Thursday, June 30, 2011

பல்பு மேல பல்பு வந்து என்னை சேர...அவ்வ்வவ்வ்வ்வ்.....பல்பு மேல பல்பு வந்து என்னை சேர... அதை வாங்கி தந்த பெருமை எல்லாம்... வேற யாரு? ரங்க்ஸ்'ஐ சேர...... அவ்வ்வ்வவ்வ்வ்வ்....

மைண்ட்வாய்ஸ் : அப்பாவி பல்பு வாங்கியதை கேட்கையிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே... ஹா ஹா ஹா...:)

அப்பாவி : ஏய் மனசாட்சி இல்லாத மைண்ட்வாய்ஸ்'ஏ? ஒருத்தி பீல் பண்றப்ப என்ன பேச்சு இது?

மைண்ட்வாய்ஸ் : பல்பு கிடைக்கையில் போஸ்ட் போட்டு இன்பம் சேர்க்க மாட்டாயா? ஹி ஹி ஹி...

அப்பாவி : எங்க அந்த கத்தி....??? என அப்பாவி தேட மைண்ட்வாய்ஸ் மாயமாய் மறைகிறது

பாருங்க பிரெண்ட்ஸ், நானே பல்பு வாங்கின சோகத்துல, புண் பட்ட நெஞ்சை போஸ்ட் போட்டு ஆத்துவோம்னு வந்தா... இந்த மைண்ட்வாய்ஸ்....  ஹ்ம்ம்... சரி விடுங்க...  நீங்க எல்லாம் எனக்கு ஆறுதலா (!!) இருப்பீங்கன்னு நம்பிக்கைல என் மன பாரத்தை எறக்கி வெக்கறேன்

நிகழும் மங்களகரமான கர வருடம் ஆணி மாதம் 3ம் நாள் (18-06-2011) சனிக்கிழமை திரிதியை திதியும் உத்திராட நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை 10௦.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் விருட்சிக லக்னத்தில், 1000 Volts பல்பு குடுத்த பல்பு-வள்ளல் ரங்க்ஸ்'க்கு மிக்க கண்டனங்கள்...:(((((((((((

பின்ன என்னங்க? ஒரு பல்பு ரெண்டு பல்புனு குடுத்தா பொறுத்துக்கலாம்... இப்படி பேச்சுக்கு பேச்சு பல்பு குடுத்தா.... என்னமோ போங்க

மைண்ட்வாய்ஸ் : இன்னும் மேட்டர்'க்கு வந்து இருக்காளா பாருங்க? அது எப்படியும் ஒரு மாசம் ஆகும்...:))

அப்பாவி : நடந்தது என்னனா.....

மைண்ட்வாய்ஸ் : இனி கோபிநாத் வருவாரோ, நிகழ்ச்சி நடத்த....ஹையோ ஹையோ

அப்பாவி : பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டதாம் கருடா சௌக்கியமானு? எல்லாம் நேரம்... உன்னை கவனிசுக்கறேன் இரு...

சரிங்க... நாம விசயத்துக்கு போவோம்... அன்னைக்கி ஒரு பிரெண்ட் லஞ்ச்'க்கு வர்றதா சொல்லி இருந்தாங்க... புலாவ் செஞ்சு எடுத்து வெச்சுட்டு, தயிர் பச்சிடி போடலாம்னு ஆனியன் கட் பண்ணிட்டு இருதேன்...(பின்னால் வரப்போகும் விபரீத்ததை அறியாமல்...)

நம்ம நாட்டுல ஒரு ஆட்சியவே கவுத்த ஆனியன்.... என்னையும் இப்படி கவுக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கலை... ஹ்ம்ம்

அந்த ஆனியன்ல தொடங்கி தான் அந்நியன் என்ட்ரி வரும்னு நான் எதிர்ப்பாக்கலை... லாப்டாப்ல செஸ் ஆடிட்டு இருந்தவர் அப்படியே இருந்துருக்கலாம்... விதி வேற மாதிரி இருக்கறப்ப விடுமா என்ன?

