Thursday, July 07, 2011

எண்பது அகவை... என்பதும் நம்பிலேன்..."சீக்கரம் பேத்திய நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்"னு பாட்டி சொல்லி என் அப்பா 45 நாள் சிசுவாய் என்னை என் அம்மாவோடு அவங்க அம்மா வீட்டுல இருந்து கூட்டிட்டு வந்தாங்களாம்

பொதுவா ஆறு மாசம் முடியாம அப்ப புகுந்து வீட்டுக்கு பிள்ளைய எடுத்துட்டு போற வழக்கமில்ல. ஆனா என் அப்பாவோட அன்னைக்கு அது வரை பொறுமை இல்லயாம். நானும் இங்க வந்தப்புறம் தான், இரவில் ஒழுங்கா ரெம்ப படுத்தாம தூங்கினேனாம்

"இப்பவே நம்ம வீடு அவங்க வீடு வித்தியாசம் தெரியுதா இவளுக்கு?"னு எங்க மாமா (அம்மாவோட அண்ணா) கிண்டல் பண்ணினாராம்...:)

அப்படி, 45 நாள் பிராயத்தில் இருந்தே என்னை முழுதாய் ஆஸ்கரித்து கொண்டவர் என் பாட்டி. என் அம்மாவின் அருகில் தூங்கிய நினைவு எனக்கு இல்லை 

அம்மாவுக்கு சமையல் வேலை, மற்ற வீட்டு வேலைகள், அப்பாவின் தொழில் சம்மந்தமான கணக்கு வழக்கு உதவிகள், வெளி விசேசங்களுக்கு செல்வது என எப்பவும் ரெம்ப பிஸியா இருப்பாங்க. காலைல பள்ளிக்கு கிளப்பரதுல தொடங்கி, ஸ்கூல்'க்கு மதிய உணவு எடுத்துட்டு வர்றது, ஸ்கூல் விட்டு வந்ததும் கவனிக்கறது எல்லாமும் பாட்டி தான்

"என் பேத்தி ஸ்கூல் போறதுக்கு முந்தியே திருப்பாவை முப்பதும் சொல்லுவா"

"எங்க புவனா கையெழுத்து மணி மணியா இருக்கும்"

"சின்னது கொஞ்சம் அடாவடி தான்... ஆனா எங்க புவனா ரெம்ப பொறுமை"

"எங்க புவனாகிட்ட பாடம் படிக்கறதுக்கு அவ கூட படிக்கற சிநேகிதிங்க எல்லாம் வருவாங்க... எப்பவும் மொதல் மார்க் தான்"

இப்படி பேச்சுக்கு பேச்சு பாட்டிக்கு பேத்தி பெருமை தான் எப்பவும். "இப்பவும் கூட"னு எங்க அப்பா கிண்டல் பண்ணுவார் சில சமயம் :)

ஆனா அதுக்காக ரெம்ப செல்லம்னு எல்லாம் கிடையாது. ரெம்ப கண்டிப்பா இருப்பாங்க. உண்மைய சொல்லணும்னா, அம்மா அப்பாகிட்டே ஒரு அடி கூட வாங்கினதில்ல. பாட்டிகிட்ட நெறைய வாங்கி இருக்கோம் நானும் என் தங்கையும்

அதிலும், நிமிட்டாம்பழம் கணக்கில்லாம வாங்கி இருக்கோம். இப்ப நினைச்சாலும் உதறும். ஆனா அந்த கண்டிப்பு தான் எங்களை சரியான முறைல வழி நடத்தி இருக்குனு இப்ப தோணுது

ஆனா, அந்த அடி உதை எல்லாம் டீனேஜ் தொடங்கும் வரை தான். அதன் பின், வெறும் கண்டிப்போட சரி. பாட்டி என்னை என்ன வேணா சொல்லுவாங்க, ஆனா அம்மா அப்பா ஒரு வார்த்தை திட்டினாலும் கோபம் வந்துடும்

"எதுக்கு கொழந்தைய ஆளாளுக்கு விரட்டறீங்க. நீ வா தங்கம் இப்படி"னு ஒரே சப்போர்ட் மழை தான்..

அது மட்டுமில்ல, பள்ளி நாட்கள்ல எங்கயாச்சும் போட்டிகளுக்கு போகணுமா? பாட்டிய கூட்டிட்டு போ...

பிரெண்ட்ஸ் வீட்டு விசேஷமா? பாட்டிய கூட்டிட்டு போ...

காலேஜ் மொதல் நாளா? பாட்டிய கூட்டிட்டு போ...(நிஜமாதான்..:)

பேங்க் எக்ஸாம்'ஆ? பாட்டிய கூட்டிட்டு போ...

இப்படி எங்க போனாலும் பாட்டியே துணை. அப்பா எங்கயும் எங்கள தனியா போக விட மாட்டார். "2000'வது வருஷம் கூட வந்தாச்சு, ஏன் இப்படி இருக்கீங்க"னு நானும் தங்கையும் எரிச்சல்படுவோம்

எல்லா அப்பாவும் இப்படி தான் போல. Too much Protective on daughters...:) அவராலயோ அம்மாவாலயோ நேரம் ஒதுக்க முடியாது. உடனே "பாட்டிய கூட்டிட்டு போ"னு சொல்லிடுவார்

எங்க பாட்டிக்கு தள்ளாத வயசும் இல்ல. அதனால, ரெம்ப உற்சாகமா என் கூட எங்க வேணாலும் வருவாங்க. காலேஜ் முதல் நாள் பாட்டிய கூட்டிட்டு போனது தான் ஹைலைட். எனக்கு எங்க ஸ்கூல் ஏரியா தாண்டி தனியா போய் பரிச்சயம் இல்ல

காலேஜ்'க்கு ரெண்டு பஸ் மாறி ரெம்ப தூரம் போகணும். வேற வழி? பாட்டியே துணை. என்னோட சீனியர்ஸ் அதை சொல்லியே ராக்கிங் பண்ணினது தனி கதை..:)

வெள்ளிக்கிழமை வந்தாலே "இந்த பாட்டி இனி எண்ணை கொப்பரைய தலைல கொட்டுமே"னு மூக்கால அழுவேன். அது மட்டுமா, அத்தனை அடர்த்தி கூந்தலை அரப்பு போட்டு அலசி, சாம்பராணி போட்டு காய வெச்சு, அப்பப்பா எப்படா முடியும்னு அழுவேன்

இப்ப ஒரு நாள் அப்படி இருக்காதானு ஆசையா இருக்கு. இப்ப ஆறடி கூந்தலும் இல்ல, அலசி சீராட்ட பாட்டியும் பக்கத்தில் இல்ல...:(

வீட்டில் இருக்கும் நேரமெல்லாம் கண்ணு பூரா எங்க மேல தான் இருக்கும் பாட்டிக்கு

கால கீழ போட்டு உக்காரு...

