Tuesday, June 14, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 22)இந்த கதையின் முன் பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

சதீஷ் வீட்டிற்கு சென்று வந்த அன்றே, மீரா நடந்தவற்றை ஸ்டீவிடம் சொல்லி இருந்தாள். ஸ்டீவின் அன்பை சந்தேகிப்பது போல் சதீஷ் பேசியதை மட்டும் சொல்லாமல் தவிர்த்தாள்

தனக்காக சதீசுடன் பழைய நாட்கள் போல் நட்பு பாராட்ட முயலும்படியும் கேட்டு கொண்டாள். ஸ்டீவிர்க்கும் சதீஷ் மேல் எந்த தனிப்பட்ட கோபமும் இருக்கவில்லை என்பதால் அதில் அவனுக்கு எந்த மறுப்பும் இருக்கவில்லை

நீண்ட நாட்களுக்கு பின் நால்வரும் சேர்ந்து அன்று food courtல் அமர்ந்திருந்தனர்

ஆனால் சதீஷ் அதிகம் பேசாமல் மௌனம் சாதித்தான். ஸ்டீவை கண்டதும் தன்னையும் அறியாமல் மனதில் கோபம் எழ, மீராவுக்காக தன்னை கட்டுப்படுத்தி கொள்ள வேணும் என அமைதியானான்

"ஏய்... வெதர் நல்லா இருக்குப்பா... இந்த வீக் எண்ட் நயாகரா போலாமா?" என மது தொடங்கினாள்

"சாரி... எனக்கு வேலை இருக்கு" என்றான் சதீஷ் அவசரமாய்

சதீஷின் ஒதுக்கத்தில் மீராவின் முகம் வாடகண்ட ஸ்டீவ், அதை சரியாக்க முயன்றவன் போல் "ஹேய் சதீஷ்... நாம எல்லாரும் சேந்து வெளிய போய் ரெம்ப நாளாச்சு... ப்ளீஸ்" என்றான் புன்னகையுடன்

"இல்ல..." என சதீஷ் ஏதோ மறுத்து சொல்ல வர

"நோ எக்ஸ்கியுசஸ்... வேணும்னா wine country வழியா நயாகரா போலாம்... இப்ப டீல் ஒகேவா?" என சதீஷின் தோளில் சிநேகமாய் கை பதித்தவாறே கேட்டான்

வலிய நட்பு பாராட்ட வருபவனிடம் அதற்கு மேல் மறுப்பது நாகரீகமாய் இருக்காது என தோன்ற "ஒகே..." என தோளை குலுக்கினான் சதீஷ்

"ஹேய்...." என மது ஸ்டீவ் இருவரும் ஆர்பரித்தனர்

"இங்க இருக்கற நயாகரா போறதுக்கு ரெம்ப தான் அலட்டல்" என மீரா கேலி செய்ய

"நயாகரா எப்பவும் போறது தான்... பட் இப்ப உன்கூட போறது வெரி ஸ்பெஷல் இல்லையா ஹனி" என ஸ்டீவ் புருவம் உயர்த்தி முறுவலிக்க, மீராவின் முகம் மகிழ்ச்சியில் நிறைந்தது

சதீஷின் கண்கள் அதை கவனிக்க தவறவில்லை. தானும் காயத்ரியும் அன்னியோன்யமாய் மகிழும் தருணங்களை மீரா ரசித்து மகிழ்ந்திருக்கிறாள்

ஆனால் தன்னால் அப்படி ரசிக்க முடியாமல், இந்த மகிழ்ச்சி இவள் முகத்தில் நிலைக்குமா என்ற ஆராய்ச்சியே தோன்றுவதை சதீஷால் தவிர்க்க இயலவில்லை

மீரா சொல்வது போல் ஸ்டீவ் அவளை மனதார நேசிப்பது உண்மை என்றால், எனது இந்த தவறான பார்வையே நெகடிவ் எனர்ஜி போல் ஏதேனும் பாதிப்பை கொண்டு வந்து விடுமோ என பயந்தான்

