Wednesday, April 27, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 17)


இந்த பகுதியின் முன் பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

அதே நேரம் மீராவின் அறைக்கதவு வேகமாய் தட்டப்பட்டது. தட்டிய விதத்தில் ஒரு கணம் சதீஸாய் இருக்குமோ என தோன்றியதும் அதிர்ந்தாள் மீரா

கதவு திறந்ததும் பக்கத்து அறை பெண் ஜெசிக்கா நின்றிருக்க சற்று நிம்மதியுற்றவள் "ஹாய் ஜெசி" என்றாள் மீரா

"Hei Meer... looks like this is for you...mailman left it in my box by mistake I guess" என ஒரு கடித உறையை நீட்டினாள் ஜெசிக்கா. அதற்குள் ஜெசிக்காவின் செல்பேசி ஒலிக்க கையசைவில் "பை" என்றுவிட்டு விலகினாள்

சற்று ஆசுவாசமான மீரா, கிளம்ப தயாரானாள். எப்போதும் எளிமையான உடைகள், மிக குறைந்த அளவு மேக் அப் தான் மீராவின் பழக்கம். இன்றும் அப்படியே இயல்பாய் இருக்கணும் என்று நினைத்தாள்

ஆனாலும், ஏனோ படபடப்பாய் உணர்ந்தாள். எப்போதும் பார்க்கும் ஸ்டீவ் தானே... அவன் என்னை புதியதாய் பார்க்க போவதில்லையே... இயல்பாய் இரு என தனக்கு தானே கூறி கொண்டாள்

ஆறு நாப்பதுக்கே தயாராய் இருந்தாள். அதன் பின் ஒரு ஒரு நிமிடமும் ஒரு மணி நேரம் போல் நகராமல் இருப்பதாய் உணர்ந்தாள் மீரா

ஏழு மணிக்கு ஐந்து நிமிடம் முன்பு அறை கதவு தட்டப்பட, ஆவலும் பரபரப்பும் ஒருங்கே தோன்ற கதவை திறந்தாள் மீரா

கையில் அழகிய சிவப்பு வண்ண tulip பூங்கொத்துடன் நின்றிருந்தான் ஸ்டீவ். தன் மனதில் காதல் வந்த பின் அவனை நேரில் சந்திக்கும் முதல் முறை என்பதால் என்ன பேசுவதென தெரியாமல் தயக்கமாய் நின்றாள் மீரா

அவனோ அவளை விட்டு கண்ணை எடுக்க இயலாமல் பார்த்தான்

அவன் கையில் இருந்த சிவப்பு டூலிப் மலர்களுக்கு போட்டியாய், இளம் சிவப்பு வண்ணத்தில் பூ வேலைப்பாடு செய்யப்பட்ட டாப்ஸ், அதற்கு தோதாய் umbrella டிசைன்'ல் அமைந்த ஒரு லாங் ஸ்கர்ட், காதில் சிறிய நட்சத்திரங்கள், கிளிப்பில் அடக்க முயன்றும் அலையாய் தோளில் விழுந்த கேசம் என அழகு பதுமையாய் நின்ற மீராவை கண்களாலேயே விழுங்கி விடுபவன் போல் பார்த்தான் ஸ்டீவ்

அவன் பார்வையின் வேகத்தை சந்திக்க இயலாமல் அவள் பார்வையை வேறு பக்கம் திருப்ப "Hello My Sunshineனு உன்னை சொன்னா இப்ப ரெம்ப பொருத்தமா இருக்கும், இல்ல மீரா..." என அவன் குறும்பாய் சிரிக்க, அந்த சிரிப்பில் தன்னை தொலைத்தாள் மீரா

அவள் நின்ற தோரணையில் அதை புரிந்து கொண்ட ஸ்டீவ், வெற்றி புன்னகையுடன் "போலாமா மீரா" என பூங்கொத்தை நீட்டியபடி கேட்க, இன்னும் தயக்கம் விலகாமல் "சரி..." என்பது போல் பூங்கொத்தை பெற்று கொண்டாள்

காரில் சென்று அமரும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவளை விட்டு பார்வையை விலக்க இயலாமல், நொடிக்கொருமுறை அவளை பார்த்து கொண்டே வந்தான் ஸ்டீவ்

அதை மீரா உணர்ந்தே இருந்தாள், ஆனால் முன் போல் இயல்பாய் கேலி பேச ஏனோ நா ஒத்துழைக்க மறுத்தது

கார் நகரத்துவங்க "என்ன இன்னிக்கி மௌன விரதமா என் கெஸ்ட்?" என ஸ்டீவ் வம்பு செய்ய

என்ன பேசுவதென தெரியாமல் "ரெம்ப அழகா இருக்கு" என்றாள் கையில் இருந்த பூங்கொத்தை வருடியவாறே

"உன்னை விடவா?" என ஸ்டீவ் கண் சிமிட்ட, நொடியில் சிவந்த கன்னங்களை மறைக்க வெளியே வேடிக்கை பார்ப்பது போல் பாவனை செய்தாள்

"உன்னை விடவானு கேட்டேனே... பதிலே காணோம்" என்றான் விடாமல், மீண்டும் அவளின் முக சிவப்பை ரசிக்கும் ஆவலில்

"அது ரெம்ப பழைய டயலாக்" என வேண்டுமென்றே பேச்சை மாற்றினாள்

"But it made you blush, right? Can't ask for more... " என சிரித்தான். அதை அமோதிப்பவள் போல் மௌனமாய் புன்னகைத்தாள் மீரா

சிறிது நேரத்தில் அவன் வீடு வந்துவிட்டிருக்க, காரை பார்கிங் லாட்'ல் நிறுத்தி விட்டு லிப்ட் நோக்கி நடந்தனர்

லிப்ட்'ல் ஏறியதும், உரிமையுடன் அவள் கையோடு தன் கையை கோர்த்து கொண்டான் ஸ்டீவ். அவள், விலகவும் இல்லை நெருங்கவும் இல்லை, அப்படியே நின்றாள்

பள்ளி / கல்லூரி நாட்களில் உடன் பயின்ற சக மாணவ நண்பர்களுடன் நட்பாய் கை கோர்த்து சிரித்ததுண்டு, கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து இருக்கிறாள், விளையாட்டாய் அடித்தது கூட உண்டு. அந்த தொடுகை எல்லாம் அவளை எந்த விதத்திலும் பாதித்ததில்லை

ஆனால் ஸ்டீவின் அந்த சிறிய தொடுகை, அவளின் மொத்த அணுக்களையும் அசைத்து பார்த்தது. மெல்லிய குளிர் பரவ நடுங்கினாள். தான் பற்றியிருந்த அவள் கைகளில் அந்த நடுக்கத்தை உணர்ந்தான் ஸ்டீவ்

தன் மீது அவள் கொண்ட காதலின் பிரதிபலிப்பாய் அதை அமோதித்து ரசித்தவன் "மீரா..." என்றான் மெல்லிய குரலில்

"ம்... " என அவள், அவன் முகம் பார்க்க, "No need to be nervous... it's just me... you and me..." உனக்கும் எனக்கும் மட்டுமான தருணம் இது என உணர்த்த முயன்றான்

அதை புரிந்து கொண்டவள் போல் முறுவலித்தாள். ஆனால் அவனை நேரே பார்ப்பதை தவிர்த்து லிப்ட்'ல் இருந்த நியூஸ் ஸ்க்ரோல் மானிட்டரை படிப்பது போன்ற பாவனையில் இருந்தாள்

அவளின் தவிப்பையும் தயக்கத்தையும் ரசித்து கொண்டே வந்தான் ஸ்டீவ். வீட்டு கதவை திறக்கும் போது கூட அவள் கையை விட மனமில்லாதவன் போல் பற்றி கொண்டே இருந்தான்

