Tuesday, April 19, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 16)
இந்த தொடரின் முன் பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

மீரா தயாராகி முடியவும் அவள் அறைக்கதவு தட்டப்படவும் சரியாய் இருந்தது

கதவு தட்டப்பட்ட விதத்தில் இருந்தே சதீஷ் தான் என புரிந்தவளாய் "வரேன் சதீஷ்" என குரல் கொடுத்து கொண்டே கதவை திறந்தாள்

"நான் தான்னு எப்படி தெரியும்? கேமரா எதுனா பிக்ஸ் பண்ணி இருக்கியோ" என அவன் கேலி செய்ய

"ஆமா... இதுக்கு CBI வரணுமாக்கும்... உன்னை தவிர வேற யாரு இப்படி தலை வெடிக்கற மாதிரி கதவு தட்டுவாங்க... பொறுமையே இல்ல சதீஷ் உனக்கு" என மீரா சலித்து கொள்ள

"என்னது எனக்கு பொறுமை இல்லையா? நேரம் தான்... நீ ரெம்ப பொறுமைசாலினு நெனப்போ"

"நிச்சியமா உன்னைவிட எனக்கு பொறுமை அதிகம் தான்" என்றாள்

"அப்படியா மேடம்... அதையும் பார்ப்போம்" என புன்னகைத்தான், எதையோ நினைத்து கொண்டவனாய்

"டைம் ஆச்சு சதீஷ்... போலாமா..."

"ம்... ஒகே..." என்றான்

குளிர் காலம் முடிந்து இளவேனில் தொடங்கி இருக்க, எலும்பில் ஊடுருவும் குளிர் பற்றிய எண்ணமின்றி நடப்பது சுகம் தான் என நினைத்தாள் மீரா

அதை அவள் வாய்விட்டு கூறவும் "ஊர்ல இருந்தப்ப வெயில் வெயில்னு பொலம்புவ... இப்ப குளிர் புராணமா?" என சதீஷ் சிரித்தான்

"எதுவும் அளவோட இருக்கறவரை தான் சதீஷ் ரசிக்க முடியும்... உனக்கு அதெல்லாம் புரியாது..." என கேலி போல் மீரா சிரிக்க

"எதுவும் அளவோட இருக்கறவரை நல்லதுனு நானும் ஒத்துக்கறேன்... ஆனா உனக்கு கொலஸ்ட்ரால் ஓவரா இருக்கே மீரா... அதுக்கு என்ன செய்யறது" என கிடைத்த வாய்ப்பை விடாமல் அவன் வம்பு செய்ய

"அது சேர்க்கை அப்படி... வேற என்ன... சரி அத விடு... நீ ஏதோ சொல்றேன்னு சொன்னியே காலைல போன்ல... என்ன?" என பேச்சை மாற்றினாள்

"ம்... நீ தான் ரெம்ப பொறுமைசாலி ஆச்சே... வெயிட் பண்ணு மீரா" என புன்னகைத்தான்

"ஏய்... டென்ஷன் பண்ணாதே சதீஷ்" என அவள் முறைக்க

"ஒரு விஷயம் சொல்லியே ஆகணும் மீரா... நீ டென்ஷன் ஆனா எனக்கு ஏன் சந்தோசமா இருக்குனு தெரியல... ஹா ஹா" என சிரித்தான்

"சரி சொல்ல வேண்டாம் போ... ரெம்பத்தான் பிகு பண்ற" என சுவாரஷ்யம் இல்லாதவள் போல் முகம் திருப்பினாள்

"இப்படி நீ இண்டரெஸ்ட் இல்லாத மாதிரி நடிச்சா, உடனே நான் என்னனு சொல்லிடுவேன்னு நீ தப்பு கணக்கு போடறே... கரெக்டா? ஹா ஹா... nice try Meera... ஆனா இதெல்லாம் வேற யாரச்சும்கிட்ட வொர்க் அவுட் ஆகும்... உன்னை பத்தி A to Z தெரிஞ்ச என்கிட்ட பலிக்காது மேடம்" என சிரித்தான்

தன் மனதை படித்தது போல் சதீஷ் பேசியதும் "Goto hell with your secret" என கோபமாய் முன்னே வேகமாய் நடந்தாள்

"என்னமோ பொறுமைசாலி அது இதுனு டயலாக் விட்ட... இப்ப என்ன ஆச்சு மீரா?" என சதீஷ் கேலியாய் சிரிக்க

"நான் தான் உன் சீக்ரட் நீயே வெச்சுக்கோனு சொல்லிட்டனே"

"ஒகே... போனா போகட்டும்... க்ளூ தர்றேன்... இது நாம ரெண்டு பேரும் சம்மந்தப்பட்ட ஒரு விஷயம்... இதை உன்கிட்ட தான் நான் மொதல்ல சொல்லி இருக்கணும்... ஆனா உங்க அப்பாகிட்டயும் எங்க அப்பாகிட்டயும் நேத்து சொல்லிட்டேன்... அவங்க ரெண்டு பேரும் ரெம்ப ஹாப்பி... கேட்டா நீயும் ஹாப்பி ஆய்டுவ... எனி கெஸ்?" என அவன் சவாலாய் பார்க்க

மனம் முழுக்க மாலை ஸ்டீவை சந்திக்கும் நினைவு ஆக்ரமித்திருக்க, இப்போது வேறு எது பற்றியும் யோசிக்கும் மனநிலையில் அவள் இருக்கவில்லை "ஒரு கெஸ்ஸும் இல்ல... நீ சொல்றப்ப சொல்லு போ.." என்றாள் சலிப்பாய்

அதற்குள் வகுப்பின் அருகே வந்து விட்டிருந்தனர், ஒரு கணம் சொல்லிவிடலாமா என நினைத்தான் சதீஷ். ஆனால் தான் சொல்ல அவள் மகிழ காண நேரமும் இடமும் இதுவல்ல என தோன்றியது

அதுமட்டுமின்றி, சிறுவயது முதலே அவளை சீண்டி பார்ப்பதில் ஒரு சுகம் உண்டு அவனுக்கு. இப்போதும் அதே சிறுபிள்ளைத்தனம் தலைதூக்க "கொஞ்சம் யோசித்து மண்டை காயட்டும்" என மனதிற்குள் நினைத்தவனாய் எதுவும் சொல்லாமல் மௌனமானான்

