Thursday, April 14, 2011

தமிழுக்கும் தங்கமணி என்று பேர்...:))) (125 வது பதிவு)இது எனது 125 வது பதிவு... தொடர்ந்து பொறுமையாய் என் எழுத்தை படித்து வரும் உங்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி...:)

நிரந்தர முன் குறிப்பு:
என் இனிய ப்ளாக் குல மக்களே... இதுல வர்ற தங்கமணி நான் இல்ல... Just an imaginary character. நெறைய பேரு இது நான்னு நெனைச்சுட்டு இதுல வர்ற ரங்கமணிக்கு ஓவரா அனுதாபம் தெரிவிச்சு... விட்டா அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கற அளவுக்கு போறதா நியூஸ் வந்தது.... அதான் இந்த நிரந்தர முன் குறிப்பு இந்த பதிவுகளில் இடம் பெறுகிறது... மேட்டர் மனசிலாயோ... ஒகே ஒகே...:-)))

சரி வாங்க, வழக்கம் போல தங்கமணி ரங்கமணி வீட்டுல என்ன நடக்குதுன்னு வேடிக்கை பார்ப்போம்...


"ஹாப்பி தமிழ் நியூ இயர்ங்க" என தங்கமணி கூற

"என்ன சொன்ன?" என கேலியாய் சிரித்தார் ரங்கமணி

"என்ன சிரிப்பு இப்போ? ஹாப்பி தமிழ் நியூ இயர்னு சொன்னேன்" என்றாள்

"ஹா ஹா... அதை கூட தமிழ்ல சொல்ல மாட்ட... அப்புறம் என்ன தமிழ் நியூ இயர்" என தங்கமணி செய்த தவறை கேலி செய்ய கிடைத்த ஒரே வாய்ப்பை பயன்படுத்த எண்ணி சிரித்தார் ரங்கமணி

"ம்ம்... ரெம்பத்தான்.... உங்களுக்கு புரியணும்னு இங்கிலீஷ்ல சொன்னேன் போதுமா"

"இந்த சமாளிப்பெல்லாம் வேண்டாம் தங்கம்... ஒத்துக்கோ"

"எனக்கொண்ணும் தமிழ் தகராறில்ல... நீங்க தான் "கலர்" தமிழ் வார்த்தை தான்னு பீலா விடற ஆளு"

"ஏய்...யாரப்பாத்து யாரப்பாத்து என்ன வார்த்தை சொன்னாய்... எங்க தாத்தா தமிழ் பண்டிட் தெரியும்ல"

"வாத்தியார் புள்ள மக்கு...அதுவும் தெரியுமே" என தங்கமணி சிக்ஸர் அடித்தார்

"இங்க பாரு தங்கம்...ஸ்கூல் படிக்கறப்ப நான் கவிதை போட்டில எல்லாம் ப்ரைஸ் வாங்கி இருக்கேன்... சும்மா தெரியாம பேசாத" என என்றோ ஒரு நாள் பேர் குழப்பத்துல இன்னொரு ராசுமணிக்கு வர வேண்டிய பரிசு மாறி இவருக்கு வந்ததை, அதுவும் ஒரு பென்சில் டப்பா பரிசு கிடைச்சத பில்ட் அப் பண்ணினார் ரங்கமணி

நம்ம தங்கமணி என்ன சும்மாவா?

"எங்க அண்ணன் ஒரு பழமொழி சொல்லுவான்... கேக்கறவன் கேணயனா இருந்தா எருமைங்கோட ஏரோப்ளேன் ஓட்டுமாம்... ஹ்ம்ம்...ஹையோ ஹையோ" என தங்கமணி மறுபடியும் போட்டார் ஒரு போடு

"ஓஹோ... அவ்ளோ தூரத்துக்கு ஆகி போச்சா... இது இப்படியே விட்டா சரி வராது.... இன்னிக்கி ரெண்டுல ஒண்ணு பாக்கணும்" என குஸ்திக்கு இறங்கும் வீரர் ரேஞ்சில் பேசினார் ரங்கமணி

"அப்படியா... சரி... இன்னிக்கி தமிழ் வருஷ பிறப்பு... இன்னிக்கி ஒரு நாள் பூரா ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் கலக்காம பேசணும்... பந்தயம் வெச்சுக்கலாமா?" என்றார் தங்கமணி கவனமாய் அப்போதே ஆங்கில கலப்படம் இல்லாமல்

"இதெல்லாம் நமக்கு ஜுஜுபி...." என ரங்கமணி, கவுண்டமணி ரேஞ்சுக்கு அலப்பறை செய்தார்

"ஜுஜுபி என்பது தமிழ் வார்த்தையோ" என நக்கீரர் ரேஞ்சுக்கு தங்கமணியும் குற்றம் குற்றமே என ஆரம்பிக்க

"இது அநியாயம்... இன்னும் போட்டி ஆரம்பிக்கல...." என சமாளித்தார் ரங்க்ஸ்

"ஓ... உங்களுக்கு ஒண்ணு ரெண்டு மூணு சொல்லி ஆரம்பிச்சு வெக்கணுமோ...சரி... ஒண்ணு ரெண்டு மூணு... இந்த நிமிடத்தில் இருந்து ஆரம்பம்... சரி தானே" என தங்கமணி செந்தமிழில் கலக்க

"என்ன தங்கம்... ஏன் ஒரு மாதிரி பேசற" என ரங்க்ஸ் ஜெர்க் ஆனார்

"அது ஒரு மாதிரி இல்லை... ஒரே மாதிரி... அதாவது செந்தமிழ் என அழைக்கப்படும்" என தங்க்ஸ் தட்டி விலாச ரங்க்ஸ் கொஞ்சம் பயமா பாத்தார்

"ஹும்... என்னமோ ஒண்ணு... பேசு பேசு... நான் சாதாரண தமிழ்ல ஒழுங்கா பேசறேன்... அது தான் சரி"

"சரி அத்தான்... உங்கள் இஷ்டம்"

"என்னது பொத்தானா? என்ன கொடுமை தங்கம் இதெல்லாம்" என ரங்க்ஸ் பதற

"என்ன அத்தான் இப்படி கூறி விட்டீர்கள்... அந்த கால தமிழ் படங்கள் பார்த்ததில்லையா தாங்கள்.. அதில் கணவனை அப்படி தான் அழைப்பாள் மனைவி...செந்தமிழில் பேசுவது என்றான பின் அப்படி பேசுவது தானே முறை அத்தான்" என போட்டு தாக்கினார் தங்கமணி

