Wednesday, April 06, 2011

Rusk சாப்பிடறதே Riskஆ போச்சே....ஹ்ம்ம்...:))


மைண்ட்வாய்ஸ் - என்னாச்சு அப்பாவி... ரஸ்க் சாப்ட்டு பல்லு கில்லு டேமேஜ் ஆய்டுச்சா... வயசானா இப்படி தான்... ஹையோ ஹையோ...

வேண்டாம் மைண்ட்வாய்ஸ் நான் கொல வெறில இருக்கேன்... நீயா வந்து சிக்கிக்காதே (மைண்ட்வைஸ் ஓடி ஒளி(ழி)கிறது)

அத உடுங்க... நான் சொல்ல வந்த விசியத்த சொல்லிட்டு போறேன்...

(மைண்ட்வாய்ஸ் லோ வாய்சில் - அவ்ளோ சீக்கரம் போவாளா என்ன? எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆகும்... எல்லாரும் போய் பப்ஸ், பாப்கார்ன், ஜூஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து அப்புறம் படிங்க... ஹ்ம்ம்)

ஆனா ஒண்ணுங்க... இதை படிச்சப்புறம் இனிமே யாரும் "ரிஸ்க் எடுக்கறது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி"ங்கற டயலாக் சொல்ல மாட்டீங்க... அது நிச்சியம்...

என்னமோ சொல்லுவாங்களே "போஸ்ட் போடப்போனா பிளாக்கர் சர்வர் டௌன்... கமெண்ட் போடப்போனா கரண்ட் கட்டு"னு

(எவ்ளோ நாளைக்கு தான் உப்பு விக்கறதையும் பொரி விக்கறதயுமே சொல்றது....infact இப்ப யாரும் கூடைல வெச்சு உப்பும் பொரியும் வித்துட்டு வர்றதில்ல.. அதான் நானும் பழமொழிய ரீமிக்ஸ் பண்ணிட்டேன்... ஹி ஹி...)

அந்த கதையா ஆகி போச்சு என் நிலைமை. என்ன செஞ்சாலும் வம்புலையே முடியுது... ஷூ லேஸ் கட்டினா கூட சுனாமி வந்துடுமோனு திக்கு திக்குனு இருக்குனா பாருங்களேன்... ஹும்...

அது என்னோட ராசி அப்படியா, இல்ல சுற்றமும் நட்பும் சூழ செய்யும் சதியானு இன்னும் கண்டுபிடிக்க முடியல... ஆனா நான் சி.ஐ.டி சகுந்தலாவா மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை மக்களே வெகு தூரத்தில் இல்லை... :)

இந்த கொடுமையான சம்பவம் நடந்த நாள் போன சனிக்கிழமை... சிலருக்கு தெரிஞ்சு இருக்கலாம்... நான் வார இறுதி நாட்கள்ல ரெம்ப பிஸி... அப்போ ஆபீஸ்ல தான் வெட்டியா'னு எல்லாம் கேக்கக்கூடாது... மீ ஆல்வேஸ் பிஸிபேளாபாத் ஒன்லி..:)

நான் சொல்லவந்தது என்னனா, வார நாள் விட வார இறுதில ரெம்ப ரெம்ப பிஸி... ஒரு குடும்ப இஸ்திரிக்கே உரிய பொறுப்புகள் எல்லாம் இருக்கே... அதை எல்லாம் செய்யவே சரியா இருக்கும்னு சொல்ல வந்தேன்...

அந்த பொறுப்புகள் எல்லாம் என்ன என்னனு ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்படுத்தி சொல்லி சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ளும் எண்ணம் இல்லாதபடியால் நேரா நான் மேட்டர்க்கே போறேன்...

(மைண்ட்வாய்ஸ் - போறேன் போறேன்'னு பொழுது விடிஞ்சதுல இருந்து சொல்லிட்டே தான் இருக்கா இவளும்...ஹ்ம்ம்)

எங்க உட்டேன்...ஆங்... சனிக்கிழமை சாயங்காலத்துல உட்டேன்... பொதுவா சனிக்கிழமை சாயங்காலம், வேலை எல்லாம் முடிச்சுட்டு ரிலாக்ஸ்'டா ஒரு சினிமா பாக்கறது தான் எங்க வழக்கம்

ஆனா... விதி வீதி முனைல நின்னு விழுந்து விழுந்து சிரிக்கறப்ப நம்மளை அப்படி நிம்மதியா விட்டுடுமா என்ன? என்னமோ சினிமா பாக்கற மூட் இல்ல...  வெளில குளிர் கொடுமை... வெளிய போறாப்லயும் இல்ல... அப்புறம் என்ன செய்ய... "ஏதோ கெட்டா ஏதோ செவுரு"ன்னு சொன்ன கதையா லேப்டாப் தான் நமக்கு லாஸ்ட் ரிசார்ட்....:)

ரங்க்ஸ் அப்பவும் சொன்னார்..."அந்த கண்ணுக்கு தான் கொஞ்சம் ரெஸ்ட் குடேன்... டிவி விட்டா லேப்டாப், லேப்டாப் விட்டா கதை புக்குனு படுத்தறயே"னு...

"உங்களுக்கு லாப்டாப் வேணும்னா நேரடியா கேளுங்க"னு அவர கிண்டல் பண்ணினேன் (உடனே நாலு பேரு வந்து ரங்க்ஸ்க்கு பரிஞ்சு பேசுவீங்கனு தெரியும்... ஹி ஹி... நிஜமாவே லாப்டாப் வேணுங்கறதுக்காக சிலசமயம் அக்கறையா பேசி இந்த அப்பாவி பொண்ணை ஏமாத்திய கதையும் உண்டு... அதை வெச்சு தான் சொன்னேன் யுவர் ஹானர்...:))

ஒருவழியா லாப்டாப்ல க்ரஹப்ரவேஷம் செஞ்சேன்... அதையும் இதையும் பாத்துட்டு கடைசியா "காபி வித் அனு" ப்ரோக்ராம்ல வந்து லேண்ட் ஆனேன்... (பின்னால் வரப்போகும் விபரீதத்தை அறியாமல்...ஹ்ம்ம்...:))

"காபி வித் அனு" பாத்ததும் காபி சாப்பிடணும்னு தோணுச்சு...

மைண்ட்வாய்ஸ் - அப்ப "நடந்தது என்ன" நிகழ்ச்சி பாத்தா நடக்க தோணுமோ?

அப்பாவி - இல்ல உன்னை நடக்க விடாம செய்ய தோணும்... grrrrrrrrrrrrrrr....

"பில்ட்டர் காபியா... இது Bru 'மா" விளம்பரம் ஸ்கூல் நாட்கள்ல அதிகம் பாத்த பாதிப்போ என்னமோ எனக்கு அந்த காபி தான் பிடிக்கும்... அதுல சிக்கரி பொடி ஜாஸ்தி, மூக்கு பொடி கம்மினெல்லாம் சிலர் அட்வைஸ் பண்ணினாங்க... நான் டெய்லி காபி குடிக்கற பழக்கம் இல்ல, வார கடைசி மட்டும் தான்...சோ தப்பில்லனு அந்த அட்வைஸ் எல்லாம் இந்த காதுல வாங்காமையே காத்துல விட்டாச்சு...

எனக்கு காபியும் அவருக்கு டீயும் போட்டு எடுத்துட்டு வந்து மறுபடியும் லேப்டாப்ல மூழ்கினேன்... ஒரு சிப் தான் காபி குடிச்சு இருப்பேன்... அதுக்குள்ள "வெறும் காபியா, கூட எதுனா கொறிக்க இருந்தா நல்லா இருக்குமே"னு தோணுச்சு

அதை ரங்க்ஸ்கிட்ட சொல்லவும் "இத பாரு... ஒண்ணு நீ யூஸ் பண்ணு, இல்லேனா லாப்டாப் எனக்காச்சும் குடு... நான் மேட்ச் பாக்கறேன்"னாரு (பாத்தீங்களா பாத்தீங்களா... இப்ப உண்மை வெளில வந்துடுச்சு...:))

உங்களை நானன்றி யாரரிவார்...:))

ஆனா ஒரு விஷயம் எனக்கு புரியலைங்க.. ஒரே மாட்சை மறுபடி மறுபடி எப்படி பாக்கறாங்க... அதே பேட்ஸ்மேன், அதே பௌலர், அதே பந்து, அதே கேட்சு...ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா.... இன்னொரு வாட்டி பாத்தா 4 ரன் உருமாறி 6 ரன் ஆகுமா...இல்ல டக்அவுட் ஆனது நோ பால் ஆகுமா... கஷ்டம்டா சாமி...:)

நானும் கிரிக்கெட் ரசிப்பேன் தான்... Infact போன சனிக்கிழமை World Cup Final Match  அன்னைக்கி எக்க சக்க டென்சன்ல நகத்தை எல்லாம் கடிச்சு குதறின கேஸ் தான், ஆனா அதே மேட்சை இன்னொரு வாட்டி எல்லாம் பாக்கற அளவுக்கு இல்லப்பா... "என்று தணியும் இந்த கிரிக்கெட் தாகம்?" னு பாட தோணுது போங்க...:)

சரி...நம்ம சோக கதைய பார்ப்போம்...

