Wednesday, April 27, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 17)


இந்த பகுதியின் முன் பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

அதே நேரம் மீராவின் அறைக்கதவு வேகமாய் தட்டப்பட்டது. தட்டிய விதத்தில் ஒரு கணம் சதீஸாய் இருக்குமோ என தோன்றியதும் அதிர்ந்தாள் மீரா

கதவு திறந்ததும் பக்கத்து அறை பெண் ஜெசிக்கா நின்றிருக்க சற்று நிம்மதியுற்றவள் "ஹாய் ஜெசி" என்றாள் மீரா

"Hei Meer... looks like this is for you...mailman left it in my box by mistake I guess" என ஒரு கடித உறையை நீட்டினாள் ஜெசிக்கா. அதற்குள் ஜெசிக்காவின் செல்பேசி ஒலிக்க கையசைவில் "பை" என்றுவிட்டு விலகினாள்

சற்று ஆசுவாசமான மீரா, கிளம்ப தயாரானாள். எப்போதும் எளிமையான உடைகள், மிக குறைந்த அளவு மேக் அப் தான் மீராவின் பழக்கம். இன்றும் அப்படியே இயல்பாய் இருக்கணும் என்று நினைத்தாள்

ஆனாலும், ஏனோ படபடப்பாய் உணர்ந்தாள். எப்போதும் பார்க்கும் ஸ்டீவ் தானே... அவன் என்னை புதியதாய் பார்க்க போவதில்லையே... இயல்பாய் இரு என தனக்கு தானே கூறி கொண்டாள்

ஆறு நாப்பதுக்கே தயாராய் இருந்தாள். அதன் பின் ஒரு ஒரு நிமிடமும் ஒரு மணி நேரம் போல் நகராமல் இருப்பதாய் உணர்ந்தாள் மீரா

ஏழு மணிக்கு ஐந்து நிமிடம் முன்பு அறை கதவு தட்டப்பட, ஆவலும் பரபரப்பும் ஒருங்கே தோன்ற கதவை திறந்தாள் மீரா

கையில் அழகிய சிவப்பு வண்ண tulip பூங்கொத்துடன் நின்றிருந்தான் ஸ்டீவ். தன் மனதில் காதல் வந்த பின் அவனை நேரில் சந்திக்கும் முதல் முறை என்பதால் என்ன பேசுவதென தெரியாமல் தயக்கமாய் நின்றாள் மீரா

அவனோ அவளை விட்டு கண்ணை எடுக்க இயலாமல் பார்த்தான்

அவன் கையில் இருந்த சிவப்பு டூலிப் மலர்களுக்கு போட்டியாய், இளம் சிவப்பு வண்ணத்தில் பூ வேலைப்பாடு செய்யப்பட்ட டாப்ஸ், அதற்கு தோதாய் umbrella டிசைன்'ல் அமைந்த ஒரு லாங் ஸ்கர்ட், காதில் சிறிய நட்சத்திரங்கள், கிளிப்பில் அடக்க முயன்றும் அலையாய் தோளில் விழுந்த கேசம் என அழகு பதுமையாய் நின்ற மீராவை கண்களாலேயே விழுங்கி விடுபவன் போல் பார்த்தான் ஸ்டீவ்

அவன் பார்வையின் வேகத்தை சந்திக்க இயலாமல் அவள் பார்வையை வேறு பக்கம் திருப்ப "Hello My Sunshineனு உன்னை சொன்னா இப்ப ரெம்ப பொருத்தமா இருக்கும், இல்ல மீரா..." என அவன் குறும்பாய் சிரிக்க, அந்த சிரிப்பில் தன்னை தொலைத்தாள் மீரா

அவள் நின்ற தோரணையில் அதை புரிந்து கொண்ட ஸ்டீவ், வெற்றி புன்னகையுடன் "போலாமா மீரா" என பூங்கொத்தை நீட்டியபடி கேட்க, இன்னும் தயக்கம் விலகாமல் "சரி..." என்பது போல் பூங்கொத்தை பெற்று கொண்டாள்

காரில் சென்று அமரும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவளை விட்டு பார்வையை விலக்க இயலாமல், நொடிக்கொருமுறை அவளை பார்த்து கொண்டே வந்தான் ஸ்டீவ்

அதை மீரா உணர்ந்தே இருந்தாள், ஆனால் முன் போல் இயல்பாய் கேலி பேச ஏனோ நா ஒத்துழைக்க மறுத்தது

கார் நகரத்துவங்க "என்ன இன்னிக்கி மௌன விரதமா என் கெஸ்ட்?" என ஸ்டீவ் வம்பு செய்ய

என்ன பேசுவதென தெரியாமல் "ரெம்ப அழகா இருக்கு" என்றாள் கையில் இருந்த பூங்கொத்தை வருடியவாறே

"உன்னை விடவா?" என ஸ்டீவ் கண் சிமிட்ட, நொடியில் சிவந்த கன்னங்களை மறைக்க வெளியே வேடிக்கை பார்ப்பது போல் பாவனை செய்தாள்

"உன்னை விடவானு கேட்டேனே... பதிலே காணோம்" என்றான் விடாமல், மீண்டும் அவளின் முக சிவப்பை ரசிக்கும் ஆவலில்

"அது ரெம்ப பழைய டயலாக்" என வேண்டுமென்றே பேச்சை மாற்றினாள்

"But it made you blush, right? Can't ask for more... " என சிரித்தான். அதை அமோதிப்பவள் போல் மௌனமாய் புன்னகைத்தாள் மீரா

சிறிது நேரத்தில் அவன் வீடு வந்துவிட்டிருக்க, காரை பார்கிங் லாட்'ல் நிறுத்தி விட்டு லிப்ட் நோக்கி நடந்தனர்

லிப்ட்'ல் ஏறியதும், உரிமையுடன் அவள் கையோடு தன் கையை கோர்த்து கொண்டான் ஸ்டீவ். அவள், விலகவும் இல்லை நெருங்கவும் இல்லை, அப்படியே நின்றாள்

பள்ளி / கல்லூரி நாட்களில் உடன் பயின்ற சக மாணவ நண்பர்களுடன் நட்பாய் கை கோர்த்து சிரித்ததுண்டு, கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து இருக்கிறாள், விளையாட்டாய் அடித்தது கூட உண்டு. அந்த தொடுகை எல்லாம் அவளை எந்த விதத்திலும் பாதித்ததில்லை

ஆனால் ஸ்டீவின் அந்த சிறிய தொடுகை, அவளின் மொத்த அணுக்களையும் அசைத்து பார்த்தது. மெல்லிய குளிர் பரவ நடுங்கினாள். தான் பற்றியிருந்த அவள் கைகளில் அந்த நடுக்கத்தை உணர்ந்தான் ஸ்டீவ்

தன் மீது அவள் கொண்ட காதலின் பிரதிபலிப்பாய் அதை அமோதித்து ரசித்தவன் "மீரா..." என்றான் மெல்லிய குரலில்

"ம்... " என அவள், அவன் முகம் பார்க்க, "No need to be nervous... it's just me... you and me..." உனக்கும் எனக்கும் மட்டுமான தருணம் இது என உணர்த்த முயன்றான்

அதை புரிந்து கொண்டவள் போல் முறுவலித்தாள். ஆனால் அவனை நேரே பார்ப்பதை தவிர்த்து லிப்ட்'ல் இருந்த நியூஸ் ஸ்க்ரோல் மானிட்டரை படிப்பது போன்ற பாவனையில் இருந்தாள்

அவளின் தவிப்பையும் தயக்கத்தையும் ரசித்து கொண்டே வந்தான் ஸ்டீவ். வீட்டு கதவை திறக்கும் போது கூட அவள் கையை விட மனமில்லாதவன் போல் பற்றி கொண்டே இருந்தான்

வீட்டுக்குள் நுழைந்ததும், அங்கு இருந்த மாற்றத்தில் அவளின் முகம் எப்படி மாறும் என காணும் ஆவலில், அந்த கணத்தை மனதிற்குள் பதிவு செய்ய முயல்பவன் போல் அவளையே பார்த்தான்

அவன் எதிர்பார்த்தது போலவே, ஆச்சர்யமும் மகிழ்வும் போட்டி போட அவனை பார்த்தாள். அவளின் அந்த மறுதலிப்பு அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது

அந்த சிறிய இடத்தை கூட இத்தனை அழகுற செய்ய முடியுமா என அவளால் நம்ப இயலவில்லை. செயற்கை விளக்குகள் தவிர்க்கப்பட்டு, அறை முழுக்க மெல்லிய சுகந்தம் பரப்பும் மெழுகுவர்த்திகளால் நிறைக்கப்பட்டிருந்தது

பால்கனி கதவின் அருகில் இருவர் மட்டும் அமரும் வண்ணம் ஒரு சிறிய கண்ணாடி உணவு மேஜை. அதன் நடுவில் அழகிய ஒற்றை சிவப்பு ரோஜா ஒரு சிறிய குவளையில் வீற்றிருக்க, அதை சுற்றிலும் இதய வடிவ சிவப்பு வண்ண மெழுகுவர்த்திகள் ஒளி கூட்ட, ஏதோ வேறு உலகத்துள் நுழைந்தது போல் உணர்ந்தாள் மீரா

சமையல் மேடையின் மீது உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருக்க, எதிலும் ஒரு ஒழுங்கு முறையும் நளினமும், அதை எல்லாம் மீறிய ஒரு மெனக்கெடலும் தெரிந்தது

எல்லாம் சரியாய், அவள் விரும்பும் வண்ணம் இருக்கவேண்டுமென பார்த்து பார்த்து செய்யப்பட்டிருந்த நேர்த்தியில் அவன் அன்பும் காதலும் புலப்பட, அவள் மனம் நெகிழ்ந்தது

சோபாவின் முன் இருந்த ஒரு சிறிய காபி டேபிள் ஓரங்கள் எல்லாம் வண்ண மெழுகுவர்த்திகள் ஆக்ரமித்திருக்க, அதன் நடுவில் "For you" என பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்ட ஒரு வாழ்த்து அட்டை தெரிய, ஆவலுடன் பார்த்தாள்

அவளின் ஆவல் தெறித்த முகத்தை ரசித்தவன், அவளை நடத்தி சென்று சோபாவில் அமர செய்து, அந்த பரிசை அவள் கைகளில் வைத்தான்

"என்ன ஸ்டீவ் இது?" என அவள் கேள்வியாய் பார்க்க

"நீயே பாரேன் மீரா... just a little something to celebrate this moment... உனக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்... would you like to take three guesses?" என அவன் சீண்டலாய் சிரிக்க

"அதெல்லாம் வேண்டாம்... " என்றவள், பொறுமை இல்லாதவள் போல் பரிசை சுற்றி இருந்த காகிதத்தை பிரித்தாள்

பரிசை கண்ட நொடி, அவள் கண்களில் நீர் நிறைந்தது. "ஸ்டீவ்... " என அதற்கு மேல் பேச இயலாதவள் போல் மௌனமானாள்

ரசித்து ரசித்து அவள் ஒவ்வொன்றையும் காண, அவளை ரசித்து கொண்டிருந்தவன், அவள் கண்ணில் நீர்படலம் கண்டதும் "ஹேய்..." என பதறி, அவள் தோளில் கை பதித்தான்

அவனை கண்ணோடு கண் பார்த்தவள், ஒரு கணம் பேச இயலாமல் தவித்து, பின் "Thanks Steve... you made me feel special" எனவும், "You're special Meera..." என்றான் ஸ்டீவ், அவள் கண்ணில் இருந்து பார்வையை விலக்காமல்

மீண்டும் அந்த பரிசை பார்த்தாள், ஸ்டீவின் கை வண்ணத்தில் மீரா அழகாய் சிரித்து கொண்டிருந்தாள் அந்த அழகிய வண்ண ஓவியத்தில்

அந்தி சூரியனின் பின்னணியில், பச்சை புல்வெளியில், வாழ்வின் சந்தோஷம் மொத்தமும் தேக்கி வைத்த கண்களுடன், சிரிப்பு விரிய, கன்னக்குழி தெரிய, குறும்பு மிளிர, தாடையில் கை தாங்கி சிரித்து கொண்டிருந்த தன் அழகை தானே ரசித்தாள் மீரா

ஓவியத்தின் கீழ் "I never thought I admire my own work... but I admire this one... I guess its because I admire you, adore you and love you too... to you...from me.." என்று எழுதி கையெழுத்திட்டு இட்டிருந்தான் ஸ்டீவ்

ரசிக்க ரசிக்க போதாதது போல் மாயந்தவள் "எப்படி இப்படி... என்னோட போட்டோவை பிரிண்ட் பண்ணின மாதிரி வரைஞ்சு இருக்கே... I just... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ஸ்டீவ்... நான்...."

அவள் உணர்ச்சி வேகத்தில் வார்த்தை வராமல் தவித்ததை பார்த்தவன் "You know I'm not a professional artist Meera... but, சில உருவங்கள் மனசுல ஆழமா பதிஞ்சு போய்ட்டா இப்படித்தான் நல்லா வரும்னு நினைக்கிறேன்... கரெக்ட் தானே" என அவன் சிரிக்க

"அப்படி என்ன நான் ஸ்பெஷல்... I don't know if I deserve all this...." love என்ற வார்த்தையை சொல்ல வந்து தயங்கி நின்றவளை புரிந்து கொண்டவனாய் , தோள் பற்றி தன் புறம் திருப்பினான் ஸ்டீவ்

"நீ எவ்ளோ ஸ்பெஷல்னு சொல்லட்டுமா?" என ஒற்றை விரலில் அவள் தாடையை பற்றி அவளை தன் கண்ணில் பார்க்க செய்தவன்

"ஐ லவ் யு மீரா... I love you more than anyone loved anyone... not sure if all lovers think so... but, யாரும் என்னை இப்படி நினைக்க வெச்சதில்ல... love at first sightல எல்லாம் எனக்கு நம்பிக்கை இருந்ததில்ல... ஆனா... from day one, you're driving me crazy Meera... அதுக்கு அப்புறம் ஒரு ஒரு நிமிசமும் உன்கிட்ட இதை சொல்லணும்னு நான் தவிச்சது, all that made my love for you even stronger... I love you sweety" என அதற்கு மேல் விலகி நிற்க இயலாதவன் போல் அவளை அணைத்து இதழ் பதித்தான்

விலகவே மனமில்லாத போதும், அவள் முகம் பார்க்கும் ஆவலில் விலகினான். கண்ணீரும் சிரிப்பும் போட்டி போட உணர்ச்சி கலவையில் நின்றிருந்தவளின் முகத்தை கைகளில் ஏந்தியவன் "Say something...Please..." என்றான்

ஸ்டீவ் இன்று தன் மனதில் பூட்டி வைத்த காதலை சொல்ல போகிறான் என எதிர்பார்த்து வந்தாள் தான் என்ற போதும், அந்த கணம் தன்னை இப்படி வீழ்த்துமென நினைத்திருக்கவில்லை மீரா

காதலை புரிந்த ஒரு நாளிலேயே தனக்கு இத்தனை தவிப்பெனில், இத்தனை நாளாய் அவன் எப்படி தூக்கம் தொலைத்திருப்பான் என தோன்றிய நொடி, அது புரியாமல் பாரா முகமாய் அவனை வருத்தி இருக்கிறேனே என குற்ற உணர்வுடன் அவனை பார்த்தாள்

அவளின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ள முடியாதவனாய் "என்ன மீரா...?" என்றவன் புரியாத பார்வை பார்க்க, அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்

காதலை சொன்னதும் சந்தோசத்தில் மகிழ்வாள், அவளை மேலும் சிரிக்க வைத்து உரிமையுடன் ரசிக்கணும் என எண்ணி இருந்தவன், அவள் அழுததை காண சகியாதவனாய் "ஏய் மீரா... ப்ளிஸ்... மீரா... என்ன மீரா இது? இங்க பாரு..." என அவளை விலக்கி சமாதானம் செய்ய முயன்றான்

"இங்க பாரு... அழுதா உன்னை பாக்கவே சகிக்கல... அப்புறம் வேற பொண்ணை தேட வேண்டியது தான் லவ் பண்ண" என வேண்டுமென்றே அவளை திசை திருப்ப பேசினான்

அவன் எதிர்பார்த்தது போலவே அந்த பேச்சு அவளை உசுப்ப "என்னது?" என கோபமாய் பார்த்தாள்

தன் மீது கொண்ட காதலின் வெளிப்பாடான அந்த கோபத்தை ரசித்தவன், "ம்... இப்ப அழகா இருக்கு... இந்த பொண்ணே ஒகே தான்" என அவன் மேலும் சிரித்து சீண்ட, அவனை அடிக்க நீண்ட அவள் கைகளை சிறைபடுத்தினான்

"ஒகே... சொல்லு..." என்றான்

"என்ன சொல்லணும்..." என்றாள், என்ன கேட்கிறான் என புரிந்து கொண்டே

"என்ன சொல்லணுமோ அதை சொல்லு..."

