Thursday, July 21, 2011

ஜில்லுனு ஒரு காதல்... (இறுதி பகுதி)

"ஒகே மீரா, நீ டயர்டா இருப்ப... வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடு... நாளைக்கி பாக்கலாம்...பை" என்றான் சதீஷ்
"ம்...ஒகே பை" என்றாள் மீரா

"சரி மீரா... அப்புறம் பாக்கலாம்... இன்னும் ரெண்டு மாசம் இங்க தானே இருப்பே... உன்கிட்ட நெறைய பேசணும், கேக்கணும்" என குறும்பாய் சிரித்தாள் காயத்ரி

மீராவின் முகம் சட்டென வாடியது. அதை கவனித்த சதீஷ் "ஏய்... ஆன்ட்டி கோவில் போகணும்னு சொன்னாங்க இல்ல... கிளம்பலாம் காயத்ரி... அப்புறம் நிதானமா அரட்டை அடிப்பயாம்" என விளையாட்டாய் சொல்வது போலவே காயத்ரியிடம் "மேலும் எதுவும் பேசாதே" என்பது போல் கண்களால் செய்தி சொன்னான்

ஒரு கணம் மீராவை யோசனையாய் பார்த்த காயத்ரி "ஒகே மீரா பை.... வரோம் ஆன்ட்டி வரோம் அங்கிள்" என மீராவின் பெற்றோரிடமும் விடை பெற்று கிளம்பினர்

மீராவின் கண் பார்வையில் இருந்து மறைந்ததுமே "என்னாச்சு சதீஷ்?" என்றாள் காயத்ரி

"ஏதோ பிரச்சனயோனு தோணுது காயு... மீரா இயல்பா இல்ல. ஸ்டீவ் பத்தி தெரிஞ்ச மாதிரி நீ காட்டிக்காதே. நான் அவகிட்ட நாளைக்கு பேசிட்டு சொல்றேன்" என்ற சதீஷின் முகத்தில் கவலை தென்படவும்

"ஒண்ணும் இருக்காது சதீஷ், கவலைப்படாத. அப்படி இருந்தாலும் எதாச்சும் சின்ன சண்டையா தான் இருக்கும். நாம போடாத சண்டையா? ஒரே நாளுல மறுபடி கொஞ்சிப்போமே" என அவன் கவலையை திசை திருப்பும் பொருட்டு கேலியாய் பேச்சை மாற்றினாள்

அதை உணர்ந்தவன் போல் "அதுவும் சரி தான்" என சிரித்தான் சதீஷ்

********************************************************
மறுநாள் மீராவின் வீட்டிற்கு சென்றான் சதீஷ்

"வா சதீஷ்... காயத்ரி வரலையா?" என விசாரித்தார் மீராவின் அன்னை

"இல்ல ஆன்ட்டி, அவளுக்கு க்ளாஸ் இருக்குனு போய்ட்டா" என்றவன் "எங்க ஆன்ட்டி மீராவ காணோம்? மேடம் ரூம்குள்ள எல்லாம் அடங்கி இருக்க மாட்டாளே.. வெளிய போய் இருக்காளா?" என கேட்டவன், அந்த அன்னையின் முகம் மாறிய விதத்தில் ஏதோ சரியில்லை என உணர்ந்தவனாய் "என்னாச்சு ஆன்ட்டி?" என்றான்

"என்னனு தெரியல சதீஷ், ஆனா மீரா முன்னபோல இல்லனு தோணுது. எப்பவும் சிரிப்பும் கலகலப்புமா இருக்கற சுபாவமே மாறி போன மாதிரி இருக்கு. அங்க ஏதாவது பிரச்சனையா சதீஷ்? உங்கிட்ட எல்லாமும் சொல்லுவாளே" என கேட்டார்

என்னவென்று சொல்வது என ஒரு கணம் தயங்கியவன் "அப்படி ஒண்ணும் இல்ல ஆன்ட்டி, அவ்ளோ தூரம் ட்ராவல் பண்ணின டயர்ட்னு நினைக்கிறேன். நீங்க மனச போட்டு குழப்பிக்காதீங்க" என பெற்றவளின் கலக்கத்தை போக்க முயன்றான்

"நான் கூட மொதல்ல அப்படித்தான் நினைச்சேன் சதீஷ். நேத்து நைட் நடுவுல முழிப்பு வந்ததுனு தண்ணி குடிக்கலாம்னு எழுந்தேன். மீரா ஹால்ல உக்காந்துட்டு இருந்தா. என்னை பாத்ததும் அவசரமா கண்ண தொடச்சுகிட்டா. கேட்டதுக்கு ஒண்ணுமில்லனு சாதிச்சா... ஆனா, எதையோ பறிகுடுத்தவ மாதிரி இருக்கா சதீஷ். எனக்கு மனசே சரி இல்ல" என்றவரின் கண்ணில் நீர் துளிர்த்தது

"ஐயோ... என்ன ஆன்ட்டி நீங்க? இதுக்கு போய் டென்ஷன் ஆகிட்டு. அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. உங்க சமாதானத்துக்காக வேணா நான் மீராகிட்ட பேசி பாக்கறேன் சரியா" என ஆறுதல்படுத்த முயன்றான்

"சரிப்பா... மீரா மேல ரூம்ல இருக்கா, நீங்க பேசிட்டு இருங்க. இன்னிக்கி நீ லஞ்ச் சாபிட்டுட்டு தான் போகணும். நான் மாலதிம்மாகிட்ட உனக்கு பிடிச்சத செய்ய சொல்லிடறேன்" என்றவாறே சமையல் அறை நோக்கி சென்றாள் மீராவின் அன்னை ராஜேஸ்வரி

சிறு வயது முதலே அந்த வீட்டின் சொந்த பிள்ளை போல் நடத்தப்படுபவன் சதீஷ். சமையல் செய்யும் மாலதி அம்மா முதல் தோட்டவேலை செய்யும் கணேஷ் வரை அனைத்து வேலையாட்களும் அவனை நன்கு அறிந்தவர்கள் தான்
மீராவின் அறைக்கதவை தட்டியவன் பதில் வராமல் போக "மீரா..." என அழைத்தவாறே கதவை திறந்தான். உள்ளே அவள் இல்லாததால், அவள் அறையை சேர்ந்தது போல் இருந்த பால்கனியை திறந்தான்

