Tuesday, April 12, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 15)பகுதி 1   பகுதி 2   பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8   பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12   பகுதி 13   பகுதி 14

"ஏய் என்ன கிண்டலா... உன்னை விட நல்லாவே குக் பண்ணுவேன்" என்றான் ஸ்டீவ் பொய் கோபத்துடன்

"அதை சாபிட்டப்புறம் சொல்றேன்" என மறைமுகமாய் வருவதற்கு சம்மதம் கூறினாள் மீரா

அதை புரிந்து கொண்டவனாய் "ஒகே... ஈவினிங் ஏழு மணிக்கு வந்து உன்னை பிக் அப் பண்ணிக்கறேன் மீரா"

"இல்ல ஸ்டீவ்... உன் அபார்ட்மென்ட்க்கு தானே... நானே வந்துடறேன்"

"இல்ல மீரா... I want to do this... ப்ளீஸ்..." என்றான் வேண்டுகோள் போல

அதற்கு மேல் மறுக்க இயலாமல் "ஒகே...சரி குட்நைட்" என்றாள்

"ஏன் தூக்கம் வருதா?" என பேச்சை வளர்த்தான் அழைப்பை துண்டிக்க மனமின்றி

"இல்ல... வாக்கிங் போலாம்னு இருக்கேன்" என்றாள் கேலியாய்

"எனக்கும் இப்ப அப்படி தான் இருக்கு... தூக்கம் வர்ல" என சிரித்தான்

"போய் தூங்கறேன்... ஒரு வாரம் கழிச்சு நாளைக்கு தான் நான் க்ளாஸ்க்கு போகணும். க்ளாஸ்ல தூங்கினா சகிக்காது"

"ஹா ஹா... ஒகே ஒகே... போய் தூங்கு... அ...அப்புறம்... நாளைக்கு நான் யூனிவர்சிட்டி வர மாட்டேன் மீரா... சம்மர் ப்ராஜெக்ட் விசயமா நான் சொல்லிட்டு இருந்தேன் இல்லையா... அந்த கம்பெனில appointment இருக்கு... ஈவினிங் பாக்கலாம் ஒகேவா"

"ம்... ஒகே... பை..." என்றாள், அழைப்பை துண்டிக்க மனமின்றியே

அதற்குள் "மீரா..." என ஸ்டீவ் தயக்கமாய் நிறுத்த

"சொல்லு ஸ்டீவ்" எனவும்

"அது... ம்... நத்திங்... ஒகே குட்நைட்... ஸ்வீட் ட்ரீம்ஸ்" என அவன் சிரிக்க

"நடு ராத்திரில அரை லூசு தான் இப்படி சிரிக்கும்" என்றாள் மீரா சிரிப்பை அடக்கியவாறே

"அப்ப முழு லூசு அதை கேட்டுட்டு இருக்குமா?" என்றான் அவனும் சளைக்காமல்

ஏதோ நினைவில் "ம்.." என்றவள், பின் புரிந்து "என்னது... ? உன்ன... முழு லூசுகிட்டயெல்லாம் உன்னை யாரு பேச சொன்னாங்களாம்" என்றாள் பொய் கோபத்துடன்

"ம்... முழு லூசு missed you னு சொல்லுச்சே அதான்... அதோட முழு லூசை நானும் ரெம்ப ரெம்ப மிஸ் பண்ணினேன்" என அவன் விளையாட்டாய் ஆரம்பித்து உணர்ச்சி வயமாய் கூறி முடிக்க, சற்று நேரம் இருவரும் பேசவில்லை

"இப்பவே உன்னை பாக்க வரட்டுமா" என கேட்க தோன்றியது ஸ்டீவிர்க்கு

இத்தனை நாள் தான் மட்டுமே அவளை விரும்பிய போது இருந்த பொறுமை இப்போது அவள் மனம் புரிந்ததும் ஸ்டீவிடம் இல்லாமல் போனது போல் உணர்ந்தான்

இன்னும் சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும்... காத்திருப்பதும் ஒரு சுகம் தான் காதலில் என தோன்றியது இருவருக்கும்

மனம்விட்டு பேசாத போதும் ஒரே எண்ண அலைகளில் தான் இருவரும் மூழ்கி இருந்தனர்

இப்படியே எத்தனை நேரம் பேசாமல் செல்பேசியை வைத்து கொண்டு கனவில் மூழ்கி இருப்பது என நினைத்தவளாய் "ஒகே பை... நாளைக்கு மீட் பண்ணலாம்" என்றாள் மீரா

"ஒகே... பை" என்றான் மனமின்றி, ஆனாலும் இருவரும் இணைப்பை துண்டிக்கவில்லை

"போன் கட் பண்ணு ஸ்டீவ்" என மீரா கூற

"நீ மொதல்ல கட் பண்ணு" என்றான்

"முடியாது... நீ மொதல்ல கட் பண்ணு ஸ்டீவ்" என்றாள் பிடிவாதமாய்

"நோ வே... நான் தானே கால் பண்ணினேன்... நீ கட் பண்ணு மீரா" இப்படியே இன்னும் சற்று நேரம் சீண்டலாய் மாற்றி மாற்றி வம்பு செய்துவிட்டு ஒரு வழியாய் அழைப்பு துண்டிக்கப்பட்டது

அதன் பின்னும் ஸ்டீவ் வெகு நேரம் உறங்கவில்லை. சற்று முன் நடந்தது கனவா நினைவா என நம்ப இயலாதவன் போல் மிதந்து கொண்டிருந்தான்

மணி மூன்றென செல்பேசியில் பார்த்தவன் அவளும் உறங்கி இருக்க மாட்டாளோ என நினைத்தான்

"மீண்டும் அழைத்து பார்த்தால் என்ன" என தோன்றிய மறுகணம் "ஒருவேளை தூங்கி இருந்தால்... பாவம்..." என தோன்ற அந்த எண்ணத்தை கைவிட்டான்

ஆனால் மீராவும் அப்போது உறங்கி இருக்கவில்லை

மனம் முழுக்க சந்தோசமும் காதலும் நிறைந்திருக்க தூக்கம் வருவேனா என்றது. திரும்ப திரும்ப அவன் பேசியதெல்லாம் வந்து வந்து போனது மனதில்

