Monday, June 06, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 21)இந்த பகுதியின் முன் பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

"ஹேய் காயத்ரி... வாட் அ சர்ப்ரைஸ்" என மகிழ்ச்சியாய் ஒலித்தது மீராவின் குரல்

அந்த மகிழ்ச்சி மொத்தமும் காணாமல் போகப்போவதை மீரா அப்போது அறிந்திருக்கவில்லை

"நான் நல்லா இருக்கேன்... நீ எப்படி இருக்க காயத்ரி?"

"...."

"அது... தெரியலயே...ஏன் கேக்கற?"

"...."

"இல்ல காயத்ரி..."

"...."

"ம்... "

".... "

"தெரியலப்பா... நான் பேசிட்டு உனக்கு நாளைக்கி கூப்பிடறேன் சரியா? ஒகே பை"

பேசியை வைத்தபின்னும் வெகு நேரம் மீராவால் இயல்புக்கு வர இயலவில்லை

********************************************************

ஞாயிற்றுகிழமை - இளம் காலை நேரம். வெயில் காலம் தொடங்குவதை பறைசாற்றுவது போல் காலை எட்டு மணிக்கே சூரியன் நடுவானம் தொட முயன்று கொண்டிருந்தது

விழித்த பின்னும் கூட எழுந்து கொள்ள மனமில்லாதவனாய் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த சதீஷ், நேரத்தை கொல்ல வழி தெரியாமல் எழுந்து கணினியில் அமர்ந்து ஏதோ பார்த்து கொண்டிருந்தான்

கதவு தட்டப்படும் சத்தத்தில் "இந்த நேரத்துல யாரு?" என நினைத்தபடியே வந்து கதவை திறந்தான்

அந்த நேரத்தில் மீராவை அங்கு எதிர்பாராதவன், என்ன பேசுவதென தெரியாமல் மௌனமாய் நின்றான்

"உள்ள வரலாமா இல்ல திரும்பி போனு சொல்ல போறியா சதீஷ்?" என மீரா கேட்க, தான் வழி மறித்து நிற்பதை அப்போது தான் உணர்ந்தவன் போல் விலகி நின்றான்

"என்ன இந்த நேரத்துல?" என்றான் எங்கோ பார்த்தபடி, "ஏன் வந்தாய்?" என்பது போல் இருந்தது அந்த பாவனை. அவனது அந்த அந்நியமான செய்கை மீராவை மிகவும் வேதனைப்படுத்தியது

"காயத்ரி போன் பண்ணி இருந்தா" என்றாள் மீரா. காயத்ரியின் பெயரை கேட்டதும் ஒரு கணம் சலனமின்றி நின்றவன், "ஓ... அதானா? நீயே என்னை பாக்கணும்னு வந்தியோனு தப்பா புரிஞ்சுட்டேன் சாரி" என்றான்

தன் பெயரை சொல்வதை கூட அவன் தவிர்ப்பதை மீரா கவனிக்க தவறவில்லை. "ஏன் இப்படி யாரோ மாதிரி பேசற சதீஷ்?"

மீராவின் கெஞ்சல் போன்ற குரலில் இளக தொடங்கிய மனதை இறுக செய்யும் முயற்சி போல் "யாரோவா நினைக்கரவங்களை அப்படி தானே பேச முடியும்" என்றான் சதீஷ்

"நான் என்ன...?" என்றவள், ஒருவேளை தான் ஸ்டீவை காதலிப்பது சதீசுக்கு தெரிந்திருக்குமோ என்ற எண்ணம் தோன்ற, அதற்கு மேல் என்ன பேசுவதென தெரியாமல் தடுமாறினாள்

"ஏன் நிறுத்திட்ட? சொல்லு... நான் என்ன தப்பு செஞ்சேன்னு தான கேக்க வந்த... ஆன அப்படி கேக்க முடியல இல்லையா?" என அவன் ஏளனமாய் பார்க்க

தான் நினைத்தது சரி தான் என உணர்ந்த மீரா "சதீஷ் நான்..." என்றவளை "பேசாதே" என்பது போல் கை உயர்த்தினான்

"சதீஷ் ப்ளீஸ் நான் சொல்றத..."

