Thursday, June 30, 2011

பல்பு மேல பல்பு வந்து என்னை சேர...அவ்வ்வவ்வ்வ்வ்.....பல்பு மேல பல்பு வந்து என்னை சேர... அதை வாங்கி தந்த பெருமை எல்லாம்... வேற யாரு? ரங்க்ஸ்'ஐ சேர...... அவ்வ்வ்வவ்வ்வ்வ்....

மைண்ட்வாய்ஸ் : அப்பாவி பல்பு வாங்கியதை கேட்கையிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே... ஹா ஹா ஹா...:)

அப்பாவி : ஏய் மனசாட்சி இல்லாத மைண்ட்வாய்ஸ்'ஏ? ஒருத்தி பீல் பண்றப்ப என்ன பேச்சு இது?

மைண்ட்வாய்ஸ் : பல்பு கிடைக்கையில் போஸ்ட் போட்டு இன்பம் சேர்க்க மாட்டாயா? ஹி ஹி ஹி...

அப்பாவி : எங்க அந்த கத்தி....??? என அப்பாவி தேட மைண்ட்வாய்ஸ் மாயமாய் மறைகிறது

பாருங்க பிரெண்ட்ஸ், நானே பல்பு வாங்கின சோகத்துல, புண் பட்ட நெஞ்சை போஸ்ட் போட்டு ஆத்துவோம்னு வந்தா... இந்த மைண்ட்வாய்ஸ்....  ஹ்ம்ம்... சரி விடுங்க...  நீங்க எல்லாம் எனக்கு ஆறுதலா (!!) இருப்பீங்கன்னு நம்பிக்கைல என் மன பாரத்தை எறக்கி வெக்கறேன்

நிகழும் மங்களகரமான கர வருடம் ஆணி மாதம் 3ம் நாள் (18-06-2011) சனிக்கிழமை திரிதியை திதியும் உத்திராட நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 10௦.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் விருட்சிக லக்னத்தில், 1000 Volts பல்பு குடுத்த பல்பு-வள்ளல் ரங்க்ஸ்'க்கு மிக்க கண்டனங்கள்...:(((((((((((

பின்ன என்னங்க? ஒரு பல்பு ரெண்டு பல்புனு குடுத்தா பொறுத்துக்கலாம்... இப்படி பேச்சுக்கு பேச்சு பல்பு குடுத்தா.... என்னமோ போங்க

மைண்ட்வாய்ஸ் : இன்னும் மேட்டர்'க்கு வந்து இருக்காளா பாருங்க? அது எப்படியும் ஒரு மாசம் ஆகும்...:))

அப்பாவி : நடந்தது என்னனா.....

மைண்ட்வாய்ஸ் : இனி கோபிநாத் வருவாரோ, நிகழ்ச்சி நடத்த....ஹையோ ஹையோ

அப்பாவி : பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டதாம் கருடா சௌக்கியமானு? எல்லாம் நேரம்... உன்னை கவனிசுக்கறேன் இரு...

சரிங்க... நாம விசயத்துக்கு போவோம்... அன்னைக்கி ஒரு பிரெண்ட் லஞ்ச்'க்கு வர்றதா சொல்லி இருந்தாங்க... புலாவ் செஞ்சு எடுத்து வெச்சுட்டு, தயிர் பச்சிடி போடலாம்னு ஆனியன் கட் பண்ணிட்டு இருதேன்...(பின்னால் வரப்போகும் விபரீத்ததை அறியாமல்...)

நம்ம நாட்டுல ஒரு ஆட்சியவே கவுத்த ஆனியன்.... என்னையும் இப்படி கவுக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கலை... ஹ்ம்ம்

அந்த ஆனியன்ல தொடங்கி தான் அந்நியன் என்ட்ரி வரும்னு நான் எதிர்ப்பாக்கலை... லாப்டாப்ல செஸ் ஆடிட்டு இருந்தவர் அப்படியே இருந்துருக்கலாம்... விதி வேற மாதிரி இருக்கறப்ப விடுமா என்ன?

தேதி கேலண்டர்ல அன்னைக்கி என்னோட ராசிக்கு "உழைப்பு"னு போட்டு இருந்தது... அட நிஜமாத்தாங்க... I'm not making it up... நம்பிக்கை இல்லைனா இந்த லிங்க்'ல போய் பாருங்க

சனிக்கிழமை எப்படியும் defaultஆ சமையல், கிளீனிங், வாஷிங்னு உழைப்பு தானே... இதென்ன (a+b)2 பார்முலாவா? இல்ல 4cup அரிசி + 1cup உளுந்து + 2spoon வெந்தயம் = அப்பாவியின் ரத்த கண்ணீர் + குப்பையில் தூக்கி கடாசு பார்முலாவா? னு நான் அசால்ட்'ஆ விட்டுட்டேன்

அவரோட ராசிக்கு "நற்செய்தி"னு போட்டு இருந்தது... நான் ஒண்ணும் ஊருக்கு கூட போகலியே... அப்புறம் இவருக்கு என்ன நற்செய்தினு அப்ப சிரிச்சேன்... ஆனா விதி என்னை பார்த்து இரண்டு கை கொட்டி Tap டான்ஸ் ஆடின விஷயம் தெரியாம போச்சே மை லார்ட்....ஆ...ஆ...ஆ.....

ஆனா இப்ப யோசிச்சு பாக்கறப்ப நான் அந்த ராசி பலனை கொஞ்சம் கூர்ந்து கவனிச்சு இருக்கணும்னு தோணுது... போதாததுக்கு கேலண்டர்ல "குச்சனூர் சனிபகவான் சிறப்பு ஆராதனை"னு வேற போட்டு இருந்தது... சரி, பகவானுக்கு அங்க தானே ஆராதனை, இங்க ஒண்ணும் பாதிப்பு இருக்காதுனு மெத்தனமா இருந்துட்டேன்...

எங்க உட்டேன்...ஆங்... செஸ் ஆடிட்டு இருந்தவர்கிட்ட... "ஏம்ப்பா... அந்த புக்ஸ் எல்லாம் டேபிள் மேல கச கசனு இருந்ததே, எடுத்து வெச்சுட்டீங்களா?" னு தாங்க கேட்டேன்

அங்க இருந்தே பதில் சொல்லி இருக்கலாம்... ஆனா, கிடைச்சதே சாக்குனு கிட்சன்'குள்ள வந்தார் "அதெல்லாம் எடுத்து வெச்சாச்சு... இன்னும் சமையல் முடிக்கலையா நீ?" னார்

"எல்லாம் ஆச்சு... இதோ ஆனியன் கட் பண்றேன்... தயிர் பச்சிடி போட்டா ஆச்சு"னேன்

"இதை இனி தாளிக்கணுமா?" னு கேட்டார்

"அட ராமசந்திரா... உங்க சமையல் ஞானத்துக்கு ஒரு அளவே இல்லையா? பச்சிடி யாராச்சும் தாளிப்பாங்களா?"னு செம டென்ஷன் ஆய்ட்டேன்

"ஏன்... தாளிச்சா என்ன? சரி விடு... தெரியாம கேட்டுட்டேன்" னார்

"புடலங்காயை கட் பண்ணிட்டு கழுவினா என்னனு கேட்டவர் தானே நீங்க... ஆனாலும் பச்சிடி'ங்கற பேர்லயே பச்சையா சாப்பிடறதுன்னு சிம்பாலிக்கா சொல்ற மாதிரி இருக்கே... இது கூட தெரியாதா?" னு ரெம்ப அறிவுப்பூர்வமா பேசறேனேனு எனக்கு நானே "சபாஷ் அப்பாவி"னு தட்டி குடுத்துக்கிட்டேன்

பின்னாடி எப்பவாச்சும் பல்பு குடுக்கரப்ப இதை யூஸ் பண்ணிக்கணும்னு வேற மனப்பால் எல்லாம் குடித்தேன்... அது மனப்பால்  அல்ல  இன்னிக்கி செத்தா நாளைக்கு பால்னு  அப்ப தெரியல... எல்லாம் ஒரே நொடியில் மண்ணோடு மண்ணானது

அதுக்கு ரங்க்ஸ் சொன்ன பதில் "அரிசி பருப்பு சாப்பாடுங்கர பேர்ல கூடத்தான் அரிசி பருப்பு ரெண்டும் இருக்கு...ஆனா, யாரோ பருப்பு போடாம அதை செஞ்சாங்க... உனக்கு தெரியுமா அது யாருனு?"னு நக்கலா ஒரு லுக் விட்டுட்டு, ஆயிரம் வால்ட்ஸ் பல்பு'ஐ தலையில் கொட்டினார்

அதுக்கு மேல நான் பேசுவேன்னா நினைக்கறீங்க?... அமைதியா இருக்கறது தான் மரியாதைனு பேசாம இருந்துட்டேன்... அவ்வ்வ்வவ்....

இந்த ரங்க்ஸ்'களுக்கு இந்த விசியத்துல எல்லாம் selective amnesia வந்தா நல்லா இருக்குமேனு தோணுச்சு... என்னமோ போங்க

ஆனா ஒரு விஷயம் மட்டும் புரியலைங்க... "கத்திரிக்கா அரை கிலோ, தக்காளி ஒரு கிலோ, பச்ச மொளகா நூறு கிராம் வாங்கிட்டு வாங்க...மாத்தி மாத்தி வாங்கிடாதீங்க...பேசாம லிஸ்ட் எழுதிக்கோங்களேன்"னு நூறு தடவை சொல்லி அனுப்பினாலும்

"சும்மா சும்மா சொல்லாத... எல்லாம் எனக்கு தெரியும்" னு வீராப்பு பேசிட்டு போயிட்டு "பச்ச மொளகா ஒரு கிலோவும், தக்காளி கால் கிலோவும், கத்திரிக்கா நூறு கிராமும்" வாங்கிட்டு வருவாங்க. ஆனா நான் கல்யாணம் ஆனா புதுசுல தப்பா சமைச்ச ஒரு மேட்டர் மட்டும் எவர் கிரீன் மெமரில இருக்கே, அது எப்படி?

ஹ்ம்ம்... இவங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலியே....:))))

:)))

Tuesday, June 28, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 24)


இந்த கதையின் முன் பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

தன் செயலுக்கு நியாயம் கற்பிக்க நினைத்தவர் போல் "Did you hear that Celia? She doesn't even know your son was engaged once... and you say they're made for each other...hmm..." என்றார் மைக்கேல் தன் மனைவியிடம்

சிலியாவின் கவனம் மொத்தமும் மீராவின் மீது நிலைத்து இருந்தது. உணர்ச்சியை முகத்தில் காட்டாமல் மறைக்க முயன்று தவித்து கொண்டிருந்த மீராவின் முகமும், அதை கண்டு ஸ்டீவ் வருந்தியதும் மட்டுமே அவள் பார்வையில் பதிந்தது

அதுவரை தன்னை கட்டுப்படுத்தி கொண்ட மீரா, மைக்கேல் சொன்னதை கேட்டதும், முயன்று தன்னை ஸ்டீவிடமிருந்து விடுவித்து கொண்டாள். அவன் தடுக்க முயன்றதை பொருட்படுத்தாமல், விரைந்து கதவை திறந்து வெளியேறினாள்

"மீரா..." என அழைத்து கொண்டே அவள் பின்னோடு சென்றான் ஸ்டீவ்

லிப்ட் அருகில் வந்து நின்றவளை "மீரா ப்ளீஸ்... Just let me explain.. please honey.." என ஸ்டீவ் கூறியது தன் காதிலேயே விழாதவள் போல் வேறு புறம் பார்வையை திருப்பினாள்

ஸ்டீவ் ஏதோ சொல்ல தொடங்கவும், மீரா லிப்ட்'க்கு நிற்க பொறுமையற்று படிகளில் இறங்க தொடங்கினாள். ஸ்டீவ் அவளை பிடித்து நிறுத்த முயல "Stay off me Steve... எனக்கு உன்ன பாக்கவே பிடிக்கல... லீவ் மீ அலோன்" என அவன் கையை உதறிவிட்டு படி இறங்கினாள்

அவளை நகர விடாமல் மறித்து நின்றான் ஸ்டீவ். "மீரா... நான் வேணும்னு மறைக்கல... நீ என்ன தப்பா நினைச்சுடுவியோனு... மீரா... எனக்கு நீ வேணும்... ப்ளீஸ்... இந்த ஒரு சின்ன விசியத்துக்காக என்னை விட்டு போகாத ப்ளீஸ்" என்றான்

அவன் சின்ன விஷயம் என்றதும் கோபம் கட்டுக்கடங்காமல் போக "என்ன சொன்ன? சின்ன விசயமா? ஓ... நாளைக்கு என்னை விட்டுட்டு போனப்புறம் வேற ஒருத்திகிட்ட இதையும் சின்ன விஷயம்னு தான் சொல்லுவ இல்லயா?" என சீறினாள்

அழுது விடாமல் இருக்க தன்னை இறுக்கி கொண்டு, வேதனை மொத்தமும் கண்களில் தாங்க நின்றவளை காண சகியாதவனாய் "ஐயோ... இல்ல மீரா... உன்னை விட்டு போறதா? என்னால அதை கற்பனை கூட பண்ண முடியல... மீரா, இங்க பாரு..." என அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன்

"ப்ளீஸ் மீரா... ஜஸ்ட் பிலீவ் மீ... நான் எந்த தப்பும் செய்யல... நானே மறந்து போன ஒரு பழைய கதை அது... அதை சொல்லி நீ என்மேல வெச்சுருக்கற அன்பு குறைஞ்சுடுமோனு பயந்து தான் உன்கிட்ட மறைச்சேன்..." என தன்னை நியாயப்படுத்த முயன்றான்

அது வரையும் கூட இது பொய்யாய் இருக்குமோ, எல்லாம் ஒரு தவறான புரிதல் என அவன் சொல்லுவான் என அவள் மனதில் ஒட்டி இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் உதிர, கண்ணில் துளிர்த்த நீரை கண் மூடி உள்ளிழுத்தாள்

அவள் நிலையை கண்டு குற்ற உணர்வில் "மீரா... மீரா ப்ளீஸ்..." என அவளை அணைக்க முயல, சட்டென அவனை உதறியவள் "I hate you" என்றாள்

அதை சற்றும் ஏற்று கொள்ள இயலாதவனாய் "மீரா...அப்படி சொல்லாத ப்ளீஸ்.." என்றான் உடனே

அவன் முகத்தில் படிந்த வேதனை அவளை அசைக்கவில்லை, வேண்டுமென்றே மீண்டும் "I hate you... I hate you... I hate you" என்றாள்

"ஜஸ்ட் ஸ்டாப் இட் மீரா..." என தன்னையும் அறியாமல் கோபமாய் கத்தியவன், மீராவின் முகம் போன போக்கில் தன்னை அமைதிப்படுத்தி கொண்டு "சாரி பேபி... நான்... என்னால நீ அப்படி சொன்னத தாங்க முடியல மீரா.... இங்க பாரு... என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா" என அவளை நகரவிடாமல் பற்றி கொண்டு கேட்டான்

ஒரு கணம் எதுவும் பேசாமல் அவனை பார்த்தாள் மீரா. அவனை பார்க்க பார்க்க தான் ஏமாற்றப்பட்ட உணர்வு தலை தூக்க, இனி என்ன ஆனாலும் இவன் தன் வாழ்வில் இல்லை என தீர்மானத்திற்கு வந்தாள்

அவள் முகத்தில் இருந்து எதையும் கண்டுகொள்ள இயலாமல் பார்த்தவன் "மீரா..." என்றழைக்க

"இனி எப்பவும் என்னால உன்னை நம்ப முடியாது ஸ்டீவ்... முன்னாடி ஒரு முறை நமக்குள்ள சண்டை வந்தப்ப வாழ்க்கைல என்னை சந்திக்காமையே இருந்துருக்கலாம்னு நீ சொன்ன... இப்ப எனக்கும் அதான் தோணுது" என்றாள், உணர்ச்சி துடைத்த குரலில், இனி உனக்காக நான் அழப்போவதில்லை என தீர்மானித்தவள் போல்

"மீரா... you very well know I didn't mean it that day... அந்த நிமிச கோபத்துல பேசினத இப்ப நீ சொல்றது சரி இல்ல மீரா" என்றான் அவனும் அதே உணர்ச்சி துடைத்த குரலில்

"ஆமா... நான் சொல்றது செய்யறது எதுவும் சரி இல்லைதான்... சரியான ஒருத்திய தேடி கண்டுபிடி... அவளையாச்சும் கடைசி வரை அழ வெக்காம இருக்க முயற்சி பண்ணு...குட்பை" என மீரா நகர்ந்தாள்

அவளை பிடித்து நிறுத்தியவன் "மீரா... நான் வேற யாரையும் தேட வேண்டிய அவசியமில்ல... எனக்கு வேற யாரும் தேவையும் இல்ல... நீ தான் வேணும்... உன் இடத்துல வேற யாரையும் என்னால நினைச்சு பாக்க முடியாது மீரா" என்றான்