"முழு லூசை நானும் ரெம்ப ரெம்ப மிஸ் பண்ணினேன்" என அவன் சொன்னது நினைவு வர "வெவ்வவெவ்வே... ரெம்பத்தான்..." என எதிரே அவன் இருப்பது போல் கற்பனையில் பழிப்பு காட்டினாள்

அப்படியே கனவில் கற்பனையில் சற்று நேரம் ஓட, சோர்வில் நினைவின்றி உறங்கினாள்

****************************

நல்ல தூக்கத்தில் இருந்தவள் செல்பேசி சத்தம் கேட்டு கண் விழித்தாள் மீரா. ஸ்டீவின் எண்ணை கண்டதும் தூக்க கலக்கம் போன இடம் தெரியவில்லை

"ஹலோ.." என்றாள் உற்சாகமாய்

அவளின் உற்சாக குரல் அவனையும் தொற்றிக்கொள்ள "ஹலோ... நான் தான் எழுப்பி விடணும்னு நெனச்சேன்...மொதலே எழுந்தாச்சு போல இருக்கே"

"இல்ல... இப்ப போன் சத்தத்துல தான் எந்திரிச்சேன்"

"ரியல்லி... தூக்க கலக்கம் இல்லாம பிரெஷ்ஆ இருக்கியேனு கேட்டேன்... ஒருவேள தூங்கவே இல்லையோ" என்றான் குறும்பு வழியும் குரலில்

"அதெல்லாம் ஒண்ணுமில்ல... அப்பவே தூங்கிட்டேன்" என்றாள் வேண்டுமென்றே

"அப்படியா... அப்ப நான் தான் பைத்தியம் தான் ட்ரீம் அடிச்சுட்டு தூக்கத்த கெடுத்துட்டு இருந்தேனா?" என்றான் பாவமான குரலில்

"ட்ரீம் எல்லாம் அடிச்சியானு தெரியல... இன்னொரு விஷயம் நீ ஒரு நல்ல டாக்டர்கிட்ட Clarify பண்ணிக்கறது பெட்டர்..." என சத்தமாய் சிரித்தாள்

அவள் இப்படி தன்னோடு தடையின்றி மனம் விட்டு சிரித்தும் பேசியும் பல நாட்கள் ஆனதால் மிகவும் சந்தோசமாய் உணர்ந்தான் ஸ்டீவ். பேசக்கூட தோன்றாமல் மௌனமாய் இருந்தான்

"என்ன ஸ்டீவ்... மௌனம் சம்மதம்னு எங்க ஊர்ல சொல்ற மாதிரியா?" என மீரா மேலும் கேலி செய்தாள்

"ம்... ஆமா... சம்மதம் தான் மீரா... நீ என்ன சொன்னாலும்.." என்றான் இருபொருள் பட, இப்போது மௌனமாவது அவள் முறையானது

"ஏய்... என்ன இப்ப நீ சைலண்ட் ஆய்ட்ட?" என அவன் சீண்ட

"ஒண்ணுமில்ல.." என்றாள்

"ம்... அப்புறம் ஈவினிங் டின்னர்க்கு என் வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வர்றாங்க... அவங்களுக்கு பேவரெட் டிஷ் எதுனா சாய்ஸ் இருக்கானு கேக்கலாம்னு தான் கூப்ட்டேன்" என்றான், அழைத்ததுக்கு ஏதேனும் காரணம் சொல்லணும் என, அதோடு பேச்சை வளர்க்கவும் ஏதுவாய்

"அப்படியா... அந்த கெஸ்ட்க்கு என்ன பிடிக்கும்னு தெரியாமையே கூப்ட்டு இருக்கியா... ஐயோ பாவம் அந்த கெஸ்ட்" என்றாள் கேலியாய்

"பாவம் அந்த கெஸ்ட்டா இல்ல நானான்னு இன்னைக்கி தெரியத்தானே போகுது" என்றான் அவனும் விடாமல் கேலியாய்

"உன்னை நம்பி சாப்பிட வர்றதுக்கே தனி அவார்ட் தரணும்... So, கெஸ்ட் தான் பாவம்" என்றாள்

"என்ன அவார்ட் தரணும்... அதையும் நீயே சொல்லு?"

"ம்... நீ தானே ஹோஸ்ட்... நீ தான் சொல்லணும்"

"அப்படியா... ஒகே... ஒரு வெரி ஸ்பெஷல் கிப்ட் வெச்சு இருக்கேன்... என் கெஸ்ட்க்கு அந்த கிப்ட் என்னை தவிர வேற யாரும் குடுக்க உரிமை இல்லாத கிப்ட்" என வேண்டுமென்றே பேச்சை நிறுத்தினான், அவளை பேச தூண்ட செய்பவன் போல்

ஆனால் மீராவிற்கு பேச்சே வரவில்லை. ஒரு விதமான இன்ப அவஸ்தையில் மௌனமானாள்

பேச்சு மட்டுமல்ல, மௌனம் கூட சில நேரங்களில் ரசிக்க கூடியவை தான் என உணர்ந்தான் ஸ்டீவ்

"மீரா... எப்பவும் உன் பேச்சை நான் ரசிப்பேன்... ஆனா இந்த நிமிஷம், உன் மௌனம் கூட எனக்கு ரெம்ப பிடிச்சுருக்கு" என ஸ்டீவ் கூற மீராவிற்கு கண்ணில் நீர் துளிர்த்தது

இத்தனை காதலை மனதில் பூட்டி வைத்து கொண்டு எப்படி இருக்க முடிந்தது இவனால் என நினைத்தாள்

சற்று நேரம் அந்த மௌனத்தை மௌனமாய் ரசித்து நின்றனர் இருவரும்

"மீரா... லைன்ல இருக்கியா?" என ஸ்டீவ் கேலியாய் கேட்க

"ம்.. " என்றவள், இப்படியே பேசிக்கொண்டிருந்தால் இன்று வீட்டை விட்டு கிளம்பியது போல் தான் என நினைத்தவளாய் "ஒகே ஸ்டீவ்... நான் போய் ரெடி ஆகறேன்... டைம் ஆய்டும்" என்று பேச்சை மாற்றினாள்

