Monday, May 16, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 19)
அறைக்குள் வந்து சற்று நேரமாகியும் மீராவிற்கு இயல்பாய் இருக்க முடியவில்லை

"இப்போது தானே பார்த்தோம், மீண்டும் அவனை பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறதே ச்சே..." என நினைத்த நேரத்தில் செல் போன் அடிக்க அவனாய் தான் இருக்கும் என நினைத்து அவசரமாய் எடுத்து எண்ணை கூட பார்க்காமல் "ஹலோ.."என்றாள் 

இந்த தொலைபேசி அழைப்பு சற்று முன் இருந்த சந்தோச மனநிலையை முற்றிலும் மாற்ற போவதை பாவம் அவள் அறிந்திருக்கவில்லை

எதிர்முனையில் அவள் அன்னையின் குரல் கேட்க "அம்மா... நீயா... என்ன இந்த நேரத்துல... அப்பா நல்லா இருக்காரா?" என  யாருக்கேனும் உடல் நலமில்லையோ என பதட்டமாய் கேட்டாள் மீரா

"எல்லாரும் நல்லா இருக்கோம் செல்லம்... சதீஷ் விசயத்த சொன்னதும், நேத்தே உன்கிட்ட இருந்து போன் வரும்னு எதிர்ப்பாத்தோம்... காணோமேனு தான் நானே கூப்பிட்டேன்டா"

"என்ன விசயம்மா? சதீஷ் எதுவும் சொல்லலியே" என குரலில் தோன்றிய பதட்டத்தை மறைக்க முயன்றவாறே கேட்டாள் மீரா

அடுத்து அவள் அன்னை சொன்ன செய்தியில் முகம் மாறியவள் "போன்ல பாட்டரி லோவா இருக்கும்மா... நான் அப்புறம் பேசறேன்" என அழைப்பை துண்டித்தாள்

சதீஷ் தன்னிடம் இதை பற்றி கூறவில்லை என்ற கோபம் ஒரு புறம், செய்தி மனதில் ஏற்படுத்திய நிம்மதியின்மை ஒரு புறம் என அன்றிரவு வெகு நேரம் தூக்கம் தொலைத்தாள் மீரா

********************************************************

மறுநாள் காலை சதீஷின் அலைபேசி அழைப்பில் விழித்தவள், அழைப்பை எடுக்க வேண்டாமென தவிர்த்தாள்.மீண்டும் அழைப்பு வர எரிச்சலோடு "ஹலோ..." என்றாள்

"என்ன மேடம் காலங்காத்தால கோபமா இருக்கற மாதிரி இருக்கே... என்ன பிரச்சன?"

"பிரச்சனைன்னு தனியா வேணுமா... நீ போதாதா?"

"ஏய் மீரா... என்னாச்சு?"

"ஒண்ணுமில்ல... க்ளாஸ்ல பாக்கலாம் பை" என்றவள் அழைப்பை துண்டிக்க போக

"ஏய் ஏய் மீரா ப்ளீஸ்... ஒன் செகண்ட்... நான் அங்க வரேன்... சேந்தே போலாம்... இன்னும் 30 மினிட்ஸ்ல அங்க இருப்பேன்...பை" என அவளுக்கு பதில் சொல்ல அவகாசம் தராமல் துண்டித்தான்

சொன்னது போல் அரைமணி நேரத்தில் வந்தவனை "ஏன் வந்தாய்?" என்பது போல் பார்த்தாள் மீரா

"என்னாச்சு மீரா?" என ஒன்றும் தெரியாதவன் போல் சதீஷ் கேட்க

"ஒண்ணும் தெரியாத மாதிரி நடிக்காத... ஏன் என்கிட்ட சொல்லல?"

"என்ன?" என்றவன் "ஓ... ஆண்ட்டிகிட்ட பேசினயா?" என சிரிக்க

"சிரிக்காத சதீஷ் ச்சே..."

"என்ன மீரா? ஏன் இவ்ளோ டென்ஷன் இப்போ... நேத்தே சொல்லலாம்னு தான் வந்தேன்... நீ பொறுமை அது இதுனு லெக்சர் குடுத்தியா... அதான் சும்மா வம்புக்கு..."

"அப்ப ஊர்ல எதுக்கு சொன்ன?" என அவனை பேசவிடாமல் கேட்டாள்

"அவங்க சந்தோசபடட்டும்னு சொன்னேன்... அது சரி... நம்ம ஊர்லையே சம்மர் ப்ராஜெக்ட் பண்றதுக்கு சான்ஸ் கிடைச்சது பத்தி சந்தோசபட்றதை விட்டுட்டு ஏன் இப்படி டென்ஷன் ஆகற?" என அவன் யோசனையாய் பார்க்க

"அது..." என அவள் தடுமாற

"அப்ளை பண்ணினப்ப ரெண்டு மாசம் ஊர்ல போய் இருக்கலாம்னு எவ்ளோ எக்ஸ்சைட்'ஆ இருந்த... இப்ப என்ன ஆச்சு?" என்றவனுக்கு என்ன பதில் சொல்வதென புரியாமல் அவள் விழிக்க

