Saturday, May 07, 2011

வா வா என் தேவதையே... (சிறுகதை + கவிதை)


முதல் நாள் :-

"கெளதம்...." 

"என்ன நந்தினி?"

"நம்ம பாப்பா எவ்ளோ குட்டியா இருக்கில்ல"

"ம்... நீயும் நானும் கூட இதே போல குட்டியா தான் இருந்துருப்போம்" என அவனும் ரசனையாய் கூறினான்

"கெளதம்... பாப்பா உங்கள மாதிரியா என்னை மாதிரியா?"

"ம்...உன்னை மாதிரி அடாவடி தான்... சந்தேகமே இல்ல" என சிரித்தான்

"கிண்டலா...சொன்னாலும் சொல்லாட்டியும் என் செல்லகுட்டி என்னை போலதான்...ஆனா மூக்கு மட்டும் உங்கள மாதிரி... என் சப்ப மூக்கு இல்ல" என அவளும் சிரித்தாள்

"ஹா ஹா... " என மனைவியின் சந்தோசத்தை ரசித்தான் கெளதம்


மூன்றாவது நாள்:-

"கெளதம்... ஜனனிங்கற பேரு எப்படி இருக்கு நம்ம குட்டிக்கு"

"ம்."

"என்ன வெறும் 'ம்' தானா? ச்சே.... reactionஏ இல்ல...ஏன் இந்த பேரு நல்லா இல்லையா?" என முகம் வாடினாள்

"என் நந்தினி அளவுக்கு அழகா இல்ல" என செல்லமாய் மனைவியின் கன்னத்தை வருடினான்

"போதும் போதும் ஐஸ் வெச்சது... என் குட்டி செல்லம் பேரும் அழகு தான்"

"ம்... நீ செலக்ட் பண்ணினதாச்சே... உன் பேருக்கும் ரைமிங்ஆ இருக்கு... சூப்பர்" என்றான்


ஐந்தாவது நாள்:-

"கெளதம்... பாப்பாவ எந்த ஸ்கூல்ல சேத்தலாம்?"

"நந்தும்மா... திஸ் இஸ் டூ மச்... இப்பவே ஸ்கூல் பத்தி யோசனையா?" என அவன் சிரிக்க

"ஏன் பேசக்கூடாதா? கண்ணு மூடி திறக்கறதுக்குள்ள நாள் ஓடி போய்டும் தெரியுமா? நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு கிண்டல் தான்" என நந்தினி முகம் வாட, அது பொறுக்காத கெளதம்

"ஒகே ஒகே...சும்மா உன்கிட்ட வம்பு பண்ணினேன் நந்து... என் பிரெண்ட் பாலாஜியோட பையன் போறானே.... அந்த ஸ்கூல் ரெம்ப நல்லா இருக்குனு சொன்னான்"

"ஆமாம் கெளதம்... நானும் கேள்விபட்டேன்...அது நல்ல சாய்ஸ் நம்ம பாப்பாவுக்கு" என நிறைவாய் புன்னகைத்தாள்


ஏழாவது நாள்:-

"இந்தா நந்தினி...உனக்கு பிடிக்கும்னு பலாப்பழம் வாங்கினேன்"

"வேண்டாம் கெளதம்...பாப்பாவுக்கு சூடு சேரலைனா கஷ்டம்"

"ஏய்...உனக்கு ரெம்ப பிடிக்குமேடா"

"ம்...ஆனா என் செல்ல குட்டிய அதை விட பிடிக்குமே" என உரிமையாய் கணவனின் தோளில் சாய்ந்து கொள்ள, மனைவியை அன்பாய் அணைத்து கொண்டான் கெளதம்


பத்தாவது நாள்:-
"செல்லகுட்டி... அப்பா ஆபீஸ் போயாச்சு... நீயும் நானும் தான் வீட்டுல... என் செல்லகுட்டி சமத்தா அம்மாகிட்ட இருப்பியாம்... அம்மா வேலை எல்லாம் முடிச்சுட்டு பார்க் போலாமாம்....சரியா" என பிள்ளையிடம் பேசிக்கொண்டே வீட்டு வேலைகளை செய்தாள் நந்தினி


14வது நாள்:-
வழக்கம் போல் நந்தினி பிள்ளையிடம் செல்லம் கொஞ்சி கொண்டிருந்தாள் "ஜனனி செல்லம்... பாப்பாவுக்கு என்ன வேணும்? பால் குடிக்கலாமா? அம்மாவுக்கு கொஞ்சம்... பாப்பாவுக்கு கொஞ்சம்... சரியா? இன்னிக்கி அம்மாவும் பாப்பாவும் டாக்டர் Aunty பாக்க போகணுமாம்... டாக்டர் Aunty பாப்பாவ செக் பண்ணனுமாம்... செல்லகுட்டி சமத்தா இருக்கானு பாக்கணுமாம்... போலாமா?"