(மைண்ட்வாய்ஸ் - பாப்போம் பாப்போம்...நீ சொல்றயா... இல்ல தொடரும் போடறயானு?)

நொறுக்ஸ் எதுனா இருக்கானு போய் தேடினா பெருசா ஒண்ணும் சிக்கலை... சின்னதா ஒரு ரஸ்க் பாக்கெட் தான் இருந்தது... சரி கமெண்டே இல்லாததுக்கு அனானி கமெண்ட் வந்தா போதும்னு நாம மனசை தேத்திகறதில்லையா... அந்த மாதிரி ஒண்ணும் இல்லாததுக்கு இது ஒகேனு ரஸ்க் & காபியோட "காபி வித் அனு" பாக்க ஆரம்பிச்சேன்

ரெண்டு வாரம் முன்னாடி ப்ரோக்ராம்... "ஜோதிலச்சுமியும் குயிலியும்" கெஸ்டா இருந்தாங்க... சில சமயம் ரெம்ப மொக்கை ஆட்களா இருந்தா வேற நிகழ்ச்சிக்கு தாவிடுவேன்... சரி இவங்க வித்தியாசமான கெஸ்ட்ஸ் போல இருக்கேன்னு பாக்க ஆரம்பிச்சேன்... நல்லா தான் இருந்தது பேட்டி... டான்ஸ் பாட்டுனு களை கட்டுச்சு

ப்ரோக்ராம் முடிஞ்சதும் ஈமெயில் பாக்கலாம்னு போனேன்... "பில் கேட்ஸ் கூட ஒரு நாளைக்கி இவ்ளோ வாட்டி ஈமெயில் செக் பண்ண மாட்டார்" னு பக்கத்துல ஒருத்தர் கிண்டல் பண்ணினது என் காதுலையே விழல..:)

நமக்கென்ன ஒபமாவும் ஒசாமாவுமா ஈமெயில் அனுப்பி இருக்க போறாங்க... ஏதோ ஒண்ணு ரெண்டு சொந்தம் பந்தம் போனா போகுதுன்னு அனுப்பி இருந்த ஈமெயில்க்கு பதில் எழுதலாம்னு ஆரம்பிச்சேன்

டைப் பண்ண ஆரம்பிச்சப்புறம் என்னமோ "பல்லிடுக்குல சிக்கின சோம்பு" மாதிரி ஒரு அவஸ்தை... டைப் பண்ணினதை படிச்சு பாத்தா "என்னமோ மிஸ் ஆகுதே"னு தோணுச்சு...

"how ae you? how about eveyone at home? ae u planning any tip this summe?" - இந்த வாசகத்த படிச்சா உங்களுக்கு என்ன மிஸ்ஸிங்னு புரிஞ்சதா... அதே அதே... அதான் மிஸ்ஸிங்...

"R"ங்கற எழுத்து மிஸ்ஸிங்... என்னடா இது வம்பா போச்சுனு நானும் தாமஸ் அல்வா & கேசரி  (ஹி ஹி) எடிசியா மாறி கீ போர்டை ஆராய்ச்சி செஞ்சேன்... ஒண்ணும் புரியல...

"ரா ரா...R ரா ரா ரா... "னு நானும் நம்ம "ஜோ" மாதிரி கண்ணை உருட்டி மெரட்டி எல்லாம் பாத்தேன்... லாப்டாப் ஒண்ணும் பயந்த மாதிரி காணோம்...

மைண்ட்வாய்ஸ் - பக்கத்துல இருந்த ஒருத்தர் பயந்த மேட்டரை சென்சார் பண்ணிட்டா...:)

சரி தான் "ரா லேன்ட்டி போ ரா" னு நான் முடிவுக்கு வந்த நேரம்...அவ்ளோ நேரம் நான் மண்டை ஓடைச்சுகிட்டதை சந்தோசமா பாத்துட்டு இருந்த ரங்க்ஸ் "என்ன ஆச்சு?" னு கேட்டார்

எனக்கு அப்ப இருந்த கடுப்புல "ம்... கொழந்த அழுது... உட்வார்ட்ஸ் கிரேப் வாட்டர் குடுங்க"னு சொல்லணும்னு தோணுச்சு... ஆனா இருக்கற ஒரு எஞ்சினீயரையும் பகைச்சுட்டு எதுக்கு வம்புனு பேசாம இருந்துட்டேன்...:))

அவரும் ஒரு நியுட்டனா மாறி ஆராய்ச்சில இறங்கினார்... ஒரு விஷயம் இப்ப சொல்லியே ஆகணுங்க... இந்த ரங்க்ஸ்'க இருக்காங்களே... நமக்கு ஒரு விஷயம் தெரியலைனு அவங்களுக்கு புரிஞ்சு போச்சுன்னு வெய்ங்க...நாம அன்னைக்கி காலி...

செம அலப்பறை பண்ணுவாங்க... வேணும்னே இல்லாத டெக்னிகல் டெர்ம்ஸ் எல்லாம் சொல்றது... ஒரு திருகாணிய பிக்ஸ் பண்றதுக்கு கூட ஒண்ணரை டன் சைஸ்ல இருக்கற டூல் பாக்ஸ் எல்லாம் எடுத்து வெச்சுட்டு பந்தா பண்றது... நாம நடுல எதுனா சொல்லபோனா "உனக்கு இதெல்லாம் தெரியாது... பேசாம இரும்மா"னு பில்ட் அப் செய்யறது... சான்சே இல்ல போங்க... இந்த விசியத்துல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...

அதுலயும் நாம எதுனா சந்தேகம் கேட்டோம்னு வெய்ங்க, அது சொந்த செலவுல சூனியம் தான்...

எப்படி குழப்பி சொன்னா நமக்கு கொஞ்சம் நஞ்சம் தெரிஞ்சதும் மறந்து போகுமோ அப்படி கன்னா பின்னானு Integral Calculas ரேஞ்சுக்கு ஒரு விளக்கம் சொல்லி நம்ம தலைல இருக்கற நட்டு போல்ட்டு எல்லாம் டைட் பண்ணனுமோனு நமக்கே சந்தேகத்த வர வெச்சுடுவாங்க...

இந்த விசியத்துல இவங்க 'கில்லி'க தான் போங்க...

"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான்" எல்லாம் பழைய டயலாக், "என்ஜினியரை ரங்கமணியாய் பெற்ற தங்கமணி போல் நின்றார்" னு சொன்னால் அது மிகையில்லை ஐ சே..:))

இது "உலகறிந்த உண்மை"... நான் சொல்றது நம்பிக்கை இல்லைனா ஒருத்தரை சாட்சிக்கு அழைக்கிறேன்... "ஹுஸைனம்மா ஹுஸைனம்மா ஹுஸைனம்மா....எங்கிருந்தாலும் சாட்சி கூண்டுக்கு வரவும்"...:))

ஹ்ம்ம்... ஒகே, அந்த "ரா ரா" மேட்டர் என்ன ஆச்சுனு பாப்போம்...

"நான் யூஸ் பண்ணினா ஒரு நாளாச்சும் எதுனா பிரச்சன வந்து இருக்கா..."னு சான்ஸ் கிடைச்சதேனு இன்னும் இது போல சில பல டயலாக்ஸ் எல்லாம் சொல்லிட்டு, எஞ்சினியர் படிச்ச படிப்பெல்லாம் யூஸ் பண்ணி ஒரு வழியா என்ன பிரச்சனைனு கண்டுப்பிடிச்சுட்டார்...

