Monday, April 04, 2011

ஜில்லுனு ஒரு காதல்...(பகுதி 14)பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7  பகுதி 8   பகுதி 9   பகுதி 10   பகுதி 11       பகுதி 12   பகுதி 13 

சிறிது நேரத்தில் செல்பேசி சிணுங்கியது. அழைப்போ என நினைத்து துண்டிக்க போனவள் "you've got a message" என்ற வாசகத்தில் விரலசைவை நிறுத்தினாள் மீரா

"Read Message" என இயக்கியவள் அதன் பின் ஒரு முறை அல்ல இரு முறை அல்ல மீண்டும் மீண்டும் பல முறை பேசியில் வந்த செய்தியை படித்தாள். ஒரு ஒரு முறை படித்த போதும் கண்ணில் நீர் பெருகியது

ஒரு கட்டத்திற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் சத்தமாய் அழுதாள்

சற்று நேரம் அழுது ஓய்ந்தவள் செல்பேசியில் வந்த செய்தியை வாய் விட்டு படித்தாள்

"Meera... I'm sorry... I'm extremely sorry... saying sorry doesn't mean I meant to hurt you... I wouldn't want to hurt you on my life... you mean more than that... you mean a lot more than that to me... I felt like losing a part of me when I saw you lying unconsious... I have no words to express how relieved I was, the minute I saw you opening the eyes... I have no words to express how much I just wanted to stay by your side right from that minute Meera... I didn't want to hurt you, thats why I stayed away.... but I can't anymore... all this week I stayed away from you, doesn't count to my lifetime... I'm not being dramatic Meera... just thats how I feel... from the day one I saw you, I felt something changed in me... I have a lot more to say Meera... much more to express... but not in a sms... talk to me, please... bring life to me, please... just make me feel alive once... Meera... please... - Steve"

வார்த்தைக்கு வார்த்தை மனனம் செய்ய முயல்பவள் போல் மீண்டும் மீண்டும் படித்தாள். ஏன் இப்படி செய்கிறேன் என தனக்கு தானே கேள்வி கேட்டும் எந்த பதிலும் பெற இயலவில்லை

அந்த செய்தி தன்னை ஏன் இப்படி அழ செய்கிறது... தன் உணர்வுகளை ஏன் இப்படி பாதிக்கிறது என தடுமாறினாள் மீரா

ஸ்டீவ் அனுப்பிய செய்தியின் மறைபொருள் அவளுக்கு தெளிவாய் புரிந்தது இப்போது. இது நாள் வரை சதீஷ் போலத்தான் ஸ்டீவும் தன்னிடம் நட்பாய் உரிமை பாராட்ட முயல்கிறான் என நினைத்து இருந்தவளுக்கு, இப்போது புரிந்த விதத்தில் நடந்த எல்லாவற்றிற்கும் வேறு அர்த்தம் தோன்றியது

ஒரே செய்கைக்கு இப்படி வேறு அர்த்தம் கூட இருக்க முடியும் என தனக்கு இது வரை ஏன் தோன்றவில்லை என நினைத்தாள்... அதற்கும் மேலாய், இப்போது இவ்வாறு புரிவதற்கும் காரணம் அறியாமல் திகைத்தாள்

அப்படியென்றால்.... தன் மனதிலும்.... அது... அப்படி தானா... அப்படியே தானா... என மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. அப்படி இருக்குமோ என தோன்றியதும் சற்று நேரம் எதையும் யோசிக்கும் திறன் கூட அற்றவளாய் நின்றாள்

உடனே அவனிடம் பேச வேண்டும் போல் தோன்றியது மீராவுக்கு...

ஆனால் அதற்கு முன் முழுதாய் புரிந்து கொள்வது அவசியம் என நினைத்தாள். மீண்டும் யார் மனதும் காயப்படாமல் இருக்க வேண்டுமெனில் ஒரு பரிசீலனை நிச்சியம் வேண்டுமென தோன்றியது

முதல் முதலாய் ஸ்டீவை பார்த்தது முதலான நினைவுகளை அலச முயன்றாள்

சந்திப்பே ஒரு விபத்து போலத்தானே என தோன்றியது. அன்று அவனுக்கு மொழி புரியாது என நினைத்து கேலி செய்ததும் பின் மன்னிப்பு கேட்டதும் அதுவே நட்பில் முடிந்ததும் கண் முன் விரிந்தது

அந்த முதல் சந்திப்பிலேயே அவன் பார்வையில் ஏதோ வித்தியாசம் இருந்ததோ... தனக்கு தான் அதை புரிந்து கொள்ள தெரியவில்லையோ என தோன்றியது

அன்று முதல் பார்வையில் நல்ல ஒரு நண்பனாய் அவன் தோன்றியது நிஜம்...ஆனால்... அவனுக்கு வேறு விதமாய் என அவன் அனுப்பிய இந்த செய்தி உணர்த்தியது

அது எப்படி சாத்தியம் என ஆச்சிர்யத்தில் புதைந்தாள். கண்டதும் காதல் எல்லாம் சினிமாவில் மட்டும் தானே சாத்தியம் என தோன்றியது. ஆனால் நிஜத்திலும் சாத்தியம் என சாட்சியாய் நிற்கிறானே என நினைத்தாள்