"எதுவும் இல்லையே..." என அவள் அழகாய் அபிநயித்து சிரிக்க, பல நாள் ஏங்கிய விதமாய், தன் சுட்டுவிரலை அவளின் கன்ன குழியில் பதித்து மகிழ்ந்தான், காதல் தந்த உரிமையில்

அவன் தொடுகை தந்த குறுகுறுப்பில் "ஏய்....என்ன பண்ற... விடு ஸ்டீவ்..." என அவன் கையை விலக்கினாள்

"எவ்ளோ நாள்... எவ்ளோ நாள்... இப்படி tempt ஆகி இருக்கேன் தெரியுமா மீரா..." என அவளை ரசனையாய் பார்த்தவன் "ஐ லவ் யு மீரா" என்றான் மீண்டும்

அவள் மௌனமாய் அவனை பார்த்து கொண்டிருக்க "நீ சொல்ல மாட்டியா மீரா?" என அவன் கேட்க, அவன் குரலில் தெறித்த ஏக்கம் தன்னை மீண்டும் அழச்செய்து விடுமோ என பயந்தவள் போல், அவன் பார்வையை தவிர்க்க அவன் மார்பில் முகம் புதைத்தாள்

அதை புரிந்து கொண்டவனாய், எதுவும் பேசாமல் அணைத்து நின்றான். மெல்ல "ஐ லவ் யு ஸ்டீவ்" என எதிர்பாராத தருணத்தில் அவள் கூற, அவசரமாய் அவளை தன்னிடமிருந்து விலக்கி, அவள் தன்னிடம் காதல் சொல்லும் கணத்தில் அவள் முகம் பார்க்க விழைந்தான்

சொல்லும்வரை தான்தவிப்பென
சொல்லும்வரை நினைத்திருந்தேன்
சொன்னபின்னும் தீரவில்லை
சொல்லசொல்ல ஓயவில்லை
காதலும் தவிப்பும்
கூறியபின்னே கூடுமென
அனுபவத்தில்பின் உணர்ந்தேன்
அதையும்தான் ரசித்திருந்தேன்!!!


அடுத்த பகுதி படிக்க...


(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

Thursday, April 21, 2011

தப்பும் தவறும்... (உருப்படியா ஒரு போஸ்ட்.... அப்படினு நினைக்கிறேன்...)


தப்பை தப்பா செய்யறது தப்பில்லையா, இல்ல தப்பை தப்பில்லாம செய்யறது தப்பா?

தப்பு தப்பா செய்யறது தப்புன்னு தெரிஞ்சும் அதே தப்பை தப்பில்லாம செய்யறவங்களை என்ன செஞ்சா தப்பில்ல... நீங்களே சொல்லுங்க மக்களே...

மைண்ட்வாய்ஸ் : உன் ப்ளாக்'க்கு வந்தோம் பாரு... அதான் நாங்க செஞ்ச தப்புலையே பெரிய தப்பு :((

ஏய் மைண்ட்வாய்ஸ், நானே அதிசியமா உருப்படியா ஒரு போஸ்ட் போடலாம்னு வந்திருக்கேன்... ஓடி போய்டு... சும்மா சும்மா வந்து டென்ஷன் பண்ணாதே, அப்புறம் தப்பில்லாம உன்னை தப்பிடுவேன்... ஹ்ம்ம்...

(ஒழிந்தது மைண்ட்வாய்ஸ்...:))

"என்னது உருப்படியான போஸ்ட்டா? நீயா?" னு நீங்க எல்லாம் டென்ஷன் ஆகறது புரியுது பிரெண்ட்ஸ்... but that that appavi that that day, you know...:))

நெறைய பேர் இதை பத்தி இப்ப சமீபமா பதிவு எழுதிட்டு இருக்காங்க... அதை படிக்கறதோட நிறுத்திக்கலாம்னு தான் மொதல்ல நினைச்சேன்...

அப்புறம் என்னமோ "அவங்க, 'அவங்க' ஸ்டைல்ல எழுதறாங்க... நான், என் ஸ்டைல்ல(!) சொன்னா அதை நாலு பேர் படிச்சா நல்லது தானே"னு தோணுச்சு...

"நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல"னு யார் சொன்னாங்கனு "சின்ன குழந்தையும் சொல்லும்" தானே....How is it?....:))

சரி, அதான் என் ஸ்டைல்'இல் இங்கே இதோ....

"நீ செஞ்சது தப்பு" - இந்த வார்த்தைய கேக்காதவங்க இருக்கவே முடியாது உலகத்துல

"அதெப்படி... இங்கிலீஷ்காரன் you're wrong னு தானே சொல்லி இருப்பான்... நீ செஞ்சது தப்புனு சொல்லி இருக்க மாட்டானே"னு சிலர் என்னை போல குண்டக்க மண்டக்க கேள்வி கேப்பீங்கன்னு தெரியும்..:))

What I'm trying to say is... சரி, இந்த பீட்டர் விடறதை முடிஞ்ச மட்டும் இனி கம்மி பண்ணிக்கறேன்... (போன வாரம் தமிழ் புத்தாண்டு பதிவுனால நடந்த டேமேஜ் அப்படி... அதுலயும் நம்ம கெக்கே பிக்குணி அக்கா அக்கு வேறு ஆணி வேறா டேமேஜ் பண்ணி போட்டாங்க..... அதுக்கு ப்ரியா அக்கா கூட்டணி வேற... அவ்வ்வ்வவ்வ்வ்வவ்.....ஜஸ்ட் கிட்டிங் கெக்கே பிக்குணி அக்கா...:))))

நான் என்ன சொல்ல வரேன்னா, எல்லாரும் எல்லாமும் சரியா செய்யரதுங்கறது சாத்தியம் இல்லை, தவறுகள் செய்வது மனித இயல்பு, ஆனால் தவறுகள் மீண்டும் செய்யப்படும் பொழுது அது தவறு அல்ல, தப்பு ஆகிறது

ஒரு நாள் எங்க ஸ்கூல்ல இலக்கிய மன்ற விழாவுல பேச வந்த ஒருத்தர் "தெரியாம செஞ்சா தவறு, அதை மன்னிக்கலாம்... தெரிஞ்சே செஞ்சா தப்பு அதை மன்னிக்க கூடாது" னு சொன்னார்

"அட, புதுசா இருக்கே"னு ஆர்வமா கவனிச்சதுல அது மனசுல பதிஞ்சு போச்சு... அது ஒரு பக்கம் இருக்கட்டும்...

எனக்கு வக்கீல் ஆகணும்னு ஆசை இருந்தது... நல்ல வேளை ஆகலை... பாவம்ல எதிர்கட்சி வக்கீல்... :))

"சம்மந்தம் இல்லாம இப்ப எதுக்கு இந்த சுய புராணம்"னு நீங்க யோசிக்கலாம்... இருக்கு இருக்கு... சம்மந்தம், சம பந்தம் எல்லாமும் இருக்கு...

ஜோக்ஸ் அபார்ட்...

10th படிக்கற வரை இந்த வக்கீல் ஆர்வம் கொஞ்சம் அதிகமா இருந்தது, +2ல accounts குரூப் போனதும் finance பக்கம் ஆர்வம் திரும்பி அந்த லைன்ல போயிட்டேன்... ஆனாலும் "சட்டம்"ங்கற விஷயம் மேல ஒரு தீராத காதல் இருந்தது, இன்னும் கூட இருக்கு கொஞ்சம்....

பி.காம்ல law பேப்பர்ஸ் சில இருந்தது... அதை என்னோட ஆசைக்கு தீனியா பயன்படுத்திக்கிட்டேன்... அதனால தான் ஒரு சிலது இன்னும் கூட ஞாபகம் இருக்குனு நினைக்கிறேன்

அதுல என்னை ரெம்பவும் கவர்ந்த ஒண்ணு... "Ignorantia juris non excusat"...

"என்னாது????????" னு உங்களுக்கு BP ஏறுறதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன்...

Commerce Students நெறைய பேருக்கு இது ஞாபகத்துல இருக்கும்னு நினைக்கிறேன்...

இது லத்தீன் மொழில சட்டம் பத்தி சொல்லப்படும் ஒரு....ஒரு....என்னனு சொல்றது... ஒரு சொற்சொடர்னு சொல்லலாம்... ஒரு சட்ட ஆக்கம்னு கூட சொல்லலாம்... சரி, அப்படியே வெச்சுப்போம்... இது நம்ம ஊரு சட்டத்துக்கும் பொருந்தும் என்பது தான் இங்கே நான் சொல்ல வரும் பாயிண்ட் யுவர் ஆனர்

மொதல்ல இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லிடறேன்... இதோட ஆங்கில ஆக்கம் "Ignorance of the law is not an excuse" .... அதாவது ஒருத்தர் எதாச்சும் சட்டமீறல் செஞ்சுட்டு "இது சட்டப்படி தப்புன்னு எனக்கு தெரியாது" அப்படின்னு சொன்னா அது செல்லாது, அதுக்கான தண்டனைல இருந்து அவங்க தப்பிக்க முடியாது, அப்படின்னு சட்டமே இருக்கு

இப்படி இருக்கறப்ப, செய்யறது சட்டப்படி தப்புனு தெரிஞ்சும் செய்யற தப்புக்கு excuse இருக்க முடியுமா? இல்லை தானே... அப்படி இருக்கறப்ப... Anna Hazareனு ஒரு மாமனிதர் வந்த போராட வேண்டிய அளவுக்கு நம்ம நாட்டுல சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆனது எப்படி?

"விடிய விடிய வோர்ல்ட் கப் கிரிக்கெட் பாத்துட்டு, நெஹ்ரா பைனல்ஸ்ல எத்தன விக்கெட் எடுத்தார்"னு கேக்கற கதையா என்ன கேள்வி இதுனு நீங்க டென்ஷன் ஆகலாம், தப்பில்ல...சாரி... தவறில்ல...

Honourable Anna Hazare அவர்களை பத்தி நெறைய பேர் எழுதியாச்சு, நானும் அதையே ரிபீட் பண்றதை விட...

ஒரு குட்டி கதை சொல்றேன் கேளுங்க...

"பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினினு நெனப்பா உனக்கு"னு உணர்ச்சி வசப்படாதீங்க பிரெண்ட்ஸ்... நானும் தலைவர் fan தான்... :)

சினிமா டைரக்டர்கிட்ட பேட்டி எடுக்கறப்ப "இத்தனை வன்முறை இந்த காட்சிக்கு அவசியமா?"னு நிருபர் கேக்கறப்ப "கதைக்கு தேவை, அதான் வெச்சோம்" சொல்லுவாரே...அது போல இப்போ இங்க இந்த குட்டி கதை தேவை, எனவே பொறுத்தருள்க...:)

குறிப்பு:
இந்த குட்டி கதை என் சொந்த கற்பனை, அது யாரையோ அல்லது எந்த சம்பவத்தையோ குறிப்பது போல் இருந்தால் அது mere coincidence only என்பதை மொதல்லையே சொல்லிடறேன்... ஆட்டோ'க்கு பயந்துட்டு சொல்லலைங்க... ஒரு சம்பிரதாயத்துக்காக சொல்றேன்...

ஒரு ஊர்ல ஒரு பெரிய வியாபாரி இருந்தார், ஊருல பேரும் புகழும் உள்ள செல்வந்தர் அவர். அவருக்கு நாலு பிள்ளைகள். செலவந்தரும் நாலு பிள்ளைகளும் சேர்ந்து வியாபாரத்தை சிறப்பா நடத்திட்டு வந்தாங்க

அதுல மூணு பிள்ளைகள் நல்லா படிச்சு அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கினாங்க. கடைக்குட்டி மட்டும் தவறான சேர்க்கையின் காரணமா கொஞ்சம் பொறுப்பில்லாம இருந்தான் (no offense கடை குட்டிஸ்... just a story line ...:)

ஆனா அந்த செல்வந்தரும் அவரோட மனைவியும் பிள்ளைய கண்டிக்காம "சின்னவன செல்லமா வளத்துட்டோம்... நாளானா சரி ஆய்டும்"னு எந்த பாராபட்சமும் காட்டாம எல்லா பிள்ளைகளையும் ஒரே போல நடத்தினாங்க. அதுல மத்த மூணு பிள்ளைகளுக்கும் கொஞ்சம் வருத்தம்

"நாம பொறுப்பா, சுய லாபம் / சந்தோஷம் எல்லாத்தையும் ஒதுக்கி வெச்சுட்டு பாடுபடறோம். ஆனா இவன் (கடை குட்டி) அப்பாவுக்கு தெரியாம வியாபாரத்துல இருந்து பணத்தை எடுத்து ஊதாரியா சுத்திட்டு இருக்கான்... நாமளும் இனி நமக்குனு சேத்துக்கணும்... இல்லேனா பாகம் பிரிக்கறரப்ப நமக்கு ஒண்ணும் மிஞ்சாது" னு முடிவுக்கு வந்தாங்க மூணு பேரும்

இப்படி ஒருத்தருக்கு தெரியாம ஒருத்தர் கொஞ்ச கொஞ்சமா பணம் சுருட்ட ஆரம்பிச்சாங்க... அப்படி சுருட்டின பணத்தை யாருக்கும் தெரியாம பதுக்க வேண்டி இருந்ததால யார் யாரையோ சரிகட்டி பாதுகாத்து வெச்சாங்க... அதுல சிலர் இவங்களையே ஏமாத்தி பணம் பறிச்சாங்க

அவங்க அப்பாவுக்கு விஷயம் தெரிய வந்தப்ப நிலைமை கை மீறி போய் இருந்தது. கௌரவமா தலை நிமிர்ந்து இருந்த குடும்பம் வீதிக்கு வந்தது...

"நீ செஞ்சது தான் தப்பு"னு ஒருத்தரை ஒருத்தர் மாத்தி மாத்தி அடிச்சுக்கிட்டு எல்லாரும் அழிஞ்சு போனது தான் இந்த கதையின் முடிவு

இதை ஒரு case study மாதிரி படிச்சு / யோசிச்சு.... இந்த கதைல யார் மேல தப்புன்னு உங்கள கேட்டா.... Choose the best answerனு இந்த மூணு ஆப்சன் குடுத்தா, உங்க பதில் என்னவா இருக்கும்?