மைண்ட்வாய்ஸ் - அப்படி போடு அருவாள... என்ஜினியரா கொக்கா...ஹா ஹா ஹா... :)))

போதும் உன் ஆணவ சிரிப்பு மைண்ட்வாய்ஸ்.... இன்னும் நான் முழுசா சொல்லலை... "ஆபரேஷன் சக்சஸ் பேஷன்ட் க்ளோஸ்"ன கதையா பிரச்சனை என்னனு தெரிஞ்சு போச்சு... எப்படி சரி பண்றதுன்னு தான் தெரில...

பிரச்சனை என்னனு தெரிஞ்சதும் ரங்க்ஸ் டென்சனோ "டன்"சன்.... ஸ்ஸ்ஸ்பப்பா...

வேற ஒண்ணுமில்லைங்க, நான் ரஸ்க் சாப்பிட்டுட்டே லாப்டாப் பாத்தேன் இல்லையா...

மைண்ட்வாய்ஸ் - ஐயையோ... மறுபடியும் மொதல்ல இருந்தா.....:(((

அப்போ ரஸ்க் துகள்கள் போய் கி-போர்டு கேப்ல சிக்கி, "R" ங்கற எழுத்து வர்ற எடத்துக்கு கீழ போய் லேன்ட் ஆகி, எனக்கு குழி தோண்டிடுச்சு

மைண்ட்வாய்ஸ் - ஒரு ரஸ்க் துகள் மாட்டினதை என்னமோ மிலிட்டரி ஆபரேஷன் ரேஞ்சுக்கு விளக்கம் சொல்றா பாருங்க... இந்த பில்ட் அப் விசியத்துல அப்பாவிய அடிச்சுக்க ஆளே இல்ல...:)))

இதாங்க மேட்டர்... இதுக்கு போய் why tension...no tension... கரெக்ட் தானே... ஆனா ரங்க்ஸ் என்னமோ தசாவதாரம் கோவிந்தராஜன், பல்ராம் நாய்டுகிட்ட "that vail that vail..." னு டென்ஷன் ஆன ரேஞ்சுக்கு ஒரே டென்ஷன்.... ஹையோ ஹையோ....:)))

"ஆபரேஷன் சக்சஸ் பேஷன்ட் க்ளோஸ்" ஆனாலும், சினிமால வர்ற டாக்டர் மாதிரி "ஆண்டவன் மேல பாரத்த போடுங்க"னு சொல்ல முடியுமா... அப்படி சொன்னா அப்புறம் லாப்டாப்ஐ தூக்கி என் தலைல தான் போடணும் ...:))

அப்புறம் என்ன நடந்ததுன்னு அடுத்த எபிசொட்ல சொல்லட்டுமா... சரி சரி... நோ கொல வெறி....இப்பவே சொல்லிடறேன்...:)

சிம்பிள் லாஜிக் தான் யூஸ் பண்ணினார் நம்ம எஞ்சினியர்... சின்ன பசங்க வாய்ல காசை போட்டுட்டா என்ன செய்வோம்... தலைகீழ போட்டு குலுக்குவோம் இல்லையா...அதே தான் இங்கயும் நடந்தது...

(முந்தின வாரம் பாத்த "மன்மதன் அம்பு" படத்துல "மன்னார்" கமல் யூஸ் பண்ணின டெக்னிக்கை பாத்து ரங்க்ஸ் காப்பி அடிச்சார்னு நான் சொல்லவே இல்லை...:)))

சரி விடுங்க... எப்படியோ "R" பழையபடி வந்துடுச்சு... அதோட ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது "இனிமே லாப்டாப் கைல இருக்கறப்ப நோ ஸ்நாக்ஸ்"...

நம்பிக்கையில்லா தீர்மானம் கேள்விப்பட்டு இருப்பீங்க... அது போல் இது "ஸ்நாக் இல்லா தீர்மானம்"... :))))

இப்ப சொல்லுங்க... "Rusk சாப்பிடறதே Riskஆ போச்சே...." பதிவோட தலைப்பு கரெக்ட் தானே...:)))

மைண்ட்வாய்ஸ் - "நீ Rusk சாப்பிடறதே எங்களுக்கு Riskஆ போச்சே...."னு வெச்சுருந்தா இன்னும் ரெம்ப கரெக்ட்.... அவ்வ்வ்வவ்....

:)))

69 பேரு சொல்லி இருக்காக:

எல் கே said...

:)))))

அனாமிகா துவாரகன் said...

காத்தி சார் வட எனக்கேன்னு சொல்லாததால், இந்த வாட்டி வடை எனக்குத் தான். பதிவு பற்றி நோ காமன்ட்ஸ். படிக்கற மூட்டில்ல. ஹா ஹா

மோகன்ஜி said...

தலைவரு எவ்வளவு மெனக்கெட்டிருக்கார். நீங்க பதிவாப் போட்டு காலி பண்ணிட்டீங்களே! எல்லா வீட்டுலயும் இதுதானே நடக்குது? நீங்க வலையில போட்டீங்க. இங்க தலையில போடுறாங்க! நல்லாத்தான் தின்னிங்க ரஸ்க்கு!

அனாமிகா துவாரகன் said...

//வேணும்னே இல்லாத டெக்னிகல் டெர்ம்ஸ் எல்லாம் சொல்றது... ஒரு திருகாணிய பிக்ஸ் பண்றதுக்கு கூட ஒண்ணரை டன் சைஸ்ல இருக்கற டூல் பாக்ஸ் எல்லாம் எடுத்து வெச்சுட்டு பந்தா பண்றது... //

ஏய் புவனி, லாப்டொப்போட இருக்கறப்போ சாப்பிட்டதே தப்பு. மாமஸ் திருத்தி கொடுத்ததுக்கு இப்படியா கிண்டல் பண்ணுவே. சின்ன வேலைக்கும் கொகிள்ஸ் எல்லாம் போட்டுட்டு பண்ணற பந்தா பத்தி சொல்லவே இல்லை? எனக்கு வெள்ளை லாப் கோட் போட்டால் தான் திருத்தற வேலை செய்ய மூட் வரும். ஹி ஹி.

அநன்யா மஹாதேவன் said...

சூப்பரோ சூப்பர்!!!! எப்படி இப்படியெல்லாம்? கலக்கல்ஸ் போயேன்!

அனாமிகா துவாரகன் said...

எங்க வீட்ல பைப் திருத்தற வேலைல இருந்து எல்லாம் நான் தான் பாக்கறேனு சொன்னா நம்பவா போறீங்க.

அனாமிகா துவாரகன் said...

http://hussainamma.blogspot.com/2010/05/blog-post.html

தெய்வசுகந்தி said...

:-))

சி.பி.செந்தில்குமார் said...

பதிவோட கதை சுருக்கம் என்னான்னா தங்கமனி கிட்டே லேப் டாப் இருக்கு.. ஹி ஹி

இராஜராஜேஸ்வரி said...

"போஸ்ட் போடப்போனா பிளாக்கர் சர்வர் டௌன்... கமெண்ட் போடப்போனா கரண்ட் கட்டு"னு//
லேட்டஸ்ட் ரீமிக்ஸ் சூப்பர்.

kggouthaman said...

நல்ல பதிவு. என்னுடைய லாப் டாப்பில் அடிக்கடி T இந்தமாதிரி லாக் ஆகிவிடும். உடனே T பட்டன் மீது பலமாக ஊதுவேன். அதற்குப் பின் G பட்டன் லாக் ஆகிவிடும்! லாப் டாப்பை தலை கீழே கவிழ்த்து ஒரு தட்டுத் தட்டினால், A E I O U ஆகிய பட்டன்கள் கீழே உதிர்ந்துவிடும்!

பத்மநாபன் said...

இதை படிச்சவுடன் என்னோட லேப் டாப்ல அது மிஸ் ஆயிடுச்சு அதனால SUPE_ மட்டும் அடிக்க முடிஞ்சுது ..

அது எதுன்னு கேட்கிறிங்களா... அது இருந்தா அடிச்சே சொல்லிருவோமல்ல....

6 ஏப்ரல், 2011 11:52 pm

வெங்கட் நாகராஜ் said...

:)))))))

viswam said...

ரொம்பவே ந‌ல்லா இருக்குங்க.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

யம்மாடி இதுக்கு இவ்ளோ பெரிய பதிவு போடமுடியுமா தெரியாமப்போச்சே..
நானெல்லாம் அடிக்கடி சும்மா கீபோர்டை தூக்கி கவுத்து தட்டிக்கிட்டே இருப்பேன்.. ஏனா ? நான் இங்க உக்காந்து தான் எல்லா நொறுக்ஸும் சாப்பிடுவது.. :)பக்கத்துல எஞ்சினீரு பாத்துட்டு.. படிக்காமலே இவ்ளோ எஞ்சினீர் வேலப் பாக்கறயே ந்னு முறைச்சிக்கிட்டே கமெண்டுவாங்க..