தேதி கேலண்டர்ல அன்னைக்கி என்னோட ராசிக்கு "உழைப்பு"னு போட்டு இருந்தது... அட நிஜமாத்தாங்க... I'm not making it up... நம்பிக்கை இல்லைனா இந்த லிங்க்'ல போய் பாருங்க

சனிக்கிழமை எப்படியும் defaultஆ சமையல், கிளீனிங், வாஷிங்னு உழைப்பு தானே... இதென்ன (a+b)2 பார்முலாவா? இல்ல 4cup அரிசி + 1cup உளுந்து + 2spoon வெந்தயம் = அப்பாவியின் ரத்த கண்ணீர் + குப்பையில் தூக்கி கடாசு பார்முலாவா? னு நான் அசால்ட்'ஆ விட்டுட்டேன்

அவரோட ராசிக்கு "நற்செய்தி"னு போட்டு இருந்தது... நான் ஒண்ணும் ஊருக்கு கூட போகலியே... அப்புறம் இவருக்கு என்ன நற்செய்தினு அப்ப சிரிச்சேன்... ஆனா விதி என்னை பார்த்து இரண்டு கை கொட்டி Tap டான்ஸ் ஆடின விஷயம் தெரியாம போச்சே மை லார்ட்....ஆ...ஆ...ஆ.....

ஆனா இப்ப யோசிச்சு பாக்கறப்ப நான் அந்த ராசி பலனை கொஞ்சம் கூர்ந்து கவனிச்சு இருக்கணும்னு தோணுது... போதாததுக்கு கேலண்டர்ல "குச்சனூர் சனிபகவான் சிறப்பு ஆராதனை"னு வேற போட்டு இருந்தது... சரி, பகவானுக்கு அங்க தானே ஆராதனை, இங்க ஒண்ணும் பாதிப்பு இருக்காதுனு மெத்தனமா இருந்துட்டேன்...

எங்க உட்டேன்...ஆங்... செஸ் ஆடிட்டு இருந்தவர்கிட்ட... "ஏம்ப்பா... அந்த புக்ஸ் எல்லாம் டேபிள் மேல கச கசனு இருந்ததே, எடுத்து வெச்சுட்டீங்களா?" னு தாங்க கேட்டேன்

அங்க இருந்தே பதில் சொல்லி இருக்கலாம்... ஆனா, கிடைச்சதே சாக்குனு கிட்சன்'குள்ள வந்தார் "அதெல்லாம் எடுத்து வெச்சாச்சு... இன்னும் சமையல் முடிக்கலையா நீ?" னார்

"எல்லாம் ஆச்சு... இதோ ஆனியன் கட் பண்றேன்... தயிர் பச்சிடி போட்டா ஆச்சு"னேன்

"இதை இனி தாளிக்கணுமா?" னு கேட்டார்

"அட ராமசந்திரா... உங்க சமையல் ஞானத்துக்கு ஒரு அளவே இல்லையா? பச்சிடி யாராச்சும் தாளிப்பாங்களா?"னு செம டென்ஷன் ஆய்ட்டேன்

"ஏன்... தாளிச்சா என்ன? சரி விடு... தெரியாம கேட்டுட்டேன்" னார்

"புடலங்காயை கட் பண்ணிட்டு கழுவினா என்னனு கேட்டவர் தானே நீங்க... ஆனாலும் பச்சிடி'ங்கற பேர்லயே பச்சையா சாப்பிடறதுன்னு சிம்பாலிக்கா சொல்ற மாதிரி இருக்கே... இது கூட தெரியாதா?" னு ரெம்ப அறிவுப்பூர்வமா பேசறேனேனு எனக்கு நானே "சபாஷ் அப்பாவி"னு தட்டி குடுத்துக்கிட்டேன்

