Thursday, June 16, 2011

விதி... (சிறுகதை)


நான் கடைசி படி ஏறி வரவும் ட்ரெயின் கெளம்பறதுக்கு தயாராகவும் சரியா இருந்தது

ஓடி வந்து ஏறிட்டேன் கடைசி கம்பார்ட்மன்ட்ல. அப்பாடானு இருந்தது

எல்லா சீட்டுலயும் ஆள் இருந்தது. கால் "உக்காரு ஜானகி"னு கெஞ்சுது

அப்போ தான் கடைசி சீட்ல ஒரு இடம் காலியா இருந்தத பாத்தேன். அவசரமா போய் இடம் புடிச்சேன்

சீட்டுக்கு பின்னாடி இருந்த கண்ணாடில திரும்பி பாத்தா கயறு திறுச்சு போட்ட  மாதிரி ஒரே தண்டவாள மயம்

ட்ரெயின் ஒரு பத்து நிமிஷம் தான் போய் இருக்கும், என்னமோ மெக்கானிக்கல் ப்ராப்ளம்னு announcement வந்தது

"ச்சே... எப்ப பாரு இதான் இந்த எலெக்ட்ரிக் ட்ரெயின்ல தொல்லை" னு என் பக்கத்துல உக்காந்துட்டு இருந்த ஒரு நடுத்தர வயசு அம்மா சொல்லவும் நானும் ஒப்புதலாய் தலையாட்டினேன்

அப்புறம் ஒரு நிமிஷம் கூட இல்ல திடீர்னு டமால்னு என்னமோ சத்தம் பின்னாடி என்னமோ வந்து மோதி அப்படியே என்னை தூக்கி வீசுச்சு

"ஐயோ.... " னு நான் கண்ணு மூடிட்டு கத்தினேன்

கண்ணு முழிச்சு பாத்தா பக்கத்துல என் கணவர் கௌதம் நல்ல தூக்கத்துல இருந்தார்

ச்சே எல்லாம் கனவு... என்ன கொடுமையான கனவு இதுனு மணிய பாத்தா காலை அஞ்சு மணி

அதிகாலை கனவு பலிக்கும்னு சொல்வாங்களேனு தோணின நொடி தூக்கம் காணாம போய்டுச்சு

எழுந்து வேலைய ஆரம்பிச்சுட்டேன்

கிட்சன்ல காபி போட்டுட்டு இருக்கவும் பின்னாடி காலடி சத்தம் கேட்டது

"என்ன ஜானு சீக்கரமே எழுந்துட்டயா?" என கெளதம் கேட்க

"ம்" என்றேன். இவரிடம் கனவு பற்றி கூறலாமா என தோன்றிய மனதை கட்டுபடுத்தினேன்

ஆனாலும் என் முக வாட்டத்தை கண்டுகொண்டவர் அருகில் வந்து என் முகம் பற்றி "என்னம்மா ஏன் டல்லா இருக்க?" எனவும்

"ஒண்ணுமில்ல கொஞ்சம் டையார்ட்"

"பேசாம சிக் லீவ் போட்டுடேன்" என கனிவாய் கூற

அப்படி செய்தால் என்ன என எனக்கே ஒரு கணம் தோன்றியது. கனவில் வந்தது போல் நடக்கும் விதி இருந்தால் தவிர்ப்போமே என

அடுத்த கணமே... ச்சே ஒரு கனவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா என அந்த எண்ணத்தை கை விட்டேன்

அப்படி இருந்தாலும் காலமெல்லாம் வீட்டிலேயேவா இருக்க இயலும் என தோன்றியது

"என்ன ஜானு சிக் லீவ் போட்டுகறையா?" என கெளதம் குரலில் கலைந்தவள்

"இல்லப்பா... ப்ராஜெக்ட் Go Live பக்கம் வந்தாச்சு... இப்ப லீவ் போடறது சரி வராது"

"ஒரு நாள் போட்டா என்னடா ஆய்டும்"

"இல்ல கெளதம். இன்னிக்கி Friday தானே. போயிட்டு வந்தா ரெண்டு நாள் ரெஸ்ட் தானே"

"சரி... இப்ப மணி அஞ்சரை தானே ஆச்சு, போய் ஒன் ஹவர் தூங்கு. லஞ்ச் வேணா வெளிய சாப்ட்டுக்கலாம் ஜானு"

"இல்லப்பா,  ஒண்ணும் பிரச்சனை இல்ல. நான் செஞ்சுடறேன்"