ஏன் ஒண்ணும் பேசாம சும்மா இருக்க...

தலைக்கு கொஞ்சம் எண்ணை வெய்யேன்...

இந்த பழம் ஒண்ணு சாப்பிடு...

ஏன் வெறுங்கய்யா இருக்கே, வளையல் போடு...

மால நேரம் வாசல் முன்னாடி உக்கராதே...

இப்படி சொல்லிட்டே இருப்பாங்க

அப்ப செம எரிச்சலா இருக்கும் "உனக்கு வேற வேலையே இல்லையா பாட்டி... என்னையே ஏன் பாத்துட்டு இருக்க"னு கத்துவேன்

இப்ப "அந்த நாளும் வந்திடாதோ..."னு இருக்கு...:(

காலேஜ் வந்தப்புறமும் கூட லீவ் நாட்கள்ல மொதலே சாப்பிட்டு இருந்தாலும், பாட்டி சாப்பிடும் போது, நானும் தங்கையும் "ஆ..." னு வாய காட்டுவோம். அவ்ளோ ஏன், போன வருஷம் 2010ல ஊருக்கு போனப்ப கூட இது நடந்தது

எங்க அப்பா அதை பாத்துட்டு "கொழந்தைக்கு பால் புட்டி எடுத்து தரணுமா?"னு கேலி பண்ணினார்

என் பாட்டிகிட்ட நான் ரெம்பவும் வியந்த விஷயம், என் பெற்றோரை விடவும் முற்போக்கான சிந்தனை அவரிடம் இருந்தது தான். எங்க அம்மாகூட சொல்லுவாங்க "உங்க பாட்டி இன்னும் அம்பது வருஷம் கழிச்சு பொறந்து இருக்கணும்"னு

நான் MBA முடிச்சதும் கேம்பஸ் இண்டர்வியுலையே ஒரு நல்ல வேலை பெங்களூர்ல கிடைச்சது. "அவ்ளோ தூரம் நீ தனியா போய் சம்பாதிக்கணும்னு ஒண்ணும் அவசியம் இல்லை"னு எங்க அப்பா சொல்லிட்டார்

நான் உண்ணாவிரதம், மௌனவிரதம், அழுகை எல்லாம் செஞ்சு பாத்தேன். அப்பாவை அசைக்க முடியல

உடனே எங்க பாட்டி "நான் வேணும்னா அவ கூட போய் ஒரு வீடு எடுத்து தங்கி இருக்கேன் அனுப்பு"னு சொன்னாங்க. சூப்பர் பாட்டி தான் எங்க பாட்டி. ஆனா அதுக்கும் அப்பா ஒத்துக்கலைங்கறது தனி கதை

மன உறுதி, இந்த வயதிலும் புதிய விசயங்களை அறிந்து கற்று கொள்ளும் ஆர்வம், அதன் விளைவாய் நெறைய விஷய ஞானம், மக்களோடு பழகும் விதம், எதிராளியை தன் போக்குக்கு ஒத்துக்கொள்ள வைக்கும் பேச்சு திறன், அன்பே ஆயுத்தமாய் எல்லோரையும் கட்டிப்போடும் உண்மையான நேசம், கண்டிப்பும் அன்பும் எல்லை மீறாமல் காட்டும் குணம் இப்படி நெறைய விஷயங்கள் என்னை பிரமிக்க வைக்கும்

இன்னொரு விஷயம், அயராத உழைப்பு. இந்த வயசுலயும் ஒரு நிமிஷம் சும்மா இருக்க மாட்டாங்க. அம்மா எழுந்து வர்றதுக்குள்ள வாசல் தெளிச்சு, கோலம் போட்டு, காபிக்கு ரெடி பண்ணிடுவாங்க

இப்ப இப்ப அம்மா அப்பா கண்டிப்புல கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறாங்க. உடலும் முன் போல் ஒத்துழைப்பதில்லை'ங்கறதும் ஒரு காரணம்

நான் லெக்சரர் வேலைக்கு போக தொடங்கினதும் "இன்னும் சின்ன பொண்ணு மாதிரி இருந்தா படிக்கற பசங்க மதிக்க மாட்டாங்க. நல்ல காட்டன் பொடவையா கட்டணும். இப்படி பின்னல் போடு. இப்படி இரு அப்படி இரு" னு எனக்கு பேஷன் குருவும் என் பாட்டி தான்

சில சமயம் நானும் என் தங்கையுமே பிரமிச்சு போய்டுவோம் பாட்டியோட டிப்ஸ் கேட்டு...:)

எனக்கு திருமணம் முடிவானதும், ஒரு பக்கம் மனம் நிறைந்த சந்தோஷம், அதே நேரம் விட்டு பிரிய போறோமேனு கலக்கம். ஆனா ரெண்டையும் பெருசா காட்டிக்கல

ஒரு ஒரு முறை ஊருக்கு போறப்பவும் "சாம்பார் பொடி, பருப்பு பொடி, ரசம் பொடி"னு பாத்து பாத்து எடுத்து வெக்கறதுலயாக்கட்டும், அம்மாவை விரட்டி விரட்டி "இது பிடிக்கும் அது பிடிக்கும்"னு செய்ய வெக்கறதுலயாகட்டும், ஒரு பதினாறு வயசு பெண் தான் நம் கண்ணுக்கு தெரிவார்

போன்ல நெறைய பேச மாட்டாங்க. நாலு வார்த்தை தான் "நல்லா இருக்கியா? நல்லா சாப்பிடறயா? கோவில் போனயா? ஒடம்ப பாத்துக்கோ. இரு உன் அம்மாகிட்ட தர்றேன், பேசு" இவ்ளோ தான்

ஆனா அதையே அடுத்த முறை போன் பேசும் வரை எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருப்பாங்களாம், அம்மா சொல்வாங்க

ரெண்டு நாள் முன்ன ஊருக்கு பேசினப்ப வழக்கமான நாலு வார்த்தை தவிர கொஞ்சம் பேசினாங்க. பாட்டி சொன்னது இது தான்

"வர்ற வெள்ளிக்கிழமயோட எனக்கு எண்பது முடியுது. தாத்தாவுக்கு 87 ஆச்சு. நீ ஊருக்கு வந்தப்ப ஒரு பட்டு பொடவை எடுத்து குடுத்தயல்ல. அது இன்னும் கட்டாம தான் வெச்சுட்டு இருக்கேன். தாத்தாவுக்கும் வேட்டி சட்டை புதுசு இருக்கு. வெள்ளிக்கிழமை நம்ம பெருமாள் கோவில் போய்ட்டு எல்லார் பேருக்கும் அர்ச்சனை பண்ணிட்டு வரோம்"னு சொன்னாங்க

நான் சும்மாவே பீலிங்க்ஸ் ஆப் இந்தியா கேஸ். இப்ப சொல்லணுமா.... சட்டுன்னு கண் கலங்கிடுச்சு...