அதை புரிந்து கொண்டவனாய், இன்னும் பேச வேண்டும் என்ற ஆவலை மறைத்து கொண்டு "ஒகே மீரா.. ஈவினிங் பாக்கலாம்... ஏழு மணிக்கு ரெடியா இரு... நான் பிக் அப் பண்ணிக்கறேன்" என்றான்

"ம்... ஒகே பை... all the best with the project proposal"

"தேங்க்ஸ் மீரா... have a good day" என்றான்

அழைப்பை நிறுத்திய பின்னும் சற்று நேரம் அந்த பேச்சின் நினைவில் லயித்து இருந்தனர் இருவரும்

"இன்னைக்கி தானா இந்த ப்ராஜெக்ட் மீட்டிங் இருக்கணும்" என சலித்து கொண்டான் ஸ்டீவ், இல்லையெனில் சற்று நேரத்தில் அவளை பார்த்து இருக்கலாம் என நினைத்தான் ஸ்டீவ்

இந்த ப்ராஜெக்ட் மீட்டிங் பல நாட்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது என்பதால் தவிர்க்க இயலாமல் இருந்தான். ஒரு வகையில் அதுவும் நல்லது தான் என தோன்றியது அவனுக்கு

மனம் ஒன்றான பின் முதல் சந்திப்பு எல்லோரின் மத்தியில் கல்லூரியில் என்பதை விட தன் வீட்டில் என்பது இன்னும் இனிமையானதாய் அமையும் என நினைத்தான்

மீராவிற்கு அன்று வகுப்பிற்கு செல்லவே விருப்பம் இருக்கவில்லை. இப்படியே கனவில் மூழ்கி இருக்கவே விருப்பமாய் தோன்றியது

அப்படி பொறுப்பற்று இருக்கவும் ஏனோ மனம் இடம் தரவில்லை. அதோடு செல்லவில்லையெனில் சதீஷ் வேறு காரணம் கேட்பானே என நினைத்த நொடி அவளின் செல் பேசி அழைத்தது

அதில் சதீஷின் எண் வர "Hello... Think of the devil... there it is" என்றாள் சிரித்து கொண்டே

"நான் Devil ஆ... நேரம் தான்... சரி, ரெடி ஆயாச்சானு கேக்கலாம்னு தான் கூப்ட்டேன்... I'm on my way" என்றான் சதீஷ்

"ஐயையோ... கிளம்பியாச்சா நீ... நான் இன்னும் ரெடி ஆகல... நீ க்ளாஸ்க்கு போ சதீஷ்... நான் நேரா வந்துடறேன்" என்றாள்

"ஒண்ணும் வேண்டாம்... ஒழுங்கா சீக்கரம் ரெடி ஆகு. உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்"

"என்ன விஷயம்?" என மீரா ஆர்வமாய் கேட்க

"அதெல்லாம் போன்ல சொல்லமாட்டேன்... நேர்ல தான்... கெட் ரெடி சூன்" என்றான்

"சொல்லு சதீஷ் ப்ளீஸ்"

"சான்சே இல்ல... ஒழுங்கா சீக்கிரம் ரெடி ஆனா கொஞ்ச நேரத்துல சொல்றேன்... இல்லைனா ஈவினிங் தான் சொல்லுவேன்" என சதீஷ் மிரட்டல் போல் கூற

"ஐயோ... சாயங்கலாம் என்றால்...வேறு வினையே வேண்டாம்" என நினைத்த மீரா, அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் "ஒகே... நான் ரெடி ஆகறேன்...பை" என செல்பேசியை அணைத்தாள்

அவள்பேசும் பேச்சழகு
அதுஎன்னோடு பேசுவதெனில்
அவள்பேசா மௌனமும்அழகே
அந்தமௌனம் என்நினைவில்எனில்!!!

அடுத்த பகுதி படிக்க...


(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

66 பேரு சொல்லி இருக்காக:

Sri Seethalakshmi said...

hi,
i think i'm first :-)
nice episode, specially the poem is excellent :-)

எல் கே said...

என்ன அவனும் காதலை சொல்லப் போறானா ? இல்லை ...

எல் கே said...

/நடு ராத்திரில அரை லூசு தான் இப்படி சிரிக்கும்" என்றாள் மீரா சிரிப்பை அடக்கியவாறே

"அப்ப முழு லூசு அதை கேட்டுட்டு இருக்குமா?" என்றான் அவனும் சளைக்காமல் //

ரெண்டு லூசுங்கக் கிட்டயும் நாங்க மாட்டிகிட்டு இருக்கோம்

எல் கே said...

/
nice episode, specially the poem is excellent :-) //

வேற கமென்ட் போடுங்க மேடம். ஒரே கமென்ட் எல்லா போஸ்ட்லயும் படிக்க ஒரே மாதிரி

Gayathri said...

enna ore suspenseaa poguthu story...

அன்னு said...

//"நோ வே... நான் தானே கால் பண்ணினேன்... நீ கட் பண்ணு மீரா" இப்படியே இன்னும் சற்று நேரம் சீண்டலாய் மாற்றி மாற்றி வம்பு செய்துவிட்டு ஒரு வழியாய் அழைப்பு துண்டிக்கப்பட்டது //

இதெல்லாம் நாங்க ஒத்துக்க மாட்டோம். அதன் பின் யார் கட் பண்ணாங்கன்றதை, கட் அண்ட் ரைட்டா சொல்லிடுங்க. இல்லின்னா நீங்க நாளைக்கு போடற கட் ஷூவும், ’அந்த’ ரெட்டு ஷூ மாதிரியே ஒத்துழையாமை இயக்கம் நடத்த மனு போட்டிருவேன்... அ..ஆங்!!

இராஜராஜேஸ்வரி said...

அவள்பேசும் பேச்சழகு
அதுஎன்னோடு பேசுவதெனில்
அவள்பேசா மௌனமும்அழகே
அந்தமௌனம் என்நினைவில்எனில்!!!//
முத்தாய்ப்பாய் கவிதை என்னைக் கவர்ந்தது.
ராம நவமி உங்களுக்காக எனது பதிவில் காத்திருக்கிறதே!
முதலையும் கூட உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்குகிறது கோவையிலிருந்து.