அங்கு ஒரு புறம் போடப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் மீரா. சதீஷ் பின்புறம் வந்து நின்றதை கூட உணராதவள் போல், ஏதோ யோசனையில் இலக்கின்றி பார்த்து கொண்டு இருந்தவளை கண்டதும் சதீஷின் மனம் துணுக்குற்றது

"மீரா.." என அழைக்க அவளிடம் சலனம் இருக்கவில்லை. பதறியவனாய்

"மீரா..." என அவள் கையை அழுத்தினான்

"அஹ்..." என பதறி எழுந்தாள்

"என்னாச்சு மீரா?" என்றவன் கேட்க

"அ...அது..சதீஷ்... அப்படியே தூங்கிட்டேன் போல இருக்கு" என்றாள்

"கண்ணை திறந்துகிட்டே தூங்கறதுக்கு புதுசா எதுனா கோர்ஸ் எடுத்தியா?" என கேலி போல் பேசி அவளது மனநிலையை மாற்ற முயன்றான் சதீஷ்

"அ...இல்ல. தெரில" என தடுமாறினாள்

சதீஷ் எதுவும் பேசாமல் அவளை பார்த்தான். அந்த பார்வையே பல கேள்விகளை கேட்டதை உணர்ந்த மீரா, அதை தவிர்க்க முயல்பவள் போல்

"காயத்ரி வரலையா?" என பேச்சை மாற்றினாள்

அதற்கு பதில் கூறாமல் தன் கேள்வியான பார்வையை அவள் மீதிருந்து அகற்றாமல் நின்றான் சதீஷ்

"ம்...என்ன சதீஷ்? காயத்ரி வரலையானு கேட்டா பதிலே சொல்லாம நிக்கற?" என்றாள் மீரா, இயல்பாய் பேச முயன்றபடி

ஆனால் அவனோ "என்னாச்சு மீரா? " என்றான் மீண்டும்

"எ..என்ன? எத பத்தி கேக்கற?" என பார்வையை வேறு புறம் திருப்பினாள்

"நான் எத பத்தி கேக்கறேன்னு உனக்கு தெரியும் மீரா" என்றான் உறுதியான குரலில்

"இல்ல... எனக்கு தெரில" என்றாள் அவனை பாராமல்

"சரி... நேரடியாவே கேக்கறேன். ஸ்டீவ்கூட என்ன பிரச்சன?" என்ற கேள்விக்கு மீராவிடமிருந்து பதிலேதும் வரவில்லை

ஆனால் அதுவே என்ன நடந்திருக்கும் என யூகிக்க சதீஷ்'க்கு போதுமானதாய் இருந்தது. "அப்போதே சொன்னேனே" என தொண்டை வரை வந்த வார்த்தைகளை கட்டுப்படுத்தி நிறுத்தினான்

ஏற்கனவே அடிப்பட்ட தோற்றத்தில் இருப்பவளிடம் இதை கூறி குற்றஉணர்வில் ஆழ்த்த மனமில்லாதவனாய் "விடு மீரா... எல்லாம் நல்லதுக்கு தான்னு நினைச்சுக்கோ" என்றான் ஆறுதலாய்

ஆனால் அந்த ஆறுதல் வார்த்தைகள் மீராவை இன்னும் வேதனையுற செய்தது. சதீஷ் தன்னை திட்டி இருந்தால் கூட பரவாயில்லை என எண்ணினாள் மீரா

தன் நலனில் அக்கறை கொண்டு அவன் பேசிய போதெல்லாம் அவனை உதாசீனம் செய்தேனே என குற்றஉணர்வில் துவண்டாள்

அவளின் அந்த தோற்றம் வேதனையை தர, உன் நண்பன் நான் இருக்கிறேன் என உணர்த்துவது போல் அவள் கையை தன் கைகளுக்குள் வைத்து அழுத்தினான் சதீஷ்

அந்த செய்கை மீராவை முற்றிலும் பலவீனமாக்கியது. அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் அவன் கைகளில் முகம் புதைத்து அழுதாள்

அவள் அழுகையை காண சகியாத போதும், சற்று அழுது சமாதானமாகட்டும் என நினைத்தவன் போல் அவள் தலையை ஆறுதலாய் வருடி நின்றான் சதீஷ்

ஆனால் அழுகையை நிறுத்தும் எண்ணமே இல்லாதவள் போல் மீரா கண்ணீரை நிறுத்தும் வழி அறியாமல் இருக்க "என்ன மீரா இது? இங்க பாரு... ப்ளீஸ் மீரா... மொதல்ல அழறத நிறுத்து" என்றான்

மெல்ல தலை உயர்த்தியவள் "எல்லாம் முடிஞ்சு போச்சு... எல்லாமே..." என்றாள் விசும்பலினூடே

"ஷ்... இட்ஸ் ஒகே... முடிஞ்சதை நினைச்சு மனச போட்டு குழப்பிக்காதே. இங்க பாரு மீரா. தகுதி இல்லாத ஒருத்தனுக்காக உன்னையும் வருத்திகிட்டு சுத்தி இருக்கரவங்களையும் உன்னை பாத்து வருத்தப்பட வெக்கறது சரியில்ல. எழுந்திரு, பேஸ் வாஷ் பண்ணிட்டு வா. கீழ போலாம்" என்றான்

இவள் இப்படி வருந்தும் படி அந்த ஸ்டீவ் என்ன செய்து தொலைத்தான் என்ற கோபத்தில் நடந்ததை அறிந்து கொள்ள மனம் துடித்த போதும், அது இதற்கான தருணமல்ல என நினைத்தான் சதீஷ்

ஏற்கனவே வருத்தத்தில் இருப்பவளை, அவள் மறக்க வேண்டிய ஒரு விடயத்தை பற்றி பேச செய்து மேலும் கஷ்டப்படுத்த விருப்பமில்லாமல் மௌனமானான்

என்னதான் ஸ்டீவின் மீது கோபம் இருந்த போதும், சதீஷ் ஸ்டீவை "தகுதி இல்லாதவன்" என்ற போது மீராவிற்கு வருத்தமானது. சற்றும் யோசிக்காமல் ஸ்டீவ் தன்னை உயிர் நோக பேசினான், தனக்கோ அவனை பற்றி தவறாய் ஒரு சொல் கேட்க பொறுக்கவில்லையே என மீண்டும் அதே நினைவில் உழன்றாள்

மீண்டும் கண்ணில் நீர் துளிர்க்க நின்றவளை காண சகியாதவனாய் "மீரா... சொல்றத கேளு, ஒருத்தர நினைச்சு வருத்தப்படக்கூட அவங்க அதுக்கு தகுதியானவங்களா இருக்கணும்....நான்..."