"சரி நானும் ஹெல்ப் பண்றேன்... என்ன செய்யணும்னு சொல்லு" என  கெளதம் அக்கறையாய் கூற

"ம்... ஹெல்பா? என்னை தொந்தரவு பண்ணாம இருந்தா போதும்" என நான் சிரித்து கொண்டே கூற

"அப்படியா... எனக்கு இது வரைக்கும் தொந்தரவு பண்ற எண்ணமில்ல... நீ சொன்னப்புறம் தான் தோணுது" என குறும்பாய் சிரித்து கொண்டே கெளதம் என்னை அணைக்க முயல

"போதும் போதும். போய் உங்க செல்ல மகள எழுப்புங்க. இவள டே கேர்ல விட்டுட்டு போகணும். எப்படா இவ பெருசாவானு இருக்கு" என நான் சலித்து கொள்ள

"இப்ப இப்படி சொல்லுவ. பெருசானப்புறம் சின்னதாவே இருந்துருக்கலாம்னு சொல்ல போற பாரு" என சிரித்து கொண்டே ரித்திகாவை எழுப்ப போனார் கெளதம்

*********************************

ஒரு வழியா ரித்திகாவை டே கேர்ல் விட்டுட்டு நான் ட்ரெயின் ஸ்டேஷன்ல் காரை நிறுத்திட்டு உள்ள போனேன்

நான் போகவும் ஒரு ட்ரெயின் கிளம்பவும் சரியா இருந்தது, கடைசி கம்பார்ட்மன்ட்ல் ஏறினேன்

உள்ள ஏறினப்புரம் தான், என்ன இது? கனவுல  வந்தது போலவே கடைசி கம்பார்ட்மன்ட்னு தோணுச்சு

"ச்சே... என்ன நெனப்பு இது" ன்னு ஒதுக்கினேன்

மேலும் அதிர்ச்சியாய் கனவில் போலவே எல்லா சீட்டிலும் மக்கள் நிறைந்து இருந்தனர். என்னையும் அறியாமல் கண்கள் கடைசி இருக்கையை பார்க்க மனம் அமைதியானது

கனவில் வந்தது  போல் அந்த சீட் காலியா இல்லாம அதிலும் ஆள் இருந்தது. நிம்மதியாய் மூச்சு விட்டேன்

ஏன் தான் பயந்து சாகிறேனோ என சட்டென சிரிப்பு தோன்றியது

அதே நேரம் கடைசி சீட்ல இருந்த ஒரு யூனிவர்சிட்டி மாணவன் (அந்த யூனிவர்சிட்டியின் பெயர் போட்ட சட்டை அணிந்து இருந்தான்) எழுந்து

"Hi, you can sit here. I'm getting off in couple of stops" எனவும் எனக்கு குப்பென வியர்த்தது

"No, its okay" என நான் மறுக்க

"Its alright" எனவும் நான் என்ன செய்வதென தெரியாமல் விழிக்க

அவன் பக்கத்துல இருந்த ஒரு நடுத்தர வயது பெண்மணி "Why not?" என நகர்ந்து அமர்ந்து எனக்கு இடம் செய்தார்

அதுக்கு மேல வேண்டாம்னு சொன்னா எல்லோரும் என்னை வேடிக்கை பொருளை போல் பாப்பாங்கன்னு தோண  பேசாம உக்காந்தேன்

அந்த யூனிவர்சிட்டி மாணவன் எனக்கு எருமை வாகனத்தில் வந்த எமனாகவே தோன்றினான் அந்த நொடி

என் கண்கள் சுவாதீனமாய் சீட்டுக்கு பின் பக்கம் இருந்த ஜன்னலை பார்த்தது. கனவில் போலவே கயறு திரித்து போட்டது போல் தண்டவாள மயம்

என் கைகளின் நடுக்கத்தை என்னால் உணர முடிந்தது. "அடுத்த ஸ்டாப்ல எறங்கிட்டா என்னனு" தோணுச்சு, ஆனாலும் இதை ஒரு சவாலா நெனச்சு என்னை கட்டுபடுத்திக்கிட்டேன்

ட்ரெயின் கொஞ்ச தூரம் போனதும் ஸ்லோ ஆச்சு. என்னோட நடுக்கம் அதிகமாச்சு. கடவுளே இப்ப announcement எதுவும் வரக்கூடாதுன்னு  நான் நெனச்ச நொடி

"Attention passengers, we've a mechanical problem in Victoria station. We're experiencing a delay. We apologize for any inconvenience" னு அறிவிப்பு வந்தது 

என்ன இது ஏதோ பழைய படத்துல வருமே... ம்... நூறாவது நாள்னு ஒரு படம்... அதுல பின்னாடி நடக்க போற விபரீதம் கனவுல வருமே... அது மாதிரியா என என்னோட நடுக்கம் அதிகமானது

"O god... this is happening so often with this electric trains" என எனக்கு அருகில் அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயது பெண்மணி அலுத்து கொண்டார்

