Thursday, March 31, 2011

அலைபாயுதே...(கவிதை)உகோஸ்லாவியா முக்கியமா
உன்பொண்டாட்டி முக்கியமாஎன்ற
உலகமுக்கிய சர்ச்சையை
உலகதொலைகாட்சியில் பார்த்தவேளையில்
எனக்கும் உகோஸ்லாவியாதான் முக்கியமென்றாய்
எனைசீண்டுவதில் தான்எத்தனை சுகமுனக்கு
உகோஸ்லாவியா முக்கியமென்றால்
உரசாமல் தள்ளிநில்லேன் என்றேன்
"உரசாமல் உறைவதெப்படி?" என்றாய்
உறைவதிப்போ என் முறையானது
உரசாமலே உறையவைக்க எங்குகற்றாய்!!!


உன்அம்மாவா தங்கையா இல்லைநானா
உண்மையைசொல் யார்முதல் உனக்கென
கேள்விகேட்டு நான்கோபமாய் நிற்க
குறுநகையில் சற்று தவிக்கவைத்து
"பதிலேகேள்வி கேட்டால்எப்படி?"யென்றாய்
பதிலுக்குபதிலையே லஞ்சமாய்பெற்றாய்!!!

...

47 பேரு சொல்லி இருக்காக:

Philosophy Prabhakaran said...

வடை...

Philosophy Prabhakaran said...

ரொம்ப நாளைக்கு அப்புறம் வாங்கியிருக்கேன்...

Philosophy Prabhakaran said...

கவிதை இரண்டும் சூப்பர்ப்...

பிரதீபா said...

dho daa.. marupadiyum u kavidhai

vanathy said...

well written, Appavi.

Vasagan said...

\உறைவதிப்போ என் முறையானது
உரசாமலே உறையவைக்க எங்குகற்றாய்!!!\

\பதிலுக்குபதிலையே லஞ்சமாய்பெற்றாய்!!! \

glorious lines...

எல் கே said...

அவ்வ்வ் முடியலை. அனாமிகா ப்ரியா அக்கா எங்க இருந்தாலும் வரவும்

அனாமிகா துவாரகன் said...

MOKKAI. Grrrrrrrrrrrrrr. I hate Kavithai

Vasagan said...

\எனக்கும் உகோஸ்லாவியாதான் முக்கியமென்றாய்\
மக்களே பார்த்துகோங்க, தங்கமணி கிட்டே உண்மையை சொன்னா நல்லது.

அவங்க,
அவங்க வழியில் இப்படி தான் எடுத்துக்குவாங்க.
\எனைசீண்டுவதில் தான்எத்தனை சுகமுனக்கு \
இதுஎல்லாம் மாப்பிளைக்கு தெளிவா தெரியும்.
நம்ம ட்ரைனிங் தான் எல்லாம் ஹி ஹி ஹி

Vasagan said...

உன்அம்மாவா தங்கையா இல்லைநானா
உண்மையைசொல் யார்முதல் உனக்கென

"கேள்விகேட்டு நான்கோபமாய் நிற்க "
இந்த வரியை

கேள்விகேட்டு நான்கோபமாய் பூரி கட்டையுடன்
நிற்க

என்று வாசிக்கவும்

ηίαפּάʞиίнτ ™ said...

முடியல

vinu said...

ηίαפּάʞиίнτ ™ சொன்னது…

முடியல


ripeeeeeeeeeeeeeeetttttttttttttttu

இராஜராஜேஸ்வரி said...

பதிலுக்குபதிலையே லஞ்சமாய்பெற்றாய்!!/
லஞ்சம் வாழ்க!!!

Gopi Ramamoorthy said...

ஐயோ, இந்த அநியாயத்தைக் கேக்க யாருமே இல்லையா:-)))

சி.பி.செந்தில்குமார் said...

தங்கமணீ எப்பவும் புரியற மாதிரி தான் எழுதுவாப்ல.. ஏப்ரல் 1 என்பதால் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>"பதிலேகேள்வி கேட்டால்எப்படி?"யென்றாய்

இது சூப்பர் பஞ்ச்

தமிழ் உதயம் said...

எப்படி தான் எழுதுறிங்களோ இப்படி.

Anonymous said...

yenga jillunu oru kaathal part 14 engenga??

ப்ரியமுடன் வசந்த் said...

