Thursday, May 26, 2011

நட்பு... (சிறுகதை) - திண்ணை இணைய இதழில்...முன் குறிப்பு:
எனது இந்த சிறுகதை திண்ணை இணைய இதழில் வெளியானது...அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி... திண்ணை சுட்டி இங்கே
நன்றி,
அப்பாவி 

--------------

"கண்டிப்பா வந்துடறேன்...எனக்கு நீ சொல்லணுமாடி.. ஒகே... வெச்சுடறேன்"

"என்ன திவ்யா... யார் போன்ல?" என்றபடி அவளருகே வந்து அமர்ந்தான் அவள் கணவன் ஆனந்த்

"என் பிரெண்ட் மஞ்சுதாம்பா பேசினா... அவ பொண்ணுக்கு முதல் பர்த்டே அடுத்த வாரம் வருதாம்... அதுக்கு பார்ட்டி ஏற்பாடு பண்ணி இருக்காளாம்... என்னையெல்லாம் இன்வைட் பண்ண வேண்டியதே இல்ல வந்துடறேன்னு சொல்லிட்டு இருந்தேன்" என உற்சாகமாய் பேசிய திவ்யாவை யோசனையாய் பார்த்தான் ஆனந்த்

அவன் பார்வையை புரிந்து கொண்டவள் போல் "என்ன யோசனை இப்போ அய்யாவுக்கு?" என்றாள் கேலியாய்

ஒரு கணம் தயக்கமாய் யோசித்தவன் "நான் கொஞ்ச நாளாவே இதை பத்தி உன்கிட்ட பேசணும்னு இருந்தேன்... நீ ரெம்ப சென்சிடிவ்... உன்னை ஹர்ட் பண்ணிட கூடாதுன்னு தான் சொல்லல... திவ்விம்மா, அந்த மஞ்சுகிட்ட கொஞ்சம் அளவா வெச்சுக்கோ" என்றான்

அவன் எதிர்பாத்தது போலவே திவ்யாவின் முகம் வாடியது. இதற்காகத்தான் இதை சொல்வதை தவிர்த்து வந்தான்

"ஏன் இப்படி சொல்றீங்க? அவ எனக்கு ஸ்கூல் டேஸ்ல இருந்தே பிரெண்ட் தெரியுமா? உங்களுக்கு அவளை நம்ம கல்யாணம் ஆன இந்த ஆறு மாசமாத்தான் தெரியும்... கொஞ்ச நாள் பழக்கத்துல நீங்க இப்படி சொல்றது சரியில்லைங்க? நான் இல்லாம ஒரு விஷயம் செய்ய மாட்டா அவ. இப்ப கூட பார்ட்டிக்கு எல்லாரும் சாயங்காலம் தான் வருவாங்க... ஆனா நீ காலைலேயே வந்துடனும்னு சொன்னா தெரியுமா" என்றாள் ஆதங்கத்துடன்

"நீ சொல்றது சரி தான் திவ்யா... உனக்கு ரெம்ப வருசமா அவளை தெரியும் ஒத்துக்கறேன்... ஆனா சில சமயம் அவ உன்னை யூஸ் பண்ணிக்கராளோனு தோணுதுடா... உன்கிட்ட தனியா பேசறப்ப நெருக்கமா பேசரவ மத்தவங்க முன்னாடி அந்த நெருக்கத்த காட்டிக்க விரும்பாத மாதிரி எனக்கு படுது..."

அதை கேட்டதும் கோபமுற்ற திவ்யா "இங்க பாருங்க... அவ ஒண்ணும் அப்படிபட்டவ இல்ல... நீங்களா எதையோ கற்பனை பண்ணிட்டு பேசாதீங்க..." என்றவள் அதற்கு மேல் பேச விருப்பமில்லாதவள் போல் அறைக்குள் சென்று விட்டாள்

இயல்பில் மென்மையான மனமும் அன்பாய் பேசும் குணமும் கொண்ட தன் மனைவி அப்படி கோபமாய் பேசியதை கேட்டதும், ஒருவேளை தன் பார்வையில் தான் தவறோ என்று கூட ஆனந்திற்கு ஒரு கணம் தோன்றியது
_______________________________________

