Monday, May 23, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 20)இந்த பகுதியின் முன் பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்


சிறிது நேரம் அப்படியே இருந்தவள் சற்று மனம் சமாதானமானதும் ஸ்டீவை விட்டு விலகினாள் மீரா

"ஸ்டீவ்...இதெல்லாம் செட்டில் ஆகற வரைக்கும் நம்ம விஷயம் நமக்குள்ள இருக்கட்டும் ப்ளீஸ்" என கெஞ்சல் பார்வை பார்த்தாள்

அதில் அவனுக்கு உடன்பாடு இல்லை என்றபோதும், அவள் இருக்கும் மனநிலையில், அவளை வருத்த மனமின்றி "Okay.... our little secret" என முறுவலித்தான்

"ஸ்டீவ்,எனக்கும் ரெண்டு மாசம் உன்னை பாக்காம இருக்கறது ஈஸி இல்ல... ஆனா, வேற வழி இல்ல இப்போ" எனவும், இயலாமையில் முகம் வாடியவளை தன் புறம் திருப்பியவன், அவள் கையோடு கை கோர்த்தான்

நிலைமையை புரிந்து கொண்டவனாய், மேலும் அவள் மனதை மாற்றும் முயற்சியில் அவளை அழ வைக்க மனமற்றவனாய் "ஊருக்கு போனாலும் டெய்லி மினிமம் டென் டைம்ஸ் என்கிட்டே பேசணும்... டீல்?" என கேட்க

"டீல்..." என சிரிக்க முயன்றாள்

அதன் பின் சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை.சில நேரங்களில் பேசும் வார்த்தைகளை விட பேசாத மௌனம் பல விசயங்களை பேசாமல் பேசும். இப்போது அப்படித்தான் தோன்றியது இருவருக்கும்

இருவரும் பிரிவை எண்ணி அவரவர் மனதில் தோன்றிய உணர்வுகளை சொல்லாமல் சொல்லிக்கொண்ட அந்த சில நிமிடங்கள் அவர்களின் காதல் பெட்டகத்தில் சேமிக்க வேண்டிய நிமிடங்களில் ஒன்றானது

அந்த இருஜோடி விழிகள் இதையும் பார்த்து கொண்டு தான் இருந்தது. காண்பது கனவாய் இருந்தால் நன்றாய் இருக்குமே என மன்றாடி கொண்டிருந்தது மனதுள்

"இந்த டென்ஷன்ல நேத்து சரியா தூங்கல ஸ்டீவ்... ரெம்ப டயர்டா இருக்கு... கிளம்பலாமா?" என மீரா கேட்க

"நைட்டே உனக்கு தெரியுமா? எனக்கு போன் பண்ணி இருக்கலாமே மீரா... தனியா டென்ஷன் பட்டுட்டு இருந்தியா?"

"ம்... நீயாச்சும் நிம்மதியா தூங்கட்டும்னு தான் சொல்லல"

"Okay, lets go" என்றவன் "Wait wait, did you eat anything?" என கேட்க

"எனக்கு பசியே இல்ல ஸ்டீவ்... I just want to go lie down" எனவும்

"சாப்பிடாம தூங்கறது ரெம்ப கெட்ட பழக்கம். எதாச்சும் சாப்டுட்டு போலாம் ஒகே" என்றவன் அருகில் இருந்த Sushi (Japanese) உணவகத்துக்கு அழைத்து சென்றான்

மீரா ஸ்டீவிர்க்காக ஏதோ உண்ண வேண்டுமே என உண்டாள். "சாப்பாட்டை ரசிச்சு சாப்பிட்டு பழகு மீரா... அப்போ தான் ஒழுங்கா சாப்பிட முடியும்... சும்மா சாப்பிடணும்னு சாப்ட்டா nutrients கூட ஒடம்புல சேராது" என ஸ்டீவ் கூற, மீரா சிரித்தாள்

சற்று முன் இருந்த மனநிலை மாறி அவள் சிரித்தது மனதிற்கு இதமாய் இருந்த போதும் வேண்டுமென்றே பொய் கோபமாய் "ஏய்... என்ன சிரிப்பு?" என அதட்டினான்

"இல்ல... எங்க ஊர்ல தாத்தா பாட்டி அட்வைஸ் பண்ற மாதிரி நீ பண்றனு தோணுச்சு... அதான் சிரிச்சேன்" என்றவளை செல்லமாய் கன்னத்தில் அடித்தவன், இன்னும் அதிகமாய் சிரித்தவளை எதிர்பாராத நொடியில் முத்தமிட்டான்

சட்டென விலகியவள் "ஏய்..." என ஒற்றை விரல் காட்டி அவனை மிரட்ட, அந்த காட்சியை / பாவனையை தன் மனதில் படம் பிடித்து வைத்து கொள்ள முனைபவன் போல் இமைக்காமல் பார்த்தான்

இவளை விட்டு இரண்டு நிமிடம் கண்ணை எடுக்கவும் மனம் வரவில்லையே, இரண்டு மாதம் என்ன செய்ய போகிறேன் என நினைத்தவன், தன்னையும் அறியாமல் அதை வாய் விட்டு கூறி விட்டான் "I'm going to miss you more than I thought baby" என்றான்

சட்டென மீரா முகம் வாட "Sorry... lets go" என்றவன், உணவகத்தை விட்டு வெளியே வந்தான்

அவனோடு பேச பேச இன்னும் பலவீனமாவது போல் அவளுக்கு தோன்ற "நீ Opposite Directionல போகனுமில்ல... நீ கிளம்பு ஸ்டீவ்... நான் போய்க்கறேன்" என்றவள் கூற

"I could use a walk Meera... I missed gym today" என்றான் சும்மாவேனும் அவளுடன் நடக்கும் ஆசையில்

"I don't think you miss gym at all" என அவள் சந்தேக பார்வை பார்க்க, "Okay... I lied... I just want to walk with you" என சிரித்தான்

"இந்த மாதிரி இன்னும் எவ்ளோ பொய் சொல்லி இருக்க ஸ்டீவ்?" என பாதி விளையாட்டும் பாதி உண்மையுமாய் கேட்டாள்

அவள் கேட்ட விதம் ஏதோ பழைய நினைவை தூண்ட,ஒரு கணம் அதிர்ந்தவன், பின் சுதாரித்து "hmm... actually 5 no 10 no no may be 20... you know what? I didn't count Meera" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள்

இப்படியே சிரிப்பும் முறைப்புமாய் நேரம் கழிய, மீராவுடன் அவள் இடம் வரை நடந்தவன், மனமின்றி தன் வீடு நோக்கி நடந்தான் ஸ்டீவ்

தனியே நடந்த போதில் "இந்த மாதிரி இன்னும் எவ்ளோ பொய் சொல்லி இருக்க ஸ்டீவ்" என மீரா கேட்டதே மனதில் நிழலாடி கொண்டிருந்தது... தன் வாழ்வில் சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை அவள் இப்படி கேட்ட போது கூறி இருக்கலாமோ என தோன்றியது