Charles said...

அர லூசும், முழு லூசும் எந்த எபிசொட்ல பேசி/பேசாம டைம் வேஸ்ட் பண்ணிடாங்க.. ஆகா.. மறுபடியும் தொடரும் போட்டாங்களே... இன்னும் ஒரு வாரம் வெயிட் பண்ணனுமா? அப்பாவி மேடம் suspense தாங்கல.. எனக்கு மட்டும் ரகசியமா சொல்லுங்களேன், நம்ம பய புள்ள சதீஷ் என்ன சொல்ல போறான்னு?

Charles said...

இந்த தடவதான் டாப் 10 உள்ள வந்து இருக்கேன்... ஹி ஹி ஹி ...

middleclassmadhavi said...

நல்லாப் போகுது... அடுத்த செவ்வாய் பார்ப்போம்!

Chitra said...

அவள்பேசும் பேச்சழகு
அதுஎன்னோடு பேசுவதெனில்
அவள்பேசா மௌனமும்அழகே
அந்தமௌனம் என்நினைவில்எனில்!!!


.......தொடர் கதையோடு கவிதையும் ஜில்லுனு இருக்குது. :-)

Porkodi (பொற்கொடி) said...

aiyo please! someone tie up this satish's mokkai mouth!!! kadhal keedhal nu edavadhu solli iniku mooda spoil pannan, appavi flight pidichu vandhu kolai vizhum!!

vinu said...

Porkodi (பொற்கொடி) சொன்னது…
aiyo please! someone tie up this satish's mokkai mouth!!! kadhal keedhal nu edavadhu solli iniku mooda spoil pannan, appavi flight pidichu vandhu kolai vizhum!!


echarikirom.........
engal thaanaith thalaivar satheesai patri kurai kooruvathu ithuvey kadaisiyaaga irrukattum.....

neengal ungal thodarkathaiyay paathiyil vittathu kuriththu valakku pathivu seyvendiyathu irrukummmmmmmmmm...

niyaabagam irrukkattumm.........

appadi machi satheesuuu; ippathaan maamu unakku moolay velay seyyuthuuuu.......

ipponee vanthu love sonnaa... meeraa accept pannuraangaloo illayo kandippaa stevekku ok solla maattaanga....

eppudi appaviyoda secrettai odaichchaachuuuuuuu

அனாமிகா துவாரகன் said...

No comments :p

அன்னு said...

//Porkodi (பொற்கொடி) சொன்னது…

aiyo please! someone tie up this satish's mokkai mouth!!! kadhal keedhal nu edavadhu solli iniku mooda spoil pannan, appavi flight pidichu vandhu kolai vizhum!!
12 ஏப்ரல், 2011 12:00 pm //

பொற்கொடி, தங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன், வழிமொழிகிறேன், ஊக்குவிக்கிறேன் (இது அந்த ஊக்கு இல்லப்பா!!), கண்ணு மண்ணு தெரியாம ஆதரிக்கிறேன்.... ஹெ ஹெ ஹே... :)))))))

அன்னு said...
This comment has been removed by the author.
asiya omar said...

..அடுத்த போஸ்டிங்கிற்கு வெயிட்டிங்..எழுதுங்க அப்பாவி எழுதுங்க,very interesting வழக்கம் போல்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//சில விசயங்களுக்கு விளக்கங்கள் இருப்பதில்லை. காதல் தோன்றும் கணமும் அதில் ஒன்று. எந்த கணம் யாருக்கு யார் மேல் காதல் தோன்றும் என எந்த இலக்கணமும் யாராலும் வகுக்க முடியாது ///

...superb pa.. cant wait for the next episode..

(aama.. andha satheesh enna sollap poraan.. avvvv)

paduththureengappaa... ponga....!! :P

Anonymous said...

aiyoo appavi suspense thaanga mudiyalaida samy kethiyila atuththa pathivu pootungka

siva said...

:)

siva said...

appavi flight pidichu vandhu kolai vizhum!!// appavi mela chinna keeral vilunthalum entha pathivu ulagamey pongi elum...mudicha kaiya vachu paarunga..

siva said...

chellama serioalukku appavi thangmani entha post evlovo paravalai :)

siva said...

எந்த கணம் யாருக்கு யார் மேல் காதல் தோன்றும் என எந்த இலக்கணமும் யாராலும் வகுக்க முடியாது/// elkakkanaum ellai gramerum ellai..ellam vaysu kolaru..harmons problems poga poga sari aidum....ushhh appavi mudiala..

siva said...

.......தொடர் கதையோடு கவிதையும் ஜில்லுனு இருக்குது. :-// appadina jillynu oru kavithainu chollunga...:)

siva said...

then pathivu pathi comment podanum...

very beautifull,
colorfull
nicefull post...:)

vanathy said...

mm.. interesting. well written. waiting for the next part!

Vasagan said...

ம் ம் நல்லா போகுது.

\"நடு ராத்திரில அரை லூசு தான் இப்படி சிரிக்கும்" என்றாள் மீரா சிரிப்பை அடக்கியவாறே

"அப்ப முழு லூசு அதை கேட்டுட்டு இருக்குமா?" என்றான்\

காதலிக்கிறவங்க எல்லாம் லூசுனு தெரியுது.


உனக்கு மட்டும் எப்படி கவிதை spontaneousya வருது.
\அழகிய நிலாமகளின்மேல்
அடாவடிகளின் கால்படுமா\ மறக்கவே முடியாது, கொஞ்சம் பொறாமையாக கூட இருக்கு.

sulthanonline said...

கதை ஜில்லுன்னுபோய்கிட்டிருக்கு


சதீஷ வச்சி காமெடி கீமெடி பண்ணலயே...

அனாமிகா துவாரகன் said...

//"இப்பவே உன்னை பாக்க வரட்டுமா" என கேட்க தோன்றியது ஸ்டீவிர்க்கு//
படிக்கற பசங்களுக்கு ராவென்ன பகலென்ன. உடனேயே போய் பாக்காம என்ன இது? வெளி நாட்டுக்குப் படிக்கப் போறதுங்க எல்லாம் ராக்கோழிங்க. பகல க்ளாஸ் கட் பண்ணிட்டு இரவில உக்காந்து படிக்குங்க. இது கூட தெரியல்லயா? அவ்வ்வ்வ்வ்வ்

அனாமிகா துவாரகன் said...

