Tuesday, June 21, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 23)



இந்த கதையின் முன் பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

"Steve, how do I look?" என மீரா கேட்க

"Could we get married today baby?" என கண்சிமிட்டி முறுவலித்தான்

"ஸ்டீவ்...ஜோக் அடிக்கறதுக்கு இதான் நேரமா?" என மீரா முறைக்க

"ஹேய்... I'm not joking...நான் ரெடி இப்பவே" என அவன் சிரித்து கொண்டே அருகில் வர

"ப்ளீஸ் ஸ்டீவ்... நான் டென்சனா இருக்கேன்... அத புரிஞ்சுக்காம...ச்சே..." என மீரா முகம் திருப்பினாள்

"என்ன மீரா இது? என்னோட அம்மா அப்பா தானே... என்னமோ job interview மாதிரி டென்ஷன் ஆகற... ரிலாக்ஸ் பேபி" என்றான்

"அவங்களுக்கு என்னை பிடிக்கும் தானே ஸ்டீவ்? I mean..." என அவள் தடுமாற

அவசியமின்றி தன்னை வருத்தி கொள்கிறாளே என கோபம் தோன்ற "மீரா..." என ஸ்டீவ் சற்று குரல் உயர்த்தவும், மீராவின் கண்ணில் கலக்கம் அதிகமானது

அதை கண்டதும், எதுவும் பேசாமல் சற்று நேரம் அவளை அணைத்து நின்றவன் "இங்க பாரு மீரா... நான் உன்கூட தானே இருக்கேன்... கூல் ஹனி..." என்றான்

"ஸ்டீவ்... நான் நெகடிவா பேசறேன்னு நினைக்காத... நீ அவங்ககிட்ட பேசினப்புறம் நான் அவங்கள மீட் பண்றது பெட்டர்னு என்னமோ என் instinct (உள்ளுணர்வு) சொல்லுது" என்றாள் இன்னும் அமைதியுறாத குரலில்

ஒரு கணம் பதில் பேசாமல் நின்றவன் "மீரா... அந்த பார்மாலிட்டி எல்லாம் பாக்கற ஸ்டேஜ் நாம தாண்டியாச்சுனு நான் நினைக்கிறேன். நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு இவ'னு சொல்ல போறேன் அவ்ளோ தான். இனி நான் உன்ன கம்பல் பண்ணல... உனக்கு இஷ்டம் இல்லேன்னா நீ கிளம்பு... நான் அவங்க வந்துட்டு போனப்புறம் போன் பண்றேன்" என்றவன், அவளை விட்டு விலகி நின்றான்

அவன் அப்படி சட்டென விலகி நின்றது மனதை வருத்த, அதை பொறுக்காதவள் போல் அவன் கைகளை எடுத்து தன் கன்னத்தோடு இழைத்து கொண்டாள்

அந்த செய்கை அவனை நெகிழ செய்ய "Come baby... lets arrange the dinner table" என அவள் கவனத்தை திசை திருப்ப முயன்றான்

ஏழு மணி போல் கதவு தட்டப்படும் ஓசையில் மீராவின் முகம் மாறுவதை உணர்ந்தான். அவள் கைகளை பற்றி எழுப்பியவன், பற்றிய கையை விடாமலே கதவை திறந்தான்

மகன் மட்டும் தான் இருப்பான் என்ற நினைவில் வந்த அவன் பெற்றோர் மீராவை கண்டதும் யோசனையாய் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்

அந்த பார்வையில் மீரா இன்னும் இறுகுவதை கண்ட ஸ்டீவ் "ஹாய் மாம் டாட்... திஸ் இஸ் மீரா... மீரா, மை மாம் அண்ட் டாட்" என பரஸ்பரம் அறிமுகம் செய்வித்தான்

சம்பிரதாயமாய் "ஹலோ.."க்கள் பரிமாறப்பட்டன. பொதுவான நலம் விசாரிப்புக்கு பின், என்ன பேசுவதென தெரியாமல் அமைதி சூழ "I will get you some coffee" என ஸ்டீவ் எழுந்து சென்றான்

அவன் பின்னோடு எழுந்து செல்ல தோன்றிய உணர்வை, அது நாகரீகமாய் இருக்காது என எண்ணியபடி, கட்டுப்படுத்தி கொண்டாள் மீரா

இந்த ஊரின் கலாச்சாரத்தில் ஆண் பெண் நட்பும், அதற்கு மேலான உறவும் இயல்பு தான் என்ற போதும், ஸ்டீவ் மீராவை அறிமுகம் செய்த விதத்தில் ஏதோ உறுத்தலாய் உணர்ந்தனர் அவன் பெற்றோர்

தோழி என்றோ, பெண் நண்பி என்றோ அறிமுகம் செய்வது தான் இந்த கலாச்சாரத்தின் வழமை. ஆனால் ஸ்டீவ் வேண்டுமென்றே, வெறுமனே மீரா என உரைத்தான் என தோன்றியது அவர்களுக்கு

அதிலும் மீராவை பற்றி தங்களிடம் எந்த முன்னறிவிப்புமின்றி, அவளை அறிமுகம் செய்தது, ஸ்டீவ் அந்த செய்கையின் மூலம் ஏதோ உட்செய்தியை கூற முயல்வது போலவும் அவர்களுக்கு தோன்றியது

ஸ்டீவின் அன்னை சிலியா, மீராவிடம் அவள் குடும்பம் பற்றி, கல்லூரி பற்றி என பொதுவாய் பேச முயன்றாள். அவர் அப்படி இயல்பாய் பேசிய விதத்தில் மீராவும் சற்று இறுக்கம் தளர்ந்து பேச தொடங்கினாள்