1 . பெற்றவர்கள்
2 . கடைசி பிள்ளை
3 . மற்ற மூணு பிள்ளைகள்

என்னோட பதில் all the above... அதாவது, எல்லாருக்கும் இந்த தப்பில் சமபங்கு இருக்கு... அம்மா அப்பா கண்டிக்காம விட்டது தான் இதுக்கான ஆரம்பம் என்றாலும் மற்ற பிள்ளைகளை பாத்து தன்னை திருத்திக்கற வாய்ப்பை ஏன் அந்த பையன் ஏற்படுத்திக்கலை

அதே போல, சின்னவன் தப்பு செஞ்சா கண்டிச்சு திருத்தறதை விட்டுட்டு "நீ கெணத்துல குதிச்சா நானும் குதிப்பேன்"னு பைத்தியகாரத்தனமா நடந்துகிட்டது மற்ற மூணு பிள்ளைகளின் தப்பு

இதுல ஒருத்தரேனும் தங்கள் கடமையை சரியா செஞ்சு இருந்தா அந்த குடும்பம் இப்படி சீரழிஞ்சு போய் இருக்காது

இப்ப கதையை விட்டுட்டு நம்ம நாட்டு நிலவரத்துக்கு வருவோம்... இந்த கடமைய சரியா செய்யரதுங்கறது வீட்டுக்கு மட்டுமில்ல நாட்டுக்கும் பொருந்தும்...

இந்த கதைல பெத்தவங்கனு சொல்லப்படும் இடத்தில் நாட்டில் இருப்பது பொது மக்கள்... ஒரு அதிகாரியோ / அரசியல்வாதியோ முதல் முறை லஞ்சம் வாங்கரப்பவோ அல்லது வேற தவறுகள் செய்யரப்பவோ தட்டி கேக்காம நாம இருக்கறதுக்கு காரணம் என்ன?

இந்த கதைல பெத்தவங்க கண்டிக்காம விட்டதுக்கு காரணம் "பாசம்"... பொதுமக்கள் தட்டி கேக்காம இருக்கறதுக்கு காரணம் "பயம்"

நாம எதுத்து கேள்வி கேட்டா நம்ம உயிருக்கு உத்திரவாதம் இருக்குனு யாராச்சும் கேரன்ட்டீ குடுத்தா "நானும் கேப்பேன்"... "நீங்களும் கேப்பீங்க"...என்னங்க, நான் சொல்றது சரி தானே... ??

கதைல கடைசி பிள்ளை எடத்துல நாட்டுல வர்றது ஆரம்ப நிலை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும், மத்த மூணு பிள்ளைகள் இடத்தில் இருப்பது உயர் அதிகாரிகளும் மூத்த அரசியல்வாதிகளும்

இதுல யாரேனும் ஒருத்தர் தங்கள் கடமைய சரியா செஞ்சு இருந்தா இன்னிக்கி இந்த நிலைமை ஏன்?

எல்லாரும் சேந்து தப்பு செஞ்சு வீணா போயாச்சு...

கடைசியா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிட்டு நான் ஓடி போய்டறேன்...

"நான் இந்த ஊருக்கு (கனடா) வந்து ஏழு வருஷம் முடிஞ்சு இப்ப எட்டாவது வருஷம், இந்த ஏழு வருசத்துல வீடு வாங்கினோம், அதுக்கு Mortgage வாங்கினோம், வீட்டை வித்தோம், கார் வாங்கினோம், வித்தோம், டிரைவிங் லைசன்ஸ் வாங்கினோம், குடியுரிமை வாங்கினோம், பாஸ்போர்ட் வாங்கினோம்... இன்னும் நெறைய நெறைய னோம்'கள் உண்டு... ஆனால் இதுவரை ஒரு பைசா கூட லஞ்சம் கேட்கப்பட்டதும் இல்லை, கொடுக்கப்பட்டதும் இல்லை, கொடுக்காததால் எந்த வேலையும் தடைபட்டதும் இல்லை"

இதை நான் பெருமையா சொல்லலை, வருத்தமா சொல்றேன், நம்ம ஊரு இப்படி இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்னு ஆதங்கத்துல சொல்றேன்... நம்பினா நம்புங்க இல்லேனா விடுங்க...

"எங்கயோ சௌகரியமா உக்காந்துட்டு இந்த டயலாக் எல்லாம் விடாதே"னு நீங்க என்னை திட்டலாம்...

நான் எங்க இருந்தாலும் my roots are from India and that is where I belong

இன்னும் நூறு வருஷம் இங்க வாழ்ந்தாலும், என்னை தூக்கத்துல எழுப்பி "தேசிய கீதம் பாடு" னு சொன்னா "ஜனகனமன" தான் வரும், "O'Canada" வராது

அந்த belongingnessல, அந்த உரிமைல, அந்த ஆதங்கத்துல தான் இந்த பதிவு...

"இத்தனை நாள் எங்க போச்சு உன் ஆதங்கம்... Anna Hazare வர்ற வரை உன் கையை கட்டியா போட்டு இருந்தாங்க"னு கேப்பீங்க...

யாரும் என் கையை கட்டி போடலை... ஆனா இப்படி மன ஆதங்கத்தை எழுதணும்னு தூண்டினது Anna Hazare மற்றும் அவரை பத்தி எழுதின மத்த சக பதிவர்கள் தான்... அதுக்கு அவருக்கும் உங்க எல்லாருக்கும் நன்றி

எங்க அம்மாகிட்ட பேசினப்ப "இந்த வாட்டி எலக்சன் மாதிரியே இல்ல போ... செவத்துல ஒரு போஸ்டர் காணோம்... கோஷம் காணோம்... வோட்டு சீட்டு குடுக்க வர்ற வெள்ளை வேட்டி கூட்டம் காணோம்... நிம்மதியா இருக்கு"னு சொன்னாங்க...

இது ஒரு நல்ல துவக்கம்னு மனசுக்கு ரெம்ப சந்தோசமா இருந்தது... இதையும் மீறி சில முறைகேடுகள் சில இடங்களில் நடந்ததுனு கூட படிச்சேன்...

But there was some positive change... Rome cannot be built in one day... and this is a good start... lets keep pacing in the same direction and we could reach the destination someday... either in 100 years or 200 years doesn't matter... we're in track...that is all it matters...

இந்த முறை 78% வாக்கு பதிவு நடந்து இருக்குனு சொன்னாங்க... கேக்கவே சந்தோசமா இருந்தது...

இதெல்லாமும் நல்ல மாற்றம் தானே... குறைகளை சுட்டி காட்டுவதை விட நிறைகளை பாராட்டினால் இன்னும்  நாலு பேருக்கு மாறணுங்கற எண்ணம் மனசுல வரும்...

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று"னு வள்ளுவரே சொல்லி இருக்காரே

இதுவரை, "ஒருகை ஓசை எழுப்பாது"னு சொல்லிட்டு இருந்தோம் "எழுப்பும்"னு "சிட்டிகை" போட்டு நிரூபிச்சுட்டார் Anna Hazare... நாமும் முடிந்த வரை  அவரை பின்பற்ற முயலுவோம்

உண்மைய சொல்லணும்னா, எனக்கு மத்தவங்க அளவுக்கு அரசியல் அவ்வளவா தெரியாது, மத்ததும் புத்தகத்தை தாண்டி அதிகம் தெரியாது, ஆனா மனிதம் தெரியும், தெரியும்னு சொல்றத விட "மனிதத்தில் நம்பிக்கை உண்டு"னு சொன்னா இன்னும் பொருத்தமா இருக்கும்

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பதிவு...

உங்களை சிரிக்க வெக்க (அழ வெக்கவும்) நிறைய பதிவு எழுதி இருக்கேன்... அதை படிச்ச நீங்க, இதையும் பொறுமையா படிப்பீங்கங்கற நம்பிக்கைல இதை போடறேன்...

நன்றி...

Tuesday, April 19, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 16)
இந்த தொடரின் முன் பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

மீரா தயாராகி முடியவும் அவள் அறைக்கதவு தட்டப்படவும் சரியாய் இருந்தது

கதவு தட்டப்பட்ட விதத்தில் இருந்தே சதீஷ் தான் என புரிந்தவளாய் "வரேன் சதீஷ்" என குரல் கொடுத்து கொண்டே கதவை திறந்தாள்

"நான் தான்னு எப்படி தெரியும்? கேமரா எதுனா பிக்ஸ் பண்ணி இருக்கியோ" என அவன் கேலி செய்ய

"ஆமா... இதுக்கு CBI வரணுமாக்கும்... உன்னை தவிர வேற யாரு இப்படி தலை வெடிக்கற மாதிரி கதவு தட்டுவாங்க... பொறுமையே இல்ல சதீஷ் உனக்கு" என மீரா சலித்து கொள்ள

"என்னது எனக்கு பொறுமை இல்லையா? நேரம் தான்... நீ ரெம்ப பொறுமைசாலினு நெனப்போ"

"நிச்சியமா உன்னைவிட எனக்கு பொறுமை அதிகம் தான்" என்றாள்

"அப்படியா மேடம்... அதையும் பார்ப்போம்" என புன்னகைத்தான், எதையோ நினைத்து கொண்டவனாய்

"டைம் ஆச்சு சதீஷ்... போலாமா..."

"ம்... ஒகே..." என்றான்

குளிர் காலம் முடிந்து இளவேனில் தொடங்கி இருக்க, எலும்பில் ஊடுருவும் குளிர் பற்றிய எண்ணமின்றி நடப்பது சுகம் தான் என நினைத்தாள் மீரா

அதை அவள் வாய்விட்டு கூறவும் "ஊர்ல இருந்தப்ப வெயில் வெயில்னு பொலம்புவ... இப்ப குளிர் புராணமா?" என சதீஷ் சிரித்தான்

"எதுவும் அளவோட இருக்கறவரை தான் சதீஷ் ரசிக்க முடியும்... உனக்கு அதெல்லாம் புரியாது..." என கேலி போல் மீரா சிரிக்க

"எதுவும் அளவோட இருக்கறவரை நல்லதுனு நானும் ஒத்துக்கறேன்... ஆனா உனக்கு கொலஸ்ட்ரால் ஓவரா இருக்கே மீரா... அதுக்கு என்ன செய்யறது" என கிடைத்த வாய்ப்பை விடாமல் அவன் வம்பு செய்ய

"அது சேர்க்கை அப்படி... வேற என்ன... சரி அத விடு... நீ ஏதோ சொல்றேன்னு சொன்னியே காலைல போன்ல... என்ன?" என பேச்சை மாற்றினாள்

"ம்... நீ தான் ரெம்ப பொறுமைசாலி ஆச்சே... வெயிட் பண்ணு மீரா" என புன்னகைத்தான்

"ஏய்... டென்ஷன் பண்ணாதே சதீஷ்" என அவள் முறைக்க

"ஒரு விஷயம் சொல்லியே ஆகணும் மீரா... நீ டென்ஷன் ஆனா எனக்கு ஏன் சந்தோசமா இருக்குனு தெரியல... ஹா ஹா" என சிரித்தான்

"சரி சொல்ல வேண்டாம் போ... ரெம்பத்தான் பிகு பண்ற" என சுவாரஷ்யம் இல்லாதவள் போல் முகம் திருப்பினாள்

"இப்படி நீ இண்டரெஸ்ட் இல்லாத மாதிரி நடிச்சா, உடனே நான் என்னனு சொல்லிடுவேன்னு நீ தப்பு கணக்கு போடறே... கரெக்டா? ஹா ஹா... nice try Meera... ஆனா இதெல்லாம் வேற யாரச்சும்கிட்ட வொர்க் அவுட் ஆகும்... உன்னை பத்தி A to Z தெரிஞ்ச என்கிட்ட பலிக்காது மேடம்" என சிரித்தான்

தன் மனதை படித்தது போல் சதீஷ் பேசியதும் "Goto hell with your secret" என கோபமாய் முன்னே வேகமாய் நடந்தாள்

"என்னமோ பொறுமைசாலி அது இதுனு டயலாக் விட்ட... இப்ப என்ன ஆச்சு மீரா?" என சதீஷ் கேலியாய் சிரிக்க

"நான் தான் உன் சீக்ரட் நீயே வெச்சுக்கோனு சொல்லிட்டனே"

"ஒகே... போனா போகட்டும்... க்ளூ தர்றேன்... இது நாம ரெண்டு பேரும் சம்மந்தப்பட்ட ஒரு விஷயம்... இதை உன்கிட்ட தான் நான் மொதல்ல சொல்லி இருக்கணும்... ஆனா உங்க அப்பாகிட்டயும் எங்க அப்பாகிட்டயும் நேத்து சொல்லிட்டேன்... அவங்க ரெண்டு பேரும் ரெம்ப ஹாப்பி... கேட்டா நீயும் ஹாப்பி ஆய்டுவ... எனி கெஸ்?" என அவன் சவாலாய் பார்க்க

மனம் முழுக்க மாலை ஸ்டீவை சந்திக்கும் நினைவு ஆக்ரமித்திருக்க, இப்போது வேறு எது பற்றியும் யோசிக்கும் மனநிலையில் அவள் இருக்கவில்லை "ஒரு கெஸ்ஸும் இல்ல... நீ சொல்றப்ப சொல்லு போ.." என்றாள் சலிப்பாய்

அதற்குள் வகுப்பின் அருகே வந்து விட்டிருந்தனர், ஒரு கணம் சொல்லிவிடலாமா என நினைத்தான் சதீஷ். ஆனால் தான் சொல்ல அவள் மகிழ காண நேரமும் இடமும் இதுவல்ல என தோன்றியது

அதுமட்டுமின்றி, சிறுவயது முதலே அவளை சீண்டி பார்ப்பதில் ஒரு சுகம் உண்டு அவனுக்கு. இப்போதும் அதே சிறுபிள்ளைத்தனம் தலைதூக்க "கொஞ்சம் யோசித்து மண்டை காயட்டும்" என மனதிற்குள் நினைத்தவனாய் எதுவும் சொல்லாமல் மௌனமானான்

அதோடு மீரா அதை மறந்தே போனாள் எனலாம். ஒரு வாரமாய் வகுப்பை தவறவிட்டதை ஈடு செய்ய மதுவிடம் அது பற்றி கேட்பதிலும் அன்றைய நிகழ்வுகளிலும் நேரம் வேகமாய் போன போதும், ஏனோ நேரமே நகராதது போல் உணர்ந்தாள் மீரா

மனதின் வேகத்தை ஈடு செய்ய எந்த கடிகாரத்தாலும் முடியாது தானே. அவள் இந்த எண்ண ஓட்டத்தில் மூழ்கி இருக்க, தான் கூறியது பற்றி தான் யோசித்து கொண்டிருக்கிறாள் என நினைத்து மனதிற்குள் சிரித்தான் சதீஷ்

அந்த விசயத்தை தான் கூறும் போது அவள் மகிழ்வதை காண ஆவலாய் இருந்தான் சதீஷ், ஆனால் அது வேறு விதமாய் இருக்க போவதை பாவம் அவன் அறிந்திருக்கவில்லை

அது தன்னை எத்தனை பாதிக்க போகிறது என்பதையும் அவன் உணரவில்லை

மதிய இடைவேளையின் போது மூவரும் food court ல் அமர்ந்திருந்தனர்

"எங்க அம்மா என் கசின் கல்யாணத்துக்கு இந்தியா போறாங்கனு சொல்லிட்டு இருந்தேன்ல" என மது தொடங்க

"ம்..." என்றாள் மீரா சுவாரஷ்யம் இன்றி, அவள் மனம் தான் வேற எங்கோ இருந்ததே

"Actualஆ லக்கேஜ் ஒண்ணும் பெருசா இல்ல... உங்களுக்கு எதுனா குடுத்து அனுப்ப வேண்டி இருக்குமானு அம்மா கேட்டாங்க" என்றாள் மீரா, சதீஷ் இருவரிடமும்

"ரியலி? உங்கம்மா எப்போ இந்தியா போறாங்க?" என ஆர்வமாய் கேட்டான் சதீஷ்

"ரெண்டு நாளுல சதீஷ்... ஏன் எதுனா அனுப்பனுமா?"