அவள் பேசியதே காதில் விழாதவன் போல் "காயத்ரிய விரும்பற விசயத்த அவகிட்ட கூட சொல்றதுக்கு முன்னாடி உன்கிட்ட அதை பத்தி சொன்னவன் நான்... ஞாபகம் இருக்கா மீரா?" என குற்றம் சாட்டும் குரலில் அவன் கேட்க, கல்லூரி மூன்றாம் ஆண்டின் அந்த நாள் மீராவின் கண் முன் நிழலாடியது

மூன்றாம் ஆண்டின் முதல் நாள், தந்தையின் பணி மாற்றம் காரணமாய் வேறு ஊரில் இருந்து அந்த கல்லூரிக்கு மாற்றல் வாங்கி அவர்கள் வகுப்பிற்கு வந்திருந்தாள் காயத்ரி

கண்ட முதல் நாளே அவளால் ஈர்க்கப்பட்டான் சதீஷ். அவளிடம் வலிய சென்று பேசினான். எப்போதும் போல் பெண்களுடன் விளையாட்டாய் வம்பு செய்வது போல் தான் இதுவும் என்று தான் மீரா முதலில் நினைத்தாள்

ஆனால் ஒரே மாதத்தில், தான் காயத்ரியை விரும்புவதாயும், விரைவில் அவளிடம் தன் காதலை சொல்ல போவதாயும் சதீஷ் கூறியதும் முதலில் விளையாடுகிறான் என நினைத்தாள் மீரா. பின் சதீஷ் காட்டிய உறுதியில் தானும் துணை நின்றாள்

அத்தனை விரைவில் காதல் சொன்ன சதீஷை நம்ப இயலாமல் முதலில் மறுத்த காயத்ரி, அதன் பின் அவனின் அன்பில் தானும் அவனை விரும்ப தொடங்கினாள். கனடா வரும் முன்னே இரு வீட்டாரிடமும் சம்மதம் பெற்று, திரும்பி சென்றதும் திருமணம் என்று கூட ஏற்கனவே முடிவானது தான்

"என்ன ப்ளாஷ்பேக் எல்லாம் யோசிச்சு முடிச்சாச்சா?" என்ற சதீஷின் குரலில் கலைந்தவள்

"சதீஷ் நானே சொல்லணும்னு தான் இருந்தேன்..."

"எப்போ... கல்யாணம் எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறமா?" என்றான் கேலி போல்

"இல்ல சதீஷ்... உனக்கும் ஸ்டீவுக்கும் இடைல நல்ல understanding இல்லைன்னு எனக்கு தெரியும்...அது கொஞ்சம் சரியானப்புறம்..."

"அப்ப எனக்கு புடிக்காத ஒரு விசயத்தை நீ செய்யறேனா அதை என்கிட்ட மறைச்சுடுவ... அப்படி தானே... நான் அப்படி தான் நடந்துக்கறேனா மீரா?"

"சதீஷ்...நான்..." என்ன சொல்வதென தெரியாமல் அவள் தடுமாற

"லவ்வராவோ இல்ல வேற ரத்த உறவா இருந்தா மட்டும் தான் ஒரு பொண்ணு மேல possessiveness இருக்கணும்னு எந்த சட்டமும் இல்ல மீரா... infact , மத்த உறவுகள விட உண்மையான பிரெண்ட்ஷிப்ல இன்னும் possessiveness அதிகம்... அதான் நிஜம்... ஏன்னா? மத்த உறவுகளில் கூட வேற விதமான எதிர்பார்ப்புகள் இருக்கும்... உண்மையான நட்புல இருக்கற ஒரே எதிர்பார்ப்பு அந்த நட்பும் நண்பர்களும் உண்மையா இருக்கணுங்கறது மட்டும் தான்... "

அவன் பேசிய ஒரு ஒரு வார்த்தையும் தன்னை அறைவது போல் உணர்ந்த போதும், அவன் கோபம் தீரும் வரை பேசி முடியட்டும் என காத்திருப்பவள் போல் மௌனமாய் இருந்தாள் மீரா

"ஆரம்பத்துல இருந்தே எனக்கு இந்த பயம் இருந்தது... அதனால தான் ஸ்டீவ் உன்னை நெருங்கினப்பவெல்லாம் நான் அவனுக்கு மறைமுகமா எச்சரிக்கை பண்ணினேன்... அவ்ளோ ஏன்... வேலேண்டைன்ஸ் டே அன்னைக்கி நான் நேரடியா யாரையாச்சும் லவ் பண்றியானு கேட்டப்ப கூட நீ பொய் தானே சொன்ன... அந்த அளவுக்கு நான் வேண்டாதவனா போயிட்டேன் இல்லையா?"