(ஒன் சீரியஸ் நோட்) தெரிலக்கா. மீரா ஓவர் சீன் காட்டினதாலோ அல்லது அவ காரக்டெரை நீங்க எழுதின விதத்திலோ என்னவோ, மீரான்னாலே கடுப்பாக இருக்கு. அந்த ஸ்லம்டோக் மில்லியனர் சீன், ஹாஸ்பிட்டல் சீன், ரொம்ப ஓவர். கதையில் இன்டரெஸ்ட் கொறைஞ்சுடுச்சு. ரொம்பவே. ஸம்திங் மிஸ்சிங்க. =((

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

இரண்டு வாரமா டல்லா போய்க்கிட்டே இருந்தது இப்ப தான் கொஞ்சம் சுவாரஸ்யமா போய்க்கிட்டு இருக்கு, இதுல இந்த சதீஷ் பய எங்க வந்தான்

எவண்டா உன்னை பெத்தான் பெத்தான்
என் கையில கிடைச்சா செத்தான் செத்தான் (வானம் பாட்டு)

மேடம் நீங்க லூசுங்க பேசறதலாம் எழுதுறப்போ ஆச்சர்யமாகவும், அவுங்க மொழியிலேயும் நீங்க பிரசித்து பெற்றிருக்கிறீங்கங்கிறது அதிர்ச்சியமாகவும் இருக்கு

Balaji saravana said...

எல் கே சொன்னது…
/நடு ராத்திரில அரை லூசு தான் இப்படி சிரிக்கும்" என்றாள் மீரா சிரிப்பை அடக்கியவாறே

"அப்ப முழு லூசு அதை கேட்டுட்டு இருக்குமா?" என்றான் அவனும் சளைக்காமல் //

ரெண்டு லூசுங்கக் கிட்டயும் நாங்க மாட்டிகிட்டு இருக்கோம் //

repeatttttttttttttttttttttttttttttttttttuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuu... :)))))))

சுசி said...

வில்லன் வந்துட்டானே.. அவ்வ்வ்வ்..

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

வணக்கம் நண்பரே இன்றுதான் இந்த தொடரை வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன் முதல் வாசிப்பே ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது தங்களின் கடந்த பகுதிகளை இன்னும் வாசிக்கவில்லை . விரைவில் அனைத்தையும் வாசித்துவிடுகிறேன் . தொடருங்கள் மீண்டும் வருவேன்

வல்லிசிம்ஹன் said...

அப்பாஆஆவி தங்கமணி,
சதீஷ் வேணாம். பாவம் ஸ்டீவ்.
படுத்தாதீங்கப்பா.
ஜில் காதலா ஜிவ்'னு ஒரு காதலா தெரியலையே:)
சூப்பர் பதிவு.

Jaleela Kamal said...

ம்ம் ரொம்ப் நல்ல போயிக்கிட்டு இருக்கு,

MANO நாஞ்சில் மனோ said...

கவிதை கவிதை.....

சி.பி.செந்தில்குமார் said...

கதைல வர்ற சதீஷ் எங்க அண்ணன் நல்ல நேரம் சதீஷா/ ஹி ஹி

சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் said...

நம்ம சைடும் வந்து படிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க>>> அன்புடன் காத்திருக்கிறோம்!!

http://sagamanithan.blogspot.com/

அமைதிச்சாரல் said...

முக்கோணக்காதல் கதையாகப்போற மாதிரி இருக்கு
:-))

Sathish A said...

சதிசு, என்ன பண்ண போற, சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாப்பா...

raji said...

எனது பதிவில் தங்களை தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
தொடருமாறு கேட்டுக் கொள்கிறேன்

http://suharaji.blogspot.com/2011/04/blog-post.html

மகி said...

அப்பாடா,2 பேர் காதலை சொல்லிட்டாங்கப்பா! சதீஷ் குட்டைய குழப்பாம இருந்தாச் சரி! குழப்பமாட்டாங்கன்னு நம்பறோம் புவனா! ;)

எல் கே said...

/ஆவி தங்கமணி,///

hahaha super

Sri Seethalakshmi said...

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

தக்குடு said...

நீங்க பன்மொழி வித்தகி!னு கனடாவுக்கே தெரியும் ஆனா லூசுகளோட பாஷை கூட நன்னா தெரியும்னு இன்னிக்கிதான் எங்க எல்லாருக்கும் தெரியும்!..:) இந்த ஸ்டீவ் லூசு மீரா லூசை சீக்கரமா வந்து பிக்கப் பண்ணிண்டு போவான்னு பார்த்தாக்கா நடுல இந்த சதீஷ் லூசு மாதிரி வந்து நிக்கறான்! இதுக்கு ஒரு நல்ல முடிவை இட்லி மாமிதான் சொல்லனும்!

கீறிப்புள்ள!! said...

காதல் ரசம் சொட்டுது.. குட்டி சாத்தான் "அப்போ சாம்பார், மோர் எல்லாம் எப்ப கொட்டும்ன்னு" கேக்குது.. :P
உ, எ, அ-ன்னு உயிர் எழுத்துக்களோட உயிர் எடுக்காமல் விடப்போறதில்லை போல.. ஜஸ்ட் கிட்டிங் சிஸ்டர்.. ;)

priya.r said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
ஆமா இவ்வளோ நல்லா கூட கதை எழுத வருமா !
இப்போ தான் தலைப்புகேற்ற மாதிரி கதையும் இருக்கு !
கொஞ்சம் ,கொஞ்சம் என்ன அதற்கு மேலே RC புக் படிக்கிற மாதிரி இருக்கு !
கலக்கறே புவனி ! ALL THE BESTPAA

priya.r said...

//அவள்பேசும் பேச்சழகு

அதுஎன்னோடு பேசுவதெனில்
அவள்பேசா மௌனமும்அழகே
அந்தமௌனம் என்நினைவில்எனில்!!!//

அப்பாவி போடும் பதிவழகு
அது காதலை பேசுவதெனில்!
அவள் போடும் மொக்கையும் அழகே
அந்த மொக்கை நம்மை சிரிக்க வைப்பது எனில் !!

priya.r said...

