Tuesday, June 28, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (பகுதி 24)


இந்த கதையின் முன் பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

தன் செயலுக்கு நியாயம் கற்பிக்க நினைத்தவர் போல் "Did you hear that Celia? She doesn't even know your son was engaged once... and you say they're made for each other...hmm..." என்றார் மைக்கேல் தன் மனைவியிடம்

சிலியாவின் கவனம் மொத்தமும் மீராவின் மீது நிலைத்து இருந்தது. உணர்ச்சியை முகத்தில் காட்டாமல் மறைக்க முயன்று தவித்து கொண்டிருந்த மீராவின் முகமும், அதை கண்டு ஸ்டீவ் வருந்தியதும் மட்டுமே அவள் பார்வையில் பதிந்தது

அதுவரை தன்னை கட்டுப்படுத்தி கொண்ட மீரா, மைக்கேல் சொன்னதை கேட்டதும், முயன்று தன்னை ஸ்டீவிடமிருந்து விடுவித்து கொண்டாள். அவன் தடுக்க முயன்றதை பொருட்படுத்தாமல், விரைந்து கதவை திறந்து வெளியேறினாள்

"மீரா..." என அழைத்து கொண்டே அவள் பின்னோடு சென்றான் ஸ்டீவ்

லிப்ட் அருகில் வந்து நின்றவளை "மீரா ப்ளீஸ்... Just let me explain.. please honey.." என ஸ்டீவ் கூறியது தன் காதிலேயே விழாதவள் போல் வேறு புறம் பார்வையை திருப்பினாள்

ஸ்டீவ் ஏதோ சொல்ல தொடங்கவும், மீரா லிப்ட்'க்கு நிற்க பொறுமையற்று படிகளில் இறங்க தொடங்கினாள். ஸ்டீவ் அவளை பிடித்து நிறுத்த முயல "Stay off me Steve... எனக்கு உன்ன பாக்கவே பிடிக்கல... லீவ் மீ அலோன்" என அவன் கையை உதறிவிட்டு படி இறங்கினாள்

அவளை நகர விடாமல் மறித்து நின்றான் ஸ்டீவ். "மீரா... நான் வேணும்னு மறைக்கல... நீ என்ன தப்பா நினைச்சுடுவியோனு... மீரா... எனக்கு நீ வேணும்... ப்ளீஸ்... இந்த ஒரு சின்ன விசியத்துக்காக என்னை விட்டு போகாத ப்ளீஸ்" என்றான்

அவன் சின்ன விஷயம் என்றதும் கோபம் கட்டுக்கடங்காமல் போக "என்ன சொன்ன? சின்ன விசயமா? ஓ... நாளைக்கு என்னை விட்டுட்டு போனப்புறம் வேற ஒருத்திகிட்ட இதையும் சின்ன விஷயம்னு தான் சொல்லுவ இல்லயா?" என சீறினாள்

அழுது விடாமல் இருக்க தன்னை இறுக்கி கொண்டு, வேதனை மொத்தமும் கண்களில் தாங்க நின்றவளை காண சகியாதவனாய் "ஐயோ... இல்ல மீரா... உன்னை விட்டு போறதா? என்னால அதை கற்பனை கூட பண்ண முடியல... மீரா, இங்க பாரு..." என அவள் முகத்தை தன் கைகளில் ஏந்தியவன்

"ப்ளீஸ் மீரா... ஜஸ்ட் பிலீவ் மீ... நான் எந்த தப்பும் செய்யல... நானே மறந்து போன ஒரு பழைய கதை அது... அதை சொல்லி நீ என்மேல வெச்சுருக்கற அன்பு குறைஞ்சுடுமோனு பயந்து தான் உன்கிட்ட மறைச்சேன்..." என தன்னை நியாயப்படுத்த முயன்றான்

அது வரையும் கூட இது பொய்யாய் இருக்குமோ, எல்லாம் ஒரு தவறான புரிதல் என அவன் சொல்லுவான் என அவள் மனதில் ஒட்டி இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் உதிர, கண்ணில் துளிர்த்த நீரை கண் மூடி உள்ளிழுத்தாள்

அவள் நிலையை கண்டு குற்ற உணர்வில் "மீரா... மீரா ப்ளீஸ்..." என அவளை அணைக்க முயல, சட்டென அவனை உதறியவள் "I hate you" என்றாள்

அதை சற்றும் ஏற்று கொள்ள இயலாதவனாய் "மீரா...அப்படி சொல்லாத ப்ளீஸ்.." என்றான் உடனே

அவன் முகத்தில் படிந்த வேதனை அவளை அசைக்கவில்லை, வேண்டுமென்றே மீண்டும் "I hate you... I hate you... I hate you" என்றாள்

"ஜஸ்ட் ஸ்டாப் இட் மீரா..." என தன்னையும் அறியாமல் கோபமாய் கத்தியவன், மீராவின் முகம் போன போக்கில் தன்னை அமைதிப்படுத்தி கொண்டு "சாரி பேபி... நான்... என்னால நீ அப்படி சொன்னத தாங்க முடியல மீரா.... இங்க பாரு... என்மேல உனக்கு நம்பிக்கை இல்லையா" என அவளை நகரவிடாமல் பற்றி கொண்டு கேட்டான்

