Sunday, May 01, 2011

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி... :)))

 
தலைப்பை பாத்ததும் உங்க மனசுல எல்லாம் என்ன கற்பனை வரும்னு எனக்கு நல்லாவே தெரியும்... சாம்பிள்க்கு சில இதோ...:)
 
"என்னாச்சு அப்பாவி... நீ ப்ளாக் எழுதறதை நிறுத்த போறியா?"னு கேட்கும் அன்பு உள்ளங்களே...
 
"உங்க ஆபீஸ்ல இன்டர்நெட் தடை பண்ணிட்டாங்களா... ஐ ஜாலி" என குதூகலிக்கும் சகோதர சகோதரிகளே...
 
"உன் ப்ளாக் திருட்டு போய்டுச்சோ... என் வேண்டுதல் வீண் போகல ஆண்டவா" என மனமுருகும் மைண்ட்வாய்ஸ்களே...
 
நீங்க நினைக்கற மாதிரி எந்த நல்லதும் நடக்கல... இப்ப, ஒரு குட் நியூஸ் ஒரு பேட் நியூஸ் ரெண்டு இருக்கு... எதை மொதல்ல சொல்றது... ஹ்ம்ம்...
 
சரி... குட் நியூஸ் சொல்லிடறேன்... இந்த வாரம் "ஜில்லுனு ஒரு காதல்" போஸ்ட் வராது...
 
ஹலோ ஹலோ வெயிட் வெயிட்... பேசிக்கிட்டு இருக்கறப்ப என்னதிது சின்னப்புள்ளத்தனமா பட்டாசு வெடிக்கறது... கர்ர்ர்ர்ர்ர்ர்....
 
சரி... இனி இன்னொரு நியூஸ் என்ன தெரியுமா... அதுக்கு பதிலா நான் வலைச்சரத்துல இந்த வாரம் ஏழு போஸ்ட் போட போறேன்... ஹொவ் இஸ் இட்? சூப்பர்'ல...:)))
 
ஆமாங்க... என்னை நம்பி வலைச்சர ஆசிரியர் பொறுப்பை இந்த வாரம் குடுத்து இருக்காங்க... எனக்கு தெரிஞ்ச மாதிரி எழுதலாம்னு இருக்கேன்... பின்ன தெரியாத மாதிரியா எழுத முடியும்னு குண்டக்க மண்டக்க கேள்விலாம் கேக்க கூடாது சொல்லிட்டேன்...
 
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... என்ன பிரச்சனைனாலும் பேசி தீத்துக்கலாம்... பப்ளிக்ல நாம எல்லாம் பிரெண்ட்ஸ்... சரிங்களா?
 
வலைச்சரத்துல வந்து அப்படியே மெயின்டீன் பன்னோணும்... உள்நாட்டு பகைக்கு எல்லாம் அங்க வந்து பழி வாங்க கூடாது ஜென்டில்மேன்(வுமன்)....டீல்???
 
அப்படி மெயின்டைன் பண்ணினா, இனிமே கம்மியா பதிவு போட்டு உங்களை கம்மியா டார்ச்சர் பண்ணுவேன் என உறுதிமொழி அளிக்கிறேன்... இப்போ டீலா???...:)))
 
சரிங்க... வலைச்சரத்துல முதல் பதிவு போட்டுட்டேன்... முதல் பதிவு சுய புராணம் தான்... சும்மாவே நாம (நான்) கொஞ்சம் சுய புராணம் அதிகம் தான்... இதுல முதல் பதிவுல உங்கள பத்தி சொல்லிக்கோங்கனு பெர்மிசன் குடுத்தா விடுவமா? ஹி ஹி ஹி...
 
இதோ... முதல் பதிவு... வந்தாள் அப்பாவியே...:)))
 
ஸ்டார்ட் மீசிக்... நான் வலைச்சரத்தில் எழுதவதை பற்றிய தங்களின் மேலான (Female ஆன) கருத்துக்களை தெரிவிக்கணும்...:))
 
நன்றி... வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......................:))))
 
பின் குறிப்பு:
அனேகமா நான் எழுதினதுலையே, இதான் சின்ன போஸ்ட்னு நினைக்கிறேன்... என்ஜாய் மக்கள்ஸ்....:)))

40 பேரு சொல்லி இருக்காக:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் வ்ருகை

சி.பி.செந்தில்குமார் said...