அதுவரை பேசாமல் இருந்தவள் "ஐயோ இல்ல சதீஷ் போன வாரம் வரைக்கும் கூட அப்படி எதுவும் இல்ல... என்னை நம்பு..."

அது தனக்கு முக்கியமில்லை என்பது போல் "அவன் உனக்கு பொருத்தமானவன் இல்ல மீரா... அவன் உன்னை hurt பண்ணி இருக்கான்... he will do it again... உன் அருமை தெரிஞ்சு அவன் நடந்துக்க மாட்டான்" என்றான் சதீஷ் தீர்மானம் போல்

தான் பொக்கிஷமாய் நினைக்கும் ஒரு பொருள் அதற்கு தகுதி இல்லாதவர் கையில் கிடைக்கும் போது அந்த பொருளுக்கு என்ன நேருமோ என்பது போன்ற தவிப்பு சதீஷின் குரலில் இருந்தது

ஸ்டீவின் அன்பை சந்தேகிப்பது போல் சதீஷ் பேசியதை தாங்க இயலாதவளாய் "சதீஷ் ப்ளீஸ் அப்படி சொல்லாத.. நீ தப்பா புரிஞ்சுட்டு இருக்க... ஸ்டீவ் அப்படிப்பட்டவன் இல்ல... அவன் என்னை உண்மையா நேசிக்கறான்" என்றாள்

"நான் இப்ப என்ன சொன்னாலும் தப்பாதான் தெரியும் மீரா... நான் நெகடிவா சொல்றேன்னு தப்பா நினைக்காத...ஆனா..." என ஒரு கணம் தயங்கியவன் "நான் சொல்றது சரின்னு நீ கண்டிப்பா ஒரு நாள் புரிஞ்சுப்ப..." என்றான்

அவன் பேசியது மனதை வருத்திய போதும், தன் மேல் உள்ள அக்கறையில், தன் வாழ்வு நன்றாய் இருக்கவேண்டுமென்ற உணர்வில் தான் சொல்கிறான் என்பதை மீராவால் உணர முடிந்தது

ஸ்டீவின் உண்மையான நேசம் பற்றி சதீஷ் அறிந்து கொள்ளும் நாளில் இந்த நெருடல் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போகத்தான் போகிறது என நினைத்தாள் மீரா

சூழ்நிலையை இலகுவாக்கும் முயற்சி போல் பேச்சை மாற்றினாள் மீரா "காயத்ரி நீ போன் பண்ணலைனதும் ஒடம்புக்கு ஏதோ சரி இல்லையோனு பயந்து போய் எனக்கு கூப்ட்டா... அவ கூப்ட்டப்பவும் நீ எடுக்கலயாம்" என்றாள்

"ம்... நான் போன் பண்ணிடறேன்... சரி, நான் வெளிய கெளம்பனும்" என்றான் சதீஷ், கணினி திரையில் கண்களை பதித்தபடி

இன்னும் அவனுக்கு தன் மேல் உள்ள கோபம் தீரவில்லை என்பதை உணர்ந்தவள் போல் "என்னை போ'னு விரட்டரயா சதீஷ்?" என மீரா கேட்க

"அதுக்கு அப்படி ஒரு அர்த்தம் இருக்குனு எனக்கு தெரியாது" என்றான்

"சதீஷ்... இன்னும் என் மேல கோபம் தீரலையா உனக்கு?"

"உன் மேல கோபப்பட நான் யாருனு தான் கேக்க தோணுது மீரா" என்றான் கொஞ்சமும் யோசிக்காமல்

"சதீஷ்..." என்றவளின் குரலில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து திரும்பி பார்த்தவன், அவள் கண்ணில் நீரை பார்த்ததும் "ப்ளீஸ் மீரா... தயவு செஞ்சு என் முன்னாடி அழாத... என்னை பலவீனமாக்க முயற்சி பண்ணாத..."

