்னு படிச்சது ஞாபகம் வந்து, பிற்காலத்துல நம்ம சேவை இந்த நாட்டுக்கு தேவைனு மக்கள் எல்லாம் கம்பல் பண்ணினா அரசியல் பிரவேசம் பண்ண வேண்டிய கட்டாயம் வந்தா என்ன செய்யறதுனு மக்கள் சேவைக்காக என் கோபத்தை கட்டுப்படுத்திக்கிட்டேன்.... :)

("அட்வைஸ்" ஆங்கில வார்த்தைனு யாருப்பா அங்க சவுண்ட் குடுக்கறது... சரி சரி... அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா....ஹி ஹி)

இன்னொரு நாள் பொரி விக்கற ஆயா வந்தது...

"பொரிக்காரம்மா வந்துருக்கு... கொஞ்சம் அரிசி டின்னுல இருக்கற படி (ஒரு விதமான அளவை) எடுத்துட்டு வா சாமி" என பாட்டி கேட்க

"படிப்பில் இருந்து எனக்கு விடுதலை அளித்த 'படி'யே நீ வாழ்க"னு மனசுக்குள்ள நெனச்சுட்டு ஸ்டெடி ரூம்ல இருந்து ஆர்வமா வந்தேன்...:)

சாதாரணமா யாராச்சும் இப்படி எதுனா வேலை சொன்னா "வேற வேலை இல்ல போங்க"னு எஸ்கேப் ஆவேன்... ஆனா இப்போ யாரும் கூப்ட்டா தேவலைனு நிலைமை... ஹ்ம்ம்.... இதான் "கரையும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்"ங்கறது போல...:)

நான் படிய எங்க பாட்டிகிட்ட குடுத்துட்டு திண்ணைல உக்காரவும், பொரி விக்கற ஆயா என்னை பாத்து "சரி கண்ணு... நீ போய் படி... கவர்மண்ட் பரீட்சை அல்ல இந்த வருஷம்"னு, என்னை என்னமோ தூக்கு தண்டனை கைதிய பாக்கற மாதிரி பாவமா பாத்துச்சு

எனக்கு செம கடுப்பு ஆய்டுச்சு... "உனக்கெப்படி ஆயா நான் கவர்மண்ட் பரீட்சை எழுதறேன்னு தெரியும்"னு பல்ல கடிச்சுட்டு கேட்டேன்

"அது கண்ணு...அம்மா பொரி கொஞ்சம் கூட போட சொல்லிச்சு... புள்ள ராத்திரில படிக்கைல கொறிக்க எதுனா வேணும்னா ஆகும்னு... அப்பத்தான் சொன்னாக... சரி கண்ணு நீ போய் படி" னுச்சு ஆயா மறுபடியும்

எனக்கு வந்த ஆத்தரத்துல, பொரி மூட்டைய ஒத்தை விரல்ல சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு தூக்கி அடிக்கணும்னு தோணுச்சு.. again ..... yes yes ..... அதே தான்... "பொறுத்தார் பூமி ஆள்வார்" தான் என் கைய கட்டி போட்டுடுச்சு...

இல்லேனா அன்னிக்கி அங்க ஒரு ரணகளம் ஆகி இருக்கும் ஐ சே....:)

இப்படி நண்டு சிண்டுனு பெருசு சிறுசுனு வயசு வித்தியாசம் இல்லாம, வழில போற வர்றவங்க எல்லாம் "என்ன பாப்பா... இந்த வருஷம் கவுர்மன்ட் பரிட்சையா நல்ல படிக்கோணும் என்ன" அப்படின்னு கடுப்பேத்திட்டு போவாங்க... அப்படியே கேப்டன் ரேஞ்சுக்கு கண்ணு சிவக்கும் நமக்கு கோபத்துல

ஹ்ம்ம்.... எல்லா கலவரமும் முடிஞ்சு.... பரீட்சை கடைசி நாள்... வீட்டுக்கு வந்ததும் புக் எல்லாம் தூக்கி கடாசிட்டு "இனி ரெண்டு மாசத்துக்கு டிவி ரிமோட் எனக்கு தான்"னு பந்தாவா டீபாய்ல கால தூக்கி வெச்சுட்டு சவுண்ட் விட்ட நாள்...  ஆஹா... ஆஹா... "என்ன சுகம் என்ன சுகம்"  (பின்னால் வரப்போகும் விபரீதத்தை அறியாமல்...:)

உடனே எங்க மம்மி வந்து "சவுண்ட் விட்டது போதும்... ரெண்டு மாசம் கழுத மேய்க்கற எண்ணமெல்லாம் வேண்டாம்... போய் கம்ப்யூட்டர் க்ளாஸ் பத்தி விசாரிச்சுட்டு வா" னு சொல்ற வரைக்கும் எல்லாம் நல்லா தான் போச்சு...ஹ்ம்ம்...

இதெல்லாம் இப்ப யோசிச்சு பாத்தா காமெடியா தோணினாலும் அப்ப எவ்ளோ எரிச்சலா இருந்ததுன்னு உணர முடியுது... "மூத்தோர் சொல்லும் முதி நெல்லிக்காயும்..." எல்லாம் சரிதான்னாலும், ரெம்பவும் பிள்ளைகளை இப்படி படுத்தறது கூட தப்போன்னு எனக்கு தோணுது

10th ல இவ்ளோ ரகளை பண்ணின எங்க மம்மி, +2 ல என்ன நினைச்சாங்களோ  "நீயே படி" னு விட்டுட்டாங்க... உண்மைல அப்படி விட்டப்ப தான் நானே பொறுப்பு உணர்ந்து நல்லா படிச்சேன்... நல்ல மார்க் கூட +2 ல தான் வந்தது

இது எல்லாருக்கும் பொருந்தும்னு நான் சொல்ல வரலை... சில பிள்ளைகள் "சொன்னா தான் படிப்பேன்"ங்கற வகையாவும் இருக்கலாம்... அவங்களுக்கு கொஞ்சம் உந்துதல் தேவை தான்

ஆனா பொதுவா, எதுவும் கட்டாயமா திணிக்கப்படறப்ப அதுல முழு ஈடுபாடு இல்லாம போய்டும்... கடமைக்கு செய்யற எண்ணம் தான் வரும்ங்கறது என்னோட கருத்து... அட்லீஸ்ட் என்னை பொறுத்த வரை...

இன்னும் ஒரு விஷயம் "ரெம்ப நேரம் படிக்கற புள்ளை தான் நல்ல மார்க் வாங்கும்" ங்கறது "வெள்ளை காக்கா பறக்குது" அளவுக்கு தான் உண்மை

மைண்ட்வாய்ஸ் - இப்படியும் சொல்லலாம் "அப்பாவி சூப்பரா இட்லி பண்ணினா" னு சொல்ற அளவுக்கு உண்மைன்னு

அப்பாவி - ஏய் மைண்ட்வாய்ஸ், சீரியஸா பேசிட்டு இருக்கறப்ப குறுக்க குறுக்க சின்னபுள்ளதனமா... கிர்ர்ரர்ர்ர்....