அதோடு மீரா அதை மறந்தே போனாள் எனலாம். ஒரு வாரமாய் வகுப்பை தவறவிட்டதை ஈடு செய்ய மதுவிடம் அது பற்றி கேட்பதிலும் அன்றைய நிகழ்வுகளிலும் நேரம் வேகமாய் போன போதும், ஏனோ நேரமே நகராதது போல் உணர்ந்தாள் மீரா

மனதின் வேகத்தை ஈடு செய்ய எந்த கடிகாரத்தாலும் முடியாது தானே. அவள் இந்த எண்ண ஓட்டத்தில் மூழ்கி இருக்க, தான் கூறியது பற்றி தான் யோசித்து கொண்டிருக்கிறாள் என நினைத்து மனதிற்குள் சிரித்தான் சதீஷ்

அந்த விசயத்தை தான் கூறும் போது அவள் மகிழ்வதை காண ஆவலாய் இருந்தான் சதீஷ், ஆனால் அது வேறு விதமாய் இருக்க போவதை பாவம் அவன் அறிந்திருக்கவில்லை

அது தன்னை எத்தனை பாதிக்க போகிறது என்பதையும் அவன் உணரவில்லை

மதிய இடைவேளையின் போது மூவரும் food court ல் அமர்ந்திருந்தனர்

"எங்க அம்மா என் கசின் கல்யாணத்துக்கு இந்தியா போறாங்கனு சொல்லிட்டு இருந்தேன்ல" என மது தொடங்க

"ம்..." என்றாள் மீரா சுவாரஷ்யம் இன்றி, அவள் மனம் தான் வேற எங்கோ இருந்ததே

"Actualஆ லக்கேஜ் ஒண்ணும் பெருசா இல்ல... உங்களுக்கு எதுனா குடுத்து அனுப்ப வேண்டி இருக்குமானு அம்மா கேட்டாங்க" என்றாள் மீரா, சதீஷ் இருவரிடமும்

"ரியலி? உங்கம்மா எப்போ இந்தியா போறாங்க?" என ஆர்வமாய் கேட்டான் சதீஷ்

"ரெண்டு நாளுல சதீஷ்... ஏன் எதுனா அனுப்பனுமா?"

"ஆமா மது... எங்க அம்மாவுக்கு நெக்ஸ்ட் வீக் பர்த்டே வருது... எப்பவும் எதாச்சும் சர்ப்ரைஸ் பண்ணுவேன்... இந்த வாட்டி ஆன்லைன்ல தான் எதாச்சும் அனுப்பலாம்னு நெனச்சுட்டு இருந்தேன்... உங்க அம்மா போறதால இங்கயே எதாச்சும் வாங்கி குடுத்து அனுப்பிடலாம்னு தோணுது"

"ஸூர்.... ஒண்ணும் பிரச்சனை இல்ல... புதன்கிழமை குடுத்தா கூட போதும்... அம்மா நைட் பிளைட்ல தான் கிளம்பறாங்க"

"ஒகே மது... நான் இன்னைக்கி ஈவினிங் போய் வாங்கிடறேன்..." என்றவன் "ஏய் மீரா... நீயும் வாயேன்... எங்க அம்மாவுக்கு உன் செலக்சன் எப்பவும் பிடிக்கும்" என்றான் ஆர்வமாய்

மீராவிற்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. இன்று ஸ்டீவை காண செல்வது பற்றி இருந்த கனவெல்லாம் கலைவது போன்ற நினைவில் அவள் முகம் சோர்வுற்றது

மீரா எதுவும் பதில் சொல்லாமல் இருக்கவும் "என்ன மீரா? எந்த சாம்ராஜ்யத்தை பிடிக்க பலத்த யோசனை?" என கேலியாய் சிரித்தான் சதீஷ்

"அது... அது வந்து...நான்...எனக்கு கொஞ்சம் டயர்ட்ஆ...." என மீரா எப்படி சமாளிப்பதென புரியாமல் தடுமாற

"ஒரு வாரம் வீட்டுல ஜாலியா இருந்ததால, இன்னைக்கி புல் டே க்ளாஸ்ல உக்காந்து டயர்ட் ஆன மாதிரி தான் இருக்கே மீரா" என்றாள் மது

மது அப்படி கூற கேட்டதும், மீராவை பார்த்த சதீஷ்'க்கு கூட அதே தோன்றியது, அவள் சோர்வுக்கான நிஜமான காரணம் வேறு என்ற போதும் கூட

"ஆமா மீரா... கொஞ்சம் டல்லா தான் இருக்க... நீ ரெஸ்ட் எடு... நானே போய்க்கறேன்... டிவி பாத்துட்டு உக்காராம நேரத்தோட தூங்கு சரியா" என சதீஷ் அக்கறையுடன் கூறவும், குற்ற உணர்வில் தவித்தாள் மீரா

தன் மீது உண்மையான அக்கறை உள்ளவனை ஏமாற்றுகிறோமே என மனம் உறுத்தியது. பேசாமல் தன் மனதில் ஸ்டீவ் குறித்து ஏற்பட்ட மாற்றத்தை கூறி விடலாமா என்று கூட நினைத்தாள்

ஆனால் ஸ்டீவிடமே இன்னும் மனம் விட்டு பேசாத போது அப்படி செய்வது சரி அல்ல என்று தோன்றியது. அது மட்டுமின்றி சதீசுக்கும் ஸ்டீவுக்கும் இடையில் சரியான புரிதலும் இல்லாத நிலையில் இந்த விசயத்தை சற்று பொறுத்து கூறுவது தான் சரி என நினைத்தாள் மீரா

அதன் பின், அவள் மௌனத்தையும் கூட சோர்வு என்றே நினைத்து கொண்டான் சதீஷ்

ஆனால் மாலை வீட்டிற்கு செல்லும் வரையும் கூட அவள் ஏதோ யோசனை போல் மௌனமாய் இருக்க "மீரா... ஆர் யு ஆல் ரைட்? நான் வேணா கொஞ்ச நேரம் உன்கூட வந்து இருக்கட்டுமா... அம்மா கிப்ட் நாளைக்கு போய் வாங்கிக்கறேன்..." என்றான் சதீஷ்