"சதீஷ் ஏன் என்னை ஏதோ தப்பு செஞ்சவ மாதிரி ட்ரீட் பண்ற... உன்னோட காதல் பத்தி சொன்னப்ப நான் இப்படி தான் நடந்துகிட்டனா?" என்றாள் இன்னும் பொங்கிய அழுகையை கட்டுப்படுத்தியபடி

"ஊரெல்லாம் சொல்லிட்டு அப்புறம் வந்து உன்கிட்ட நான் சொல்லல மீரா"

"நான் யார்கிட்ட...?"

அதற்கு மேல் கோபத்தை கட்டுப்படுத்தி கொள்ள முடியாதவன் போல் "அந்த மது யாரு? எவ்ளோ நாளா உனக்கு அவள தெரியும்... அவள விட நான் கேவலமா போய்ட்டேன் இல்லையா?" என்றவனின் குரலில் இருந்த வேதனை மீராவை குற்ற உணர்வில் ஆழ்த்தியது

"இல்ல சதீஷ்... நானா அவகிட்ட சொல்லல..." என்றவளை அதற்கு மேல் பேச விடாமல்

"ஆனா அதுக்கு முன்னாடியே உங்க ரெண்டு பேரையும் ஜோடியா பாத்தப்பவே எதுவும் சொல்லாமையே எனக்கு புரிஞ்சுக்க முடிஞ்சுது... அப்ப அதிர்ச்சியா இருந்தது நிஜம் தான்னாலும், மது என்கிட்ட நீ சொல்லி இருப்பேன்னு நெனச்சுட்டு உங்கள பத்தி பேசினப்ப இன்னும் கஷ்டமா இருந்தது மீரா" மனதின் வேதனையை பேச்சால் குறைக்க முயல்பவன் போல் பேசினான்

"சதீஷ் ஐ அம் ரியலி சாரி... ஆனா எதுவும் நான் வேணும்னு செய்யல...ப்ளீஸ்..."

இன்னும் மனம் ஆறாதவனாய் "காயத்ரிகிட்ட பேசாததுக்கு காரணம் தெரியுமா உனக்கு? நான் இருந்த மனநிலைல பேசினா அவகிட்ட உன்னை விட்டு குடுத்து பேசிடுவனோனு தான் பேசல... நான் உயிரா நினைக்கற அவகிட்ட கூட என்னால உன்னை விட்டு குடுக்க முடியாது மீரா... காயத்ரி கூட சில சமயம் விளையாட்டா சொல்லுவா, உனக்கு என்னை விட உன் பிரெண்ட் தான் முக்கியம்னு... ஆனா நான் உனக்கு just another friend இல்லையா... ஹ்ம்ம்..." என்றான் விரக்தியாய்

தான் அவனிடம் சொல்லவில்லை என்பதை விட அவனுக்கு முன் மதுவிடம் கூறியது தான் அவன் கோபத்தை இன்னும் அதிகப்படுத்தி இருக்கிறது என்பது மீராவிற்கு புரிந்தது

"ப்ளீஸ் சதீஷ்... அப்படி பேசாத... நான் சத்தியமா அப்படி நினைக்கல... நீ முக்கியம்னு நினைச்சதால தான், உன்னை வருத்தப்படுத்த கூடாதுன்னு தான் கொஞ்சம் நிலைமை சரியானப்புறம் சொல்லலாம்னு இருந்தேன்... வேற எப்படி என்னை உனக்கு ப்ரூவ் பண்றதுன்னு எனக்கு தெரியல சதீஷ்" என்றாள் மீரா, அதற்கு மேல் என்ன பேசுவதென தெரியாதவளாய்

"ஆனா ஒரு விஷயம் மீரா... அவன் மட்டும் உன்னை ஹர்ட் பண்ணினான்னா அவன சும்மா விட மாட்டேன்... நான் டயலாக் எல்லாம் விடல... I'm damn serious" என்றவனின் கண்களில் தெரிந்த கோபம் மீராவின் மனதில் பயத்தை தோற்றுவித்தது