"ஹம்... ஏன் இதுக்கு முன்னாடி இதே இடத்தில வேற ஒருத்திய நினைச்ச தானே? கல்யாணம் வரைக்கும் யோசிச்சு இருக்கியே..." என்றாள் வேண்டுமென்றே அவனை வருத்தப்படுத்தும் நோக்கத்துடன்

சற்று முன் கொஞ்சமேனும் நெகிழ்ந்தவள், இப்போது மனதை கல்லாக்கி கொண்டு பேசியதை ஸ்டீவால் உணர முடிந்தது. அவள் அழுகையை கட்டுப்படுத்தி நின்ற தோற்றத்திற்கு இது மேல் என அவனால் நினைக்காமல் இருக்கமுடியவில்லை

அவளை அப்படி பார்க்கவும் அவனால் இயலவில்லை. அவன் எதுவும் பேசாமல் நிற்கவும் "ஏன் பதில் சொல்ல முடியலையா? எப்படி முடியும்... தப்பு செஞ்ச மனசு உறுத்துது இல்லையா?" என்றாள் மீரா ஏளனமாய்

மீரா தன் காதலை ஏற்று மனம் ஒன்றி இருந்த இந்த ஒரு மாத காலத்தில், தான் சற்று முகம் மாறினாலும் பதறி விசாரித்து தன்னை சரி செய்பவள் இன்று வேண்டுமென்றே வருத்தும் எண்ணத்துடன் பேசியது அவனை வதைத்தது

தன்னை அவள் அந்த அளவிற்கு வெறுத்து விட்டாளா என்ற எண்ணம் தோன்றியதும் விரக்தியுடன் "ஹ்ம்... நான் என்ன சொன்னாலும் நீ நம்ப போறதில்ல மீரா. இப்ப நான் பேசினா இன்னும் பிரச்சனை பெருசு தான் ஆகும்... நாம நாளைக்கி மீட் பண்ணலாம்" என விலகினான், இனி சொல்ல எதுவுமில்லை என்பது போல்

"மீட் பண்றதா? நெவெர்... இனி எனக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல..." என்றவளை, "இதற்கு மேல் பேசாதே" என்பது போல் கோபத்துடன் பற்றி உலுக்கியவன்

"ஸ்டாப் இட் மீரா... வேணும்னே பிரச்சனைய பெருசு பண்ற நீ... நான் செஞ்சது தப்பு தான்... ஆனா, இப்படி ஒரு பிரச்சனைக்காக காத்துட்டு இருந்த மாதிரி நீ பெரிய issue ஆக்கற... என்னை விட்டு விலகரதுக்கு நீ காரணம் தேடற மாதிரி இருக்கு" என கோபத்தில் வார்த்தைகளை கொட்டினான

அவன் செய்கை தன்னை உயிருடன் புதைத்து கொண்டிருக்கும் வேளையில், தன் மீதே குற்றம் சாட்டியதை தாங்க இயலாத மீராவிற்கு கோபம் கட்டுக்கடங்காமல் போனது "ஓ... அப்படியா? சரி அப்படியே இருக்கட்டும்.. ஆமா நான் வேணும்னு தான் விலகரதுக்கு காரணம் தேடறேன். போதுமா?" என்றவள், அவன் பதிலுக்கு காத்திராமல் நகர்ந்தாள்

கோபத்துடன் அவள் விலகியதை ஏற்று கொள்ளாதவனாய், விரைந்து அவள் அருகில் சென்றவன் "மீரா... ப்ளீஸ்... கொஞ்சம் பொறுமையா இரு... வீணான கோபத்துனால நாம பிரியரத என்னால ஏத்துக்க முடியாது... எல்லா செயலுக்கும் ஒரு விளக்கம் இருக்கும்னு உன்னால யோசிக்க முடியாதா?" என்றான் அவள் கண்களை நேரே பார்த்து

"இருக்கும்... இன்னொருத்திய விரும்பினதுக்கும், அதை என்கிட்ட மறைச்சதுக்கும் எல்லாத்துக்கும் உன்கிட்ட ரெம்பவும் நியாயமான காரணம் இருக்கும் ஸ்டீவ்... ஆனா அதை எல்லாம் கேட்டு நம்பறதுக்கு நான் தயாரா இல்ல... நீ என்ன சொன்னாலும் நம்பற அந்த பழைய மீரா செத்துட்டா..." என்றாள், அழுகையை விழுங்கியபடி

"ஏன் இப்படி பேசற? அப்படி நம்பிக்கைக்கு உரியவனா இல்லாம போற அளவுக்கு நான் பெரிய தப்பு செய்யல... Just give me another chance Meera" என்றான்

"ஹம்... சதீஷ் அப்பவே சொன்னான்... நான் தான் நம்பல... ஸ்டீவ் உன்னை hurt பண்ணுவான், அவன நம்பாதேனு சொன்னான்... அப்பவே அதை கேட்டு இருந்தா இப்படி ஏமாந்து நிக்கற நிலைமை எனக்கு வந்திருக்காது" என மீரா அமிலமாய் வார்த்தைகளை பிரயோகித்தாள்

அதை கேட்டதும் ஸ்டீவின் கோபம் எல்லை மீறியது. தான் உயிராய் நேசிப்பவள், வேறு ஒருவன் தன்னை பற்றி இழிவாய் பேசியதை சரி என்றதை தாங்க முடியாதவனாய்

"ஏய்... என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல... நீ என்ன பேசினாலும் மறந்துட்டு உன் பின்னாடி வருவேன்னு தானே இப்படி பேசற? யார் யாரோ சொல்றதை நம்பற நீ என் மனசுல இருக்கற காதல நம்ப மாட்ட இல்லையா? எங்க அப்பா சொன்னது ரெம்ப சரினு தோணுது you don't deserve me.. you just don't deserve me" அளவுக்கு மீறிய கோபத்தில் என்ன பேசுகிறோம் என உணராமலே வார்த்தைகள் தெறித்தன

அந்த சொல் மீராவை வெகுவாய் அசைத்தது, அதுவரையும் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி இருந்தவள், அதற்கு மேல் தாங்க முடியாமல் கண்ணில் நீர் பெருக, பேசவும் கூட சக்தி அற்றவளாய் அவனை வெறித்தாள்

கண்ணில் நீர் பெருக, மொத்த வேதனையும் அதில் தேக்கி அவள் நின்ற தோற்றம் ஸ்டீவை சுய நினைவுக்கு கொண்டு வந்தது

இப்படி அவள் வேதனையுறும்படி என்ன பேசினோம் என யோசித்தவன், என்றும் சொல்ல கூடாத வார்த்தைகளை சொல்லியதை உணர்ந்து "மீரா..." என அருகில் செல்ல, "போதும்..." என விலகி நின்றாள்

"மீரா ப்ளீஸ்..." என அவன் சமாதானம் செய்ய முயல

"இனி வாழ்க்கைல எப்பவும் நான் உன்னை பாக்க விரும்பல" என்றவள், அந்த வார்த்தையில் அவன் உறைந்து நிற்க, கிடைத்த அவகாசத்தில் விரைந்து படிகளில் இறங்கி வெளியேறினாள்

அவளை தடுக்கும் வழி தெரியாமல், அவள் போன திசையை வெறுமையாய் பார்த்து கொண்டு நின்றான் ஸ்டீவ்

********************************************************

விமானம் தரை இறங்கியதும் பரபரப்பும் ஆர்வமுமாய் மக்கள் தங்கள் உடைமைகளை எடுத்து கொண்டிருக்க, அதை கண்ட மீராவுக்கு என்னமோ போல் ஆனது

தானும் இதே போல் பரபரப்பும் ஆர்வமுமாய் இருக்கவேண்டியவள் தானே, ஆனால் வெறுமையும் வேதனையும் மட்டும் மனதில் ஆக்கிரமித்து கொண்டிருக்கிறதே என வருந்தினாள்

ஒருவாறு சற்று பரபரப்பு குறைய, தன் கை பையை எடுத்து கொண்டு நடந்தாள். கதவருகில் நின்றிருந்த விமான பணிப்பெண் சிநேகமாய் புன்னகைக்க, முயன்று முறுவலித்தாள்

விமானத்தில் இருந்து வெளியேறி படிகளில் இறங்கவும், அவளையும் அறியாமல் கண்ணில் நீர் துளிர்த்தது. இது மகிழ்ச்சியில் வந்த கண்ணீரா அல்லது... என அதற்கு மேல் யோசிக்க விரும்பாதவள் போல் செக்யூரிட்டி கேட் அருகே சென்று நின்றாள்

எல்லாம் முடிந்து பெட்டிகளை எடுத்து கொண்டு வெளியே வரவும், அவள் சரியாய் வெளியே வரும் வரை கூட காத்திருக்க விரும்பாதவர் போல் மீராவின் அம்மா ஓடி வந்து கட்டிக்கொண்டார்

"என் தங்கத்த பாத்து எத்தன நாளாச்சு..." என கண்ணில் நீர் மல்க மகளின் நெற்றியில் முத்தமிட்டு அணைத்து கொண்டார். வழக்கமாய் அன்னை அப்படி செல்லம் கொஞ்சினால் கேலி பேசும் மீரா, இன்று தனக்கும் அதுவே வேண்டுமென்பது போல் அன்னை தோளில் முகம் தாங்கி நின்றாள்

"இது போதும்... பெற்றவளின் அணைப்பில் என்னால் எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வர முடியும்" என மனதிற்குள் நினைத்தாள் மீரா, எல்லாம் ஒரு கணம் தான். மீண்டும் பழைய நினைவுகள் தலை தூக்கின

"அம்மாவும் பொண்ணும் இன்னும் எத்தனை நேரம் இப்படி கொஞ்சிட்டே நிக்கறதா உத்தேசம்" என்ற தந்தையின் கேலியான குரலில் கலைந்தாள் மீரா

"அப்பா..." என தந்தையின் அருகில் சென்றவள், தந்தையின் மார்பில் முகம் புதைத்து விசும்பினாள்

எதையும் விளையாட்டாய் எடுத்து கொண்டு, சுற்றி உள்ளவரையும் எப்போதும் சிரிக்க செய்யும் தங்கள் செல்ல மகள் அழ கண்டதும் "என்னடா கண்ணா? என்னாச்சு?" என பதறினார் அவள் தந்தை

மீராவுக்கு பெற்றோருடன் கொஞ்சம் தனிமை தர எண்ணி காயத்ரியுடன் சற்று ஒதுங்கி நின்றிருந்த சதீஷ் விரைந்து வந்தான்

"என்ன அங்கிள், ரெம்ப நாள் கழிச்சு உங்கள பாத்ததும் உங்க பொண்ணுக்கு ஆனந்த கண்ணீர் நிக்கல போல இருக்கே இன்னும்" என கேலி செய்வது போல் சூழ்நிலையை இலகுவாக்க முயன்றான்

அதை புரிந்து கொண்ட மீரா, தன்னை சமாளித்து கொண்டு, அவனருகில் நின்றிருந்த காயத்ரியிடம் "எப்படி இருக்கே காயத்ரி?" என பெற்றோரிடமிருந்து தன் கவனத்தை திசை திருப்பினாள்

"நல்லா இருக்கேன் மீரா... நீ எப்படி இருக்கே? கனடாவை விட்டு வர மனசில்லையோ?" என கேலியாய் கண்சிமிட்டி சிரித்தாள் காயத்ரி

அவள் கேலியின் அர்த்தம் புரிந்த போது, இனி இதற்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லையென எப்படி சொல்வதென புரியாமல் திணறியதில், மீராவிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது

"ஏய் வாயாடி, வந்ததும் அவள வம்பு பண்ண ஆரம்பிச்சுட்டியா?" என காயத்ரியை கேலி செய்தவன் "ஜெர்னி எல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல தானே மீரா?" என்றான் சதீஷ்

"ம்... ஒண்ணும் பிரச்சன இல்ல" என்றாள் மீரா, தன்னை நேரே பார்ப்பதை அவள் தவிர்ப்பதை சதீஷ் உணர்ந்து கொண்டான்

அவள் பெற்றோரை கண்டதும், தன்னை கட்டுப்படுத்தி கொள்ள இயலாமல் வெளிப்படுத்திய விதத்தில் இருந்தே "ஏதோ பிரச்சனை" என்பதை சதீஷால் யூகிக்க முடிந்தது

எனை பொய்யன்என்றாலும்
எப்படியேனும் தாங்கிகொள்வேன்
என்காதலே பொய்எனும்போது
எப்படிஏற்பேன் சொல்!!!

மனமெல்லாம் நீயேஇருக்க
மன்னிப்பை வேண்டிநிற்க
மாற்றான்சொல் மந்திரத்தில்
மிருகமாக்கினாயே என்னை!!!

வெறுக்கிறேன்உன்னை என்றாய்
வெறுக்கிறேன்தான் நானும்என்னை
உலகைவெறுத்து வேதனைபெருக
உனைஅழச்செய்த காரணத்தால்!!!


அடுத்த பகுதி - கடைசி பகுதி - படிக்க...


(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

Thursday, June 23, 2011

என் உயிர் நின்னதன்றோ...(சிறுகதை) - வல்லமை இதழில் பிரசுரிக்கப்பட்டது


எனது இந்த படைப்பு வல்லமை இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி

**********************************************

"இந்த மனுசன எங்க இன்னுங்காணோம்... வெய்ய நேரத்துல செவனேன்னு ஊட்டுல இருக்கறத உட்டுபோட்டு களத்து மேட்டுக்கு போகலைனு யாரு அழுதாக" என புலம்பியபடி வாசலில் நின்றிருந்தார் ராஜம்மாள் பாட்டி

கண் பார்வை மங்கி விட்டபடியால் நெற்றியில் கை வைத்து வெய்யிலை மறைத்து தூரத்தில் பார்த்து கொண்டிருந்த ராஜம்மாள் பாட்டியை நெருங்கிய அவள் கணவர் ராமசாமி தாத்தா "என்னத்துக்கு இப்படி வெய்யில்ல காயறவ... முன்னியே தொட்டு பொட்டு வெச்சுக்கற நெறம்" என கேலியாய் சிரித்தார்

"ஆமா... இவிக சுண்ணாம்பு வெளுப்பு நாங்கதேன் கறுப்பாக்கும்... இந்த வெய்ய நேரத்துல எந்த மெயில புடிக்க போனிய"

"ஆம்பள ஆயிரம் எடம் போவான்... எல்லாத்தையும் பொம்பளகிட்ட ஒப்பிக்கோனுமாக்கும்"

"போவீக போவீக... போக்கத்தவ வாச்சுருந்தா போவீக" என்ற பாட்டியின் குரலில் ஸ்ருதி கூடி இருந்தது

"ஏங்கெழவி ஊர கூட்டுறவ...?"