பின்னாடி எப்பவாச்சும் பல்பு குடுக்கரப்ப இதை யூஸ் பண்ணிக்கணும்னு வேற மனப்பால் எல்லாம் குடித்தேன்... அது மனப்பால்  அல்ல  இன்னிக்கி செத்தா நாளைக்கு பால்னு  அப்ப தெரியல... எல்லாம் ஒரே நொடியில் மண்ணோடு மண்ணானது

அதுக்கு ரங்க்ஸ் சொன்ன பதில் "அரிசி பருப்பு சாப்பாடுங்கர பேர்ல கூடத்தான் அரிசி பருப்பு ரெண்டும் இருக்கு...ஆனா, யாரோ பருப்பு போடாம அதை செஞ்சாங்க... உனக்கு தெரியுமா அது யாருனு?"னு நக்கலா ஒரு லுக் விட்டுட்டு, ஆயிரம் வால்ட்ஸ் பல்பு'ஐ தலையில் கொட்டினார்

அதுக்கு மேல நான் பேசுவேன்னா நினைக்கறீங்க?... அமைதியா இருக்கறது தான் மரியாதைனு பேசாம இருந்துட்டேன்... அவ்வ்வ்வவ்....

இந்த ரங்க்ஸ்'களுக்கு இந்த விசியத்துல எல்லாம் selective amnesia வந்தா நல்லா இருக்குமேனு தோணுச்சு... என்னமோ போங்க

ஆனா ஒரு விஷயம் மட்டும் புரியலைங்க... "கத்திரிக்கா அரை கிலோ, தக்காளி ஒரு கிலோ, பச்ச மொளகா நூறு கிராம் வாங்கிட்டு வாங்க...மாத்தி மாத்தி வாங்கிடாதீங்க...பேசாம லிஸ்ட் எழுதிக்கோங்களேன்"னு நூறு தடவை சொல்லி அனுப்பினாலும்

"சும்மா சும்மா சொல்லாத... எல்லாம் எனக்கு தெரியும்" னு வீராப்பு பேசிட்டு போயிட்டு "பச்ச மொளகா ஒரு கிலோவும், தக்காளி கால் கிலோவும், கத்திரிக்கா நூறு கிராமும்" வாங்கிட்டு வருவாங்க. ஆனா நான் கல்யாணம் ஆனா புதுசுல தப்பா சமைச்ச ஒரு மேட்டர் மட்டும் எவர் கிரீன் மெமரில இருக்கே, அது எப்படி?

ஹ்ம்ம்... இவங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலியே....:))))

:)))

41 பேரு சொல்லி இருக்காக:

திவா said...

புவனி எது முக்கியமோ அதான் நினைவுல இருக்கும்! ஹிஹிஹிஹி....

S.Menaga said...

பல்பு வாங்குறது என்ன புது விஷயமா உங்களுக்குஅப்பாவி??
SASHIGA

இராஜராஜேஸ்வரி said...

மங்களகரமான ஆனி மாதத்தில்
ஆயிரம் பல்பு வாங்கிய அபூர்வ
அப்பாவிக்கு ஆணியன் சார்பாக வாழ்த்துக்கள்.

எல் கே said...

//ஆணி மாதம் //

இப்படி ஒரு மாசம் எனக்குத் தெரிந்து இல்லை. உங்களுக்கு யாருக்காவது தெரியுமா அதை பத்தி ??

viswam said...

என்னங்க உங்க பதிவு முடியாதது மாதிரி ஒரு ஃபீலிங். தொடருவீங்களா?

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பல்பு மேல பல்பு வந்து என்னை சேர... அதை வாங்கி தந்த பெருமை எல்லாம்... வேற யாரு? ரங்க்ஸ்'ஐ சேர...... அவ்வ்வ்வவ்வ்வ்வ்....//

தலைப்பே நகைச்சுவையா நல்லா இருக்குதுங்க!