காபியை பெற்றோரிடம் அளித்து விட்டு, ஸ்டீவும் அரட்டையில் கலந்து கொண்டான். அதற்கு பின், மீரா நன்கு இலகுவாகவே பேசினாள். ஆனாலும், ஸ்டீவின் தந்தை எதுவும் பேசாமல் இருந்தது அவளுக்கு உறுத்தியது

ஸ்டீவிர்க்கும் அதே எண்ணம் தான். ஆனால் அவன் நோக்கமும் அது தான். தான் சொல்லாமலே அவர்களே மீரா யார் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமென நினைத்தான். அதன் காரணமாய் தான் முன்பே மீராவை பற்றி அவர்களிடம் சொல்லாததும்

அவனாய் எதையும் திட்டமிடவில்லை. பெற்றோர் Torontoவிற்கு ஏதோ வேலையாய் வருகிறார்கள் என்றதும், முதலில் அன்னையிடமேனும் மீராவை பற்றி குறிப்பு காட்டி விடலாமா என்று தான் முதலில் நினைத்தான். அதன் பின் ஏனோ, நேரிலேயே சந்திக்கட்டும் என விட்டுவிட்டான்

உணவு முடிக்கும் வரை அவன் தந்தை எதுவும் பேசவில்லை. அதன் பின் "சொல்ல வேண்டியதை சொல்" என்பது போல் மகனை பார்த்தார்

அதை புரிந்து கொண்டவனாய் "Mom, dad..." என ஒரு கணம் போல் தயங்கியவன், மீராவின் கைகளை பற்றியவன் "we want to get married" என்றவுடன்

எதிர்பார்த்த போதும் அதிர்ந்தவராய் "What?" என்றார் அவன் தந்தை மைக்கேல், நம்பாதவர் போல்

அப்படி ஒரு பதிலை அவன் விரும்பாத போதும் "Not right now dad... after we settle down in our career" என்றான் பொறுமையாய்

"I didn't ask for the wedding date" என மைக்கேல் குரல் உயர்த்தவும், பேச்சு போகும் திசையை உணர்ந்த சிலியா "மைக்கேல் ப்ளீஸ்.." என்றாள், பொறுமையாய் இருக்கும்படி வேண்டுவது போன்ற பாவனையுடன்

"Are you going to support him even now? Its his life, not just a piano lesson or fast food choice" என்றார் மைக்கேல் தன் மனைவியிடம் சற்று கோபமாய்

மீராவிற்கு அங்கிருந்து வெளியேற முடிந்தால் நன்றாய் இருக்குமென தோன்றியது. ஆனால் ஸ்டீவ் அவளை தன் அணைப்பில் இறுக பற்றி இருந்தான், இவள் என்னவள் என தன் பெற்றோருக்கு உணர்த்த முயல்பவன் போல்

தந்தையின் கோபம் ஸ்டீவை இறுக செய்தது. தன் வாழ்வு தன் விருப்பம் என தான்தோன்றியாய் எப்போதும் நினைப்பவன் அல்ல ஸ்டீவ். குடும்பத்தோடு நெருங்கிய உறவும் உணர்வும் உடையவன் தான். ஆனால், மீராவின் விசயத்தில் எந்த தடையையும் அவன் விரும்பவில்லை

அதோடு அவன் தந்தை இன்னும் தன்னை சிறு பிள்ளை போல் நடத்துவதை அவனால் ஏற்றுகொள்ள இயலவில்லை. வழக்கம் போல் தான் எது சொன்னாலும் செய்தாலும் குறை காணும் தந்தையின் மீது கோபம் துளிர்த்தது

எப்போதும் தந்தைக்கும் மகனுக்கும் வாக்குவாதம் வருவது தான். அதிலும் ஸ்டீவிர்க்கு அவன் அன்னை செல்லம் கொடுத்து கெடுக்கிறாள் என, அவன் எது செய்தாலும் கண்டிப்பார் மைக்கேல்

ஸ்டீவ் தன் கோபத்தை கட்டுப்படுத்தி நின்றான். மீராவின் முன் தன் பெற்றோரையே, பெற்றோரின் முன் மீராவையோ விட்டுத்தர அவன் மனம் ஒப்பவில்லை

மகன் அப்படி கட்டுப்படுத்தி கொண்டு நின்ற தோரணை தந்தையை பாதித்ததோ என்னவோ, மெல்ல குரல் இளக "Steve, just listen...I don't think..." என யோசனையாய் நிறுத்தி மீராவை பார்த்தவர் "lei non ti meriti" என்றார், மீராவுக்கு புரியாகூடாதென நினைத்தது போல் அவர்கள் தாய் மொழியில் (இட்டாலியன்)

அத்தனை நேரம் பொறுமையை இழுத்து பிடித்து நின்றவன் அதற்கு மேல் தாங்க இயலாமல் "How could you say that dad? how...." என பேசக்கூட விருப்பமில்லாதவன் போல் ஒரு கணம் அமைதியாய் நின்றவன், நிதானமாய் அதே நேரம் தீர்மானமான குரலில்

"Dad... She will be my wife whether you agree or not" என்றான்

அந்த சொல் அவன் தந்தையை பலமாய் தாக்கியதை மீராவால் உணர முடிந்தது. அவன் தந்தை என்ன சொல்லி இருப்பார் என மீராவால் யூகிக்க முடியாத போதும், என்ன தான் சொல்லி இருந்தாலும் பெற்றவரின் மனதை தாக்கும்படி என்ன பேச்சு இது என அவன் மீது தான் கோபம் வந்தது மீராவுக்கு