15வது நாள் மதியம்:-

தொலைபேசி அழைக்க அதற்கே காத்திருந்த நந்தினி உடனே எடுத்து "ஹலோ" என்றாள்

"ஹலோ நந்தினி இருக்காங்களா?"

"நான் நந்தினி தான் பேசறேன்"

"நான் இங்க டாக்டர் வந்தனாவோட கிளினிக்ல இருந்து நர்ஸ் ஸ்ரீஜா பேசறேங்க"

ஒருகணம் இதய துடிப்பு அதிகரிக்க நந்தினியின் கைகள் தனிச்சையாய் வயிற்றில் பதிந்தது, எதையோ காக்க முயற்சிப்பது போல்

"ஹலோ...நந்தினி"

"சொ...சொல்லுங்க சிஸ்டர்..." என்றவளின் குரலில் இருந்த நடுக்கம் நர்ஸ் ஸ்ரீஜாவுக்கு அவள் மேல் கரிசனையை ஏற்படுத்தியது. ஆனாலும் சொல்லவேண்டியதை சொல்லித்தானே ஆகணும் என நினைத்தவளாய்

"நேத்து ப்ளட் டெஸ்ட்க்கு குடுத்துட்டு போனீங்க இல்லையா... " என சற்று தயங்கியவள் "I am sorry நந்தினி... இந்த வாட்டியும் Pregnancy test ரிசல்ட் நெகடிவ் தான் வந்துருக்கு" என்றவுடன் நந்தினியின் கைகள் வயிற்றில் இருந்து அவளறியாமல் நகர்ந்தது


15வது நாள் இரவு:-

மாலை அலுவலகம் விட்டு வந்ததுமே நந்தினியின் முகம் கண்டு விசயத்தை புரிந்து கொண்ட கெளதம், அவளை அழச்செய்து பார்க்க மனமில்லாதவனாய் எதுவும் கேட்காமல் மௌனம் காத்தான்

இரவு படுக்கையில் சென்று சரிந்ததும் அதற்கு மேலும் பொறுமை இல்லாதவளாய் "என்னாச்சுனு கூட கேக்க மாட்டீங்களா? அவ்ளோ நிச்சியமா இருக்காதுன்னு முடிவே பண்ணிட்டீங்க இல்லையா கெளதம்?" என நந்தினி விசும்ப

"ஏய் நந்து....ஏன்டா இப்படி பேசற? உன் முகத்த பாத்தே புரிஞ்சுக்கிட்டேன்... மறுபடி கேட்டு உன்னை கஷ்டப்படுத்த வேண்டாம்னு தான்..." என்றவன் கூற, கட்டுப்படுத்திய அழுகை மொத்தமும் வெடித்து கிளம்பியது நந்தினிக்கு

தன் மார்பில் முகம் புதைத்து இருந்தவளை ஆதரவாய் அணைத்தவன் "நந்து ப்ளீஸ்...இங்க பாரு...நந்தும்மா... நீ அழறதால என்ன மாறப்போகுது சொல்லு... ஏய்..." என சமாதானப்படுத்த முயன்றான் கெளதம்

"ஏன் கெளதம் எனக்கு மட்டும் இப்படி? டெஸ்ட் டயுப் பேபி முறைல கருவை எனக்குள்ள செலுத்தின முதல் நாளுல இருந்து ultrasound picture ஐ பாத்து... எனக்குள்ள என் பிள்ளை வளர்றதா கற்பனைல, பெண் பிள்ளைன்னு நானே நெனச்சு, பேரு வெச்சு, ஸ்கூல் யோசிச்சு, பிள்ளைக்குன்னு பாத்து பாத்து சாப்பிட்டு, அதோட பேசி சிரிச்சு.... என்னால இந்த ஏமாற்றத்த தாங்கமுடியல கெளதம்" என அவள் மீண்டும் அழ, அதை காண சகியாமல் தவித்தான் கெளதம்

