Thursday, April 21, 2011

தப்பும் தவறும்... (உருப்படியா ஒரு போஸ்ட்.... அப்படினு நினைக்கிறேன்...)


தப்பை தப்பா செய்யறது தப்பில்லையா, இல்ல தப்பை தப்பில்லாம செய்யறது தப்பா?

தப்பு தப்பா செய்யறது தப்புன்னு தெரிஞ்சும் அதே தப்பை தப்பில்லாம செய்யறவங்களை என்ன செஞ்சா தப்பில்ல... நீங்களே சொல்லுங்க மக்களே...

மைண்ட்வாய்ஸ் : உன் ப்ளாக்'க்கு வந்தோம் பாரு... அதான் நாங்க செஞ்ச தப்புலையே பெரிய தப்பு :((

ஏய் மைண்ட்வாய்ஸ், நானே அதிசியமா உருப்படியா ஒரு போஸ்ட் போடலாம்னு வந்திருக்கேன்... ஓடி போய்டு... சும்மா சும்மா வந்து டென்ஷன் பண்ணாதே, அப்புறம் தப்பில்லாம உன்னை தப்பிடுவேன்... ஹ்ம்ம்...

(ஒழிந்தது மைண்ட்வாய்ஸ்...:))

"என்னது உருப்படியான போஸ்ட்டா? நீயா?" னு நீங்க எல்லாம் டென்ஷன் ஆகறது புரியுது பிரெண்ட்ஸ்... but that that appavi that that day, you know...:))

நெறைய பேர் இதை பத்தி இப்ப சமீபமா பதிவு எழுதிட்டு இருக்காங்க... அதை படிக்கறதோட நிறுத்திக்கலாம்னு தான் மொதல்ல நினைச்சேன்...

அப்புறம் என்னமோ "அவங்க, 'அவங்க' ஸ்டைல்ல எழுதறாங்க... நான், என் ஸ்டைல்ல(!) சொன்னா அதை நாலு பேர் படிச்சா நல்லது தானே"னு தோணுச்சு...

"நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல"னு யார் சொன்னாங்கனு "சின்ன குழந்தையும் சொல்லும்" தானே....How is it?....:))

சரி, அதான் என் ஸ்டைல்'இல் இங்கே இதோ....

"நீ செஞ்சது தப்பு" - இந்த வார்த்தைய கேக்காதவங்க இருக்கவே முடியாது உலகத்துல

"அதெப்படி... இங்கிலீஷ்காரன் you're wrong னு தானே சொல்லி இருப்பான்... நீ செஞ்சது தப்புனு சொல்லி இருக்க மாட்டானே"னு சிலர் என்னை போல குண்டக்க மண்டக்க கேள்வி கேப்பீங்கன்னு தெரியும்..:))

What I'm trying to say is... சரி, இந்த பீட்டர் விடறதை முடிஞ்ச மட்டும் இனி கம்மி பண்ணிக்கறேன்... (போன வாரம் தமிழ் புத்தாண்டு பதிவுனால நடந்த டேமேஜ் அப்படி... அதுலயும் நம்ம கெக்கே பிக்குணி அக்கா அக்கு வேறு ஆணி வேறா டேமேஜ் பண்ணி போட்டாங்க..... அதுக்கு ப்ரியா அக்கா கூட்டணி வேற... அவ்வ்வ்வவ்வ்வ்வவ்.....ஜஸ்ட் கிட்டிங் கெக்கே பிக்குணி அக்கா...:))))

நான் என்ன சொல்ல வரேன்னா, எல்லாரும் எல்லாமும் சரியா செய்யரதுங்கறது சாத்தியம் இல்லை, தவறுகள் செய்வது மனித இயல்பு, ஆனால் தவறுகள் மீண்டும் செய்யப்படும் பொழுது அது தவறு அல்ல, தப்பு ஆகிறது

ஒரு நாள் எங்க ஸ்கூல்ல இலக்கிய மன்ற விழாவுல பேச வந்த ஒருத்தர் "தெரியாம செஞ்சா தவறு, அதை மன்னிக்கலாம்... தெரிஞ்சே செஞ்சா தப்பு அதை மன்னிக்க கூடாது" னு சொன்னார்

"அட, புதுசா இருக்கே"னு ஆர்வமா கவனிச்சதுல அது மனசுல பதிஞ்சு போச்சு... அது ஒரு பக்கம் இருக்கட்டும்...

எனக்கு வக்கீல் ஆகணும்னு ஆசை இருந்தது... நல்ல வேளை ஆகலை... பாவம்ல எதிர்கட்சி வக்கீல்... :))

"சம்மந்தம் இல்லாம இப்ப எதுக்கு இந்த சுய புராணம்"னு நீங்க யோசிக்கலாம்... இருக்கு இருக்கு... சம்மந்தம், சம பந்தம் எல்லாமும் இருக்கு...

ஜோக்ஸ் அபார்ட்...

10th படிக்கற வரை இந்த வக்கீல் ஆர்வம் கொஞ்சம் அதிகமா இருந்தது, +2ல accounts குரூப் போனதும் finance பக்கம் ஆர்வம் திரும்பி அந்த லைன்ல போயிட்டேன்... ஆனாலும் "சட்டம்"ங்கற விஷயம் மேல ஒரு தீராத காதல் இருந்தது, இன்னும் கூட இருக்கு கொஞ்சம்....

பி.காம்ல law பேப்பர்ஸ் சில இருந்தது... அதை என்னோட ஆசைக்கு தீனியா பயன்படுத்திக்கிட்டேன்... அதனால தான் ஒரு சிலது இன்னும் கூட ஞாபகம் இருக்குனு நினைக்கிறேன்

அதுல என்னை ரெம்பவும் கவர்ந்த ஒண்ணு... "Ignorantia juris non excusat"...

"என்னாது????????" னு உங்களுக்கு BP ஏறுறதுக்கு முன்னாடி நானே சொல்லிடறேன்...

Commerce Students நெறைய பேருக்கு இது ஞாபகத்துல இருக்கும்னு நினைக்கிறேன்...

இது லத்தீன் மொழில சட்டம் பத்தி சொல்லப்படும் ஒரு....ஒரு....என்னனு சொல்றது... ஒரு சொற்சொடர்னு சொல்லலாம்... ஒரு சட்ட ஆக்கம்னு கூட சொல்லலாம்... சரி, அப்படியே வெச்சுப்போம்... இது நம்ம ஊரு சட்டத்துக்கும் பொருந்தும் என்பது தான் இங்கே நான் சொல்ல வரும் பாயிண்ட் யுவர் ஆனர்

மொதல்ல இதுக்கு என்ன அர்த்தம்னு சொல்லிடறேன்... இதோட ஆங்கில ஆக்கம் "Ignorance of the law is not an excuse" .... அதாவது ஒருத்தர் எதாச்சும் சட்டமீறல் செஞ்சுட்டு "இது சட்டப்படி தப்புன்னு எனக்கு தெரியாது" அப்படின்னு சொன்னா அது செல்லாது, அதுக்கான தண்டனைல இருந்து அவங்க தப்பிக்க முடியாது, அப்படின்னு சட்டமே இருக்கு

இப்படி இருக்கறப்ப, செய்யறது சட்டப்படி தப்புனு தெரிஞ்சும் செய்யற தப்புக்கு excuse இருக்க முடியுமா? இல்லை தானே... அப்படி இருக்கறப்ப... Anna Hazareனு ஒரு மாமனிதர் வந்த போராட வேண்டிய அளவுக்கு நம்ம நாட்டுல சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆனது எப்படி?

"விடிய விடிய வோர்ல்ட் கப் கிரிக்கெட் பாத்துட்டு, நெஹ்ரா பைனல்ஸ்ல எத்தன விக்கெட் எடுத்தார்"னு கேக்கற கதையா என்ன கேள்வி இதுனு நீங்க டென்ஷன் ஆகலாம், தப்பில்ல...சாரி... தவறில்ல...

Honourable Anna Hazare அவர்களை பத்தி நெறைய பேர் எழுதியாச்சு, நானும் அதையே ரிபீட் பண்றதை விட...

ஒரு குட்டி கதை சொல்றேன் கேளுங்க...

"பெரிய சூப்பர் ஸ்டார் ரஜினினு நெனப்பா உனக்கு"னு உணர்ச்சி வசப்படாதீங்க பிரெண்ட்ஸ்... நானும் தலைவர் fan தான்... :)

சினிமா டைரக்டர்கிட்ட பேட்டி எடுக்கறப்ப "இத்தனை வன்முறை இந்த காட்சிக்கு அவசியமா?"னு நிருபர் கேக்கறப்ப "கதைக்கு தேவை, அதான் வெச்சோம்" சொல்லுவாரே...அது போல இப்போ இங்க இந்த குட்டி கதை தேவை, எனவே பொறுத்தருள்க...:)

குறிப்பு:
இந்த குட்டி கதை என் சொந்த கற்பனை, அது யாரையோ அல்லது எந்த சம்பவத்தையோ குறிப்பது போல் இருந்தால் அது mere coincidence only என்பதை மொதல்லையே சொல்லிடறேன்... ஆட்டோ'க்கு பயந்துட்டு சொல்லலைங்க... ஒரு சம்பிரதாயத்துக்காக சொல்றேன்...