//பதிலேகேள்வி கேட்டால்எப்படி//

இதுபோன்ற அழகான காதல் கவிதைகளையும் அப்போ அப்போ எழுதுங்க !!

Chitra said...

பதிலுக்குபதிலையே லஞ்சமாய்பெற்றாய்!!!


.....அங்கேயும் லஞ்சமா? :-)))))

asiya omar said...

"பதிலேகேள்வி கேட்டால் எப்படி?" appavi, super.

கோவை2தில்லி said...

NICE. :))

சுசி said...

அடடடடா.. காதல்.. அசத்துங்க புவனா :))))

கோவை ஆவி said...

//உகோஸ்லாவியா முக்கியமா
உன்பொண்டாட்டி முக்கியமாஎன்ற
உலகமுக்கிய சர்ச்சையை
உலகதொலைகாட்சியில் பார்த்தவேளையில் //

இதுக்குதாங்க நான் அதிகம் டி.வீ பாக்கறதில்ல!!

S.Menaga said...

very nice!!

Sathish A said...

// உகோஸ்லாவியா முக்கியமா
உன்பொண்டாட்டி முக்கியமாஎன்ற
//

கேள்வி பதியிலே முடிஞ்சா மாதிரி இருக்கு....

// உன்அம்மாவா தங்கையா இல்லைநானா //

என மகள்தான் முக்கியம், இது எப்படி....

vgr said...

AT, 5 & 6 varigal "U" vil arambikadadu ungal 'KAVIDAI' ilakanathuke idikude :)

Inda padivai paratiyavargalai namba vendam endru thazhmaiyudan kettu kolgiren :)

-vgr

Balaji saravana said...

ரைட்டு...நீங்க நடத்துங்க மேடம்.. :)

dheva said...

உண்மைய சொல்லியிருக்கீங்க..........கவிதையா..! ஹா ஹா ஹா!

நசரேயன் said...

என்ன பிரச்சனை ?

காற்றில் எந்தன் கீதம் said...

கவிதை நல்லா இருக்கு..... உங்க தொடர் கதை எங்க? சீக்கிரம் போடுங்க நாங்க வசிக்கிரோமில்ல தொடர்ந்து ... ஆமா கவிதை எழுதும் போது உங்க மைன்ட் வாய்ஸ் வரதா? :)

அன்னு said...

கதை எழுத வேண்டிய நேரத்துல லீவு போட்டுட்டு கவிதையெழுதி எங்களை சீண்டுவதில்தான் எத்தனை சுகம் உங்களுக்கு!!

ஹி ஹி ஹி

Anonymous said...

Where is 'jillunu oru kadhal' episode for this week?

மனம் திறந்து... (மதி) said...

vgr has made a Very Good Remark on poetic(?!) violation:
//எனக்கும் உகோஸ்லாவியாதான் முக்கியமென்றாய்
எனைசீண்டுவதில் தான்எத்தனை சுகமுனக்கு//

And here is a Very Good Revision!

உகோஸ்லாவியாதான் எனக்கு முக்கியமென்றாய்
உனைச் சீண்டத்தானடி, என ஓரக்கண் சிமிட்டி!

After retirement, I will probably join you as an Assistant on a flexible, part time basis! :)))

மனம் திறந்து... (மதி) said...

இப்படி முடிவுரையையே முழுவுரையாப் போட்டு எங்க எல்லாரையும் கடுப்பேத்தறீங்களே...!

போதாக் குறைக்கு எத்தனை முறை இடித்துரைத்தாலும், எல்லோரும் சேர்ந்து மிரட்டினாலும் கூட அஞ்சாமல், அயராமல் மீண்டும் ஒரு "உ" கவிதையை(?!) எங்கள் தலைமேல் க/(கொ)ட்டியதால், உறைவதிப்போ எங்கள் முறைதானே? நீங்கள் எங்கே உறைந்தீர்கள்? எதற்காக? :-)))

மனம் திறந்து... (மதி) said...

