Thursday, June 09, 2011

பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் புடிச்சா... :)))

முன் குறிப்பு:
சும்மா சிரிக்க மட்டும்... அதை மறந்து டென்ஷன் ஆகி இப்படி தல தலையா அடிச்சுக்கிட்டா அதுக்கு கம்பேனி பொறுப்பில்ல...:))

"டாக்டர் ப்ளீஸ்... எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்...எவ்ளோ செலவானாலும் பரவால்ல"

"இன்னொரு முறை சொல்லுங்க..." என டாக்டர் சந்தோசமாய் பாட்டு படிக்க

"என்ன டாக்டர் இது? நாங்க எவ்ளோ சீரியசா பேசிட்டு இருக்கோம்... உங்களுக்கு விளையாட்டா இருக்கா?" என அந்த பெற்றோர் கோபமாய் பேச

"சரி சரி... பேஷன்ட் எங்க?"

"இதோ... உங்க முன்னாடி உக்காந்துட்டு இருக்கறது தான் பேஷன்ட்"

"என்ன விளையாடறீங்களா? முழுசா முள்ளங்கி பந்தாட்டம் இருக்கற ஒரு ஜென்மத்தை என்னமோ ஐ.சி.யு கேஸ் மாதிரி எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்...எவ்ளோ செலவானாலும் பரவால்லனு சொல்லி ஏன் ஆசைய கிளப்பினீங்க?" என இப்போது கோபம் கொள்வது டாக்டர் முறையானது

"ஐயோ டாக்டர்... நீங்க என் புள்ளகிட்ட பேசி பாருங்க,உங்களுக்கே புரியும்" என அவன் அம்மா கூற

"அப்படியா?" என பேஷண்டை அளவெடுப்பது போல் பார்த்த டாக்டர் "உங்க பேர் என்ன?" என கேட்க

"எந்த பேரை கேக்கறீங்க? சொந்த பேரா இல்ல ப்ளாக் பேரா?"

"அதென்ன ப்ளாக்?" என டாக்டர் விழிக்க

"என்ன ப்ளாக்ஆ? ச்சே... நீங்க எல்லாம் என்ன டாக்டர்? அது வலைப்பூ... நம் மனதின் வலையில் சிக்கும் எண்ண பூக்களை எல்லாம் தொடுத்து மாலையாய் கோர்த்து போட ஒரு கழுத்து..." என பேஷன்ட் விளக்கம் கூற

"ஓ... முழுசா முத்திடுச்சு போல" என மனதிற்குள் நினைத்த டாக்டர் "எப்போல இருந்து இந்த மாதிரி இருக்கு?" என டாக்டர் பெற்றோரிடம் கேட்க

"நானே சொல்றேன் டாக்டர்?" என்ற பேஷன்ட் "ஆரம்பத்துல எல்லாம் யாரோ எழுதின ப்ளாக்ல போய் சும்மா படிச்சும் படிக்காமையும் கன்னா பின்னானு கமெண்ட் மட்டும் போட்டுட்டு இருந்தேன்... திடீர்னு ஒரு நாள் ஒரு பதிவர் 'நீங்க இவ்ளோ சுவாரஷ்யமா கமெண்ட் எழுதறீங்களே... நீங்களே ஏன் ஒரு ப்ளாக் ஆரம்பிக்க கூடாது'னு கேட்டார்... அன்று விழுந்த விதை தான், இன்று ஆலமரமாய் 500 followerகளும் ஆயிரம் பதிவுகளும் என வளர்ந்து நிற்கிறது" என உணர்ச்சிவசப்பட்டார்

"சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தவன் ஒருத்தன்...இப்ப மாட்டிட்டு முழிக்கறது நான்" என மனதிற்குள் புலம்பிய டாக்டர் "அப்படி என்ன தான் எழுதுவீங்க?" என கேட்க

"எதை வேணாலும் எழுதுவேன் டாக்டர்... உதாரணத்துக்கு சொல்லணும்னா... ஒரு நாள் ஒரு கரப்பான் பூச்சிய அடிச்சுட்டேன்... அதை 'நானும் கரப்பானும்'னு ஒரு போஸ்ட் போட்டேன்....இன்னொரு நாள், ஒரு பிச்சகாரனுக்கு பத்து பைசா போட அவன் இன்னும் பத்து பைசா சேத்து திருப்பி குடுத்தான், அதை 'பிச்சையிடம் பிச்சை' ஒரு போஸ்ட் போட்டேன்"

"அட கருமமே...அதெல்லாமா எழுதுவீங்க...படிக்கறவன் காரி துப்ப மாட்டான்"

"ஐயோ போங்க டாக்டர்... உங்களுக்கு விசயமே புரியல... அதிகமா திட்டப்படாத பதிவரும் அதிகமா துப்பப்படாத பதிவும் பிரபலமானதா சரித்தரமே இல்ல" என அவர் பெருமிதமாய் கூற

"கருமம் கருமம்" என தலையில் அடித்து கொண்ட டாக்டர் "அது சரி... இந்த எழுதற ஐடியா எல்லாம் எப்ப தோணும்?"

"அதுக்கு ஒரு எல்லையே இல்ல டாக்டர்... பல்லு விளக்கும் போது தோணும், பாலத்த கடக்கும் போது தோணும், சாப்பிடறப்ப தோணும், சண்டை போடறப்ப தோணும், தூங்கறப்ப தோணும், துப்பரப்ப தோணும், நடக்கறப்ப தோணும், நிக்கறப்ப தோணும், கொசு அடிக்கும் போது தோணும், கொசுறு நியூஸ் படிக்கறப்ப தோணும்... ட்ரெயின்ல போறப்ப தோணும்... தலைவலிக்கரப்ப தோணும்... தோணும் போது தோணும்... தோணாத போதும் தோணும்... தோணனும்னு நினைக்கறப்ப தோணாது... ஆனா தோணாதுனு நினைக்கறப்ப தோணும்... தோணினாலும் தோணும்னு நினைக்கறப்ப தோணாம கூட போகும்... ஆனா தோணவே தோணாதுனு நினைக்கறப்ப கண்டிப்பா தோணாம போகாது...அவ்ளோ ஏன்? இப்ப கூட 'மெண்டல் டாக்டரும் மென்நவீனத்துவ பதிவரும்'னு ஒரு பதிவு எழுதணும்னு தோணுது"

"என்னது மெண்டல் டாக்டரா?" என டாக்டர் டென்ஷன் ஆக

"ப்ளீஸ் டாக்டர்... தப்பா எடுத்துக்காதீங்க... எப்படியாவது என் புள்ளைய காப்பாத்துங்க டாக்டர்...எவ்ளோ செலவானாலும் பரவால்ல" என பேஷன்டின் அப்பா கூற, அந்த "எவ்ளோ செலவானாலும் பரவால்ல" என்ற வாசகம் டாக்டரின் கோபத்தை காணாமல் போக செய்தது

"இங்க பாருங்க தம்பி... இப்படி நினைச்ச மாதிரி எல்லாம் எழுத கூடாது... அது நல்லதில்ல" என டாக்டர் அட்வைஸ் போல் கூற

"என்ன நல்லதில்ல? மழைல ஒரு பூ கீழ விழுகரத பாத்தா என்ன தோணும் தெரியுமா?

