Tuesday, May 10, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 18)

"ஐ லவ் யு ஸ்டீவ்" என எதிர்பாராத தருணத்தில் மீரா கூற, அவசரமாய் அவளை தன்னிடமிருந்து விலக்கி, அவள் தன்னிடம் காதல் சொல்லும் கணத்தில் அவள் முகம் பார்க்க விழைந்தான் ஸ்டீவ்
 
 
சிரிக்கும் அவள் கண்களில் இன்னும் நீர் படலம் இருக்க, அன்பு நிறைந்த அந்த பார்வையில் தன்னை இழந்தான் ஸ்டீவ்
 
 
"Meera... you don't know how happy I'm right this minute... எனக்கு என்ன சொல்றதுனே தெரியல" என்றவன், அவளை மீண்டும் அணைத்து நின்றான்
 
 
சற்று முன் தான் காதலை பகிர்ந்து கொண்டது போல் இருக்கவில்லை இருவருக்கும், பலகாலமாய் சேர்ந்தே இருந்தவர்கள் போன்ற உணர்வில் அந்த கணத்தை ரசித்து நின்றனர்
 
 
சற்று நேரம் கழித்து அவளை விட்டு விலகி நின்றவன் "என்னோட குக்கிங் டேஸ்ட் பண்றதுக்கு ரெடியா மீரா?" என கேட்க

"ஹ்ம்ம்... அதான் கொஞ்சம் பயமா இருக்கு... இன்சூரன்ஸ் கூட இல்ல ஸ்டீவ்..." என அவள் சிரிப்பை அடக்கி கொண்டு கூற

"எல்லாம் நேரம் தான்... சாப்டுட்டு அப்புறம் என்ன சொல்றேன்னு பாக்கலாம்" என்றான்

"ஹ்ம்ம்....பாக்கலாம் பாக்கலாம்..." என்றவள் சமையல் மேடையில் வைத்திருந்த ஒரு அலுமினியம் பாயில் உறையை எடுத்தவள் "வாவ்... கார்லிக் பிரட்... எனக்கு ரெம்ப பிடிக்கும்... ம்...இதென்ன... ஓ.... Eggplant Lasagna... good good... mm... pizza... ஏய் ஸ்டீவ்... இதுவும் நீயே செஞ்சேன்னு பொய் சொல்ல போறியா..."

"ஏய்...கிண்டலா... base மட்டும் கடைல வாங்கினேன்... topping spices baking எல்லாம் என்னோட ரெசிபி தான்"

"ஹ்ம்ம்..." என்றவள், அடுத்து இருந்ததை பார்த்ததும் "wow smells good...என்ன ஸ்டீவ் இது?" எனவும்

"இது ஒரு பாபுலர் இட்டாலியன் டெசர்ட்... Tiramisu...combination of selected italian biscuits dipped in coffee with layers of cocoa, egg yolks etc etc....னு வெச்சுக்கோயேன்..." என்றவன் கூற, எதுவும் பேசாமல் அவனையே பார்த்தாள் மீரா

"ஏன் அப்படி பாக்கற...நான் செஞ்சேன்னு நம்பிக்கை இல்லையா மீரா" என சலுகையாய் அவளை அருகில் இழுத்து கொண்டே ஸ்டீவ் கேட்க

அதை தானும் ரசித்தவள் போல் அவனோடு சேர்ந்து நின்றபடி "யார்கிட்ட கத்துகிட்ட இதெல்லாம்" என்றாள்

"ம்... என் மம்மி கூட எனக்கு டைம் ஸ்பென்ட் பண்ண பிடிக்கும்... மம்மிக்கு சமைக்க பிடிக்கும்... சோ, அப்படியே அரட்டை அடிக்கறப்ப கொஞ்சம் கொஞ்சம் கத்துகிட்டது தான்... moreover, எனக்கு டேக் அவுட்ஸ் அவ்ளோ பிடிக்காது... அதனாலயும் நானே சமைச்சு பழகிட்டேன்"
 
 
"அப்பாடா அப்போ எனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் சாப்பாடு பிரச்சனை இல்ல...ஜாலி" என அவள் சிரிக்க

"அடிப்பாவி... புல் டைம் குக் ஆக்கிடுவ போல இருக்கே... என்னை பாத்தா பாவமா இல்ல"

"ஹுஹும்... இல்லவே இல்ல"

"இப்ப கூட பாவமா இல்ல" என வேண்டுமென்றே முகத்தை பாவமாய் வைத்து கொண்டு அவள் முகத்தை நோக்கி குனிய

"எனக்கு பசிக்குது... நான் சாப்பிடறேன்..." என வேண்டுமென்றே அவனிடமிருந்து விலகினாள்

தன்னை வெறுப்பேற்றவென்றே சமயம் பார்த்து விலகியதை புரிந்தவன் "ராட்சசி..." எனவும்
 
 
"எனக்கு நிஜமா பசிக்குது" என்றாள் மீரா பாவமாய்

"சும்மா சொல்றது எல்லாம் இருக்கட்டும்... சாப்பிடு பாக்கலாம்... I know how poor eater you are" என்றான் ஸ்டீவ்

"பாக்கலாமா... உனக்கு கூட மிச்சமில்லாம சாப்பிட போறேன் எல்லாமும்..." என அவள் சவால் பார்வை பார்க்க

"சான்சே இல்ல..." என சிரித்தான் அவளை அறிந்தவனாய்

இருவரும் வேண்டியதை எடுத்து கொண்டு உணவு மேஜையில் அமர, மீரா சாப்பிட்டு கொண்டிருந்தவள் ஸ்டீவ் தன்னையே பார்ப்பதை உணர்ந்து

"என்னை பாத்தது போதும்... look at the food..."