>>அனேகமா நான் எழுதினதுலையே, இதான் சின்ன போஸ்ட்னு நினைக்கிறேன்... என்ஜாய் மக்கள்ஸ்....:)))

பில்டப்பு ஜாஸ்தியாத்தான் இருக்கு.. ஹா ஹா

பத்மநாபன் said...

வலைச்சர சிறப்பாசிரியருக்கு வாழ்த்துக்கள்....இனி ஒரு வாரம் திருவிழா அங்கயா...வந்திட்டே இருக்கோம்.. விருந்துக்கு ஏற்பாடு பண்ணிருங்க ( இட்லியை தவிர)

சௌந்தர் said...

ச்சே வலைச்சரம் பாவம்....என்ன ஆகபோகுதோ

Gayathri said...

ஹை அக்கா வாழ்த்துக்கள் எல்லாரையும் நல்லா அருங்க ச்சே அறிமுக படுத்துங்க..ஹாஹா சுப்பர் கலக்கிடுங்க

FARHAN said...

வாழ்த்துக்கள் சகோ இதோ வலைசாரல் பக்கம் வந்துட்டோம்ல

இராஜராஜேஸ்வரி said...

வலைச்சரத்துல இந்த வாரம் ஏழு போஸ்ட் போட போறேன்... ஹொவ் இஸ் இட்? சூப்பர்'ல...:)))//
மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.

அமெரிக்கவாசியாகிவிட்டால் பிறந்த ஊர் கோவையை மறந்துவிடுவீர்களா என்ன??
என்பதிவின் பக்கம் வந்து நீண்ட நாட்களாகிவிட்ட்னவே??

வெங்கட் நாகராஜ் said...

வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துகள் :)))))

அமைதிச்சாரல் said...

வாழ்த்துகள் அப்பாவி..

தி. ரா. ச.(T.R.C.) said...

அதுக்கு பதிலா நான் வலைச்சரத்துல இந்த வாரம் ஏழு போஸ்ட் போட போறேன்... ஹொவ் இஸ் இட்? சூப்பர்'ல

ஆமாம் ஆமாம் ! வலைச்சரத்துக்கு ஏழரை ஆரம்பம் ஜமாய்ங்க நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம். வந்துடுவோம்ல

dheva said...

வலைச்சரத்துக்குதானே.......வாங்க வாங்க!!!

cheena (சீனா) said...

அன்பின் அப்பாவி தங்கமணி

வருக வருக வலைச்சரத்துக்கு வருக வருக !

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

sakthi said...

வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

priya.r said...

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி... :)))//
சொல்லுங்க சொல்லுங்க ;கனடா நாட்டுக்கா
இந்தியா நாட்டுக்கா இல்லே தமிழ் நாட்டுக்கா !

priya.r said...

தலைப்பை பாத்ததும் உங்க மனசுல எல்லாம் என்ன கற்பனை வரும்னு எனக்கு நல்லாவே தெரியும்... சாம்பிள்க்கு சில இதோ...:)//
ஹி ஹீ ! இதோட உன்னையே கடத்திட்டாங்களோன்னு சந்தோஷ பட்டதை வெளியே சொல்ல மாட்டோமே :)


//நீங்க நினைக்கற மாதிரி எந்த நல்லதும் நடக்கல... இப்ப, ஒரு குட் நியூஸ் ஒரு பேட் நியூஸ் ரெண்டு இருக்கு... எதை மொதல்ல சொல்றது... ஹ்ம்ம்...//
நீங்க எதை சொன்னாலும் உங்களுக்கு அது நியூஸ் எங்களுக்கு அது ஹாட் (அட்டாக் ) நியூஸ்

priya.r said...

சரி... குட் நியூஸ் சொல்லிடறேன்... இந்த வாரம் "ஜில்லுனு ஒரு காதல்" போஸ்ட் வராது...//
ஆஹா ஓ கோ பேஷ் பேஷ் ;
ரெம்பா தான் சந்தோஷ பட்டுட்டோமா !
சரி சரி
ஏன் கண்ணு போஸ்ட் போடலே ;போன வாரம் தான் நல்லா எழுதினே தெரியுமா தங்கம் :)
ஒன்னும் அவசரம் இல்லேப்பா;நிதானமா யோசிச்சு அடித்த வருஷம் போடு செல்லம் :)

priya.r said...