ஒருமுறை பூத்த பூ
ஒரே மழையில் விழுந்ததே
இன்னொருமுறை பூக்குமா
இருந்தாலும் அது போல் வருமா!!!

அதே மழைல எங்க பக்கத்துக்கு வீட்டு குண்டு மஞ்சுளா நடந்து போறதை பாத்தப்ப பீலிங்கோட இப்படி தான் எழுத தோணுச்சு..

மலையே
மழையில்
நனைந்து
நகர்கிறதே!!!

இந்த கவிதை எல்லாம் நல்லதில்லைன்னு நீங்க எப்படி சொல்றீங்க?"

"இங்க பாருங்க... நீங்க எழுதறது சமுதாயத்துக்கு உபயோகமா இருக்கணும் " என டாக்டர் புரிய வைக்க முயன்றார்

"கண்டிப்பா... அப்படி கூட எழுதி இருக்கேன்... நான் எழுதின 'குட்டையில் ஊறிய மட்டை' போஸ்டை படிச்சுட்டு ஒருத்தர் இனி ஜென்மத்துல இன்டர்நெட் பக்கம் வர மாட்டேன்னு போய் இப்போ நல்ல வேலைல நிலைச்சு இருக்கறதா தகவல் வந்தது... அது மட்டுமில்ல, என்னோட 'மண்டையில் ஒரு மரிக்கொழுந்து' கதைய ஒரு கோமா பேஷன்டுக்கு தினமும் படிச்சு காட்டினதுல நாலே நாளுல அவர் ராவோட ராவா வீட்டுக்கு ஓடி போயிட்டாராம்... இப்ப அந்த ஹாஸ்பிடல்ல அதான் ட்ரீட்மென்ட்ஆ யூஸ் பண்றாங்களாம்... இப்ப சொல்லுங்க எவ்ளோ உபயோகமான வேலை எல்லாம் செய்யுது என் பதிவுகள்"

"ஸ்ஸ்ஸ்ஸ்ப்பப்பா.... எப்படி புரியவெக்கறது?" என வெகு நேரம் யோசித்த டாக்டர் "இங்க பாருங்க தம்பி... எதாச்சும் தத்துவம் பித்துவம்னு எழுதினாலும் உபயோகம்..." என டாக்டர் முடிக்கும் முன்

"ஓ இருக்கே... ஜில்லுனு ஒரு மோர்னு ஒரு அருமையான பதிவு இருக்கே" என உற்சாகமாகிறார் பேஷன்ட்
 
"என்னது? மோர்ல என்ன கொடும தத்துவம் இருக்கும்?" என டாக்டர் குழம்புகிறார்
 
"என்ன டாக்டர் இப்படி சொல்லிட்டீங்க? மோர் எப்படி தயாராகுது... பாலாடையை கடைந்து அதில் இருந்து கொழுப்பான வெண்ணையை நீக்கி உருவாவது தானே மோர்... இதுல இருந்து உங்களுக்கு என்ன புரியுது?"
 
"ம்... உனக்கு முத்தி போச்சுன்னு புரியுது?" என தலையில் அடித்து கொண்டார் டாக்டர்
 
"ஹையோ ஹையோ... இதை புரிஞ்சுக்கற அளவுக்கு நீங்க பக்குவப்படலை டாக்டர்... அதாவது... எப்படி பாலாடையில் இருந்து வெண்ணையை நீக்கி மோர் உருவாகிறதோ அது போல நம் வாழ்வில் வெண்ணை போன்ற கெட்ட விசயங்களை அகற்றினால் மோர் போன்ற மோட்சத்தை அடையலாம்னு சொல்ல வரேன் டாக்டர்"
 
ஒரு நிமிடம் டாக்டருக்கே தனக்கு தான் விவரம் போதவில்லையோ என தோன்ற தொடங்கியது... ஒருவாறு சமாளித்து "தம்பி நான் என்ன சொல்ல வரேன்னா..." என்பதற்குள்

"டாக்டர், நான் என்ன சொல்ல வரேன்னா... நான் மொதலே மேட்டர் சொல்லிட்டா, நீங்க மேட்டர் படிச்சுட்டு மீட்டர் கட் பண்ணிட்டு போய்ட்டா நான் மீட்டர் வட்டி வாங்கி ப்ளாக் நடத்தற மேட்டர் என்ன ஆகறது. இன்னும் சொல்லப்போனா... மேட்டர்க்கு மேட்டர் தேத்த வழி இல்லாம தான் நான் இப்படி பீட்டர் விட்டுட்டு இருக்கேன்னு நீங்க என்னை பத்தி தப்பா நினைச்சுட்டா அப்புறம் என் மேட்டர் என்ன ஆகும், நீங்க கொஞ்சம் மீட்டர் கட் பண்றதுக்கு முன்னாடி இந்த மேட்டர் பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இன்னும் தெளிவா சொல்லணும்னா...."

அதற்குள் டாக்டர் "ஹா ஹா ஹா ஹா... ஹி ஹி ஹி ஹி...." என கை தட்டியபடி சிரிக்கிறார்

"அப்பாடா... வழக்கம் போல புரியாத மாதிரி பேசினதும் இந்த டாக்டரும் மெண்டல் ஆய்ட்டாரு" என பதிவர் மனதிற்குள் சிரித்து கொள்கிறார்

"ஐயையோ என்னாச்சு... ஏன் டாக்டர் இப்படி சிரிக்கறாரு?" என சுற்றி இருந்தவர்கள் பயந்து போய் பார்க்க

"ஹா ஹா ஹா.... ஹி ஹி ஹி... நான் பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார டாக்டர்னு நீங்க நினைச்சா அதான் இல்ல... நான் பைத்தியமாகி பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார ஆஸ்பத்திரில பைத்தியத்துக்கு வைத்தியம் பாத்து அதனால பைத்தியமான பைத்தியகார டாக்டர்களில் ஒருத்தன் அப்படின்னு நீங்க நெனச்சா அது தப்பில்ல... இன்னும் தெளிவா சொல்லணும்னா..." டாக்டர் நிறுத்தாமல் பேசி கொண்டே போனார் தன் சட்டையை கிழித்தபடி

"ஐயையோ... இந்த டாக்டருக்கும் பைத்தியம் புடிக்க வெச்சுட்டானே நம்ம புள்ள" என அந்த பேஷன்டுடன் வந்த அம்மா தலையில் கை வைத்து அமர

"என்ன சொல்றீங்க? இதுக்கு முன்னாடி வேற டாக்டர்'க்கு இதே மாதிரி ஆகி இருக்கா?" என அங்கிருந்த நர்ஸ் கேட்க

"ஒரு டாக்டர் இல்ல சிஸ்டர்... இதுவரைக்கும் 99 டாக்டர்களை பைத்தியமாக்கிட்டான்...  இவர் தான் நூறாவது... கங்க்ராட்ஸ் சிஸ்டர்"என்றார் பேஷன்டின் அப்பா, என்னமோ அந்த நர்ஸ் பரிட்சையில் நூத்துக்கு நூறு வாங்கின மாதிரி

அந்த நர்ஸ் பயமாய் ஒரு பார்வை பார்க்க "ஹ்ம்ம்... இனி இந்த ஊர்ல ஒரு டாக்டரும் பாக்கி இல்ல... வேற ஊர்ல தான் விசாரிக்கணும்" என பேஷன்டின் அம்மா முடிக்கும் முன் நர்ஸ் எஸ்கேப் ஆகி இருந்தார்

:))))

....