{ஆணி = Nail ஆனி = மாதம் அதைத்தான் எல்.கே. சொல்றாரு)

// "பச்ச மொளகா ஒரு கிலோவும், தக்காளி கால் கிலோவும், கத்திரிக்கா நூறு கிராமும்" வாங்கிட்டு வருவாங்க. //

நல்லா சிரிப்பா இருக்குதுங்க இந்தப்பதிவு.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

En Samaiyal said...

ஆனா நான் கல்யாணம் ஆனா புதுசுல தப்பா சமைச்ச ஒரு மேட்டர் மட்டும் எவர் கிரீன் மெமரில இருக்கே, அது எப்படி?

பத்மநாபன் said...

சப்ஜெக்ட்டுள்ளையே வராமா சப்ஜாடா சீக்கிரம் முடிச்சிட்டிங்க.... அவ்வளவு நல்ல புள்ள ஆயிட்டிங்களா ...மைண்ட் வாய்ஸ்க்கு பாராட்டறக்கெல்லாம் தெரியாதா..... கேப்பி வீக் எண்ட்.....

குணசேகரன்... said...

நல்ல நகைச்சுவை பதிவு

Shankar said...

Hi, I love your sense of humour.Also saw the old Parruppu sadham link.I guessed you should be from Kovai.All the best. I am anew follower for you.

priya.r said...

ஹய் அப்பாவிக்கே பல்ப் பா !
ஹ ஹா ஹா
மைன்ட் வாய்ஸ் கிட்டே பேசற மாதிரி
உன்ற மாம்ஸ் கிட்டேயும் பேசினா எப்படி அப்பாவி :)

priya.r said...

நீ பல்பு வாங்கின சந்தோசமான செய்தியை எங்க சங்கத்திடம் சொல்லி
நாளை படையோடு வர்றோம் :)))

மகி said...

ஏற்கனவே தெரிந்த விஷயமாச்சே உங்க அரிசி-பருப்பு சாதம் ஸ்டோரி! :)

பல்பு படம் அழகா இருக்கு!

priya.r said...

//சனிக்கிழமை எப்படியும் defaultஆ சமையல், கிளீனிங், வாஷிங்னு உழைப்பு தானே... இதென்ன (a+b)2 பார்முலாவா? இல்ல 4cup அரிசி + 1cup உளுந்து + 2spoon வெந்தயம் = அப்பாவியின் ரத்த கண்ணீர் + குப்பையில் தூக்கி கடாசு பார்முலாவா? னு நான் அசால்ட்'ஆ விட்டுட்டேன்//ஹ ஹா

நீ அறிவியலை தாக்கிய விதமும் அழகு

இட்லியை பற்றி சொல்லாம விட்ட விதமும் அழகு

பல்பு வாங்கிய விதமும் அழகோ அழகு :)))))))))

priya.r said...

என்னவோ தெரியலை ஒரு பல்புக்கே பல்பான்னு

வார்த்தை வாய் வரையில் வந்துடுச்சு

சொன்ன நீ வேற கோச்சு கிட்டா ............அவ்வ்வ்வவ்வ்வ்வ்

priya.r said...

உருப்படியா ஒரு யோசனை சொல்லட்டுமா

பேசாம உன்கிட்டே இருக்கிற பல்பு வைத்து

நீ ஏன் ஒரு ஷோ ரூம் வைக்க கூடாது :)))

priya.r said...

ஒரு வேளை முதல் கமெண்ட் போட்டா

இட்லி பார்சல் வரும்ன்னு மகி நினைச்சுட்டாரோ :)

சாகம்பரி said...

இவ்வளவு பெரிய பதிவிற்கு ஒரே ஒரு பல்ப்தானா? டீலா நோ டீலாவிற்குப்போய் 1ரூ பெட்டியை திறந்ததுபோலாகிவிட்டது.

Thanai thalaivi said...