"ஹும்க்கும்... நான் கெழவி... இவரு இன்னும் பதினாரு வயசு கொமரன்" என முகவாயை தோளில் இடித்தார் பாட்டி

"இல்லாம பொறவு... ஏதோ ஏமாந்து போய் உன்ரகிட்ட சிக்கிட்டனாக்கும்"

"பேசமாட்டீக....? என்ர அப்பங்கிட்ட ஒத்த காலுல நின்னு கட்டுனா உன்ர பொண்ணத்தான் கட்டுவேன்னு கட்டுனது மறந்து போச்சாக்கும் கெழவனுக்கு"

"என்ன செய்ய? வயசு கோளாறு... மேலத்தெரு மோகனசுந்தரி எம்புட்டு ஆசையா பேசுவா... என்ன யோசிச்சு என்ன இப்ப?" என்றார் பொய்யான சோகத்துடன்

"வாய்ல வந்துருமாமா... மோகனசுந்தரியாவது சொப்பனசுந்தரியாவது..." என்ற பாட்டியின் கோபத்தை பார்த்த தாத்தா, பொக்கை வாய் மலர சத்தமாய் சிரித்தார்

இந்த காட்சியை பார்த்த அவர்களின் பேரனின் புது மனைவி நித்யா "என்ன அத்த இது... தாத்தாவும் பாட்டியும் இப்படி சண்டை போட்டுக்கறாங்க" என்றாள் தன் மாமியார் சாவித்ரியிடம்

இந்த கேள்வியை எதிர்பார்த்தவர் போல் சிரித்த சாவித்திரி "நீ இப்பதானே புதுசு... அதான் இப்படி கேக்குற... ஆனா இன்னும் கொஞ்ச நேரத்துல பாரு கொஞ்சிக்கரத... இந்த வீட்டுக்கு கலியாணமாகி வந்த இத்தன வருசத்துல நானும் பாத்துட்டேன்... இவிங்க இப்படித்தேன்" என்றார்

**********************************************

மதிய உணவுக்கு தாத்தாவை சாப்பிட அழைத்தாள் நித்யா

"கெழவி சாப்ட்டுச்சா?" என்றார் தாத்தா

"நீங்க வாங்க தாத்தா... அப்புறம் பாட்டிய கூப்பிடறேன்"

"இல்ல கண்ணு... நேரத்துக்கு சோறுங்கலைனா பசி தாங்க மாட்டா... போய் மொதல்ல அவளுக்கு போடு" என்றார்

பாட்டியை சாப்பிட அழைக்க, பாட்டியும் அதே போல் தாத்தாவை முதலில் சாப்பிட செய்யுமாறு கூற, நான் சொன்னேன் இல்லையா என்பது போல் அர்த்த புன்னகை பூத்தார் சாவித்திரி

ஒருவழியாய் இருவரும் சேர்ந்தே சாப்பிட்டனர்

உண்ட மயக்கத்தில் ஆளுக்கொரு திண்ணையின் பாயில் சாய்ந்தனர். வேப்பமர காற்றும், தூரத்தில் கழனி வேலை செய்யும் ஆட்களின் குரலும், தாலாட்டு போல் இசைக்க, உறக்கம் கண்களை தழுவியது

**********************************************

ஒரு வாரம் ஒரு நிமிடமாய் ஓடியது

உச்சி வெய்யில் மண்டையை பிளக்க, திண்ணையில் அமர்ந்து தன் கண் கண்ணாடியுடன் போராடியபடி செய்தித்தாளில் ஆழ்ந்திருந்தார் தாத்தா

"கலெக்டர் பரிச்சயாக்கும்... அத்தன பாடுபட்டு அந்த பேப்பரை படிக்காட்டாத்தேன் என்ன?" என்றார் பாட்டி

"ஏன்? உன்ரமாறியே நாட்டுநடப்பு தெரியாம இருக்கோனுமாக்கும்"

"நாட்டு நடப்பு தெரிஞ்சு இப்ப எந்த பட்டணத்துக்கு ராஜாவாக போறீக"

"ராஜாவா போயிருக்க வேண்டியவந்தேன்... உன்ன கட்டிக்கிட்டு இப்படி காட்டுலயும் மேட்டுலயும் முடிஞ்சு போச்சு பொழப்பு"

"ஏன்? நான் கைய புடிச்சு தடுத்தனாக்கும்"

"அததுக்கு ஒரு குடுப்புன வேணும் புள்ள... எங்கப்பன் சொன்னாப்ல அந்த சித்தூர்காரிய கட்டி இருந்தா ராஜாவாகி இருப்பனோ என்னமோ" என வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தார் தாத்தா

"ஹும்க்கும்... அவள கட்டியிருந்தா பொறவு தெரிஞ்சுருக்கும் சங்கதி... கண்ண கெடுத்துகாதீகன்னு சொன்னா பேச்ச பாரு பேச்ச..." என முறைத்தார் பாட்டி

அதற்குள் யாரோ வரும் அரவம் கேட்க "ஆரது...?" என கண்ணை சுருக்கி பாட்டி பார்க்க

"அம்மோய்... பெத்த மவள ஆருன்னு கேக்கறியே" என்றபடி அருகில் வந்து அமர்ந்தார் பாட்டியின் மகள் சரோஜா

அருகில் வந்ததும் மகளை கண்டுகொண்டவர் "அடியாத்தி, வா கண்ணு...வா வா... கண்ணு சுத்தமா தெரியறதில்ல அம்மணி" என்றார் அங்கலாய்ப்பாய்

"அதான் அண்ணன் ஆபரேஷன் பண்ணிக்கோனு சொல்லுதில்ல" என சரோஜா கூற

"இம்புட்டு வயசுக்கு ஆஸ்பத்திரி பக்கம் போகாமையே இருந்தாச்சு... இனி காலம் போன கடைசீல என்னத்துக்கு அம்மணி மருந்து மாத்திரைனு"

"அது சரி..." என சிரித்தாள் மகள்

"ஏனம்மணி... கொஞ்ச நேரமே வந்துருக்கோணும்... இல்லாட்டி போனா கொஞ்ச வெய்ய தாழ வரோணும்... எதுக்கு கண்ணு இப்படி உச்சி வெயில வேத்து வடிய வர்றவ?" என தன் முந்தானையில் மகளின் நெற்றி வியர்வையை துடைத்தார் பாட்டி

"இப்படி நீ தொடைக்கற சொகத்துக்கு தாம்மா" என வாய் வரை வந்த வார்த்தைகளை சொல்லாமல் விழுங்கினார் சரோஜா

தான் பேரன் பேத்தி எடுத்துவிட்ட இந்த அறுபது வயதிலும் கூட தன்னை சிறு குழந்தை போல் நடத்த தன் அன்னையால் மட்டுமே முடியும் என தோன்றியது

எத்தனை வயது தான் ஆனால் என்ன? அன்னைக்கு பிள்ளை தான்

நம் பெற்றோர் உள்ள வரை மட்டும் தானே நமக்கு இந்த உணர்வு சாத்தியம் என தோன்றியது, அதன் பின்..... என அதற்கு மேல் நினைக்க இயலாமல் கண்ணில் நீர் நிறைந்தது

அதை மறைக்க தோட்டத்தை ரசிப்பவள் போல் பார்வையை வேறுபுறம் செலுத்தினார் சரோஜா

பெற்றோரை தன்னுடன் அழைத்து சென்று சில நாட்களேனும் வைத்து கொள்ளும் ஆசையில் "ஏம்மா? நீயும் அப்பாவும் ஒரு பத்து நா எங்கோட வந்து இருங்களேன்... எப்ப கேட்டாலும் இதோ வரேன் அதோ வரேங்கற... அண்ணன் தான் உனக்கு புள்ளயா? நான் இல்லையா?" என சண்டை போடுபவள் போல் சரோஜா கேட்க

"உங்கம்மாள வேணும்னா கூட்டிட்டு போ அம்மணி... நானுங்கொஞ்சம் அவ தொண தொணப்பில்லாம நிம்மதியா இருப்பேன்" என தாத்தா கூற, பாட்டி அவரை முறைத்தார்

"அப்பனுக்கு தான் இந்த தோட்டம் காட்ட உட்டுட்டு வர மாட்டாக... அப்படிதான் நீ மட்டுமாச்சும் வாயேம்மா..." என மகள் கேட்க

"இல்லம்மணி... அது... வெய்ய காலம் முடியட்டுங்கண்ணு... பொறவு வாறன்"

"போம்மா நீ... இப்படி சொல்லி சொல்லியே பல காலம் ஓடி போச்சு" எனவும்

"அடடே... சரோவா? ஏன் வந்தவ வெளியவே உக்காந்துட்டவ... உள்ள வா, மோர் குடிப்பியாமா" என தன் நாத்தனாரை அழைத்தார் சாவித்திரி

"அப்படியே பேசிட்டே இருந்துட்டேன் அண்ணி... இதோ வரேன்" என உள்ளே சென்றார் சரோஜா

உள்ளே சென்றதும் "பாத்தீங்களா அண்ணி... அப்பன உட்டுபோட்டு ஒரு பத்து நா வந்திருக்க மாட்டேங்குது அம்மா" என்றார் சரோஜா

"நீ வேற சரோ... அத்தைய கொஞ்ச நேரம் காணோமுன்னா போதும், மாமாவும் உசுர வாங்கிருவாக... அன்னைக்கி உங்க சின்னமாமன் சம்சாரம் போயிருச்சுன்னு அத்த உங்க அண்ணங்கோட போயிட்டாக... வர்ற வரைக்கும் மெயின் ரோடுலையே நின்னுட்டு இருந்தாக மாமா... ஆனா தெனமும் நாலு சண்டைக்கு கொறயில்ல" என சிரித்தார்

"ரெண்டு பேருக்கும் எம்பதுக்கு மேல வயசாய்டுச்சு அண்ணி... ஒருத்தர் போய் ஒருத்தர் இருந்தா என்ன செய்வாகளோனு நெனச்சாலே பயமா இருக்கு" என்றார் சரோஜா நிஜமான கவலையுடன்

அதையே தானும் பல முறை நினைத்தது தான் என மௌனமானார் சாவித்திரி

**********************************************

ஐப்பசி முடிந்து கார்த்திகை தொடங்க, வெயில் குறைந்து குளிர தொடங்கியது

"முன்னயெல்லாம் தை மாசம் தலையெல்லாம் நடுங்குனு பழமொழி சொல்லுவாக. இப்ப கார்த்திகைலையே மண்டை குளிராவில்ல இருக்கு... உங்க தாத்தன் கயித்து கட்டில திண்ணைல இருந்து உள்ள எடுத்து போடு ரமேசு" என்றார் பாட்டி, பேரனிடம்

"எனக்கொண்ணும் குளிரல... நான் இங்கயே இருக்கேன்" என்றார் தாத்தா வெளியில் இருந்தபடியே

"மேலுக்கு வந்தா தெரியுமப்பறம்" என்றார் பாட்டி அக்கறையில் விளைந்த கோபத்துடன்

"எல்லாம் எங்களுக்கு தெரியும்...நீ சும்மா இரு" என அடக்கினார் தாத்தா

"மனுசனுக்கு சொன்னா வெளங்குதா? பட்டு எந்திரிச்சா புத்தி வரும்" என முணுமுணுத்தார் பாட்டி

"நேத்தைக்கு சமஞ்சு இன்னைக்கி வந்தவளாட்டம், என்ன அங்க முணுமுணுக்கரவ? சத்தமா சொல்லு புள்ள" என தாத்தா கேட்க, பேரன் ரமேசும் அவன் மனைவி நித்யாவும் சிரித்தனர்

பாட்டிக்கு ஒரே வெட்கமாய் போய் விட "கெழவனுக்கு எப்ப என்ன பேசுறதுன்னே இல்ல... வெக்கம் கேட்ட மனுஷன்" என்றார்

அன்றிரவு பாட்டிக்கு ஏனோ நல்ல குளிர் காய்ச்சல் வந்து விட அனத்தி கொண்டே இருந்தார். காலை நேரம் சற்று காய்ச்சல் மட்டுப்பட்ட போதும் முகத்தில் இருந்த சோர்வு விலகவில்லை

டாக்டரிடம் செல்லலாம் என மகன் அழைக்க "அட போடா... அதெல்லாம் கஷாயம் குடிச்சா ஓடி போயிரும்" என மருமகளிடம் பக்குவம் சொல்லி கஷாயம் வாங்கி குடித்தார்

அன்று முழுதும் தாத்தா வீட்டை விட்டு கொஞ்சமும் நகரவில்லை

அடிக்கடி மனைவியை வந்து பார்ப்பதும், ஏதேனும் கேலி செய்து சிரிக்க செய்வதுமாய் நேரத்தை கடத்தினார்

மற்றவர் எல்லாம் உறங்க சென்று விட, தாத்தா பாட்டியின் அருகில் அமர்ந்திருந்தார் "எனக்கு எதுனா ஆகிபோச்சுனா என்ன செய்வீக?" என பாட்டி தயக்கமாய் கேட்க, ஒரு கணம் மௌனமாய் இருந்தவர்

"வேறென்ன புள்ள... மோகனசுந்தரி இன்னும் கலியாணம் கட்டாம தான் இருக்காளாமா... போய் பாக்கறது தான்" என்றார் சிரிப்போடு

வேண்டுமென்றே பேச்சை மாற்றுகிறார் என்பதை உணர்ந்த பாட்டியால் அவரோடு சேர்ந்து வழக்கம் போல் நகைக்க இயலவில்லை. மாறாக எதுவும் பேசாமல் கணவனை பார்த்தார்

சற்று நேரத்தில் உறங்கியும் போனார். தாத்தா அங்கேயே அமர்ந்து வெகு நேரம் மனைவியை கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தார்

**********************************************

மறுநாள் காலை....

"பாட்டி... எழுந்திரிங்க... காபித்தண்ணி கொண்டு வந்திருக்கேன்" என பாட்டியை எழுப்பினாள் நித்யா

பாட்டி கண் திறக்காமல் போக, சற்று பயந்தவளாய் விரைந்து சென்று தன் கணவனை அழைத்து வந்தாள். வந்து பார்த்த ரமேஷ், சில்லிட்டிருந்த பாட்டியின் உடலை தொட்டு அதிர்ந்தவனாய் "பாட்டி.... " என சத்தமாய் அழுதான்

சற்று நேரத்தில் அழுகை சத்தம் கேட்டு அக்கம் பக்கம் கூடி விட, தாத்தாவிடம் எப்படி இந்த விசயத்தை சொல்வது என்பதே இப்போது எல்லோரின் பெரிய கவலை ஆனது

மனதை தேற்றி கொண்ட பாட்டியின் மகன், தந்தையின் கட்டில் அருகில் சென்று நின்றார்

புன்னகை தேங்கிய முகத்துடன் உறங்கி கொண்டிருந்த தந்தையை கண்டதும் அழுகை பீறிட "அப்பா..." என்றார் அழுகயோடே

எப்போதும் ஆழ்ந்து உறங்கும் பழக்கம் உள்ளவர் தன் தந்தை என்பதால் "அப்பா..." என்றார் மீண்டும் சற்று குரலை உயர்த்தி

அதற்கும் பதில் இல்லாமல் போக தந்தையின் கையை தொட்டவர் அதிர்ச்சியுடன் கையை இழுத்து கொண்டார். தான் நினைத்தது தவறு என நினைத்தவர் போல் மீண்டும் தந்தையின் மூக்கின் அருகில் கை வைத்து பார்த்தவர், முகம் வெளிற நின்றார்

அருகில் வந்த அவரின் மனைவி "என்னங்க ஆச்சு?" என கேட்க, "சாவித்திரி... அப்பா...அப்பா... அப்பாவும்...." என அதற்கு மேல் கூற இயலாமல் "அப்பா...." என தன் தந்தையின் உடலை கட்டி கொண்டு கதறினார்

அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாய் தாக்க நம்ப இயலாமல் ஸ்தம்பித்தது உறவுகள்

சாவித்ரிக்கு தன் மாமியார் ராஜம்மாள், போன மாதம் வீட்டுக்கு வந்திருந்த உறவு பெண்மணி ஒருவரிடம் சொன்னது நினைவுக்கு வந்தது

"சுமங்கலியா போகோனுமின்னு நீ சொல்லுறவ... எனக்கு அந்த ஆசையில்ல ஆத்தா... நானில்லாம இந்த மனுஷன் என்ன பாடு படுவாரோனு ஆன்ம சாந்தி இல்லாம சுத்துறத விட தனியா இருக்கற வேதனைய நான் அனுபவிச்சுகறேன்... எப்படியும் அதுக்கு பொறவு நான் வெகு நாள் இருக்க மாட்டேன்" என்றார் பாட்டி அன்று

அவரின் உண்மையான அன்புக்கு பரிசாய் கடவுள் இருவரையும் ஒன்றாய் அழைத்து கொண்டார் போலும் என நினைத்தார் சாவித்திரி

"பாட்டிகாச்சும் அப்பப்ப மேலுக்கு முடியாம போகும்... தாத்தா ஒரு நோக்காடும் இல்லாம தெம்பா இருந்த மனுஷனாச்சே... எம்புட்டு இணக்கம் இருந்தா ஒரே ராவுல தூக்கத்துலயே உசுரு போகும் ரெண்டு பேருக்கும்... எத்தன பேருக்கு கெடைக்கும் இந்த பாக்கியம்..." என ஊரே பேசி பேசி மாய்ந்தது

அன்றில் பறவைகளாய் ஒரு கணமும் பிரிய மனமற்ற அந்த அன்பு உள்ளங்கள் ஒன்றாய் மேலுலகில் இணைந்தது

(முற்றும்)

Tuesday, June 21, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 23)இந்த கதையின் முன் பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

"Steve, how do I look?" என மீரா கேட்க

"Could we get married today baby?" என கண்சிமிட்டி முறுவலித்தான்

"ஸ்டீவ்...ஜோக் அடிக்கறதுக்கு இதான் நேரமா?" என மீரா முறைக்க

"ஹேய்... I'm not joking...நான் ரெடி இப்பவே" என அவன் சிரித்து கொண்டே அருகில் வர

"ப்ளீஸ் ஸ்டீவ்... நான் டென்சனா இருக்கேன்... அத புரிஞ்சுக்காம...ச்சே..." என மீரா முகம் திருப்பினாள்

"என்ன மீரா இது? என்னோட அம்மா அப்பா தானே... என்னமோ job interview மாதிரி டென்ஷன் ஆகற... ரிலாக்ஸ் பேபி" என்றான்

"அவங்களுக்கு என்னை பிடிக்கும் தானே ஸ்டீவ்? I mean..." என அவள் தடுமாற

அவசியமின்றி தன்னை வருத்தி கொள்கிறாளே என கோபம் தோன்ற "மீரா..." என ஸ்டீவ் சற்று குரல் உயர்த்தவும், மீராவின் கண்ணில் கலக்கம் அதிகமானது

அதை கண்டதும், எதுவும் பேசாமல் சற்று நேரம் அவளை அணைத்து நின்றவன் "இங்க பாரு மீரா... நான் உன்கூட தானே இருக்கேன்... கூல் ஹனி..." என்றான்

"ஸ்டீவ்... நான் நெகடிவா பேசறேன்னு நினைக்காத... நீ அவங்ககிட்ட பேசினப்புறம் நான் அவங்கள மீட் பண்றது பெட்டர்னு என்னமோ என் instinct (உள்ளுணர்வு) சொல்லுது" என்றாள் இன்னும் அமைதியுறாத குரலில்

