Tuesday, July 05, 2011

போனோமே ஊர்கோலம்...:))


Bonjour, (madame/monsieur) Comment allez-vous?

"என்னாச்சு இந்த அப்பாவிக்கு? கனடால வெய்யில் காலம் ஆச்சே? அதான் போல..."னு பாசமா குழி பறிக்கும் அன்பு உள்ளங்களே... அப்படி எல்லாம் நல்லது ஒண்ணும் இன்னும் நடக்கலைங்க... ஹி ஹி ஹி...

அது என்ன விசயம்னா, "சேந்தாப்ல மூணு நாள் லீவ் வருதே, ஊர் சுத்தலாம்"னு போன வாரம் கிளம்பினோம். போயிட்டு வந்த ஊரோட சகவாசம் தான் இந்த மாதிரி Bonjour கீஞ்சூர் எல்லாம் வாய்ல வருது

நாங்க போன ஊர் பேரு Montreal, Ontarioவை அடுத்து இருக்கற மாகாணம் (Province) Quebec. அந்த மாகாணத்தின் ஒரு நகரம் தான் Montreal. அங்கு பெரும்பாலான மக்கள் பேசும் மொழி பிரெஞ்சு...

இப்படி ஆறாம் வகுப்பு text bookல இருக்கற மாதிரி இஸ்திரி ஜாங்கிரி... சாரி சாரி... ஹிஸ்டரி ஜியோக்ரபி எல்லாம் சொல்றதுக்கு நான் எதுக்கு... கூகிள்ல போய் Montrealனு தட்டினா வடு மாங்கால ஆரம்பிச்சு வசிஷ்டர் வீடு வரைக்கும் அதே சொல்லிடுமே... அப்படி நான் எழுதினாலும் நீங்க படிக்க போறதில்லைனு எனக்கு தான் நல்லா தெரியுமே..:)

ஒரு விஷயம் சொல்லணும், இதை படிக்கற என்னை போல அப்பாவி தங்கமணிகளுக்கும் இது ஒரு உபயோகமான டிப்ஸ்ஆ இருக்கலாம்ங்கற நல்ல எண்ணத்துல தான் சொல்றேன்... இப்பவாச்சும் என் நல்ல மனதை புரிந்து கொண்டு உங்கள் பொன்னான வாக்குகளை....ச்சே... இன்னும் போகலியே இந்த எலக்சன் பீவர்... :)

விஷயம் என்ன'னா... இந்த மாதிரி வெளியூர் பயணம் போறப்ப இந்த Packing வேலை எல்லாம் நான் செய்யறதில்ல'ங்க. "என்ன வேணுமோ கேளுங்க எடுத்து தரேன்... பெட்டிக்குள்ள வெச்சு கார்ல ஏத்தறது உங்க பொறுப்பு"னு கல்யாணம் ஆனா புதுசலையே கட் அண்ட் ரைட்ஆ அவர்கிட்ட சொல்லிட்டேன்

"இதுல என்ன பெரிய விசயம்"னு நீங்க கேக்கலாம்... இல்லாமையா பின்ன? அவங்களே எடுத்து வெச்சுக்கிட்டா, அங்க போனப்புறம் "அதை வெக்க சொன்னனே வெக்கலையா... இதை எடுக்க சொன்னனே எடுக்கலையா"னு நம்மள குறை சொல்ல முடியாது பாருங்க... ஹி ஹி ஹி

"எப்படி அப்பாவி இப்படி எல்லாம் யோசிக்கற? எங்க கண்ணே பட்டுடும் போ"னு நீங்க புகழறது புரியுது... சரி சரி விடுங்க...நமக்குள்ள என்ன...:)

சரி நம்ம விசயத்துக்கு வருவோம். Montrealல ரோடு signsல ஆரம்பிச்சு ரோஸ் பவுடர் கடை வரைக்கும் எங்கும் பிரெஞ்சு மயம்... இந்த "ஜில்லுனு ஒரு கா.." கதைக்காக நாலு இட்டாலியன் வார்த்தை கத்துக்கிட்ட நேரத்துல நாலு பிரெஞ்சு வார்த்தை கத்துக்கிட்டு இருந்தாலும் புண்ணியமா போய் இருக்கும்... பிரெஞ்சு கெட்ட பின் கூகிள் நமஸ்காரம் தான் போங்க...

இந்த மொழி பிரச்சனையால ஒரே ரகளை தான். இப்படி தான் நாங்க போய் சேந்த உடனே அங்க இருந்த tourist information centerக்கு போனா, அங்க இருந்த அம்மணி "Bonjour"னு சொல்ல

"Bonjour இல்ல அம்மணி எனக்கு கோயம்புத்தூர்"னு வாய் வரைக்கும் வந்துருச்சுங்க... அப்பறம் தான் ஏதோ ஜேம்ஸ் பாண்ட் படத்துல இந்த மாதிரி கேட்ட கவனம் வந்து, அம்மணி "ஹலோ" தான் சொல்லுதுனு சுதாரிச்சுட்டேன்

ஜேம்ஸ் பாண்ட் படம் எதுக்கெல்லாம் உபயோகமாகுது பாருங்க... இந்த மேட்டர் 007க்கு தெரிஞ்சா நாக் அவுட் ஆய்டுவாரோ என்னமோ... ஹையோ ஹையோ..:)

பெரிய கொடுமை என்னனா ரோடுல இருக்கற ஸ்ட்ரீட் பெயர்கள் தான். எங்க GPSல Peel Road அப்படின்னு காட்டும்... நாங்களும் எங்கடா Peelனு கண்ணை peel பண்ணி வெளக்கெண்ணை விட்டுட்டு தேடினா அங்க "Rue Peel"னு இருக்கும்... ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா...

நாம பாத்து சுதாரிச்சு திருப்பறதுக்குள்ள கார் ரோடு'ஐ தாண்டி போய்டும். இதென்ன நம்ம மேட்டுப்பாளையம் மெயின் ரோடா, நினைச்சா reverse எடுத்து வர்றதுக்கு?

இந்த அகராதி புடிச்ச GPS வேற "Drive 200 meters and take a left..."னு ஆர்டர் போடும், நாம கண்டுக்காம போனா "Take a U turn Take a U turn"னு, நம்ம கமல் சார் "ஆத்தா வெயும் காசு குடு" டயலாக் மாதிரி நாம U Turn எடுக்கற வரைக்கும் உசுர வாங்கும்...

விசு ஒரு படத்துல சொல்லுவாரே "இந்த பொண்டாடிக இருந்தாலும் கஷ்டம் இல்லைனாலும் கஷ்டம்"னு, அதே கருத்து GPSக்கும் பொருந்தும்... இருந்தாலும் கொடுமை இல்லைனாலும் கொடுமை...