"ஹும்... ஏன் பிராணநாதானு மூக்கால அழேன் ... இன்னும் நல்லா இருக்கும்" என தன் கடுப்பை மறைத்து கொண்டு கூறினார் ரங்கமணி

"அதுவும் சரி தான்... ஆனாலும் எனக்கு அத்தான் என்றழைக்கவே விருப்பம் அத்தான்" என தங்கமணி கவுன்ட்டர் குடுத்தார்

"ம்...சரி சரி" என இடத்தை விட்டு எஸ்கேப் ஆனார் ரங்கமணி

ஆபீஸ் கிளம்பும் அவசரத்தில் இருந்த ரங்கமணி "தங்கம் டைம் ஆச்சும்மா.... என் ஷூ எங்க? இங்க தான வெச்சுருந்தேன்"

"என்ன சொன்னீர்கள் ஷூவா? அது தமிழ் சொல் இல்லையே அத்தான்..." என அந்த நேரத்திலும் பாயிண்ட்ஐ பிடித்தாள் தங்கமணி

"அது...அது" என ரங்கமணி தடுமாற

"சரி இந்த ஒரு முறை பிழைத்து போங்கள் அத்தான்..." என தங்கமணி ரெம்ப பெருந்தன்மையாய் கூற

"ரெம்ப சமாளிக்காத... உனக்கு மட்டும் தெரியுமா...ஷூவுக்கு தமிழ்ல என்னனு" என ரங்கமணி, மடக்கினேன் பார் என ஆணவ சிரிப்பு சிரிக்க

"ஏன் தெரியாது அத்தான்... அதனை பாதுகை என்றழைப்பார்கள்... தொலைக்காட்சியில் ராமாயணத்தில் கூட வந்ததே... நீங்கள் பார்த்ததில்லையா? எங்கே உங்களுக்கு சீதையாய் நடித்த தீபிகா மேல் கண் போர் தொடுக்கவே நேரம் சரியாக இருக்குமே"

"என்னது கண் போர் தொடுக்கவா? என்ன தங்கம் சொல்ற" என ரங்கமணி அலற

"அது உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமெனில் சைட் அடிப்பது...சரி அத்தான் உங்களுக்கு நேரமாகிறது... போய் வாருங்கள் அத்தான்" என தங்கமணி பிரியமாய் பிரியா விடை கொடுக்க

"போய் வாரதா.....நீ வாருற ரேஞ்சுக்கு போய் ஒளியறது தான் பெட்டர் இன்னைக்கி... நல்லவேளை இன்னிக்கி ஞாயத்துக்கிழமை இல்ல... ஸ்ஸ்ஸ்ப்ப்ப்பா" என மனதிற்குள் நினைத்து கொண்டு கிளம்பினார் ரங்கமணி

அன்று மாலை ரங்கமணி அலுவலகம் விட்டு வர அதற்கே காத்திருந்தார் போல் "வாருங்கள் அத்தான்... தேநீர் அருந்துகிறீர்களா?" என தங்கமணி ஆரம்பிக்க

"ஐயயோ...இத மறந்துட்டனே... இன்னும் கொஞ்ச நேரம் ஆபிஸ்லையே இருந்துருக்கலாம்" என மனதிற்குள் நினைத்த ரங்கமணி ஒன்றும் பேசாமல் "சரி..." என்பது போல் தலை மட்டும் அசைத்தார்

தேநீர் அருந்திய பின் "இன்று தமிழ் வருட பிறப்பிற்கு கோவில் செல்லலாமா அத்தான்" என தங்கமணி கேட்க

"அப்பாடா... வெளிய போனா கொஞ்ச நேரமாச்சும் எஸ்கேப் ஆகலாம்" என நினைத்த ரங்கமணி "போலாமே" என மகிழ்ச்சியாய் கிளம்பினார்

செல்லும் வழியில் ரங்கமணி முடிந்த வரை மௌன நாடகம் நடத்தினார்

"ஏன் அத்தான் இந்த வழியில் செல்கிறீர்கள்... வழக்கமான வழியில் செல்லவில்லையா?" என தங்கமணி கேட்க

"அது...." டிராபிக் என சொல்ல வந்தவர்... தமிழ் வார்த்தை தேடி தவித்து "கூட்டம்...அதான்" என சமாளித்தார்

"ஓ... வாகன நெரிசல் அதிகம் என்கிறீர்களா அத்தான்"

"ஆமா ஆமா..." என்றார் "ச்சே...இவளுக்கு மட்டும் இவ்ளோ தெளிவா வார்த்தை வருதே" என மனதிற்குள் டென்ஷன் ஆனார், ஆனால் வெளியில் காட்டி கொள்ளவில்லை

சற்று நேரத்தில் டிராபிக் சிக்னல் என காரை ரங்க்ஸ் நிறுத்த "ஏன் நிறுத்தி விடீர்கள் அத்தான்" என வேண்டுமென்றே கேட்டார் தங்க்ஸ்

"அது...அதான்... இது" என முன்பக்கம் கை காட்ட

"எது? " என புரியாத பார்வை பார்த்தார் தங்கமணி

பொறுமை இழந்த ரங்கமணி "நீ வேணும்னே சிக்க விடற தங்கம்... டிராபிக் லைட்க்கு எல்லாம் தமிழ்ல வார்த்தை இல்ல ... "

"இருக்கிறது அத்தான்.... உங்களுக்கு தெரியவில்லை என தோல்வியை ஒப்புகொள்ளுங்கள் நான் சொல்கிறேன் அதற்கு தமிழ் வார்த்தை என்னவென" என தங்கமணி சிரிக்க

"அம்மா பரதேவதே... நான் தோத்துட்டேன்... ஒத்துக்கறேன்... ஆளை விடு" என சரண்டர் ஆனார் ரங்கமணி வழக்கம் போல்

"ஹா ஹா ஹா" என வெற்றி சிரிப்பு சிரித்தார் தங்கமணி

******************************************************

ஹா ஹா ஹா.... வழக்கம் போல நம் கட்சி தான் ஜெயித்தது... அதாவது நம்ம தங்கமணி தான் ஜெய்ச்சாங்க...  இதே சந்தோசத்தோட எல்லாருக்கும் "இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்" சொல்லிக்கறேன்