அத விடுங்க, எவ்ளோ நேரம் படிக்கராங்கங்கர்து விஷயம் இல்லிங்க... முழு ஈடுபாடோட ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் படிச்சாலும் எதேஷ்டம் தான்

எப்பவும் படிப்புனு இருக்கற பிள்ளைகள விட "கொஞ்சம் டிவி, கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் விளையாட்டு, கொஞ்சம் பிரெண்ட்ஸ்... இதெல்லாம் விட கொஞ்சம் அதிகமா படிப்பு"னு இருக்கற பிள்ளைகள் இன்னும் பிரகாசிக்கறாங்கனு நான் மட்டும் சொல்லலைங்க, புள்ளிவிவரங்கள்  கூடசொல்லுது

பெற்றோர்கள் முக்கியமா பிள்ளைகள மத்த பிள்ளைகளோட ஒப்புமைப்படுத்தி பேசறது ரெம்பவும் தப்புங்க. அது அவங்களோட தன்னம்பிக்கைய குலைக்க வாய்ப்பு இருக்கு

மார்க் குறைந்தாலும் improvement எழுதி சரி பண்ணிக்கலாம்... ஆனா பதின்ம வயதுல தன்னம்பிக்கை போய்ட்டா அது பிற்கால வாழ்கையையும் பாதிக்கும்

பிள்ளைகளுக்கு பரீட்சை டிப்ஸ் சொல்ல நெறைய பேரு இருக்காங்க.. என்னோட பார்வைல, ஒரு மாணவியா இருந்தப்ப எனக்கு தோணின விஷயங்கள் வெச்சு பெற்றோருக்கு ஒரு மெசேஜ் எழுதணும்னு தோணுச்சு அவ்ளோ தான்...

மைண்ட்வாய்ஸ் - "என்ன ஆச்சு... திடீர்னு அட்வைஸ் அம்புஜமா மாறிட்ட நீ?"

அப்பாவி - மைண்ட்வாய்ஸ் ஒரு விஷயம் சொல்லட்டுமா.... அட்வைஸ் பண்றது ரெம்ப சுலபம், அதை பாலோ பண்றது நெம்ப கஷ்டம்... அதான் for a change, சுலபமான வேலை மட்டும் செய்யலாம்னு வந்துட்டேன்....ஹி ஹி....

ஜோக்ஸ் அபார்ட்... பொறுமையா படிச்சதுக்கு நன்றிங்க.... :)
 
பின் குறிப்பு:-
priya.r சொன்னது… "இதோ பாரு அப்பாவி ;நீ பதிவு ஜோஸ்யர் கிட்டே நிறைய கமெண்ட்ஸ் வரதுக்கு ஐடியா கேளு ;வேண்டாங்கலே... அதுக்காக இந்த டிராமா எல்லாம் ரெம்ப ஓவர்ப்பா... ஒரு வாரம் ஒரு நாள் பின்னாடி போடுவே ! அதை கேட்டு ஒரு இருவது கமெண்ட்ஸ்... ஒரு வாரம் ஒரு நாள் முன்னாடி போடுவே ! அதை ஏன்னு கேட்டு ஒரு பத்து கமெண்ட்ஸ்... இதெல்லாம் முடிஞ்சு ஒரு நாள் பதிவே போடாமே போட்டாச்சுன்னு சொல்ல போறே"

போன வாரம் எந்த நேரத்துல இந்த ப்ரியா அக்கா இப்படி சொன்னாங்களோ... இந்த வாரம் நிஜமாவே "ஜில்லுனு ஒரு காதல்" எழுத முடியலைங்க... (அவ்வவ்வ்வ்வ்.....) மன்னிக்கணும்... ஆனா நான் எந்த ஜோசியரையும் கேட்டு செய்யல... நெஜமாவே எழுத முடியல அக்கோய்...

அடுத்த வாரம் நேரத்தோட போட்டுடறேன்... இந்த வாரம் எல்லாரும் ஜாலியா நிம்மதியா என்ஜாய்...:)

கொஞ்ச நாள் முன்னாடி எழுதி டிராப்ட்ல இருந்த இந்த பதிவை இப்போதைக்கு "ஆறுதல் பரிசு" மாதிரி வெச்சுக்கோங்க... நன்றி...:)

67 பேரு சொல்லி இருக்காக:

எல் கே said...

appurama vanthu padikkaren

அனாமிகா துவாரகன் said...

கார்த்தி சாஆஆஆஆஆஆஆஆஆஆஆஅர்,
ஏன் ஏன்.. இவங்க பதிவு போட்டு 5 நிமிசம் கூட ஆகல. அதுக்குள்ள துண்டைப் போட்டுப் போறது நல்லா இல்ல.

பதிவ படிக்காம கொமன்ட் போடறது இஸ் நாட் ஆக்சப்ட்டட் யூ நோ.

(நான் பதிவ படிச்சுட்டு போடறேனா இல்லையான்னு உங்களுக்குத் தெரியவா போகுது என்ற தைரியத்தில், பதிவ படிச்சுட்டு போட்ட என்னோட பின்னூட்டமே செல்லுபடி ஆகும் என்று சொல்லிக்கொண்டு வடையை எடுத்துட்டு போறேன். ஹா ஹா ஹா. )

முனியாண்டி said...

Nice one.

எல் கே said...

அனாமிகா அது ஒண்ணுமில்லை. நான் பதிவு போட்டவுடன் அப்பாவியோட பதிவும் வந்துச்சா சரின்னு துண்டு போட்டேன். வேணும்னா வடை நீ வாங்கிக்கோ. நோ ப்ராப்ளம். ஒரு உண்மை நீ பத்தாவது ஒழுங்காப் படிக்கலை .

//
மைண்ட்வாய்ஸ் - இப்படியும் சொல்லலாம் "அப்பாவி சூப்பரா இட்லி பண்ணினா" னு சொல்ற அளவுக்கு உண்மைன்னு //
மைன்ட் வாய்ஸ் வாழ்க வாழ்க வாழ்க

GEETHA ACHAL said...

//"என்னது பல்லு விளக்கணுமா... இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா? எல்லாம் பரீட்சை முடிஞ்சு பண்ணிக்கலாம்... "னு சொல்லிடுவாங்க போல... ஸ்ஸ்ஸ்பப்பா....//ரொம்ப ஒவராக இல்ல...

எல்லொருமே கண்டிப்பாக இதனை கடந்து தான் வந்து இருப்பாங்க...

sulthanonline said...

//10th ல இவ்ளோ ரகளை பண்ணின எங்க மம்மி, +2 ல என்ன நினைச்சாங்களோ "நீயே படி" னு விட்டுட்டாங்க... உண்மைல அப்படி விட்டப்ப தான் நானே பொறுப்பு உணர்ந்து நல்லா படிச்சேன்... நல்ல மார்க் கூட +2 ல தான் வந்தது.//

இத நாங்க நம்பனும்..! சும்மா காமெடி பண்ணாதிங்க மேடம்.

Madhavan Srinivasagopalan said...

10த் = பத்த்
மொதல்ல அர்த்தம் புரியலை..
அப்புறம் புரிஞ்சது 'tenth' னு

இராஜராஜேஸ்வரி said...

இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"//
Rommba koddumai.

asiya omar said...

//மார்க் குறைந்தாலும் improvement எழுதி சரி பண்ணிக்கலாம்... ஆனா பதின்ம வயதுல தன்னம்பிக்கை போய்ட்டா அது பிற்கால வாழ்கையையும் பாதிக்கும் //

அருமையாக சொன்னீங்க அப்பாவி.good post.