முதலில் இப்படி சந்தேக கண்ணோடு பார்ப்பதை விடுத்து அவர்களின் மகிழ்வில் தானும் பங்கெடுத்து கொள்ள வேண்டுமென தீர்மானித்தான். அது அத்தனை சுலபமாய் இருக்கவில்லை

********************************************************

சனிக்கிழமை காலை பத்து மணி போல் நால்வரும் கிளம்பி விட்டிருந்தனர். காரின் முன்னிருக்கையில் ஸ்டீவும் சதீஷும் அமர்ந்து கொள்ள, பின் இருக்கைகளில் மதுவும் மீராவும் இருந்தனர்

கேலியும் விளையாட்டுமாய் நேரம் போனதே தெரியவில்லை. முதலில் wine country எனப்படும் திராட்சை தோட்டங்கள் வழியாக பயணித்தனர்

அங்கு சில தோட்டங்களுடன் wine தயாரிக்கும் winery எனப்படும் பேக்டரிகளும் இருந்தன.அதோடு சேர்ந்த wine boutique என்றழைக்கப்படும் பாரம்பரயமிக்க கடைகளும் இருந்தன

அப்படிப்பட்ட ஒரு wineryயில் முதலில் காரை நிறுத்தினான் ஸ்டீவ். சுற்றிலும் திராட்சை கொடிகள் சூழ்ந்திருக்க, தோட்டத்தின் நடுவில் இருந்த பிரம்மாண்டமான அந்த wine boutique மிகுந்த ரசனையுடன் அமைக்கப்பட்டிருந்தது

"வாவ்... ரெம்ப அழகா இருக்கு இந்த பிளேஸ்..." என்றாள் மீரா

"உள்ள இன்னும் அழகா இருக்கும்...லெட்ஸ் கோ" என்றான் ஸ்டீவ் சிரித்தவாறே

"லாஸ்ட் இயர் நாம வந்தப்ப வேற வழியா போயிட்டோமா?" என மீரா கேட்க

"ஆமா மீரா... அன்னைக்கி நாம லேட்டா கிளம்பினதால ஹைவேல நேரா போய்ட்டோம்... ஆனா எனக்கு இந்த வழியா வர்றது தான் பிடிக்கும்" என்றான் ஸ்டீவ்

"உனக்கு ஏன் பிடிக்கும்னு கொஞ்ச நேரத்துல தெரியத்தானே போகுது" என மது கேலி செய்தாள்

உள்ளே, ஏதோ நம் ஊர் நகை கடைகளில் அழகு ஆபரணங்களை அலங்கார விளக்குகள் ஒளிர வேலைப்பாடமைந்த கண்ணாடி அலமாரிகளில் வைத்திருப்பது போல் இங்கு வைன் பாட்டில்கள் அமைக்கப்பட்டிருந்ததை மீரா நம்ப இயலாமல் பார்த்தாள். சதீஷ் ஏற்கனவே வேறு சில நண்பர்களுடன் சில முறை அங்கு வந்திருந்தபடியால் அவனுக்கு அது புதியதாய் இருக்கவில்லை

"என்ன கண்றாவி இது? என்னமோ பொக்கிசத்த வெக்கற மாதிரி வெச்சுருக்கான்...ச்சே" என மீரா முகம் சுளித்தாள்

"மீரா... இதெல்லாம் நாம வெளிய பாத்தோமே இங்க சுத்தி இருக்கற வைனரியோட ப்ரொடக்ட்ஸ்... அதான் ஸ்பெஷல்'ஆ வெச்சுருக்கான்... some are very rare ones too and cost a fortune as well" என சிரித்தான்

"இதுக்கு தான் இங்க வரணும்னியா?" என மீரா முறைக்க

"அதுமட்டுமில்ல... இங்க வைன் டேஸ்ட் பண்ணி பாத்து வாங்கலாம்... டேஸ்ட் பண்ணிட்டு வாங்கலைனாலும் ஒண்ணும் பிரச்சனை இல்ல..." என குறும்பாய் சிரித்தான்

"என்ன கண்றாவியோ?" என முகம் சுளித்தாள்

"கண்றாவியா?... டேஸ்ட் பண்ணி பாரு... அப்புறம் என்ன சொல்றேன்னு பாப்போம்" என்றான் ஸ்டீவ்