எங்க உட்டேன்... ஆங்... ரோடு பேரு மாறி இருந்ததுனு சொன்னேன் இல்லையா... ஏன் இப்படி மாறி இருக்குனு பாத்தா.... 'Rue'னா 'ரோடு'னு அர்த்தமாம் பிரெஞ்சுல... அப்புறம் நம்மள மாதிரி ரோடு பேரு சொல்லி ரோடுனு சொல்ல மாட்டாங்களாம்... Rue அப்புறம் தான் Peel ஆம்... என்ன பீலோ போங்க... நாங்க பீல் பண்ணினது தான் மிச்சம்..

எல்லாமே இப்படி தலைகீழா தான் இருந்தது "Tourist Information"னு நாம இங்கிலீஷ்ல சொல்றது "Info Touriste'"னு இருக்கு பிரெஞ்சுல... ஹாப்பி பர்த்டேவை பர்த்டே ஹாப்பினு சொல்லுவாங்களோனு எனக்கு பெரிய பெரிய சந்தேகம் எல்லாம் வந்தது... ரங்க்ஸ் பதிலே சொல்லல... Too bad... :))

இப்படி தான் போய்கிட்டு இருக்கும் போது, எங்க GPSல பேசற அம்மணி "Turn Left on Rue Berri"னுச்சு... எனக்கு உடனே "அதென்ன ரூபெர்ரி, strawberryயோட தங்கச்சியா இருக்குமோ"னு மொக்க ஜோக் தான் வாய்ல வந்தது...

அதுக்கு ரங்க்ஸ் "நீ Blog எழுத ஆரம்பிச்சப்புறம் சாதாரணமா பேசறதே இப்படி தான் ஆகி போச்சு"னு டெண்சனோ டென்சன்... ஹி ஹி ஹி...

ஒரு வழியா இத்தனை தடைகளையும் தாண்டி ஊர் சுத்தினோம்... அது ஒரு பெரிய கதை எல்லாம் இல்ல... சின்ன கதை தான் சீக்கரம் முடிச்சுடறேன்...

போய் சேரும் போதே மதியம் 12 ஆய்டுச்சு... மொழி தெரியாத ஊர், எதுக்கு வம்புனு guided city tour புக் பண்ணினோம்... "அட ராமச்சந்திரா, அந்த கொடுமைக்கு நான் பிரெஞ்சு கத்துக்கிட்டே ஊர் சுத்தி இருக்கலாம்"னு அப்புறம் தோணுச்சு

அந்த கைடை குறை சொல்ல முடியாது... அங்க நடைமுறை அப்படி தான் போல... கைட்'னு சொல்லவும், நான் நம்ம ஊர் கைடு மாதிரி "இந்த கல்லணை இந்த ஆண்டில் இந்த சோழனால் கட்டப்பட்டது" ரேஞ்சுக்கு சொல்லுவார்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்

இங்க பாத்தா அந்த டூர் பஸ் டிரைவர் தான் கைட்... அவர் வண்டி ஓட்டிக்கிட்டே, ஒரு மைக் செட் வேற காதுல சொருகிகிட்டு... அதாங்க headphone மாதிரி ஏதோ ஒண்ணு... அதுல "அந்தா தெரியுது பாருங்க ஒரு வெள்ள காக்கா..." ரேஞ்சுக்கு விளக்கம் சொன்னார்

நெறைய எடத்துல நிறுத்தவே இல்ல... பார் பார் பட்டணம் பார் டூர் தான்... ஒழுங்கா விசாரிக்காம போனது எங்க தப்பு தான். இதுல உபயோகம் என்னனா, எந்த எந்த இடம் முக்கியமா பாக்க வேண்டியதுனு கத்துக்கிட்டது தான்

அப்புறம் அன்னைக்கி நைட் ஊருக்கு அப்பால இருந்த ஒரு ஹோட்டல்ல தங்கிட்டு, காலைல எந்திரிச்சு அங்க ரெம்ப பிரசித்தி வாய்ந்த முருகன் கோவில் போனோம்...இதோ படம்...

ஊர் விட்டு ஊர் போயும் கோவிலானு கேப்பீங்க.. எல்லாம் காரணமாத்தான்... நான் இந்த பூவுலகில் அவதரித்த நாள்... ஹி ஹி ஹி... வாழ்த்து அனுப்பி இருந்த ப்ளாக் நட்புகளுக்கு மிக்க நன்றி... கல்லூரி நாட்களுக்கு பின் இத்தனை வாழ்த்துக்கள் வந்தது இந்த வருடம் தான்... Many thanks everyone....:)

இந்த படம் கூகிள்ல இருந்து சுட்டதுங்க... எங்க வீட்டு பி.சி.ஸ்ரீராம் அவரோட SLR கேமரால வளைச்சு வளைச்சு எடுத்தது எல்லாம் 4GB சைஸ்ல இருக்கு... அதை எல்லாம் நான் சைஸ் மாத்தி பதிவு போடறதுக்குள்ள எனக்கு இதெல்லாம் மறந்தே போய்டும்... அதான் கூகிள் போட்டோவே போட்டுட்டேன்..:)

அதுக்கு அப்பறம், அங்க ரெம்ப பிரபலமான, மிக பெரிய சர்ச் "St. Joseph Oratory"னு ஒண்ணு... ஒரே சமயத்துல இருபதாயிரம் பேர் பிரார்த்தனை செய்யும் வசதி உடைய பெரிய சர்ச்... இதோ அதோட படம்...இதுவும் கூகிள் படம் தான்...


அந்த சர்ச்ல பதினொரு மணி Mass பாத்துட்டு ஒலிம்பிக் டவர் போனோம். இந்த டவர் 1978 ம் வருஷம் அங்க ஒலிம்பிக்ஸ் நடந்த போது கட்டினதாம்... இதுவும் கூகிள் படம் தான்...

அப்புறம், Botanical Gardens , Underground City போல இன்னும் சில இடங்கள் பாத்துட்டு ஊரை பாத்து கிளம்பியாச்சு...

வீட்டுக்குள்ள வந்ததும் "சொர்க்கமே என்றாலும் அது நம்ம வீடு போல வருமா"னு பாட தோணினது நிஜம்... என்ன தான் ஊர் சுத்தல் ஜாலி'னாலும், என்னை போல "வீடே சொர்க்கம் வாசலே வைகுந்தம்" கேஸ்'களுக்கு வீட்டுக்கு வந்ததும் தான் நிம்மதி...