ஒரு கணம் எதுவும் பேசாமல் அவனை பார்த்தாள் மீரா. அவனை பார்க்க பார்க்க தான் ஏமாற்றப்பட்ட உணர்வு தலை தூக்க, இனி என்ன ஆனாலும் இவன் தன் வாழ்வில் இல்லை என தீர்மானத்திற்கு வந்தாள்

அவள் முகத்தில் இருந்து எதையும் கண்டுகொள்ள இயலாமல் பார்த்தவன் "மீரா..." என்றழைக்க

"இனி எப்பவும் என்னால உன்னை நம்ப முடியாது ஸ்டீவ்... முன்னாடி ஒரு முறை நமக்குள்ள சண்டை வந்தப்ப வாழ்க்கைல என்னை சந்திக்காமையே இருந்துருக்கலாம்னு நீ சொன்ன... இப்ப எனக்கும் அதான் தோணுது" என்றாள், உணர்ச்சி துடைத்த குரலில், இனி உனக்காக நான் அழப்போவதில்லை என தீர்மானித்தவள் போல்

"மீரா... you very well know I didn't mean it that day... அந்த நிமிச கோபத்துல பேசினத இப்ப நீ சொல்றது சரி இல்ல மீரா" என்றான் அவனும் அதே உணர்ச்சி துடைத்த குரலில்

"ஆமா... நான் சொல்றது செய்யறது எதுவும் சரி இல்லைதான்... சரியான ஒருத்திய தேடி கண்டுபிடி... அவளையாச்சும் கடைசி வரை அழ வெக்காம இருக்க முயற்சி பண்ணு...குட்பை" என மீரா நகர்ந்தாள்

அவளை பிடித்து நிறுத்தியவன் "மீரா... நான் வேற யாரையும் தேட வேண்டிய அவசியமில்ல... எனக்கு வேற யாரும் தேவையும் இல்ல... நீ தான் வேணும்... உன் இடத்துல வேற யாரையும் என்னால நினைச்சு பாக்க முடியாது மீரா" என்றான்

"ஹம்... ஏன் இதுக்கு முன்னாடி இதே இடத்தில வேற ஒருத்திய நினைச்ச தானே? கல்யாணம் வரைக்கும் யோசிச்சு இருக்கியே..." என்றாள் வேண்டுமென்றே அவனை வருத்தப்படுத்தும் நோக்கத்துடன்

சற்று முன் கொஞ்சமேனும் நெகிழ்ந்தவள், இப்போது மனதை கல்லாக்கி கொண்டு பேசியதை ஸ்டீவால் உணர முடிந்தது. அவள் அழுகையை கட்டுப்படுத்தி நின்ற தோற்றத்திற்கு இது மேல் என அவனால் நினைக்காமல் இருக்கமுடியவில்லை

அவளை அப்படி பார்க்கவும் அவனால் இயலவில்லை. அவன் எதுவும் பேசாமல் நிற்கவும் "ஏன் பதில் சொல்ல முடியலையா? எப்படி முடியும்... தப்பு செஞ்ச மனசு உறுத்துது இல்லையா?" என்றாள் மீரா ஏளனமாய்

மீரா தன் காதலை ஏற்று மனம் ஒன்றி இருந்த இந்த ஒரு மாத காலத்தில், தான் சற்று முகம் மாறினாலும் பதறி விசாரித்து தன்னை சரி செய்பவள் இன்று வேண்டுமென்றே வருத்தும் எண்ணத்துடன் பேசியது அவனை வதைத்தது

தன்னை அவள் அந்த அளவிற்கு வெறுத்து விட்டாளா என்ற எண்ணம் தோன்றியதும் விரக்தியுடன் "ஹ்ம்... நான் என்ன சொன்னாலும் நீ நம்ப போறதில்ல மீரா. இப்ப நான் பேசினா இன்னும் பிரச்சனை பெருசு தான் ஆகும்... நாம நாளைக்கி மீட் பண்ணலாம்" என விலகினான், இனி சொல்ல எதுவுமில்லை என்பது போல்

"மீட் பண்றதா? நெவெர்... இனி எனக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல..." என்றவளை, "இதற்கு மேல் பேசாதே" என்பது போல் கோபத்துடன் பற்றி உலுக்கியவன்

"ஸ்டாப் இட் மீரா... வேணும்னே பிரச்சனைய பெருசு பண்ற நீ... நான் செஞ்சது தப்பு தான்... ஆனா, இப்படி ஒரு பிரச்சனைக்காக காத்துட்டு இருந்த மாதிரி நீ பெரிய issue ஆக்கற... என்னை விட்டு விலகரதுக்கு நீ காரணம் தேடற மாதிரி இருக்கு" என கோபத்தில் வார்த்தைகளை கொட்டினான

அவன் செய்கை தன்னை உயிருடன் புதைத்து கொண்டிருக்கும் வேளையில், தன் மீதே குற்றம் சாட்டியதை தாங்க இயலாத மீராவிற்கு கோபம் கட்டுக்கடங்காமல் போனது "ஓ... அப்படியா? சரி அப்படியே இருக்கட்டும்.. ஆமா நான் வேணும்னு தான் விலகரதுக்கு காரணம் தேடறேன். போதுமா?" என்றவள், அவன் பதிலுக்கு காத்திராமல் நகர்ந்தாள்

