Thursday, March 10, 2011

அப்பாவியை கலாய்ப்போர் சங்கம் IN காபி வித் மைண்ட்வாய்ஸ்.. :))
முன் குறிப்பு:
இந்த பதிவு சிரிக்க மட்டும், யாராச்சும் சீரியஸ் ஆனா, நான் அதை விட சீரியஸ் ஆய்டுவேன், ஆமா சொல்லிட்டேன்...:)))

டொன் டொன் டோடைன்....டொன் டொன் டோடைன்....டொன் டொன் டோடைன்....(ஓபனிங் மீசிக்...)

மைண்ட்வாய்ஸ் என்ட்ரி, எல்லா கேமராவும் மைண்ட்வாய்ஸ் பக்கம் ஜூம் ஆகுது... மைண்ட்வாய்ஸை க்ளோஸ்-அப்பில் பார்த்த கேமராமேன் மயங்கி விழ தண்ணி தொளிச்சு அவரை எழுப்பறாங்க...

ஹாய் ஹாய் ஹாய்... நான் தான் உங்கள் மைண்ட்வாய்ஸ்... வணக்கம் அண்ட் வெல்கம் டூ உங்கள் அபிமான காபி வித் மைண்ட்வாய்ஸ். என்னை பத்தி இங்க வர்ற எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும். அதுக்கு மேல மறுபடி சொல்லி மொக்கை போட்டு உங்கள போர் அடிக்க நான் அப்பாவி இல்லையே...

(மொத்த ஆடியன்ஸ்'ம் சத்தமாக சிரிப்பு)

ஒகே... ப்ரோக்ராம்க்கு போலாம்... இன்னிக்கி நம்ம ப்ரோக்ராம்ல கெஸ்ட்டா வர போறவங்க அஞ்சு பேரு... என்னை போலவே இந்த அஞ்சு பேரும் உங்களுக்கு பரிச்சயம் ஆனவங்க தான்... உலகமே அப்பாவியை கலாய்க்கும் என்பது உண்மை தான்னாலும்.... (அதற்குள் ஆடியன்ஸ் மறுபடியும் சத்தமா சிரிப்பு)

நன்றி நன்றி (னு தலை வணங்குது மைண்ட்வாய்ஸ்) எங்க விட்டோம்...ம்ம்... உலகமே அப்பாவியை கலாய்க்கும் என்பது உண்மை தான்னாலும், இவங்க அஞ்சு பேரு அதை ஒரு சமுதாய கடமையா நெனச்சு செஞ்சுட்டு வராங்க... அப்பாவியை கலாய்க்கும் எல்லார் பத்தியும் சமீபத்துல நடத்தின புள்ளிவிவர கணக்குப்படி இந்த அஞ்சு பேர் டாப் அஞ்சு இடத்தை பிடிச்சு இருக்காங்க... அவங்கள உங்கள் சார்பாவும் கௌரவிக்கும் விதமாத்தான் இந்த சிறப்பு காபி வித் மைண்ட்வாய்ஸ்... உங்கள போலவே நானும் அவங்கள சந்திக்க ஆர்வமா இருக்கேன்... (கொஞ்சம் "நீயா நானா" கோபிநாத் சாயல் வருதோ...:)

இதோ... (என மைண்ட்வாய்ஸ் பின் மேடை நோக்கி கை காட்ட.... என்னமோ சந்திராயன்ல இருந்து எறங்கற ரேஞ்சுக்கு அஞ்சு பேரு கைய அசைச்சுட்டு உள்ள என்ட்ரி குடுக்கறாங்க...)

எல்லாருக்கும் இத்து போன ஒரு பொக்கேவை குடுத்து வரவேற்கிறது மைண்ட்வாய்ஸ்...

வாங்க வாங்க வணக்கம்... எல்.கே, தக்குடு, ப்ரியா, அனாமிகா, வாசகன்... நீங்க அஞ்சு பேரும் வந்ததுல ரெம்ப சந்தோஷம்

அஞ்சு பேரும் கோரசாக: எங்களுக்கும் ரெம்ப ரெம்ப சந்தோஷம்

மைண்ட்வாய்ஸ் : "ஒகே ... உக்காருங்க..."

அனாமிகா: "எங்க உக்காரணும்?" (மிரட்டல் குரலில்)

மைண்ட்வாய்ஸ் : "இந்த சோபால தான் அனாமிகா" (கொஞ்சம் பயந்துட்டே சொல்லுது மைண்ட்வாய்ஸ்)

அனாமிகா: "ஏய்... லூசா நீ? இதை போய் சோபானு சொல்றியே... பாதி சோ னு வேணா சொல்லு..."

மைண்ட்வாய்ஸ் : (மனசுக்குள்) ஸ்ஸ்ஸ்பப்பா...இப்பவே கண்ண கட்டுதே...

ப்ரியா : "மைண்ட்வாய்ஸ் அவர்களே, என் தங்கை கேட்ட கேள்விக்கென்ன பதில்?"

மைண்ட்வாய்ஸ் : (மனசுக்குள்) ஹ்ம்ம்...அக்காவுக்கு தங்கச்சியே பெட்டர்... எப்படி சமாளிக்க போறனோ... அப்பாவி தங்கமணியே துணை.. (என கண்ண மூடி ஒரு நிமிஷம் கும்பிடுது மைண்ட்வாய்ஸ்)

வாசகன்: "இருங்க அம்மணிகளா... சொல்லுங்க மைண்ட்வாய்ஸ்... இந்த சோபால எப்படி?"

மைண்ட்வாய்ஸ் ஏதோ சொல்ல வர அதற்குள் எல்.கே இடைமறிக்கிறார்...

"தோழர்களே, நம்ம சங்கத்தோட மிசன் ஸ்டேட்மன்டே அப்பாவிய கலாய்க்கரத பத்தி பேசி சந்தோசப்படறது தான்... அதோட இந்த நிகழ்ச்சி மூலமா நம்ம சங்கத்துக்கு இன்னும் நாலு பேரை சேர்க்கறதும்... இடைல இந்த சோபா பிரச்சனைய பெருசுப்படுத்துறது சரியா படல... நான் சொல்றது...(என நிறுத்தி எல்.கே ஆழமாய் ஒரு ஜட்ஜ்மென்ட் லுக்கு விட...) அதற்குள்,

தக்குடு : "அதான் நாட்டாமை தீர்ப்பு சொல்லியாச்சில்ல... உக்காச்சுகுங்க எல்லாரும்... ம்ம்.. " (என சொல்லிவிட்டு நைசாய் எல்லாருக்கும் முன் நல்ல இடம் பிடித்து உட்காருகிறார் தக்குடு)

மைண்ட்வாய்ஸ்: "என்ன சாப்பிடறீங்க எல்லாரும்? காபி ஆர் டீ?" (என உபசரிக்க)

அனாமிகா: "அதான் காபி வித் மைண்ட்வாய்ஸ்னு சொல்லியாச்சில்ல... பிறகென்ன "ஆர் டீ" னு ஒரு இடை சொருகல்" (என அனாமி வழக்கம் போல் சுனாமி அவதாரம் எடுக்க மைண்ட்வாய்ஸ் நாலு அடி தள்ளி நிற்கிறது)

ப்ரியா : "இரு கண்ணு. மைண்ட்வாய்ஸ் பாவம் முதல் நிகழ்ச்சி இல்ல... மிரண்டு போய் நிக்குது... ஒண்ணும் வெவரம் தெரியல பாவம்... எல்லாரும் என்ற செல்ல தங்கச்சி உன்னை மாதிரியே அறிவா இருக்க முடியுமா சொல்லு" (என சமாதானம் செய்கிறார்)

அதற்குள் எல்லாருக்கும் காபி கோப்பை வழங்கப்படுகிறது, அதை ஒலிம்பிக்ஸ் கோல்ட் மெடல் பரிசு கோப்பை ரேஞ்சுக்கு பீலிங்கோட வாங்குகிறார் தக்குடு

மைண்ட்வாய்ஸ்: "ஒகே ப்ரோக்ராம்க்கு போலாமா?" (என பவ்யமாய் கேட்க)

எல்.கே: "அப்போ இவ்ளோ நேரம் என்ன பண்ணினீங்க?" (மறுபடியும் ஒரு ஜட்ஜ்மென்ட் லுக்)

(டென்சனான) மைண்ட்வாய்ஸ்: "எல்.கே ஒரு விஷயம் சொல்லட்டுமா, கேள்வி கேக்கறது ரெம்ப சுலபம்..."

தக்குடு: "ஆனா பதில் சொல்றது ரெம்ப கஷ்டம், எங்களுக்கும் நல்லா தெரியும். ஏன் மைண்ட்வாய்ஸ் நீயும் இந்த அப்பாவி கூட சேந்து சேந்து டயலாக் எல்லாம் காப்பி அடிக்கற...ஹையோ ஹையோ..."

வாசகன்: "சரி சரி, அமைதி அமைதி, நிகழ்ச்சிய நடத்த விடுங்க கண்ணுகளா"

மைண்ட்வாய்ஸ்: "ப்ரொபசர் சார், ஐ லைக் இட்... " (என அவருக்கு கை குடுத்து நன்றி தெரிவித்த மைண்ட்வாய்ஸ்) முன்னாடி இருக்கற வெறும் சுவத்தை பாத்து "நிகழ்ச்சிக்கு போகலாமா நேயர்களே" னு கேக்க அதற்குள்

தக்குடு: "இரு இரு, இப்ப என்னத்துக்கு ஆள் இல்லாத கடைல டீ ஆத்தற மாதிரி வெறும் செவுத்த பாத்து பேசிண்டுருக்க"

மைண்ட்வாய்ஸ்: "அது சும்மா ஆடியன்ஸ் இருக்கற மாதிரி நாம கற்பனை பண்ணிக்கணும்"

தக்குடு: "அப்ப நடுநடுல சிரிக்கற சத்தம் எல்லாம் வருமே இந்த ப்ரோக்ராம்ல... அது எப்படி?"

மைண்ட்வாய்ஸ்: "அது எபக்ட் சேத்தறது தான்"

தக்குடு: "இந்த பொழப்புக்கு !@#$%^& ....." (என ஆரம்பிக்க மைண்ட்வாய்ஸ் எழுந்து ஓடாத குறை தான்)

அதற்குள் வாசகன் ஏதோ கேக்க வரார் "தக்குடு, எனக்கு ரெம்ப நாளாவே இதை பத்தி கேக்கணும்னு... அது என்ன இப்படி  !@#$%^&  சிம்பல்ஸ் எல்லாம்..."