"ஓ... உன்கிட்ட சொல்லாம மொதல்ல ஊர்ல சொல்லிட்டேன்னு கோபமா... ஊருக்கு வரோம்னு சொன்னா எங்க அம்மா அப்பா ஹாப்பி ஆவாங்கனு சொன்னேன்... அப்படியே அங்கிள் ஆண்ட்டிகிட்டயும் சொல்லிட்டேன்... அதுக்கு வேணா சாரி சொல்லிடறேன் ஒகேவா மேடம்?" என அவன் கேலி போல் பேச, அதை ரசிக்கும் மனநிலையில் மீரா இருக்கவில்லை

சம்மர் ப்ராஜெக்ட் இந்தியாவில் செய்ய முடிந்தால் இரண்டு மாதம் பெற்றோருடன் சென்று இருக்கலாம் என சந்தோசமாய் விண்ணப்பித்தவள் தான், ஆனால் அப்போது தன் மனம் ஸ்டீவிடம் காதல் கொண்டிருக்கவில்லையே என நினைத்தாள்

நேற்று அவனை பார்த்து வந்த சிறிது நேரத்திலேயே மீண்டும் அவனை காண தோன்றியது நினைவு வர, இரண்டு மாதம் எப்படி அவனை பார்க்காமல் இருக்க போகிறேன் என்ற எண்ணமே இப்போது அவளின் நிம்மதியின்மைக்கு காரணமானது

இருபது வருடம் உயிராய் வளர்த்த பெற்றோரை பார்க்க போகிறோம் என்ற மகிழ்ச்சியை விட ஸ்டீவை பிரிந்து இருக்க வேண்டுமென்ற வருத்தமே மேலோங்கியது

வாழ்க்கை துணை இவன் தான் என மனதில் பதிந்ததும் மற்ற எல்லா உறவுகளும் அடுத்த நிலைக்கு செல்வது எப்படி என்ற கேள்வி மனதில் எழ, அதற்கு பதில் காண இயலாமல் தடுமாறினாள்

பெற்றோரின் மேலிருக்கும் அன்பு எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை என்றபோதும், அப்போதிருந்த மனநிலையில் ஸ்டீவை பிரிந்து இரண்டு மாதங்கள் தன்னால் இருக்க முடியுமென அவளுக்கு தோன்றவில்லை

"என்ன மீரா? என்ன இவ்ளோ யோசனை?" என சதீஷ் கேட்க

"ஒண்ணுமில்ல... நான் ரெடி ஆகறேன் டைம் ஆச்சு..." என கிளம்பும் சாக்கிட்டு அவன் முன் நிற்பதை தவிர்த்து விலகினாள்

அவளின் ஒதுக்கமும் இந்தியா போவதை பற்றி மகிழ்ச்சி காட்டாத செய்கையும் சதீஷை குழப்பத்தில் ஆழ்த்தியது

********************************************************

எப்போது அவளை காண்போம் என காத்திருந்தவன்  போல்  கல்லூரிக்குள்  நுழைந்ததுமே மீராவை தேடி வந்தான் ஸ்டீவ்.  அவனின் அன்னியோன்ய பார்வையில் ஒருகணம் மகிழ்ச்சியில் மனம் துள்ளிய போதும், அதன் பின் மீராவின் முகவாட்டம் இன்னும் கூடியது
  
 சற்று தனித்திருந்த சமயத்தில் அவன் அதற்கான கேட்க, மாலையில் பேசலாம் என்றாள். அதற்கு மேல் அந்த நேரத்தில் வற்புறுத்தி கேட்க மனமற்றவனாய் விட்டுவிட்டான் ஸ்டீவ் 

மீராவிடம் கூறியது போல், ஸ்டீவ் அன்று மாலை, நேதன் பிலிப்ஸ் ஸ்கொயர்'ல் (Nathan Philips Square) மீராவுக்காக காத்திருந்தான். அவனுக்கு அந்த இடம் எப்போதும் விருப்பமான ஒன்று

அவன் இருப்பிடத்திலிருந்து பக்கம் என்பது மட்டும் காரணமல்ல, சுற்றிலும் வரலாற்று சிறப்பு மிக்க City Hall, Osgoode Hall, Clock Tower, Sheraton Hotel என கட்டிடங்கள் சூழ்ந்திருக்க, நடுவில் ஒரு செயற்கை நீரூற்றின் இருபக்கமும் இருக்கைகள் இருந்த அந்த அமைப்பு அவனுக்கு தான் வளர்ந்த ஒட்டாவா  நகரத்தின் சில இடங்களை நினைவுறுத்தியதும் ஒரு காரணம்

டொரோண்டோ வந்தது முதல்,நிறைய மாலை நேரங்களை அங்கு அவன் செலவழித்து இருக்கிறான்

வெயில் காலங்களில் சில நாட்கள் ஏதேனும் இசைக்குழுக்கள் அங்கு இலவச நிகழ்ச்சிகளை வழங்குவதுண்டு. அதே போல் குளிர் மாதங்களில் கிறிஸ்துமஸ் அலங்காரங்களும், ஐஸ் ரின்க் எனப்படும் பனி ஸ்கேடிங் தளங்கள் அமைக்கப்படும். எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்