அதன் பின்னான சந்திப்புகளின் போதும் அவன் பார்த்த பார்வைக்கும் பேசிய பேச்சுக்கும் இப்போது புது அர்த்தம் விளங்கியது. அன்று அவன் இடத்தில் நால்வரும் சினிமா பார்த்த நாளில் அவன் பார்வை உணர்த்திய பொருள் என்னவென புரியாமல் குழம்பினேனே... இது தானா அதன் பொருள் என நினைத்தாள்

மற்றொரு நாள் படிக்க சென்ற போதில், சதீஷ் மதுவுக்கு முன் தான் சென்றதும், அன்று அவர்கள் இருவரும் மட்டும் அவன் வீட்டில் இருந்த நினைவு வர... இப்போது ஏனோ ஒரு விதமான உணர்வில் உறைந்து நின்றாள். அன்று உணராத ஏதோ ஒன்றை இன்று உணர்கிறேன் என நினைத்தாள்

அந்த நினைவில் அவன் அருகில் இருப்பதை போல் உணர்ந்தாள். அப்போதே அவனை காண வேண்டும் போலவும் தோன்றியது. எப்போதும் யாரையும் இப்படி காண வேண்டுமென நினைத்ததில்லையே என தோன்றியது

வெறுமனே ஒருவரை காண வேண்டுமென தோன்றுவது இயல்பு, ஆனால் காணாமல் இருக்க இயலாது என்ற இந்த உணர்வு தனக்கு புதிதென நினைத்தாள்

கிறிஸ்துமஸ் சமயத்தில் ஸ்டீவ் அவன் பெற்றோரை பார்க்க சென்ற போது அவனை பார்க்க வேண்டுமென நினைத்தது நிஜம்...ஆனால் அப்போது பார்க்க வேண்டுமென நினைத்ததற்கும் இப்போது தோன்றும் இந்த தவிர்க்க முடியாத உணர்விற்கும் நிச்சியம் வேறுபாடு உண்டென தோன்றியது

அன்று காதலர் தினத்திற்கு வெளியே செல்ல ஸ்டீவ் கேட்ட நினைவு வர, கடவுளே அவன் கோபத்தின் பொருள் இது தானே... அதை தான் உணரவில்லையே... உணரும் படி ஒருபோதும் அவன் மனம்விட்டு சொன்னதில்லையே என நினைத்தாள்

சதீஷ் போல் இவனும் தன்னிடம் உரிமை கொள்கிறான் என நினைத்து தானே, ஒரு ஒரு செய்கையையும் அதோடு தொடர்புப்படுத்தி மீண்டும் மீண்டும் அதே தவறான புரிதலில் இருந்திருக்கிறேன் என இப்போது புரிந்தாள்

அப்படி தவறான புரிதலால் தான், அதை தன் கோபத்தை தணித்து கொள்ள ஆயுதமாய் சிலமுறை உபயோகப்படுத்தி கொண்டதும் புரிந்தது.... ஆனால் அது அவனை எத்தனை வருத்தி இருக்குமென இப்போது அவளால் புரிந்து கொள்ள முடிந்தது

ஆனால் இப்படி தான் இது தான் என அவன் மனம் விட்டு பேசாதது அவன் தவறு தானே என தோன்றியது.

அப்போதே அப்படி சொல்லி இருந்தால் தன் நிலைப்பாடு என்னவாய் இருந்திருக்குமென அவளால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை

இப்போது தோன்றும் இந்த உணர்வு கூட நிச்சியம் தானா... அல்லது அவனை வருத்தினோம் என்ற குற்ற உணர்வின் வெளிப்பாடா என கேள்விகள் பல முளைத்தன

இல்லை, இது நிச்சியம் வெறும் குற்ற உணர்வின் வெளிப்பாடு மட்டுமல்ல.... அப்படி இருந்தால் ஏதோ திணிக்கப்பட்ட உணர்வு தானே இருக்கும்... ஆனால் இது அதையும் மீறிய ஏதோ ஒன்று... ஆனால் இது எப்போது எப்படி தோன்றியது என நிச்சியமாய் உணர இயலாமல் தவித்தாள்

அன்று மருத்துவமனையில் சதீஷ் ஸ்டீவை வெளியேற சொன்ன போது, அவன் சார்பாய் நான் பேசுவேன் என நம்பிக்கையுடன் கண்ணோடு கண் பார்த்து நின்றானே ஸ்டீவ், அப்போது என் மனம் சலனபட்டதோ?