தக்குடு பதில் சொல்வதற்குள் இடைமறித்த எல்.கே "அது வேற ஒண்ணும் இல்லைங்ண்ணா... என்ன எழுதறதுனு வார்த்தை கிடைக்காதப்ப இப்படி போட்டு விடறது தான். படிக்கறவங்க அவங்க கற்பனைக்கு தகுந்த மாதிரி பில் பண்ணிக்க வேண்டியது தான்" (தக்குடு முறைப்பதை இக்னோர் செய்கிறார் எல்.கே)

வாசகன்: "இதானா மேட்டர்...நான் கூட இந்த பின்நவீனத்துவம்னு ஏதோ சொல்றாங்களே...அதோன்னு நெனச்சுட்டேன்"

தக்குடு பதில் சொல்ல வருவதற்குள் மைண்ட்வாய்ஸ் டென்சனாய் "எச்சூஸ்மீ... இன்னைக்கி ப்ரோக்ராம் நடத்தலாமா வேண்டாமா?" என கேட்க, வாழ்வில் ஒரே முறை டிவியில் வரும் சான்ஸ் என நாலு மணி நேரம் மேக் அப் செஞ்சுட்டு வந்த ப்ரியா அக்கா டென்சன் ஆகிறார்

ப்ரியா: "தம்பிகளா வாழ்க்கைல பொறுமை முக்கியம்...அதுவும் மீடியால ரெம்ப ரெம்ப முக்கியம்..."

தக்குடு: "இப்ப எங்க பொறுமை போய்டும் அது நிச்சியம்... "

அங்கு இன்னொரு கலவரம் உருவாகும் நிலை புரிய... மைண்ட்வாய்ஸ் சுதாரித்து "வர்றவங்க வாங்க... நான் நிகழ்ச்சிய ஆரம்பிக்கறேன்" என அறிவிப்பு விட எல்லாரும் முதல் நாள் காலேஜ் போகும் ஜூனியர்ஸ் போல் மௌனமாய் அமர்கிறார்கள்

"ஒன்ஸ் அகேயன்...வணக்கம் அண்ட் வெல்கம் டு காபி வித் மைண்ட்வாய்ஸ்... இதுவரைக்கும் அறிமுகங்கள் எல்லாம் பாத்தோம்... இனி நிகழ்ச்சிக்கு போறதுக்கு முன்னாடி ஒரு சின்ன பிரேக்... மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மைண்ட்வாய்ஸ்"

டைரக்டர் கட் சொல்லும் வரை பொறுமையாய் இருந்த அனாமிகா "என்னது...அதுக்குள்ள பிரேக்ஆ? இதுக்கு அப்பாவி எழுதற 'ஜில்லுனு ஒரு கருமமே' பரவால்ல... " என புலம்புகிறார்

இது தான் சமயமென ப்ரியா அக்கா "அதாண்டி நான் சொல்றது...அவ என்ன தான் மொக்க போட்டாலும் ஜவ்வு இழுத்தாலும் அவ மாதிரி  வராது...." எனவும்

தக்குடு நடுவில் புகுகிறார் "ப்ரியா அக்கா, நான் உங்கள்ட்ட ஒரு ஸ்பெஷல் கோச்சிங் க்ளாஸ் எடுக்கணும்னு நெனச்சுண்டு இருக்கேன்... எப்படி இப்படி பாராட்ட மாதிரியே பல்பு குடுக்கறேள்...ச்சே... செம டேலன்ட் தான்"

அதற்குள் டைரக்டர் "ஸ்டார்ட் கேமரா - ஏக்சன்" சொல்ல எல்லாரும் அமைதி ஆகின்றனர்

"வணக்கம் அண்ட் வெல்கம் டு... " என வழக்கமான நீண்ட டயலாக் சொல்லி மூச்சு வாங்குது மைண்ட்வாய்ஸ்....

மைண்ட்வாய்ஸ்: "ஒகே தக்குடு நீங்க சொல்லுங்க மொதல்ல... இந்த டாப் அஞ்சு பேர்ல ஒருத்தரா நீங்க வந்ததை எப்படி பீல் பண்றீங்க"

தக்குடு: "அது...அது...ஒரு...ஒரு நல்ல பீலிங்... உதாரணம் சொல்லணும்னா..."

எல்.கே: "தக்குடு வேண்டாம்....உன் உதாரணம் பத்தி எனக்கு தெரியும் தம்பி" என எச்சரிக்க

தக்குடு: "இல்ல நான் சொல்லுவேன்" என அடம் பிடிக்கிறார் தக்குடு

வாசகன்: "விடுங்க எல்.கே, வளர்ற பிள்ள சொல்லிட்டு போகட்டும்" என சப்போர்ட் செய்கிறார் (பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல்)

தக்குடு: "அது என்னனு கேட்டேள்னா... சிம்பு நயன்தாரா பிரேக் அப் ஆனப்ப எல்லா பயலுவ மனசுலயும் 'இன்னொரு சான்ஸ் இருக்குடா மச்சி'னு ஒரு பீலிங் வந்தது பாருங்கோ....அப்ப ஒரு சந்தோஷம் வந்தது பாருங்கோ..." அதற்குள் இடைமறிக்கிறார் எல்.கே

எல்.கே: "ஒகே தம்பி, எங்களுக்கு புரிஞ்சு போச்சு... உன் பீலிங் நல்லாவே புரியுது..." என காப்பாற்றுகிறார் எல்லாரையும்

அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்த மைண்ட்வாய்ஸ் மெல்ல சுதாரித்து ப்ரியாவிடம் அதே கேள்வியை கேட்கிறார்

ப்ரியா அவசர அவசரமாய் மேக் அப் சரி பார்த்து விட்டு "ஹ்ம்ம்... க்கும்... " என தொண்டையை சரி செய்ய

தக்குடு "ப்ரியா அக்கா, பாட போறேளா... என்ன ராகம்... நம்ப நித்யஸ்ரீ இருக்காளே...அதான் ஜிமிக்கி எல்லாம் போட்டுண்டு... அப்புறம் லோலா...."

அதற்குள் வழக்கம் போல் எல்.கே என்ட்ரி "தக்குடு... அவங்களுக்கு நித்யஸ்ரீனு சொன்னாலே தெரியும்... "

அதற்குள் ப்ரியா அக்கா டென்ஷன் ஆகிறார் "கேமரா என் பக்கம் வர்றதே அபூர்வம்...அந்த நேரம் பாத்து, நடுநடுல நீங்க எல்லாம் பேசி கேமராவை உங்க பக்கம் இழுக்கறீங்க... இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...நான் இதை..."

"கூல் அக்கா கூல்..." என வராங்க நம்ம அனாமி

"என்ன கூல், கம்பங்கூழா...இப்படி தான் எங்க ஊர் பக்கம்..." என வாசகன் சார் ஆரம்பிக்க

"சைலன்ஸ்..." என பொறுமை போய் கத்துகிறது மைண்ட்வாய்ஸ், எங்கும் நிசப்தம்

கொஞ்சம் டென்ஷன் குறைஞ்சதும் "இங்க பாருங்க...நான் யாரை கேள்வி கேக்கறனோ அவங்க தான் பதில் சொல்லணும்... வேற யாராச்சும் பேசினா... அப்புறம் உங்கள டிஸ்கோலிபை  பண்ணிடுவோம்... ம்ம்... ப்ரியா, நீங்க சொல்லுங்க..."

ப்ரியா: "நான்...எனக்கு... ரெம்ப ரெம்ப...ஹாப்பியா...சந்தோசமா... மகிழ்ச்சியா..."

மைண்ட்வாய்ஸ்: "யு சி ப்ரியா... எல்லாம் ஒரே அர்த்தம் தான்..."

ப்ரியா: "எஸ் எஸ்... ஆனா அவ்ளோ ட்ரிபிள் சந்தோஷம்னு சொல்ல வந்தேன்"

"ஓ...வெரி குட்... வெரி குட்...வெரி எக்ஸ்ப்ரசிவ்... " என மைண்ட்வாய்ஸ் சந்தோசத்துடன் இப்போ எல்.கே பக்கம் திரும்புச்சு

"சொல்லுங்க எல்.கே... ஹொவ் டூ யு பீல் டு பி ஹியர்?" என கேட்க

"ஏன் அதை தமிழ்ல கேக்க மாட்டீங்களா?" என எல்.கே கேட்க

"உங்கள அப்பாவி நக்கீரர்னு சொல்றது தப்பே இல்லைன்னு இப்ப தோணுது... சரி விடுங்க... பதில் சொல்லுங்க" என பெருமூச்சு விடுது மைண்ட்வாய்ஸ்

"அப்பாவிய கலாய்க்கறது சந்தோஷம் மட்டுமில்ல, சமுதாயத்துக்கு நான் செய்ய வேண்டிய கடமையும் கூடனு நான் நினைக்கிறேன்... எடுத்து சொன்னாதானே நல்லது எது கேட்டது எதுனு மக்களுக்கு புரியும்" என்கிறார் எல்.கே

மைண்ட்வாய்ஸ்: "நல்லா சொன்னீங்க எல்.கே... வாசகன் சார் நீங்க சொல்லுங்க... எப்படி இருக்கு இங்க இருக்கறது?"

வாசகன்: "அப்பாவிய கலாய்க்கரதுங்கறது விட, மாப்பிள்ளைக்கு சப்போர்ட் பண்றது தான் என் முக்கிய நோக்கம்... அதனால இங்க இருக்கறது ரெம்ப சந்தோஷம்"

மைண்ட்வாய்ஸ்: "நன்றி வாசகன் சார்... கடைசியா நம்ம..." (லேசான உதறலுடன்) "ம்...அ.. அனாமிகா... சொல்லுங்க அனாமிகா?" என பாவமாய் ஒரு லுக் விடுது மைண்ட்வாய்ஸ் (கூடவே அப்பாவி தங்கமணி துணைனு ஒரு வாட்டி சொல்லுது மைண்ட்வாய்ஸ் மனசுக்குள்ள)

"கேன் யு ரிப்பீட் தெ கொஸ்டின் ப்ளீஸ்?" என ஸ்டைலா ஒரு பார்வை பார்க்கிறார் சுனாமி, மன்னிக்கவும் அனாமி

மைண்ட்வாய்ஸ் அதுலயே பயந்து வேர்த்து வடிய "ம்... நீங்க இங்க இருக்கறத பத்தி என்ன பீல் பண்றீங்க?"