"ப்ளீஸ் சதீஷ்... அப்படி சொல்லாத... ப்ளீஸ்" என அவனை இடைமறித்தாள் மீரா

அவளின் அந்த செய்கை சதீஷுக்கு கோபத்தை தூண்டியது. "அவன் உன்னை இத்தனை அழவெச்சும் இன்னுமா....? ச்சே, என்ன பைத்தியக்காரத்தனம் மீரா இது?" என கட்டுப்படுத்த முயன்றும் கேட்டுவிட்டான்

அவள் பதில் பேச இயலாமல் குறுகி நின்ற தோற்றம் சதீஷின் கோபத்தை காணாமல் போக செய்தது "சாரி மீரா... நான்..." அதற்கு மேல் என்ன சொல்வதென தோன்றாமல் சற்று நிறுத்தியவன், இன்னும் குரலை தாழ்த்தி

"இட்ஸ் ஒகே விடும்மா... பாஸ்ட் இஸ் பாஸ்ட்... கீழ போலாம் வா... ஆன்ட்டி காணோம்னு பாத்துட்டு இருப்பாங்க"

********************************************************
"வா சதீஷ். காயத்ரி வரலியா?" என மீராவின் தந்தை கிருஷ்ணமூர்த்தி கேட்க

"ஆஹா...என்ன எல்லாரும் சொல்லி வெச்ச மாதிரி ஒரே கேள்வி... இன்னும் கொஞ்ச நாள் போனா காயத்ரி இல்லாம இங்க உள்ள வர முடியாதுனு சட்டம் வரும் போல இருக்கே அங்கிள்... அப்படியா மீரா?" என மீராவை இயல்பாக்கும் நோக்கத்துடன் அவளையும் பேச்சில் இழுத்தான் சதீஷ்

"ஹா ஹா... அப்படி எல்லாம் இல்ல கண்ணா... கனடால இருந்து வந்ததுல இருந்து உன்னை தனியாவே பாக்க முடியலையேனு கேட்டேன்" என்றார் அவரும் கேலியாய்

"ஹ்ம்ம்... அது கரெக்ட் தான் அங்கிள்... அதான் இன்னைக்கி பிளான் பண்ணி அவகிட்ட இருந்து எஸ்கேப் ஆய்ட்டேன்" என சிரித்தான் சதீஷ்

"இரு இரு... மறுபடி காயத்ரிய பாக்கறப்ப சொல்றேன் இதை" என மிரட்டல் போல் மீராவின் அம்மா கூற

"ஐயையோ... வேண்டாம் ஆன்ட்டி... நான் முழுசா கனடா போய் சேரணும்" என சதீஷ் பயந்தவன் போல் பாவனை செய்ய, எல்லாரும் சிரித்தனர்

மீரா முன் போல் உளமார சிரிக்கவில்லை என்றபோதும் மெல்ல முறுவலித்தாள். அதை கண்ட மீராவின் அம்மா அருகில் நின்ற மகளை மகிழ்வுடன் தோளோடு அணைத்து கொண்டார்

"சரி சரி... சாப்பிடலாம் வாங்க. எல்லாம் ரெடியா இருக்கு" என மீராவின் அம்மா சொல்ல எல்லாரும் சாப்பிட சென்றனர்

"என்ன ஆன்ட்டி... முன்னயெல்லாம் அங்கிள்'க்கு சாப்பாடு ஆபீஸ்க்கு தானே போகும்... இப்ப லஞ்ச்க்கு வீட்டுக்கு வந்துடறார் போல இருக்கே"

"ஆமாம் சதீஷ்... மீரா கனடா போனதுல இருந்து எனக்கு ஒருத்தியே நாள் பூரா வீட்டுல இருக்கற மாதிரி கஷ்டமா இருந்தது... அதான் இப்படி மாத்தியாச்சு" என்றார் மீராவின் அன்னை

"தனியாவா? வீட்டுல நாலு வேலைக்காரங்க இருக்காங்களே ஆன்ட்டி... அங்கிள்'ஐ வீட்டுக்கு சாப்பிட வரவெக்க கிடைச்ச சான்சை யூஸ் பண்ணிட்டீங்கனு சொல்லுங்க" என சதீஷ் கேலி செய்ய

"ஹா ஹா... சரியா சொன்ன சதீஷ்... ஆனா பொண்டாட்டி பரிமாற சாப்பிடரதுலையும் ஒரு சுகம் இருக்கு தானே... சரினு நானும் வந்துடறேன்" என கிருஷ்ணமூர்த்தி சதீஷின் கேலிக்கு ஈடு கொடுப்பது போல் பேசினார்

"சும்மா இருங்க..." என கணவனை பொய்யாய் கோபித்து கொண்டாள் ராஜேஸ்வரி

பெற்றோர் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்பும் அன்நோயோன்யமும் கண்ட மீராவிற்கு ஸ்டீவின் முகம் கண் முன் வந்தது. நாமும் அப்படி வாழ்வோமென நினைத்தேனே, இப்படி எல்லாம் கனவாய் போக செய்தாயே பாவி என நினைத்தவளுக்கு அதற்கு மேல் சாப்பிட இயலாமல் தொண்டை அடைத்தது