ஒரு ஊர்ல ஒரு பெரிய வியாபாரி இருந்தார், ஊருல பேரும் புகழும் உள்ள செல்வந்தர் அவர். அவருக்கு நாலு பிள்ளைகள். செலவந்தரும் நாலு பிள்ளைகளும் சேர்ந்து வியாபாரத்தை சிறப்பா நடத்திட்டு வந்தாங்க

அதுல மூணு பிள்ளைகள் நல்லா படிச்சு அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்கினாங்க. கடைக்குட்டி மட்டும் தவறான சேர்க்கையின் காரணமா கொஞ்சம் பொறுப்பில்லாம இருந்தான் (no offense கடை குட்டிஸ்... just a story line ...:)

ஆனா அந்த செல்வந்தரும் அவரோட மனைவியும் பிள்ளைய கண்டிக்காம "சின்னவன செல்லமா வளத்துட்டோம்... நாளானா சரி ஆய்டும்"னு எந்த பாராபட்சமும் காட்டாம எல்லா பிள்ளைகளையும் ஒரே போல நடத்தினாங்க. அதுல மத்த மூணு பிள்ளைகளுக்கும் கொஞ்சம் வருத்தம்

"நாம பொறுப்பா, சுய லாபம் / சந்தோஷம் எல்லாத்தையும் ஒதுக்கி வெச்சுட்டு பாடுபடறோம். ஆனா இவன் (கடை குட்டி) அப்பாவுக்கு தெரியாம வியாபாரத்துல இருந்து பணத்தை எடுத்து ஊதாரியா சுத்திட்டு இருக்கான்... நாமளும் இனி நமக்குனு சேத்துக்கணும்... இல்லேனா பாகம் பிரிக்கறரப்ப நமக்கு ஒண்ணும் மிஞ்சாது" னு முடிவுக்கு வந்தாங்க மூணு பேரும்

இப்படி ஒருத்தருக்கு தெரியாம ஒருத்தர் கொஞ்ச கொஞ்சமா பணம் சுருட்ட ஆரம்பிச்சாங்க... அப்படி சுருட்டின பணத்தை யாருக்கும் தெரியாம பதுக்க வேண்டி இருந்ததால யார் யாரையோ சரிகட்டி பாதுகாத்து வெச்சாங்க... அதுல சிலர் இவங்களையே ஏமாத்தி பணம் பறிச்சாங்க

அவங்க அப்பாவுக்கு விஷயம் தெரிய வந்தப்ப நிலைமை கை மீறி போய் இருந்தது. கௌரவமா தலை நிமிர்ந்து இருந்த குடும்பம் வீதிக்கு வந்தது...

"நீ செஞ்சது தான் தப்பு"னு ஒருத்தரை ஒருத்தர் மாத்தி மாத்தி அடிச்சுக்கிட்டு எல்லாரும் அழிஞ்சு போனது தான் இந்த கதையின் முடிவு

இதை ஒரு case study மாதிரி படிச்சு / யோசிச்சு.... இந்த கதைல யார் மேல தப்புன்னு உங்கள கேட்டா.... Choose the best answerனு இந்த மூணு ஆப்சன் குடுத்தா, உங்க பதில் என்னவா இருக்கும்?

1 . பெற்றவர்கள்
2 . கடைசி பிள்ளை
3 . மற்ற மூணு பிள்ளைகள்

என்னோட பதில் all the above... அதாவது, எல்லாருக்கும் இந்த தப்பில் சமபங்கு இருக்கு... அம்மா அப்பா கண்டிக்காம விட்டது தான் இதுக்கான ஆரம்பம் என்றாலும் மற்ற பிள்ளைகளை பாத்து தன்னை திருத்திக்கற வாய்ப்பை ஏன் அந்த பையன் ஏற்படுத்திக்கலை

அதே போல, சின்னவன் தப்பு செஞ்சா கண்டிச்சு திருத்தறதை விட்டுட்டு "நீ கெணத்துல குதிச்சா நானும் குதிப்பேன்"னு பைத்தியகாரத்தனமா நடந்துகிட்டது மற்ற மூணு பிள்ளைகளின் தப்பு

இதுல ஒருத்தரேனும் தங்கள் கடமையை சரியா செஞ்சு இருந்தா அந்த குடும்பம் இப்படி சீரழிஞ்சு போய் இருக்காது

இப்ப கதையை விட்டுட்டு நம்ம நாட்டு நிலவரத்துக்கு வருவோம்... இந்த கடமைய சரியா செய்யரதுங்கறது வீட்டுக்கு மட்டுமில்ல நாட்டுக்கும் பொருந்தும்...

இந்த கதைல பெத்தவங்கனு சொல்லப்படும் இடத்தில் நாட்டில் இருப்பது பொது மக்கள்... ஒரு அதிகாரியோ / அரசியல்வாதியோ முதல் முறை லஞ்சம் வாங்கரப்பவோ அல்லது வேற தவறுகள் செய்யரப்பவோ தட்டி கேக்காம நாம இருக்கறதுக்கு காரணம் என்ன?

இந்த கதைல பெத்தவங்க கண்டிக்காம விட்டதுக்கு காரணம் "பாசம்"... பொதுமக்கள் தட்டி கேக்காம இருக்கறதுக்கு காரணம் "பயம்"

நாம எதுத்து கேள்வி கேட்டா நம்ம உயிருக்கு உத்திரவாதம் இருக்குனு யாராச்சும் கேரன்ட்டீ குடுத்தா "நானும் கேப்பேன்"... "நீங்களும் கேப்பீங்க"...என்னங்க, நான் சொல்றது சரி தானே... ??

கதைல கடைசி பிள்ளை எடத்துல நாட்டுல வர்றது ஆரம்ப நிலை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும், மத்த மூணு பிள்ளைகள் இடத்தில் இருப்பது உயர் அதிகாரிகளும் மூத்த அரசியல்வாதிகளும்

இதுல யாரேனும் ஒருத்தர் தங்கள் கடமைய சரியா செஞ்சு இருந்தா இன்னிக்கி இந்த நிலைமை ஏன்?

எல்லாரும் சேந்து தப்பு செஞ்சு வீணா போயாச்சு...

கடைசியா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிட்டு நான் ஓடி போய்டறேன்...

"நான் இந்த ஊருக்கு (கனடா) வந்து ஏழு வருஷம் முடிஞ்சு இப்ப எட்டாவது வருஷம், இந்த ஏழு வருசத்துல வீடு வாங்கினோம், அதுக்கு Mortgage வாங்கினோம், வீட்டை வித்தோம், கார் வாங்கினோம், வித்தோம், டிரைவிங் லைசன்ஸ் வாங்கினோம், குடியுரிமை வாங்கினோம், பாஸ்போர்ட் வாங்கினோம்... இன்னும் நெறைய நெறைய னோம்'கள் உண்டு... ஆனால் இதுவரை ஒரு பைசா கூட லஞ்சம் கேட்கப்பட்டதும் இல்லை, கொடுக்கப்பட்டதும் இல்லை, கொடுக்காததால் எந்த வேலையும் தடைபட்டதும் இல்லை"

இதை நான் பெருமையா சொல்லலை, வருத்தமா சொல்றேன், நம்ம ஊரு இப்படி இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்னு ஆதங்கத்துல சொல்றேன்... நம்பினா நம்புங்க இல்லேனா விடுங்க...

"எங்கயோ சௌகரியமா உக்காந்துட்டு இந்த டயலாக் எல்லாம் விடாதே"னு நீங்க என்னை திட்டலாம்...

நான் எங்க இருந்தாலும் my roots are from India and that is where I belong

இன்னும் நூறு வருஷம் இங்க வாழ்ந்தாலும், என்னை தூக்கத்துல எழுப்பி "தேசிய கீதம் பாடு" னு சொன்னா "ஜனகனமன" தான் வரும், "O'Canada" வராது

அந்த belongingnessல, அந்த உரிமைல, அந்த ஆதங்கத்துல தான் இந்த பதிவு...

"இத்தனை நாள் எங்க போச்சு உன் ஆதங்கம்... Anna Hazare வர்ற வரை உன் கையை கட்டியா போட்டு இருந்தாங்க"னு கேப்பீங்க...

யாரும் என் கையை கட்டி போடலை... ஆனா இப்படி மன ஆதங்கத்தை எழுதணும்னு தூண்டினது Anna Hazare மற்றும் அவரை பத்தி எழுதின மத்த சக பதிவர்கள் தான்... அதுக்கு அவருக்கும் உங்க எல்லாருக்கும் நன்றி

எங்க அம்மாகிட்ட பேசினப்ப "இந்த வாட்டி எலக்சன் மாதிரியே இல்ல போ... செவத்துல ஒரு போஸ்டர் காணோம்... கோஷம் காணோம்... வோட்டு சீட்டு குடுக்க வர்ற வெள்ளை வேட்டி கூட்டம் காணோம்... நிம்மதியா இருக்கு"னு சொன்னாங்க...