"நந்தும்மா... ப்ளீஸ் அழாத"

"நான் என்ன பாவம் பண்ணினேன் கெளதம்... ஒரு ஒரு மாசமும்..." என அதற்கு மேல் பேச இயலாமல் விசும்பினாள்

"உன்கிட்ட வர அந்த கொழந்த புண்ணியம் செய்யல நந்தும்மா... அதான் நிஜம்" என அவளின் கண்ணீர் துடைத்தான் கெளதம்

என்றேனும் அந்த கண்ணீர் நிற்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது... விடியலுக்கு காத்திருந்தனர் அவர்கள் இருவரும்

*********************
"ஈரைந்து மாதங்கள் கருவோடு தாங்கி" பெற்றெடுப்பவளின் பெயர் அம்மா என்றால், இப்படி மாதத்தின் 14 நாட்கள் மட்டும் கற்பனையில் அம்மாவாய் நம்மிடையே வாழும் "நந்தினி"களின் பெயர் என்ன?

உலகம் சொல்கிறது "மலடி" என...

"காலம் மாறி போச்சு... இன்னுமா இந்த பேச்சு" னு கேட்கிறது சமூகம். வயறு திறக்காதவள் தன் பிள்ளை மேல் கண் போட்டு விட்டதாய் "கண்ணேறு(திருஷ்டி) கழிப்பதும்" அதே சமூகம் தான்...

என்னை பொறுத்தமட்டில் "நித்யகல்யாணி", "நித்யசுமங்கலி" போல், நந்தினிகள் "நித்யஅம்மாக்கள்"...

இந்த அன்னையர் தின சிறப்பு பதிவில், நம்மிடயே வாழும் "நித்யஅம்மாக்களுக்கு" எனது "சிறப்பான அன்னையர் தின வாழ்த்துக்களை" தெரிவித்து கொள்கிறேன்

குறிப்பு: நான் அறிந்த ஒரு நந்தினிக்காக எழுதிய பதிவு இது... நன்றி


மழலைஉன் சிரிப்பினில்
மயங்கிநான் நிற்பதுபோல்
கண்மணிஉன் கரம்பற்றி
கரைந்துநான் உறைவதுபோல்

அம்மானு சொல்லக்கேட்டு
ஆனந்தத்தில் திளைப்பதுபோல்
தடுமாறி நடக்கையிலே
தாவிஉனை அணைப்பதுபோல்

சொல்கேட்காத தருணத்தில்
செல்லமாய் அதட்டுவதுபோல்
பள்ளிக்கு அனுப்பிவிட்டு
பரிதவித்து அலைவதுபோல்

பெரியவளாய் நீநிற்க
பெருமிதத்தில் திளைப்பதுபோல்
ஊரேஉனை பாராட்ட
உற்சாகத்தில் மிதப்பதுபோல்

அப்படியும் இப்படியும்
ஆயிரம்கனவு என்கண்ணில்
பலவருடம் முன்னோக்கி
பலகனவு என்நெஞ்சில்

ஏச்சுக்களும் பேச்சுக்களும்
எள்ளலும் நகையொலியும்
எனைமுழுதாய் கொல்லும்முன்னே
என்னில்வந்து உதித்துவிடு !!!

உதிக்காத பிள்ளைக்காய்
உருகும் அம்மாவிடம்
வாவா என்தேவதையே
வரமாய்கையில் தாங்கிடுவேன் !!!
....

59 பேரு சொல்லி இருக்காக:

hajasreen said...

manasai thottuttu......
wel said

Porkodi (பொற்கொடி) said...

ஹையா! new post!!

பிரதீபா said...

:(
தாய்மை சுரக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும்:Happy Mothers Day

Porkodi (பொற்கொடி) said...