"Food is not very appealing Meera.." என அவன் சிரிக்க

"ஸ்டீவ்..." என செல்லமாய் முறைத்தாள்

"ஒகே ஒகே...கூல்... ஹேய் வெயிட்... I will get you some sauce to go with that garlic bread" என எழுந்து சென்றான்

ஒரு சிறிய கண்ணாடி குவளையில் சாஸ் கொண்டு வந்து வைத்தவன் "நீ சாப்டு... நான் விண்டோ ஓபன் பண்ணிட்டு வரேன்... வெதர் நல்லா இருக்கே"

அவன் திரும்பி வந்த போது மீரா டேபிள் அருகில் இல்லாமல் போக சமையல் மேடை அருகில் பார்த்தவன், பதறி போனான்

மீரா கண்ணெல்லாம் நீர் வழிய கையில் தண்ணீருடன் நின்றிருந்தாள் "ஏய் என்னாச்சு மீரா?" எனவும்

"What the hell was that sauce?... ஓ மை காட்... ஐயோ...ஆ...அம்மா" என அவள் கத்த, நிலைமையும் மீறி ஸ்டீவுக்கு சிரிப்பு பீறிட்டது

"ஸ்டுபிட்... எதுக்கு சிரிக்கற இப்போ" என அவனை அடிப்பவள் போல் கை எடுக்க, அவள் கையை பற்றியவன் சிரிப்பை கட்டுப்படுத்த இயலாமல் மேலும் சிரித்தான்
 
 
"ஸ்டீவ்... டென்ஷன் பண்ணாதே" என அவள் கோபமாய் முறைத்தாள்

அவள் நின்ற தோற்றமோ அல்லது செல்ல கோபமோ ஏதோ ஒன்று அவளை விட்டு பார்வையை எடுக்க விடாமல் செய்தது ஸ்டீவை

"என்ன லுக் விடற? Give me something sweet... this is killing me" என மீரா கூற

"Sure, something sweet..."என அவன் அவளை நெருங்க, அவள் முறைத்த விதத்தில் பின் வாங்கினான்

"சரி சரி டென்ஷன் ஆகாதே மீரா... இந்தா இந்த டெசர்ட் ட்ரை பண்ணு..." என்றதும்

"ஒரு ஸ்பூன் எல்லாம் சரி வராது... தள்ளு..." நான்கைந்து ஸ்பூன் இனிப்பு உள்ளே சென்றதும் நாவின் காரம் மட்டுப்பட "I'm full" என்றாள்

"ஏய்... இதான் நீ எனக்கு கூட இல்லாம காலி பண்றேன்னு சொன்னதா... such a poor eater Meera.."

"எல்லாம் உன்னால தான்... நீ தான அந்த ஹாட் சாஸ் குடுத்து சதி பண்ணின"

"இல்லைனா மட்டும்...நல்ல excuse உனக்கு... என்ன மீரா இது? பாத்தா தெரியாதா... அது ஹேலபினோ சில்லி சாஸ்... வெரி ஹாட் ஒன்... எவ்ளோ யூஸ் பண்ணனும்னு தெரியாதா..."

"இப்ப சொல்லு எல்லாத்தையும்... அப்பவே சொல்றதுக்கு என்னவாம்"

"உனக்கு கிட்சன்ல இவ்ளோ புவர் நாலேஜ் இருக்கும்னு எனக்கு தெரியாதே" என அவன் கேலி செய்ய

"அப்படியா... அப்போ நல்ல நாலேஜ் இருக்கற பொண்ணா பாத்து லவ் பண்ணு போ" என கோபித்து கொண்டவள் போல் சோபாவில் சென்று அமர்ந்து கொள்ள, அவள் அருகில் வந்து அவன் அமர தள்ளி அமர்ந்தாள்

"You want to play? okay... I'm all for it Meera..." என சிரித்து கொண்டே மீண்டும் அருகில் வந்து அமர்ந்தான்

"நான் ரெம்ப கோபமா இருக்கேன்... டென்ஷன் பண்ணாதே ஸ்டீவ்"

"ஒகே... ஒகே... மீரா, கூல் பண்றதுக்கு ஒரு ரெசிபி சொல்லட்டுமா?"என்றவன் கேட்க
 
 
அவள் என்ன என்பது போல் பார்க்க "Just a bit of garlic bread dipped in a dish of jalapeno sauce added with a pinch of...." என சமையல் குறிப்பு போல் அவன் மும்மரமாய் கூறி கொண்டே போக, அவன் சொன்ன பாவனையில் அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் சத்தமாய் சிரித்தாள் மீரா