93 பேரு சொல்லி இருக்காக:

S.Menaga said...

ஹா ஹா சூப்பர்ர் அப்பாவி,சிரிச்சு மாளலை...

பிரதீபா said...

sema karpanai akka... aanaa andha padhivar innum ungala paakkalainnu ninaikkiren... neenga oru MBBS pattam vaangaadha daakkuttarunnu andha appaa ammaavukku theriyaama poiduchey !!

இராஜராஜேஸ்வரி said...

முதல் மழை
பிளாக்கை நனைத்ததே!

மலையே
மழையில்
நனைந்து
நகர்கிறதே!!//

சிரிக்காவிட்டால் கம்பெனி பொறுப்பு எடுக்காது.

பிரதீபா said...

//மலையே
மழையில்
நனைந்து
நகர்கிறதே!!!// - adangokkamakkaa...

இராஜராஜேஸ்வரி said...

"ஐயையோ என்னாச்சு... ஏன் டாக்டர் இப்படி சிரிக்கறாரு?" என சுற்றி இருந்தவர்கள் பயந்து போய் பார்க்க//
ஒன்னுமில்லை. அந்த டாக்டர் இந்த பதிவைப் படிச்சார். இந்தப் பதிவை எழுதியவரைத் தான் அந்த டாக்டரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

ANaND said...

"ஹா ஹா ஹா.... ஹி ஹி ஹி

நான் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கலாம் னு ஒரு ஐடியா ல இருந்தன் ...போச்சி எல்லாம் போச்சி

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒரேயடியா சிரிச்சு சிரிச்சு வயித்த வலிக்க வெச்சுட்டீங்க.

பதிவர்களைப்பற்றி மிகத்துல்லியமா நீங்களும் புரிஞ்சுகொண்டு, மற்ற அப்பாவிப் பதிவர்களுக்கும் புரிய வெச்சுட்டீங்க.

உங்களை எப்படிப்பாராட்டுவது என்றே எனக்குத் தெரியவில்லை. உங்களின் நகைச்சுவைத் திறமைக்கு நான் தலைவணங்குகிறேன்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். அன்புடன் vgk

vidivelli said...

nalayirukkunka..............

வை.கோபாலகிருஷ்ணன் said...

வாய்விட்டுச்சிரித்தபோது வயிற்றில் சுளுக்கு ஏற்படுத்திய இடங்கள்:
(1)
// "ஆரம்பத்துல எல்லாம் யாரோ எழுதின ப்ளாக்ல போய் சும்மா படிச்சும் படிக்காமையும் கன்னா பின்னானு கமெண்ட் மட்டும் போட்டுட்டு இருந்தேன்... திடீர்னு ஒரு நாள் ஒரு பதிவர் 'நீங்க இவ்ளோ சுவாரஷ்யமா கமெண்ட் எழுதறீங்களே... நீங்களே ஏன் ஒரு ப்ளாக் ஆரம்பிக்க கூடாது'னு கேட்டார்... அன்று விழுந்த விதை தான், இன்று ஆலமரமாய் 500 followerகளும் ஆயிரம் பதிவுகளும் என வளர்ந்து நிற்கிறது" என உணர்ச்சிவசப்பட்டார்//
(2)
//அதே மழைல எங்க பக்கத்துக்கு வீட்டு குண்டு மஞ்சுளா நடந்து போறதை பாத்தப்ப பீலிங்கோட இப்படி தான் எழுத தோணுச்சு..

மலையே
மழையில்
நனைந்து
நகர்கிறதே!!!

இந்த கவிதை எல்லாம் நல்லதில்லைன்னு நீங்க எப்படி சொல்றீங்க?"//
(3)
//ஒரு நிமிடம் டாக்டருக்கே தனக்கு தான் விவரம் போதவில்லையோ என தோன்ற தொடங்கியது...//
(4)
//ஒரு டாக்டர் இல்ல சிஸ்டர்... இதுவரைக்கும் 99 டாக்டர்களை பைத்தியமாக்கிட்டான்... இவர் தான் நூறாவது... கங்க்ராட்ஸ் சிஸ்டர்"என்றார் பேஷன்டின் அப்பா, என்னமோ அந்த நர்ஸ் பரிட்சையில் நூத்துக்கு நூறு வாங்கின மாதிரி//
(5)
//இந்த எழுதற ஐடியா எல்லாம் எப்ப தோணும்?"
......................................//

நல்லா சிரிக்க வைத்ததற்கு நன்றிகள், மேடம்.

Mahi said...

:)))))))))))))))))

சொல்லப்பட்டிருக்கும் எல்லா விஷயமும் நூத்துக்கு நூறு உண்மைங்க அப்பாவி! ;)

பத்மநாபன் said...

நா..ன் ஸ்டாப்பா சிரிக்க வெச்சிட்டிங்க... இது மாதிரி இன்னோரு பதிவு இல்லை இல்லை இதையே இன்னோரு முறை படிச்சா போதும் நாங்களூம் டாக்டர் தான் ...ஹி..ஹி..ஹி.ஹி.. தான் சட்டைகிழிப்புதான்..

முனைவர்.இரா.குணசீலன் said...

:))))

Vasagan said...

மக்களே
அவன் இல்லை அவள் or அப்பாவி, அம்மா அப்பா பதிலாக அண்ணன் மாப்பிள்ளை .

Toronto ல இருக்கிற டாக்டர்ஸ் எல்லாம் பைத்தியம் ஆகியாச்சு, அடுத்து வேற ஊர்லதான் தேடனும். உங்களுக்கு தெரிந்த டாக்டர் இருந்தால் சொலுங்களேன்.

மகிழ்வுடன்
அப்பாவியின் அண்ணன்.

Vasagan said...

\மலையே
மழையில்
நனைந்து
நகர்கிறதே!!!\

நேத்து மழை கொட்டு கொட்டும் போதே நினைச்சேன் இந்த
கவித கவித மழை கொட்ட போகுதுனு.

நிரூபன் said...

முன் குறிப்பு:
சும்மா சிரிக்க மட்டும்... அதை மறந்து டென்ஷன் ஆகி இப்படி தல தலையா அடிச்சுக்கிட்டா அதுக்கு கம்பேனி பொறுப்பில்ல...:))//

ஆரம்பமே டெரரா இருக்கே...இருங்க படிச்சிட்டு வாறேன்.

நிரூபன் said...