செயற்கை நீரூற்றை ஒட்டி போடபட்டிருந்த ஒரு பெஞ்ச்'ல் அமர்ந்தவன் மீரா வரும் திசையை ஆவலோடு பார்த்திருந்தான். தூரத்தில் அவள் வரும் போதே கண்டுகொண்டவன், புன்னகையுடன் அவளை விட்டு பார்வையை எடுக்க இயலாமல் பார்த்தான்  

எந்த அதிகபட்ச முயற்சியும் இன்றி, தன் வருகையால் மட்டுமே அவளால் தன் உலகத்தை அழகுற செய்யமுடிவது எப்படி? என்ற கேள்விக்கு தன்னால் இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் விடை காண முடியாதென நினைத்தான் ஸ்டீவ்

அவனை பார்த்ததும் முகம் மலர்ந்த போதும், அவள் முகத்தில் நேற்று இருந்த சந்தோசமும் பெருமிதமும் குறைந்து, கவலையும் குழப்பமும் அந்த இடத்தை ஆட்கொண்டிருந்ததை அவனால் உணர முடிந்தது

என்ன பிரச்சனையோ என பதட்டம் தோன்றிய போதும், முயன்று அதை  மறைத்தான். முதலில் அவள் முகத்தில்  சிரிப்பை  வரவழைத்து  பார்க்க வேணும் என நினைத்தான்

தன்னருகே அமைதியாய் வந்து அமர்ந்தவளின் தோளை தன் கரத்தால் சுற்றி வளைத்தவன் "ஹாய் ஸ்வீட்டி..."  என அருகில் இழுக்க

"ஸ்டீவ்...." என்ற சிணுங்கலுடன் சுற்றிலும் பார்வையை வீசி சற்று விலகி அமர்ந்தாள்

"We're madly in love with each other right?" என அவன் உரிமையாய் மீண்டும் அவள் தோள் மீது கை போட, அந்த உரிமையான செய்கை அவளை பலவீனமாக்கியபோதும்

"Yes, we're madly in love, but that doesn't mean we should show it off to public's eyes this way" என்றாள் மீரா அமைதியாய்

"You're in North America baby, get used to it..." என அவன் சிரிக்க, அவளிருந்த மனநிலையில் அதை ரசிக்க இயலாதவள் போல் எங்கோ பார்த்தாள்

அதை புரிந்தவனாய் "காலைல இருந்தே டல்லாதான் இருக்க... என்னாச்சு மீரா?" எனவும்

"அது... ஒரு பிரச்சன" என்றாள், எப்படி ஆரம்பிப்பது என புரியாமல்

"ஹ்ம்ம்...நேத்து தான் லவ் சொல்லிக்கிட்டோம்... இன்னைக்கே பிரச்சனையா?" என சூழ்நிலையை இலகுவாக்க முயல்பவன் போல் கேலியாய் பேசினான்

"ஸ்டீவ், சம்மர் ப்ராஜெக்ட் நான் இந்தியால அப்ளை பண்ணி இருந்தேனில்லையா... அது கிடைச்சுடுச்சு...2 months இந்தியா போகணும்"

"வாட்?" என அதிர்ந்தவன், உடனே சமாளித்து,  "அது... நீ இப்போ மாத்திக்கலாம் தானே... இங்கயே we can get something" என்றான்

"It is not about getting something here" என்றவள், சதீஷ் தன் பெற்றோரிடம் இதை பற்றி கூறிவிட்டதை தெரிவித்தாள்

"அதனால என்ன மீரா... இங்கயே ப்ராஜெக்ட் பண்றேன்னு சொல்லு"

"ஏன் இந்தியால பண்ணலைனு கேட்டா என்ன சொல்றது ஸ்டீவ்?"

"நம்மள பத்தி சொல்லு" என அவன் ஏதோ சுலமான விடயம் போல் கூற

"ஸ்டீவ், நீ நினைக்கற மாதிரி அது அவ்ளோ ஈஸி இல்ல... நான் சதீஷ்கிட்ட எப்படி சொல்றதுன்னே புரியாம முழிச்சுட்டு இருக்கேன்"

அவள் அப்படி கூறியது அவனை கோபமூட்டியது "என்ன மீரா இது? நாம என்ன Illegal வேலையா செய்யறோம் பயப்படறதுக்கு... சதீஷ்கிட்ட சொல்றதுக்கு உனக்கு கஷ்டமா இருந்தா I will handle that part" என்றான்