"ஆமா மது... எங்க அம்மாவுக்கு நெக்ஸ்ட் வீக் பர்த்டே வருது... எப்பவும் எதாச்சும் சர்ப்ரைஸ் பண்ணுவேன்... இந்த வாட்டி ஆன்லைன்ல தான் எதாச்சும் அனுப்பலாம்னு நெனச்சுட்டு இருந்தேன்... உங்க அம்மா போறதால இங்கயே எதாச்சும் வாங்கி குடுத்து அனுப்பிடலாம்னு தோணுது"

"ஸூர்.... ஒண்ணும் பிரச்சனை இல்ல... புதன்கிழமை குடுத்தா கூட போதும்... அம்மா நைட் பிளைட்ல தான் கிளம்பறாங்க"

"ஒகே மது... நான் இன்னைக்கி ஈவினிங் போய் வாங்கிடறேன்..." என்றவன் "ஏய் மீரா... நீயும் வாயேன்... எங்க அம்மாவுக்கு உன் செலக்சன் எப்பவும் பிடிக்கும்" என்றான் ஆர்வமாய்

மீராவிற்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. இன்று ஸ்டீவை காண செல்வது பற்றி இருந்த கனவெல்லாம் கலைவது போன்ற நினைவில் அவள் முகம் சோர்வுற்றது

மீரா எதுவும் பதில் சொல்லாமல் இருக்கவும் "என்ன மீரா? எந்த சாம்ராஜ்யத்தை பிடிக்க பலத்த யோசனை?" என கேலியாய் சிரித்தான் சதீஷ்

"அது... அது வந்து...நான்...எனக்கு கொஞ்சம் டயர்ட்ஆ...." என மீரா எப்படி சமாளிப்பதென புரியாமல் தடுமாற

"ஒரு வாரம் வீட்டுல ஜாலியா இருந்ததால, இன்னைக்கி புல் டே க்ளாஸ்ல உக்காந்து டயர்ட் ஆன மாதிரி தான் இருக்கே மீரா" என்றாள் மது

மது அப்படி கூற கேட்டதும், மீராவை பார்த்த சதீஷ்'க்கு கூட அதே தோன்றியது, அவள் சோர்வுக்கான நிஜமான காரணம் வேறு என்ற போதும் கூட

"ஆமா மீரா... கொஞ்சம் டல்லா தான் இருக்க... நீ ரெஸ்ட் எடு... நானே போய்க்கறேன்... டிவி பாத்துட்டு உக்காராம நேரத்தோட தூங்கு சரியா" என சதீஷ் அக்கறையுடன் கூறவும், குற்ற உணர்வில் தவித்தாள் மீரா

தன் மீது உண்மையான அக்கறை உள்ளவனை ஏமாற்றுகிறோமே என மனம் உறுத்தியது. பேசாமல் தன் மனதில் ஸ்டீவ் குறித்து ஏற்பட்ட மாற்றத்தை கூறி விடலாமா என்று கூட நினைத்தாள்

ஆனால் ஸ்டீவிடமே இன்னும் மனம் விட்டு பேசாத போது அப்படி செய்வது சரி அல்ல என்று தோன்றியது. அது மட்டுமின்றி சதீசுக்கும் ஸ்டீவுக்கும் இடையில் சரியான புரிதலும் இல்லாத நிலையில் இந்த விசயத்தை சற்று பொறுத்து கூறுவது தான் சரி என நினைத்தாள் மீரா

அதன் பின், அவள் மௌனத்தையும் கூட சோர்வு என்றே நினைத்து கொண்டான் சதீஷ்

ஆனால் மாலை வீட்டிற்கு செல்லும் வரையும் கூட அவள் ஏதோ யோசனை போல் மௌனமாய் இருக்க "மீரா... ஆர் யு ஆல் ரைட்? நான் வேணா கொஞ்ச நேரம் உன்கூட வந்து இருக்கட்டுமா... அம்மா கிப்ட் நாளைக்கு போய் வாங்கிக்கறேன்..." என்றான் சதீஷ்

"வேண்டாம் சதீஷ்" என்றாள் மீரா அவசரமாய் "ஐ அம் ஆல் ரைட்... ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும்... நீ கிப்ட் வாங்க போ" என்றாள்

அன்னைக்கு என்ன வாங்குவது என்ற யோசனையில் இருந்த சதீஷ், மீராவின் குரலில் இருந்த அவசரத்தையும் பரபரப்பையும் கவனிக்க தவறினான்

"ஒகே மீரா..." என்றவன், மறுபடியும் மனம் ஒப்பாமல் அவள் இருப்பிடம் வரை உடன் வந்து விட்டே கிளம்பினான்

மீராவிற்கு அவனது அந்த செய்கை மேலும் குற்ற உணர்வை கூட்டியது

அதே யோசனையில் சற்று நேரம் அமர்ந்து இருந்தவள் செல்பேசி அழைப்பு சத்தத்தில் கலைந்தாள். ஸ்டீவின் எண்ணை கண்டதும், சற்று முன் இருந்த மனநிலை அப்படியே மாற, உற்சாகமாய் "ஹாய்..." என்றாள்

அவள் குரலில் இருந்த குதூகலம் மனதை மயக்க "ஹேய்... இப்பதான் வந்தயா?" என்றான் அவனும் அதே உற்சாகத்துடன்

"ம்.. கொஞ்ச நேரமாச்சு" என்றாள்,வேறு என்ன பேசுவதென தெரியாமல்,

"காதல் - மனதை களவாடி, வார்த்தையை பறித்து கொள்ளும்" என எங்கோ படித்தது மனதில் வந்து போனது அந்த கணம் அவளுக்கு

"என் வீட்டுக்கு வரேனு சொன்ன கெஸ்ட் ரெடி ஆயாச்சானு கேக்கலாம்னு தான் போன் பண்ணினேன்" என்றான் சிரிப்போடு

"ஐயையோ இன்னும் இல்ல" நேரமாகி விட்டதோ என அவசரமாய் மணி பார்த்தவள், சற்று நிம்மதியாகி "உன் வீட்டுக்கு வரேன்னு சொன்ன கெஸ்ட் சொன்ன டைம்க்கு ரெடியா இருப்பாங்களாம்... அந்த சொன்ன டைம்க்கு இன்னும் டூ ஹவர்ஸ் இருக்காம்" என்றாள் அவளும் சிரிப்போடே

"கெஸ்ட்கிட்ட கொஞ்சம் ரெக்கமன்ட் செஞ்சு கொஞ்சம் முன்னாடி ரெடியாக சொல்ல முடியுமா? Two hours seems like a long time now Meera..." என்றவனின் குரலில் இருந்த பொறுமையின்மை அவளையும் தொற்றி கொண்டது

ஆனாலும் அதை காட்டி கொள்ளாமல் "உன் கெஸ்ட் ரெம்ப ஸ்ட்ரிக்ட்... சொன்ன டைம்க்கு ஒரு நிமிஷம் முன்னாடி கூட வர மாட்டாங்களாம்" என்றாள்

ஒரு கணம் மௌனமாய் இருந்தவன் "Best moment in life is, waiting for someone who will be your everything னு ஒரு quote கேள்விப்பட்டு இருக்கியா மீரா?" என ஸ்டீவ் கேட்க

மனதை படம் பிடித்து கட்டுவது போன்ற அந்த வரிகளில் வார்த்தை வராமல், பின் சமாளித்து "இல்ல..." என்றாள் மீரா, அவள் குரலே அவளுக்கு கேட்காதது போல் ஒலித்தது

"There is no way you heard it anywhere, because I made it up just now" என ஸ்டீவ் சிரிக்க

"ஓ... ஒரு கவிஞர் உருவாகிறாரா?" என கேலி செய்தாள் மீரா, ஆனால் தன் குரலில் இருந்த பெருமிதத்தை அவள் மறைக்க முயற்சிக்கவில்லை
 
"But, your quote is mindblowing... so keep enjoying the best moment" என மீரா கேலியும் பெருமிதமும் கலந்து கூற

"I'm willing to sacrifice any best moment to meet my guest now" என ஸ்டீவ் கூறவும், "எனக்கும் அப்படித்தான்" என கூற தோன்றியது மீராவிற்கு

"இப்படி பேசிட்டே இருந்தா உன் கெஸ்ட் நாளைக்கி தான் வர முடியும்னு சொல்றாங்க" என்றாள் மீரா சிரிப்புடன்

"ஐயையோ... அது மட்டும் வேண்டாம்...  ஒகே... நான் போன் வெக்கறேன்... கெட் ரெடி மீரா... சி யு சூன்" என மனமின்றி அழைப்பை துண்டித்தான்  ஸ்டீவ்

அதே நேரம், மீராவின் அறைக்கதவு வேகமாய் தட்டப்பட்டது...
 
பேச செய்யவும்
பேசாமடந்தை ஆக்கவும்
சிரிக்க செய்யவும்
சிந்தைமறக்க செய்யவும்
உலகம் மொத்தமும்வேண்டாம்
உந்தன் ஒருசொல்போதும்!!!


அடுத்த பகுதி படிக்க...

 
(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

Thursday, April 14, 2011

தமிழுக்கும் தங்கமணி என்று பேர்...:))) (125 வது பதிவு)இது எனது 125 வது பதிவு... தொடர்ந்து பொறுமையாய் என் எழுத்தை படித்து வரும் உங்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி...:)

நிரந்தர முன் குறிப்பு:
என் இனிய ப்ளாக் குல மக்களே... இதுல வர்ற தங்கமணி நான் இல்ல... Just an imaginary character. நெறைய பேரு இது நான்னு நெனைச்சுட்டு இதுல வர்ற ரங்கமணிக்கு ஓவரா அனுதாபம் தெரிவிச்சு... விட்டா அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கற அளவுக்கு போறதா நியூஸ் வந்தது.... அதான் இந்த நிரந்தர முன் குறிப்பு இந்த பதிவுகளில் இடம் பெறுகிறது... மேட்டர் மனசிலாயோ... ஒகே ஒகே...:-)))

சரி வாங்க, வழக்கம் போல தங்கமணி ரங்கமணி வீட்டுல என்ன நடக்குதுன்னு வேடிக்கை பார்ப்போம்...


"ஹாப்பி தமிழ் நியூ இயர்ங்க" என தங்கமணி கூற

"என்ன சொன்ன?" என கேலியாய் சிரித்தார் ரங்கமணி

"என்ன சிரிப்பு இப்போ? ஹாப்பி தமிழ் நியூ இயர்னு சொன்னேன்" என்றாள்

"ஹா ஹா... அதை கூட தமிழ்ல சொல்ல மாட்ட... அப்புறம் என்ன தமிழ் நியூ இயர்" என தங்கமணி செய்த தவறை கேலி செய்ய கிடைத்த ஒரே வாய்ப்பை பயன்படுத்த எண்ணி சிரித்தார் ரங்கமணி

"ம்ம்... ரெம்பத்தான்.... உங்களுக்கு புரியணும்னு இங்கிலீஷ்ல சொன்னேன் போதுமா"

"இந்த சமாளிப்பெல்லாம் வேண்டாம் தங்கம்... ஒத்துக்கோ"

"எனக்கொண்ணும் தமிழ் தகராறில்ல... நீங்க தான் "கலர்" தமிழ் வார்த்தை தான்னு பீலா விடற ஆளு"

"ஏய்...யாரப்பாத்து யாரப்பாத்து என்ன வார்த்தை சொன்னாய்... எங்க தாத்தா தமிழ் பண்டிட் தெரியும்ல"

"வாத்தியார் புள்ள மக்கு...அதுவும் தெரியுமே" என தங்கமணி சிக்ஸர் அடித்தார்

"இங்க பாரு தங்கம்...ஸ்கூல் படிக்கறப்ப நான் கவிதை போட்டில எல்லாம் ப்ரைஸ் வாங்கி இருக்கேன்... சும்மா தெரியாம பேசாத" என என்றோ ஒரு நாள் பேர் குழப்பத்துல இன்னொரு ராசுமணிக்கு வர வேண்டிய பரிசு மாறி இவருக்கு வந்ததை, அதுவும் ஒரு பென்சில் டப்பா பரிசு கிடைச்சத பில்ட் அப் பண்ணினார் ரங்கமணி

நம்ம தங்கமணி என்ன சும்மாவா?

"எங்க அண்ணன் ஒரு பழமொழி சொல்லுவான்... கேக்கறவன் கேணயனா இருந்தா எருமைங்கோட ஏரோப்ளேன் ஓட்டுமாம்... ஹ்ம்ம்...ஹையோ ஹையோ" என தங்கமணி மறுபடியும் போட்டார் ஒரு போடு

"ஓஹோ... அவ்ளோ தூரத்துக்கு ஆகி போச்சா... இது இப்படியே விட்டா சரி வராது.... இன்னிக்கி ரெண்டுல ஒண்ணு பாக்கணும்" என குஸ்திக்கு இறங்கும் வீரர் ரேஞ்சில் பேசினார் ரங்கமணி

"அப்படியா... சரி... இன்னிக்கி தமிழ் வருஷ பிறப்பு... இன்னிக்கி ஒரு நாள் பூரா ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காம பேசணும்... பந்தயம் வெச்சுக்கலாமா?" என்றார் தங்கமணி கவனமாய் அப்போதே ஆங்கில கலப்படம் இல்லாமல்

"இதெல்லாம் நமக்கு ஜுஜுபி...." என ரங்கமணி, கவுண்டமணி ரேஞ்சுக்கு அலப்பறை செய்தார்

"ஜுஜுபி என்பது தமிழ் வார்த்தையோ" என நக்கீரர் ரேஞ்சுக்கு தங்கமணியும் குற்றம் குற்றமே என ஆரம்பிக்க

"இது அநியாயம்... இன்னும் போட்டி ஆரம்பிக்கல...." என சமாளித்தார் ரங்க்ஸ்

"ஓ... உங்களுக்கு ஒண்ணு ரெண்டு மூணு சொல்லி ஆரம்பிச்சு வெக்கணுமோ...சரி... ஒண்ணு ரெண்டு மூணு... இந்த நிமிடத்தில் இருந்து ஆரம்பம்... சரி தானே" என தங்கமணி செந்தமிழில் கலக்க

"என்ன தங்கம்... ஏன் ஒரு மாதிரி பேசற" என ரங்க்ஸ் ஜெர்க் ஆனார்

"அது ஒரு மாதிரி இல்லை... ஒரே மாதிரி... அதாவது செந்தமிழ் என அழைக்கப்படும்" என தங்க்ஸ் தட்டி விலாச ரங்க்ஸ் கொஞ்சம் பயமா பாத்தார்

"ஹும்... என்னமோ ஒண்ணு... பேசு பேசு... நான் சாதாரண தமிழ்ல ஒழுங்கா பேசறேன்... அது தான் சரி"

"சரி அத்தான்... உங்கள் இஷ்டம்"

"என்னது பொத்தானா? என்ன கொடுமை தங்கம் இதெல்லாம்" என ரங்க்ஸ் பதற

"என்ன அத்தான் இப்படி கூறி விட்டீர்கள்... அந்த கால தமிழ் படங்கள் பார்த்ததில்லையா தாங்கள்.. அதில் கணவனை அப்படி தான் அழைப்பாள் மனைவி...செந்தமிழில் பேசுவது என்றான பின் அப்படி பேசுவது தானே முறை அத்தான்" என போட்டு தாக்கினார் தங்கமணி

"ஹும்... ஏன் பிராணநாதானு மூக்கால அழேன் ... இன்னும் நல்லா இருக்கும்" என தன் கடுப்பை மறைத்து கொண்டு கூறினார் ரங்கமணி