ஐயோ என்ன இது எல்லாமே கனவில் போலவே வருதே என மனம் பதற என் இதய துடிப்பு எனக்கு துல்லியமாய் கேட்டது

கௌதமின் சிரித்த முகம் கண் முன் தோன்றியது. ரித்திகா மம்மி என அழைப்பது போல் காதில் ஒலித்தது

இதற்கு மேலும் தாமதித்தால் என் உயிர் மட்டுமல்ல எல்லோர் உயிரும் போய் விடுமென்பது உறைக்க

"Please please stop the train. There is going to be an explosion. Please stop the train" என நான் கத்த

"ஏய் ஜானு... ஜானும்மா... என்னாச்சு?" என கெளதம் என்னை பற்றி உலுக்க ஒரு கணம் எதுவும் புரியவில்லை எனக்கு

"என்ன ஜானு? ஏன் இப்படி தூக்கத்துல கத்தின. எதாச்சும் கெட்ட கனவா?" என கேட்க

"அப்பாடா எல்லாம் கனவா.." என ஆயாசமாய் கௌதமின் தோளில் சாய்ந்து விசும்பினேன்

"ஏய்... என்னாச்சுமா? ஜானு இங்க பாரு. ஏன் இப்படி நடுங்கற?" என கெளதம் பதற எனக்கு இன்னும் நடுக்கம் நிற்கவில்லை

"ஜானு... ரிலாக்ஸ்... ஒண்ணுமில்ல...ரிலாக்ஸ்" என என்னை சமாதானம் செய்ய முயன்றார்

சற்று என் நடுக்கம் நின்றதும் என் கனவை கௌதமிடம் கூறி முடிக்க கெளதம் சிரிப்பை கட்டுப்படுத்த இயலாமல் சிரித்தார்

அதை பார்த்த எனக்கு கோபமானது. அவர் பிடியில் இருந்த என்னை விடுவித்து கொண்டு கட்டிலை விட்டு இறங்க முயல, என் கோபத்தை புரிந்து கொண்டவர்

"ஏய் ஜானு. சாரி சாரி. நீ சொன்னத கேட்டதும் சிரிப்ப கண்ட்ரோல் பண்ண முடியல" என புன்னகைக்க

"இதுல சிரிக்க என்ன இருக்கு உங்களுக்கு. இங்க ஒருத்தி நடுங்கிட்டு இருக்கறது புரியலையா"

"அச்சோ... சாரி சாரி... வெரி சாரிடா... நீ கனவு அப்புறம் கனவுக்குள்ள கனவெல்லாம் சொன்னியா. அதான் சிரிச்சுட்டேன்...ரியல்லி சாரி பேபி" என என் தாடையை பற்றி கெஞ்ச அதற்கு மேல் என்னால் கோபத்தை இழுத்து பிடிக்க இயலவில்லை

ஒன்றும் பேசாமல் மறுபடியும் அவர் தோளில் சாய்ந்து கொண்டேன்

"ரெம்ப பயந்துட்டயா? என்னடா இது... கனவுக்கு போய் யாராச்சும் இப்படி நடுங்குவாங்களா ஜானும்மா?" என கெளதம் ஆதரவாய் அணைக்க

"இல்லப்பா... அப்படியே நிஜம் மாதிரியே... ச்சே... இப்ப நெனச்சாலும்..." என நான் அந்த நினைவில் நடுங்க

"அந்த எமனுக்கு எப்படி தைரியம் வரும் உன்னை என்னோட பிடில இருந்து தூக்கிட்டு போக" என அப்படியே என்னை தன்னோடு இன்னும் இறுக அணைத்துக்கொண்டார் கெளதம்

அந்த அன்பில் மனம் நெகிழ கண்களில் நீர் துளிர்த்தது

அதை கண்ட கெளதம் என் மனதை மாற்ற எண்ணி "ஏய் ஜானுமா... உன்னை மல்டி ப்ளெக்ஸ் கட்ற மாதிரி கனவு காணுனு சொன்னா இப்படி மல்டி கனவு கண்டுட்டு இருக்கியேடா" என கேலியாய் சிரிக்க எனக்கு பொய் கோபம் தோன்ற

"உங்கள... " என தலையணை எடுத்து கௌதமை அடிக்க துவங்கினேன்

அதே நேரம் அலாரம் ரேடியோவில் "அப்படி போடு போடு போடு... " என சினிமா பாடல் கேட்க இருவரும் எல்லாம் மறந்து சத்தமாய் சிரித்தனர்

கதிரவனின் ஒளி கசிந்து விடியலை உள்ளே இழுத்து வந்தது பிரகாசமாய், அவர்கள் அன்பை போலவே

அப்பாவியின் குறிப்பு:
இன்னிக்கி ட்ரெயின்ல ஏறினா, கடைசி சீட்ல தான் உக்கார இடம் கெடைச்சது. பின்னாடி ஜன்னல்ல பாத்தா ஒரே தண்டவாள மயம். அப்போ மனசுல ஓடின விபரீத ரீல் தான் இந்த கதை. இது உங்க "விதி"... ஹா ஹா ஹா

எல்லா புகழும் ட்ரெயினுக்கே... (மீ எஸ்கேப்)

...