ஒரு கணம் பதில் பேசாமல் நின்றவன் "மீரா... அந்த பார்மாலிட்டி எல்லாம் பாக்கற ஸ்டேஜ் நாம தாண்டியாச்சுனு நான் நினைக்கிறேன். நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு இவ'னு சொல்ல போறேன் அவ்ளோ தான். இனி நான் உன்ன கம்பல் பண்ணல... உனக்கு இஷ்டம் இல்லேன்னா நீ கிளம்பு... நான் அவங்க வந்துட்டு போனப்புறம் போன் பண்றேன்" என்றவன், அவளை விட்டு விலகி நின்றான்

அவன் அப்படி சட்டென விலகி நின்றது மனதை வருத்த, அதை பொறுக்காதவள் போல் அவன் கைகளை எடுத்து தன் கன்னத்தோடு இழைத்து கொண்டாள்

அந்த செய்கை அவனை நெகிழ செய்ய "Come baby... lets arrange the dinner table" என அவள் கவனத்தை திசை திருப்ப முயன்றான்

ஏழு மணி போல் கதவு தட்டப்படும் ஓசையில் மீராவின் முகம் மாறுவதை உணர்ந்தான். அவள் கைகளை பற்றி எழுப்பியவன், பற்றிய கையை விடாமலே கதவை திறந்தான்

மகன் மட்டும் தான் இருப்பான் என்ற நினைவில் வந்த அவன் பெற்றோர் மீராவை கண்டதும் யோசனையாய் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்

அந்த பார்வையில் மீரா இன்னும் இறுகுவதை கண்ட ஸ்டீவ் "ஹாய் மாம் டாட்... திஸ் இஸ் மீரா... மீரா, மை மாம் அண்ட் டாட்" என பரஸ்பரம் அறிமுகம் செய்வித்தான்

சம்பிரதாயமாய் "ஹலோ.."க்கள் பரிமாறப்பட்டன. பொதுவான நலம் விசாரிப்புக்கு பின், என்ன பேசுவதென தெரியாமல் அமைதி சூழ "I will get you some coffee" என ஸ்டீவ் எழுந்து சென்றான்

அவன் பின்னோடு எழுந்து செல்ல தோன்றிய உணர்வை, அது நாகரீகமாய் இருக்காது என எண்ணியபடி, கட்டுப்படுத்தி கொண்டாள் மீரா

இந்த ஊரின் கலாச்சாரத்தில் ஆண் பெண் நட்பும், அதற்கு மேலான உறவும் இயல்பு தான் என்ற போதும், ஸ்டீவ் மீராவை அறிமுகம் செய்த விதத்தில் ஏதோ உறுத்தலாய் உணர்ந்தனர் அவன் பெற்றோர்

தோழி என்றோ, பெண் நண்பி என்றோ அறிமுகம் செய்வது தான் இந்த கலாச்சாரத்தின் வழமை. ஆனால் ஸ்டீவ் வேண்டுமென்றே, வெறுமனே மீரா என உரைத்தான் என தோன்றியது அவர்களுக்கு

அதிலும் மீராவை பற்றி தங்களிடம் எந்த முன்னறிவிப்புமின்றி, அவளை அறிமுகம் செய்தது, ஸ்டீவ் அந்த செய்கையின் மூலம் ஏதோ உட்செய்தியை கூற முயல்வது போலவும் அவர்களுக்கு தோன்றியது

ஸ்டீவின் அன்னை சிலியா, மீராவிடம் அவள் குடும்பம் பற்றி, கல்லூரி பற்றி என பொதுவாய் பேச முயன்றாள். அவர் அப்படி இயல்பாய் பேசிய விதத்தில் மீராவும் சற்று இறுக்கம் தளர்ந்து பேச தொடங்கினாள்

காபியை பெற்றோரிடம் அளித்து விட்டு, ஸ்டீவும் அரட்டையில் கலந்து கொண்டான். அதற்கு பின், மீரா நன்கு இலகுவாகவே பேசினாள். ஆனாலும், ஸ்டீவின் தந்தை எதுவும் பேசாமல் இருந்தது அவளுக்கு உறுத்தியது

ஸ்டீவிர்க்கும் அதே எண்ணம் தான். ஆனால் அவன் நோக்கமும் அது தான். தான் சொல்லாமலே அவர்களே மீரா யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமென நினைத்தான். அதன் காரணமாய் தான் முன்பே மீராவை பற்றி அவர்களிடம் சொல்லாததும்

அவனாய் எதையும் திட்டமிடவில்லை. பெற்றோர் Torontoவிற்கு ஏதோ வேலையாய் வருகிறார்கள் என்றதும், முதலில் அன்னையிடமேனும் மீராவை பற்றி குறிப்பு காட்டி விடலாமா என்று தான் முதலில் நினைத்தான். அதன் பின் ஏனோ, நேரிலேயே சந்திக்கட்டும் என விட்டுவிட்டான்

உணவு முடிக்கும் வரை அவன் தந்தை எதுவும் பேசவில்லை. அதன் பின் "சொல்ல வேண்டியதை சொல்" என்பது போல் மகனை பார்த்தார்

அதை புரிந்து கொண்டவனாய் "Mom, dad..." என ஒரு கணம் போல் தயங்கியவன், மீராவின் கைகளை பற்றியவன் "we want to get married" என்றவுடன்

எதிர்பார்த்த போதும் அதிர்ந்தவராய் "What?" என்றார் அவன் தந்தை மைக்கேல், நம்பாதவர் போல்

அப்படி ஒரு பதிலை அவன் விரும்பாத போதும் "Not right now dad... after we settle down in our career" என்றான் பொறுமையாய்

"I didn't ask for the wedding date" என மைக்கேல் குரல் உயர்த்தவும், பேச்சு போகும் திசையை உணர்ந்த சிலியா "மைக்கேல் ப்ளீஸ்.." என்றாள், பொறுமையாய் இருக்கும்படி வேண்டுவது போன்ற பாவனையுடன்

"Are you going to support him even now? Its his life, not just a piano lesson or fast food choice" என்றார் மைக்கேல் தன் மனைவியிடம் சற்று கோபமாய்

மீராவிற்கு அங்கிருந்து வெளியேற முடிந்தால் நன்றாய் இருக்குமென தோன்றியது. ஆனால் ஸ்டீவ் அவளை தன் அணைப்பில் இறுக பற்றி இருந்தான், இவள் என்னவள் என தன் பெற்றோருக்கு உணர்த்த முயல்பவன் போல்

தந்தையின் கோபம் ஸ்டீவை இறுக செய்தது. தன் வாழ்வு தன் விருப்பம் என தான்தோன்றியாய் எப்போதும் நினைப்பவன் அல்ல ஸ்டீவ். குடும்பத்தோடு நெருங்கிய உறவும் உணர்வும் உடையவன் தான். ஆனால், மீராவின் விசயத்தில் எந்த தடையையும் அவன் விரும்பவில்லை

அதோடு அவன் தந்தை இன்னும் தன்னை சிறு பிள்ளை போல் நடத்துவதை அவனால் ஏற்றுகொள்ள இயலவில்லை. வழக்கம் போல் தான் எது சொன்னாலும் செய்தாலும் குறை காணும் தந்தையின் மீது கோபம் துளிர்த்தது

எப்போதும் தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் வருவது தான். அதிலும் ஸ்டீவிர்க்கு அவன் அன்னை செல்லம் கொடுத்து கெடுக்கிறாள் என, அவன் எது செய்தாலும் கண்டிப்பார் மைக்கேல்

ஸ்டீவ் தன் கோபத்தை கட்டுப்படுத்தி நின்றான். மீராவின் முன் தன் பெற்றோரையே, பெற்றோரின் முன் மீராவையோ விட்டுத்தர அவன் மனம் ஒப்பவில்லை

மகன் அப்படி கட்டுப்படுத்தி கொண்டு நின்ற தோரணை தந்தையை பாதித்ததோ என்னவோ, மெல்ல குரல் இளக "Steve, just listen...I don't think..." என யோசனையாய் நிறுத்தி மீராவை பார்த்தவர் "lei non ti meriti" என்றார், மீராவுக்கு புரியாகூடாதென நினைத்தது போல் அவர்கள் தாய் மொழியில் (இட்டாலியன்)

அத்தனை நேரம் பொறுமையை இழுத்து பிடித்து நின்றவன் அதற்கு மேல் தாங்க இயலாமல் "How could you say that dad? how...." என பேசக்கூட விருப்பமில்லாதவன் போல் ஒரு கணம் அமைதியாய் நின்றவன், நிதானமாய் அதே நேரம் தீர்மானமான குரலில்

"Dad... She will be my wife whether you agree or not" என்றான்

அந்த சொல் அவன் தந்தையை பலமாய் தாக்கியதை மீராவால் உணர முடிந்தது. அவன் தந்தை என்ன சொல்லி இருப்பார் என மீராவால் யூகிக்க முடியாத போதும், என்ன தான் சொல்லி இருந்தாலும் பெற்றவரின் மனதை தாக்கும்படி என்ன பேச்சு இது என அவன் மீது தான் கோபம் வந்தது மீராவுக்கு

தான் இடையிட்டு ஏதேனும் சொல்லலாமா வேண்டாமா என குழம்பியவள் போல் மீரா தயக்கமாய் நின்றாள்

அவன் தந்தை, ஸ்டீவ் கூறிய வார்த்தையை பரிசீலிப்பவர் போல் சற்று நேரம் யோசித்தவர் "I see... whether we agree or not...did you hear that Celi..?"மைக்கேல் தன் மனைவியிடம், உன் பிள்ளை சொல்வதை கேட்டாயா? என நியாயம் கேட்பது போல் கேள்வியாய் நிறுத்தினார்

மகன் கூறிய வார்த்தை தன்னை பாதித்த போதும், தன் கணவர் பேசியதும் சரி இல்லையே என தோன்றியது சிலியாவுக்கு. ஒருத்தியை உயிராய் நேசிப்பவனிடம் "அவள் நீ கிடைக்க தகுதியற்றவள்" என்ற வார்த்தை கோபத்தை தூண்ட தானே செய்யும் என வழமை போல் தன் மகனின் செயலுக்கு நியாயம் தேட முயன்றது அந்த தாய் மனம்

விவாதம் போன விதம், தந்தை மகனிடையே பெரிய விரிசலை கொண்டு வந்து விடுமோ என பயந்தவள் போல் "Michael...please... calm down... they look like made for each other... don't spoil it" என சிலியா அமைதிப்படுத்த முயன்றது வீணானது

மனைவி சொன்னதே காதில் விழாதவர் போல், மகனிடம் திரும்பியவர் "Okay... just answer me this question Steve... Are you really sure she is the one?"

இவள் தான் உன் வாழ்வென்பதில் நீ உறுதியாய் இருக்கிறாயா என தந்தை கேட்டதும், ஒரு கணமும் யோசியாமல் "Yes dad... I'm sure...she is the one... ever..." என்றான் ஸ்டீவ்

"How sure?" என்றார் மைக்கேல்

ஏளனமான பார்வையுடன் தந்தை அப்படி ஒரு கேள்வி எழுப்பவும், இயல்பிலேயே முன்கோபியான ஸ்டீவை அது மீண்டும் நிதானம் இழக்க செய்தது

"Dad...what do you mean how sure? I'm telling you she is one...what else do you want to know?" என ஸ்டீவின் குரலும் இப்போது உயர்ந்தது

"I remember you were sure once before as well... when you got engaged with that German girl... are you more sure this time?" என்றார் மைக்கேல் ஏளனமாய், அடிப்படையயே அசைக்க போகும் உண்மை இதுவென அறியாமல்

மீரா அதிர்ச்சியில் உறைந்தே போனாள். அவனே மறந்த அந்த கடந்த காலத்தை பற்றி, தன் தந்தை பேசக்கூடுமென சற்றும் எதிர்பாராத ஸ்டீவ், என்ன செய்வதென தெரியாமல், மீராவின் முகத்தை பார்க்கும் தைரியமும் அற்றவனாய் நின்றான்

மீரா அதிர்ச்சியிலிருந்து மீள முயல்பவள் போல், மெல்ல ஸ்டீவிடமிருந்து தன்னை விடுவித்து கொள்ள முயல, அதை விரும்பாதவன் போல் அவளை தடுத்தவன் "மீரா..." என ஏதோ சொல்ல வர

"வேற ஒரு பொண்ணோடு கல்யாணம் வரைக்கும் யோசிச்சயா ஸ்டீவ்?" என்றாள் மீரா, இன்னும் அதை நம்பாமல், மேலும் நம்ப விரும்பாதவளாய்

"ஆமாம் என்று சொல்லி விடாதே" என கெஞ்சுவது போன்ற அவள் பார்வை ஸ்டீவை கொல்வதாய் இருந்தது

"மீரா...ப்ளீஸ்... ஜஸ்ட்... நான் சொல்றத..." என அதற்கு மேல் என்ன சொல்வது, எப்படி புரிய வைப்பது என புரியாதவனாய் ஸ்டீவ் திகைத்து நின்றான்

ஸ்டீவின் பெற்றோருக்கு தமிழ் சரளமாய் பேச வராத போதும், அத்தனை வருடம் தமிழகத்தில் இருந்ததில் தமிழ் ஓரளவிற்கு நன்றாக புரிய செய்யும்

மீராவிற்கு ஸ்டீவின் கடந்த காலம் பற்றிய உண்மை தெரிந்திருக்கவில்லை என்பதை நம்ப இயலாமல் பார்த்தாள் அவன் அன்னை சிலியா. அவன் தந்தைக்கும் அதிர்ச்சி தான்

ஆனால் அடுத்த கணமே, இப்படி ஒருவரை பற்றி ஒருவர் எதுவும் தெரியாமல் சரியான புரிதலின்றி வாழ்வில் இணைந்தால் இந்த உறவு நிலைக்குமா என்ற கேள்வி தான் அவர் மனதில் எழுந்தது

எந்த ஊரில் எந்த கலாச்சாரத்தில் என்றாலும் பிள்ளைகள் நலனை பேணுவதே முதல் முக்கியம் என நினைப்பது தானே பெற்றோரின் இயல்பு. அதிலும் தந்தை என்ற பொறுப்பில் மைக்கேல் எப்போதும் பிள்ளைகளின் எந்த முடிவையும் உடனே ஒத்துகொண்டதில்லை

ஒன்றுக்கு நூறு முறை, இது சரியா? இதன் சாதக பாதகம் என்ன? இதனால் பிள்ளைகளின் வாழ்வு மேம்படுமா? மற்றவரின் விமர்சனத்துக்கு தன் மக்கள் ஆளாக நேரிடுமா? என எல்லாமும் யோசிப்பவர் மைக்கேல்

அதனாலேயே, பிள்ளைகளிடம் கண்டிப்பான தந்தை என்ற தோற்றம் நிலைத்தது. பல தருணங்களில் நெகிழும் மனதை கட்டுப்படுத்தி, அந்த தோற்றத்தை தக்கவைத்து கொள்வார். தன் நெகிழ்வில் பிள்ளைகள் ஆதாயம் தேடி கொள்ளக்கூடாதென தன் மனதை மறைத்து கொள்வார்

அதிலும் கடைசி பிள்ளையான ஸ்டீவ் அப்படியே மைக்கேலின் தந்தையை உரித்து வைத்தது போல் தோற்றத்தில் / செய்கைகளில் இருந்ததில், அவன் மீது தனி கவனம் அவரையும் அறியாமல் பதிந்தது

மற்ற பிள்ளைகள் பணி, குடும்பம் என நிலைத்த பின், ஸ்டீவின் வாழ்வு சரியாய் அமைந்து விட்டால் தந்தையாய் தன் கடமை சரி வர முடிந்து விடும் என்ற எண்ணமே இப்போது அவர் மனதில் இருந்தது

அந்த அக்கறையில் தான், இப்படி அதிகம் தெரியாத பெண்ணிடம் வெறும் இனகவர்ச்சியில் மனதை இழந்து வழி மாறி போய் விடகூடதென, வார்த்தைகளை விட்டார்

அறியாமல் செய்தது தான் என்றாலும், மீராவிடம் மகன் மறைக்க நினைத்ததை தான் கூறி விட்டோமே என முதலில் அதிர்ந்த போதும், அதுவும் நல்லதற்கு தானோ என இப்போது தோன்றியது

தன் செயலுக்கு ஞாயம் கற்பிக்க நினைத்தவர் போல் "Did you hear that Celia? She doesn't even know your son was engaged once... and you say they're made for each other...hmm..." என்றார் தன் மனைவியிடம்

இனி...

முதலும் முற்றுமாய்
மனதில் நானேயென
கர்வத்தில் இருந்தஎனை
கணநேரத்தில் கொன்றாயே

நமக்குள் ரகசியமெனில்
நகைத்து சுகம்பெறலாம்
நானறியா ரகசியமெனில்
நம்உறவே நகைப்பாகிறதே

காதலில் தோல்வியுற்றால்
கண்ணீரோடு கரைந்துவிடும்
காதலே பொய்எனும்போது
கண்ணீருக்கும்தான் அர்த்தமென்ன!!!


அடுத்த பகுதி படிக்க...