அந்த பார்ட்டி நடக்கும் நாளும் வந்தது. அன்று சனிக்கிழமை. ஆனந்த் அலுவலகம் கிளம்பி சென்றதும் திவ்யா மஞ்சுவின் வீட்டிற்கு கிளம்பினாள். ஆனந்த் அலுவலகம் முடிந்து மாலை பார்ட்டி நேரத்திற்கு வருகிறேன் என கூறி இருந்தான்

உண்மையில் அவனுக்கு அங்கு செல்ல பெரிதாய் விருப்பம் இருக்கவில்லை. ஆனால் திவ்யாவுக்காக தன் விருப்பமின்மையை வெளிப்படுத்தாமல் இருந்தான்

திவ்யாவை கண்டதும் ஓடி வந்து அன்பாய் கட்டிகொண்டாள் மஞ்சு. அப்படியே உருகிப் போனாள் திவ்யா. "இவளையா அப்படி சொன்னார் ஆனந்த்" என கணவன் மீது கோபம் வந்தது ஒரு கணம்

இருவரும் சேர்ந்து வீட்டை ஒழுங்கு செய்வதிலும் பிள்ளையை தயார் செய்வதிலும் நேரம் போனது. உணவு வகைகள் எல்லாம் தெரிந்தவர் கடை ஒன்றில் ஆர்டர் செய்து இருந்தனர். எளிய சில பதார்த்தங்கள் மட்டும் வீட்டில் செய்தனர்

மாலை நெருங்க, விருந்தினர் ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தனர். எல்லாருக்கும் காபி, டீ, ஜூஸ் எது வேண்டுமென கேட்டு, கொண்டு வந்து கொடுப்பதில் திவ்யா நிற்க நேரமில்லாமல் சுற்றி கொண்டிருந்தாள்

மஞ்சு வந்திருந்த விருந்தினர்களை வரவேற்பதில் மும்மரமாய் இருந்தாள். அதில் ஒருத்தி, "என்ன மஞ்சு? உன் பிரெண்ட் திவ்யா நேரத்துலையே வந்துட்டா போல இருக்கே" என கேட்க

"இல்ல, இப்பதான்... நீ வர்றதுக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்தா" என்றாள் மஞ்சு. அந்த பக்கம் எதோசையாய் வந்த திவ்யாவின் காதில் அந்த சம்பாஷனை கேட்டு விட, ஏன் இப்படி மஞ்சு அவசியமின்றி பொய் சொல்கிறாள் என புரியாமல் குழப்பமாய் பார்த்தாள். வேறு ஒரு விருந்தினரிடம் பேசிகொண்டிருந்த மஞ்சு அதை கவனிக்கவில்லை

காலை முதல் அருகே இருந்த பழக்கத்தில் மஞ்சுவின் பிள்ளை வேறு ஒருவரிடமிருந்து திவ்யாவிடம் தாவ, எங்கிருந்தோ வந்த மஞ்சு அவசரமாய் பிள்ளையை அவளிடமிருந்து பறிப்பது போல் வாங்கினாள்

அவளது செய்கையை வித்தியாசமாய் பார்த்த ஒரு விருந்தினரிடம் "அது... அதிகம் பழக்கம் இல்லாதவங்ககிட்ட இருந்தா அழ ஆரம்பிச்சுடுவா... கேக் கட் பண்ற நேரத்துல கஷ்டம் ஆய்டும் பாருங்க" என அதற்கு விளக்கம் வேறு கூறினாள் மஞ்சு

அதன் பின் ஒரு ஒரு செய்கையிலும், மற்றவர் முன் தன்னை ஏதோ வேண்டாத விருந்தாளியை போல் மஞ்சு நடத்தியதை திவ்யாவால் உணர முடிந்தது

இதற்கு முன்னும் கூட பல சமயங்களில் மஞ்சு இப்படி தான் நடந்திருக்க வேண்டும். ஆனால் நட்பு என்ற திரையின் பின் நின்று கொண்டு அதை கவனிக்க தவறி விட்டேன் என நினைத்தாள் திவ்யா

இப்போது தன் கணவன் அதை சுட்டி காட்டியதால் அந்த கோணத்தில் பார்த்த பின் தான் மஞ்சுவின் உண்மை சொரூபம் புரிகிறது என்பதை உணர்ந்தாள் திவ்யா