ஹலோ ஹலோ வெயிட் வெயிட்... பேசிக்கிட்டு இருக்கறப்ப என்னதிது சின்னப்புள்ளத்தனமா பட்டாசு வெடிக்கறது... கர்ர்ர்ர்ர்ர்ர்....//
ஹி ஹீ எவ்வளோ சந்தோசமான விசயத்தை கொண்டாடலன்னா எப்புடி ;அங்கே பாரு சுனாமி பலே பலே டான்ஸ் ஆடிகிட்டு இருக்கா :)

சரி... இனி இன்னொரு நியூஸ் என்ன தெரியுமா... அதுக்கு பதிலா நான் வலைச்சரத்துல இந்த வாரம் ஏழு போஸ்ட் போட போறேன்... ஹொவ் இஸ் இட்? சூப்பர்'ல...:)))//
ஹும்ம் ;யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம் :)

priya.r said...

ஆமாங்க... என்னை நம்பி வலைச்சர ஆசிரியர் பொறுப்பை இந்த வாரம் குடுத்து இருக்காங்க... எனக்கு தெரிஞ்ச மாதிரி எழுதலாம்னு இருக்கேன்... பின்ன தெரியாத மாதிரியா எழுத முடியும்னு குண்டக்க மண்டக்க கேள்விலாம் கேக்க கூடாது சொல்லிட்டேன்...//
ஹய்யோ அவங்களுக்கு ஏன் இந்த விபரீத விளையாட்டு
தங்கம் ! உன்னை பத்தி ,நீ ரெம்பா நல்லவ ன்னு யாரோ தப்பானா தகவல் கொடுத்து இருக்காங்க
கொஞ்சம் உன்ற அலப்பரையை கொறைச்சு கிட்டு தயவு செய்து நல்லா எழுதி எங்க பேரை காப்பாத்து தாயே !

priya.r said...

//அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்... என்ன பிரச்சனைனாலும் பேசி தீத்துக்கலாம்... பப்ளிக்ல நாம எல்லாம் பிரெண்ட்ஸ்... சரிங்களா?//
அதென்னப்பா அது ஒண்ணுமே நடக்காத மாதிரி இப்படி ஒரு ஸ்டேட் மென்ட்
இல்லே எப்போவும் எனிமி தான் ;உன்ற எனிமி க்கு வேணா நாங்க பிரெண்ட்ஸ் சா இருக்கிறோம் .....சரிங்களா

வலைச்சரத்துல வந்து அப்படியே மெயின்டீன் பன்னோணும்... உள்நாட்டு பகைக்கு எல்லாம் அங்க வந்து பழி வாங்க கூடாது ஜென்டில்மேன்(வுமன்)....டீல்???//
நோ டீல் !

அப்படி மெயின்டைன் பண்ணினா, இனிமே கம்மியா பதிவு போட்டு உங்களை கம்மியா டார்ச்சர் பண்ணுவேன் என உறுதிமொழி அளிக்கிறேன்... இப்போ டீலா???...:)))
இதுக்கும் நோ டீல் !!

priya.r said...

சரிங்க... வலைச்சரத்துல முதல் பதிவு போட்டுட்டேன்... முதல் பதிவு சுய புராணம் தான்... சும்மாவே நாம (நான்) கொஞ்சம் சுய புராணம் அதிகம் தான்... இதுல முதல் பதிவுல உங்கள பத்தி சொல்லிக்கோங்கனு பெர்மிசன் குடுத்தா விடுவமா? ஹி ஹி ஹி...//
அதானே நாம யாரு ;பந்தா பார்வதி ஆச்சே ! சும்மா 16 பதிவை பத்தி தெரிய படுத்திட்டோம் இல்லே ;
ஏன்டா பெர்மிசன் கொடுத்தோம்ம்னு அவங்க ரெம்பவே பீல் பன்றாங்களாம் என்பது செவி வலி செய்தி

priya.r said...

இதோ... முதல் பதிவு... வந்தாள் அப்பாவியே...:)))//
கொன்னு போட்டீங்க போங்க!

ஸ்டார்ட் மீசிக்... நான் வலைச்சரத்பெர்மிசன்தில் எழுதவதை பற்றிய தங்களின் மேலான (Female ஆன) கருத்துக்களை தெரிவிக்கணும்...:))//
எங்க தெரிவிக்கனும்ன்னு சொல்லலை யே தங்கம் :)
நன்றி... வணக்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......................:))))//

சூப்பர் ஆ வணக்கம் எல்லாம் போடறே ;அப்படியே அடுத்து கவுன்சிலர் ஆகா கூடிய பிளான் இருக்கோ !