ஒரு நாள் ரெண்டு நாள் சரி, அதுக்கு மேல வீட்டை விட்டு வெளில தங்கறது எனக்கு தண்டனை மாதிரி தான்... என் கூட தங்கறவங்களுக்கு இன்னும் பெரிய தண்டனை... :)))

இப்படி இந்த பயணம் இனிதே நிறைவுக்கு வந்தது.....

Last but not least, Montrealல என்னை கவர்ந்த ஒரு விசயம் சொல்லியே ஆகணும்... அந்த ஊர் மக்கள்... பிரெஞ்சு மக்கள் ரெம்ப அன்பானவங்கனு சொல்லி கேட்டு இருக்கேன்... அதை நேரில் பார்க்க இது ஒரு வாய்ப்பு... Merci (தேங்க்ஸ்) Montreans... :))

இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்து கொள்வது என்னவென்றால்... இப்டீக்கா ஊர் சுத்தின காரணத்துனால அப்டீக்கா "ஜில்லுனு ஒரு கா..." இந்த காரம்...ச்சே இந்த வாரம் வராதுங்க... அதுக்கு பரிகாரமா அடுத்த வாரத்தோட அந்த கதை முடிக்கப்படுகிறது....எங்க? எல்லாரும் ஜோரா ஒருக்கா கை தட்டுங்க பாக்கலாம்...:)))

...

57 பேரு சொல்லி இருக்காக:

மகி said...

இன்னிக்கும் மீ த ஃபர்ஸ்ட்?

Rathnavel said...

வாழ்த்துக்கள்.

Gopi Ramamoorthy said...

மெர்சி பகிர்விற்கு:-)

மகி said...

அட்வான்ஸ்(அடுத்த) பிறந்தநாள் வாழ்த்துக்கள் புவனா! :)

சூப்பர் ட்ரிப் போயிட்டு வந்திருக்கீங்க..நல்லா இருக்கு எல்லா போட்டோஸூம்! உங்க கேமரா போட்டோவையே போட்டிருந்தா இன்னும் நல்ல்ல்ல்ல்ல்ல்லா இருந்திருக்கும்.ரீசைஸ் பண்ணறது அவ்ளோ கஷ்டமா என்ன? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..ஸப்பா,ஜில்லுன்னு ஒரு கா...முடியுதா?? நான் உங்களோட கா!! அதென்ன திடீர்னு முடிக்கிறமாதிரி இருக்கு?

Matangi Mawley said...

ஒரு வழியா ஊர் சுத்தியாச்சு! :)

அது சரி--- இந்த கொஷ்டின் அ உங்க கிட்ட மட்டும் தான் கேக்க முடியும்! ஓவர்- இங்கிலிபீஸ் பேசினா "பீட்று"... ஓவர்-ஆ ப்ரென்ச் பேசினா??? :D :P

ஆனாலும் உங்க ஊர் சுத்தல் கத suuuuuuperubbu! :)

Vasagan said...

\Bonjour,(madame/monsieur) Comment allez-vous?\

Ça va très bien merci. Et vous?

Vasagan said...

எப்படி அப்பாவி இப்படி எல்லாம் யோசிக்கற? எங் கண்ணே பட்டுடும் போ.

திவா said...

//Botanical Gardens , Underground City//
ஏன் இதுக்கு கூகுள் படம் கிடைக்கலையா?
//"Take a U turn Take a U turn"//
U Take a turn, U Take a turn ன்னு திருப்பி கத்தலையா?

ஹுஸைனம்மா said...

//அவங்களே எடுத்து வெச்சுக்கிட்டா, அங்க போனப்புறம் .... நம்மள குறை சொல்ல முடியாது பாருங்க.//

எச்சூஸ்மி.. இதுல நான் உங்களுக்கு நெம்ப சீனியர்னு சொல்லக் கடமைப் பட்டிருக்கேன். ஏன்னா, அவரோட பொருட்களை மட்டும் அவரே எடுத்து, அவரே பெட்டியில் வச்சுக்கணும்கிறது என் ஆர்டர்!! ;-)))

//நம்ம கமல் சார் "ஆத்தா வெயும் காசு குடு" டயலாக் மாதிரி நாம U Turn எடுக்கற வரைக்கும் உசுர வாங்கும்... //
ம்ம்.. இதுல உங்க பாடு பரவால்லை. என்னவர் ஜிபிஎஸ்ஸும் நானும் ஒண்ணுனு பகிரங்கமா அறிவிச்சுட்டார்!! :-(((

//நீ Blog எழுத ஆரம்பிச்சப்புறம் சாதாரணமா பேசறதே இப்படி தான்//
ஹி..ஹி.. பேச ஆரம்பிச்சாலே ஒரே கொசுவத்தியா சுத்துறியே, அது நீ பிளாக் எழுதறதுனாலயா, இல்லை வயசாயிட்டதுனாலாயாங்கிறது என் ரங்ஸ் கொஸ்டீன்!!

//கல்லூரி நாட்களுக்கு பின் இத்தனை வாழ்த்துக்கள் வந்தது//
கல்லூரி நாட்களா.. எது.. அந்த செக்கச்செவப்பு ஹீல்ஸப் பாத்து ஒரு பைரவர் உங்களைப் ’பின் தொடர்ந்து’ வந்து ஹாப்பி பேர்த்டே சொல்லுச்சே.. அதையாச் சொல்றீங்க?? ;-))))))

//அடுத்த வாரத்தோட அந்த கதை முடிக்கப்படுகிறது//
இல்லியே.. முடியுற மாதிரி சிச்சுவேஷன் கதையில இல்லையே.. ஏதோ மிரட்டலுக்குப் பயந்து அவசரவசரமா முடிக்கிற மாதிரியில்ல இருக்கு?? ஆருங்க மெரட்டறது? இப்பத்தான் கோயம்புத்தூர் மந்திரிய மாத்திட்டாங்கல்ல, பயப்படாம கண்டினியூ பண்ணுங்க!!

அப்புறம் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!! (நோ நோ, இட்லி, கேசரி எதுவும் வேணாம்!!) ;-))))

Vasagan said...

\"Take a U turn Take a U turn"னு, நம்ம கமல் சார் "ஆத்தா வெயும் காசு குடு" டயலாக் மாதிரி நாம U Turn எடுக்கற வரைக்கும் உசுர வாங்கும்...\

அதுவும் High ways la போகும் போது நெறைய பேர் GPS கிட்டே சண்டை ( most probably "shut up") போட்டுகிட்டே tensionnoda traffic la மாட்டிகிட்டு , இதுக்கு (GPS )என் பொண்டாட்டி பரவேயில்லைனு தங்கமணிகளுக்கு நல்ல பேர் வாங்கி கொடுத்துரும்.

Vasagan said...