"See... it worked"என அவன் வெற்றி புன்னகை செய்ய, அவள் எதுவும் பேசாமல்  அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்

அதை எதிர்பாராத ஸ்டீவ் "Wow...I didn't realize this recipe does something else too" என அவளை அணைத்து சிரித்தான்

அப்படியே பேச்சும் சிரிப்புமாய் நேரம் கரைந்தது

"ஒகே ஸ்டீவ்... டைம் ஆச்சு... நான் கிளம்பனும்" என மீரா எழுந்து கொள்ள

"ஏய் ஏய் ஏய்... whats the rush? நான் வேணா இன்னொரு ரெசிபி சொல்றேன்" என அவன், அவள் கை பற்ற

"ஒண்ணும் வேண்டாம்... டைம் இப்பவே டென் ஆச்சு... நாளைக்கி க்ளாஸ் இருக்கு யு நோ"

"எஸ் ஐ நோ... இன்னும் கொஞ்ச நேரம்... ப்ளீஸ் மீரா" என கெஞ்சல் பார்வை பார்க்க

"ப்ளீஸ் ஸ்டீவ்... may be I will stay a bit late in the weekend...not today... lets go" என அவள் கதவை நோக்கி நடக்க, அவனும் பின் தொடர்ந்தான்

கார் அருகே வந்ததும் "Meera... wait wait I will get the door for you...thats how it works in dates you know" என கார் கதவை திறந்து அவளை ஏறுமாறு அவன் செய்கை செய்ய

"Steve, thats too dramatical... but I like it" என சிரித்து கொண்டே அமர்ந்தாள்

மறுபக்கம் வந்து டிரைவிங் இருக்கையில் அமர்ந்தவன் "மத்ததையும் அதே மாதிரி லைக் பண்றயானு பாப்போம்" என அவன் சிரிக்க

"என்ன?" என அவள் கேள்வியாய் பார்த்தாள்

"நத்திங்..." என சிரித்தவன், அதன் பின் சற்று நேரம் எதுவும் பேசாமல் மௌனமானான்

அதை கவனித்த மீரா "என்ன ஸ்டீவ்... சைலண்ட் ஆய்ட்ட..." எனவும், அதற்குள் அவள் இடம் வந்துவிட்டிருக்க காரை ஓரமாய் நிறுத்தினான்

தான் கேட்டதற்கு அவன் இன்னும் பதில் சொல்லவில்லையே என மீரா யோசனையாய் அவனை பார்க்க, மெல்ல அவள் கை பற்றியவன்

"I may sound cheesy or dramatical...but... இத்தனை நாள் நான் தனியா இருந்த வீடு தான்... ஆனா, இப்ப திரும்பி அங்க தனியா போறப்ப... I would feel different for sure...It is full of you Meera... இன்னைக்கி தான் நாம லவ் சொல்லிட்ட மாதிரி எனக்கு தோணல... It feels like forever... இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாமே மீரா" என அவன் கேட்ட விதத்தில் அவளுக்கே இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமோ என தோன்ற தொடங்கியது

என்ன சொல்வதென தெரியாமல் "வீக் எண்டு வரேன் ஸ்டீவ்..." என சமாதானம் போல் கூறியவள் "ஒகே குட் நைட்" என காரை விட்டு இறங்க போக

"வெயிட் மீரா... டேட் முடிஞ்சு பை சொல்றப்ப இன்னொரு பார்மாலிட்டி இருக்கு" என அவன் குறும்பாய் சிரிக்க, என்ன என்பது போல் அவள் கேள்வியாய் பார்க்க

"ஏய்... எவ்ளோ மூவில பாத்துருக்க... don't act smart" என அவன் அருகே வர

"Steve... we're in the street" என அவசரமாய் விலகி இறங்கினாள்

அவள் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பவன் போல் அமைதியாய் சிரித்தவன் "ஒகே ஸ்வீட்டி... குட் நைட்" எனவும், அவள் "பை" என்றுவிட்டு உள்ளே நோக்கி நடந்தாள்

அறைக்குள் வந்து சற்று நேரமாகியும் அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை

"இப்போது தானே பார்த்தோம், மீண்டும் அவனை பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறதே ச்சே..." என நினைத்த நேரத்தில் செல் போன் அடிக்க அவனாய் தான் இருக்கும் என நினைத்து அவசரமாய் எடுத்து எண்ணை கூட  பார்க்காமல் "ஹலோ.."என்றாள்

இந்த தொலைபேசி அழைப்பு சற்று முன் இருந்த சந்தோச மனநிலையை முற்றிலும் மாற்ற போவதை பாவம் அவள் அறிந்திருக்கவில்லை

அருகில்நீ இல்லாதபோதில்
அசையாத கடிகாரமுட்கள்
என்னருகில் நீஇருந்தால்
என்மனதின் வேகம்நகர்கிறதே!!!
 
பார்த்துபழகிய என்வீடுதான்
புதியதாய்தோன்றியது உன்வரவில்
மாற்றத்தை விரும்பாதநான்
மாற்றிகொள்ள விரும்பினேன்என்னையே!!!