நான் இப்படி பேச முடியாம கண் கலங்கி இருக்க, எங்க தாத்தா அவசரமா போன் வாங்கி "உங்க பாட்டிக்கு தான் எண்பது... எனக்கு இன்னும் 79ஏ முடியல... 87னு சொல்றதை நம்பாதே"னு சொல்லி கண்ணில் நீர் வர சிரிக்க வெச்சுட்டார்

பாட்டி பேரு ருக்மணி - தாத்தா பேரு ஸ்ரீநிவாசன். அழகான பெயர் பொருத்தம்னு எல்லாரும் சொல்ல கேட்டு இருக்கேன். பேருல மட்டுமில்ல, வாழ்விலும் மிக பொருத்தமான ஜோடியாய் பார்த்து இருக்கேன்

என் அருமை பாட்டியோட இந்த எண்பதாவது பிறந்த நாளில் பாட்டிய பத்திய என்னோட மலரும் நினைவுகளை உங்க கூட பகிர்ந்துகிட்டதுல ரெம்பவும் நெகிழ்வா இருக்கு. பொறுமையா படிச்ச உங்களுக்கும் மிக்க நன்றி

"எண்பது வயசு ஆய்டுச்சா பாட்டிக்கு"னு எங்க அம்மாகிட்ட நான் ஆச்சிர்யமா கேட்க, எங்க அம்மா சிரிச்சுகிட்டே "எனக்கே 51 ஆச்சு புவனி"னாங்க. ஹ்ம்ம்... நாட்கள் ரெம்ப வேகமா ஓடுதுனு நினைச்சுட்டேன்

ஹாப்பி பர்த்டே பாட்டி...

பாட்டிக்கும் தாத்தாவுக்கும் இன்னும் நீண்ட ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்யமும் அருள வேணும்னு ஆண்டவனை பிராத்தித்து கொள்கிறேன்

" நம்ஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய
மஹாதேவாய த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி
காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்சயாய
 ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நமஹ"
- ஸ்ரீ ருத்ரம்
(நீண்ட ஆயுள் பெற)

...

76 பேரு சொல்லி இருக்காக:

கவி அழகன் said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

சந்ரு said...

வாழ்த்துக்கள்

Mahi said...

பாட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புவனா! நினைத்தாலே இனிக்கும் நினைவுகள்! :)

kggouthaman said...

வணங்கி மகிழ்கிறோம். வாழ்க பல்லாண்டு பல்லாண்டு, ருக்மணிப் பாட்டியும், சீனுத் தாத்தாவும்.

BalajiVenkat said...

பாட்டிக்கு இனிய பிறந்த் நாள் நல்வாழ்த்துக்கள் ... இத படிச்சதும் என் கண்ணின் ஓரம் ஒரு நீர்த்துளி ... என் அப்ப்வினுடைய அம்மா இது போல இல்லையே என்று.... என்னுடைய பாட்டி, அம்மாவின் அம்மா தான் என் மேல் ரொம்ப பிரியம் .... பாட்டிகிட்ட அடுத்து பேசும்போது கண்டிப்பா என் சார்பா நலம் விசாரிக்கணும்.... அவங்க ஆசிர்வாதம் வேணும்... :)

அனாமிகா துவாரகன் said...

//"எனக்கே 51 ஆச்சு புவனி"//
Liar liar bum on fire.

புவனிக்கு 56 வயசாம். அவங்க அம்மாவுக்கு 51ஆம். இதெல்லாம் ரொம்ப ஓவராக இல்லை.

அனாமிகா துவாரகன் said...

//என் பாட்டிகிட்ட நான் ரெம்பவும் வியந்த விஷயம், என் பெற்றோரை விடவும் முற்போக்கான சிந்தனை அவரிடம் இருந்தது தான். எங்க அம்மாகூட சொல்லுவாங்க "உங்க பாட்டி இன்னும் அம்பது வருஷம் கழிச்சு பொறந்து இருக்கணும்"னு //

நேத்தே சொல்லல. எல்லா பாட்டிகளும் பேத்திகளுக்காக என்ன வேணும்ன்னாலும் செய்வாங்கனு. நான் கூட பஸ்ஸில சொல்லி இருந்தேன். எங்களுக்காக எதுவும் செய்வாங்க.

//எதிராளியை தன் போக்குக்கு ஒத்துக்கொள்ள வைக்கும் பேச்சு திறன்,//
பேத்தின்னு நிரூபிச்சிட்டேக்கா. இப்ப புரியறது எங்க இருந்து இவ்ளோ பேச்சு பேச்சறேன்னு. அதுவும் அந்த லெட்டர். இன்னும் மூச்சு முட்டு போகல. ஹா ஹா ஹா.

அப்புறம் ரொம்ப சுயபுராணம் போட்டிருக்கேக்கா. எங்களுக்குத் தெரியாதா நீங்க அவ்ளோ படிப்புசுன்னு. அப்புறம் பொறுமை? ஹா ஹா ஹான்னு ஏதாவது சொல்லனும் தான் நினைச்சேன். பட், உங்களுக்கு எவ்ளோ பொறுமைன்னு எனக்குத் தெரியும். அதனால தான் வி ஆல் லவ் யூ. =))

அனாமிகா துவாரகன் said...

//பேஷன் குருவும் என் பாட்டி தான்//
ரொம்ப உண்மை. எங்களுக்கு அவங்களே உடை தைச்சு தரும் போது நிறைய ஸ்கெட்ச் போட்டு பத்து கடையில ஏறி இறங்கி துணி வாங்கி தைச்சு கொடுப்பார். பாட்டியோட கலர் காம்பினேஷன் ரொம்பவே ஆச்சரியப் படுத்தும். என்னோட சாரி பிளவுஸ் எல்லாம் பாட்டியோட டிசைன் தான். இங்க போடற போது யாரு டிசைனருன்னு கேட்டு வாங்கிட்டுப் போய் அவங்களும் தைச்சுபாங்க.