அது சரி! நீங்ககூடப் பெரிய அரசியல் வாதியாயிட்டீங்க போலிருக்கே! எக்கச் சக்கமா வாக்கு வாங்கறீங்க! பெரிய வாக்கு வங்கிக்கு அதிபராயிருக்கீங்க! ஆனா, வாக்குத் தந்த இந்த அப்பாவி ஜனங்களை எல்லாம் வந்து எட்டிப் பாத்து என்ன, ஏது, எப்படி இருக்கீங்கன்னு கேக்கவே மாட்டேங்கறீங்களே? திரும்பத் திரும்ப அவங்க மட்டும் இங்கே வந்து மறக்காம வாக்கைப் பதிந்து விட்டு ஏமாந்து போறாங்களே! இது நியாயமா? ஆமாம், ஆமாம்... நேரம் இல்லீங்களேன்னு தானேன்னு சொல்லப் போறீங்க? இந்த ஜனங்களுக்கு மட்டும் எப்படி, எங்கேருந்து நேரம் கிடைக்குது? வெளங்கலியே? :)))

Priya said...

அழகான அலைபாயுதே கவிதைகள்!!!

தக்குடு said...

//பதிலேகேள்வி கேட்டால்எப்படி// இப்படி உங்க ஆத்துக்காரர் சொன்னவுடனே 'ஈஈஈஈ'னு பல்லைகாமிச்சுட்டு அடுத்த வேலையை பாக்க போயிருப்பேளே?? இந்த சம்பாஷனை நடந்த தினம் ஏப்ரல் 1 என்பதை தமிழ் கூறும் இந்த நல்லுலகுக்கு சொல்ல தக்குடு கடமை பட்டுள்ளான்.

(இந்த கமண்டை ATM படிச்ச அடுத்த நிமிஷம் இட்லி மாமியோட ஆத்துக்காரர் "அய்யோ கொல்றாங்க! ஐயோ கொல்றாங்க!"னு கத்த ஆரம்பிச்சுருப்பார்)

Mahi said...

////பதிலேகேள்வி கேட்டால்எப்படி// இப்படி உங்க ஆத்துக்காரர் சொன்னவுடனே 'ஈஈஈஈ'னு பல்லைகாமிச்சுட்டு அடுத்த வேலையை பாக்க போயிருப்பேளே?? இந்த சம்பாஷனை நடந்த தினம் ஏப்ரல் 1 என்பதை தமிழ் கூறும் இந்த நல்லுலகுக்கு சொல்ல தக்குடு கடமை பட்டுள்ளான். ////தக்குடு,எப்படி இப்படில்லாம்?!!! புவனா நானும் தக்குடு கருத்தையே வழிமொழிகிறேன்.:)

அமைதிச்சாரல் said...

கவிதை அருமை..

//"பதிலேகேள்வி கேட்டால்எப்படி?"யென்றாய்//

அதானே :-)))))))

அனாமிகா துவாரகன் said...

ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஎய், யாருப்பா இதுக்கெல்லாம் வோட்டு போடறது. அப்பாவி வேற, கதை எழுதாம எங்கள வெறுப்பேத்திட்டு இருக்க, இவங்க இங்க வோட்டு போடறாங்களாம். வேண்டாம், இத்தோட நிறுத்துங்க. இல்லேன்னா அழுதிடுவேன்.

மோகன்ஜி said...

அம்மாடியோவ்! என்னா கவிதை ? என்னா கவிதை? புவனா மேடம்...
//"பதிலேகேள்வி கேட்டால்எப்படி?"//
நெத்தியடிகே கவிதை!

அப்பாவி தங்கமணி said...

@ Philosophy Prabhakaran - வடை உங்களுக்கே... வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கு நன்றிங்க...:)

@ பிரதீபா - என்னடா இது வம்பா போச்சு...:))

@ vanathy - தேங்க்ஸ் வானதி...:)

@ Vasagan - நன்றி...:)

@ எல் கே - அடப்பாவி...என்னமோ அபாயம் தொரத்தற மாதிரி அபயம் கேட்டு குரல் கொடுப்பது என்ன அநியாயம்....;))

@ அனாமிகா - அதுக்கெல்லாம் தனி ரசனை வேணுமாம்... யாரோ சொன்னாங்க...:)))

@ Vasagan - பூரிகட்டய விட மாட்டீங்க போல இருக்கே... ஹா அஹ...:))

@ ηίαפּάʞиίнτ ™ - ஒகே ஒகே நோ டென்ஷன்... :)

@ vinu - அடப்பாவி... நீங்களுமா...:))

@ இராஜராஜேஸ்வரி - ஹா ஹா.. நன்றிங்க அம்மா..:)

@ Gopi Ramamoorthy - ஹி ஹி...:)

@ சி.பி.செந்தில்குமார் - ஹா ஹா ஹா...:))