இது ஒரு நல்ல துவக்கம்னு மனசுக்கு ரெம்ப சந்தோசமா இருந்தது... இதையும் மீறி சில முறைகேடுகள் சில இடங்களில் நடந்ததுனு கூட படிச்சேன்...

But there was some positive change... Rome cannot be built in one day... and this is a good start... lets keep pacing in the same direction and we could reach the destination someday... either in 100 years or 200 years doesn't matter... we're in track...that is all it matters...

இந்த முறை 78% வாக்கு பதிவு நடந்து இருக்குனு சொன்னாங்க... கேக்கவே சந்தோசமா இருந்தது...

இதெல்லாமும் நல்ல மாற்றம் தானே... குறைகளை சுட்டி காட்டுவதை விட நிறைகளை பாராட்டினால் இன்னும்  நாலு பேருக்கு மாறணுங்கற எண்ணம் மனசுல வரும்...

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று"னு வள்ளுவரே சொல்லி இருக்காரே

இதுவரை, "ஒருகை ஓசை எழுப்பாது"னு சொல்லிட்டு இருந்தோம் "எழுப்பும்"னு "சிட்டிகை" போட்டு நிரூபிச்சுட்டார் Anna Hazare... நாமும் முடிந்த வரை  அவரை பின்பற்ற முயலுவோம்

உண்மைய சொல்லணும்னா, எனக்கு மத்தவங்க அளவுக்கு அரசியல் அவ்வளவா தெரியாது, மத்ததும் புத்தகத்தை தாண்டி அதிகம் தெரியாது, ஆனா மனிதம் தெரியும், தெரியும்னு சொல்றத விட "மனிதத்தில் நம்பிக்கை உண்டு"னு சொன்னா இன்னும் பொருத்தமா இருக்கும்

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பதிவு...

உங்களை சிரிக்க வெக்க (அழ வெக்கவும்) நிறைய பதிவு எழுதி இருக்கேன்... அதை படிச்ச நீங்க, இதையும் பொறுமையா படிப்பீங்கங்கற நம்பிக்கைல இதை போடறேன்...

நன்றி...

72 பேரு சொல்லி இருக்காக:

மகி said...

:)
Present Bhuvana! ;)

balaji said...

good

Chitra said...

உண்மைய சொல்லணும்னா, எனக்கு மத்தவங்க அளவுக்கு அரசியல் அவ்வளவா தெரியாது, மத்ததும் புத்தகத்தை தாண்டி அதிகம் தெரியாது, ஆனா மனிதம் தெரியும், தெரியும்னு சொல்றத விட "மனிதத்தில் நம்பிக்கை உண்டு"னு சொன்னா இன்னும் பொருத்தமா இருக்கும்


...That is nice. :-)

பிரதீபா said...

பின்னூட்டம் ன்னு போட்டா ரொம்பவே பெரிசா போய்டும், அதனால... சுதாரிப்போம், வாழ்க்கை சிறக்க வாழ்வோம் !!

Porkodi (பொற்கொடி) said...

சத்தியமா சொல்றேன் அந்த குறிப்பு கிட்ட வர்றதுக்குள்ளயே நாக்கு தள்ளி போச்சு. ஏன் இப்புடி???? ரொம்ப டூ மச்.

இப்ப என்ன, வெறும் ஆதங்கமா? ஹசாரேவுக்கு கை கொடுக்கணும், அதானே இல்லை எதையாவது விட்டு தொலைச்சுட்டேனா? படிச்சு முடிக்கறதுக்குள்ள என்ன ஆரம்பிச்சோம்னு மறந்துருது! :D

//கடைசியா ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிட்டு நான் ஓடி போய்டறேன்... //

ஓடி போய்டறேன்னு நல்ல வார்த்தை சொன்ன அதே வாய் "கடைசியா"ன்னு வேற குண்டை போடுதே.. அந்த கடைசி தான் வரவே வராதுன்னு எங்களுக்கு தெரியுமே!

வழக்கம் போல பதிவு சூப்பர்(!!) அ.த.!

Charles said...

அப்பாவி மேடம் late -ஆ போட்டாலும் லேட்டஸ்ட்-ஆ போட்டு இருக்கீங்க... நல்ல பதிவு..
//நான் எங்க இருந்தாலும் my roots are from India and that is where I belong // Hats off

@பொற்கோடி மேடம்... விடுங்க... இவங்க எப்பவும் விளக்கமா சொல்லியே பழகிட்டாங்க..

வெங்கட் நாகராஜ் said...

Nice.

Rathnavel said...

நல்ல பதிவு.
காலம் மாறும்.
வாழ்த்துக்கள்.

Balaji saravana said...

நல்ல பதிவு அப்பாவி! :)

இராஜராஜேஸ்வரி said...

நல்ல பதிவு.

அனாமிகா துவாரகன் said...

சார்ல்ஸை வழிமொழிகிறேன்.

சி.பி.செந்தில்குமார் said...

தங்கமணி காம்ர்ஸ் குரூப்பா? ஓக்கே

Jey said...

நல்ல பதிவுப்பா..., நன்றி.

தமிழ் உதயம் said...

உண்மையிலேயே உரூப்படியான பதிவு அப்பாவி தங்கமணி.

Porkodi said...

//@பொற்கோடி மேடம்... விடுங்க... இவங்க எப்பவும் விளக்கமா சொல்லியே பழகிட்டாங்க.. //

adada.. Charles! avanga vazhakama vilakkama sonna madhri thaan naanum vazhakam polave.. =) neenga edho appavi feel pannuvanga nu ellam feel pannadhinga.. :D

middleclassmadhavi said...

//இன்னும் நூறு வருஷம் இங்க வாழ்ந்தாலும், என்னை தூக்கத்துல எழுப்பி "தேசிய கீதம் பாடு" னு சொன்னா "ஜனகனமன" தான் வரும், "O'Canada" வராது // புல்லரிச்சுடுச்சு!
உங்கள் பதிவு உண்மையான ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறது.

RVS said...

//இதுவரை, "ஒருகை ஓசை எழுப்பாது"னு சொல்லிட்டு இருந்தோம் "எழுப்பும்"னு "சிட்டிகை" போட்டு நிரூபிச்சுட்டார் Anna Hazare... நாமும் முடிந்த வரை அவரை பின்பற்ற முயலுவோம்//
இது பாயின்ட்!

மைண்ட்வைஸ் வரும் முன்னே அப்பாவி வருவார் பின்னே! ;-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல கதை ..நல்ல நீதி.
நல்ல பதிவு.

தப்புக்கெல்லாம் ‘நல்ல முடிவு’ தான் சீக்கிரம் வரனும்..

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

நல்ல பதிவு தங்கமணி, உங்கள் எழுத்து நடை நன்று. உங்களை அப்பாவின்னு சொல்றதா அடப்பாவின்னு சொல்றதான்னு தான் தெரியலை.

//"நான் இந்த ஊருக்கு (கனடா) வந்து ஏழு வருஷம் முடிஞ்சு இப்ப எட்டாவது வருஷம், இந்த ஏழு வருசத்துல வீடு வாங்கினோம், அதுக்கு Mortgage வாங்கினோம், வீட்டை வித்தோம், கார் வாங்கினோம், வித்தோம், டிரைவிங் லைசன்ஸ் வாங்கினோம், குடியுரிமை வாங்கினோம், பாஸ்போர்ட் வாங்கினோம்... இன்னும் நெறைய நெறைய னோம்'கள் உண்டு... ஆனால் இதுவரை ஒரு பைசா கூட லஞ்சம் கேட்கப்பட்டதும் இல்லை, கொடுக்கப்பட்டதும் இல்லை, கொடுக்காததால் எந்த வேலையும் தடைபட்டதும் இல்லை" //

லஞ்சம் குடுக்கமா ஒரு வேலையும் இந்தியால நடக்காதுன்னு சுத்தி வளைச்சு சொல்லிட்டீங்க, நீங்க அங்கே எல்லாம், இந்தியால இருக்கிற மாதிரியே தான் இருக்கீங்களா? அங்கே எங்கயாவது ரோட்-ல எச்சி துப்பி இருக்கீங்களா? வீட்டு வாசலை கூட்டி நடு ரோட்-ல குப்பையை தள்ளி விட்டு இருக்கீங்களா? ஏதாவது ஒண்ணு இங்கே பண்ற மாதிரி அங்கே பண்றதுக்கு முயற்சியாவாது பண்ணி இருக்கீங்களா?