வீட்டுக்குள் நுழைந்ததும், அங்கு இருந்த மாற்றத்தில் அவளின் முகம் எப்படி மாறும் என காணும் ஆவலில், அந்த கணத்தை மனதிற்குள் பதிவு செய்ய முயல்பவன் போல் அவளையே பார்த்தான்

அவன் எதிர்பார்த்தது போலவே, ஆச்சர்யமும் மகிழ்வும் போட்டி போட அவனை பார்த்தாள். அவளின் அந்த மறுதலிப்பு அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது

அந்த சிறிய இடத்தை கூட இத்தனை அழகுற செய்ய முடியுமா என அவளால் நம்ப இயலவில்லை. செயற்கை விளக்குகள் தவிர்க்கப்பட்டு, அறை முழுக்க மெல்லிய சுகந்தம் பரப்பும் மெழுகுவர்த்திகளால் நிறைக்கப்பட்டிருந்தது

பால்கனி கதவின் அருகில் இருவர் மட்டும் அமரும் வண்ணம் ஒரு சிறிய கண்ணாடி உணவு மேஜை. அதன் நடுவில் அழகிய ஒற்றை சிவப்பு ரோஜா ஒரு சிறிய குவளையில் வீற்றிருக்க, அதை சுற்றிலும் இதய வடிவ சிவப்பு வண்ண மெழுகுவர்த்திகள் ஒளி கூட்ட, ஏதோ வேறு உலகத்துள் நுழைந்தது போல் உணர்ந்தாள் மீரா

சமையல் மேடையின் மீது உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருக்க, எதிலும் ஒரு ஒழுங்கு முறையும் நளினமும், அதை எல்லாம் மீறிய ஒரு மெனக்கெடலும் தெரிந்தது

எல்லாம் சரியாய், அவள் விரும்பும் வண்ணம் இருக்கவேண்டுமென பார்த்து பார்த்து செய்யப்பட்டிருந்த நேர்த்தியில் அவன் அன்பும் காதலும் புலப்பட, அவள் மனம் நெகிழ்ந்தது

சோபாவின் முன் இருந்த ஒரு சிறிய காபி டேபிள் ஓரங்கள் எல்லாம் வண்ண மெழுகுவர்த்திகள் ஆக்ரமித்திருக்க, அதன் நடுவில் "For you" என பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்ட ஒரு வாழ்த்து அட்டை தெரிய, ஆவலுடன் பார்த்தாள்

அவளின் ஆவல் தெறித்த முகத்தை ரசித்தவன், அவளை நடத்தி சென்று சோபாவில் அமர செய்து, அந்த பரிசை அவள் கைகளில் வைத்தான்

"என்ன ஸ்டீவ் இது?" என அவள் கேள்வியாய் பார்க்க

"நீயே பாரேன் மீரா... just a little something to celebrate this moment... உனக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்... would you like to take three guesses?" என அவன் சீண்டலாய் சிரிக்க

"அதெல்லாம் வேண்டாம்... " என்றவள், பொறுமை இல்லாதவள் போல் பரிசை சுற்றி இருந்த காகிதத்தை பிரித்தாள்

பரிசை கண்ட நொடி, அவள் கண்களில் நீர் நிறைந்தது. "ஸ்டீவ்... " என அதற்கு மேல் பேச இயலாதவள் போல் மௌனமானாள்

ரசித்து ரசித்து அவள் ஒவ்வொன்றையும் காண, அவளை ரசித்து கொண்டிருந்தவன், அவள் கண்ணில் நீர்படலம் கண்டதும் "ஹேய்..." என பதறி, அவள் தோளில் கை பதித்தான்

அவனை கண்ணோடு கண் பார்த்தவள், ஒரு கணம் பேச இயலாமல் தவித்து, பின் "Thanks Steve... you made me feel special" எனவும், "You're special Meera..." என்றான் ஸ்டீவ், அவள் கண்ணில் இருந்து பார்வையை விலக்காமல்

மீண்டும் அந்த பரிசை பார்த்தாள், ஸ்டீவின் கை வண்ணத்தில் மீரா அழகாய் சிரித்து கொண்டிருந்தாள் அந்த அழகிய வண்ண ஓவியத்தில்

அந்தி சூரியனின் பின்னணியில், பச்சை புல்வெளியில், வாழ்வின் சந்தோஷம் மொத்தமும் தேக்கி வைத்த கண்களுடன், சிரிப்பு விரிய, கன்னக்குழி தெரிய, குறும்பு மிளிர, தாடையில் கை தாங்கி சிரித்து கொண்டிருந்த தன் அழகை தானே ரசித்தாள் மீரா

ஓவியத்தின் கீழ் "I never thought I admire my own work... but I admire this one... I guess its because I admire you, adore you and love you too... to you...from me.." என்று எழுதி கையெழுத்திட்டு இட்டிருந்தான் ஸ்டீவ்

ரசிக்க ரசிக்க போதாதது போல் மாயந்தவள் "எப்படி இப்படி... என்னோட போட்டோவை பிரிண்ட் பண்ணின மாதிரி வரைஞ்சு இருக்கே... I just... எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ஸ்டீவ்... நான்...."

அவள் உணர்ச்சி வேகத்தில் வார்த்தை வராமல் தவித்ததை பார்த்தவன் "You know I'm not a professional artist Meera... but, சில உருவங்கள் மனசுல ஆழமா பதிஞ்சு போய்ட்டா இப்படித்தான் நல்லா வரும்னு நினைக்கிறேன்... கரெக்ட் தானே" என அவன் சிரிக்க

"அப்படி என்ன நான் ஸ்பெஷல்... I don't know if I deserve all this...." love என்ற வார்த்தையை சொல்ல வந்து தயங்கி நின்றவளை புரிந்து கொண்டவனாய் , தோள் பற்றி தன் புறம் திருப்பினான் ஸ்டீவ்

"நீ எவ்ளோ ஸ்பெஷல்னு சொல்லட்டுமா?" என ஒற்றை விரலில் அவள் தாடையை பற்றி அவளை தன் கண்ணில் பார்க்க செய்தவன்

"ஐ லவ் யு மீரா... I love you more than anyone loved anyone... not sure if all lovers think so... but, யாரும் என்னை இப்படி நினைக்க வெச்சதில்ல... love at first sightல எல்லாம் எனக்கு நம்பிக்கை இருந்ததில்ல... ஆனா... from day one, you're driving me crazy Meera... அதுக்கு அப்புறம் ஒரு ஒரு நிமிசமும் உன்கிட்ட இதை சொல்லணும்னு நான் தவிச்சது, all that made my love for you even stronger... I love you sweety" என அதற்கு மேல் விலகி நிற்க இயலாதவன் போல் அவளை அணைத்து இதழ் பதித்தான்

விலகவே மனமில்லாத போதும், அவள் முகம் பார்க்கும் ஆவலில் விலகினான். கண்ணீரும் சிரிப்பும் போட்டி போட உணர்ச்சி கலவையில் நின்றிருந்தவளின் முகத்தை கைகளில் ஏந்தியவன் "Say something...Please..." என்றான்

ஸ்டீவ் இன்று தன் மனதில் பூட்டி வைத்த காதலை சொல்ல போகிறான் என எதிர்பார்த்து வந்தாள் தான் என்ற போதும், அந்த கணம் தன்னை இப்படி வீழ்த்துமென நினைத்திருக்கவில்லை மீரா

காதலை புரிந்த ஒரு நாளிலேயே தனக்கு இத்தனை தவிப்பெனில், இத்தனை நாளாய் அவன் எப்படி தூக்கம் தொலைத்திருப்பான் என தோன்றிய நொடி, அது புரியாமல் பாரா முகமாய் அவனை வருத்தி இருக்கிறேனே என குற்ற உணர்வுடன் அவனை பார்த்தாள்

அவளின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொள்ள முடியாதவனாய் "என்ன மீரா...?" என்றவன் புரியாத பார்வை பார்க்க, அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் அவன் மார்பில் முகம் புதைத்து அழுதாள்