ஆனால், அது சிறுபிள்ளைதனமான ஒரு செயல், தானே மறந்து விட்ட ஒரு பைத்தியக்காரத்தனம், அதை சொல்ல வேண்டிய அவசியமென்ன என தோன்றியது

அவளிடம் எதையும் மறைக்கவேண்டுமென அவன் நினைக்கவில்லை. ஆனால் அவள் மனதில் சிறு சலனம் வந்தாலும் அதன் காரணமாய் தன் மீது அவள் கொண்ட அன்பின் அளவு ஒரு வீதம் குறைந்தாலும் தன்னால் அதை ஏற்று கொள்ள இயலாதென நினைத்தான்

அதோடு, அவர்கள் இருவரின் வாழ்வில் அந்த சம்பவத்தின் எந்த பாதிப்பும் இனி எப்போதும் வருவதற்கு வாய்ப்பில்லை எனும் போதும், அவசியமின்றி அதை கூறி அவள் மனதில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பதே நல்லதென்ற முடிவுக்கு வந்தான் ஸ்டீவ்

ஆனால், பின்னொரு நாளில் அது ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்க போவதை பாவம் அவன் அறிந்திருக்கவில்லை

********************************************************

அடுத்த நாள் சதீஷ் வகுப்பிற்கு வராமல் போக, அழைத்து கேட்கலாம் என முதலில் நினைத்த மீரா, ப்ராஜெக்ட் பற்றி ஊரில் முதலில் சொன்ன கோபம் மேலெழும்ப, அவனோடு பேசும் எண்ணத்தை கை விட்டாள்

"எங்கேனும் ஊர் சுத்த போய் இருப்பான், நாளை வந்து ஏதேனும் கதை அளப்பான்" என நினைத்தவள் அதோடு அந்த விசயத்தை மறந்தும் போனாள்

மறுநாளும் சதீஷ் வராமல் போக, உடல் நிலை ஏதும் சரி இல்லையோ என தோன்றியதுமே, அவன் மேல் இருந்த கோபம் காணாமல் போனது. உடனே அவன் எண்ணுக்கு அழைத்தாள்

மணி அடித்து கொண்டே இருந்ததே ஒழிய எடுக்கப்படவில்லை. மறுமுறை அழைத்தபோது அலைபேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. மீண்டும் சில முறை முயன்றவள் என்ன செய்வதென புரியாமல் யோசித்து கொண்டிருக்க, அவனே அழைத்தான்

"சதீஷ்...நான் மீரா பேசறேன்" எனவும்

"எதுக்கு கூப்ட்ட?" என்றவனின் குரலில் இருந்து உடல் நிலை சரியில்லையா என அறிந்துகொள்ள முடியாதவளாய்

"என்னாச்சு? உடம்புக்கு சரி இல்லையா? ஏன் வர்ல?"

"கொஞ்சம் வேலை இருந்தது... இதை கேக்கதான் கூப்ட்டேன்னா நான் வெக்கறேன்... எனக்கு வேலை இருக்கு பை" என்றான்

"அப்படி என்ன வேலை க்ளாஸ் கட் பண்ணிட்டு?" என அவள் குரல் கோபமாய் ஒலிக்க

"எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு இருக்கணும்னு அவசியம் இல்ல" என்றான் விட்டேற்றியாய்

அந்நியமாய் அவன் பேசிய விதம் மனதை வருத்த "ஏன் இப்படி யாரோகிட்ட பேசற மாதிரி பேசற சதீஷ்" விட்டால் அழுது விடுவாள் போல இருந்தது அவள் குரல்

அது அவனையும் வருத்தியது போல ஒரு கணம் மௌனமாய் இருந்தவன் "கொஞ்சம் பிஸியா இருக்கேன்... பை" என அழைப்பை துண்டித்தான்

என்ன காரணமென புரியாமல் குழப்பமாய் நெற்றியை கையில் தாங்கி அமர்ந்திருந்தவளை சற்று தூரத்தில் வரும் போதே பார்த்த ஸ்டீவ், விரைந்து அருகில் வந்து "என்னாச்சு மீரா?" என்றான்

சதீசுக்கும் ஸ்டீவுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையை மேலும் பெரிது படுத்தவேண்டாமென நினைத்தவள் "அது... ஒண்ணுல்ல ஸ்டீவ்... கொஞ்சம் தலைவலியா இருக்கு" என்றாள்

எதையோ மறைக்கிறாள் என்பதை அவள் முக மாற்றத்தில் இருந்தே அறிந்து கொண்டவன், அவசியமின்றி மீரா அப்படி செய்யமாட்டாள் என அவளை புரிந்தவனாய் "Advil (Pain Killer) ஒண்ணு போடறயா?" என பேச்சை மாற்றினான்

"இல்ல ஸ்டீவ்... its not that bad" என்றாள், அதற்குள் வகுப்புகள் துவங்க நேரம் ஓடியது

********************************************************

மதிய இடைவேளையின் மது, ஸ்டீவ், மீரா மூவரும் Food Courtல் இருந்தனர்

"இந்த Weekend எங்க வீட்டுல என் பர்த்டேக்கு ஒரு சின்ன கெட்-டுகெதர்... நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வரணும்" என்றாள் மது

"ஹேய்... பார்ட்டி டைம்" என மதுவிடம் கை குலுக்கியவன், "நாங்க வராமயா... ரைட் பேபி?" என மீராவின் தோள் சுற்றி தன் கையால் கோர்த்து அணைத்தான்

ஒரு கணம் மது ஒன்றும் புரியாமல் விழிக்க, மீரா ஸ்டீவை எரிப்பது போல் பார்த்தாள். அவள் கோபத்திற்கான காரணம் புரியாமல் "வாட்?" என்றான் ஸ்டீவ்

"ஹ்ம்கும்..." என தொண்டையை சரி செய்யும் பாவனையில் ஆரம்பித்த மது "Looks like I didn't a memo" எனவும் தான், மதுவின் முன் தான் மீராவிடம் நெருக்கம் காட்டியதை உணர்ந்தான் ஸ்டீவ்

"Oh my god...oh...my god... What did I do? I didn't plan it honey... believe me... just spontaneously... I'm sorry... I..." என மீராவை பாவமாய் பார்த்தவன், அவன் செய்கையில் மது சிரித்ததும்

"No offense Madhu... ஜஸ்ட், கொஞ்ச நாளைக்கு எங்களுக்குள்ள இருக்கட்டும்னு நெனச்சோம்... but.... " என்றவன் மீராவை கெஞ்சும் பார்வை பார்த்தான்

அவன் செய்தது கோபத்தை கிளப்பிய போதும், மதுவின் முன் காட்ட மனமில்லாமல் "Keep your hands off me"  என்ற மீராவின் குரல் கோபமும் கேலியும் கலந்து ஒலித்தது