அனாமிகா: "ம்... பீல் பண்றதுக்கு என்ன... அப்படியே பறக்கற பீலிங் தான்...தக்குடு மாதிரி ஒரு உதாரணம் சொல்லணும்னா...." அதற்குள் "வேண்டாம் வேண்டாம்"னு பதறுது மைண்ட்வாய்ஸ்

ஆனா அனாமிகா ஒரு முறைப்பு காட்டியதும் "சொல்லும்மா நீ என்ன வேணா சொல்லு" னு சைலண்ட் ஆய்டுச்சு மைண்ட்வாய்ஸ்

"ம்... அதாவது...நான் சுட்ட குழி பணியாரம்... குழிலையே கருகி போய்டாம பொங்கும் காவேரியா வந்தா எப்படி இருக்கும்...அப்படி ஒரு சந்தோஷம்...ஏன்னா, அப்பாவிய கலாய்க்கறதுன்னா என்னை அண்டார்டிகாவுக்கு கூப்ட்டாலும் போவேன்... அவ்ளோ  ஏன், வேற Planetக்கு கூப்பிட்டாலும் போவேன்....ஹா ஹா ஹா" என அனாமிகா செட் அதிர சிரிக்க, கேமராமேன் இன்னொரு முறை மயக்கம் ஆகிறார்

மைண்ட்வாய்ஸ் (மனசுக்குள்) "வேற Planetல இருந்து கூப்பிடறதா? ஹ்ம்ம்.... இந்த Planetல இருந்து அனுப்ப எதுனா ஐடியா இருக்கானு நான் யோசிக்கறேன்"

அதற்குள் டைரக்டர் வந்து "ஸ்லாட் டைம் முடிஞ்சு போச்சு, மிச்சத்த அடுத்த வாரம் வெச்சுக்கலாம்" னு மைண்ட்வாய்ஸ் காதுல சொல்லிட்டு போறார்

"நேயர்களே... இந்த நிகழ்ச்சியில் இன்னும் நெறைய சுவாரஷ்யமான செக்மன்ட்டுகள் பாக்கி இருக்கின்றன... எல்லாத்தையும் இன்னைக்கே முடிக்கணும்னு தான் நினைச்சோம்...ஆனா..." என நிறுத்தி அஞ்சு பேரையும் ஒரு அர்த்த பார்வை பார்க்குது மைண்ட்வாய்ஸ்

மறுபடி கேமரா பக்கம் திரும்பி "இன்னும் அப்பாவி பதிவுகள் பற்றி இந்த அஞ்சு பேரின் கருத்து, Prank கால், சாரி & தேங்க்ஸ் எல்லாம் இருக்கு... அதை அடுத்த வாரம் பாப்போம்... அதுவரை விடுதலை பெறுவது... மன்னிக்கவும், விடை பெறுவது உங்கள் மைண்ட்வாய்ஸ்"

அஞ்சு பேரும்: "டாட்டா...பை பை" சொல்றாங்க, மறுபடியும் சந்திராயன்ல ஏற போற எபக்ட் தான்...:)

நிகழ்ச்சி முடிஞ்சு வந்து மைண்ட்வாய்ஸ் அப்பாவிகிட்ட சொன்ன வார்த்தை தான் எல்லாத்துக்கும் ஹைலைட் "அப்பாவி...உன்னை நான் எவ்வளவோ கிண்டல் பண்ணி இருக்கேன்...ஆனா இன்னிக்கி மனசுவிட்டு பாராட்ட போறேன்... அந்த அஞ்சு பேரையும் அரை மணி நேரம் வெச்சு சமாளிக்க முடியல என்னால... நீ எப்படி மாசகணக்கா... ஹ்ம்ம்..." என அப்பாவியின் கைய புடிச்சுட்டு ரெம்ப பீல் பண்ணுச்சு மைண்ட்வாய்ஸ்

அதுக்கு அப்பாவியின் பதில், மர்மமாய் ஒரு புன்னகை மட்டுமே...:)))

என்ன பிரெண்ட்ஸ், இந்த போஸ்ட் என்ஜாய் பண்ணினீங்களா? இன்னும் ஒரு எபிசொட் போடலாமா வேண்டாமாங்கறதை நீங்களும் / அந்த அஞ்சு பேரும் சொல்ற ரெஸ்பான்ஸ் பொறுத்து முடிவு செய்றேன்...:-)))

ஹாய் எல்.கே, தக்குடு, வாசகன், ப்ரியா & அனாமிகா,
உங்ககிட்ட சொல்லாம, பர்மிசன் இல்லாமையே உங்களை கலாய்ச்சு(என்னையும் கொஞ்சம் கொஞ்சம் கலாய்ச்சுருக்கேன் - நோட் தி பாயிண்ட் யுவர் ஆனர்) இதை போட்டுட்டேன்... மன்னிச்சுக்கோங்க.... நீங்க டென்ஷன் ஆகாம இருந்தா சந்தோசப்படுவேன்... ஆனா டென்ஷன் ஆனீங்கன்னா ரெம்ப ரெம்ப சந்தோசப்படுவேன்... You Know Why? சிலரை டென்ஷன் படுத்தி பாக்கறதுல ஒரு தனி திருப்தி இருக்கும், அந்த லிஸ்ட்ல நீங்களும் உண்டு... ஹா ஹா ஹா....:))))))
இப்படிக்கு,
உங்கள் பாசமலர் அப்பாவி

ஒகே மீ எஸ்கேப்..:)))

91 பேரு சொல்லி இருக்காக:

எஸ்.கே said...

நல்ல காமெடியா இருந்திச்சு!

Mahi said...

ஹாஹ்ஹா! இப்படியும் கலாய்க்கலாமா?! ம்ம், நல்ல காமெடி புவனா!

/இந்த போஸ்ட் என்ஜாய் பண்ணினீங்களா?/அதெல்லாம் நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாஆஆஆ என்சொய் பண்ணினோம். சீக்கிரம் அடுத்த பகுதி போட்டுடுங்க. அவிங்க எல்லாரும் டென்ஷன்லாம் ஆக மாட்டாங்க,டோன்ட் வொரி! :)))))))))

திவா said...

:-)))

Chitra said...

நீங்க டென்ஷன் ஆகாம இருந்தா சந்தோசப்படுவேன்... ஆனா டென்ஷன் ஆனீங்கன்னா ரெம்ப ரெம்ப சந்தோசப்படுவேன்...


......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... இது இன்னும் செம comedy!

raji said...

கலக்கல் கலாய்ப்பு.கலக்கல் காமெடி.கன்டின்யு தி கலாய்ப்பு

Gopi Ramamoorthy said...

மைன்ட் வாய்ஸ், இது எறும்பு கடிச்ச மாதிரி கூட இல்லை:-(

இன்னும் கன்னாபின்னான்னு கலாய்க்கனும்.

அவங்ககிட்ட அனுமதி கேட்காமல்தான் கலாய்க்கனும். பிரியாணி ஆகப் போற ஆட்டுக்கிட்ட அனுமதி கேட்டுக்கிட்டு இருந்தோம்னா, நாம எப்போ பிரியாணி துன்றது:-)

கல்பனா said...

நீங்க டென்ஷன் ஆகாம இருந்தா சந்தோசப்படுவேன்... ஆனா டென்ஷன் ஆனீங்கன்னா ரெம்ப ரெம்ப சந்தோசப்படுவேன்... You Know Why? சிலரை டென்ஷன் படுத்தி பாக்கறதுல ஒரு தனி திருப்தி இருக்கும், //

ஹ ஹ ஹ ஹ ஹா .. சூப்பரப்பு கலக்கிடிங்க.....( என்ன ஒரு வில்லத்தனம் )

Sathish A said...

:-)

தி. ரா. ச.(T.R.C.) said...

@அப்பவியோட தங்கமணி இப்போ அவசரமா ஊருக்கு கிளம்பிகிடே இருக்கேன் வந்து கவனிச்சுக்கிறேன் !இப்போ உள்ளேன் அம்மணி மட்டும்.

எல் கே said...

எல்லாத்துக்கும் ஒரு உண்மை சொல்லிகறேன். இதுல மைன்ட் வாய்ஸ் அப்பாவியோட உண்மையான மைன்ட் வாய்ஸ் இல்லை. அப்பாவியே மைன்ட் வாய்ஸ் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு வந்து ஏமாத்தி இருக்காங்க. அதுக்கு என் கண்டனங்கள்

சௌந்தர் said...

என்ன பிரெண்ட்ஸ், இந்த போஸ்ட் என்ஜாய் பண்ணினீங்களா? இன்னும் ஒரு எபிசொட் போடலாமா வேண்டாமாங்கறதை நீங்களும் / அந்த அஞ்சு பேரும் சொல்ற ரெஸ்பான்ஸ் பொறுத்து முடிவு செய்றேன்.../////

ஏன் நல்லா தானே போச்சு எதுக்கு இன்னொரு எபிசொடு வேண்டாம்பா வேண்டாம்

geethasmbsvm6 said...

"அப்பாவிய கலாய்க்கறது சந்தோஷம் மட்டுமில்ல, சமுதாயத்துக்கு நான் செய்ய வேண்டிய கடமையும் கூடனு நான் நினைக்கிறேன்... எடுத்து சொன்னாதானே நல்லது எது கேட்டது எதுனு மக்களுக்கு புரியும்" என்கிறார் எல்.கே //

ஹிஹிஹி, ஏடிஎம், உங்களை அறியாமல் உண்மையை உரக்கச் சொன்னதுக்கு சந்தோஷம்! :)))))))))))))))

geethasmbsvm6 said...

அது சரி, எனக்கு மட்டும் ஏன் லேட்டா அப்டேட் ஆகுது? :(( குழப்பம்!

தங்கம்பழனி said...

அச்சோ அச்சச்சோ...

kggouthaman said...

நல்ல நகைச்சுவைப் பதிவு. அப்பாவியைக் கலாய்க்கிறவர்களை கலாய்க்கும் பதிவு என்று சொல்லலாம்!

மனம் திறந்து... (மதி) said...