:( நீங்களே சொல்லிட்டீங்க வாசகர் ரியாக்ஷனையும் சொல்லிட்டீங்க.. படிக்க கஷ்டமா இருந்துது! :( ஒத்துக்கறேன் ரொம்ப கஷ்டமா தான் இருக்கும், ஏதோ சில பேருக்கு முடி 20லயே நரைக்குது சிலருக்கு நரைப்பதே இல்லை சிலருக்கோ முடியே இல்லை தானே.. அதே மாதிரி இருக்கற ஒரு வாழ்க்கைல கொஞ்சம் மனம் சமாதானம் செஞ்சுட்டு கிடைக்க பெற்ற விஷயங்களிலே சந்தோஷத்தையும், மனதுக்கு பிடித்த விஷயங்களில் நேரத்தையும் செலவிட்டு திருப்தியையும் சம்பாதிச்சுக்கலாமே. நல்ல மாமியார், நல்ல புருஷன், மாதிரி குழந்தை கிடைப்பதும் ஒரு சான்ஸ் (அவ்வளவு) தானே!

Porkodi (பொற்கொடி) said...

ரொம்ப பெரிய ஒரு கமெண்ட் டைப் பண்ணினேன், சில காரணங்களுக்காக அனுப்பவில்லை. பெற்றவர்களுக்கு ஒரு குழந்தை, பெறாதவர்களுக்கு எத்தனையோ குழந்தை. Happy mother's day to all women!

Vasagan said...

மனதை நெகிழ வைத்து விட்டது.

பெற்று எடுக்காவிட்டாலும் பெண்ணே நீ எனக்கு தாய்தான்.
Happy mother's day to all women.

Charles said...

நீங்க சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நானும் என் மனைவியும் வாழ்க்கையில் அனுபவித்த ஒன்று. கடவுள் கருணையில் ஒரு அழகு தேவதையை கொடையாக பெற்றோம். இன்றும் ஒவ்வொரு குழந்தை இல்லா தம்பதிகளுக்குகாக நாங்கள் தினமும் வேண்டுகிறோம். கடவுளை நம்பினோர் கை விடப்படார்... நம்பிக்கையொடு இருங்கள்... மீண்டும் ஒரு நல்ல பதிவு அப்பாவி மேடம்....

siva said...

Happy mother's day to all women!

siva said...

ரொம்ப சோகமான முடிவு ..in story
நம்பிக்கை வீண் போகாது
பெற்றால்தான் அம்மா இல்லை
பாசம் காட்டும் அனைவருமே அன்னையர்தான்
அன்னையர் தின வாழ்த்துக்கள்

தெய்வசுகந்தி said...

Touching!! அன்னையர் தின வாழ்த்துக்கள்!!!

ஸ்ரீராம். said...

Touching...

உங்கள் கதைகளில் வரும் கணவன் மனைவி நெருக்கம் அழகாக இருக்கிறது. நகைச்சுவைக்கு பேர் போன நீங்கள் அவ்வப்போது இப்படி கண்கலங்க வைக்கக் கூடாது. மேலும் டெஸ்ட் ட்யூப் பேபி முதல் வாடகைத்தாய் வரை எத்தனையோ முறைகள்..(ஆனாலும் தான் பெறுகிற மாதிரி வருமா என்றெல்லாம் கேட்கக் கூடாது!)இருக்கும்போது வருத்தம் ஏன்?

திவா said...

ஹும்! திடுதிப்புன்னு இப்படி டச்சிங் ஸ்டோரி எல்லாம் போட்டா என்ன அர்த்தம்? :-(

Charles said...

ஸ்ரீராம் சார்!!! Test tube பேபி-ல யும் success ரேட் 40 % தான்... ஆனால் அந்த முறைகளில் படும் கஷ்டங்கள்... அப்பப்பா சொல்லி மாளாது.. நம்பிக்கை தான் வாழ்க்கை... ஆனாலும் பிள்ளை பெறாவிட்டாலும் ஒவ்வொரு பெண்ணும் ஒரு தாய் தான்... இந்த சமூகம் இதை உணர்ந்தால் ஒரு கவலையும் இல்லை.. தாயுள்ளம் கொண்ட அனைத்து தாய்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்....

கலாநேசன் said...

நெகிழ்வான பதிவு...

பத்மநாபன் said...

பெற்றால் தான் பிள்ளையா என்பது போல் பெற்றால் தான் தாயா ? நிச்சயம் இல்லை.. தாய்மை என்பது இருப்பதிலேயே உன்னதமான உணர்வு . பொறுமை தியாகம். விட்டுக்கொடுக்கும் தன்மை இப்படி பல உன்னதங்களை உள்ளடக்கிய சக்தி நிலை..