@ தமிழ் உதயம் - இது பாராட்டா திட்டானு புரியலியே...:))

@ பெயரில்லா - நீங்க உங்க பேரு சொன்னாதான் நான் ஜில்லு அடுத்த பார்ட் போடுவேன்... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... இன்னைக்கு இல்லேனா நாளைக்கு கண்டிப்பா போட்டுடறேன்... Thanks for asking,...:)

@ ப்ரியமுடன் வசந்த் - நன்றிங்க வசந்த்.....:)

@ Chitra - அங்க தான் லஞ்சம் அதிகம் சித்ரா...:)

@ asiya omar - நன்றிங்க ஆசியா

@ கோவை2தில்லி - தேங்க்ஸ் பிரெண்ட்...:)

@ சுசி - தேங்க்ஸ் சுசி...:))

@ கோவை ஆவி - தெளிவாத்தான் இருக்கீங்க...ஆனா உங்களுக்கு உங்க போஸ்ட்'க போதும்...தனியா வேற ஒண்ணும் வேண்டாம் மாட்டி விட...ஹா ஹா...:))

@ S.Menaga - நன்றிங்க மேனகா...

@ Sathish A - உங்க மகள் தான் முக்கியமா...சூப்பர்...:)

@ vgr - ha ha ha... I started enjoying your comments these days... கவிதை இலக்கணமா? அப்படினா? ஒகே ஒகே... நோ டென்ஷன்... :))

@ Balaji saravana - :)

@ dheva - ஹா ஹா..நன்றிங்க..:)

@ நசரேயன் - அட ராமச்சந்திரா... ஏனுங்க அண்ணா உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் தோணுது...ஹா ஹா ஹா...:))

@ காற்றில் எந்தன் கீதம் - நன்றி பாராட்டுக்கு... தொடர் சீக்கரம் போட்டுடறேன்.. தொடர்ந்து படிக்கறதுக்கு மிக்க நன்றி... என்னது கவிதை எழுதும் போது மைண்ட்வாய்ஸ்ஆ... ஆஹா... ஏன் இந்த கொல வெறி...:)))

@ அன்னு - ஹா ஹா ஹா... இது நல்லா இருக்கே...:))

@ பெயரில்லா - sorry...didn't get much time to put it together...will post the next episode today or tomorrow.. thanks a bunch for asking..:)

@ மனம் திறந்து... (மதி) - //join you as an Assistant // - ஆளில்லாத கடைல டீ ஆத்தறதுக்கு assistant வேறயானு என் மைண்ட்வாய்ஸ் கேக்குதுங்க... :)) அது என்ன சாபமோ "உ" கவிதையாவே வருது... சாப விமோசனம் எதுனா இருக்கானு கேட்டு பாக்கணும்... ஆஹா... நான் வர்ரதில்லையா... பாதி நேரம் ப்ளாக் ப்ளாக்ஆ சுத்தறது தானே என் வேலையா இருக்கு... இதுக்கு மேல போனா அவங்களே தொரத்தி விட்டுடுவாங்க...ஹா ஹா...;))

@ Priya - தேங்க்ஸ் ப்ரியா..:)

@ தக்குடு - ஹ ஹ ஹ... asusual, your comment made me laugh for a while... பின் விளைவுகள் எல்லாம் சொல்றதில்ல..ஹா ஹா...:))

@ Mahi - யு டூ மகி... அவ்வ்வ்வவ்வ்வ்வ்....:)))

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ்ங்க அக்கோய்...:)

@ அனாமிகா - வர்ற நாலு பேரையும் இப்படி அருவா தூக்கி சவுண்ட் விட்டு தொரத்தி விடுறியே சுனாமி... உன் மேல வழக்கு போடறேன் இரு...:))

@ மோகன்ஜி - நன்றிங்க ஜி...:)

Matangi Mawley said...

ennenna talent paa ungalukku! :)

i enjoyed reading it... :)

அப்பாவி தங்கமணி said...

@ Matangi Mawley - Thanks pa Matangi..:)

vgr said...

மனம் திறந்து... (மதி) - assistant ellam agadeenga sir...verumane padichathuke "U" vanna kavidai mazhai ungaluku vandachu parunga... :)

AT, anda 'ukandu yosipangalo' dialog solla thonudu..

அப்பாவி தங்கமணி said...

@ vgr - ha ha ha...:)

Post a Comment