தான் இடையிட்டு ஏதேனும் சொல்லலாமா வேண்டாமா என குழம்பியவள் போல் மீரா தயக்கமாய் நின்றாள்

அவன் தந்தை, ஸ்டீவ் கூறிய வார்த்தையை பரிசீலிப்பவர் போல் சற்று நேரம் யோசித்தவர் "I see... whether we agree or not...did you hear that Celi..?"மைக்கேல் தன் மனைவியிடம், உன் பிள்ளை சொல்வதை கேட்டாயா? என நியாயம் கேட்பது போல் கேள்வியாய் நிறுத்தினார்

மகன் கூறிய வார்த்தை தன்னை பாதித்த போதும், தன் கணவர் பேசியதும் சரி இல்லையே என தோன்றியது சிலியாவுக்கு. ஒருத்தியை உயிராய் நேசிப்பவனிடம் "அவள் நீ கிடைக்க தகுதியற்றவள்" என்ற வார்த்தை கோபத்தை தூண்ட தானே செய்யும் என வழமை போல் தன் மகனின் செயலுக்கு நியாயம் தேட முயன்றது அந்த தாய் மனம்

விவாதம் போன விதம், தந்தை மகனிடையே பெரிய விரிசலை கொண்டு வந்து விடுமோ என பயந்தவள் போல் "Michael...please... calm down... they look like made for each other... don't spoil it" என சிலியா அமைதிப்படுத்த முயன்றது வீணானது

மனைவி சொன்னதே காதில் விழாதவர் போல், மகனிடம் திரும்பியவர் "Okay... just answer me this question Steve... Are you really sure she is the one?"

இவள் தான் உன் வாழ்வென்பதில் நீ உறுதியாய் இருக்கிறாயா என தந்தை கேட்டதும், ஒரு கணமும் யோசியாமல் "Yes dad... I'm sure...she is the one... ever..." என்றான் ஸ்டீவ்

"How sure?" என்றார் மைக்கேல்

ஏளனமான பார்வையுடன் தந்தை அப்படி ஒரு கேள்வி எழுப்பவும், இயல்பிலேயே முன்கோபியான ஸ்டீவை அது மீண்டும் நிதானம் இழக்க செய்தது

"Dad...what do you mean how sure? I'm telling you she is one...what else do you want to know?" என ஸ்டீவின் குரலும் இப்போது உயர்ந்தது

"I remember you were sure once before as well... when you got engaged with that German girl... are you more sure this time?" என்றார் மைக்கேல் ஏளனமாய், அடிப்படையயே அசைக்க போகும் உண்மை இதுவென அறியாமல்

மீரா அதிர்ச்சியில் உறைந்தே போனாள். அவனே மறந்த அந்த கடந்த காலத்தை பற்றி, தன் தந்தை பேசக்கூடுமென சற்றும் எதிர்பாராத ஸ்டீவ், என்ன செய்வதென தெரியாமல், மீராவின் முகத்தை பார்க்கும் தைரியமும் அற்றவனாய் நின்றான்

மீரா அதிர்ச்சியிலிருந்து மீள முயல்பவள் போல், மெல்ல ஸ்டீவிடமிருந்து தன்னை விடுவித்து கொள்ள முயல, அதை விரும்பாதவன் போல் அவளை தடுத்தவன் "மீரா..." என ஏதோ சொல்ல வர

"வேற ஒரு பொண்ணோடு கல்யாணம் வரைக்கும் யோசிச்சயா ஸ்டீவ்?" என்றாள் மீரா, இன்னும் அதை நம்பாமல், மேலும் நம்ப விரும்பாதவளாய்

"ஆமாம் என்று சொல்லி விடாதே" என கெஞ்சுவது போன்ற அவள் பார்வை ஸ்டீவை கொல்வதாய் இருந்தது

"மீரா...ப்ளீஸ்... ஜஸ்ட்... நான் சொல்றத..." என அதற்கு மேல் என்ன சொல்வது, எப்படி புரிய வைப்பது என புரியாதவனாய் ஸ்டீவ் திகைத்து நின்றான்

ஸ்டீவின் பெற்றோருக்கு தமிழ் சரளமாய் பேச வராத போதும், அத்தனை வருடம் தமிழகத்தில் இருந்ததில் தமிழ் ஓரளவிற்கு நன்றாக புரிய செய்யும்

மீராவிற்கு ஸ்டீவின் கடந்த காலம் பற்றிய உண்மை தெரிந்திருக்கவில்லை என்பதை நம்ப இயலாமல் பார்த்தாள் அவன் அன்னை சிலியா. அவன் தந்தைக்கும் அதிர்ச்சி தான்

ஆனால் அடுத்த கணமே, இப்படி ஒருவரை பற்றி ஒருவர் எதுவும் தெரியாமல் சரியான புரிதலின்றி வாழ்வில் இணைந்தால் இந்த உறவு நிலைக்குமா என்ற கேள்வி தான் அவர் மனதில் எழுந்தது

எந்த ஊரில் எந்த கலாச்சாரத்தில் என்றாலும் பிள்ளைகள் நலனை பேணுவதே முதல் முக்கியம் என நினைப்பது தானே பெற்றோரின் இயல்பு. அதிலும் தந்தை என்ற பொறுப்பில் மைக்கேல் எப்போதும் பிள்ளைகளின் எந்த முடிவையும் உடனே ஒத்துகொண்டதில்லை