காதலை சொன்னதும் சந்தோசத்தில் மகிழ்வாள், அவளை மேலும் சிரிக்க வைத்து உரிமையுடன் ரசிக்கணும் என எண்ணி இருந்தவன், அவள் அழுததை காண சகியாதவனாய் "ஏய் மீரா... ப்ளிஸ்... மீரா... என்ன மீரா இது? இங்க பாரு..." என அவளை விலக்கி சமாதானம் செய்ய முயன்றான்

"இங்க பாரு... அழுதா உன்னை பாக்கவே சகிக்கல... அப்புறம் வேற பொண்ணை தேட வேண்டியது தான் லவ் பண்ண" என வேண்டுமென்றே அவளை திசை திருப்ப பேசினான்

அவன் எதிர்பார்த்தது போலவே அந்த பேச்சு அவளை உசுப்ப "என்னது?" என கோபமாய் பார்த்தாள்

தன் மீது கொண்ட காதலின் வெளிப்பாடான அந்த கோபத்தை ரசித்தவன், "ம்... இப்ப அழகா இருக்கு... இந்த பொண்ணே ஒகே தான்" என அவன் மேலும் சிரித்து சீண்ட, அவனை அடிக்க நீண்ட அவள் கைகளை சிறைபடுத்தினான்

"ஒகே... சொல்லு..." என்றான்

"என்ன சொல்லணும்..." என்றாள், என்ன கேட்கிறான் என புரிந்து கொண்டே

"என்ன சொல்லணுமோ அதை சொல்லு..."

"எதுவும் இல்லையே..." என அவள் அழகாய் அபிநயித்து சிரிக்க, பல நாள் ஏங்கிய விதமாய், தன் சுட்டுவிரலை அவளின் கன்ன குழியில் பதித்து மகிழ்ந்தான், காதல் தந்த உரிமையில்

அவன் தொடுகை தந்த குறுகுறுப்பில் "ஏய்....என்ன பண்ற... விடு ஸ்டீவ்..." என அவன் கையை விலக்கினாள்

"எவ்ளோ நாள்... எவ்ளோ நாள்... இப்படி tempt ஆகி இருக்கேன் தெரியுமா மீரா..." என அவளை ரசனையாய் பார்த்தவன் "ஐ லவ் யு மீரா" என்றான் மீண்டும்

அவள் மௌனமாய் அவனை பார்த்து கொண்டிருக்க "நீ சொல்ல மாட்டியா மீரா?" என அவன் கேட்க, அவன் குரலில் தெறித்த ஏக்கம் தன்னை மீண்டும் அழச்செய்து விடுமோ என பயந்தவள் போல், அவன் பார்வையை தவிர்க்க அவன் மார்பில் முகம் புதைத்தாள்

அதை புரிந்து கொண்டவனாய், எதுவும் பேசாமல் அணைத்து நின்றான். மெல்ல "ஐ லவ் யு ஸ்டீவ்" என எதிர்பாராத தருணத்தில் அவள் கூற, அவசரமாய் அவளை தன்னிடமிருந்து விலக்கி, அவள் தன்னிடம் காதல் சொல்லும் கணத்தில் அவள் முகம் பார்க்க விழைந்தான்

சொல்லும்வரை தான்தவிப்பென
சொல்லும்வரை நினைத்திருந்தேன்
சொன்னபின்னும் தீரவில்லை
சொல்லசொல்ல ஓயவில்லை
காதலும் தவிப்பும்
கூறியபின்னே கூடுமென
அனுபவத்தில்பின் உணர்ந்தேன்
அதையும்தான் ரசித்திருந்தேன்!!!


அடுத்த பகுதி படிக்க...


(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

61 பேரு சொல்லி இருக்காக:

மகி said...

me the 1st!

மகி said...

படு ரொமான்ட்டிக்கா இருக்கே இந்த வாரம்? ;)

Porkodi (பொற்கொடி) said...

என்னடா இவ்வளவு காத்திருந்து கடைசில‌ கார்ல இவ்வளவு தானா பேசினாங்கன்னு முறைச்சுக்கிட்டு இருந்தேன்.. நல்ல வேளை வீட்டுக்குள்ள போனதும் மாத்தி மாத்தி காதலை ஜொள்ளி சீ சாரி சொல்லி புண்பட்ட மனதை ஆத்திட்டாங்க.. டாய் சதீஷ்.. இனிமே இந்த பக்கம் எங்கனா வந்த.. கொன்டேபுடுவோம்!

Charles said...

heyyy.. 4th... :)

Charles said...

இந்த episode ல மீரா ரொம்ப வெக்கப்பட்டு போயிடுச்சு..எங்க சொல்லாம போய்டுமோன்னு டென்ஷன் ஆகிட்டேன். அப்பாடா ஒரு வழியா மீரா பொண்ணு சொல்லிடுச்சி.. இல்லன்னா அழுதே இருப்பேன்.. :) இந்த வார கவிதை ரொம்ப சூப்பர். (அதுக்குதான் ஒரு நாள் late அகிடுசின்னு நீங்க சொல்லி தப்பிக்க முடியாது... :-P )
@பொற்கொடி மேடம் நீங்களும் நம்ம கட்சி தானா? வாங்க ஆள செட் பண்ணி சதிஷ போட்டுடுவோம்..!!!

Gayathri said...

appada...oru vazhiya aacha..mangalama???

seekram akka enakku porumai pochu..sekram kalyanam panni udunga

நவீன் said...

ஒரு வழியா சொல்லிட்டான்...
அது சரி எங்க பொண்ணுங்க பசங்களை கொஞ்ச நேரமாச்சும்
தவிக்க வச்சுட்டு காதலை சொல்லுறாங்க..... எதிர் பார்க்காத நேரத்துல....

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்... எஸ் எஸ் எஸ்...................!!!

செம செம.. ஸப்பாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்... இந்த ஸ்டீவ் லவ் சொல்றதுக்குள்ள............ எப்படியோ.. பயபுள்ள இப்பவாச்சும் சொல்லுச்சி.. சொதப்பாம..!!

தேங்க்ஸ் புவனா.. ;-))

thenikari said...

indha nootrandin migach chirantha romantic kathasiriyar endra pattathai appavikku vazhangukiraen. neenga kathaya mudikirathukkula naan periya jollu party aagi viduvaen.

Porkodi (பொற்கொடி) said...

//வாங்க ஆள செட் பண்ணி சதிஷ போட்டுடுவோம்..!!! //

வீணா ஒரு உயிரை எடுத்த பாவம் நமக்கு வேணாம், அவன் ரக்ஷாபந்தன் அன்னிக்கு ராக்கியை வாங்கிக்கட்டும் முதல்ல‌.. :P

பிரதீபா said...

காதலில் கரையாத இரும்புகளையும் சில நிமிடங்கள் இளக்கி ஏங்க வைக்கும் இந்தத் தொடர். மீண்டுமொரு காதல் அத்யாயம் வாழ்க்கையில் தொடங்காதோ என்று ஆசைப்பட வைக்கின்றது இந்தப் பகுதி. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

அனாமிகா துவாரகன் said...

வெவெவ்வே புடிக்கல. லூசு மீரா ஸ்டீவுக்கு வேணாம். =P

vanathy said...

super!!! continue...

Balaji saravana said...

வர்ணனை, வார்த்தையாடல், ரொமான்ஸ் எல்லாம் சூப்பர் அப்பாவி.
ஆனா ஸ்டீவ் - மீரா தான் புடிக்கல. ரொமாண்டிக் கப்பிள்ஸ் சூர்யா - ஜோதிகாவ அந்த இடத்தில நினைச்சுக்கிட்டேன். வேற வழி?! :)))

எல் கே said...

அப்பாடா ஒரு வழியா சொல்லிட்டானா ?? அந்த பார்சல் சதீஷ் கொடுத்த பார்சலா ??