கதையும் கவிதையும் உருக்க வைத்து விட்டது தங்கைமணி...

இராஜராஜேஸ்வரி said...

உன்கிட்ட வர அந்த கொழந்த புண்ணியம் செய்யல நந்தும்மா... அதான் நிஜம்" என அவளின் கண்ணீர் துடைத்தான் கெளதம்//
நெகிழ்சியான வரிகள்.
அன்னையர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

என் மனதை மிகவும் நெகிழவைத்த அருமையானதோர் படைப்பு. பாராட்டுக்கள். உங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள். அன்புடன் vgk[voted 4 to 5 in Indli]

தமிழ் உதயம் said...

மனதை வெகுவாக பாதித்த கதை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அன்புள்ள மேடம்,

இந்தத்தங்களின் பதிவு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மனதை மிகவும் நெகிழச்செய்தது.

எந்தக்காலத்தில் இருந்தாலும் இன்றும் இது ஒரு சிலருக்கு மிகவும் சிக்கலான தர்மசங்கடமான மர்மமான சமாசாரமாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

வெகு அழகாக அவர்களின் உணர்ச்சிகளை பிரதிபலித்து எழுதியுள்ளீர்கள்.

இதே கருத்துடன் நான் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். தங்களுக்கு நேர அவகாசம் இருப்பின் படித்துப்பார்க்கவும். லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.

http://gopu1949.blogspot.com/2011/01/1-of-2_13.html

http://gopu1949.blogspot.com/2011/01/2-of-2.html

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
அன்புடன்
vgk

சே.குமார் said...

மனதை நெகிழ வைத்து விட்டது.

அனாமிகா துவாரகன் said...

Hugs to the Nandhini I know. You know who is she!

priya.r said...

நெகிழ்ச்சியான பதிவு புவனி .அன்னையர் தின வாழ்த்துக்கள்!

Matangi Mawley said...

hmm... usually this happens-- for women who would often be brimming with motherliness cannot become mothers in reality... i was reminded of a colleague of my dad's, mythili aunty, who was very attached to me, since she had no kids...

she passed away recently in an accident... but the post here, made me think of her... thanks for reminding me about her...

middleclassmadhavi said...

நெகிழ வைத்த பதிவு!

சி.பி.செந்தில்குமார் said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்

RVS said...

அன்னையர் தின வாழ்த்துக்கள். ;-))

ஹுஸைனம்மா said...

இங்கே அபுதாபியில் ஒரு சிறந்த குழந்தைப்பேறு மருத்துவருக்கு குழந்தைகள் இல்லை. எனினும், எத்தனை பேரின் குழந்தைகளை முதலில் கையில் தூக்கும் பாக்கியம் பெற்றுள்ளார்? அதுபோல, பிள்ளைகள் பெறாமலேயே அன்னையென்று போற்றப்படுபவர்கள் பலர் உண்டு.

நந்தினிக்கு இன்னும் சின்ன வயசுதானே? அதனால் கவலை வேண்டாம். விரைவில் இறைவன் அருள்புரிவான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

touching and feeling

ChitraKrishna said...

Mother's day wishes... very touching story.

முனியாண்டி said...

It's too touching.

RAZIN ABDUL RAHMAN said...

பெற்றவளை மட்டும் அன்னையாக பார்க்கும் உலகில் பெறாதவளும் அன்னைதான்,அவளிடமும் தாய்மை சுரக்கிறது என்பதை உணர்த்த அருமையான பதிவு...

உங்களது பதிவு,செண்டிமெண்டில் மனதை கனக்கச்செய்துவிடுகிறது.
வாழ்த்துக்கள் சகோ..

அன்பின் அன்னையர் யாவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்...

அன்புடன்
ரஜின்

Anonymous said...

Tears rolling while I read this….gr8 thoughts mam…APPRECIATED

Gayathri said...

happy motherz day..rombha manasellam ganama ayduchu..i understand how women like her feel. kandippa will pray...

viswam said...

ரொம்பவும் நன்றாக உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

S.Menaga said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்!!

மனதை தொட்ட கதை...

Sathish A said...

அன்னையர் தின வாழ்த்துக்கள்...