இந்த வருடம் எல்லோருக்கும் இனிய வருடமாய், வேண்டுவன எல்லாம் பெற்று நலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்

நடந்து முடிஞ்ச எலக்சன்க்கும் மேல சொன்ன வாழ்த்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை மக்களே.. நான் பொதுவா தான் சொன்னேன்... :)))

"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்... "- அடவம்பே எனக்கு ஏன் இப்ப இந்த பாட்டு தோணுது... என்னமோ போ அப்பாவி...:)))

மைண்ட்வாய்ஸ் - தமிழ்ல டிராபிக் லைட்க்கு என்ன? அதை சொல்லாம எஸ்கேப் ஆக முடியாது நீ

அப்பாவி - அது தான் உங்க எல்லாருக்கும் தமிழ் புத்தாண்டு புதிர்... தெரிஞ்சவங்க கமெண்ட்ல சொல்லுங்க... நான் எஸ்கேப் ஆகலை... நெஜமா எனக்கு தெரியும்... ஆனாலும் உங்களுக்கான புதிர் இது. சொல்லுங்க பார்ப்போம்...

மைண்ட்வாய்ஸ் - உன் டகால்டி எல்லாம் உன் ரங்க்ஸ் வேணா நம்புவாரா இருக்கும்... நாங்க நம்ப தயாரா இல்ல... ஒழுங்கா ட்ராபிக் லைட்க்கு தமிழ்ல என்னனு சொல்லிட்டு போ...

அப்பாவி - படுபாவி மைண்ட்வாய்ஸ் என்னை கால் காசுக்கு நம்ப மாட்டியே... தொலஞ்சு போ... டிராபிக் லைட்க்கு தமிழ் வார்த்தை "சமிக்கை விளக்கு"... போதுமா?

மைண்ட்வாய்ஸ் - ச்சே... சிக்கவெக்கலாம்னு பாத்தா தப்பிச்சுட்டாளே... மறுபடி சான்ஸ் கிடைக்காமையா போகும்... சரிங்க... எல்லாருக்கும் நானும் ஹாப்பி நியூ இயர்...ச்சே... இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன்..நன்றி...வணக்கம்...:))

தங்கமணி ரங்கமணியின் முந்திய சில கலாட்டாக்கள் இங்கே:-

1. தங்கமணி ரங்கமணி (ஒரு அறிமுகம்)

2. கேயாஸ் தியரியும் தங்கமணியும்... (ஹையோ ஹையோ)

3. ரங்கமணி - Is he a DOS or Windows?

4. தங்கமணி சபதம்... (ஹி ஹி)

:)))

78 பேரு சொல்லி இருக்காக:

Vasagan said...

Attendance padichuttu varaen.

Vasagan said...

Vadayai Anamika kulanthaikku anupiru

ஹுஸைனம்மா said...

தலைப்பைப் பாத்தவுடனே “அடிங்...”னுதான் தோணுச்சு.. தமிழாம், தங்கமணியாம்.. :-))))))

Vasagan said...

\இந்த வருடம் எல்லோருக்கும் இனிய வருடமாய், வேண்டுவன எல்லாம் பெற்று நலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்\
நானும் சொல்லிகிறேன்

எல் கே said...

//சமிக்கை விளக்கு//

தப்பு போக்குவரத்து சமிக்ஞை விளக்கு ...

இதுல தமிழ் பத்தி பதிவு வேற. விளங்கிடும். இதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்தாச்சு. இனி மாத்தி டைப் பண்ணா வில்லங்கம் ஆகிடும்

Vasagan said...

சமிக்கை விளக்கு

சமிக்கை விளக்கு தமிழா ?

வேங்கை said...

125 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

ஹாய்.. ஹேப்பி தமிழ் நியூ இயர் .. ஹி ஹி

Vasagan said...

நிரந்தர முன் குறிப்பு:

மீண்டும் மீண்டும் 10 ஆம் நம்பர் குதில்

இராஜராஜேஸ்வரி said...

ஹா ஹா ஹா.... வழக்கம் போல நம் கட்சி தான் ஜெயித்தது... அதாவது நம்ம தங்கமணி தான் ஜெய்ச்சாங்க... இதே சந்தோசத்தோட எல்லாருக்கும் "இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்" சொல்லிக்கறேன்//
இனிய சித்திரை தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

பிரதீபா said...

எது, சமிக்கையா? டர்ர்ர். அது சமிக்ஞை ன்னு வராதா? யக்கோவ்..
அளவா இருக்கு மைண்ட்வாய்ஸ்..ரொம்ப ரொம்ப சூப்பரு !

பிரதீபா said...

என்னாது,இதுவரைக்கும் 125 தடவை நாங்க இந்த வலைப்பூவுக்கு வந்து அழுதிருக்கமா? அடேயப்பா !! :)
வாழ்த்துக்கள்-உங்களுக்கு ; அனுதாபங்கள்-எங்களுக்கு !!

Vasagan said...

பேசி கொடுமை பண்ணுவதற்கு பதிலா உன் இட்லியே தேவலை போல தெரியுது

Chitra said...

சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Chitra said...

125 th post... Super!

Vasagan said...

சைட் அடிப்பது- கண் போர்,
ஆஹா , தமிழ் வித்தகி சை புலவி ( புலவர் க்கு பெண் பால் !!! you know )

Vasagan said...

125 வது பதிவுக்கு வாழ்த்துக்கள், மேலும் தொடர வாழ்த்துக்கள்.

அனாமிகா துவாரகன் said...

//Vadayai Anamika kulanthaikku anupiru//
தாங்கஸ் மாம்ஸ்

@ ஹுஸைன்னம்மா,
ஹா ஹா. மிச்சத்தையும் அப்படியே சொல்லி இருக்கலாம். ஹி ஹி.

@ கார்த்தி சார்,
ஹா ஹா. வெல் டன். கலக்கிட்டீங்க. அதை எனக்கு மெயிலில அனுப்புங்கோ ப்ளீஸ்.

@பிரதீபா,
எப்படீங்க. என் மனசில இருக்கறதை அப்படியே சொல்றீங்க.

@ வாசகன் மாம்ஸ்,
புலவியா? =(( ஹி ஹி. குழவின்னு வச்சிருக்க வேணும். ஹா ஹா.