54 பேரு சொல்லி இருக்காக:

அன்னு said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....அப்ப்பாஆஆஆஆஆ!!!

vinu said...

me 2nduuuuuuuuuuuu

vinu said...

appaadi thundup pottu driverukku pinnaadi seat pudichchaachuuu.... irrunga poi pathivai padichuttu varreannn

vinu said...

enna kodumai sir ithu....

ithukkaa naan seat athuvum second seat pudichuttup poip paarththaa.... rendu vaatti kanavaam athulaiyummm kadaichiiiiiiiiiiiiiii seattaaaammmmmmmmmm...... mudiyalaaa

பத்மநாபன் said...

கனவுக்குள் கனவுக்குள் கனவு... ஸ்பிடா கொண்டு போய் டக்குனு டிராக் மாத்துனது நல்லா இருந்துச்சு..

வை.கோபாலகிருஷ்ணன் said...

//சீட்டுக்கு பின்னாடி இருந்த கண்ணாடில திரும்பி பாத்தா கயறு திறுச்சு போட்ட மாதிரி ஒரே தண்டவாள மயம்//

சூப்பர் கற்பனை.

//அந்த யூனிவர்சிட்டி மாணவன் எனக்கு எருமை வாகனத்தில் வந்த எமனாகவே தோன்றினான் அந்த நொடி //

அப்படித்தான் தெரிந்திருப்பான். யதார்த்தம்.

//"அந்த எமனுக்கு எப்படி தைரியம் வரும் உன்னை என்னோட பிடில இருந்து தூக்கிட்டு போக" என அப்படியே என்னை தன்னோடு இன்னும் இறுக அணைத்துக்கொண்டார் கெளதம் //

ஆஹா! நல்லதொரு ஆதரவான கட்டம்.

//அதே நேரம் அலாரம் ரேடியோவில் "அப்படி போடு போடு போடு... " என சினிமா பாடல் கேட்க இருவரும் எல்லாம் மறந்து சத்தமாய் சிரித்தனர்//

மகிழ்ச்சி.

//அப்போ மனசுல ஓடின விபரீத ரீல் தான் இந்த கதை. இது உங்க "விதி"... ஹா ஹா ஹா//

விதி யாரை விட்டது?

//எல்லா புகழும் ட்ரெயினுக்கே... (மீ எஸ்கேப்)//

நல்ல நகைச்சுவையான கனவுக்கதையை கதைத்துள்ள உங்களுக்குத்தான் எல்லாப் புகழும்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

குணசேகரன்... said...

கதை நல்லா இருக்கு

மோகன்ஜி said...

இன்னிக்கு என் கனவுல யார் வரப போறாங்களோ?
//திரும்பி பாத்தா கயறு திறுச்சு போட்ட மாதிரி ஒரே தண்டவாள மயம்// நல்லா முறுக்கியிருக்கீங்க!

கந்தசாமி. said...

ரெண்டு தரம் கனவா ...சுவாரசியமாய் இருந்துச்சு ....

இராஜராஜேஸ்வரி said...

எல்லா புகழும் ட்ரெயினுக்கே...

தமிழ் உதயம் said...

ரசிக்கும்படி இருந்தது,

Lakshmi said...

சிறுகதைமட்டுமில்லே, சிறப்பான கதையும் கூட.

Anonymous said...

"Final Destination" யும் "Inception" யும் நம்ம ஊரு சினிமா பானில பார்த்த மாதிரி இருந்துச்சு உங்க சிறு கதை ...!

--வெட்டிப்பையன்

அனாமிகா துவாரகன் said...

Tonight, you will see me strangling you in your dream for writing this mokkai story.

அனாமிகா துவாரகன் said...

It may happen in real if you keep writing like this. :@ ha ha

அனாமிகா துவாரகன் said...

உன்ன சொல்லி குத்தமில்லேக்கா. எங்க விதி. நொந்துட்டே போறேன். நாலு மணிக்கே தூக்கம் கெட்டுது. வந்து ஏதாவது லைட்டா படிப்பம்னா இப்படி மொக்கை போட்டு படுத்தறீங்களே. ஏன். ஏன். ஏன்.

பிரதீபா said...

Final Destination பாத்தீங்களா சமீபமா? அதோட தாக்கமா?