கோபத்துடன் அவள் விலகியதை ஏற்று கொள்ளாதவனாய், விரைந்து அவள் அருகில் சென்றவன் "மீரா... ப்ளீஸ்... கொஞ்சம் பொறுமையா இரு... வீணான கோபத்துனால நாம பிரியரத என்னால ஏத்துக்க முடியாது... எல்லா செயலுக்கும் ஒரு விளக்கம் இருக்கும்னு உன்னால யோசிக்க முடியாதா?" என்றான் அவள் கண்களை நேரே பார்த்து

"இருக்கும்... இன்னொருத்திய விரும்பினதுக்கும், அதை என்கிட்ட மறைச்சதுக்கும் எல்லாத்துக்கும் உன்கிட்ட ரெம்பவும் நியாயமான காரணம் இருக்கும் ஸ்டீவ்... ஆனா அதை எல்லாம் கேட்டு நம்பறதுக்கு நான் தயாரா இல்ல... நீ என்ன சொன்னாலும் நம்பற அந்த பழைய மீரா செத்துட்டா..." என்றாள், அழுகையை விழுங்கியபடி

"ஏன் இப்படி பேசற? அப்படி நம்பிக்கைக்கு உரியவனா இல்லாம போற அளவுக்கு நான் பெரிய தப்பு செய்யல... Just give me another chance Meera" என்றான்

"ஹம்... சதீஷ் அப்பவே சொன்னான்... நான் தான் நம்பல... ஸ்டீவ் உன்னை hurt பண்ணுவான், அவன நம்பாதேனு சொன்னான்... அப்பவே அதை கேட்டு இருந்தா இப்படி ஏமாந்து நிக்கற நிலைமை எனக்கு வந்திருக்காது" என மீரா அமிலமாய் வார்த்தைகளை பிரயோகித்தாள்

அதை கேட்டதும் ஸ்டீவின் கோபம் எல்லை மீறியது. தான் உயிராய் நேசிப்பவள், வேறு ஒருவன் தன்னை பற்றி இழிவாய் பேசியதை சரி என்றதை தாங்க முடியாதவனாய்

"ஏய்... என்ன நெனச்சுட்டு இருக்க உன் மனசுல... நீ என்ன பேசினாலும் மறந்துட்டு உன் பின்னாடி வருவேன்னு தானே இப்படி பேசற? யார் யாரோ சொல்றதை நம்பற நீ என் மனசுல இருக்கற காதல நம்ப மாட்ட இல்லையா? எங்க அப்பா சொன்னது ரெம்ப சரினு தோணுது you don't deserve me.. you just don't deserve me" அளவுக்கு மீறிய கோபத்தில் என்ன பேசுகிறோம் என உணராமலே வார்த்தைகள் தெறித்தன

அந்த சொல் மீராவை வெகுவாய் அசைத்தது, அதுவரையும் தன் உணர்வுகளை கட்டுப்படுத்தி இருந்தவள், அதற்கு மேல் தாங்க முடியாமல் கண்ணில் நீர் பெருக, பேசவும் கூட சக்தி அற்றவளாய் அவனை வெறித்தாள்

கண்ணில் நீர் பெருக, மொத்த வேதனையும் அதில் தேக்கி அவள் நின்ற தோற்றம் ஸ்டீவை சுய நினைவுக்கு கொண்டு வந்தது

இப்படி அவள் வேதனையுறும்படி என்ன பேசினோம் என யோசித்தவன், என்றும் சொல்ல கூடாத வார்த்தைகளை சொல்லியதை உணர்ந்து "மீரா..." என அருகில் செல்ல, "போதும்..." என விலகி நின்றாள்

"மீரா ப்ளீஸ்..." என அவன் சமாதானம் செய்ய முயல

"இனி வாழ்க்கைல எப்பவும் நான் உன்னை பாக்க விரும்பல" என்றவள், அந்த வார்த்தையில் அவன் உறைந்து நிற்க, கிடைத்த அவகாசத்தில் விரைந்து படிகளில் இறங்கி வெளியேறினாள்

அவளை தடுக்கும் வழி தெரியாமல், அவள் போன திசையை வெறுமையாய் பார்த்து கொண்டு நின்றான் ஸ்டீவ்

********************************************************

விமானம் தரை இறங்கியதும் பரபரப்பும் ஆர்வமுமாய் மக்கள் தங்கள் உடைமைகளை எடுத்து கொண்டிருக்க, அதை கண்ட மீராவுக்கு என்னமோ போல் ஆனது

தானும் இதே போல் பரபரப்பும் ஆர்வமுமாய் இருக்கவேண்டியவள் தானே, ஆனால் வெறுமையும் வேதனையும் மட்டும் மனதில் ஆக்கிரமித்து கொண்டிருக்கிறதே என வருந்தினாள்

ஒருவாறு சற்று பரபரப்பு குறைய, தன் கை பையை எடுத்து கொண்டு நடந்தாள். கதவருகில் நின்றிருந்த விமான பணிப்பெண் சிநேகமாய் புன்னகைக்க, முயன்று முறுவலித்தாள்