அல்லது இன்று அவன் செல்பேசி செய்தியில் மனம் கரைந்ததோ? அப்படி ஒரு செய்தியில் அல்லது செய்கையில் மனம் மாறி விடுமா? இல்லை அதற்கு முன்பே அவன் என் மனதில் நுழைந்து விட்டானா, தான் அதை உணரவில்லையோ என நினைத்தாள்

அன்று கான்செர்ட் நடந்த இடத்தில் சண்டை வந்த போது அவன் "உன்னை என் லைப்ல சந்திக்காமலே இருந்திருக்கலாம்னு தோணுது" என கோபத்தில் சொன்ன அந்த வார்த்தை தன்னை எத்தனை பாதித்தது என இப்போது நினைத்து பார்த்தாள்

எப்போது தன் மனம் அவன்பால் சாய்ந்தது என்பதை அவளால் தெளிவாய் சொல்ல இயலவில்லை, ஆனால் இனி அந்த ஆராய்ச்சி அவசியமற்றது என தோன்றியது மீராவுக்கு

சில விசயங்களுக்கு விளக்கங்கள் இருப்பதில்லை. காதல் தோன்றும் கணமும் அதில் ஒன்று. எந்த கணம் யாருக்கு யார் மேல் காதல் தோன்றும் என எந்த இலக்கணமும் யாராலும் வகுக்க முடியாது

அறிவியலும் விஞ்ஞானமும் வானளாவ வளர்ந்து, மனிதனின் மறு பதிப்பாய் க்ளோனிங் என்ற பெயரால் கடவுளின் செயலையே செய்யும் அளவு ஆன போதும், இந்த காதல் எனும் உணர்வை முன்கூட்டியே அறிந்து கொள்ள ஒரு கருவியை நம்மை படைத்த அந்த ஆண்டவனால் கூட படைக்க இயலாது என நினைத்தாள் மீரா

பல நினைவுகள் அலைகழிக்க அப்போதே ஸ்டீவிடம் பேச வேண்டும் போல் தோன்றியது மீராவிற்கு. ஆனால் மணி நடுநிசியை எட்டி இருக்க தயக்கமாய் அவள் யோசித்த நொடி, அவள் செல்பேசி இசைத்தது

ஸ்டீவின் எண் ஒளிர, ஆனந்தத்தில் கண் துளிர்க்க "ஹலோ" என்றாள் உடனேயே

"மீரா...மீரா... " அவள் பேசுவாளோ மாட்டாளோ என நம்பிக்கையின்றி அழைத்தவன் அவள் குரல் கேட்டதும் எதுவும் பேச தோன்றாமல் மீண்டும் மீண்டும் மந்திரம் போல் அவள் பெயரை ஜெபித்தான்

"..." அவன் குரலில் இருந்த நெகிழ்வும், சந்தோசமும், பரபரப்பும், காதலும் அவளை செயல்பட விடாமல் செய்தது. கண்ணில் நீர் நிறைந்தது

அவள் எதுவும் பேசாமல் இருக்கவும் "மீரா... எப்படி இருக்க மீரா?" என்றான் உணர்ச்சி வயப்பட்ட குரலில்

"ம்... நல்லா இருக்கேன் ஸ்டீவ்" என முயன்று வார்த்தைகளை தருவித்தாள்

"ஐ அம் சாரி மீரா... நான் உன்ன..."

"இல்ல ஸ்டீவ்... நான் தான்... புரியாம... ஏதோ... சாரி..." ஏதேதோ சொல்ல வந்து அதில் ஒரு வார்த்தை இதில் ஒரு வார்த்தை என தடுமாறினாள்

அவளின் தடுமாற்றம் அவனுக்கு எதையோ உணர்த்துவது போல் இருந்த போதும், எதையும் பேசி இப்போது உள்ள நிலையை கெடுத்து கொள்ள அவன் மனம் விரும்பவில்லை

"டாக்டர்கிட்ட மறுபடி போனயா மீரா?" என பேச்சை மாற்றினான். அவள் டாக்டரிடம் செல்வது பற்றி எல்லாம் தினமும் மதுவிடம் கேட்டு தெரிந்து கொள்வான் தான் என்றபோதும் பேச்சை திசை திருப்ப இப்படி கேட்டான்

"ம்... போனேன் ஸ்டீவ்... இப்ப ஆல் ரைட்... ஒண்ணும் பிரச்சன இல்ல... நீ எப்படி இருக்க?" என்றாள் அவன் பேச கேட்கவேண்டுமென ஏங்கியவள் போல்

"நல்லா இருக்கேன் மீரா... ஆனா உன்னை பாக்காம... ரெம்ப கஷ்டமா இருந்தது..." என்றான் தன்னை கட்டுப்படுத்த முடியாமல்

"எனக்கும் தான்" என்றாள் மீரா தனிச்சையாய். அப்படி ஒரு பதிலை அவளிடமிருந்து எதிர்பாராத ஸ்டீவ் "மீரா..." என்றான் ஆனந்த அதிர்ச்சியாய்

"I missed you Steve" என்றாள் மீரா

அவள் குரலில் இருந்த ஏதோ ஒன்று அவள் மனமாற்றத்தை அவனுக்கு உணர்த்தியது போல் இருந்தது. இதற்கு முன் தன்னிடம் பேசிய மீராவின் குரலில் இல்லாத ஒன்றை அவன் காதல் கொண்ட மனம் அடையாளம் கண்டுகொண்டது

தான் அனுப்பிய செய்தியில் இருந்த உட்பொருளை அவள் புரிந்து கொண்டாள் என்பதை அவனும் புரிந்து கொண்டான்