Vasagan said...

கனவுக்குள கனவா உன்னை எல்லாம் ..........................நீயே புல் அப் பண்ணிக்கோ

Vasagan said...

\Tonight, you will see me strangling you in your dream for writing this mokkai story. \
@Sunami
chatinglae kolurathu pathathunu kanavulae vaeraeya?

Summavae Appavai karpanai thilakam. ithula nee varae rathri kanavulae varuvaenu sollidae. Appavai thunkana mathrithan?


@Appavai

padukkum pothu un thalaikku pakathula nee seitha idli vachukko. Kaathu, Karuppu,Sunami ellam varaathu.

Vasagan said...

\"அந்த எமனுக்கு எப்படி தைரியம் வரும் உன்னை என்னோட பிடில இருந்து தூக்கிட்டு போக" என அப்படியே என்னை தன்னோடு இன்னும் இறுக அணைத்துக்கொண்டார் கெளதம் \

ithu ithuthaan appavai unnudaiya trademark.

அன்னு said...

//அனாமிகா துவாரகன் சொன்னது…

Tonight, you will see me strangling you in your dream for writing this mokkai story.
//

Anami, I will help you even if it is in real. ரொம்ப நாளாச்சே, கார்த்திண்ணாவோட தொடரும் இழுக்குதேன்னு இன்னொரு கதை போலன்னு முத ஆளா வந்து படிச்சேன் பாரு... அது என் விதி... நான் ஆதரவை தந்துட்டே இருக்கேன்.... நல்லா இறுக்கணும்... இன்னொரு தடவை அந்த அப்பாவியின் மூளையில் (அப்படின்னு ஒன்னு இருந்தால்..) இப்படி ஒரு மொக்கை கனவுல கூட தோணக்கூடாது...!!

ஹ்ம்ம்... விதி யாரை விட்டது!!

எல் கே said...

//உன்ன சொல்லி குத்தமில்லேக்கா. எங்க விதி./
\
+100000

எல் கே said...

பல லாஜிக் மீறல்கள்

கடைசி படி ஏறும் பொழுது ட்ரெயின் கிளம்புதாம், அப்படியும் ட்ரைன பிடிக்கராங்கலாம்.

கடைசி படி இறங்கும்பொழுது என்று வரவேண்டும்

எல் கே said...

//கார்த்திண்ணாவோட தொடரும் இழுக்குதேன்னு இன்னொரு கதை போலன்னு முத ஆளா வந்து படிச்சேன் பாரு..//

hello appavi oru kathaiya mudikarathukulla nan rendu kathai mudikkaren

vanathy said...

அப்பாவி, கனவுக்குள் கனவா? எனக்கு ஒரு கனவே ஞாபகம் இருந்து தொலைப்பதில்லை. அதில் இன்னொரு கனவா? சூப்பர் கற்பனை & கதை.

பாலா said...

நல்ல கனவா காணமாட்டீங்களா??? :))))))

வெங்கட் நாகராஜ் said...

ஸ்... அப்பா கண்ண கட்டுதே.... நான் போய் தூங்கி நல்ல கனா காணப் போறேன்... [தூக்கத்திலே அட்லீஸ்ட் ஷாஜகானோட மும்தாஜ் திரும்பி வராளான்னு பார்க்கறேன்...]

Anonymous said...

Story super ! neenga sonnamathiri ella puzhum trainukku than. ungal exposure than ungalukku intha karpanai valathai tarukirathu. Amam, antha ikathana soozhnilaiyil kadavulai vendikka vendiyathuthane?

Iravu thoonguvatharkku mun hanumanai vendikittu padutha intha matiri keta kanavellam varathu.

Anal nalla kathai varum.

சுந்தரா said...

உங்களுக்கு இனி, டிரெய்னில் கடைசிப்பெட்டியில் இடம் கிடைக்கக்கூடாதுன்னு வேண்டிக்கறேன் :)

ஸ்ரீராம். said...

அருமையான சிறுகதை'னு முதல்லையே ஒரு கமெண்ட் போட்டிருந்தேனே...காணோமே....அதுக்கு சூப்பர் கமெண்ட் னு உங்க பதிலையும் பார்த்தேனே...எங்க அது...ஓ..கனவா....ஸாரி...

அருமையான சிறுகதை.

கோவை2தில்லி said...

மல்டி கனவா! தாங்க முடியலப்பா!
கதை விறுவிறுப்பாக சென்று சந்தோஷத்தில் முடித்தது சூப்பர்.
பாராட்டுக்கள் புவனா.

RAMVI said...

அப்பாவி மேடம்,கதை மிகவும் நன்றாக உள்ளது.நான் வலைபதிவுக்கு புதியவள்.உங்கள் பதிவுகளை சில நாட்களாக படித்து வருகிரேன். மிகவும் நன்றாக இருக்கிறது.