குழந்தை இல்லன்ன ரொம்ப கடினம் தான், அதைவிட இந்த சமுதாயத்துக்கு பதில் சொல்லுறது இன்னும் கொடுமை...

Ramki said...

வார்த்தைகள் இல்லை,மனதை நெகிழ வைத்த இடுகை.

கீறிப்புள்ள!! said...

சீக்கிரம் ஒரு குட்டி தேவதை வர வேண்டிக்கிறேன்.. :)

பாலா said...

நெகிழ்ச்சி !

sakthi said...

மழலை செல்வம் சீக்கிரமே எல்லா நந்தினிக்கும் கிடைக்க மனமார பிரார்த்திக்கிறேன்

சுசி said...

என் நண்பி ஒருத்தி.. எங்களோடு கல்யாணம் ஆகி.. டெஸ்ட் டியூப் முறையில் கருவாகி.. ஆறே மாதத்தில் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெத்தெடுத்தாங்க.. பிறந்து சில நிமிடங்களில் ஒருவரும் பிறக்கும்போதே அடுத்தவரும் எனப் போய் விட்டார்கள்.. இதப் படிக்கும்போது அவங்க வலியை மீண்டும் உணர்ந்து கொண்டேன் புவனா..

எல்லா அன்னையருக்கும் வாழ்த்துகள்.

A.R.RAJAGOPALAN said...

இறுகிய
இதயங்களையும்
இறுக்கி , உலுக்கி எடுக்கும்
மனதை வருடி நெருடும்
இணையில்லா கவிதை ..

வழியின்றி
வலி சுமக்கும் முன்தாயை
வலிமையாய்
வழிநடத்திய பாங்கு....................
பரவசம்.

உண்மையை சொல்லவேண்டும் என்றால் , பல முறை திரும்ப படித்தும், என்னை அறியாமலே என்னை ஜனனியாகவே உருவகப்படுத்திகொள்கிறேன் , காரணம் இல்லை என்னிடம்.

கே. பி. ஜனா... said...

உருக்கம்!

viji said...

very touching dear.
viji

A and A said...

I have experienced the same now blessed with twins who are 7 months old. Very touching. I pray for all the people who is going thru the same!

geetha santhanam said...

மிகவும் நெகிழ வைத்த நடை. நந்தினியைப் போல் பலருக்கு அன்னையர் தின வாழ்த்துக்களும் அவர்கள் விரைவில் அன்னையாக பிரார்த்தனைகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

divyadharsan said...

Hi Appavi,

Another wonderful story and "Happy Mother's Day Wishes"
I was in the same boat till last year.
(Jus saw 'me' in nandhini)

I experienced the same things everymonth,Whenever
I go for bloodtestand expecting calls from doctor's office.
My imaginations starts,go beyond all limits and If I do that,
My result will be (-)ve always I know.
Those are hell days for me and my hubby.

To all those who are like Nandini..
Be happy your angel will be coming soon:)

I got my angel(ashwita) this march-14 after 3 years of my marriage:)
she is doing good appavi,very active and naughty.

U.S vanthapram unga kathaiyelathayum katha kathaya solalamnu erukan:)
Tension aagatheenga athelam sonna paapa payanuthudumnu teriyatha yenaku:))
Jus kidding sis..

Thankyou unga storykum and unga
"Trademark" romansa anga anga azhaga express
panathukum..

Expecting your "GOK" this week with lots of romance.
Ungala marithan nanum Appavi,want more & more.
aana padika matumthaan teriyum not like you,

The Great Writer "A(da)ppavi Thangamani"

mindvoice:- Divyaku appavi yala yethavathu veyla aaganuma?? epppuddi pugazhuthu!!

Divya :- Apdilam ela nalavisayam yaar panalum paaratrathu yen gunam:))

mindvoice:- ayayo oru pechuku appavi neeyum yena marinu sonna..ethu nijamavey apdithan pola..epavey kanna katuthey..

Chumma try panan appavi:) unga mindvoice nalavey kalaikuthu..

Sorry dnt find time to read your Valaicharam Posts.will read it soon.Tc.

அப்பாவி தங்கமணி said...