இன்னும் அவளை விட்டு நகராமல் "சாரி... ரியல்லி சாரி" என்றான் ஸ்டீவ்

சூழ்நிலையை சரியாக்கும் எண்ணத்துடன் "ஒகே... எப்படியும் எனக்கு இப்ப தெரிஞ்சு போச்சு தானே... எப்ப நடந்தது இந்த மாற்றம் எல்லாம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என மது கேட்க, அதையும் நீயே சொல்லேன் என்பது போல் ஸ்டீவை பார்த்தாள் மீரா

"ஹும்ஹும்... இனி என்ன கேக்கனும்னாலும் நீங்க மீராகிட்டயே கேட்டுகோங்க மேடம்... நான் வர்ல இந்த வம்புக்கு" என்றான் ஸ்டீவ்

"ஓ மை காட்... ஆனாலும் இப்படி பயப்படகூடாது ஸ்டீவ்... ஹா ஹா ஹா" என கேலி செய்தாள் மது

"ச்சே ச்சே.. பயம்லாம் இல்லப்பா... அவ்ளோ லவ்... ரைட் பேபி?" என மீண்டும் அவளை நெருங்க "ஹேய்..." என ஒற்றை விரல் சுட்டி முறைத்தாள் மீரா

"Ha ha ha.. Oh yes, I can see its all love..." என சிரித்தவள் "Honestly, I'm so happy for you both... you look so made for each other" என்றாள் மது

அவளின் மனம் நிறைந்த பாராட்டு மற்ற இருவரையும் நெகிழ செய்தது. அதே நெகிழ்வுடன், மதுவின் கையை பற்றிய மீரா "தேங்க்ஸ் மது" என்றாள்

"தேங்க்ஸ் எல்லாம் இருக்கட்டும்... சனிக்கிழமை மறக்காம பார்ட்டிக்கு வந்துடனும்" என்றாள் மது

"கண்டிப்பா மது..."என்றவள், யோசனையுடன் "பார்ட்டி பத்தி சதீஷ்கிட்ட சொல்லிட்டயா மது?" என கேட்டாள், அவனின் ஒதுக்கத்துக்கான காரணத்தை யார் மூலமேனும் அறிந்து கொள்ள முடியுமா என்பதற்கான முயற்சி போல்

"இல்ல மீரா... இனிதான் சொல்லணும்... ரெண்டு நாளா அவன் க்ளாஸ்'க்கே வரலியே... என்னாச்சு?" என மீராவிடமே கேட்டாள்

"தெர்ல மது...என்னமோ வேலைனு சொன்னான்" என மீரா கூற, அவளை யோசனையாய் பார்த்தான் ஸ்டீவ். ஏதோ பிரச்சனை என்பது அவனுக்கு புரிந்தது

சிறிது நேரத்தில் மது நூலகம் செல்லக்கிளம்ப, கிடைத்த தனிமையில் "Meera, I can see that something is bothering you... let me know if I can be of help" என்றான், விருப்பமென்றால் சொல் என்ற பாவனையில்

அவனிடம் மறைப்பதில் அவளுக்கும் உவகை இருக்கவில்லை என்றாலும், இப்போதைக்கு வேண்டாம் என நினைத்தவள் "இல்ல ஸ்டீவ்... எதுவும் இல்ல" என்றாள். அதற்கு மேல் அவன் அவளை வற்புறுத்தவில்லை

********************************************************

மறுநாள் வகுப்பிற்கு வந்த போதும் மீராவிடம் பேசுவதை தவித்தான் சதீஷ். மாலை அவள் பேச முயன்ற போதும், "வேலை இருக்கு வெளிய போகணும்" என விலகினான்

சனிக்கிழமை மதுவின் பிறந்தநாள் ஒன்றுகூடலுக்கும் சதீஷ் வரவில்லை. மதுவிடம் கேட்டதற்கு "வேலை இருக்கிறது. முடிந்தால் வருகிறேன்" என சதீஷ் கூறியதாய் கூறினாள்

மதுவின் வீட்டில் இருந்து அன்றிரவு வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மீராவின் அலைபேசி ஒலித்தது. ஏதோ பழக்கமற்ற எண் திரையில் தோன்ற எடுக்கவேண்டாமென முதலில் நினைத்தவள், ஏனோ உள்ளுணர்வு தூண்ட "ஹலோ" என்றாள்

"........"

மறுமுனையில் கேட்ட குரலில் "ஹேய் காயத்ரி... What a surprise?" என மகிழ்ச்சியாய் ஒலித்தது மீராவின் குரல்

அந்த மகிழ்ச்சி மொத்தமும் காணாமல் போகப்போவதை மீரா அப்போது அறிந்திருக்கவில்லை


நட்பின் பெருமிதத்தில்
நான்திளைத்த நாட்களுண்டு
நீகற்றகலைகள் எதுவும்
நானறியா ரகசியமில்லை - ஆனால்
உன்உலகில் எனைதவிர்த்து
உயிர்வதைக்க எங்குகற்றாய்!!!


அடுத்த பகுதி படிக்க...


(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

64 பேரு சொல்லி இருக்காக:

Chitra said...

Monday release???? :-))))))

பிரதீபா said...

chitrakkaa...grrrrrrr

Porkodi said...

Prathiba - hahahah!

எல் கே said...

வரவ உனக்கு இஷ்டப்பட்ட நாளில் போஸ்ட் வருது சரியில்ல. காயத்ரி ச்டீவோட பழைய காதலி . அவளை அவன் ஏமாத்தி இருக்கணும். இப்ப அது இவளுக்கு தெரியும் அடுத்தது ஊடல் ஆரம்பம். மக்களே இந்த வருஷம் முழுக்க இந்தக் கதை வரப போகுது

டாட்டா

siva said...

what to say..really nice story..:)

siva said...

ஹேய் காயத்ரி... What a surprise?" ///

hey gayu i miss u...hahaha..

siva said...

"Advil (Pain Killer) ஒண்ணு போடறயா?" என பேச்சை மாற்றினான் //
நீங்க முன்னாடி பார்மசி வொர்க் பண்றீங்களா எல்லா மெடிக்கல் ஷாப் வச்சு இருக்கீங்களா?
nallavey work out panrenga..

siva said...

நட்பின் பெருமிதத்தில்
நான்திளைத்த நாட்களுண்டு
நீகற்றகலைகள் எதுவும்
நானறியா ரகசியமில்லை - ஆனால்
உன்உலகில் எனைதவிர்த்து
உயிர்வதைக்க எங்குகற்றாய்!!!//


எப்படி ஆரம்பித்தாலும் கடைசியில உங்களுக்கு பிடித்த அந்த" உ" வில்தான் கவிதை முடித்து வைக்குறீங்க வாழ்க வளமுடன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரசித்துப்படித்தேன். மெகா சீரியல் போல ஸ்லோ மோஷனில் சுவைபட போகிறது இந்தக்காதல் கதை. இடைவேளைக்கு பதிலாக இடைஇடையே வெவ்வேறு கதாபாத்திரங்கள் வருகின்றனர் இந்தப்பகுதியில். மொத்தத்தில் ஜில்லுன்னு இருக்கு ஐஸ்க்ரீம்.
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

சி.பி.செந்தில்குமார் said...