விமானத்தில் இருந்து வெளியேறி படிகளில் இறங்கவும், அவளையும் அறியாமல் கண்ணில் நீர் துளிர்த்தது. இது மகிழ்ச்சியில் வந்த கண்ணீரா அல்லது... என அதற்கு மேல் யோசிக்க விரும்பாதவள் போல் செக்யூரிட்டி கேட் அருகே சென்று நின்றாள்

எல்லாம் முடிந்து பெட்டிகளை எடுத்து கொண்டு வெளியே வரவும், அவள் சரியாய் வெளியே வரும் வரை கூட காத்திருக்க விரும்பாதவர் போல் மீராவின் அம்மா ஓடி வந்து கட்டிக்கொண்டார்

"என் தங்கத்த பாத்து எத்தன நாளாச்சு..." என கண்ணில் நீர் மல்க மகளின் நெற்றியில் முத்தமிட்டு அணைத்து கொண்டார். வழக்கமாய் அன்னை அப்படி செல்லம் கொஞ்சினால் கேலி பேசும் மீரா, இன்று தனக்கும் அதுவே வேண்டுமென்பது போல் அன்னை தோளில் முகம் தாங்கி நின்றாள்

"இது போதும்... பெற்றவளின் அணைப்பில் என்னால் எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வர முடியும்" என மனதிற்குள் நினைத்தாள் மீரா, எல்லாம் ஒரு கணம் தான். மீண்டும் பழைய நினைவுகள் தலை தூக்கின

"அம்மாவும் பொண்ணும் இன்னும் எத்தனை நேரம் இப்படி கொஞ்சிட்டே நிக்கறதா உத்தேசம்" என்ற தந்தையின் கேலியான குரலில் கலைந்தாள் மீரா

"அப்பா..." என தந்தையின் அருகில் சென்றவள், தந்தையின் மார்பில் முகம் புதைத்து விசும்பினாள்

எதையும் விளையாட்டாய் எடுத்து கொண்டு, சுற்றி உள்ளவரையும் எப்போதும் சிரிக்க செய்யும் தங்கள் செல்ல மகள் அழ கண்டதும் "என்னடா கண்ணா? என்னாச்சு?" என பதறினார் அவள் தந்தை

மீராவுக்கு பெற்றோருடன் கொஞ்சம் தனிமை தர எண்ணி காயத்ரியுடன் சற்று ஒதுங்கி நின்றிருந்த சதீஷ் விரைந்து வந்தான்

"என்ன அங்கிள், ரெம்ப நாள் கழிச்சு உங்கள பாத்ததும் உங்க பொண்ணுக்கு ஆனந்த கண்ணீர் நிக்கல போல இருக்கே இன்னும்" என கேலி செய்வது போல் சூழ்நிலையை இலகுவாக்க முயன்றான்

அதை புரிந்து கொண்ட மீரா, தன்னை சமாளித்து கொண்டு, அவனருகில் நின்றிருந்த காயத்ரியிடம் "எப்படி இருக்கே காயத்ரி?" என பெற்றோரிடமிருந்து தன் கவனத்தை திசை திருப்பினாள்

"நல்லா இருக்கேன் மீரா... நீ எப்படி இருக்கே? கனடாவை விட்டு வர மனசில்லையோ?" என கேலியாய் கண்சிமிட்டி சிரித்தாள் காயத்ரி

அவள் கேலியின் அர்த்தம் புரிந்த போது, இனி இதற்கெல்லாம் எந்த அர்த்தமும் இல்லையென எப்படி சொல்வதென புரியாமல் திணறியதில், மீராவிடமிருந்து ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது

"ஏய் வாயாடி, வந்ததும் அவள வம்பு பண்ண ஆரம்பிச்சுட்டியா?" என காயத்ரியை கேலி செய்தவன் "ஜெர்னி எல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல தானே மீரா?" என்றான் சதீஷ்

"ம்... ஒண்ணும் பிரச்சன இல்ல" என்றாள் மீரா, தன்னை நேரே பார்ப்பதை அவள் தவிர்ப்பதை சதீஷ் உணர்ந்து கொண்டான்

அவள் பெற்றோரை கண்டதும், தன்னை கட்டுப்படுத்தி கொள்ள இயலாமல் வெளிப்படுத்திய விதத்தில் இருந்தே "ஏதோ பிரச்சனை" என்பதை சதீஷால் யூகிக்க முடிந்தது

எனை பொய்யன்என்றாலும்
எப்படியேனும் தாங்கிகொள்வேன்
என்காதலே பொய்எனும்போது
எப்படிஏற்பேன் சொல்!!!

மனமெல்லாம் நீயேஇருக்க
மன்னிப்பை வேண்டிநிற்க
மாற்றான்சொல் மந்திரத்தில்
மிருகமாக்கினாயே என்னை!!!

வெறுக்கிறேன்உன்னை என்றாய்
வெறுக்கிறேன்தான் நானும்என்னை
உலகைவெறுத்து வேதனைபெருக
உனைஅழச்செய்த காரணத்தால்!!!


அடுத்த பகுதி - கடைசி பகுதி - படிக்க...