"வேற வினையே வேண்டாம்" என்றவள், அவன் முகம் போன போக்கில் இன்னும் சோர்ந்தாள்

"ஸ்டீவ் ப்ளீஸ்... Sathish is not just any friend, I know him all my life. He is important to me. ஸ்கூல் டேஸ்ல இருந்தே அவன் என்கிட்ட இப்படி Protective'ஆ தான் இருப்பான்... நீன்னு இல்ல, என்கிட்ட யார் நெருங்க முயற்சி பண்ணினாலும் இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவான்... எனக்கு முக்கியமான ரெண்டு பேர் என் காரணமா எதிரிக மாதிரி நிக்கறதை என்னால பாக்க முடியாது... அதான் உங்க ரெண்டு பேருக்குள்ள கொஞ்சம் எல்லாமும் ஸ்மூத் ஆனப்புறம் சொல்லலாம்னு தோணுது. அதோட, summer is in just another month. So, இந்தியால இருக்க போற அந்த ரெண்டு மாசத்துல சதீஷ்கிட்டயும் எங்க அம்மா அப்பாகிட்டயும் நம்ம விசயத்த சொல்ல முடியும்னு நினைக்கிறேன்"

"அப்போ ரெண்டு மாசம் இந்தியா போகத்தான் போற இல்லையா?" என்றான் ஸ்டீவ், மற்ற எதுவும் தனக்கு முக்கியமில்லை என்பது போல்

அவன் கேட்ட விதத்தில் அப்போதே அவனை விட்டு வெகு தூரம் சென்று விட்ட உணர்வில் மீராவின் கண்ணில் நீர் நிறைந்தது

அதை கண்டதும் ஸ்டீவிற்கு மற்றதெல்லாம் மறந்து போனது, தன் கைகளில் அவள் கன்னத்தை தாங்கியவன் "ஏய் மீரா... என்ன இது? Sorry... I didn't mean to make you cry... please don't" எனவும்

சற்று முன் பொது இடம் என தான் கூறியதை தானே மறந்தவளாய், அப்போதைய வேதனையில் இருந்து தப்பித்து கொள்ள அவன் மார்பில் தன்னை புதைந்து விட முயன்றாள்

தாங்கள் கண்ணை மூடி கொண்டால் உலகமே இருண்டு விடும் என நினைப்பவர்கள் தானே காதலர்கள். அதற்கு மீரா ஸ்டீவ் ஜோடியும் விதிவிலக்கல்ல

ஆனால், ஒரு ஜோடி கண்கள் அந்த காட்சியை கண்டு உறைந்ததை  அவர்கள் அறிந்திருக்கவில்லை. உறைந்தது மட்டுமல்ல, அந்த நிமிடமே மீராவை வலுக்கட்டாயமாய் அங்கிருந்து இழுத்து சென்றிட துடித்தது அந்த உருவம் 

உன்மனதில் நானெனஅறியும்வரை
உலகில்யாரோ ஒருவனாய்நீ
என்மனதிலும் நீயெனபுரிந்ததும்
என்உலகம் மொத்தமும்ஆனாய்நீ!!!

அடுத்த பகுதி படிக்க...


(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

49 பேரு சொல்லி இருக்காக:

A.R.RAJAGOPALAN said...

"பெற்றோரின் மேலிருக்கும் அன்பு எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை என்றபோதும், அப்போதிருந்த மனநிலையில் ஸ்டீவை பிரிந்து இரண்டு மாதங்கள் தன்னால் இருக்க முடியுமென அவளுக்கு தோன்றவில்லை"

மிகவும் உண்மையான
காதலர்களின் மனநிலை
நல்ல தொடர்கதை
பகிர்ந்தமைக்கு
பாராட்டுக்கள்

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

யார் தலைவா அந்த உருவம் மீராவின் அப்பாவா !? ஒரு நல்ல இடத்துல கொண்டுவந்து நிப்பட்டிவிட்டீர்களே . !?

எல் கே said...

இதெல்லாம் கொஞ்சம் ஓவர். ஒரு நாள் முன்னாடியே பதிவை போட்டாச்சு . அப்ப நாளைக்கு அடுத்ததா (வேண்டாம்டா எல்கே நீயா ஏன் மாட்டிக்கற )

எல் கே said...

நினச்சேன் இந்த மாதிரி போன் மேட்டர் சப்பையா போகும்னு,, ஆனால் சதீஷ் பார்த்துட்டான் போல இருக்கே

எல் கே said...

இந்த போஸ்ட் ரொம்ப சின்னதா இருக்கே

இராஜராஜேஸ்வரி said...

சதீஷ் பார்த்தாச்சு. பத்த வச்சுட்டீங்களே!!

Vasagan said...

இந்த போஸ்ட்ல தான் மீரா எதுவும் சாப்பிடமா இருக்கா.

ANaND said...
This comment has been removed by the author.
Vasagan said...

\அந்த நிமிடமே மீராவை வலுக்கட்டாயமாய் அங்கிருந்து இழுத்து சென்றிட துடித்தது அந்த உருவம்\

இந்த வரிக்காக எத்தனை மக்கள்களுக்கு சதீஷ் மேலே கொலைவெறி உண்டாக போகுதுன்னு தெரியலே.

Vasagan said...