@ hajasreen - நன்றிங்க

@ Porkodi (பொற்கொடி) - //நல்ல மாமியார், நல்ல புருஷன், மாதிரி குழந்தை கிடைப்பதும் ஒரு சான்ஸ் (அவ்வளவு) தானே!// I really wish Nandhini in my story could get some of your positive and practical attitude towards life... thanks Porkodi for taking time to write this..:)

@ பிரதீபா - Thats right Deepa...thanks...:)

@ Vasagan - Thank you..:)

@ Charles - //ஒவ்வொரு குழந்தை இல்லா தம்பதிகளுக்குகாக நாங்கள் தினமும் வேண்டுகிறோம்//... உங்கள் நல்ல மனதிற்கு மிக்க நன்றிங்க... உங்கள் அழகு தேவதைக்கு எனது அன்பான ஆசிகள், உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

@ siva - தேங்க்ஸ்'ங்க சிவா..:)

@ தெய்வசுகந்தி - நன்றிங்க சுகந்தி

@ ஸ்ரீராம். - நன்றிங்க... அழ வெக்க வேண்டாம்னு யோசனைல தான் எழுதி வெச்சுட்டும் போடாம இருந்தேன்... என்னமோ தோணுச்சு போட்டுட்டேங்க... நன்றி உங்கள் வார்த்தைகளுக்கு

@ திவா - திவாண்ணா, சும்மா தோணுச்சு'ங்க அதான்... வேற ஒண்ணுமில்ல... :))

@ கலாநேசன் - நன்றிங்க

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா... அழகா சொன்னீங்க... அதுக்கும் நன்றி..

அப்பாவி தங்கமணி said...

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க ராஜி'ம்மா

@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்... உங்கள் தளத்தில் இருந்த சிறுகதையும் வாசித்தேன்... ரெம்ப அழகா எழுதி இருக்கீங்க... பகிர்ந்துகிட்டதுக்கு நன்றிங்க

@ தமிழ் உதயம் - நன்றிங்க

@ சே.குமார் - நன்றிங்க குமார்

@ அனாமிகா - தேங்க்ஸ் மா..:)

@ priya.r - தேங்க்ஸ் அக்கா...;)

@ Matangi Mawley - So rightly said Matangi... who wanted to me mothers all their lives will never be blessed to be one... I'm glad your Mythili aunty had you to show her love... may her soul rest in peace... thanks for sharing Matangi..

@ middleclassmadhavi - நன்றிங்க மாதவி

@ சி.பி.செந்தில்குமார் - நன்றிங்க

@ RVS - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - Thanks for your kind words akka...:)

@ தி. ரா. ச.(T.R.C.) - தேங்க்ஸ் அங்கிள்..

@ ChitraKrishna - நன்றிங்க சித்ரா

@ முனியாண்டி - நன்றிங்க

@ RAZIN ABDUL RAHMAN - நன்றிங்க பிரதர்

@ பெயரில்லா - Many thanks...

@ Gayathri - தேங்க்ஸ் காயத்ரி

@ viswam - நன்றிங்க விஸ்வம்

@ S.Menaga - நன்றிங்க மேனகா

@ Sathish A - ரெம்ப சரியா சொன்னீங்க... நன்றிங்க...

அப்பாவி தங்கமணி said...

@ Ramki - நன்றிங்க ராம்கி

@ கீறிப்புள்ள!! - தேங்க்ஸ்...:))

@ பாலா - நன்றிங்க

@ sakthi - நன்றிங்க சக்தி

@ சுசி - நன்றிங்க சுசி... உங்க தோழிய நினைச்சா இன்னும் வேதனையா இருக்கு.... அது இன்னும் கொடுமை... அதுக்கு இல்லாம இருக்கறதே மேலோனு தோணுது...:((

@ A.R.ராஜகோபாலன் - நன்றிங்க

@ கே. பி. ஜனா...- நன்றிங்க

@ viji - நன்றிங்க

@ A and A - Very happy to hear about your twins...good bless little ones...congrats to you... thanks for your prayers..

@ geetha santhanam - மிக்க நன்றிங்க கீதா

அப்பாவி தங்கமணி said...

@ divyadharsan - Thanks Dhivya. I totally understand what you have gone thru. Yeah, I hear anxiety of expectation will bring negative results most of the time. Thanks for sharing about Ahswita. Our heartfelt wishes to the little one and hearty congrats to you too... active and naughty comes with the package right...ha ha...