அனாமிகா துவாரகன் said...

ஏன் மாம்ஸ். ஏன். நான் அவங்க கூட சாட் பண்ணியே நாளாச்சு. அவ இப்ப ரொம்ப பந்தா பார்வதி ஆகிட்டாங்க. நேத்து பேச வாக்கான்னு அன்பா கூப்பிட்டா, வரவே இல்லை. அவ கூட இனி நான் பேச்சு வைச்சுக்கப் போறதில்லை. கார்ர்ர்ர்ர்ர்ர்ர்.

அவங்க வூடோ டோல் செஞ்சு வைச்சிருக்கேன். அதனால தான் இன்னைக்கு தலைவலி போல. ஹா ஹா.

@ அன்னுக்கா,
ஆதரவுக்கு ரொம்ப நன்றி. சைட்ல கார்த்தி சார் காலை வாரினதுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.

@ கார்த்தி சார்,
அது எப்படி லாஜிக் மீறல் எல்லாம் கண்டு பிடிக்கறீங்க. இவங்க கதையில் நிறைய வருமே. ஹா ஹா. அப்பாவி டென்சனான அனாமி சந்தோசமாவா.

Sathya's said...

train sema fast....

Riyas said...

good story thangamani

Thanai thalaivi said...

தங்கமணி அவர்களே !, தங்கள் சாபம் ச்..ச்சே வாழ்த்துகள் பலித்து விட்டது.
இத்தனை நாட்களாய் பெயரில்லாமல் இருந்த நான் இன்று ஒரு பதிவர் ஆகி விட்டேன். முடிந்த போது என் ப்ளாக்கிற்கு வரவும். உங்கள் அளவிற்கு இருக்காது என் எழுத்துகள். ஆனால் சுமாராக இருக்கும்.

நன்றி.

நிஜாம் என் பெயர் said...

திரிலர் ஸ்டோரி என்று நீங்களே நினைத்து கொண்டு எழுதி,
அதில கொஞ்சம் ரோமன்சையும் சேர்த்து கலக்கிவிட்டீர்கள் பொங்கல், சீ ச்சே போங்கள்.

மாதேவி said...

இன்றும் ரெயின் கனவில் தொடருமா :))

Matangi Mawley said...

Katha semma speed! :) oru Hollywood padame ottitteenga, ponga!

soooperubbu! :D

Porkodi said...

அலோ நாங்கள்லாம் இன்செப்ஷன் படம் பாத்துட்டோம்ல.. எங்க கிட்டயேவா.. நல்லா சுத்துராய்ங்கைய்யா ரீல.. வழக்கம் போல, சூப்பர் அப்பாவிக்கா! :D

Mahi said...

உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன்,தொடருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

http://mahikitchen.blogspot.com/2011/06/blog-post_17.html

Mahi said...

இன்ஷப்ஷன் படம் பாத்துட்டு அடுத்த நாள் தண்டவாளத்தைப் பாத்தீங்களோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

கதை வேகமா முடிந்தது சந்தோஷம்! :)

தக்குடு said...

இட்லிமாமியோட சொந்த கதை சிறுகதை வடிவத்துல வந்துருக்கு போல!! போன வாரம் எழுதின 'பைத்தியக்கார டாக்டர்' பதிவு தான் ஞாபகத்துக்கு வருது!..:))

ஸாதிகா said...

எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஆரம்பித்து முடித்த கதை அருமை.

தி. ரா. ச.(T.R.C.) said...

onnu puriyuthu nalla 4 velaiyum thunkareenkannu

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - என்னாச்சு அன்னு?...:))

@ vinu - ஹா ஹா ஹா....நோ டென்ஷன் பிரதர்...:)

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா...:)

@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்

@ குணசேகரன்... - நன்றிங்க குணசேகரன்... முதல் வருகைக்கும் மிக்க நன்றி..

@ மோகன்ஜி - ஹா ஹா... கனவுகள் சில நேரம் விநோதமானவை தான்...:)

@ கந்தசாமி. - நன்றிங்க...முதல் வருகைக்கும் நன்றி

@ இராஜராஜேஸ்வரி - ஹா ஹா...:)

@ தமிழ் உதயம் - நன்றிங்க சார்

@ Lakshmi - நன்றிங்க லக்ஷ்மி'ம்மா

அப்பாவி தங்கமணி said...