//அப்பாவி...உன்னை நான் எவ்வளவோ கிண்டல் பண்ணி இருக்கேன்...ஆனா இன்னிக்கி மனசுவிட்டு பாராட்ட போறேன்...//

மக்கள் மத்தியில் பகிரங்கமா கூப்பிட்டு கௌரவிச்சதால, ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு, அந்த அஞ்சு பேர்ல யாராவது இப்படி சொல்லுவாங்கன்னு கடைசி வரைக்கும் நப்பாசையுடன் எதிர் பார்த்து, பின் ஏமாந்து, மனம் பொறுக்காமல் தானே இப்படி சொல்லிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்ட அப்பாவியை நினைத்தால் ஒரு பக்கம் பாவமாகத் தான் இருக்கிறது! :))))))

middleclassmadhavi said...

தனித் தனியா கலாய்ச்சிருக்கலாமோ?!!! :))

கீறிப்புள்ள!! said...

செம.. கலாய்ப்பவர்களை கலாய்ப்பது எப்படின்னு நீங்க ஒரு டியுசன் எடுக்கலாம்.. ஹி ஹி ஹி..

/அதை ஒரு சமுதாய கடமையா நெனச்சு செஞ்சுட்டு வராங்க..//
அவர்களின் கடமை உணர்ச்சியை நான் பாராட்டுகிறேன்.. :)

L.K: Lost in Kourt
தக்குடு: தவிடு பொடி
அனாமிகா: Terror
வாசகன்: மைத்துனனின் மெய்காப்பாளன்
ப்ரியா: ??? (என்ன சொல்றதுன்னே தெரில்லைங்க்கா.. உங்கள போய் இப்டி சொல்லிபோட்டாங்களே..)

மைண்ட்வாய்ஸ்: Lost Voice..

இவங்க அஞ்சு பேரும் மைண்ட்வாய்ஸ்-ஓட சேந்து அப்பாவிய எப்டி கலாய்க்க போறாங்கன்னு பாக்க வந்த எனக்கு பயங்கர ஷாக்.. இந்த பலத்த அடியிலிருந்து இந்த அஞ்சு பேரும் மீண்டு வர முடியுமா?? அப்டியே வந்தாலும் அப்பாவிய பழையபடி கலாய்க்க முடியுமா?? இப்படி பல கேள்விகள் நம் முன்னால் இருக்கின்றது.. ஆனால் இதற்க்கெல்லாம் காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும்.. பொறுத்திருந்து பார்ப்போம்..

ஏத்திவிட்டு வேடிக்கை பார்ப்போர் சங்கம்.. ஹி ஹி ஹி.. மீ டூ எஸ்கேப்.. :)))

எல் கே said...

என்னது எங்களை கலாய்ச்சு இருக்காங்களா?? எங்க ?? பல இடங்களில் அவரையே கிண்டல் அடிச்சிகிட்டு இருக்கிறார்

புதுகைத் தென்றல் said...

அடுத்த எபிசோட் எப்ப??!!

priya.r said...

அடபாவி !

இப்போ தான் சந்தோசமா ஒரு பதிவு போட்டு வந்தா
இப்படியா ;எனக்கேவா ;இந்த வையகம் தாங்குமா
இப்படை(எங்கள் ஐவர்) படை இருக்க அப்படை வெல்லுமா

தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
உன்பதிவினால் சுட்டவடு

வேண்டாம் அப்பாவி ! நாங்க ஆடுகளா கூட இருக்கலாம்
ஆனா ஆடு புலி ஆட்டத்தில் ஆடுகள் ஜெயிச்சுதாகவும் வரலாறு இருக்கு.,ஹ ஹா

மீண்டும் வருவேன் !

priya.r said...

ஹி ஹீ இருந்தாலும் அனாமி உன்னை பண்ணிய டேமேஜ் விட இந்த டேமேஜ்
கம்மி தான் .,தேங்க்ஸ்டி!

MANO நாஞ்சில் மனோ said...

கடைசி வரை அந்த காபி வரலை.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

அமைதிச்சாரல் said...

//நீங்க டென்ஷன் ஆகாம இருந்தா சந்தோசப்படுவேன்... ஆனா டென்ஷன் ஆனீங்கன்னா ரெம்ப ரெம்ப சந்தோசப்படுவேன்... You Know Why? சிலரை டென்ஷன் படுத்தி பாக்கறதுல ஒரு தனி திருப்தி இருக்கும், அந்த லிஸ்ட்ல நீங்களும் உண்டு//

பட்டைய கெளப்பறீங்க அப்பாவி :-)))))))

Balaji saravana said...

:))))))))))))))))))))

priya.r said...

சகோதர சகோதிரிகளே

முதலில் இருந்து சொல்லட்டுமா

ஸ்டுடியோ வாசலில் இருந்து எங்களை வரவேற்றவர் அப்பாவியின் ரங்கஸ் தான்

அப்பாவி மேக் அப் ரூமிற்க்குள் போனவள் சும்மா இந்து மணி நேரம் தான் ஆட்சுக்கா என்று சொல்லி

தனது கண்களை துடைத்து கொண்டார்

பார்த்த வாசகன் வேறு மாப்பிளை என்று ஒரு கத்தல்! இருவர் கண்களிலும் கண்ணிற் வெள்ளம்

LK தான் துண்டு கொடுத்து இருவரையும் ஆறுதல் படுத்தினார் என்று உபரி தகவல்

priya.r said...
This comment has been removed by the author.
ஹேமா said...

தங்கமணி...பாருங்க ப்ரியா ரொம்ப நொந்துபோயிருக்காங்க.இப்பிடியெல்லாம் செய்ய்க்கூடாது !

priya.r said...

ஓ ! அவர் இந்து மணி நேரம் என்று கண்ணீரோடு சொன்னது ஐந்து மணி நேரமாம் !

கையில் இரண்டு பெரிய பாக்ஸ் .,திறத்து பார்த்தா 10 செட் சாரீஸ் வித் மாட்சிங்

அப்புறம் தனியா பெரிய ட்ராலி மாதிரி ஒன்னுலே எல்லாமே மாக் அப் items ; ஒரு சிலது எல்லாம் நீங்க பார்த்தே இருக்க மாட்டீங்க .,நேத்து மார்கெட்ல introduce ஆனதெல்லாம் இன்னைக்கு

இவ கிட்டே இருக்கு வாடி என் சின்னம்மா பெத்த சீமந்த புத்திரியே

என்று மனதிற்க்குள் சொல்லி கொண்டு ஒரு நோட்டம் விட்டு அப்பாவியை பாராட்டி கொண்டு

அவள் வரவை எதிர்பார்த்து அமர்ந்து இருந்தோம்

Thanks Hema .,I myself have cancelled the above comments due to double entry of some lines!

priya.r said...

அப்புறம் அக்கா ஒரு வழியா வந்து சேர்த்தாங்க

இல்லே இல்லே ரெட் கட் ஷு எல்லாம் போடலே

இந்த இடத்திலே ஒரு உண்மையை சொல்லியே ஆகணும்

ரெட் கட் ஷு போட்டு இருந்தா அவ அப்பாவியாம்

கூலிங் கிளாஸ் போட்டு இருந்தா அவ மின்ட் வாய்ஸ் ஆம்

கொடுமைடா ஸ்வாமி ன்னு நொந்துக்க தான் முடியும் !!!!!!!!!!

priya.r said...

இடை பட்ட நேரத்திலே தக்குடு அங்கே இருந்த ப்ரோக்ராம்மர் கிட்டே சைடு ரீல் ஓட்டி கிட்டு இருந்தார்

என்னனா இவர் எதோ கம்ப்யூட்டர் எக்ஸாம் எழுதனாராம்

அப்பயே அந்த பொண்ணை பார்த்து இருக்காராம்

அதுக்கு அப்புறம் இப்போ தான் பார்க்கராராம்

LK ஒரு வழியா தக்குடுவை கூட்டி கொண்டு வந்தாரா ;அந்த பொண்ணு பொழைச்சுதா!

priya.r said...

ஓ ! அனாமியை பத்தி சொல்லுனா

அம்மா சும்மா சில்லுன்னு டி ஷிர்ட் ஜீன்ஸ் பான்ட் போட்டு கிட்டு ஷாம்பூ போட்ட தலயில் கூலிங் கிளாஸ் வைச்சு கிட்டு

தேவதை மாதிரி இருக்காளா பக்கத்து FLOORLA இருக்கிற ஸ்டுடியோ விழ இருந்தெல்லாம் பசங்க அவ கிட்டே செம கடலை !

இந்த லூசு கன்னிகா இஸ்திரி ஆக போறேன்னு பந்தா பண்ணி கிட்டு இருந்தாளா ;ஒரே ரவுசு தான்

இப்போ வாசகன் சார் அப்பவியோட ரங்கஸ் இ விட்டுட்டு வேறு ஒரு நிகழ்ச்சி தயாரிக்கும் இயக்குனர் ஆம்

அவர் தங்கமணியும் எதோ சொன்னாங்களாம் .,அவர் கையை பிடித்து கிட்டு திரும்பவும் அழுகை !

சரி அவங்க வீட்டு தங்கமணி(என்ற அண்ணி தாங்க ) கூட இதை பத்தி பேசொனும் ன்னு நினைச்சு கிட்டேன்!

priya.r said...

ஓ! lk வா அவரு தலையை குனிச்சு கிட்டு உட்காந்தவர் தான் !

திவ்யாம்மா செமையா அட்வைஸ் செய்து அனுப்பி இருப்பாங்க போல !

குனிந்த தலை நிமிரவே இல்லையே !!

priya.r said...

அப்பாவியா !

அந்த கொடுமையை தான் முதலிலே யே சொன்னேனே

அவ அந்நியன் மாதிரி அந்நியள் ஆம்!!!!!!

அப்பாவியும் அவளேவாம்!

மைன்ட் வாய்ஸ் யும் அவளே வாம் !!

priya.r said...

பேட்டி எடுப்பது எங்களை !

ஆனா இவளுக்கு என்று தனியா ஒரு காரவன் வேன் வேண்டும் என்று அலப்பறை வேறு

ஏன் பக்கத்திலே வந்து வாக்கா என்று உதடு அசையாமல் பேச்சு !

அம்மணிக்கு லிப்ஸ்டிக் அழிந்து விட கூடாதாம் ! :)

தெய்வசுகந்தி said...

கலக்கல் அப்பாவி!! தொடருங்க!!

priya.r said...

மீதி நிகழ்சிகள் இடைவேளைக்கு பிறகு!!!!!

உங்களுக்கு எல்லாம் பிடித்து இருக்கிறதா என்பதும் தயக்கத்திற்கு காரணம்!

sakthi said...