சித்ரா கூட க்ளோஸ் ஃபிரண்ட்ஷிப் போல.. ஹா ஹா கதைல ஏகப்பட்ட இங்க்கிலீஷ் வோர்ட்ஸ்..

இராஜராஜேஸ்வரி said...

சில நேரங்களில் பேசும் வார்த்தைகளை விட பேசாத மௌனம் பல விசயங்களை பேசாமல் பேசும்.//
பேசாமல் பேசும் மௌனம்....Nice.

அனாமிகா துவாரகன் said...

//எதிர்பாராத நொடியில் முத்தமிட்டான் //
இத்தாலியன் முத்தமா? ஹா ஹா ஹா.

// இருஜோடி//
ஒரு ஜோடின்னா இரண்டு கண்கள். இரு ஜோடின்னா, சதீசுக்கு நாலு கண்ணா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

///ஆனால், பின்னொரு நாளில் அது ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்க போவதை பாவம் அவன் அறிந்திருக்கவில்லை//

எனக்குத் தெரியும் நாங்க எல்லாம் இழிச்சவாயுங்கன்னு இவங்க இன்னும் ஒரு 20 எபிசோட் ஓட்டப்போறாங்கனு. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

ஏதாவது சண்டை வந்து மீரா லூசு பிரிச்சு போயிட்டுதுன்னா ஸ்டீவுக்கு நல்லது எனக்கும் சந்தோசம். ஹா ஹா ஹா.

அனாமிகா துவாரகன் said...

/அந்த மகிழ்ச்சி மொத்தமும் காணாமல் போகப்போவதை மீரா அப்போது அறிந்திருக்கவில்லை //

இதப்படிக்கிற கொடுமை வேறா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அனாமிகா துவாரகன் said...

அக்கா அக்கா ஓடி வா. http://venkatnagaraj.blogspot.com/2011/05/blog-post_24.html உங்களத் தெரியாம ஒருத்தர் வலை உலகில் இருக்கிறார். அவர ஒரு வழி பண்ணவேண்டாம்? உடனேயே ஒரு இட்லிபார்சல் அனுப்பிடுக்கா.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

பதிவு வரலாற்றில் முதல் முறையாக நீண்ட.......... நெடுந்தொடர் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅரம்பம். தயவு செய்து ஆரும் படிக்க வேண்டாம்.

படிச்சா..................... அவ்வளவு தான் அடிக்ட் ஆயிருவீங்க

நிஜாம் என் பெயர் said...

படிச்சதே தெரியல. சீக்கிரமா முடிஞ்சுருச்சு.

ஓஓஓஓஓஓ இதுக்கு பெயர் தான் விறுவிறுப்பான திரைக்கதையா !!!!!

சின்ன பீலிங். சதீஷ் மீராவிடம் காட்டிய அக்கறையை, மீரா சதிஷிடம் காட்டவில்லை.

காதல் நட்பை overtake செய்து விட்டதா ??

Jaleela Kamal said...

//வரவ உனக்கு இஷ்டப்பட்ட நாளில் போஸ்ட் வருது சரியில்ல. காயத்ரி ச்டீவோட பழைய காதலி . அவளை அவன் ஏமாத்தி இருக்கணும். இப்ப அது இவளுக்கு தெரியும் அடுத்தது ஊடல் ஆரம்பம். மக்களே இந்த வருஷம் முழுக்க இந்தக் கதை வரப போகுது .///

அப்படியா புவனா?

அப்ப இது கோலங்களா? இல்லை செல்லமேவா?

divyadharsan said...

Hi APPAVI,

Lovely episode! No time to read at all.Jus now read chapters 19 and 20.Gd Gd.
But who is that Gayathri??Again a confusion??
Chumma chumma anga anga oru twist vechi beethiya kelapareenga:((
Aana athu kadasila mokkayaa mudiyumnu yenaku oru vattam terithu:))

Yethu yepdiyo..Unga storya ennum oru varusham kooda ezhunga...........
padika nan ready(veyra vazhi)!!
chilisauce saaptavan sugar saaptu thana aaganum
(ungala mari nanum arivupoorvama yosichathu:)

Aana steve meera va matum pirichidatheenga ples!!
Apram nan terror aiyduvan..

I dn't thnk Meera didn't care about Sathish..
Kaathalichaa ulagamey marathudum!! Ethula sathish yentha moola??
That doesnt mean meera forgets sathish!!

Figura paarthapram friendshipa cut panrathu thaan universal truth aachey:))
Mothala Friendshipa love payangara speeda overtake pannum...Apram love la mutti mothi
kavunthu vizhunthu, nonthu noodles aanapram..yengada nama friendsunu thrumbhi paartha..

singamuthu kenakka...naangathaan apavey sonoamla!!
ne ethuku sarivaramatanu..namala kevalapaduthi canai aakuvaanga:((

Kavithai super appavi..
padichavudney rombha kastama erunthuchu!!
My own exp..really touching.Thnx.Tc.

//அந்த சில நிமிடங்கள் அவர்களின் காதல் பெட்டகத்தில் சேமிக்க வேண்டிய நிமிடங்களில் ஒன்றானது//

//செல்லமாய் கன்னத்தில் அடித்தவன், இன்னும் அதிகமாய் சிரித்தவளை எதிர்பாராத நொடியில் முத்தமிட்டான்//

//இவளை விட்டு இரண்டு நிமிடம் கண்ணை எடுக்கவும் மனம் வரவில்லையே, இரண்டு மாதம் என்ன செய்ய போகிறேன் என நினைத்தவன், தன்னையும் அறியாமல் அதை வாய் விட்டு கூறி விட்டான் "I'm going to miss you more than I thought baby" என்றான் //


"Oh my god...oh...my god... What did I do? I didn't plan it honey... believe me... just spontaneously... I'm sorry... I..." என மீராவை பாவமாய் பார்த்தவன், அவன் செய்கையில் மது சிரித்ததும்

"No offense Madhu... ஜஸ்ட், கொஞ்ச நாளைக்கு எங்களுக்குள்ள இருக்கட்டும்னு நெனச்சோம்... but.... " என்றவன் மீராவை கெஞ்சும் பார்வை பார்த்தான்//

ச்சே ச்சே.. பயம்லாம் இல்லப்பா... அவ்ளோ லவ்... ரைட் பேபி?" என மீண்டும் அவளை நெருங்க "ஹேய்..." என ஒற்றை விரல் சுட்டி முறைத்தாள் மீரா

//"Ha ha ha.. Oh yes, I can see its all love..." என சிரித்தவள் "Honestly, I'm so happy for you both... you look so made for each other" என்றாள் மது //

Cute Lines!! Very Romantic!!

middleclassmadhavi said...