(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

Thursday, June 16, 2011

விதி... (சிறுகதை)


நான் கடைசி படி ஏறி வரவும் ட்ரெயின் கெளம்பறதுக்கு தயாராகவும் சரியா இருந்தது

ஓடி வந்து ஏறிட்டேன் கடைசி கம்பார்ட்மன்ட்ல. அப்பாடானு இருந்தது

எல்லா சீட்டுலயும் ஆள் இருந்தது. கால் "உக்காரு ஜானகி"னு கெஞ்சுது

அப்போ தான் கடைசி சீட்ல ஒரு இடம் காலியா இருந்தத பாத்தேன். அவசரமா போய் இடம் புடிச்சேன்

சீட்டுக்கு பின்னாடி இருந்த கண்ணாடில திரும்பி பாத்தா கயறு திறுச்சு போட்ட  மாதிரி ஒரே தண்டவாள மயம்

ட்ரெயின் ஒரு பத்து நிமிஷம் தான் போய் இருக்கும், என்னமோ மெக்கானிக்கல் ப்ராப்ளம்னு announcement வந்தது

"ச்சே... எப்ப பாரு இதான் இந்த எலெக்ட்ரிக் ட்ரெயின்ல தொல்லை" னு என் பக்கத்துல உக்காந்துட்டு இருந்த ஒரு நடுத்தர வயசு அம்மா சொல்லவும் நானும் ஒப்புதலாய் தலையாட்டினேன்

அப்புறம் ஒரு நிமிஷம் கூட இல்ல திடீர்னு டமால்னு என்னமோ சத்தம் பின்னாடி என்னமோ வந்து மோதி அப்படியே என்னை தூக்கி வீசுச்சு

"ஐயோ.... " னு நான் கண்ணு மூடிட்டு கத்தினேன்

கண்ணு முழிச்சு பாத்தா பக்கத்துல என் கணவர் கௌதம் நல்ல தூக்கத்துல இருந்தார்

ச்சே எல்லாம் கனவு... என்ன கொடுமையான கனவு இதுனு மணிய பாத்தா காலை அஞ்சு மணி

அதிகாலை கனவு பலிக்கும்னு சொல்வாங்களேனு தோணின நொடி தூக்கம் காணாம போய்டுச்சு

எழுந்து வேலைய ஆரம்பிச்சுட்டேன்

கிட்சன்ல காபி போட்டுட்டு இருக்கவும் பின்னாடி காலடி சத்தம் கேட்டது

"என்ன ஜானு சீக்கரமே எழுந்துட்டயா?" என கெளதம் கேட்க

"ம்" என்றேன். இவரிடம் கனவு பற்றி கூறலாமா என தோன்றிய மனதை கட்டுபடுத்தினேன்

ஆனாலும் என் முக வாட்டத்தை கண்டுகொண்டவர் அருகில் வந்து என் முகம் பற்றி "என்னம்மா ஏன் டல்லா இருக்க?" எனவும்

"ஒண்ணுமில்ல கொஞ்சம் டையார்ட்"

"பேசாம சிக் லீவ் போட்டுடேன்" என கனிவாய் கூற

அப்படி செய்தால் என்ன என எனக்கே ஒரு கணம் தோன்றியது. கனவில் வந்தது போல் நடக்கும் விதி இருந்தால் தவிர்ப்போமே என

அடுத்த கணமே... ச்சே ஒரு கனவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா என அந்த எண்ணத்தை கை விட்டேன்

அப்படி இருந்தாலும் காலமெல்லாம் வீட்டிலேயேவா இருக்க இயலும் என தோன்றியது

"என்ன ஜானு சிக் லீவ் போட்டுகறையா?" என கெளதம் குரலில் கலைந்தவள்

"இல்லப்பா... ப்ராஜெக்ட் Go Live பக்கம் வந்தாச்சு... இப்ப லீவ் போடறது சரி வராது"

"ஒரு நாள் போட்டா என்னடா ஆய்டும்"

"இல்ல கெளதம். இன்னிக்கி Friday தானே. போயிட்டு வந்தா ரெண்டு நாள் ரெஸ்ட் தானே"

"சரி... இப்ப மணி அஞ்சரை தானே ஆச்சு, போய் ஒன் ஹவர் தூங்கு. லஞ்ச் வேணா வெளிய சாப்ட்டுக்கலாம் ஜானு"

"இல்லப்பா,  ஒண்ணும் பிரச்சனை இல்ல. நான் செஞ்சுடறேன்"

"சரி நானும் ஹெல்ப் பண்றேன்... என்ன செய்யணும்னு சொல்லு" என  கெளதம் அக்கறையாய் கூற

"ம்... ஹெல்பா? என்னை தொந்தரவு பண்ணாம இருந்தா போதும்" என நான் சிரித்து கொண்டே கூற

"அப்படியா... எனக்கு இது வரைக்கும் தொந்தரவு பண்ற எண்ணமில்ல... நீ சொன்னப்புறம் தான் தோணுது" என குறும்பாய் சிரித்து கொண்டே கெளதம் என்னை அணைக்க முயல

"போதும் போதும். போய் உங்க செல்ல மகள எழுப்புங்க. இவள டே கேர்ல விட்டுட்டு போகணும். எப்படா இவ பெருசாவானு இருக்கு" என நான் சலித்து கொள்ள

"இப்ப இப்படி சொல்லுவ. பெருசானப்புறம் சின்னதாவே இருந்துருக்கலாம்னு சொல்ல போற பாரு" என சிரித்து கொண்டே ரித்திகாவை எழுப்ப போனார் கெளதம்

*********************************

ஒரு வழியா ரித்திகாவை டே கேர்ல் விட்டுட்டு நான் ட்ரெயின் ஸ்டேஷன்ல் காரை நிறுத்திட்டு உள்ள போனேன்

நான் போகவும் ஒரு ட்ரெயின் கிளம்பவும் சரியா இருந்தது, கடைசி கம்பார்ட்மன்ட்ல் ஏறினேன்

உள்ள ஏறினப்புரம் தான், என்ன இது? கனவுல  வந்தது போலவே கடைசி கம்பார்ட்மன்ட்னு தோணுச்சு

"ச்சே... என்ன நெனப்பு இது" ன்னு ஒதுக்கினேன்

மேலும் அதிர்ச்சியாய் கனவில் போலவே எல்லா சீட்டிலும் மக்கள் நிறைந்து இருந்தனர். என்னையும் அறியாமல் கண்கள் கடைசி இருக்கையை பார்க்க மனம் அமைதியானது

கனவில் வந்தது  போல் அந்த சீட் காலியா இல்லாம அதிலும் ஆள் இருந்தது. நிம்மதியாய் மூச்சு விட்டேன்

ஏன் தான் பயந்து சாகிறேனோ என சட்டென சிரிப்பு தோன்றியது

அதே நேரம் கடைசி சீட்ல இருந்த ஒரு யூனிவர்சிட்டி மாணவன் (அந்த யூனிவர்சிட்டியின் பெயர் போட்ட சட்டை அணிந்து இருந்தான்) எழுந்து

"Hi, you can sit here. I'm getting off in couple of stops" எனவும் எனக்கு குப்பென வியர்த்தது

"No, its okay" என நான் மறுக்க

"Its alright" எனவும் நான் என்ன செய்வதென தெரியாமல் விழிக்க

அவன் பக்கத்துல இருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி "Why not?" என நகர்ந்து அமர்ந்து எனக்கு இடம் செய்தார்

அதுக்கு மேல வேண்டாம்னு சொன்னா எல்லோரும் என்னை வேடிக்கை பொருளை போல் பாப்பாங்கன்னு தோண  பேசாம உக்காந்தேன்

அந்த யூனிவர்சிட்டி மாணவன் எனக்கு எருமை வாகனத்தில் வந்த எமனாகவே தோன்றினான் அந்த நொடி

என் கண்கள் சுவாதீனமாய் சீட்டுக்கு பின் பக்கம் இருந்த ஜன்னலை பார்த்தது. கனவில் போலவே கயறு திரித்து போட்டது போல் தண்டவாள மயம்

என் கைகளின் நடுக்கத்தை என்னால் உணர முடிந்தது. "அடுத்த ஸ்டாப்ல எறங்கிட்டா என்னனு" தோணுச்சு, ஆனாலும் இதை ஒரு சவாலா நெனச்சு என்னை கட்டுபடுத்திக்கிட்டேன்

ட்ரெயின் கொஞ்ச தூரம் போனதும் ஸ்லோ ஆச்சு. என்னோட நடுக்கம் அதிகமாச்சு. கடவுளே இப்ப announcement எதுவும் வரக்கூடாதுன்னு  நான் நெனச்ச நொடி

"Attention passengers, we've a mechanical problem in Victoria station. We're experiencing a delay. We apologize for any inconvenience" னு அறிவிப்பு வந்தது 

என்ன இது ஏதோ பழைய படத்துல வருமே... ம்... நூறாவது நாள்னு ஒரு படம்... அதுல பின்னாடி நடக்க போற விபரீதம் கனவுல வருமே... அது மாதிரியா என என்னோட நடுக்கம் அதிகமானது

"O god... this is happening so often with this electric trains" என எனக்கு அருகில் அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயது பெண்மணி அலுத்து கொண்டார்

ஐயோ என்ன இது எல்லாமே கனவில் போலவே வருதே என மனம் பதற என் இதய துடிப்பு எனக்கு துல்லியமாய் கேட்டது

கௌதமின் சிரித்த முகம் கண் முன் தோன்றியது. ரித்திகா மம்மி என அழைப்பது போல் காதில் ஒலித்தது

இதற்கு மேலும் தாமதித்தால் என் உயிர் மட்டுமல்ல எல்லோர் உயிரும் போய் விடுமென்பது உறைக்க

"Please please stop the train. There is going to be an explosion. Please stop the train" என நான் கத்த

"ஏய் ஜானு... ஜானும்மா... என்னாச்சு?" என கெளதம் என்னை பற்றி உலுக்க ஒரு கணம் எதுவும் புரியவில்லை எனக்கு

"என்ன ஜானு? ஏன் இப்படி தூக்கத்துல கத்தின. எதாச்சும் கெட்ட கனவா?" என கேட்க

"அப்பாடா எல்லாம் கனவா.." என ஆயாசமாய் கௌதமின் தோளில் சாய்ந்து விசும்பினேன்

"ஏய்... என்னாச்சுமா? ஜானு இங்க பாரு. ஏன் இப்படி நடுங்கற?" என கெளதம் பதற எனக்கு இன்னும் நடுக்கம் நிற்கவில்லை

"ஜானு... ரிலாக்ஸ்... ஒண்ணுமில்ல...ரிலாக்ஸ்" என என்னை சமாதானம் செய்ய முயன்றார்

சற்று என் நடுக்கம் நின்றதும் என் கனவை கௌதமிடம் கூறி முடிக்க கெளதம் சிரிப்பை கட்டுப்படுத்த இயலாமல் சிரித்தார்

அதை பார்த்த எனக்கு கோபமானது. அவர் பிடியில் இருந்த என்னை விடுவித்து கொண்டு கட்டிலை விட்டு இறங்க முயல, என் கோபத்தை புரிந்து கொண்டவர்

"ஏய் ஜானு. சாரி சாரி. நீ சொன்னத கேட்டதும் சிரிப்ப கண்ட்ரோல் பண்ண முடியல" என புன்னகைக்க

"இதுல சிரிக்க என்ன இருக்கு உங்களுக்கு. இங்க ஒருத்தி நடுங்கிட்டு இருக்கறது புரியலையா"

"அச்சோ... சாரி சாரி... வெரி சாரிடா... நீ கனவு அப்புறம் கனவுக்குள்ள கனவெல்லாம் சொன்னியா. அதான் சிரிச்சுட்டேன்...ரியல்லி சாரி பேபி" என என் தாடையை பற்றி கெஞ்ச அதற்கு மேல் என்னால் கோபத்தை இழுத்து பிடிக்க இயலவில்லை

ஒன்றும் பேசாமல் மறுபடியும் அவர் தோளில் சாய்ந்து கொண்டேன்

"ரெம்ப பயந்துட்டயா? என்னடா இது... கனவுக்கு போய் யாராச்சும் இப்படி நடுங்குவாங்களா ஜானும்மா?" என கெளதம் ஆதரவாய் அணைக்க

"இல்லப்பா... அப்படியே நிஜம் மாதிரியே... ச்சே... இப்ப நெனச்சாலும்..." என நான் அந்த நினைவில் நடுங்க

"அந்த எமனுக்கு எப்படி தைரியம் வரும் உன்னை என்னோட பிடில இருந்து தூக்கிட்டு போக" என அப்படியே என்னை தன்னோடு இன்னும் இறுக அணைத்துக்கொண்டார் கெளதம்

அந்த அன்பில் மனம் நெகிழ கண்களில் நீர் துளிர்த்தது

அதை கண்ட கெளதம் என் மனதை மாற்ற எண்ணி "ஏய் ஜானுமா... உன்னை மல்டி ப்ளெக்ஸ் கட்ற மாதிரி கனவு காணுனு சொன்னா இப்படி மல்டி கனவு கண்டுட்டு இருக்கியேடா" என கேலியாய் சிரிக்க எனக்கு பொய் கோபம் தோன்ற

"உங்கள... " என தலையணை எடுத்து கௌதமை அடிக்க துவங்கினேன்

அதே நேரம் அலாரம் ரேடியோவில் "அப்படி போடு போடு போடு... " என சினிமா பாடல் கேட்க இருவரும் எல்லாம் மறந்து சத்தமாய் சிரித்தனர்

கதிரவனின் ஒளி கசிந்து விடியலை உள்ளே இழுத்து வந்தது பிரகாசமாய், அவர்கள் அன்பை போலவே

அப்பாவியின் குறிப்பு:
இன்னிக்கி ட்ரெயின்ல ஏறினா, கடைசி சீட்ல தான் உக்கார இடம் கெடைச்சது. பின்னாடி ஜன்னல்ல பாத்தா ஒரே தண்டவாள மயம். அப்போ மனசுல ஓடின விபரீத ரீல் தான் இந்த கதை. இது உங்க "விதி"... ஹா ஹா ஹா

எல்லா புகழும் ட்ரெயினுக்கே... (மீ எஸ்கேப்)

...

Tuesday, June 14, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 22)இந்த கதையின் முன் பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

சதீஷ் வீட்டிற்கு சென்று வந்த அன்றே, மீரா நடந்தவற்றை ஸ்டீவிடம் சொல்லி இருந்தாள். ஸ்டீவின் அன்பை சந்தேகிப்பது போல் சதீஷ் பேசியதை மட்டும் சொல்லாமல் தவிர்த்தாள்

தனக்காக சதீசுடன் பழைய நாட்கள் போல் நட்பு பாராட்ட முயலும்படியும் கேட்டு கொண்டாள். ஸ்டீவிர்க்கும் சதீஷ் மேல் எந்த தனிப்பட்ட கோபமும் இருக்கவில்லை என்பதால் அதில் அவனுக்கு எந்த மறுப்பும் இருக்கவில்லை

நீண்ட நாட்களுக்கு பின் நால்வரும் சேர்ந்து அன்று food courtல் அமர்ந்திருந்தனர்

ஆனால் சதீஷ் அதிகம் பேசாமல் மௌனம் சாதித்தான். ஸ்டீவை கண்டதும் தன்னையும் அறியாமல் மனதில் கோபம் எழ, மீராவுக்காக தன்னை கட்டுப்படுத்தி கொள்ள வேணும் என அமைதியானான்

"ஏய்... வெதர் நல்லா இருக்குப்பா... இந்த வீக் எண்ட் நயாகரா போலாமா?" என மது தொடங்கினாள்

"சாரி... எனக்கு வேலை இருக்கு" என்றான் சதீஷ் அவசரமாய்

சதீஷின் ஒதுக்கத்தில் மீராவின் முகம் வாடகண்ட ஸ்டீவ், அதை சரியாக்க முயன்றவன் போல் "ஹேய் சதீஷ்... நாம எல்லாரும் சேந்து வெளிய போய் ரெம்ப நாளாச்சு... ப்ளீஸ்" என்றான் புன்னகையுடன்

"இல்ல..." என சதீஷ் ஏதோ மறுத்து சொல்ல வர

"நோ எக்ஸ்கியுசஸ்... வேணும்னா wine country வழியா நயாகரா போலாம்... இப்ப டீல் ஒகேவா?" என சதீஷின் தோளில் சிநேகமாய் கை பதித்தவாறே கேட்டான்

வலிய நட்பு பாராட்ட வருபவனிடம் அதற்கு மேல் மறுப்பது நாகரீகமாய் இருக்காது என தோன்ற "ஒகே..." என தோளை குலுக்கினான் சதீஷ்

"ஹேய்...." என மது ஸ்டீவ் இருவரும் ஆர்பரித்தனர்

"இங்க இருக்கற நயாகரா போறதுக்கு ரெம்ப தான் அலட்டல்" என மீரா கேலி செய்ய

"நயாகரா எப்பவும் போறது தான்... பட் இப்ப உன்கூட போறது வெரி ஸ்பெஷல் இல்லையா ஹனி" என ஸ்டீவ் புருவம் உயர்த்தி முறுவலிக்க, மீராவின் முகம் மகிழ்ச்சியில் நிறைந்தது