எழப்போனவளை தடுத்த அவள் அம்மா "என்ன மீரா இது? நாலு கவளம் கூட உள்ள போகல... இப்படி சாப்ட்டா என்ன தெம்பு இருக்கும். இரு, கொஞ்சம் ரசம் போட்டுக்கோ" என பரிமாற முயல

"இல்லம்மா... போதும்...பசி இல்ல" என தடுத்தாள் மீரா

"என்ன கண்ணம்மா பீட்சா பர்கர்னு அந்த ஊரு சாப்பாட்டுக்கு நாக்கு பழகிடுச்சு போல இருக்கே... டிரைவர்கிட்ட சொல்லி அத வேணா வாங்கிட்டு வர சொல்லவா?" என மீராவின் தந்தை கேட்க

"இல்லப்பா... இன்னும் ஜெட் லேக் இருக்கறதால சரியா தூங்காம சாப்பிடவே தோணல...ரெண்டு மூணு நாளுல சரி ஆய்டும்" என சமாளித்தாள்

"இட்ஸ் ஒகே மீரா... தயிர் சாதம் மட்டுமாச்சும் சாப்பிடு" என கட்டாயப்படுத்தி அவளை உண்ண செய்தான் சதீஷ்

சாப்பிட்டானதும் நால்வரும் முன் அறையில் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்

"சதீஷ், உங்க சம்மர் ப்ராஜெக்ட் எப்போ ஆரம்பிக்குது?"

"நெக்ஸ்ட் வீக் அங்கிள்..." என்றவன் மீராவின் புறம் திரும்பி "மீரா, மண்டே மார்னிங் பத்து மணிக்கு நாம அந்த கம்பெனிக்கு போகணும். ரெடியா இரு சரியா" என சதீஷ் கூற, மீரா பதில் பேசாமல் மௌனமாய் இருந்தாள்

மற்ற மூவரின் பார்வையும் இப்போது மீராவின் மேல் நிலைத்தது. "மீரா..." என அவள் தந்தை அழைக்க

"நான்... அந்த ப்ராஜெக்ட் செய்யல" என்றாள் தயங்கிய, ஆனால் தீர்மானமான குரலில்

"ஏன் மீரா? நீ தானே அந்த டாபிக் சூஸ் பண்ணின... ஆனா, திடீர்னு இப்போ வேற கம்பெனில எப்படி....நம்ம கம்பெனில செய்யறது சரி வராதுன்னு நீ மொதலே சொல்லிட்ட" என சதீஷ் கேள்வியாய் நிறுத்த

"அது... நான் இனி கனடா போகல... கோர்ஸ் டிஸ்கண்டினியு பண்றேன்" என்றாள். சதீஷ் எதுவும் பேசாமல் அவளை பார்த்தான்

"என்ன மீராம்மா இது? ஏன் பாதில நிறுத்தற, நீ செய்வன திருந்த செய்னு சொல்றவளாச்சே" என தந்தை கேட்க

"இல்லப்பா... எனக்கு இங்க இருக்கத்தான் பிடிச்சுருக்கு" என்றாள் மெல்லிய குரலில்

அதுவரை பேசாமல் இருந்த மீராவின் அம்மா "அப்பாடா... இனி என் பொண்ணு இங்கயே இருப்பா... ரெம்ப சந்தோஷம்டா செல்லம்" என மகளை அணைத்து முத்தமிட்டாள்

ஆனால் அவள் தந்தைக்கு ஏதோ சரி இல்லையென தோன்றியது. இந்த இரண்டு நாளில் பழைய மீராவை காண இயலாதது வேறு உறுத்தியது. என்ன தான் ஏழு தலைமுறைக்கு சொத்து இருந்த போதும், அதற்கு ஒரே வாரிசு மீரா தான் என்றபோதும், மகளிடம் செல்லம் காட்டும் அளவுக்கு கண்டிப்பும் காட்டுவார் தந்தை

இருக்கும் சொத்தை கட்டி காப்பாற்ற கூட உரிய கல்வியும், திறமையும் வேணும் என நினைப்பவர். கற்ற கல்வியின் திறமையோடும் உற்ற நண்பனான சதீஷின் தந்தை ராமகிருஷ்ணனின் துணையோடும், அதோடு கடின உழைப்பால் உயர்ந்தவர் என்பதால் படிப்பு விசயத்தில் எப்போதும் கண்டிப்பு காட்டுவார்

இப்போதும் அதே எண்ணத்தில் "மீரா... அதென்ன அர்த்தமில்லாத முடிவு. இங்கயே படின்னு சொன்னதுக்கு வெளிய போய் தான் படிப்பேன், அப்ப தான் தனியா இருந்து நெறைய கத்துக்கமுடியும்னு சொல்லி பிடிவாதமா கனடா போன... இப்ப இப்படி சொல்ற. நிலையான மனசு இருக்கணும் மீராம்மா" என அதட்டல் போல் பெற்றவர் கூறவும்

"என்ன நீங்க? அவளே..." என பேச தொடங்கிய மனைவியை "நீ பேசாம இரு ராஜி..." என அடக்கியவர் "பதில் சொல்லு மீரா" என்றார் மகளிடம்

தன் மனதை புரிந்து கொள்ளாமல் தந்தை இப்படி பேசுகிறாரே என்ற ஆதங்கத்தில் வார்த்தைகளை கொட்டினாள் மீரா "நான் இங்க இருக்கறது உங்களுக்கு பிடிக்கலைனா எதாச்சும் லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கிக்கறேன்'ப்பா... என்னால யாருக்கும் கஷ்டம் வேண்டாம்" என்றவள் அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல், அவளை அணைத்திருந்த அன்னையின் தோளில் முகம் புதைத்து விசும்பினாள்

"ஏன் இப்படி கொழந்தைய அழ வெக்கறீங்க... அவ படிச்சு ஒண்ணும் சாதிக்க வேண்டாம்... உங்க அப்பாவுக்கு வேற வேலையில்ல... நீ அழாதடா செல்லம்... நீ எங்கயும் போக வேண்டாம் இங்கயே இரு கண்ணம்மா" என மகளை ஆறுதல்படுத்தினாள் அன்னை