\Last but not least, Montrealல என்னை கவர்ந்த ஒரு விசயம் சொல்லியே ஆகணும்... அந்த ஊர் மக்கள்... பிரெஞ்சு மக்கள் ரெம்ப அன்பானவங்கனு சொல்லி கேட்டு இருக்கேன்... அதை நேரில் பார்க்க இது ஒரு வாய்ப்பு... Merci (தேங்க்ஸ்) Montreans... :))\

True.

அதே மாதரி ஒரு பிரெஞ்சு வார்த்தை நாம் பேசினால்லும் அவங்க முகம் சந்தோஷத்தில் மலர்ந்துரும்.

தமிழ் உதயம் said...

அதுக்கு பரிகாரமா அடுத்த வாரத்தோட அந்த கதை முடிக்கப்படுகிறது.////

கதைய முடிக்க சொல்லி யாரும் மிரட்டனாங்களா. அதுக்குள்ள முடிக்க போறிங்க.

Vasagan said...

\என் கூட தங்கறவங்களுக்கு இன்னும் பெரிய தண்டனை... :)))\

Ha ha அது தெரிஞ்ச விஷயம் தானே

Krishnaveni said...

very nice place to visit, like to visit Montreal soon, Many more happy returns Thangam

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், சமீபத்தில் சென்றதற்கும், அட்வான்ஸ்ஸாக அடுத்த ஆண்டுக்கும். இந்தப்பதிவும் நல்ல நகைச்சுவையாகவே உள்ளது.

//"இதுல என்ன பெரிய விசயம்"னு நீங்க கேக்கலாம்... இல்லாமையா பின்ன? அவங்களே எடுத்து வெச்சுக்கிட்டா, அங்க போனப்புறம் "அதை வெக்க சொன்னனே வெக்கலையா... இதை எடுக்க சொன்னனே எடுக்கலையா"னு நம்மள குறை சொல்ல முடியாது பாருங்க... ஹி ஹி ஹி//

எங்க வீட்டுக்காரியும் இதே போலத்தாங்க. ஆனால் ஒரு சிறிய வித்யாசம். அவளுக்கு வேண்டிய அனைத்தையும் கூட நானே பட்டியலிட்டு, பார்த்துப்பார்த்து, ஞாபகமா எடுத்து பேக் செய்து வைக்கணும். இல்லாட்டி போகும் இடத்திலும் அவளுக்கு கோபம் வந்துவிடும்.

இராஜராஜேஸ்வரி said...

. என்ன தான் ஊர் சுத்தல் ஜாலி'னாலும், என்னை போல "வீடே சொர்க்கம் வாசலே வைகுந்தம்" கேஸ்'களுக்கு வீட்டுக்கு வந்ததும் தான் நிம்மதி...

ஒரு நாள் ரெண்டு நாள் சரி, அதுக்கு மேல வீட்டை விட்டு வெளில தங்கறது எனக்கு தண்டனை மாதிரி தான்... என் கூட தங்கறவங்களுக்கு இன்னும் பெரிய தண்டனை... :)))//

ஆமாங்க. அடுப்படியே திருப்பதி;ஆம்படையானே தெய்வம் னு சொல்லிவச்சாங்களே.
வீடே நிம்மதி தரும் சந்நிதி.

ஹேமா said...

கதை முடியுதா....அப்பாடி....!

Priya said...

//அதே கருத்து GPSக்கும் பொருந்தும்... இருந்தாலும் கொடுமை இல்லைனாலும் கொடுமை...//... ஆமா புவனா உண்மைதான்... சில நேரங்களில்!

//பிரெஞ்சு மக்கள் ரெம்ப அன்பானவங்கனு சொல்லி கேட்டு இருக்கேன்...//... :-‍)

உங்களோடு சேர்ந்து 'ஊர்கோலம்' வந்தமாதிரி இருக்கு! ஹாப்பி பர்த்டே புவனா!

En Samaiyal said...

Belated Birthday wishes. நீங்க இந்த பூமியில அவதரித்த நாளை கொண்டாட கோவில் சர்ச்ன்னு வேண்டுதல் நெறைவேத்தின மாதிரி தெரியுது ?? கதை ரொம்ப ரொம்ப சூபெருங்கோ

Yoga.s.FR said...

MERCI, pour partagé!!!(பகிர்வுக்கு நன்றி)

Madhuram said...

Adheppadi, JOK next week mudiyum?

A and A said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

என்னது கதை முடியுதா? நம்ப முடியவில்லை...

நிஜாம் என் பெயர் said...

// அது ஒரு பெரிய கதை எல்லாம் இல்ல... சின்ன கதை தான் சீக்கரம் முடிச்சுடறேன்... //
எனக்கு தலையே சுத்திருச்சு .. என்னது இன்னும் முடிகலையா ???!!!

என்னது ஜில்லுனு ஒரு காதல் முடிய போகுதா .இது என்ன புது கதையா இருக்கு ..
முடிவு இப்படி இருக்கலாமோ

1 . மீரா தூக்கம் தாலம விஷத்தை ஜில்லுனு மோர்ல கலந்து குடிசுட்ற.
2 . steve , குஷி படத்துல climax ல வர மாதிரி மீரா அப்பாவ ஜில்லுன்னு ஐஸ் வச்சுறான்
3 . ஒருவேள இந்த 24 எபிசோடும் மீரா ஜில்லுனு ac ரூம் ல நின்னுகிட்டே கண்ட கனவா இருக்குமோ

Montreal லில் ஒரு காதலன்னு எதுவும் கதை ஆரம்பிக்கிற திட்டம் எதுவும் இருக்கா என்ன ..

Joyeux anniversaire
Joyeux anniversaire
Joyeux anniversaire அப்பாவி
Joyeux anniversaire

எல் கே said...

/. அதுக்கு பரிகாரமா அடுத்த வாரத்தோட அந்த கதை முடிக்கப்படுகிறது....எங்க? எல்லாரும் ஜோரா ஒருக்கா கை தட்டுங்க பாக்கலாம்...:)))//

nallaa iruppa nee

மேவி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

" "ஜில்லுனு ஒரு கா..." இந்த காரம்...ச்சே இந்த வாரம் வராதுங்க... அதுக்கு பரிகாரமா அடுத்த வாரத்தோட அந்த கதை முடிக்கப்படுகிறது"

அப்படா .ஆரம்பத்துல படிச்சது. ம்ம் பாதில விட்டுட்டேன். முழுசா படிச்சுட்டு . கடைசி பகுதில கமெண்ட் போடுறேன்.

பதிவு வழக்கம் போல நல்ல இருக்கு. இண்டரஸ்டிங் . கீப் கோங்

kggouthaman said...