(ஜில்லுனு தொடரும்... செவ்வாய் தோறும்)

39 பேரு சொல்லி இருக்காக:

மகி said...

இன்னிக்கும் நான்தான் பர்ஸ்ட்டு! :)

priya.r said...

vanthaddangappa ;mahi vanthuddaanga !

priya.r said...

innaiggu muthal comments pottavangaluggu vadi kidaiyaaathaam ;IDLEE thaanam mahi:))))

Krishnaveni said...

azhagaana kavidai, thaniyaa thoguthu bookkaa podunga

பத்மநாபன் said...

சதிஷ் பையன் எப்படியோ கண்டுபிடிச்சாட்டனே... இனி அமைதியா இருப்பானா..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//தானும் இதே போல் பரபரப்பும் ஆர்வமுமாய் இருக்கவேண்டியவள் தானே, ஆனால் வெறுமையும் வேதனையும் மட்டும் மனதில் ஆக்கிரமித்து கொண்டிருக்கிறதே என வருந்தினாள்//

ஜில்லுனு போய்க்கொண்டிருந்த கதையில், இப்படி திடீரென்று வெந்நீரை ஊற்றி விட்டீர்களே!

//"இது போதும்... பெற்றவளின் அணைப்பில் என்னால் எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வர முடியும்" என மனதிற்குள் நினைத்தாள் மீரா,//

பெண்களுக்கே ஏற்படும் ஒரே ஆறுதல், தன் தாயிடமிருந்து தான்.

//எல்லாம் ஒரு கணம் தான். மீண்டும் பழைய நினைவுகள் தலை தூக்கின //

மறக்க மனம் கூடுதில்லையே!

நல்ல விறுவிறுப்பாக்வே போகிறது. கதை. எப்படியாவது மீண்டும் ஜில்லுனு கொண்டுபோய் விடுங்கள், Please.

ஹுஸைனம்மா said...

ச்ச்ச்சோ.. ச்ச்ச்.... ம்ம்..ம்ம்.. (என்னதிதுவா? செண்டிமெண்ட் சீன்.. அதான் அழுறேன்... டிஷ்யூ ப்ளீஸ்...)

Anonymous said...

naanillaya firstuuu ? :(

Porkodi said...

shabba.. deivame yen ipdi?

Vasagan said...

\தான் உயிராய் நேசிப்பவள், வேறு ஒருவன் தன்னை பற்றி இழிவாய் பேசியதை சரி என்றதை தாங்க முடியாதவனாய் \

Point Appavi.

இயல்பான நடை , எனக்கு என்னமோ உன்னுடய பழைய தொடர்களை காட்டிலும் இந்த தொடர் எந்த தடங்கலும் இல்லாமல் போகிறது

Vasagan said...

சதீஷ் தான் இந்த பிரச்சனையை தீர்த்து மீராவையும் ஸ்டீவ்வையும் சேர்த்து வைப்பான்னு பட்சி சொல்லுது.

Any bets...

Anonymous said...

please don't try to make it as asusual cinema story/serial to make it length, we are came here to relax ourselves and remember our orgin!!!!!
-thanks,
-Sathish

Charles said...

அஹா.... சதீஷ் சும்மாவே ஆடுவான்... அவனுக்கு சலங்கை வேற கட்டிட்டாங்களே!!! பார்போம் என்ன பண்றான்னு..
ஆனாலும் இந்த மீரா பொண்ணு லூசுதான். என்ன பண்ண? :P
ஜில்லுன்னு காதல் ரொம்ப சூடா போயிருச்சி.. அதனால அடுத்த வாரம் சதீஷ்-காயத்ரி லவ் சீன் பூட்டு கூல் பண்ணிடுங்க சகோ.. (நாங்களும் ஐடியா குடுப்போம்ல...)
@பிரியா மேடம்: மகி first வந்ததுக்கு இப்படி ஒரு தண்டனையா? இனி first வரவே யாரும் பயப்படுவங்களே சகோ? (பத்த வைச்சுட்டியே பரட்ட ... )
@வாசகன்: என்ன சார் நீங்களும் சதீஷ் பக்கம் போயிடீங்க? அம்மா சுனாமி நோட் down
@பொற்கொடி மேடம்: உங்க கிட்ட இருந்து நாங்க நிறைய எதிர்ப்பார்கிறோம்....

இன்றைய கலகத்தை இத்தோடு நிறைவு செய்கிறேன். பிறகு சந்திப்போம்... ஹி ஹி ஹி ...

அமைதிச்சாரல் said...

கதை இயல்பான ஓட்டத்தோட ரொம்ப நல்லாருக்கு :-)

Gayathri said...

akka enna ithu sethuvachu padikalamnu vandha ipdi emotionala akiteenga? ayyagooo

siva said...

ada ada malaida ada malaida....enga orey feeling malaida...

எல் கே said...

ஹ்ம்ம் இன்னும் இழுக்க போற அது மட்டும் தெரிஞ்சிடுச்சி, அடுத்து ஸ்டீவ் இந்தியா வருவார்,. சமாதானம் பேச முயர்ச்சிப்பார். அப்புறம் உண்மை வரும் . கல்யாணம் நடக்கும் ....