"ஐயோ போங்க டாக்டர்... உங்களுக்கு விசயமே புரியல... அதிகமா திட்டப்படாத பதிவரும் அதிகமா துப்பப்படாத பதிவும் பிரபலமானதா சரித்தரமே இல்ல" என அவர் பெருமிதமாய் கூற//

அவ்...என்ன ஒரு கொல வெறி...பின்னூட்டம் போட்டுக் கொண்டிருந்தவர் ப்ளாக் தொடங்கிப் பிரபல பதிவராகிட்டாராமில்ல...
யாரையோ செமையாப் போட்டுத் தாக்குறீங்க;-))
அது யார் தான் என்று புரியலை
ஹி....ஹி.....

நிரூபன் said...

ஆஹா...ப்ளாக் எழுதிய வித்துவான் இது வரைக்கும் நூறு பேரைப் பைத்தியமாகிட்டாரா....

அருமையான நகைச்சுவைப் பதிவு, சிரித்தேன், ரசித்தேன்.

Vasagan said...

\அதுக்கு ஒரு எல்லையே இல்ல டாக்டர்... பல்லு விளக்கும் போது தோணும், பாலத்த கடக்கும் போது தோணும், சாப்பிடறப்ப தோணும், சண்டை போடறப்ப தோணும், தூங்கறப்ப தோணும், துப்பரப்ப தோணும், நடக்கறப்ப தோணும், நிக்கறப்ப தோணும், கொசு அடிக்கும் போது தோணும், கொசுறு நியூஸ் படிக்கறப்ப தோணும்... ட்ரெயின்ல போறப்ப தோணும்... தலைவலிக்கரப்ப தோணும்... தோணும் போது தோணும்... தோணாத போதும் தோணும்... தோணனும்னு நினைக்கறப்ப தோணாது... ஆனா தோணாதுனு நினைக்கறப்ப தோணும்... தோணினாலும் தோணும்னு நினைக்கறப்ப தோணாம கூட போகும்... ஆனா தோணவே தோணாதுனு நினைக்கறப்ப கண்டிப்பா தோணாம போகாது...அவ்ளோ ஏன்? இப்ப கூட 'மெண்டல் டாக்டரும் மென்நவீனத்துவ பதிவரும்'னு ஒரு பதிவு எழுதணும்னு தோணுது"\


\நான் மொதலே மேட்டர் சொல்லிட்டா, நீங்க மேட்டர் படிச்சுட்டு மீட்டர் கட் பண்ணிட்டு போய்ட்டா நான் மீட்டர் வட்டி வாங்கி ப்ளாக் நடத்தற மேட்டர் என்ன ஆகறது. இன்னும் சொல்லப்போனா... மேட்டர்க்கு மேட்டர் தேத்த வழி இல்லாம தான் நான் இப்படி பீட்டர் விட்டுட்டு இருக்கேன்னு நீங்க என்னை பத்தி தப்பா நினைச்சுட்டா அப்புறம் என் மேட்டர் என்ன ஆகும், நீங்க கொஞ்சம் மீட்டர் கட் பண்றதுக்கு முன்னாடி இந்த மேட்டர் பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க. இன்னும் தெளிவா சொல்லணும்னா....\


\நான் பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார டாக்டர்னு நீங்க நினைச்சா அதான் இல்ல... நான் பைத்தியமாகி பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்கற பைத்தியகார ஆஸ்பத்திரில பைத்தியத்துக்கு வைத்தியம் பாத்து அதனால பைத்தியமான பைத்தியகார டாக்டர்களில் ஒருத்தன் அப்படின்னு நீங்க நெனச்சா அது தப்பில்ல... இன்னும் தெளிவா சொல்லணும்னா...\

இதையெல்லாம் படிக்கிற நமக்கே தலை சுத்துனா, கேட்கிற டாக்டர் நிலைமையை நினைச்சி பார்கவே பயமா இருக்கு.

Vasagan said...

\பாலாடையில் இருந்து வெண்ணையை நீக்கி மோர் உருவாகிறதோ அது போல நம் வாழ்வில் வெண்ணை போன்ற கெட்ட விசயங்களை அகற்றினால் மோர் போன்ற மோட்சத்தை அடையலாம்னு சொல்ல வரேன் டாக்டர்...\

சிந்தனை சிற்பி Appavi...

முடியலே அப்பாவி இதுக்கு மேல கமெண்ட் போட திருப்பி படிச்சா 911 க்கு போன் செய்து விடுவார்கள் வீட்டுக்கு போய் கமெண்ட் தொடரும்.

My days(Gops) said...

elaaam sonna neenga, IDLY ah pathi sollavey illai ey :(

ஹேமா said...

ஐயோ..ஐயோ...என்னா....தத்துவம்.சத்தமாச் சிரிச்சா பக்கத்துவீட்டுக்காரன் என்னைப் பைத்தியம்ன்னு நினைக்கப்போறான் !

எல் கே said...

உன்னை பத்தியே இவ்ளோ எழுதி இருக்க. சூப்பர்

vanathy said...

யாரோ எழுதின ப்ளாக்ல போய் சும்மா படிச்சும் படிக்காமையும் கன்னா பின்னானு கமெண்ட் மட்டும் போட்டுட்டு ...// haha....
'குட்டையில் ஊறிய மட்டை' போஸ்டை படிச்சுட்டு ஒருத்தர் இனி ஜென்மத்துல இன்டர்நெட் பக்கம் வர மாட்டேன்னு போய் இப்போ நல்ல வேலைல நிலைச்சு இருக்கறதா தகவல் வந்தது/// well done, Appavi.
Well written.

vanathy said...

உன்னை பத்தியே இவ்ளோ எழுதி இருக்க./// no. about gents. not ladies, LK.

பாலா said...

இரண்டு முறை வாசித்து சிரித்தேன்... நாற கலாய்.... :))))))

திவா said...

//எப்படி பாலாடையில் இருந்து வெண்ணையை நீக்கி மோர் உருவாகிறதோ அது போல நம் வாழ்வில் வெண்ணை போன்ற கெட்ட விசயங்களை அகற்றினால் மோர் போன்ற மோட்சத்தை அடையலாம்னு//

நெசமாவே அருமையான தத்துவம் இட்லி ச்சீ, ஏடிஎம்!

திவா said...

தலைப்பை பாத்துட்டு என்னப்பத்திதான் எழுதியிருக்கோன்னு சந்தேகம். அப்புறம் 500 பாலோயர் ன்னு பாத்து அப்பாடா நாம் இல்லைன்னு....ஹிஹிஹீ!

Rathinam Padmanaban said...

அருமையான பதிவு.

இந்த பதிவை படித்ததுடன் உங்களை பாராட்ட வேண்டும், ஆனால்

எப்படி பாராட்டுவது,
என்ன சொல்லி பாராட்டுவது,
எத்தனை முறை பாராட்டுவது,
எங்கு வைத்து பாராட்டுவது,
என்ன மொழியில் பாராட்டுவது,
யாரு யாரு எல்லாம் சேர்ந்து பாராட்டுவது,...

பதிவு நல்ல வேலை செய்கின்றதா???????????

siva said...

BEAUTIFUL POST

RVS said...