டேஸ்டிங் டேபிள் என எழுதியிருந்த இடத்தில் சென்று அவர்கள் நிற்கவும், அங்கு இருந்த பணியாள் ஸ்டீவ் சுட்டிகாட்டிய ஒன்றை, இரண்டு ஸ்பூன் அளவில் நாலு வைன் கிளாஸ்களில் ஊற்றி "டேஸ்ட் இட்" என்றான்

மற்ற மூவரும் பெற்றுக்கொள்ள "ச்சே... எனக்கு வேண்டாம்" என மீரா மறுத்தாள்

"ஏய்... அவன் குடுத்ததே ரெண்டு சிப் தான்... ஜஸ்ட் சிப் இட் அண்ட் சி..." என ஸ்டீவ் கூற, மீரா வேண்டாம் என்பது போல் தலை அசைத்தாள்

அவள் வேண்டாமெனவும், அவளை சீண்டி பார்க்க ஆர்வம் தோன்றியது ஸ்டீவிர்க்கு. வேண்டுமென்றே அவள் வாயருகில் கொண்டு சென்றான். அவள் கை கொண்டு தடுக்க முயல, அவள் கைகளை அசைக்க முடியா வண்ணம் பற்றி கொண்டு மீண்டும் அருகே கொண்டு சென்றான்

"வேண்டாம் ஸ்டீவ் ப்ளீஸ்" என மீரா மறுப்பதை பொருட்படுத்தாமல் ஸ்டீவ் மீண்டும் சீண்ட

"ஸ்டீவ்... அவ தான் வேண்டானு சொல்றால்ல... லீவ் ஹர் அலோன்" என்றான் சதீஷ் கோபமாய்

சுற்றியும் இருந்தவர்கள் திரும்பி பார்க்க, ஸ்டீவ் மீரா இருவரும் சங்கடமாய் விழிக்க, சதீஷ் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான்

சில நிமிடங்களுக்கு பின் மற்ற மூவரும் வந்து காரில் அமர்ந்தனர். யாரும் எதுவும் பேசவில்லை. கார் சற்று நகர தொடங்கியதும் "ஐ அம் சாரி" என்றான் சதீஷ் பொதுவாய்

"இட்ஸ் ஒகே" என்றான் ஸ்டீவ் அதே போல்

அதன் பின் நயாகரா சென்று சேரும் வரை பெரும்பாலும் மௌனமே ஆட்சி செய்தது. காலையில் கிளம்பும் போது இருந்த குதூகலம் குறைந்ததில் எல்லாருக்கும் வருத்தமானது

ஆனால் பிரமாண்டமான அந்த நீர் வீழ்ச்சியை பார்த்ததும் எல்லாம் மறந்தவர்கள் போல் மனதில் உற்சாகம் தோன்ற வேடிக்கை பார்க்க தொடங்கினர்.

சற்று நேரம் கழிய, போட்டோ எல்லாம் எடுத்து முடித்த பின் "சரி வாங்க... அந்த கிராஸ்ல போய் உக்காரலாம்" என்றான் ஸ்டீவ்

ஆனால் மீராவுக்கு அங்கிருந்து நகரவே மனமிருக்கவில்லை "நான் இங்கயே இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கேன் ஸ்டீவ்" என்றாள்

"நானும் அவ கூட இருக்கேன்" என்றாள் மது

"ஒகே தென்... நான் போறேன்... பாத்து சலிச்சதும் வாங்க" என சிரித்தவன், புல்வெளி நோக்கி நடக்க, ஏதோ நினைத்தவனாய் சதீஷும் அவனோடு சேர்ந்து நடந்தான்

புல்வெளியில் சென்று அமரும் வரை இருவரும் ஒன்றும் பேசவில்லை. அதன் பின் "ஐ அம் சாரி" என்றான் சதீஷ்

"எதுக்கு?" என்றான் ஸ்டீவ் புரியாதவன் போல்

"நான்... நான் வைனரில அப்படி பேசி இருக்க கூடாது" என்றான் சதீஷ் எங்கோ பார்த்தபடி

"இட்ஸ் ஒகே சதீஷ்... I know you care about Meera... But... are you still mad at me?" என ஸ்டீவ் கேட்க