உற்ற தோழி என நினைத்தவளின் இந்த செய்கை தந்த வேதனையில் கண் நிறைய, வந்திருந்த கூட்டத்தில் கணவனை தேடியது அவள் கண்கள். அவனை காணாமல் மனம் வாடியது

இப்போது கிளம்பினால், "இன்னும் கேக் கூட வெட்டல ஏன் கிளம்பற?"என கேட்கும் மற்றவர்களின் கேள்விக்கு பதில் கூற வேண்டி இருக்கும் என நினைத்தவளாய், நேரத்தை கொல்ல வழி தேடி கொண்டிருந்தாள்

மெழுகுவர்த்தி அணைத்து கேக் வெட்டி ஹாப்பி பர்த்டே பாடி, பரிசுகள் எல்லாம் கொடுத்து முடிந்ததும் விருந்து தொடங்கியது. பப்பே முறையில் உணவு மேஜைகளை ஹோட்டல் சிப்பந்திகள் ஒழுங்குற அமைத்து இருந்தனர்

வயதான பெண்மணி ஒருவர் "கொஞ்சம் தண்ணி குடேம்மா" என திவ்யாவிடம் கேட்க, அது தான் சாக்கென அந்த இடத்தை விட்டு அகன்றாள் திவ்யா

நாலடி வைத்தவள், "வயதானவர் ஒரு வேளை மருந்து ஏதும் சாப்பிட வெந்நீர் கேட்டு இருப்பாரோ... எதுக்கும் கேட்டுடலாம்" என அந்த நேரத்திலும் தனக்கே உரிய மென்மை மனதுடன் நினைத்தவள் மீண்டும் அந்த இடத்திற்கு செல்ல

"உங்க பெரியம்மா தண்ணி கேட்டாங்களே... யாரு அந்த பொண்ணு... நல்லா ஓடி ஆடி வேலை செய்யுதேன்னு கேட்டேன்" என ஒருவர் மஞ்சுவிடம் கேட்க

அவர்கள் பேசும் போது இடையில் செல்வது நாகரீகம் அல்ல என நினைத்தவளாய் சற்று ஒதுங்கி நின்ற திவ்யா, மஞ்சு சொன்ன பதிலில் நிலை குலைந்து போனாள்

"அது... சும்மா தெரிஞ்ச பொண்ணு... பாவம் பெரிய வசதி இல்ல... இப்படி விசேஷ சமயத்துல வந்து ஏதோ கூட மாட செய்யும்...ஏதோ என்னால ஆனத குடுப்பேன் சித்தி" என மஞ்சு ஏதோ பெரிய பரோபகாரி போல் கூற, திவ்யாவிற்கு இனி ஒரு கணமும் அங்கு இருக்க கூடாதென தோன்றியது

உள்ளறையில் சென்று தன்னை சற்று நிதானப்படுத்தி கொண்டவள், வெளியேற முன் வாசலுக்கு செல்லவும், அங்கு வந்த மஞ்சு தன் பிள்ளையை திவ்யாவின் கையில் திணித்தவள், ஒரு புன்னகையுடன் "அப்பப்பா என்ன ரகளை பாரேன் இவ... கொஞ்ச நேரம் உன்கிட்ட இருக்கட்டும் திவ்யா..." என்றாள்

ஒரு கணம் எதுவும் பேசாமல் மஞ்சுவை வெறித்தவள் "இப்ப உன் பொண்ணுக்கு தான் பழக்கமானவளா ஆய்ட்டேனா?" என்றாள் திவ்யா பட்டென்று

இதை எதிர்பார்க்காத மஞ்சு "இல்ல திவ்யா... நான்"

"ஸ்டாப் இட்... இப்பவும் கத்தி பேசி உன் சொந்தங்க முன்னாடி என்னால உன் மானத்த வாங்க முடியும்... அப்புறம் உனக்கும் எனக்கும் வித்தியாசமில்லாம போய்டும்னு பாக்கறேன்... ச்சே... நீயெல்லாம் ஒரு... " என கேவலமான ஒரு பார்வையை அவள் மேல் வீசியவள் "இனி எனக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல... குட் பை..." என வெளியேறினாள் திவ்யா
_______________________________________