@ வெட்டிப்பையன் - Final Destination பாத்து இருக்கேங்க... Inception பாக்கலை... இப்ப பாக்கணும்னு தோணுது...:)

@ அனாமிகா - ஏன் இப்படி எல்லாம் பயப்படுத்தற? அப்புறம் இன்னும் கொடுமையா கனவு எல்லாம் வந்து அதை யெல்லாம் நான் போட்டா என்னை குறை சொல்ல கூடாது...:)) அதென்ன லைட்ஆ படிக்கறது? லைட்ஆ சாப்பிடரதுன்னு கேள்விப்பட்டு இருக்கேன்... அதே ஞாபகத்துல இருந்த இப்படி தான் தோணும் போல...:)))

@ பிரதீபா - தீபா, Final Destination flight accident version / roller coaster version / train accident version மூணும் ரெம்ப நாள் முன்னாடியே பாத்துட்டேன்... அப்ப ப்ளாக் எழுத வராததால இப்படி எல்லாம் தோணலை போல இருக்கு... இப்ப தான் இப்படி தண்டவாளத்த பாத்தா கூட எழுத தோணுதே....அவ்வ்வ்வ்...

@ Vasagan - ஹா ஹா...ஒகே ஒகே நோ டென்சன்..:) தேங்க்ஸ்..:)

@ அன்னு - ஐயையோ... அடபாவிங்களா... இங்க பாருங்க மகா ஜனங்களே, எனக்கு எதுனா ஆனா நீங்க எல்லாரும் சேந்து இந்த ரெண்டு பேர் மேலயும் கேஸ் போடணும் சொல்லிட்டேன்... :))

@ எல் கே - எச்கியூஸ் மீ நக்கீரரே, அந்த படி இறங்கி ட்ரெயின் ஏறுறது நம்ம ஊர்ல தான் பொருந்தும்... இங்க ட்ரெயின் பிளாட்பாரம் ரெண்டு லெவல்ல இருக்கும்... ஆரம்பத்துல எனக்கும் என்னடா இதுனு தான் தோணுச்சு... கீழ லெவல் east / west போகும், மேல லெவல் north / south போகும்... இந்த கதைல அந்த பொண்ணு மேல லெவல் ட்ரெயின்ல போறதா கற்பனைல எழுதினேன்... இந்த விளக்கம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா...ஹா ஹா... :))

//கடைசி படி ஏறும் பொழுது ட்ரெயின் கிளம்புதாம், அப்படியும் ட்ரைன பிடிக்கராங்கலாம்// எஸ்... அது கரெக்ட் தான் கார்த்தி. ஏன்னா? இந்த ட்ரெயின் கெளம்ப போகுதுன்னு indicate பண்ற மாதிரி முதல்ல ஒரு chime பெல் மாதிரி அடிக்கும்... அது அடிச்சு சில seconds கழிச்சு தான் door க்ளோஸ் ஆகும்... படி எல்லாம் கிடையாது... பிளாட்பாரம் லெவல்ல தான் ட்ரெயின் இருக்கும்... சோ நெறைய பேர் பெல் அடிச்சு கதவு மூடற கேப்ல உள்ள ஓடுவாங்க... அப்படி செய்யறது ரெம்ப ரிஸ்க்... but many do it...when there is a rule, it meant to break I guess...:))

@ vanathy - எனக்கும் எல்லா கனவும் நினைவில் இருக்காதுங்க... ஆனா இது என் கனவில்ல, கற்பனை... நன்றிங்க...:)

@ பாலா - ஆஹா... இது என் காணவில்லைங்க... யாரோ கனவு கண்டதா ஒரு கற்பனை...:))

@ வெங்கட் நாகராஜ் - ஹா ஹா ஹா...மறுபடி மும்தாஜ்'ஆ? ஆதி, கொஞ்சம் கவனிங்கப்பா...:))

@ பெயரில்லா - நன்றிங்க... ரெம்ப சரியா சொன்னீங்க... exposure தான் கற்பனைக்கு மூலதனம்... நன்றி..:)

அப்பாவி தங்கமணி said...

@ சுந்தரா - ஹா ஹா ஹ... உங்க வேண்டுதல் பலிக்க நானும் வேண்டிக்கறேன்...:)

@ ஸ்ரீராம். - ஹா ஹா ஹா... உங்க கமெண்ட் முழுசா படிக்காம எங்க கமெண்ட்னு தேட தொடங்கிட்டேன்...ஹா ஹா..:))

@ கோவை2தில்லி - தேங்க்ஸ்'ங்க ஆதி...:)

@ RAMVI - ரெம்ப நன்றிங்க ராம்வி... வெல்கம் டு ப்ளாக் லேன்ட்...ஆல் தி பெஸ்ட்...:) முதல் வருகைக்கும் நன்றி...