"இல்ல ஸ்டீவ்...ஆனா..." என சதீஷ் தயக்கமாய் நிறுத்த

"என்மேல இன்னும் முழுசா நம்பிக்கை வரல, இல்லையா?" என ஸ்டீவ் கேட்க, தன் மனதில் உள்ளதை படம் பிடித்து காட்டியது போல் அவன் பேசியதில் சதீஷ் மௌனமானான்

"சதீஷ்... நான் ரெம்ப perfectனு சொல்ல வரல... எல்லார்கிட்டயும் பிளஸ் மைனஸ் ரெண்டும் இருக்கு... ஆனா ஐ லவ் மீரா... அதுல எந்த உள்நோக்கமோ நடிப்போ இல்ல... I just love her for herself, nothing else..." என்றான் அதற்கு மேல் சொல்ல எதுவுமில்லை என்பது போல்

"தேங்க்ஸ் ஸ்டீவ்... I'm beginning to think you deserve her" என சதீஷ் புன்னகைக்க

"வாவ்... thats a compliment man... thanks buddy" என ஸ்டீவ், சதீஷின் தோளில் சிநேகமாய் அடிக்க

"But remember, if you hurt her, your bones will be missing for sure" என மிரட்டலாய் அதே நேரம் கேலியாய் சதீஷ் சிரிக்க

"I will carve it in my wall...so that I remember" என ஸ்டீவும் பயந்தவன் போல் நடித்து, பின் சிரித்தான்

புல்வெளியை நோக்கி வந்து கொண்டிருந்த மீராவுக்கு, அந்த காட்சியை கண்டதும் சந்தோசத்தில் கண்ணில் நீர் நிறைந்தது. இத்தனை விரைவில் இருவரும் பழையபடி சிநேகமாய் இருப்பார்கள் என மீரா எதிர்ப்பார்க்கவில்லை

அருகில் வந்ததும் "Tim Hortons coffee please" என்றாள் மது, ஸ்டீவிடம்

அதற்குள் "நான் வாங்கிட்டு வரேன் மது" என்று எழுந்தான் சதீஷ்

"எனக்கு டபுள் டபுள்... ஸ்மால் காபி" என்றாள் மீரா, "எனக்கும் அதே" என்றான் ஸ்டீவ்

"மது உனக்கு?" என சதீஷ் கேட்க, "ம்... இரு நானும் வரேன்... அங்கு வந்து என்ன தோணுதோ வாங்கிக்கறேன்" என மது சதீசுடன் சென்றாள்

அவர்கள் சற்று தூரம் சென்றதும், ஸ்டீவ் சற்றும் எதிர்பாராத தருணத்தில்,"தேங்க்ஸ்..." என முத்தமிட்டாள் மீரா

நம்ப இயலாமல் சற்று நேரம் அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தான் ஸ்டீவ். அவன் பார்வையின் தீவிரம் தாங்க இயலாதவள் போல் அவன் தோளில் முகம் புதைத்தாள்

"ஹ்ம்... இதுக்காகவாச்சும் சதீஷ்கிட்ட பிரெண்ட்லியா இருக்கணும் போல இருக்கே..." என ஸ்டீவ் சிரிக்க, மீரா "என்ன?" என முறைத்தாள்

"நிஜமா சொல்றேன், கோபப்படறப்ப நீ செம கியூட் மீரா..." என அவள் கன்னம் வருடினான், ஆனாலும் மீரா முகம் மாறாமல் இருக்க, அவள் உண்மையான கோபத்தை உணர்ந்தவனாய்

"ஏய்...சும்மா வம்பு பண்ணினேன் பேபி... உன்கிட்ட நெருங்க விடாம இருக்கானேனு முன்னாடி சதீஷ் மேல எனக்கு கோபம் இருந்தது நிஜம் தான்... ஆனா இப்ப புரியுது... இப்படி ஒரு பொக்கிஷம் தப்பான கைல சேந்துட கூடாதுங்கற அக்கறைல தான் அப்படி செஞ்சிருக்கான்னு என்னால புரிஞ்சுக்க முடியுது மீரா" என்றான் அவள் முகத்தை தன் கைகளில் தாங்கியவாறே