"வேண்டாம் சதீஷ்" என்றாள் மீரா அவசரமாய் "ஐ அம் ஆல் ரைட்... ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும்... நீ கிப்ட் வாங்க போ" என்றாள்

அன்னைக்கு என்ன வாங்குவது என்ற யோசனையில் இருந்த சதீஷ், மீராவின் குரலில் இருந்த அவசரத்தையும் பரபரப்பையும் கவனிக்க தவறினான்

"ஒகே மீரா..." என்றவன், மறுபடியும் மனம் ஒப்பாமல் அவள் இருப்பிடம் வரை உடன் வந்து விட்டே கிளம்பினான்

மீராவிற்கு அவனது அந்த செய்கை மேலும் குற்ற உணர்வை கூட்டியது

அதே யோசனையில் சற்று நேரம் அமர்ந்து இருந்தவள் செல்பேசி அழைப்பு சத்தத்தில் கலைந்தாள். ஸ்டீவின் எண்ணை கண்டதும், சற்று முன் இருந்த மனநிலை அப்படியே மாற, உற்சாகமாய் "ஹாய்..." என்றாள்

அவள் குரலில் இருந்த குதூகலம் மனதை மயக்க "ஹேய்... இப்பதான் வந்தயா?" என்றான் அவனும் அதே உற்சாகத்துடன்

"ம்.. கொஞ்ச நேரமாச்சு" என்றாள்,வேறு என்ன பேசுவதென தெரியாமல்,

"காதல் - மனதை களவாடி, வார்த்தையை பறித்து கொள்ளும்" என எங்கோ படித்தது மனதில் வந்து போனது அந்த கணம் அவளுக்கு

"என் வீட்டுக்கு வரேனு சொன்ன கெஸ்ட் ரெடி ஆயாச்சானு கேக்கலாம்னு தான் போன் பண்ணினேன்" என்றான் சிரிப்போடு

"ஐயையோ இன்னும் இல்ல" நேரமாகி விட்டதோ என அவசரமாய் மணி பார்த்தவள், சற்று நிம்மதியாகி "உன் வீட்டுக்கு வரேன்னு சொன்ன கெஸ்ட் சொன்ன டைம்க்கு ரெடியா இருப்பாங்களாம்... அந்த சொன்ன டைம்க்கு இன்னும் டூ ஹவர்ஸ் இருக்காம்" என்றாள் அவளும் சிரிப்போடே

"கெஸ்ட்கிட்ட கொஞ்சம் ரெக்கமன்ட் செஞ்சு கொஞ்சம் முன்னாடி ரெடியாக சொல்ல முடியுமா? Two hours seems like a long time now Meera..." என்றவனின் குரலில் இருந்த பொறுமையின்மை அவளையும் தொற்றி கொண்டது

ஆனாலும் அதை காட்டி கொள்ளாமல் "உன் கெஸ்ட் ரெம்ப ஸ்ட்ரிக்ட்... சொன்ன டைம்க்கு ஒரு நிமிஷம் முன்னாடி கூட வர மாட்டாங்களாம்" என்றாள்

ஒரு கணம் மௌனமாய் இருந்தவன் "Best moment in life is, waiting for someone who will be your everything னு ஒரு quote கேள்விப்பட்டு இருக்கியா மீரா?" என ஸ்டீவ் கேட்க

மனதை படம் பிடித்து கட்டுவது போன்ற அந்த வரிகளில் வார்த்தை வராமல், பின் சமாளித்து "இல்ல..." என்றாள் மீரா, அவள் குரலே அவளுக்கு கேட்காதது போல் ஒலித்தது

"There is no way you heard it anywhere, because I made it up just now" என ஸ்டீவ் சிரிக்க

"ஓ... ஒரு கவிஞர் உருவாகிறாரா?" என கேலி செய்தாள் மீரா, ஆனால் தன் குரலில் இருந்த பெருமிதத்தை அவள் மறைக்க முயற்சிக்கவில்லை
 
"But, your quote is mindblowing... so keep enjoying the best moment" என மீரா கேலியும் பெருமிதமும் கலந்து கூற

"I'm willing to sacrifice any best moment to meet my guest now" என ஸ்டீவ் கூறவும், "எனக்கும் அப்படித்தான்" என கூற தோன்றியது மீராவிற்கு

"இப்படி பேசிட்டே இருந்தா உன் கெஸ்ட் நாளைக்கி தான் வர முடியும்னு சொல்றாங்க" என்றாள் மீரா சிரிப்புடன்

"ஐயையோ... அது மட்டும் வேண்டாம்...  ஒகே... நான் போன் வெக்கறேன்... கெட் ரெடி மீரா... சி யு சூன்" என மனமின்றி அழைப்பை துண்டித்தான்  ஸ்டீவ்

அதே நேரம், மீராவின் அறைக்கதவு வேகமாய் தட்டப்பட்டது...
 
பேச செய்யவும்
பேசாமடந்தை ஆக்கவும்
சிரிக்க செய்யவும்
சிந்தைமறக்க செய்யவும்
உலகம் மொத்தமும்வேண்டாம்
உந்தன் ஒருசொல்போதும்!!!


அடுத்த பகுதி படிக்க...

 
(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

61 பேரு சொல்லி இருக்காக:

Charles said...

wowwwww.. me the firstttttt

அனாமிகா துவாரகன் said...

Finally you got it Charles.

Charles said...

அடாடா மறுபடியும் தொடரும் போட்டுடாங்களே... என் இனிய தமிழ் மக்களே இதை யாரும் தட்டி கேட்க மாடீங்கள? அப்பாவி மேடம் போன வாரம் நீங்க சொன்ன மாதிரி சதீஷ் இந்த வாரம் எதையும் சொல்லல... பாத்துகோங்க.... அங்க அந்த Steve பய என்னமா சீனு பண்ணிட்டு இருக்கான்... இந்த லூசு சதீஷ் இது தெரியாம காமெடி பண்ணிட்டு இருக்கான்..

// நீ டென்ஷன் ஆனா எனக்கு ஏன் சந்தோசமா இருக்குனு தெரியல..//
ஆகா மாப்பு உனக்கு இருக்கு.......

சி.பி.செந்தில்குமார் said...

இன்னைக்கு செவ்வாய்க்கிழமையா? அடடா..

Charles said...