// எல்லாமே இப்படி தலைகீழா தான் இருந்தது "Tourist Information"னு நாம இங்கிலீஷ்ல சொல்றது "Info Touriste'"னு இருக்கு பிரெஞ்சுல... ஹாப்பி பர்த்டேவை பர்த்டே ஹாப்பினு சொல்லுவாங்களோனு எனக்கு பெரிய பெரிய சந்தேகம் எல்லாம் வந்தது... ரங்க்ஸ் பதிலே சொல்லல... Too bad... :))//

Bad too !!

BalajiVenkat said...

///அடுத்த வாரத்தோட அந்த கதை முடிக்கப்படுகிறது///

I like this... padichathulaye urupadiyana vishayam ithuthaan... :P

RAMVI said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

//அடுத்த வாரத்தோட அந்த கதை முடிக்கப்படுகிறது// இப்பொழுதுதான் ஒரு முக்கிய திருப்பம் வந்ததே என்று பார்த்தேன்,அதற்க்குள்ளகவா முடியப்போகிறது?

வெங்கட் நாகராஜ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

சௌந்தர் said...

நல்லா ஊர் சுத்திட்டு அதை போஸ்ட் டா போட்டு வெறுப்பு ஏத்துறீங்களா..???

:))

எங்க போனாலும் எப்படா வீட்டுக்கு வருவோம் இருக்கும் எனக்கும் :))

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

ஆத்துலே மீனாட்சி ஆட்சி போல..

அதுக்கும் வாழ்த்துக்கள்..

நீங்க சுத்தி பாத்து எங்களையும் சுத்த ( தலை ) வெச்சிட்டீக..

http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

Thanai thalaivi said...

Belated Birthday wishes ! சென்னைக்கும் உங்க ஊருக்கும் டைம் difference நிறைய அதனால் exact date தெரிவித்தால் அடுத்த முறையாவது சரியாக வாழ்த்து சொல்ல உபயோகமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் ஒரு பிரான்ஸ் இருக்கிறதே அதாங்க பாண்டிசேரி. கடந்த வருடம் அங்கு செல்ல சந்தர்ப்பம் வாய்த்தது. உண்மையிலேயே மிகநல்ல மனிதர்கள்.

ஆட்டோ காரர்கள் கூட நாம் இறங்கிவிட்டு பணம் கொடுக்கும் போது merci madame என்று தான் சொல்வார்கள். மெட்ராஸ் மாதிரி மேல பத்து ரூபாய் கொடு என்று சண்டை போடமாட்டார்கள்.

தெரு பெயர்கள் எல்லாம் rue lally tollendal (லாலி டோல்லேண்டல் தெரு) என்று இருந்ததால் ஒரே இடத்தையே சுற்றி சுற்றி வந்து குழம்பினோம்.

ஆனால் அங்கு இருந்த ஒரு வாரம் மிக இனிமையானது.

ஒரு வருத்தமான செய்தி : உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் மலை வாசஸ்தலத்துக்கு நாளை செல்வதாக ஏற்பாடு. கடைசியில் வாரிசுகளுக்கு உடல் நலமில்லாமல் போய்விட்டதால் cancel ஆகிவிட்டது. கடைசியில் அப்பாவியும் அவர்களின் கதையுமே கதி என்றாகிவிட்டது உம்....ம்...ம்.

பத்மநாபன் said...

வலைப்பூ வழியாகவும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

உங்க எழுத்து வழியாக மோண்ட்ரில் சுத்திப் பார்த்தாச்சு...

மைண்ட்வாய்ஸ் அங்கேயே விட்டுட்டு வந்திட்டிங்க போல...

முனியாண்டி said...

good one. Nice to read

சே.குமார் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள். நீங்க சுத்தி பாத்து எங்களையும் சுத்த வெச்சிட்டிக...

சுசி said...

கலகலன்னு சிரிச்சுட்டு.. படபடனு கை தட்டினேன்..

கோவை2தில்லி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

படங்களும் பதிவும் நல்லாயிருக்குங்க.

Sri Seethalakshmi said...

இனிய பிறந்தநாள் வாழ்துக்கள் (belated wishes) :-)...

ப்ளாக் load ஆகும்போது, செவ்வாய், 5 ஜூலை, 2011 பாத்து ரொம்ப சந்தோஷ பட்டேன்.

ஆனால் நீங்க ஜாலிய வெளிய போன கதைய சொல்லி என்ன (எங்கள) ஏமாதிடீங்க...

அப்பவே நெனச்சேன், நீங்க இப்படி ஒரு கதைய போட்டுட்டு ஜில்லுனு ஒரு காதல் இந்த வாரம் இல்லன்னு சொல்லுவீங்கன்னு, அப்படியே ஆயுடுச்சு போங்க...

---

பிறந்தநாள் ஸ்வீட் எங்கனு கேக்கலாம்னு நினச்சேன், நல்லவேள நீங்களே ஜில்லுனு ஒரு அறிவிப்பு குடுத்துடீங்க...

----

குறிப்பு:

என்னவோ போங்க எனக்கு உடனே இந்த வாசகம் தான் ஞாபகம் வந்தது...

"எங்கயோ எதுக்கோ யாரையோ விடுதல பண்ணுவாங்கனு கேள்வி பட்டு இருக்கேன் :-)"

ஸ்ரீராம். said...

பிறந்த நாள் வாழ்த்துகள்...

கதை முடியப் போகுதா...அது சரிங்க...ஆனா அடுத்த கதை ஆரம்பிச்சிடுமே...!

priya.r said...

முதலில் உன்ற பிறந்த நாளுக்கு என்ர வாழ்த்துக்கள் தங்காய்!

A and A said...

This may be one of the possible ending!

ஏய் மீரா எழுந்திரு, லண்டிங் ஆயாச்சு என்று சதிஷ் உலுக்கியதில், திடுக்கிட்டு விழித்தாள் மீரா. இத்தனை நேரம் நடந்து எல்லாம் கனவா என்று நினைதது கொண்டே, கை பையை எடுத்து கொண்டு கனடாவில் முதல் முறையாக கால் எடுத்து வைத்தாள், ஜில் என்று ஒரு காதலை எதிர்பார்த்து.

முற்றும்!

Just kidding...

priya.r said...