எப்டிங்க இப்டி.... யார் அந்த ஐநூறு ஃபாலோயர் கண்ட பதிவர்? ;-)))

வெங்கட் நாகராஜ் said...

”எங்க என் பேஷண்ட், எங்க என் பேஷண்ட்” கேட்டுட்டு அலையறாராம் அந்த டாக்டர்... சிரிக்க வைத்தமைக்கு ஒரு டாங்க்ஸ்....

புதுகைத் தென்றல் said...

அந்த கார்ட்டூன் பார்த்தே சிரிப்பு பொத்துக்குது. பதிவு படிச்சு வயித்து வலிதான்....

:))))))

வெட்டிப்பையன்...! said...

பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் புடிச்சா... :))) - பதிவ படிச்சுட்டு பைத்தியம் ஆகாம பின்னூட்டம் போட்டு இருப்பான்னு நீங்க நினைச்ச தப்பில்லை ,ஆனா பைத்தியம் பிடிச்சு பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்குற பைத்தியக்கார டாக்டர் ஆஸ்பத்திரிக்கு பின்னாடி நுழைந்து பின்னூட்டம் போட பைத்தியம் தெளிஞ்சு பின்னூட்டம் போட்டு இருப்பேன்னு நினைச்சா அது உங்க பின்னோட்ட சிந்தனைக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் . இருந்தாலும் பின்னூட்டத்த பின்னாடி போட்டுக்கலாம் அதனால இது ஒரு பின்னூட்ட முன்னோட்டமாக இருக்கட்டும்னு நான் பின்னூட்டம் இட்டா அது ஒரு பின்னூட்ட முன்னோட்டத்துக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் . இப்படி பின்னூட்டம் பின்னூட்டம்மா போட்டுட்டு இருந்தா "பின்"னுக்கு ஊட்டம் அதிகமாகி பின்னூட்டம் "பின் ஊ ஊஊஊ ஊஊ ட்டம்" ஆகிபோச்சுனா என்ன பண்ணுறதுன்னு தான் என்னோட முன்னோட்டமான பின்னூட்ட கருத்து.........
ஆமா நான் யாரு ...? இங்க எப்படி வந்தேன் ...?...நீங்க எல்ல்லாம் யாரு ...? .........என்னது பைத்தியம் பிடிசுருச்சா ....?!!!! யாருக்கு ...? எனக்கா...? டொயீங்...!

வெட்டிப்பையன்...! said...

ஹய்யோ அம்மா ....சிரிப்ப அடக்க முடியல சாமி ...!
ரூம் போட்டு உக்காந்து யோசிப்பிங்களோ ...! எப்பா படிச்சு புரிஞ்சுக்கறதுகுள்ள என்னோட சொட்ட தலை நெஜமாலுமே சூடு ஏறி போச்சு..! இன்னும் ரெண்டு இந்த மாதிரி போட்டு இருந்தீங்கனா நெஜமாலுமே எனக்கு பைத்தியம் புடிச்சாலும் புடிச்சுடும்...! அருமையான நகைச்சுவை உணர்வு உங்களுக்கு...!
//நான் எழுதின 'குட்டையில் ஊறிய மட்டை' போஸ்டை படிச்சுட்டு ஒருத்தர் இனி ஜென்மத்துல இன்டர்நெட் பக்கம் வர மாட்டேன்னு போய் இப்போ நல்ல வேலைல நிலைச்சு இருக்கறதா தகவல் வந்தது//
:-) ...!
//மலையே
மழையில்
நனைந்து
நகர்கிறதே!!!//

கலக்கிடீங்க போங்க , கவிதைல கூட சிரிக்க வைகிறீங்க ...!

ஷர்புதீன் said...

சிரிச்சு மாளலை...

really good man!

நா.மணிவண்ணன் said...

super comedy

Anonymous said...

Super comedy and all are true. Yeppidippa eppadiyellam yousika time irrukku ungalukku. Naanum comment potukitu iruken pinallil naanum patient agiduvenonu bayamairruku.

ஹுஸைனம்மா said...

அப்பாவி, அண்ணனோட நிலைமையை நினச்சாப் பாவமாத்தேன் இருக்கு. ஆனாலும், ஆயிரக்கணக்கான வாசகர்களைக் கைவிட்டுடக்கூடாதுங்கிறத மனசில வச்சு, தொடர்ந்து எழுதணுன்னு ‘ஊக்கு’விக்கிறேன்.

அப்புறம், நீங்க இத்தனை காலமா எழுதின கவிதைகளிலேயே எனக்கு ரொம்பப் (புரிஞ்ச) பிடிச்ச கவிதை மலை-மழை கவிததான்!! ஆஹா.. ஆஹா.. கவிப்பேரரசியம்மா நீ!!

கவிதாயினி வேற திஹாருக்கு ரெஸ்ட் எடுக்கப் போயிட்டாங்க. சரியான சமயம், நீங்க அந்த ‘இடத்தைப்’ பிடிக்க!!

ராஜி said...

சுவத்துல முட்டிக்குதே ஒரு புள்ளை வாம் அந்த பயபுள்ளை. உங்க பிளாக்குக்கு வந்துச்சு பாருங்க அதுக்கு க்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்,

ராஜி said...

சுவத்துல முட்டிக்குதே ஒரு புள்ளை பாவம் அந்த பயபுள்ளை. உங்க பிளாக்குக்கு வந்துச்சு பாருங்க அதுக்கு க்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்,

seena maana said...

ayyoo yenna yaaraavadhu pudingalen ..... padichi mudichadhum LIC kattidathula padhinaalu maadi nadandhey eri vandhu kudhikkira nilaikku konduvandhu uttuttiye paavi ....... inimey en kudumbatha yaar kaapathuvaanga ??????

கோவை2தில்லி said...

அய்யோ புவனா! டாக்டர் மாதிரியே ஆயிடுவோம் போல இருக்குங்க. சூப்பர்!!!!!!

middleclassmadhavi said...

ஹா ஹா ஹா, சொல்ல வார்த்தையே இல்லை, சிரிப்பு மழை!

angel said...

மிக மிக அருமை

சாகம்பரி said...

முதல் முறையா வந்தால் , கிறுகிறுத்து போயிடுச்சு !..!...!...? - நான் சரியாத்தான் பேசிகிட்டு இருக்கிறேனா?அந்த படம் மாதிரி ஆகிவிட்டேன்.

பிரவின்குமார் said...

ஹா.. ஹா..ஹா.. உண்மையில் செம கலக்கலோ கலக்கல்..!! பதிவ படிச்சு முடிக்கையில் நானும் லூசாகி்டுவோனுன்னு ஒரு ப்பீலிங்...... அவ்வ்...

பிரவின்குமார் said...