புதுமொழியெல்லாம் தயார் செய்து ஒரு புக் போடுங்க அப்பாவி..

RVS said...

ஆமாம். நீங்க ரஸ்க் சாப்பிடறது எங்களுக்கு ரிஸ்க் தான்.. இந்த மாதிரி பதிவெல்லாம் வருதே! ;-))

அமைதிச்சாரல் said...

ரஸ்கெல்லாம் எடுக்காமலேயே கீபோர்டை தலைகீழாக்கி அடிக்கடி தட்ற ஆளு நான்.. :-)))))

தக்குடு said...

நாராயணா!! இந்த அப்பாவியோட தங்கமணியோட அலப்பறை தாங்ங்ங்ங்ங்க முடியலடா!!!...:)))

Ramki said...

ரங்கஸ் புத்திசாலியா!!! இருந்தா இந்த தங்க்ஸ் - க்கு பொறுக்காதே :(:(:( , ஆனாலும் உங்க மைன்ட் வாய்ஸ் ரொம்ப கரெக்ட்
\\("மைண்ட்வாய்ஸ் - "நீ Rusk சாப்பிடறதே எங்களுக்கு Riskஆ போச்சே...."னு வெச்சுருந்தா இன்னும் ரெம்ப கரெக்ட்.... அவ்வ்வ்வவ்....")

தமிழ் உதயம் said...

ரஸ்க் கம்பெனிக்கு விளம்பரம் பண்றிங்களா.

திவா said...

அடுத்து காப்பி சாட்டுட்டு அத கீபோர்ட் மேலே கொட்டிட்டு இன்னொரு மொக்கை போடலாம் இல்லையா? :-)))

புதுகைத் தென்றல் said...

கடவுளே!!!!!!!!!!!!!

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

என்னது ரங்க்ஸ் ரஸ்க் சாபிடறதுக்கு தடை விதிச்சிட்டாரா? அப்படியே பிளாக் எழுதறதுக்கு தடை விதிச்சிட்டா, ஹி ஹி நான்களும் தப்பிடுவோம்ல.

Chitra said...

இப்ப சொல்லுங்க... "Rusk சாப்பிடறதே Riskஆ போச்சே...." பதிவோட தலைப்பு கரெக்ட் தானே...:)))


...Correct...:-)))))

middleclassmadhavi said...

Rusk matteru!!

MANO நாஞ்சில் மனோ said...

அலப்பறை ஆரம்பிச்சிடுச்சி டோய்....

Madhavan Srinivasagopalan said...

இதே மாதிரி லப்டப்ப தலைகீழ தட்டி..
காபி, டீ, தண்ணீ.. இதெல்லாம் கூட எடுத்திடலாமா ?

ஹேமா said...

ரா...ரா....நல்லா படுத்திட்டாரா.இனியும் ராவா ஏதாச்சும் சாப்பிடுவீங்க !

சுசி said...

எங்க வீட்லவும் இதே கதை நடந்திச்சி புவனா.. என்ன நான் பிஸ்கட் சாப்டேன் :))

raji said...

//"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நின்றான்" எல்லாம் பழைய டயலாக், "என்ஜினியரை ரங்கமணியாய் பெற்ற தங்கமணி போல் நின்றார்" னு சொன்னால் அது மிகையில்லை ஐ சே..:))

ஐயோடா சாமி!ஆமாண்டா புவி! நான் படற கஷ்டத்தை கண்ணால
பாத்தாப்புல சொல்லிட்டயே புள்ள! :-)

BalajiVenkat said...

idhukulaam oru posttu.... kaila kidacha... keesiduven keesi....

Balaji saravana said...

நல்ல வேளை நீங்க செஞ்ச இட்லி சாப்பிடல, இல்ல லேப்டாப்பே உடைஞ்சிருக்கும்.. ;)

priya.r said...

மைண்ட்வாய்ஸ் - என்னாச்சு அப்பாவி... ரஸ்க் சாப்ட்டு பல்லு கில்லு டேமேஜ் ஆய்டுச்சா... வயசானா இப்படி தான்... ஹையோ
ஹையோ...//
நான் வழி மொழிகிறேன் மைண்ட்வாய்ஸ் !

வேண்டாம் மைண்ட்வாய்ஸ் நான் கொல வெறில இருக்கேன்... நீயா வந்து சிக்கிக்காதே (மைண்ட்வைஸ் ஓடி ஒளி(ழி)கிறது)/
வழக்கமா உங்க பதிவை படித்துட்டு எங்களுக்கு தானே வெறி எல்லாம் வரும்

அத உடுங்க... நான் சொல்ல வந்த விசியத்த சொல்லிட்டு போறேன்... //
சொல்லாமலே இந்த பில்ட் அப் பா !

(மைண்ட்வாய்ஸ் லோ வாய்சில் - அவ்ளோ சீக்கரம் போவாளா என்ன? எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆகும்... எல்லாரும் போய் பப்ஸ், பாப்கார்ன், ஜூஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து அப்புறம் படிங்க... ஹ்ம்ம்)//
ஆமாமா மொக்கை மன்னி யாச்சே


ஆனா ஒண்ணுங்க... இதை படிச்சப்புறம் இனிமே யாரும் "ரிஸ்க் எடுக்கறது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி"ங்கற டயலாக் சொல்ல மாட்டீங்க... அது நிச்சியம்... //
அதெப்படி சொல்லுவோம் ! அத்தான் உங்க பதிவுகளை படிச்சுட்டு நாங்க எதையும் தாங்கும் இதயம் பெற்று விட்டோமே அப்பாவி !

priya.r said...

என்னமோ சொல்லுவாங்களே "போஸ்ட் போடப்போனா பிளாக்கர் சர்வர் டௌன்... கமெண்ட் போடப்போனா கரண்ட் கட்டு"னு

(எவ்ளோ நாளைக்கு தான் உப்பு விக்கறதையும் பொரி விக்கறதயுமே சொல்றது....infact இப்ப யாரும் கூடைல வெச்சு உப்பும் பொரியும் வித்துட்டு வர்றதில்ல.. அதான் நானும் பழமொழிய ரீமிக்ஸ் பண்ணிட்டேன்... ஹி ஹி...) //
ஆஹா ! என்ன ஒரு புது மொழி ! கொன்னுடிங்க போங்க !

அந்த கதையா ஆகி போச்சு என் நிலைமை. என்ன செஞ்சாலும் வம்புலையே முடியுது... ஷூ லேஸ் கட்டினா கூட சுனாமி வந்துடுமோனு திக்கு திக்குனு இருக்குனா பாருங்களேன்... ஹும்... //
நாம வாயை வைத்து கொண்டு சும்மா இருந்தா தானே ! பேச்சு போட்டியில பஸ்ட் ப்ரைஸ் வாங்கிய மிதப்பு
பால் காரர் முதல் கொண்டு பல் போன பொரிக்காரா ஆயா வரை எல்லோரையும் கலாய்த்தா இப்படி தான் இருக்கும் !

அது என்னோட ராசி அப்படியா, இல்ல சுற்றமும் நட்பும் சூழ செய்யும் சதியானு இன்னும் கண்டுபிடிக்க முடியல... ஆனா நான் சி.ஐ.டி சகுந்தலாவா மாறும் நாள் வெகு தூரத்தில் இல்லை மக்களே வெகு தூரத்தில் இல்லை... :)//
ஆண்டவா! இருக்கிற அவர்தாரம் போதாதா ! என் எங்களை இப்படி சோதிக்கறே !

priya.r said...

இந்த கொடுமையான சம்பவம் நடந்த நாள் போன சனிக்கிழமை... சிலருக்கு தெரிஞ்சு இருக்கலாம்... நான் வார இறுதி நாட்கள்ல ரெம்ப பிஸி... அப்போ ஆபீஸ்ல தான் வெட்டியா'னு எல்லாம் கேக்கக்கூடாது... மீ ஆல்வேஸ் பிஸிபேளாபாத் ஒன்லி..:)//
சரி மேட்டர் என்னாங்கோ மேடம் !