இது வரை எழுதிய எபிசொட்களில் இதுவே பெஸ்ட்

இராஜராஜேஸ்வரி said...

செயற்கை விளக்குகள் தவிர்க்கப்பட்டு, அறை முழுக்க மெல்லிய சுகந்தம் பரப்பும் மெழுகுவர்த்திகளால் நிறைக்கப்பட்டிருந்தது//
ஸ்டீவ் கொடுத்த பரிசும் நிறைவு.ஒரு திரை விலகியது போல் இருக்கிறது.

asiya omar said...

இப்படி போட்டு தாக்கிட்டீங்களே! தொடருங்க..

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

>>
சொல்லும்வரை தான்தவிப்பென
சொல்லும்வரை நினைத்திருந்தேன்
சொன்னபின்னும் தீரவில்லை

என்னமோ ஏதோ.... மனம் ..

Never give up said...

manasu niraindhu vittadhu, please eduvum negativa pannidadeenga

நிஜாம் என் பெயர் said...

இன்னும் ரெண்டு வாரம் இழுபிங்கன்னு நினச்சேன்.

இத dream sequence- ஆ வெச்சு, அடுத்த episode - அ முடிச்சுடுங்க

@பொற்கொடி
/அவன் ரக்ஷாபந்தன் அன்னிக்கு ராக்கியை வாங்கிக்கட்டும் முதல்ல‌../

இது அதவிட terror-ஆ இருக்கே

அமைதிச்சாரல் said...

ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு இந்தப்பகுதி :-))

divyadharsan said...

Simply superb Appavi!! Loved it:)
So romantic!! But I want more romance..

Make them to fight again for sometime by inserting sathish in between..
Hope it will give more romantic sessions than this :))
or make them to marry.Please don't hurt steve:(

I was tired of reading girls(alwayz)making love to guys,their feelings,romance in ramani's novel's.

In "GOK" Steve's feelings are dominating,So nice to read about how they feel,think,love.

Waiting for this part from sunday:( Thanx for not disappointing me.


சொன்னபின்னும் தீரவில்லை
சொல்லசொல்ல ஓயவில்லை
காதலும் தவிப்பும்
கூறியபின்னே கூடுமென
அனுபவத்தில்பின் உணர்ந்தேன்!!

Poems are lovely in each episode.
kathayila matum ela kavithayilum kalakureenga appavi.

middleclassmadhavi said...

2012 வேலன்டைன்ஸ் டே-லதான் சொல்லுவாங்கன்னு நினைச்சேன், முந்திக் கொண்டார்கள்! :-))

பத்மநாபன் said...

ரெண்டு முணு ட்ரெயின் விட்டுட்டு இந்த ட்ரெயின பு(ப)டிச்சேன் ..அப்பாடா ஸ்டிவ் சொல்லிவிட்டான்

//சொன்னபின்னும் தீரவில்லை // எதை சொல்ல வந்திங்க புரிஞ்சுருச்சு....

சுசி said...

செம புவனா..

ரசனையோட எழுதி இருக்கீங்க..

தக்குடு said...

காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார் தூரத்துல இருந்த கதை இப்பதான் அப்துல்கலாம் ஜனாதிபதி ஆனார் தூரத்துக்கு வந்துருக்கு, ம்ம்ம்ம், பாப்போம் சதிஷ் வந்து கழுநீர்பானைக்குள்ள கைய விடாம இருக்கனும்!...

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

//என ஒரு கடித உறையை நீட்டினாள் ஜெசிக்கா//

அந்த கடிதம் யாரிடம் இருந்து வந்ததுன்னு சொல்லவே இல்லையே.

சதீஷ் கிட்ட சொல்லுங்க, ஆள தூக்கிடுவோம்னு.

அப்ப அடுத்த பகுது நிறைவு பகுதியா இருக்கும் தானே (இருக்கனும்) என்னா ஒரு லெங்க்தி கதை, முடியல

கீறிப்புள்ள!! said...

ரொம்ப சூப்பர்.. :) ஒரு வழியா சாம்பார் மோர் எல்லாம் கொட்ட ஆரம்பிச்சிருச்சு ;)

சின்ன அம்மிணி said...

//
(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)//

இது எப்போல இருந்து?
ம்ம் அப்ப இந்த தொடர் முடியவே முடியாதுன்னு சொல்லுங்க

இன்பம் துன்பம் said...

ஜில்லோ ஜில்னு ஒரு பதிவு பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் மென் மேலும் எழுத்துலகில் சிறக்க வாழ்த்துக்கள்

priya.r said...

எனக்கு கதை பிடித்து தான் இருக்கு அப்பாவி !
இருந்தாலும் சங்கம், பேரவைக்காக சில வார்த்தைகள் ....................................
ஆறு நாப்பதுக்கே தயாராய் இருந்தாள். அதன் பின் ஒரு ஒரு நிமிடமும் ஒரு மணி நேரம் போல் நகராமல் இருப்பதாய் உணர்ந்தாள் மீரா//
இது வரை இந்த கதையும் இப்படி தான் இருந்தது என்று நாம் உணர்வதை போலவா

ஏழு மணிக்கு ஐந்து நிமிடம் முன்பு அறை கதவு தட்டப்பட, ஆவலும் பரபரப்பும் ஒருங்கே தோன்ற கதவை திறந்தாள் மீரா //
கதவு தட்டினா திறக்க தானே வேண்டும் அப்பாவி

கையில் அழகிய சிவப்பு வண்ண tulip பூங்கொத்துடன் நின்றிருந்தான் ஸ்டீவ். தன் மனதில் காதல் வந்த பின் அவனை நேரில் சந்திக்கும் முதல் முறை என்பதால் என்ன பேசுவதென தெரியாமல் தயக்கமாய் நின்றாள் மீரா //
வெட்கம் வந்து முகம் எல்லாம் சிவக்க வில்லையா !

அவனோ அவளை விட்டு கண்ணை எடுக்க இயலாமல் பார்த்தான் //
எவ்வளவு நேரம் தான் பார்ப்பானாம்.........

அவன் கையில் இருந்த சிவப்பு டூலிப் மலர்களுக்கு போட்டியாய், இளம் சிவப்பு வண்ணத்தில் பூ வேலைப்பாடு செய்யப்பட்ட டாப்ஸ், அதற்கு தோதாய் umbrella டிசைன்'ல் அமைந்த ஒரு லாங் ஸ்கர்ட், காதில் சிறிய நட்சத்திரங்கள், கிளிப்பில் அடக்க முயன்றும் அலையாய் தோளில் விழுந்த கேசம் என அழகு பதுமையாய் நின்ற மீராவை கண்களாலேயே விழுங்கி விடுபவன் போல் பார்த்தான் ஸ்டீவ் //
அடடே அப்பாவி கண்ணை வைத்து ஒரு காவியமே படைத்தது விடுவார் போல இருக்கே!

அவன் பார்வையின் வேகத்தை சந்திக்க இயலாமல் அவள் பார்வையை வேறு பக்கம் திருப்ப "Hello My Sunshineனு உன்னை சொன்னா இப்ப ரெம்ப பொருத்தமா இருக்கும், இல்ல மீரா..." என அவன் குறும்பாய் சிரிக்க, அந்த சிரிப்பில் தன்னை தொலைத்தாள் மீரா//
அப்புறம் கண்டு கொண்டாளா ;இல்லை தொலைத்தாளே ;தொலைத்த இடத்தில தானே கண்டு கொள்ள முடியும் அதற்காக கேட்டேன்

அவள் நின்ற தோரணையில் அதை புரிந்து கொண்ட ஸ்டீவ், வெற்றி புன்னகையுடன் "போலாமா மீரா" என பூங்கொத்தை நீட்டியபடி கேட்க, இன்னும் தயக்கம் விலகாமல் "சரி..." என்பது போல் பூங்கொத்தை பெற்று கொண்டாள்//
ஸ்டீவ் புரிந்து கொண்டதை சுனாமி புரிந்து கொண்டாளா அடடே மீரா புரிந்து கொண்டாளா என்று வந்திருக்க வேண்டுமே !