@ அனாமிகா - லாஜிக் மீறல்னு சொன்னதே not valid.... இதுல சப்போர்ட் வேறயா ... ஹையோ ஹையோ...:)

@ Sathya's - நன்றிங்க சத்யா..:)

@ Riyas - நன்றிங்க ரியாஸ்

@ Thanai thalaivi - வாவ்... சாபம் பலித்ததுக்கு சந்தோஷம்... வாழ்த்துக்கள்... உங்க பேர் கிளிக் பண்ணினா உங்க ப்ளாக் லிங்க் வரணும்... ஆனா வரலைங்க... உங்க ப்ளாக் அட்ரஸ் குடுங்க... கண்டிப்பா வரேன்...நன்றிங்க..:)

@ நிஜாம் என் பெயர் - ஹா ஹா... நன்றிங்க..:)

@ மாதேவி - வந்தா நல்லது தாங்க... இன்னொரு கதை போட்டுடலாம்..நன்றிங்க...:)

அப்பாவி தங்கமணி said...

@ Matangi Mawley - ஒரு முயற்சி தானுங்க...தேங்க்ஸ் மாதங்கி...:)

@ Porkodi - அப்படியா? நான் Inception பாக்கலியே... Sandra Bullock நடிச்ச Premonition பாத்துட்டு ஒரு வாரம் சரியா தூங்கல... அதோட அந்த மாதிரி படங்கள் பாக்கறதை விட்டாச்சு... நீங்க அதை பத்தி அப்ப விமர்சனம் கூட போட்டீங்கன்னு நினைக்கிறேன்... அதுவும் எனக்கு புரியல...சரி இது நம்மள போல சின்ன புள்ளைங்க பாக்க கூடாது போல இருக்குனு விட்டாச்சு... :)) எல்லாரும் சொல்றதை பாத்தா Inception பாக்கணும்னு இப்ப தோணுது... ஹ்ம்ம்... லெட் மீ தின்க்...:)) அது சரி, எங்க ஆளே காணோம், ரெம்ப பிஸியா? ஒரு போஸ்ட் போடுங்க... been a while...:)

@ Mahi - தேங்க்ஸ்'ங்க மகி... வாவ்...அதுவும் ஊரை பத்தி சொல்லனுமா? கரும்பு தின்ன கசக்குமா? கண்டிப்பா போடறேன்'ப்பா...:) Inception மேடம் குழந்தைங்க பாக்க கூடாதுன்னு சொன்னாங்க...அதான் பாக்கலைங்க...:))

@ தக்குடு - ஆஹா... சொந்த கதைனா இன்னும் செம பில்ட்-அப் இருந்துருக்கும்னு உனக்கு தெரியாதா? போன பதிவா...அதென்ன... எனக்கு தெரியாதே..:))

@ ஸாதிகா - நன்றிங்க ஸாதிகா.:)

@ தி. ரா. ச.(T.R.C.) - ஹா ஹா ஹா... நல்ல observation...நன்றிங்க...:))

priya.r said...

எப்படி புவி இப்படில்லாம் எழுதறே
நாளுக்கு நாள் உன்ற அறிவுஆற்றல் எங்கேயோ போய் கிட்டு இருக்கு !
எப்படி பாராட்டின்னாலும் நீ நம்ப போறதில்லை :)
ஆனா ஒன்னு கண்டிப்பா நடக்க போகுது
இந்திய அரசாங்கமும் கனடா அரசாங்கமும்
அப்பாவியின் சேவை யாருக்கு தேவை என்று சண்டை போட போகுதுன்னா........
உன்ற புகழ் எந்த அளவுக்கு உயர போகுதுன்னா........... பாரேன்
அப்புறம் 50 ௦ (கமெண்ட்ஸ்) எனக்கே எனக்கா :)

priya.r said...

ஒரு காலத்தில புவனா புவனா ன்னு ஒரு நல்லவ இருந்தா ;எப்போ எந்த பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்டாலும் உடனே வந்து

பதில் போடுவா .,உம்ஹும் அதெல்லாம் ஒரு காலம் ;எனக்கு அந்த புவனா கிடைப்பாளா ...............................

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - வந்தேன் வந்தேன் நானே வந்தேனே ப்ரியா'க்கா....:) Immediate comment replies are only for immediate comments... இதுக்கப்புறம் ரெண்டு போஸ்ட் போட்டப்புறம் வந்து கமெண்ட் போட்டுட்டு... என்ன நக்கலா?....:)))

priya.r said...

வேணும்ன்னே முதல் கமெண்ட் உக்கு பதில் போடாமே இரண்டாம் கமெண்டுக்கு பதில் போட்ட அப்பாவி ப்ருடஸ் grrrrrrrrrrrrr

எப்போ அப்பாவி டிவி யை ஆரம்பித்தாயோ அப்போ இருந்து தான் இப்படி எல்லாம் நடந்துக்குறே :)))))

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - :)))

Post a Comment