Chitra said...

பெற்றோர்கள் முக்கியமா பிள்ளைகள மத்த பிள்ளைகளோட ஒப்புமைப்படுத்தி பேசறது ரெம்பவும் தப்புங்க. அது அவங்களோட தன்னம்பிக்கைய குலைக்க வாய்ப்பு இருக்கு

மார்க் குறைந்தாலும் improvement எழுதி சரி பண்ணிக்கலாம்... ஆனா பதின்ம வயதுல தன்னம்பிக்கை போய்ட்டா அது பிற்கால வாழ்கையையும் பாதிக்கும்

பிள்ளைகளுக்கு பரீட்சை டிப்ஸ் சொல்ல நெறைய பேரு இருக்காங்க.. என்னோட பார்வைல, ஒரு மாணவியா இருந்தப்ப எனக்கு தோணின விஷயங்கள் வெச்சு பெற்றோருக்கு ஒரு மெசேஜ் எழுதணும்னு தோணுச்சு அவ்ளோ தான்...


....... உண்மையிலேயே நல்ல கருத்துக்கள்! சூப்பர்!

சி.பி.செந்தில்குமார் said...

>>>இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"

இந்த லைனே 9 தடவை வருது.. இன்னும் ஒரு தடவை வந்தா 10 ஆகும்.. மேட்சுக்கு மேட்ச்.. எப்பூடி?

சி.பி.செந்தில்குமார் said...

>>
என்னமோ நாட்டமை தீர்ப்பு சொன்ன மாதிரி "ஆரும் இவ கூட பேசக்கூடாது பழகக்கூடாது, வூட்டுல இப்படி ஒரு ஜென்மம் இருக்கறதே மறந்துரோணும்... மீறினா உன்னையும் சேத்து ஸ்டடி ரூம்ல போட்டு பூட்டிருவோம்"ங்கற ரேஞ்சுக்கு நம்ம உடன் பிறப்புகள வேற மெரட்டி வெச்சுருப்பாங்க...

ஹா ஹா செம காமெடி

சி.பி.செந்தில்குமார் said...

>>>.இப்படி தான் ஒரு நாள், நான் 10த் படிக்கறப்ப....

எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க.. தங்கமணி 10த் முடிச்ச்ட்டாங்க

சி.பி.செந்தில்குமார் said...

>>நல்ல மார்க் கூட +2 ல தான் வந்தது

என்னது +2 ல ஒரு மார்க் தானா? ஏன்னா நிறைய மார்க்ஸ் வாங்கி இருந்தா நல்ல மார்க்ஸ்னு பன்மைல சொல்லி இருப்பீங்களே...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நாட்டாமைத் தீர்ப்பைக்கேட்டு நான் அதிர்ந்து போயிட்டேன்.. :)

தங்கம்பழனி said...

///கொஞ்சம் விட்டா "என்னது பல்லு விளக்கணுமா... இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா? எல்லாம் பரீட்சை முடிஞ்சு பண்ணிக்கலாம்... "னு சொல்லிடுவாங்க போல... ஸ்ஸ்ஸ்பப்பா......///

படிச்சு ரசிச்சு... நல்ல மார்க்கும் எடுத்திடுவேன்...!!

சுவராஷ்யமிக்க பதிவு.. நன்றிங்க..!!வாழ்த்துக்கள்..!!

Lakshmi said...

ஓ, நீங்க 10த், 12த் எல்லாம் படிச்சிருக்கீங்களா நம்புரோம் போதுமா.

middleclassmadhavi said...

இப்ப டென்த்தை விட +2க்கு தான் கெடுபிடி அதிகம்! 'உன் வாழ்க்கையை டிசைட் பண்ணும் பரீட்சை' என்று சொல்லியே பயமுறுத்திடுவோம்ல!!

நீங்கள் சொல்வது போல 10 வதை விட +2 படிக்கும் போது பொற்ப்பு வந்துவிடுகிறது என்பது உண்மை!!

தமிழ் உதயம் said...

எனக்கும் இப்படி புத்தகத்தை வைச்சு படிச்சா தான் தூக்கம் வரும்

priya.r said...

//பொறுத்தார் பூமி ஆள்வார்னு படிச்சது ஞாபகம் வந்து//

அப்போ பொறுக்காதவர் பூமியின் நாயன்மாரா ??!!!

priya.r said...

//போன வாரம் எந்த நேரத்துல இந்த ப்ரியா அக்கா இப்படி சொன்னாங்களோ... இந்த வாரம் நிஜமாவே "ஜில்லுனு ஒரு காதல்" எழுத முடியலைங்க... (அவ்வவ்வ்வ்வ்.....) மன்னிக்கணும்... ஆனா நான் எந்த ஜோசியரையும் கேட்டு செய்யல... நெஜமாவே எழுத முடியல அக்கோய்//

சரி அப்பாவி !

ஆனா நீ நிறைய கொடியை பின்பற்றுகிறாய் என்று நேக்கு தோன்றது

அப்புறம் பதிவு ஜோஸ்யர் உனக்கு கொடுத்த ஐடியா வில இன்னும் நிறைய இருக்கு இல்லையா

யாரும் எதிர்பார்க்க நேரத்தில் ஒரு ஆன்மிகம் சம்பந்தபட்ட பதிவு பிறகு

பிரபல எழுத்தாளருடன் சந்திப்பு அதற்கு பிறகு

அதிக கமெண்ட்ஸ் போடறவங்களுக்கு சாரிஸ் பிரைஸ் அப்புறம்

குலுக்கல் முறையில ஒருவரை தேர்த்து எடுத்து அவருக்கு வைர கம்மல் பிரைஸ்! இது போல இன்னும் தான்

ம்ம்ம்ம் நடத்து அப்பாவி உன்ற ராஜாங்கத்தை !

ஆனா உன்னை தட்டி (!) கேட்க எங்க ஐவர் படை இருக்கு என்பதை மறந்து விடாதே !!!!!

priya.r said...

//மைண்ட்வாய்ஸ் - இப்படியும் சொல்லலாம் "அப்பாவி சூப்பரா இட்லி பண்ணினா" னு சொல்ற அளவுக்கு உண்மைன்னு

அப்பாவி - ஏய் மைண்ட்வாய்ஸ், சீரியஸா பேசிட்டு இருக்கறப்ப குறுக்க குறுக்க சின்னபுள்ளதனமா... கிர்ர்ரர்ர்ர்//

ஹலோ! மைன்ட் வாய்ஸ் பத்தி எதாவது சொன்னே அப்புறம் நாங்களும் கிர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்

ஏன் அப்பாவி முதலில் இட்லி கூட ஒரு நல்லுறவை ஏற்படுத்தி உடன் படிக்கை செய்து கொள்ளேன் !

ஒரு வேளை உன்னை இட்லி மாமின்னு கூப்பிட்டால் ஒரே மகிழ்ச்சியோ !

சாதாரணமா தான் கேட்டேன் ;தயவு செய்து இதற்கு ஒரு தனி பதிவு போட வேண்டாம் புவனா please :)

பத்மநாபன் said...

ஒன்பதாவது வகுப்பில் ஆரம்பித்து காலேஜில் இடம் பிடிக்கும் வரை டிவி , சினிமா, அவுட்டிங் எல்லாம் கட்..கட்..கட் ...உண்மையில் மோசமாகி வரும் பத்தாங்கிளாஸ் கலாச்சாரத்தை /பசங்க படும் பாட்டை நன்றாக பதிவு செய்துள்ளீர்கள்...

priya.r said...