நான் சொல்லவந்தது என்னனா, வார நாள் விட வார இறுதில ரெம்ப ரெம்ப பிஸி... ஒரு குடும்ப இஸ்திரிக்கே உரிய பொறுப்புகள் எல்லாம் இருக்கே... அதை எல்லாம் செய்யவே சரியா இருக்கும்னு சொல்ல வந்தேன்... //

பாருங்க இன்னும் மேட்டேரை சொல்லறாங்களான்னு! எப்படி தான் இவங்களை வைத்து இவங்க ரங்கஸ் சமாளிக்கறாரோ !

அந்த பொறுப்புகள் எல்லாம் என்ன என்னனு ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்படுத்தி சொல்லி சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ளும் எண்ணம் இல்லாதபடியால் நேரா நான் மேட்டர்க்கே போறேன்... //

இன்னும் மேட்டேரை கொண்டு வரலையா !

(மைண்ட்வாய்ஸ் - போறேன் போறேன்'னு பொழுது விடிஞ்சதுல இருந்து சொல்லிட்டே தான் இருக்கா இவளும்...ஹ்ம்ம்)//
பேசாம அவ என்ன தான் சொல்லறான்னு கேட்கலாம் மைன்ட் வாய்ஸ் ;இல்லன்னா கொடியோட கடைசி அத்தியாயம் மாதிரி தான் உன்ற நிலைமையும் ஆய்ட போகுது ! நீங்க சொல்லுங்க மேடம்

priya.r said...

எங்க உட்டேன்...ஆங்... சனிக்கிழமை சாயங்காலத்துல உட்டேன்... பொதுவா சனிக்கிழமை சாயங்காலம், வேலை எல்லாம் முடிச்சுட்டு ரிலாக்ஸ்'டா ஒரு சினிமா பாக்கறது தான் எங்க வழக்கம்!
அப்பாடா ! ரங்க்ஸ் பொளைச்சார் போங்க !

//ஆனா... விதி வீதி முனைல நின்னு விழுந்து விழுந்து சிரிக்கறப்ப நம்மளை அப்படி நிம்மதியா விட்டுடுமா என்ன? என்னமோ சினிமா பாக்கற மூட் இல்ல... வெளில குளிர் கொடுமை... வெளிய போறாப்லயும் இல்ல... அப்புறம் என்ன செய்ய... "ஏதோ கெட்டா ஏதோ செவுரு"ன்னு சொன்ன கதையா லேப்டாப் தான் நமக்கு லாஸ்ட் ரிசார்ட்....:)

தோ பாருங்க ! உங்களை என்ன வேனா சொல்லிட்டு போங்க ! லேப்டாப்பை எதுக்கு குட்டி சுவர்ன்னு அநியாயத்துக்கு திட்டறீங்க !

ரங்க்ஸ் அப்பவும் சொன்னார்..."அந்த கண்ணுக்கு தான் கொஞ்சம் ரெஸ்ட் குடேன்... டிவி விட்டா லேப்டாப், லேப்டாப் விட்டா கதை புக்குனு படுத்தறயே"னு..//

இந்த இடத்திலே ஒண்ணு நீங்க . எல்லோரும் கவனிக்கோணும் ! ஏன் அவங்க ரங்க்ஸ் அவங்களை கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருக்கலாமேன்னு சொல்லலை ?!

priya.r said...

"உங்களுக்கு லாப்டாப் வேணும்னா நேரடியா கேளுங்க"னு அவர கிண்டல் பண்ணினேன் (உடனே நாலு பேரு வந்து ரங்க்ஸ்க்கு பரிஞ்சு பேசுவீங்கனு தெரியும்... ஹி ஹி... நிஜமாவே லாப்டாப் வேணுங்கறதுக்காக சிலசமயம் அக்கறையா பேசி இந்த அப்பாவி பொண்ணை ஏமாத்திய கதையும் உண்டு... அதை வெச்சு தான் சொன்னேன் யுவர் ஹானர்...:))//
அப்பாவி பொண்ணு ! நீங்க !!!!!!! நாங்க அதை நம்பணுமாக்கும் ஜோக் அடிக்காதீங்க அப்பாவி

ஒருவழியா லாப்டாப்ல க்ரஹப்ரவேஷம் செஞ்சேன்... அதையும் இதையும் பாத்துட்டு கடைசியா "காபி வித் அனு" ப்ரோக்ராம்ல வந்து லேண்ட் ஆனேன்... (பின்னால் வரப்போகும் விபரீதத்தை அறியாமல்...ஹ்ம்ம்...:))//

என்ன ஒரு கற்பனை., "க்ரஹப்ரவேஷம் செஞ்சேன்" "லேண்ட் ஆனேன்" சூப்பர் தங்க்ஸ்!

priya.r said...

"காபி வித் அனு" பாத்ததும் காபி சாப்பிடணும்னு தோணுச்சு...

மைண்ட்வாய்ஸ் - அப்ப "நடந்தது என்ன" நிகழ்ச்சி பாத்தா நடக்க தோணுமோ?//
நல்ல வேளை மைண்ட்வாய்ஸ்! அப்போ எதுவும் இட்லி செய்யும் போட்டி எதுவும் நடக்கலே ;கின்னஸ் சாதனை நிகழ்ச்சி எதுவும் நடக்கலே!

அப்பாவி - இல்ல உன்னை நடக்க விடாம செய்ய தோணும்... grrrrrrrrrrrrrrr....

"பில்ட்டர் காபியா... இது Bru 'மா" விளம்பரம் ஸ்கூல் நாட்கள்ல அதிகம் பாத்த பாதிப்போ என்னமோ எனக்கு அந்த காபி தான் பிடிக்கும்... அதுல சிக்கரி பொடி ஜாஸ்தி, மூக்கு பொடி கம்மினெல்லாம் சிலர் அட்வைஸ் பண்ணினாங்க... நான் டெய்லி காபி குடிக்கற பழக்கம் இல்ல, வார கடைசி மட்டும் தான்...சோ தப்பில்லனு அந்த அட்வைஸ் எல்லாம் இந்த காதுல வாங்காமையே காத்துல விட்டாச்சு..//

நாங்க எல்லாம் நரசுஸ் காபி தான் ! பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கும் .

எனக்கு காபியும் அவருக்கு டீயும் போட்டு எடுத்துட்டு வந்து மறுபடியும் லேப்டாப்ல மூழ்கினேன்... ஒரு சிப் தான் காபி குடிச்சு இருப்பேன்... அதுக்குள்ள "வெறும் காபியா, கூட எதுனா கொறிக்க இருந்தா நல்லா இருக்குமே"னு தோணுச்சு//

மிக்சர் ,காரசேவ் ,ஓட்டு பக்கோடா,முறுக்கு என்று ஏற்கனவே கொரித்தது பத்தலையாக்கும்!

அதை ரங்க்ஸ்கிட்ட சொல்லவும் "இத பாரு... ஒண்ணு நீ யூஸ் பண்ணு, இல்லேனா லாப்டாப் எனக்காச்சும் குடு... நான் மேட்ச் பாக்கறேன்"னாரு (பாத்தீங்களா பாத்தீங்களா... இப்ப உண்மை வெளில வந்துடுச்சு...:))

உங்களை நானன்றி யாரரிவார்...:))

ஆஹா! பந்தா பார்வதி வந்துட்டா :)

ஆனா ஒரு விஷயம் எனக்கு புரியலைங்க.. ஒரே மாட்சை மறுபடி மறுபடி எப்படி பாக்கறாங்க... அதே பேட்ஸ்மேன், அதே பௌலர், அதே பந்து, அதே கேட்சு...ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா.... இன்னொரு வாட்டி பாத்தா 4 ரன் உருமாறி 6 ரன் ஆகுமா...இல்ல டக்அவுட் ஆனது நோ பால் ஆகுமா... கஷ்டம்டா சாமி...:)

நானும் கிரிக்கெட் ரசிப்பேன் தான்... Infact போன சனிக்கிழமை World Cup Final Match அன்னைக்கி எக்க சக்க டென்சன்ல நகத்தை எல்லாம் கடிச்சு குதறின கேஸ் தான், ஆனா அதே மேட்சை இன்னொரு வாட்டி எல்லாம் பாக்கற அளவுக்கு இல்லப்பா... "என்று தணியும் இந்த கிரிக்கெட் தாகம்?" னு பாட தோணுது போங்க...:)//

ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் தான் போ அப்பாவி ! இந்த விசயத்தில் நானும் உன்ற கட்சி தான்

மீதி கமெண்ட்ஸ் viraivil

பிரவின்குமார் said...