ஒரு நாளும் பெயர் சொல்லி கூப்பிட்டதில்லை. ராஜாத்தி என்று தான் கூப்பிடுவார். சின்ன வயதில் கூட அடிச்சதில்லை. நாங்க ரொம்ப நல்ல பசங்க வேறயா. ஹி ஹி. ஆக்சுவலி யாருமே கண்டிக்கற அளவுக்கு நாங்க இருக்கல. ரொம்ப அப்பாவியான குழந்தைகளோ? டவுட்டு தேன்.

பாட்டிக்கு விஷ் பண்ணச் சொல்லி நேத்தே சொல்லிட்டேன். ஆனாலும் இப்பவும் திருப்ப சொல்லுறேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாட்டிக்கு.

முனியாண்டி said...

பாட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அனாமிகா துவாரகன் said...

சொல்ல மறந்திட்டேன். இன்னைக்கு எங்க தாத்தாவோட பிறந்த நாள் கூட. மேல அண்ணன்களோட கொண்டாடுவார்னு நினைக்கிறேன் =((

இராஜராஜேஸ்வரி said...

பாட்டிக்கு நம்ஸ்காரங்கள்.

எனக்கும் அம்மாவிடம் இருந்த நாட்கள் குறைவு. பாட்டியுடன் தான் ரொம்ப நெருக்கம்.

மலரும் நினைவுகளுக்கு வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

ஹாப்பி பர்த்டே பாட்டி...

பாட்டிக்கும் தாத்தாவுக்கும் இன்னும் நீண்ட ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்யமும் அருள வேணும்னு ஆண்டவனை பிராத்தித்து கொள்கிறேன்

" நம்ஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய
மஹாதேவாய த்ரயம்பகாய - த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி
காலாய காலாக்னீ ருத்ராய நீலகண்டாய ம்ருத்யுஞ்சயாய
ஸர்வேஸ்வராய ஸதா சிவாய ஸ்ரீமன் மஹாதேவாய நமஹ"
- ஸ்ரீ ருத்ரம்
(நீண்ட ஆயுள் பெற)

வெண்கல கடை said...

ரொம்ப சூப்பர் :) பாட்டி-ஸ் எப்பவுமே ஸ்பெஷல் தான்!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.

நல்லா எழுதி இருக்கீங்க புவனா..
புவனாவ பாட்டி வாயுக்கு வாய் பாராட்டி இருக்காங்கன்னா பின்ன சும்மாவா..:)

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் பாட்டிக்கு எனது நமஸ்காரங்கள்... 80 வயது பூர்த்தி ஆனதற்கு வாழ்த்துகள்... இன்னும் நீண்ட நாட்கள் உங்களுடன் இருந்து உங்கள் எல்லோருக்கும் வழிகாட்ட ஆண்டவன் அருள் புரியட்டும்....

RAMVI said...

உங்கள் பாட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், தாத்தா பாட்டி இருவரும் நல்ல ஆரோகியதோடும்,நீண்ட ஆயுளோடும் இருந்து நம்மை சந்தோஷபடுத்த வேண்டும் என பெருமாளை வேண்டிக்கொள்கிறேன்..

பத்மநாபன் said...

உங்கள் பிரார்த்தனையில் நாங்களும் இணைந்து கொள்கிறோம். அநேக நமஸ்காரங்கள்...

raji said...

பாட்டிக்கு எனது நமஸ்காரங்கள்.அவர்களுக்கு நல்ல
ஆரோக்கியத்தை அருள இறைவனை பிரார்த்திக்கிறேன்

//ஆனா எங்க புவனா ரெம்ப பொறுமை"//

நம்பிட்டோம்ல

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தப்பதிவு அருமை, வெகு அருமை; நான் மிகவும் ரஸித்துப்படித்தேன். தங்கள் தாத்தா பாட்டிக்கு என் அனந்த கோடி நமஸ்காரங்களைத் தெரிவிக்கவும்.

அந்த நிமிட்டாம்பழம்: எவ்வளவு அருமையானதொரு வார்த்தையை உபயோகித்துள்ளீர்கள். அது உணர்ந்தவர்களுக்கே தெரியும்.

உங்கள் பாட்டியும் என் பெரிய அக்காவும் ஒன்று. அவளுக்கு இப்போது 72 வயது, அத்திம்பேருக்கு 82 வயது. 6 மகன்கள், 6 நாட்டுப்பெண்கள், 2 பெண்கள், 2 மாப்பிள்ளைகள், நிறைய பேரன் பேத்திகள்.

இன்றும் 16 வயது போல துடிப்புடன் ஆசை ஆசையாக், நாகரீகமாக செயல்பட்டு வருகிறாள். இரு முறை சிங்கப்பூருக்கு தன் பெண்ணுக்கு டெலிவெரி பார்க்கப்போய் வந்து விட்டாள்.

வீட்டுக்கு மிகச்சரியான நிர்வாகியாக, எட்டு சம்பந்திகளையும் அரவணைத்து, எல்லா இன்ப துன்பங்களிலும் எல்லோருக்கும் மிகவும் ஆறுதல் தந்து வருகிறாள்.

நல்ல மனஸு தான் எல்லாவற்றிற்குமே காரணம்.
கோபமும் உண்டு, குணமும் உண்டு.

இவர்களை உறவினராகப்பெற்ற நாம் தான் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.

தங்களின் அழகான திருப்தியான பதிவுக்கும், கடைசியில் எழுதியுள்ள ஸ்லோகத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள். அன்புடன் vgk

Anonymous said...

நான் உண்ணாவிரதம், மௌனவிரதம், அழுகை எல்லாம் செஞ்சு பாத்தேன். அப்பாவை அசைக்க முடியல
ஆமாம் அவர் என்ன அப்பாவி கோவிந்துவா?
பாட்டியைபற்றி நல்ல விஷ்யங்களை சொன்னதற்கு நன்றி.

பிரதீபா said...

வாழ்த்துக்கள்,நமஸ்காரங்கள், அந்த அற்புத பாட்டிக்கும், தாத்தாவுக்கும். எனக்கும் என் அம்மாயி ரொம்ப பிடிக்கும். ஒரு பதிவு எப்பவோ எழுதி வெச்சிருக்கேன், போடணும். :)

கோவை2தில்லி said...

உங்க பாட்டிக்கு என் நமஸ்காரங்களை தெரிவித்து விடுங்கள் புவனா. தாத்தாவும் பாட்டியும் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

Rathnavel said...

அருமையான பதிவு.
படித்ததும் நெகிழ்ந்து விட்டோம்.
எல்லோரும் நீடூழி வாழ்க.

திவா said...

ஹாப்பி பர்த்டே பாட்டி...:-))

RVS said...

பாட்டிக்கு மெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே! ;-))

ஸ்ரீராம். said...
This comment has been removed by the author.
ஸ்ரீராம். said...