//முன் குறிப்பு:
சும்மா சிரிக்க மட்டும்... அதை மறந்து டென்ஷன் ஆகி இப்படி தல தலையா அடிச்சுக்கிட்டா அதுக்கு கம்பேனி பொறுப்பில்ல...:))// நல்ல வேளை இதை முன்னாடியே போட்டீங்க... இல்லனா.. நான் அஜராக்கிரதையா படிச்சு... முழுபைத்தியம் ஆகியிருப்பேன்...!!! (இப்ப என்ன அரை பைத்தியமானெல்லாம் கேட்கப்படாது.... அவ்வ்வ்.......) ஹி..ஹி..ஹி..

shafee said...

wooooooooow,superb..........
eppidi ippadi ezuthureenga.........
wazthukkal.......
im one of ur great fan..........

ANaND said...

பெண்களுக்கு நகைசுவை அவ்வளவா வராதுன்னு நெனசிட்டுஇருந்தன்...

இவ்வளவு நகைசுவை உணர்வு உள்ள பெண்ணை நான் பார்த்ததே இல்லங்க (பாட்டி மேல சத்தியமாங்க)

ரெண்டு வாட்டி படிச்சிட்டேன் .. வாய் சுளுக்கிகிச்சுங்க

அருணையடி said...

:))) Nice One!

Laughing For a Long Time!

நசரேயன் said...

அட்டகாசம்

ரோகிணிசிவா said...

அதகளம் , சிரிச்சுட்டே இருக்கேன்

Avargal Unmaigal said...

அம்மணி நீங்க ரொம்ப கலக்குறிங்க. உங்களிடம் நல்ல நகைச்சுவை உணர்வு உள்ளது. தொடருங்கள் வாழ்த்துக்கள் என்றென்றும். உங்கள் பதிவுகளை கண்டு நான் பொறாமை கொள்கிறேன். கொஞ்சம் உங்கள் மைண்டை எனக்கு இரவலாக தாருங்களேன்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//நம் வாழ்வில் வெண்ணை போன்ற கெட்ட விசயங்களை அகற்றினால் மோர் போன்ற மோட்சத்தை அடையலாம்//

அடடா....சூப்பர்பா.... ;)))

நல்ல என்ஜாய் பண்ணி படிச்சேன்... தேங்க்ஸ் :)

Vasagan said...

Appavi thirupi thirupi padichalam siripu thaan varuthae thavira comment vara madinkirathu...

vgr said...

AT, ungala padika thodanginadu lerundu...idu varai paditha varayil inda post than enaku niraya pidichuruku....well written.

post la ovoru varthayum nijam. Inda Tamil blog podaravangaloda aruvai blade rambam nu padu mokkai niraya ezhudaranga....


"அட கருமமே...அதெல்லாமா எழுதுவீங்க...படிக்கறவன் காரி துப்ப மாட்டான்"

matane....enna ivan avanuda padichan than avan ivanudu padipan :)

very hilarious....nalla irundudu.

-vgr

DrPKandaswamyPhD said...

ஜோர்.

Mohan said...

மனம் விட்டு சிரிக்க வைத்த அருமையான பதிவு! ரொம்ப நன்றிங்க!!
வாழ்க வளமுடன்!!

Krishnan R said...

super appavi thangamani

Giruba said...

சிரிக்க நேரம் போதவில்லை ஹையோ ஹையோ

geethasmbsvm6 said...

அது சரி, ஏடிஎம், கோவிந்து பாவம் எப்படிச் சமாளிக்கிறார். I pity him. இட்லி சாப்பிடற கொடுமை போறாதுனு இது வேறேயா?? நச், நச், நச், நச், அவர் கனடாவிலே அடிச்சுக்கிற சத்தம் இன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ங்கே வந்து கேட்குதே/ :P

sakthi said...

செம கலக்கல் மா

சிரிச்சு மாளலை ::)))

Anonymous said...

aama, eduthaudane oru uruvam sovathula nangu...nangunnu muttikuthe athu yaru?

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

ஹாஹ்ஹா.. தங்க்சு.. கை கொடுங்க.. நீங்க அப்பாவியே தான்.. //நம் மனதின் வலையில் சிக்கும் எண்ண பூக்களை எல்லாம் தொடுத்து மாலையாய் கோர்த்து போட ஒரு கழுத்து..// :))))

viswam said...

சும்மா சொல்லக்கூடாது. நல்லாவே கலக்குறீங்க. நான் சிரித்ததைப் பார்த்து என் மனைவி பயந்து வெளியில் ஓடிவிட்டாள்.

viji said...

aha aha he he aha aha.........
Dont frightened.
Just laughing.
viji

நிஜாம் என் பெயர் said...

ஜில்லுனு ஒரு காதல்ல போட்ட மொக்கைய இதுல சரி பண்ணிடிங்க.
உங்க பதிவை ஆரம்பத்தில் இருந்து படிச்சாலும், உங்களுக்கு இப்படி ஒரு திறமை இருக்குன்னு இப்ப தான் தெரியுது.
சத்தியமா சொல்லுங்க.. இது நீங்க எழுதுனதுதானா???!!!!!

செம்ம சூப்பருங்க.
லாஸ்ட் ஒன் வீக்-அ இருந்த புது client place ல டெண்சனோட இருந்தேன்.

இன்னிக்கு தான் அந்த புள்ள எதாவது எழுதி இருக்கான்னு பாக்கலாம்னு வந்தேன்.

ரொம்ப சிரிச்ச தாலே இங்க எல்லாரும் ஒரு மாதிரியா பாக்குராங்க
contract எதுவும் cancel ஆனா உங்க மேலே வழக்கு போடலாம்னு இருக்கேன்.

//ஒருமுறை பூத்த பூ
ஒரே மழையில் விழுந்ததே
இன்னொருமுறை பூக்குமா//
//இருந்தாலும் அது போல் வருமா!!!//

//"ஓ... முழுசா முத்திடுச்சு போல" என மனதிற்குள் நினைத்த டாக்டர்//

priya.r said...

பதிவு பிரமாதம் அப்பாவி
உன்ற பதிவில படிச்சு அதிகமா சிரிச்ச பதிவு இதா தான் இருக்கும்
இதுக்காகவே உனக்கு தனியா ஒரு பாராட்டு விழா எங்க சங்கம் ,பேரவை
சார்பா எடுக்க போறோம் :)

priya.r said...

//அது சரி, ஏடிஎம், கோவிந்து பாவம் எப்படிச் சமாளிக்கிறார். I pity him. இட்லி சாப்பிடற கொடுமை போறாதுனு இது வேறேயா?? நச், நச், நச், நச், அவர் கனடாவிலே அடிச்சுக்கிற சத்தம் இன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ங்கே வந்து கேட்குதே/ :P //

@ கீதா மாமி

இப்படி பதிவுஎல்லாம் போட்டா தானே நீங்க வந்து கமெண்ட்ஸ் போடறீங்க :)

Riyas said...

சூப்பர் சிரித்தேன்..

ஸாதிகா said...

தலைப்பே தலையை சுற்ற வைக்கின்றது.அசத்திட்டேள் அம்மிணி.

அப்பாவி தங்கமணி said...