அடுத்த பகுதி படிக்க...

(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

56 பேரு சொல்லி இருக்காக:

Porkodi said...

cha paavam steve aniyayathuku ivlo vazhisal aakiruka vendaam.. ;-)

Porkodi (பொற்கொடி) said...

ஆமா.. பெரீய்ய்ய்ய்ய தொலைபேசி அளைப்பு.. வாராவாரம் நீங்களும் ஏதோ டெரர் என்டிங் குடுக்கறீங்க, ஆனா கதை என்னவோ அங்கயே அதே குச்சி வச்சி குத்தினாலும் நகராத மாடு கதை தான்.. யூ ராக் அப்பாவிக்கா!

பிரதீபா said...

போர்க்கொடி(??), உங்களுக்கு மட்டும் எப்படி சீக்கிரமே போஸ்ட் அப்டேட் வந்துடுது? :)

Charles said...

ahaaa... again Top 5... :)

Charles said...

ஆகா... இந்த வாரம் கதை கொஞ்சம் கூட நகரலியே!!! அட நம்ப சதிஷு பய வந்து கொஞ்சம் சண்டையாவது போட்டு இருக்கலாம்... ஹி ஹி ஹி ... ஒருவேள அவனுக்கு accident -ஆ? அது தான் போன்???

@சகோ பொற்கொடி: பின்னூட்டம் கொலவெறியோட போட்டு இருக்கீங்க? ROTFL உங்க வஞ்ச புகழ்ச்சி அணிக்கு!!!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அருகில்நீ இல்லாதபோதில்
அசையாத கடிகாரமுட்கள்
என்னருகில் நீஇருந்தால்
என்மனதின் வேகம்நகர்கிறதே!!!

பார்த்துபழகிய என்வீடுதான்
புதியதாய்தோன்றியது உன்வரவில்
மாற்றத்தை விரும்பாதநான்
மாற்றிகொள்ள விரும்பினேன்என்னையே!!!//

அருமையாக சுருக்கமாக அவனின் உணர்வுகளைப் படம் பிடித்துக்காட்டுவதாக உள்ளன மேலேயுள்ள வரிகள்.

ஜில்லுனு ஒரு காதல் (பகுதி 18) மட்டுமே முதன் முதலாகப்படித்துள்ளேன். ஒரு பெரிய கப் நிறைய உள்ள ஐஸ்க்ரீமை, ஒரு குட்டி ஸ்பூன் ஒன்றால் துளித்துளியாக டேஸ்ட் செய்வதுபோல, வரிக்கு வரி உண்மையிலேயே ஜில்லுனு இருக்குதுங்க.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk

மகி said...

என் ராசி நம்பர் 7! :)

அனாமிகா துவாரகன் said...

@ Charles,
Top 5? ha ha

@ Adapavi,
Grrrrrrrrrrrrrr

siva said...

meeeeeeeeeeeeeee the first...

siva said...

யூ ராக் அப்பாவிக்கா!

யூ ராக் அப்பாவிக்கா!

யூ ராக் அப்பாவிக்கா!

யூ ராக் அப்பாவிக்கா!

யூ ராக் அப்பாவிக்கா!

யூ ராக் அப்பாவிக்கா!

யூ ராக் அப்பாவிக்கா!

யூ ராக் அப்பாவிக்கா!

யூ ராக் அப்பாவிக்கா!

யூ ராக் அப்பாவிக்கா!

யூ ராக் அப்பாவிக்கா!

appavi vaalga..appavi pugal oonguga..

siva said...

erunga na poitu padichutu vaaren..:)

siva said...

இந்த மோசமான மொக்கை தொடரை கண்டித்து வெளி நடப்பு --- இப்படிக்கு அப்பாவி ரசிகர் மன்றம்

Chitra said...

ஆஹா.... ஓஹோ..... பேஷ்...பேஷ்.... ரொம்ப நன்னா இருக்குது!
(கொடுத்த காசுக்கு இவ்வளவுதான் கூவ முடியும்!) :-)))))))

எல் கே said...

//அவளுக்கே இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாமோ என தோன்ற தொடங்கியது//

இதுதான் நாடகப் பாணியில் இருக்கு.... பாவம் சதீஷ், சக தமிழனை ஏமாற்றிவிட்டு அந்நிய நாட்டு வாலிபனைக் காதலிக்கும் மீரா டவுன் டவுன்

siva said...

அப்பாவி கொஞ்சமாவது கருணை காட்றீங்கள ???
கதைய முடிக்கற போல ஒரு எண்ணமே இல்லையா...???
முடிக்க வில்லை என்றாலும் கொஞ்சம் கதை சொல்லுங்க ....:(
அநியாத்துக்கு சாஸ் காரமா இருக்கு அது என்ன பிராண்டு எப்படி எழுத்துண்டு .......போறது...kirrrrkdfeirksdfieksiekaeuidkakaka po....
கடவுளே..........நீ இருக்கியா ????????.
பாவம் சதீஷ்...
அந்த மது என்ன ஆச்சு????
கதை நகர்வே இல்லை...