வீட்டிற்கு வந்து வெகுநேரமாகியும் திவ்யாவின் மனம் சமாதானமாகவில்லை. அவளை எப்படி எல்லாம் நினைத்திருந்தேன், அவளுக்காக தன் மேல் உயிரையே வைத்திருக்கும் தன் கணவனிடம் கோபமாய் பேசினேனே என்றெல்லாம் வேதனையில் உழன்றாள்

சற்று நேரத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்க, போய் திறந்தவள், தன் கணவனை கண்டதும் தன் வேதனையை மறைக்க முகம் திருப்பினாள்

அதை அவளின் கோபம் என நினைத்து கொண்ட ஆனந்த் "சாரி திவ்விம்மா... கிளம்பற நேரத்துல ஒரு முக்கியமான வேலை... அதான் மஞ்சு வீட்டுக்கு வர முடியல... " என மன்னிப்பு கோரும் குரலில் அவன் கேட்க, அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள முடியாமல் அழத்தொடங்கினாள்

அதை கண்டதும் பதறிய ஆனந்த் "ஏய் திவ்யா ப்ளீஸ் சாரிடா... நான்..." என்றவனை பார்த்தவள் "நான் தான் சாரி சொல்லணும்ப்பா... சாரி சாரி சாரி" என அழுகையினூடே கூறியவளை புரியாமல் பார்த்தவன், எதுவும் கேட்க தோன்றாமல் அவளை சேர்த்து அணைத்து சமாதானம் செய்ய முயன்றான்

சற்று நேரம் கழித்து, அழுததில் மனம் சற்று அமைதியுற, நடந்ததை தன் கணவனிடம் கூறினாள் திவ்யா. எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டவன் "விடுடா... இப்பவாச்சும் அவளோட இன்னொரு முகத்தை தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பு கிடைச்சதேனு சந்தோசப்படு" என்றான்

"நான் அப்பவே சொன்னனே" என குத்தி கட்டாமல் அவன் சமாதானமாய் பேசியது அவளின் குற்ற உணர்வை மேலும் தூண்டியது

"சாரிங்க... நீங்க எனக்காக சொல்றீங்கன்னு கூட புரிஞ்சுக்காம, உங்ககிட்ட கூட அன்னைக்கி கோபமா பேசிட்டேன்..." என்றவளின் குரலில் இருந்த வருத்தத்தை காண சகியாதவன் போல்

"என்கிட்ட கோபமா பேசினதுக்கு பனிஷ்மன்ட் குடுத்துடறேன்...அப்ப சரியா போய்டும் தானே" என கேலியான குரலில் வேண்டுமென்றே பேச்சை மாற்றினான்

அவன் எதிர்பார்த்தது போலவே, அவன் கேலி அவள் முகத்தில் புன்னகை பரவச்செய்ய "என்ன பனிஷ்மன்ட் குடுத்தாலும் ஒகே" என அவன் மார்பில் முகம் சாய்த்தாள்

"இதான் பனிஷ்மென்ட்... காலைல வரைக்கும் இப்படியே இருக்கணும்" என ஆனந்த் சிரிக்க, "காலைல வரைக்கும் மட்டும் தானா?" என திவ்யா பாவமாய் கேட்க, சத்தமாய் சிரித்தான் ஆனந்த்

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு

(முற்றும்)

59 பேரு சொல்லி இருக்காக:

viswam said...

அருமையான ந‌ட்பு கதை.

ANaND said...

பாத்திங்களா... ஆனந்த் சொன்ன சரியாதான் இருக்கும்

Kousalya said...

கதை நல்லா இருக்கு தோழி. திண்ணையில் வெளி வந்ததுக்கு வாழ்த்துக்கள்.

Porkodi (பொற்கொடி) said...

:)))) nalla kadhai appavi! ana oru periya reasone illama ithanai varushama manju indha 'friendship' edhuku maintain pannanum.. adhan konjam yosanaiya irukku..!

ஸ்ரீராம். said...

அருமை.

middleclassmadhavi said...

இது மாதிரி மனிதர்களை நானும் சந்தித்திருக்கிறேன்;
அருமையான கதை - வாழ்த்துக்கள்!

மோகன்ஜி said...

நீரோடை போல் கதை நகர்கிறது. வாழ்த்துக்கள் மேடம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல கருத்துள்ள கதை. அழகான நடையில் கதையை நகர்த்திப்போய் அருமையாக முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

DREAMER said...