"ஐ அம் வெரி ஹாப்பி ஸ்டீவ்... ரெம்ப ரெம்ப ரெம்ப" என உணர்சிவயப்பட்டவளாய் கண்ணில் நீர் பனிக்க அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்

எதுவும் பேசாமல் தன்னோடு அவளை அணைத்து கொண்டான் ஸ்டீவ். சுற்றி உள்ள உலகம் மறந்து அமர்ந்திருந்தனர் இருவரும்

"கொஞ்ச நேரம் தனியா விடக்கூடாதே ரெண்டு பேரையும்..." என மதுவின் கேலியில் இருவரும் சுயநினைவுக்கு வந்தவர்களாய் கலைந்தனர்

காபியை மீராவின் கையில் கொடுத்தவன் "அங்கிள் ஆண்ட்டிகிட்ட உங்க மேட்டர் எல்லாம் சொல்லியாச்சா மீரா?" என்றான் சதீஷ்

"இல்ல சதீஷ்... சம்மர்க்கு ஊருக்கு போறப்ப சொல்லலாம்னு இருக்கேன்" என மீரா கூற, ஊருக்கு செல்வதை பற்றிய பேச்சில் ஸ்டீவின் முகம் மாறியதை சதீஷ் கவனிக்க தவறவில்லை

"சம்மர்ல டிக்கெட் கிடைக்கறது கஷ்டமாச்சே சதீஷ்... புக் பண்ணிட்டயா?" என மது கேட்கவும்

"ஆமாம் மது சீசன் டைம்... ஜூன் 25th'க்கு புக் பண்ணியாச்சு" என்றான் சதீஷ்

சதீஷ் முன் போல் இயல்பாய் பேசியதில் மீரா மகிழ்வாய் உணர்ந்தாள். எல்லா வகையிலும் அந்த நாள் ஒரு சிறந்த நாளாய் அமைந்ததாய் நினைத்தாள்

********************************************************

அடுத்த பத்து நாளில் சதீஷின் தந்தைக்கு உடல் நிலை சரி இல்லையென செய்தி வர சதீஷ் அப்போதே இந்தியா கிளம்பினான். சீசன் நேரம் என்பதால் உடனே இரண்டு டிக்கெட் கிடைப்பது சிரமமாய் இருந்தது

அதோடு இன்னும் வகுப்புகளும் முடியாத நிலையில், மீரா முந்தைய ஏற்பாட்டின் படி ஜூன் 25ந் தேதியே வருவதென முடிவானது

"இந்த நேரத்துல நீ தனியா போறது கஷ்டமா இருக்கு சதீஷ்... மறுபடி டிக்கெட் ட்ரை பண்ணி பாக்கலாமா?" என்றாள் மீரா

"இட்ஸ் ஒகே மீரா... ரெம்பவும் மைல்ட் அட்டாக் தான், பயம் ஒண்ணுமில்லைனு தான் டாக்டர் சொல்றாரு... அம்மா ரெம்ப பயந்து போய் இருக்காங்க... அதுக்காகத்தான் இப்பவே போறேன்... நீ இன்னும் 15 டேஸ்ல வந்துடுவ தானே" என முறுவலித்தான்

ஏர்போர்ட் சென்று அவனை அனுப்பி விட்டு வந்த போது, மனதில் ஏதோ வெறுமை சூழ்வதை உணர்ந்தாள் மீரா

"உன் பிரெண்ட் கூடவே போகணுமா?" என கேலி செய்து அவளை சிரிக்க செய்தான் ஸ்டீவ்

********************************************************

மீரா கிளம்புவதற்கு ஒரு வாரம் இருந்த நிலையில்...