ரொம்ப தேங்க்ஸ் அனாமிகா.. ஆனா வடை நாம ஷேர் பண்ணிக்கலாம்.. சரிங்களா? :-)

நசரேயன் said...

இன்னும் முடியலையா ?

Porkodi (பொற்கொடி) said...

//அடாடா மறுபடியும் தொடரும் போட்டுடாங்களே... என் இனிய தமிழ் மக்களே இதை யாரும் தட்டி கேட்க மாடீங்கள?//

Charles, flight pidichachu.. dont worry.

Porkodi (பொற்கொடி) said...

இந்த சதீஷ் மாதிரி ஆட்களை கண்டாலே எனக்கு ஆகாது.. grrrrrrrrrrr! protective, possessive, kindal ellame overa irukum. annoying! :D

//இன்னும் முடியலையா ? // - கிகிகி.. எங்க வந்து யாரு கிட்ட என்ன கேள்வி இது!!!

priya.r said...

ஜவ்வு ஜவ்வு ஜவ்வரசி அப்பாவி டவுன் டவுன்

priya.r said...

தூங்க செல்வதற்கு முன்பு எதாவது பிளஸ் பாயிண்ட் இருக்குமா
என்று பார்த்தேன் அப்பாவி
இதுவரை உன்ற வீட்டுக்கு ஒரு லட்சம் பிளஸ் பேரு வந்து பார்வை இட்டு சென்று இருக்காங்க
அதாவது ஒரு லட்சம் ஹிட்ஸ் கொடுத்து இருக்கே புவனா
இதுவும் ஒரு சாதனை தான் ;வாழ்த்துக்கள் பா !

asiya omar said...

அடுத்த வாரமாவது ஸ்டீவ் மீரா மீட் பண்ணுவாங்களா?அதற்கும் ஆப்பு காத்திருக்கா?
அப்பாவி,எனக்கு இப்பவே படபடப்பு ஆரம்பிச்சுட்டுது,உங்களுக்கு..

அனாமிகா துவாரகன் said...

Thanks for sharing the Vadai Charles. I am glad you joined our side.

//அங்க அந்த Steve பய என்னமா சீனு பண்ணிட்டு இருக்கான்... இந்த லூசு சதீஷ் இது தெரியாம காமெடி பண்ணிட்டு இருக்கான்..//
//ஆகா மாப்பு உனக்கு இருக்கு....... //
கலக்கறீங்க.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//அடாடா மறுபடியும் தொடரும் போட்டுடாங்களே... என் இனிய தமிழ் மக்களே இதை யாரும் தட்டி கேட்க மாடீங்கள//

ரிப்பீட்டு.

இந்த வாரம் கொஞ்சம் டல்லடிக்குது. ஏன் லேட்டு, பெஞ்ச் மேலே ஏறி நில்லுங்க அப்பாவி

Sri Seethalakshmi said...

வழக்கம் போல கதை அருமை, கவிதை என்னை நெகிழ வைக்கிறது. (அப்படா ஒரு வழியா அதே கம்மெண்ட தமிழ்ல போட்டுட்டேன் :-), LK பெயரை காப்பாற்றினேன் :-) )

டயலாக் conversation நல்ல இருக்குனு சொன்னா இப்படியா பேசவைக்கிறது !? :-)

சங்க மக்களே, இது காதல் கதை அல்ல, ஏதோ suspense கதை மாதிரி இருக்கிறது.

உஷார்!! உஷார்!!

Sri Seethalakshmi said...

மெகா சீரியல், மெகா சீரியல் என்று கேள்வி பட்டு இருக்கிறேன், இப்போது தான் புரிகிறது...

மீளவும் முடியாமல், மூழ்கியும் போகாமல் அப்பப்பா, என்ன ஒரு இனிய அவஸ்தை.

commentting @ இந்தியன் டைம் ௦௦:10

Sri Seethalakshmi said...

சாரி, commenting @ இந்தியன் டைம் ௦1:30 தூக்க கலக்கதுல ஏதோ தப்பா டைம் சொல்லிட்டேன், மன்னிசிருங்க.

இத (டைம்)விஷயம் எதுக்கு போடறேன, கொஞ்சம் உங்க காதல் தொடர்கதைய சீக்கிரம் முடிக்கத்தானுங்கோ ... :-)

(ஒரு வழியா, நான் முழுச்சு இருக்குற விஷயம் publish பண்ணியாச்சு :-)

Chitra said...

Sri Seethalakshmi சொன்னது…

மெகா சீரியல், மெகா சீரியல் என்று கேள்வி பட்டு இருக்கிறேன், இப்போது தான் புரிகிறது...

மீளவும் முடியாமல், மூழ்கியும் போகாமல் அப்பப்பா, என்ன ஒரு இனிய அவஸ்தை.


...........ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

siva said...

:)

Mahi said...

/_\ காதல் கதைதானா புவனா? இருக்காதுன்னு நினைச்சேனே?! :)

எல் கே said...

ஒரு லட்சம் ஹிட்ஸ் . இதுக்கு முழுக்க முழுக்க யார் காரணம் என்று எங்களுக்குத் தெரியும். அனாமிகா ட்ரீட் கேளு விடாத ...

Balaji saravana said...

இந்தப் பகுதியின் க்ளைமேக்சுக்கு முன்னாடிவரைக்கும் - ஆவ்வ்வ்..
@ க்ளைமேக்ஸ் - ஜிவ்வ்வ்.. :))

எல் கே said...

அடப்பாவி சதீஷ் ரொம்ப பாஸ்டா இருக்க. ஆனா யாருகிட்ட முதலில் பேசனும்னு மறந்து போய்டியே

Madhuram said...

Meera pathi ellam therinja Satishukku, main matter theriyama poiduche!

அமைதிச்சாரல் said...

பேச செய்யவும்
பேசாமடந்தை ஆக்கவும்
சிரிக்க செய்யவும்
சிந்தைமறக்க செய்யவும்
உலகம் மொத்தமும்வேண்டாம்
உந்தன் ஒரு பதிவுபோதும்..

:-))))))))))))))))

எல் கே said...

//மெகா சீரியல், மெகா சீரியல் என்று கேள்வி பட்டு இருக்கிறேன், இப்போது தான் புரிகிறது...