மெகா சீரியல் எழுதித் தர இன்னுமா யாரும் அப்ரோச் பண்ணல?...:-))

Gayathri said...

என்ன இது சந்தோஷமா போகுதேன்னு பார்த்தா..என்ன நீங்க எல்லா பகுதி முடிவுளையும் இப்படி ஏதான சஸ்பென்ஸ் வைக்கலன்னா தூக்கம் வராதோ..படிதுறீங்க

சுசி said...

இருங்க.. நான் ஸ்டீவ மறைச்ச விஷயத்த மீராட்ட போய் சொல்லிட சொல்றேன் :(

A.R.ராஜகோபாலன் said...

அதன் பின் சிறிது நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை.சில நேரங்களில் பேசும் வார்த்தைகளை விட பேசாத மௌனம் பல விசயங்களை பேசாமல் பேசும்

என் மனம் உணர்ந்து ரசித்தேன் ,
தொடர் சலிப்பில்லாமல் போகிறது,காதலர்கள் மட்டுமல்ல , அவர்தம் வார்த்தைகளும் இளமையாகவே பயணிக்கின்றன.

Sathya's said...

Super story started reading it very late complated 1 -17 episodes on single throttle..Kalukureenga pramadham..etho parthu nallavangalai jodi serthu vitta santhosham than :) (sorry no tamil font)

Porkodi said...

ஏங்க சத்யா, காலை காட்டுங்க கொஞ்சம்.. ஜோக் அடிக்கலாம், பொய் சொல்லலாம், அதுக்குன்னு இப்படியாப்பட்ட விஷயத்தை சொல்லி என்னை ஒரு செகன்ட் டெரர் பண்ணியிருக்கீங்க.. நிஜமாவே இதை பண்ணியிருந்தீங்கன்னா, உடனே ஆர்மி வேலைக்கு சேர்ந்துடுங்க! உங்களுக்கு தான் எதையும் தாங்கும் இதயம் போலருக்கே..!!

அப்பாவிக்கா.. இந்த மாதிரி ஜீவன்கள் தான் உண்மையிலேயே அப்பாவிகள்.. கொஞ்சம் புரிஞ்சுக்கோங்கக்கா..

நசரேயன் said...

//"Meera, I can see that something is bothering you... let me know if I can be of help"//

சீக்கிரமா மீரா கழுத்திலே தாலிய கட்டி எங்க தலைய காப்பாத்து தல

நசரேயன் said...

//
"Ha ha ha.. Oh yes, I can see its all love..." என சிரித்தவள் "Honestly, I'm so happy for you both... you look so made for each other" என்றாள் மது
//

கொடுத்த காசுக்கு மேல ௬வுறது இதுதானா

நசரேயன் said...

//"எனக்கு பசியே இல்ல ஸ்டீவ்... I just want to go lie down" எனவும் //

ஏன் அப்பாவி இட்லிய சாப்பிட்டியோ ?

siva said...

அப்பாவிக்கா.. இந்த மாதிரி ஜீவன்கள் தான் உண்மையிலேயே அப்பாவிகள்.. கொஞ்சம் புரிஞ்சுக்கோங்கக்கா./// ethai naan varaverkindren..

Sri Seethalakshmi said...

இப்பகுதி மிக அருமை.

//சில நேரங்களில் பேசும் வார்த்தைகளை விட பேசாத மௌனம் பல விசயங்களை பேசாமல் பேசும்.
காதலர்களுக்கு மட்டுமே உரித்தான தருணம் / வசனம் :-)


நீண்ட நெடுங்கதை :-)
போனவாரம் ஒரு ஜோடி கண்கள், இப்போ இரண்டு ஜோடி கண்களா !!??
steve இன்னொரு (பப்பி) லவ்வா !!?? இந்த கதைய இங்கேயே தொடருவீங்களா !!??
இல்ல இன்னொரு மெகா தொடர் ஆரம்பிபீங்களா !!??

ஊடலிளில் ஆரம்பித்து கதலிளில் முடியும் என எதிர்பார்த்தால், திரும்பவும்
ஊடலிளில் வந்து முடியும் போல இருக்கிறது...

priya.r said...

முதலில் பதிவுக்கு நன்றி அப்பாவி

அரைத்த மாவை அரைத்து கொண்டு இருக்கும் இந்த தமிழ் கூறும் பதிவுலகில் சற்று வித்தியாசமா சிந்திக்கும் அப்பாவி பாராட்டு குரியவரே
சென்ற அத்தியாயாய த்தில் ஒரு ஜோடி கண்கள் இந்த அத்தியாத்தில் இரண்டு ஜோடி கண்களாக மாற்றி நம்மை திகைப்புக்கு உள்ளாக்குகிறார்
அடுத்து ஆங்கிலத்தை அதிகமாக கொடுத்து நமது ஆங்கில அறிவை செம்மை (நம்மை ) படுத்துகிறார்
பிறகு அந்த ஒரு ஜோடி கண்கள் சதீஷ் ஆ இல்லை வேறு ஒருவரா என்று நம்மை யோசிக்க வைக்கிறார்
சதீஷ் ஏன் இவ்வாறு நடந்து க்கிறான் என்று எத்தனை எபிசொட் கழித்து சொல்ல போகிறார் என்ற ஆவலை தூண்டுகிறார்
மது வுடன் யாரை சேர்க்க போகிறார் என்று நம்மை கேள்வி கேட்கவும் வைக்கிறார்
கடைசியில் வந்த காயத்ரி யார் என்று என்று நம்மை மர்மத்தின் உச்சிக்கே கொண்டு போகிறார்

நமது அப்பாவி நாள் பூரா பிழிய பிழிய (ஏதாவது சந்துருவம் பிழிந்து இருப்பாரோ !)எழுதிய அத்தியாயத்தின் கதை சுருக்கம் ;

மீரா ஸ்டீவ் லவ்வியதை பார்த்த சதீஷ் மீராவுடன் பேசாமல் தவிர்த்து விடுகிறான் ;இதை அறியாத மீரா மனதிற்க்குள் வருந்துகிறாள் ;இவர்கள் காதலை ஸ்டீவ் செய்கையின் மூலம்அறிந்த மது மகிழ்ச்சியடைந்து வாழ்த்து தெரிவித்து அவள் தனது பர்த்டேக்கு ஒரு சின்ன கெட்-டுகெதர்.வாங்க என்று அழைப்பு விடுக்கிறாள் அதற்கு அவர்கள் சென்றனர் மதுவின் பிறந்தநாள் ஒன்றுகூடலுக்கும் சதீஷ் வரவில்லை;விழா முடிந்த இரவு காயத்ரி என்பவளிடம் இருந்து மீராவுக்கு அலை பேசி அழைப்பு ?

Madhuram said...

Priya, I guess that Satish is not angry because he saw Meera and Steve. Adhukku vera edhavadhu reason irukkum. He must be upset that Meera was not happy about going to India or something like that. I think Gayathri has seen them and that's why she is calling to tell something important to Meera about Steve.