Bonjour, (madame/monsieur) Comment allez-vous?/0

அடடே ! இதென்ன இன்னொரு மொழி ! இதை வச்சு அடுத்த கதை ஆரம்பிக்க அப்பாவி பிளான் பன்றாரோ :)

"என்னாச்சு இந்த அப்பாவிக்கு? கனடால வெய்யில் காலம் ஆச்சே? அதான் போல..."னு பாசமா குழி பறிக்கும் அன்பு உள்ளங்களே... அப்படி எல்லாம் நல்லது ஒண்ணும் இன்னும் நடக்கலைங்க... ஹி ஹி ஹி...//
இனிமே அப்பாவி கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையா தான் நடந்துக்கணும் போல ;குழந்தை என்னமா கணிக்கிறா :))))அது என்ன விசயம்னா, "சேந்தாப்ல மூணு நாள் லீவ் வருதே, ஊர் சுத்தலாம்"னு போன வாரம் கிளம்பினோம். போயிட்டு வந்த ஊரோட சகவாசம் தான் இந்த மாதிரி Bonjour கீஞ்சூர் எல்லாம் வாய்ல வருது//

உன்னோட பொறந்த நாளுக்கு உன்ற ரங்கஸ் பாரு உன்னை எங்கெல்லாம் கூடிட்டு போயி சந்தோஷ படுத்தி இருக்கார் !
இதுக்கு நீ தெனமும் பல்பு வாங்கினா கூட தப்பே இல்லே அப்பாவி

நாங்க போன ஊர் பேரு Montreal, Ontarioவை அடுத்து இருக்கற மாகாணம் (Province) Quebec. அந்த மாகாணத்தின் ஒரு நகரம் தான் Montreal. அங்கு பெரும்பாலான மக்கள் பேசும் மொழி பிரெஞ்சு...//
ஓகே ;ottawa வழியாக தான் போகனுமா அப்பாவி ?!

இப்படி ஆறாம் வகுப்பு text bookல இருக்கற மாதிரி இஸ்திரி ஜாங்கிhuரி... சாரி சாரி... ஹிஸ்டரி ஜியோக்ரபி எல்லாம் சொல்றதுக்கு நான் எதுக்கு... கூகிள்ல போய் Montrealனு தட்டினா வடு மாங்கால ஆரம்பிச்சு வசிஷ்டர் வீடு வரைக்கும் அதே சொல்லிடுமே... அப்படி நான் எழுதினாலும் நீங்க படிக்க போறதில்லைனு எனக்கு தான் நல்லா தெரியுமே..:)//
சேசே :(( என்ன இப்படி சொல்லி போட்டே ;வரிக்கு வரி படிச்சுட்டு வரோமாக்கும் !

ஒரு விஷயம் சொல்லணும், இதை படிக்கற என்னை போல அப்பாவி தங்கமணிகளுக்கும் இது ஒரு உபயோகமான டிப்ஸ்ஆ இருக்கலாம்ங்கற நல்ல எண்ணத்துல தான் சொல்றேன்... இப்பவாச்சும் என் நல்ல மனதை புரிந்து கொண்டு உங்கள் பொன்னான வாக்குகளை....ச்சே... இன்னும் போகலியே இந்த எலக்சன் பீவர்... :)//

சொல்லு சொல்லு ! கண்டிப்பா அப்பாவியின் இட்லி சின்னத்திற்கே எங்கள் வாக்கு !

priya.r said...

விஷயம் என்ன'னா... இந்த மாதிரி வெளியூர் பயணம் போறப்ப இந்த Packing வேலை எல்லாம் நான் செய்யறதில்ல'ங்க. "என்ன வேணுமோ கேளுங்க எடுத்து தரேன்... பெட்டிக்குள்ள வெச்சு கார்ல ஏத்தறது உங்க பொறுப்பு"னு கல்யாணம் ஆனா புதுசலையே கட் அண்ட் ரைட்ஆ அவர்கிட்ட சொல்லிட்டேன் //
இது மட்டுமா சொல்லி இருப்பே ......... அந்த பெட்டியில் ஒரு பொருள் காணாம போனா கூட அதுக்கும் நீங்க தான் பொறுப்புன்னு சொல்லியும் இருப்பே :)))

"இதுல என்ன பெரிய விசயம்"னு நீங்க கேக்கலாம்... இல்லாமையா பின்ன? அவங்களே எடுத்து வெச்சுக்கிட்டா, அங்க போனப்புறம் "அதை வெக்க சொன்னனே வெக்கலையா... இதை எடுக்க சொன்னனே எடுக்கலையா"னு நம்மள குறை சொல்ல முடியாது பாருங்க... ஹி ஹி ஹி//
ஹ ஹா ! இது எல்லா தங்கமணி வீட்டிலும்
நடப்பது தானே :))))

"எப்படி அப்பாவி இப்படி எல்லாம் யோசிக்கற? எங்க கண்ணே பட்டுடும் போ"னு நீங்க புகழறது புரியுது... சரி சரி விடுங்க...நமக்குள்ள என்ன...:)//
என்ன .......................
நீ சொல்லி போட்டே ;
நாங்க சொல்லலே .........
அவ்வளோ தான் :))))

priya.r said...

சரி நம்ம விசயத்துக்கு வருவோம். Montrealல ரோடு signsல ஆரம்பிச்சு ரோஸ் பவுடர் கடை வரைக்கும் எங்கும் பிரெஞ்சு மயம்... இந்த "ஜில்லுனு ஒரு கா.." கதைக்காக நாலு இட்டாலியன் வார்த்தை கத்துக்கிட்ட நேரத்துல நாலு பிரெஞ்சு வார்த்தை கத்துக்கிட்டு இருந்தாலும் புண்ணியமா போய் இருக்கும்... பிரெஞ்சு கெட்ட பின் கூகிள் நமஸ்காரம் தான் போங்க...//
நல்லா தானே போய் கிட்டு இருக்கு ; இந்த நேரத்திலே அந்த கதையை சொல்லி ஏன் எங்களை டென்சன் பண்றே அப்பாவி :)

இந்த மொழி பிரச்சனையால ஒரே ரகளை தான். இப்படி தான் நாங்க போய் சேந்த உடனே அங்க இருந்த tourist information centerக்கு போனா, அங்க இருந்த அம்மணி "Bonjour"னு சொல்ல

"Bonjour இல்ல அம்மணி எனக்கு கோயம்புத்தூர்"னு வாய் வரைக்கும் வந்துருச்சுங்க... அப்பறம் தான் ஏதோ ஜேம்ஸ் பாண்ட் படத்துல இந்த மாதிரி கேட்ட கவனம் வந்து, அம்மணி "ஹலோ" தான் சொல்லுதுனு சுதாரிச்சுட்டேன் //
ஹ ஹா நீ சொல்லி இருக்கோணும் ;செம டமாச இருந்து இருக்கும் ஹ ஹா

ஜேம்ஸ் பாண்ட் படம் எதுக்கெல்லாம் உபயோகமாகுது பாருங்க... இந்த மேட்டர் 007க்கு தெரிஞ்சா நாக் அவுட் ஆய்டுவாரோ என்னமோ... ஹையோ ஹையோ..:)//
எங்கே இருந்து எங்கே முடிச்சு போடறே ! நம்ம 007 அதான் லோக்கல் சுனாமி பான்ட் கூட அவுட் ஆக மாட்டா தெரிஞ்சுக்கோ :)

Thanai thalaivi said...