உங்களை சுற்றி பல terror இருந்தாலும் engal sangam ungalukku thodarnthu aatharvu alikkum..

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹாய் புவனா... கதையின் பெயருக்கு ஏற்றார் போல்... செம ஃப்ளோ.... வெரி நைஸ்.. :)

Balaji saravana said...

//ஓ மை காட்... ஐயோ...ஆ...அம்மா //

//Give me something sweet... this is killing me //

இந்த ஜவ்வு மிட்டாய் படிச்சிட்டு நானும் இதே மாதிரி தான் கத்திக்கிட்டிருக்கேன்.. ;)
ஹி ஹி..

இராஜராஜேஸ்வரி said...

அதான் கொஞ்சம் பயமா இருக்கு... இன்சூரன்ஸ் கூட இல்ல ஸ்டீவ்..." //
ரொம்ப நல்லா இருக்குது!...

Mahi said...

புவனா,7வது கமென்ட்டைப் பாத்து டென்ஷன் ஆகிராதீங்க! :)

எனக்கு கதை நகரலைன்னு தெரியவே இல்ல.கார்லிக் ப்ரெட்-பிஸ்ஸா-திரமிசு, ரொமான்சுன்னு ஸ்மூத்தா போச்சு.:))

siva said...

ஆஹா.... ஓஹோ..... பேஷ்...பேஷ்.... ரொம்ப நன்னா இருக்குது!
(கொடுத்த காசுக்கு இவ்வளவுதான் கூவ முடியும்!) :-)))))))
???? y y y this kolai veri..

very nice narating..wonderfull writting..

சி.பி.செந்தில்குமார் said...

>>>>>இந்த பகுதியின் முன் பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

HI HI ஹி ஹி மறூபடியுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

asiya omar said...

அப்பாவி எதிர் பார்த்ததை விட ஜில்லுன்னு இருக்கு.இனிமேல் கொஞ்சம் புயல் அடிக்கும் போல..

காற்றில் எந்தன் கீதம் said...

இப்ப தான் கொஞ்சம் நல்லா விஷயம் நடந்துது அதுக்குள்ளே வில்லன் வேலைய தொடங்கிட்டிங்களா? வாழ்க.... !

Porkodi said...

பிரதீபா, ஏங்க நமக்குள்ள என்ன வாய்க்கா வரப்பு தகராறு இருக்குன்னு நீங்க போர்க்கொடிங்கறீங்க.. உங்க எல்லாருக்காவும் தானே நான் இங்க கெட்ட பெயர் வாங்கிட்டு அலையுறேன்? கொஞ்சமாவது நன்றி விசுவாசத்தோட இருங்கப்பா.. ஆமா ஏன் என் கண்ணுல மொதல்ல பட்டுதுன்னு தான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன்!!

சார்ல்ஸ், பின்ன என்னங்க, பயங்கரமா தலைவலில கண்ணையே தொறக்க முடியாம சீட்ல உக்காந்து இருந்தேன், தெரியாம பழக்க தோஷத்துல(!!) அப்பாவி ப்லாக் ஓபன் பண்ணிட்டேன், சரி எப்படியாவது படிச்சுடுவோம்னு கஷ்டப்பட்டு படிச்சா, அந்த சாஸை நேர‌ என் கண்ணுல ஊத்தின மாதிரி இருந்துச்சு. அவ்வ்வ்வ்வ்வ்.

.. said...

அருகில்நீ இல்லாதபோதில்
அசையாத கடிகாரமுட்கள்
என்னருகில் நீஇருந்தால்
என்மனதின் வேகம்நகர்கிறதே!!!

பார்த்துபழகிய என்வீடுதான்
புதியதாய்தோன்றியது உன்வரவில்
மாற்றத்தை விரும்பாதநான்
மாற்றிகொள்ள விரும்பினேன்என்னையே!!!

Nice Lines... you r taking risks in the poem compare to story.. nice i enjoyed lot... But we are missing sathish.. i think so in that phone cal sathish only.....

Jaleela Kamal said...

ஜில்லுன்னு காதல் ஜில்லுன்னு நகர்ந்தது.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

நல்லா இருக்கு சகோ, அப்படியே அந்த சதீஷ் பயல மிரட்டி வையுங்க.

சண்முககுமார் said...

திரட்டிகளில் முதன்மை திரட்டியான --- தமிழ் திரட்டியில்--- தங்கள் பதிவை இணைத்து
அதிக வாசகர்களை பெறுங்கள் --தமிழ் திரட்டியின்--- முகவரி

http://tamilthirati.corank.com/

தங்கள் வரவு இனிது ஆக

சுசி said...

அவ்வ்வ்வவ்.. வில்லனாவ்வ்வ்..

priya.r said...

அடடே பதிவை பத்தி சொல்லவே இல்லையே

அப்பாவி பதிவு கிளாசிக்; :)

இருந்தாலும் நீ கொஞ்சம் அதிகமா இழுக்கறையோன்னு தோணுது

இதெல்லாம் காதல் வரிகளா இல்லே காவியமா:)

இருந்தாலும் நீ கொஞ்சம் மிகையா சொல்றையோன்னு தோணுது

2011 லில் காதலர்களின் பேச்சில் இவ்வளவு நளினம் இருக்குமோ ;

ரசிக்கும் படியாக தான் இருக்கு :)

Gayathri said...