ஒரு நாள் முன்னாடியே பதிவு போட்டதுக்கு தண்டனை யா ஒரு நகைச்சுவை பதிவு போடவேண்டும் இல்லை என்றால் பென்ச் மேலே நிற்க வேண்டும்.

siva said...

am crying...so sad...hm hm hm...:(((((

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

அடடா... செம இண்ட்ரஸ்டிங்கா கத போகும் போது.. ஆப்பு வைக்கரதே...உங்க பார்ட் டைம் வேல போல...

கிர்ர்ர்... என்ன.. அந்த ஒரு ஜோடி கண்கள்.. சதீஷ்-ஆ?? அவ்வ.. சரி சரி.. சீக்கிரம் சொல்லுங்கப்பா கதைய..!! ;)

siva said...

eppadi rendu perai prichu vaikra paavam entha blogathan suthi suthi varum....

siva said...

i miss indiyanu chonna ponna....paalapona entha love vanthu i miss steevenu cholla vachuth....
ellam entha appavipanra atuliamthan....

erunga enga captan vijaykanthkita cholli ungalai thanni elatha amerikkavuku maatha cholren...

siva said...

அவ்வ.. சரி சரி.. சீக்கிரம் சொல்லுங்கப்பா கதைய..!! ;)//

neenga keta matum cholliduvaangala? appadi cholla vitruvoma? innum 3vaaram thodarum....sorry 3year.appadithaney appavi chonnega?

Porkodi said...

it's madhu! yenna she loves Meera! :D

Gayathri said...

yaarathu villan sollunga pottu thallidalaam

வை.கோபாலகிருஷ்ணன் said...

என் மனதினில் மிகவும் ஜில்லிட்ட ஐஸ்க்ரீம் துளிகள்:


//வாழ்க்கை துணை இவன் தான் என மனதில் பதிந்ததும் மற்ற எல்லா உறவுகளும் அடுத்த நிலைக்கு செல்வது எப்படி என்ற கேள்வி மனதில் எழ, அதற்கு பதில் காண இயலாமல் தடுமாறினாள்//

//எந்த அதிகபட்ச முயற்சியும் இன்றி, தன் வருகையால் மட்டுமே அவளால் தன் உலகத்தை அழகுற செய்யமுடிவது எப்படி? என்ற கேள்விக்கு தன்னால் இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் விடை காண முடியாதென நினைத்தான் ஸ்டீவ்//
//
தாங்கள் கண்ணை மூடி கொண்டால் உலகமே இருண்டு விடும் என நினைப்பவர்கள் தானே காதலர்கள். அதற்கு மீரா ஸ்டீவ் ஜோடியும் விதிவிலக்கல்ல//

//உன்மனதில் நானெனஅறியும்வரை
உலகில்யாரோ ஒருவனாய்நீ
என்மனதிலும் நீயெனபுரிந்ததும்
என்உலகம் மொத்தமும்ஆனாய்நீ!!!//

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.
அன்புடன் vgk

சுசி said...

ரெண்டு மாசமாஆஆஆவ்வ்வ்.. செல்லாது செல்லாது..

நசரேயன் said...

முடியுற மாதிரி அறிகுறியே இல்லையே !!!!!!!!!

Chitra said...

தாங்கள் கண்ணை மூடி கொண்டால் உலகமே இருண்டு விடும் என நினைப்பவர்கள் தானே காதலர்கள். அதற்கு மீரா ஸ்டீவ் ஜோடியும் விதிவிலக்கல்ல

....cat love???????? :-))))))))))) ha,ha,ha,ha,ha....

எல் கே said...

//Porkodi சொன்னது…
it's madhu! yenna she loves Meera///

என்னக் கொடுமை இது

middleclassmadhavi said...

ஸ்டீவையும் இந்தியா கூட்டிட்டுப் போனா போச்சு!

நிஜாம் என் பெயர் said...

//உன்மனதில் நானெனஅறியும்வரை
உலகில்யாரோ ஒருவனாய்நீ
என்மனதிலும் நீயெனபுரிந்ததும்
என்உலகம் மொத்தமும்ஆனாய்நீ!!! ///

செம்ம !!!

புதிய கண்டுபிடிப்பு

சதீஷ் - பிரசாந்த்
ஸ்டீவ் - அந்த மொக்க ஆக்டர்
மீரா - ஷாலினி

பிரியாத வரம் வேண்டும்.

சங்கம் வழக்கு தொடங்க இருக்கிது என்பதை தெருவித்து கொள்கிறோம்

//Porkodi சொன்னது…
it's madhu! yenna she loves Meera! :D

புதுதுதுதுதுசசசசா இருக்குகுகுகு ......

Porkodi said...

ஏன் மக்களே இவ்ளோ டெரர் ரியாக்ஸன் குடுக்கறீங்க? இத்தாலிக்காரன் விக்ரமன் பட ஹீரோ ரேஞ்சுக்கு சென்டிமென்ட் போட்டு காதல் பண்ணலாம், 2 மாச ப்ராஜக்ட் மேட்டருக்கு ஏதோ தலைல இடியே விழுந்துட்டா போல சீன போடலாம், மது மீராவை காதலிக்க கூடாதா.. என்ன தப்புங்கறேன்.