ஸ்டீவும் சதீஷும் நட்பாய் இருக்கும் காட்சியை என்றேனும் பார்ப்போமோ என்று கூட சந்தேகம் வர தொடங்கியது. அவர்களுக்குள் இருக்கும் விரிசலுக்கு காரணமே இருவரும் தன் மேல் கொண்டுள்ள அன்பு தான் என நினைத்தாள்

அன்பின் வெளிப்பாடு காதல் / நட்பு என வேறு வேறாய் இருந்தாலும், தன் சந்தோசமும் நல்வாழ்வும் மட்டுமே அந்த இருவரின் அன்பின் நோக்கம் என்பதை அவள் உணர்ந்தே இருந்தாள்

காதலர்க்கு மட்டுமே
கட்டியமில்லை உரிமை
நட்பிலும் உரிமையுண்டு
நட்பில்தான் அதிகமுண்டு

என்தோழி இவளேஎன
எல்லையில்லா பெருமிதமெனக்கு
ரகசியமில்லை எங்களுக்குள்என
ரகசிய பெருமையும்எனக்குண்டு
உடைத்துவிட்டாய் ஒரேநாளில்
உணர்வினையும் கொன்றுவிட்டாய்

என்னநீ செய்தபோதும்
என்னையே கொன்றபோதும்
உன்நலனே என்கருத்தில்
உணர்ந்தேன் இதுவேநட்பென!!!


அடுத்த பகுதி படிக்க...

(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

30 பேரு சொல்லி இருக்காக:

அனாமிகா துவாரகன் said...

Hai Vadai

இராஜராஜேஸ்வரி said...

"என்ன ப்ளாஷ்பேக் எல்லாம் யோசிச்சு முடிச்சாச்சா?//
காதலர்க்கு மட்டுமே
கட்டியமில்லை உரிமை
நட்பிலும் உரிமையுண்டு
நட்பில்தான் அதிகமுண்டு //

Nice Thinking.

அனாமிகா துவாரகன் said...

அடப்பாவி ஒரு சீன் கூட முன்னேற்றமில்லாம பக்கம் பக்கமா மீரா சதீஸ் மொக்க டயலொக்கை படிக்க வைச்சுட்டியேக்கா. அதுவும் எனக்கு எக்சாம் பீரியட்ல. இந்த வாட்டி நான் பெயிலானா நீ தான் பொறுப்ப்புக்கா. சொல்லிட்டேன்.

@ ஆஷ், இரண்டு பிரட்டு துண்டும் ஃபோர்க்கும் கொடுடா. குத்தி குத்தி டென்சனை கொறைக்கனும். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

சி.பி.செந்தில்குமார் said...

டி வி சீரியல்க்கு வசனம் எழுத போலாம் நீங்க ஹா ஹா

மகி said...

யப்பா...ரெம்ப சிக்கலான முடிச்சா போட்டிருக்கீங்க புவனா. :)

சதீஷ்-மீரா நட்பு படிக்க நல்லா இருந்தாலும் நடைமுறைக்கு ஒத்துவருமான்னு எனக்கு டவுட்டா இருக்கு.

கொஞ்சம் லேட்டா போட்டுட்டீங்களோ இந்த முறை? ;)

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

இது கள்ளாட்டம். சதீஷ் மீராகிட்ட லவ்வ சொல்றா மாதிரி காட்டிட்டு, பின்ன அப்படியே ஒரு கொசுவர்த்திய (ஃப்ளாஷ்பேக்) போட்டு சதீஷ்க்கு வேற ஒரு காதல் இருக்கிறா மாதிரி செஞ்சது செல்லாது செல்லாது.

middleclassmadhavi said...

இப்படி ஒரு ட்விஸ்டா?!!

அனாமிகா துவாரகன் said...

///சதீஷ்-மீரா நட்பு படிக்க நல்லா இருந்தாலும் நடைமுறைக்கு ஒத்துவருமான்னு எனக்கு டவுட்டா இருக்கு. ////
ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் யாரது அப்பாவியோட கதையில தப்பு கண்டுபிடிக்கறது. அப்படி கண்டுபிடிக்க முதல் ஐவர் பேரவையில் உங்கள் பெயரைப் பதிஞ்சு இருக்க வேணும். எங்க லைசன் இல்லாமல் யாரும் எதிராகப் பேசமுடியாது. ஆமா. (ஐயாம் நாட் கிடிங்க். கி கி கி)

அனாமிகா துவாரகன் said...