அந்த சந்தோசத்தில் நினைத்த எதையும் பேச இயலாமல் "எனக்கு...எனக்கு... ஐ அம்...ஐ அம் ஜஸ்ட் லாஸ்ட்..." என மகிழ்வாய் சிரித்தான்

இருவருக்கும் மனம் விட்டு காதலை சொல்ல ஆசை இருந்த போதும், சொல்லவில்லை

மீராவுக்கு தயக்கம் தடுத்தது என்றால், ஸ்டீவிற்கு இப்படி ஏதோ செய்தி போல் தொலைபேசியில் சொல்ல விருப்பம் இருக்கவில்லை

வாழ்நாள் மொத்தமும் நினைவில் இருக்கவேண்டிய ஒரு தருணத்தை, மனதில் படம் பிடித்து வைத்து கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வை, காலம் உள்ள வரை போற்றி பாதுகாக்க வேண்டிய ஒரு கணத்தை இப்படி ஒரு கருவியின் வாயிலாய் சொல்ல அவன் மனம் இடம் தரவில்லை

கண்ணோடு கண் நோக்கி காதல் சொல்ல விரும்பினான். தன் காதலை அவள் ஏற்கும் அந்த கணத்தில் அவள் கண்ணில் தோன்றும் உணர்வை மனதில் பாதுகாத்து கொள்ளணும் என நினைத்தான்

அதை செயல்படுத்தும் விதமாய் "மீரா... நாளைக்கு டின்னர்க்கு மீட் பண்ணலாமா?" என கேட்டான்

அதற்கே காத்திருந்தவள் போல் "ம்...சரி" என்றாள்

"எங்க போலாம்? நீயே சொல்லு" என அவன் கேட்க

"எதுனாலும் சரி..." என்றாள், அப்போது இருந்த மனநிலையில் அவளால் யோசிக்க கூட இயலவில்லை

"ம்... for a change... ஹோட்டல் வேண்டாம்... நானே குக் பண்றேன்... என் அபார்ட்மென்ட்ல மீட் பண்ணலாம் சரியா மீரா?"

அவன் சொல்லிய விதத்தில் ஏனோ சிரிப்பு வர, அந்த உணர்வில் மனம் சற்று அமைதியுற "நான் இன்சூரன்ஸ் எடுக்கலியே ஸ்டீவ்... "என ஏதோ முக்கியமாய் சொல்வது போல் கேலி செய்தாள்

அவள் அப்படி உரிமையாய் கேலி செய்தது அவனுக்கு மனநிறைவை தந்தது "ஏய் என்ன கிண்டலா... உன்னை விட நல்லாவே குக் பண்ணுவேன்" என்றான் பொய் கோபத்துடன்

"அதை சாபிட்டப்புறம் சொல்றேன்" என மறைமுகமாய் வருவதற்கு சம்மதம் கூறினாள்

என்னுள்நீ வந்தகணத்தை
என்னால் அறியமுடியவில்லை
என்னிலிருந்துநீ விலகும்கணத்தை
எண்ணிபார்க்கவும் துணிவில்லை!!!

அடுத்த பகுதி படிக்க...

(ஜில்லுனு தொடரும்...செவ்வாய் தோறும்)

50 பேரு சொல்லி இருக்காக:

மகி said...

நான்தான் பர்ஸ்ட் கமென்ட்டா? என்னதான் சொல்லுங்க,பர்ஸ்ட் கமென்ட் போடறதுல ஒரு சந்தோஷம் ! :)
படிச்சிட்டு வரேன்.

மகி said...

அப்பாடி,ஒருவழியா ரெண்டு பேரும் சஸ்பென்ஸை உடைக்கப்போறாங்களா? சரி,சரி..சீக்கிரம் ஸ்டீவை சமைக்கச் சொல்லுங்க.:)

பிரதீபா said...

எ கவிதை இப்போ..

அன்னு said...

அடப்பாவி!!!
நாலே நாலு டயலாகுக்கு ரெண்டு வாரமா??? இதுக்கு அடுத்த வாரம் வரைக்கும் நாங்க வெயிட் செய்யணும...இருங்க இப்பவே சதீசுக்கு ஃபோன் செய்யறேன்... சதீசூ...சதீசூ... ஏ புள்ள சதீசூ.... ஹையோ ஹையோ... இப்படி பச்ச மண்ணா இருந்தா, அப்பாவி உன்னை கதையிலிருந்து காணாம பண்ணிடும்!!!!

Chitra said...

அவள் அப்படி உரிமையாய் கேலி செய்தது அவனுக்கு மனநிறைவை தந்தது "ஏய் என்ன கிண்டலா... உன்னை விட நல்லாவே குக் பண்ணுவேன்" என்றான் பொய் கோபத்துடன்

"அதை சாபிட்டப்புறம் சொல்றேன்" என மறைமுகமாய் வருவதற்கு சம்மதம் கூறினாள்


.... ஜாலியான கதை தான்......

Porkodi (பொற்கொடி) said...

ahaa.. mandai kanju poi oru ettu pakalam nu vandha, nalla jillu nu thaan iruku 4 vari dialogues..!!! :D yaaaay! steve and meera!