Sri Seethalakshmi said...

பதிவை சீக்கிரம் போட்டதற்கு நன்றி.
ஆமா கதை எங்க ? அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்

தக்குடு said...

கொடி அக்கா - கிளாசிக்க்க்க்க்க்க்!..:)) வி.வி.சிரிச்சி

தேனம்மை லெக்ஷ்மணன் said...

சதீஷ் பார்த்துட்டாரோ தங்கமணி..

ANaND said...

மேடம் கதை செமையா போகுது ...
படமா எடுத்தா 100 டேஸ் கன்பார்ம்...
'ம்' னு ஒரு வார்த்தை சொல்லுங்க படமா எடுத்துரலாம்

(வெண்ண 'ம்' கிறது ஒரு வார்த்தை இல்ல டா அது ஒரு எழுத்து)

ஐயோ மைன்ட் வாய்ஸ் எனக்கும் ஒட்டிகிட்சே.

நான் வேணா ஹீரோ ரோல் ப்ரீயா பண்ணிதரன் .

Porkodi said...

த‌க்குடு அங்கிள், பார்த்து மெதுவாவே சிரிங்க, வயசான காலத்துல அப்புறம் ஏதாவது உடைஞ்சு தொலைச்சுட போவுது.. :)

Mahi said...

போன்ல சுனாமியே வரப்போற மாதிரி போனவாரம் பில்ட்-அப் குடுத்துட்டு 2 மாசம் ப்ராஜெக்ட்டுன்னு சப்புன்னு முடிச்சுட்டீங்களே புவனா? :)

சீக்கிரம் இந்தியாவுக்கு அனுப்புங்க மீராவை!

Sri Seethalakshmi said...

அப்போ கதை 12 வாரம் இந்தியல போகுமா !?

@நசரேயன் சொன்னது…

//முடியுற மாதிரி அறிகுறியே இல்லையே !!!!!!!!!//

எங்க வந்து என்ன பேச்சு பேசுறீங்க !?


@ஆனந்த்
//நான் வேணா ஹீரோ ரோல் ப்ரீயா பண்ணிதரன் .//

அய்யோ பவம், யாரு பெத்த புள்ளையோ !? :-)

siva said...

@Sri Seethalakshmi ...ethu enga paatioda peru..vaalga valamudan...

Madhuram said...

Kedi, chance illa. Ennala sirippa control pannave mudila. Romba kadupula irukka polirukku. Thalavali overo? Adapavi nondhu poirukka poraanga.

Porkodi (பொற்கொடி) said...

Madhuram, long time.. how're you? Don't get me started on thalai vali, it's costing me quite heavily. Adappavi akka idhuku ellam asarra aala enna? Ella aaniyum pidungama oya mattanga!

Anonymous said...

Story is very nice. I am following eagerly.

priya.r said...

//வாழ்க்கை துணை இவன் தான் என மனதில் பதிந்ததும் மற்ற எல்லா உறவுகளும் அடுத்த நிலைக்கு செல்வது எப்படி என்ற கேள்வி மனதில் எழ, அதற்கு பதில் காண இயலாமல் தடுமாறினாள்//

//எந்த அதிகபட்ச முயற்சியும் இன்றி, தன் வருகையால் மட்டுமே அவளால் தன் உலகத்தை அழகுற செய்யமுடிவது எப்படி? என்ற கேள்விக்கு தன்னால் இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும் விடை காண முடியாதென நினைத்தான் ஸ்டீவ்//

// அவன் கேட்ட விதத்தில் அப்போதே அவனை விட்டு வெகு தூரம் சென்று விட்ட உணர்வில் மீராவின் கண்ணில் நீர் நிறைந்தது //

//தாங்கள் கண்ணை மூடி கொண்டால் உலகமே இருண்டு விடும் என நினைப்பவர்கள் தானே காதலர்கள். அதற்கு மீரா ஸ்டீவ் ஜோடியும் விதிவிலக்கல்ல //

இதெல்லாம் பிடித்த வரிகள் ;பதிவுக்கு நன்றி புவனி (நமக்கு எதுக்கு வம்பு )

priya.r said...

//Porkodi சொன்னது…

த‌க்குடு அங்கிள், பார்த்து மெதுவாவே சிரிங்க, வயசான காலத்துல அப்புறம் ஏதாவது உடைஞ்சு தொலைச்சுட போவுது.. :)//

ஆமாம் தக்குடு
டிசம்பர் மாதம் வரை கவனமா இருங்க :)

priya.r said...

//Porkodi சொன்னது…

it's madhu! yenna she loves Meera! :D //

ஹய்யோ !கொளப்பறீங்களே !
மது எப்படிங்க மீராவை லவ் பண்ண முடியும் !
மது ஸ்டீவ் வை லவ் பண்ணறா ன்னு சொல்ல வரீங்களா !

priya.r said...