மீளவும் முடியாமல், மூழ்கியும் போகாமல் அப்பப்பா, என்ன ஒரு இனிய அவஸ்தை.//

இங்க துன்ப அவச்தைனு வரணும். நீங்க பயப்படாம போடுங்க நாங்க பாதுகாப்பு தருவோம்

எல் கே said...

//இத (டைம்)விஷயம் எதுக்கு போடறேன, கொஞ்சம் உங்க காதல் தொடர்கதைய சீக்கிரம் முடிக்கத்தானுங்கோ ... :-)//

இதைதானுங்க நானும் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்கேனுங்க. இந்த அம்மணி கேட்கவே மாட்டேன்கராங்க

எல் கே said...

//காதல் கதைதானா புவனா? இருக்காதுன்னு நினைச்சேனே?! :)//

ஹிஹி தப்பு கணக்கு போட்டுடீன்களே

இராஜராஜேஸ்வரி said...

"அது சேர்க்கை அப்படி... வேற என்ன.//
சகவாச மகிமையா?/ சகவாச தோஷமா?? தெரியல்லியே...

அன்னு said...

பேச செய்யவும்
பேசாமடந்தை ஆக்கவும்
சிரிக்க செய்யவும்
சிந்தைமறக்க செய்யவும்
உலகம் மொத்தமும்வேண்டாம்
உந்தன் ஒரு kathai pothum.....

pinna ennanga... enge thodarum podanum, podakkoodathunnu theriyaathu. aval kilambi porathukkullaara vaasalla nikka vechutteengala tsunamiyai????

GRRRRRRRRRRRRRRrrrrrrrrrrrrrrrrrrrr....

நிஜாம் என் பெயர் said...

பேரு தான் அப்பாவி பண்றது எல்லாம் வில்லத்தனம்

sulthanonline said...

டி.வில தான் மெகா சீரியல் ஓட்டுரானுங்கன்னா? இந்த அப்பாவி நெட்ல மெகாசீரியல் ஓட்டுறீங்க. இத யாரும் தட்டி கேட்க மாட்டீங்களா?

சுசி said...

ஸ்டீவை மட்டும் சந்திக்க விடலை.. சதீஷை கொன்னே போடுவேன் :((

கீறிப்புள்ள!! said...

அதானே பார்த்தேன்.. சதீஷ்-ன்னு பேர்லயே 'சதி'ய வெச்சுட்டு, சதி பண்ணாம அந்த கேரக்டர விட்ருவீங்களா..

குட்டி சாத்தான் to சதீஷ்:
குழந்தாய்.. அம்மை அப்பனை சுற்றி வந்தால் ஞானப்பழம் கிடைக்கலாம், ஆனால் மீராள் கிடைக்க மாட்டாள்.. ;)

/உலகம் மொத்தமும்வேண்டாம்
உந்தன் ஒரு பதிவுபோதும்..//
ROFL :))

@Mahi
/_\ காதல் கதைனா ஸ்டீவ் --> மீரா --> சதீஷ் --> ஸ்டீவ்?? ஹா ஹா ஹா.. நோ வே.. :P

priya.r said...

அப்பாவி ! கவிதை அருமை., படங்கள் அழகு..

priya.r said...

அப்பாவி ! கதையில் சதீஷ் பகுதி செயற்கையாக இருக்கு
இன்னொருவரை காதலிக்கும் பெண் போல மீராவின் எண்ணமும் செயலும் இல்லையே !

priya.r said...

நிருபர் : மேடம் ! நீங்க விரும்பி படிப்பது என்ன
அப்பாவி : தினதந்தியில வரும் சிந்து பாத்
நிருபர் : நீங்க விரும்பி பார்ப்பது :
அப்பாவி : TR படங்கள்
சின்ன திரையில் வரும் எல்லா மெகா சீரியல்கள்
நிருபர் : நீங்க எழுதிய முதல் சீரியல்
அப்பாவி : சித்தி பார்த்துட்டு கத்தி ன்னு ஒன்னு எழுதினேன்
அதை எங்க அக்கா கிட்டே ஆறு வருஷம் முன்னே படிக்க கொடுத்தேன் !
அதை படித்த என்ற அக்கா ஆறு மாதத்திற்கு முன்னே தான் திரும்ப கிடைத்தாங்க
கதை என்ன ஆட்சுன்னு தெரியலே ;இருந்தாலும் இதை வைத்து "அக்காவும் ஆறு வருசமும் "என்று ஒரு
தொடர் போடலாம்னு ஒரே திங்கிங் .............
நிருபர் : உங்க நிறைவேறாத ஆசை
அப்பாவி : எங்க பாட்டி ஒரு கதை எழுதணும் தொடர்ச்சியை எங்க அம்மா எழுதணும்
அதன் தொடர்ச்சியை நான் எழுதணும் ....................
நிருபர் : உங்க எதிர்கால திட்டம்
அப்பாவி : ஜில்லுன்னு ஒரு கதை டெய்லி எழுதணும் ;ஒரு ஆறு வருசத்துக்காவது தொடர்ந்து எழுதணும்
அதுக்கு எல்லோரும் என்னை பாராட்டி ஒவ்வொருவரும் பத்து இருவது கமெண்ட்ஸ் போடணும் !

நிருபர் : நீங்க அடிக்கடி சொல்லி கொள்வது
அப்பாவி : நான் ஒரு அப்பாவிங்க
நிருபர் : உங்க பாசமலர்களுக்கு ரெண்டு வார்த்தை
அப்பாவி : அனாமி ,பிரியா புருட்டஸ் grrrrrrrrrrrrr
நிருபர் : உங்க மனதில் ஆறாத வடு
அப்பாவி : ஒண்ணா ரெண்டா என்னத்தை சொல்றது !
சமீபத்தில் எனது பதிவை படித்த ஒருவர் என்ன மரியாதை வேண்டி கெடக்கு !
ஒருத்தி அடுத்த பதிவை எப்போ போடுவே என்று கேட்டார் ;அதற்கு நான்
கொஞ்சம் லேட் ஆகும் ;அது வரை இந்த பதிவை இன்னொரு தடவை படித்து கொண்டு தான்
இரேன்க்கா என்று எதார்த்தமா தாங்க சொன்னேன்
அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா
நிருபர் : படிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டாராக்கும்
அப்பாவி : அப்படி சொல்லி இருந்தா எவ்வளவோ பரவா இல்லையே
அவங்க சொன்னது இது தான்
"அதுக்கு பேசாம எனக்கு விஷ ஊசி போட்டு கத்தியாலே குத்தி
துப்பாக்கியாலே சுட்டு போடு"!!