ரோஜாக்கள் அழகு ;ஏழு குட்டி காதல் ரோஜாக்களும் அழகு

கவிதை அழகோ அழகு

கலாய்க்கவே மனம் வரலே

இன்னைக்கு ஒரு நாள் பொழைத்து போ புவனி !

priya.r said...

சங்கத்திலே இருந்து மெசேஜ் ! அப்பாவியை கலைக்காம கமெண்ட்ஸ் ஆ என்று !

//அனாமிகா துவாரகன் சொன்னது…

(ஒன் சீரியஸ் நோட்) தெரிலக்கா. மீரா ஓவர் சீன் காட்டினதாலோ அல்லது அவ காரக்டெரை நீங்க எழுதின விதத்திலோ என்னவோ, மீரான்னாலே கடுப்பாக இருக்கு. அந்த ஸ்லம்டோக் மில்லியனர் சீன், ஹாஸ்பிட்டல் சீன், ரொம்ப ஓவர். கதையில் இன்டரெஸ்ட் கொறைஞ்சுடுச்சு. ரொம்பவே. ஸம்திங் மிஸ்சிங்க. =(( //


இதோ பாரு அனாமி!எங்களுக்கும் நீங்க சொல்றது போல தோணுது தான் ! இப்போ எல்லாம் 10th படிக்கிற பொண்ணுங்க கூட யோசிக்கரதிலே மீரா வோட பெட்டர் ன்னு சொல்ல வரையா அனாமி !


(அட்சோ !புவனி வேற கோச்சுகுவாளே...........)


ஏன் அனாமி உன்ற கருத்தை தான் புரியும் படியா சொல்லேன் !


நீ ஆசைப்பட்ட மாதிரி ஸ்டீவ் மீரா காதல் ஓகே ஆகி விட்டதே ;வேறு என்ன தான் வேண்டும் !


குட்டிமா ! போயி படிக்கிற வேலையை பாரும்மா !


நீ பெரிய பெரிய பிசினஸ் படிப்பு படித்து பெரிய பொறியாளர் ஆகி எல்லோருக்கும் வைத்தியம் பார்கோணும் இல்லே......:)

Charles said...

@priya நீங்க அனாமிகாவை பாராட்டுறீங்களா இல்ல திட்டுறீங்களா??? கடைசில உங்க சங்கத்து ஆளை கலாயகுறீங்க? ஹி ஹி ஹி .....
@அனாமிகா நீங்க சொன்னது கரெக்ட். மீரா கொஞ்சம் (over -ஆ) சீன் போடுறமாதிரிதான் தெரியுது. அப்பாவி மேடம் நோட் தி பாயிண்ட்... ஆனா இப்பவாவது மீரா கொஞ்சமா புரிஞ்சிகிட்டாளே. அது வரைக்கும் சந்தோஷம்... ஒரு வேளை அழகா இருக்குற பொண்ணுங்க கொஞ்சம் மந்தமா இருப்பாங்களோ??

அப்பாவி தங்கமணி said...

@ Sri Seethalakshmi - Hi Seetha, yes you're the first... and I'm too glad about it... thanks for your compliment...:))

@ எல் கே - அது எனக்கும் தெரியல... கேட்டு சொல்றேன்... ஒகே...:))) அந்த ரெண்டு லூசு தவிர உங்க பேரவைல இன்னும் ஒண்ணு இருக்கே அதை விட்டுட்டியே கார்த்தி... ஹா ஹா...;))

@ Gayathri - சஸ்பென்சா போனாதான் ஸ்டோரி... சப்புன்னு போனா அது "சாரி" ஆய்டும் காயத்ரி... ஒகே ஒகே... எந்த ஹீரோவோட அடுத்த படத்துல இந்த பன்ஜ் டைலாக் யூஸ் பண்ணலாம்னு நீயே சொல்லிடுப்பா... :)))

@ அன்னு - அதன் பின் யார் கட் பண்ணினாங்கங்கறது படிப்பவர்களின் யூகத்திற்கு விடப்படுகிறது... ஐயையோ என்ன நீங்க வினு சக்ரவர்த்தி ஸ்டைல்ல எல்லாம பேசறீங்க... மீ எஸ்கேப்...:)))

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க ராஜி'ம்மா... விட்டு போனதெல்லாம் நேத்து தான் படிச்சேன்'ம்மா... ரெம்ப நன்றி பகிர்ந்து கொண்டதுக்கு...:))

@ Charles - ஹா ஹா... பயபுள்ள சதீசு..... இருங்க... கேட்டு சொல்றேன்... சதீஷ் பிஸியாம்... அடுத்த செவ்வாய் கிழமை தான் சொல்லுவேன்னு சொல்லிட்டாருங்க... :)).... எஸ் எஸ் டாப் டென்... நன்றி...:)))

@ middleclassmadhavi - தேங்க்ஸ்ங்க மாதவி...:)

@ Chitra - நன்றிங்க சித்ரா..:)

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi (பொற்கொடி) - ஏன் அவ்ளோ கஷ்டம்... பொற்கொடியோட அடுத்த கதைல நீங்க தன் ஹீரோனு சதீஷ்கிட்ட சொல்றேன்... அனேகமா அண்டார்டிக்கா போயிருவான்னு நினைக்கிறேன்... ஜஸ்ட் கிட்டிங்... ஹா ஹா.. அப்புறம் ஒரே நாளுல நாலு எபிசொட் போட்டு அசுர வேகத்துல கதையை முடித்த நம் தானை தலைவி பொற்கொடி வாழ்கனு பேனர் ரெடி ஆய்ட்டு இருக்குப்பா... வந்ததும் சியாட்டில் நதிக்கரையோரம் நட்டுடறேன்...:))

@ vinu - அவங்க தான் கதைய முடிச்சுட்டாங்களே.... போய் பாருங்க... கலக்கலா இருக்கு... :))... என்னா ஒரு வில்லத்தனம்... நான் பொழைக்காட்டியும் போகுது ஸ்டீவ் பொழைக்க கூடாது...ஜூப்பர்...ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங் வினு...:)