"மீரா உனக்கு ஒரு சர்ப்ரைஸ்" என்றபடியே வந்தான் ஸ்டீவ்

"என்ன?" எனவும்

"கமிங் வீக் எண்ட் மம்மி டாடி இங்க வராங்க... அப்ப நம்ம விசயத்த அவங்ககிட்ட சொல்லலாம்னு இருக்கேன்... நீயும் அப்ப என் கூட இருக்கணும்" என்றான் அவள் கைகளை பற்றியபடியே

"நான்... நான்...எப்படி?" என மீரா தயங்க

"பின்ன நீ இல்லாம? கண்டிப்பா இருக்கணும்... அம்மா ரெம்ப சந்தோசபடுவாங்க கண்டிப்பா... அப்பா தான் கொஞ்சம்... பட் அம்மா வில் டேக் கேர் ஆப் ஹிம்..." என பெற்றவர்களின் நினைவில் புன்னகைத்தான்

"இல்ல ஸ்டீவ்... நான் இன்னும் எங்க வீட்ல இதை பத்தி சொல்லலியே" என ஏதேதோ காரணம் தேடினாள்

"அதான் நெக்ஸ்ட் வீக் இந்தியா போற தானே... அப்ப சொல்றதா தானே பிளான்... நான் இதை பிளான் பண்ணல மீரா... அவங்க வரேன்னு சொன்னதால தான்..." என அவளை ஆராய்வது போல் பார்த்தவன் "ஏன் இவ்ளோ தயங்கற?" என்றான் யோசனையாய்

"இல்ல ஸ்டீவ்... அது... சரி ஒகே" என்றாள், அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து

அவள் தாடையை தொட்டு திருப்பியவன் "என்னாச்சு மீரா? எனிதிங் ராங்?" என கேட்க

"இல்ல ஸ்டீவ்... I'm...I'm just a bit nervous... " எனவும்

"ஏய்...கூல் பேபி...எனக்கு என்னமோ உன்னை பாத்து அவங்க தான் நெர்வஸ் ஆவாங்களோனு டென்சனா இருக்கு" என வேண்டுமென்றே கேலி செய்து சூழ்நிலையை இலகுவாக்க முயன்றான்

அவன் மனம் வருந்தகூடாதென சிரித்த போதும், மீராவுக்கு உள்ளூற ஏனோ "இந்த சந்திப்பை இப்போது தவிர்ப்பது நல்லதோ" என தோன்றி கொண்டே இருந்தது


அடுத்த பகுதி படிக்க...


(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

19 பேரு சொல்லி இருக்காக:

மகி said...

ஐ பர்ஸ்ட்!!
:)))))))))

Mahi said...

இன்னிக்கும் மொத ஆளா கமென்ட் போட்டுட்டேன்,அதனால இளவரசிய ராணியாக்கிடுங்க அப்பாவி! ;)

சரி,நண்பர்கள் இணைந்தாச்சு,அடுத்து?

Thilse Senthil said...

//இங்க வைன் டேஸ்ட் பண்ணி பாத்து வாங்கலாம்... டேஸ்ட் பண்ணிட்டு வாங்கலைனாலும் ஒண்ணும் பிரச்சனை இல்ல...// Address address.. pls ;-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரொம்ப ஜில்லுன்னு ஜாலியாகப்போகுது இந்தக்கதை.

அடுத்து என்ன ஆகுமோன்னு நான் ஆவலுடன் அவசரப்பட்டா, ஒன்னுமே வேகமா நடந்திருக்காது.

அதனால் அடுத்து பெரியதாக என்ன ஆகுமோ என்றெல்லாம் ஆவலுடன் அவசரப்படுவதே இல்லை.

ஸ்லோ மோஷன் காதல் கதையல்லவா, அது அப்படித்தான் இருக்கும்.ஒரே ஒரு முத்தம் கொடுத்திருப்பார்கள் அல்லது ஒரே ஒரு காஃபி சாப்பிட்டிருப்பார்கள். ஏதோ ஒர்ரிரு வார்த்தைகள் பேசியிருப்பார்கள்.

இருப்பினும் ஐஸ்கிரீம் கப்பிலிருந்து துளித்துளியாய் ஸ்பூனில் எடுத்து சுவைப்பதுபோல வாராவாரம் கொஞ்சம் கொஞ்சமாக ... அடுத்த ஸ்பூன் அடுத்த துளி ... அடுத்த செவ்வாய் தான் ... ஜாலி தான்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். தொடருங்கள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹ்ம்ம்.. ஒருவழியா சதீஷ், ஸ்டீவ் பழைய மாதிரி ஆக்கிட்டீங்க..! நல்லா இருக்கு, அடுத்த வாரம் வரேன்.. :)

Charles said...