நீங்க ஒரு பொருளாதார வல்லுனர் வேறே, உங்களுக்கு நான் சொல்லவேண்டியதா போச்சு. ஊழல், லஞ்சம் இதெல்லாம் எங்கே ஆரம்பிக்குது தெரியுமா? நீங்க கட்டாம மறைக்கிற வரியில இருந்து தானே, அட இந்தியால வீடு வாங்குனா, சரியான விலைக்கு ஸ்டாம்ப் டியூட்டி கட்டுறீங்களா? பாதி வேலைக்கு கூட கட்டுறது இல்லை. நாட்டுல இருக்க கருப்பு பணத்தை பாதி பேசுற நாம வீட்ல இருக்க கருப்பு பணத்தை பத்தி யோசிச்சு இருக்கோமா? அப்புறம் எதுக்கு நமக்கு ஆதங்கம் வரணும்.

இன்னும் 200, 300 வருசமானாலும் காத்திருப்போமினு வேறே சொல்றீங்க. அப்பிடின்னா நம்மள அவ்வளவு சீக்கிரம் மாத்த முடியாதுன்னு நினைக்கிறீங்களா? ஒரு இந்தியப்பிரஜை வெளி நாட்டிலே சரியா இருக்கும் போது, இந்தியால ஏன் இருக்க முடியறதில்லை?

கொஞ்சம் எங்களுக்கும் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.

Sathish A said...

இந்த மாதிரி போராட்டம் அப்ப அப்ப நடந்துகிட்டுதான் இருக்கு, இது எவளவு ஜெயக்குமுங்குறது வேற விஷயம், ஆனால் இந்த மாதிரி போராட்டம் தொடர்ந்து நடக்கணும், (அப்ப அப்ப நடந்துகிட்டு தான் இருக்கு, ஆனா மீடியா இந்தமுறை முக்கியத்துவம் கொடுத்திருக்கு) அதே மாதிரி நெறையபேறு நம்புறமாதிரி overnight ல எதுவும் நடக்காது. இதுக்கு பின்னல் நிறைய விஷயம் இருக்கு பொருளாதாரம் இன்னும் இரு மடங்காவது வளரனும், வெறும் அம்பானிகல் மட்டும் இல்லாம, சாதாரண மக்களோட (கடைநிலை அரசு அதிகாரி முதல்) வாழ்க்கைதரம் ஓயாரனும், அப்பத்தான் உண்மைய நடக்கும்டறது என்னோட கருத்து...

Sathish A said...

@ஜ.ரா.ரமேஷ் பாபு: அப்பாவி சொல்லுறது எல்லா சராசரி இந்தியனோட ஆதங்கம், நீங்க பேசுறது வெறும் வெட்டி நியாயம், நீங்க கேக்குறதுல எவ்வளவு நீங்க செய்றீங்கன்னு பாருங்க (மனசாட்சியோட) உங்களுக்கு இந்தமாதிரி கேக்க தோனாது, நம்ம ஊரிலையும் சில எடத்துல லஞ்சம் இல்லாம வேல நடக்குது, எச்சி துப்பாத சில பொது இடம் இருக்கு, முக்கியமான விஷயம் நண்பரே, இன்னைக்கு வீடு/இடம் வங்கணும்ன்ன லோன் இல்லாம வாங்க முடியாது அவ்வளவு விலை எகிறிருச்சு, அதுனால நெறையபேறு சரியான வேலைக்கு தான் பத்திர பதிவு செய்றாங்க (இன்னும் சிலபேரு கூடுதல் விலைக்கு கூட), bottom line லஞ்சம் குறையணும், முக்கியமா சாதாரண மக்களை பாதிக்கிற லஞ்சம் ஒழியனும்...

DRபாலா said...

வெளிநாடுகளுக்கு பணி நிமித்தமாக செல்பவர்கள் அங்கேயே குடியுரிமை பெற்று தங்கிவிடுவதற்கு காரணம், அங்குள்ள வசதிகள் மட்டுமல்ல இந்தியாவிலுள்ள ஊழல்களும் தான்.
எல்லோருக்கும் மனதில் உள்ள ஆதங்கத்தை நீங்க இப்பதிவில் கொட்டியிருக்கிறீர்கள்.

சிறந்த பதிவு!!!!

ஹேமா said...

நகைச்சுவையோடு மனிதநீதி,மனிதம் சொல்கிறது கதை !

திவா said...

தப்பு தவறு.... எம்ஜீஆர் பாட்டு நினைவுக்கு வருது!


//Choose the best answerனு இந்த மூணு ஆப்சன் குடுத்தா, உங்க பதில் என்னவா இருக்கும்?

1 . பெற்றவர்கள்
2 . கடைசி பிள்ளை
3 . மற்ற மூணு பிள்ளைகள்

என்னோட பதில் all the above... //
யுவர் ஆனர்! இந்த பதில் மேலே சொல்லப்பட்டட் முன்றிலே எது என்று வாதியை சுட்டிக்காட்ட உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறேன்!

Priya said...

நல்ல கதை...சிறந்த பதிவு!

Sri Seethalakshmi said...

நல்ல பதிவு. சிறு கதை புத்திக்கு விருந்தாக அமைந்தது.
It's shows that your watching India closely.

ஒரு சிறிய கேள்வி ... :-)
---
// இதுல யாரேனும் ஒருத்தர் தங்கள் கடமைய சரியா செஞ்சு இருந்தா இன்னிக்கி இந்த நிலைமை ஏன்? //
---
இந்த டயலாக் "அந்நியன்" படத்த நியாபக படுத்துற மாறி இருக்குது. is it so??

priya.r said...

புவனி .,உன்னோட மிக சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று
எங்கள் தலைமை அலுவலகம் நோர்வே நாட்டில் இருக்கிறது
உலகின் முதல் corruptionless நாடு என்று பெயர் பெற்ற நாடு
அரசியல் வாதிகள் ,அரசு அலுவலர்கள் என்று எங்கும் லஞ்சம் கிடையாதாம்
பதிவுக்கு நன்றிபா

priya.r said...

சங்கத்துக்காக சில பின்னூட்டங்கள் !
தப்பும் தவறும்... (உருப்படியா ஒரு போஸ்ட்.... அப்படினு நினைக்கிறேன்...)
நாங்க இங்கே வருவது தப்பு

அட இவங்க நம்ம கிட்டே சிக்கிகிட்டாங்களே என்று நினைப்பது தவறு என்று பொருள் கொள்ளலாமா !//உருப்படியா ஒரு போஸ்ட்.... அப்படினு நினைக்கிறேன்//

என்ன அப்பாவியிடம் இருந்தாஆஆஆஆஆ ! ஆட்சிரியம் ஆனால் உண்மை

priya.r said...

//தப்பை தப்பா செய்யறது தப்பில்லையா, இல்ல தப்பை தப்பில்லாம செய்யறது தப்பா?

தப்பு தப்பா செய்யறது தப்புன்னு தெரிஞ்சும் அதே தப்பை தப்பில்லாம செய்யறவங்களை என்ன செஞ்சா தப்பில்ல... நீங்களே சொல்லுங்க மக்களே...//
எங்களை மகிழ்விக்க என்று நினைத்து நீங்க மொக்கை போடுவது தப்பு
அதையே திரும்ப திரும்ப போட்டா அது தவறு
இல்லே அப்பாவி தப்புவை தெரியாம செய்து அது தெரியாம செய்தாலும் தப்பு தப்பு தான் நீ சொல்றது எனக்கு தப்பா தெரிந்தாலும்
நான் சொல்றது தப்பு ன்னு நீ சொல்றதை நான் திரும்பவும் தப்பு அப்படின்னு சொல்றதை நீ மறுத்து நான் சொல்றது தப்புன்னு சொல்றது
சரின்னு தெளிவா புரிஞ்சு போச்சு
முடிவா, தெரியாம தப்பை தப்புன்னு செய்யறவங்களை விடதெரிஞ்சே தப்பை தப்பில்லாம செய்யறவங்களை என்ன செய்தாலும் தப்பு இல்லை என்று புரிய வைத்ததற்கு நன்றி (மகளே நான் CID சகுந்தலாவா !யாரை பார்த்து ........:))

பத்மநாபன் said...

தவறுக்கும் தப்புக்கும் வித்தியாசத்தை சொன்ன விதம் வித்தியாசமாக இருந்தது..

குட்டிக் கதையும் அதை அனலைஸ் செய்த முறையும் நன்றாக இருந்தது...

priya.r said...

//What I'm trying to say is... சரி, இந்த பீட்டர் விடறதை முடிஞ்ச மட்டும் இனி கம்மி பண்ணிக்கறேன்... (போன வாரம் தமிழ் புத்தாண்டு பதிவுனால நடந்த டேமேஜ் அப்படி... அதுலயும் நம்ம கெக்கே பிக்குணி அக்கா அக்கு வேறு ஆணி வேறா டேமேஜ் பண்ணி போட்டாங்க..... அதுக்கு ப்ரியா அக்கா கூட்டணி வேற... அவ்வ்வ்வவ்வ்வ்வவ்.....ஜஸ்ட் கிட்டிங் கெக்கே பிக்குணி அக்கா...:))))//

ஓ நீ கூட அடுத்த லெவல் க்கு KP சொன்னதை ஐந்தாம் மாடியில் இருந்து ஆறாம் மாடிக்கு கொண்டு போறீங்களான்னு நக்கலா கேட்டாய் தானே ! அந்த நாள் ;அந்த நாள்ல்ல்!! அப்போவே நானும் என்ற தோழியும் முடிவு பண்ணிட்டோம் ;தானை தலைவி கிட்டே இருந்து உனக்கு ஆப்பு ரெடி ஆகிட்டு இருக்காம்! KP சீக்கிரம் அந்த அப்பாவியை கலாய்க்கும் பதிவை போடுங்கப்பா !