என்ன அக்கா இப்படி படுத்துறீங்க....காதல் கதைல என்ன இப்படி ஒரு அநியாய ட்விஸ்ட்...

நல்லா போகுது

Vasagan said...

நான் கதையை படிக்கவே இல்லை, எல்லா கமெண்ட்ஸ்ல இருந்தும் என்னா கதை இந்த வாரம் சொல்லி இருக்கனு தெரிஞ்சுரிச்சு.

Vasagan said...

\Chitra சொன்னது…
ஆஹா.... ஓஹோ..... பேஷ்...பேஷ்.... ரொம்ப நன்னா இருக்குது!
(கொடுத்த காசுக்கு இவ்வளவுதான் கூவ முடியும்!) \

ஐயோ.... அம்மா.... அப்பா... பல் போச்சே ...
(நீ கொடுத்த இட்லி யால் வந்த வினை..)

middleclassmadhavi said...

Vasagan ஐடியா சூப்பர்! இம்முறை கார சாசோட 'ஜில்'....

Vasagan said...

சரி சரி கதையை படிக்கவில்லை என்றால் imposition கொடுத்துடுவே.

கதை இந்த வாரம் full of romantic .

Charles said...

@அனாமிகா : ஹி ஹி ஹி... ஏதோ எங்களால முடிஞ்சுது.... :)
@Vasagan:
//சரி சரி கதையை படிக்கவில்லை என்றால் imposition கொடுத்துடுவே.//
ஆகா இதெல்லாம் வேற நடக்குதா? பாவம் அப்பாவி மேடம்... இப்படி பழி சுமத்தரீங்களே!!!
@பொற்கொடி :
//அந்த சாஸை நேர‌ என் கண்ணுல ஊத்தின மாதிரி இருந்துச்சு. அவ்வ்வ்வ்வ்வ்./// LOL :)))

நிஜாம் என் பெயர் said...

இந்த பதிவுல இருக்கிற எல்லா சாப்பிடற ஐட்டதையும் பார்சல் பண்ணுங்க, அப்பத்தான் பதிவு நல்லா இருக்குன்னு சொல்லுவேன்.

குறிப்பு: நீங்க எதையும் சமைக்க வேண்டாம்

divyadharsan said...

Nice Episode..
Aana next episodeku wait panna veynam polaruku!
Yepdiyum villan entry confirmed..
But unga menu choice yenaku rombha pidichiruku..My favourites too, especially tiramisu:)

Nijam sonamari katha padikaravanga request pana oru parcel anupunga appavi..
saaptukitey padipoamla..ungalukku nerya punniyam seyrum:)

*அந்த சாஸை நேர‌ என் கண்ணுல ஊத்தின மாதிரி இருந்துச்சு. அவ்வ்வ்வ்வ்வ்*

HaHaHa.Too good. Ethelam parkum pothu ungala nanum kalaikanumnu thonuthu..
But mansu varla appavi.Tc.

divyadharsan said...

Wats this Appavi?? My comments are always disappear in this episode.Dnt knw y?? I wrote nearly 4 times and after posting it..Its gone:(

ok.Anyway Nice Episode.I am tired of writing it again:(
neengalam yepdithaan evlo yezhuthareengalo:)

Villain entry confirmed in next episode I thnk..onnum avasaramila.porumaiya yezhuthi post pannunga.Take care.

divyadharsan said...

//அந்த சாஸை நேர‌ என் கண்ணுல ஊத்தின மாதிரி இருந்துச்சு. அவ்வ்வ்வ்வ்வ்.//

HaHaHa too good . Epdilam solumpothu yenakum ungala kalaikanumnu aasa varthu..Aana mansu varla appavi:))

Vasagan said...

\HaHaHa too good . Epdilam solumpothu yenakum ungala kalaikanumnu aasa varthu.\

Hello divya
appavaiyai kalaichaathaan appavaikkum thookam varum. Asaiyellam adkka koodaathu.
(enkal sankaathula urupinar serkai ilavasam)

அப்பாவி தங்கமணி said...

Some comments got deleted due to some blogger issue... but it was in my email... so putting it back

நிஜாம் என் பெயர் உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 18)":

இந்த பதிவுல இருக்கிற எல்லா சாப்பிடற ஐட்டதையும் பார்சல் பண்ணுங்க, அப்பத்தான் பதிவு நல்லா இருக்குன்னு சொல்லுவேன்.

குறிப்பு: நீங்க எதையும் சமைக்க வேண்டாம்

divyadharsanஉங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 18)":

Nice Episode..
Aana next episodeku wait panna veynam polaruku!
Yepdiyum villan entry confirmed..
But unga menu choice yenaku rombha pidichiruku..My favourites too, especially tiramisu:)

Nijam sonamari katha padikaravanga request pana oru parcel anupunga appavi..
saaptukitey padipoamla..ungalukku nerya punniyam seyrum:)

*அந்த சாஸை நேர‌ என் கண்ணுல ஊத்தின மாதிரி இருந்துச்சு. அவ்வ்வ்வ்வ்வ்*

HaHaHa.Too good. Ethelam parkum pothu ungala nanum kalaikanumnu thonuthu..
But mansu varla appavi.Tc.