ஒன்றுக்கு நூறு முறை, இது சரியா? இதன் சாதக பாதகம் என்ன? இதனால் பிள்ளைகளின் வாழ்வு மேம்படுமா? மற்றவரின் விமர்சனத்துக்கு தன் மக்கள் ஆளாக நேரிடுமா? என எல்லாமும் யோசிப்பவர் மைக்கேல்

அதனாலேயே, பிள்ளைகளிடம் கண்டிப்பான தந்தை என்ற தோற்றம் நிலைத்தது. பல தருணங்களில் நெகிழும் மனதை கட்டுப்படுத்தி, அந்த தோற்றத்தை தக்கவைத்து கொள்வார். தன் நெகிழ்வில் பிள்ளைகள் ஆதாயம் தேடி கொள்ளக்கூடாதென தன் மனதை மறைத்து கொள்வார்

அதிலும் கடைசி பிள்ளையான ஸ்டீவ் அப்படியே மைக்கேலின் தந்தையை உரித்து வைத்தது போல் தோற்றத்தில் / செய்கைகளில் இருந்ததில், அவன் மீது தனி கவனம் அவரையும் அறியாமல் பதிந்தது

மற்ற பிள்ளைகள் பணி, குடும்பம் என நிலைத்த பின், ஸ்டீவின் வாழ்வு சரியாய் அமைந்து விட்டால் தந்தையாய் தன் கடமை சரி வர முடிந்து விடும் என்ற எண்ணமே இப்போது அவர் மனதில் இருந்தது

அந்த அக்கறையில் தான், இப்படி அதிகம் தெரியாத பெண்ணிடம் வெறும் இனகவர்ச்சியில் மனதை இழந்து வழி மாறி போய் விடகூடதென, வார்த்தைகளை விட்டார்

அறியாமல் செய்தது தான் என்றாலும், மீராவிடம் மகன் மறைக்க நினைத்ததை தான் கூறி விட்டோமே என முதலில் அதிர்ந்த போதும், அதுவும் நல்லதற்கு தானோ என இப்போது தோன்றியது

தன் செயலுக்கு ஞாயம் கற்பிக்க நினைத்தவர் போல் "Did you hear that Celia? She doesn't even know your son was engaged once... and you say they're made for each other...hmm..." என்றார் தன் மனைவியிடம்

இனி...

முதலும் முற்றுமாய்
மனதில் நானேயென
கர்வத்தில் இருந்தஎனை
கணநேரத்தில் கொன்றாயே

நமக்குள் ரகசியமெனில்
நகைத்து சுகம்பெறலாம்
நானறியா ரகசியமெனில்
நம்உறவே நகைப்பாகிறதே

காதலில் தோல்வியுற்றால்
கண்ணீரோடு கரைந்துவிடும்
காதலே பொய்எனும்போது
கண்ணீருக்கும்தான் அர்த்தமென்ன!!!


அடுத்த பகுதி படிக்க...


(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

51 பேரு சொல்லி இருக்காக:

Mahi said...

கரெக்ட்டா வந்துட்டேன் புவனா! :)

Mahi said...

மீராவோட சேர்த்து, என்னையும் நல்லா குழப்பிட்டீங்க, அடுத்தது என்ன?

Sathya's said...

திரைக்கதையில் இங்க தான் ஒரு ட்விஸ்ட்டு!! அருமை.. அடுத்த செவ்வாய் வரைக்கும் வெயிட் பண்ணனும் :(

Elam said...

கதை ரொம்ப சுவாரஷ்யமா தான் போகுது..

Keep going...

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஜில்லுனு போய்கொண்டிருந்த கதையில் இந்த வாரம் ஜில்லாப்பு இல்லாமல், சற்றே சூடு ஏற்றி விட்டீர்கள். மொத்தத்தில் கதை இந்த அத்யாயத்தில் தான் சூடு பிடித்துள்ளது.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

[உங்களின் இந்தக் காதல் கதையைப்படித்து வரும் எனக்கும், ஒரு காதல் கதை எழுத வேண்டும் போல ஆசை ஏற்பட்டு, “மறக்க மனம் கூடுதில்லையே” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளேன். முடிந்தால் படித்துவிட்டு ஜில்லுனு ஏதாவது கருத்து கூறுங்களேன்]

பிரதீபா said...

Inga paarraa twist-u.

Sathish A said...

இந்த பய ஸ்டீவ் காவாலி பயன்னு சொன்னோம் இல்ல மீரா .....

அனாமிகா துவாரகன் said...

@ Sathish A,
Hello, even divorce is accepted in our society now. Its just an engagement.

Steve Rasigar Sangam
Aussie Branch

அனாமிகா துவாரகன் said...

@ Adapavi,
I didnt have to read the story. The picture itself said it clearly. Grrrrrrrrrrrrr. I am in the airport and reading this. Sad. Grrrrrrrr.

P.S: You know what. My wish came true. Somebody is flying with me. Big Surprise.

siva said...

meeeeeeeeeee the firstu..

good story

siva said...

how it is possible.

how this steeve do like this,

i can accept meera's cry.

please dont let her to cry.

i am so upset :)))

Sathish A said...

@அனாமிகா துவாரகன்,
Diverse is accepted in our society, but hiding about diverse/engagement to the girl who is going to marry is still not accepted Madam....

siva said...

(sorry for grammer and spell mistakes)
i cant accept..
meera's cry...

Please meeraaa dont cry.......

vinu said...

அனாமிகா துவாரகன் சொன்னது…
@ Sathish A,
Hello, even divorce is accepted in our society now. Its just an engagement.