"அதுவும் சரி தான்... ஆனாலும் எனக்கு அத்தான் என்றழைக்கவே விருப்பம் அத்தான்" என தங்கமணி கவுன்ட்டர் குடுத்தார்

"ம்...சரி சரி" என இடத்தை விட்டு எஸ்கேப் ஆனார் ரங்கமணி

ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில் இருந்த ரங்கமணி "தங்கம் டைம் ஆச்சும்மா.... என் ஷூ எங்க? இங்க தான வெச்சுருந்தேன்"

"என்ன சொன்னீர்கள் ஷூவா? அது தமிழ் சொல் இல்லையே அத்தான்..." என அந்த நேரத்திலும் பாயிண்ட்ஐ பிடித்தாள் தங்கமணி

"அது...அது" என ரங்கமணி தடுமாற

"சரி இந்த ஒரு முறை பிழைத்து போங்கள் அத்தான்..." என தங்கமணி ரெம்ப பெருந்தன்மையாய் கூற

"ரெம்ப சமாளிக்காத... உனக்கு மட்டும் தெரியுமா...ஷூவுக்கு தமிழ்ல என்னனு" என ரங்கமணி, மடக்கினேன் பார் என ஆணவ சிரிப்பு சிரிக்க

"ஏன் தெரியாது அத்தான்... அதனை பாதுகை என்றழைப்பார்கள்... தொலைக்காட்சியில் ராமாயணத்தில் கூட வந்ததே... நீங்கள் பார்த்ததில்லையா? எங்கே உங்களுக்கு சீதையாய் நடித்த தீபிகா மேல் கண் போர் தொடுக்கவே நேரம் சரியாக இருக்குமே"

"என்னது கண் போர் தொடுக்கவா? என்ன தங்கம் சொல்ற" என ரங்கமணி அலற

"அது உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமெனில் சைட் அடிப்பது...சரி அத்தான் உங்களுக்கு நேரமாகிறது... போய் வாருங்கள் அத்தான்" என தங்கமணி பிரியமாய் பிரியா விடை கொடுக்க

"போய் வாரதா.....நீ வாருற ரேஞ்சுக்கு போய் ஒளியறது தான் பெட்டர் இன்னைக்கி... நல்லவேளை இன்னிக்கி ஞாயத்துக்கிழமை இல்ல... ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா" என மனதிற்குள் நினைத்து கொண்டு கிளம்பினார் ரங்கமணி

அன்று மாலை ரங்கமணி அலுவலகம் விட்டு வர அதற்கே காத்திருந்தார் போல் "வாருங்கள் அத்தான்... தேநீர் அருந்துகிறீர்களா?" என தங்கமணி ஆரம்பிக்க

"ஐயயோ...இத மறந்துட்டனே... இன்னும் கொஞ்ச நேரம் ஆபிஸ்லையே இருந்துருக்கலாம்" என மனதிற்குள் நினைத்த ரங்கமணி ஒன்றும் பேசாமல் "சரி..." என்பது போல் தலை மட்டும் அசைத்தார்

தேநீர் அருந்திய பின் "இன்று தமிழ் வருட பிறப்பிற்கு கோவில் செல்லலாமா அத்தான்" என தங்கமணி கேட்க

"அப்பாடா... வெளிய போனா கொஞ்ச நேரமாச்சும் எஸ்கேப் ஆகலாம்" என நினைத்த ரங்கமணி "போலாமே" என மகிழ்ச்சியாய் கிளம்பினார்

செல்லும் வழியில் ரங்கமணி முடிந்த வரை மௌன நாடகம் நடத்தினார்

"ஏன் அத்தான் இந்த வழியில் செல்கிறீர்கள்... வழக்கமான வழியில் செல்லவில்லையா?" என தங்கமணி கேட்க

"அது...." டிராபிக் என சொல்ல வந்தவர்... தமிழ் வார்த்தை தேடி தவித்து "கூட்டம்...அதான்" என சமாளித்தார்

"ஓ... வாகன நெரிசல் அதிகம் என்கிறீர்களா அத்தான்"

"ஆமா ஆமா..." என்றார் "ச்சே...இவளுக்கு மட்டும் இவ்ளோ தெளிவா வார்த்தை வருதே" என மனதிற்குள் டென்ஷன் ஆனார், ஆனால் வெளியில் காட்டி கொள்ளவில்லை

சற்று நேரத்தில் டிராபிக் சிக்னல் என காரை ரங்க்ஸ் நிறுத்த "ஏன் நிறுத்தி விடீர்கள் அத்தான்" என வேண்டுமென்றே கேட்டார் தங்க்ஸ்

"அது...அதான்... இது" என முன்பக்கம் கை காட்ட

"எது? " என புரியாத பார்வை பார்த்தார் தங்கமணி

பொறுமை இழந்த ரங்கமணி "நீ வேணும்னே சிக்க விடற தங்கம்... டிராபிக் லைட்க்கு எல்லாம் தமிழ்ல வார்த்தை இல்ல ... "

"இருக்கிறது அத்தான்.... உங்களுக்கு தெரியவில்லை என தோல்வியை ஒப்புகொள்ளுங்கள் நான் சொல்கிறேன் அதற்கு தமிழ் வார்த்தை என்னவென" என தங்கமணி சிரிக்க

"அம்மா பரதேவதே... நான் தோத்துட்டேன்... ஒத்துக்கறேன்... ஆளை விடு" என சரண்டர் ஆனார் ரங்கமணி வழக்கம் போல்

"ஹா ஹா ஹா" என வெற்றி சிரிப்பு சிரித்தார் தங்கமணி

******************************************************

ஹா ஹா ஹா.... வழக்கம் போல நம் கட்சி தான் ஜெயித்தது... அதாவது நம்ம தங்கமணி தான் ஜெய்ச்சாங்க...  இதே சந்தோசத்தோட எல்லாருக்கும் "இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்" சொல்லிக்கறேன்

இந்த வருடம் எல்லோருக்கும் இனிய வருடமாய், வேண்டுவன எல்லாம் பெற்று நலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்

நடந்து முடிஞ்ச எலக்சன்க்கும் மேல சொன்ன வாழ்த்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை மக்களே.. நான் பொதுவா தான் சொன்னேன்... :)))

"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்... "- அடவம்பே எனக்கு ஏன் இப்ப இந்த பாட்டு தோணுது... என்னமோ போ அப்பாவி...:)))

மைண்ட்வாய்ஸ் - தமிழ்ல டிராபிக் லைட்க்கு என்ன? அதை சொல்லாம எஸ்கேப் ஆக முடியாது நீ

அப்பாவி - அது தான் உங்க எல்லாருக்கும் தமிழ் புத்தாண்டு புதிர்... தெரிஞ்சவங்க கமெண்ட்ல சொல்லுங்க... நான் எஸ்கேப் ஆகலை... நெஜமா எனக்கு தெரியும்... ஆனாலும் உங்களுக்கான புதிர் இது. சொல்லுங்க பார்ப்போம்...

மைண்ட்வாய்ஸ் - உன் டகால்டி எல்லாம் உன் ரங்க்ஸ் வேணா நம்புவாரா இருக்கும்... நாங்க நம்ப தயாரா இல்ல... ஒழுங்கா ட்ராபிக் லைட்க்கு தமிழ்ல என்னனு சொல்லிட்டு போ...

அப்பாவி - படுபாவி மைண்ட்வாய்ஸ் என்னை கால் காசுக்கு நம்ப மாட்டியே... தொலஞ்சு போ... டிராபிக் லைட்க்கு தமிழ் வார்த்தை "சமிக்கை விளக்கு"... போதுமா?

மைண்ட்வாய்ஸ் - ச்சே... சிக்கவெக்கலாம்னு பாத்தா தப்பிச்சுட்டாளே... மறுபடி சான்ஸ் கிடைக்காமையா போகும்... சரிங்க... எல்லாருக்கும் நானும் ஹாப்பி நியூ இயர்...ச்சே... இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன்..நன்றி...வணக்கம்...:))

தங்கமணி ரங்கமணியின் முந்திய சில கலாட்டாக்கள் இங்கே:-

1. தங்கமணி ரங்கமணி (ஒரு அறிமுகம்)

2. கேயாஸ் தியரியும் தங்கமணியும்... (ஹையோ ஹையோ)

3. ரங்கமணி - Is he a DOS or Windows?

4. தங்கமணி சபதம்... (ஹி ஹி)

:)))

Tuesday, April 12, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 15)பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8   பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14

"ஏய் என்ன கிண்டலா... உன்னை விட நல்லாவே குக் பண்ணுவேன்" என்றான் ஸ்டீவ் பொய் கோபத்துடன்

"அதை சாபிட்டப்புறம் சொல்றேன்" என மறைமுகமாய் வருவதற்கு சம்மதம் கூறினாள் மீரா

அதை புரிந்து கொண்டவனாய் "ஒகே... ஈவினிங் ஏழு மணிக்கு வந்து உன்னை பிக் அப் பண்ணிக்கறேன் மீரா"

"இல்ல ஸ்டீவ்... உன் அபார்ட்மென்ட்க்கு தானே... நானே வந்துடறேன்"

"இல்ல மீரா... I want to do this... ப்ளீஸ்..." என்றான் வேண்டுகோள் போல

அதற்கு மேல் மறுக்க இயலாமல் "ஒகே...சரி குட்நைட்" என்றாள்

"ஏன் தூக்கம் வருதா?" என பேச்சை வளர்த்தான் அழைப்பை துண்டிக்க மனமின்றி

"இல்ல... வாக்கிங் போலாம்னு இருக்கேன்" என்றாள் கேலியாய்

"எனக்கும் இப்ப அப்படி தான் இருக்கு... தூக்கம் வர்ல" என சிரித்தான்

"போய் தூங்கறேன்... ஒரு வாரம் கழிச்சு நாளைக்கு தான் நான் க்ளாஸ்க்கு போகணும். க்ளாஸ்ல தூங்கினா சகிக்காது"

"ஹா ஹா... ஒகே ஒகே... போய் தூங்கு... அ...அப்புறம்... நாளைக்கு நான் யூனிவர்சிட்டி வர மாட்டேன் மீரா... சம்மர் ப்ராஜெக்ட் விசயமா நான் சொல்லிட்டு இருந்தேன் இல்லையா... அந்த கம்பெனில appointment இருக்கு... ஈவினிங் பாக்கலாம் ஒகேவா"

"ம்... ஒகே... பை..." என்றாள், அழைப்பை துண்டிக்க மனமின்றியே

அதற்குள் "மீரா..." என ஸ்டீவ் தயக்கமாய் நிறுத்த

"சொல்லு ஸ்டீவ்" எனவும்

"அது... ம்... நத்திங்... ஒகே குட்நைட்... ஸ்வீட் ட்ரீம்ஸ்" என அவன் சிரிக்க

"நடு ராத்திரில அரை லூசு தான் இப்படி சிரிக்கும்" என்றாள் மீரா சிரிப்பை அடக்கியவாறே

"அப்ப முழு லூசு அதை கேட்டுட்டு இருக்குமா?" என்றான் அவனும் சளைக்காமல்

ஏதோ நினைவில் "ம்.." என்றவள், பின் புரிந்து "என்னது... ? உன்ன... முழு லூசுகிட்டயெல்லாம் உன்னை யாரு பேச சொன்னாங்களாம்" என்றாள் பொய் கோபத்துடன்

"ம்... முழு லூசு missed you னு சொல்லுச்சே அதான்... அதோட முழு லூசை நானும் ரெம்ப ரெம்ப மிஸ் பண்ணினேன்" என அவன் விளையாட்டாய் ஆரம்பித்து உணர்ச்சி வயமாய் கூறி முடிக்க, சற்று நேரம் இருவரும் பேசவில்லை

"இப்பவே உன்னை பாக்க வரட்டுமா" என கேட்க தோன்றியது ஸ்டீவிர்க்கு

இத்தனை நாள் தான் மட்டுமே அவளை விரும்பிய போது இருந்த பொறுமை இப்போது அவள் மனம் புரிந்ததும் ஸ்டீவிடம் இல்லாமல் போனது போல் உணர்ந்தான்

இன்னும் சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும்... காத்திருப்பதும் ஒரு சுகம் தான் காதலில் என தோன்றியது இருவருக்கும்

மனம்விட்டு பேசாத போதும் ஒரே எண்ண அலைகளில் தான் இருவரும் மூழ்கி இருந்தனர்

இப்படியே எத்தனை நேரம் பேசாமல் செல்பேசியை வைத்து கொண்டு கனவில் மூழ்கி இருப்பது என நினைத்தவளாய் "ஒகே பை... நாளைக்கு மீட் பண்ணலாம்" என்றாள் மீரா

"ஒகே... பை" என்றான் மனமின்றி, ஆனாலும் இருவரும் இணைப்பை துண்டிக்கவில்லை

"போன் கட் பண்ணு ஸ்டீவ்" என மீரா கூற

"நீ மொதல்ல கட் பண்ணு" என்றான்

"முடியாது... நீ மொதல்ல கட் பண்ணு ஸ்டீவ்" என்றாள் பிடிவாதமாய்

"நோ வே... நான் தானே கால் பண்ணினேன்... நீ கட் பண்ணு மீரா" இப்படியே இன்னும் சற்று நேரம் சீண்டலாய் மாற்றி மாற்றி வம்பு செய்துவிட்டு ஒரு வழியாய் அழைப்பு துண்டிக்கப்பட்டது

அதன் பின்னும் ஸ்டீவ் வெகு நேரம் உறங்கவில்லை. சற்று முன் நடந்தது கனவா நினைவா என நம்ப இயலாதவன் போல் மிதந்து கொண்டிருந்தான்

மணி மூன்றென செல்பேசியில் பார்த்தவன் அவளும் உறங்கி இருக்க மாட்டாளோ என நினைத்தான்

"மீண்டும் அழைத்து பார்த்தால் என்ன" என தோன்றிய மறுகணம் "ஒருவேளை தூங்கி இருந்தால்... பாவம்..." என தோன்ற அந்த எண்ணத்தை கைவிட்டான்

ஆனால் மீராவும் அப்போது உறங்கி இருக்கவில்லை

மனம் முழுக்க சந்தோசமும் காதலும் நிறைந்திருக்க தூக்கம் வருவேனா என்றது. திரும்ப திரும்ப அவன் பேசியதெல்லாம் வந்து வந்து போனது மனதில்

"முழு லூசை நானும் ரெம்ப ரெம்ப மிஸ் பண்ணினேன்" என அவன் சொன்னது நினைவு வர "வெவ்வவெவ்வே... ரெம்பத்தான்..." என எதிரே அவன் இருப்பது போல் கற்பனையில் பழிப்பு காட்டினாள்

அப்படியே கனவில் கற்பனையில் சற்று நேரம் ஓட, சோர்வில் நினைவின்றி உறங்கினாள்

****************************

நல்ல தூக்கத்தில் இருந்தவள் செல்பேசி சத்தம் கேட்டு கண் விழித்தாள் மீரா. ஸ்டீவின் எண்ணை கண்டதும் தூக்க கலக்கம் போன இடம் தெரியவில்லை

"ஹலோ.." என்றாள் உற்சாகமாய்

அவளின் உற்சாக குரல் அவனையும் தொற்றிக்கொள்ள "ஹலோ... நான் தான் எழுப்பி விடணும்னு நெனச்சேன்...மொதலே எழுந்தாச்சு போல இருக்கே"

"இல்ல... இப்ப போன் சத்தத்துல தான் எந்திரிச்சேன்"