//பெற்றோர்கள் முக்கியமா பிள்ளைகள மத்த பிள்ளைகளோட ஒப்புமைப்படுத்தி பேசறது ரெம்பவும் தப்புங்க. அது அவங்களோட தன்னம்பிக்கைய குலைக்க வாய்ப்பு இருக்கு //

என்னிடமும் இந்த குறை உண்டு ;திருத்தி கொள்ள வேண்டும்

//மார்க் குறைந்தாலும் improvement எழுதி சரி பண்ணிக்கலாம்... ஆனா பதின்ம வயதுல தன்னம்பிக்கை போய்ட்டா அது பிற்கால வாழ்கையையும் பாதிக்கும்//

ஆமாம் ! சரியா சொன்னே பா

பிள்ளைகளுக்கு பரீட்சை டிப்ஸ் சொல்ல நெறைய பேரு இருக்காங்க.. என்னோட பார்வைல, ஒரு மாணவியா இருந்தப்ப எனக்கு தோணின விஷயங்கள் வெச்சு பெற்றோருக்கு ஒரு மெசேஜ் எழுதணும்னு தோணுச்சு அவ்ளோ தான்...//

நல்ல மெசேஜ் தான் ;ஆனா பெற்றோர்கள் சொல்வது குழந்தைகளின் நன்மைக்கு தான் என்பதை அவர்களும் உணர்த்து கொண்டாலே போதும்;இந்த புரிதலும் முக்கியம்

priya.r said...

//மைண்ட்வாய்ஸ் - "என்ன ஆச்சு... திடீர்னு அட்வைஸ் அம்புஜமா மாறிட்ட நீ?"

அப்பாவி - மைண்ட்வாய்ஸ் ஒரு விஷயம் சொல்லட்டுமா.... அட்வைஸ் பண்றது ரெம்ப சுலபம், அதை பாலோ பண்றது நெம்ப கஷ்டம்... அதான் for a change, சுலபமான வேலை மட்டும் செய்யலாம்னு வந்துட்டேன்....ஹி ஹி....//

மைன்ட்வாய்ஸ்! இப்போ தானே அப்பாவி டென்த் பத்தி பதிவு போட்டு இருக்கா

இன்னும் பிளஸ் ஒன் ,பிளஸ் டூ

அப்புறம் UG அப்புறம் PG அப்புறம் ஸ்பெஷல் கோர்ஸ் படிச்சது

இன்னும் லெக்சரர் ..................

விடு மைன்ட் வாய்ஸ் ! நமக்கும் கலாய் கிறதுக்கு நிறையா மேட்டர் கிடைக்க போகுது

ஹ ஹா ஹா


//ஜோக்ஸ் அபார்ட்... பொறுமையா படிச்சதுக்கு நன்றிங்க.... :) //

அடடா என்னா ஒரு தன் அடக்கம்! என்னா ஒரு பணிவு !

சுனாமி இதை நீ நம்பறே!

MANO நாஞ்சில் மனோ said...

படிலேய் படிலேய் ஒடுலே ஒடுலேய்....

MANO நாஞ்சில் மனோ said...

//அப்பாவி - மைண்ட்வாய்ஸ் ஒரு விஷயம் சொல்லட்டுமா.... அட்வைஸ் பண்றது ரெம்ப சுலபம், அதை பாலோ பண்றது நெம்ப கஷ்டம்... அதான் for a change, சுலபமான வேலை மட்டும் செய்யலாம்னு வந்துட்டேன்....ஹி ஹி....//

அப்பாடா தப்பிச்சென்....

சுசி said...

கொஞ்சம் கைட்/கண்ட்ரோல் பண்ணிட்டு மீதி அவங்க இஷ்டத்துக்கு விட்டிடணும்ன்றது தான் என் விருப்பமும்.. சரியா சொல்லி இருக்கீங்க புவனா.

priya.r said...

இது நமது ஐவர் படைக்கு !

அப்பாவி ஏன் இந்த டென்த் எக்ஸாம் மட்டும் இவ்வளோ சீரியஸ் ஆ பதிவை போட்டு இருக்கா

எக்ஸாம் படிக்கிறேன் பேர்வழின்னு பூஸ்ட் ,போன் விடா எல்லாம் விடாள்

ஹோர்லிக்ஸ் அப்படியே சாப்பிடுவாள் இது போதாதற்கு நிறையா நொறுக்கு தீனிகள் வேறு

காலையில் 4 மணிக்கு எழுந்து நல்ல கப்பு கப்புன்னு குடிச்சுட்டு திரும்பவும் தூங்கிடுவா

எங்க சின்னம்மா(அப்பாவியோட அம்மா தான் ) எல்லாம் இவ்வளோ கண்டிஷன் உம் பண்ண மாட்டாங்க

//என்ன தூக்கம் இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா? எந்திரி...

"ஏய், என்ன டிவி இப்ப? படிக்கற வேலை இல்லையா? "குரூப் ஸ்டடினு ஆட்டம் போடற வேலை எல்லாம் வேண்டாம்...

"என்ன எந்த நேரமும் போன்..

"பக்கத்து வீட்டு அக்கா கல்யாணத்துக்கா..

. "என்னது ஸ்கூட்டி வேணுமா... வாங்கலாம் வாங்கலாம்...


"இப்படி கொறிச்சா படிக்க எங்க தெம்பு இருக்கும்... ஒழுங்கா கை நெறைய எடுத்து சாப்பிடு...


"ரஜினி படமா? எங்கயும் ஓடிடாது... அப்புறம் பாக்கலாம்.."கிரிக்கட்டா? சச்சின் ஆடி ரன் எடுத்தா உனக்கா மார்க் போடுவாங்க.. //.

சித்தி ஈஈஈஈ ! சொன்னது நீங்க தானா! இதெல்லாம் சொன்னது நீங்க தானா!

ஆனா ஒண்ணு அப்பவே இந்த அப்பாவி RC விசிறி வேறு

அப்பப்போ பட புத்தகம் படிக்கிறேன் ன்னு கதை புத்தகம் படித்து கொஞ்சமே டோஸ் வாங்குவா !

ஹ ஹா ஹா

அமைதிச்சாரல் said...

அடடா!!.. அந்தப்பையன் எவ்ளோ பொறுப்பா படிச்சிட்டிருக்கான்.. :-)))))))

S.Menaga said...

டைமிங்கான பதிவு..சுவராஸ்யமா இருந்துச்சு அப்பாவி!!

vanathy said...

அப்பாவி, ஐயோ! ஏன் இப்ப இதெல்லாம் கிளறிட்டு?? எனக்கு இப்பவும் கெட்ட கனவா வந்து தொலைக்கும் அதை நினைச்சா. ஒழுங்கா ஆன்ஸர் எழுதாம பாதியில் வந்தது போலவோ அல்லது பெஸில் மார்க் என்று நிறைய கனவுகள். இதை விட கொடுமை + 2. உடனே அதுக்கும் பதிவு போடாதீங்க ஓக்கை.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஆறுதல் பரிசெல்லாம் ஓகே.. தான்.. சீக்கிரம் ஜில்லுன்னு ஒரு காதல்....போடுங்கப்பா... ;-)

டென்த் எக்சாம்ஸ்... அட்வைஸ்.. கொஞ்சம் கொடுமை தான்.. தேங்க்ஸ் :)

vgr said...