மகளின் அழுகை அவள் தந்தையையும் அசைத்தது "மீராம்மா... என்னடா பேசற. நீ தானேடா எங்களுக்கு எல்லாமும். நீ இங்க இருந்தா சந்தோசப்படற மொதல் ஆள் நான் தான். ஆனா..." என்றவரை மகளின் வேதனை நிறைந்த முகம், அதற்கு மேல் பேச விடாமல் தடுத்தது

ஏதோ சரியில்லை என்பதை புரிந்து கொண்டார். அது என்னவென அறிந்து ஆவன செய்யும் வரை மகளின் முகத்தில் பழைய சிரிப்பை பார்க்க இயலாது என உணர்ந்தவர் போல் "சரிடா, நீ எங்கயும் போக வேண்டாம் விடு... அப்பா எதுவும் தப்பா சொல்லி இருந்தா சாரி" எனவும், மீராவிற்கு உடனே எல்லாமும் சொல்லி பெற்றவர் மடியில் சாய்ந்து சத்தமாய் அழ வேண்டும் போல் தோன்றியது

ஆனால் அதை பெற்றோர் இருவரும் தாங்கி கொள்ள மாட்டார்கள் என உணர்ந்தவளாய் "சாரிப்பா... நானும் ஏதோ தெரியாம பேசிட்டேன்" என்றதோடு நிறுத்தி கொண்டாள்

"பரவால்ல கண்ணம்மா... சரி ராஜி, நான் ஆபீஸ்க்கு கிளம்பறேன்" என்றவர் சதீஷின் பக்கம் திரும்பி "சதீஷ், உங்க அப்பாகிட்ட ஒரு பைல் தரணும். கார்ல இருக்கு, வர்றியா தரேன்" எனவும்

தன்னிடம் மீராவை பற்றி பேசவே அழைக்கிறார் என புரிந்தவனாய் "ஒகே அங்கிள் வரேன்... சரி ஆன்ட்டி, நானும் அப்படியே கிளம்பறேன். காயத்ரிய காலேஜ்ல பிக் அப் பண்றேன்னு சொல்லி இருந்தேன். பை மீரா. டேக் கேர்" என்றவன் மீராவின் தந்தையோடு சேர்ந்து வெளியே வந்தான்

அவர் எதுவும் கேட்கும் முன்பே "அங்கிள்... இங்க வேண்டாம்... நீங்க முன்னாடி போங்க, நான் நம்ம ஆபீஸ்க்கு வரேன். அங்க போய் பேசிக்கலாம்" என்றான் சதீஷ்

சரி என்பது போல் தலை அசைத்தவர், டிரைவரை கார் எடுக்க சொல்லி பணித்தார்

********************************************************
"சொல்லு சதீஷ்... என்ன பிரச்சன?" என நேரடியாய் பேச்சை தொடங்கினார் மீராவின் தந்தை

ஸ்டீவ் பற்றி, மீராவுக்கும் ஸ்டீவுக்குமான காதல் பற்றி தான் அறிந்ததை மறைக்காமல் தெரிவித்தான் சதீஷ். முதலில் மீரா அறியாமல் இப்படி சொல்வது சரி இல்லையோ என உறுத்தியது

ஆனால், அவள் படிப்பை தொடர போவதில்லை என்றதும், இந்த விஷயம் அவள் தந்தைக்கு மட்டுமேனும் தெரிவதே நல்லதென நினைத்தான்

அதுமட்டுமின்றி, மீரா அதிலிருந்து மீண்டிருந்தால் கூட சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். அதை எண்ணி எண்ணி அவள் தன்னை வருத்தி கொள்வதை கண்டதும், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டுமெனில் அவள் தந்தை அதை பற்றி அறிவதே நல்லதென்ற முடிவுக்கு வந்தான்

சதீஷ் சொல்லி முடிக்கும் வரை முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் பொறுமையாய் கேட்டவர் "சதீஷ்... நான் காதலுக்கு எதிரி இல்ல. என் பொண்ணோட எதிர்காலம் பத்தி எனக்கு நெறைய கனவுகள் இருந்தாலும், அவளோட சந்தோசத்தை விட எனக்கு எதுவும் பெருசில்ல. என் மீரா முகத்துல இத்தன வேதனைய நான் இதுவரை பாத்ததில்ல சதீஷ். அவ பிடிவாத குணம் சின்னதுல இருந்தே உனக்கும் தெரியும். அதான், இந்த வேதனை நிரந்தரமாய்டுமோனு பயமா இருக்கு" என்றார் வேதனையுடன்

அவரை எப்போதும் அப்படி பார்த்திராத சதீஷும் வருத்தமாய் உணர்ந்தான். "வருத்தப்படாதீங்க அங்கிள்... அந்த ஸ்டீவ் மட்டும் என் கைல கிடைச்சா வெட்டி போட்டுடலாம்னு இருக்கு...ச்சே" என்றான் கோபமாய்

"என் மகள இப்படி அழ வெக்கரானேனு எனக்கும் அப்படி தான் தோணுது சதீஷ். ஆனா, அவன பத்தி தப்பா பேசினதுக்கு இன்னிக்கி காலைல கூட அவ கண் கலங்கினானு நீ தானே சொன்ன. பொறுமையா யோசிக்கலாம், மீராவுக்கு பாதிப்பில்லாம இதை எப்படி சரி செய்யறதுன்னு கண்டுபிடிக்கணும்" என்றார் தந்தைக்கே உரிய கவலையுடன்

"என்ன பிரச்சனைனு தெரிஞ்சாலாவது என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம் அங்கிள். இப்ப கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கே" என்றான் சதீஷ்

"ம்... நீ சொல்றதும் சரி தான். அந்த ஸ்டீவ்கிட்ட பேசி பாரேன் சதீஷ். எதாச்சும் விஷயம் கிரகிக்க முடியுதானு பாரு" என்றார்