நீண்ட நாளுக்கு பிறகு உங்க கதையை வாசிக்கிறேன். நல்லாயிருக்குங்க..!

-
DREAMER

A.R.ராஜகோபாலன் said...

திருமணத்திற்கு பிறகு ஆண்களின் நட்பு அப்படியே தொடரும் பெண்களின் நட்பு தன சுற்றம் சார்ந்தே இருக்கும் என்பதை சொல்லும் கதையின் உண்மை அருமை

viji said...

I wounder, is there persons like this?
Thank God i never had crossed such persons in my life time.
Your writings made me feel so real dear.
keep writing.
viji

ஹேமா said...

நட்பின் பெருமையோடு வாழ்த்துகள் தோழி !

முனியாண்டி said...

நல்ல கதை

எல் கே said...

ஷப்பா காதல் இல்லாமல் ஒரு கதை இன் அப்பாவியின் ப்ளாக் சூப்பர். இதையே தொடரவும்

Lakshmi said...

கதை ரொம்ப நல்லா இருக்கு. திண்ணையில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்.

வெண்கல கடை said...

:) கதை is nice! இந்த மாதிரியும் ஆட்கள் இருக்காங்க...very true :(

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

கதை நல்லா இருக்கு. திண்ணையில் வெளி வந்ததுக்கு வாழ்த்துக்கள்.

sawme said...

கடைசியா திருக்குறள் டச்...இது தான் அப்பாவியோட டச்...ஹிஹிஹி

athira said...

கலக்கிட்டீங்க திண்ணையை...

Anonymous said...

Nice story, I expected some twist but disappointed. I thought there will be some hidden reason for manju's activity, which will be revealed at the end.

I received a big bulb.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

congrats sister. gud story

மாதேவி said...

கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கருத்துள்ள கதை அ.த. திண்ணையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்.

priya.r said...

மன உணர்வுகளை வெளிபடுத்தும் பதிவு
திண்ணையில படிச்சுட்டு அந்த மஞ்சு
அழுது மனம் திருந்தி திவ்யா கிட்டே மன்னிப்பு கேட்கோணும் ன்னு
சொல்லி கிட்டு இருக்காளாம் !

கோவை ஆவி said...

Good!!! Aaana twist illayae!!!

Mahi said...

திண்ணைல அன்னைக்கே படிச்சுட்டேன் புவனா! :)

/திண்ணையில படிச்சுட்டு அந்த மஞ்சு
அழுது மனம் திருந்தி திவ்யா கிட்டே மன்னிப்பு கேட்கோணும் ன்னு
சொல்லி கிட்டு இருக்காளாம் !/ :)))))))))))

sakthi said...

நல்லாயிருக்கு புவனா

பத்மநாபன் said...

தொடர்கதையை படிக்க தாமதமானாலும் ..சிறுகதையை உடனே படித்துவிடுவேன் ...கருத்துரையிடுக பகுதி எனது கணினியில் திறக்க இவ்வளவு நேரமாகிவிட்டது..( சில கணினி யில் திறக்க முடிவதே இல்லை )

அவசர உலகத்தில் நட்பின் கனம் குறைந்துகொண்டு வருவதை கதை அழகாக வெளிப்படுத்தியது..

திண்ணை இணைய வார இதழில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்...

அப்பாதுரை said...

நல்ல கதை.
திண்ணை சுட்டிக்கு நன்றி.

ராஜி said...

என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி. கடவுள் கிருபையாலும், தங்களைப் போன்ற நன்பர்களின் வேண்டுதலாலும் எனது தந்தை குணமடைந்துக் கொண்டு வருகிறார். அவரை கவனிக்கும் பொறுப்பிலிருந்ததால் என்னால் தங்கள் கமண்ட்டுக்கும், வலைச்சரத்துக்கும் வர இயலாத சூழல். மன்னிக்க சகோதரி.

Porkodi said...

தொடர்கதை எங்கன்னு யாராவது கேட்டுத்தான் தொலைங்களேன் சாமிகளா.. அப்புறம் யாருமே கேக்கவே இல்லைன்னு ஃபீலீங் எல்லாம் வேற வரும் அக்காவுக்கு.. அலோ அக்கா மைக் டெஸ்டிங் 1 2 3.

அனாமிகா துவாரகன் said...

Appavi DOWN DOWN

priya.r said...