//ஆனா ஒண்ணுங்க... இதை படிச்சப்புறம் இனிமே யாரும் "ரிஸ்க் எடுக்கறது எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி"ங்கற டயலாக் சொல்ல மாட்டீங்க... அது நிச்சியம்...// இந்த பதிவ படிச்சு முடிச்சதே.. ஒரு ரிஸ்க் எடுத்தாப்போல்தான் இருக்கு எனக்கு... ஹி..ஹி..ஹி....

பிரவின்குமார் said...

பதிவு நீளமாக இருந்தாலும்... ரொம்ப நகைச்சுவையுடன் மைண்ட்வாய்ஸ் கொடுத்து... நல்லா கொண்டுவந்து முடிச்சீங்க...!!!

Matangi Mawley said...

post-u toppu-takkaru ponga! semma thool! :D LOL!

'aanaikkum highheels udaiyum..."... illa-- athu thappu pazhamozhi.... "vallavanukku bellum toolbox.." athu vum thappu thaan..

sari-- pazhamozhiya vittu thallunga! ultimately, matter what means, nalla vela-- enakku "mind-voice" laam illa! illaangaatti- ungala athu damage pannarathu pola ennayum ethunaachchum damage pannum ippudi! :D

sabaaaa....! suuuuuuuuuuper!

பிரவின்குமார் said...

நான் பல இடங்களில் சிரித்து மகிழ்ந்தேன்.!! ரொம்ப இயல்பான எழுத்துநடை.. தம்மாத்துண்டு ரஸ்க வச்சு இம்மா பெரிய பதிவான்னு மலைச்சு போயிட்டேன். ஹி..ஹி..ஹி.. கதையளக்குறதுல.. தங்களை மிஞ்ச ஆள் இல்லைன்னு நினைக்குறேன். ஹி..ஹி..

இக்பால் செல்வன் said...

பேசமா நீங்க விஜய்டிவியில சேர்ந்துருங்க பாஸ் !!!!

S.Menaga said...

ஆஹா அப்பாவி இந்த பதிவை படித்து சிரிப்புதான் போங்க,ஏன்னா நானும் இன்னிக்கு ரஸ்க் ரெசிபி தான் போட்டிருக்கேன்..

அன்னு said...

sari vidunga appavi, thattuna thattula inthavaara ruskoda serthu pona vaara muruku, athukku motha vaara mysore pak ellam sernthu vizunthirukkum, athula tensanaayiruppaar... eppadiyo, vacuum illamale clean aache-- laptop athai sollunga. (ama, laptop kuppaiyellam keela pottathoda sariya, athan pin athai yaar clean pannathunnu sollave illa....he he he )

மாதேவி said...

:))

இனிமேல் ரஸ்க் சாப்பிடாதீங்க :)

vinu said...

he he he he he naanum presentttuuuuuu

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - :))

@ அனாமிகா - இது போங்காட்டம் ஐ சே... வடை கார்த்திக்கு தான்...;)))

@ மோகன்ஜி - ஹா ஹா ஹா... நல்லா திட்டிட்டு தானே ஹெல்ப் பண்றீங்க... அதுக்கு தான் இங்க பழி வாங்கிடறோம்...:))

@ அனாமிகா - ஹா ஹா ஹா... வெள்ளை கோட்டா? ஆமா பேய் பிசாசுக்கு எல்லாம் வெள்ளை கலர் தான் பிடிக்குமாம்... சூப்பர்...;))

@ அநன்யா மஹாதேவன் - ஹேய்...... தேங்க்ஸ் அனன்ஸ்...:))

@ அனாமிகா - பைப் திருத்தற நீ செய்யற சரி... உன்னை திருத்தற வேலை யார் செய்யறாங்க... அதை சொல்லலியே...:))

@ அனாமிகா - எஸ் எஸ்.. hussainamma வோட அந்த போஸ்ட் நான் ரெம்ப நாள் முன்னாடியே படிச்சுட்டேன்.. அதனால தான் அவங்கள சாட்சிக்கு அழைத்தேன்...:))

@ தெய்வசுகந்தி - :))

@ சி.பி.செந்தில்குமார் - ஹா ஹா ஹா... நல்ல கண்டுபிடிப்பு... மிக்க நன்றி...:))

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க ராஜி'ம்மா...:)

@ kggouthaman - ஆஹா... கௌதமன் சார் இது சூப்பர்...vowels இல்லாம ஒரு வேலையும் ஆகாதே... கஷ்டம் தான்...:))

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - ஹா ஹா...சூப்பர் அண்ணா...:)

@ வெங்கட் நாகராஜ் - :))))

@ viswam - ரெம்ப நன்றிங்க விஸ்வம் முதல் வருகைக்கும் சேத்து...:))

@ முத்துலெட்சுமி/muthuletchumi - ஹி ஹி ஹி... நாங்க போடுவோம்ல இதுக்கும் பதிவு... புக் போடறதா.. ஏனுங்க அக்கா எதுனா பிரச்சனைனா பேசி தீத்துப்போம்... ஹா ஹா...:))

@ RVS - ஹா ஹா ஹா... மன்னார்குடி மன்னர்க்கு இதெல்லாம் ரிஸ்க்ஆ? :))

@ அமைதிச்சாரல் - சும்மாவே தட்டுவீங்களா? யார் மேல கோபம்... :))))

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - என்ன பண்றது சேர்க்கை அப்படி....:)))

@ Ramki - ஹா ஹா ஹா... மறைமுகமா ரங்க்ஸ் புகழ் தானே இங்க பரப்பிட்டு இருக்கேன்... என் நல்ல மனசு யாருக்கு புரியுது...:))))

@ தமிழ் உதயம் - ஐ...இது நல்ல ஐடியாவா இருக்கே... இந்த பதிவை வெச்சு எதுனா தேத்த முடியுமான்னு பாக்கறேங்க... ஐடியாக்கு நன்னிஹை...:)))

@ திவா - நல்ல ஐடியா திவாண்ணா... போஸ்ட் போட்டுட்டு சொல்றேன்...:))

அப்பாவி தங்கமணி said...

@ புதுகைத் தென்றல் - கடவுள் பாவம் விட்டுடலாம்ங்க... நீங்க எல்லாம் சிக்கி இருக்கீங்களே போதும்...;))

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - ஹா ஹா ஹா... ப்ளாக் எழுதறதுக்கு தடை விதிச்சா அவருக்கு தான் கஷ்டம்... சோ அதெல்லாம் நடக்காது... :))

@ Chitra - தேங்க்ஸ்...:))

@ middleclassmadhavi - எஸ் எஸ்...:))

@ MANO நாஞ்சில் மனோ - இப்ப தான் ஆரம்பிச்சதா..ஒகே ஒகே...:))

@ Madhavan Srinivasagopalan - ஓ... மெமரி சிப் மதர் போர்டு எல்லாம் கூட எடுக்கலாங்க...:))

@ ஹேமா - ஹா ஹா...;))

@ சுசி - பிஸ்கட் நீங்க செஞ்சதோ... :))

@ raji - ஆஹா... ராஜிக்கா என் கட்சி...ஜாலி ஜாலி... தேங்க்ஸ் அக்கோய்...:))

@ BalajiVenkat - வேற எதுக்கு போஸ்ட் போடலாம்னு ஐடியா குடு போட்டுடலாம்...ஹா ஹா...:))

@ Balaji saravana - ஹா ஹா ஹா... இட்லி எப்படிங்க உதிரும்... அதை கடிச்சு என் பல்லு வேணா உதிரும்...:))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//நான் வழி மொழிகிறேன் மைண்ட்வாய்ஸ்//
நான் வலி மொழிகிறேன் ப்ரியா அக்கா...:))

//வழக்கமா உங்க பதிவை படித்துட்டு எங்களுக்கு தானே வெறி எல்லாம் வரும்//
அது அப்போ இது இப்போ...:))

//சொல்லாமலே இந்த பில்ட் அப் பா !//
என்ன பண்றது? திருப்பூர் திலகவதி கூட சேந்து நானும் இப்படி ஆய்ட்டேன்... :)

//ஆமாமா மொக்கை மன்னி யாச்சே//
ஒகே ஒகே...பப்ளிக் வாட்சிங்...:))

//உங்க பதிவுகளை படிச்சுட்டு நாங்க எதையும் தாங்கும் இதயம் பெற்று விட்டோமே அப்பாவி//
பாத்தீங்களா உங்களுக்கு எவ்ளோ நல்லது செய்றேன் நானு...:))

//ஆஹா ! என்ன ஒரு புது மொழி ! கொன்னுடிங்க போங்க//
ஹி ஹி... :)))