@ அனாமிகா - இப்படி நோ கமெண்ட்ஸ் சொன்னா என்ன அர்த்தம்... அப்புறம் மௌனம் சம்மதம்... சூப்பர்னு நானே பில்ட் அப் பண்ணிக்குவேன்.... ஒகேவா...:)))

@ அன்னு - ஹா ஹா ஹா... ஊக்கு வித்துக்கோங்க ... ஊசி பாசி கூட வித்துக்கோங்க... நோ அப்ஜக்சன் யுவர் ஆனர்...:))))

@ asiya omar - தேங்க்ஸ்ங்க ஆசியா...:)

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - ஹா ஹா... நோ டென்ஷன்... நல்லா சாமி கும்பிட்டுகோங்க... சதீசுக்கு சொல்ல வந்ததெல்லாம் மறந்து போகணும்னு... தேங்க்ஸ்'ப்பா...:)

@ பெயரில்லா - மிக்க நன்றி... சீக்கரம் நெக்ஸ்ட் பார்ட் போடறேன்...:)

அப்பாவி தங்கமணி said...

@ siva - அடப்பாவி... வேணும்னே பொற்கொடிய உசுபேத்தி விட்டு நல்லாத்தான் பிளான் பண்றீங்க போல இருக்கு எனக்கு ஆப்பு வெக்க...ஹா ஹா ஹா...:))) செல்லம்மானு ஒரு சீரியல் வருதா? யாரு கண்டா அதெல்லாம், என் கதைக்கே நேரம் போதல...:))).... ஜில்லுனு ஒரு கவிதையும்னு சொல்லிடலாம் இனிமே....ஒகே...;))... தேங்க்ஸ் சிவா...;)

@ vanathy - தேங்க்ஸ்'ங்க வானதி...:)

@ Vasagan -
//காதலிக்கிறவங்க எல்லாம் லூசுனு தெரியுது//
ஒகே ஒகே... புரிஞ்சு போச்சுங்க...ஹா ஹா... ;))

//அழகிய நிலாமகளின்மேல்
அடாவடிகளின் கால்படுமா// மறக்கவே முடியாது//
ஹா ஹா ஹா... தேங்க்ஸ்'ங்க... :))

//கொஞ்சம் பொறாமையாக கூட இருக்கு//
எனக்கு கூடத்தான் உங்கள பாத்தா பொறாமயா இருக்கு... teaching was my dream and enjoyed it just for one year... you're enjoying it for so many years னு பொறாமை தான்'ங்க...:)))

@ sulthanonline - நன்றிங்க... காமடியா? ச்சே ச்சே... அதெல்லாம் இல்லை'ங்க...:))

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா -
//வெளி நாட்டுக்குப் படிக்கப் போறதுங்க எல்லாம் ராக்கோழிங்க//
அனாமிகா, எல்லாரும் உன்னை மாதிரியே ARP னு நெனச்சா எப்படி... ARP னா என்னனு கண்டுபிடி பார்ப்போம்... ("எதுக்கோ" வேலை குடுத்துட்டே இருந்தாத்தான் நல்லதுனு எங்க அம்மா சொல்லுவாங்க...:)))

//பகல க்ளாஸ் கட் பண்ணிட்டு இரவில உக்காந்து படிக்குங்க//
இரவுல படிக்கறது ஒகே... வீதி உலா போக முடியாதில்லையா?...:))

//ஒன் சீரியஸ் நோட்//
Noted down Anamikaa... I read the whole thing today because you said so... but I don't feel exactly the same.. may be a little conservative broughtup girl not much exposed to western culture is what I can think of... And not very good with picking up nuances of opponent comes with Meera... I wanted to depict that "cute girly" innocence in her right from the initial creation of the character... I agree with you on the ஓவர் சீன் part a bit, may be I didn't handle that very well but it was needed to push the story to next level... thanks a lot for your honest opinion...helps me improvise always...:))

அப்பாவி தங்கமணி said...

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - ஹா ஹா ஹா... எல்லாரும் சதீஷை திட்ட ஆரம்பிச்சுட்டீங்க போல இருக்கே...

//மேடம் நீங்க லூசுங்க பேசறதலாம் எழுதுறப்போ ஆச்சர்யமாகவும், அவுங்க மொழியிலேயும் நீங்க பிரசித்து பெற்றிருக்கிறீங்கங்கிறது அதிர்ச்சியமாகவும் இருக்கு//
இதுக்கு நீங்க நேரடியாவே என்னை "லூசு" னு சொல்லி இருக்கலாமோ... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்...:))

@ Balaji saravana - ரிபீட் கமெண்ட் செல்லாது... நாட்டாம கமெண்ட்ஐ மாத்தி போடு(ங்க)...:))

@ சுசி - அவ்வ்வ்வவ்.... என்ன பண்றான்னு பார்ப்போம் சுசி..:)

@ !♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ - மிக்க நன்றிங்க...

@ வல்லிசிம்ஹன் - தேங்க்ஸ்'ங்க வல்லிம்மா... எனக்கும் ஸ்டீவ் பாவம்னு தான் தோணுது...என்ன நடக்குதுன்னு பார்ப்போம்...:)

@ Jaleela Kamal - தேங்க்ஸ்'ங்க ஜலீலா'க்கா...:)

@ MANO நாஞ்சில் மனோ - ஆமா ஆமா...:))

@ சி.பி.செந்தில்குமார் - அடவம்பே.. ஏனுங்க இப்படி கோத்து விடறீங்க... அவரு எந்த திசைல இருக்காருன்னு கூட எனக்கு தெரியாது...:)))

@ சகமனிதன் - இவன் உங்களில் ஒருவன் - நிச்சியம் வருகிறேன்... மிக்க நன்றி...

@ அமைதிச்சாரல் - இப்பதான் முக்கோண கதைன்னு தோணுதா... ஆஹா...நீங்க என்னை விட பெரிய அப்பாவி போல இருக்கே அக்கா...ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்...:)))

அப்பாவி தங்கமணி said...