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi - ஹா ஹா ஹா... வரவர உங்க கமெண்ட்க்கு நான் விசிறி ஆய்ட்டேன் யு நோ... சரி சரி நோ டென்சன்...:))@ பிரதீபா - என் கதைய பத்தி ஒத்த வார்த்தை சொல்லக்காணோம்.... இதுல பொற்கொடிக்கு எப்படி அப்டேட் ஆகுதுன்னு ஆராய்ச்சி... கிர்ர்ரர்ர்ர்ர்....@ Charles - அடப்பாவமே... டாப் 5 ஆ? இங்க என்னமோ கூட்டம் அள்ளுற மாதிரி நீங்களும் பில்ட் அப்பு எல்லாம் நல்லாத்தான் குடுக்கறீங்க சார்லஸ்... நன்றி... :))... என்னது சதீசுக்கு accident ஆ... இந்த ஐடியா கூட நல்லாத்தான் இருக்கு... மைண்ட்ல வெச்சுக்கறேன்...:))@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்...மிச்ச ஐஸ்கிரீம் கூட சாப்ட்டுட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க நேரம் இருக்கறப்ப...:))@ மகி - அடபாவிங்களா... விட்டா ஜோசியம் சொல்ல தொடங்கிடுவாங்க போல இருக்கே கமெண்ட் செக்சன்ல...அவ்வ்வ்வவ்@ அனாமிகா - மொதல்ல கமெண்ட் படிக்கறதை விட்டுட்டு போஸ்ட் படி... இல்லேனா பார்சல் தான்...:))@ siva - அதெல்லாம் சரி... போஸ்ட் படிச்சீங்களா? கொஸ்டின் கேப்பேன் அதுல இருந்து...:)))... ஆஹா... இப்படி ஒரு ரசிகர் மன்றம் உலகத்துலேயே இருக்காதுடா சாமி...:))@ Chitra - ஹி ஹி ஹி... சூப்பர் சித்ரா... ஸ்விஸ் பேங்க்'ல் deposit செய்யப்படும்...:)))@ எல் கே - அடபாவிங்களா... உள்நாட்டு கலவரம் பத்தாதுன்னு இது வேறயா...ஹா ஹா..;))@ siva - //kirrrrkdfeirksdfieksiekaeuidkakaka// அப்படினா என்னனு சொல்லுங்க? அப்புறம் தான் நான் மிச்ச கேள்விக்கு பதில் சொல்லுவேன்... (அப்பாடா இன்னிக்கி எஸ்கேப்...:))... //அந்த மது என்ன ஆச்சு// மதுவை பத்தி ரெம்ப விசாரிக்கற மாதிரி இருக்கே... ஹ்ம்ம்... இருக்கட்டும் இருக்கட்டும்...:)))

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - தேங்க்ஸ் ஆனந்தி... நீங்கதான் கரெக்டா சொல்லி இருக்கீங்க...:)))... (மத்தவங்க எல்லாம் அடிக்க வருவாக...வாங்க எஸ்கேப் ஆய்டலாம்...:))

@ Balaji saravana - ஹா ஹா ஹா...;))

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க ராஜி'ம்மா..:)

@ Mahi - ஹா ஹா ஹா... உங்களுக்கும் இட்டாலியன் food பிடிக்கும்னு தெரிஞ்சு போச்சு... வாங்க ஒரு நாள் செஞ்சு தரேன்... சரி சரி... அழுவாதீங்க...:))

@ siva - அடப்பாவிங்களா...அவ்வ்வ்வவ்......

@ சி.பி.செந்தில்குமார் - ஹா ஹா ஹா...இது கூட நல்ல ஐடியா தான்..:))

@ asiya omar - நன்றிங்க... இனி புயலா இல்லயானு பொறுத்திருந்து பாப்போம்...:)))

@ காற்றில் எந்தன் கீதம் - நன்றிங்க... :)))

@ .. - என்னங்க உங்க பேரு ரெம்ப வித்தியாசமா இருக்கே..:).... நன்றிங்க...:)

@ Jaleela Kamal - நன்றிங்க ஜலீலா...;)

அப்பாவி தங்கமணி said...

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - அவன் என்ன பண்ணினான் உங்கள... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... நன்றிங்க...:)

@ சண்முககுமார் - நன்றிங்க

@ சுசி - ஹி ஹி... இருக்கலாம்...:))

@ priya.r - ஹா ஹா... தேங்க்ஸ் அக்கா...:)

@ Gayathri - ட்விஸ்ட் இல்லினா கதை அங்கேயே நிக்குது சொல்லுவீங்களே...அதுக்கு தான் ட்விஸ்ட்... ஹி ஹி... தேங்க்ஸ் காயத்ரி...:))

@ Vasagan - அடப்பாவமே... அப்ப எப்பவும் இப்படி கமெண்ட் படிச்சு தான் கமெண்ட் போடறீங்களா...அவ்வ்வ்வவ்....

