Thursday, May 19, 2011

பனி விழும் மலர்வனம்... (For someone special...)This is for someone special for a very special day coming up...:)

"நினைவெல்லாம் நித்யா" படத்துல வர்ற "பனி விழும் மலர் வனம்..." பாட்டு எனக்கு ரெம்ப ரெம்ப பிடிச்ச ஒரு மெலடி...எனக்கு மட்டுமில்ல இன்னொருத்தருக்கும் பிடித்த பாட்டு...:)

அதனால, அந்த பாட்டோட மெட்டுக்கு ஏத்த மாதிரி என்னோட வரிகள் எழுதணும்னு செஞ்ச ஒரு முயற்சி இது... நான் சரியா பேசவே ஆரம்பிக்காத காலத்துல வந்த படம்னாலும், ஓல்ட் இஸ் கோல்ட் யு நோ...:)

எவ்ளோ சரியா வந்துருக்குனு தெரியல... அந்த மெட்டுல பாடி பாத்துட்டு நீங்களே சொல்லுங்க... நன்றி...

நினைவுகள் நிகழ்வுகள் என்றென்றும் உன்னுடன்
நினைத்திட நினைத்திட நிறம்மாற்றும் நிஜங்களே - ம்...ஹும்...
நினைத்திட நினைத்திட நிறம்மாற்றும் நிஜங்களே
(நினைவுகள் நிகழ்வுகள்...)

மழலை முதலே அறிந்தாலும் மனதை புரிந்தோம் இந்நாளில்
மழலை முதலே அறிந்தாலும் மனதை புரிந்தோம் இந்நாளில்
உறவுகள் சூழ்ந்திட இணைந்திட்டோம் வாழ்வினில் - ஹே ஹே
உணர்வதின் பூக்களே மனமெங்கும் மலர்ந்ததே
உலகம் சுற்றியும் நிற்கையில் உறவுகள் சூழ்கையில்
உறவும் உணர்வும் மறந்து உன்னை தேடும்
(நினைவுகள் நிகழ்வுகள்...)

மனதை அறிந்த அந்நாளில் மறந்தோம் உலகை பலகனவில்
மனதை அறிந்த அந்நாளில் மறந்தோம் உலகை பலகனவில்
முப்பது அறுபது கடந்தும்தான் கசக்கல - ஹே ஹே
முன்னொரு பிறவியில் இருந்தோமோ இன்றுபோல்
காலம் கண்முன்னே கரைகையில் கனவுகள் மலர்கையில்
கரையும் நெஞ்சம் விரிந்து கவிதை பாடும்
(நினைவுகள் நிகழ்வுகள்...)

...

62 பேரு சொல்லி இருக்காக:

r.v.saravanan said...

me first

எல் கே said...

இதென்ன பெரிய சிதம்பர ரகசியமா ??

Matangi Mawley said...

So Sweeeet! :) :) song has come out very well!

and my best wished on you Special day! :)

எல் கே said...

எங்களோட அப்பாவி கோவிந்த் மாம்ஸ்க்கு . ஒண்ணா அவரோட பிறந்த நாளா இருக்கும் இல்லாட்டி உங்க திருமண நாளா இருக்கும் சரியா

r.v.saravanan said...

பாடி பார்த்துட்டு சொல்றேன் தோழி

Mahi said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் புவனா!

இந்தப் பாட்டு,எங்க வீட்டிலும் 2 பேருக்குமே ரொம்ப பிடிக்கும்.

மெட்டுக்கு பாட்டு எழுதி கிஃப்ட்டா? நல்ல ஐடியாவா இருக்கே! :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

அந்த
ஏதோவொரு
மிகச்சிறந்த
இனிய
குதூகுலமிக்க
பாட்டெழுதத்தூண்டிய
நாளுக்கு
என் மனமார்ந்த
அன்பு வாழ்த்துக்கள் !

Mahi said...

/நான் சரியா பேசவே ஆரம்பிக்காத காலத்துல வந்த படம்னாலும், ஓல்ட் இஸ் கோல்ட் யு நோ...:)
/ ஓல்ட் இஸ் கோல்ட்ங்கறத ஒத்துக்கறம்,ஆனா அதுக்கு மின்னால சொல்லிருக்கீங்களே,அது ரெம்ப டூ மச்,யு நோ... :)

7வது கமென்ட்டும் நானே! ஹிஹி!

A.R.RAJAGOPALAN said...

மிக நல்ல முயற்சி
எது எப்படி இருந்தாலும்
மனதிற்கு பிடித்ததை செய்வது
என்றுமே உற்சாகம்தான்

சிநேகிதி said...