சரி சரி கேட்டு தொலைக்கிறேன்
அப்பாவி தங்க்கோச்சி !
வந்து கதையை சொல்லி போடு கண்ணு :)

priya.r said...

கொடி!
விஷயம் தெரியுமா
கீதா மாமி கிட்டே போனில் பேசினேன்
என்ன இனிய குரல் வளம் ! எவ்வளோ மென்மையான குரல் !
இனிமேல் அவங்கள ஸ்வீட் வாய்ஸ் கீதா மாமி ன்னு கூப்பிடலாம் !!

priya.r said...

ஏம்மா சுனாமி
கதை எழுதினா பிடிக்கலைன்னு சொல்றே
எழுதலைன்னா டவ்ன் டவ்ன் சொல்றே
அப்பாவியை என்ன தான் செய்ய சொல்றே
அப்பாவி பாவம் :)

nawas khan said...

Hello

Mam, what are you thing about us.Still you are not posted the next episode.Please please i am waiting for the next part

Vasagan said...

@ Appavi, month end முடிஞ்சு இரண்டு நாள் ஆய்ச்சு இன்னும் ஆணி அதிகம்மா ? Where is ஜி ஒ கா.

அப்பாவி தங்கமணி said...

@ viswam - நன்றிங்க விஸ்வம்..

@ ANaND - நன்றிங்க

@ Kousalya - ரெம்ப நன்றிங்க தோழி...

@ Porkodi (பொற்கொடி) - தேங்க்ஸ் கொடி...அந்த பொண்ணும் என்னை போலவே அப்பாவி...அதான் விவரம் புரியாம இருந்துருக்கா... இப்ப எடுத்து சொன்னதும் அந்த கோணத்துல பாத்தப்ப விஷயம் புரிஞ்சது... அதோட அததுக்கு ஒரு நேரம் வரணுமில்லையா...:))

@ ஸ்ரீராம். - நன்றிங்க

@ middleclassmadhavi - நன்றிங்க மாதவி

@ மோகன்ஜி - நன்றிங்க மோகன்ஜி

@ வை.கோபாலகிருஷ்ணன் - ரெம்ப நன்றிங்க சார்

@ DREAMER - உங்க பிஸி படப்பிடிப்பு வேலைகளிலும் என் கதை படித்ததுக்கு ரெம்ப நன்றிங்க ஹரீஷ்... படம் ரெம்ப நல்லா வந்துட்டு இருக்குனு படிச்சேன்... வாழ்த்துக்கள்'ங்க...

@ A.R.ராஜகோபாலன் - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ viji - Hi Viji, you must be very lucky that you didn't come across people like this... there are many in the society... many thanks for your compliments... :)

@ ஹேமா - நன்றிங்க

@ முனியாண்டி - ரெம்ப நன்றிங்க

@ எல் கே - ஹா ஹா ஹா... உன்னோட optimism is great....:))

@ Lakshmi - ரெம்ப நன்றிங்க லக்ஷ்மி'ம்மா

@ வெண்கல கடை - ஆமாங்க இருக்காங்க... நன்றிங்க

@ தோழி பிரஷா( Tholi Pirasha) - நன்றிங்க தோழி

@ sawme - நன்றிங்க ஸ்பெஷல் டச் கமெண்ட்க்கு..:)

@ athira - நன்றிங்க அதிரா

@ பெயரில்லா - ஹா ஹா... சாரிங்க உங்களை ஏமாத்தினதுக்கு... எப்பவும் ட்விஸ்ட் வெச்சு திட்டு வாங்கரமேனு ஒரு சேஞ்சுக்கு இப்படி எழுதினேன்...அடுத்த கதைல சூப்பர் ட்விஸ்ட் வெச்சுடலாம்... ஒகே...நன்றிங்க...:)

அப்பாவி தங்கமணி said...