தொடரும் -------------
பின் குறிப்பு : சங்கம் ,பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து எழுதலாம் ......

Vasagan said...

Porkodi (பொற்கொடி) சொன்னது

Charles, flight pidichachu.. dont worry.

சுசி சொன்னது…
ஸ்டீவை மட்டும் சந்திக்க விடலை.. சதீஷை கொன்னே போடுவேன் :((

Atutha pathivil irrunthu Sathishkku punai padai pathukkappu avasiyam

\Sri Seethalakshmi

மீளவும் முடியாமல், மூழ்கியும் போகாமல் அப்பப்பா, என்ன ஒரு இனிய அவஸ்தை.\

Appavi kitta madikitankale இனி(ய) அவஸ்தை than.

\குட்டி சாத்தான் @ கீறிப்புள்ள!!

குழந்தாய்.. அம்மை அப்பனை சுற்றி வந்தால் ஞானப்பழம் கிடைக்கலாம், ஆனால் மீராள் கிடைக்க மாட்டாள்.. ;)\
Classic..

Vasagan said...

\அப்படி சொல்லி இருந்தா எவ்வளவோ பரவா இல்லையே
அவங்க சொன்னது இது தான்
"அதுக்கு பேசாம எனக்கு விஷ ஊசி போட்டு கத்தியாலே குத்தி
துப்பாக்கியாலே சுட்டு போடு"!!\
ROFL....

Priya, no way inni officela irukkum pothu un commentai pdaikka koodathu..

Vasagan said...

\ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)
ஏன் லேட்டு, பெஞ்ச் மேலே ஏறி நில்லுங்க அப்பாவி \

பெஞ்ச் odainchu pokkum ...

Vasagan said...

Ayaio Kathai ? iru padichuttu varaen

Vasagan said...

\Best moment in life is, waiting for someone who will be your everything\
Hmm Subjective...

Normally waiting moments were agony for lovers...

Story going well... keep it up.

ஹேமா said...

இன்னும் தொடருதா...!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

!@@#$#$#$%#%$%^$%^$^$^
ஒண்ணும் இல்ல உங்கள தான் திட்டுரேன்..

கிர்ர்ர்ர்ர்ர்ர்.. என்ன கொடும சரவணா? இன்னிக்காவது... பயபுள்ள சொல்லிரும்-ன்னு நம்பிக்கையோட இருந்தேனே....!!!

அதுக்குள்ள, ஏதோ ஒன்னு... வந்து கதவை வேற தட்டுது... புவனா ஒரு கேள்விகுறி.. போங்கப்பா... :P

வேற என்னத்த பண்றது.. அடுத்த வாரம் வரேன்..
வர்ட்டா..!!

siva said...

@@#$#$#$%#%$%^$%^$^$^
ஒண்ணும் இல்ல உங்கள தான் திட்டுரேன்.. ..repeatu...

கீறிப்புள்ள!! said...

\"அதுக்கு பேசாம எனக்கு விஷ ஊசி போட்டு கத்தியாலே குத்தி
துப்பாக்கியாலே சுட்டு போடு"!\\
Priceless :)) ROFL :))

middleclassmadhavi said...

கவிதையைத் தவிர இப்போ ஆங்கில sayingsம் உருவாக்க ஆரம்பிச்சாச்சா? பேஷ், பேஷ்!

அமைதிச்சாரல் said...

//விஷ ஊசி போட்டு கத்தியாலே குத்தி
துப்பாக்கியாலே சுட்டு போடு"!//

மலையுச்சியில இருக்கற மரக்கிளையில தூக்குல தொங்கவிடறதை விட்டுட்டீங்களே ப்ரியா :-)))))))))

priya.r said...

அக்காஆஆஆ !நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு..........................
அப்பாவி கதையை படிக்கிற ஆயுள் தண்டனை வேணுமா அல்லது தூக்கு தண்டனை வேணுமா ன்னு கேட்கிற மாதிரியும்
இருக்கு !! :) :)

athira said...

//பேச செய்யவும்
பேசாமடந்தை ஆக்கவும்
சிரிக்க செய்யவும்
சிந்தைமறக்க செய்யவும்
உலகம் மொத்தமும்வேண்டாம்
உந்தன் ஒருசொல்போதும்!!!
///

உங்கட கிட்னியிலிருந்து வந்ததா?:) ஆஅ.... சூப்பர்.

அப்பாவி தங்கமணி said...