@ S.Menaga - நன்றிங்க மேனகா..:)

@ பிரதீபா - ஹா ஹா ஹா... ஆமா நம்மள பத்தி தெரியல பாவம்... என்கிட்ட வந்திருந்தா ஒரே நாளுல சரி பண்ணி இருப்பேன் யு சி...:))

@ இராஜராஜேஸ்வரி - ஹா ஹா....நன்றிங்க

@ ANaND - நீங்க கவலையே படாம ப்ளாக் ஆரம்பிங்க... நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்... நீங்க இருப்பீங்க நான் இருப்பேனானு எல்லாம் குறுக்கு கேள்வி கேக்க கூடாது...:))

@ வை.கோபாலகிருஷ்ணன் - ரெம்ப நன்றிங்க சார்... பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்லி இருக்கீங்க... பிடித்த வரிகளை எடுத்து சொன்னதுக்கும் மிக்க நன்றி...

@ vidivelli - நன்றிங்க விடிவெள்ளி

@ Mahi - தேங்க்ஸ் மகி... ஐ எனக்கு நெறைய சப்போர்ட் இருக்கே...:)

@ பத்மநாபன் - ஹா ஹா ஹா... நன்றிங் அண்ணா...:)

@ முனைவர்.இரா.குணசீலன் - :))

@ Vasagan - ஆஹா... இப்படியா போட்டு குடுப்பீங்க...டூ பேட்....அவ்வவ்....:))... மழை தினமும் தான் கொட்டுது போங்க... :)

அப்பாவி தங்கமணி said...

@ நிரூபன் - ஐயையோ....உங்களுக்கு ஏங்க இந்த கொல வெறி... நான் பொதுவா சொன்னதை இப்படி மாட்டி விடறீங்களே அநியாயமா...ஹா ஹா...என்னையும் சேத்து தான் கிண்டல் பண்ணி இருக்கேன்... சோ வழக்கு வம்பு எல்லாம் வராதுன்னு நினைக்கிறேன்...:)

@ Vasagan - எழுதின என்னை பத்தி பாத்தா பாவமா இல்லையா ப்ரொபசர் சார்...:))... ஓ... இந்த பக்கமா 911 ஒரே பிஸினு சொன்னாங்க அதானா மேட்டர்...:))

@ My days(Gops) - ஆஹா... எங்க போனீங்க இவ்ளோ நாள்... இதுக்கே மக்கள் மிரண்டு போய்ட்டாங்க...அதான் இட்லி பத்தி போடலை கோப்ஸ்..:)

@ ஹேமா - பக்கத்து வீட்டுக்காரரையும் இதை படிக்க வெச்சுருங்க...பிரச்சனை தீந்தது...:))

@ எல் கே - ரெம்ப சரி.... இது பிளாக்கர்ஸ் பத்தி... அப்போ உன்னை பத்தியும் தானே ..:))

@ vanathy - தேங்க்ஸ் வாணி... LK கிட்ட சப்போர்ட் பண்ணினதுக்கும் ஸ்பெஷல் தாங்க்ஸ்...:))

@ பாலா - நன்றிங்க பாலா...:)

@ திவாண்ணா - வேணும்னே இட்லினு போட்டுட்டு அப்புறம் ATMஆ? நீங்களும் அந்த கட்சில சேந்துட்டீங்க போல இருக்கு.... அவ்வவ்.... இனி வரும் காலத்தில் உங்களுக்கு 500 follower வரலாம்...:))

@ Rathinam Padmanaban - ஹா ஹா... பதிவு நல்லாவே வேலை செய்யுதுங்க...சூப்பர்...:))

@ siva - நன்றிங்க சிவா...

அப்பாவி தங்கமணி said...

@ RVS - யாரும் இல்லிங்க...எல்லாரும் தான்...ஹி ஹி...:))

@ வெங்கட் நாகராஜ் - பேஷன்ட் அனுப்பி வெக்கறோம்னு டாக்டர்கிட்ட சொல்லுங்க... நன்றிங்க...:)

@ புதுகைத் தென்றல் - ஹா ஹா...நன்றிங்க அக்கா..:)

@ வெட்டிப்பையன்...! - ஐயையோ...நான் இல்ல... மீ எஸ்கேப்... ஹா ஹா ஹா... சான்சே இல்ல... உங்க கமெண்ட் பாத்தா எனக்கே கொஞ்சம் பயமா இருக்கு... நெஜமாலுமே எனக்கு பைத்தியம் புடிச்சாலும் புடிச்சுடும்னு சொல்லி இருக்கீங்க... புடிக்காமையே இப்படி எழுதறீங்க...இனி....அவ்வ்வ்வவ்.....ஜஸ்ட் கிட்டிங்...:))

@ ஷர்புதீன் - நன்றிங்க

@ நா.மணிவண்ணன் - ரெம்ப நன்றிங்க

@ பெயரில்லா - ஹா ஹா...இன்று கமெண்ட் போடும் நீங்கள் பின்னாளில் ஒரு பதிவராய் பைத்தியம் பிடிக்க ச்சே... பதிவராய் பரிமளிக்க வாழ்த்துக்கள்...:))

@ ஹுஸைனம்மா - அங்க இருக்கற அண்ணன் நிலமைய நெனச்சு இங்க இருக்கறவர் மனசை தேத்திக்கராராம்...ஹி ஹி... ஏன் இந்த கொல வெறி? என்ன பிரச்சனைனாலும் பேசி தீத்துக்கலாம்... என்னையும் களி சாப்பிட வெக்கற திட்டம் எல்லாம் வேண்டாம்... மீ அப்பாவி...அவ்வவ்...:))

@ ராஜி - ஹா ஹா ஹா... ரெம்ப சரி...:))

@ seena maana - ஹா ஹா ஹா... என் ஒரே சொத்தான இந்த ப்ளாக்'ஐ வேணும்னா உங்க குடும்பத்துக்கு குடுத்துடறேன் ஒகேவா...:)))

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - ஹா ஹா... பாத்தீங்களா என்னால நீங்க MBBS படிக்காமையே டாக்டர் ஆகரீங்க... சரி சரி... பொற்காசு எல்லாம் வேண்டாம் விடுங்க...:)))

@ middleclassmadhavi - நன்றிங்க மாதவி..:)

@ angel - தேங்க்ஸ் angel .:)

@ சாகம்பரி - ஹா ஹா...ஏதோ என்னால ஆனது... முதல் வருகைக்கு நன்றிங்க

@ பிரவின்குமார் - அபப இன்னும் ஆகலையா... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... நான் ஒண்ணும் கேக்கவே வேண்டாம்... நீங்களே எல்லாம் சொல்றீங்க...:))

@ shafee - ரெம்ப நன்றிங்க... முதல் கமெண்ட்க்கும் ரெம்ப நன்றி...:)

@ ANaND - பெண்களுக்கு நகைசுவை அவ்வளவா வராதா? ஆஹா... எவ்ளோ பேர் இருக்காங்க இங்கயே...நன்றிங்க...:)

@ அருணையடி - நன்றிங்க... முதல் வருகைக்கும்...:)

@ நசரேயன் - இன்னைக்கி கனடால வெயில் வரும் கண்டிப்பா (மழை தான் தினமும் வருதே...:))

@ ரோகிணிசிவா - நன்றிங்க டாக்டர் மேடம்... சிரிச்சு பல்லு சுளுக்கினவங்களை எல்லாம் உங்ககிட்ட தான் அனுப்ப போறேன்...:))

அப்பாவி தங்கமணி said...