Ramani said...

எத்தனையோ நோம்-களில்
லஞசம் நோ எனச் சொன்னது
மனதில் பளிச்செனப்பட்டது
நல்ல உணர்வுகளை தூசிதட்டி
எழுப்பிச் செல்லும் பதிவு
தொடர வாழ்த்துக்கள்

priya.r said...

//இன்னும் நூறு வருஷம் இங்க வாழ்ந்தாலும், என்னை தூக்கத்துல எழுப்பி "தேசிய கீதம் பாடு" னு சொன்னா "ஜனகனமன" தான் வரும், "O'Canada" வராது //
அப்புறம் அன்னைக்கு டீச்சர் வேர்ல்ட் மாப் லில் கனடா எங்கே காட்டு என்று கேட்டதற்கு ,உனக்கு உண்மையில் பதில் தெரியாம தான்
கனடாவை நான் காட்டி கொடுக்க மாட்டேன் என்று சொன்னாயா .,அவ்வ்வ்வ்வ்

priya.r said...

//இதுவரை, "ஒருகை ஓசை எழுப்பாது"னு சொல்லிட்டு இருந்தோம் "எழுப்பும்"னு "சிட்டிகை" போட்டு நிரூபிச்சுட்டார் Anna Hazare... நாமும் முடிந்த வரை அவரை பின்பற்ற முயலுவோம்//
கண்டிப்பாக ! எல்லோரின் மனதிலும் நம்பிக்கை தோன்றுகிறது ;இனி ஒழுங்காக அரசாங்கம் நடக்கும் என்ற நம்பிக்கை பிறக்குது .

உண்மைய சொல்லணும்னா, எனக்கு மத்தவங்க அளவுக்கு அரசியல் அவ்வளவா தெரியாது, மத்ததும் புத்தகத்தை தாண்டி அதிகம் தெரியாது, ஆனா மனிதம் தெரியும், தெரியும்னு சொல்றத விட "மனிதத்தில் நம்பிக்கை உண்டு"னு சொன்னா இன்னும் பொருத்தமா இருக்கும்//
அந்த நம்பிக்கையின் அடிப்படையில் இந்த பதிவு...//
மனிதம் தெரிந்தாலே போதும் ;எல்லாம் தெரிந்தா மாதிரி தான் ;நல்ல பதிவு பதிவுக்கு நன்றி புவனா

உங்களை சிரிக்க வெக்க (அழ வெக்கவும்) நிறைய பதிவு எழுதி இருக்கேன்... அதை படிச்ச நீங்க, இதையும் பொறுமையா படிப்பீங்கங்கற நம்பிக்கைல இதை போடறேன்... //
படித்தாகி விட்டது ! என்ன இரண்டு பதிவா போட்டு இருந்தா இன்னும் சிறப்பா இருந்து இருக்கும்னு எனக்கு தோணுது
நன்றி...

sriram said...

உருப்படியான பதிவு அடப்பாவி..
நாங்களும் இங்க நெறய “னோம்” ஆனா இதுவரை ஒரு டாலர் லஞ்சம் கொடுத்தது இல்லை. மாமாகிட்ட மாட்டி டிக்கட் வாங்கி கோர்ட்டுக்குப் போயி அபராதத்தை பாதியா கொற்ச்சிருக்கேன். மூணு முறை மாமாக்கள் கிட்ட மாட்டி பேசிக் கழுத்தை அறுத்து பிடிச்சதுக்கு வார்னிங் மட்டுமாவது தர்றேனேன்னு அவர்களை கதற அடிச்சிருக்கேன்.

மூணு வருசமா லஞ்சத்தை மறந்திருந்தேன் மூணு வாரம் இந்தியா செல்லும் வரை. இந்தியாவில் இருக்கும் லஞ்சத்தை நினைச்சா ரொம்ப கவலையா இருக்கு.

வருத்ததோட சொல்றேன் - India has gone to a point of no return

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Vasagan said...

அருமையான பதிவு புவனா. இங்கு இருந்த மூன்று வருடங்களில் மற்றும் அதற்க்கு முன் தைவான் மற்றும் ஜப்பான் இரண்டு வருடங்கள் லஞ்சம் கொடுக்காமல் இருந்தாச்சு, இன்னும் இரண்டு மாதத்தில் ஊருக்கு திரும்ப போக வேண்டும், அங்கு உள்ள லஞ்சத்தை நினைத்தால், ஊருக்கு போக மனசு வரமாடின்கிறது . நான் நினைத்தால் கனடா வில் இருந்து விடலாம்.
ஆனால் இங்கயே இருக்க மனசும் வரவில்லை, ஊருக்கு போய் என்னால் முடிந்த அளவுக்கு என்னுடைய students க்கு awareness உண்டாக பார்க்கவேண்டும்.

Porkodi (பொற்கொடி) said...

//India has gone to a point of no return//

Boston, how do you say that? May be, the point of return is just not within our lifetimes.

ஏதோ ஒரு படம் வரும்.. ஒருத்தன் டைம் மெஷின்ல ரொம்ப எதிர் காலத்துக்கு போயிடுவான், அப்புறம் கொஞ்சம் பின்னால் வருவான், இப்படி போயிட்டே இருக்கும். அதுல மனித இனம் அறிவின் உச்சத்தை எட்டி அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மந்தமாகி, கற்காலத்துல இருந்த மாதிரி இருப்போம் (எதிர்காலத்துல!). அந்த தியரி சின்ன விஷயங்களான லஞ்சம், நாட்டு சமாச்சரத்துல கூட அப்ளை ஆகும் என்பது என் எண்ணம்.

asiya omar said...

மிக நல்ல பகிர்வு,என்னை ரொம்பவும் கவர்ந்த ஒண்ணு... "Ignorantia juris non excusat"...
எப்பவும் உங்க பகிர்வை படித்தால் சலிப்பே வருவதில்லை,எவ்வளவு எழுதினாலும்,பாராட்டுக்கள்..

sriram said...

//Boston, how do you say that? May be, the point of return is just not within our lifetimes.//

கேடியக்கா, மொதல்ல - என் பேரு ஸ்ரீராம், பாஸ்டன் இல்லை.

நீங்க எழுதினைதை நீங்களே ஒரு முறை படிச்சு பாருங்க - May be, the point of return is just not within our lifetime.
நீங்க எப்படி அப்படி சொல்லலாம்? இந்தியாவில் லஞ்சம் இன்னும் 10 வருசத்தில் கண்டிப்பா ஒழிக்கப் படும் - அப்படின்னு உங்களால ஏன் சொல்ல முடியவில்லை? ஏன்னா உங்க மனசாட்சிக்கு உண்மை நிலவரம் தெரியும்.

ஊழல் இந்தியாவில் முழுமையா பரவியிருக்கு, நாமும் அதை ஏற்றுக் கொண்டு வாழத் தயாராகி விட்டோம். அன்னா ஹசரே எதுக்காக உண்ணாவிரதம் இருந்தார், மசோதாவின் முக்கியத்துவம் என்னன்னு மெழுகுவர்த்தி ஏந்திய எல்லோருக்கும் தெரியுமா? எல்லாரும் போறாங்க, நாமும் போவோம் என்கிற ஆட்டு மந்தை புத்தி நமக்கு. யாருக்கும் எதைப் பத்தியும் கவலையில்லை நம்ம நாட்டில்.

மாற்றத்துக்கு ஒரே வழி புரட்சி, அகில இந்திய அளவில் புரட்சி ஏற்படவும் சான்ஸ் கம்மி - மிகப் பலம் பொருந்திய அரசு மற்றும் மொழி வாரியாக மக்கள் பிரிந்திருப்பது ரெண்டும் இதுக்கு நான் கூறும் காரணங்கள்.

நான் முன்ன சொன்னதுக்கே கோவப் பட்டீங்களே, இப்ப ஒண்ணு சொல்றேன் கேளுங்க, என் கணக்குப் படி இன்னும் 50 வருஷத்துக்குள் இந்தியாவில் பிளவு நிச்சயம். அவ்வளவு பிரச்சனை மாநிலங்களுக்குள்.

இதில் எதையும் நான் சந்தோஷமா சொல்லலை, மிக அதிகமான வருத்ததுடந்தான் சொல்கிறேன், ஆனா இவைதான் இன்றைய நிலைமை.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

siva said...

MEEEEEEEEEEEEEEEEE THE FIRSTU...
THALAVI VALGA...

ஸ்ரீராம். said...