அடடா... ஒண்ணு கூடிடாங்கபா... ஒண்ணு கூடிடாங்கபா...
சதீஷ் இவ்ளோ நல்லவன்னு நினைக்கும் போது எனக்கு அழுவாச்சியா வருது... அவ்வ்வ்வவ்வ்வ்...
//அவன் மனம் வருந்தகூடாதென சிரித்த போதும், மீராவுக்கு உள்ளூற ஏனோ "இந்த சந்திப்பை இப்போது தவிர்ப்பது நல்லதோ" என தோன்றி கொண்டே இருந்தது//
வழக்கம் போல பொடி வைச்சு முடிச்சுடீங்க....
எல்லாம் சரி... கவிதை எங்கே???

Vasagan said...

Niagara on the lake ஒரு டூயட் பாடியாச்சு.

\"இந்த சந்திப்பை இப்போது தவிர்ப்பது நல்லதோ" என தோன்றி கொண்டே இருந்தது\

ஐயோ என்னா செய்ய போறே.

அனாமிகா துவாரகன் said...

@ Charles,
//சதீஷ் இவ்ளோ நல்லவன்னு நினைக்கும் போது எனக்கு அழுவாச்சியா வருது... அவ்வ்வ்வவ்வ்வ்...//
ha ha ha ha. Same blood.

//கவிதை எங்கே???//
Why this kolai veri?

@ Vasagan Maams,
//ஐயோ என்னா செய்ய போறே.//
ke ke ke ke.

@ Adapavi,
Why I could not see this post for sometime. Somebody did black magic to your blog I think.

siva said...

:) mee the firstu...

இராஜராஜேஸ்வரி said...

பிரமாண்டமான அந்த நீர் வீழ்ச்சியை பார்த்ததும் எல்லாம் மறந்தவர்கள் போல் மனதில் உற்சாகம் தோன்ற??

Nice...

எல் கே said...

அப்ப சீக்கிரம் கதை முடியப் போகுதா ஜாலி

vinu said...

engey engey engeyppaaa ellaarum enga aalu satheesai thittunavangaa...........

olungaa varisaila vanthu thalaila rendu kottu vaangittup pongaa appudiyey aalukoru thoppiyummmmm!!!!1

urrey urreyyyy

meera turns towards sathees......

meera and sathees only going to be together...

maapu steve unakku aappuuuuuu.......

aduththa vaaram thaaney meeraa neenga india vaarathu.....???

vantha udaney oru phone podunga....

maapi sathees nee oorukku vanthaachchaa... ennoda number sms anuppurean call me machchi...

let's meet at some where! Express Avenue ok vaa? nee oru vaarththai "umnnu" sollu machchi thookiralaam.....

evalovo pannittom ithaip panna maattamaa????

nanbandaaaaa!!!!!!!
sathees nartpanimandram....
chenai,
tmailnadu,
india.
[engalukku veru engum kilaigal kidaiyaathu..]

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

ரைட்டு. இன்னும் எவ்வளவு ட்சிஸ்ட் வைக்கிறீங்கன்னு பார்க்கிறேன். :)

Sri Seethalakshmi said...

அருமையான பதிவு.
ரொம்பநாள் கழிச்சு, படபடப்பு இல்லாம கதைய படிச்சி இருக்கேன் (முடிச்சி இருக்கீங்க) :-)

ஆனாலும் ஒரு வில்லனோட கேரக்டர், தடாலடிய ஹீரோ ரேஞ்சுக்கு மாத்திடீங்க... வாழ்துக்கள்... (ஹி ஹி ஹி)

Priyaram said...