அனாமிகா துவாரகன் said...

பதிவ அப்பறம படிக்கறேன்.

priya.r said...

//இது எனது 125 வது பதிவு... தொடர்ந்து பொறுமையாய் என் எழுத்தை படித்து வரும் உங்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி...:)//

வாழ்க வளமுடன் !

உங்க எழுத்தை படித்ததில் இருந்து பிடிக்காத சீரியல் இ பார்க்கும் அளவு பொறுமை வந்து விட்டதென்றால் பாருங்களேன் !

அந்த அளவு ஸ்ட்ரோங் ஆகி விட்டோம் இல்லே !!

//நிரந்தர முன் குறிப்பு:
என் இனிய ப்ளாக் குல மக்களே... இதுல வர்ற தங்கமணி நான் இல்ல... Just an imaginary character. நெறைய பேரு இது நான்னு நெனைச்சுட்டு இதுல வர்ற ரங்கமணிக்கு ஓவரா அனுதாபம் தெரிவிச்சு... விட்டா அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கற அளவுக்கு போறதா நியூஸ் வந்தது.... அதான் இந்த நிரந்தர முன் குறிப்பு இந்த பதிவுகளில் இடம் பெறுகிறது... மேட்டர் மனசிலாயோ... ஒகே ஒகே...:-))) //

அடங் கொய்யாலே! நீங்க என்ன தான் சொன்னாலும் நாங்க நம்ப மாட்டோம் நம்பவே மாட்டோம் ;

நீங்க இது மேல அலப்பரை பண்ண கூடிய ஆளு என்று எங்கள் ஆறு சங்கங்களுக்கும் தெரியும்

அதை சொல்ல வேண்டியது எங்கள் கடமை என்று உங்களுக்கும் தெரியும் !

சொன்னாலும் சொல்லலைன்னாலும் எங்கள் அனுதாபமும் ஆதரவும் தம்பி கோவிந்த் அவர்களுக்கே !

இனிமே இந்த மாதிரி நிரந்தர முன் குறிப்பு ;நிரந்தரமில்லாத பின் குறிப்புன்னு சொன்னிங்க ....................

அப்புறம் அனாமி என்ன போராட்டம் ஆரம்பிக்க போறாளோ !

பாருங்க அப்பாவி ! நானாவது பொறுமையா சொல்லறேன் !

என்ற கடை குட்டி தங்கை என்ன சொல்ல போறாளோ !//சரி வாங்க, வழக்கம் போல தங்கமணி ரங்கமணி வீட்டுல என்ன நடக்குதுன்னு வேடிக்கை பார்ப்போம்//

வீட்டிலேயே பல்பு வாங்கறது எல்லாம் நீங்க ! ஆனா பதிவில எல்லாம் உல்டா !

அப்பாவியை தட்டி கேட்க எல்லோரும் திரண்டு வாரீர் !!

திவா said...

டைம் என்ற தூய தமிழ் சொல்லை காணாமல் விட்டது ஏனோ? ஷூ மட்டும் கண்ணில் படுதா?

யோகா.எஸ் said...

"பிராணநாதா" என்பது கூட தமிழ் வார்த்தை அல்ல!எப்படியோ தங்க்ஸ் பீட் பண்ணிட்டாங்க!அந்த வகையில் கொஞ்சம் மகிழ்ச்சி?!தான்!!!!!!!!

அருள் சேனாபதி (பவானி நம்பி) said...

Congrats on your 125th Post!!!

Happy Tamil New Year and Happy blogging!!!
(Note this point your honor, this dude is saying that in English too).

பத்மநாபன் said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

நூற்றிருப்பத்தி ஐந்தாம் பதிவிற்கு சிறப்பு வாழ்த்துக்கள்...

தமிழ் புத்தாண்டு வாழ்த்தையாவது தமிழில் சொல்லவைக்கவேண்டும் நகைச்சுவை கலந்த தங்கமணி தமிழ்முயற்சிக்கு வாழ்த்துக்கள்.....

GEETHA ACHAL said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்...

125பதிவுக்கும் வாழ்த்துகள்...தொடர்ந்து எழுதுங்க...

தமிழ் உதயம் said...

125 மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

viswam said...

கலக்கிட்டீங்க. வாழ்த்துக்கள்.

raji said...

ஆஹா!தமிழ்த் தங்கமே!எஞ்சினியரை கவுக்கறதுக்கு இப்பிடி எல்லாம் வழி இருக்கா?

125 வது பதிவா? வாழ்த்துக்கள் புவி!!!!
இன்னும் இதே போல் மைண்ட் வாய்சின் துணையுடன்
தங்க்ஸ் ரங்க்ஸ் கலாட்டாக்களும் ஜில்லுனு ஒரு காதல் மாதிரி
ஜிலு ஜிலுன்னு கதைகளும் ரஸ்க் சாப்பிட்டு ரிஸ்க்கானாப்புல
கட்டுரைகளும் இன்னுமின்னும் பல விதத்தில் எழுத வாழ்த்துக்கள்!!

Sathish A said...

இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்

அன்னு said...

ஒரு வரி விடாமல் எல்லா வரியிலும் ஆங்கிலத்தை துணைக்கு அழைத்து தமிழை குளிர்வித்து, வளர்த்து, பாடுபட்டு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கூறிய தங்கமணியே....இன்று முதல் நீ ‘தமிழால் ஆங்கிலம் வளர்த்த சிகாமணி’ என்றறியப் படுவாய்....


(லொல்லொல்லொல்லொல்லொல்லொல்லொல்லொல்...) நாய் குறைக்கவில்லை...குலவை சப்தம்!!

கெக்கே பிக்குணி said...

//ஒரு வரி விடாமல் எல்லா வரியிலும் ஆங்கிலத்தை துணைக்கு அழைத்து தமிழை குளிர்வித்து, வளர்த்து, பாடுபட்டு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கூறிய தங்கமணியே....இன்று முதல் நீ ‘தமிழால் ஆங்கிலம் வளர்த்த சிகாமணி’ என்றறியப் படுவாய்....//
நான் சொல்ல வந்ததைச் சொல்லிட்டீங்க அன்னு! நன்றி!
அப்-பாவி மேடம், இதெல்லாம் வடமொழிச் சொற்கள்: (அடைப்பில் தமிழ்) பாதுகை (காலணி), சமிக்ஞை (போக்குவரத்து விளக்கு என்பதே போதும்!), வார்த்தை (சொல்).
ஆங்கிலம்: டைம், பாயிண்ட்
"ஏன் நிறுத்தி விடீர்கள் அத்தான்"
ரங்க்ஸ்: நீ 'ட்'டை முழுங்கிட்டியே கண்ணு!