@ middleclassmadhavi - அடப்பாவமே... அவரோட ஐடியாவை எல்லாரும் பாலோ வேற பண்றீங்களா? கிழிஞ்சது ஜில்லு... :))

@ Charles - இல்லைங்கா.. நானோ அப்பாவி... அப்படி எல்லாம் செய்வேனா... :)))

@ நிஜாம் என் பெயர் - ஹா ஹா ஹா... தெளிவாத்தான் இருக்கீங்க... அதெல்லாம் முடியாது... நான் தான் சமைச்சு அனுப்புவேன்...:)))

@ divyadharsan - ஹா ஹா... தேங்க்ஸ் திவ்யா... உங்களுக்கும் tiramisu பிடிக்குமா... வாங்க செஞ்சு தரேன்... சரி சரி... பயப்பட வேண்டாம்... வாங்கி தரேன்... ஐயையோ... கலாய்க்கனும்னு தோணுதா... இதெல்லாம் தப்பு...அப்படி தான் தோணும்... ஆனா "ஐயோ பாவம் அப்பாவி சிஸ்டர்" அஞ்சு வாட்டி சொல்லி பாருங்க... அப்புறம் அப்படி தோணாது... ஹா ஹா ஹா... டேக் கேர் திவ்யா... ;)))

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan Says -
//Hello divya
appavaiyai kalaichaathaan appavaikkum thookam varum. Asaiyellam adkka koodaathu.
(enkal sankaathula urupinar serkai ilavasam)//

adappavame... katchikku aal setharadhu aniyaayam... andha ponnu thaan enakku support panraanga... adhu porukkalaayaa unga pervaikku...avvvvv.....

siva said...

appavi......down down..

Sri Seethalakshmi said...

கதையின் இந்த பகுதி அருமை.
குறிப்பாக மீரா, steve காதல் காட்சிகள், ஒரு நிறைவான "ராதாமோகன்" படம் பார்த்த திருப்தி.

Sri Seethalakshmi said...

@பிரியா
//இருந்தாலும் நீ கொஞ்சம் அதிகமா இழுக்கறையோன்னு தோணுது //
அவ்வ்வ்வவ் பிரியா அக்கா, உங்களுக்கே இப்போதான் தோணுதுனு சொன்ன அப்புறம் என்னக கதி என்ன. சங்க மூத்த உறுப்பினரே இப்போதான் முழுச்சா நாங்க எல்லாம் என்ன கதி ஆக போரோமோ..... :(

Sri Seethalakshmi said...

யாரோ பிளாக்கர்ள மேல நிக்கறாங்க. அவிங்கள எறங்க சொல்லுங்க.
என்னால கமெண்டே போட முடியல.

priya.r said...

@சீதா
எமது திருவிளையாடல்களில் இதுவும் ஒன்று
அப்பாவியை பற்றி உங்களுது கருத்தை வெளி கொணரவே
யாம் இந்த விளையாட்டை நடத்தினோம் :) :)
சீதாவின் அப்பாவியை கலாய்க்கும் பணி தொடர்ந்து நடக்க எமது ஆசிகள் !!

அப்பாவி தங்கமணி said...

@ siva - அடப்பாவி... சம்மந்தமே இல்லாம ஏன் இப்போ டௌன் டௌன்? எதுனாலும் பேசி தீத்துப்போம்... :)))

@ Sri Seethalakshmi - மொதல் கமெண்ட்ல ஆனந்த கண்ணீர் வர வெச்சுட்டு ஏன் ரெண்டாவது கமெண்ட்ல ஆந்தை கண்ணீர்....அவ்வ்வ்வவ்..... சீதா ப்ரியா ஆல் டௌன் டௌன்..................................................... (Blogger was shut down for some maintenance issues for sometime, now back to normal)

@ Priya.r - ha ha ha ha ha ha ha... I was laughing so badly reading this...sema sema sema....ஆனா, என்னை ஓவரா கலாய்ச்சதுக்கு தண்டனையா ஒரு நாள் முன்னாடியே, அதாவது இன்னைக்கே "ஜில்லுனு ஒரு கா...." போஸ்ட் செய்யப்படும் என்பதை கண்டனத்துடன் தெரிவித்து கொள்கிறேன்...:))))

priya.r said...

அப்படின்னா டைட்டில்
காதல் செவ்வாய் என்பதற்கு பதில்
திகில் திங்கள் என்று மாறுமா :(

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - No, it will be "Thigil Thilagavathi"...:))

priya.r said...

என்னவொரு கொடுமை கோமளவல்லி இது :(

priya.r said...

//ஆமா.. பெரீய்ய்ய்ய்ய தொலைபேசி அளைப்பு.. வாராவாரம் நீங்களும் ஏதோ டெரர் என்டிங் குடுக்கறீங்க, ஆனா கதை என்னவோ அங்கயே அதே குச்சி வச்சி குத்தினாலும் நகராத மாடு கதை தான்.. யூ ராக் அப்பாவிக்கா!//
யூ ராக் Porkodi !

Post a Comment