சதீஷின் கண்கள் அதை கவனிக்க தவறவில்லை. தானும் காயத்ரியும் அன்னியோன்யமாய் மகிழும் தருணங்களை மீரா ரசித்து மகிழ்ந்திருக்கிறாள்

ஆனால் தன்னால் அப்படி ரசிக்க முடியாமல், இந்த மகிழ்ச்சி இவள் முகத்தில் நிலைக்குமா என்ற ஆராய்ச்சியே தோன்றுவதை சதீஷால் தவிர்க்க இயலவில்லை

மீரா சொல்வது போல் ஸ்டீவ் அவளை மனதார நேசிப்பது உண்மை என்றால், எனது இந்த தவறான பார்வையே நெகடிவ் எனர்ஜி போல் ஏதேனும் பாதிப்பை கொண்டு வந்து விடுமோ என பயந்தான்

முதலில் இப்படி சந்தேக கண்ணோடு பார்ப்பதை விடுத்து அவர்களின் மகிழ்வில் தானும் பங்கெடுத்து கொள்ள வேண்டுமென தீர்மானித்தான். அது அத்தனை சுலபமாய் இருக்கவில்லை

********************************************************

சனிக்கிழமை காலை பத்து மணி போல் நால்வரும் கிளம்பி விட்டிருந்தனர். காரின் முன்னிருக்கையில் ஸ்டீவும் சதீஷும் அமர்ந்து கொள்ள, பின் இருக்கைகளில் மதுவும் மீராவும் இருந்தனர்

கேலியும் விளையாட்டுமாய் நேரம் போனதே தெரியவில்லை. முதலில் wine country எனப்படும் திராட்சை தோட்டங்கள் வழியாக பயணித்தனர்

அங்கு சில தோட்டங்களுடன் wine தயாரிக்கும் winery எனப்படும் பேக்டரிகளும் இருந்தன.அதோடு சேர்ந்த wine boutique என்றழைக்கப்படும் பாரம்பரயமிக்க கடைகளும் இருந்தன

அப்படிப்பட்ட ஒரு wineryயில் முதலில் காரை நிறுத்தினான் ஸ்டீவ். சுற்றிலும் திராட்சை கொடிகள் சூழ்ந்திருக்க, தோட்டத்தின் நடுவில் இருந்த பிரம்மாண்டமான அந்த wine boutique மிகுந்த ரசனையுடன் அமைக்கப்பட்டிருந்தது

"வாவ்... ரெம்ப அழகா இருக்கு இந்த பிளேஸ்..." என்றாள் மீரா

"உள்ள இன்னும் அழகா இருக்கும்...லெட்ஸ் கோ" என்றான் ஸ்டீவ் சிரித்தவாறே

"லாஸ்ட் இயர் நாம வந்தப்ப வேற வழியா போயிட்டோமா?" என மீரா கேட்க

"ஆமா மீரா... அன்னைக்கி நாம லேட்டா கிளம்பினதால ஹைவேல நேரா போய்ட்டோம்... ஆனா எனக்கு இந்த வழியா வர்றது தான் பிடிக்கும்" என்றான் ஸ்டீவ்

"உனக்கு ஏன் பிடிக்கும்னு கொஞ்ச நேரத்துல தெரியத்தானே போகுது" என மது கேலி செய்தாள்

உள்ளே, ஏதோ நம் ஊர் நகை கடைகளில் அழகு ஆபரணங்களை அலங்கார விளக்குகள் ஒளிர வேலைப்பாடமைந்த கண்ணாடி அலமாரிகளில் வைத்திருப்பது போல் இங்கு வைன் பாட்டில்கள் அமைக்கப்பட்டிருந்ததை மீரா நம்ப இயலாமல் பார்த்தாள். சதீஷ் ஏற்கனவே வேறு சில நண்பர்களுடன் சில முறை அங்கு வந்திருந்தபடியால் அவனுக்கு அது புதியதாய் இருக்கவில்லை

"என்ன கண்றாவி இது? என்னமோ பொக்கிசத்த வெக்கற மாதிரி வெச்சுருக்கான்...ச்சே" என மீரா முகம் சுளித்தாள்

"மீரா... இதெல்லாம் நாம வெளிய பாத்தோமே இங்க சுத்தி இருக்கற வைனரியோட ப்ரொடக்ட்ஸ்... அதான் ஸ்பெஷல்'ஆ வெச்சுருக்கான்... some are very rare ones too and cost a fortune as well" என சிரித்தான்

"இதுக்கு தான் இங்க வரணும்னியா?" என மீரா முறைக்க

"அதுமட்டுமில்ல... இங்க வைன் டேஸ்ட் பண்ணி பாத்து வாங்கலாம்... டேஸ்ட் பண்ணிட்டு வாங்கலைனாலும் ஒண்ணும் பிரச்சனை இல்ல..." என குறும்பாய் சிரித்தான்

"என்ன கண்றாவியோ?" என முகம் சுளித்தாள்

"கண்றாவியா?... டேஸ்ட் பண்ணி பாரு... அப்புறம் என்ன சொல்றேன்னு பாப்போம்" என்றான் ஸ்டீவ்

டேஸ்டிங் டேபிள் என எழுதியிருந்த இடத்தில் சென்று அவர்கள் நிற்கவும், அங்கு இருந்த பணியாள் ஸ்டீவ் சுட்டிகாட்டிய ஒன்றை, இரண்டு ஸ்பூன் அளவில் நாலு வைன் கிளாஸ்களில் ஊற்றி "டேஸ்ட் இட்" என்றான்

மற்ற மூவரும் பெற்றுக்கொள்ள "ச்சே... எனக்கு வேண்டாம்" என மீரா மறுத்தாள்

"ஏய்... அவன் குடுத்ததே ரெண்டு சிப் தான்... ஜஸ்ட் சிப் இட் அண்ட் சி..." என ஸ்டீவ் கூற, மீரா வேண்டாம் என்பது போல் தலை அசைத்தாள்

அவள் வேண்டாமெனவும், அவளை சீண்டி பார்க்க ஆர்வம் தோன்றியது ஸ்டீவிர்க்கு. வேண்டுமென்றே அவள் வாயருகில் கொண்டு சென்றான். அவள் கை கொண்டு தடுக்க முயல, அவள் கைகளை அசைக்க முடியா வண்ணம் பற்றி கொண்டு மீண்டும் அருகே கொண்டு சென்றான்

"வேண்டாம் ஸ்டீவ் ப்ளீஸ்" என மீரா மறுப்பதை பொருட்படுத்தாமல் ஸ்டீவ் மீண்டும் சீண்ட

"ஸ்டீவ்... அவ தான் வேண்டானு சொல்றால்ல... லீவ் ஹர் அலோன்" என்றான் சதீஷ் கோபமாய்

சுற்றியும் இருந்தவர்கள் திரும்பி பார்க்க, ஸ்டீவ் மீரா இருவரும் சங்கடமாய் விழிக்க, சதீஷ் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான்

சில நிமிடங்களுக்கு பின் மற்ற மூவரும் வந்து காரில் அமர்ந்தனர். யாரும் எதுவும் பேசவில்லை. கார் சற்று நகர தொடங்கியதும் "ஐ அம் சாரி" என்றான் சதீஷ் பொதுவாய்

"இட்ஸ் ஒகே" என்றான் ஸ்டீவ் அதே போல்

அதன் பின் நயாகரா சென்று சேரும் வரை பெரும்பாலும் மௌனமே ஆட்சி செய்தது. காலையில் கிளம்பும் போது இருந்த குதூகலம் குறைந்ததில் எல்லாருக்கும் வருத்தமானது

ஆனால் பிரமாண்டமான அந்த நீர் வீழ்ச்சியை பார்த்ததும் எல்லாம் மறந்தவர்கள் போல் மனதில் உற்சாகம் தோன்ற வேடிக்கை பார்க்க தொடங்கினர்.

சற்று நேரம் கழிய, போட்டோ எல்லாம் எடுத்து முடித்த பின் "சரி வாங்க... அந்த கிராஸ்ல போய் உக்காரலாம்" என்றான் ஸ்டீவ்

ஆனால் மீராவுக்கு அங்கிருந்து நகரவே மனமிருக்கவில்லை "நான் இங்கயே இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கேன் ஸ்டீவ்" என்றாள்

"நானும் அவ கூட இருக்கேன்" என்றாள் மது

"ஒகே தென்... நான் போறேன்... பாத்து சலிச்சதும் வாங்க" என சிரித்தவன், புல்வெளி நோக்கி நடக்க, ஏதோ நினைத்தவனாய் சதீஷும் அவனோடு சேர்ந்து நடந்தான்

புல்வெளியில் சென்று அமரும் வரை இருவரும் ஒன்றும் பேசவில்லை. அதன் பின் "ஐ அம் சாரி" என்றான் சதீஷ்

"எதுக்கு?" என்றான் ஸ்டீவ் புரியாதவன் போல்

"நான்... நான் வைனரில அப்படி பேசி இருக்க கூடாது" என்றான் சதீஷ் எங்கோ பார்த்தபடி

"இட்ஸ் ஒகே சதீஷ்... I know you care about Meera... But... are you still mad at me?" என ஸ்டீவ் கேட்க

"இல்ல ஸ்டீவ்...ஆனா..." என சதீஷ் தயக்கமாய் நிறுத்த

"என்மேல இன்னும் முழுசா நம்பிக்கை வரல, இல்லையா?" என ஸ்டீவ் கேட்க, தன் மனதில் உள்ளதை படம் பிடித்து காட்டியது போல் அவன் பேசியதில் சதீஷ் மௌனமானான்

"சதீஷ்... நான் ரெம்ப perfectனு சொல்ல வரல... எல்லார்கிட்டயும் பிளஸ் மைனஸ் ரெண்டும் இருக்கு... ஆனா ஐ லவ் மீரா... அதுல எந்த உள்நோக்கமோ நடிப்போ இல்ல... I just love her for herself, nothing else..." என்றான் அதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை என்பது போல்

"தேங்க்ஸ் ஸ்டீவ்... I'm beginning to think you deserve her" என சதீஷ் புன்னகைக்க

"வாவ்... thats a compliment man... thanks buddy" என ஸ்டீவ், சதீஷின் தோளில் சிநேகமாய் அடிக்க

"But remember, if you hurt her, your bones will be missing for sure" என மிரட்டலாய் அதே நேரம் கேலியாய் சதீஷ் சிரிக்க

"I will carve it in my wall...so that I remember" என ஸ்டீவும் பயந்தவன் போல் நடித்து, பின் சிரித்தான்

புல்வெளியை நோக்கி வந்து கொண்டிருந்த மீராவுக்கு, அந்த காட்சியை கண்டதும் சந்தோசத்தில் கண்ணில் நீர் நிறைந்தது. இத்தனை விரைவில் இருவரும் பழையபடி சிநேகமாய் இருப்பார்கள் என மீரா எதிர்ப்பார்க்கவில்லை

அருகில் வந்ததும் "Tim Hortons coffee please" என்றாள் மது, ஸ்டீவிடம்

அதற்குள் "நான் வாங்கிட்டு வரேன் மது" என்று எழுந்தான் சதீஷ்

"எனக்கு டபுள் டபுள்... ஸ்மால் காபி" என்றாள் மீரா, "எனக்கும் அதே" என்றான் ஸ்டீவ்

"மது உனக்கு?" என சதீஷ் கேட்க, "ம்... இரு நானும் வரேன்... அங்கு வந்து என்ன தோணுதோ வாங்கிக்கறேன்" என மது சதீசுடன் சென்றாள்

அவர்கள் சற்று தூரம் சென்றதும், ஸ்டீவ் சற்றும் எதிர்பாராத தருணத்தில்,"தேங்க்ஸ்..." என முத்தமிட்டாள் மீரா

நம்ப இயலாமல் சற்று நேரம் அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான் ஸ்டீவ். அவன் பார்வையின் தீவிரம் தாங்க இயலாதவள் போல் அவன் தோளில் முகம் புதைத்தாள்

"ஹ்ம்... இதுக்காகவாச்சும் சதீஷ்கிட்ட பிரெண்ட்லியா இருக்கணும் போல இருக்கே..." என ஸ்டீவ் சிரிக்க, மீரா "என்ன?" என முறைத்தாள்

"நிஜமா சொல்றேன், கோபப்படறப்ப நீ செம கியூட் மீரா..." என அவள் கன்னம் வருடினான், ஆனாலும் மீரா முகம் மாறாமல் இருக்க, அவள் உண்மையான கோபத்தை உணர்ந்தவனாய்

"ஏய்...சும்மா வம்பு பண்ணினேன் பேபி... உன்கிட்ட நெருங்க விடாம இருக்கானேனு முன்னாடி சதீஷ் மேல எனக்கு கோபம் இருந்தது நிஜம் தான்... ஆனா இப்ப புரியுது... இப்படி ஒரு பொக்கிஷம் தப்பான கைல சேந்துட கூடாதுங்கற அக்கறைல தான் அப்படி செஞ்சிருக்கான்னு என்னால புரிஞ்சுக்க முடியுது மீரா" என்றான் அவள் முகத்தை தன் கைகளில் தாங்கியவாறே

"ஐ அம் வெரி ஹாப்பி ஸ்டீவ்... ரெம்ப ரெம்ப ரெம்ப" என உணர்சிவயப்பட்டவளாய் கண்ணில் நீர் பனிக்க அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்

எதுவும் பேசாமல் தன்னோடு அவளை அணைத்து கொண்டான் ஸ்டீவ். சுற்றி உள்ள உலகம் மறந்து அமர்ந்திருந்தனர் இருவரும்

"கொஞ்ச நேரம் தனியா விடக்கூடாதே ரெண்டு பேரையும்..." என மதுவின் கேலியில் இருவரும் சுயநினைவுக்கு வந்தவர்களாய் கலைந்தனர்

காபியை மீராவின் கையில் கொடுத்தவன் "அங்கிள் ஆண்ட்டிகிட்ட உங்க மேட்டர் எல்லாம் சொல்லியாச்சா மீரா?" என்றான் சதீஷ்

"இல்ல சதீஷ்... சம்மர்க்கு ஊருக்கு போறப்ப சொல்லலாம்னு இருக்கேன்" என மீரா கூற, ஊருக்கு செல்வதை பற்றிய பேச்சில் ஸ்டீவின் முகம் மாறியதை சதீஷ் கவனிக்க தவறவில்லை

"சம்மர்ல டிக்கெட் கிடைக்கறது கஷ்டமாச்சே சதீஷ்... புக் பண்ணிட்டயா?" என மது கேட்கவும்

"ஆமாம் மது சீசன் டைம்... ஜூன் 25th'க்கு புக் பண்ணியாச்சு" என்றான் சதீஷ்

சதீஷ் முன் போல் இயல்பாய் பேசியதில் மீரா மகிழ்வாய் உணர்ந்தாள். எல்லா வகையிலும் அந்த நாள் ஒரு சிறந்த நாளாய் அமைந்ததாய் நினைத்தாள்

********************************************************

அடுத்த பத்து நாளில் சதீஷின் தந்தைக்கு உடல் நிலை சரி இல்லையென செய்தி வர சதீஷ் அப்போதே இந்தியா கிளம்பினான். சீசன் நேரம் என்பதால் உடனே இரண்டு டிக்கெட் கிடைப்பது சிரமமாய் இருந்தது

அதோடு இன்னும் வகுப்புகளும் முடியாத நிலையில், மீரா முந்தைய ஏற்பாட்டின் படி ஜூன் 25ந் தேதியே வருவதென முடிவானது

"இந்த நேரத்துல நீ தனியா போறது கஷ்டமா இருக்கு சதீஷ்... மறுபடி டிக்கெட் ட்ரை பண்ணி பாக்கலாமா?" என்றாள் மீரா

"இட்ஸ் ஒகே மீரா... ரெம்பவும் மைல்ட் அட்டாக் தான், பயம் ஒண்ணுமில்லைனு தான் டாக்டர் சொல்றாரு... அம்மா ரெம்ப பயந்து போய் இருக்காங்க... அதுக்காகத்தான் இப்பவே போறேன்... நீ இன்னும் 15 டேஸ்ல வந்துடுவ தானே" என முறுவலித்தான்

ஏர்போர்ட் சென்று அவனை அனுப்பி விட்டு வந்த போது, மனதில் ஏதோ வெறுமை சூழ்வதை உணர்ந்தாள் மீரா

"உன் பிரெண்ட் கூடவே போகணுமா?" என கேலி செய்து அவளை சிரிக்க செய்தான் ஸ்டீவ்

********************************************************

மீரா கிளம்புவதற்கு ஒரு வாரம் இருந்த நிலையில்...