அட ! எங்க தலைவரும் பச்சடி கெல்லாம் தாளின்னு சொல்லி ரொம்ப படுத்துவாரு. இது ஜோக் இல்லைங்க எங்க வீட்டில் அடிக்கடி நிஜமாகவே நடக்கும் ஒரு விஷயம். எப்படியாவது எண்ணையை யூஸ் பண்ணியே ஆகணும். ஹில்தி டயடே ஆகாது.

வெங்கட் நாகராஜ் said...

:)))))

RAMVI said...

என்ன அப்பாவி 40 வாட்ஸ் தானே வாங்கியிருக்கீங்க..இன்னும் 60,100..எல்லாம் இருக்கே..

அமைதிச்சாரல் said...

என்னாது!!.. பச்சையா சாப்பிடறதால பச்சடியா :-)))

அடப்பாவி, அது ஆனியன் பச்சடிக்கு வேண்ணா பொருந்தும்.. மத்த பச்சடிகளுக்கு பொருந்தாது :-))

Vasagan said...

\தயிர் பச்சிடி போடலாம்னு ஆனியன் கட் பண்ணிட்டு இருதேன்...\

ஆனியன் நீயா கட் செய்தே, பரவாயில்லை மாப்பிளையை கண்கலங்கம பார்த்துகிரேனு சொன்ன சொல்லை கபாத்துரே.

priya.r said...

@ vasagan sir
உங்களுக்கு அளிக்கும் விருந்தில் இட்லி உறுதி :))))

priya.r said...

//ஆனியன் நீயா கட் செய்தே, பரவாயில்லை மாப்பிளையை கண்கலங்கம பார்த்துகிரேனு சொன்ன சொல்லை கபாத்துரே.//

ha haa ROFL :))))

Vasagan said...

\கிடைச்சதே சாக்குனு கிட்சன்'குள்ள வந்தார் \
அவர் பாட்டுக்கு தான் உண்டு தன் வேலை உண்டுனு செஸ் விளையாடிட்டு இருந்தவரை கிட்சன்'குள்ள வரவைகனும்னு நீ வம்பு இழுதிட்டு, அப்பறோம் பல்பு கொடுத்துடார்னு அந்த அப்பாவி மேலே பழி போடுறே....((((

Vasagan said...

\நூறு தடவை சொல்லி அனுப்பினாலும் \

எப்படியும் இன்னொரு தடவை சொல்லுவேனு கவனிக்காம இருந்துப்பார் , அடுத்தடவை 101 தடவை சொல்லிப்பார்

priya.r said...

இதுக்கு மட்டும் நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன்

இவ்வளோ தங்கமான அம்மணி கிட்டே கூட மாட உதவி செய்யாமே

அப்படி என்ன செஸ் விளையாட்டு வேண்டி கிடக்குதுங்கறேன் :)))

அப்பாவி பாவம் :)))

middleclassmadhavi said...

ஆனியன் நெடி தாங்க முடியாம அழுகை வந்து, அந்த கடுப்பில் சொல்லிட்டாரோ?!!

ஸ்ரீராம். said...

'ஐயோ பாவம் ரங்கமணி'கள் வாங்கும் பல்புகளை மறைக்க இது மாதிரி சின்ன பல்புகளை பெரிதாகக் காட்ட சதி நடக்கிறதோ என்று சந்தேகம் வருகிறது...

வெட்டிப்பையன்...! said...

/ "பச்ச மொளகா ஒரு கிலோவும், தக்காளி கால் கிலோவும், கத்திரிக்கா நூறு கிராமும்" வாங்கிட்டு வருவாங்க. // :-)
ஒரு சில ரங்கஸ் இப்படி பண்ணுறாங்க (பண்ணுறாங்க..றாங்க...றாங்க...! ) அப்பிடிங்கிறத்துக்காக எல்லா ரங்கஸ்சும் அப்படி தான் இருப்பாங்க அப்பிடினு எப்படி நீங்க நினைக்க போச்சு...? அ.இ .அ.ர .ச.(அகில இந்திய அப்பாவி ரங்கசாமி சம்மேளனம் )சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.