Adapavi, naan sonnadhu righta irundha kadhaiya maathidakoodadhu. Okay va?

priya.r said...

Thanks for yr reply Madhu.,

My point of view is still Sathish didn't know about their love
even he didn't see Steeve and Meera together
May be his upset reason is mainly Meera's behaviour .Anyhow i also accept yr comments about Gayathri


I should be point out one important thing Mathu!

We can assume a real appaavi writteress writting

But we cann't judge a rele adappaavi writteress naughty writting :)

innum thelivaagave tamilil solkireene!

இந்த இடத்தில ஒன்றை குறிப்பிட்டே ஆக வேண்டும் மது !
ஒரு உண்மையான அப்பாவி எழுத்தாளரின் மன ஓட்டத்தை கூட கணித்து விடலாம்
ஒரு அடப்பாவி எழுத்தாளாரின் குறும்பு எழுத்துகளை கணிக்கவே முடியாது :) .,

priya.r said...

@ சுனாமி !

//எதிர்பாராத நொடியில் முத்தமிட்டான் //
இத்தாலியன் முத்தமா? ஹா ஹா ஹா. //

உனக்கு மட்டும் ஏண்டி இந்த மாதிரி எல்லாம் சந்தேகம் வருது ;இதே படிக்கிற பாடத்திலே ஏதாவது சந்தேகம் வருதா ?

உன்னை குத்தம் சொல்லி என்ன பிரயோசனம் ;இப்படி எல்லாம் எழதற அப்பாவியை சொல்லோனும்:)

// இருஜோடி//
ஒரு ஜோடின்னா இரண்டு கண்கள். இரு ஜோடின்னா, சதீசுக்கு நாலு கண்ணா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். //

குழந்தைக்கு எவ்வளோ அறிவு ;பெரிய துப்பறியும் புலியா வருவாளாக்கும் :)

///ஆனால், பின்னொரு நாளில் அது ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்க போவதை பாவம் அவன் அறிந்திருக்கவில்லை//

எனக்குத் தெரியும் நாங்க எல்லாம் இழிச்சவாயுங்கன்னு இவங்க இன்னும் ஒரு 20 எபிசோட் ஓட்டப்போறாங்கனு. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... //

ஹி ஹீ இன்னொரு ஜீரோ சேர்த்துக்கோ அனா 200 எபிசொட் !!!!!!

ஏதாவது சண்டை வந்து மீரா லூசு பிரிச்சு போயிட்டுதுன்னா ஸ்டீவுக்கு நல்லது எனக்கும் சந்தோசம். ஹா ஹா ஹா.//

அந்த கேப் ல நீ வந்துடலாம்னு நினைப்பா ! என்னவோ ஜாக்மன் கூட தான் நடிப்பேன்னு பந்தா பண்ணி கிட்டே :)

அனாமிகா துவாரகன் said...

200 எபிசோட். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

/அந்த கேப் ல நீ வந்துடலாம்னு நினைப்பா ! //
சீச்சீ. என் டேஸ்ட்டை அவ்வளவு கொறைச்சு எடை போடறீங்களே. அவ்வ்வ்.

//என்னவோ ஜாக்மன் கூட தான் நடிப்பேன்னு பந்தா பண்ணி கிட்டே :)//
ஸ்டீவ் கூட நடிப்பேன்னு சொல்லவே இல்லையே. ஹி ஹி.

priya.r said...

ஒரு காலத்திலே ஸ்டீவ் ஸ்டீவ் ன்னு ரொம்ப லைக் காமே ;இப்போ என்ன வெறுப்பு !

அனாமிகா துவாரகன் said...

ஹைய்யோ. இது என்ன புது சோதனை. மீராவோட ஓவர் சீனில ஸ்டீவ் மேலேயும் கடுப்பு. மதுவும் ஸ்டீவும் சேர்ந்தால் சந்தோசம். மீரா லூசு வேண்டாம்.

கன்னியாஸ்திரியாகப் போகற பொண்ணு பசங்கள் பார்த்தால் கண்ணை மூடிட்டு போவாளாம். இப்படி எல்லாம் பேசறது பாவம். ஹி ஹி.

priya.r said...

என்னப்பா புதுசு புதுசா சொல்றே
இவ்வளோ தூரம் கதை வந்துடுச்சு
இதை வச்சு அப்பாவி ரெண்டு வருசத்துக்கு உண்டான 96 எபிசொட்
தயார் பண்ணி வைத்து இருக்கா.,இப்போ போய்.............
எப்படி முடியும் அனா ................
இதை மதுவே ஒத்துகிட்டாலும்
மதுரம்(madhuram) சம்மதிக்கவே மாட்டாங்க :)

தக்குடு said...

satya said //complated 1 -17 episodes on single throttle//

@ சத்யா - அப்பிடியே 'அப்பாவியோட' தங்கமணி எழுதின 'அதே கண்களையும்' ஒரே மூச்சுல படிச்சுட்டு சொல்லுங்க, கின்னஸுக்கு விண்ணப்பம் போட்டு பாக்கலாம்...:) போறபோக்கை பாத்தா நம்ப இட்லி மாமியோட படைப்புகள் எல்லாம் சமச்சீர் கல்வி பாடதிட்டத்துல சேர்த்துடுவாங்க போலருக்கு!!..:))

அனாமிகா துவாரகன் said...

//இதை மதுவே ஒத்துகிட்டாலும்
மதுரம்(madhuram) சம்மதிக்கவே மாட்டாங்க :)
//

He he. Nice lines

priya.r said...

அப்புறம் அது யாரு கன்னிகா இஸ்திரி
நீயா !!!!!!!!!!!!!!!!!!!!!!
இந்த பதிவுலகம் தாங்குமா !!!!!!!!!!!

அனாமிகா துவாரகன் said...

//@ சத்யா - அப்பிடியே 'அப்பாவியோட' தங்கமணி எழுதின 'அதே கண்களையும்' ஒரே மூச்சுல படிச்சுட்டு சொல்லுங்க, கின்னஸுக்கு விண்ணப்பம் போட்டு பாக்கலாம்...:) //
ரிப்பீட்டுடுடுடுடுடுடுடூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

அனாமிகா துவாரகன் said...

//இந்த பதிவுலகம் தாங்குமா !!!!!!!!!!! //
எல்லாம் தாங்கும் தாங்கும்.

priya.r said...

நம்ப முடிய வில்லை! வில்லை ..............................
தக்குடு அப்பாவியை கலாய்த்து பின்னூட்டமா !

priya.r said...

ப்பாவியை ரொம்ப ஆதரிப்போர்
விமலா ,சத்யா ,சீதா
அப்புறம் அப்பாவி நற்பணி மன்றத்தின் ஒரே உறுப்பினர் & தலைவர்
அந்த சிவா அடிகளார்

இவங்களுக்கு மட்டும் ஏன் இந்த அப்பாவியின் உண்மையான சொருபம் தெரிய வில்லை !