இராஜராஜேஸ்வரி said...

வெறுக்கிறேன்உன்னை என்றாய்
வெறுக்கிறேன்தான் நானும்என்னை//

என்னங்க ஹாட்டாயிடுச்சே.. ஜில் எப்ப பண்ணுவீங்க..!!

சி.பி.செந்தில்குமார் said...

>>இந்த கதையின் முன் பகுதிகளை படிக்க இங்கே கிளிக்கவும்

saari.. சாரி.. எனக்கு லைஃப்ல ரிஸ்க் எடுக்கரது பிடிக்காது ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மணம்.இண்ட்லில கூட இணைக்கலையா? இதையும் நாங்களே செய்யனுமா!!!அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

RAMVI said...

மனம் அமைதியிலாத போது எடுக்கப்படும் முடிவுகள் சரியாக இருக்காது..மீரா என்ன முடிவு செய்வாள் என்பதை பார்க்கலாம்..
கனடாவில் ஜில்லுன்னு போய்க்கொண்டிருந்த கதை, இநதியா வரும் நேரம் சூடாகிறதே.....

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

ஒரு 50 எப்பிசோடு ஓட்டாம விட்மாட்டீங்க போல. பாவம் உங்களுக்கு வீண் சிலவு. சதீஷ், மீரா கணடால்லேர்ந்து இந்தியா வரணும், மறுபடியும் கண்டா போகனும். எவ்வளவு சிலவு ஆகும். நல்லா இருக்கு,ஆனா ரொம்ப இழுக்குது

divyadharsan said...

Hi Appavi,

I was busy in my in-laws home for the past 3 wks.
Athukula yennanevo nadanthiruchey!rombha kastamarukey..
yeatho mudikaporenganu partha..epdi murichi vituteengaley??
Aana antha pirivukooda nalathaan erukum.
but pfeelings of India vaakiteenga.
kushi style la lovers naduvula nadakura sweet/serious arguementsa
sema azhaga yezhuthareenga week by week.Asathareenga..
kavithai super vazhakampola.rombha touchinga eruku!!very very nice!!

yepdiyum ennum 50 episode pogumla..
peysama epdi 3episode serythu padikalam pola!
Twist twista vechu kolreenga!
anyway rmbha santhosama pirichi vechiteenga..
yentha varusham serka poreenganu solunga.
Antha episode aa first padichikiran:)
Take care Appavi.Tata

En Samaiyal said...

Naan recenta thaan unga blog padikka aarambichu irukken. Innum ell post um padithu mudikka villai aana unga comedy posts super o super. Intha maathiri unga post ukku yaaru first comment podurathunnu pottiye veikkalam. Paavam paarthu ethavathu pottu kodunga. UK time difference mattum illenna naanum intha pottiyila kalanthukkuvenaakum!

மோகன்ஜி said...

நல்லாத்தான் போய்யிகிட்டிருக்கு...

சாகம்பரி said...

கொஞ்சம் நின்று ஸ்டீவ் சொல்வதை கேட்டிருந்தால் கதை முடிந்து போயிருக்குமோ. என்ன செய்வது அடுத்த பதிவிற்கு வரவேண்டிய நிலை எனக்கு. எல்லாம் நல்லபடியா முடியும்னு நம்பிக்கை அப்பாவிமேல இருக்கு (ரமணி சந்திரன் சாயல் கதைகளில் இருப்பதால்..)

priya.r said...

நீங்க கூகுல் buzz லில் பார்த்தீங்கன்னா உங்களுக்கே தெரியும்
அவங்க ரங்கஸ் கிட்டே எப்போ எப்போ பல்ப் வாங்கறாங்களோ
அப்போ எல்லாம் காதலர்களை பிரிச்சு வைக்கிறா
அநியாயத்தை தட்டி கேட்டாலோ தள்ளி வைக்கிறேன்னு அந்த வில்லி சொல்றாளே .....................

அனாமிகா துவாரகன் said...

//நீங்க கூகுல் buzz லில் பார்த்தீங்கன்னா உங்களுக்கே தெரியும்
அவங்க ரங்கஸ் கிட்டே எப்போ எப்போ பல்ப் வாங்கறாங்களோ
அப்போ எல்லாம் காதலர்களை பிரிச்சு வைக்கிறா
அநியாயத்தை தட்டி கேட்டாலோ தள்ளி வைக்கிறேன்னு அந்த வில்லி சொல்றாளே ..................... //

ha ha. Thanks for the info Priyakka.

அனாமிகா துவாரகன் said...

@ Charles,

நானும் பாத்திட்டு தான் இருக்கேன். அது ஏன்னு எனக்குத் தெரியும். கொஞ்சம் காதை கொடுங்க. என்னாச்சுன்னா, மாமஸை அடப்பாவி டின்னருக்கு இன்வைட் பண்ணி இருக்கா. அங்க போய் அவஸ்தை பட அவரு ரெடியாக இல்லை. அதனால இந்த வில்லங்கம் பிடிச்ச இட்லி மாமிக்கு சப்போர்ட்டா பேசறார். எங்க பெமிசனோட தான். ஹி ஹி.

அனாமிகா துவாரகன் said...