AT, 10th pass paneengala illaya? ada solla kanome.

போன வாரம் எந்த நேரத்துல இந்த ப்ரியா அக்கா இப்படி சொன்னாங்களோ... இந்த வாரம் நிஜமாவே "ஜில்லுனு ஒரு காதல்" எழுத முடியலைங்க...

- idu than romba anandam anandam anandame...

புதுகைத் தென்றல் said...

இந்தப் பதிவை அப்படியே ஆஷிஷுக்கு லிங்க் கொடுக்கணும். :)) ஐயா இப்ப 10த் போயிருக்காரு.

:))

geethasmbsvm6 said...

ஹிஹிஹி, நானும் பார்க்கிறேன், அக்கம்பக்கத்து வீடுகளிலே. ஆனாலும் இந்த அப்பா, அம்மாக்கள் ரொம்பத் தான் படுத்தி எடுக்கிறாங்க. மார்க், மார்க், மார்க், மார்க் இதுதான் அவங்களுக்குப் புரியுது. சில சமயம் தோணுது நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்.

geethasmbsvm6 said...

என்ன இருந்தாலும் உங்க மொக்கைக்கு வர பின்னூட்டங்கள் இதுக்கு வரலை பாருங்க. அதான் அட்வைஸே பண்ணக்கூடாதுங்கறது! :))))))))

priya.r said...

//அப்பாவியின் வாழ்க்கை ஏட்டில் சில வருடங்கள் முன்பு ஒரு நாள்.... கொசுவத்தி அப்படியே வளையம் வளையமா சுத்தி டைம் ட்ராவல் பண்ண உங்கள கூட்டிட்டு போகுது...:)//

அப்பாவி ! நீங்க கூட்டிட்டு போனா திரும்பவும் கொண்டு வந்து விட்டுடுவீங்களா !

priya.r said...

//என்ன இருந்தாலும் உங்க மொக்கைக்கு வர பின்னூட்டங்கள் இதுக்கு வரலை பாருங்க. அதான் அட்வைஸே பண்ணக்கூடாதுங்கறது! :)))))))) //

Well said Geethamma!ஹ ஹா

ஆமாம் அப்பாவி !

என்னோட அட்வைஸ் நீ ஆருக்கும் அட்வைஸ் பண்ண கூடாது என்பது தான் :)

priya.r said...

//இப்படி நண்டு சிண்டுனு பெருசு சிறுசுனு வயசு வித்தியாசம் இல்லாம, வழில போற வர்றவங்க எல்லாம் "என்ன பாப்பா... இந்த வருஷம் கவுர்மன்ட் பரிட்சையா நல்ல படிக்கோணும் என்ன" அப்படின்னு கடுப்பேத்திட்டு போவாங்க... அப்படியே கேப்டன் ரேஞ்சுக்கு கண்ணு சிவக்கும் நமக்கு கோபத்துல//

சும்மா யாரும் அட்வைஸ் பண்ண மாட்டாங்க அப்பாவி ;நல்லா யோசிச்சு பார் ;உன் சென்ற காலத்தை திரும்பி பார் ; நீ அவங்களை எப்போவாவது ஏதாவது கலாய்த்து இருப்பே :) :)

சுனாமி பாணியில் சொன்னால் திருவாயை வைத்து கொண்டு சும்மா இருந்தா தானே !

//ஹ்ம்ம்.... எல்லா கலவரமும் முடிஞ்சு.... பரீட்சை கடைசி நாள்... வீட்டுக்கு வந்ததும் புக் எல்லாம் தூக்கி கடாசிட்டு "இனி ரெண்டு மாசத்துக்கு டிவி ரிமோட் எனக்கு தான்"னு பந்தாவா டீபாய்ல கால தூக்கி வெச்சுட்டு சவுண்ட் விட்ட நாள்... ஆஹா... ஆஹா... "என்ன சுகம் என்ன சுகம்" (பின்னால் வரப்போகும் விபரீதத்தை அறியாமல்...:)//

அப்போவே பந்தா பார்வதி யா ஹ ஹா

அந்த நாள் நியாபகம் வந்ததா நண்பியே நண்பியே ;

இந்த நாள் அன்று போல் இல்லையே

ஏன் ஏன் நண்பியே :(

priya.r said...

//ஹிஹிஹி, நானும் பார்க்கிறேன், அக்கம்பக்கத்து வீடுகளிலே. ஆனாலும் இந்த அப்பா, அம்மாக்கள் ரொம்பத் தான் படுத்தி எடுக்கிறாங்க. மார்க், மார்க், மார்க், மார்க் இதுதான் அவங்களுக்குப் புரியுது. சில சமயம் தோணுது நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன். //

ஆ ! கீதாம்மா !! என்ன இப்படி ஒரு ஸ்டேட்மென்ட்

அப்பாக்கள் சொல்லி தருவது மிகவும் குறைவு கீதாம்மா

நீங்க கொஞ்சம் மாற்றி சொல்லி இருக்கலாம்

பிள்ளைகள் அம்மாக்களை தான் படுத்தி எடுக்கிறாங்க

அம்மாக்கள் தான் பாவம்

அதுவும் சொல்லி கொடுக்கும் போது தான் சம்பந்தம் இல்லாத சந்தேகம் எல்லாம் கூட பிள்ளைகளுக்கு தோணும்

நிற்க கீதாம்மா

நீங்க நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன் என்று MGR பாணியில் சொன்னது

நீங்க பத்தாவது படிக்கும் போது பிழைத்து கொண்டதா

அல்லது உங்க பையர்களுக்கு படிக்க சொல்லி கொடுக்கும் போது பிழைத்து கொண்டதா

அல்லது இந்த மாதிரி பதிவு போடாமல் பிழைத்து கொண்டதா

பதில் தெரிய ஆவல் !

சிவகுமாரன் said...

\\எனக்கு வந்த ஆத்தரத்துல, பொரி மூட்டைய ஒத்தை விரல்ல சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு தூக்கி அடிக்கணும்னு தோணுச்சு//...
ஐயோ பாவம் ரங்கமணி .

Gopi Ramamoorthy said...

என்னைப் படி படின்னு யாருமே சொன்னதில்லை. ஏன்னா எவ்ளோ படிச்சாலும் என் மண்டைல ஏறாதுன்னு எல்லோருக்கும் தெரியும்:-)

வெங்கட் said...

என்னாது 10த்..ஆ..? அப்படின்னா
எத்தனாவதுங்க..?

ஒருவேளை.. ரொம்ப பெரிய படிப்பா
இருக்குமோ..?

geethasmbsvm6 said...

நீங்க நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன் என்று MGR பாணியில் சொன்னது

நீங்க பத்தாவது படிக்கும் போது பிழைத்து கொண்டதா

அல்லது உங்க பையர்களுக்கு படிக்க சொல்லி கொடுக்கும் போது பிழைத்து கொண்டதா

அல்லது இந்த மாதிரி பதிவு போடாமல் பிழைத்து கொண்டதா

பதில் தெரிய ஆவல் ! //

hihihihiஎல்லாமே, நான் படிச்சது பத்தாவதே இல்லையே, இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க?? ஜாலிலோ ஜிம்கானா! :)))))))

geethasmbsvm6 said...