அனாமிகா துவாரகன் said...

//இவங்களுக்கு மட்டும் ஏன் இந்த அப்பாவியின் உண்மையான சொருபம் தெரிய வில்லை ! //

ஏன்னா இவங்க தான் உண்மையான (ரியல்) அப்பாவிங்க. அவ்வ்வ்வ்வ்வ்வ்.

priya.r said...

எனகு என்னவோ பயமா இருக்குடி
நீ ஆரம்பித்து வைத்த ஐவர் பேரவை யை அப்பாவி
கலைக்க ஏதாளும் செய்யராளோன்னு:(

அனாமிகா துவாரகன் said...

//எனக்கு ஒரு உண்மை தெரிந்சாகுனும் இப்போ !!!!!!! //
எனக்கும் இந்த‌ உண்மை தெரிஞ்சாகனும்

அனாமிகா துவாரகன் said...

//நீ ஆரம்பித்து வைத்த ஐவர் பேரவை யை அப்பாவி
கலைக்க ஏதாளும் செய்யராளோன்னு:( //
மத்த நாலு பேரும் புலிகள். பயப்படாதீர்கள். எலிகளை டிஸ்மிஸ் பண்ணிடலாம். ஹி ஹி.

priya.r said...

ஆமா!
LK பேருக்கு ஒரு எதிர்ப்பு
வாசகன் சார் ஆளையே காணோம் !
ஐவர் பேரவை புட்டு கிட்டதுன்னு அப்பாவியோட கமெண்ட்ஸ்
பேசாம புது உறுப்பினரை தான் தேடனும் !

அனாமிகா துவாரகன் said...

//ஐவர் பேரவை புட்டு கிட்டதுன்னு அப்பாவியோட கமெண்ட்ஸ்//
அப்படியா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர். அவங்க கற்பனையில் இருக்காங்க. திருப்பூர் சூறாவளியே போது அவங்களை தனியா எதிர்க்கிறதுக்கு. சோ டோன்ட்டு வொறி

priya.r said...

போற போக்கை பார்த்தா
அடுத்த காபி வித் மைன்ட் வாய்ஸ் கூட நாம ரெண்டு பேரும் தான் :(

அனாமிகா துவாரகன் said...

=((

priya.r said...

திருப்பூர் சூறாவளியே //
கொய்யாலே ! என்னடி கேப் ல கிடா வெட்ரே !
பின்னி புடுவேன் பின்னி :)

priya.r said...

அனா ! ஏதாவது அப்பாவியை புகழ்ந்து ரெண்டு வார்த்தை சொல்லி போடு
இல்லைன்னா என்ற ப்ளாக் என்ன சாட் டா ன்னு வந்து சத்தம் போட போறா

priya.r said...

one side ,two side,three sideand all sides காதல் கதை எழுதறதுல அப்பாவி தான் சூப்பர் ஆம்
அவளே பெருமையா சொன்னாப்பா :)

nawas khan said...

Dear Ramani

I can’t explain my pleasure after reading all 20 part of the story. Still I am not understood why am I like that?
But I like the way of your writing and I feel a woman can only write like this type of story better than a man. I am exiting to know about their future more than of mine.
I express my special word to you that you are a very good story narrator. Keep it up your journey in blog.

Vasagan said...

Romance and suspense .... அதேகண்கள் களை காட்டிலும் இந்த கதையில் till now there is no missing links and flowing good keep it up ...

\nawas khan சொன்னது…

Dear Ramani

I can’t explain my pleasure after reading all 20 part of the story. Still I am not understood why am I like that?
But I like the way of your writing and I feel a woman can only write like this type of story better than a man. I am exiting to know about their future more than of mine.
I express my special word to you that you are a very good story narrator. Keep it up your journey in blog. \

one more feather on your cap.

Sankathukku pathil viraivil

அப்பாவி தங்கமணி said...

@ Chitra / பிரதீபா / Porkodi - அடபாவிங்களா மூணு பேரும் கதைய பத்தி ஒத்த வார்த்த கூட சொல்லாம உங்களுக்குள்ள சாட் பண்ணிட்டு போறீங்களே... இந்த பால் வடியும் முகத்த பாத்தா பாவமா இல்ல... அவ்வ்வ்வவ்....:))

@ எல் கே - ஹலோ... நான் போஸ்ட் போட்டப்ப இந்தியால செவ்வாய்கிழமை ஆய்டுச்சு யு நோ...ஹா ஹா.. உன் கற்பனை சூப்பர்... பொறுத்திருந்து பார்ப்போம்... :)

@ siva - உங்கள நான் நம்பறதா இல்ல... அப்ப அப்போ சேம் சைடு கோல் போடறீங்க...அவ்வ்வ்வ்...:)... ஹா ஹா...எஸ் ஐ மிஸ் காயத்ரி டூ..:)... ஆஹா...மெடிக்கல் ஷாப்ல எல்லாம் வேலை செய்யலை... சும்மா ஒரு ஜெனரல் நாலேஜ் தான்...:))...அதென்னமோ 'உ' ல தாங்க முடியுது....என்னமோ போங்க...:)

@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்

@ சி.பி.செந்தில்குமார் - ஹா ஹா... நன்றிங்க..:)

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க

@ அனாமிகா - உன் கமெண்ட்ஸ் மட்டும் கமெண்ட் மாடரேசன்ல போட எதுனா ஆப்சன் இருக்கானு தேடணும்... ஹா ஹா...ஆஹா...அது ரெண்டு கண்கள்னு போட வந்து ரெண்டு ஜோடினு typo ஆகி போச்சு... உன் கண்ணுக்கு மட்டும் இப்படித்தான் இதெல்லாம் மாட்டுமோ...ஹா ஹா...என்னது மீரா பிரிஞ்சு போனா உனக்கு நல்லதா... ஒண்ணும் சரி இல்லிங்க இந்த பொண்ணு...இதுல இவங்க அக்கா சப்போர்ட் வேற... :)).. எனக்கு வெங்கட் & ஆதி நல்லாவே தெரியும் மேடம்... அம்மணி எங்க ஊராக்கும்...:))

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - ஹா ஹா ஹா... திட்டற மாதிரியே பாராட்டுற கலையை உங்ககிட்ட கத்துக்கணும்...:))

@ நிஜாம் என் பெயர் - ஹா ஹா...நன்றிங்க பாராட்டுக்கு... மீரா சதீஷிடம் அக்கறை காட்டவில்லைனு சொல்ல முடியலைங்க... அடுத்த வாரம் படிச்சுட்டு சொல்லுங்க...நன்றி..:)

@ Jaleela Kamal - ஐயையோ... இது கோலங்களும் இல்ல செல்லமேவும் இல்லிங்க... இது ஜில்லுனு ஒரு காதல் மட்டுமே... வருஷ கணக்கெல்லாம் இழுக்கற எண்ணமில்லை'ங்க...:))

அப்பாவி தங்கமணி said...