/.//இது கள்ளாட்டம். சதீஷ் மீராகிட்ட லவ்வ சொல்றா மாதிரி காட்டிட்டு, பின்ன அப்படியே ஒரு கொசுவர்த்திய (ஃப்ளாஷ்பேக்) போட்டு சதீஷ்க்கு வேற ஒரு காதல் இருக்கிறா மாதிரி செஞ்சது செல்லாது செல்லாது. //
அப்படி போடுங்க சார். உங்களை மாதிரி ஆட்களை வாசகராக இருந்தும் இவா பண்ணற அளப்பறை இருக்கே. டூ மச்.

அனாமிகா துவாரகன் said...

@ மிடில்க்ளாஸ் மாதவி,
மனசில தோன்றினதை எல்லாம் கொஞ்சம் அதிகம் காரம் வச்சு கொஞ்சம் பெரிசாகவே பின்னூட்டம் போட்டிருக்கலாம்.

ஹுஸைனம்மா said...

அப்ப இந்தக் கதையில வில்லன் “முக்கோணக் காதல்” இல்லியா?

ம்ம்.. நானும் பாக்குறேன்.. உங்க கதையிலெல்ல்லாம் காதலர்களுக்கு அவங்களேதான் பிரச்னையா இருக்காங்க; உறவுகள்/நட்புகள் பிரச்னை செய்வது இல்லை. நிஜத்திலயும், எல்லாருக்கும் ஈகோதானே பிரச்னை.

Sri Seethalakshmi said...

படிக்க தொடங்கியது தான் தெரியும், எப்படி முடிந்தது என்று தெரியவில்லை
அவ்வளவு அருமை... (அட !! கொஞ்சம் நம்புங்க !!) :-)

ஒரே பதிவுல "சதீஷ்" ச ஹீரோ ஆக்கிடீங்களே !! சபாஷ்... சபாஷ்...

இப்போதான் கொஞ்சம் நிம்தியா இருக்கு... நல்லவேள ஸ்டீவுக்கு போட்டியா சதீஷ் இல்ல...

இப்ப மீரா மேல எனக்கு கொஞ்சம் கோவம் வருது.. க்ர்கர்க்ர் !!

பின் குறிப்பு : ஏதோ கதைல கொஞ்சம் முன்னேற்றம் தெரியுது. இப்படியே தொடருங்கள்... சீக்கிரம் முடியுனு எதிர்பாக்கிறோம்... :-)

siva said...

ம்ம்.. நானும் பாக்குறேன்.
ம்ம்.. நானும் பாக்குறேன்.
ம்ம்.. நானும் பாக்குறேன்.
ம்ம்.. நானும் பாக்குறேன்.
eppo entha thodar mudiumnu....

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"லவ்வராவோ இல்ல வேற ரத்த உறவா இருந்தா மட்டும் தான் ஒரு பொண்ணு மேல possessiveness இருக்கணும்னு எந்த சட்டமும் இல்ல மீரா... infact , மத்த உறவுகள விட உண்மையான பிரெண்ட்ஷிப்ல இன்னும் possessiveness அதிகம்... அதான் நிஜம்... ஏன்னா? மத்த உறவுகளில் கூட வேற விதமான எதிர்பார்ப்புகள் இருக்கும்... உண்மையான நட்புல இருக்கற ஒரே எதிர்பார்ப்பு அந்த நட்பும் நண்பர்களும் உண்மையா இருக்கணுங்கறது மட்டும் தான்... "//

என்னை மிகவும் கவர்ந்த உன்னதமான வரிகள்.
கதை ஜில்லுனு தான் போகுது. பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள். அன்புடன் vgk

Anonymous said...

adada....kadaisilla sathesh nallavana ?! two daysa avan ellorayum avoid seithu thaneeya yetho parannaudane, avan Meera, Steve mella irukira kovathula bomb ready panni human bombaga decide pannina vishayam gayathrikku therinju poii aval meeravai warn panninnu naan yegathuku karpanai panni vachiruntha apadi ethuvume illiya?

enime twist kekamathene(yenaku ethu nalla vennum!)

vinu said...

ok ok now this is teist[gayathri]...

but i too had such a friend in my life! thanks for the memories....

now story turned to toooooo smooth sis!

but ithu last week episode appo innaiku this week episode release aagumeee?