காரில் சென்று அமரும் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் அவளை விட்டு பார்வையை விலக்க இயலாமல், நொடிக்கொருமுறை அவளை பார்த்து கொண்டே வந்தான் ஸ்டீவ்//
அப்போ அவன் கார் ஓட்டவே இல்லையா ! ஓ பார்த்து பார்த்து பரவச பட்டான் என்று அதற்கு அர்த்தமோ

அதை மீரா உணர்ந்தே இருந்தாள், ஆனால் முன் போல் இயல்பாய் கேலி பேச ஏனோ நா ஒத்துழைக்க மறுத்தது //
சொல்லுவாங்க டுயுப் லைட் அப்படின்னு ;இந்த மீரா ஒரு பெட்ரோமாஸ் லைட் ;இவளுக்கு புரியரதுக்குள்ளே நமக்கு வேர்த்துடும் !
அப்புறம் அப்பாவி அது நா இல்லை நாக்கு ! சரியா சொல்லு , இல்லைனா கெக்கே பிக்குனி கிட்டே சொல்லிடுவேன், ஆமாம்

கார் நகரத்துவங்க "என்ன இன்னிக்கி மௌன விரதமா என் கெஸ்ட்?" என ஸ்டீவ் வம்பு செய்ய
என்ன பேசுவதென தெரியாமல் "ரெம்ப அழகா இருக்கு" என்றாள் கையில் இருந்த பூங்கொத்தை வருடியவாறே //
ஆமாம் என்று மீரா சொல்ல வேண்டியது தானே ;அதென்ன ரெம்ப ;மீரா நம்பூர் காரியா ;ஏனுங் இதை சொல்லலைங்

Vasagan said...

அழகான எபிசொட்
L.K
\இது வரை எழுதிய எபிசொட்களில் இதுவே பெஸ்ட் \

வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி.

priya.r said...

புரபசர் ! சங்கம் உங்களை கவனிக்கிறது நியாபகம் இருக்கட்டும்

priya.r said...

"உன்னை விடவா?" என ஸ்டீவ் கண் சிமிட்ட, நொடியில் சிவந்த கன்னங்களை மறைக்க வெளியே வேடிக்கை பார்ப்பது போல் பாவனை செய்தாள்
"உன்னை விடவானு கேட்டேனே... பதிலே காணோம்" என்றான் விடாமல், மீண்டும் அவளின் முக சிவப்பை ரசிக்கும் ஆவலில் //
ஆஹா ! ரமணி எட்டி பார்க்கிறார் போல இருக்கே ! நடக்கட்டும்

"அது ரெம்ப பழைய டயலாக்" என வேண்டுமென்றே பேச்சை மாற்றினாள்

"But it made you blush, right? Can't ask for more... " என சிரித்தான். அதை அமோதிப்பவள் போல் மௌனமாய் புன்னகைத்தாள் மீரா //
எட்டி பார்த்த ரமணி மெதுவாக நுழைந்து நம்மை ரசிக்க வைக்கிறார் போல இருக்கே

சிறிது நேரத்தில் அவன் வீடு வந்துவிட்டிருக்க, காரை பார்கிங் லாட்'ல் நிறுத்தி விட்டு லிப்ட் நோக்கி நடந்தனர் //
இடம் பொருள் ஏவல் சரியாக சொல்லும் அப்பாவியை பாராட்ட தான் வேண்டும் ;என்னே ஒரு கவனிப்பு

லிப்ட்'ல் ஏறியதும், உரிமையுடன் அவள் கையோடு தன் கையை கோர்த்து கொண்டான் ஸ்டீவ். அவள், விலகவும் இல்லை நெருங்கவும் இல்லை, அப்படியே நின்றாள்//
முதல் ஸ்பரிசம் ! அப்பாவை இதை வைத்தே நீ ஒரு எபிசொட் எழுதி இருக்கலாமே ! சான்ஸ் மிஸ் ...................
/அப்படியே நின்றாள்/ ஏன்னா லிப்டில் உட்கார முடியாதாம் :)

பள்ளி / கல்லூரி நாட்களில் உடன் பயின்ற சக மாணவ நண்பர்களுடன் நட்பாய் கை கோர்த்து சிரித்ததுண்டு, கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து இருக்கிறாள், விளையாட்டாய் அடித்தது கூட உண்டு. அந்த தொடுகை எல்லாம் அவளை எந்த விதத்திலும் பாதித்ததில்லை
ஓ ஸ்பரிசம் என்பதற்கு தொடுகை என்பது தான் சரியான சொல்லோ ! அடடே KP கிட்டே போட்டு கொடுத்து விடுவாளே
சரி அப்பாவி நமக்குள் ஒரு ஒப்பந்தம் :நானும் சொல்லலே நீயும் சொல்ல வேண்டாம் ;சரியா

ஆனால் ஸ்டீவின் அந்த சிறிய தொடுகை, அவளின் மொத்த அணுக்களையும் அசைத்து பார்த்தது. மெல்லிய குளிர் பரவ நடுங்கினாள். தான் பற்றியிருந்த அவள் கைகளில் அந்த நடுக்கத்தை உணர்ந்தான் ஸ்டீவ்//
என்ன ஒரு பௌதிக கற்பனை; "மொத்த அணுக்களையும் அசைத்து பார்த்தது".அப்புறம் அணுக்கள் டான்ஸ் ஆடியிருக்க வேண்டுமே

தன் மீது அவள் கொண்ட காதலின் பிரதிபலிப்பாய் அதை அமோதித்து ரசித்தவன் "மீரா..." என்றான் மெல்லிய குரலில்

"ம்... " என அவள், அவன் முகம் பார்க்க, "No need to be nervous... it's just me... you and me..." உனக்கும் எனக்கும் மட்டுமான தருணம் இது என உணர்த்த முயன்றான் //
காதல் ரசத்தை ஜூஸ் போட்டு தர அப்பாவி முயல்கிறார் போலும் !

priya.r said...

//அதை புரிந்து கொண்டவள் போல் முறுவலித்தாள். ஆனால் அவனை நேரே பார்ப்பதை தவிர்த்து லிப்ட்'ல் இருந்த நியூஸ் ஸ்க்ரோல் மானிட்டரை படிப்பது போன்ற பாவனையில் இருந்தாள் //
மனதிற்குள் ஒரு தவிதவிப்பு ,பதைபதைப்பு இருக்க வேண்டுமே

அவளின் தவிப்பையும் தயக்கத்தையும் ரசித்து கொண்டே வந்தான் ஸ்டீவ். வீட்டு கதவை திறக்கும் போது கூட அவள் கையை விட மனமில்லாதவன் போல் பற்றி கொண்டே இருந்தான்//
விட சொல்லுப்பா;மீராவுக்கு கை வலிக்கிறதாம்

வீட்டுக்குள் நுழைந்ததும், அங்கு இருந்த மாற்றத்தில் அவளின் முகம் எப்படி மாறும் என காணும் ஆவலில், அந்த கணத்தை மனதிற்குள் பதிவு செய்ய முயல்பவன் போல் அவளையே பார்த்தான் //
மீரா என்ன நயாகரா நீர் வீழ்ச்சியா ! பார்த்து கொண்டே இருப்பதற்கு ...
அவன் எதிர்பார்த்தது போலவே, ஆச்சர்யமும் மகிழ்வும் போட்டி போட அவனை பார்த்தாள். அவளின் அந்த மறுதலிப்பு அவனை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது
மறுதலிப்பு என்றால் என்ன அர்த்தம் அப்பாவி ! மறுப்பு என்று தான் நான் நினைத்து கொண்டு இருக்கிறேன் .,KP மேடம் வாங்க !