கதை ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு. இந்த வார கவிதை எங்கே ?????? எங்க மாமியார்- க்கு கம்ப்யூட்டர் முன்னாடி உட்காருவதே புடிக்காது. உங்க கதைகளை படிக்க ஆரம்பிச்ச பிறகு மதியான நேரத்தில் வா அப்பாவி தங்கமணி பதிவுகளை படிக்கலாம்னு கூப்பிடறாங்க. நாங்க ரெண்டு பேறும் நகைச்சுவை - ல இருக்க ஒரு ஒரு போஸ்ட்டும் படிச்சிட்டு ஒரே சிரிச்சு கிட்டே இருந்தோம். இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

அனாமிகா துவாரகன் said...

Posting this in your blog might not make a difference to you. But, it does make a different to those who lost their beloved ones in the genocide. So please spread the news. We want the world to know what happened.

http://reap-and-quip.blogspot.com/2011/06/act-now-this-is-last-chance-to-show.html

Thank you.

Anamika

அப்பாவி தங்கமணி said...

@ மகி - எஸ் எஸ்... யு பர்ஸ்ட்...:)... மகி ராணியா... மகாராணியா? எது நல்லா இருக்குனு நீங்களே சொல்லுங்க மகி...;))

@ Thilse Senthil - அந்த ரெண்டு ஸ்பூன்க்கு இவ்ளோ தூரம் வர போறீங்களா...:))

@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - வாங்க ஆனந்தி..:)

@ Charles - ஆஹா... அழுவாதீங்க அழுவாதீங்க...:)).... கவிதை தானா தோணனும்... இன்னிக்கி தோணல...அதாங்க எழுதல...:))

@ Vasagan - நீங்க சொன்னப்புறம் தான் ஞாபகம் வருது... Niagara on the lake city ல ஒரு பார்ட் போட்டு இருக்கலாமேனு... ஹஹா... ஜஸ்ட் கிட்டிங்... ஆனா எனக்கு ரெம்ப பிடித்த இடம் அந்த Niagara on the lake city ல இருக்கற அந்த கடை வீதி walk ... நேரம் கிடைச்சா போய்டுவோம்...:))

@ அனாமிகா - ப்ளாக் மேஜிக் உன்னை தவிர யார் செய்ய போறா? போஸ்ட் படிக்கறத தவிர எல்லா ஆராய்ச்சியும் நடக்குது உங்க...அவ்வ்வ்வவ்...:))

@ siva - ஆஹா....இப்பவுமா...:))

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க

@ எல் கே - ஆமா முடிய போகுது...ஸ்வீட் எடு கொண்டாடு..:))

@ vinu - ஆஹா...சான்ஸ் கிடச்ச உடனே போட்டு தாக்குறீங்க வினோ... ஹா ஹா ஹா...சூப்பர்...:))

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - பாருங் பாருங்க...:))

@ Sri Seethalakshmi - வில்லன் எப்பவும் வில்லானாவே இருக்கறதில்ல... ஹீரோ எப்பவும் ஹீரோவாவே இருக்கறதில்ல... ஹா ஹா... நன்றிங்க....

@ Priyaram - வாவ்... சூப்பர் பாராட்டு இது... நன்றிங்க ப்ரியா... உங்க மாமியாருக்கும் தேங்க்ஸ் சொல்லிடுங்க... தொடர்ந்து படிக்கறதுக்கு ரெம்ப தேங்க்ஸ்... கவிதை தோணலைங்க அதான் போடலை... கேட்டதுக்கும் தேங்க்ஸ்..:))

@ அனாமிகா - நன்றி அனாமிகா

நிஜாம் என் பெயர் said...

மீரா first கிச் தருவதை ஒரு பத்து post போட்டு இழுத்து இருக்கனும்,
சரியில்ல சரியில்ல செல்லாது செல்லாது ..
இந்த மாதிரி friends இணையும் போது Dil Chahta Hai படத்தில் வர மாதிரி effect கொடுக்கணும், அப்ப தான் பதிவு hit ஆகும்,
நெறய comments வரும்.

நெறய யோசிக்கணும் அப்பாவி..

நானே இந்த மொக்க comment எழுத அஞ்சு நாள் யோசிச்சி இருக்கேனா , பாத்துகங்களேன்

அப்பாவி தங்கமணி said...

@ நிஜாம் என் பெயர் - :))

Post a Comment