தாத்தா பாட்டிக்கு எங்கள் நமஸ்காரங்கள். வாழ்க பல்லாண்டு.

தெய்வசுகந்தி said...

பாட்டிக்கும் தாத்தாவுக்கும் வணக்கம்!!

En Samaiyal said...

பாட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .ரொம்ப அழுகாச்சி ஆயிடிச்சு போங்க. இந்த மாதிரி பாட்டிகூட நான் வளரலயேன்னு ஏக்கமா இருக்குங்க. You are very lucky. என் பையன் இந்த மாதிரி அனுபவங்கள் மிஸ் பண்ணுறானே ன்னு வருத்தமாவும் இருங்க. ரொம்ப emotions of India ஆனதனால உங்க நகைச்சுவை ஏதாவது படிக்கலாமுன்னு உங்க இட்லி ஆர்டர் பத்தி படிச்சு தனியா சிரிச்சு தாங்க முடியல போங்க. வேலையில எல்லாம் ஒரு மாதிரி பார்த்தாங்கன்னு வையுங்களேன்! என்ன ரொம்ப முத்திடிச்சுன்னு நெனச்சிருப்பாங்க!!

RAZIN ABDUL RAHMAN said...

அருமை பாட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
படிக்கும் போதே லேசா கண் கலங்கியது,,,ஏன்னு தெரியல,..

உண்மையாவே நாள் வேகமாத்தா ஓடுது சகோ..

அன்புடன்
ரஜின்

A and A said...

ஆயிரம் பிறை கண்ட தாத்தா பாட்டிக்கு வாழ்த்துக்கள்!

dheekshu said...

மிக‌வும் நல்ல‌ ப‌திவு புவ‌னா. என் பாட்டியின் வ‌யது 87. அது ஏனோ பாட்டிக்கும் பேத்திக‌ளுக்கும் மட்டும் ஜென‌ரேஸ‌ன் காஃப் இருப்ப‌தில்லை :-))‍

ANaND said...

பாட்டியை வாழ்த்த வயதில்லை ..வணங்குகிறேன்

Kriishvp said...

அருமையான பதிவு, படித்ததும் நெகிழ்ந்தேன். என்னுள்ளும் மலரும் நினைவுகள்!.நன்றி சகோதரி!

Priyaram said...

எங்க மாமியாரும் அவங்க பேரன், பேத்தி கிட்ட இப்படி தான் இருப்பாங்க. உங்களோட பதிவை படிச்சிட்டு ஆனந்த கண்ணீர் வந்து விட்டது. உங்க பாட்டி, தாத்தா நிறைய நாள் ஆரோக்கியத்தோட வாழணும்னு கடவுளை வேண்டிக்கறோம். அவங்களுக்கு எங்களோட நமஸ்காரத்தை சொல்லிடுங்க.

அமைதிச்சாரல் said...

மொதல்ல என்னோட நமஸ்வீட்டுகளை சொல்லிடுங்க :-))))

என்னோட அம்மாச்சி பத்தியும் எழுதிவெச்சிருக்கேன்.. வெளியிட இன்னும் நேரம் வரலை..

Thanai thalaivi said...

ungal paatikku engal namasarmgal.

adda!, takkudu matiriye slokamelam polanthu katreengale? I have seen practically that children brought up with grand parents have more exposure and high altitudes in life. I am feeling sad that me and my children are not blessed so.

I have a lot to say but this translater is not co-operating properly. Oh ! we have been to Ooty this week end. The children are okay. The trip was finalised in the last few hours.

We had high drama just a couple of hours before we start. I will insert a post very soon on that. The title will be "BHUVANESHWARI MAHATMIAM" . Hey! don't pull up your collar that is not you, that is Goddess Matha Bhuvaneshwari.

தக்குடு said...

பாட்டிக்கு இந்த குட்டி பேரனோட வணக்கங்களை சொல்லவும். எல்லாம் ரைட்டு, பாட்டியோட பேரை முன்னால போடுண்டு "நல்லவள்! வல்லவள்! நாலும் தெரிந்தவள்! பொறுமைல பூமா தேவி! எறுமைல பாமா தேவி! கையெழுத்து மணி மணி! பெண்கள் மெச்சும் தங்கமணி!னு கலர் கலரா அள்ளி விட்டதை எல்லாம் நாங்க ஒன்னும் கவனிக்காம இல்லை!..:P சின்னது அடாவடினு சொன்னதுக்கு அவங்க வந்து ஒன்று இரண்டு என்று வரிசை'படுத்தி' உங்களை பாடுவார்...:)

@ தா.தலைவி - //takkudu matiriye slokamelam polanthu katreengale?// நீங்களும் ஓசி பேப்பர் படிக்கர குரூப்பா...:) இந்த இடத்துக்கு "த்ரயம்பகம் யஜாமஹே!" சுலோகம் தான் நன்னா பொருந்தி வரும்!

Kunthavai said...

பாட்டிக்கு என்னோட வாழ்த்துக்களை சொல்லிடுங்க.
ரெம்ப அருமையான மலரும் நினைவுகள் புவனா. இதை வாசித்தவுடன் கொஞ்சம் அதிகமாகவே பொறாமை வந்துவிட்டது உங்கள் மேல். :)

கீதா said...

அருமையான தாத்தா பாட்டிக்கு என் வாழ்த்துகள். உங்கள் பாட்டியைப் பற்றிச் சொன்னதும் என் அம்மாச்சியின் நினைவு வந்துவிட்டது. பெற்றோர்களைப் பெற்றவர்களின் அன்பை அனுபவிக்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்தாம். மனம் தொட்ட பதிவு புவனா.

Porkodi said...

தெரியாம அடுத்த எபிசோடுல முடிக்கறோம்னு சொல்லிட்டு இப்ப எப்படி முடிக்கறதுன்னு தெரியாம முழிக்கறீங்களாக்கா.. பரவாயில்லை எழுதின வரைக்குமாவது போட்டுத் தொலைக்க‌வும்.

நிஜாம் என் பெயர் said...

நிறைய விஷயத்தை ஞாபகம் வச்சு இருக்கீங்க.

நல்லா இருக்கு
நல்லா எழுதுறிங்க ..

ரொம்ப touchinga எழுதி இருகிறதால , எதுவும் கலாயிக்க தோனல..
இருந்தாலும்
உங்களை ஒரு பெண் "சுஜாதா" ன்னு சொல்லலாம் போல தெரியுது. (இது பாராட்டு தானுங்கோ!!)