//அந்த சிறிய இடத்தை கூட இத்தனை அழகுற செய்ய முடியுமா என அவளால் நம்ப இயலவில்லை. செயற்கை விளக்குகள் தவிர்க்கப்பட்டு, அறை முழுக்க மெல்லிய சுகந்தம் பரப்பும் மெழுகுவர்த்திகளால் நிறைக்கப்பட்டிருந்தது

பால்கனி கதவின் அருகில் இருவர் மட்டும் அமரும் வண்ணம் ஒரு சிறிய கண்ணாடி உணவு மேஜை. அதன் நடுவில் அழகிய ஒற்றை சிவப்பு ரோஜா ஒரு சிறிய குவளையில் வீற்றிருக்க, அதை சுற்றிலும் இதய வடிவ சிவப்பு வண்ண மெழுகுவர்த்திகள் ஒளி கூட்ட, ஏதோ வேறு உலகத்துள் நுழைந்தது போல் உணர்ந்தாள் மீரா//
ச்சே! இந்த சுனாமி மீராவை லூசு ன்னு சொல்லி சொல்லி அவளை பத்தி உருவாகிய இமேஜ் இனி மாத்திக்கோனும் ;எப்படி எல்லாம் தான் உணர்வதை அப்பாவி மூலமாக நமக்கு தெரிவிக்கிறாள் இந்த மீரா

priya.r said...

//சமையல் மேடையின் மீது உணவு பதார்த்தங்கள் வைக்கப்பட்டிருக்க, எதிலும் ஒரு ஒழுங்கு முறையும் நளினமும், அதை எல்லாம் மீறிய ஒரு மெனக்கெடலும் தெரிந்தது

எல்லாம் சரியாய், அவள் விரும்பும் வண்ணம் இருக்கவேண்டுமென பார்த்து பார்த்து செய்யப்பட்டிருந்த நேர்த்தியில் அவன் அன்பும் காதலும் புலப்பட, அவள் மனம் நெகிழ்ந்தது //
படிக்கும் நம் மனமும் தான் நெகிழ்கிறது; ரமணிக்கு அடுத்து ஒரு புவனி என்று சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை


//சோபாவின் முன் இருந்த ஒரு சிறிய காபி டேபிள் ஓரங்கள் எல்லாம் வண்ண மெழுகுவர்த்திகள் ஆக்ரமித்திருக்க, அதன் நடுவில் "For you" என பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்ட ஒரு வாழ்த்து அட்டை தெரிய, ஆவலுடன் பார்த்தாள்

அவளின் ஆவல் தெறித்த முகத்தை ரசித்தவன், அவளை நடத்தி சென்று சோபாவில் அமர செய்து, அந்த பரிசை அவள் கைகளில் வைத்தான்

"என்ன ஸ்டீவ் இது?" என அவள் கேள்வியாய் பார்க்க

"நீயே பாரேன் மீரா... just a little something to celebrate this moment... உனக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்... would you like to take three guesses?" என அவன் சீண்டலாய் சிரிக்க

"அதெல்லாம் வேண்டாம்... " என்றவள், பொறுமை இல்லாதவள் போல் பரிசை சுற்றி இருந்த காகிதத்தை பிரித்தாள்

பரிசை கண்ட நொடி, அவள் கண்களில் நீர் நிறைந்தது. "ஸ்டீவ்... " என அதற்கு மேல் பேச இயலாதவள் போல் மௌனமானாள் //
பார்த்து ,ரசித்து ,வைத்து ,நினைத்து ,சிரித்து, நிறைந்து ,மௌனித்து வார்த்தைகளால் வெளிப்பட்ட விதம் அருமை !
அப்பாவி என்ன ஒரு வார்த்தை ஆளுமையடி உனக்கு !!

priya.r said...

ஆமா! நல்லா தானே போய் கிட்டு இருக்கு ;
தெரியாமல் தான் கேட்கிறேன் அதற்குள் இப்போ என்ன அவசரம் !
2051 வருஷம் வர கூடிய 2519 அத்தியாயத்தை எதுக்கு எனக்கு அனுப்பி என்னை டார்சேர் செய்யறே
அதுவும் சதீஷ் ,மீரா விடம் காதலை இன்று மாலை கல்லூரி விட்டதும் சொல்லி விடலாம் என்று முடிவெடுத்தான் என்று நீ எழுதுவதெல்லாம் ரெம்ப ஓவர்., ரெம்ப ரெம்ப ஓவர் அப்பாவி .......................................
ரோடு ரோலர் லில் போன கதை இப்போ தான் வேகம் எடுத்து இருக்கு என்று சொல்ல நினைத்தேன்
அதற்குள் இப்படி!

வல்லிசிம்ஹன் said...

ok. Releived:) appaavi Bhuvan,please change yr name to winsprey the romantic writer.:)
Superb way to naraate a love story.amd what was in the envelope.parents have sent amail telling they are fixing the marriage between Meera and Sathish:)

ஹுஸைனம்மா said...

//லிப்ட்'ல் இருந்த நியூஸ் ஸ்க்ரோல் மானிட்டரை படிப்பது போன்ற//

ஓ, அங்க லிஃப்ட்ல இந்த வசதிலாம் உண்டா? பரவால்லயே!!

ஹுஸைனம்மா said...

அம்மாடி priya.r!! அப்பாவி எழுதின கதைய (அதாவது ஒரு பகுதியை) ஒருக்கா வாசிச்சு முடிச்ச்க்கறதுக்குள்ளயே மூச்சு வாங்கிடுது!! இதுல நீங்க திரும்ப வேற, கமெண்ட் எழுதுறேன் பேர்வழின்னு கதய முழுக்க re-write பண்ணிருக்கீங்களே?? கொஞ்சமாவது வாசிக்கிற எங்க நிலைமைய யோசிச்சிருந்தா இப்படி செய்வீங்களா?
:-))))))))

ஹுஸைனம்மா said...

ஸ்டீவ் இங்க மீராகிட்டதான சொன்னான். சதீஷ், எவ்ளோ புத்திசாலித்தனமா, போன எபிசோட்லயே ரெண்டு பேரோட அப்பாக்கள்ட்டயே விஷயத்தைச் சொல்லி அப்ரூவல் வாங்கிட்டான்!!

தங்கபாலு பெரிசா, சோனியா பெரிசா? சொல்லுங்க.

Madhuram said...

Superb narration Bhuvani. Nijama supera varudhu ungalukku romantic writing. Neenga konjam pro-activa try pannunga novel ezhudhi publish panradhukku. I really wish that I know somebody to make it happen.

நசரேயன் said...

//would you like to take three guesses?//

Except appavi's idly anything is fine

நசரேயன் said...

//"Say something...Please..." //

Steve is stupid

அன்னு said...

அலைபாயுதே Version 2.0 மாதிரி தோணுது.

:))))

priya.r said...

@ஹுஸைனம்மா
வாங்க ஹுஸைனம்மா ;தங்கள் கருத்துக்கு நன்றி .
ஒருவருக்கு இரண்டு தரம் தண்டனை தேவையா என்ற தங்களின் நல்லெண்ணத்தின் அடிப்படையிலான கேள்வியை
புரிந்து கொண்டு இத்தனை நாள் இது தெரியவில்லையே என்று சற்று வருத்தப்பட்டு
இந்த வருத்தம் அப்பாவிக்கு தெரியாமல் இருந்தா அப்பாவி வருத்தப்பட மாட்டாரே என்று நினைத்து
ஒரு வேளை அப்பாவிக்கு தெரிந்தால் அவர் வருத்தபடுவாரோ என்று நினைக்கும் போதே எனக்கு வருத்தம் ஏற்படுவதை
புரிந்து அப்பாவியும் வருத்தப்பட்டால் நானும் வருத்தப்படுவேன் என்று வருத்ததுடன் தங்களுக்கு தெரிய படுத்தி கொள்கிறேன் :) :)

priya.r said...