//"இது லத்தீன் மொழில சட்டம் பத்தி சொல்லப்படும் ஒரு....ஒரு....என்னனு சொல்றது... ஒரு சொற்சொடர்னு சொல்லலாம்.."//

சொலவடை......!

ஸ்ரீராம். said...

//""தெரியாம செஞ்சா தவறு, அதை மன்னிக்கலாம்... தெரிஞ்சே செஞ்சா தப்பு அதை மன்னிக்க கூடாது" னு சொன்னார்"//

பழைய தலைவர் பாட்டு கேட்டதில்லையா..."தவறு என்பது தவறிச் செய்வது...தப்பு என்பது தெரிந்து செய்வது...தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும்..தப்பு செய்தவன் வருந்தியாகணும்..."

ஸ்ரீராம். said...

//"இதெல்லாமும் நல்ல மாற்றம் தானே... குறைகளை சுட்டி காட்டுவதை விட நிறைகளை பாராட்டினால் இன்னும் நாலு பேருக்கு மாறணுங்கற எண்ணம் மனசுல வரும்."//

எங்கள் ப்ளாக் தேர்தல் காட்சிகள் படிக்கவில்லையா?!!

//"இதுவரை ஒரு பைசா கூட லஞ்சம் கேட்கப்பட்டதும் இல்லை, கொடுக்கப்பட்டதும் இல்லை, கொடுக்காததால் எந்த வேலையும் தடைபட்டதும் இல்லை"//

எங்கள் ப்ளாக் லஞ்ச பாரதம் படிக்கவில்லையா? (எப்படியெல்லாம் விளம்பரப் படுத்த வேண்டியதா இருக்கு!!!)

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

எங்கள் தமிழ் ஆசான் நான் கல்லுரியில் படிக்கும் போது கூறியதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்,

தெரியாமல் செய்தால் தவறு / தப்பு (இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை)
தெரிந்து செய்தால் அது திமிறு என்று கூறுவார். அதாவது உனக்கு தவறு/தப்பு என்று தெரிந்து நீ செய்தால் அது திமிறால் தான் செய்கிறாய் என்று உறக்க சொல்லுவார்.

இதை ஒரு முறை விசுவின் அரட்டை அரங்கத்திலும் கூறியுள்ளார் என்பது கூடுதல் செய்தி.

ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு பொறுப்புள்ள நாட்டுக்கு தேவையான செய்தி. நன்றி சகோதரி

Anonymous said...

அம்மணி,
இந்தியாவை சரி செய்யனும்னா இந்தியாவுக்கு வந்து எதாச்சும் செஞ்சு காண்பிங்க.இல்லாட்டி உங்க அதிருஷ்டத்திற்கு கடவுளுக்கு நன்றி சொல்லிப்புட்டு,உங்க lifeஅ Canada வில் enjoy பண்ணுங்க.அதவிட்டுப்புடு இப்படி Pavilion Stand இல ஒக்காந்து மேட்ச் பார்த்துக்கிட்டு தோனி என்ன செய்யனும்னு சொல்லாதீங்க!
நன்றி அம்மணி

Porkodi said...

பாஸ்டன் ஸ்ரீராம்,

//நீங்க எப்படி அப்படி சொல்லலாம்? இந்தியாவில் லஞ்சம் இன்னும் 10 வருசத்தில் கண்டிப்பா ஒழிக்கப் படும் - அப்படின்னு உங்களால ஏன் சொல்ல முடியவில்லை? ஏன்னா உங்க மனசாட்சிக்கு உண்மை நிலவரம் தெரியும். //

நான் எதுக்கு இன்னும் 10 வருஷத்துல தீர்ந்துடும்னு சொல்லணும்?! கண்டிப்பா இன்னும் 10 வருஷத்துல ஏன் 20 வருஷத்துல கூட தீராது, ஏன்னா அப்போ கூட இதுக்கு மேல பொறுத்து போக முடியாதுங்கற மனநிலைக்கு மக்கள் வந்துருக்க மாட்டோம்னு நினைக்கிறேன். நான் சொல்ல வந்தது என்னனா, நம்ம கற்பனைக்கு மீறி நிலைமை மோசமாகும் ஒரு காலம் வரும். அப்போ தான் ஒரு புரட்சி நடக்கலாம் என்பதே. அது நம்ம காலக்கட்டத்துக்குள்ள இருக்காது, ஏன் அப்போ நீங்க சொல்ற மாதிரி இந்தியாவே இல்லாம குட்டி நாடுகள் ஆகிருக்கலாம். இது ஒரு சைன் வேவ் மாதிரி வெச்சுக்கிட்டோம்னா உச்சிக்கு போக நிறைய காலம் இருக்குன்னு சொல்ல வ‌ந்தேன்.

//நான் முன்ன சொன்னதுக்கே கோவப் பட்டீங்களே, இப்ப ஒண்ணு சொல்றேன் கேளுங்க, என் கணக்குப் படி இன்னும் 50 வருஷத்துக்குள் இந்தியாவில் பிளவு நிச்சயம். அவ்வளவு பிரச்சனை மாநிலங்களுக்குள்.//

ராம‌ச்ச‌ந்திரா!!!!! நான் எங்க‌ய்யா கோவ‌ப்ப‌ட்டேன்??!! என‌க்கு இந்த‌ பிள‌வு கொஞ்ச‌ம் சீக்கிர‌மே ந‌ட‌ந்தா கூட‌ தேவ‌லைன்னு தோணுது.. ஒண்ணு நிஜ‌மாவே சின்ன‌ அர‌சாங்க‌ம் பெட்ட‌ர் பெர்ஃபாம‌ன்ஸ் இருக்கும், இல்லைன்னா தனி நாடுக்கே உரிய எக்க‌ச்ச‌க்க‌ க‌ஷ்ட‌ம் ப‌ட்டாவ‌து புத்தி வ‌ரும்!

Vasagan said...

\என‌க்கு இந்த‌ பிள‌வு கொஞ்ச‌ம் சீக்கிர‌மே ந‌ட‌ந்தா கூட‌ தேவ‌லைன்னு தோணுது.. ஒண்ணு நிஜ‌மாவே சின்ன‌ அர‌சாங்க‌ம் பெட்ட‌ர் பெர்ஃபாம‌ன்ஸ் இருக்கும், இல்லைன்னா தனி நாடுக்கே உரிய எக்க‌ச்ச‌க்க‌ க‌ஷ்ட‌ம் ப‌ட்டாவ‌து புத்தி வ‌ரும்!\

Ayo kodi
nee ninaikira mathri illai amma, chinna chinna arasu means ennareamum sandai thaan irukkum, example some countries in middle East and African countries.
\இந்தியாவில் பிளவு நிச்சயம்.\
Vendaam
kadavulai kumputuvom.

Jaleela Kamal said...

வாங்க அப்ப்டியே என் பக்கம் அவார்டை பெற்று செல்லுங்கள்
பதிவ அப்பரம் படிக்கிறேன் பா

ஜ.ரா.ரமேஷ் பாபு said...

@Sathish A: நண்பரே, நீங்கள் தப்பர்த்தம் செய்து கொண்டு விட்டேர்கள் என்று நினைக்கிறேன், நான் சொல்ல வந்தது, நாம் எதையும் மாற்றா முடியாது நாம் மாறும் வரை. நான் மாறினால், நாம் மாறலாம், நாம் மாறினால் நாடு மாறும். கீழிருந்து மேல் நோக்கிய மாற்றம் தேவை என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். வெறும் ஆதங்கம் என்பது கண் துடைப்பு போன்றது, வேறெதுவும் பயனில்லை

தக்குடு said...

நெஜமாவே நல்ல போஸ்ட் தான் மேடம்! (ரஸ்க் போஸ்டை படிச்சுட்டு வந்து இந்த கருத்தை சொல்லவில்லை யுவர் ஆனர்!)..:PP

அப்பாவி தங்கமணி said...

@ மகி - answer சொல்லாம வெறும் present மட்டும் போட்டதால் just pass mark மட்டுமே வழங்கப்படுகிறது...:))

@ balaji - தேங்க்ஸ்'ங்க பாலாஜி..

@ Chitra - நன்றிங்க சித்ரா.. :)

@ பிரதீபா - தேங்க்ஸ் தீபா... :)

@ Porkodi (பொற்கொடி) - எப்படி எப்படியோ கமெண்ட் வரும்னு எதிர்பாத்தேன்... இப்படி ஒரு கமெண்ட் எதிரே பாக்கலை...ஹா ஹா ஹா... தட்ஸ் குட்... போஸ்ட் முழுக்க படிச்சு இருக்கீங்கன்னு புரிஞ்சு போச்சு... நீங்க நாக் அவுட் ஆனதுல எனக்கு ஒரே சந்தோஷம்... கடைசீல பதிவு சூப்பர்னு சொல்லி இருக்கீங்க சரி.. அதென்ன ரெண்டு ஆச்சிர்யகுறி... எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்...:)))))

@ Charles - தேங்க்ஸ் சார்லஸ்... ஹா ஹா... சரியா சொன்னிங்க... நம்ம கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறாங்களே... :)))

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க

@ Rathnavel - நன்றிங்க அய்யா

@ Balaji saravana - ரெம்ப நன்றிங்க பாலாஜி...:)

@ இராஜராஜேஸ்வரி - ரெம்ப நன்றிங்க ராஜி'ம்மா

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - வழிமொழி or வலிமொழி... ஹா ஹா...:)

@ சி.பி.செந்தில்குமார் - ஆமாங்க அதே அதே... பாயிண்ட்ஐ புடிச்சுட்டீங்க...:))

@ Jey - ரெம்ப நன்றிங்க ஜெ...