"ரியல்லி... தூக்க கலக்கம் இல்லாம பிரெஷ்ஆ இருக்கியேனு கேட்டேன்... ஒருவேள தூங்கவே இல்லையோ" என்றான் குறும்பு வழியும் குரலில்

"அதெல்லாம் ஒண்ணுமில்ல... அப்பவே தூங்கிட்டேன்" என்றாள் வேண்டுமென்றே

"அப்படியா... அப்ப நான் தான் பைத்தியம் தான் ட்ரீம் அடிச்சுட்டு தூக்கத்த கெடுத்துட்டு இருந்தேனா?" என்றான் பாவமான குரலில்

"ட்ரீம் எல்லாம் அடிச்சியானு தெரியல... இன்னொரு விஷயம் நீ ஒரு நல்ல டாக்டர்கிட்ட Clarify பண்ணிக்கறது பெட்டர்..." என சத்தமாய் சிரித்தாள்

அவள் இப்படி தன்னோடு தடையின்றி மனம் விட்டு சிரித்தும் பேசியும் பல நாட்கள் ஆனதால் மிகவும் சந்தோசமாய் உணர்ந்தான் ஸ்டீவ். பேசக்கூட தோன்றாமல் மௌனமாய் இருந்தான்

"என்ன ஸ்டீவ்... மௌனம் சம்மதம்னு எங்க ஊர்ல சொல்ற மாதிரியா?" என மீரா மேலும் கேலி செய்தாள்

"ம்... ஆமா... சம்மதம் தான் மீரா... நீ என்ன சொன்னாலும்.." என்றான் இருபொருள் பட, இப்போது மௌனமாவது அவள் முறையானது

"ஏய்... என்ன இப்ப நீ சைலண்ட் ஆய்ட்ட?" என அவன் சீண்ட

"ஒண்ணுமில்ல.." என்றாள்

"ம்... அப்புறம் ஈவினிங் டின்னர்க்கு என் வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வர்றாங்க... அவங்களுக்கு பேவரெட் டிஷ் எதுனா சாய்ஸ் இருக்கானு கேக்கலாம்னு தான் கூப்ட்டேன்" என்றான், அழைத்ததுக்கு ஏதேனும் காரணம் சொல்லணும் என, அதோடு பேச்சை வளர்க்கவும் ஏதுவாய்

"அப்படியா... அந்த கெஸ்ட்க்கு என்ன பிடிக்கும்னு தெரியாமையே கூப்ட்டு இருக்கியா... ஐயோ பாவம் அந்த கெஸ்ட்" என்றாள் கேலியாய்

"பாவம் அந்த கெஸ்ட்டா இல்ல நானான்னு இன்னைக்கி தெரியத்தானே போகுது" என்றான் அவனும் விடாமல் கேலியாய்

"உன்னை நம்பி சாப்பிட வர்றதுக்கே தனி அவார்ட் தரணும்... So, கெஸ்ட் தான் பாவம்" என்றாள்

"என்ன அவார்ட் தரணும்... அதையும் நீயே சொல்லு?"

"ம்... நீ தானே ஹோஸ்ட்... நீ தான் சொல்லணும்"

"அப்படியா... ஒகே... ஒரு வெரி ஸ்பெஷல் கிப்ட் வெச்சு இருக்கேன்... என் கெஸ்ட்க்கு அந்த கிப்ட் என்னை தவிர வேற யாரும் குடுக்க உரிமை இல்லாத கிப்ட்" என வேண்டுமென்றே பேச்சை நிறுத்தினான், அவளை பேச தூண்ட செய்பவன் போல்

ஆனால் மீராவிற்கு பேச்சே வரவில்லை. ஒரு விதமான இன்ப அவஸ்தையில் மௌனமானாள்

பேச்சு மட்டுமல்ல, மௌனம் கூட சில நேரங்களில் ரசிக்க கூடியவை தான் என உணர்ந்தான் ஸ்டீவ்

"மீரா... எப்பவும் உன் பேச்சை நான் ரசிப்பேன்... ஆனா இந்த நிமிஷம், உன் மௌனம் கூட எனக்கு ரெம்ப பிடிச்சுருக்கு" என ஸ்டீவ் கூற மீராவிற்கு கண்ணில் நீர் துளிர்த்தது

இத்தனை காதலை மனதில் பூட்டி வைத்து கொண்டு எப்படி இருக்க முடிந்தது இவனால் என நினைத்தாள்

சற்று நேரம் அந்த மௌனத்தை மௌனமாய் ரசித்து நின்றனர் இருவரும்

"மீரா... லைன்ல இருக்கியா?" என ஸ்டீவ் கேலியாய் கேட்க

"ம்.. " என்றவள், இப்படியே பேசிக்கொண்டிருந்தால் இன்று வீட்டை விட்டு கிளம்பியது போல் தான் என நினைத்தவளாய் "ஒகே ஸ்டீவ்... நான் போய் ரெடி ஆகறேன்... டைம் ஆய்டும்" என்று பேச்சை மாற்றினாள்

அதை புரிந்து கொண்டவனாய், இன்னும் பேச வேண்டும் என்ற ஆவலை மறைத்து கொண்டு "ஒகே மீரா.. ஈவினிங் பாக்கலாம்... ஏழு மணிக்கு ரெடியா இரு... நான் பிக் அப் பண்ணிக்கறேன்" என்றான்

"ம்... ஒகே பை... all the best with the project proposal"

"தேங்க்ஸ் மீரா... have a good day" என்றான்

அழைப்பை நிறுத்திய பின்னும் சற்று நேரம் அந்த பேச்சின் நினைவில் லயித்து இருந்தனர் இருவரும்

"இன்னைக்கி தானா இந்த ப்ராஜெக்ட் மீட்டிங் இருக்கணும்" என சலித்து கொண்டான் ஸ்டீவ், இல்லையெனில் சற்று நேரத்தில் அவளை பார்த்து இருக்கலாம் என நினைத்தான் ஸ்டீவ்

இந்த ப்ராஜெக்ட் மீட்டிங் பல நாட்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது என்பதால் தவிர்க்க இயலாமல் இருந்தான். ஒரு வகையில் அதுவும் நல்லது தான் என தோன்றியது அவனுக்கு

மனம் ஒன்றான பின் முதல் சந்திப்பு எல்லோரின் மத்தியில் கல்லூரியில் என்பதை விட தன் வீட்டில் என்பது இன்னும் இனிமையானதாய் அமையும் என நினைத்தான்

மீராவிற்கு அன்று வகுப்பிற்கு செல்லவே விருப்பம் இருக்கவில்லை. இப்படியே கனவில் மூழ்கி இருக்கவே விருப்பமாய் தோன்றியது

அப்படி பொறுப்பற்று இருக்கவும் ஏனோ மனம் இடம் தரவில்லை. அதோடு செல்லவில்லையெனில் சதீஷ் வேறு காரணம் கேட்பானே என நினைத்த நொடி அவளின் செல் பேசி அழைத்தது

அதில் சதீஷின் எண் வர "Hello... Think of the devil... there it is" என்றாள் சிரித்து கொண்டே

"நான் Devil ஆ... நேரம் தான்... சரி, ரெடி ஆயாச்சானு கேக்கலாம்னு தான் கூப்ட்டேன்... I'm on my way" என்றான் சதீஷ்

"ஐயையோ... கிளம்பியாச்சா நீ... நான் இன்னும் ரெடி ஆகல... நீ க்ளாஸ்க்கு போ சதீஷ்... நான் நேரா வந்துடறேன்" என்றாள்

"ஒண்ணும் வேண்டாம்... ஒழுங்கா சீக்கரம் ரெடி ஆகு. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்"

"என்ன விஷயம்?" என மீரா ஆர்வமாய் கேட்க

"அதெல்லாம் போன்ல சொல்லமாட்டேன்... நேர்ல தான்... கெட் ரெடி சூன்" என்றான்

"சொல்லு சதீஷ் ப்ளீஸ்"

"சான்சே இல்ல... ஒழுங்கா சீக்கிரம் ரெடி ஆனா கொஞ்ச நேரத்துல சொல்றேன்... இல்லைனா ஈவினிங் தான் சொல்லுவேன்" என சதீஷ் மிரட்டல் போல் கூற

"ஐயோ... சாயங்கலாம் என்றால்...வேறு வினையே வேண்டாம்" என நினைத்த மீரா, அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் "ஒகே... நான் ரெடி ஆகறேன்...பை" என செல்பேசியை அணைத்தாள்

அவள்பேசும் பேச்சழகு
அதுஎன்னோடு பேசுவதெனில்
அவள்பேசா மௌனமும்அழகே
அந்தமௌனம் என்நினைவில்எனில்!!!

அடுத்த பகுதி படிக்க...


(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

Wednesday, April 06, 2011

Rusk சாப்பிடறதே Riskஆ போச்சே....ஹ்ம்ம்...:))


மைண்ட்வாய்ஸ் - என்னாச்சு அப்பாவி... ரஸ்க் சாப்ட்டு பல்லு கில்லு டேமேஜ் ஆய்டுச்சா... வயசானா இப்படி தான்... ஹையோ ஹையோ...

வேண்டாம் மைண்ட்வாய்ஸ் நான் கொல வெறில இருக்கேன்... நீயா வந்து சிக்கிக்காதே (மைண்ட்வைஸ் ஓடி ஒளி(ழி)கிறது)

அத உடுங்க... நான் சொல்ல வந்த விசியத்த சொல்லிட்டு போறேன்...

(மைண்ட்வாய்ஸ் லோ வாய்சில் - அவ்ளோ சீக்கரம் போவாளா என்ன? எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆகும்... எல்லாரும் போய் பப்ஸ், பாப்கார்ன், ஜூஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து அப்புறம் படிங்க... ஹ்ம்ம்)

ஆனா ஒண்ணுங்க... இதை படிச்சப்புறம் இனிமே யாரும் "ரிஸ்க் எடுக்கறது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி"ங்கற டயலாக் சொல்ல மாட்டீங்க... அது நிச்சியம்...

என்னமோ சொல்லுவாங்களே "போஸ்ட் போடப்போனா பிளாக்கர் சர்வர் டௌன்... கமெண்ட் போடப்போனா கரண்ட் கட்டு"னு

(எவ்ளோ நாளைக்கு தான் உப்பு விக்கறதையும் பொரி விக்கறதயுமே சொல்றது....infact இப்ப யாரும் கூடைல வெச்சு உப்பும் பொரியும் வித்துட்டு வர்றதில்ல.. அதான் நானும் பழமொழிய ரீமிக்ஸ் பண்ணிட்டேன்... ஹி ஹி...)

அந்த கதையா ஆகி போச்சு என் நிலைமை. என்ன செஞ்சாலும் வம்புலையே முடியுது... ஷூ லேஸ் கட்டினா கூட சுனாமி வந்துடுமோனு திக்கு திக்குனு இருக்குனா பாருங்களேன்... ஹும்...

அது என்னோட ராசி அப்படியா, இல்ல சுற்றமும் நட்பும் சூழ செய்யும் சதியானு இன்னும் கண்டுபிடிக்க முடியல... ஆனா நான் சி.ஐ.டி சகுந்தலாவா மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை மக்களே வெகு தூரத்தில் இல்லை... :)

இந்த கொடுமையான சம்பவம் நடந்த நாள் போன சனிக்கிழமை... சிலருக்கு தெரிஞ்சு இருக்கலாம்... நான் வார இறுதி நாட்கள்ல ரெம்ப பிஸி... அப்போ ஆபீஸ்ல தான் வெட்டியா'னு எல்லாம் கேக்கக்கூடாது... மீ ஆல்வேஸ் பிஸிபேளாபாத் ஒன்லி..:)

நான் சொல்லவந்தது என்னனா, வார நாள் விட வார இறுதில ரெம்ப ரெம்ப பிஸி... ஒரு குடும்ப இஸ்திரிக்கே உரிய பொறுப்புகள் எல்லாம் இருக்கே... அதை எல்லாம் செய்யவே சரியா இருக்கும்னு சொல்ல வந்தேன்...

அந்த பொறுப்புகள் எல்லாம் என்ன என்னனு ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்படுத்தி சொல்லி சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ளும் எண்ணம் இல்லாதபடியால் நேரா நான் மேட்டர்க்கே போறேன்...

(மைண்ட்வாய்ஸ் - போறேன் போறேன்'னு பொழுது விடிஞ்சதுல இருந்து சொல்லிட்டே தான் இருக்கா இவளும்...ஹ்ம்ம்)

எங்க உட்டேன்...ஆங்... சனிக்கிழமை சாயங்காலத்துல உட்டேன்... பொதுவா சனிக்கிழமை சாயங்காலம், வேலை எல்லாம் முடிச்சுட்டு ரிலாக்ஸ்'டா ஒரு சினிமா பாக்கறது தான் எங்க வழக்கம்

ஆனா... விதி வீதி முனைல நின்னு விழுந்து விழுந்து சிரிக்கறப்ப நம்மளை அப்படி நிம்மதியா விட்டுடுமா என்ன? என்னமோ சினிமா பாக்கற மூட் இல்ல...  வெளில குளிர் கொடுமை... வெளிய போறாப்லயும் இல்ல... அப்புறம் என்ன செய்ய... "ஏதோ கெட்டா ஏதோ செவுரு"ன்னு சொன்ன கதையா லேப்டாப் தான் நமக்கு லாஸ்ட் ரிசார்ட்....:)

ரங்க்ஸ் அப்பவும் சொன்னார்..."அந்த கண்ணுக்கு தான் கொஞ்சம் ரெஸ்ட் குடேன்... டிவி விட்டா லேப்டாப், லேப்டாப் விட்டா கதை புக்குனு படுத்தறயே"னு...

"உங்களுக்கு லாப்டாப் வேணும்னா நேரடியா கேளுங்க"னு அவர கிண்டல் பண்ணினேன் (உடனே நாலு பேரு வந்து ரங்க்ஸ்க்கு பரிஞ்சு பேசுவீங்கனு தெரியும்... ஹி ஹி... நிஜமாவே லாப்டாப் வேணுங்கறதுக்காக சிலசமயம் அக்கறையா பேசி இந்த அப்பாவி பொண்ணை ஏமாத்திய கதையும் உண்டு... அதை வெச்சு தான் சொன்னேன் யுவர் ஹானர்...:))

ஒருவழியா லாப்டாப்ல க்ரஹப்ரவேஷம் செஞ்சேன்... அதையும் இதையும் பாத்துட்டு கடைசியா "காபி வித் அனு" ப்ரோக்ராம்ல வந்து லேண்ட் ஆனேன்... (பின்னால் வரப்போகும் விபரீதத்தை அறியாமல்...ஹ்ம்ம்...:))

"காபி வித் அனு" பாத்ததும் காபி சாப்பிடணும்னு தோணுச்சு...

மைண்ட்வாய்ஸ் - அப்ப "நடந்தது என்ன" நிகழ்ச்சி பாத்தா நடக்க தோணுமோ?

அப்பாவி - இல்ல உன்னை நடக்க விடாம செய்ய தோணும்... grrrrrrrrrrrrrrr....

"பில்ட்டர் காபியா... இது Bru 'மா" விளம்பரம் ஸ்கூல் நாட்கள்ல அதிகம் பாத்த பாதிப்போ என்னமோ எனக்கு அந்த காபி தான் பிடிக்கும்... அதுல சிக்கரி பொடி ஜாஸ்தி, மூக்கு பொடி கம்மினெல்லாம் சிலர் அட்வைஸ் பண்ணினாங்க... நான் டெய்லி காபி குடிக்கற பழக்கம் இல்ல, வார கடைசி மட்டும் தான்...சோ தப்பில்லனு அந்த அட்வைஸ் எல்லாம் இந்த காதுல வாங்காமையே காத்துல விட்டாச்சு...