எல் கே said...

இதை நாங்க ஒத்துக்க மாட்டோம். ஸ்டீவ் மீரா ஜோடி எங்களுக்குப் பிடிக்கலை.

எல் கே said...

/கண்ணோடு கண் நோக்கி காதல் சொல்ல விரும்பினான். தன் காதலை அவள் ஏற்கும் அந்த கணத்தில் அவள் கண்ணில் தோன்றும் உணர்வை மனதில் பாதுகாத்து கொள்ளணும் என நினைத்தான் //

பாங்க்ல டெபாசிட் பண்ணிடலாம்ல

siva said...

hm hm enna orey feelingsa erukku...nalla thaney poikitu erukku..where is mathu...?????

அனாமிகா துவாரகன் said...

somebody shoot me.

அனாமிகா துவாரகன் said...

//இதை நாங்க ஒத்துக்க மாட்டோம். ஸ்டீவ் மீரா ஜோடி எங்களுக்குப் பிடிக்கலை. //

என்ன இப்டி சொல்லிட்டீங்க. கதையில ஆவது கோவிந்த் மாமா பிழைச்சுப் போகட்டுமே. விட்டிடுவோம்.

sulthanonline said...

மீரா ஸ்டீவ் காதல் ஆரம்பம் ஆகிடுச்சு இனி காதல் ஜில்லுன்னு இருக்கும்னு எதிர்பார்க்கலாம். அது அப்பாவி கையில்தான் உள்ளது.


//என்னுள்நீ வந்தகணத்தை
என்னால் அறியமுடியவில்லை
என்னிலிருந்துநீ விலகும்கணத்தை
எண்ணிபார்க்கவும் துணிவில்லை!!! //


கவிதை சூப்பர்.

இராஜராஜேஸ்வரி said...

இதற்கு முன் தன்னிடம் பேசிய மீராவின் குரலில் இல்லாத ஒன்றை அவன் காதல் கொண்ட மனம் அடையாளம் கண்டுகொண்டது ///
நல்ல திருப்பம்.
முத்தாய்ப்பாய் கவிதை வரிகள் அருமை.

சி.பி.செந்தில்குமார் said...

>>"I missed you Steve" என்றாள் மீரா

"I miss you Steve" என்றாள் மீரா

இது தான் சரி

தங்கம்பழனி said...

///"எதுனாலும் சரி..." என்றாள், அப்போது இருந்த மனநிலையில் அவளால் யோசிக்க கூட இயலவில்லை ///

ரொம்ப நல்லா போயிட்டிருக்கு.. அப்பாவி..! வாழ்த்துக்கள்..!!

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அப்ப 12 உயிரெழுத்துக்கள் இருக்கறாதல, 12 பகுதி போடுவீங்க, வேற வழி படிக்க ஆரம்பிச்சுட்டோம், முடிக்கனும்ல.

கதை இப்போது தான் விறுவிறுப்போடு சென்று கொண்டிருக்கிறது.

தொடர்ந்து ஜவ்வென்று ஒரு காதல் பொல் இல்லாமல் ஜீல்லுனு ஒரு காதல் எழுத வேண்டும் என்று படிப்போர் சார்பாக கூறிக் கொள்கிறேன், என்ன இருந்தாலும் சதீஷ் கிட்ட சொல்லம ஸ்டீவ் வீட்டுக்கு போறது நல்லா இல்ல, போற வழியிலேயே சதீஸையும் கூட்டிட்டு மீராவ போக சொல்லுங்க.

Sri Seethalakshmi said...

hi,
today's episode is really good... :)
really to say that telephone conversation brought tears in my eyes.
such a lively & lovely dialog...
as usual poetry good..
waiting for 12th apr...

middleclassmadhavi said...

ஹையா, போன வாரம் படிக்கலன்னாலும் எனக்கு கதை புரிஞ்சுடுச்சு!
கதை தொலைக்காட்சி/சினிமாவில் விஷுவல் எஃபக்டுடன் பார்க்கிற மாதிரி எழுதியிருக்கீங்க! Very good!

ஹுஸைனம்மா said...

//ஜவ்வென்று ஒரு காதல்//
அபுநிஹான்!! கலக்குறீங்க. உண்மையிலேயே இந்த இடுகை (மட்டும்) கொஞ்சம் ஜவ்வாத்தான் இருக்கு.

@மீரா!! அறிவிருக்கா உனக்கு? நீ தமிழ்ப்பொண்ணுதானே? நம்ம தமிழ்க் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம், மண்ணோட பெருமை எல்லாம் மறந்துட்டு இப்படிச் செய்றியே? சே!! உன்னை இத்தோட தலைமுழுகினா என்னன்னு தோணுது!!

இப்படிக்கு,
தமிழ்த் தொலைக்காட்சிகளில் தவறாமல் சீரியல்கள் பார்த்து தமிழ்க் கலாச்சாரம் படிக்கும் பச்சைத் தமிழச்சி

:-))))))))))

காற்றில் எந்தன் கீதம் said...

அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க ...... இப்பதான் நல்லா போகுது கத

Balaji saravana said...