பாட்டு மெட்டு அழகாதான் வந்திருக்கு... முழுசாக அந்த பாட்டு தெரியாது ஆனால் வரிகள் அழகாக இருக்கு

Vasagan said...

அன்பு தங்கைக்கும் மாப்பிளைக்கும்
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

போன வருஷம் வெங்கடசலபதியை பார்க்க போனீர்கள் இந்த வருடம் எங்க ?

ஹேமா said...

இதைவிட உங்க அன்பையும் சந்தோஷத்தையும் வேற எப்பிடி வெளிப்படுத்த முடியும் தோழி !

கீதா said...

எனக்கும் மிகப் பிடித்தப் பாடல். உங்கள் வார்த்தைகள் அழகாகப் பொருந்திவருகின்றன. கணவருக்கு அன்புப் பரிசா? நீங்கள் பாட்டெடுத்துக் கொடுத்தால் அவர் பட்டெடுத்துக் கொடுப்பாரோ? :)
இனிய மணநாள் வாழ்த்துகள்.

சி.பி.செந்தில்குமார் said...

கொன்னுட்டீங்க..... ( நோ டபுள் மீனிங்க் ஹி ஹி )

siva said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

vanathy said...

appavi, nice song.
//நான் சரியா பேசவே ஆரம்பிக்காத காலத்துல வந்த படம்னாலும், ஓல்ட் இஸ் கோல்ட் யு நோ...:)//
You know what I didn't even born at that time.

Chitra said...

Is it your anniversary? HAPPY ANNIVERSARY! :-)

இராஜராஜேஸ்வரி said...

ஓல்ட் இஸ் கோல்ட் .
HAPPY ANNIVERSARY!

தமிழ் உதயம் said...

கவிஞர் வைரமுத்துவை தூக்கி சாப்பிட்டுட்டிங்க.

kggouthaman said...

வாழ்த்துகள்.

காற்றில் எந்தன் கீதம் said...

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு என்றும் என் நல்வாழ்த்துக்கள் .....

Avargal Unmaigal said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

Avargal Unmaigal said...

//போன வருஷம் வெங்கடசலபதியை பார்க்க போனீர்கள் இந்த வருடம் எங்க ?//
இந்த வருடம் கலைஞர் கருணாநிதியைத்தானே?

Avargal Unmaigal said...

'Marriage lets you annoy one special person for the rest of your life.'

HAPPY ANNIVERSARY!

தங்கம்பழனி said...

நல்லா இருக்கு. பாடத்தான் கொஞ்சம் முழு பாடலும் நினைவுக்கு வரவில்லை.. மற்றபடி வரிகள் பிரமாதம்

Anonymous said...

Nandraga irukirathu, You'r having a bright future in the literature field. As all say I also wish you and your spouse a very happy anniversary.

கோவை2தில்லி said...

பாட்டு வரிகள் பிரமாதம் புவனா. உங்கள் ஸ்பெஷலான நாளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். (உங்கள் திருமணநாளும் மே யில் தானா!)

S.Menaga said...

Happy anniversary Bhuvana!!

தி. ரா. ச.(T.R.C.) said...

மழலை முதலே அறிந்தாலும் மனதை புரிந்தோம் இந்நாளில்
ஓ அப்படி போகுதா கதை! மாமா பையனா இல்லை அத்தை பையனா?
மணநாள் வாழ்த்துக்கள்.கவலைப் படாதே சகோதரா பொறுத்தார் பூமி ஆள்வார்

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 40/100 மார்க். நன்றி!

ஸ்ரீராம். said...

புதிய முயற்சி....அருமை. வாழ்த்துகள்.

Porkodi said...

HAPYY ANNIVERSARY adappavi akka and appavi mama!!!

(hahah, andha paatu vandha podhu ennoda ammavukke kalyana vayasu varalai! :D idhu thevaya ungluku?)

பத்மநாபன் said...

வைரமுத்துவின் பாட்டு வரிகளிலும் ராஜாவின் இசையிலும் எஸ்.பி.பியின் துள்ளல் குரலிலும் சொக்கவைத்த பாடல்..மீண்டும் புதுமையான உங்கள் வரிகளில் அருமையாக ...இசை இயக்குனர் கண்களில் பட்டால் கொத்திக் கொண்டு போய்விடுவார்கள்...

இனிய சிறப்பு தின நல் வாழ்த்துக்கள்...

Vasagan said...

\hahah, andha paatu vandha podhu ennoda ammavukke kalyana vayasu varalai! :D idhu thevaya ungluku?\

Kedi Akka

Poiyai sonallum poruntha sollanum unnakkae ennai kadillum muenu vayasu athikkam.

un anbu thambi.

middleclassmadhavi said...