பையன்களக்கு இது மாதிரி சான்ஸ் ரொம்ப அமையுறதுள்ள.
நானெல்லாம் 12 வருஷமா boardin school , காலேஜ் , job ன்னு நாடோடியா திரியுரேன்
கொடுத்து வச்சவுங்க நீங்க.
பொறமைன்னு கூட வச்சுக்கலாம் ..
சும்மாவா சொன்னங்க மகளிராய் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும்ன்னு.

அப்புறம் இன்னிக்கு செவ்வாய் கிழமை ,
இன்னும் வடை வரல.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ருக்மணி பாட்டிக்கும், ஸ்ரீனி தாத்தாவுக்கும், கடவுள் நீண்ட ஆயுளையும், ஆரோக்யத்தையும் தரணும்னு வேண்டிக்கிறேன்.. அழகான பெயர் பொருத்தம் தான்.

நெகிழ்ச்சியான பகிர்வு. நன்றி புவனா. :)

பாட்டியின் பிறந்த நாளைக்கு, அவர்களின் ஆசீர்வாதங்களை வேண்டுகிறேன்.

vinu said...

where is jillunu oru kaathal????????

siva said...

ருக்மணி பாட்டிக்கும், ஸ்ரீனி தாத்தாவுக்கும், கடவுள் நீண்ட ஆயுளையும், ஆரோக்யத்தையும் தரணும்னு வேண்டிக்கிறேன்.. அழகான பெயர் பொருத்தம் தான்.

நெகிழ்ச்சியான பகிர்வு. நன்றி புவனா. :)

பாட்டியின் பிறந்த நாளைக்கு, அவர்களின் ஆசீர்வாதங்களை வேண்டுகிறேன்.
//

nanum nanum..vendukiren..paati aasirvatham panunga unga peran sivakutiya..

siva said...

தெரியாம அடுத்த எபிசோடுல முடிக்கறோம்னு சொல்லிட்டு இப்ப எப்படி முடிக்கறதுன்னு தெரியாம முழிக்கறீங்களாக்கா.. பரவாயில்லை எழுதின வரைக்குமாவது போட்டுத் தொலைக்க‌வும்.
//valimolikiren...:)

siva said...

நிறைய விஷயத்தை ஞாபகம் வச்சு இருக்கீங்க...neenga enna saapdirenga?niygaga sakathikku??

நல்லா இருக்கு
நல்லா எழுதுறிங்க ..valimolikiren...

ரொம்ப touchinga எழுதி இருகிறதால , எதுவும் கலாயிக்க தோனல..
இருந்தாலும்
உங்களை ஒரு பெண் "சுஜாதா" ன்னு சொல்லலாம் போல தெரியுது. (இது பாராட்டு தானுங்கோ!!)

பையன்களக்கு இது மாதிரி சான்ஸ் ரொம்ப அமையுறதுள்ள. ---same blood...mee to same.
நானெல்லாம் school , காலேஜ் , job ன்னு நாடோடியா திரியுரேன்
கொடுத்து வச்சவுங்க நீங்க.
பொறமைன்னு கூட வச்சுக்கலாம் ....enaku poramai ellai..oru santhosam..enakum oru thaata paathi erunthatha ninchukiren..:)

siva said...

படிச்சு தனியா சிரிச்சு தாங்க முடியல போங்க. வேலையில எல்லாம் ஒரு மாதிரி பார்த்தாங்கன்னு வையுங்களேன்! என்ன ரொம்ப முத்திடிச்சுன்னு
நெனச்சிருப்பாங்க///

appavi ungalala paarunga evlo perai eppadi aakiranga..
eppadi eruntha evanga eppo eppdi aagitangaley...

vaalga valamudan..

siva said...

49...

siva said...

50....hey vadai enakuthan...

priya.r said...

என்ன ஏதாவது பிளாக்கர் கிட்டே சொல்லி வைச்சுட்டயா?

உன்ர ப்ளாக் ரெண்டு நாளா உள்ளே விட மாட்டுக்குது

இப்போ வல்லிமா ப்ளாக் போய் அங்கே இருந்து ஜம்ப் பண்ணி வந்து இருக்கேன்

குதிக்கும் போது காலுக்கு ஏதாவது ஆகி இருந்தா என்ர நிலைமையை கொஞ்சம் யோசித்து பாரு புவனா :))))))))சரி சரி நம்ம பஞ்சாயத்தை அப்புறம் வைத்து கொள்வோம்

நம்ம பாட்டிம்மாவை கேட்டதா சொல்லு ;அப்படியே பொறந்த நாளுக்கு வாழ்த்தையும் சொல்லி போடு கண்ணு !

priya.r said...

//Porkodi சொன்னது…


தெரியாம அடுத்த எபிசோடுல முடிக்கறோம்னு சொல்லிட்டு இப்ப எப்படி முடிக்கறதுன்னு தெரியாம முழிக்கறீங்களாக்கா.. பரவாயில்லை எழுதின வரைக்குமாவது போட்டுத் தொலைக்க‌வும். //

நல்ல சான்ஸ் விடாதே புவனி

உன்ர டைரி யை எடுத்து பாரு ;அன்றொரு நாள் ........................................

கொடி கடைசி அத்தியாயம் போட எவ்வளவு நாள் எடுத்து இருப்பார் ;எப்படி எல்லாம் நாம் கெஞ்சி கேட்டு இருப்போம்!!

அதைவிட நீ ஒரு நாளாவது அதிகம் எடுத்து நம்ம ஊரு மரியாதையை காப்பாத்தி போடோணும் :))))))

ஆகவே அவசரபடாம நிறுத்தி நிதானமா திரும்பவும் முதல் அத்தியாயத்தில் இருந்து மீள் பதிவா ஜில்லை

போட்டா கூட தப்பே இல்லைங்கறேன் :)))))))

Vasagan said...

\பாட்டிக்கும் தாத்தாவுக்கும் இன்னும் நீண்ட ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்யமும் அருள வேணும்னு ஆண்டவனை பிராத்தித்து கொள்கிறேன்\

Nanum பிராத்தித்து கொள்கிறேன்.

சுரேகா.. said...

பாட்டிக்கு என் வணக்கங்கள்!!

அகவை எண்பது என்பது...
அவ்வளவு சுலபமில்லை என்பது..

அரிசியில் உரம் கலந்து
சாப்பிடும் அத்துனை பேருக்கும்
தெரியும் என்பது..

பாட்டிக்குத்தெரியுமா?

பாட்டி..எங்களுக்கெல்லாம்
எண்பது என்பது
ஒரு எண் மட்டும்தான்..!

மீண்டும் வணக்கங்கள்!
வாழ்த்துங்கள்!

Thanai thalaivi said...