Steve Rasigar Sangam
Aussie Branch



////


aanaa naanga[meera & sathees] Aussie illaiyey we from india.... especialy from Tamilnadu.... sesitive state in terms of love....and tredtion....thambi steve unakku aapuuuuuuuuuuuuu

///////Sathish A சொன்னது…
@அனாமிகா துவாரகன்,
Diverse is accepted in our society, but hiding about diverse/engagement to the girl who is going to marry is still not accepted Madam....//////

thambi sathissu nee eppappaa oorukku vanthey unkittey phone panna sonnenla.... aaanga 10 auto ready, namma sontha banthanga ellaam ready oru vaati angittup poi inth "stevai" pottutu vanthuralaamaa.... nee mattum umm sollu machchi.... unnoda selavulathaan ellaama.... nee imbuttu sonnathukkkup appuram naanga maruppamaa......

@reader: Sathi A::::well said frnd!


//////siva சொன்னது…
(sorry for grammer and spell mistakes)
i cant accept..
meera's cry...

Please meeraaa dont cry.......//////

vaayaa vaaa imbuttu naalu enga machchaan satheesu aluthappoo varuththappadaathaa neenga ellaam ippo meeraa alurathu mattum uruththuthoooo.... goyaala... pichup puduven pichchu...!

//////அனாமிகா துவாரகன் சொன்னது…
P.S: You know what. My wish came true. Somebody is flying with me. Big Surprise.//////

appa neengalum Airporttula iranginathum unga parents munnaadi intha Mr.X kaiyaip pudichchukittu poi ninnu
" "Mom, dad..." என ஒரு கணம் போல் தயங்கி, Mr.Xன் கைகளை பற்றி "we want to _________[go to baalaavin "avan -ivan" movie]/[be a gud friends ]" appudeenu sollap poreeengalaaa.....

he he he he he doubttuuuuuuuu

இராஜராஜேஸ்வரி said...

. ஒருத்தியை உயிராய் நேசிப்பவனிடம் "அவள் நீ கிடைக்க தகுதியற்றவள்" என்ற வார்த்தை கோபத்தை தூண்ட தானே செய்யும் என வழமை போல் தன் மகனின் செயலுக்கு நியாயம் தேட முயன்றது அந்த தாய் மனம்//

அருமையான வரிகள். பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

ஜில்லுன்னு இருந்த காதல் கொஞ்சம் உருகியதே.!

எல் கே said...

தப்புதான். சொல்லி இருக்கணும். சரி சரி இது இன்னும் ஒரு வருஷம் வரும் .. அனாமிகா , நீ போயிட்டு வந்து பார்த்தாலும் கதை முடியாது

Vasagan said...

Padathai parthavudan some thing going to be wrong nu manasukku padathu.

Hmm oru mudichu podutae, eppadi intha mudichai romantica solve panuraenu parka padika waiting.

asiya omar said...

கதை செமையாக போகுதே!

சி.பி.செந்தில்குமார் said...

>>காதலில் தோல்வியுற்றால்
கண்ணீரோடு கரைந்துவிடும்
காதலே பொய்எனும்போது
கண்ணீருக்கும்தான் அர்த்தமென்ன!!!

டச்சிங்க்

Thanai thalaivi said...

காதல் கதைகளை நான் அவ்வளவாக விரும்புவதில்லை. ஆனால், உங்கள் நடை மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த ப்ளாக் விஷயமெல்லாம் இன்னமும் சரியாக புரியவில்லை. நான் ப்ளாக் தொடங்கி முன்று மாதங்கள் ஆகின்றன ஆனால் இதுவரை பெயரில்லாமல் இருந்த தற்கு அதுவே காரணமாகும்.

Thanai thalaivi said...

my blog address : www.thanaithalaivi.blogspot.com

RAMVI said...

”எந்த ஊரில் எந்த கலாச்சாரத்தில் என்றாலும் பிள்ளைகள் நலனை பேணுவதே முதல் முக்கியம் என நினைப்பது தானே பெற்றோரின் இயல்பு.”
ரொம்ப கரைக்டாக சொல்லியிருக்கிறீர்கள்.

பத்மநாபன் said...

சரியாக திருப்பத்தில் வந்து கதையில் சேர்ந்துவிட்டேன்... இனி மீராவின் கோப படலம் ஆரம்ப்ம் ..

Priyaram said...

கவிதை சூப்பர்.... எல்லா நாளும் செவ்வாய் கிழமையாய் இருக்க கூடாதான்னு இருக்கு. கதை நல்லா போயிட்டு இருக்கு....

Sri Seethalakshmi said...

வழக்கம் போல கதை மிக அருமை.
கவிதை கருத்தாக்கம் உள்ளதாய் அமைந்துள்ளது.

எனக்கு ஒன்னு மட்டும் புரியல...
நம்மேல் அன்புள்ள ஒருவன்(ர்), ஒரு ரகசியத்தை சொல்லவில்லை என்றால் அது மறைக்கப்பட வேண்டிய ரகசியம் என்று அர்த்தமல்ல, மாறாக நாம் துன்பப்பட நேருமோ என்று நம் மேல் உள்ள அதித அன்பால் வந்த விளைவு...

steve வின் பழைய காதல் நிச்சயம் வரை போய் இருக்கலாம் ஆனால் அது அன்பால் விளைந்த காதலாய் இருக்க முடியாது என்பது என்னுடைய கருத்து :-)

இதை எப்போது தான் இந்த மீரா போன்ற பெண்கள் புரிந்து கொள்வார்களோ...

அன்னு said...

ஹ்ம்ம்... விதி வலியது... அதுவும் ‘அப்பாவி’ என்ற பேரில் ‘அடப்பாவி’ கதாசிரியர் இருந்தால்...!!