ஆனாலும் கண்கொத்திப் பாம்பு மாதிரி கவனமாக என்கிட்ட போட்டுக் கொடுக்கற உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு சலூட் அடிக்கறேன் சார். அப்புறம் எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளா ஆளையே காணோம்.

அனாமிகா துவாரகன் said...

புதுசா டாவடிக்கிறவங்களிடையேயும் பிரச்சினை உண்டு பண்ணிட்டீங்களேக்கா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். நீயும் ஏதாவது மறைக்கிறியா அஜேன்னு கேட்டா, "பாவி - ரோபோன்னு என்னக்கு பேர் வைச்சதே நீ, அப்புறம் இது என்ன கேள்வி. உன்னப் பார்த்தப்புறம் தான் ரோபோக்கே ஹார்ட் பீட் ஆரம்பிச்சுது"ன்னு ஐஸ் வைச்சுட்டு "இட்லி ஆன்ட்டி ப்ளொக் எல்லாம் இனி படிக்காதே"ன்னு சொல்லிட்டார். ஹா ஹா ஹா.

அனாமிகா துவாரகன் said...

கதை எல்லாம் படிப்பியா கண்ணான்னு அப்பா கேட்கறார். ஏன்னா கதை எல்லாம் சுத்த போர், வேலை வெட்டி இல்லாதவங்களுக்குன்னு ஒரு காலத்தில ப்ளிம் காட்டினவ நான். ஹி ஹி. உங்கள வம்பிக்கு இழுக்கவே படிக்க ஆரம்பிச்சதுன்னு சொல்லி சிலது படிச்சு காட்டினேன்.

பைத்தியத்திற்கு வைத்தியம் பார்த்த கதைக்கு தன்னோட 100 வோட்டுன்னு அப்பா சொன்னார். அஜேக்கும் பிடிச்சிருந்துச்சுன்னு சொன்னான். ஆனால், வோட்டு மட்டும் போட மாட்டேனாம். கொஞ்ச நேரத்திற்கு முன்னே நான் பண்ணின கலகத்தினால். ஹி ஹி.

அப்பாவி தங்கமணி said...

@ மகி - தேங்க்ஸ் மகி...அதெல்லாம் சரி... போஸ்ட் பத்தி ஒரு வார்த்த சொல்லலியே அம்மணி...அவ்வ்வவ்வ்வ்

@ priya.r - இன்னிக்கிம் வடை போச்சா... ஹா ஹா ஹா... இட்லி எல்லாம் இல்லை... அதை யாரு செய்யறது...வடை வேணா ஒகே...:))

@ Krishnaveni - தேங்க்ஸ் வேணி... உங்கள் வாக்கு பலிக்கட்டும்...:)

@ பத்மநாபன் - தெரிலீங்க அண்ணா... இருங்க பாப்போம் என்ன நடக்குதுன்னு...:)

@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங் சார்...:)

@ ஹுஸைனம்மா - டிஷ்யூ வேணுமா அக்கா... இருங்க லோட் வந்தப்புறம் அனுப்பறேன்...:))

@ பெயரில்லா - first இல்லைனா என்னங்க... லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்னு ஒரு டயலாக் இருக்கே, அதை சொல்லிட்டா போகுது...நன்றிங்க..:)

@ Porkodi - எப்படி தெய்வமே...:))

@ Vasagan - சதீஷ் தான் இந்த பிரச்சனையை தீர்த்து மீராவையும் ஸ்டீவ்வையும் சேர்த்து வைப்பான்னு பட்சி சொல்லுதா... இருங்க என் பட்சி என்ன சொல்லுதுனு கேட்டு சொல்றேன்... நன்றிங்க..:)

அப்பாவி தங்கமணி said...

@ பெயரில்லா (sathish) - Thanks for reading Sathish. I'm not trying to make it length. Infact, I'm trying to cut it short, which I'm not very successful in. I don't get your point where I didn't remember our origin. Could you please be more specific? I will be more than happy to answer that. Thanks again for stopping by my blog...

@ Charles - ஏனுங்க இந்த கொல வெறி? என்ன பிரச்சனைனாலும் பேசி தீத்துப்போம்... இப்படி எதிர் கட்சிக்கு பாயிண்ட் எடுத்து குடுக்கறது நல்லா இல்லீங்கோ...:)))

@ அமைதிச்சாரல் - நன்றிங்க அமைதி அக்கா..:)

@ Gayathri - நோ டென்ஷன் சிஸ்டர்... இவ்ளோ பொறுத்துட்ட இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கோ அம்மணி......:))

@ siva - ஹா ஹா... ரீமிக்ஸ்'ஆ? சூப்பர்...:))

@ எல் கே - ஹ்ம்ம்... அப்படியா சொல்ற... இரு பாப்போம்..:)

@ இராஜராஜேஸ்வரி - சீக்கரம் ஜில் பண்ணிடலாம்'ங்க...:))

@ சி.பி.செந்தில்குமார் - ஹா ஹா ஹா... தமிழ்மணம் tag ல ஏதோ பிரச்சனை சார்.... அதான் தற்சமயம் இணைக்கலை... நன்றிங்க

@ RAMVI - இந்தியாவில் வானிலை அப்படி, என்ன செய்ய? ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... சீக்கரம் ஜில்லுனு ஆகும் நம்பறேன்... பக்காலம்'ங்க... தேங்க்ஸ்...