ஒருவேளை.. ரொம்ப பெரிய படிப்பா
இருக்குமோ..//

அதே, அதே, ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பப் பெரிய படிப்பு!

Vasagan said...

10th and 12th நாங்கதான் முதல் patch . அதுனால ஸ்கூல் daysla படி, மார்க் என்னனுன்னு தெரியாது.

காலேஜ்ல முதல் வருடம் ஜஸ்ட் பாஸ். செகண்ட் இயர்ல prof விஸ்வநாதன், என்னுடய ஒரு paperrai பார்த்து படிச்சதை மட்டும் நல்லா எழுதிருக்கே, இன்னும் படிச்சா நல்ல மார்க் எடுக்கலாம் னு ஒரு தடவை தான் சொன்னார். அதுக்கு பிறகு more than 90 % .

இப்போ சொல்லு அட்வைஸ் தேவையா இல்லையா?

நான் என்னுடய பிள்ளைகளை ( including my students ) படி என்று சொன்னதில்லை, ஆனால் வருட ஆரம்பித்தில் மட்டும் என்ன மார்க் எடுத்தால், என்ன பயன் என்று மட்டும் தெளிவாக சொல்லிவிடுவேன்.

என்னுடய அனுபவத்தில் அட்வைஸ் தேவை ஆனால் அது guideline னா இருக்கனும்,
torture அக இருக்ககூடாது.

torturea என்னது என்று கேட்பவர்களுக்கு, அப்பாவியின் இந்த பதிவில் வரும் முதல் 9 வரிகள்.

Vasagan said...

சுனாமி, பிரியா, மற்றும் கழக கண்மணிகள் தக்குடு, LK கிரிபுள்ள அனைவர்க்கும் ஒன்று சொல்லி கொள்கிறேன், யாரும்
அப்பாவியின் இந்த பதிவில் வரும் முதல் 9 வரிகள் மட்டுமா torture என்று எதிர் கேள்வி கேட்டக்க கூடாது

Vasagan said...

\பெற்றோர்கள் முக்கியமா பிள்ளைகள மத்த பிள்ளைகளோட ஒப்புமைப்படுத்தி பேசறது ரெம்பவும் தப்புங்க.\

முற்றிலும் உண்மை

\அது அவங்களோட தன்னம்பிக்கைய குலைக்க வாய்ப்பு இருக்கு\

வாய்ப்பு மட்டும் இல்லை
முற்றிலும் குலைத்துவிடும்.

பிரதீபா said...

ஆபீஸ்ல எதாச்சும் certification பண்ண சொல்லி இருப்பாங்களோ?

Vasagan said...

Priya
\மைன்ட்வாய்ஸ்! இப்போ தானே அப்பாவி டென்த் பத்தி பதிவு போட்டு இருக்கா

இன்னும் பிளஸ் ஒன் ,பிளஸ் டூ

அப்புறம் UG அப்புறம் PG அப்புறம் ஸ்பெஷல் கோர்ஸ் படிச்சது

இன்னும் லெக்சரர் ..................\
பிரியாம்மா
தம்பி தக்குடு தோகா போன வைபவத்தை முன்று பதிவா போட்டா கழகத்தின் பெயரை காப்பாத்த அக்கா அப்பாவி படித்த வைபவத்தை குறைந்தது 6 பதிவாவது போடணும்ல.

Vasagan said...

\மைண்ட்வாய்ஸ் - என்ன இன்னைக்கி அலப்பறை கேஸ்க எல்லாம் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுடுச்சு... அங்க ஒருத்தி புள்ளைகள படிக்க சொல்லி படுத்ததீங்கனு அட்வைஸ் பண்றா... இங்க ஒருத்தி பேசி பேசி படுத்துங்கனு அட்வைஸ் பண்றா... ஹ்ம்ம்... என்னமோ போ அப்பாவி...\


அப்பாவி அக்காவும் சுனாமி தங்கையும் என்ன ஒற்றுமை. இரண்டு பேரும் சொல்லிவச்சு பதிவை போட்டீர்களா.

Sathish A said...

என்ன பண்ணுறது இப்ப புரியறது அப்ப புரியலையே...

raji said...

சூப்பர் போஸ்ட்.எங்க வீட்ல இப்பத்தான் இந்த டயலாக்
முடிஞ்சு நாங்க ரெஸ்ட் எடுக்க ஆரம்பிச்சிருக்கோம்.பத்தாவது
பரீட்சை உத்ஸவம் ஒரு வழியா முடிஞ்சதும்மா

நாட்டாமை தீர்ப்பு சூப்பர்.
அப்பறம் எனக்கு ஒரு டவுட்டு புவி, நீங்க அந்த ஒரு வருஷம்
ஃபுல்லா பல் விளக்காமலேவா இருந்தீங்க

அநன்யா மஹாதேவன் said...

வழக்கம்போல அட்டகாசமான பஜிவு அ.த.. ஜூபர்!

கீறிப்புள்ள!! said...

/"ஏய், என்ன டிவி இப்ப? படிக்கற வேலை இல்லையா? இந்த வருஷம் 10த் ஞாபகம் இருக்கா?"//
இதுல இன்னொரு பிட் ஜாயின் பண்ணனும்.. "ஒடம்புல கொஞ்சமாச்சும் 10த் பயம் இருக்கா..போய் படி.." எங்க வீட்ல இதே டயலாக் தான் ரீபீட்.. 10த், +2, காலேஜ்ன்னு அது மட்டும் பில் இன் தி பிளாங்க்ஸ்.. :))

சூப்பர் பதிவு.. எனக்கு நெஜமாவே பிளாஷ் பாக்.. அப்போ 10த்-ங்கறதால எங்க வீட்ல கேபிள் கட்.. ஆனாலும் நாங்க பெரிய ஆள் இல்ல.. திருட்டு கனெக்சன் குடுத்து அடுத்த நாள் எக்ஸாம்ன்னா இன்னைக்கு சச்சின் ஷார்ஜால ஆடினத பாத்தோம்ல.. என்ன ஒரே வித்யாசம் தான்.. அன்னைக்கு மாட்ச்ல சச்சின் செஞ்சுரி..மீ எக்ஸாம்ல ஹாப் செஞ்சுரி.. ஹி ஹி ஹி..

கீறிப்புள்ள!! said...

/புவி, நீங்க அந்த ஒரு வருஷம்
ஃபுல்லா பல் விளக்காமலேவா இருந்தீங்க//
நோ டைம் வேஸ்டிங்..யு சி..ஹா ஹா ஹா.. ROFL :))

தக்குடு said...

எல்லாரும் நல்ல கேட்டுக்கோங்க! நம்ப இட்லி மாமி பத்தாப்பு வரைக்கும் படிச்சு வந்துருக்காங்க!! அடேங்கப்பா! நம்ப அப்பாவியோட தங்கமணி பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சுருக்கு போல!!!னு யாரும் திருஷ்டி படாம இருக்கனுமேனுதான் எனக்கு இப்போ கவலையா இருக்கு!!....:)))

priya.r said...