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - நன்றிங்க சகோ

@ மாதேவி - நன்றிங்க

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க வெங்கட்

@ priya.r - நன்றிங்க அக்கா... மஞ்சுவை மன்னிப்பு கேக்க சொல்லுங்க...திவ்யாகிட்ட நான் பேசி பாக்கறேன்...:))

@ கோவை ஆவி - ஹா ஹா... அப்பாவினா ட்விஸ்ட்னு ஆகி போச்சோ... நன்றிங்க ஆனந்த்.. எங்க உங்கள ரெம்ப நாளா காணோம்...:)

@ Mahi - நன்றிங்க மகி... நீங்களும் திண்ணையின் ரெகுலர் வாசகி போல...:)

@ sakthi - ரெம்ப நன்றிங்க சக்தி

@ பத்மநாபன் - ரெம்ப நன்றிங்க அண்ணா

@ அப்பாதுரை - நன்றிங்க சார்

@ ராஜி - அடடா... எனக்கு விஷயம் தெரியலைங்க... இப்ப அப்பாவுக்கு பரவா இல்லைன்னு கேக்க சந்தோசமா இருக்கு... நானும் பிரார்த்தனை பண்ணிக்கறேன் ராஜி'க்கா... டேக் கேர்... நன்றி...

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi - என்னா ஒரு அன்பு..... avvvvvvvvvvvvvvvvvv...... இதுக்கு கேக்காமயே இருந்துருக்கலாம்... ஆனாலும் இதுக்கெல்லாம் நான் அசந்துருவனாக்கும் ... ஹ்ம்ம்... ஹா ஹா ஹா...:))

@ அனாமிகா துவாரகன் - ரெம்ப புகழாதீங்க மேடம்... கூச்சமா இருக்கு... நன்றி நன்றி... ஹி ஹி ஹி... :)

@ priya.r - எப்படி ஆரம்பிச்சு எப்படி முடிக்கறாங்க பாருங்க... ப்ரூட்டஸ்...கிர்ர்ரர்ர்ர்....இதுல அப்பாவி பாவம்னு ஒரு ஸ்டேட்மென்ட் வேற... உங்கள நம்புவேனா நானு... சான்சே இல்ல...:))

@ nawas khan - மன்னிக்கனுங்க... இந்த வாரம் வேலை அதிகம்...அதான் எழுத முடியல... நெக்ஸ்ட் வீக் கண்டிப்பா போட்டுடறேன்... நன்றிங்க...

@ Vasagan - month எண்டு முடிஞ்சும் இன்னும் இந்த auditor கடன்காரன் தொல்லை முடிய மாட்டேங்குது... அவ்வ்வ்வ்....:((... ஜி ஒ கா அடுத்த வாரம் போட்டுடறேங்க... :)

The Kid said...

Submit your blog RSS once in http://zeole.com/chennai and get more visitors from Chennai. This RSS submission, would automatically publish a preview of your latest post in zeole.com with a link back to your blog. You interested?

Ramki said...

அருமை!!!! . அதெல்லாம் இருக்கட்டும் ஏனுங்க அம்மிணி இந்த வாரம் ஜில்லுனு ஒரு காதல் என்னாச்சுங்கோ.......

கோவை2தில்லி said...

நல்ல கதை. திண்ணையில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.

priya.r said...

அப்பாவியிடம் இருந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒரு மொக்கை போஸ்ட் வர போகிறாதாம்!

priya.r said...

அனேகமா யாரைவது ஒருத்தரை கலாய்க்க போறார் ன்னு நினைக்கிறேன்
அவர் யாராக இருப்பார் ;சரியாக ஊகிப்பவர்களுக்கு ஒரு பரிசாம்

priya.r said...

Itho ungaluggu oru kulu !!

//Bhuvana Govind (அப்பாவி தங்கமணி) post.. for me also its been long time teasing some one.. :P

ippovaavathu yaarai solraarnnu theriyutha makkale!

priya.r said...

yaar yaaru appaviyai tease seiyyaraangannu parthaa

kodi,anaami,annu ,mahi,Gethamma,seetha,LK,Prof.,
eppovaavathu thaggudu,pastan,balaji

yaaraa iruggum

oru velai naano ! sheesay iruggathu
akkaannu oru payapakthi namma perla iruggum :)

priya.r said...

சாரி புவனா

இந்த பாலாஜிஉன்னை பத்தி போட்ட கமெண்ட்ஸ் தான் இந்த தவறான ஊகத்துக்கு காரணம்

சரி பரவா இல்லை நடந்தது நடந்து போச்சு ;ஒரு பதிவு தான் போட்டுடேன் !

priya.r said...