நீங்கள் எடுத்த போட்டோவையே போட்டிருந்தால் அதில் உங்கள் முகமும் இருந்திருக்கும் அதை பார்த்த பின் நங்கள் உங்கள் ப்ளாக்கிற்கு வருவோமோ மாட்டோமோ என்ற சந்தேகமா உங்களுக்கு?

அதெல்லாம் வருவோம் நங்கள் எத்தனை சோதனைகளை கடந்திருக்கிறோம். இதை தாங்க மாட்டோமா என்ன? Just kidding.

புதுகைத் தென்றல் said...

"இதுல என்ன பெரிய விசயம்"னு நீங்க கேக்கலாம்... இல்லாமையா பின்ன? அவங்களே எடுத்து வெச்சுக்கிட்டா, அங்க போனப்புறம் "அதை வெக்க சொன்னனே வெக்கலையா... இதை எடுக்க சொன்னனே எடுக்கலையா"னு நம்மள குறை சொல்ல முடியாது பாருங்க... ஹி ஹி ஹி //

சேம் ப்ளட். இதனாலத்தான் அயித்தானை பொட்டி கட்டுறதுல நீங்க வல்லவரு அப்படி இப்படின்னு புகழாரம் சூட்டி அந்த வேலையை அவர் தலையில் கட்டியிருக்கேன். ஊர் சுத்தின பதிவு சூப்பர்.
தாமதமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தக்குடு said...

போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் தம்பதிசமேதரா 'உலா வரும் ஒளிக்கதிர்' போலருக்கே!! நடக்கட்டும்! நடக்கட்டும்!...:))

அமைதிச்சாரல் said...

மொதல்ல பிறந்தநாள் வாழ்த்துகள் அப்பாவி :-))

வீட்ல இருந்தா, நல்ல நாளும் அதுவுமா இட்லிசெஞ்சு குடுத்துடுவீங்கன்னுதான் உடன்பிறவா தம்பி உங்களை நைஸா வெளியே கூட்டிட்டு போயிருக்காராக்கும் :-))))))))))

அப்பாவி தங்கமணி said...

@ Rathnavel - நன்றிங்க...

@ Gopi Ramamoorthy - மெர்சி கமெண்ட்க்கு...:)

@ மகி - தேங்க்ஸ் மகி... ஆமாங்க நல்ல ட்ரிப் தான்... என்னது திடீர்னு முடிக்கறேனா? அட பாவிங்களா... எழுதினாலும் திட்றீங்க முடிச்சாலும் திட்றீங்க.. அவ்வ்வ்வவ்...:))

@ Matangi Mawley - ஓவரா பிரெஞ்சு பேசினா "பஞ்ச்சரரூ"னு இருக்குமோ... ஏன் ஏன் ஏன் என்னை பாத்து இந்த கேள்வினு கரக்காட்டகாரம் கௌண்டர் மாதிரி பீல் பண்ணனும் போல இருக்கே...ஹா ஹா ஹா...:))

@ Vasagan - ஒகே ப்ரொபசர் சார்... :)).... ஹி ஹி ஹி

@ திவாண்ணா - அதுக்கு கூகிள் படம் நல்ல இல்லிங்க... ஹா ஹா ஹா...அப்படி தான் கத்தி இருக்கணும் போல இருக்குங்க திவாண்ணா..:)

@ ஹுஸைனம்மா - நீங்க சூப்பர் சீனியர்னு நான் ஒத்துக்கரனுங்க அக்கா... நான் ஏதோ இப்பதான் கத்துக்குட்டி...:)) அண்ணா உங்களை நல்லா புரிஞ்சு வெச்சு இருக்கார்..சூப்பர்...:)) எச்சூஸ்மீ... எதுக்கு இப்ப பைரவர் எல்லாம் நினைவு படுத்தி terror கிளப்பறீங்க...அவ்வ்வ்வ்... கோயம்புத்தூர் மந்திரியா மாத்தி என்ன பண்றதுங்க... மிரட்டல் உலகம் பூரா இருந்து வருதே...:)) இட்லி கேசரி கேட்டாலும் இல்ல போங்க....:))

@ Vasagan - ரெம்ப சரியா சொன்னீங்க... இதை வெச்சு கூட ஒரு சிறுகதை எழுதி வெச்சு இருக்கேன்... போடத்தான் நேரமில்லை... :)

@ தமிழ் உதயம் - ஹஹா... மிரட்டலுக்கு பயந்து முடிக்கறதுன்னா நாலு மாசத்துக்கு முன்னாடியே முடிச்சு இருக்கனுங்க... நன்றி சார்..

@ Vasagan - :)))

அப்பாவி தங்கமணி said...

@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க வாழ்த்துக்கு... ஆஹா... எல்லார் வீட்டுலயும் இதே கதை தானா...:)

@ இராஜராஜேஸ்வரி - வாவ்...சூப்பர் பழமொழி... நான் இதை கேட்டதே இல்லிங்க... :))


@ ஹேமா - :)

@ Priya - அங்க போனப்ப உங்கள தான் நினைசுகிட்டேன் ப்ரியா.. .டிப்ஸ் கேட்டுட்டு போய் இருக்கலாமோனு நினைச்சேன்... தேங்க்ஸ் வாழ்த்துக்களுக்கு..:)

@ En Samaiyal - அப்படி தான் ஆச்சுங்க... நன்றிங்க :)

@ Yoga.s.FR - ஹா ஹா... நன்றிங்க...:)

@ Madhuram - நெக்ஸ்ட் வீக் முடியும் கரெக்ட் தான் மது... ஆனா அதுல ஒரு சின்ன ட்ரிக் இருக்கு... கண்டுபிடிங்க பார்ப்போம்....ஹா ஹா..:))

@ A and A - நன்றிங்க வாழ்த்துக்கு... நம்புங்கள் முடிக்கப்படும்...:))


@ நிஜாம் என் பெயர் - ஹா ஹா ஹா ஹா...சூப்பர் கற்பனை... ஆனால் கொல வேறயா இருக்கே பிரதர்... Montreal லில் ஒரு காதலனா...வேண்டாமுங்கோ...:))

@ எல் கே - ஹா ஹா ஹா...கோவிந்த் செமயா சிரிச்சார் இந்த கமெண்ட் படிச்சுட்டு...:))

அப்பாவி தங்கமணி said...