ஆஹா...என் கதைய பாப்பாவுக்கு சொல்ல போறீங்களா... பாவம் அஷ் குட்டி... ஹா ஹா... நானும் லாஸ்ட் இயர் வரைக்கும் படிக்க மட்டும் தான் தெரியும்னு நினைச்சுட்டு இருந்தேங்க... அப்புறம் எழுத ஆரம்பிச்சு எல்லாரையும் அழ வெச்சுட்டு இருக்கேன்...ஹா ஹா... யு நெவெர் நோ... நீங்களும் ஒரு நாள் எழுத ஆரம்பிச்சுடுவீங்க பாருங்க...see, மைண்ட் வாய்ஸ் conversation கலக்கலா எழுதி இருக்கீங்க... this is a good start... ha ha... sema comedy... keep it up... thanks Dhivya for taking time inspite of being busy with your little one...:)))

Anonymous said...

புவனா, இந்தக் கதையைப் படிக்கையில் அப்படியே என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை ரீவைண்ட் பண்ணிப்பார்த்த மாதிரி இருந்தது. :(

ஒவ்வொரு மாசமும் எதிர்பார்த்து ஏமாந்து!...எப்பொழுது தீரும் என்று தெரியாத வேதனை!இந்த கஷ்டமான காலத்தை கடப்பது எவ்வளவு சிரமம் என்று அனுபவித்துக்கொண்டிருக்கிறேன். என்னதான் காதல் தம்பதிகளானாலும், ஒரு சில நேரங்களில் அடக்கமுடியாத உணர்ச்சிப்போராட்டங்கள் வந்துவிடுகிறது.

ஒரு மாதம் கட்டிய மனக்கோட்டை மண்ணோடு மண்ணாகும், சோர்ந்து போகாமல் நம்பிக்கையோடு மீண்டும் அடுத்தமுறை கட்ட ஆரம்பிக்கவேண்டும்,அதுவும் உடையும்,மறுபடி நம்பிக்கையை சேகரிக்க வேண்டும்.இது பல முறை நடந்துகொண்டே இருக்கிறது.என் மனக்கோட்டை எப்பொழுது நிஜமாகப் போகிறதோ தெரியவில்லை.உங்கள் எழுத்து என்னை வெகுநேரம் அழவைத்தது.

இப்படிக்கு,
தேவதைக்காய் காத்திருக்கும் நந்தினிகளில் ஒருத்தி.

Sri Seethalakshmi said...

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள் (belated wishes)
கடவுளை நம்பினோர் கை விடப்படார்.
நானும் சீக்கிரம் ஒரு குட்டி தேவதை வர வேண்டிக்கிறேன்.. :)

அப்பாவி தங்கமணி said...

@ Sri Seethalakshmi - Thanks Seetha..:)

Shakthiprabha said...

உருக்கமான கதை. கதையல்ல நிகழ்வு. இந்த வேதனையை அனுபவித்து சில வருடங்கள் கழித்து பிள்ளை பெற்றவள் நான். "நித்ய அம்மாக்கள்"
வார்த்தை ரொம்பவே நெகிழ வைத்தது.

உங்கள் பதிவை என் வலைச்சரத்தில் சேர்த்திருக்கிறேன். என் வலைச்சரம் இன்னும் மணக்கிறது. மிக்க நன்றி :)

கீழிருக்கும் link வலைச்சரத்தில் உங்கள் பதிவை நான் பகிர்ந்த சுட்டி.

http://blogintamil.blogspot.com/2011/12/gigo-theory.html

அப்பாவி தங்கமணி said...

@ Shakthiprabha - இந்த கதையை நீங்கள் ரசித்து படித்ததில் ரெம்ப சந்தோசங்க. "நித்ய அம்மாக்கள்" எப்போது நினைத்தாலும் நெகிழ வைக்கும் எனக்கும். என்னை வலைச்சரத்தில் குறிப்பிட்டதற்கு ரெம்ப நன்றிங்க

Anonymous said...

I came across this poem today. It was very touching and filled my eyes.My sister-in-law is one of them. She is a great soul,very lovable. I wish and pray god to shower his blessings to 'nithya ammas' like her .

அப்பாவி தங்கமணி said...

@ Anonymous - Thanks for your kind words. I know how it feels, my prayers for your sis-in-law. Thanks again

Post a Comment