@ மகி
அதிகமாக First comment போட்ட மகிக்கு அப்பாவி சிறப்பு பரிசு வழங்க இருக்கிறாராம் !
ஆமா இது உங்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமாகிறது :அதன் ரகசியம் என்னவோ !

priya.r said...

@பொற்கொடி
காரில் மீராவை நொடிக்கொரு தடவை
ஸ்டீவ் பார்த்துக்கொண்டே வந்தான் என்று தானே அப்பாவி எழுதி இருக்காங்க !
தயவு செய்து," டாய் சதீஷ்.. இனிமே இந்த பக்கம் எங்கனா வந்த.. கொன்டேபுடுவோம்!"
என்று சொல்ல வேண்டாம் ;சதிஷுக்கு மது இருப்பதை உங்களுக்கு நினைவுட்டுகிறேன்

priya.r said...

@ காயத்ரி
இருவருக்கு திருமணம் முடிந்தால் கதையும் முடிந்த மாதிரி தான் என்ற கருத்து எனக்கு சம்மதம் தான்
அப்பாவிக்கு சம்மதமா என்று கேட்டு பார்க்கலாம்

priya.r said...

@ அனாமி
இதோ பாருபா ;இப்படி," வெவெவ்வே புடிக்கல. லூசு மீரா ஸ்டீவுக்கு வேணாம்"
என்றெல்லாம் வெளிபடையா சொல்ல கூடாது
நான் கூட தான்," கதை ஆமை வேகத்தில் போகுது ;ரோடு ரோலர் மாதிரி போகுது
15 அத்தியாயங்களில் ஜவ்வு மாதிரி ஒரே இழுவை தான் ;மீரா சந்தோஸ் சுப்பிரமணியம் படத்தில் வர்ற ஜெலிலியா மாதிரி
கொஞ்சம் GK கம்மியா தான் இருக்கா ; கொடிக்கு தலைவலி வந்தது கூட இந்த கதை தான்
என்றெல்லாம் நினைத்து இருக்கேன் ;ஒரு நாள் வெளியே சொல்லி இருப்பேனா !
சொன்னா அப்பாவியின் மனது எவ்வளோ வருத்தப்படும், புண்படும் என்று தெரியாதா
;அப்பாவி யாரு ;நம்ம பாச மலர் இல்லையா
நீ வேனா அப்பாவியை கேட்டு தான் பாரேன் :)

அப்புறம் அனாமி ! நீ தானே ஸ்டீவ் க்கு மீரா அப்படின்னு அடம் பிடித்தே
இப்போ வேண்டாங்கிறே;சரி மீராவுக்கு அப்புறம் என்ன தான் வழி! நன் ஆக்கிடலாமா !
யோசித்து நீயே ஒரு முடிவை சொல்லு :)

Thanks for the Fifty!

அப்பாவி தங்கமணி said...

@ மகி - அபிசியல் வடை இளவரசி பட்டம் உங்களுக்கு அளிக்கப்படுகிறது மகி...ஜோக்ஸ் அபார்ட்... தேங்க்ஸ்..:))

@ Porkodi (பொற்கொடி) - ஹா ஹா... கொல்றது உங்களுக்கு என்ன புதுசா... கொல்லுங்க கொல்லுங்க......தேங்க்ஸ்...:))

@ Charles - நாலாவது வந்த நல்லவர்னு வேணா பட்டம் குடுக்கறேன்'ங்க...ஹா ஹா... என்னது அழுதே இருப்பீங்களா? இதை நாங்க நம்பணுமாக்கும்... ஹா ஹா... கவிதைக்கு சூப்பர் சொன்னதுக்கு நன்றி... ஐயையோ... சதீஷ் எஸ்கேப் ஆய்டு...:)))

@ Gayathri - கல்யாணம் தானே பண்ணிடுவோம்... அது சரி.. சர்ச்லயா கோவில்லயானு ஒரு சண்டை வருமோ...இரு கேட்டு சொல்றேன்...:))

@ நவீன் - ஹா ஹா..:))

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - ஆஹா.. அவன் லவ் சொன்னதுக்கு எனக்கு தேங்க்ஸ்'ஆ? இது சூப்பர்... ஜஸ்ட் கிட்டிங்... தேங்க்ஸ் ஆனந்தி..:))))

@ thenikari - வாங்க தேனிக்காரி... உங்க பேரு சூப்பர்... நானும் கோவைக்காரினு வெச்சு இருக்கலாமோன்னு இப்ப தோணுது.. அப்பறம் கோவக்காரினு மாத்திருவாங்க நம்ம எதிரிக வம்பு தான்... ஹா ஹா... முதல் வருகைக்கு முதல்ல நன்றி... இதெல்லாம் அநியாயம்... நீங்க ஜொ__பார்ட்டி ஆகறதுக்கு பழி என் மேலயா? ஹா ஹா... :))

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi (பொற்கொடி) - ஆஹா... எல்லாம் பிளான் பண்ணித்தான்யா பண்றாங்க...:)))

@ பிரதீபா - ஆஹா... நன்றி தீபா...:))

@ அனாமிகா - என்னது மீரா புடிக்கலையா? ஸ்டீவுக்கு மீரா வேண்டாம்னா...என்ன அர்த்தம்? ஏதோ பிளான் பண்ற மாதிரி இருக்கே... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... :)))

@ vanathy - தேங்க்ஸ் வானதி...:)

@ Balaji saravana - ஆஹா... இதென்ன வம்பா போச்சு... சரி ஒகே... பிற்காலத்துல இதை படமா எடுத்தா அவங்க கால் சீட்டே வாங்கிருவோம்...ஹா ஹா...:)))

@ எல் கே - பெஸ்ட்னு சொன்னதுக்கு நன்றி... (நம்பமுடியவில்லை.....இல்லை இல்லை...:)))..... எந்த பார்சல்... யு மீன் போஸ்ட்ல வந்ததா? அதெல்லாம் சஸ்பென்ஸ்...இப்ப சொல்ல மாட்டேன்......:))

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க ராஜி'ம்மா...

@ asiya omar - நன்றிங்க ஆசியா

@ சி.பி.செந்தில்குமார் - ஹி ஹி...:))

@ Never give up - ரெம்ப நன்றிங்க...:))

@ நிஜாம் என் பெயர் - இன்னும் ரெண்டு வாரம் இழுக்கரதுல எனக்கொன்னும் பிரச்சனை இல்லிங்க... மக்கள் ரெம்ப டென்ஷன் ஆகி மிரட்ட ஆரம்பிச்சுட்டாங்க...ஹா ஹா... ஆஹா... உங்க வில்லத்தனம் பெரிய வில்லத்தனமா இருக்கே... நீங்க கதை கிதை எழுதினா நான் எஸ்கேப்...:))))

@ அமைதிச்சாரல் - நன்றிங்க அமைதி அக்கா...:)

அப்பாவி தங்கமணி said...

@ divyadharsan - Thanks a bunch Dhivya. Oh my god... you're a replication of me I guess.... I think likewise when I'm reading stories of others... more sandai more ragalai more more more all... I was surprised when you asked the same... good to know I got company...ha ha... thanks for your encouraging words...How is the little one doing?....:))

@ middleclassmadhavi - நான் சொல்லி பாத்தேங்க... அவ்ளோ நாள் வெயிட் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க... ஹா ஹா... :))

@ பத்மநாபன் - ஹா ஹா... நீங்க தான் நான் சொல்ல வர்றதை கரெக்டா புரிஞ்சுக்கரீங்க அண்ணா... சிறுவாணி தண்ணி தோஷமோ...ஹா ஹா...:)))

@ சுசி - தேங்க்ஸ்'ங்க சுசி...:)

@ தக்குடு - ஹா ஹா... நல்ல உவமை.... சதீஷ் என்ன பண்றானோ தெரில... பார்ப்போம்...:))

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - அந்த பார்சல் என்னங்கறது சஸ்பென்ஸ்... வெயிட் பண்ணுங்க... அடுத்த பகுதி நிறைவு பகுதியா... ஐயையோ...நான் எப்பங்க அப்படி சொன்னேன்...:)))

@ கீறிப்புள்ள!! - வாங்க பிரதர்... ஆமா ஆமா... எல்லாம் கொட்ட ஆரம்பிச்சுருச்சு...:))

@ சின்ன அம்மிணி - இப்பவும் இப்படி தானுங்க... ஹி ஹி... முடியும்...ஆனா....சரி வேண்டாம் விடுங்க...:)))

@ இன்பம் துன்பம் - ரெம்ப நன்றிங்க முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்...