எனக்கு காபியும் அவருக்கு டீயும் போட்டு எடுத்துட்டு வந்து மறுபடியும் லேப்டாப்ல மூழ்கினேன்... ஒரு சிப் தான் காபி குடிச்சு இருப்பேன்... அதுக்குள்ள "வெறும் காபியா, கூட எதுனா கொறிக்க இருந்தா நல்லா இருக்குமே"னு தோணுச்சு

அதை ரங்க்ஸ்கிட்ட சொல்லவும் "இத பாரு... ஒண்ணு நீ யூஸ் பண்ணு, இல்லேனா லாப்டாப் எனக்காச்சும் குடு... நான் மேட்ச் பாக்கறேன்"னாரு (பாத்தீங்களா பாத்தீங்களா... இப்ப உண்மை வெளில வந்துடுச்சு...:))

உங்களை நானன்றி யாரரிவார்...:))

ஆனா ஒரு விஷயம் எனக்கு புரியலைங்க.. ஒரே மாட்சை மறுபடி மறுபடி எப்படி பாக்கறாங்க... அதே பேட்ஸ்மேன், அதே பௌலர், அதே பந்து, அதே கேட்சு...ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா.... இன்னொரு வாட்டி பாத்தா 4 ரன் உருமாறி 6 ரன் ஆகுமா...இல்ல டக்அவுட் ஆனது நோ பால் ஆகுமா... கஷ்டம்டா சாமி...:)

நானும் கிரிக்கெட் ரசிப்பேன் தான்... Infact போன சனிக்கிழமை World Cup Final Match  அன்னைக்கி எக்க சக்க டென்சன்ல நகத்தை எல்லாம் கடிச்சு குதறின கேஸ் தான், ஆனா அதே மேட்சை இன்னொரு வாட்டி எல்லாம் பாக்கற அளவுக்கு இல்லப்பா... "என்று தணியும் இந்த கிரிக்கெட் தாகம்?" னு பாட தோணுது போங்க...:)

சரி...நம்ம சோக கதைய பார்ப்போம்...

(மைண்ட்வாய்ஸ் - பாப்போம் பாப்போம்...நீ சொல்றயா... இல்ல தொடரும் போடறயானு?)

நொறுக்ஸ் எதுனா இருக்கானு போய் தேடினா பெருசா ஒண்ணும் சிக்கலை... சின்னதா ஒரு ரஸ்க் பாக்கெட் தான் இருந்தது... சரி கமெண்டே இல்லாததுக்கு அனானி கமெண்ட் வந்தா போதும்னு நாம மனசை தேத்திகறதில்லையா... அந்த மாதிரி ஒண்ணும் இல்லாததுக்கு இது ஒகேனு ரஸ்க் & காபியோட "காபி வித் அனு" பாக்க ஆரம்பிச்சேன்

ரெண்டு வாரம் முன்னாடி ப்ரோக்ராம்... "ஜோதிலச்சுமியும் குயிலியும்" கெஸ்டா இருந்தாங்க... சில சமயம் ரெம்ப மொக்கை ஆட்களா இருந்தா வேற நிகழ்ச்சிக்கு தாவிடுவேன்... சரி இவங்க வித்தியாசமான கெஸ்ட்ஸ் போல இருக்கேன்னு பாக்க ஆரம்பிச்சேன்... நல்லா தான் இருந்தது பேட்டி... டான்ஸ் பாட்டுனு களை கட்டுச்சு

ப்ரோக்ராம் முடிஞ்சதும் ஈமெயில் பாக்கலாம்னு போனேன்... "பில் கேட்ஸ் கூட ஒரு நாளைக்கி இவ்ளோ வாட்டி ஈமெயில் செக் பண்ண மாட்டார்" னு பக்கத்துல ஒருத்தர் கிண்டல் பண்ணினது என் காதுலையே விழல..:)

நமக்கென்ன ஒபமாவும் ஒசாமாவுமா ஈமெயில் அனுப்பி இருக்க போறாங்க... ஏதோ ஒண்ணு ரெண்டு சொந்தம் பந்தம் போனா போகுதுன்னு அனுப்பி இருந்த ஈமெயில்க்கு பதில் எழுதலாம்னு ஆரம்பிச்சேன்

டைப் பண்ண ஆரம்பிச்சப்புறம் என்னமோ "பல்லிடுக்குல சிக்கின சோம்பு" மாதிரி ஒரு அவஸ்தை... டைப் பண்ணினதை படிச்சு பாத்தா "என்னமோ மிஸ் ஆகுதே"னு தோணுச்சு...

"how ae you? how about eveyone at home? ae u planning any tip this summe?" - இந்த வாசகத்த படிச்சா உங்களுக்கு என்ன மிஸ்ஸிங்னு புரிஞ்சதா... அதே அதே... அதான் மிஸ்ஸிங்...

"R"ங்கற எழுத்து மிஸ்ஸிங்... என்னடா இது வம்பா போச்சுனு நானும் தாமஸ் அல்வா & கேசரி  (ஹி ஹி) எடிசியா மாறி கீ போர்டை ஆராய்ச்சி செஞ்சேன்... ஒண்ணும் புரியல...

"ரா ரா...R ரா ரா ரா... "னு நானும் நம்ம "ஜோ" மாதிரி கண்ணை உருட்டி மெரட்டி எல்லாம் பாத்தேன்... லாப்டாப் ஒண்ணும் பயந்த மாதிரி காணோம்...

மைண்ட்வாய்ஸ் - பக்கத்துல இருந்த ஒருத்தர் பயந்த மேட்டரை சென்சார் பண்ணிட்டா...:)

சரி தான் "ரா லேன்ட்டி போ ரா" னு நான் முடிவுக்கு வந்த நேரம்...அவ்ளோ நேரம் நான் மண்டை ஓடைச்சுகிட்டதை சந்தோசமா பாத்துட்டு இருந்த ரங்க்ஸ் "என்ன ஆச்சு?" னு கேட்டார்

எனக்கு அப்ப இருந்த கடுப்புல "ம்... கொழந்த அழுது... உட்வார்ட்ஸ் கிரேப் வாட்டர் குடுங்க"னு சொல்லணும்னு தோணுச்சு... ஆனா இருக்கற ஒரு எஞ்சினீயரையும் பகைச்சுட்டு எதுக்கு வம்புனு பேசாம இருந்துட்டேன்...:))

அவரும் ஒரு நியுட்டனா மாறி ஆராய்ச்சில இறங்கினார்... ஒரு விஷயம் இப்ப சொல்லியே ஆகணுங்க... இந்த ரங்க்ஸ்'க இருக்காங்களே... நமக்கு ஒரு விஷயம் தெரியலைனு அவங்களுக்கு புரிஞ்சு போச்சுன்னு வெய்ங்க...நாம அன்னைக்கி காலி...

செம அலப்பறை பண்ணுவாங்க... வேணும்னே இல்லாத டெக்னிகல் டெர்ம்ஸ் எல்லாம் சொல்றது... ஒரு திருகாணிய பிக்ஸ் பண்றதுக்கு கூட ஒண்ணரை டன் சைஸ்ல இருக்கற டூல் பாக்ஸ் எல்லாம் எடுத்து வெச்சுட்டு பந்தா பண்றது... நாம நடுல எதுனா சொல்லபோனா "உனக்கு இதெல்லாம் தெரியாது... பேசாம இரும்மா"னு பில்ட் அப் செய்யறது... சான்சே இல்ல போங்க... இந்த விசியத்துல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...

அதுலயும் நாம எதுனா சந்தேகம் கேட்டோம்னு வெய்ங்க, அது சொந்த செலவுல சூனியம் தான்...

எப்படி குழப்பி சொன்னா நமக்கு கொஞ்சம் நஞ்சம் தெரிஞ்சதும் மறந்து போகுமோ அப்படி கன்னா பின்னானு Integral Calculas ரேஞ்சுக்கு ஒரு விளக்கம் சொல்லி நம்ம தலைல இருக்கற நட்டு போல்ட்டு எல்லாம் டைட் பண்ணனுமோனு நமக்கே சந்தேகத்த வர வெச்சுடுவாங்க...

இந்த விசியத்துல இவங்க 'கில்லி'க தான் போங்க...

"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான்" எல்லாம் பழைய டயலாக், "என்ஜினியரை ரங்கமணியாய் பெற்ற தங்கமணி போல் நின்றார்" னு சொன்னால் அது மிகையில்லை ஐ சே..:))

இது "உலகறிந்த உண்மை"... நான் சொல்றது நம்பிக்கை இல்லைனா ஒருத்தரை சாட்சிக்கு அழைக்கிறேன்... "ஹுஸைனம்மா ஹுஸைனம்மா ஹுஸைனம்மா....எங்கிருந்தாலும் சாட்சி கூண்டுக்கு வரவும்"...:))

ஹ்ம்ம்... ஒகே, அந்த "ரா ரா" மேட்டர் என்ன ஆச்சுனு பாப்போம்...

"நான் யூஸ் பண்ணினா ஒரு நாளாச்சும் எதுனா பிரச்சன வந்து இருக்கா..."னு சான்ஸ் கிடைச்சதேனு இன்னும் இது போல சில பல டயலாக்ஸ் எல்லாம் சொல்லிட்டு, எஞ்சினியர் படிச்ச படிப்பெல்லாம் யூஸ் பண்ணி ஒரு வழியா என்ன பிரச்சனைனு கண்டுப்பிடிச்சுட்டார்...

மைண்ட்வாய்ஸ் - அப்படி போடு அருவாள... என்ஜினியரா கொக்கா...ஹா ஹா ஹா... :)))

போதும் உன் ஆணவ சிரிப்பு மைண்ட்வாய்ஸ்.... இன்னும் நான் முழுசா சொல்லலை... "ஆபரேஷன் சக்சஸ் பேஷன்ட் க்ளோஸ்"ன கதையா பிரச்சனை என்னனு தெரிஞ்சு போச்சு... எப்படி சரி பண்றதுன்னு தான் தெரில...

பிரச்சனை என்னனு தெரிஞ்சதும் ரங்க்ஸ் டென்சனோ "டன்"சன்.... ஸ்ஸ்ஸ்பப்பா...

வேற ஒண்ணுமில்லைங்க, நான் ரஸ்க் சாப்பிட்டுட்டே லாப்டாப் பாத்தேன் இல்லையா...

மைண்ட்வாய்ஸ் - ஐயையோ... மறுபடியும் மொதல்ல இருந்தா.....:(((

அப்போ ரஸ்க் துகள்கள் போய் கி-போர்டு கேப்ல சிக்கி, "R" ங்கற எழுத்து வர்ற எடத்துக்கு கீழ போய் லேன்ட் ஆகி, எனக்கு குழி தோண்டிடுச்சு

மைண்ட்வாய்ஸ் - ஒரு ரஸ்க் துகள் மாட்டினதை என்னமோ மிலிட்டரி ஆபரேஷன் ரேஞ்சுக்கு விளக்கம் சொல்றா பாருங்க... இந்த பில்ட் அப் விசியத்துல அப்பாவிய அடிச்சுக்க ஆளே இல்ல...:)))

இதாங்க மேட்டர்... இதுக்கு போய் why tension...no tension... கரெக்ட் தானே... ஆனா ரங்க்ஸ் என்னமோ தசாவதாரம் கோவிந்தராஜன், பல்ராம் நாய்டுகிட்ட "that vail that vail..." னு டென்ஷன் ஆன ரேஞ்சுக்கு ஒரே டென்ஷன்.... ஹையோ ஹையோ....:)))

"ஆபரேஷன் சக்சஸ் பேஷன்ட் க்ளோஸ்" ஆனாலும், சினிமால வர்ற டாக்டர் மாதிரி "ஆண்டவன் மேல பாரத்த போடுங்க"னு சொல்ல முடியுமா... அப்படி சொன்னா அப்புறம் லாப்டாப்ஐ தூக்கி என் தலைல தான் போடணும் ...:))

அப்புறம் என்ன நடந்ததுன்னு அடுத்த எபிசொட்ல சொல்லட்டுமா... சரி சரி... நோ கொல வெறி....இப்பவே சொல்லிடறேன்...:)

சிம்பிள் லாஜிக் தான் யூஸ் பண்ணினார் நம்ம எஞ்சினியர்... சின்ன பசங்க வாய்ல காசை போட்டுட்டா என்ன செய்வோம்... தலைகீழ போட்டு குலுக்குவோம் இல்லையா...அதே தான் இங்கயும் நடந்தது...

(முந்தின வாரம் பாத்த "மன்மதன் அம்பு" படத்துல "மன்னார்" கமல் யூஸ் பண்ணின டெக்னிக்கை பாத்து ரங்க்ஸ் காப்பி அடிச்சார்னு நான் சொல்லவே இல்லை...:)))

சரி விடுங்க... எப்படியோ "R" பழையபடி வந்துடுச்சு... அதோட ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது "இனிமே லாப்டாப் கைல இருக்கறப்ப நோ ஸ்நாக்ஸ்"...

நம்பிக்கையில்லா தீர்மானம் கேள்விப்பட்டு இருப்பீங்க... அது போல் இது "ஸ்நாக் இல்லா தீர்மானம்"... :))))

இப்ப சொல்லுங்க... "Rusk சாப்பிடறதே Riskஆ போச்சே...." பதிவோட தலைப்பு கரெக்ட் தானே...:)))

மைண்ட்வாய்ஸ் - "நீ Rusk சாப்பிடறதே எங்களுக்கு Riskஆ போச்சே...."னு வெச்சுருந்தா இன்னும் ரெம்ப கரெக்ட்.... அவ்வ்வ்வவ்....

:)))

Monday, April 04, 2011

ஜில்லுனு ஒரு காதல்...(பகுதி 14)பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7  பகுதி 8   பகுதி 9   பகுதி 10   பகுதி 11       பகுதி 12   பகுதி 13 

சிறிது நேரத்தில் செல்பேசி சிணுங்கியது. அழைப்போ என நினைத்து துண்டிக்க போனவள் "you've got a message" என்ற வாசகத்தில் விரலசைவை நிறுத்தினாள் மீரா

"Read Message" என இயக்கியவள் அதன் பின் ஒரு முறை அல்ல இரு முறை அல்ல மீண்டும் மீண்டும் பல முறை பேசியில் வந்த செய்தியை படித்தாள். ஒரு ஒரு முறை படித்த போதும் கண்ணில் நீர் பெருகியது

ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் சத்தமாய் அழுதாள்

சற்று நேரம் அழுது ஓய்ந்தவள் செல்பேசியில் வந்த செய்தியை வாய் விட்டு படித்தாள்

"Meera... I'm sorry... I'm extremely sorry... saying sorry doesn't mean I meant to hurt you... I wouldn't want to hurt you on my life... you mean more than that... you mean a lot more than that to me... I felt like losing a part of me when I saw you lying unconsious... I have no words to express how relieved I was, the minute I saw you opening the eyes... I have no words to express how much I just wanted to stay by your side right from that minute Meera... I didn't want to hurt you, thats why I stayed away.... but I can't anymore... all this week I stayed away from you, doesn't count to my lifetime... I'm not being dramatic Meera... just thats how I feel... from the day one I saw you, I felt something changed in me... I have a lot more to say Meera... much more to express... but not in a sms... talk to me, please... bring life to me, please... just make me feel alive once... Meera... please... - Steve"

வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்ய முயல்பவள் போல் மீண்டும் மீண்டும் படித்தாள். ஏன் இப்படி செய்கிறேன் என தனக்கு தானே கேள்வி கேட்டும் எந்த பதிலும் பெற இயலவில்லை

அந்த செய்தி தன்னை ஏன் இப்படி அழ செய்கிறது... தன் உணர்வுகளை ஏன் இப்படி பாதிக்கிறது என தடுமாறினாள் மீரா

ஸ்டீவ் அனுப்பிய செய்தியின் மறைபொருள் அவளுக்கு தெளிவாய் புரிந்தது இப்போது. இது நாள் வரை சதீஷ் போலத்தான் ஸ்டீவும் தன்னிடம் நட்பாய் உரிமை பாராட்ட முயல்கிறான் என நினைத்து இருந்தவளுக்கு, இப்போது புரிந்த விதத்தில் நடந்த எல்லாவற்றிற்கும் வேறு அர்த்தம் தோன்றியது

ஒரே செய்கைக்கு இப்படி வேறு அர்த்தம் கூட இருக்க முடியும் என தனக்கு இது வரை ஏன் தோன்றவில்லை என நினைத்தாள்... அதற்கும் மேலாய், இப்போது இவ்வாறு புரிவதற்கும் காரணம் அறியாமல் திகைத்தாள்

அப்படியென்றால்.... தன் மனதிலும்.... அது... அப்படி தானா... அப்படியே தானா... என மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. அப்படி இருக்குமோ என தோன்றியதும் சற்று நேரம் எதையும் யோசிக்கும் திறன் கூட அற்றவளாய் நின்றாள்

உடனே அவனிடம் பேச வேண்டும் போல் தோன்றியது மீராவுக்கு...