"நேத்து மீராவ ஏர்போர்ட்ல பாத்தப்பவே ஏதோ பிரச்சனைனு மனசுல பட்டது அங்கிள். நேத்து நைட் ஸ்டீவ் நம்பருக்கு ட்ரை பண்ணினேன். லைனே போக மாட்டேங்குது. அங்க இன்னொரு பிரெண்ட் மது'னு ஒருத்தி இருக்கா. அவகிட்ட சொல்லி நேர்ல போய் பாக்க சொன்னேன். அவ இன்னிக்கி காலைல போன் பண்ணி இருந்தா. அபார்ட்மென்ட் பூட்டி இருக்கு. தட்டி பாத்தா யாரும் திறக்கலைனு சொன்னா. அவன் செல்போன் நம்பர் மட்டும் தான் எங்க எல்லார்கிட்டயும் இருக்கு அங்கிள். அவங்க பேரன்ட்ஸ் வீட்டு நம்பர் எல்லாம் இல்ல. அவனுக்கு ஈமெயில்'ம் அனுப்பி இருக்கேன் அங்கிள்" என்றான்

"ம்... என்ன பிரச்சனைனு உன்னால எதுவும் யூகிக்க முடியுதா சதீஷ்? கொஞ்சம் யோசிச்சு பாரேன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி ஏதேனும் வழி கிடைக்காதா என யோசித்தவராய்

"அவனுக்கு கொஞ்சம் முன் கோபம் அதிகம் அங்கிள். எதாச்சும் கோபமா பேசி இருப்பானோனு தோணுது"

"வெறும் கோபமான பேச்சு மீராவை இத்தன பாதிக்காது சதீஷ். அங்க போக மாட்டேன்னு சொல்றன்னா, அவன் முகத்துலேயே முழிக்க விருப்பமில்லாம போற அளவுக்கு ஏதோ நடந்து இருக்கு. அவன் போன் எடுக்கலை, அபார்ட்மென்ட்லயும் இல்லைன்னு வேற நீ சொல்ற. நாலு நாள் பொறுத்து மீராகிட்டயே மறுபடி பேசி பாக்கலாம் சதீஷ். அவ அம்மாவுக்கு எதுவும் தெரிய வேண்டாம் இப்போதைக்கு" என்றார் மனைவியின் மென்மையான மனம் புரிந்தவராய்

"ஒகே அங்கிள். நீங்க டென்ஷன் ஆகாதீங்க. எல்லாம் சரி ஆய்டும்" என சமாதானம் போல் சொல்லி கிளம்பினான் சதீஷ்

********************************************************
மீராவோ நாளுக்கு நாள் இன்னும் நத்தை ஓடாய் தன்னை சுருக்கி கொண்டாள். எந்நேரமும் தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள். எத்தனை கேட்டும் எதுவும் இல்லை என சாதித்தாள்

ஸ்டீவ் கோபத்தில் பேசிய வார்த்தைகளை கூட மீரா மன்னிக்க தயாராய் இருந்தாள். ஆனால் அவன் தன்னுடைய இடத்தில் வேறு ஒருத்தியை நினைத்ததை அவளால் தாங்க இயலவில்லை

சிறு வயது முதலே எப்போதும் எதிலும் முதலாய் இருக்கவேண்டுமென நினைப்பவள் மீரா. படிப்பிலாகட்டும், விளையாட்டிலாகட்டும், மற்ற திறமைகளை வளர்த்து கொள்வதிலாகட்டும் எதிலும் முதலில் இருப்பாள்

அவள் தந்தை கிருஷ்ணமூர்த்தி படிப்பு விசயத்தில் கொஞ்சம் கண்டிப்பு காட்டுவார் தான் என்ற போதும், முதலாய் வரவேண்டுமென அவளை எதிலும் திணித்ததில்லை. அவள் அன்னையோ மகளிடம் எப்போதும் செல்லம் கொஞ்ச மட்டுமே அறிந்தவள்

ஸ்டீவ் தன் மீது கொண்ட காதலை அறிந்த போதும், அளவில்லாத காதலை அவன் காட்டிய போது, தன் மீது கொண்ட அளவுகடந்த அன்பினால் சதீஷ் மீது கோபம் கொண்டான் என அறிந்த போதெல்லாம் தான் மிகவும் அதிஷ்டம் செய்தவள் என மகிழ்ந்தாள்

ஆனால், அதே நிலையில் ஸ்டீவின் மனதில் வேறு ஒருத்தி இருந்தாள், அவளை அவனும் நேசித்தான், திருமணம் வரை யோசித்தான் என்ற நினைவே உயிர் போவது போன்ற வேதனையை தந்தது மீராவுக்கு

தன் மனதில் அவன் முதல் இடத்தில் இருக்கும் போது, தான் அவன் மனதில் அப்படி இல்லை என்பதை அவள் மனம் ஏற்க மறுத்தது. இந்த காலத்தில் காதல் கை கூடாமல் போவதும், அதன் பின் இன்னொரு காதலை ஏற்பதும் பெரிய விஷயம் இல்லை என அவள் தனக்கு தானே வாதாட முயன்று தோற்றாள்

அவளின் மனம் அதை ஏற்க மறுத்தது. அதை சாதாரண விசயமாய் அவளால் ஏற்று கொள்ள இயலவில்லை. எல்லாவற்றிக்கும் மேலாய் அவன் ஏன் அதை தன்னிடம் மறைக்க வேண்டும்

அதற்கும் ஒரு காரணம் சொன்னனே "அந்த காரணத்தினால் நீ என் மேல் கொண்ட அன்பு குறைவதை ஏற்று கொள்ள முடியாதென". இது உண்மை தானா?