பாடிப் பார்க்குமுன்னே படித்துப் பார்க்க நல்லாயிருக்கு!
வாழ்த்துக்கள்!

Sri Seethalakshmi said...

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

பாடல் மிக அருமை...

என்னை மிகவும் கவர்ந்த வரிகள்,

//மழலை முதலே அறிந்தாலும் மனதை புரிந்தோம் இந்நாளில்
உறவுகள் சூழ்ந்திட இணைந்திட்டோம் வாழ்வினில் - ஹே ஹே
உணர்வதின் பூக்களே மனமெங்கும் மலர்ந்ததே
உலகம் சுற்றியும் நிற்கையில் உறவுகள் சூழ்கையில்
உறவும் உணர்வும் மறந்து உன்னை தேடும் //

இந்த உலகில் வெளிபடுத்த முடியாத உணர்வுகளில் ஒன்று அன்பு.
அதை இவ்வளுவு அழகாக வெளிபடுத்தி இருகிறீர்கள்...

வாழ்த்துக்கள்....

Yoga.s.FR said...

///போன வருஷம் வெங்கடசலபதியை பார்க்க போனீர்கள் இந்த வருடம் எங்க?/// பழனிக்குத் தான்,வேறெங்க போறது?(((ரொம்ப "கஷ்டப்பட்டு" பதிஞ்சிருக்கீங்க!வாழ்த்துக்கள்,எல்லாவற்றுக்கும்!!!!!))

சுசி said...

அட.. இதுவும் நல்லாருக்கு புவனா..

Porkodi said...

Vasagan, poi sonna thaane porundha sollanum? idhu thaan poi illiye, adhan porundhalai! :P nijama thaan sir, parents' anniversary in '84, naan '85 (indha padam '82 thaane?) vitta birth certificate keppinga polarke..

cha cha cha.. anniversary postla kooda ipdi panchayat velai vekringle appavikka?

viji said...

To the special person.....
You are lucky.

For the special day.....
Many happy returns of the day.
viji

வெங்கட் நாகராஜ் said...

நல்ல முயற்சி. வாழ்த்துகள்.

Vasagan said...

Kedi Akka

Nee 85 na naan 87 December MGR irantha Matham & varudam
note
\\unnakkae ennai kadillum muenu vayasu athikkam.\\ ( Hii hii 87 decemeberla PG mudicha vudana vaelaikku join pannunathu appothane manusanaanae athaan mean pannunaaen. )

\\anniversary postla kooda ipdi panchayat velai vekringle appavikka?\\

Kedi akkaum panchayathum udanpiranthavai. Athai pathi ippo pesava vendam ippothu nadaapathai patri mattum paesu.

Athukkaka eathuellam nadapavainu ketkakoodathu?

Yeappaum un anbu thambi

r.v.saravanan said...

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் தோழி

...αηαη∂.... said...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ...

அப்புறம் இது செம பாட்டு..,

தக்குடு said...

எவ்வளவு அடிச்சாலும் கண்கலங்காம இருக்கும் அந்த நல்ல இதயத்திற்கு தக்குடுவின் மனம் நிறைந்த வாழ்த்துக்களை சொல்லவும்...:P

ஹுஸைனம்மா said...

//This is for someone special for a very special day coming up...:)//

இதை அங்க மட்டும் சொல்லாம, இங்கயும் சொல்லணுமா?

//கீதா சொன்னது…
நீங்கள் பாட்டெடுத்துக் கொடுத்தால் அவர் பட்டெடுத்துக் கொடுப்பாரோ?//
இதுக்காகவா? ;-))))))

இனிய மணநாள் வாழ்த்துகள்!!

//தக்குடு சொன்னது…
எவ்வளவு அடிச்சாலும் கண்கலங்காம இருக்கும் அந்த நல்ல இதயத்திற்கு//

அந்த நல்ல இதயத்திற்கு, நல்லவேளை பாட்டோடு நிறுத்திக்கிட்டாரே அம்மணி. இட்லியச் செஞ்சிருந்தா என்ன ஆகியிருக்கும்??

ANaND said...

எனக்கு என்னான்னு தெரியல ... இருந்தாலும்

Is it your anniversary? HAPPY ANNIVERSARY

is it your birthday ? HAPPY BIRTH DAY

is it your journey ? HAPPY JOURNEY

அனாமிகா துவாரகன் said...

Belated anniversary wishes to you and Govind maamz. Check your email.

ANaND said...