அப்பாவி தங்கமணி said...

@ Mahi - தேங்க்ஸ் மகி... நீங்க கண்டிப்பா வருவீங்கன்னு தெரியும்...:))... குழப்பிட்டேனா? ஐ...ஜாலி... ஹி ஹி... அடுத்து அடுத்த எபிசொட் வரும் மகி...:)))

@ Sathya's - தேங்க்ஸ்'ங்க சத்யா... :)

@ Elam - நன்றிங்க

@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்... உங்க கதை கலக்கலா போயிட்டு இருக்கு... அடுத்த எபிசொட் போட்டுட்டீங்க போல இருக்கு... இதோ வந்துட்டே இருக்கேன்.. நன்றி ...:)

@ பிரதீபா - ஆமாங்க அம்மணி...:))

@ Sathish A - ஹா ஹா ஹா... சான்ஸ் கிடைச்சதும் அந்த சதீஷ் மாதிரியே இந்த சதீஷும் பஞ்ச் டயலாக் சொல்ல ஆரம்பிச்சுட்டாரே...:)

@ அனாமிகா - இது எப்போல இருந்து... போன வாரத்துல இருந்து தானே... ஒகே ஒகே...:))) flying ஆ? நடத்துங்க அம்மணி நடத்துங்க...:)))

@ siva - ஆஹா.. ரெம்ப சென்டியா போயிட்டு இருக்கே சிவா...:))

@ Sathish A - Yes, I agree with you in this regard...whatever valid reasons given, it is not easily forgiven by the concerned person... lets see how it goes...:)

@ vinu - ஸ்டீவுக்கு ஆப்பா? இருங்க மீராகிட்ட கேட்டு சொல்றேன்..:) அதானே, சதீஷ் பீல் பண்ணினப்ப யாருமே கண்டுகலியே... நீங்க ஒருத்தர் தான் சதீஷ்க்கு சப்போர்ட் பண்றீங்க... சதீஷ்கிட்ட உங்க ஆதரவை சொல்லிடறேன்...;) அந்த கேள்விக்கு அனாமிகா தான் பதில் சொல்லணும்..:)

அப்பாவி தங்கமணி said...

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க... எனக்கும் பிடிச்ச வரிகள்...

@ எல் கே - ஒரு வருஷம் எல்லாம் இல்லை... ஜூலை'யுடன் முடிந்து விடும்...:)

@ Vasagan - ஹா ஹா... சரியா யோசிச்சு இருக்கீங்க... நன்றி..:)

@ asiya omar - நன்றிங்க ஆஸியா...

@ சி.பி.செந்தில்குமார் - நன்றிங்க

@ Thanai thalaivi - நன்றிங்க தொடர்ந்து படிப்பதற்கு... ப்ளாக் அட்ரஸ் குடுத்ததுக்கு ரெம்ப தேங்க்ஸ்...

@ RAMVI - நன்றிங்க ராம்வி..

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா..:)

@ Priyaram - ஆஹா... thanks for the compliment... :)

@ Sri Seethalakshmi - ஆஹா... நீங்க சொன்னதுல ஒரு லைன் பின்னாடி வரும் ஒரு எபிசொட்'ல தான் கொண்டு வரணும்னு நினைச்ச லைன்... பேசாம உங்களையே கதையே continue பண்ண சொல்லலாம் போல இருக்கே சீதா...:)) ரெம்ப நன்றிங்க...

@ அன்னு - ஹா ஹா ஹா... நேத்து தானே அன்னு facebook ல எனக்கு சப்போர்ட் பண்ணினீங்க... இப்படி ஒரே நாளுல அநியாயமா கட்சி மாறுவது சரியா...:)))

priya.r said...

எனக்கு நிறைய சந்தேகம் .............

1 எப்படி மகி க்கு மட்டும் எப்போதும் முதல் இடம்!

2 சுனாமி என்ன தான் சொல்றா?

3 படத்தை பார்த்ததும் எனக்கு மட்டும் ஏன் சாப்பிடும் லேஸ் நியாபகம் வந்தது !

4 .நீ காதல் கதை எழுதறியா ;இல்லே ட்விஸ்ட் வச்சு ட்விஸ்ட் வச்சு மர்ம கதையையும் சேர்த்து எழுதறியா

5 . ஆங்கில தாக்கம் அதிகமோ

6 ."கவிதை கருத்தாக்கம் உள்ளதாய் அமைந்துள்ளது." என்று எழுதிய
சீதாவின் தமிழ் புது மெருகோடு இருப்பதன் ரகசியம்

7 .தானை தலைவின்னு கெக்கே பிக்குனி யை தானே சொல்லி கிட்டு இருந்தோம் ;இப்போ இன்னொரு தானை தலைவி ?!

8 . கொடியை என்ன தான் செய்தே :)

இனி கதைக்கு வருவோம்

ஒரு வெளிநாட்டு காரனை காதலிக்க துணிந்த மீரா அவனுடைய பழைய விசயங்களுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்க வேண்டாமே .............................

என்ன வேண்டாமா ;வேற ஏதாவது பேசலாமா

சரி ! நயாகரா வில் உள்ள கடை வீதியில் என்ன வெல்லாம் வாங்கினே :))))

அப்பாவி தங்கமணி said...