முன்னாள் காதலியிடமும் இதே போல் பேசி இருப்பானோ என மனம் மீண்டும் அங்கேயே வந்து நின்றது. இப்போது அவன் மனதில் அந்த பெண்ணின் பாதிப்பு துளியும் இல்லையென எப்படி நம்ப முடியும்

இப்போது தன்னால் இயலவில்லையே. எத்தனை முயன்றும் துளியும் அவன் நினைவை அகற்ற முடியவில்லையே. வேண்டாம் எனும் நினைவு தானே மீண்டும் மீண்டும் முன்னே வந்து வதைக்கிறது

இனி எத்தனை வருடம் தான் ஆனாலும் இந்த வலி எப்படி மறையும். அதே போல் தானே அவனுக்கும், அந்த தோற்ற காதலின் வடு மனதில் இருக்கத்தானே செய்யும்

ஒருவேளை வாழ்வில் அவனோடு இணைந்தால், என்றேனும் ஒரு தருணத்தில், ஒரு கோபமான மனநிலையில் "முன் விரும்பியவளை மணந்திருந்தால் வாழ்வு சிறப்பாய் இருந்திருக்கும்" என கூறிவிட்டாலோ, அல்லது அவன் மனதில் அப்படி ஒரு எண்ணம் தோன்றினாலும் கூட அதன் பின் அந்த வாழ்வுக்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே என நினைத்தாள்

தன்னால் அதன் பின் உயிர் வாழ இயலாது, அதற்கு பதில் பெற்றோருக்கு உற்ற மகளாய் இப்படியே வாழ்ந்து விடுவது சரியென்ற முடிவுக்கு வந்தாள்

அந்த முடிவிலும் தன்னால் நிலைத்து இருக்க முடியாது என்பதை மீரா அன்று உணர்ந்தாள். மூன்று வாரமாய் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறாள் என வற்புறுத்தி அவளை வெளியே அழைத்து சென்றனர் சதீஷும் காயத்ரியும்

சினிமா அரங்கில் சென்று அமர்ந்தால் மீராவுக்கு மனதில் எதுவும் பதியவில்லை. காயத்ரியும் சதீஷும் எத்தனை முயன்றும் அவள் முகத்தில் சிரிப்பை வரவழைக்க இயலவில்லை

சினிமா முடிந்து சாப்பிடவென உணவகத்துக்கு சென்றனர். மீராவை கொஞ்சமேனும் சாப்பிட வைப்பதற்குள் போதும் போதும் என்றானது மற்ற இருவருக்கும். மூன்றே வாரத்தில் மூன்று மாதம் பட்டினி கிடந்தவள் போல் மெலிந்து, சிரிக்க மறந்த கண்களை பார்க்க பார்க்க சதீஷிக்கு தாளவில்லை

ஸ்டீவை நேரில் கண்டால் கொல்லவும் தயங்கமாட்டேன் என மனதிற்குள் நினைத்து கொண்டான் சதீஷ். இப்படி அவன் நினைத்து கொண்டிருந்த வேளையில் மீரா திடீரென வேகமாய் உணவகத்தினுள் இருந்து வெளியே ஓடினாள்

சதீஷ் என்னவென யோசித்து சுதாரிப்பதற்குள் மீரா கண் பார்வையில் இருந்து மறைந்தாள். சற்று முன் பேசவும் சக்தியற்றவள் போன்ற தோற்றத்தில் இருந்தவளால் எப்படி அத்தனை வேகமாய் ஓட இயலும் என நம்ப இயலாமல் பார்த்தான்

காயத்ரியை அங்கேயே இருக்கும்படி கூறி விட்டு மீரா போன திசையில் சதீஷ் விரைந்து சென்றான். அவன் சென்ற போது, சாலை ஓரத்தில் விழித்தபடி நின்றிருந்தாள்

"மீரா... " என சதீஷ் அழைக்க

"ம்... " என்றவள், இன்னும் எதையோ தேடுவது போல் அங்கும் இங்கும் விழி விரித்து பார்த்தாள்

"மீரா... என்னாச்சு மீரா?" என சதீஷ் அவளின் தோள் பற்றி உலுக்க

"அ.... அது... ஒண்ணுமில்ல... யாரோ...யாரோ தெரிஞ்சவங்க மாதிரி... ஒண்ணுமில்ல...போலாம்" என உணவகம் நோக்கி நடந்தாள்

யாரையோ பார்த்து ஸ்டீவ் என நினைத்து ஓடி வந்து பார்த்திருக்கிறாள் என்பதை சதீஷ் புரிந்து கொண்டான். அவளின் அந்த செய்கை சதீஷை கண் பனிக்க செய்தது

அக்கணமே ஸ்டீவ் இருக்கும் இடம் கண்டறிந்து கழுத்தை பிடித்து இழுத்து வந்து "பாவி, என்ன செய்து வைத்திருக்கிறாய் பார்" என காட்டி, அவனை அடித்து கொல்ல தோன்றியது

முதலில் சந்தேகப்பட்டபோதும், தானும் கூட இறுதியில் அவனை நம்பினேனே என தன் மீதே கோபம் கொண்டான் சதீஷ். ஒருவேளை எப்படியேனும் மீராவை தன்னோடே அழைத்து வந்திருந்தால் இந்த பிரச்சனையை தவிர்த்து இருக்கலாமோ என தோன்றியது

மீராவின் தந்தையிடம் அன்று பேசியதற்கு பின், பலமுறை சதீஷ் ஸ்டீவின் செல்பேசிக்கு அழைத்து பார்த்தான், பதிலே இருக்கவில்லை

மதுவும் இந்த மூன்று வாரத்தில் பல முறை ஸ்டீவின் அபார்ட்மென்ட் சென்று பார்த்து வந்து "யாரும் இல்லை" என தெரிவித்தாள் அவன் அனுப்பிய எந்த மின்னஞ்சலுக்கும் (ஈமெயில்) கூட ஸ்டீவிடமிருந்து பதில் வரவில்லை

மீராவிடம் பல முறை கேட்டும் எந்த பதிலும் பெற முடியவில்லை. மீராவின் நிலையை பார்த்து அவள் பெற்றோர் வேதனையில் தவித்தனர்

அன்று அதன் பின், உணவகத்தில் இருந்து கிளம்பி முதலில் காயத்ரியை அவள் வீட்டில் விட்டு விட்டு மீராவை விட சென்றான் சதீஷ்