//உறைந்தது மட்டுமல்ல, அந்த நிமிடமே மீராவை வலுக்கட்டாயமாய் அங்கிருந்து இழுத்து சென்றிட துடித்தது அந்த உருவம்//

மதுவா இருந்தா ஸ்டீவ்வை தான் இழுத்து சென்று விட வேண்டும் என்று நினைப்பாள்
சதீஷ்ஷா இருந்தா மட்டுமே மீராவை இழுத்து சென்று விட வேண்டும் என்று நினைப்பா
என்ன அப்பாவி ;நா சொல்றது சரியா !

priya.r said...

//Sri Seethalakshmi சொன்னது…

பதிவை சீக்கிரம் போட்டதற்கு நன்றி.
ஆமா கதை எங்க ? அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்//

ரகசியம் சொல்றேன் ;நமக்குள்ளே இருக்கட்டும் சீதா
இது விசயமா வழக்கு உயர் நீதி மன்றத்தில் இருக்காம் ;
சிபிஐ கண்டு பிடித்து தர சொல்லி உத்தரவாம் :)

Madhuram said...

priya.r சொன்னது…
//Porkodi சொன்னது…

it's madhu! yenna she loves Meera! :D //

ஹய்யோ !கொளப்பறீங்களே !
மது எப்படிங்க மீராவை லவ் பண்ண முடியும் !
மது ஸ்டீவ் வை லவ் பண்ணறா ன்னு சொல்ல வரீங்களா !

Priya romba nallavangala/appaviya irukkangale pa. Vaila viral vacha kooda kadikka theriyadhu pola Kedi.

ANaND said...

@ Sri Seethalakshmi ...
பீல் பண்ணாதீங்க சீதாலட்சுமி. உங்களுக்கும் கால்ஷீட் தரன்

priya.r said...

@madhu

ஹி ஹீ தேங்க்ஸ் பா
நா தென் உண்மையான அப்பாவியோட அக்காவாக்கும் :)

priya.r said...

அப்புறம் கொடியோட தலைவலி குறையணும் ன்னா
அப்பவியோட பதிவை படிக்கோணும் ன்னு டாக்டர் சொன்னார்ன்னு
அப்பாவி ரெம்ப பெருமை பேசிக்கறா ;உண்மையா கொடி :)

அப்பாவி தங்கமணி said...

@ A.R.RAJAGOPALAN - மிக்க நன்றிங்க

@ ! ❤ பனித்துளி சங்கர் ❤ ! - ஹா ஹா... நன்றிங்க

@ எல் கே - நாளைக்கு அடுத்ததா.. நான் ரெடி நீ ரெடியா? ஹா ஹா... போஸ்ட் சின்னதா இருக்கா? அடப்பாவி... இதுக்கே டைம் இழுத்துடுச்சு...:)

@ இராஜராஜேஸ்வரி - ஹா ஹா... நன்றிங்க

@ Vasagan - ப்ரொபசர் சார், ஆனாலும் ரெம்ப அநியாயம்... ஹா ஹா...பெஞ்ச் மேலயா? ஆஹா... டீச்சர்களே இப்படி தான்...:)௦

@ siva - என்னாச்சு'ங்க சிவா... :))

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - ஹா ஹா... தேங்க்ஸ் ஆனந்தி...செவ்வாய் கிழமை சொல்றேன்...:)

@ siva - அடப்பாவிங்களா இப்படி எல்லாம் பயம் காட்டினா எப்படி? என் ப்ளாக்க்கு எதுனா கயிறு மந்திரிச்சு கட்டணும் போல...அதெல்லாம் அப்படிதான் ஆகும்... காதலில் விழுந்தால் விழுந்தால் தான்...என்னது மூணு வருஷம் தொடருமா? நான் அவள் இல்லை... :)))

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi - நான் போறேன்... எங்க ஊருக்கே போறேன்... கொல கதை எழுதி எழுதி கொலைவெறியா போச்சு இந்த பொண்ணுக்கு... அவ்வ்வ்வ்... அடுத்த கதைல வில்லி பேரு பொற்கொடி தான்..:)))... இல்ல தெரியாமத்தான் கேக்குறேன்... ஹாலிவுட்ல விக்ரமன் இல்லைனா சொல்றீங்க... இங்கயும் விக்கிரமன், ஆர்.பி.சௌத்ரி எல்லாரும் இருக்காங்க அம்மணி... Made of honour, Sleepless in the seatle, You've got mail, Over my dead body... இன்னும் எத்தனை எத்தனை விக்ரமன் டைப் பாத்து இருப்பீங்க... அவ்ளோ ஏன், இங்க இருந்து காப்பி அடிச்சு தமிழ்ல சக்கை போடு போட்டது எத்தனை...