எப்படிங்க இப்படி எல்லாம் ::)))

sakthi said...

நான் சுட்ட குழி பணியாரம்... குழிலையே கருகி போய்டாம பொங்கும் காவேரியா வந்தா எப்படி இருக்கும்...அப்படி ஒரு சந்தோஷம்...ஏன்னா, அப்பாவிய கலாய்க்கறதுன்னா என்னை அண்டார்டிகாவுக்கு கூப்ட்டாலும் போவேன்... அவ்ளோ ஏன், வேற Planetக்கு கூப்பிட்டாலும் போவேன்....ஹா ஹா ஹா" என அனாமிகா செட் அதிர சிரிக்க, கேமராமேன் இன்னொரு முறை மயக்கம் ஆகிறார்


அது நாம யாரு என்ன விபரம் கொங்கு நாட்டு தங்கம்ன்னா சும்மா வா::))))

S.Menaga said...

very nice bhuvan,enjoy this post,continue!!

தி. ரா. ச.(T.R.C.) said...

சிலரை டென்ஷன் படுத்தி பாக்கறதுல ஒரு தனி திருப்தி இருக்கும், அந்த லிஸ்ட்ல நீங்களும் உண்டு இதிலே கோ என்ற எழுத்தில் ஆரம்பிக்கர அவரும் அடக்கமா இல்லியா?

BalajiVenkat said...

///கோ என்ற எழுத்தில் ஆரம்பிக்கர அவரும் அடக்கமா இல்லியா? // hahah ayyo aayyooo .... Uncle..... govindho govindho....

Vasagan said...

அப்பாவி
நைட் fulla labla இருந்துட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுப்போம்னு, உன் பதிவு வை படிச்சுட்டு கண்ணுல தண்ணீர் கொட்ட கொட்ட சிரிச்சு
மயக்கமே வந்துடுச்சு.

\அப்பாவி மேக் அப் ரூமிற்க்குள் போனவள் சும்மா இந்து மணி நேரம் தான் ஆட்சுக்கா என்று சொல்லி

தனது கண்களை துடைத்து கொண்டார்

பார்த்த வாசகன் வேறு மாப்பிளை என்று ஒரு கத்தல்! இருவர் கண்களிலும் கண்ணிற் வெள்ளம்

LK தான் துண்டு கொடுத்து இருவரையும் ஆறுதல் படுத்தினார் என்று உபரி தகவல்\

ப்ரியா
அப்பாவி மறைத்த உண்மைகளை ( திரைக்கு பின்னால் நடந்த நிகழ்சியை) மக்கள் எல்லாம் அறிய செய்ததிற்கு உங்களுக்கு சங்கத்தின் சார்பாக நன்றி நன்றி நன்றி.

ippothaikku
ஒரு சின்ன பிரேக்
I 'll come back .

Vasagan said...

\சிலரை டென்ஷன் படுத்தி பாக்கறதுல ஒரு தனி திருப்தி இருக்கும், அந்த லிஸ்ட்ல நீங்களும் உண்டு இதிலே கோ என்ற எழுத்தில் ஆரம்பிக்கர அவரும் அடக்கமா இல்லியா?\
தி. ரா. ச.(T.R.C.) Sir
மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப அப்பாவி.

sriram said...

அடப்பாவியை கலாய்ப்போர் சங்கத் தலைவரான என்னையும் பொதுச் செயலாளர் கேடியக்காவையும் அழைக்காத்தால் இந்த மீட்டிங்குக்கு Official Status கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Vasagan said...

\ஆனா டென்ஷன் ஆனீங்கன்னா ரெம்ப ரெம்ப சந்தோசப்படுவேன்... You Know Why? சிலரை டென்ஷன் படுத்தி பாக்கறதுல ஒரு தனி திருப்தி இருக்கும், அந்த லிஸ்ட்ல நீங்களும் உண்டு... ஹா ஹா ஹா....:))))))\

உன்னால ரொம்ப டென்ஷன் ஆகி, சுனாமி மாதிரி உண்ணும் விரதத்தை Elephant & Castle lil ஆரம்பித்து விட்டேன். பில்லை உனக்கு அனுப்பிவிடுகிரேறன்

Vasagan said...

அடப்பாவியை கலாய்ப்போர் சங்கத் தலைவரான என்னையும் பொதுச் செயலாளர் கேடியக்காவையும் அழைக்காத்தால் இந்த மீட்டிங்குக்கு Official Status கிடையாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Sri
நிகழ்சி தயாரிப்பு நீங்களும், Direction கேடி inu கேள்வி.

priya.r said...

சரி சரி

சகோதரர்களுக்குள் சச்சரவு வேண்டாம்

அப்பாவியின் அராஜகத்தை பத்தி இப்போ பேசுங்க !

priya.r said...

அப்புறம் இதை சொல்ல வில்லியே இவ்வளோ நேரமா

நடுநடுவே
கனடா வோட finance secretary கிட்டே இருந்து போன் வந்து இருக்கு

எதோ டவுட் என்று பீலா விட்டாளே இந்த அப்பாவி

Charles said...

ஒரு தென்றல் புயலாகி வருமே!!! ஆ ஆ ஆ ... :) கலக்கல் பதிவு. இதுக்கு அனாமிகா என்ன பதில் சொல்ல போறாங்க? இல்ல பதிவா போடுவாங்களா? எப்படியோ எல்லா நக்கலுக்கும் ஒரு பதிவுல பதில் சொல்லிடீங்க. பாவம் ப்ரியா மேடம்... வாழ்த்துக்கள் நாட்டாமை எல்.கே சார்... பாவம் தக்குடு TV program ல கூட முழுசா பேச விடமட்டேன்ட்றாங்க. வாசகன், நீங்க இன்னும் support பண்றத (ரங்கஸ்கு) நிறுத்தவில்லை என்றால் அடுத்த episode இன்னும் கலாக்க போறாங்க.. ஜாக்கிரதை.. அப்பாவி மேடம் நிகழ்ச்சி தொடருமா?

Vasagan said...

எங்கள் குல விளக்கு, தங்க தாரகை

மின்னல் என்ற சுனாமி என்ற அனாமிகா சீனாவில்

பாம்பு சூப் குடித்து கொண்டிருக்கும் வேளையில்

இந்த பதிவை வெளி இட்டதில் இருந்து

அப்பாவிக்கு,
எங்கள் குல விளக்கு, தங்க தாரகை

மின்னல் என்ற சுனாமி என்ற அனாமிகா

அவர்களிடம் பயம் இல்லை என்று தெரிய படுத்தி

கொல்கிறோம் சை கொள்கிறோம்.

(ஹி ஹி மதுரை புத்தி)

priya.r said...

hai 50

ippo thaan nigalchiyila oru thiruppam

Mind voice studiovila entry!!!!!!!

priya.r said...

Adada! kuzhanthaiggu nalla saappaadu cooda kidaiyaathaa :(

priya.r said...

China karaaanga ergane konjam loosu nnu kelvi!
Eva vera ange poi iruggaa.,Enna aaga pogutho!

priya.r said...

அப்பாவியோட ரங்கஸ் கிட்டே ஒரு பேப்பர்
என்னன்னு பார்த்தா
மல்லிகை முல்லை வெண்மணி கிள்ளை
என்ற பாட்டு
அதில் ஒரு வரியில்
கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள் என்று வருமே
அதை அடித்து விட்டு இந்த அப்பாவி
கோவிந்தன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள் என்று எழுதி இருக்கிறாள்!

ஆக ஒரு பதிவில் யார் ப்ரோபோசல் பண்ணினாங்க என்றதற்கு வளவள கொளகொள என்று பதில் அளித்து இருந்தா இல்லையா
அதுவும் பொய் என்பதற்கு அவளோட ரங்கஸ் கையில் இருந்த கடிதமே சான்று

இதை உங்களிடம் சொல்லி இன்று இதோடு விடை பெறுகிறேன் !

Vasagan said...

கீறிப்புள்ள.
\இவங்க அஞ்சு பேரும் மைண்ட்வாய்ஸ்-ஓட சேந்து அப்பாவிய எப்டி கலாய்க்க போறாங்கன்னு பாக்க வந்த எனக்கு பயங்கர ஷாக்.. இந்த பலத்த அடியிலிருந்து இந்த அஞ்சு பேரும் மீண்டு வர முடியுமா?? அப்டியே வந்தாலும் அப்பாவிய பழையபடி கலாய்க்க முடியுமா?? இப்படி பல கேள்விகள் நம் முன்னால் இருக்கின்றது.. ஆனால் இதற்க்கெல்லாம் காலம் மட்டுமே பதில் சொல்ல முடியும்.. பொறுத்திருந்து பார்ப்போம்.. \

கீறிப்புள்ள.
பட்டி மன்ற தலைவர் அவர்களே, எங்கள் கழக கண்மணிகளாம் அண்ணன் தக்குடு, அண்ணன் L K அனாமிகாக்கா , தலை பிரியக்கா அவர்களே, வெளியில் இருந்து எங்களை வாழ்த்தும் தானை தலைவர் என்றும் அன்புடன் பாஸ்டன் ஸ்ரீராம் மற்றும் பொதுச் செயலாளர் கேடியக்கா என்று எல்லாரும் அன்புடன் அழைக்கும் பொற்கொடி என்ற போர்க்கொடி அவர்களின் ஆசியுடன்....
ஐயோ என்ன சொல்ல வந்தேன் இருங்க முதலில் இருந்து ஆரம்பிக்கிறேன் ..

Vasagan said...

\கோபாலன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள் என்று வருமே
அதை அடித்து விட்டு இந்த அப்பாவி
கோவிந்தன் இல்லாமல் கல்யாணம் வேண்டாள் என்று எழுதி இருக்கிறாள்!\

ஹி ஹி என்னதான் போட்டு தாக்குனாலும், பிள்ளைக்கு மாப்பிளை மேல பாசம் ஜாஸ்தி.

Vasagan said...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

கடைசி வரை அந்த காபி வரலை.....
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

கரெக்ட், வெறும் கோப்பையை மட்டும் குடுதுட்டு காபி கோப்பை னு சொலிடாங்க, காபி எங்க னு கேட்ட budget எல்லாம் அப்பாவியின் கரவன் செலவுக்கே சரியாபோச்சு இன்னு அழுதாங்க
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

தக்குடு said...