இதுக்கு மேல ஒற்றுப் பிழையும்.. சரி, சரி:-))))

புத்தாண்டு வாழ்த்துகள்!

சிநேகிதி said...

125 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துகள்!

சுசி said...

வாழ்த்துகள் புவனா.

125வது பதிவுக்கும் சித்திரைத் திருநாளுக்கும்.

கண் போர் சூப்பர்..

asiya omar said...

125th post வாழ்த்துக்கள்,ட்ராஃபிக் லைட்டுக்கு தமிழில் எப்படி சொல்றதுன்னு அவர் கிட்ட கேட்டேன்,முழிச்ச முழியைப் பார்த்து பயந்தே போயிட்டேன்... தங்கம்..

ஹேமா said...

எல்லாத்துக்கும் சேர்த்து சந்தோஷமான வாழ்த்துங்கோ !

Balaji saravana said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் 125 வது பதிவுக்கும் வாழ்த்துக்கள்.

//கண்போர் //
மைண்ட்ல வச்சுக்கறேன்.. :))

sulthanonline said...

125th post மற்றும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

//ஐயயோ...இத மறந்துட்டனே... இன்னும் கொஞ்ச நேரம் ஆபிஸ்லையே இருந்துருக்கலாம்" என மனதிற்குள் நினைத்த ரங்கமணி ஒன்றும் பேசாமல் "சரி..." என்பது போல் தலை மட்டும் அசைத்தார்.//


அப்பாவிய பார்த்தவுடனேயே அதிருதுல்ல. ஏன் மேடம் தினமும் இப்படிதானா? (சும்மா ஒரு டவுட்டு)

எல் கே said...

//‘தமிழால் ஆங்கிலம் வளர்த்த சிகாமணி//

சூப்பர்

தெய்வசுகந்தி said...

வாழ்த்துக்கள்!!

siva said...

:)வாழ்த்துக்கள்! greetings...namestheyji...

sukiryajii...

புதுகைத் தென்றல் said...

125 சீக்கிரமே 1250 ஆக வாழ்த்துக்கள். (அதிலும் நிறைய்ய ரங்கமணி எதிர்ப்பு பதிவுகள் வரணும் சொல்லிட்டேன் :) )

இங்க ஒரு மேட்டரை சொல்லிக்கவா. இலங்கையில் எங்க வீட்டு மேரியம்மா கலர்லைட்ஸ்.. கலர்லைட்ஸ்னு அடிக்கடி சொல்வாங்க. அது இன்னான்னு யோசிச்சு, விசாரிச்சா டிராபிக் சிக்னலாம். !!!! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் :)

கே. பி. ஜனா... said...

125 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்...!

ஸ்ரீராம். said...

நூற்று இருபத்தைந்தாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
கர வருட வாழ்த்துகள். கடைசியில் சமிக்கை-சமிக்ஞையில் வடி வேலு போல மாட்டிக் கொண்டு விட்டீர்களே...நிசம்மாவே அப்பாவிதான்...!

மாதேவி said...

வாழ்த்துக்கள்.

vanathy said...

தமிழுக்கு தங்கமணி என்று பெயர்.... எப்போதிலிருந்து!!!!!!!!

கமெண்ட் மட்டும் போடுறவன் said...

ரங்கமணி சரியா தான் "ஹாப்பி தமிழ் நியூ இயர்" அப்படின்னு தமிழில் சொல்லிருக்கார்.
HAPPY TAMIL NEW YEAR அப்படின்னு ஆங்கிலத்தில் சொல்லிருந்தா தான் தப்பு.
உடனே அந்த பிரச்னைக்கு உண்டான வரிகளை நீக்கவும்.

priya.r said...

//அப்-பாவி மேடம், இதெல்லாம் வடமொழிச் சொற்கள்: (அடைப்பில் தமிழ்) பாதுகை (காலணி), சமிக்ஞை (போக்குவரத்து விளக்கு என்பதே போதும்!), வார்த்தை (சொல்).
ஆங்கிலம்: டைம், பாயிண்ட்
"ஏன் நிறுத்தி விடீர்கள் அத்தான்"
ரங்க்ஸ்: நீ 'ட்'டை முழுங்கிட்டியே கண்ணு!

இதுக்கு மேல ஒற்றுப் பிழையும்.. சரி, சரி:-))))

புத்தாண்டு வாழ்த்துகள்! //

வாங்க வாங்க ஒன்று சொன்னாலும் நன்று சொன்னீர்கள் !

priya.r said...

வாங்க தானை தலைவி KP அவர்களே

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் என்று எங்களை கேட்கவைப்பது நியாயமா !

இதோ பாருங்க அப்பாவியை கலாய்க்கும் சங்கத்திலே முக்கியமான பொறுப்பில் இருந்து கொண்டு

இப்படி அடிகடி விடுப்பில் போவது சரியா ! உங்களை சம்பந்த படுத்தி ஒரு பதிவு கூட போட்டு எனது மனக்குறையை

ஆற்றி கொண்டேன் என்றால் பாருங்களேன் !

அப்புறம்

அப்பாவி கிட்டே கட் அண்ட் ரைட் ஆ சொல்லிட்டேன்

இனிமேல அவங்க உங்க பேரை கேட்கவே மாட்டாங்களாம் :)

@ அப்பாவி

தலைவியின் சேவை சங்கத்துக்கு தேவை ! புரிஞ்சுக்கோ புவனா ........

Priya said...

125வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!
இன்னும் தொடர்ந்து எழுதிட‌.......... வாழ்த்துக்கள்.

Vasagan said...

\தமிழால் ஆங்கிலம் வளர்த்த சிகாமணி\

சூப்பர் பட்டம், இது போல் மேலும் பல பட்டங்கள் பெற வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

125-ஆம் பதிவிற்கு வாழ்த்துகள்.

கூடவே உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

கெக்கே பிக்குணி said...