பின் குறிப்பு:
அனேகமா நான் எழுதினதுலையே, இதான் சின்ன போஸ்ட்னு நினைக்கிறேன்... என்ஜாய் மக்கள்ஸ்....:)))//
கொய்யாலே ! அப்படின்னா பெரிய போஸ்டா தான் இருக்க போவுது ;தெரியாதா .,உங்களை பத்தி எங்களுக்கு தெரியாதா :)

priya.r said...

ஹுசேனம்மா!
மன்னிக்கவும் ........................
முதலில் அவளை நிறுத்த சொல்லுங்க அப்புறம் நான் நிறுத்தறேன் :)

ஸ்ரீராம். said...

அடேடே....வாழ்த்துகள்...

Vasagan said...

ஒரு வாரம் தொடர்ந்து தாக்குதலா, கடவுளே இந்த அப்பாவி இடம் இருந்து எங்களை காப்பாத்து.

Priya said...

வாழ்த்துக்கள் புவனா.. வலைச்சரத்திலும் கலக்குங்க:‍)

vgr said...

appa...anda kadai ezhudalaya...romba nalladu. anda varikaga than inda comment.

btw wats valaicharam?

Madhuram said...

I'm upset Adapavi. Why no JOK? I was eagerly waiting for this week's episode.

தக்குடு said...

very gud! very gud! valaisarathai bagavanthan kappathanum...:PP

@ மதுரம் அக்கா - இந்த வார JOK கதையை நான் சொல்லட்டுமா? " மீராவின் கண்களையே பார்த்து கொண்டு இருந்த ஸ்டீவ் ஒரு விதமான இன்ப நிலையில் இருக்கும் போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது, "எவான்டா அவன்"னு திட்டிகொண்டே கதவை திறக்க ஸ்டீவ் போனாலும் ஸ்டீவ் போன திசையையே மீரா பார்த்துக்கொண்டு இருந்தாள்.டீவியில் அப்போது விண்னை தாண்டி வருவாயா(ஒரிஜினல் டிவீடி) ஓடிக்கொண்டு இருந்தது. அப்போது திடீரென...." (மிச்ச கதையை மெயில் பண்ணறேன், இல்லைனா திருப்பூர் சூறா'வலி'யோட கமண்ட் மாதிரி ஆயிடும்...:))

priya.r said...

அப்பாவி பொறுத்தது போதும் ..........................
தக்குடுவுக்கு ஒரு அடசல் இட்லி பார்சல் !

கீறிப்புள்ள!! said...

//"என்னாச்சு அப்பாவி... நீ ப்ளாக் எழுதறதை நிறுத்த போறியா?"னு கேட்கும் அன்பு உள்ளங்களே.../
Obviously..Truly..Honestly..அப்புறம் இன்ன பிற லீ-க்கள் சத்தியமா.. இத இதத்தான் நெனச்சேன்.. ஹி ஹி ஹி..

அனாமிகா துவாரகன் said...

//பிற லீ-க்கள் சத்தியமா//
Lee? Grrrrrrrrrrrrrrrrr

அனாமிகா துவாரகன் said...

இந்த வாரம், மீரா என்ன லூசுத்தனம் பண்ணினானு தெரிஞ்சு, டென்சனாகி, பாணை முள்ளு கரண்டியால குத்தோ குத்துன்னு குத்தி. இதெல்லாம் நடக்காமல் செய்த வலைச்சரத்துக்கு நன்றி. நன்றி. நன்றி.

அன்னு said...

ஆமா... இன்னிக்கு தொடர்கதை தொடருமா... கேள்விக்குறி தொடருமா??

Mahi said...

வாழ்த்துக்கள் புவனா!

கீறிப்புள்ள!! said...

//Lee? Grrrrrrrrrrrrrrrrr /
அது ஏதோ Bruce Lee, Brett Lee-ன்னு எடுத்துகோங்களேன்.. ஏன் Ana Lee-ன்னு நெனச்சுக்கறீங்-கங்க.. ஹி ஹி ஹி..

Sri Seethalakshmi said...

அச்சோ இப்படி பண்ணிடீன்களே!!...
ரொம்ப சந்தோசம இருக்கு!!...
கஷ்ட பட்டு இப்பதான் மீராவ இம்ப்ரெஸ் பண்ணி சாப்பிட கூப்பிட்டு இருக்கான், அதுக்குள்ள இப்படி ஒரு உள் நாட்டு சதியா !!?? :-)
அது சரி steve பண்ண சாப்பாடு எல்லாம் அடுத்த வாரம் நல்லா இருக்குமா ? :-)

அப்பாவி தங்கமணி said...