சுசி said...

அச்சச்சோ.. சதீஷ அநியாயத்துக்கு திட்டிட்டேனே..

இருந்தாலும் சதீஷ் மேல ஒரு கண் வச்சிருக்கேன்.. ஏன்னா நண்பன் எப்போ காதலன் ஆவான்னு சொல்ல முடியாது புவனா..

Lakshmi said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்.
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_6777.html

Charles said...

கொஞ்ச நாளா இந்த பக்கம் வந்தாலும் பின்னூட்டம் போட நேரம் இல்ல... :(
நல்ல நண்பர்களுக்குள் possessiveness கண்டிப்பாக இருப்பது தான்.. அதனால சதீஷ் சொல்றது கரெக்ட் தான்.
(எப்படியோ சதீஷ்-அ track மாத்தி விட்டுடீங்க!!! ) ஆனா கொஞ்சநாளா மீரா அழுதுகிட்டே இருக்காளே... லவ் பண்ண ஆரம்பிச்சாலே இப்படிதானோ?
கவிதை ஆற்புதம்... யார் என்ன சொன்னாலும் நான் உங்க கட்சி. நீங்க கதைய continue பண்ணுங்க. :)

shakti said...

appaada... satheesh loose ku vera aal irukaa ? :))))

Vasagan said...

அப்பாடா சதீஷ்க்கு ஒரு காதல் இருக்குன்னு சொல்லிட்டே, நல்ல வேலை அவனை தேவதாஸ் ஆக்கிடுவோயே னு நினைச்சேன். இனி ஒரு fightkku பிறகு எல்லாம் சுபமா?

பதிவுலகின் பேரரசின்னு பட்டம் கொடுக்கிறேன். (பேரரசுக்கு பெண்பால் ).

வல்லிசிம்ஹன் said...

nalla velai.satheesh Meeravai love pannalai. sari !
appaavi manasula enna kathaiyo theriyalaiye :)

முனியாண்டி said...

சில மாதங்கள் விட்டு தொடர்கிறேன்... புரிந்து கொள்ள முடிந்தது அவர்களின் அன்பையும் உங்கள் எழுத்தையும்.

மாலதி said...

//காதலர்க்கு மட்டுமே
கட்டியமில்லை உரிமை
நட்பிலும் உரிமையுண்டு
நட்பில்தான் அதிகமுண்டு //தொடருங்கள்...

ANaND said...

இந்த வாரம் ஹீரோயின் அப்படியே மாடிபடிலேர்ந்து இறங்கி வரமாதிரி காட்டிருக்கிங்க .... அடுத்த வாரம் ஐய்யோயையோ ... நெனச்சாலே பயங்கரம இருக்கு

பாவம் அனாமிகா வேற Exam க்கு படிக்கிறாங்க

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - ஆமாம் வடை உனக்கே...:)


@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்'அம்மா


@ அனாமிகா - இந்த பொண்ணோட பெரிய வம்பா போச்சு... கதை நகந்தாலும் திட்டு இல்லேனாலும் திட்டு... ஸ்ஸ்ஸ்ஸ்பபபப்பா.... உன்னை எப்படித்தான் வீட்டுல சமாளிக்கறாங்களோ பாவம்...:)) படிக்காம ஊர் சுத்திட்டு பழி என் மேல போடறதுக்கு தான் இந்த பிளானா? அடப்பாவிங்களா...


@ சி.பி.செந்தில்குமார் - என்னங்க வெறும் வசனம்னு சொல்லிட்டீங்க... கதை திரைக்கதை வசனம் இயக்கம் இசை எல்லாம் நானே பண்ணலாம்னு இருக்கேன்...:))


@ மகி - சிக்கலான முடிச்சு தான் மகி... ஆனா இது போல நட்புகளை நானே கேள்விப்பட்டு இருக்கேங்க... கொஞ்சம் லேட் தான் இந்த வாரம்..:))


@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - அட வம்பே...நான் எப்போ சதீஷ் மீராகிட்ட லவ் சொல்றதை காட்டினேன்... அவ்வவ்... :)))