@priya.r - உங்க சந்தேகங்கள் எல்லாம் சூப்பர்... கேள்வியின் நாயகினு உங்களுக்கு பட்டம் ரெடி ஆய்ட்டு இருக்காம்... :))
- மகி முதல் கமெண்ட் போடறதால முதல் இடம்...ஹா ஹா...:))
- சுனாமி நெறைய விஷயம் சொல்றா... நீங்க எதை பத்தி கேக்கறீங்க...:))
- ரெம்ப சிப்ஸ் சாப்பிடுரீங்கனு நினைக்கிறேன்.. அதான்....:))
- காதல் பாதி மர்மம் பாதி கலந்து செய்த கதை எனது...:))
- என்ன செய்ய? ஸ்டீவோட அம்மா அப்பாவுக்கு தமிழ் தெரியாதே... அவங்க தமிழ் பேசற மாதிரி எழுதினா நான் நினைக்கற பீல் கொண்டு வர முடியாதுனு எனக்கு தோணுச்சு... அதுக்கு இன்னும் கொஞ்சம் திறமை வேணுமோ..:))
- சீதா கொஞ்ச நாளா இந்த பக்கம் வர்றதில்ல... அதான் தமிழ் மெருகோடு இருக்குதோ...:))
- ஐயையோ... நான் ஒண்ணும் சொல்லலை... மீ எஸ்கேப்...;))
- கொடிய என்ன செய்ய முடியும்? கம்பத்துல பறக்க விட்டுட்டேன்...:)) (நோ offense கொடி... டோட்டலி கிட்டிங்...:))

இனி கமெண்ட்க்கு வருவோம்...:))
//ஒரு வெளிநாட்டு காரனை காதலிக்க துணிந்த மீரா அவனுடைய பழைய விசயங்களுக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்க வேண்டாமே//
அக்கா... இதை பத்தி ஒரு பதிவு எழுதி வெச்சு இருக்கேன்... மீரா ஸ்டீவ் காதல் பத்தி இல்ல... அங்கும் / இங்கும் பத்தி... கொஞ்சம் எடிட்டிங் பாக்கி இருக்கு... முடிஞ்சா நெக்ஸ்ட் வீக் போடறேன்... சரியா...இதுக்கு நான் answer பண்ணினா அதையே கமெண்ட்ல சொல்ற மாதிரி இருக்கும்... சோ....waiteees .....:))

Thanai thalaivi said...

@ priya : nan Madras thalaivinga ! kudumbamkira thanaiyai vazhi nadathuvathal nane sorry thane peru vachikiten.

priya.r said...

@ thanai thalaivi

தலை நகர் தானைதலைவி அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி .
பேரிக்கா மன்னிக்கவும் அமெரிக்கா தானை தலைவி அப்பாவியை சூப்பர் ஆ கலாய்ப்பார்கள்
நீங்க எப்படி ?!

priya.r said...

Mahi கூறியது...
கரெக்ட்டா வந்துட்டேன் புவனா! :)//

ஏனுங்க மகி !
அந்த ரகசியத்தை எங்களுக்கும் கொஞ்சம் சொல்றதுங்க :)

Thanai thalaivi said...

நன்றி ப்ரியா,

தங்கமணியை கலாய்கிற அளவுக்கு இன்னும் வரலைங்க, இப்போதைக்கு அவங்களை அண்ணாந்து பார்த்து கிட்டிருக்கேன் அவ்வளவுதான்.

priya.r said...

@ தானை தலைவி
நான் சொல்றதை நீங்க நம்புவீங்களோ என்னவோ !

எனக்கும் முதலில் அப்படி தாங்க இருந்தது ! அப்புறம் தாங்க கவனித்தேன்!

நாம்ப தரை தளத்திலஇருக்கோம் ;அப்பாவி மேல் தளத்திலே இருக்கார்ன்னு !

குடு குடுன்னு ஓடி அப்பாவி இருக்கிற தளத்துக்கே போய்ட்டோம் இல்லே !!
அண்ணாந்து பார்க்கும் போது இருந்த கழுத்து வலியும் இப்போ இல்லே :))))

Thanai thalaivi said...

@ priya : irukalam, ama, thangamaniyai kalaika ennai induce pandra matiri iruke? intha vilaiyatuke nan varallaipa.

அப்பாவி தங்கமணி said...

@ பிரியா'க்கா - அடப்பாவி... பேசாம இருக்கறவங்களை எல்லாம் என்னை கலாய்க்க தூண்டி விடும் உங்கள் மீது மான நஷ்ட வழக்கு போட போறேன்...:))

@ Thanai thalaivi - ஆஹா... என்னை வெச்சு காமடி கீமடி பண்ணலியே..:))))

Thanai thalaivi said...

தங்கமணியை கலாய்போர் சங்கத்திற்கு ஆள்சேர்க்கும் வேலை மும்முரமாய் நடக்கிறது போலிருகிறதே? சொல்லமுடியாது நானும் டெம்ப்ட் ஆகி சேர்ந்தாலும் சேர்த்து விடுவேன்.

priya.r said...

நீங்க வந்தீங்கன்னா உங்களுக்கு லாப் டாப் எல்லாம் இலவசமா கிடைக்கும்

அப்புறம் கனடா போய் வர பயண சீட்டு ,அப்பாவியை சந்தித்து உரையாட அனுமதி எல்லாம் உண்டு

சென்னை தமிழில் கலாய்ச்சா பண முடிப்பும் உண்டாம் :))

priya.r said...

அப்பாவியின் மனநிலை :

யாராவது எங்கே ஜில்லை காணோம் என்று கேட்டா கொஞ்சம் பிகு பண்ணிட்டு நாளை போட்டுடலாம்

யாரும் கேட்கலைன்னா இன்னைக்கே போட்டுடலாம்

அக்காவின் மனநிலை :

இந்த ரீல் அப்பாவி கேட்கலைன்னாலும் ஒரு மூச்சு புலம்புவா

கேட்டாலும் ரெம்ப தான் பிகு பண்ணிக்குவா

இப்போதைக்கு எதுவும் கேட்க வேணாம்

பதிவு போடட்டும் அவங்களை ஒரு வழி பண்ணிடலாம் .............