@ சி.பி.செந்தில்குமார் - ஹா ஹா...நன்றிங்க ...:))

@ பத்மநாபன் - ஹா ஹா ... இட்லிய தவிர தான்...நன்றிங்க வாழ்த்துக்கு... :))

@ சௌந்தர் - ஹா ஹா ஹா... இதை தான் புள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டறதுனு சொல்லுவாங்களாம்...:)))

@ Gayathri - அடிப்பாவி சந்தடி சாக்குல அருங்கனு சொல்லிட்ட...அது அருங்க இல்ல தாயே அறுங்க... ஸ்வர்ணா குட்டிகிட்ட சொல்லி உனக்கு டயுசன் எடுக்க சொல்லணும் இனி... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... :)))

@ FARHAN - வாங்க வாங்க நன்றிங்க..

@ இராஜராஜேஸ்வரி - வாழ்த்துக்கு நன்றிங்க அம்மா... உங்க ப்ளாக் படிக்காம நிஜமா மிஸ் பண்றேன்... கொஞ்சம் வேலை அதிகம் அதான்'ங்க... அடுத்த வாரத்துக்கு அப்புறம் பழையபடி ப்ளாக் ப்ளாக்ஆ சுத்த வேண்டியது தான்... அதெப்படி நம்ம ஊரை மறக்க முடியும் சொல்லுங்க...ஹா ஹா...:))

அப்பாவி தங்கமணி said...

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க வெங்கட்...:)

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ் அக்கோய்...:))

@ தி. ரா. ச.(T.R.C.) - ஹா ஹா ஹா... செம டைமிங் அங்கிள்... :))

@ dheva - வர்றேங்க... நன்றிங்க...:)

@ cheena (சீனா) - நன்றிங்க சீனா சார்... வாய்ப்புக்கும் வாழ்த்துக்கும்...:)

@ sakthi - நன்றிங்க சக்தி..:))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r -
//கனடா நாட்டுக்கா இந்தியா நாட்டுக்கா இல்லே தமிழ் நாட்டுக்கா//
உலகத்துல இருக்கற எல்லா நாட்டுக்கும் தானுங்க...எல்லா பக்கமிருந்தும் நம்ம ப்ளாக் பக்கம் வராங்கல்லங்க...:))

//ஹி ஹீ ! இதோட உன்னையே கடத்திட்டாங்களோன்னு சந்தோஷ பட்டதை வெளியே சொல்ல மாட்டோமே//
அதைத்தான் போஸ்டாவே போட்டாச்சே அக்கோய்... அங்க காணாம போன அப்பாவி என்ன தான் ஆனாள்... அடுத்த பார்ட் எப்போ வரும்...?

//நீங்க எதை சொன்னாலும் உங்களுக்கு அது நியூஸ் எங்களுக்கு அது ஹாட் (அட்டாக் ) நியூஸ்//
ஹா ஹா...செம டைமிங் ப்ரியா..:)

//ஒன்னும் அவசரம் இல்லேப்பா;நிதானமா யோசிச்சு அடித்த வருஷம் போடு செல்லம்//
அடப்பாவிகளா... அவ்வ்வ்வவ்.....:((((

//அங்கே பாரு சுனாமி பலே பலே டான்ஸ் ஆடிகிட்டு இருக்கா//
என்னது பலே பலேனு டான்ஸ் ஆடுறாளா? ஓ... பல்லே பல்லேவா... ஹா ஹா ஹா.... :))

//யாம் பெற்ற துன்பம் பெருக இவ்வையகம்//
என்னா ஒரு வில்லத்தனம்??????

//நீ ரெம்பா நல்லவ ன்னு யாரோ தப்பானா தகவல் கொடுத்து இருக்காங்க//
அது கண்டிப்பா நீங்க இல்லைனு எனக்கு தெரியுமே...ஹா ஹா ஹா...:)

//உன்ற அலப்பரையை கொறைச்சு கிட்டு தயவு செய்து நல்லா எழுதி எங்க பேரை காப்பாத்து தாயே//
அலப்பறைய கொறச்சா என்னை அடையாளம் தெரியாம போய்டுமே அக்கா...என்ன செய்யறது... ம்... சரி ட்ரை பண்றேன்...:))

//இல்லே எப்போவும் எனிமி தான் ;உன்ற எனிமி க்கு வேணா நாங்க பிரெண்ட்ஸ் சா இருக்கிறோம் .....சரிங்களா//
ஹ்ம்ம்... என்ன உலகமடா இது... grrrrrrrrrrrrr

//நோ டீல் ! - இதுக்கும் நோ டீல் !!//
அதெல்லாம் முடியாது... எதாச்சும் ஒன்னத்துக்காச்சும் டீல் சொல்லியே ஆகணும்...:)))

//அதானே நாம யாரு ;பந்தா பார்வதி ஆச்சே... சும்மா 16 பதிவை பத்தி தெரிய படுத்திட்டோம்//
நல்லா கவுன்ட் பண்ணி பாருங்க... 19 பதிவ பத்தி சொல்லி இருக்கேன்... ஹி ஹி...