நீங்க எல்லா கமேன்ட்க்கும் பதில் சொல்லுரிங்களே .. it's NICE

அனாமிகா துவாரகன் said...

ஹாய் ஹாய் ஹாய்,
கோவிந்த் மாமாவின் கையில் விலங்கு பூட்டிய இந்நாளில் அவருக்காக ஒரு நிமிடம் பிரார்த்தித்துவிட்டு உங்களுக்கு வாழ்த்து சொல்லவேண்டும் என்றே நினைத்தேன். பட், உங்களுக்கு வாழ்த்து சொன்னால் கோவிந்த் மாமாவின் கைவிலங்கிட்டதை கொண்டாடுவது போலாகிவிடும். சோ வாழ்த்தை வாபஸ் வாங்கவா இல்லை மனதைக் கல்லாக்கிக் கொண்டு வாழ்த்திவிட்டு போகவா? யாராவது உதவுங்களேன் ப்ளீஸ்.

(மெயிலில் போடாமல் இங்கே போட்டால் நல்லா இருக்கும்னு தோனிச்சு. ஹிஹி).

நேத்து உங்க பக்கம் திறக்கவே முடியலக்கா. சோ, பிந்திய வாழ்த்துக்கு சாரி.

ஆமா இந்த படம் வந்தப்போ நீங்க காலேஜில இல்ல படிச்சுட்டு இருந்தீங்க்ன்னு அன்னைக்கு சொன்னீங்க. இப்ப என்ன புது கதை? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்/

Vasagan said...

\தக்குடு சொன்னது…

எவ்வளவு அடிச்சாலும் கண்கலங்காம இருக்கும் அந்த நல்ல இதயத்திற்கு தக்குடுவின் மனம் நிறைந்த வாழ்த்துக்களை சொல்லவும்...:P \

ROFTL....

Vasagan said...

\உலகம் சுற்றியும் நிற்கையில் உறவுகள் சூழ்கையில்
உறவும் உணர்வும் மறந்து உன்னை தேடும்\

\முன்னொரு பிறவியில் இருந்தோமோ இன்றுபோல் \

Your anni appreciate you for these lines.

திவா said...

//நான் சரியா பேசவே ஆரம்பிக்காத காலத்துல வந்த படம்னாலும், ஓல்ட் இஸ் கோல்ட் யு நோ...:)//
அவ்வளோ நாள் பேச்சு வரலையா ஏடிஎம்? :-))))
இனிய திருமணநாள் வாழ்த்துகள்!

அப்பாதுரை said...

நல்லா வந்திருக்கு. 'உறவும் உணர்வும் மறந்து உன்னைத் தேடும்' - ரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

மழலை முதலே அறிந்தாலும் மனதை புரிந்தோம் இந்நாளில்
உறவுகள் சூழ்ந்திட இணைந்திட்டோம் வாழ்வினில் //
இனிய திருமணநாள் வாழ்த்துகள்!

A and A said...

happy Anniversary!

Faizal said...

yen eniya kalyananal valthukkal appavi

அப்பாவி தங்கமணி said...

@ r.v.saravanan - :)


@ எல் கே - இல்ல அப்பாவி ரகசியம்...:)


@ Matangi Mawley - தேங்க்ஸ் மாதங்கி..:)


@ எல் கே - அதே அதே...:)


@ r.v.saravanan - கண்டிப்பா சொல்லுங்க... நன்றிங்க...


@ Mahi - தேங்க்ஸ் மகி...உங்களுக்கும் பிடிக்குமா...கோவை பேவரெட் போல..:)


@ வை.கோபாலகிருஷ்ணன் - ரெம்ப நன்றிங்க


@ Mahi - அடபாவிங்களா....அவ்வ்வ்வவ்வ்வ்....:))


@ A.R.RAJAGOPALAN - சரியா சொன்னீங்க... நன்றிங்க


@ சிநேகிதி - நன்றிங்க சிநேகிதி...


@ Vasagan - ரெம்ப நன்றிங்க அண்ணா...இந்த வருஷம் உள்ளூர் பெருமாளை பாத்துட்டு வந்தோம்...:)

அப்பாவி தங்கமணி said...

@ ஹேமா - மிக்க நன்றிங்க ஹேமா

@ கீதா - பாட்டுக்கு பட்டா? ஹா ஹா... நல்ல ஐடியா குடுத்து இருக்கீங்க... இனிமே கேட்டுடுவோம்...நன்றிங்க...:)

@ சி.பி.செந்தில்குமார் - ஹா ஹா..:)

@ siva - நன்றிங்க சிவா

@ vanathy - தேங்க்ஸ்'ங்க... எனக்கு தெரியும்... இந்த படம் ரிலீஸ் ஆகி அடுத்த நாள் நீங்க பொறந்தீங்க கரெக்ட்டா?..:))

@ Chitra - தேங்க்ஸ்'ங்க சித்ரா...