@Charles - நல்ல முன்னேற்றம்... கடைசி கமெண்ட்ல இருந்து வடை வாங்கற அளவுக்கு வந்துட்டீங்க... உங்க கதைல தான் முன்னேற்றம் இல்லைன்னு சொல்றீங்களோ... ஹி ஹி... வெயிட் வெயிட்... அததுக்கு ஒரு நேரம் வர வேண்டாமோ...ஜஸ்ட் கிட்டிங்.. தேங்க்ஸ்...:))@ அனாமிகா - finally got it இல்ல அனாமிகா, first ஆ வந்ததால காட் இட்... ஹி ஹி...:))@ Charles - இனிய தமிழ் மக்கள் சும்மாவே டெர்ரர் தமிழ் மக்களா மெரட்டிட்டு இருக்காக... நீங்க வேற தட்டி கேளுங்க அடிச்சு கேளுங்கனு எடுத்து குடுப்பது ஞாயமா பிரதர்...ஹா ஹா... லூசு சதீசா? இருங்க இருங்க சதீஷ் ரசிகர் மன்றத்துல இருந்து ஆட்டோ வருதாம் உங்களுக்கு... ஹா ஹா...:)@ சி.பி.செந்தில்குமார் - ஆமாங்க செவ்வாய் கிழமை தான்... அடடானு வருத்தப்படும் படி எந்த அசம்பாவிதமும் நடக்கலை சார்...ஹி ஹி...:)@ Charles - வடை ஷேரிங்ஆ? ஷேர் ஆட்டோ மாதிரி ஆய்டுச்சு போல இருக்கே... சூப்பர்...:)@ நசரேயன் - முடியல சார் முடியல... நீங்க ஒரு எபிசொட் ஆச்சும் நல்லா இருக்குனு கமெண்ட் போட்டா தான் முடிக்கறதுன்னு முடிவோட இருக்கேன் நான்... டீல்?....:))@ Porkodi (பொற்கொடி) - flight எல்லாம் வேண்டாம் கொடி... எங்க ஊர்ல கால நிலை சரியா இல்ல... லேண்டிங் எல்லாம் கஷ்டம் யு சி...:)))..... annoying - அது கொஞ்சம் கரெக்ட் தான்... வேற என்ன தான் செய்வான் பாவம் அவனும்... பேசாம உங்க பேரை அதானே யாரு கிட்ட என்ன கேள்வி... ஹி ஹி..:)))@ priya.r - என்னாது ஜவ்வரசியா? ஜவ்வரிசியா இருந்தாலும் பாயாசத்துக்காச்சும் உதவும்... ஹி ஹி... வாழ்த்துக்கு தேங்க்ஸ் ப்ரியா அக்கா... ஆனா உங்க உள்குத்தை நான் நல்லாவே நோட்டிஸ் பண்ணிட்டேன் யு சி... ஹா ஹா... அந்த ஒரு லட்சம் ஹிட்ல பாதி ப்ரியாவுது தானேனு நெறைய பேரு கேக்கறாங்க... அப்படியா? ....:))@ asiya omar - எனக்கும் தான் படபடப்பா இருக்குங்க ஆசியா? அந்த கதவை தட்டுற கடன்காரன் யாருன்னு வேற தெரில.. இருங்க பாத்து சொல்றேன்... அவ்வ்வ்வ்.... :)@ அனாமிகா - அடிப்பாவி... நீயும் உங்க பேரவை ஆளுகளும் சேந்துட்டு இப்படி எல்லாரையும் உங்க பக்கம் இழுக்கறது சரி இல்ல ஆமா சொல்லிட்டேன்... அவ்வவ்வ்வ்வ்..... :)@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - யு டூ பிரதர்... அவ்வவ்வ்வ்வ்.... ஆனா ஒப்புக்கொள்ளத்தான் வேணும்... இந்த வாரம் கொஞ்சம் டல்லு தான்... I didn't get much time to write... sorry .... standing up on bench .......avvvvvvvv.....:)

அப்பாவி தங்கமணி said...

@ Sri Seethalakshmi - சொன்னது நீ(ங்கள்) தானா... சொல் சொல் சொல் சீதா... ஐயகோ... தங்களிடமிருந்து இப்படி ஒரு கமெண்ட் நான் எதிர்ப்பாக்கல சீதா எதிர்பாக்கல... சூப்பர் nice excellent கலக்கல் என்று மட்டுமே இது வரை சொல்லி வந்த நீங்கள் ஒரே வாரத்தில் எல்.கே சொன்ன ஒற்றை வார்த்தையில் இப்படி சேம் சைடு கோல் போடுவது என்ன ஞாயம்... ஆனாலும், விடியும் வரை விழித்திருந்து விடாமல் கதை படித்த உங்கள் கடமை உணர்ச்சியை மெய் சிலிர்த்து போனேன் என்பதை மட்டும் இங்கு சொல்ல கடமைபட்டுள்ளேன்... இதுக்கு மேல பேசினா நீங்களும் அடிக்க வருவீங்கன்னு தோணுது... மீ எஸ்கேப்...:)))


@ Chitra - யு டூ சித்ரா... அவ்வ்வ்வவ்..... (இன்னிக்கி அவ்வ்வ்வவ் டே போல இருக்கே... அவ்வ்வ்வவ்....:)

@ siva - இல்ல பரவால்ல பிரதர்... சொல்ல வந்தத சொல்லிடுங்க... :))

@ Mahi - மகி, உலக வட்டத்தில் வாழ்க்கை சதுரங்கத்தில் முக்கோண கதைகள் சாத்தியம் தானே... (டீச்சர், எனக்கு கணக்கு அவ்ளோ தெரியாது... சோ மீ எஸ்கேப்...:))

@ எல் கே - ட்ரீட் தானே கார்த்தி... நான் ரெடி நீங்க ரெடியா... எலே பசுபதி, கட்ரா வண்டியா எட்ரா இட்லி தட்ட.... :)))

@ Balaji saravana - ஹி ஹி... தேங்க்ஸ்... :)

@ எல் கே - அதானே... பையனுக்கு விவரம் கம்மிதான் போல... :)))

@ Madhuram - ஹேய் மது, வாங்கப்பா... சௌக்கியமா? ஆமாம் பாருங்க, எல்லாம் தெரிஞ்சு வெச்சுட்டு இப்படி கோட்டை விடறான் போல இருக்கே... :))

@ அமைதிச்சாரல் - ஒரே பதிவு போதுமா? இப்படி எல்லாம் சொன்னா நான் பதிவு போடாம விட்டுடுவோம்னு மட்டும் நீங்க கனவு காண வேண்டாம் ஆமா சொல்லிட்டேன்... ஹா ஹா...:))

@ எல் கே - அடப்பாவி... கொஞ்சம் நல்ல விதமா சொல்லிட்டு இருந்த ஒரே ஜீவனையும் கரப்ட் பண்ணி போட்டியே பாவி... எட்டப்பா... உனக்கு வெக்கறேன் ஆப்பப்பா....:)))

@ இராஜராஜேஸ்வரி - அதானுங்க நானும் கேட்டுட்டு இருக்கேன்.. .:)

@ அன்னு - என்னாது அனாமிகா அங்க எதுக்கு போனா? இல்ல சுனாமினு சொன்னீங்களே அதான் கேட்டேன்... இருங்க விசாரிச்சு சொல்றேன்... ஹி ஹி... :))

அப்பாவி தங்கமணி said...