//அப்படின்னா பெரிய போஸ்டா தான் இருக்க போவுது//
ச்சே... எவ்ளோ கரெக்ட்ஆ ஜட்ஜ் பண்ணி இருக்கீங்க...சூப்பர்...:)))

//ஹுசேனம்மா! மன்னிக்கவும் ........................முதலில் அவளை நிறுத்த சொல்லுங்க அப்புறம் நான் நிறுத்தறேன்//
ஹா ஹா ஹா... இது செம...:)))

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம். - என்னங்க இவ்ளோ வருத்தமா அடடேனு சொல்லிட்டு வாழ்த்து சொல்றீங்க... ஹா ஹா...:))

@ Vasagan - ஒரு வாரத்துக்கே இப்படின்னா... ஹா ஹா..:)))

@ Priya ௦- தேங்க்ஸ்'ங்க ப்ரியா

@ vgr - ஹா ஹா ஹா... இதை எதிர்பாத்தேன்.... valaicharam is a kind of "blogs aggregator" where one editor per week posting info about interesting and new blogs to read...:)

@ Madhuram - Sorry Madhu... didn't had much time to write it... didn't want to write "ஏனோ தானோ" , thats why cancelled this week's post... will post surely next week... thanks again...:))

@ தக்குடு - ஆமா ஆமா தக்குடுவோட உம்மாச்சி வந்து காப்பாத்தட்டும்...:)).... அடப்பாவி, இப்படி கதை எல்லாம் நீயே சொன்னா என் பொழப்பு என்ன ஆகறது... ஆனா நீ சொன்னது கொஞ்சம் ஸ்பீட்ஆ போகுது கதை... கம்மி பண்ணிக்கோ... (என்கிட்டயேவா....ஹா ஹா ஹா...:))

@ priya.r - ஐ... இந்த அடசல்'ங்கற வார்த்தை கேட்டு எவ்ளோ நாள் ஆச்சு... தேங்க்ஸ் அக்கா...உடனே அனுப்பிடறேன் இட்லி பார்சல் டு மிஸ்டர் தக்குடு....:)))

@ கீறிப்புள்ள!! - நமக்கு எதிகிரிக எண்ணிக்கை கூடிகிட்டே போகுதே... "ஆபரேஷன் அப்பாவி" விரைவில் செயல் படுத்தப்படும்....வெயிட் வெயிட்...:)))

@ அனாமிகா - என்ன ஒரு optimistic thought...I like it...ha ha ha...:))

@ அன்னு - அப்ப இந்த போஸ்டே நீங்க படிக்கலனு தெரிஞ்சு போச்சு... ஹா ஹா...:)))

@ Mahi - தேங்க்ஸ் மகி...:)

@ Sri Seethalakshmi - சீதா மேடம், இது கொஞ்சம் கூட சரி இல்ல... நீங்களும் வர வர நம்ம ப்ரியா அக்கா மாதிரி பொடி வெச்சு பேச ஆரம்பிச்சுட்டீங்க... //இப்படி பண்ணிட்டீங்களே//னு எதுக்கு சொன்னீங்க? ஜில்லு போஸ்ட் போடாததுக்கா இல்ல வலைச்சரத்துல எழுதறதுக்கா? //ரொம்ப சந்தோசம இருக்கு//னு எதுக்கு சொன்னீங்க? ஜில்லு போஸ்ட் போடாததுக்கா இல்ல வலைச்சரத்துல எழுதறதுக்கா?..... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... :)))... ஸ்டீவ் செஞ்ச சாப்பாடெல்லாம் எடுத்து பால்கனில வெச்சுட்டா இந்த குளிருக்கு ஒரு வாரமென்ன ஒரு மாசமானாலும் கெடாதுங்க...சொந்த அனுபவமானெல்லாம் குறுக்கு கேள்வி கேக்க கூடாது சொல்லிட்டேன்... :)))

Post a Comment