@ தமிழ் உதயம் - ரெம்ப நன்றிங்க

@ Porkodi - ஹா ஹா... அதானே... நோ பீலிங்க்ஸ் நோ பீலிங்க்ஸ்... யு கேன் ப்ரோசீட் யுவர் ஆனர்...:))

@ middleclassmadhavi - ரெம்ப தேங்க்ஸ்'ங்க மாதவி

@ RVS - நன்றிங்க... ஹா ஹா... மைண்ட்வாய்ஸ் சம்மர் வெகேசன் போய் இருக்குங்க...:)

@ முத்துலெட்சுமி/muthuletchumi - நன்றிங்க...:)

அப்பாவி தங்கமணி said...

@ ஜ.ரா.ரமேஷ் பாபு - உங்க கருத்துக்கு ரெம்ப நன்றிங்க....

//ஏதாவது ஒண்ணு இங்கே பண்ற மாதிரி அங்கே பண்றதுக்கு முயற்சியாவாது பண்ணி இருக்கீங்களா?//
என்னை பொறுத்த வரை discipline என்பது தனி ஒருவரை பொறுத்தது, இருக்கும் இடத்தை பொறுத்தது இல்லை... சுத்தமா இருக்கணும்னு நினைக்கறவங்க சாலை ஓரத்துல வாழ்ந்தாலும் சுத்தமா இருப்பாங்க... சகதி பண்ணனும்னு நினைக்கறவங்க சந்திர மண்டலத்துக்கு போனாலும் குப்பை போடுவாங்க... அது அவங்க குணம் அப்படி... So it depends on self-discipline and not where they live... மத்தவங்கள பத்தி சொல்ற உரிமை எனக்கு இல்லை... நான் எப்பவும் எங்கயும் நானாதான் இருக்கேன்... இடத்துக்கு தகுந்தது போல் மாற்றி கொள்வதில்லை...

//அப்புறம் எதுக்கு நமக்கு ஆதங்கம் வரணும்//
நீங்க சொன்ன தப்புகள் எதுவும் செய்யாததால எனக்கு அந்த ஆதங்கம் வந்தது...

//அப்பிடின்னா நம்மள அவ்வளவு சீக்கிரம் மாத்த முடியாதுன்னு நினைக்கிறீங்களா//
Rome cannot be built it one day, that was just a practical jesture. நூறு கோடிக்கும் மேல் மக்கள் தொகை உள்ள நம் நாட்டில் மொத்தமும் சீர் படுத்த சில நூறு வருடங்கள் ஆகும் அப்படிங்கற அர்த்ததுல தான் நான் சொன்னேன்... யாரையும் குறை சொல்வது என் நோக்கமில்லை சார்...

//ஒரு இந்தியப்பிரஜை வெளி நாட்டிலே சரியா இருக்கும் போது, இந்தியால ஏன் இருக்க முடியறதில்லை?//
அப்படி தான் இருக்கோம் / இருக்கேன்... அதன் காரணமா "பாரின் பந்தா... குப்பை தொட்டில தான் குப்பை போடுவாங்களாம்... பிளாஸ்டிக் கப் யூஸ் பண்ண மாட்டாங்களாம்... வாங்கற பொருளுக்கு பில்லு கேப்பாங்களாம்..." னு கேலி பேச்சும் கேட்டு இருக்கோம்...

அப்பாவி தங்கமணி said...

@ Sathish A - ரெம்ப நன்றிங்க சதீஷ் உங்களுடைய கருத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு... மற்ற கருத்துக்கும் நன்றி...:)

@ DRபாலா - நன்றிங்க பாலா...

@ ஹேமா - நன்றிங்க ஹேமா

@ திவா - எங்க அப்பா தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்... அதனால எனக்கு பெரும்பாலான தலைவர் பாடல்கள் மனப்பாடம், தப்பு தவறு பாட்டும் சேத்து...என்னோட பேவரெட் "நம் நாடு" படத்தில் வரும் "நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி" & வேற ஒரு படத்தில் வரும் "சிக்குமங்கு சிக்குமங்கு சின்னபாப்பா"...:))... ஹா ஹா ஹா... திவாண்ணா... வாதி பிரதிவாதியின் கூற்றை கேட்டதில் இருந்து, உங்கள் வழக்கு மேல் முறையீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது... வழக்கு நடக்கும் நாள் நேரம் விவரங்கள் தனி அஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்... நன்றி... :))

@ Priya - தேங்க்ஸ் ப்ரியா...:)

@ Sri Seethalakshmi - தேங்க்ஸ்ங்க சீதா... அந்த டயலாக் சொல்லி குடுத்ததே நான் தான்னு சொன்னா நீங்க நம்பவா போறீங்க... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... எனக்கு சரியா அந்த படத்தில் டயலாக் நினைவில் இல்லிங்க சீதா... சொன்னதுக்கு நன்றி...:))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - தேங்க்ஸ் ப்ரியா அக்கா...:))

//ஆட்சிரியம் ஆனால் உண்மை//
'ஆட்சி'ர்யமும் இல்ல... 'ஆச்சி'ர்யமும் இல்ல... அது ஆச்சர்யம்... எங்க சொல்லுங்க பார்ப்போம்... ஆ..ச்..ச...ர்..ய..ம்... ஆச்சர்யம்... ஹா ஹா...ஜஸ்ட் கிட்டிங் ப்ரியா...:))

ஐயையோ... உங்க தப்பு டயலாக் பாத்தப்புறம் நான் இங்க வந்ததே தப்புன்னு புரிஞ்சு போச்சு... மீ எஸ்கேப்....................:))

//உனக்கு உண்மையில் பதில் தெரியாம தான் கனடாவை நான் காட்டி கொடுக்க மாட்டேன் என்று சொன்னாயா //
பப்ளிக்'ல் மானத்தை கப்பல் ஏற்றும் ப்ரியாவை வன்மையாக கண்டிக்கிறேன்...:)))

//நல்ல பதிவு பதிவுக்கு நன்றி புவனா//
தேங்க்ஸ் ப்ரியா'க்கா...:)

//என்ன இரண்டு பதிவா போட்டு இருந்தா இன்னும் சிறப்பா இருந்து இருக்கும்னு எனக்கு தோணுது//
ரெண்டு பதிவாவா? அது சரி... நான் என்ன ப்ரியாவா? பொண்ணு பாத்த கதையவே ரெண்டு பார்ட்டா போடறதுக்கு... படிக்கறவங்களுக்கு ஒரு பொண்ணா ரெண்டு பொண்ணா கண்பியுசன் வந்துடுச்சாம்... ஹா ஹா...:))

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - நன்றிங்க...:)

@ Ramani - ரெம்ப நன்றிங்க உங்கள் ஊக்கமான வார்த்தைகளுக்கு...மற்றும் வாழ்த்துக்களுக்கும்...

அப்பாவி தங்கமணி said...

@ பாஸ்டன் sriram - நன்றிங்க நாட்டாமை...:)) அடடே, அத்தன வாட்டி மாமாகிட்ட மாட்டினா இன்சுரன்ஸ் எகிறி போய்டாதா என்ன... இங்க ஒரு ஸ்பீடிங் டிக்கெட் வாங்கினா போதும்... அடுத்த அஞ்சு வருசத்துக்கு கப்பம் கட்டணும்... (ஆனா நான் என்னிக்கி கம்மி ஸ்பீட் போறதுக்கு, I mean impeding the traffic டிக்கெட் வாங்க போறேன்னு தெரியல... ஹா ஹா...) I heard vechicle insurance is cheaper in US when compared to Canada but medical insurance is higher there... something or other...hmmm...