@ Sathish A - சதீசே சதீஷை முடிவு எடுக்க சொல்றார்... சதீஷ் முடிவு எடுப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்...:)))

@ raji - தேங்க்ஸ்'ங்க ராஜி'க்கா... கண்டிப்பா எழுதறேன்...:))

@ மகி - நானும் நம்பறேன் மகி...பாப்போம்...;))

@ எல் கே - சான்ஸ் கிடைச்சா விடுவியா...அவ்வ்வ்வவ்வ்வ்வ்....:))

@ Sri Seethalakshmi - ரெம்ப தேங்க்ஸ்ங்க சீதா... உங்களுக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்'ப்பா...:))

@ தக்குடு - லூசுகளோட பாஷை நான் எப்படி கத்துகிட்டேன்னு இங்க பப்ளிக்கா சொன்னா....சரி வேண்டாம் விடு தக்குடு... ஹா ஹா ஹா... சதீஷ் லூசு என்ன பண்ணுமோனு எனக்கும் ஒரே டென்ஷன் டென்ஷன்... பார்ப்போம் பார்ப்போம்...ஹா ஹா..:)

@ கீறிப்புள்ள!! - ஹா ஹா... தட் வாஸ் ஹிலாரியஸ்... சாம்பார் மோர் எல்லாம் அடுத்த அடுத்த பார்ட்ல வரும்னு குட்டி சாத்தான்கிட்ட சொல்லிடுங்க... உயிர் எடுக்கத்தானே உயிர் எழுத்துக்கள்...ஹா ஹா...:))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - உங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ப்ரியா அக்கா...:))

//கலக்கறே புவனி ! ALL THE BESTPAA //
ஐயையோ... எலக்சன் நடந்த அதிர்ச்சில எங்க ப்ரியா அக்காவுக்கு ஏதோ ஆய்டுச்சோனு கொஞ்சம் பயமாவே இருக்கே... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங் சிஸ்...தேங்க்ஸ்...:))

//அப்பாவி போடும் பதிவழகு
அது காதலை பேசுவதெனில்!
அவள் போடும் மொக்கையும் அழகே
அந்த மொக்கை நம்மை சிரிக்க வைப்பது எனில்//
கவிதாயினி ப்ரியா வாழ்க... அவங்கள கவிதை எழுத வெச்ச அப்பாவியும் கொஞ்சம் வாழ்க...:))

//கலாய்க்கவே மனம் வரலே//
எனக்கு ஏன் பயமா இருக்குனு தெரியல... பின்னாடி என்ன பூகம்பம்னு வரும்னு தோணுதோ...:)))

//சங்கத்திலே இருந்து மெசேஜ் ! அப்பாவியை கலைக்காம கமெண்ட்ஸ் ஆ என்று//
அதானே... உங்க சங்கத்துக்குனு professional ethics னு ஒண்ணு இருக்கில்ல... என்ன ஆகறது...ஹா ஹா...:))

//அட்சோ !புவனி வேற கோச்சுகுவாளே//
எத்தனையோ பாத்துட்டேன்.. இத பாக்க மாட்டனா ப்ரியா அக்கா... you carry on...:))

//ஏன் அனாமி உன்ற கருத்தை தான் புரியும் படியா சொல்லேன்//
யாரை பாத்து என்ன கேள்வி...:)))

//நீ பெரிய பெரிய பிசினஸ் படிப்பு படித்து பெரிய பொறியாளர் ஆகி எல்லோருக்கும் வைத்தியம் பார்கோணும் இல்லே//
ஐயோ... ஓவரா சிரிச்சுட்டேன்... ஆபீஸ்ல எல்லாம் ஒரு மாதிரி பாக்கறாங்க...ஹா ஹா ஹா... :))

அப்பாவி தங்கமணி said...

@ Charles -
//priya நீங்க அனாமிகாவை பாராட்டுறீங்களா இல்ல திட்டுறீங்களா//
என்னங்க நீங்க... எவ்ளோ நாள நானும் இதை தான் யோசிச்சு மண்டைய ஒடைச்சுட்டு இருக்கேன்... நீங்க இப்படி ஒரே வார்த்தைல கேட்டா எப்படி...ஹா ஹா ஹா...

//ஒரு வேளை அழகா இருக்குற பொண்ணுங்க கொஞ்சம் மந்தமா இருப்பாங்களோ//
ஹா ஹா ஹா... இது சூப்பர்...நீங்களே யாராச்சும் ஒரு அழகான பொண்ணுகிட்ட இந்த சந்தேகத்த கேட்டு clarify பண்ணுங்க... (Appavi blog not responsible for damages...:))))

Vasagan said...

\you're enjoying it for so many years...\

True I am enjoying teaching and interaction with youngsters keeps my mind always young and fresh one job no stress at all...

priya.r said...

என்னடா மழை வர்ற மாதிரி இருக்கேன்னு பார்த்தா அப்பாவி , கமெண்ட்ஸ் க்கு உடனே பதில் போட்டு இருக்கா ன்னு தெரிந்தது !

என்னவோ அப்பாவிக்கு ஆகி போச்சு !

நல்லா கதை எழுத ஆரம்பித்து இருக்கா

உடனே பதில் போட ஆரம்பித்து இருக்கா

நடக்கட்டும் நடக்கட்டும் ...................

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - I know... thats why I envy teachers...:))

@ Priya.r - //என்னவோ அப்பாவிக்கு ஆகி போச்சு//
எல்லாம் உங்க சங்கத்துக்கு பயந்துட்டு தான்... வேற என்ன...:))))

priya.r said...

@சார்லஸ்

சங்கத்துக்குள் இதெல்லாம் சகஜம் !

@ புவனி

பத்தவைச்சிட்டயே பரட்டை !

@ அனாமி

குழந்தை ,குட்டிமா ,அறியா வயதில் புரியாமல் சொல்லும் புவனியை மன்னித்து விடு அனாமி :)

Thilse Senthil said...

// எப்பவும் உன் பேச்சை நான் ரசிப்பேன்... ஆனா இந்த நிமிஷம், உன் மௌனம் கூட எனக்கு ரெம்ப பிடிச்சுருக்கு"//

ஒரே பீலிங்ஸ்ஸ்ஸ்ஸ் தான் போங்க.

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - ha ha...;))


@ Thilse Senthil - haa ha... aamanga ore peelings...;)))

Post a Comment