//ஆண்டவா! இருக்கிற அவர்தாரம் போதாதா ! என் எங்களை இப்படி சோதிக்கறே//
பக்தா வேண்டும் வரம் கேள்... அப்பாவியிடம் கேட்டு தருகிறேன்...:)))

//சரி மேட்டர் என்னாங்கோ மேடம் !//
அதான் இது...:))

//எப்படி தான் இவங்களை வைத்து இவங்க ரங்கஸ் சமாளிக்கறாரோ//
ரவி மாம்ஸ்கிட்ட டிப்ஸ் வாங்கிக்கறாராம்...:)))

//அப்பாடா ! ரங்க்ஸ் பொளைச்சார் போங்க//
நீங்க அம்மா வீட்டுக்கு போனப்ப உங்க ரங்க்ஸ் சொன்னதை எல்லாம் இங்க சொல்லக்கூடாது...:)))

//தோ பாருங்க ! உங்களை என்ன வேனா சொல்லிட்டு போங்க ! லேப்டாப்பை எதுக்கு குட்டி சுவர்ன்னு அநியாயத்துக்கு திட்டறீங்க//
அட அட... இதுவன்றோ பாச மலர்...:))

//இந்த இடத்திலே ஒண்ணு நீங்க . எல்லோரும் கவனிக்கோணும் ! ஏன் அவங்க ரங்க்ஸ் அவங்களை கொஞ்ச நேரம் பேசி கொண்டு இருக்கலாமேன்னு சொல்லலை//
அது கொஞ்ச நேர பேச்சா இருக்காதுனு தான்... :))))

//அப்பாவி பொண்ணு ! நீங்க !!!!!!! நாங்க அதை நம்பணுமாக்கும் ஜோக் அடிக்காதீங்க அப்பாவி//
என்னங்க அக்கா... உங்க தங்கச்சி நான் உங்கள போலவே அப்பாவி தான்னு ஒத்துக்க மாட்டீங்களா...:))))

//என்ன ஒரு கற்பனை., "க்ரஹப்ரவேஷம் செஞ்சேன்" "லேண்ட் ஆனேன்" சூப்பர் தங்க்ஸ்//
ஹி ஹி... :))

//நல்ல வேளை மைண்ட்வாய்ஸ்! அப்போ எதுவும் இட்லி செய்யும் போட்டி எதுவும் நடக்கலே ;கின்னஸ் சாதனை நிகழ்ச்சி எதுவும் நடக்கலே//
ஹா ஹா ஹா.. நல்ல கற்பனை ப்ரியா...:))

//நாங்க எல்லாம் நரசுஸ் காபி தான் ! பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கும்//
பேஸ் பேஷ்....:))

//மிக்சர் ,காரசேவ் ,ஓட்டு பக்கோடா,முறுக்கு என்று ஏற்கனவே கொரித்தது பத்தலையாக்கும்//
அது அப்போ இது இப்போ...:))

//ஆஹா! பந்தா பார்வதி வந்துட்டா//
தேங்க்ஸ்ங்க திருப்பூர் திலகவதி...:))

//ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் தான் போ அப்பாவி ! இந்த விசயத்தில் நானும் உன்ற கட்சி தான்//
இதென்ன உலக அதிசியம் ப்ரியா என் பக்கம் பேசுவது நிஜம் தானா... நம்ப முடியவில்லை... வில்லை...வில்லை...;)))

அப்பாவி தங்கமணி said...

@ பிரவின்குமார் - ஹா ஹா ஹா... சூப்பர்...செம டைமிங்...:)))... கதை அளக்கரதுல என்னை மிஞ்ச ஆள் இல்லையா? பிரவீன்னு ஒருத்தர் இருக்கார்... உங்களுக்கு தெரியுமா? தேங்க்ஸ்...:)

@ Matangi Mawley - தேங்க்ஸ் மாதங்கி... லவ்லி கமெண்ட்ஸ்...மைண்ட்வாய்ஸ் இல்லையா... பொழச்ச நீ.... :))

@ இக்பால் செல்வன் - விஜய் டிவி பாவங்க... விட்டுடுவோம்...:))

@ S.Menaga - ஆஹா... அங்கயும் ரஸ்க்ஆ? சூப்பர்...:)))

@ அன்னு - ஹா ஹா ஹா... எஸ் எல்லா குப்பையும் விழுந்துடுச்சு... குப்பை யார் கிளீன் பண்ணினதா... எங்க வீட்டு வகூம் கிளீனர் தான்... இது எப்படி இருக்கு...ஹா ஹா...:))))

@ மாதேவி - சாப்பிடவே மாட்டேன்...:))

@ vinu - என்னது பிரெசென்ட்ஆ? அது சரி...:)))

vinu said...

he he he he he he oru chinna doubbtttuuuuu madam.......
intha posttu poooraavum mr.rusku, ruskkunnu oruththari paththi solli irrukeengaley avaru yaaaruuuuu?

naaan avrai romba keattathaaa sollunga....

eatho avaru punniyathula.....

padaipilakkiyaththin maaberum kaaviyam ungalidam irrunthu kidaththullathu kuriththu magailchiiiiiiiiiiiiii..........

garrrrrrrrrrrrrrrrrrrrrrr..............

Lakshmi said...

நல்லா இருக்கு.

கோவை2தில்லி said...

அச்சச்சோ இப்படி ஆகி போச்சே! எங்களுக்கு ஒரு தகவல் தெரிஞ்சுகிட முடிஞ்சது. எப்படிங்க இவ்வளவு பெரிசா எழுதிறீங்க. :))))))

வெட்டிப்பையன்...! said...

// "போஸ்ட் போடப்போனா பிளாக்கர் சர்வர் டௌன்... கமெண்ட் போடப்போனா கரண்ட் கட்டு"னு //// தாமஸ் அல்வா & கேசரி (ஹி ஹி) எடிசியா மாறி//.

ஹா ..ஹா.. நல்லா சிரிச்சோம்...! ஆனாலும் ரங்கமணி பாவம் ...!

ஹுஸைனம்மா said...

அடடா, ஸாரிப்பா. கொஞ்சம் லேட்டாவே வந்துட்டேன் போல!! (ஆனாலும், நீங்க அடுத்த பதிவு போடுறதுக்கு முன்னாடி வந்துட்டேன்ல, அதுவே பெரிசு :-) )

ஹையோ, கரெக்டா சொல்லிருக்கீங்க அப்பாவி!! இதுக்கு நான் எங்க வேணா வந்து சாட்சி சொல்லுறேன் அப்பாவி!! எவ்வளவு மிரட்டல் வந்தாலும் சரி. எதயாவது ரிப்பேர் பண்னனும்னா இவங்க பண்ற அலப்பறை இருக்கே!! அப்படியே அந்த ஸ்பானரைப் பிடுங்கி ரெண்டு போடலாம்போல வரும்.

கல்யாணமாகாத பொண்ணுங்க இருந்தா, (ரிப்பேர் பண்ணத் தெரிஞ்ச) எஞ்சினியரைக் கல்யாணம் பண்றதுக்கு முன்னே கொஞ்சம் யோசிச்சுக்கோங்க. அனுபவப்பட்டவ சொல்றேன், அப்புறம் உங்க இஷ்டம். (attn: Anamika) ;-)))

அனாமிகா, லிங்குக்கு நன்றிப்பா.

ஆனா, ஒரு விஷயம் இப்பத்தான் கவனிச்சேன் அப்பாவி. எங்க வீட்டு லேப்டாப்பில “கீ-போர்ட் கவர்” போட்டு வச்சிருக்கார். நல்லவேளை தப்பிச்சேன்!! -))))

சிவகுமாரன் said...

\\\ஒரு விஷயம் இப்ப சொல்லியே ஆகணுங்க... இந்த ரங்க்ஸ்'க இருக்காங்களே... நமக்கு ஒரு விஷயம் தெரியலைனு அவங்களுக்கு புரிஞ்சு போச்சுன்னு வெய்ங்க...நாம அன்னைக்கி காலி...///

அந்த கொஞ்ச நேரம் தானே நாங்க பேசவும் தங்கமணிங்க எல்லாம் கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு இருக்கவும் அபூர்வமான சந்தர்ப்பம் கெடைக்கும்.

அன்னு said...

அப்பாவி, அடுத்த ரிஸ்கு காத்திருக்கு இங்கே :))
http://mydeartamilnadu.blogspot.com/2011/04/blog-post_2488.html

ஹ...ரஸ்க் மாதிரியே இருக்கா!! :))

Vasagan said...