//4cup அரிசி + 1cup உளுந்து + 2spoon வெந்தயம் = அப்பாவியின் ரத்த கண்ணீர் + குப்பையில் தூக்கி கடாசு பார்முலா//
நல்ல பார்முலா..! நல்லா வேலை அப்பாவி தங்கமணி கணக்கு டீச்சர்ரா போகல ...!

Vasagan said...

priya.r

\உருப்படியா ஒரு யோசனை சொல்லட்டுமா

பேசாம உன்கிட்டே இருக்கிற பல்பு வைத்து

நீ ஏன் ஒரு ஷோ ரூம் வைக்க கூடாது \

Ha ha really it 'll be a successful business. Appavi why not you try.

தெய்வசுகந்தி said...

//"சும்மா சும்மா சொல்லாத... எல்லாம் எனக்கு தெரியும்" னு வீராப்பு பேசிட்டு போயிட்டு "பச்ச மொளகா ஒரு கிலோவும், தக்காளி கால் கிலோவும், கத்திரிக்கா நூறு கிராமும்" வாங்கிட்டு வருவாங்க.//
ஹா ஹா ஹா!!

kggouthaman said...

பிறந்த நாள் வாழ்த்துகள். வாழ்க பல்லாண்டு, வளமுடன்.

சி.பி.செந்தில்குமார் said...

பல்பு ஸ்பெஷ்லிஸ்ட் வாழ்க.. ஹேப்பி பர்த் டே

டி.கே.தீரன்சாமி. said...

பல்போடு சேர்ந்து கருத்துப்பாசத்தை காட்டுங்க தலவா!

டி.கே.தீரன்சாமி. said...

அப்படியே!எங்க தளப்பதிவையும் ஒரு எட்டுபாருங்கோ!
தீரன்சின்னமலை-theeranchinnamalai.blogspot.com-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு.

கோவை2தில்லி said...

:)))) அரிசி பருப்பு சாதத்தில் பருப்பு இல்லாமல் சாதமா!!! சூப்பர்ங்க.

அப்பாவி தங்கமணி said...

@ திவாண்ணா - அவ்வவ்... எல்லாரும் ஒரே கட்சியா...:))

@ S.Menaga - எல்லாரும் இப்படியே சொல்றீங்களே... மீ பாவம் இல்லையா?..:))

@இராஜராஜேஸ்வரி - ஹா ஹா... சூப்பர் டைமிங்..:)

@ எல் கே - ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா... இந்த நக்கீரரை என்ன செய்யலாம்?...:))

@ viswam - முடியும் ஆனா முடியாதுங்க... நான் பல்பு வாங்கறதுல அவ்ளோ சந்தோசமா சார் உங்களுக்கு... ஜஸ்ட் கிட்டிங்.. நன்றிங்க...:)

@ வை.கோபாலகிருஷ்ணன் - ஆமாங்க ஒரு ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆகி போச்சு... ஹா ஹா... நன்றிங்க..:)

@ En Samaiyal - அதாங்க நானும் கேக்கறேன்...:))

@ பத்மநாபன் - ஹா ஹா... நன்றிங்க அண்ணா

@ குணசேகரன்... - நன்றிங்க

@ Shankar - நன்றிங்க சார்... ஆமாங்க எனக்கு கோவை தான்... follow செய்வதற்கும் நன்றி

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - ப்ரியா ப்ரூட்டஸ் படையோட வரீங்களா... அப்புறம் நாங்க தலைவர் டயலாக் எல்லாம் சொல்லுவோம் ஆமாம் சொல்லிட்டேன்...:))

@ மகி - தேங்க்ஸ் மகி..:)