@ நிஜாம் என் பெயர் - ஐயையோ... நான் என்னங்க செஞ்சேன்... எல்லாம் இந்த சதீஷ் பண்றது தான்... மீ ஆல்வேஸ் அப்பாவி ஒன்லி யு நோ...:)))

@ sulthanonline - தட்டி எல்லாம் கேக்கறாங்க பிரதர்... நான் தான் எத்தன அடிச்சாலும் தாங்கிட்டு maintain பண்ணிட்டு இருக்கேன்...அவ்வவ்வ்வ்வ்....:))

@ சுசி - ஐயையோ... இங்க ஒருத்தங்க கத்தியோட நிக்கறாங்க... மீ எஸ்கேப்... :))

@ கீறிப்புள்ள!! - ஹா ஹா ஹா .... வாட் அ அனாலிசஸ் வாட் அ அனாலிசஸ்...ஜூப்பர்.... மீராள்.... ஹா ஹா ஹா... செம செம...:)))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -

//அப்பாவி ! கவிதை அருமை., படங்கள் அழகு//
சரி சரி சரி... பின்னாடி வெக்க போற அப்புக்கு நான் ரெடி...ஸ்டார்ட் மீசிக்...:))))


//கதையில் சதீஷ் பகுதி செயற்கையாக இருக்கு//
organic உரம் எதுனா கிடைக்குதான்னு கேட்டு பாக்கறேன் ப்ரியா அக்கா...:))


//இன்னொருவரை காதலிக்கும் பெண் போல மீராவின் எண்ணமும் செயலும் இல்லையே//
வேணும்னா மீரா கைல ஸ்டீவ் பேரை பச்சை குத்தி உட்டுடலாமா? வேற என்ன எண்ணையும் பலகாரமும் இல்லைன்னு எனக்கு ஒண்ணும் புரியல ப்ரியா அக்கா... இருங்க மீராவையே கேட்டு சொல்றேன்... ஜஸ்ட் கிட்டிங்... நோ பீலிங்ஸ் ஒகே.... :))))


//அதை படித்த என்ற அக்கா ஆறு மாதத்திற்கு முன்னே தான் திரும்ப கிடைத்தாங்க//
ஏன் கிடைத்தாங்கன்னு ஆறு மாசமா நானும் பீல் பண்ணிட்டு இருக்கேன்... :))


//எங்க பாட்டி ஒரு கதை எழுதணும் தொடர்ச்சியை எங்க அம்மா எழுதணும் அதன் தொடர்ச்சியை நான் எழுதணும்//
ஏழு தலைமுறை கண்ட கதைனு (கண்ட-கதைனு சேத்து படிச்சா கம்பெனி பொறுப்பில்ல) பேரு வாங்கோணும்...:))


//அதுக்கு பேசாம எனக்கு விஷ ஊசி போட்டு கத்தியாலே குத்தி துப்பாக்கியாலே சுட்டு போடு//
விஷ ஊசி, கத்தி, துப்பாக்கி எதுலயும் தீத்துகட்ட முடியாம இனி அடுத்தது என்ன ஆயுதம்னு தேடிட்டு இருக்கேன் மக்களே... :)))

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - classic ROFL எல்லாம் சரி... போஸ்ட் படிச்சீங்களா இல்லையா? எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும் ஆமா... அவ்வவ்வ்வ்வ்......

@ ஹேமா - ஆமாங்க தொடருது...:))

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - திட்டுங்க திட்டுங்க... உங்களுக்கு இல்லாத உரிமையா... (இப்படி தான் சமாளிக்கணும் அப்பாவி... குட் குட்...:))...ஐயையோ, நான் ஆச்சிர்யகுறினு வேணாலும் சொல்லுங்க... கேள்வி குறி எல்லாம் இல்லிங்க... ஹி ஹி... கண்டிப்பா வருவீங்க தானே அடுத்த வாரம்... ஒகே டாடா.. பை பை... சி யு...:))

@ கீறிப்புள்ள!! - அடப்பாவி மக்கா... மொத்த உலகமும் உனக்கு எதிரா இருக்கே அப்பாவி...அவ்வ்வ்வவ்வ்வ்....

@ அமைதிச்சாரல் - உங்க ப்ளாக்க்கு வர்றவங்களுக்கு குடுக்கற தண்டனை எல்லாம் இங்க சொல்றது ஞாயமா அக்கா...:))

@ priya.r - இருக்கும் இருக்கும்... இருங்க வெக்கறேன் ஆப்பு...:))

@ athira - ஆமாங்க சொந்த சரக்கு தான்... தேங்க்ஸ்...:))

divyadharsan said...

Hi Appavi,

I am Divya,recently joined in your blog,
Your stories are awesome,interesting..
I got a babygirl a month back. find no time to post a comment even:)
I wish your blog will reach a big success than this.
very eager to read today's episode!!
Hope Its filled with lots & lots of romance!!
Once I got settled in my home, will join in your aratai group:))

Thankyou for sharing these wonderful stories with us which satisfy my longtime craving in Internet.

Regards,
Divya Dharsan.

அப்பாவி தங்கமணி said...

@ Divyadharsan -
Hi Dhivya,
Thanks a lot for your compliment.... made my day...:))... Glad to hear about your baby girl, congrats, must be a 24/7 right now I guess... take care... sure, get settled and come join us... (hope you're on my side...ha ha...)
Best Regards,
Appavi

priya.r said...

வாங்க திவ்யா! உங்களுக்கு வாழ்த்துக்கள்
அப்பாவியை கலாய்ப்போர் சங்கம் உங்களை வருக வருக என்று வரவேற்பதில் பெருமிதம்
கொள்கிறது :)
உங்களுக்கு அப்பாவியின் அன்பு பரிசாக லப் டாப் ஐ அப்பாவியிடம் இருந்து பெற்று கொள்ளுங்கள் !

அப்பாவி தங்கமணி said...

ப்ரியா'க்கா இது ரெம்ப அநியாயம்... புதுசா வர்றவங்க எல்லாரையும் உங்க பக்கம் இழுக்கறீங்க... உங்க மேல கேஸ் போட போறேன் ஆமா சொல்லிட்டேன்... டெண்சன்ஸ் ஆப் ப்ரியா....:))

அனாமிகா துவாரகன் said...

ஏங்க்கா. நான் உங்க சைட்டு பேசலாம்னு நினைச்சுட்டு இருந்தா, அன்னைக்குன்னு நீங்க போஸ்ட்டு போட மாட்டியா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நான் மனசு மாறுவதற்கு முன் பதிவு போடவும். இது சுனாமியின் ஆணை. ஹி ஹி.

Anonymous said...

where is the next episode???? very late...

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - நோ டென்ஷன் நோ டென்ஷன்... இதோ போட்டுட்டேன்... go and support me....:)))

Post a Comment