@ Avargal Unmaigal - ரெம்ப நன்றிங்க...ஆனா மைண்ட்'ஐ இரவலா கேட்டு சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கறீங்க... ஹா ஹா...:))

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - நன்றிங்க ஆனந்தி..:)

@ Vasagan - ஹா ஹா... நன்றிங்க

@ vgr - ஹா ஹா... நன்றிங்க... செம கலாய்ப்பு நீங்க சொன்னதும்...:))

@ DrPKandaswamyPhD - நன்றிங்க

@ Mohan - ரெம்ப நன்றிங்க... முதல் வருகைக்கும் நன்றி..

@ Krishnan R - நன்றிங்க கிருஷ்ணன்... முதல் வருகைக்கும் நன்றி

@ Giruba - நன்றிங்க கிருபா... முதல் வருக்கைக்கும் சேர்த்து

@ geethasmbsvm6 - பாட்டிய கமெண்ட் போட வெக்கனும்னா இப்படி போஸ்ட் போட்டாத்தான் முடியும் போல இருக்கே... ஹி ஹி ஹி... இட்லி சாப்பிடற கொடுமையா? செஞ்சா தானே சாப்பிடறதுக்கு... I gave up idli making long time ago...:)))

@ sakthi - ரெம்ப நன்றிங்க சக்தி...:)

அப்பாவி தங்கமணி said...

@ பெயரில்லா - அது யாருன்னு எனக்கும் தெரியலீங்க... பேர் சொல்லாம இருக்கற நீங்களோனு எனக்கு சந்தேகம்....:))

@ எல் போர்ட்.. பீ சீரியஸ்.. - ஐ...என்னை அப்பாவினு சொல்லிட்டாங்க...ஐ ஐ ஐ... :)))

@ viswam ௦- அச்சச்சோ... பாவம்... திரும்பி உள்ள வர சொல்லுங்க...நன்றிங்க...:))

@ viji - சிரிங்க சிரிங்க சிரிச்சுட்டே இருங்க...:))

@ நிஜாம் என் பெயர் - அட பாவமே... நானே என் கையாள...சாரி கீ போர்டு'ஆல டைப் அடிச்சது தானுங்க... துண்ட போட்டு தாண்ட சொல்லுவீங்க போல இருக்கே... ஹா ஹா ஹா... பொதுவா என் பதிவை படிச்சு மக்கள் டென்ஷன் ஆவாங்க... நீங்க டென்ஷன் போயிருச்சுனு சொல்லி இருக்கீங்க... ரெம்ப நன்றிங்க... ஆஹா... நல்லா தானே போகுது... இதென்ன வம்பு வழக்கு... நான் அவள் இல்லை...:))

@ priya.r - உங்க சங்கம் பாராட்டு விழாவா? அய்யோ... எனக்கு மயக்கம் வரும் போல இருக்கே....:)))

@ Riyas - நன்றிங்க ரியாஸ்..

@ ஸாதிகா - ரெம்ப நன்றிங்க ஸாதிகா..:))

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதாவின் கதையை திருடி ஹாலிவுட்காரன்கள் படமெடுத்து விட்டான்கள்.மேலும் விபரம் அரிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

அனாமிகா துவாரகன் said...

ரொம்ப டவுனாக இருந்துச்சு. இதைப் படிச்சு வாய் விட்டு சிரிச்சேன். மனசு கொஞ்சம் ரிலாக்சாக இருக்கு. 5 மணி. திருப்ப தூங்கப் போறேன். குட் நைட். அதுக்கு முதல மருவாதையா ஒன்லைன்ல வாக்கா. வாங்கற காசுக்கு வேலை பாக்கனும் அம்மணின்னு சொன்னே, நாளைக்கு கனடா வந்திடுவேன். ஆமா.

இராஜராஜேஸ்வரி said...

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிடாமல் முடியுமா என்ன. பார்த்தீங்களா? பார்த்தீங்களா...

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/3.html

தங்களை வலைச்சர்த்தில் குறிப்பிட்டுள்ளேன். பார்த்து கருத்துக்களைத் தெரிவிக்கவும். நன்றி.

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

வணக்கம் தோழியே,

சிரித்து சிரித்து.. வயிறு புண்ணாகிப் போனது போங்க..

எங்க வீட்டுலே இப்போ இப்படித் தான் சொல்றாங்க.. நீங்களும் இதுமாதிரி ஒருகாலத்துலே திரியப் போறீகன்னு..

பின்னே பிளாகர் ஆரம்பிச்சிருக்கிறதினாலே 24 மணி நேரம் பிளாகரே கதி னு இருந்தா ?

சரி சரி..
எங்க வலைப்பக்கமும் வந்துட்டுப் போங்க

http://sivaayasivaa.blogspot.com

அப்பாவி தங்கமணி said...

@ உலக சினிமா ரசிகன் - நன்றிங்க

@ அனாமிகா - வேண்டாம் வேண்டாம்... கனடா எல்லாம் வராதே...:))

@ இராஜராஜேஸ்வரி - ரெம்ப நன்றிங்க'ம்மா...:)

@ சிவ.சி.மா. ஜானகிராமன் - ஹா ஹா... blogging கொஞ்சம் addiction தான்... ஆனா கொஞ்ச நாளுல மாறிடும்...நன்றிங்க...:)

RAMVI said...

புவனா, தங்களது பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

அப்பாவி தங்கமணி said...

@ RAMVI - Many thanks Ramvi...:)

priya.r said...

இதோட தொடர்ச்சி வருமா அப்பாவி :)

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - Akka, if any other mental blogger goes to see a mental doctor and then that mental doctor become another mental doctor patient and then that mental doctor patient goes to see another mental doctor and then that mental doctor become another mental doctor patient, then next post will come..;)

யாரு கிட்ட கேக்கறீங்க கொஸ்டின்...:)))))

priya.r said...

அதாவது 200 டாக்டர் மெண்டல் ஆகும் போது பதிவு தானா வரும் ன்னு சொல்ல வர்றே
அப்படி தானே அப்பாவி :)

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - adhe adhe...:))

ஸ்ரவாணி said...

உங்களால சிரிக்காம டைப் செய்ய முடிஞ்சிதா ?
என்னால முடியல .. விழுந்து விழுந்து சிரிச்சcha
எப்படி கமெண்ட் டைப் பண்ண முடியும் ?

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரவாணி - Many thanks ஸ்ரவாணி ...;)

மோ.சி. பாலன் said...

கோமாவில் இருப்பவர்கள் மட்டுமல்ல.. வேறு பிரச்சினை உள்ளவர்களுக்கும் இந்தப் பதிவு ஒரு மருந்து! சிரிச்சி சிரிச்சி வயிறு தாங்கல.. நான் போயிட்டு வரேன் !

அப்பாவி தங்கமணி said...

@ மோ.சி. பாலன் - ரெம்ப நன்றிங்க...:)

Post a Comment