என் புவனா இப்படி செய்தால் என்ன
உன்னை பதிவு போட விடாமல் அதிக வேலை கொடுத்து தடுக்கிற அந்த
Damager அம்மாவை உனது இட்லி பார்சலை கொடுத்து மயக்கத்தில் ஆழ்த்தி
ஒரு பதிவு போட்டுடேன் !

rompa naalaiggu appuram oru 50 !!

திவா said...

ஓஹோ இங்க கலாட்டா தொடருதா? இருக்கட்டும் இருக்கட்டும்! :-))

திவா said...

புவனி கதை ஏனோ நிறைவா இல்லை. நெகடிவா இருக்கறதாலேயோ?
ம்ம்ம்ம்ம்???

தக்குடு said...

ஆத்துக்காரர் சொல்லர்தை இந்த காலத்துல யார் கேக்கரா? அப்புறம் கண்ணை கசக்கிண்டு வந்து நிக்க வேண்டியது!!! ஆனா அந்த பனிஷ்மண்ட் கொஞ்சம் நல்லா இருக்கு!..:))

குறிப்பு - கமண்ட் பொட்டி திறக்க "அண்டாகா கஸூம்" எல்லாம் சொல்ல வேண்டி இருக்கு

Sri Seethalakshmi said...

எங்க எங்களோட தொடர்கதை ?
எங்க ஜில்லுனு ஒரு காதல் ?
சீக்கிரம் சொல்லுங்க, சாரி போஸ்ட் போடுங்க...
காத்திருக்கிறேன் (காத்திருக்கிறோம்)... :-)

Anonymous said...

Thodar kathai enge? thinam thinam ungal blogirrkku vanthu parthu eemanthu pogiren. Unngal ezhuthukalal en pondra rasikaikalai sambathikum pothu sila azhagana ethirigalaiyum sambathikireergal(athu en 8 vayathu magal). nee eppothu parthalum appavi thangamani padithu kondirukirai endru ennodu sandai podukiral.

கீதா said...

இப்பதான் திருக்குறளோட ஒரு தொடர்கதை ஆரம்பிச்சிட்டு உங்க ப்ளாக் வந்தா திருக்குறளோடு ஒரு சூப்பர் கதை பதிஞ்சிருக்கீங்க. கதை ரொம்ப நல்லா இருக்கு. சில முகங்களை நாமாத் தெரிஞ்சிக்கிறவரைக்கும் மத்தவங்க என்ன சொன்னாலும் மண்டையில் ஏறாது.

அப்பாவி தங்கமணி said...

@ Ramki - நன்றிங்க... கொஞ்சம் வேலை அதிகம்ங்க அதானுங்க ஜில்லு போஸ்ட் போட முடியலைங்க.... இன்னைக்கி போட்டுடறேன்...:)


@ கோவை2தில்லி - நன்றிங்க ஆதி


@ priya.r - ஹா ஹா ஹா... ப்ரியா அக்கா ரெம்ப ரகளை உங்களோட... பாலாஜி கமெண்ட் பாத்துட்டு ஹா ஹா ஹா... அதுகென்ன கரும்பு தின்ன கூலியா... உங்களை வெச்சு காமெடி பண்ணிட்டா போச்சு...ஜஸ்ட் கிட்டிங்...:))... டேமேஜர் அம்மா இல்ல ஐயா, அவரை வெச்சு கூட ஒரு போஸ்ட் தேத்தி வெச்சு இருக்கேன்... பழி வாங்கத்தான் போறேன்...:))


@ திவா - நன்றிங்க திவாண்ணா... நெகடிவ் எண்டிங்'கறதால அப்படி தோணுதோ..:)


@ தக்குடு - இந்த மெசேஜ் எனக்கு தானா இல்ல?????........:)))


@ Sri Seethalakshmi - இன்னைக்கி போட்டுடறேன்'ப்பா... தேங்க்ஸ் கேட்டதுக்கு...:))


@ பெயரில்லா - தொடர் இன்னைக்கி போட்டுடறேங்க...ஆஹா... அழகான எதிரியை கேட்டதா சொல்லுங்க ஹா ஹா ஹா...:))


@ கீதா - வாவ்... திருக்குறள் தொடரா? இதோ வந்துடறேன்... நன்றிங்க கீதா...

bharanilogu said...

ethu romba pattaiya kalaputhunga

அப்பாவி தங்கமணி said...

@ bharanilogu s - Thank you

Post a Comment