@ priya.r - எக்கோவ்.... உங்களுக்கு பதில் கடசீ பெட்டில வருதாம்...:))))

@ Vasagan - அதை சொல்லுங்க... ஏதோ ஞாபக மறதியா சொல்லிடாரு போல...ஹா ஹா...நன்றிங்க...:))

@ வல்லிசிம்ஹன் - winsprey the romantic writer ஆ? ஹா ஹா... வாங்க வல்லிம்மா... அந்த லெட்டர் பத்தி நீங்க சொன்னது சரியா இல்லையான்னு கேட்டு சொல்றேன்... நன்றிங்க... :)))

@ ஹுஸைனம்மா - ஆமாங்க... வெதர், நியூஸ் எல்லாம் இதுல வரும்... நான் கூட ஆரம்பத்துல ஏதோ சினிமா படம் போடுவாங்கன்னு வெயிட் பண்ணி பண்ணி பாத்தேன்... ஒண்ணும் வரல...:))).... என்ன ஒரு உவமை... சூப்பர்... :))

@ Madhuram - Hi Madhu, that was so sweet of you to say. Thanks a lot friend....:))

@ நசரேயன் - ஹா ஹா ஹா... செம...:))

@ அன்னு - ஆஹா... ஏன் இந்த கொல வெறி அன்னு... நான் என்ன "அழகாய் இருக்கிறாய் பயமா இருக்கிறது"னு எல்லாம் சொன்னேனா...ஹா ஹா...:)))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - அதானே பாத்தேன்... சங்கம் பேரவைய விடுவீங்களா? எனக்கு இன்னைக்கே ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும் எனக்கு... சங்கம் முக்கியமா... சகோதரி முக்கியமா...???..... :))))

//எவ்வளவு நேரம் தான் பார்ப்பானாம்//
அவன் கண்ணு அவ மூஞ்சி... பாத்துட்டு போறான் விடு ப்ரியா'க்கா...:)))

//அப்புறம் கண்டு கொண்டாளா ;இல்லை தொலைத்தாளே ;தொலைத்த இடத்தில தானே கண்டு கொள்ள முடியும் அதற்காக கேட்டேன்//
வேணாம்... அழுதுருவேன்...அவ்வ்வ்வ்.....

//ஸ்டீவ் புரிந்து கொண்டதை சுனாமி புரிந்து கொண்டாளா அடடே மீரா புரிந்து கொண்டாளா என்று வந்திருக்க வேண்டுமே//
ரெண்டு பேரும் சேந்து என்னமோ பிளான் பண்ணறீங்க... என்னனு தான் புரியல...:)))

//இந்த மீரா ஒரு பெட்ரோமாஸ் லைட்//
ஹலோ... நல்ல பொண்ணுங்க இந்த பொண்ணு... சூது வாது தெரியாம வளத்துட்டாங்க யு சி...:))

//அப்புறம் அப்பாவி அது நா இல்லை நாக்கு//
அப்போ "நா"வினால் சுட்ட வடுனு சொன்னது தப்புன்னு சொல்லுவீங்களோ... இருங்க திருவள்ளுவர்கிட்ட சொல்லி தரேன்...ஹா ஹா...:))

//அதென்ன ரெம்ப ;மீரா நம்பூர் காரியா//
இல்ல... நம்பூர்காரி இந்த கதை எழுதினதால அப்படி வந்துடுச்சு...:)))

//இதை வைத்தே நீ ஒரு எபிசொட் எழுதி இருக்கலாமே//
எதுக்கு ஒட்டுமொத்தமா அடி வாங்கவா... அவ்வ்வ்வவ்....

//என்ன ஒரு பௌதிக கற்பனை//
ஹி ஹி...:))

//விட சொல்லுப்பா;மீராவுக்கு கை வலிக்கிறதாம்//
மீரா அப்படி எல்லாம் சொல்லவே இல்லையாம்..:)))

//மீரா என்ன நயாகரா நீர் வீழ்ச்சியா ! பார்த்து கொண்டே இருப்பதற்கு//
அவனுக்கு அவள் நயாகரா தானாம்...:)))

//மறுதலிப்பு என்றால் என்ன அர்த்தம் அப்பாவி ! மறுப்பு என்று தான் நான் நினைத்து கொண்டு இருக்கிறேன்//
அடவம்பே... என்ன அக்கா... எவ்ளோ RC நாவல் படிச்சு இருப்பீங்க... போங்க அக்கா... மறுதலிப்புனா reaction னு அர்த்தம்... KP அக்கா, கரெக்ட் தானே...:))

//ரமணிக்கு அடுத்து ஒரு புவனி என்று சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை//
அடுத்து என்ன குண்டு போட போறாங்களோ இந்த அக்கா...:)

//அப்பாவி என்ன ஒரு வார்த்தை ஆளுமையடி உனக்கு//
ஏதோ பெரிய ஆப்பு காத்துட்டு இருக்குனு மட்டும் புரியுது... :))

//2051 வருஷம் வர கூடிய 2519 அத்தியாயத்தை எதுக்கு எனக்கு அனுப்பி என்னை டார்சேர் செய்யறே//
இதென்ன புது வம்பு... வேண்டாம் ப்ரியா... அப்புறம் அடுத்த கதைல உங்க பேர்ல ஒரு கேரக்டர் வெச்சு அழ வெச்சுட்டே இருப்பேன்...ஆமா சொல்லிட்டேன்...:)))

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா... ப்ரியா அக்கா... கமல் சார் தோத்து போய்ரனும் உங்க டயலாக் டெலிவரில...ஹா ஹா ஹா...:)))

//அதன் ரகசியம் என்னவோ//
ரகசியம் ரகசியமாத்தான் இருக்கணும் யு சி...:)))

//ஒரு நாள் வெளியே சொல்லி இருப்பேனா//
அதான் ஒரு ஒரு வாரமும் சொல்றீங்களே... ப்ரூட்டஸ் ப்ரியா டௌன் டௌன்... :))

Jaleela Kamal said...

ஜில்லுன்னு காதல் 17 வது பதிவில் தான் ரொம்ப ஜில்லுன்னு இருந்தது

அப்பாவி தங்கமணி said...

@ Jaleela Kamal - Thanks Jaleela'kkaa...:)

Sri Seethalakshmi said...

உண்மையிலே இப்போதான் ஜில்லுனு ஒரு காதல் :-)
உரைநடை, கவிதை எல்லாம் சூப்பர்.
இது நிஜம் தானே, ஒன்னும் கனவு இல்லையே ??

Sri Seethalakshmi said...

இதோ வந்துட்டேன், வந்துட்டேன்
ஒரு வாரமா, பிளாக்கர் வொர்க் ஆகல, எதோ problem
இப்போ தான் சரியாச்சு. ஒரு வழியா கமெண்ட் போட்டாச்சு.

அப்பாவி தங்கமணி said...

@ Sri Seethalakshmi - வாங்க சீதா... நிஜமா கனவானு அடுத்த வாரம் சொல்லட்டுமா?
(இப்படி தான் டென்ஷன் பண்ணி விடணும்... லேட்டா வந்ததுக்கு பனிஷ்மன்ட்... ஜஸ்ட் கிட்டிங் சீதா..:))

siva said...

ME THE FIRSTU...

Post a Comment