@ priya.r - பல்பு வாங்கிய விதமும் அழகா? அவ்வ்வ்வ்..... வரும் வரும்... இது மட்டுமா வரும்... இன்னும் வரும்... இருந்த கவனிச்சுக்கறேன்... பல்பு ஷோ ரூம்'ஆ? ஆரம்பிக்கலாம்... ஆனா எங்க அக்கா வீட்டுல இன்னும் பெரிய ஸ்டாக் இருக்காம்... அது தீந்தப்புறம் நான் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்... :))... மகியை மிரட்டி அனுப்பிட்டு இப்ப இப்படி ஒரு டயலாக் வேறயா... ப்ரியா வில்லி டௌன் டௌன்...:))

@ சாகம்பரி - ஏனுங்க அம்மணி... என்னிய பாத்தா உங்களுக்கு பாவமா இல்லீங்களா... உண்மைய உங்க கிட்ட மட்டும் சொல்றேன், காத குடுங்க... பல்பு எக்கசக்கமா தினமும் வாங்கறது தானுங்க... எல்லாத்தையும் சொன்னா மக்கள் மெரண்டு ஓடி போயிருவாங்க.. .அதானுங்க ஒன்னோட நிப்பட்டிட்டனுங்க...:))

@ Thanai thalaivi - ஆஹா... அங்கயுமா? சூப்பர்... ஹா ஹா... நன்றிங்க

@ வெங்கட் நாகராஜ் - நீங்க எப்படிங்ண்ணா...? பல்பு இன்கமிங் or அவுட் கோயங்....? :))

@ RAMVI - இதுக்கே எக்கசக்க டேமேஜ்... அதெல்லாம் சொன்னா அவ்ளோ தானுங்க...:))

@ அமைதிச்சாரல் - ஓ... அப்படி வேற இருக்கா? சரி உடுங்க அக்கா.. நமக்குள்ள இருக்கட்டும்...:)))

@ Vasagan - பாருங்க... இந்த மேட்டர்'ஐ யாரும் புரிஞ்சுக்கல.. ப்ரொபசர்'னா ப்ரொபசர் தான்... :)) (ச்சே... இந்த ஐடியா எனக்கு தோணலியே... இன்னும் போஸ்ட் கொஞ்சம் இழுத்து இருக்கலாம்...:))

@ priya.r - அது வந்தா தானே.. .வேணும்னா மாவை அப்படியே வெச்சுடலாம்... டம்ளர்ல ஊத்தி குடிங்கன்னு...:))

அப்பாவி தங்கமணி said...

@ Vasagan - இனி அநியாயமா இல்லையா உங்களுக்கே... ஒரு வார்த்தை கேட்டது என் குத்தமா...:))

@ priya.r - அதானே... கரெக்ட் அக்கா...:)) (பின்னாடி என்ன வெடி வர போகுதுனு தெரில...எஸ்கேப் ஆகிடு அப்பாவி..:))

@ middleclassmadhavi - இந்த கோணத்தில் நான் யோசிக்கவே இல்லிங்க... கேட்டு பாக்கறேன்...:))

@ ஸ்ரீராம். - ஆஹா... இப்படி வேற நீங்க சதி பண்ணுவீங்களா...:))

@ வெட்டிப்பையன்...! - அ.இ .அ.ர .ச வா? இதெல்லாம் அநியாயம்... இதை கேக்க யாரும் இல்லையா? ஹி ஹி... அதான் கணக்காளர் ஆய்ட்டேன்...நன்றிங்க...:))

@ Vasagan - யு டூ......:(((((

@ தெய்வசுகந்தி - உணர்ந்து சிரிக்கற மாதிரி இருக்குங்க... நன்றி...:))

@ kggouthaman - ரெம்ப நன்றிங்க கௌதமன் சார்...:)

@ சி.பி.செந்தில்குமார் - நன்றிங்க வாழ்த்துக்கு...:)

@ டி.கே.தீரன்சாமி. - நன்றிங்க... கண்டிப்பா படிக்கறேன்

@ கோவை2தில்லி - ஹா ஹா...அது அப்போ ஆதி... இப்போ இல்ல...:))

Post a Comment