@ middleclassmadhavi - நீங்க தானே போன வாட்டி சிறுகதைல ட்விஸ்ட் இல்லைன்னு பீல் பண்ணினீங்க அதான்..:))


@ அனாமிகா - ஆஹா... கொஞ்சம் விட்டா என்னை கலாய்க்கரதுக்கு patent ரைட் வாங்கி வெச்சு இருக்கேன்னு சொல்லுவ போல இருக்கே...அவ்வ்வ்வ்...:))


@ ஹுஸைனம்மா - நிஜத்துலயும் அப்படித்தான் நடக்குதுங்க...நடக்கறதை தானே நான் சொல்றேன்...ஹி ஹி..:))


@ Sri Seethalakshmi - ஆஹா... என்ன இன்னைக்கி பழையபடி பின்னூட்டம் வருதே உங்ககிட்ட இருந்து... நான் சதீஷ்'ஐ ஹீரோ ஆக்க முயற்சி பண்ணினதை நீங்களாச்சும் புரிஞ்சுகிட்டீங்களே நன்றி நன்றி நன்றி... :))


@ siva - பாருங்க பாருங்க...:)


@ வை.கோபாலகிருஷ்ணன் - ரெம்ப நன்றிங்க சார்... எனக்கும் பிடிச்ச வரிகள் அவை..:)

அப்பாவி தங்கமணி said...

@ பெயரில்லா - ஐயையோ...ஏங்க இப்படி கொல வெறியா எல்லாம் கற்பனை பண்றீங்க...அவ்வவ்... ஹா ஹா ஹா... ட்விஸ்ட் கேட்டது நீங்க தானே..:)))

@ vinu - ஹா ஹா... இது தான் அது... ஜஸ்ட் கிட்டிங்... லாஸ்ட் வீக் எழுத நேரமில்லைங்க...அதான் இப்போ போட்டு இருக்கேன்... தேங்க்ஸ்..:)

@ சுசி - ஆஹா... சதீஷ் நல்லவன்னு சொன்னாலும் நம்ப மாடீங்களா பாவம் சதீஷ்...:))

@ Lakshmi - ரெம்ப நன்றிங்க லக்ஷ்மி'ம்மா

@ Charles - ஆஹா... புல் சப்போர்ட்க்கு தேங்க்ஸ்... மீரா இனி அழாம இருப்பான்னு நினைக்கிறேன் பார்ப்போம்...நன்றிங்க..:)

@ shakti - சதீஷ் லூசா... காயத்ரி அடிக்க வரபோறா உங்கள...ஹா ஹா... நன்றிங்க..:)

@ Vasagan - ஐயையோ பேரரசி எல்லாம் வேண்டாம் நான் பாவி இல்ல அப்பாவி...:)))

@ வல்லிசிம்ஹன் - ஹா ஹா... தேங்க்ஸ் வல்லிம்மா... என்ன கதைல இனி சொல்றேன்...:)

@ முனியாண்டி - தொடர்வதற்கு நன்றி...

@ மாலதி - நன்றிங்க மாலதி... முதல் வருகைக்கும்

@ ANaND - ஹா ஹா ஹா...:)))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஒரு வழியா படிச்சு முடிச்சிட்டேன்பா... :)))

நல்லா இருக்கு.... ஆனாலும் இந்த சதீஷ் மேட்டர்... ஏதோ போல இருக்கு.. சரி ஓகே... அடுத்த வாரம் வரேன் :) தேங்க்ஸ்

priya.r said...

எதிர்பாராத நம்ப முடியாத திருப்பம் !

உன்னைய நல்லா திட்டணும் போல இருக்கு ..................

என்ன., பதிலுக்கு நீயும் திட்டுவியோ ன்னு தான் யோசனையா இருக்கு புவனா :) :)

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - தேங்க்ஸ் ஆனந்தி... :)

@ priya.r - நம்ப முடியாத திருப்பமா? இருங்க இந்தியால இருந்து அந்த காயத்ரி உங்களை தான் தேடிட்டு இருக்காளாம்...ஹா ஹா... ஏன் திட்டனும்? மீ பாவம்...மீ அப்பாவி யு நோ...:))... ச்சே ச்சே... நான் உங்கள திட்டுவேனா...:)))

Post a Comment