அடப்பாவி மக்கா! இதுக்கு பேர் தான் கோயம்புத்தூர் குசும்பா...:) நம்ப ப்ரொபசர் வாசகன் சார் பத்தி சொல்லும்போது அழகா சிந்துபூந்துறைலேந்து ஸ்டார்ட் பண்ணி இருக்கலாம், அவர் எப்போதும் அதுலேந்து தான் ஆரம்பிப்பார்..:)

3 போஸ்டுக்கு கமண்ட் போடலைனு சொல்லி நம்ப கேடியக்காவை ஆட்டைல சேக்காம இருந்துருக்க வேண்டாம்.

தக்குடு said...

நல்ல நாள்லையே ப்ரியா அக்கா 60 கமண்டும் 10 ஓட்டும் போடுவாங்க, இன்னிக்கி அவாளை பத்தியே வேற எழுதியாச்சு கேக்கவா வேணும்..:) ரோஸ்பவுடரை சரிபண்ணின்டு வந்து வெளுக்க போறாங்க!!..:)

sriram said...

//Sri
நிகழ்சி தயாரிப்பு நீங்களும், Direction கேடி inu கேள்வி.//

இல்லை வாசகன் அண்ணாச்சி, இந்த Unofficial Meeting க்கும் (வரலாறு முக்கியம் இல்லையா)
எங்களுக்கும் (நான் மற்றும் கேடியக்கா) எந்த சம்பந்தமும் கிடியாது என்பதை நான் இத்தருணத்திலே சொல்லிக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன். தேர்தல் சமயத்திலே கழகத்துக்குள்ளே கருத்து வேற்றுமை ஏற்பட்டால் அது எதிர்க் கட்சிக்கு சாதகமாகி விடுமே எனக் கருதி அமைதி காத்து வருகிறோம், அதனை பயம் என யாரும் கருத வேண்டாமெனவும் சொல்லிக் கொள்ளக் கடமை பட்டிருக்கிறேன்.. சீக்கிரமா ஒரு சோடா கொடுங்கப்பா...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

இராஜராஜேஸ்வரி said...

பொங்கும் காவேரியா வந்தா எப்படி இருக்கும்...அப்படி ஒரு சந்தோஷம்...
Interesting.

அப்பாவி தங்கமணி said...

@ எஸ்.கே - நன்றிங்க

@ Mahi - ஹா ஹா....தேங்க்ஸ் மகி...:)

@ திவா - :))

@ Chitra - தேங்க்ஸ் சித்ரா..

@ raji - தேங்க்ஸ் ராஜி... காண்டினு பண்ணிடுவோம்கறீங்க...:)))

@ Gopi Ramamoorthy - இன்னும் கலாய்க்கனுமா? அது சரி...இதுக்கே என்ன டேமேஜ் ஆக போகுதோன்னு பயமா இருக்குங்க.. :).... நான் சும்மா கலாய்ச்சா நீங்க பலி ஆது ரேஞ்சுக்கு கொண்டு போய் சிக்க விடுறீங்களே பாஸ்.. ஒய் திஸ் கொலைவெறி..:))

@ கல்பனா - ஹா ஹா... வில்லத்தனம் எல்லாம் இல்லீங்க அம்மணி...அப்படி ஒரு பாசமலர் யு சி...ஹா ஹா...:)

@ Sathish A - :)

@ தி. ரா. ச.(T.R.C.) - அட்டெண்டன்ஸ் நோடேட்... ஹாப்பி ஜர்னி...:))

@ எல் கே - இதெல்லாம் அநியாயம் பிரதர்...என்னை கலாய்ச்சா அப்ப மட்டும் மைண்ட்வாய்ஸ் நிஜம் இப்போ பொய்யா... இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லையா..:))

@ சௌந்தர் - ஹா ஹா ... ஒகே..:)

@ geethasmbsvm6 - மாமி... நல்லா பாருங்க... ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற மாதிரி இவ்ளோ விவரமா எனக்கு சாதகமா எழுதி இருக்கேன்னு... "நல்லது எது கேட்டது எதுனு" தான் சொல்லி இருக்கேன்,நெகடிவ்ஆ ஒன்னுமே சொல்லலியே... இப்ப என்ன பண்ணுவீங்க இப்ப என்ன பண்ணுவீங்க...ஹா ஹா...:)

//எனக்கு மட்டும் ஏன் லேட்டா அப்டேட் ஆகுது//
"லேட் ஆனாலும் லேட்டஸ்ட் " சூப்பர் ஸ்டார் பாலிசி தான் உங்களுக்கும் போல ...:)

@ தங்கம்பழனி - ஒய் அச்சச்சோ..:)

@ kggouthaman - நீங்க தான் கரெக்டா பாயிண்ட் புடிச்சு இருக்கீங்க...நன்றிங்க.....ஹா ஹா...:)

@ மனம் திறந்து... (மதி) - ஹா ஹா ஹா...அதுக்கு இப்படி ஒரு கோணம் இருக்கா..:)

@ middleclassmadhavi - யு மீன் அஞ்சு தனி போஸ்ட்... ஆஹா... உலகம் தாங்காது சிஸ்டர்...ஹா ஹா...:)

@ கீறிப்புள்ள!! - ஹா ஹா... டியுசன் பீஸ் அதிகமில்ல ஜென்டில்மேன்... ஒரே லட்சம் தான்(ஒரு க்ளாஸ்க்கு...) ஹா ஹா ஹா... எல்லாருக்கும் பட்டமா... ஒகே டேமேஜ்க்கு அப்பாவி ப்ளாக் பொறுப்பில்லை...ஹா ஹா.. நடந்தது என்ன குற்றமும் பிண்ணனியும் ரேஞ்சுக்கு கொஸ்டின் எல்லாம் கேட்டு இருக்கீங்க பிரதர்...சூப்பர்.. நல்ல சங்கமா இருக்கே உங்க சங்கம்... வாழ்க வளர்க உங்க "திரு"ப்பணி...ஹா ஹா ஹா...:))

@ எல் கே - அப்போ டேமேஜ் பத்தலைனு சொல்ற... ஒகே நோ பீலிங்க்ஸ்... இன்னொரு போஸ்ட் போட்டு ஒரு வழி பண்ணிடுவோம்...ஹா ஹா ஹா... :)

@ புதுகைத் தென்றல் - அவ்ளோ ஆர்வமா அக்கா...ஹா ஹா...:)

@ priya.r - வழக்கம் போல் மானாவாரி கமெண்ட்ஸ் இறுதியாக...ஆனால் உறுதியாக...:)

@ MANO நாஞ்சில் மனோ - ஹா ஹா ஹா... :))

@ அமைதிச்சாரல் - நன்றி நன்றி நன்றி..:)

@ Balaji saravana - :))))))))))))))))))

@ ஹேமா - ச்சே ச்சே... எங்க அக்கா ப்ரியா அஞ்சா நெஞ்சி... இதுக்கெல்லாம் நொந்து போக மாட்டாங்க...:)

@ தெய்வசுகந்தி - தேங்க்ஸ்ங்க சுகந்தி..

@ sakthi - ஹி ஹி... எல்லாம் நம்ம ஊரு காத்துதாங்க...அப்படி போடுங்க.. "கொங்கு நாட்டு"ங்கற வார்த்தைய கேட்டதும் ஒரே பீலிங்க்ஸ் ஆகி போச்சு போங்க...ஹ்ம்ம்.... :))

@ S.Menaga - தேங்க்ஸ் மேனகா...:)

@ தி. ரா. ச.(T.R.C.) - ஹி ஹி ஹி... அவர் தான் டாப் ஆன் லிஸ்ட்ங்கற விஷயம் "சிதம்பர ரகசியம்" ஆச்சே...:))

@ BalajiVenkat - அதே அதே... ஹா ஹா ...:)))

@ Vasagan - ஹா ஹா ஹா... ப்ரியா அக்காக்கு நன்றியா... ஹா ஹா...:))... அவர் அப்பாவியா இல்லையானு எனக்கில்ல தெரியும்....:)))

அப்பாவி தங்கமணி said...

@ பாஸ்டன் sriram - ஹலோ... 123 மைக் டெஸ்டிங்... ம்கும்...
சங்க தலைவர் பாஸ்டன் நாட்டாமையும், பொது செயலாளர் சியாட்டில் சிங்காரியும் "காணாமல் போனோர் சங்கத்தில்" உறுப்பினர் அட்டை வாங்கிய செய்தி வந்தபடியால், அவர்களுக்கு அனுப்பப்பட்ட மீட்டிங் அஜெண்டா "undelivered addressee not found" என போன வேகத்தில் திரும்பி வந்தபடியால் (அப்பாவி பத்திரிக்கைக்கு அனுப்பிய கதை போல்) அவர்கள் இந்த மீட்டிங்ல் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்... :))
என்றும் அப்பாவியின்,
மைண்ட்வாய்ஸ்...:)

@ Vasagan - ஹா ஹா...ஓ தாராளமா அனுப்புங்க.. அவர்கிட்ட தள்ளிடறேன்..ஹா ஹா...:)

//Sri , நிகழ்சி தயாரிப்பு நீங்களும், Direction கேடி inu கேள்வி//
அதெல்லாம் அரசியல் ரகசியம்ங்க...:))

@ Charles - ஹா ஹா ஹா... உங்க சப்போர்ட்க்கு மிக்க நன்றி... நிகழ்ச்சி தொடரலாம் தொடராமலும் போகலாம்... அடுத்த வாரம் வரை ஆகும் டேமேஜ் பொறுத்து பொது குழு கூடி முடிவு செய்யும்... :)))

@ Vasagan - பாம்பு சூப்பா... உவ்வ்வே...ஹா ஹா...:)

@ Vasagan - ஹா ஹா ஹா... போய் நல்லா மனப்பாடம் பண்ணிட்டு வந்து இன்னொரு வாட்டி சொல்லுங்க பாப்போம்... ஹா ஹா ஹா... (கடைசீல ப்ரொபசரை ஸ்டுடென்ட் ரேஞ்சுக்கு கொண்டு போய்ட்டமே... ஆஹா... மன்னிச்சுக்குங்க ப்ரபசர் சார்...:))

//வெறும் கோப்பையை மட்டும் குடுதுட்டு காபி கோப்பை னு சொலிடாங்க//
அடப்பாவமே... பத்து கப் காபி குடிச்சுட்டு இப்படி போய் சொல்லலாமா... பொய் சொன்ன வாய்க்கு காபி கிடைக்காது யு சி...:))

@ தக்குடு - உங்க நெல்லை குசும்பை விடவா பிரதர்...:))) ... (கேடி அக்கா தான் காணாமல் போனோர் சங்கத்துல சேந்துட்டாங்களே... உங்களுக்கெல்லாம் "ஆண்டாள்" ஆசை காட்டி மோசம் பண்ணிய பாவம் தான் துரத்துது போல...Gops - note the point... :))

@ பாஸ்டன் sriram - ஓஹோ... இதுக்கு பேரு தான் பதிவுலக அரசியலா... நான் என்னமோனு நெனச்சேன்... குட் குட்... (ஐ ஜாலி.... நானும் பிரபல பதிவர் ஆய்ட்டேன்... நாங்களும் அரசியல் பேசறோம்ல... நன்றிங்க நாட்டாமை...ஹா ஹா ஹா... :))))))

@ இராஜராஜேஸ்வரி - தேங்க்ஸ்ங்க...