தங்கமணி அவர்களே ! தங்கள் தாத்தா பாட்டிக்கு எங்கள் நமஸ்காரங்கள். நல்ல தாத்தா பாட்டியை அடைந்தவர்கள் பாக்யசாலிகள். சென்னையில் ஒரு ப்ளே ஸ்கூல் க்கு சென்றிருந்தேன். அங்கு வீட்டில் பார்த்துகொள்ள ஆள் இல்லாமல் இரண்டு வயதிலேயே குழந்தைகள் கொண்டுவிட படுகிறார்கள். பல குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி இருந்தும் அவர்கள் குழந்தைகளை பாரமாக நினைகிறார்கள். என் மனம் கனத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை. நீ வேலையை விட்டுவிட்டு உன் குழந்தையை பார்த்துகொள், நான் ஏன் பார்த்துகொள்ள வேண்டும் என்று ஒரு அம்மா தன் மகளிடம் சொன்னாராம். நல்ல பதிவில் இந்த செய்தியை வெளியிட்டிற்கு மன்னிக்கவும்.

புவனேஸ்வரி மகாத்மியம் முதல் பகுதி வெளியிட்டுவிட்டேன். முடிந்தால் ப்ளாக் பக்கம் வந்துவிட்டு போகவும்.

நன்றி.

அப்பாதுரை said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள். (சைடுல தங்கையை விட நீங்க உசத்தினு நீங்களே சொல்லிக்கிட்டாலும் :)

மனதைப் பிசையும் நெகிழ்ச்சி. உங்கள் பாட்டியிடமிருந்து நீங்கள் கற்க/கடைபிடிக்க விரும்பும் ஒன்று உண்டா?

Anonymous said...

Hello Madam,
Today is Sunday. FYI the new week has already started. Where is the story?
Ana

Anonymous said...

//ஆகவே அவசரபடாம நிறுத்தி நிதானமா திரும்பவும் முதல் அத்தியாயத்தில் இருந்து மீள் பதிவா ஜில்லை

போட்டா கூட தப்பே இல்லைங்கறேன் :))))))) //
Why such kollaiveri acca? Grrrrrrrrrr

Porkodi said...

Priya akka, naanga sonna thedhikku onnu illa 4-5 episode pottom.. padichavan evanukum innum mayakkam theliyale, jeikradhu enna, kitta kooda vara mudiyadh.. :D

vinu said...

where is climaxxxxxxxxxxxxxxx

vinu said...

where where where whereeeeeeeeeeeeeee

Anonymous said...

Where is the climaxa ! where is thangamaninnu kelungappa.

vinu said...

sari ok understood...........

where is thangamanii???????????

A and A said...

Are you ok?

Kriishvp said...

வார்த்தை தவறிவிட்டாய் சகோதரி! ஜில்லுனு ஒரு காதல் கடைசி பகுதி எப்போ வரும்?

வரும்....... ஆனா வராதா....................

ஆவலுடன் வெயிட்டிங் சகோ!

Thanai thalaivi said...

தங்கமணி அவர்களே !

எங்கே போய் விட்டீர்கள் ? பதினைந்து நாட்களுக்கு மேலாகிவிட்டதே தங்கள் பதிவு வந்து.

அப்பாவி தங்கமணி said...

@ கவி அழகன் - ரெம்ப நன்றிங்க

@ சந்ரு - நன்றிங்க

@ Mahi - ஆமாம் மகி... அழகிய மலரும் நினைவுகள்... நன்றிங்க

@ kggouthaman - நன்றிங்க கௌதமன் சார்...


@ BalajiVenkat - கண்டிப்பா பாலாஜி... தேங்க்ஸ் bro ..:)

@ அனாமிகா துவாரகன் - எனக்கு 56 உனக்கு எவ்ளோனு கணக்கு போடு...:) Thanks for detail comments...:)

@ முனியாண்டி - நன்றிங்க

@ அனாமிகா துவாரகன் - தாத்தாவுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

@ இராஜராஜேஸ்வரி - ரெம்ப நன்றிங்க அம்மா..


@ வெண்கல கடை - நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ முத்துலெட்சுமி/muthuletchumi - ரெம்ப நன்றிங்க... பாட்டிகளுக்கு பேத்திகள் எப்பவும் ஸ்பெஷல் தானேங்க...:)


@ வெங்கட் நாகராஜ் - ரெம்ப நன்றிங்க

@ RAMVI - ரெம்ப ரெம்ப நன்றிங்க வேண்டிக்கிட்டதுக்கு

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா

@ raji - ஹா ஹா... நம்பணும்.. மீ பொறுமை அமைதி அப்பாவி எல்லாமும்...நன்றிங்க

@ வை.கோபாலகிருஷ்ணன் - வாவ்.. உங்கள் அக்கா குடும்பம் பெரிய குடும்பம் தான் போல... நல்லா இருக்கும் எல்லாரும் சேரும் போது...பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க...

@ பெயரில்லா - ஹா ஹா... அப்பாவை கூட கன்வின்ஸ் பண்ணலாம்... ஆனா.... :)) நன்றிங்க

@ பிரதீபா - பதிவு போடு தீபா... படிக்க waiting .... நன்றி

@ கோவை2தில்லி - நன்றிங்க ஆதி... தாத்தா பாட்டிகிட்ட சொல்றேன்...:)


@ Rathnavel - ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ திவா - நன்றிங்க திவாண்ணா...:)


@ RVS - நன்றிங்க RVS


@ ஸ்ரீராம். - நன்றிங்க ஸ்ரீராம் சார்

@ தெய்வசுகந்தி - நன்றிங்க சுகந்தி

@ En Samaiyal - ஹா ஹா... அழுகையும் சிரிப்பும் கலந்து நடக்குது போல அங்க... நன்றிங்க...:)

@ RAZIN ABDUL RAHMAN - ரெம்ப நன்றிங்க... நாள் வேகமாத்தான் ஓடுதுங்க...

@ A and A - ரெம்ப நன்றிங்க

@ dheekshu - வாவ்... ரெம்ப அழகான ஒரு விஷயம் சொன்னீங்க... உங்க பாட்டிக்கும் நீண்ட ஆயுசுக்கு வேண்டிக்கறேங்க... நன்றிங்க தீக்ஷு...:)


@ ANaND - நன்றிங்க ஆனந்த்

@ Kriishvp - நன்றிங்க சகோதரி

அப்பாவி தங்கமணி said...

@ Priyaram - ரெம்ப நன்றிங்க ப்ரியா...கண்டிப்பா சொல்றேங்க..