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க'ம்மா

@ தமிழ் உதயம் - ஆஹா... அதிகபட்ச பாராட்டு இதான்.. நன்றிங்க..:))

@ kggouthaman - நன்றிங்க

@ காற்றில் எந்தன் கீதம் - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Avargal Unmaigal - ஹா ஹா... சூப்பர் கோட்... நன்றிங்க...:)


@ தங்கம்பழனி - நன்றிங்க


@ பெயரில்லா - Thanks a lot for your wishes and hopes on me... many thanks again for anniversary wishes too..:)


@ கோவை2தில்லி - நன்றிங்க ஆதி... ஆமாம்ப்பா... அப்போ உங்களுக்கும் வைகாசி பொறந்தாச்சு தானா...:))


@ S.Menaga - தேங்க்ஸ்èங்க மேனகா..


@ தி. ரா. ச.(T.R.C.) - ஆஹா... உங்களுக்கு வரலாறே தெரியலயே... ஹா ஹா...நன்றிங்க வாழ்த்துக்கு... :))


@ ஷர்புதீன் - நன்றிங்க


@ ஸ்ரீராம். - நன்றிங்க


@ Porkodi - அவ்வ்வ்வ்... சொந்த செலவுல சூனியம் வெச்சுகிட்டனே....சரி விடு... மூணு கழுத வயசாச்சுன்னு ஒத்துக்கறேன்... வயசை ஒத்துக்கறது தான் அறிவாளிதனத்தின் முதல் படினு தத்துவ மேதை சாக்பீஸ் சொல்லி இருக்கார்... இவர் யாருன்னு கேட்டீங்கன்னா, சாக்ரடீஸ் இருக்கார் இல்லையா.. அவரோட ஆத்துகாரிக்கு நாலு விட்ட நாத்தனாரோட நாலாவது அண்ணனாம்... :)))).... தேங்க்ஸ் வாழ்த்துகளுக்கு...:))


@ பத்மநாபன் - ரெம்ப நன்றிங்க அண்ணா..:)

அப்பாவி தங்கமணி said...

@ middleclassmadhavi - ரெம்ப நன்றிங்க மாதவி

@ Sri Seethalakshmi - ரெம்ப நன்றிங்க சீதா..எனக்கும் அந்த வரிகள் பிடித்தது...:)

@ Yoga.s.FR - நன்றிங்க

@ சுசி - நன்றிங்க சுசி...:)

@ Porkodi - cha cha cha.. anniversary postla kooda ipdi panchayat velai vekringle appavikka? - ஹா ஹா ஹா.. ஏதோ என்னால ஆனது... பஞ்சாயத்து சரி... ஆனா நாட்டாமை காணோமே...தீர்ப்பு யாரு சொல்றது... :))))

@ viji - ரெம்ப நன்றிங்க for your special wishes too..:)

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க வெங்கட்

@ r.v.saravanan - நன்றிங்க சரவணன்

@ ...αηαη∂.... - ரெம்ப நன்றிங்க

@ தக்குடு - அடப்பாவி... எனக்கு ஒரு காலம் வரும்... அன்னைக்கி இதே டயலாக் நானும் சொல்றேன் இரு..:))

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - ஹா ஹா... நன்றிங்க..:)

@ ANaND - ஆஹா... எல்லாத்துக்கும் சேத்து வாழ்த்தா... நன்றிங்க..:)

@ அனாமிகா துவாரகன் - நன்றிங்க அம்மணி...:)

@ ANaND - நன்றிங்க

@ அனாமிகா துவாரகன் - அடப்பாவிங்களா....அவ்வவ்வ்வ்வ்.... என்னது காலேஜ்ல படிச்சுட்டு இருந்தனா... ஏன் அறுபதாம் கல்யாணம் நடந்தது போச்சுனு சொல்லேன்... :))

@ Vasagan - தேங்க்ஸ் டு அண்ணி...:))...அண்ணா டௌன் டௌன் for supporting தக்குடு...:))

@ திவா - ஆஹா.. உலகமே நமக்கு எதிராத்தான் இருக்கு... ஹஹா... நன்றிங்க...:)

@ அப்பாதுரை - ரெம்ப நன்றிங்க

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க

@ A and A - தேங்க்ஸ் அ லாட்...

@ Faizal - ரெம்ப நன்றிங்க

Post a Comment