மீராவை ஸ்டீவ் பக்கம் நகர்த்திக் கொண்டு போகும் அப்பாவியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த சதி திட்டத்திற்கு உடந்தையாக உள்ள அனைவரையும் கடுமையாக எச்சரிக்கிறோம்.

இவண்,
களப்பணியாளர்கள்,
சதீஷ் முன்னேற்ற கழகம்.

MANO நாஞ்சில் மனோ said...

நானும் வந்துட்டேன்....

Niroo said...

how can send a paragraph in one sms ? because it's only capable to carry 140 char

Gayathri said...

thks ka ipothan nimadhi..JOK is back
contn

vinu said...

machi satheeesu; unnayum dealil vuttu pochu paarun intha meeeraa pullay ennai maathiriyeay kadaichiyiley neeeyum single aayuttiyea machiiii

vinu said...

Balaji saravana சொன்னது…
மீராவை ஸ்டீவ் பக்கம் நகர்த்திக் கொண்டு போகும் அப்பாவியை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த சதி திட்டத்திற்கு உடந்தையாக உள்ள அனைவரையும் கடுமையாக எச்சரிக்கிறோம்.

இவண்,
Thalayvar [he he he he he he he he ]
களப்பணியாளர்கள்,
சதீஷ் முன்னேற்ற கழகம்

சுசி said...

//என்னுள்நீ வந்தகணத்தை
என்னால் அறியமுடியவில்லை
என்னிலிருந்துநீ விலகும்கணத்தை
எண்ணிபார்க்கவும் துணிவில்லை!!! //

:)))))))))))))))))

Sathish A said...

எங்கப்பா சதீஷ், இந்த மீராவுக்கு பைத்தியம் புடிச்சிருச்சு, சென்னை-10க்கு கொண்டுட்டு வாப்பா...

asiya omar said...

காதல் களைகட்ட ஆரம்பிச்சிடுச்சு போல அப்பாவி.அடுத்த வாரம் ஸ்டீவ் சமையலை நானும் ருசிக்கனும்..சதீஷ் கதி அதோகதி தானா?

Vasagan said...

ஹும்ம் அப்பாவி கதையை சீக்கிரம் முடிக்கிற என்னமா?
சதீஷ்க்கு வைகோ அளவுக்கு அனுதாப அலை ஏறிகிட்டு போகுது.

அமைதிச்சாரல் said...

ஸ்டீவ் இட்லி சமைக்காம இருந்தா சரி :-))))

Charles said...

கொஞ்ச நாளா வேலை அதிகமா இருந்ததால உங்க பதிவு படிச்சும் பின்னூட்டம் போட முடியல. ம்ம்ம்ம்.. ஒரு மாதிரி எதிர் பார்த்ததுதான் நடந்து இருக்கு. :) சதீஷ்-அ நினைச்சா தான் கஷ்டமா இருக்கு. பரவாஇல்ல Steve பொழைச்சு போகட்டும். மறுபடியும் சதீஷ் வந்து next மீட்டிங்ல பிரச்சன பண்ணாம இருந்தா சரி.

Vasagan said...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>"I missed you Steve" என்றாள் மீரா

"I miss you Steve" என்றாள் மீரா

இது தான் சரி

சி.பி.செந்தில்குமார்.
When a person leaving the other person can say I miss you.
If a person see the other person after a break can say I missed you here Meera talk with Steve after a break so here it is correct.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா தங்கமணி!! நான் நினைத்ததை நிறைவேற்றி விட்டீர்களே.
ஸ்டீவ் அண்ட் மீரா சௌண்ட்ஸ் சோ குட்.
ஐ ஹியர் பை ப்ளெஸ் த கப்பிள்:)
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் மா.

priya.r said...

ஒரு சிலர் டியுப் லைட் ன்னு சொல்லுவா
ஆனா இந்த மீரா ஒரு பெட்ரோமாஸ் லைட் போல இருக்கு !
இவளுக்கு புரியரதுக்குள்ளே எங்களுக்கு வேர்த்துடும் போல இருக்கு

ஸ்டீவ் வீட்டுக்கு போய் திரும்பவும் கொளப்பாமே இருந்தா சரி
எனக்கென்னவோ ச்டீவுக்கு சுனாமி மாதிரி ஒரு பொண்ணு தான் பொருத்தம்னு படுது !
கொஞ்சம் கன்சிடர் செய்யேன் அப்பாவி ........... ஹ ஹா

Jaleela Kamal said...

ஜில்லுன்னு காதல் இப்ப ஜாலியான காதலா மாறிவிட்டது, ஊருக்கு போனதால் இடையில் சில தொடர் படிக்கல, பிறகு படிக்கிறேன்,,

கீறிப்புள்ள!! said...

அப்பா.. ஒரு வழியா மீரா ஸெல்ப் அனாலிசிஸ் ஸ்டார்ட் பண்ணிட்டா.. அதுக்கு தலைல இவ்ளோ ஸ்ட்ராங்கா அடி தேவை பட்ருக்கு.. ஹா ஹா ஹா..சதீஷ் ஏதும் சதி செய்யாம இருந்தா சரி.. :)

அப்பாவி தங்கமணி said...