\மைண்ட்வாய்ஸ் - ஒரு ரஸ்க் துகள் மாட்டினதை என்னமோ மிலிட்டரி ஆபரேஷன் ரேஞ்சுக்கு விளக்கம் சொல்றா பாருங்க... இந்த பில்ட் அப் விசியத்துல அப்பாவிய அடிச்சுக்க ஆளே இல்ல...:)))\

மைண்ட்வாய்ஸ்
விடு... விடு.... நமக்குத்தான் பில்ட் அப் புவனாவை பத்தி தெரியுமே.

அப்பாவி தங்கமணி said...

@ vinu - மிஸ்டர் ரஸ்க்கை கேட்டதா சொல்லிடறேன் வினு...ஹா ஹா ஹா... :))

@ Lakshmi - நன்றிங்க லக்ஷ்மிம்மா...

@ கோவை2தில்லி - ஹா ஹா... ஏதோ மைண்ட்வாய்ஸ் புண்ணியத்துல எழுதறேங்க...ஹா ஹா ... தேங்க்ஸ்ங்க ஆதி...:))

@ வெட்டிப்பையன்...! - ரங்கமணி பாவமா? அடப்பாவமே... இதைத்தான் விடிய விடிய ராமாயணம் கேட்டு.... சரி விடுங்க...ஹா ஹா...:))

@ ஹுஸைனம்மா - ஹா ஹா ஹா... தேங்க்ஸ் அக்கா... இந்த விசியத்துல உங்க சப்போர்ட் எப்பவும் எனக்கு உண்டுனு எனக்கு தெரியும்... அதான் உங்கள கூப்ட்டேன் தைரியமா... ஹா ஹா.... நல்ல அலெர்ட் மெசேஜ் கூட குடுத்து இருக்கீங்க...சூப்பர்... “கீ-போர்ட் கவர்???" சூப்பர்... இதை என் ரங்க்ஸ் படிக்காம இருந்தா புண்ணியம்...ஹா ஹா...:))

@ சிவகுமாரன் - ஆஹா... ரெம்ப உணர்ச்சிவசபட்டுட்டீங்க போல இருக்கே பாஸ்... ஜஸ்ட் கிட்டிங்... :))

@ அன்னு - ஆஹா... சூப்பர் ரிஸ்க் தான்... ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி எழுதறேன்... மார்க் எல்லாம் போட மாட்டீங்க தானே... ஹா ஹா...:))

@ Vasagan - ஹா ஹா...:)))

அனாமிகா துவாரகன் said...

//அந்த போஸ்ட் நான் ரெம்ப நாள் முன்னாடியே படிச்சுட்டேன்.. அதனால தான் அவங்கள சாட்சிக்கு அழைத்தேன்...:))//
லூசா அக்கா நீ? அவங்க போஸ்ட்டை லிங்க் கொடுக்காம அவங்க பேருக்கு லிங்க் கொடுத்திருக்கீங்க. ஹூசைன்னம்மாவயா மக்களுக்குத் தெரியாது. பதிவுல ரியல் சுனாமி அவங்க தான். பாவம்னு உக்காந்து தேடி லிங்க் கொடுத்தா ஒரு தாங்க்ஸ் சொன்னியா? உங்க கூட கா!

//“கீ-போர்ட் கவர்???" //
அடப்பாவி. இதெல்லாம் கூட தெரியாமல் லாப்டொப் பாவிக்கறேளா? திஸ் இஸ் டூமச். அப்பாவியோட லாப்டொப்பை புடுங்கி பாதி காசுக்கு யாராவது வித்துடுங்க.

//இன்னொரு வாட்டி பாத்தா 4 ரன் உருமாறி 6 ரன் ஆகுமா...இல்ல டக்அவுட் ஆனது நோ பால் ஆகுமா.//
இந்த விசயத்தில் மட்டும் நான் உங்க கட்சி. வீட்லயும், ஆஸியிலும் மூணு கிரிக்கட் வெறியர்களுடன் வாழ்ந்த அனுபவத்தில் சொல்கிறேன். லாப்டொப்ல லைவ் மாட்ச் போட்டுட்டு டீவிலேயும் பாப்பாங்க. என்ன கொடுமை சார் இது,

@ ஹூசைன்னம்மா,
//அப்படியே அந்த ஸ்பானரைப் பிடுங்கி ரெண்டு போடலாம்போல வரும். //
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். அன்பை போதிக்கு மதத்தவர் இப்படி எல்லாம் சொல்லக்கூடாது. அழுதிடுவோம். ஹிஹி.

//attn: Anamika//
ஹா ஹா ஹா. தாங்க்யூ தாங்க்யூ

அனாமிகா துவாரகன் said...

இப்படி எல்லாம் கிரிக்கட் பாக்கறதும் பத்தாமா, யூடியூப்ல போய் கூட திருப்ப திருப்ப பார்ப்பார்கள். அவ்வ்வ்வ்வ். இந்த லைன்னையும் அப்படியே சேத்து படியுங்க. ஹி ஹி.

ஹுஸைனம்மா said...

//பதிவுல ரியல் சுனாமி அவங்க தான்//
ஆ... ஆ... (நாயகன் பாணி!!) என்னாச்சுன்னு தெரியலையே, ஒரே வாரத்துல, அன்னு, அப்பாவி, அனாமி மூணுபேரும் சேந்து “என்னைய ரொம்ம்ம்ப்ப நல்லவ”ன்னு சொல்றாய்ங்களே... ஆண்டவா, காப்பாத்து!! ;-)))))))

//அப்படியே அந்த ஸ்பானரைப் பிடுங்கி ரெண்டு போடலாம்போல வரும்.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... அழுதிடுவோம்//

ஹி.. ஹி... அது ச்ச்சும்ம்ம்மா.. அடிக்கிற கைதானே அணைக்கும்?

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா -
//லூசா அக்கா நீ? அவங்க போஸ்ட்டை லிங்க் கொடுக்காம அவங்க பேருக்கு லிங்க் கொடுத்திருக்கீங்க//
மொதல்ல எல்லாம் நல்லாத்தான் இருந்தேன்... இப்ப சேர்க்கை சரி இல்ல...:)))

//பதிவுல ரியல் சுனாமி அவங்க தான்//
ஹா ஹா ஹா... இதுக்கு பேரு தான்... சரி வேண்டாம் உடு... அக்கா பாவம்...:))

//அடப்பாவி. இதெல்லாம் கூட தெரியாமல் லாப்டொப் பாவிக்கறேளா//
லேப்டாப் யூஸ் பண்றதுக்கு உள்ள என்ன இருக்குனு தெரிஞ்சா பத்தாதா... என்ன கொடும சார் இது? ஹையோ ஹையோ...:))

//இந்த விசயத்தில் மட்டும் நான் உங்க கட்சி//
இன்னைக்கி ஏன் எங்க ஊர்ல ஸ்னோ வரலைனு புரிஞ்சு போச்சு...:))

//இப்படி எல்லாம் கிரிக்கட் பாக்கறதும் பத்தாமா, யூடியூப்ல போய் கூட திருப்ப திருப்ப பார்ப்பார்கள்//
Tell me about it.... கொடுமைடா சாமி...

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா -
//ஒரே வாரத்துல, அன்னு, அப்பாவி, அனாமி மூணுபேரும் சேந்து “என்னைய ரொம்ம்ம்ப்ப நல்லவ”ன்னு சொல்றாய்ங்களே//
உங்க ராசிபலன் என்னனு கேட்டு பாருங்க அக்கா... ஒருவேள சுனாமி பெயர்ச்சி ஆரம்பமோ..:)))

//ஹி.. ஹி... அது ச்ச்சும்ம்ம்மா.. அடிக்கிற கைதானே அணைக்கும்//
ஹா ஹா ஹா...இதான் டாப்பு...:))))

vgr said...

enna oru build up da...vara vara thakkudu mari ayiteenga ponga...

anda kadaya innum mudicha padu illaya?

-vgr

அப்பாவி தங்கமணி said...

@ vgr - ஹா ஹா ஹா... பில்ட்-அப்ல தானே சார் எங்க வண்டி எல்லாம் ஓடுது... What say தக்குடு :))

அந்த கதை முடிச்சப்புறம் யாருக்கு சொல்றேனோ இல்லையோ உங்களுக்கு கண்டிப்பா சொல்லுவேன்...:)))

Post a Comment