சுனாமியையும் காணோம் ; கொடி,மகி ,அனு(அன்னு),சீதா,புது வரவு தலைவி சப்போர்ட் கேட்போம் :))

அப்பாவி தங்கமணி said...

@ Thanai thalaivi - This is not fair...me appavi u know and you should support me, not that gangster Priya...:))

@ Priya.r - ஆயிரம் கைகள் தடுத்தாலும் ஆதவன் மறைவதில்லை... இல்லை...ல்லை...லை...:))))))))))))))))))

Thanai thalaivi said...

ஆயிரம் கைகள் தடுத்தாலும் ஆதவன் மறைவதில்லை...
சாயங்காலம் ஆனா தானே மறைஞ்சிடும்.

enna sangathula member aithena?

priya.r said...

YES.Welcome Welcome

Yr memember ship no is 003
me thaan thalaivi 006
Secretary oruthi irugga008

sangathai konjam develop seiyyanum!
veliye irunthu niraya peru aatharavu tharaanga Ms.TT :))))

அப்பாவி தங்கமணி said...

Priya & Thanai Thalaivi - ரெண்டு பேரையும் தள்ளி வெக்கறேன்... ஆரும் அவங்க கூட கமெண்ட் போஸ்ட் பகிர கூடாது...ஆமா சொல்லிட்டேன்...:)))

priya.r said...

இன்று மாலை நமது சங்கத்தின் செயற்குழு கூட்டம்

மாண்புமிகு கீதா மாமியின் போர் வாள் தி.திலகா தலைமையில்

நடை பெற இருக்கிறது ;சங்க செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு

கேட்டு கொள்கிறோம்

புது உறுப்பினர் தா .தலைவி அவர்களை வரவேற்று பாராட்டு மடல் வாசிக்க படும் !!

அப்பாவியின் டப்பா மிரட்டல்களை எப்படி சமாளிப்பது என்று சிறப்பு பயிற்சியும் உண்டு :))))

அனாமிகா துவாரகன் said...

ஸ்டீவ் மறைச்சது சரின்னு சொல்லல. சும்மாவே மீரா அரை லூசு. இதையும் சொல்லி அது முழு லூசாக மாறினால் எதுக்கு வில்லங்கம்னு சொல்லாமல் விட்டிருக்கலாம்.

கலாசாரம், பண்பாடு அது இது ல எல்லாம் எனக்கு மதிப்பு இருக்கு. அந்த காலத்திற்கு ஏற்ற மாதிரி அவங்க செட் பண்ணினது. எல்லாம் மனிதனால் ஏற்படுத்தியவை தான். மனுசன் தோன்றின உடனேயே கலாசாரம் சில்லெடுப்பெல்லாம் சிப்பில போட்டு அவன் மூளையில் யாரும் படைக்கல. இந்த காலத்திற்கு நிறைய சரி வராது. பெரியவங்களுக்கு மதிப்பு கொடுன்னு தான் எல்லா காலத்திலேயும் சொல்லுறாங்க. வயசில அதிகமானவங்க எல்லாம் பெரியவங்களா? சைக்கோக்களை, கொலைகாரனை கொள்ளைக்காரனை எல்லாம் வயதில பெரியவங்கன்னு மதிக்க வேணுமா? எப்படி சில விதி விலக்கு இருக்கோ, அப்படித்தான் திருமணமும் டைவோசும். எதுவும் 100% கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டும் என்றில்லை. இங்க மட்டும் கலாசாரம் இல்லைன்னு சொல்லமுடியாது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு பண்பாடு இருக்கு. நம்மது தான் பெரிசு, சுப்பருன்னு பேசி நம்மளோட தப்புகளை கவர் அப் பண்ணுவதே எங்கள் ஆட்களுக்கு தொழிலாகப் போய்ச்சு.

அனாமிகா துவாரகன் said...

ஹி ஹி. எப்படி கார்த்தி சார் நீங்க .நான் பாட்டியானப்புறம் கூட இது முடியாது. ஐ நோ. ஹி ஹி.

அனாமிகா துவாரகன் said...

அப்புறம் எங்கிட்ட கேக்காம நீங்களாகவே புது உறுப்பினர்களை சேர்க்கறது நல்லா இல்லே பிரியாக்கா. எந்த புத்தில எந்த பாம்போ. நம்ம கூட சேர்ந்து நம்ம ரகசியத்தை எல்லாம் அப்பாவிக்கிட்ட போட்டுக்கொடுத்திட்டா. அதனால கொஞ்சம் அவசரப் படாம, பாத்து ஆள் சேருங்க. சரியா?

போகிற போக்கில் கொளுத்தி போடற சங்கம்.

அனாமிகா துவாரகன் said...

தானை தலைவிக்கா,
கொஞ்சம் காதை கொடுங்க. நான் இப்படி சொல்லிட்டேன்னு நீங்க பொங்கனும். அதைப் பார்த்து அப்பாவி உங்கள அவங்களோட ஸ்பையின்னு நம்பிடனும். அப்படியே அவங்க உங்ககிட்ட எதையாவது உளறினா, நம்ம குழுக்கிட்ட போட்டு கொடுக்கணும் சரியா.

அனாமிகா துவாரகன் said...

Welcome to our club

Post a Comment