// hihihihiஎல்லாமே, நான் படிச்சது பத்தாவதே இல்லையே, இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க? இப்போ என்ன பண்ணுவீங்க?? ஜாலிலோ ஜிம்கானா! :))))))) //

@கீதாம்மா
அப்போ நீங்க PUC செட்டா! அதுக்கும் பத்தாவது படித்து தானே போகோணும் !
குழப்பமோ ஜிம்கானா !:))))

Mahi said...

அக்கா பையன் 10த் எக்ஸாம் எழுதிட்டு இருக்கான் புவனா.இன்னும் பல வீடுகள்ல இப்படி கட்டுப்பாடுகள் இருந்துட்டேதான் இருக்கு. எங்க வீட்டுல இப்படில்லாம் இல்லை! :)

Krishnaveni said...

10th 12th naalae pasanga romba tension aahiduvaanga, ithula porikkaarammaavumaaaaaaaa:) romba paavam

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - சரிங்க சார்..:)

@ அனாமிகா - நீ பதிவ படிக்கலைனு உன் இந்த பின்னூட்டத்தில் தெரிஞ்சு போச்....:))

@ முனியாண்டி - தேங்க்ஸ்..:)

@ எல் கே - ஹா ஹா ....:)

@ GEETHA ACHAL - ஆமாங்க...:)

@ sulthanonline - அடப்பாவமே... நான் நல்லா படிக்கற புள்ளைங்க... நம்புங்க சார்... வேணும்னா துண்டு போட்டு தாண்டறேன்...:))

@ Madhavan Srinivasagopalan - அதே அதே...:)

@ இராஜராஜேஸ்வரி - ஆமாங்க அம்மா... உங்க வீட்டிலும் இது போலத்தான் இருந்ததா..?

@ asiya omar - தேங்க்ஸ் ஆசியா...

@ Chitra - தேங்க்ஸ்'ங்க சித்ரா

அப்பாவி தங்கமணி said...

@ சி.பி.செந்தில்குமார் -
//இந்த லைனே 9 தடவை வருது.. இன்னும் ஒரு தடவை வந்தா 10 ஆகும்.. மேட்சுக்கு மேட்ச்//
ஹா ஹா... நல்ல அப்சர்வேஷன்...:))

//எல்லாரும் நல்லா கேட்டுக்குங்க.. தங்கமணி 10த் முடிச்ச்ட்டாங்க //
பின்ன 10th முடிக்காம MBA சீட் எப்படி கிடைக்கும்... (நன்றி MBA வை பத்தி சொல்ல சான்ஸ் குடுத்ததுக்கு... பட் ஐ நோ லைக் விளம்பரம்...:))))

//என்னது +2 ல ஒரு மார்க் தானா//
இல்லிங்க... ஒண்ணரை மார்க்...:))

அப்பாவி தங்கமணி said...

@ முத்துலெட்சுமி/muthuletchumi - :))

@ தங்கம்பழனி - நன்றிங்க..

@ Lakshmi - ஹா ஹா... தேங்க்ஸ் அம்மா...:)

@ middleclassmadhavi - தேங்க்ஸ்ங்க மாதவி

@ தமிழ் உதயம் - நல்ல பழக்கம்... எனக்கு புத்தகத்தை நினைச்சாலே தூக்கம் வரும்... இப்போ ....:)

@ priya.r - உங்க கமெண்ட்ஸ் வழக்கம் போல் கடைசீல...:)))

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா..:)

@ MANO நாஞ்சில் மனோ - :))

@ சுசி - தேங்க்ஸ்ங்க சுசி

@ அமைதிச்சாரல் - நம்மள மாதிரியே...இல்லையா அக்கா...:))

@ S.Menaga - நன்றிங்க மேனகா...

@ vanathy - உங்களுக்குமா? ஹா ஹா... கொடுமை தான் அந்த கனவுகள் எல்லாம்... இன்னொரு பதிவா...உங்க ஆசய நிறைவேத்துவதே என் கடமை...ஹா ஹா...:))

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - ஜில்லு சீக்கரம் போடறேன்'ப்பா... :))

@ vgr - Finally this post made you come here... ha ha... I'm glad... just kidding... :)))

@ புதுகைத் தென்றல் - ஓ... ஆல் தி ஆஷிஷ்...தேங்க்ஸ்'ங்க

@ geethasmbsvm6 - அடடே... வாங்க மாமி... நீங்க சொல்றது ரெம்ப சரி... மொக்கைக்கு வர்ற கமெண்ட்ஸ் இதுக்கு வர்ரதில்ல... நல்லதுக்கு காலம் இல்ல பாருங்க...ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்...

@ சிவகுமாரன் - ஹா ஹா...:))

@ Gopi Ramamoorthy - அப்படி ஒண்ணு இருக்கோ..:))

@ வெங்கட் - ஆமாங்க... ரெம்ப பெரிஆஆ படிப்பு... ஒரு பத்து வருஷம் படிக்கணும்...:))

@ geethasmbsvm6 - //நான் படிச்சது பத்தாவதே இல்லையே// - அப்போ பாட்டியே தான்... சந்தேகமே இல்ல... ஹி ஹி...:)

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan -
//10th and 12th நாங்கதான் முதல் பட்ச//
ஜூப்பர்...:)

//அதுக்கு பிறகு more than 90 % //
இதனால் தாங்கள் சொல்ல வரும் கருத்து.... ஜஸ்ட் கிட்டிங்... ரெம்பவும் உண்மை...அட்வைஸ் தேவை அது irritating ஆ மாறாத வரை..:))

//என்னுடய அனுபவத்தில் அட்வைஸ் தேவை ஆனால் அது guideline னா இருக்கனும்,
torture அக இருக்ககூடாது//
அதே அதே... well said ...

//torturea என்னது என்று கேட்பவர்களுக்கு, அப்பாவியின் இந்த பதிவில் வரும் முதல் 9 வரிகள்//
ஒரு நிமிஷம் பயந்துட்டேன்... "அப்பாவியோட பதிவை படிங்க"னு சொல்ல வரீங்களோனு...:)

//அப்பாவியின் இந்த பதிவில் வரும் முதல் 9 வரிகள் மட்டுமா torture என்று எதிர் கேள்வி கேட்டக்க கூடாது//
அதானே கேட்டேன்... :)))

//தம்பி தக்குடு தோகா போன வைபவத்தை முன்று பதிவா போட்டா கழகத்தின் பெயரை காப்பாத்த அக்கா அப்பாவி படித்த வைபவத்தை குறைந்தது 6 பதிவாவது போடணும்ல//
அதானே... :))

//அப்பாவி அக்காவும் சுனாமி தங்கையும் என்ன ஒற்றுமை. இரண்டு பேரும் சொல்லிவச்சு பதிவை போட்டீர்களா//
அது வேற செய்யணுமா... நீங்க தான் பாவம் அப்புறம் ...:)

அப்பாவி தங்கமணி said...