@ மகி - ஹா ஹா ஹா... அதென்னமோ வாஸ்துவம் தான் மகி... முதல் கமெண்ட்ல ஒரு திருப்தி உண்டு... ஸ்டீவை என்ன சமைக்க சொல்றது... உங்க ரசம் ரெசிபி குடுத்துடவா...:))))

@ பிரதீபா - ஏய்... டெண்சன்ஸ் ஆப் தீபா . :))))

@ அன்னு - என்னது நாலே டயலாக்ஆ? எம்புட்டு கஷ்டபட்டு அதுக்கு முன்னாடி குமுறி குமுறி எழுதி இருக்கேன்... அதெல்லாம் கணக்குலேயே இல்லையா அம்மணி... grrrrrrrrrrrrrrrrrrrr....:))

@ Chitra - தேங்க்ஸ்ங்க சித்ரா..

@ Porkodi (பொற்கொடி) - ஹா ஹா... தேங்க்ஸ்...:)

@ எல் கே - உனக்கு ஸ்டீவ் மீரா ஜோடி பிடிக்கலையா? சரி ஜோசியர்கிட்ட எதுனா பரிகாரம் இருக்கானு கேட்டு பாக்கறேன்...:)))

@ siva - எங்க ஒருத்தி சீரியஸ்ஆ கதை சொல்லிட்டு இருக்கேன் where is madhu வா? என்ன கொடும சிவா இது...ஹா ஹா...;))))

@ அனாமிகா - உனக்கு சூட் எல்லாம் வாங்கி தர முடியாது நீயே வாங்கிக்கோ... :)))

@ sulthanonline - இனி ஜில்லுனு தான் இருக்கும்னு நானும் நினைக்கிறேன்... நன்றிங்க...:)

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க ராஜி'ம்மா...:)

@ சி.பி.செந்தில்குமார் - இந்த ஊர்ல இப்படி தாங்க சொல்றாங்க...:))

@ தங்கம்பழனி - ரெம்ப நன்றிங்க

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - என்னது சதீசையும் கூட்டிட்டு போணுமா? கிழிஞ்சது நயாகரா பால்ஸ்..:))

@ Sri Seethalakshmi - தேங்க்ஸ்ங்க சீதா... ரெம்ப சந்தோஷம்ப்பா இப்படி சொன்னதுல...

@ middleclassmadhavi - தேங்க்ஸ்ங்க மாதவி...

@ ஹுஸைனம்மா - ஹா ஹா ஹா... ரெம்ப சீரியல் பாத்து கெட்டு போயிட்டீங்க... மொதல்ல அண்ணாகிட்ட சொல்லி கேபிள் கட் பண்ண சொல்லணும்...:))

@ காற்றில் எந்தன் கீதம் - ரெம்ப நன்றிங்க

@ Balaji saravana - ஆஹா... சதீஷ் முன்னேற்ற கழகமா? ஹா ஹா ஹா... ஜூப்பர்... வாழ்க உங்க களப்பணி... வளர்க உங்க கமெண்ட் பணி...:))

@ MANO நாஞ்சில் மனோ - வாங்க வாங்க...:)

@ Niroo - ஆஹா...இப்படி ஒரு டெக்னிகல் மேட்டர் இருக்கோ... நான் எந்த காலாத்துலயும் SMS பண்ணினதில்ல... இனிமே கவனமா இருக்கேன்... இதை இவ்ளோ உன்னிப்பா கவனிச்சு சொன்னதுக்கு நன்னிஹை...;)

@ Gayathri - நன்னிஹை... (ஆனாலும் இப்படி உருகி உருகி எழுதற கதைக்கு JOK னு சுருக்க பெயர் உனக்கே பாவமா இல்லையா காயத்ரி...).... கொஞ்சம் பாத்து கருணை காட்டுங்க அம்மணி...:))))

@ vinu - என்னாது உங்கள மாதிரி சிங்கள்ஆ? சொல்ல வேண்டியவங்ககிட்ட சொல்லி கொஞ்சம் விசாரிக்க சொல்லணும்.... :))))
(தலைவரா... இருக்கட்டும் இருக்கட்டும்...:)))

@ சுசி - இப்படி ஸ்மைலி போட்டா என்னனு நினைக்கிறது... :)))

@ Sathish A - இதெல்லாம் அநியாயம்... அந்த பொண்ணு இப்பதானே தெளிவா ஒரு முடிவுக்கு வந்திருக்கு... (அது சரி...சென்னை 10 னு கரெக்ட்ஆ சொல்றீங்க...ரெம்ப பழக்கமோ... ஜஸ்ட் கிட்டிங்... நோ வயலன்ஸ்...:)))

@ asiya omar - ஸ்டீவ் சமையலா ஆசியா... உங்க ரெசிபி குடுக்கலாமானு யோசிச்சுட்டு இருக்கேன்... :)))

@ Vasagan - கதை சீக்கரம் முடியுதானு இன்னும் உறுதியா சொல்ல முடியாதுங்க...:))) ஹா ஹா... நோ டென்ஷன்... ஆமாங்க சதீசுக்கு ஓவர் அனுதாபம் தான்... ஸ்டீவ் எவ்ளோ பாவம்னு யாரும் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறாங்க... ஹ்ம்ம்...:))

@ அமைதிச்சாரல் - இட்டாலியன் இட்லி செய்ய போறானாம் ஸ்டீவ்... உங்களையும் வர சொன்னாங்க விருந்துக்கு..:)))

@ Charles - அதே தாங்க என் கவலையும்...ஹ்ம்ம்... பார்ப்போம் சதீஷ் என்ன பண்றான்னு...:))... ரெம்ப நன்றி வேலைக்கு நடுவுலயும் வந்து கமெண்ட் போட்டதுக்கு...