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - ஹா ஹா... world tour தான் போனாலும் என்னங்க பெரிய செலவு... கூட இன்னும் பத்து போஸ்ட் போட்டா போகுது... சரி சரி... நோ டென்ஷன்... அவ்ளோ எல்லாம் இழுக்க முடியாதுங்க...:)))

அப்பாவி தங்கமணி said...

@ divyadharsan - ஹாய் திவ்யா, புக்காத்துல பிஸியா? ஒகே ஒகே... குட்டி பொண்ணு எப்படி இருக்கா? ஆமாம் ஒரே பீலிங்க்ஸ் தான்... ஒரே இந்தியா தான்...:))... என்னது சந்தோசமா பிரிச்சு வெச்சுட்டனா... ஆஹா, ஊரே சேந்து உங்களையும் அடிக்க போறாங்க.. ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... Thanks for your compliments Divya. Will try to keep up to readers expectations. Take care. Tata..:))

@ En Samaiyal - ரெம்ப நன்றிங்க முதல் வருகைக்கு... மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கும்... போட்டி வெக்கறதா, அன்த சீன் ஏண்டி லேதண்டி... ஹா ஹா... சும்மா பிரெண்ட்ஸ் அப்படி ரகளை பண்ணி நம்ம இமேஜை தூக்கறாங்க அவ்ளோ தான்... :)).... ஒகே.. உங்களுக்கு consideration குடுத்துடலாம்... இனி எப்ப வந்தாலும் கால்வாசி வடை உங்களுக்கு தான் சரியா...ஹா ஹா..:)

@ மோகன்ஜி - நன்றிங்க... அங்க தான் ஏதோ பஞ்சாயத்து போல இருக்கே சார்...:))

@ சாகம்பரி - ஆஹா... எங்கயோ கொண்டு போயிட்டீங்க என்னை.. ஹஹா... நன்றிங்க.. :))

@ priya.r - ப்ரியா ப்ரூட்டஸ்... உங்களுக்கு சம்மன் வரும்... கோர்ட்ல ஆஜர் ஆகுங்க..:)

@ அனாமிகா துவாரகன் - சும்மாவே ஆடும்னு ஏதோ பழமொழி சொல்லுவாங்களே...ஹா ஹா... நான் தான் இட்லி செய்ய போறதில்லைனு ப்ரொபசர்க்கு வாக்கு குடுத்துடனே... அதனால அவர் தைரியமா டின்னெர்'க்கு வருவார்... :)).... அடிப்பாவி, இப்படி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி என் பேரை கெடுக்கறியே...அவ்வ்வ்வவ்.... அப்பாவுக்கு தேங்க்ஸ் சொல்லிடு... அஜே'க்கும், ஏன்னா, அவர் வோட்டு போடாடதுக்கு நீ தான் காரணம் என் போஸ்ட் இல்ல யு சி...:)))

Thanai thalaivi said...

வெளிநாட்டவரை காதலிக்கும் கதாநாயகி அவரிடம் இந்திய கலாச்சாரப்படி நடக்க வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்க முடியும்? காதல் உன் உரிமை என்றால் அதன் விளைவுகளுக்கும் நீயே தான் பொறுபேற்க வேண்டும். This is my policy.

தங்கமணியை இப்படி கம்மேன்ட்சில் கலாய்ப்பது எனக்கு கொஞ்சம் கூட இஷ்டமில்லை. அதனால் அவர்களை எனக்கு தெரிந்த வரையில் கலாய்த்து ஒரு பதிவு தயாராகி வருகிறது. அதில் என்னை நானே கலாய்த்து கொள்ளுவதும் உண்டு.

இந்த வார கதைக்கே கமெண்ட்ஸ் இன்னமும் முடியவில்லை தங்கமணி அதற்குள் அடுத்த போஸ்ட் கூட போட்டு விட்டார்கள்.

அங்கு சந்திப்போம். தங்கமணி அவர்களே!, நான் உங்களை கலாய்த்தலும் நீங்கள் தான் என் முதல் வலையுலக தோழி.

வலையுலகம் (என்ன ஆவிகள் உலகம் என்று சொல்வது போல் பீலிங் வருதா?)

priya.r said...

பாருங்க!

அப்பாவியை கலாய்க்க முதல் முறையா ஒரு பதிவே

எழுத ஆரம்பித்து விட்டீங்க என்றால்

உங்க பீலிங்க்ஸ் புரியறது

உங்க பதிவுக்கு இப்போவே 10 கமெண்ட்ஸ் ரெடி

பண்ணிட்டேன் ;உங்க பதிவுக்காக வெயிட்ங் :))

ராஜ ராஜ ராஜன் said...

நியாயப்படி அஞ்சாந் தேதி 25-வது பாகம் வந்திருக்கணும்... ம்ம்ம்... waiting...!!!

அப்பாவி தங்கமணி said...

@ ராஜ ராஜ ராஜன் - கொஞ்சம் வேலை அதிகம்'ங்க... இந்த வாரம் போட்டுடறேன்...நன்றி

Post a Comment