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - ஆரம்பிக்கலாமா பஞ்சாயத்த.... எலேய் பசுபதி... எட்றா அந்த செம்ப....:))

//நாங்க ஆடுகளா கூட இருக்கலாம்//
ச்சே...நீங்க இவ்ளோ நல்லவங்களா இருக்க வேண்டாம்... இப்படி உண்மை பேசுறீங்களே... ஹா ஹா...:))

//மீண்டும் வருவேன்//
மீண்டு வருவேன்னு சொல்ல வந்து ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகி போச்சு...கரெக்டா?,,,:))

//அனாமி உன்னை பண்ணிய டேமேஜ் விட இந்த டேமேஜ் கம்மி தான்//
ஹும்... இப்பவாச்சும் என்னை புரிஞ்சுகிட்டீங்களே... நன்னிஹை...:))

//முதலில் இருந்து சொல்லட்டுமா//
இல்ல இல்ல... ஒரு சேஞ்சுக்கு கடைசீல இருந்து சொல்லுங்க...:))

//LK தான் துண்டு கொடுத்து இருவரையும் ஆறுதல் படுத்தினார் என்று உபரி தகவல்//
எப்போலிருந்து LK சைடு பிசினஸ் ஆரம்பிச்சாரு...ஓ... எலக்சன் டைம் சீசன் பிசினஸ் போல... ஒகே...:))

//திறத்து பார்த்தா 10 செட் சாரீஸ் வித் மாட்சிங்//
பத்தா... எங்க எங்க...?????... ஒரு "saree crazy" கிட்ட இப்படி ஆசை காட்டி மோசம் செய்வது ஞாயமா இது ஞாயமா....?????....:)))

//ரெட் கட் ஷு போட்டு இருந்தா அவ அப்பாவியாம் / கூலிங் கிளாஸ் போட்டு இருந்தா அவ மின்ட் வாய்ஸ் ஆம்///
ஓ...நம்ம ப்ளாக் அண்ட் வைட் சினிமால ஒரு சின்ன மச்சம் வெச்சு அண்ட் வெக்காம டபுள் act வர்ற மாதிரியா... நல்ல கற்பனை ப்ரியா...:)))

//இவர் எதோ கம்ப்யூட்டர் எக்ஸாம் எழுதனாராம் அப்பயே அந்த பொண்ணை பார்த்து இருக்காராம்///
ஹா ஹா ஹா... இது சூப்பர்... ஐ லைக் இட்... அந்த பொண்ணு பேரு கூட ஏதோ... சரி வேண்டாம் விடுங்க...எனக்கு எதுக்கு வம்பு...:))))

//தேவதை மாதிரி இருக்காளா//
தேவதைக்கு இப்ப டிக்சனரில மீனிங் மாத்திட்டங்கனு நியூஸ் வந்தது... இதான் மேட்டர்ஆ? ஒகே..:))

//திவ்யாம்மா செமையா அட்வைஸ் செய்து அனுப்பி இருப்பாங்க போல//
எங்க ஊரு பொண்ணில்ல... அதான் கொஞ்சம் முன் யோசனை ஜாஸ்தி யு சி...:)))

// தனியா ஒரு காரவன் வேன் வேண்டும் என்று அலப்பறை வேறு //
அந்த கேரவன் வேன்ல புல் டைம் நீங்க மேக்-அப்ல இருந்தீங்கனு மைண்ட்வாய்ஸ் என்கிட்ட சொல்லுச்சே...:))

//உங்களுக்கு எல்லாம் பிடித்து இருக்கிறதா என்பதும் தயக்கத்திற்கு காரணம்//
பிடித்து இருக்கிறதாவா? என்ன கேள்வி இது? என் ப்ளாக்க்கு வர்ற பாதி பேர் (என்னையும் சேத்து) இந்த பக்கம் வர்றதே உங்க கமெண்ட்ஸ் படிக்க தான்னு நியூஸ் வருது... அப்ஜக்சன் ஓவர்ரூல்ட்... யு கேன் ப்ரோசீட் பப்ளிக் ப்ராசிகியுட்டர்....:)))

சே.குமார் said...

நல்ல காமெடி.

Vasagan said...

//உங்களுக்கு எல்லாம் பிடித்து இருக்கிறதா என்பதும் தயக்கத்திற்கு காரணம்//
பிடித்து இருக்கிறதாவா? என்ன கேள்வி இது? என் ப்ளாக்க்கு வர்ற பாதி பேர் (என்னையும் சேத்து) இந்த பக்கம் வர்றதே உங்க கமெண்ட்ஸ் படிக்க தான்னு நியூஸ் வருது... அப்ஜக்சன் ஓவர்ரூல்ட்... யு கேன் ப்ரோசீட் பப்ளிக் ப்ராசிகியுட்டர்....:)))

100% true

அன்புடன் மலிக்கா said...

//நீங்க டென்ஷன் ஆகாம இருந்தா சந்தோசப்படுவேன்... ஆனா டென்ஷன் ஆனீங்கன்னா ரெம்ப ரெம்ப சந்தோசப்படுவேன்...//

அப்படியெல்லாம் நான் உங்களை சொல்லமாட்டேன்னு சொல்லமாட்டேன் அ[ட]ப்பாவி..மக்கா..


......ஹா,ஹா,ஹா,ஹி ஹி ஹி ஹா,ஹா,ஹா,ஹா... இது எப்புடி

Krishnaveni said...

Round katti adikkareenga thangam, super

அனாமிகா துவாரகன் said...

@ புவனி,
சோஅன் (Zǎo ān) குட் மார்னிங் இன் சைனீஸ். ஹி ஹி.

அப்புறம், நீங்க‌ பேசியதை எல்லாம் மைன்ட்வொய்ஸ் என்று பொய்யாக எழுதியதற்கு பலத்த கண்டனங்கள்.

@ அனைத்து மக்களுக்கும்,
பிரியாக்கா சொன்னது தான் உண்மையில் நடந்தது. சரியான பொய் ஆட்டம் ஆடறாங்க இவங்க.

@ பிரியாக்கா,

//அப்புறம் தனியா பெரிய ட்ராலி மாதிரி ஒன்னுலே எல்லாமே மாக் அப் items ; ஒரு சிலது எல்லாம் நீங்க பார்த்தே இருக்க மாட்டீங்க .,நேத்து மார்கெட்ல introduce ஆனதெல்லாம் இன்னைக்கு//

//ரெட் கட் ஷு போட்டு இருந்தா அவ அப்பாவியாம். கூலிங் கிளாஸ் போட்டு இருந்தா அவ மின்ட் வாய்ஸ் ஆம் //

ஹா ஹா ஹா. எல்லா வரிகளையும் காப்பி பண்ணி போட்டால் பெரிய பின்னூட்டம் ஆகிடும். உங்கள் ஒவ்வொரு வரிகளும் க்ளாஸ். நீங்க ஏன் ஒரு எதிர் பதிவு எழுத கூடாது. சீக்கிரம் போடுங்க.

//அம்மா சும்மா சில்லுன்னு டி ஷிர்ட் ஜீன்ஸ் பான்ட் போட்டு கிட்டு ஷாம்பூ போட்ட தலயில் கூலிங் கிளாஸ் வைச்சு கிட்டு //
ஹா ஹா. தங்க் யூ. தங்க் யூ. அப்புறம் ஷாம்பூ மட்டுமல்ல கன்டிஷனரும் போட்ட முடிக்கா. மறந்திட்டீங்களே.

அனாமிகா துவாரகன் said...

@ வாசகன் மாம்ஸ்,
//உன்னால ரொம்ப டென்ஷன் ஆகி, சுனாமி மாதிரி உண்ணும் விரதத்தை Elephant & Castle lil ஆரம்பித்து விட்டேன். பில்லை உனக்கு அனுப்பிவிடுகிரேறன் //
ஏன் ஏன். ஏன் என்னை சைட்ல காலை வாருறீங்க. ஹி ஹி.

//பாம்பு சூப் குடித்து கொண்டிருக்கும் வேளையில்//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ. நாக்கு செத்துப்போச்சு. அதை ஏன் கேட்கறீங்க. பிரட்டும், பட்டரும் (அது கூட ரொம்ப ய‌க்கி) தான் சாப்பாடு. நல்ல வேளை, நிறைய நொருக்குத் தீன் (சினக்ஸ்) கொண்டு போனதால கொஞ்சம் பிழைச்சேன். சுனாமி (அக்சுவல்) வேற வந்து கொஞ்சம் டென்ஷனாக்கிச்சு.

அனாமிகா துவாரகன் said...

இப்பத் தான் பின்னூட்டங்களை எல்லாம் படிச்சு முடிச்சேன். இருங்க, பதிவைப் படிச்சுட்டு வருகிறேன். வராமலும் போவேன். ஹி ஹி.

அனாமிகா துவாரகன் said...

//மைண்ட்வாய்ஸை க்ளோஸ்-அப்பில் பார்த்த கேமராமேன் மயங்கி விழ தண்ணி தொளிச்சு அவரை எழுப்பறாங்க...//
ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவங்கக்கா. உங்களப் பாத்து கேமராமேன் மயங்கி விழுந்ததை எழுதி இருக்கீங்க பாருங்க. சூப்பர். ஹா ஹா ஹா.