//வருத்ததோட சொல்றேன் - India has gone to a point of no return//
உங்க வருத்தம் நல்லாவே புரியுதுங்க... ஆனாலும் என்னமோ we're in penultimate stage not ultimate and still got a chanceனு ஒரு நம்பிக்கை, ஆசை எல்லாமும் மனதின் மூலையில் இருந்துட்டே இருக்கு...can't help it but hang on to it... thanks for reading it thru... :))

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - ரெம்ப நன்றிங்க... awareness தான் ஒரே வழி... இந்த பதிவின் நோக்கமும் அது தான்... தேங்க்ஸ் மீண்டும்...:)

@ asiya omar - ரெம்ப நன்றிங்க ஆசியா... உங்கள் பொறுமைக்கும் பாராட்டுக்கும்... :))

@ siva - ஆஹா...ஊரே வந்துட்டு போனப்புறம் வந்துட்டு MEEEEEEEEEEEEEEEEE THE FIRSTU...நான் டென்சன் ஆய்டுவேன் சொல்லிட்டேன்... but, தலைவி வாழ்கனு சொன்னதால டென்ஷன் back door வழியா போயே போச்சு... :)))

@ ஸ்ரீராம். - அதான் அதான்... அதே தான்.. சொலவடை... சில சமயம் சில வார்த்தைகள் தொண்டைல வந்து அங்கேயே நின்னுடும்..:) .... தலைவர் பாட்டு தினமும் கேட்டு இருக்கேங்க... எங்க அப்பா தீவிர தலைவர் ரசிகர்... "எங்கள் ப்ளாக்" பதிவுகள் எல்லாமும் "buzz"ல் தவறாமல் படிச்சுடுவேன்... ப்ளாக் போய் கமெண்ட் சொல்லத்தான் விட்டு போகுது... எங்கள் ப்ளாக்'க்கு விளம்பரமா? பூக்களின் வாசனைக்கு விளம்பரம் வேணுமா என்ன...:)))

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - //தெரிந்து செய்தால் அது திமிறு// இது ரெம்ப சரினு நீங்க சொன்னப்புறம் தோணுது... அதை எங்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு ரெம்ப நன்றிங்க brother...

@ பெயரில்லா - உங்கள் கருத்துக்கு நன்றி... மொதல்ல ஒரு விஷயம் சொல்லணும்... வெளிநாட்டில் இருக்கறதை அதிருஷ்டம்னு நீங்க சொன்ன கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லிங்க... நீங்க மட்டுமில்ல,நெறைய பேர் இப்படி தான் நெனச்சுட்டு இருக்காங்க... இங்க சில சௌகரியங்கள் இருக்கு, அதை நான் மறுக்கல... அதே போல பல அசௌகரியங்களும் இருக்கு... அசௌகரியங்கள் அதிகம் பேசப்படாததால அது வெளிய தெரியறதில்ல... அதை பத்தி இன்னொரு முறை பேசலாம்... Pavilion Stand இல ஒக்காந்து மேட்ச் பார்த்துக்கிட்டு தோனி என்ன செய்யனும்னு சொல்ற நிலைல மட்டும் தான் நான் இப்ப இருக்கேன்... அதனால அதை செய்யறேன்... களத்தில் இறங்கி விளையாடும் காலம் வரும்... அப்போ இப்படி போஸ்ட் போடறதை விட்டுட்டு செயல்ல இறங்கறேன்... நன்றி உங்கள் பகிர்வுக்கு

@ Jaleela Kamal - ரெம்ப நன்றிங்க அவார்டுக்கு... இதோ வந்து வாங்கிக்கறேன்... :)))

@ தக்குடு - ஹா ஹா... தேங்க்ஸ் தக்குடு...:))

krishnakumar said...

very good. keep it up

Prasanna said...

ஹசாரே பத்தின கட்டுரைல அவர் ரெண்டு மூணு லைன் தான் வரார்.. நாம தான் இது அவர பத்தினதுன்னு கண்டு பிடிச்சி புரிஞ்சிக்கணும்.. இது ஒரு பின் நவீனத்துவ கட்டுரை :)

ஹுஸைனம்மா said...

சீரியஸா பேசும்போதாவது, ரொம்ப வளவளங்காம நேரா மேட்டருக்குள்ள வரக்கூடாதா? சிரிச்சுகிட்டே வரறதிலே, சீரியஸா நீங்க பேசுறதுக்குக்கூட சிரிக்க வருது. கோவிக்காதீங்க.

வெளிநாடுகளில் வாழ்ந்ததால் பெற்ற நல்ல பழக்கங்களை, நம் நாட்டில் செயல்படுத்த முனையும்போது, கிடைக்கும் ஏளனப் பார்வைகள் கொஞ்சமா!! நான் வெளிநாடு வருவதற்கு முன்பே, எங்கயும் எச்சில் துப்புவதில்லை, குப்பை போடுவதில்லை.

இன்னும் சொல்லப் போனா, வெளிநாடுகளில் வாழ்பவர்கள் லஞ்சமில்லா வாழ்வின் அருமைகளை உணர்ந்து பேசுவதாலும், வலியுறுத்துவதாலும்தான் இந்தியாவில் விழிப்புணர்ச்சி கூடியிருக்கிறதுன்னும் சொல்லலாம். திரைகடலோடி திரவியம் மட்டுமல்ல, விழிப்புணர்வும் கொண்டு வர்றோம் இந்தியாவுக்கு.

ஆனா, என்.ஆர்.ஐ. என்றாலே, பல மடங்கு லஞ்சம் கேட்பது இந்தியாவில் வழக்கமாகிவிட்டது. குறைந்த விடுமுறை, இன்னபிற காரணங்களால், எல்லா சமயத்திலும் அதை தவிர்க்க எல்லாராலும் முடியவில்லை என்பது வருத்தமான உண்மையே.

அமைதிச்சாரல் said...

//"தெரியாம செஞ்சா தவறு, அதை மன்னிக்கலாம்... தெரிஞ்சே செஞ்சா தப்பு அதை மன்னிக்க கூடாது"//

இதைத்தான் அன்னிக்கே தலீவர் பாடிட்டு போயிருக்கார்..

vgr said...

tsk tsk tsk....

எல் கே said...

இன்னிக்கு புதன். இன்னும் இந்த வார ஜில்லுனு ஒரு காதல் வரலை. ஹைய்யா நாங்கலாம் ஜாலியா இருக்கோம்

அன்னு said...

I second bro.L.K :)))))

priya.r said...

அப்படி எல்லாம் யாரும் தப்பு கணக்கு போட வேண்டாம் !
எங்க புவனா இன்னும் ஒரு நாப்பது ஐன்பது வருஷம் கழித்து ஜில்லுன்ன்னு ஒரு காதல் கதையின் 2518 வது அத்தியாயத்தை சூப்பெரா எழுதுவா தெரியுமா :)

அனாமிகா துவாரகன் said...

கார்த்தி சார் டவுன் டவுன். நான் இன்னைக்கு காலையிலேயே எந்திரிச்சு இங்க வந்தா, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

அன்னு அக்கா, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

பிரியாக்கா, கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

இட்லிமாமி, நீங்க போடுங்க. நான் ஒரு பத்து கள்ளவோட்டாவது போடறேன்.

Charles said...

அப்பாவி மேடம்.. நெலமை கட்டுக்கு அடங்காம போயிட்டு இருக்கு... சீக்கிரம் கதையை போட்டுடுங்க...அவ்வ்வ்வவ்....
@அனாமிகா : இன்னும் தேர்தல் ஜுரத்துல இருந்து மீண்டு வரலியா?
LK சார், அன்னு மேடம், பிரியா மேடம்: கதை போட்டாலும் போடலைனாலும் உங்கள் திருப்பணி தொடரட்டும்... ஹி ஹி ஹி .....

அப்பாவி தங்கமணி said...

@ krishnakumar - Thank you ...

@ Prasanna - ஹா ஹா ஹா... இதான் வஞ்சபுகழ்ச்சி கமெண்ட்... ஒகே ஒகே...:)))

@ ஹுஸைனம்மா - ஐயையோ.... அப்படி ஒண்ணு இருக்கோ... சரிங்க அக்கா... இனிமே சீரியஸ் போஸ்ட் சீரியஸ்ஆ சொல்றேன்... ஒகேவா? நீங்க சொன்ன ஒண்ணு ஒண்ணும் நூத்துக்கு நூறு உண்மை... என்ன செய்ய...:((((

@ அமைதிச்சாரல் - அதே அதே... :)))

@ vgr - yes yes yes...:)))

@ எல் கே - ரெம்ப சந்தோசப்பட வேண்டாம்... இதோ போட்டாச்சு... கொஞ்சம் வேலைனு லேட்ஆ போட்டா உடனே இங்க பட்டாசு வெடிக்காதது தான் குறை.... ஹ்ம்ம்ம்....:)))))

@ அன்னு - அடப்பாவி... நீங்களுமா? அவ்வ்வ்வ்....

@ priya.r - படுபாவிங்களா... ஒத்த ஜென்மமாச்சும் நம்ம பக்கம் பேசுதா..... இருங்க எல்லாருக்கும் வெக்கறேன் வேட்டு ஒரு நாளைக்கு.....:))))

@ அனாமிகா - அடடா... என்ன உலக அதிசியமா இருக்கே... உட்கட்சி பூசலில் குளிர் காய காத்திருக்கிறேன் வாருங்கள் அம்மணியே...:)))

@ Charles - அது சரி... நீங்க யார் கட்சி... என் கட்சியா இல்ல அந்த சைடா? ஒண்ணும் புரியலியே...ஹா ஹா...:))

தெய்வசுகந்தி said...

Very nice!!!

அப்பாவி தங்கமணி said...

@ தெய்வசுகந்தி - Thank you..:)

Lakshmi said...

நல்ல பதிவு. அப்பாவி.

Post a Comment