ப்ரியா, சொல்லியிருக்கக் கூடாதா? நான், உப்புப் பெறாத‌ ஓபாமா / பின் லேடன் சமரசம், மற்றும் லிபிய விடுதலைப் போராட்டம் இதுலெல்லாம் பிஸியா இருந்தாலும், ஏடிஎம்க்காக ஓடோடி வந்திருப்பேனே:-))))

[இது மட்டும் நமக்குள்ளே இருக்கட்டும்: "இப்படி அடிகடி விடுப்பில்" என்பது என்னுடைய கடி மற்றும் அடிதடி வரலாற்றைப் பத்தின கமென்ட்னு எல்லாருக்கும் சொல்ல வேண்டாம், நான் அப்பாவி மேடத்தை "நல்லா" கவனிச்சிக்கிறேன்!]

சமிக்ஞைக்கு சுட்டு, குறிப்புன்னு தமிழ்ச் சொற்கள் நிறைய இருக்கு... ப்ரியா எனக்குக் கொடுத்தது அகண்ட தீபத்தால "சமிக்ஞை" / சுட்டு, வெறும் க்ரீன்லைட் இல்லை:-) எனக்கு இந்த காதல்-கதைகள் ஒவ்வாமை...ஹிஹி (பெண்கள் எல்லாருக்கும் காதல்கதை பிடிக்கணும்னு இல்லியே!) அதான் இந்தப் பக்கம் வரல, ஸாரி. ப்ரியா, கொஞ்சம் ஐடியா இருக்கு.... இதை அடுத்த லெவலுக்கு எடுத்துப் போகலாம்:-)

vgr said...

Thalaipu nalla iruku...:)

Out of curiosity...nijamave inda padivukum therthalukum enna sammandamnu solreenga?

-vgr

priya.r said...

//ப்ரியா, சொல்லியிருக்கக் கூடாதா? நான், உப்புப் பெறாத‌ ஓபாமா / பின் லேடன் சமரசம், மற்றும் லிபிய விடுதலைப் போராட்டம் இதுலெல்லாம் பிஸியா இருந்தாலும், ஏடிஎம்க்காக ஓடோடி வந்திருப்பேனே:-))))//

இவ்வளோ உப்பு பெறாத விசயத்தில நீங்க பிசி பேலாபாத்தா; ச்சே! மன்னிக்கவும் பிஸியா!! நான் நீங்க உபயோகமா நீங்க குடும்ப இஸ்திரி வேலையை பார்த்து கிட்டு கணினி வேலையை செய்து கிட்டு மேலும் உபயோகமா பதிவு போட்டு கிட்டு பிஸியா இருப்பீங்க ன்னு நினைச்சு தான் சொல்லலைப்பா !!

நானும் கூட ஆசியா முழுவதும் ஒரே கரென்சி பயன்படுத்துவது ;ஒரே விசா ;ரோமிங் ப்ரீ ;பொது கல்வி படித்து விட்டு எந்த ஆசியா நாட்டிலும் வேலை இது போல பிஸியா இருப்பதை வெளியே சொல்லிக்காம அப்பாவிக்காக எனது பொன்னான நேரத்தை ஒதுக்கி விட்டு வருகிறேன் என்றால் பார்த்துகோங்களேன் !!

//[இது மட்டும் நமக்குள்ளே இருக்கட்டும்: "இப்படி அடிகடி விடுப்பில்" என்பது என்னுடைய கடி மற்றும் அடிதடி வரலாற்றைப் பத்தின கமென்ட்னு எல்லாருக்கும் சொல்ல வேண்டாம், நான் அப்பாவி மேடத்தை "நல்லா" கவனிச்சிக்கிறேன்!]//

ஹ ஹா ! கண்டிப்பா ரசசியம் ரகசியமாகவே இருக்கட்டும் ! கவனிங்க கவனிங்க ! நீங்க கவனிக்கிற கவனிப்பில் அப்பாவிக்கு போன ஜென்மம் நினைவுக்கு வந்து விட போகுது ;எதற்கும் பார்த்து கவனமா இருங்க கெபி ;அவ வாய் சாதுரியத்தில மயங்கி அவ கிட்டே ரசிகையானவங்க ஏராளம் !

//சமிக்ஞைக்கு சுட்டு, குறிப்புன்னு தமிழ்ச் சொற்கள் நிறைய இருக்கு... ப்ரியா எனக்குக் கொடுத்தது அகண்ட தீபத்தால "சமிக்ஞை" / சுட்டு, வெறும் க்ரீன்லைட் இல்லை:-) எனக்கு இந்த காதல்-கதைகள் ஒவ்வாமை...ஹிஹி (பெண்கள் எல்லாருக்கும் காதல்கதை பிடிக்கணும்னு இல்லியே!) அதான் இந்தப் பக்கம் வரல, ஸாரி. ப்ரியா, கொஞ்சம் ஐடியா இருக்கு.... இதை அடுத்த லெவலுக்கு எடுத்துப் போகலாம்:-) //

விடுங்க பாஸ் ! இதுக்கு போயி சாரி பூரி எல்லாம் சொல்லி கிட்டு !

எனக்கும் கூட தான் பிடிக்காது ! அப்பாவியை கலாய்க்க தானே வர்றது !

சமிக்ஞைக்கு சுட்டு, குறிப்புன்னு தமிழ்ச் சொற்கள் கூடவே சைகை என்றும் சொல்லலாம் !

கண்டிப்பாக அடுத்த லெவலுக்கு எடுத்துப் போகலாம்பா ;நாங்களும் உடன் வருகிறோம் ...........

sriram said...

ஹாய், ஹாப்பி நியூ இயர் யா..
சூப்பர்போஸ்ட் யா, ஐ லைக் இட் யா..
ஹண்ட்ரட் ட்வெண்டி ஃபைப் போஸ்ட் போட்டதுக்கு கன்கிராட்ஸ் யா..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

முனியாண்டி said...
This comment has been removed by the author.
முனியாண்டி said...

It's really too good. Happy Tamil new year.