@ divyadharsan - வாங்க திவ்யா...:)

//But who is that Gayathri??Again a confusion??//
அது அடுத்த வாரம் விரிவா சொல்றேன்...ஒகேவா?

//Aana athu kadasila mokkayaa mudiyumnu yenaku oru vattam terithu //
அவ்வ்வ்வ்....செம பல்பு...ஹா ஹா

//Yethu yepdiyo..Unga storya ennum oru varusham kooda ezhunga...........padika nan ரெடி//
ஆஹா...காதில் தேன் வந்து பாயுது...நீங்க வேற வழினு சொன்னது எனக்கு கேக்கவே இல்ல...:))

//chilisauce saaptavan sugar saaptu thana aaganum //
ஹா ஹா ஹா... ROFTL . செமையா சிரிச்சேன்... நீங்க இப்படி உங்க ப்ளாக்ல எழுத ஆரம்பிச்சா நானெல்லாம் காணாம போய்டுவேன் திவ்யா..:))

//Apram nan terror aiyduvan..//
இப்போ terror இல்லையா... இல்லாமையே இப்படியா...:))

//That doesnt mean meera forgets sathish!!//
நானும் இப்படிதான் நினைக்கிறேன்... :)

//Figura paarthapram friendshipa cut panrathu thaan universal truth aachey:))//
ஹா ஹா...;))

//Kavithai super appavi..// //Cute Lines!! Very Romantic!! //
தேங்க்ஸ் திவ்யா...:)

அப்பாவி தங்கமணி said...

@ middleclassmadhavi - இன்னும் பண்ணலைங்க... :))

@ Gayathri - ஹா ஹா... படுத்தாம இப்படி உங்கள அடுத்த வாரம் இங்க வர வெக்கறது...;)

@ சுசி - என்ன விஷயம்னு எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க சுசி..:)

@ A.R.ராஜகோபாலன் - நன்றிங்க சார்

@ Sathya's - ரெம்ப நன்றிங்க சத்யா...:)

@ Porkodi - அடப்பாவி... ஏதோ என்னை போல ஒண்ணு ரெண்டு நல்லவங்க(ஹி ஹி) நல்ல வார்த்தை சொன்னா பொறுக்காதே.... அவ்வவ்... இருங்க உங்களுக்கு பார்சல் இன்னிக்கி ரெடி பண்றேன்....:)))

@ நசரேயன் - அவ்வ்வ்வவ்.... :))

@ siva - இந்த சேம் சைடு கோலை நான் வன்மையாக கண்டிக்கிறேன்...:)

@ Sri Seethalakshmi - //ஊடலிளில் ஆரம்பித்து கதலிளில் முடியும் என எதிர்பார்த்தால்// அது சரி அதென்ன "கதலிளில்"... ஹி ஹி... நீங்க மட்டும் தான் என்னை கலாய்பீங்களோ...:))

@ priya.r - //வித்தியாசமா சிந்திக்கும் அப்பாவி பாராட்டு குரியவரே// ௦- இது நிச்சியமா பாராட்டு இல்லைன்னு இந்த ப்ளாக் உலகத்துக்கே தெரியும்...:)) உங்கள அப்புறம் கவனிச்சுக்கறேன்...கிர்ர்ர்ரர்ர்ர்ர்.....

அப்பாவி தங்கமணி said...

@Madhuram - ஹா ஹா ஹா...உங்க கற்பனை சூப்பர்...:)).... சேச்சே... நான் முன் வெச்ச காலை பின் வெக்கரதில்ல... நான் முன்னாடியே யோசிச்ச மாதிரி தான் கொண்டு போக போறேன் கதைய... (வேற ஒண்ணும் ஐடியா இல்லைங்கறது நமக்குள்ள மட்டும் இருக்கட்டும் மது....:))

@ தக்குடு - அடப்பாவி...நீயுமா? இரு கவனிச்சுக்கறேன்... ஆனாலும் சமச்சீர் கல்வி ஓவர் ஐ சே....:))

@ nawas khan - ரெம்ப நன்றிங்க நவாஸ்...உங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும்... made my day... தொடர்ந்து படிப்பதற்கும் மிக்க நன்றி... ஒரே ஒரு திருத்தம், என் பேரு ரமணி இல்லிங்க... அப்பாவி... :)

@ Vasagan - நன்றிங்க... பதில் வரட்டும்...:))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r & அனாமிகா - அடபாவிங்களா... கடைசீல என் ப்ளாக் சாட் platform மாதிரி ஆகி போச்சே...அவ்வவ்வ்வ்வ்....

ஆஹா...இந்த கதைய பத்தி தீசிஸ் எழுதுவீங்க போல இருக்கே அக்கா... அன்த சீன் ஏன்ட்டி லேதுனு சொல்றீங்களோ...ஹா ஹா...

//ஒரு அடப்பாவி எழுத்தாளாரின் குறும்பு எழுத்துகளை கணிக்கவே முடியாது :) //
வெரி குட்... இதான் சரி... நீங்க கணிக்காத மாதிரி தான் இனி கதை நகரும்...:))...இந்த பில்ட் அப்ல தானே என் காலமே ஓடுது...ஹி ஹி...:)

//இதே படிக்கிற பாடத்திலே ஏதாவது சந்தேகம் வருதா ?//
நல்லா கேளுங்க உங்க தொங்கசிய...:)

//குழந்தைக்கு எவ்வளோ அறிவு ;பெரிய துப்பறியும் புலியா வருவாளாக்கும் :)//
சுத்தம்...கிர்ர்ரர்ர்ர்.....:((

//அந்த கேப்'ல நீ வந்துடலாம்னு நினைப்பா //
இதையே நான் சொன்னா என் மேல பழி வரும்... எனக்கேன் வம்பு...:)

//ஸ்டீவ் கூட நடிப்பேன்னு சொல்லவே இல்லையே. ஹி ஹி//
நீ சொன்னாலும் இங்க நோ என்ட்ரினு ஸ்டீவ் சொல்லியாச்சு...:)

//தக்குடு அப்பாவியை கலாய்த்து பின்னூட்டமா//
எல்லாம் உங்க சதி தான் போல இருக்கு... கிர்ர்ரர்ர்ர்.....

//இவங்களுக்கு மட்டும் ஏன் இந்த அப்பாவியின் உண்மையான சொருபம் தெரிய வில்லை//
ஏன்னா அவங்க எல்லாம் என்னை மாதிரியே ரெம்ப நல்லவங்க... :))

//நீ ஆரம்பித்து வைத்த ஐவர் பேரவை யை அப்பாவி கலைக்க ஏதாளும் செய்யராளோன்னு//
ச்சே ச்சே...நீங்க இருக்கறப்ப எனக்கேன் அந்த கஷ்டம்...:))

divyadharsan said...

Where is 21st part appavi???Entha week leava?

அப்பாவி தங்கமணி said...

@ Divyadharsan - Hi Dhivya, indha week post pottaachunga already..:)How r u? How is the little one?

Post a Comment