"மீரா உனக்கு ஒரு சர்ப்ரைஸ்" என்றபடியே வந்தான் ஸ்டீவ்

"என்ன?" எனவும்

"கமிங் வீக் எண்ட் மம்மி டாடி இங்க வராங்க... அப்ப நம்ம விசயத்த அவங்ககிட்ட சொல்லலாம்னு இருக்கேன்... நீயும் அப்ப என் கூட இருக்கணும்" என்றான் அவள் கைகளை பற்றியபடியே

"நான்... நான்...எப்படி?" என மீரா தயங்க

"பின்ன நீ இல்லாம? கண்டிப்பா இருக்கணும்... அம்மா ரெம்ப சந்தோசபடுவாங்க கண்டிப்பா... அப்பா தான் கொஞ்சம்... பட் அம்மா வில் டேக் கேர் ஆப் ஹிம்..." என பெற்றவர்களின் நினைவில் புன்னகைத்தான்

"இல்ல ஸ்டீவ்... நான் இன்னும் எங்க வீட்ல இதை பத்தி சொல்லலியே" என ஏதேதோ காரணம் தேடினாள்

"அதான் நெக்ஸ்ட் வீக் இந்தியா போற தானே... அப்ப சொல்றதா தானே பிளான்... நான் இதை பிளான் பண்ணல மீரா... அவங்க வரேன்னு சொன்னதால தான்..." என அவளை ஆராய்வது போல் பார்த்தவன் "ஏன் இவ்ளோ தயங்கற?" என்றான் யோசனையாய்

"இல்ல ஸ்டீவ்... அது... சரி ஒகே" என்றாள், அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து

அவள் தாடையை தொட்டு திருப்பியவன் "என்னாச்சு மீரா? எனிதிங் ராங்?" என கேட்க

"இல்ல ஸ்டீவ்... I'm...I'm just a bit nervous... " எனவும்

"ஏய்...கூல் பேபி...எனக்கு என்னமோ உன்னை பாத்து அவங்க தான் நெர்வஸ் ஆவாங்களோனு டென்சனா இருக்கு" என வேண்டுமென்றே கேலி செய்து சூழ்நிலையை இலகுவாக்க முயன்றான்

அவன் மனம் வருந்தகூடாதென சிரித்த போதும், மீராவுக்கு உள்ளூற ஏனோ "இந்த சந்திப்பை இப்போது தவிர்ப்பது நல்லதோ" என தோன்றி கொண்டே இருந்தது


அடுத்த பகுதி படிக்க...


(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

Thursday, June 09, 2011

பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் புடிச்சா... :)))

முன் குறிப்பு:
சும்மா சிரிக்க மட்டும்... அதை மறந்து டென்ஷன் ஆகி இப்படி தல தலையா அடிச்சுக்கிட்டா அதுக்கு கம்பேனி பொறுப்பில்ல...:))

"டாக்டர் ப்ளீஸ்... எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்...எவ்ளோ செலவானாலும் பரவால்ல"

"இன்னொரு முறை சொல்லுங்க..." என டாக்டர் சந்தோசமாய் பாட்டு படிக்க

"என்ன டாக்டர் இது? நாங்க எவ்ளோ சீரியசா பேசிட்டு இருக்கோம்... உங்களுக்கு விளையாட்டா இருக்கா?" என அந்த பெற்றோர் கோபமாய் பேச

"சரி சரி... பேஷன்ட் எங்க?"

"இதோ... உங்க முன்னாடி உக்காந்துட்டு இருக்கறது தான் பேஷன்ட்"

"என்ன விளையாடறீங்களா? முழுசா முள்ளங்கி பந்தாட்டம் இருக்கற ஒரு ஜென்மத்தை என்னமோ ஐ.சி.யு கேஸ் மாதிரி எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்...எவ்ளோ செலவானாலும் பரவால்லனு சொல்லி ஏன் ஆசைய கிளப்பினீங்க?" என இப்போது கோபம் கொள்வது டாக்டர் முறையானது

"ஐயோ டாக்டர்... நீங்க என் புள்ளகிட்ட பேசி பாருங்க,உங்களுக்கே புரியும்" என அவன் அம்மா கூற

"அப்படியா?" என பேஷண்டை அளவெடுப்பது போல் பார்த்த டாக்டர் "உங்க பேர் என்ன?" என கேட்க

"எந்த பேரை கேக்கறீங்க? சொந்த பேரா இல்ல ப்ளாக் பேரா?"

"அதென்ன ப்ளாக்?" என டாக்டர் விழிக்க

"என்ன ப்ளாக்ஆ? ச்சே... நீங்க எல்லாம் என்ன டாக்டர்? அது வலைப்பூ... நம் மனதின் வலையில் சிக்கும் எண்ண பூக்களை எல்லாம் தொடுத்து மாலையாய் கோர்த்து போட ஒரு கழுத்து..." என பேஷன்ட் விளக்கம் கூற

"ஓ... முழுசா முத்திடுச்சு போல" என மனதிற்குள் நினைத்த டாக்டர் "எப்போல இருந்து இந்த மாதிரி இருக்கு?" என டாக்டர் பெற்றோரிடம் கேட்க

"நானே சொல்றேன் டாக்டர்?" என்ற பேஷன்ட் "ஆரம்பத்துல எல்லாம் யாரோ எழுதின ப்ளாக்ல போய் சும்மா படிச்சும் படிக்காமையும் கன்னா பின்னானு கமெண்ட் மட்டும் போட்டுட்டு இருந்தேன்... திடீர்னு ஒரு நாள் ஒரு பதிவர் 'நீங்க இவ்ளோ சுவாரஷ்யமா கமெண்ட் எழுதறீங்களே... நீங்களே ஏன் ஒரு ப்ளாக் ஆரம்பிக்க கூடாது'னு கேட்டார்... அன்று விழுந்த விதை தான், இன்று ஆலமரமாய் 500 followerகளும் ஆயிரம் பதிவுகளும் என வளர்ந்து நிற்கிறது" என உணர்ச்சிவசப்பட்டார்

"சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தவன் ஒருத்தன்...இப்ப மாட்டிட்டு முழிக்கறது நான்" என மனதிற்குள் புலம்பிய டாக்டர் "அப்படி என்ன தான் எழுதுவீங்க?" என கேட்க

"எதை வேணாலும் எழுதுவேன் டாக்டர்... உதாரணத்துக்கு சொல்லணும்னா... ஒரு நாள் ஒரு கரப்பான் பூச்சிய அடிச்சுட்டேன்... அதை 'நானும் கரப்பானும்'னு ஒரு போஸ்ட் போட்டேன்....இன்னொரு நாள், ஒரு பிச்சகாரனுக்கு பத்து பைசா போட அவன் இன்னும் பத்து பைசா சேத்து திருப்பி குடுத்தான், அதை 'பிச்சையிடம் பிச்சை' ஒரு போஸ்ட் போட்டேன்"

"அட கருமமே...அதெல்லாமா எழுதுவீங்க...படிக்கறவன் காரி துப்ப மாட்டான்"

"ஐயோ போங்க டாக்டர்... உங்களுக்கு விசயமே புரியல... அதிகமா திட்டப்படாத பதிவரும் அதிகமா துப்பப்படாத பதிவும் பிரபலமானதா சரித்தரமே இல்ல" என அவர் பெருமிதமாய் கூற

"கருமம் கருமம்" என தலையில் அடித்து கொண்ட டாக்டர் "அது சரி... இந்த எழுதற ஐடியா எல்லாம் எப்ப தோணும்?"

"அதுக்கு ஒரு எல்லையே இல்ல டாக்டர்... பல்லு விளக்கும் போது தோணும், பாலத்த கடக்கும் போது தோணும், சாப்பிடறப்ப தோணும், சண்டை போடறப்ப தோணும், தூங்கறப்ப தோணும், துப்பரப்ப தோணும், நடக்கறப்ப தோணும், நிக்கறப்ப தோணும், கொசு அடிக்கும் போது தோணும், கொசுறு நியூஸ் படிக்கறப்ப தோணும்... ட்ரெயின்ல போறப்ப தோணும்... தலைவலிக்கரப்ப தோணும்... தோணும் போது தோணும்... தோணாத போதும் தோணும்... தோணனும்னு நினைக்கறப்ப தோணாது... ஆனா தோணாதுனு நினைக்கறப்ப தோணும்... தோணினாலும் தோணும்னு நினைக்கறப்ப தோணாம கூட போகும்... ஆனா தோணவே தோணாதுனு நினைக்கறப்ப கண்டிப்பா தோணாம போகாது...அவ்ளோ ஏன்? இப்ப கூட 'மெண்டல் டாக்டரும் மென்நவீனத்துவ பதிவரும்'னு ஒரு பதிவு எழுதணும்னு தோணுது"

"என்னது மெண்டல் டாக்டரா?" என டாக்டர் டென்ஷன் ஆக

"ப்ளீஸ் டாக்டர்... தப்பா எடுத்துக்காதீங்க... எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்...எவ்ளோ செலவானாலும் பரவால்ல" என பேஷன்டின் அப்பா கூற, அந்த "எவ்ளோ செலவானாலும் பரவால்ல" என்ற வாசகம் டாக்டரின் கோபத்தை காணாமல் போக செய்தது

"இங்க பாருங்க தம்பி... இப்படி நினைச்ச மாதிரி எல்லாம் எழுத கூடாது... அது நல்லதில்ல" என டாக்டர் அட்வைஸ் போல் கூற

"என்ன நல்லதில்ல? மழைல ஒரு பூ கீழ விழுகரத பாத்தா என்ன தோணும் தெரியுமா?

ஒருமுறை பூத்த பூ
ஒரே மழையில் விழுந்ததே
இன்னொருமுறை பூக்குமா
இருந்தாலும் அது போல் வருமா!!!

அதே மழைல எங்க பக்கத்துக்கு வீட்டு குண்டு மஞ்சுளா நடந்து போறதை பாத்தப்ப பீலிங்கோட இப்படி தான் எழுத தோணுச்சு..

மலையே
மழையில்
நனைந்து
நகர்கிறதே!!!

இந்த கவிதை எல்லாம் நல்லதில்லைன்னு நீங்க எப்படி சொல்றீங்க?"

"இங்க பாருங்க... நீங்க எழுதறது சமுதாயத்துக்கு உபயோகமா இருக்கணும் " என டாக்டர் புரிய வைக்க முயன்றார்

"கண்டிப்பா... அப்படி கூட எழுதி இருக்கேன்... நான் எழுதின 'குட்டையில் ஊறிய மட்டை' போஸ்டை படிச்சுட்டு ஒருத்தர் இனி ஜென்மத்துல இன்டர்நெட் பக்கம் வர மாட்டேன்னு போய் இப்போ நல்ல வேலைல நிலைச்சு இருக்கறதா தகவல் வந்தது... அது மட்டுமில்ல, என்னோட 'மண்டையில் ஒரு மரிக்கொழுந்து' கதைய ஒரு கோமா பேஷன்டுக்கு தினமும் படிச்சு காட்டினதுல நாலே நாளுல அவர் ராவோட ராவா வீட்டுக்கு ஓடி போயிட்டாராம்... இப்ப அந்த ஹாஸ்பிடல்ல அதான் ட்ரீட்மென்ட்ஆ யூஸ் பண்றாங்களாம்... இப்ப சொல்லுங்க எவ்ளோ உபயோகமான வேலை எல்லாம் செய்யுது என் பதிவுகள்"

"ஸ்ஸ்ஸ்ஸ்ப்பப்பா.... எப்படி புரியவெக்கறது?" என வெகு நேரம் யோசித்த டாக்டர் "இங்க பாருங்க தம்பி... எதாச்சும் தத்துவம் பித்துவம்னு எழுதினாலும் உபயோகம்..." என டாக்டர் முடிக்கும் முன்

"ஓ இருக்கே... ஜில்லுனு ஒரு மோர்னு ஒரு அருமையான பதிவு இருக்கே" என உற்சாகமாகிறார் பேஷன்ட்
 
"என்னது? மோர்ல என்ன கொடும தத்துவம் இருக்கும்?" என டாக்டர் குழம்புகிறார்
 
"என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க? மோர் எப்படி தயாராகுது... பாலாடையை கடைந்து அதில் இருந்து கொழுப்பான வெண்ணையை நீக்கி உருவாவது தானே மோர்... இதுல இருந்து உங்களுக்கு என்ன புரியுது?"
 
"ம்... உனக்கு முத்தி போச்சுன்னு புரியுது?" என தலையில் அடித்து கொண்டார் டாக்டர்
 
"ஹையோ ஹையோ... இதை புரிஞ்சுக்கற அளவுக்கு நீங்க பக்குவப்படலை டாக்டர்... அதாவது... எப்படி பாலாடையில் இருந்து வெண்ணையை நீக்கி மோர் உருவாகிறதோ அது போல நம் வாழ்வில் வெண்ணை போன்ற கெட்ட விசயங்களை அகற்றினால் மோர் போன்ற மோட்சத்தை அடையலாம்னு சொல்ல வரேன் டாக்டர்"
 
ஒரு நிமிடம் டாக்டருக்கே தனக்கு தான் விவரம் போதவில்லையோ என தோன்ற தொடங்கியது... ஒருவாறு சமாளித்து "தம்பி நான் என்ன சொல்ல வரேன்னா..." என்பதற்குள்

"டாக்டர், நான் என்ன சொல்ல வரேன்னா... நான் மொதலே மேட்டர் சொல்லிட்டா, நீங்க மேட்டர் படிச்சுட்டு மீட்டர் கட் பண்ணிட்டு போய்ட்டா நான் மீட்டர் வட்டி வாங்கி ப்ளாக் நடத்தற மேட்டர் என்ன ஆகறது. இன்னும் சொல்லப்போனா... மேட்டர்க்கு மேட்டர் தேத்த வழி இல்லாம தான் நான் இப்படி பீட்டர் விட்டுட்டு இருக்கேன்னு நீங்க என்னை பத்தி தப்பா நினைச்சுட்டா அப்புறம் என் மேட்டர் என்ன ஆகும், நீங்க கொஞ்சம் மீட்டர் கட் பண்றதுக்கு முன்னாடி இந்த மேட்டர் பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இன்னும் தெளிவா சொல்லணும்னா...."

அதற்குள் டாக்டர் "ஹா ஹா ஹா ஹா... ஹி ஹி ஹி ஹி...." என கை தட்டியபடி சிரிக்கிறார்

"அப்பாடா... வழக்கம் போல புரியாத மாதிரி பேசினதும் இந்த டாக்டரும் மெண்டல் ஆய்ட்டாரு" என பதிவர் மனதிற்குள் சிரித்து கொள்கிறார்

"ஐயையோ என்னாச்சு... ஏன் டாக்டர் இப்படி சிரிக்கறாரு?" என சுற்றி இருந்தவர்கள் பயந்து போய் பார்க்க

"ஹா ஹா ஹா.... ஹி ஹி ஹி... நான் பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார டாக்டர்னு நீங்க நினைச்சா அதான் இல்ல... நான் பைத்தியமாகி பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார ஆஸ்பத்திரில பைத்தியத்துக்கு வைத்தியம் பாத்து அதனால பைத்தியமான பைத்தியகார டாக்டர்களில் ஒருத்தன் அப்படின்னு நீங்க நெனச்சா அது தப்பில்ல... இன்னும் தெளிவா சொல்லணும்னா..." டாக்டர் நிறுத்தாமல் பேசி கொண்டே போனார் தன் சட்டையை கிழித்தபடி

"ஐயையோ... இந்த டாக்டருக்கும் பைத்தியம் புடிக்க வெச்சுட்டானே நம்ம புள்ள" என அந்த பேஷன்டுடன் வந்த அம்மா தலையில் கை வைத்து அமர

"என்ன சொல்றீங்க? இதுக்கு முன்னாடி வேற டாக்டர்'க்கு இதே மாதிரி ஆகி இருக்கா?" என அங்கிருந்த நர்ஸ் கேட்க

"ஒரு டாக்டர் இல்ல சிஸ்டர்... இதுவரைக்கும் 99 டாக்டர்களை பைத்தியமாக்கிட்டான்...  இவர் தான் நூறாவது... கங்க்ராட்ஸ் சிஸ்டர்"என்றார் பேஷன்டின் அப்பா, என்னமோ அந்த நர்ஸ் பரிட்சையில் நூத்துக்கு நூறு வாங்கின மாதிரி

அந்த நர்ஸ் பயமாய் ஒரு பார்வை பார்க்க "ஹ்ம்ம்... இனி இந்த ஊர்ல ஒரு டாக்டரும் பாக்கி இல்ல... வேற ஊர்ல தான் விசாரிக்கணும்" என பேஷன்டின் அம்மா முடிக்கும் முன் நர்ஸ் எஸ்கேப் ஆகி இருந்தார்

:))))

....

Monday, June 06, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 21)இந்த பகுதியின் முன் பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

"ஹேய் காயத்ரி... வாட் அ சர்ப்ரைஸ்" என மகிழ்ச்சியாய் ஒலித்தது மீராவின் குரல்

அந்த மகிழ்ச்சி மொத்தமும் காணாமல் போகப்போவதை மீரா அப்போது அறிந்திருக்கவில்லை

"நான் நல்லா இருக்கேன்... நீ எப்படி இருக்க காயத்ரி?"

"...."