உதாரணத்துக்கு Serendipityய சொரண்டி எடுத்து "ஜே ஜே"னு மாதவனை வெச்சு ஹிட் ஆச்சே... அப்புறம் A walk in the clouds படத்தை சுட்டு கார்த்திக்/கௌசலயாவை வெச்சு "பூவேலி"னு ஒண்ணு வந்ததே... ஒரே வித்தியாசம் இங்கிலீஷ்ல பொண்ணோட அப்பா Vineyard owner, தமிழ்ல பண்ணையார்... ஹா ஹா... so many like that...:)

ஒரு படம் பேரு சொல்றேன்... அதை மட்டும் பாத்தா விக்ரமன் சாரே விக்கி விக்கி அழுதுருவார்... சான்ஸ் கிடைச்சா அழுங்க...ச்சே பாருங்க... அந்த படம் "P.S. I love you" ...கர்சீப் நினைய பாத்த படம் இது...அவ்வ்வ்வ்....:))))

ஒரு வரி கமெண்ட்க்கு ஒரு பேஜ் பதிலானு டென்சன் ஆக கூடாது ஒகே... என்ன பண்றது...இப்படியே பழகி போச்சு...:))

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - ஐயையோ... ஏன் காயத்ரி இப்படி ஆய்ட்ட...ஹா ஹா...:))

@ வை.கோபாலகிருஷ்ணன் - ரெம்ப நன்றிங்க...:)

@ சுசி - ஹா ஹா...அதே தான் நானும் சொல்றேன்...செல்லாது செல்லாது...:)

@ நசரேயன் - ஹி ஹி... எங்க வந்து என்ன பேச்சு... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்...:))

@ Chitra - ஹி ஹி... கிட்டத்தட்ட அப்படிதான்'ங்க...:)

@ எல் கே - அதே தான் நானும் கேக்கறேன்... கொஞ்ச நஞ்ச கொல வெறி இல்ல... உலக மகா கொல வெறி..:))

@ middleclassmadhavi - ஐ... இது நல்ல ஐடியாவா இருக்கே.... இன்னும் பீச் பார்க்னு நாலு எபிசொட் சுத்த விடலாம் போல இருக்கே... யோசிக்கறேன்... ஹா ஹா...:))

@ நிஜாம் என் பெயர் - அடப்பாவமே... இதெல்லாம் அநியாயம் ஐ சே... நான் என்ன எழுதினாலும் ஒரு சினிமா பேரை சொல்லி....அவ்வ்வ்வவ்வ்வ்......:))

@ Sri Seethalakshmi - யு டூ ப்ரூட்டஸ்... ச்சே சீதா...அவ்வவ்வ்வ்வ்....

@ தக்குடு - அவ்வவ்வ்வ்வ்....

அப்பாவி தங்கமணி said...

@ தேனம்மை லெக்ஷ்மணன் - அப்படிதான் போல இருக்குங்க...:)௦

@ ANaND - ஆனாலும் உங்களுக்கு ரெம்ப தைரியம் தான்... ஹா ஹா... அது சரி ஹீரோயின் யாரை போடலாம்... ஐஸ்வர்யா ராய் போதுமா இல்ல? மியூசிக் ரஹ்மான்கிட்ட கேட்டு பாப்போம் முடியாதுன்னா இட்ஸ் ஒகே நானே போட்டுடறேன்... இப்ப சொல்லுங்க... ஹீரோவா நடிக்க ரெடியா? ஹா ஹா ஹா...:))

@ Mahi - மீராதான் இந்தியா போறதுக்கு அழுவராளே...ஹா ஹா...:)௦

@ Sri Seethalakshmi - ஒழுங்கா கதைய படிச்சு கமெண்ட் சொல்லிட்டு இருந்த பொண்ணை இப்படி கமெண்ட் படிச்சு கமெண்ட் போடற அளவுக்கு மாத்திட்டாங்களே... இதுக்கு யார் காரணம்னு எனக்கு நல்லா தெரியும்... பேசிக்கறேன்...:))

@ Madhuram - என்ன இருந்தாலும் ஒரே ஊர்ல இருக்கற பாசம் விட்டு போகுமா? தேங்க்ஸ் மது...:))))

@ Porkodi (பொற்கொடி) - ஹா ஹா ஹா... என் மேல இவ்ளோ நம்பிக்கையா.... ஆனந்த கண்ணீரில் மூழ்குகிறேன்... (இப்படி தான் பல்பு வாங்கறது கூட தெரியாம சமாளிக்கணும் அப்பாவி குட் குட்...:)))

@ பெயரில்லா - தேங்க்ஸ் அ லாட்...:)

@ priya.r - ஹா ஹா ஹா... அந்த பயம் இருக்கட்டும்...:)))

@ Madhuram - மது, யார் ப்ரியாவா அப்பாவி?......அவ்வ்வ்வவ்......உங்களுக்கு ப்ரியா அக்காவை பத்தி தெரியாது... என்னை மாதிரி அடப்பாவிகளை கூட நம்பலாம்... ப்ரியா மாதிரி அப்பாவி போல நடிக்கறவங்களை நம்பவே கூடாது...:))))

@ ANaND - ஹா ஹா...சூப்பர்...:)௦

@ priya.r - வேணாம்...அழுதுருவேன்....அவ்வ்வ்வவ்வ்வ்........ :)))

Post a Comment