தக்குடு said...

congrats for your 125'th post akka!...:)

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - வாங்க வாங்க..:))... அனாமிகா சரி, குழந்தை யாரு?....# டவுட்...:)))


@ ஹுஸைனம்மா - ஹி ஹி ஹி... பொது வாழ்க்கைல இதெல்லாம் ஜகஜமப்பா...:))


@ Vasagan - நன்றிங்க...:))


@ எல் கே - அது... நீ இப்படி தப்பு கண்டுபிடிக்க சான்ஸ் குடுக்கணும்னு தான் வேணும்னே தப்பா போட்டேன்னு சொன்னா நீ நம்பவா போற... ஹா ஹா... நன்றி நக்கீரரே... :)))


@ Vasagan - இதுவும் கடந்து போகும்...ஹா ஹா...:))


@ வேங்கை - மிக்க நன்றிங்க

@ சி.பி.செந்தில்குமார் - நன்றி நன்றி..:)


@ Vasagan - ஹா ஹா...:)


@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க அம்மா..:)

அப்பாவி தங்கமணி said...

@ பிரதீபா - சரி சரி..பப்ளிக் வாட்சிங்....ஹா ஹா... எஸ் எஸ்... நேயர் விருப்பமா மைண்ட்வாய்ஸ்ஐ கொஞ்சம் ஒதுக்கி வெச்சுட்டேன்...ஹா ஹா... சரி சரி... அனுதாபங்கள் உங்களுக்கு...;))

@ Vasagan - வெரி குட்.... இப்படி ஒரு முடிவுக்கு நீங்க எல்லாம் வரணும்னு தான் இப்படி எழுதறது... ஹா ஹா...:))

@ Chitra - சித்ராவிடமிருந்து வந்த சித்திரை வாழ்த்துக்கு மிக்க நன்றி..:)

@ Vasagan - ஹா ஹா... நன்றி ..:)))

@ அனாமிகா - அடிப்பாவி பதிவை படிக்காம கமெண்ட் மட்டும் படிக்கும் அனாமிகாவை வன்மையாக கண்டிக்கிறேன்...;))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -

//வாழ்க வளமுடன்//
இதுக்கு உண்மையான அர்த்தம்... பின்னாடி வெக்கறேன் ஆப்பு ...:))

//உங்க எழுத்தை படித்ததில் இருந்து பிடிக்காத சீரியல் இ பார்க்கும் அளவு பொறுமை வந்து விட்டதென்றால் பாருங்களேன் //
நான் சொன்னது சரியா போச்சு பாத்தீங்களா மக்களே...;))

//சொன்னாலும் சொல்லலைன்னாலும் எங்கள் அனுதாபமும் ஆதரவும் தம்பி கோவிந்த் அவர்களுக்கே//
ஐயோ பாவம் உங்கள் சங்கம்...;))

//அப்பாவியை தட்டி கேட்க எல்லோரும் திரண்டு வாரீர் //
வாரீர் வாரீர் வாருவீர்னு சொல்லி இருந்தா பொருத்தமா இருந்து இருக்குமோ... அவ்வ்வ்வ் ... :))

அப்பாவி தங்கமணி said...

@ திவா - வேண்டாம் திவாண்ணா அழுதுருவேன்...ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்...;))

@ யோகா.எஸ் - பிராணநாதா தமிழ் சொல் இல்லையா? என்கிட்ட யாருமே சொல்லலைங்க... இனிமே இந்த ஆட்டத்துக்கே நான் வல்ல...ஹா ஹா.. மிக்க நன்றி உங்கள் மகிழ்ச்சியை சொன்னதுக்கு...:))

@ அருள் சேனாபதி (பவானி நம்பி) - ஹா ஹா... மிக்க நன்றி... :)

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா...:)

@ GEETHA ACHAL - ரெம்ப நன்றிங்க கீதா

@ தமிழ் உதயம் - மிக்க நன்றிங்க சார்...

@ viswam - ரெம்ப நன்றிங்க விஸ்வம்

@ raji - ரெம்ப தேங்க்ஸ் ராஜி'க்கா... இன்னும் நெறைய வழி எல்லாம் இருக்கு... உங்களுக்கு ரகசியமா சொல்றேன்...ஹா ஹா...உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க மிக்க நன்றி...:))

@ Sathish A - ரெம்ப நன்றிங்க சதீஷ்

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - ஹா ஹா ஹா... பட்டத்துக்கு மிக்க நன்றி... (இருங்க சான்ஸ் கிடைக்கறப்ப டபுள் ஆப்பு திருப்பி தரேன்...ஹா ஹா) குலவை சப்தமா சத்தமா...ஹா ஹா...:))

@ கெக்கே பிக்குணி - ஹயையோ... டேமேஜ் எக்கசக்கமா ஆகி போச்சு அப்பாவி... எஸ்கேப் ஆய்டு... ஹா ஹா ஹா... நன்றி கெக்கே பிக்குணி அக்கா சொன்னதுக்கு... மைண்ட்ல வெச்சுக்கறேன்... :))
(வீட்டுல அண்ணா பாவம்னு மட்டும் ஏனோ தோணுது... ஹி ஹி ஹி)


// நீ 'ட்'டை முழுங்கிட்டியே கண்ணு// - கண்ணில் நீர் வர சிரித்தேன்...செம டைமிங்.... :)))

@ சிநேகிதி - மிக்க நன்றிங்க சிநேகிதி...:)


@ சுசி - தேங்க்ஸ் சுசி..:)

@ asiya omar - ஹா ஹா ...யான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம்... சூப்பர்...நன்றிங்க ஆசியா...:))

அப்பாவி தங்கமணி said...

@ ஹேமா - ரெம்ப நன்றிங்க ஹேமா

@ Balaji saravana - ஹா ஹா... மைண்ட்ல வெச்சுக்கோங்க... மைண்ட்வாய்ஸ் கிட்ட சொல்லிராதீக...:))

@ sulthanonline - நன்றிங்க... ஹா ஹா.. இது கற்பனை மட்டுமே.. சொந்த கதை இல்லிங்க... சொன்னா நம்பனும்'ங்க பிரதர்...;))

@ எல் கே - வெறும் வாயை மெல்லும் சங்கத்துக்கு அவல் சப்ளை வேறா... அவ்வ்வ்வவ்வ்வ்வ்....

@ தெய்வசுகந்தி - நன்றிங்க தெய்வசுகந்தி...

@ siva - நன்றி... சுக்கு மிளகு திப்பிலி எல்லாம் ஜி...:))

அப்பாவி தங்கமணி said...