"அது... தெரியலயே...ஏன் கேக்கற?"

"...."

"இல்ல காயத்ரி..."

"...."

"ம்... "

".... "

"தெரியலப்பா... நான் பேசிட்டு உனக்கு நாளைக்கி கூப்பிடறேன் சரியா? ஒகே பை"

பேசியை வைத்தபின்னும் வெகு நேரம் மீராவால் இயல்புக்கு வர இயலவில்லை

********************************************************

ஞாயிற்றுகிழமை - இளம் காலை நேரம். வெயில் காலம் தொடங்குவதை பறைசாற்றுவது போல் காலை எட்டு மணிக்கே சூரியன் நடுவானம் தொட முயன்று கொண்டிருந்தது

விழித்த பின்னும் கூட எழுந்து கொள்ள மனமில்லாதவனாய் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த சதீஷ், நேரத்தை கொல்ல வழி தெரியாமல் எழுந்து கணினியில் அமர்ந்து ஏதோ பார்த்து கொண்டிருந்தான்

கதவு தட்டப்படும் சத்தத்தில் "இந்த நேரத்துல யாரு?" என நினைத்தபடியே வந்து கதவை திறந்தான்

அந்த நேரத்தில் மீராவை அங்கு எதிர்பாராதவன், என்ன பேசுவதென தெரியாமல் மௌனமாய் நின்றான்

"உள்ள வரலாமா இல்ல திரும்பி போனு சொல்ல போறியா சதீஷ்?" என மீரா கேட்க, தான் வழி மறித்து நிற்பதை அப்போது தான் உணர்ந்தவன் போல் விலகி நின்றான்

"என்ன இந்த நேரத்துல?" என்றான் எங்கோ பார்த்தபடி, "ஏன் வந்தாய்?" என்பது போல் இருந்தது அந்த பாவனை. அவனது அந்த அந்நியமான செய்கை மீராவை மிகவும் வேதனைப்படுத்தியது

"காயத்ரி போன் பண்ணி இருந்தா" என்றாள் மீரா. காயத்ரியின் பெயரை கேட்டதும் ஒரு கணம் சலனமின்றி நின்றவன், "ஓ... அதானா? நீயே என்னை பாக்கணும்னு வந்தியோனு தப்பா புரிஞ்சுட்டேன் சாரி" என்றான்

தன் பெயரை சொல்வதை கூட அவன் தவிர்ப்பதை மீரா கவனிக்க தவறவில்லை. "ஏன் இப்படி யாரோ மாதிரி பேசற சதீஷ்?"

மீராவின் கெஞ்சல் போன்ற குரலில் இளக தொடங்கிய மனதை இறுக செய்யும் முயற்சி போல் "யாரோவா நினைக்கரவங்களை அப்படி தானே பேச முடியும்" என்றான் சதீஷ்

"நான் என்ன...?" என்றவள், ஒருவேளை தான் ஸ்டீவை காதலிப்பது சதீசுக்கு தெரிந்திருக்குமோ என்ற எண்ணம் தோன்ற, அதற்கு மேல் என்ன பேசுவதென தெரியாமல் தடுமாறினாள்

"ஏன் நிறுத்திட்ட? சொல்லு... நான் என்ன தப்பு செஞ்சேன்னு தான கேக்க வந்த... ஆன அப்படி கேக்க முடியல இல்லையா?" என அவன் ஏளனமாய் பார்க்க

தான் நினைத்தது சரி தான் என உணர்ந்த மீரா "சதீஷ் நான்..." என்றவளை "பேசாதே" என்பது போல் கை உயர்த்தினான்

"சதீஷ் ப்ளீஸ் நான் சொல்றத..."

அவள் பேசியதே காதில் விழாதவன் போல் "காயத்ரிய விரும்பற விசயத்த அவகிட்ட கூட சொல்றதுக்கு முன்னாடி உன்கிட்ட அதை பத்தி சொன்னவன் நான்... ஞாபகம் இருக்கா மீரா?" என குற்றம் சாட்டும் குரலில் அவன் கேட்க, கல்லூரி மூன்றாம் ஆண்டின் அந்த நாள் மீராவின் கண் முன் நிழலாடியது

மூன்றாம் ஆண்டின் முதல் நாள், தந்தையின் பணி மாற்றம் காரணமாய் வேறு ஊரில் இருந்து அந்த கல்லூரிக்கு மாற்றல் வாங்கி அவர்கள் வகுப்பிற்கு வந்திருந்தாள் காயத்ரி

கண்ட முதல் நாளே அவளால் ஈர்க்கப்பட்டான் சதீஷ். அவளிடம் வலிய சென்று பேசினான். எப்போதும் போல் பெண்களுடன் விளையாட்டாய் வம்பு செய்வது போல் தான் இதுவும் என்று தான் மீரா முதலில் நினைத்தாள்

ஆனால் ஒரே மாதத்தில், தான் காயத்ரியை விரும்புவதாயும், விரைவில் அவளிடம் தன் காதலை சொல்ல போவதாயும் சதீஷ் கூறியதும் முதலில் விளையாடுகிறான் என நினைத்தாள் மீரா. பின் சதீஷ் காட்டிய உறுதியில் தானும் துணை நின்றாள்

அத்தனை விரைவில் காதல் சொன்ன சதீஷை நம்ப இயலாமல் முதலில் மறுத்த காயத்ரி, அதன் பின் அவனின் அன்பில் தானும் அவனை விரும்ப தொடங்கினாள். கனடா வரும் முன்னே இரு வீட்டாரிடமும் சம்மதம் பெற்று, திரும்பி சென்றதும் திருமணம் என்று கூட ஏற்கனவே முடிவானது தான்

"என்ன ப்ளாஷ்பேக் எல்லாம் யோசிச்சு முடிச்சாச்சா?" என்ற சதீஷின் குரலில் கலைந்தவள்

"சதீஷ் நானே சொல்லணும்னு தான் இருந்தேன்..."

"எப்போ... கல்யாணம் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமா?" என்றான் கேலி போல்

"இல்ல சதீஷ்... உனக்கும் ஸ்டீவுக்கும் இடைல நல்ல understanding இல்லைன்னு எனக்கு தெரியும்...அது கொஞ்சம் சரியானப்புறம்..."

"அப்ப எனக்கு புடிக்காத ஒரு விசயத்தை நீ செய்யறேனா அதை என்கிட்ட மறைச்சுடுவ... அப்படி தானே... நான் அப்படி தான் நடந்துக்கறேனா மீரா?"

"சதீஷ்...நான்..." என்ன சொல்வதென தெரியாமல் அவள் தடுமாற

"லவ்வராவோ இல்ல வேற ரத்த உறவா இருந்தா மட்டும் தான் ஒரு பொண்ணு மேல possessiveness இருக்கணும்னு எந்த சட்டமும் இல்ல மீரா... infact , மத்த உறவுகள விட உண்மையான பிரெண்ட்ஷிப்ல இன்னும் possessiveness அதிகம்... அதான் நிஜம்... ஏன்னா? மத்த உறவுகளில் கூட வேற விதமான எதிர்பார்ப்புகள் இருக்கும்... உண்மையான நட்புல இருக்கற ஒரே எதிர்பார்ப்பு அந்த நட்பும் நண்பர்களும் உண்மையா இருக்கணுங்கறது மட்டும் தான்... "

அவன் பேசிய ஒரு ஒரு வார்த்தையும் தன்னை அறைவது போல் உணர்ந்த போதும், அவன் கோபம் தீரும் வரை பேசி முடியட்டும் என காத்திருப்பவள் போல் மௌனமாய் இருந்தாள் மீரா

"ஆரம்பத்துல இருந்தே எனக்கு இந்த பயம் இருந்தது... அதனால தான் ஸ்டீவ் உன்னை நெருங்கினப்பவெல்லாம் நான் அவனுக்கு மறைமுகமா எச்சரிக்கை பண்ணினேன்... அவ்ளோ ஏன்... வேலேண்டைன்ஸ் டே அன்னைக்கி நான் நேரடியா யாரையாச்சும் லவ் பண்றியானு கேட்டப்ப கூட நீ பொய் தானே சொன்ன... அந்த அளவுக்கு நான் வேண்டாதவனா போயிட்டேன் இல்லையா?"

அதுவரை பேசாமல் இருந்தவள் "ஐயோ இல்ல சதீஷ் போன வாரம் வரைக்கும் கூட அப்படி எதுவும் இல்ல... என்னை நம்பு..."

அது தனக்கு முக்கியமில்லை என்பது போல் "அவன் உனக்கு பொருத்தமானவன் இல்ல மீரா... அவன் உன்னை hurt பண்ணி இருக்கான்... he will do it again... உன் அருமை தெரிஞ்சு அவன் நடந்துக்க மாட்டான்" என்றான் சதீஷ் தீர்மானம் போல்

தான் பொக்கிஷமாய் நினைக்கும் ஒரு பொருள் அதற்கு தகுதி இல்லாதவர் கையில் கிடைக்கும் போது அந்த பொருளுக்கு என்ன நேருமோ என்பது போன்ற தவிப்பு சதீஷின் குரலில் இருந்தது

ஸ்டீவின் அன்பை சந்தேகிப்பது போல் சதீஷ் பேசியதை தாங்க இயலாதவளாய் "சதீஷ் ப்ளீஸ் அப்படி சொல்லாத.. நீ தப்பா புரிஞ்சுட்டு இருக்க... ஸ்டீவ் அப்படிப்பட்டவன் இல்ல... அவன் என்னை உண்மையா நேசிக்கறான்" என்றாள்

"நான் இப்ப என்ன சொன்னாலும் தப்பாதான் தெரியும் மீரா... நான் நெகடிவா சொல்றேன்னு தப்பா நினைக்காத...ஆனா..." என ஒரு கணம் தயங்கியவன் "நான் சொல்றது சரின்னு நீ கண்டிப்பா ஒரு நாள் புரிஞ்சுப்ப..." என்றான்

அவன் பேசியது மனதை வருத்திய போதும், தன் மேல் உள்ள அக்கறையில், தன் வாழ்வு நன்றாய் இருக்கவேண்டுமென்ற உணர்வில் தான் சொல்கிறான் என்பதை மீராவால் உணர முடிந்தது

ஸ்டீவின் உண்மையான நேசம் பற்றி சதீஷ் அறிந்து கொள்ளும் நாளில் இந்த நெருடல் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போகத்தான் போகிறது என நினைத்தாள் மீரா

சூழ்நிலையை இலகுவாக்கும் முயற்சி போல் பேச்சை மாற்றினாள் மீரா "காயத்ரி நீ போன் பண்ணலைனதும் ஒடம்புக்கு ஏதோ சரி இல்லையோனு பயந்து போய் எனக்கு கூப்ட்டா... அவ கூப்ட்டப்பவும் நீ எடுக்கலயாம்" என்றாள்

"ம்... நான் போன் பண்ணிடறேன்... சரி, நான் வெளிய கெளம்பனும்" என்றான் சதீஷ், கணினி திரையில் கண்களை பதித்தபடி

இன்னும் அவனுக்கு தன் மேல் உள்ள கோபம் தீரவில்லை என்பதை உணர்ந்தவள் போல் "என்னை போ'னு விரட்டரயா சதீஷ்?" என மீரா கேட்க

"அதுக்கு அப்படி ஒரு அர்த்தம் இருக்குனு எனக்கு தெரியாது" என்றான்

"சதீஷ்... இன்னும் என் மேல கோபம் தீரலையா உனக்கு?"

"உன் மேல கோபப்பட நான் யாருனு தான் கேக்க தோணுது மீரா" என்றான் கொஞ்சமும் யோசிக்காமல்

"சதீஷ்..." என்றவளின் குரலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து திரும்பி பார்த்தவன், அவள் கண்ணில் நீரை பார்த்ததும் "ப்ளீஸ் மீரா... தயவு செஞ்சு என் முன்னாடி அழாத... என்னை பலவீனமாக்க முயற்சி பண்ணாத..."

"சதீஷ் ஏன் என்னை ஏதோ தப்பு செஞ்சவ மாதிரி ட்ரீட் பண்ற... உன்னோட காதல் பத்தி சொன்னப்ப நான் இப்படி தான் நடந்துகிட்டனா?" என்றாள் இன்னும் பொங்கிய அழுகையை கட்டுப்படுத்தியபடி

"ஊரெல்லாம் சொல்லிட்டு அப்புறம் வந்து உன்கிட்ட நான் சொல்லல மீரா"

"நான் யார்கிட்ட...?"

அதற்கு மேல் கோபத்தை கட்டுப்படுத்தி கொள்ள முடியாதவன் போல் "அந்த மது யாரு? எவ்ளோ நாளா உனக்கு அவள தெரியும்... அவள விட நான் கேவலமா போய்ட்டேன் இல்லையா?" என்றவனின் குரலில் இருந்த வேதனை மீராவை குற்ற உணர்வில் ஆழ்த்தியது

"இல்ல சதீஷ்... நானா அவகிட்ட சொல்லல..." என்றவளை அதற்கு மேல் பேச விடாமல்

"ஆனா அதுக்கு முன்னாடியே உங்க ரெண்டு பேரையும் ஜோடியா பாத்தப்பவே எதுவும் சொல்லாமையே எனக்கு புரிஞ்சுக்க முடிஞ்சுது... அப்ப அதிர்ச்சியா இருந்தது நிஜம் தான்னாலும், மது என்கிட்ட நீ சொல்லி இருப்பேன்னு நெனச்சுட்டு உங்கள பத்தி பேசினப்ப இன்னும் கஷ்டமா இருந்தது மீரா" மனதின் வேதனையை பேச்சால் குறைக்க முயல்பவன் போல் பேசினான்

"சதீஷ் ஐ அம் ரியலி சாரி... ஆனா எதுவும் நான் வேணும்னு செய்யல...ப்ளீஸ்..."

இன்னும் மனம் ஆறாதவனாய் "காயத்ரிகிட்ட பேசாததுக்கு காரணம் தெரியுமா உனக்கு? நான் இருந்த மனநிலைல பேசினா அவகிட்ட உன்னை விட்டு குடுத்து பேசிடுவனோனு தான் பேசல... நான் உயிரா நினைக்கற அவகிட்ட கூட என்னால உன்னை விட்டு குடுக்க முடியாது மீரா... காயத்ரி கூட சில சமயம் விளையாட்டா சொல்லுவா, உனக்கு என்னை விட உன் பிரெண்ட் தான் முக்கியம்னு... ஆனா நான் உனக்கு just another friend இல்லையா... ஹ்ம்ம்..." என்றான் விரக்தியாய்

தான் அவனிடம் சொல்லவில்லை என்பதை விட அவனுக்கு முன் மதுவிடம் கூறியது தான் அவன் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது என்பது மீராவிற்கு புரிந்தது

"ப்ளீஸ் சதீஷ்... அப்படி பேசாத... நான் சத்தியமா அப்படி நினைக்கல... நீ முக்கியம்னு நினைச்சதால தான், உன்னை வருத்தப்படுத்த கூடாதுன்னு தான் கொஞ்சம் நிலைமை சரியானப்புறம் சொல்லலாம்னு இருந்தேன்... வேற எப்படி என்னை உனக்கு ப்ரூவ் பண்றதுன்னு எனக்கு தெரியல சதீஷ்" என்றாள் மீரா, அதற்கு மேல் என்ன பேசுவதென தெரியாதவளாய்

"ஆனா ஒரு விஷயம் மீரா... அவன் மட்டும் உன்னை ஹர்ட் பண்ணினான்னா அவன சும்மா விட மாட்டேன்... நான் டயலாக் எல்லாம் விடல... I'm damn serious" என்றவனின் கண்களில் தெரிந்த கோபம் மீராவின் மனதில் பயத்தை தோற்றுவித்தது

ஸ்டீவும் சதீஷும் நட்பாய் இருக்கும் காட்சியை என்றேனும் பார்ப்போமோ என்று கூட சந்தேகம் வர தொடங்கியது. அவர்களுக்குள் இருக்கும் விரிசலுக்கு காரணமே இருவரும் தன் மேல் கொண்டுள்ள அன்பு தான் என நினைத்தாள்

அன்பின் வெளிப்பாடு காதல் / நட்பு என வேறு வேறாய் இருந்தாலும், தன் சந்தோசமும் நல்வாழ்வும் மட்டுமே அந்த இருவரின் அன்பின் நோக்கம் என்பதை அவள் உணர்ந்தே இருந்தாள்

காதலர்க்கு மட்டுமே
கட்டியமில்லை உரிமை
நட்பிலும் உரிமையுண்டு
நட்பில்தான் அதிகமுண்டு

என்தோழி இவளேஎன
எல்லையில்லா பெருமிதமெனக்கு
ரகசியமில்லை எங்களுக்குள்என
ரகசிய பெருமையும்எனக்குண்டு
உடைத்துவிட்டாய் ஒரேநாளில்
உணர்வினையும் கொன்றுவிட்டாய்

என்னநீ செய்தபோதும்
என்னையே கொன்றபோதும்
உன்நலனே என்கருத்தில்
உணர்ந்தேன் இதுவேநட்பென!!!


அடுத்த பகுதி படிக்க...

(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)