@ பிரதீபா - //ஆபீஸ்ல எதாச்சும் certification பண்ண சொல்லி இருப்பாங்களோ// - ஐயையோ இந்த பொண்ணு எதுனா மந்திரவாதியா இருக்குமோ... இப்படி புட்டு புட்டு வெக்குதே...நிஜமாவே ஆமா தீபா... செய்ய சொன்னாங்க... அது கொஞ்ச நாள் முன்னாடி தான் கடைசி பேப்பர் முடிச்சேன்... பட்டமளிப்பு விழா அடுத்த மாசம்... டோண்ட் வொர்ரி.. பதிவெல்லாம் போட மாட்டேன் அதை வெச்சு...:)))

@ Sathish A ௦- ஹ்ம்ம்.. நான் அப்பவே பதிவெழுதி இருக்கலாமோ...:))

@ raji - ஓ.. முடிஞ்சதா உங்க வீட்டுல.. பாவம் உங்க பையர் இல்லேனா பொண்ணர்....:)) - நல்ல டவுட்... விளக்காம இருந்திருந்தா எக்ஸாம் ஹால்'ல வுடுவாங்கன்னா நினைக்கறீங்க ராஜி'க்கா...:))

@ அநன்யா மஹாதேவன் - ஐயயோ...என்னாச்சு... என்ன திடீர்னு இந்த பக்கம்... ஜஸ்ட் கிட்டிங்... தேங்க்ஸ்'ப்பா... :))))

@ கீறிப்புள்ள!! - ஆமாம் பிரதர் அந்த டயலாக் மறந்துட்டேன்... கேபிள் கட் எல்லாம் மறந்துட்டேன்... திருட்டு connection ஆ? சூப்பர்...யாரோ ஒருத்தர் செஞ்சுரி போட்டா சரி தான்...:))

//நோ டைம் வேஸ்டிங்..யு சி..ஹா ஹா ஹா.. ROFL :)) // மீ டூ ROFL ...but பல்லு விளக்குபைட்...:))

@ தக்குடு - ஹா ஹா ஹா... பின்ன... பெரிய படிப்பில்ல... சுத்தி போட்டுக்கறேன் எனக்கு நானே... :))

@ Mahi - அக்கா பையர்'க்கு ஆல் தி பெஸ்ட் சொல்லிடுங்க மகி... :)

@ Krishnaveni - எஸ் மீ பாவம்... உங்களுக்காச்சும் புரிஞ்சதே...தேங்க்ஸ் வேணி...:)

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - கமெண்ட் போடும் நேரம் இது... சைலன்ஸ்....:)))

//அப்போ பொறுக்காதவர் பூமியின் நாயன்மாரா//
கிரேசி மோகன் சீரியல் எதுனா பாத்தீங்களோ...:)

//யாரும் எதிர்பார்க்க நேரத்தில் ஒரு ஆன்மிகம் சம்பந்தபட்ட பதிவு பிறகு//
இது ப்ரியா என்ற நேயரின் விருப்பம்னு எனக்கு முன்பே தெரியும்...:))

//அதிக கமெண்ட்ஸ் போடறவங்களுக்கு சாரிஸ் பிரைஸ் அப்புறம் குலுக்கல் முறையில ஒருவரை தேர்த்து எடுத்து அவருக்கு வைர கம்மல் பிரைஸ்//
வைரத்துக்கு வைரம் தேவை இல்ல ப்ரியா... (அப்பாடா ஐஸ் வெச்சு தப்பிச்சாச்சு...:)))

//ஆனா உன்னை தட்டி (!) கேட்க எங்க ஐவர் படை இருக்கு என்பதை மறந்து விடாதே//
மறக்க முடியுமா என்ன...:))

//மைன்ட் வாய்ஸ் பத்தி எதாவது சொன்னே அப்புறம் நாங்களும் கிர்ர்ர்ர்ர்ரர்ர்ர்ர்//
ஆஹா... அவ்ளோ பீலிங்க்ஸ் ஆகி போச்சா... இருக்கட்டும் இருக்கட்டும்...:)

//ஏன் அப்பாவி முதலில் இட்லி கூட ஒரு நல்லுறவை ஏற்படுத்தி உடன் படிக்கை செய்து கொள்ளேன்//
நானா மாட்டேங்கறேன்... வந்து தொலைய மாட்டேங்குதே... நடுல கொஞ்ச நாள் நல்லா வந்தது, இப்ப மறுபடியும் ஆரம்பிச்சுடுச்சு... வெச்ச மாவு வெச்சபடி இருக்கு... கோபத்துல நான் தான் பொங்கறேன்... அது பொங்கராப்ல காணோம்... ஹ்ம்ம்... சும்மா இருக்கரவள கிளப்பி விட்டு பொலம்ப வெக்கறியே ப்ரியாக்க்கா.... அவ்வ்வ்வவ்வ்வ்வ்

//ஒரு வேளை உன்னை இட்லி மாமின்னு கூப்பிட்டால் ஒரே மகிழ்ச்சியோ//
ஏன் இந்த கொல வெறி ப்ரியா...grrrrrrrrrrrrr....

//சாதாரணமா தான் கேட்டேன் ;தயவு செய்து இதற்கு ஒரு தனி பதிவு போட வேண்டாம் புவனா please //
அந்த பயம் இருக்கட்டும்...:)))

//நல்ல மெசேஜ் தான் ;ஆனா பெற்றோர்கள் சொல்வது குழந்தைகளின் நன்மைக்கு தான் என்பதை அவர்களும் உணர்த்து கொண்டாலே போதும்;இந்த புரிதலும் முக்கியம்//
இதுவும் சரி தான் அக்கா... கொஞ்சம் வளந்தா புரிஞ்சுப்பாங்க... நீங்க குட்டி பையனை போட்டு படுத்த வேண்டாம் பாவம்...:))

//விடு மைன்ட் வாய்ஸ் ! நமக்கும் கலாய் கிறதுக்கு நிறையா மேட்டர் கிடைக்க போகுது//
என்னா ஒரு வில்லத்தனம்...:))

//அடடா என்னா ஒரு தன் அடக்கம்! என்னா ஒரு பணிவு//
ஹி ஹி ஹி...:)

//காலையில் 4 மணிக்கு எழுந்து//
ஹா ஹா ஹா...நல்ல ஜோக்... நான் இந்தியால சூரிய உதயம் பாத்ததே என் கல்யாணதன்னைக்கி நேரத்துல முஹுர்த்தம் வெச்சு சதி பண்ணினதால தான்... :)))

//அப்பப்போ பட புத்தகம் படிக்கிறேன் ன்னு கதை புத்தகம் படித்து கொஞ்சமே டோஸ் வாங்குவா //
இது வேணா கொஞ்சம் நிஜம்...அப்போ RC புக் எல்லாம் இல்லை அக்கா... சிறுவர் மலர்...பாப்பா மலர் தான் யு நோ...:)

//அப்பாவி ! நீங்க கூட்டிட்டு போனா திரும்பவும் கொண்டு வந்து விட்டுடுவீங்களா//
கொஞ்சம் செலவாகும் பரவா இல்லையா...:)

//என்னோட அட்வைஸ் நீ ஆருக்கும் அட்வைஸ் பண்ண கூடாது என்பது தான்//
அப்புறம் உங்களை எல்லாம் எப்படி திருத்தறது...:))

//சும்மா யாரும் அட்வைஸ் பண்ண மாட்டாங்க அப்பாவி ;நல்லா யோசிச்சு பார் ;உன் சென்ற காலத்தை திரும்பி பார் ; நீ அவங்களை எப்போவாவது ஏதாவது கலாய்த்து இருப்பே//
ஹி ஹி ஹி...அதெல்லாம் சீக்ரட்...:))

//இந்த நாள் அன்று போல் இல்லையே ஏன் ஏன் நண்பியே :( //
ஏன்னா.... நான் தங்கமணி ஆயாச்சே...... அதான்... :(((

Post a Comment