@ அமைதிச்சாரல் - உங்க அம்மாச்சி பத்தி போஸ்ட் போடுங்க...படிக்க waiting ... நன்றிங்க அக்கா..:)

@ Thanai thalaivi - ஆஹா... இந்த சுலோகம் விசயத்துல எல்லாம் தக்குடு மலைனா நான் மடு'வாச்சே...:) ஊட்டி போனீங்களா...அப்ப எங்க ஊர் வழியாத்தான் போய் இருப்பீங்கன்னு நினைக்கிறேன்... போஸ்டா போடுங்க போடுங்க... ஆஹா... இப்படி பல்பு குடுத்துட்டீங்களே... ஹ்ம்ம்... சரி விடுங்க.. இன்னைக்கி கோட்டா உங்ககிட்டனு இருக்கு போல...:))

@ தக்குடு - ஹா ஹா... உண்மைதானே சொன்னேன்... சின்னவ அவளோட சின்னவ கூட பாடா பட்டுட்டு இருக்கா... இங்க வந்து பாடவெல்லாம் நேரமில்லை...ஹா ஹா...:)

@ Kunthavai - ரெம்ப நன்றிங்க குந்தவை...என் மேல பொறாமையா? ஆஹா...:))

@ கீதா - ரெம்ப நன்றிங்க கீதா.. .ரெம்ப சரியா சொன்னீங்க

@ Porkodi - என்ன ஒரு அன்பு...என்ன ஒரு பாசம்... அவ்வ்வ்வவ்... போட்டுட்டேன்... போய் மொதல்ல படிச்சுட்டு கமெண்ட் போடணும்...சும்மா போடுங்கனு கேட்டுட்டு காணாம போற வேலை எல்லாம் வேண்டாம்...:))

@ நிஜாம் என் பெயர் - ஆஹா...பெண் சுஜாதாவா? வேண்டாங்க... எறங்கி வந்து அடிச்சுட போறார்...:))) அது வேணா உண்மை... girls are lucky ... இன்னிக்கி தானுங்க ஜில்லு போஸ்ட் போட்டு இருக்கேன்... கொஞ்சம் பிஸி...சோ லேட் போஸ்ட்...:))

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - ரெம்ப நன்றிங்க ஆனந்தி :)

அப்பாவி தங்கமணி said...

@ vinu - இதோ போட்டாச்... படிச்சுட்டு வந்து பதில் சொல்லுங்க பாப்போம்...:)

@ siva - பாட்டிகிட்ட சொல்லிடறேன்.... வழி மொழியராங்களாம், என்னா ஒரு வில்லத்தனம்? ஹ்ம்ம்... சக்திக்கா? தினம் ஒரு பாறாங்கல்லு சாப்பிடறேன்... :)) இன்னொரு வாட்டி நீங்க வழி மொழிஞ்சா நான் இட்லி பார்சல் அனுப்புவேன்...:) ஹா ஹா ... ஒகே 50 உங்களுக்கே...:))

@ priya.r - நிஜமா பிளாக்கர் உள்ள விடலயா? (பிளாக்கர் வாழ்க வாழ்க...:)) அது சரி...குதிக்கறதுக்கு முன்னாடி என் ப்ளாக் நிலமைய யோசிக்கரதில்லையா... பாருங்க இப்போ எவ்ளோ ரிப்பேர் வேலைனு ...:)) ஹா ஹா ஹா...சூப்பர் ப்ரியாக்கா...பொற்கொடிய பத்தி நல்ல பாயிண்ட் எடுத்து குடுத்து இருக்கீங்க... ஆனா மொதல்ல இருந்து போட்டா எனக்கே உங்கள பாத்தா பாவமா இருக்கு...வேண்டாம் விடுங்க...:)

@ Vasagan - நன்றிங்க அண்ணா..:)

@ சுரேகா.. - வாவ்.. கவிதையில் கருத்து சொன்னதுக்கு ரெம்ப நன்றிங்க... அதுவும் மறுக்க முடியாத கருத்து... நன்றிங்க

@ Thanai thalaivi - கொடுமயாத்தாங்க இருக்கு உலக நடப்பு...என்ன செய்ய? ஓ...முதல் பகுதி போட்டாச்சா? இதோ வரேன்... நன்றிங்க ...:)


@ அப்பாதுரை - ரெம்ப நன்றிங்க... பாட்டிகிட்ட இருந்து கடைபிடிக்க விரும்புவதுன்னா பெரிய லிஸ்டே சொல்லணும்ங்க...;)


@ பெயரில்லா - ஹா ஹா... போட்டாச்...:)


@ Porkodi - அது வேணா நிஜம்...எனக்கே தெளிய நாலு நாளாச்சு...:))

அப்பாவி தங்கமணி said...

@ vinu - இதோ போட்டாச்சு... :)))

@ பெயரில்லா - நானும் கிளைமாக்ஸ்'ம் எல்லாரும் இங்க தானுங்க இருக்கோம்...:))

@ vinu - ஹா ஹா... இங்க தான் இருக்கேன்...:)

@ A and A - நல்லா இருக்கேங்க... கொஞ்சம் பிஸி அதான் லேட் போஸ்ட்... கேட்டதுக்கு ரெம்ப நன்றிங்க...:)

@ Kriishvp - என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள் சகோதரி....:)) இதோ போட்டுட்டேன் ஜில்லு... நீங்க போய் சல்லுனு படிங்க பாப்போம்... உங்கள் ஆவலுக்கு மிக்க நன்றி ...:)

@Thanai thalaivi - கொஞ்சம் வேலை அதிகம்ங்க...அதான் போஸ்ட் போட முடியல... ரெம்ப நன்றிங்க காணோம்னு கேட்டதுக்கு...:)

புதியஜீவன் said...

கொஞ்சம் பெருசா இருக்கே படிக்கனுமா நினைத்தேன் படிக்க ஆரம்பித்த பின்னர் எப்போ முடிந்தது என்று தெரியவில்லை. யதார்த்தமா பேசியே கண்கலங்க வச்சிட்டிங்க.


பாட்டிக்கும் தாத்தாவுக்கும் இன்னும் நீண்ட ஆயுளையும், நல்ல உடல் ஆரோக்யமும் அருள வேணும்னு ஆண்டவனை பிராத்தித்து கொள்கிறேன்

அப்பாவி தங்கமணி said...

@ புதியஜீவன் - மிக்க நன்றிங்க...

raji venkat said...

எனது பதிவில் தங்களை தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்

http://suharaji.blogspot.com/2011/07/16-x-3.html

அப்பாவி தங்கமணி said...

@ Raji venkat - தேங்க்ஸ் ராஜி'க்கா... கண்டிப்பா எழுதறேன் ...:)

Post a Comment