@ kggouthaman - தேங்க்ஸ் டூ... :))


@ BalajiVenkat - ப்ரூட்டஸ்....grrrrrrrrrrrr


@ RAMVI - வாழ்த்துக்கு நன்றிங்க... இல்லேனா ப்ளாக்'ஐ கொளுத்துவோம்னு மிரட்டறாங்க..:))


@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க ..:)


@ சௌந்தர் - எஸ் எஸ்... வெறுப்பேத்தரதுக்கு தானே ப்ளாக்...ஹா ஹா...:))


@ சிவ.சி.மா. ஜானகிராமன் - நன்றிங்க வாழ்த்துக்கு... மீனாட்சி ஆட்சி போல ஒரு பில்ட் அப் மட்டும் தான்ங்க..:))


@ Thanai thalaivi - வாழ்த்துக்கு நன்றிங்க... சரியா தேதி ஜூலை மூணுங்க... பாண்டிச்சேரி ரெண்டு முறை போய் இருக்கேன்... எனக்கும் பிடித்த ஊர்... வருத்தமான செய்திக்கு வாழ்த்துக்கள்...:))


@ பத்மநாபன் - நன்றிங்க... மைண்ட்வாய்ஸ் ரெஸ்ட்ல இருக்குங்க...:))


@ முனியாண்டி - தேங்க்ஸ்..


@ சே.குமார் - நன்றிங்க...ஹா ஹா..:)

அப்பாவி தங்கமணி said...

@ Krishnaveni - மெனி தேங்க்ஸ் வேணி.. நல்ல ஊர் அது... கண்டிப்பா போயிட்டு வாங்க...:)@ மேவி - ஹா ஹா... நன்றிங்க@ சுசி - மடமடனு கமெண்ட் போட்டேன்னு சொல்ல விட்டுடீங்களே சுசி...:))@ கோவை2தில்லி - நன்றிங்க ஆதி@ Sri Seethalakshmi - வாழ்த்துக்கு நன்றிங்க சீதா...ஆனா கடைசீல ஆப்பு வெச்சுட்டீங்களே அம்மணி...அவ்வவ்... ஹா ஹா... நல்ல சென்ஸ் ஆப் ஹுமர் உங்களுக்கு... நீங்க ஏன் ப்ளாக் ஆரம்பிக்கக்கூடாது... (இப்படி தான் சிக்க உடனும் அப்பாவி குட் குட்... யான் பெற்ற துன்பம் பெருக இவ்வயகம்...:))@ ஸ்ரீராம். - வாழ்த்துக்கு நன்றிங்க... அடுத்த கதையா? வேண்டாம் நீங்க எல்லாம் பாவம்...:))@ priya.r -கடைசீல நீங்க சொன்ன வாழ்த்துக்கு முதல்ல என்னோட நன்றிங்க அக்கோய்... :))@ A and A - ஏனுங்க இந்த கொல வெறி...ஹா ஹா ஹா... (இப்படி கூட முடிவு வேக்கலாமோ...ஹா ஹா...:)@ priya.r - நல்ல ஐடியா அக்கா...இன்னொரு கதை ஆரம்பிச்சுட்டா போகுது...:)) தினமும் பல்பு'ஆ? நேரம் தான்...கிரர்ர்ர்ர்.... ஒரு குறிப்பிட்ட தூரம் வரை அதே வழி தான்... அப்புறம் கொஞ்சம் மாறும்...வரிக்கு வரியா... என்ன வரி? VAT வரியா?...:)) இட்லி சின்னமா? கிழிஞ்சது கிருஷ்ணகிரி...:)) ஹி ஹி ஹி... கரெக்டா சொல்லிட்டீங்க...:)) உங்கள டென்ஷன் பண்ணலைனா எப்படி நான் நிம்மதியா இருக்கறது...:))@ Thanai thalaivi - இப்படி எல்லாம் உண்மைய புட்டு புட்டு வெச்சா நான் என்ன செய்யறது...:))@ புதுகைத் தென்றல் - ஹா ஹா ஹ... சும்மாவா உங்கள ஹஸ்பண்டாலாஜி ப்ரொபசர் சொல்றது... நான் ஏதோ ஒரு அடிபொடி தானே இன்னும்...:))@ தக்குடு - ஆஹா... தூர்தர்ஷன் ப்ரோக்ராம் பேர் எல்லாம் மறக்கல போல இருக்கே இன்னும்... நடந்தோம் நடந்தோம்...:))@ அமைதிச்சாரல் - வாழ்த்துக்கு நன்றிங்க அக்கோய்.. ஓ, இப்படி ஒரு மேட்டர் இருக்கா? இதை நான் யோசிக்கல பாருங்க...விசாரிக்கறேன்...:))

அஸ்மா said...

உங்க ஊர்கோலம் நல்லா இருக்கு :)

//ஹாப்பி பர்த்டேவை பர்த்டே ஹாப்பினு சொல்லுவாங்களோனு எனக்கு பெரிய பெரிய சந்தேகம் எல்லாம் வந்தது...// இங்கே 'பர்த்டே'ன்ன வார்த்தையே யூஸ் பண்ணுவதில்லை. உங்க சந்தேகத்தை நான் தீர்த்து வெக்கிறேன். ஏதோ என்னால முடிஞ்ச சின்ன உதவி :-)

ஹாப்பி பர்த்டே = Bon anniversaire (or) Joyeux anniversaire.

அப்பாவி தங்கமணி said...

@ அஸ்மா - ஹா ஹா... நன்றிங்க அஸ்மா... இனிமே Bon anniversaire யூஸ் பண்ணிடுவோம்..:)

கொங்கு நாடோடி said...

\"Take a U turn Take a U turn"னு, நம்ம கமல் சார் "ஆத்தா வெயும் காசு குடு" டயலாக் மாதிரி நாம U Turn எடுக்கற வரைக்கும் உசுர வாங்கும்...\

இல்லை Take a Legal U turn நு கத்தும்... அது என்ன legal U turn... Illegal U turn ஒன்னு இருந்த சொல்லுங்கப்பா

ஷீ-நிசி said...

சலிப்பை ஏற்படுத்தாத வார்த்தைகளை கோர்க்க தெரிந்த வசியக்கார எழுத்துக்களின் சொந்தக்காரரே.. வாழ்த்துக்கள்!

அப்பாவி தங்கமணி said...

@ கொங்கு நாடோடி - ரெம்ப சரியா சொன்னீங்க... அதானே illegalனு ஒண்ணு இருக்கோ...:)))

@ ஷீ-நிசி - ஆஹா... பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்றீங்க... நன்றிங்க

Post a Comment