@ புதுகைத் தென்றல் - உங்கள் ஆசீர்வாதம் அப்படியே போட்டுடறேன்... ஹா ஹா... கலர்லைட்ஸ்...ஹா ஹா... இதுவும் சூப்பர் அக்கா..:)

@ முத்துலெட்சுமி/muthuletchumi - நன்றிங்க..;)

@ கே. பி. ஜனா... - ரெம்ப நன்றிங்க

@ ஸ்ரீராம்.- வாழ்த்துக்கு நன்றிங்க... காமடி பீஸ்னு ஆனப்புறம் டேமேஜ் ஆகறது சகஜம் தானங்க...:)))

@ மாதேவி - ரெம்ப நன்றிங்க மாதேவி

@ vanathy - எப்பவுமே தான் வானதி ...:))

@ கமெண்ட் மட்டும் போடுறவன் - ஹா ஹா... :))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -

//வாங்க வாங்க ஒன்று சொன்னாலும் நன்று சொன்னீர்கள்//
ப்ரியா ப்ரூட்டஸ் டௌன் டௌன்...;))


//இனிமேல அவங்க உங்க பேரை கேட்கவே மாட்டாங்களாம்//
இனிமே கேக்கறதா... சான்சே இல்ல... ஹா ஹா...;))))

//தலைவியின் சேவை சங்கத்துக்கு தேவை ! புரிஞ்சுக்கோ புவனா//
நல்லா ப்ளான் பண்ணித்தான் பண்றாங்க...;)))))

அப்பாவி தங்கமணி said...

@ Priya - ரெம்ப நன்றிங்க ப்ரியா

@ Vasagan - ஆஹா... சூப்பர் வாழ்த்து...ஹா ஹா

@ வெங்கட் நாகராஜ் - மிக்க நன்றிங்க வெங்கட்

@ கெக்கே பிக்குணி - அப்பாவி... ரெண்டு பெரிய தலைகள் கூட்டணி சேந்தாச்சு...உன் தலை தப்பனும்னா எஸ்கேப் ஆய்டு...;))

@ vgr - நன்றிங்க...;))...

//Out of curiosity...nijamave inda padivukum therthalukum enna sammandamnu solreenga?//
அப்படி சொல்லலியே boss... ஹா ஹா... //இந்த வருடம் எல்லோருக்கும் இனிய வருடமாய்// னு சொன்ன வாழ்த்துக்கும் எலக்சன்க்கும்னு தானே சொன்னேன்... :)))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -

//ஆசியா முழுவதும் ஒரே கரென்சி பயன்படுத்துவது//
அதை நீங்களே அச்சடிப்பீங்களோ.... ஜஸ்ட் அ கொஸ்டின்... நோ டென்ஷன் ப்ரியா...:))

//கவனிக்கிற கவனிப்பில் அப்பாவிக்கு போன ஜென்மம் நினைவுக்கு வந்து விட போகுது//
இந்த ஜென்மம் மறந்து போகாம இருந்தா சரி தான்...:))

//அவ வாய் சாதுரியத்தில மயங்கி அவ கிட்டே ரசிகையானவங்க ஏராளம்//
ஹி ஹி ஹி... நன்றி நன்றி நன்றி...:))

//விடுங்க பாஸ்//
ஐயையோ... பாஸ்'ஆ? அப்போ... அவங்களா நீங்க.....அவ்வவ்வ்வ்வ்...

//கண்டிப்பாக அடுத்த லெவலுக்கு எடுத்துப் போகலாம்பா //
அடுத்த லெவல்னா எப்படி... அஞ்சாவது மாடில இருந்து ஆறாவது மாடிக்கு போய் டிஸ்கஸ் பண்ணுவீங்களோ... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்...

//நாங்களும் உடன் வருகிறோம்//
நான் ஊரை காலி செய்யலாம்னு இருக்கேன்...:)))

அப்பாவி தங்கமணி said...

@ sriram -

யோ யோ லேங்க்வேஜ் கேள்வி பட்டு இருக்கேன்... இது புதுசா யா யா லேங்க்வேஜ் போல இருக்கே... உங்க குட்டி பொண்ணு கத்து குடுத்ததா... ஹா ஹா... சூப்பர்...நன்றி உங்கள் வாழ்த்துக்கு... :))

@ முனியாண்டி - மிக்க நன்றிங்க.. ;))

@ தக்குடு - தேங்க்ஸ் தக்குடு... :))

middleclassmadhavi said...

விஷ் யூ ஆல்ஸோ எ ஹேப்பி தமில் ந்யூ இயர்!

கோவை2தில்லி said...

125க்கு வாழ்த்துக்கள். இது போல் பல கலாட்டாக்களை எங்களுக்கு தர வேண்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

ஹாப்பி தமில் ந்யூ இயர்ன்னு நானும் தமிழ்லயே வாழ்த்திக்கறேன் :-)))))

அப்றம் 125க்கும் வாழ்த்துகள்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கலக்கலா இருக்கு தங்கமணி

அப்பாவி தங்கமணி said...

@ middleclassmadhavi - thanks Madhavi..:))

@ கோவை2தில்லி - Thanks'nga..:)

@ அமைதிச்சாரல் - ha ha..idhu super...:))

@ ஆர்.கே.சதீஷ்குமார் - thanks a lot...:)

Mahi said...

125க்கு வாத்துக்கள்..ச்சீ,ச்சீ,tounge ரோல் ஆகிருச்சு அப்பாவி! ;)
வாழ்த்துக்கள்!!

அமைதிச்சாரல் said...

//யோ யோ லேங்க்வேஜ் கேள்வி பட்டு இருக்கேன்... இது புதுசா யா யா லேங்க்வேஜ் போல இருக்கே//

ஹைய்யோ..ஹைய்யோ, யா யா லேங்க்வேஜ்தான் யோ யோ லேங்க்வேஜுக்கு தாத்தா :-))))

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - Tounge ரோல் ஆகுதா இல்ல காஜூ ரோல் ஆகுதானு அப்புறம் சொல்றேன்.. ஹா ஹா...:)

@ அமைதிச்சாரல் - விட்டா இது பிரிட்டிஷ் இங்கிலீஷ் அது அமெரிக்கன் இங்கிலீஷ்னு சொல்லுவீக போல இருக்கே அக்கா... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... அந்த "யா யா" லாங்க்வேஜ் நாங்க தலைவரோட "தர்மதுரை" படத்துலையே பாத்துட்டமே...:)))

Post a Comment