ஆனால் அதற்கு முன் முழுதாய் புரிந்து கொள்வது அவசியம் என நினைத்தாள். மீண்டும் யார் மனதும் காயப்படாமல் இருக்க வேண்டுமெனில் ஒரு பரிசீலனை நிச்சியம் வேண்டுமென தோன்றியது

முதல் முதலாய் ஸ்டீவை பார்த்தது முதலான நினைவுகளை அலச முயன்றாள்

சந்திப்பே ஒரு விபத்து போலத்தானே என தோன்றியது. அன்று அவனுக்கு மொழி புரியாது என நினைத்து கேலி செய்ததும் பின் மன்னிப்பு கேட்டதும் அதுவே நட்பில் முடிந்ததும் கண் முன் விரிந்தது

அந்த முதல் சந்திப்பிலேயே அவன் பார்வையில் ஏதோ வித்தியாசம் இருந்ததோ... தனக்கு தான் அதை புரிந்து கொள்ள தெரியவில்லையோ என தோன்றியது

அன்று முதல் பார்வையில் நல்ல ஒரு நண்பனாய் அவன் தோன்றியது நிஜம்...ஆனால்... அவனுக்கு வேறு விதமாய் என அவன் அனுப்பிய இந்த செய்தி உணர்த்தியது

அது எப்படி சாத்தியம் என ஆச்சிர்யத்தில் புதைந்தாள். கண்டதும் காதல் எல்லாம் சினிமாவில் மட்டும் தானே சாத்தியம் என தோன்றியது. ஆனால் நிஜத்திலும் சாத்தியம் என சாட்சியாய் நிற்கிறானே என நினைத்தாள்

அதன் பின்னான சந்திப்புகளின் போதும் அவன் பார்த்த பார்வைக்கும் பேசிய பேச்சுக்கும் இப்போது புது அர்த்தம் விளங்கியது. அன்று அவன் இடத்தில் நால்வரும் சினிமா பார்த்த நாளில் அவன் பார்வை உணர்த்திய பொருள் என்னவென புரியாமல் குழம்பினேனே... இது தானா அதன் பொருள் என நினைத்தாள்

மற்றொரு நாள் படிக்க சென்ற போதில், சதீஷ் மதுவுக்கு முன் தான் சென்றதும், அன்று அவர்கள் இருவரும் மட்டும் அவன் வீட்டில் இருந்த நினைவு வர... இப்போது ஏனோ ஒரு விதமான உணர்வில் உறைந்து நின்றாள். அன்று உணராத ஏதோ ஒன்றை இன்று உணர்கிறேன் என நினைத்தாள்

அந்த நினைவில் அவன் அருகில் இருப்பதை போல் உணர்ந்தாள். அப்போதே அவனை காண வேண்டும் போலவும் தோன்றியது. எப்போதும் யாரையும் இப்படி காண வேண்டுமென நினைத்ததில்லையே என தோன்றியது

வெறுமனே ஒருவரை காண வேண்டுமென தோன்றுவது இயல்பு, ஆனால் காணாமல் இருக்க இயலாது என்ற இந்த உணர்வு தனக்கு புதிதென நினைத்தாள்

கிறிஸ்துமஸ் சமயத்தில் ஸ்டீவ் அவன் பெற்றோரை பார்க்க சென்ற போது அவனை பார்க்க வேண்டுமென நினைத்தது நிஜம்...ஆனால் அப்போது பார்க்க வேண்டுமென நினைத்ததற்கும் இப்போது தோன்றும் இந்த தவிர்க்க முடியாத உணர்விற்கும் நிச்சியம் வேறுபாடு உண்டென தோன்றியது

அன்று காதலர் தினத்திற்கு வெளியே செல்ல ஸ்டீவ் கேட்ட நினைவு வர, கடவுளே அவன் கோபத்தின் பொருள் இது தானே... அதை தான் உணரவில்லையே... உணரும் படி ஒருபோதும் அவன் மனம்விட்டு சொன்னதில்லையே என நினைத்தாள்

சதீஷ் போல் இவனும் தன்னிடம் உரிமை கொள்கிறான் என நினைத்து தானே, ஒரு ஒரு செய்கையையும் அதோடு தொடர்புப்படுத்தி மீண்டும் மீண்டும் அதே தவறான புரிதலில் இருந்திருக்கிறேன் என இப்போது புரிந்தாள்

அப்படி தவறான புரிதலால் தான், அதை தன் கோபத்தை தணித்து கொள்ள ஆயுதமாய் சிலமுறை உபயோகப்படுத்தி கொண்டதும் புரிந்தது.... ஆனால் அது அவனை எத்தனை வருத்தி இருக்குமென இப்போது அவளால் புரிந்து கொள்ள முடிந்தது

ஆனால் இப்படி தான் இது தான் என அவன் மனம் விட்டு பேசாதது அவன் தவறு தானே என தோன்றியது.

அப்போதே அப்படி சொல்லி இருந்தால் தன் நிலைப்பாடு என்னவாய் இருந்திருக்குமென அவளால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை

இப்போது தோன்றும் இந்த உணர்வு கூட நிச்சியம் தானா... அல்லது அவனை வருத்தினோம் என்ற குற்ற உணர்வின் வெளிப்பாடா என கேள்விகள் பல முளைத்தன

இல்லை, இது நிச்சியம் வெறும் குற்ற உணர்வின் வெளிப்பாடு மட்டுமல்ல.... அப்படி இருந்தால் ஏதோ திணிக்கப்பட்ட உணர்வு தானே இருக்கும்... ஆனால் இது அதையும் மீறிய ஏதோ ஒன்று... ஆனால் இது எப்போது எப்படி தோன்றியது என நிச்சியமாய் உணர இயலாமல் தவித்தாள்

அன்று மருத்துவமனையில் சதீஷ் ஸ்டீவை வெளியேற சொன்ன போது, அவன் சார்பாய் நான் பேசுவேன் என நம்பிக்கையுடன் கண்ணோடு கண் பார்த்து நின்றானே ஸ்டீவ், அப்போது என் மனம் சலனபட்டதோ?

அல்லது இன்று அவன் செல்பேசி செய்தியில் மனம் கரைந்ததோ? அப்படி ஒரு செய்தியில் அல்லது செய்கையில் மனம் மாறி விடுமா? இல்லை அதற்கு முன்பே அவன் என் மனதில் நுழைந்து விட்டானா, தான் அதை உணரவில்லையோ என நினைத்தாள்

அன்று கான்செர்ட் நடந்த இடத்தில் சண்டை வந்த போது அவன் "உன்னை என் லைப்ல சந்திக்காமலே இருந்திருக்கலாம்னு தோணுது" என கோபத்தில் சொன்ன அந்த வார்த்தை தன்னை எத்தனை பாதித்தது என இப்போது நினைத்து பார்த்தாள்

எப்போது தன் மனம் அவன்பால் சாய்ந்தது என்பதை அவளால் தெளிவாய் சொல்ல இயலவில்லை, ஆனால் இனி அந்த ஆராய்ச்சி அவசியமற்றது என தோன்றியது மீராவுக்கு

சில விசயங்களுக்கு விளக்கங்கள் இருப்பதில்லை. காதல் தோன்றும் கணமும் அதில் ஒன்று. எந்த கணம் யாருக்கு யார் மேல் காதல் தோன்றும் என எந்த இலக்கணமும் யாராலும் வகுக்க முடியாது

அறிவியலும் விஞ்ஞானமும் வானளாவ வளர்ந்து, மனிதனின் மறு பதிப்பாய் க்ளோனிங் என்ற பெயரால் கடவுளின் செயலையே செய்யும் அளவு ஆன போதும், இந்த காதல் எனும் உணர்வை முன்கூட்டியே அறிந்து கொள்ள ஒரு கருவியை நம்மை படைத்த அந்த ஆண்டவனால் கூட படைக்க இயலாது என நினைத்தாள் மீரா

பல நினைவுகள் அலைகழிக்க அப்போதே ஸ்டீவிடம் பேச வேண்டும் போல் தோன்றியது மீராவிற்கு. ஆனால் மணி நடுநிசியை எட்டி இருக்க தயக்கமாய் அவள் யோசித்த நொடி, அவள் செல்பேசி இசைத்தது

ஸ்டீவின் எண் ஒளிர, ஆனந்தத்தில் கண் துளிர்க்க "ஹலோ" என்றாள் உடனேயே

"மீரா...மீரா... " அவள் பேசுவாளோ மாட்டாளோ என நம்பிக்கையின்றி அழைத்தவன் அவள் குரல் கேட்டதும் எதுவும் பேச தோன்றாமல் மீண்டும் மீண்டும் மந்திரம் போல் அவள் பெயரை ஜெபித்தான்

"..." அவன் குரலில் இருந்த நெகிழ்வும், சந்தோசமும், பரபரப்பும், காதலும் அவளை செயல்பட விடாமல் செய்தது. கண்ணில் நீர் நிறைந்தது

அவள் எதுவும் பேசாமல் இருக்கவும் "மீரா... எப்படி இருக்க மீரா?" என்றான் உணர்ச்சி வயப்பட்ட குரலில்

"ம்... நல்லா இருக்கேன் ஸ்டீவ்" என முயன்று வார்த்தைகளை தருவித்தாள்

"ஐ அம் சாரி மீரா... நான் உன்ன..."

"இல்ல ஸ்டீவ்... நான் தான்... புரியாம... ஏதோ... சாரி..." ஏதேதோ சொல்ல வந்து அதில் ஒரு வார்த்தை இதில் ஒரு வார்த்தை என தடுமாறினாள்

அவளின் தடுமாற்றம் அவனுக்கு எதையோ உணர்த்துவது போல் இருந்த போதும், எதையும் பேசி இப்போது உள்ள நிலையை கெடுத்து கொள்ள அவன் மனம் விரும்பவில்லை

"டாக்டர்கிட்ட மறுபடி போனயா மீரா?" என பேச்சை மாற்றினான். அவள் டாக்டரிடம் செல்வது பற்றி எல்லாம் தினமும் மதுவிடம் கேட்டு தெரிந்து கொள்வான் தான் என்றபோதும் பேச்சை திசை திருப்ப இப்படி கேட்டான்

"ம்... போனேன் ஸ்டீவ்... இப்ப ஆல் ரைட்... ஒண்ணும் பிரச்சன இல்ல... நீ எப்படி இருக்க?" என்றாள் அவன் பேச கேட்கவேண்டுமென ஏங்கியவள் போல்

"நல்லா இருக்கேன் மீரா... ஆனா உன்னை பாக்காம... ரெம்ப கஷ்டமா இருந்தது..." என்றான் தன்னை கட்டுப்படுத்த முடியாமல்

"எனக்கும் தான்" என்றாள் மீரா தனிச்சையாய். அப்படி ஒரு பதிலை அவளிடமிருந்து எதிர்பாராத ஸ்டீவ் "மீரா..." என்றான் ஆனந்த அதிர்ச்சியாய்

"I missed you Steve" என்றாள் மீரா

அவள் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவள் மனமாற்றத்தை அவனுக்கு உணர்த்தியது போல் இருந்தது. இதற்கு முன் தன்னிடம் பேசிய மீராவின் குரலில் இல்லாத ஒன்றை அவன் காதல் கொண்ட மனம் அடையாளம் கண்டுகொண்டது

தான் அனுப்பிய செய்தியில் இருந்த உட்பொருளை அவள் புரிந்து கொண்டாள் என்பதை அவனும் புரிந்து கொண்டான்

அந்த சந்தோசத்தில் நினைத்த எதையும் பேச இயலாமல் "எனக்கு...எனக்கு... ஐ அம்...ஐ அம் ஜஸ்ட் லாஸ்ட்..." என மகிழ்வாய் சிரித்தான்

இருவருக்கும் மனம் விட்டு காதலை சொல்ல ஆசை இருந்த போதும், சொல்லவில்லை

மீராவுக்கு தயக்கம் தடுத்தது என்றால், ஸ்டீவிற்கு இப்படி ஏதோ செய்தி போல் தொலைபேசியில் சொல்ல விருப்பம் இருக்கவில்லை

வாழ்நாள் மொத்தமும் நினைவில் இருக்கவேண்டிய ஒரு தருணத்தை, மனதில் படம் பிடித்து வைத்து கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வை, காலம் உள்ள வரை போற்றி பாதுகாக்க வேண்டிய ஒரு கணத்தை இப்படி ஒரு கருவியின் வாயிலாய் சொல்ல அவன் மனம் இடம் தரவில்லை

கண்ணோடு கண் நோக்கி காதல் சொல்ல விரும்பினான். தன் காதலை அவள் ஏற்கும் அந்த கணத்தில் அவள் கண்ணில் தோன்றும் உணர்வை மனதில் பாதுகாத்து கொள்ளணும் என நினைத்தான்

அதை செயல்படுத்தும் விதமாய் "மீரா... நாளைக்கு டின்னர்க்கு மீட் பண்ணலாமா?" என கேட்டான்

அதற்கே காத்திருந்தவள் போல் "ம்...சரி" என்றாள்

"எங்க போலாம்? நீயே சொல்லு" என அவன் கேட்க

"எதுனாலும் சரி..." என்றாள், அப்போது இருந்த மனநிலையில் அவளால் யோசிக்க கூட இயலவில்லை

"ம்... for a change... ஹோட்டல் வேண்டாம்... நானே குக் பண்றேன்... என் அபார்ட்மென்ட்ல மீட் பண்ணலாம் சரியா மீரா?"

அவன் சொல்லிய விதத்தில் ஏனோ சிரிப்பு வர, அந்த உணர்வில் மனம் சற்று அமைதியுற "நான் இன்சூரன்ஸ் எடுக்கலியே ஸ்டீவ்... "என ஏதோ முக்கியமாய் சொல்வது போல் கேலி செய்தாள்

அவள் அப்படி உரிமையாய் கேலி செய்தது அவனுக்கு மனநிறைவை தந்தது "ஏய் என்ன கிண்டலா... உன்னை விட நல்லாவே குக் பண்ணுவேன்" என்றான் பொய் கோபத்துடன்

"அதை சாபிட்டப்புறம் சொல்றேன்" என மறைமுகமாய் வருவதற்கு சம்மதம் கூறினாள்

என்னுள்நீ வந்தகணத்தை
என்னால் அறியமுடியவில்லை
என்னிலிருந்துநீ விலகும்கணத்தை
எண்ணிபார்க்கவும் துணிவில்லை!!!

அடுத்த பகுதி படிக்க...

(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)