@ வல்லிசிம்ஹன் - தேங்க்ஸ்ங்க வல்லிம்மா... உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...:))

@ priya.r - ஸ்டீவுக்கு சுனாமி மாதிரி பொண்ணா... உங்களுக்கு ஸ்டீவ் என்ன பாவம் பண்ணினான்..:)))

@ Jaleela Kamal - நன்றிங்க ஜலீலா..:)

@ கீறிப்புள்ள!! - ஹா ஹா... வாங்க பிரதர்... எங்க ஆளே காணோம்...:))... சதீஷ் சதி செய்யாம இருக்கணும்னு நானும் புள்ளையாரை வேண்டிக்கறேன்...:))

Anonymous said...

Nice story! Well written..Expecting the next episode....
Expect more stories from you!

Anonymous said...

next episode please

அப்பாவி தங்கமணி said...

@ பெயரில்லா - Thanks a lot... will post the next episode in few minutes now... :)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//சில விசயங்களுக்கு விளக்கங்கள் இருப்பதில்லை. காதல் தோன்றும் கணமும் அதில் ஒன்று. எந்த கணம் யாருக்கு யார் மேல் காதல் தோன்றும் என எந்த இலக்கணமும் யாராலும் வகுக்க முடியாது ////

..... sema lines.. very touchy.

.....naa eppavum pola late effectuuuu.. sorry paa..

.....i really enjoyed this episode.. ;)
thanks a lot

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi (அன்புடன் ஆனந்தி)- Thanks Ananthi...:)

அனாமிகா துவாரகன் said...

என்னோட ஈமெயில் கூட வந்த குறுந்தகவலை விட பெரிசா இருக்காது. அவ்வ்வ்வ்வ்வ்.

அனாமிகா துவாரகன் said...

@ கீறிப்புள்ள,
இந்த அனாலசிசை விடவே மாட்டீங்க போல. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

@ இட்லிமாமி,
//நான் எந்த காலாத்துலயும் SMS பண்ணினதில்ல...//
ஹா ஹா. எங்க பாட்டியே எஸ்.எம்.எஸ் அனுப்புவாங்க. அவங்களுக்கு 70 வயசாச்சு. அப்ப நீங்க அவங்களுக்கு முந்தின ஜெனரேஷனா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். அது தான் கதையில் யூத்னெஸ்சே இல்ல. ரொம்ப பழங்கால கதை பீலிங்க் ஹா ஹா ஹா. சும்மாஆ

அப்பாவி தங்கமணி said...

//அனாமிகா - ஹா ஹா. எங்க பாட்டியே எஸ்.எம்.எஸ் அனுப்புவாங்க. அவங்களுக்கு 70 வயசாச்சு. அப்ப நீங்க அவங்களுக்கு முந்தின ஜெனரேஷனா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். அது தான் கதையில் யூத்னெஸ்சே இல்ல. ரொம்ப பழங்கால கதை பீலிங்க் ஹா ஹா ஹா. சும்மாஆ//

இந்த கேள்விக்கு பதில் டைப் பண்ண இங்க இடம் பத்தல... ஒரு போஸ்ட்டா போடறேன் மெதுவா... (ஒரு போஸ்ட் போட ஐடியா குடுத்த அனாமிகா வாழ்க...ஹா ஹா ஹா... திஸ் இஸ் வாட் வி கால் சொந்த செலவுல சுனாமி....:)))))

கீறிப்புள்ள!! said...

@அப்பாவி
ஆணி ரொம்ப ஜாஸ்தி சிஸ்டர் அதான்.. இன்னும் கொஞ்ச நாளைக்கு இப்படித்தான்.. :(

@அனாமிகா
நான் விட்டாலும் அது என்னை விட மாட்டேங்குது.. :) உங்கள சொல்ல கூடாதுன்னு தான் அந்த வார்த்தைய கோடிட்டு highlight எல்லாம் பண்ணல.. :)

அப்பாவி தங்கமணி said...

@ கீறிப்புள்ள!! - :))

ராஜ ராஜ ராஜன் said...

I expected Meera to pair with Satish...

என்னமோ தோனித்து...
...கொஞ்சம் ஏமாற்றமா இருக்கு.

அப்பாவி தங்கமணி said...

@ ராஜ ராஜ ராஜன் - நன்றிங்க... அப்படி செஞ்சா காயத்ரி நிலைமை?..:)

Post a Comment