//இவங்க அஞ்சு பேரு அதை ஒரு சமுதாய கடமையா நெனச்சு செஞ்சுட்டு வராங்க//
நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க. சமூக சேவகர்கள். எங்களுக்கெல்லாம் சமாதான பிரிவில் அன்னை தெரேசாக்கு கொடுத்த மாதிரி ஒரு நேபல் பரிசு கொடுக்க மாட்டாங்களா? ஹி ஹி ஹி.

//என்னமோ சந்திராயன்ல இருந்து எறங்கற ரேஞ்சுக்கு அஞ்சு பேரு கைய அசைச்சுட்டு உள்ள என்ட்ரி குடுக்கறாங்க...//
ஐ லக் இட்.

//இடைல இந்த சோபா பிரச்சனைய பெருசுப்படுத்துறது சரியா படல...//
கார்த்தி சார் ரொம்பவே போக்கஸ்ட்.

//ஏன்னா, அப்பாவிய கலாய்க்கறதுன்னா என்னை அண்டார்டிகாவுக்கு கூப்ட்டாலும் போவேன்... அவ்ளோ ஏன், வேற Planetக்கு கூப்பிட்டாலும் போவேன்..//
ஹா ஹா. வெரி ட்ரூ.

அப்புறம் ஒரு சின்ன டிப்ஸ். நான் சிரிக்கறப்போ சத்தம் வருவதில்லைன்னு சொல்லுவாங்க. அப்புறம் எப்படி இடி அதிருவது மாதிரி சிரிப்பதாம்.

அனாமிகா துவாரகன் said...

@ Charles,
இவங்க பண்ணினது ரொம்ப சீட்டிங். நான் தான் மொதலில இவங்க பேட்டி போடறதா இருந்துச்சு. ஆனா, டைம் கிடைக்காததால, அப்படியே பாதி எழுதின படி இருந்துச்சு. நீங்க கண்டிப்பாக படிக்க வேண்டிய இரண்டு பதிவுகள் இதோ:
http://reap-and-quip.blogspot.com/2011/03/21.html

http://reap-and-quip.blogspot.com/2011/02/blog-post.html

அனாமிகா துவாரகன் said...

இதுக்கு எதிர் பதிவெல்லாம் எழுத எனக்கு டாலன்ட் இல்ல. இருந்த சரக்கை எல்லாம் வச்சு தான் வாலன்டைன்ஸ் டே பேட்டின்னு ஒரு மாசத்துக்கு மொதல்ல எழுதினேன். பேசாம நீயே ஒரு பதிவு எழுதி கொடுக்கா.

priya.r said...

மகளே மனோகரி !
உன் வரவு நல் வரவு ஆகுக !
இன்னும் இன்னும் உன்னிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம்
போட்டு தாக்குவாயாக ...........

Vasagan said...

Busy? Where is the leave letter?

எல் கே said...

எங்க இந்த வார கதை ??? அனாமி நீ சரி இல்லை

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - நன்றிங்க குமார்

@ Vasagan - :)

@ அன்புடன் மலிக்கா - வாங்க மலிக்கா... ரெம்ப நாளா காணோமே... நலமா? ஹா அஹ ஹா...சூப்பர் கமெண்ட்..:)

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி...:))

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா துவாரகன் - சைனீஸா.....மீ எஸ்கேப்... :) சொந்தமா பின்னூட்டம் போட்டாதான் இனி பேச்சு ... காபி பேஸ்ட் நாட் allowed ..:)))

//கன்டிஷனரும் போட்ட//
முடில முடியல...

//இப்பத் தான் பின்னூட்டங்களை எல்லாம் படிச்சு முடிச்சேன். இருங்க, பதிவைப் படிச்சுட்டு வருகிறேன்//
அடக்கொடுமையே.... பதிவ படிக்காமையே இம்புட்டு பேச்சா...grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr....

//ஆனாலும் நீங்க ரொம்ப நல்லவங்கக்கா//
இது மட்டும் தான் எனக்கு கண்ணுக்கு தெரியுது... மத்ததெல்லாம் selective visionasia ல காணாம போய்டுச்சு...:))

//நாங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க//
அப்ஜக்சன் யுவர் ஆனர்....:)

//நான் சிரிக்கறப்போ சத்தம் வருவதில்லைன்னு சொல்லுவாங்க//
யு மீன்... நீ சிரிச்சு அதோட விளைவா எல்லாரும் மயக்கம் ஆகி...அதனால் உன்னை சுற்றி சத்தம் வருவதில்லை...கரெக்ட்?

//நான் தான் மொதலில இவங்க பேட்டி போடறதா இருந்துச்சு//
ஹா ஹா ஹா... நான் முந்திட்டனே...:)

//பேசாம நீயே ஒரு பதிவு எழுதி கொடுக்கா. //
ஏற்கனவே ரெம்ப டேமேஜ் பண்ணியாச்... இனி கொஞ்சம் காயம் எல்லாம் ஆறட்டும் அப்புறம் எழுதுவோம்...:))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - என்னது மகளே மனோகரியா...ஹா ஹா ஹா... :))

@ Vasagan - சாரி, லீவ் லெட்டர் போட்டேன்...ஆனா போன "ஜில்லு..."போஸ்ட் கமெண்ட் செக்சன்'ல ஒட்டிட்டேன்... இப்ப இங்கயும் போட்டுடன்றேன்..Thanks for asking...:)

@ எல் கே - ha ha...thanks for asking... டூ மச் ஆணி...will try to post it today. Thanks...:)

Anonymous said...

@ Karthi Sir,
//எங்க இந்த வார கதை ??? அனாமி நீ சரி இல்லை //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
-Sunamika

Anonymous said...

@ அப்பாவி,
ரொம்ப அலப்பற பண்றேக்கா. இதல்லாம் நல்லதுக்கில்ல! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சனி ஞாயிறு வீட்ல மாமாவை தொல்லை படத்தறதுக்கு உக்காந்து எழுதறதுக்கென்ன.

@பிரியாக்கா,
கொஞ்சம் டைம் மனேஜ்மென்ட் பத்தி இந்த பந்தா பார்வதிக்கு சொல்லி கொடுங்க.

priya.r said...

@பார்வதி

என்ன எங்க சுனாமி சொன்ன மாதிரி செய்யோனும்! பிரிஞ்சுதா .,ஹ ஹா@ சுனாமி

ஏண்டி ! எப்படியும் கதை படிச்சு முடிச்சுட்டு ஒரு பாட்டம் புலம்பி தீர்க்க தான் போறே

அதுக்குள்ளே என்ன அவசரம் !

priya.r said...

ஏண்டி சுனாமி கொழந்தை!

இந்த வாரம் கதை எப்படி போகும் ;எதாவது ஹிண்ட்ஸ் சொல்லறியா

priya.r said...

//கன்டிஷனரும் போட்ட//
முடில முடியல...

ஹா ஹா முடியை வைத்து ஒரு சின்ன ஹைக்கூ ! ஆயிரம் தான் சொல்லு !

அப்பாவி செம டைமிங் சென்ஸ் இருக்குபா உன் கிட்டே :) :)

priya.r said...

எனக்கென்னவோ அப்பவி நேத்தே கதையை எழுதி வைச்சுட்டு

பதிவு ஜோஸ்யர் கிட்டே கேட்ட ஐடியாவை இங்கே பயன் படுத்தி பார்க்கிறாரோ

என்று ஒரு டவுட் !

vgr said...

adengappa..AT enna oru brilliance...appadiye ovoru vari layum thelithu thallugiradu...avanga ungala kalaichada solli avargalai miga arumayaga kalaitha ungalai paratugiren.

funny post.

-vgr

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா -
//ஞாயிறு வீட்ல மாமாவை தொல்லை படத்தறதுக்கு உக்காந்து எழுதறதுக்கென்ன.//
Duty first மத்ததெல்லாம் நெக்ஸ்ட்...:)))

//கொஞ்சம் டைம் மனேஜ்மென்ட் பத்தி இந்த பந்தா பார்வதிக்கு சொல்லி கொடுங்க//
சொல்லி குடுங்க அக்கோய்...:)))... அப்படியே இந்த சுனமிகாவை சமாளிப்பது எப்படினு ஒரு புக் எழுதினா இன்னும் சந்தோஷம்...:))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//எப்படியும் கதை படிச்சு முடிச்சுட்டு ஒரு பாட்டம் புலம்பி தீர்க்க தான் போறே //
அட அட அட.. என்ன ஒரு விளம்பரம் என்ன ஒரு விளம்பரம்...................இதை பாத்தா அட்ரஸ் மாறி இந்த பக்கம் வர்ற நாலு பேரும் தெரிச்சு ஓடிர மட்டாக.....என்னா ஒரு வில்லத்தனம்... grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr........:))))

//இந்த வாரம் கதை எப்படி போகும் ;எதாவது ஹிண்ட்ஸ் சொல்லறியா//
அம்மா பரதேவதே.... நீ சொல்ல வேண்டாம்... நானே போட்டுட்டேன்...:))))

//அப்பாவி செம டைமிங் சென்ஸ் இருக்குபா உன் கிட்டே//
பின்னாடி என்ன வெடி வெக்க போறாங்களோ தெரியலயே... அவ்வ்வ்வவ்வ்வ்.....

//எனக்கென்னவோ அப்பவி நேத்தே கதையை எழுதி வைச்சுட்டு பதிவு ஜோஸ்யர் கிட்டே கேட்ட ஐடியாவை இங்கே பயன் படுத்தி பார்க்கிறாரோ...என்று ஒரு டவுட் ! //
அம்மா தாயே... கொஞ்சம் உங்க கால காட்டுங்க... ஸ்ஸ்ஸ்ஸ்பபபப்பா... லஞ்ச் டைம் கூட அவசர அவசரமா சாப்ட்டு போட்டு எழுதி பதிவு போட்டா... என்னை பாத்து என்னை பாத்து எப்படி எப்படி இப்படி ஒரு வார்த்தை சொல்லலாம் ப்ரியா நீ... அவ்வ்வ்வவ்வ்வ்....:))))))
(மொதல்ல உங்க ஜாதகத்த கொஞ்சம் குடுங்க... எங்க ஜோசியர்கிட்ட காட்டி கேக்கணும் "எனக்கு மொதல் எதிரி இந்த ப்ரியாவா இல்ல நான் மொதலே எதிரினு நெனச்சுட்டு இருக்கற வேற ஒருதரானு..." ஹா ஹா ஹா...)

அப்பாவி தங்கமணி said...

@ vgr - Thanks VGR... :)... Ofcourse, its my chance to express it right? ha ha ha...:)))

Post a Comment