ஒரு வார்த்தை கூட பேசாமல் வெளியே பார்த்தபடி அமைதியாய் இருந்தவளை காண சகியவில்லை அவனுக்கு. எப்போதும் பேச்சும் சிரிப்புமாய் தன்னை கேலி செய்து சிரிக்கும் அந்த மீராவை இனி காண்பதும் இயலுமா என தோன்ற தொடங்கியது

அவன் அப்படி எண்ணிய நேரத்தில் திடீரென மீரா அழும் சத்தம் கேட்டு, திகைப்புடன் காரை ஓரமாய் நிறுத்தியவன், "மீரா..." என அவள் தோளில் தட்டி சமாதானம் செய்ய முயன்றான் சதீஷ்

"மீரா...ப்ளீஸ் மீரா... எதுக்கு இப்படி அழற? மீரா... இங்க பாரு.... என்னம்மா இது? ப்ளீஸ் மீரா... நீ இப்படி அழறத பாக்க முடியல மீரா... உன்னை பத்தி எந்த அக்கறையும் இல்லாத ஒருத்தனுக்காக உன் மேல் உயிரா இருக்கற எங்க எல்லாரையும் இப்படி கஷ்டப்படுத்தறயே மீரா..." என குற்றம் சாட்டுவது போல் அவன் கேட்கவும், அழுகையை கட்டுப்படுத்தி அவனை பார்த்தவள்

"நான் வேணும்னு செய்யல சதீஷ். நீ கூட என்ன புரிஞ்சுக்க மாட்டியா?" என விசும்பினாள்

"இல்ல மீரா... புரிஞ்சுக்காம இல்ல. உன்னை நீயே இப்படி வருத்திக்கறதால என்ன மாறும்னு நீயே சொல்லு. ஒடம்பும் மனசும் உருகி போனது தான் மிச்சம். அங்கிள் ஆன்ட்டி'க்காகவாச்சும் யோசி மீரா... என்ன பிரச்சனைனு சொல்லு. எதாச்சும் செய்ய முடியுமான்னு பாக்கலாம்" என அவளை பேச வைக்க முயன்றான்

சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்தவள், ஏதோ தீர்மானித்தது போன்ற நிமிர்வுடன் "கரெக்ட் தான். நான் இப்படி அழறதால எந்த லாபமும் இல்ல.என்ன பிரச்சனைனு சொல்றதாலையும் எதுவும் இல்ல. இனிமே இப்படி இருக்க மாட்டேன் சதீஷ். அப்பா அம்மாவுக்காக சந்தோசமா இருக்கற மாதிரி நடிக்க பழகிக்கறேன்... ஒகே சதீஷ், வீட்டுக்கு போலாம்" என்றாள், உணர்ச்சி துடைத்த முகத்துடன்

அதற்கு மேல் பேசி உள்ளதையும் கெடுத்து கொள்ள வேண்டாம் என நினைத்தவன் போல் மௌனமானான் சதீஷ். சந்தோசமாய் இருப்பது போல் நடிப்பது அவள் மனநிலையை மாற்றவும் வாய்ப்பிருக்கிறது என நினைத்து கொண்டான்
சொன்னது போல் அன்றிலிருந்து பழையபடி மிக கலகலப்பாய் இல்லை என்றாலும், ஏதோ ஒரு விதமாய் மகிழ்வாய் வளைய வந்தாள் மீரா. அதாவது, அது போல் நடித்தாள்

மகளின் மாற்றம் பெற்றோரைம் நிம்மதியுற செய்தது. மீராவின் தந்தை, சதீஷிடம் அது பற்றி விசாரித்தார். சதீஷ் நடந்ததை கூற, இதுவே நல்ல துவக்கம் தான் என அவள் தந்தை மகிழ்ந்தார்

மற்றவரின் முன் மகிழ்ச்சி முகம் காட்டும் மீரா, தன் அறைக்கு சென்று அடைந்ததும் அதற்கும் சேர்த்து அழுது தீர்த்தாள்

அன்று சதீஷ் காயத்ரியுடன் வெளியே சென்ற போது யாரையோ கண்டு ஸ்டீவ் என நினைத்து ஓடி சென்று பார்த்த பின் அது தன் பிரமையே அன்றி வேறில்லை என புரிந்ததும், சுய இரக்கத்தில் துவண்டு போனாள்

அந்த சம்பவம் நடந்து ஒரு வாரம் கழிந்த பின்னும் கூட இன்னும் அந்த சுய இரக்கம் குறைவதாய் இல்லை. தன் தவிப்பில் / காதலில் ஒரு பங்கேனும் அவனுக்கு இருந்திருந்தால் இந்த ஒரு மாத காலத்தில் ஒரு நொடி கூடவா தன் நினைவு வராமல் இருந்திருக்கும் என நினைத்ததும் அவளால் தாங்க முடியவில்லை

தனக்கு அவன் பழைய காதல் பற்றிய உண்மை தெரிந்ததும், இனி இவளை ஏமாற்ற வழியில்லயென விட்டுவிட்டானோ. அல்லது ஏமாற இன்னொருத்தி கிடைத்து விட்டாளோ என தோன்றியது. அவனை அப்படி கேவலமாய் நினைக்க கூட அவளுக்கு தாங்கவில்லை

எல்லாம் முடிந்தது என உள் மனம் ஏற்க மறுத்தது. தன் அறையில் அமர்ந்திருந்தவளுக்கு, இப்போது கூட ஸ்டீவின் குரல் எங்கோ கேட்பது போல் தோன்றியது

இரு கைகளாலும் காதை இறுக மூடி அமர்ந்தாள். சிறிது நேரத்தில் கண் முன்னே அவன் நிற்பது போல் தோன்ற

"ஏன் இப்படி என் கண் முன்னால வந்து வந்து மறைஞ்சு சித்ரவத பண்ற... ஐயோ...அம்மா... என்னால தாங்க முடியல" என பார்வையை அந்த திசையில் இருந்து விலக்கி தலையணையில் முகம் புதைத்தாள்

"இல்ல மீரா... இனி மறைஞ்சு போக மாட்டேன்" என்ற குரலில் விதிர்த்து எழுந்தாள். கண்ணால் காண்பதை நம்ப இயலாதவளாய் பேசவும் திராணியற்று விழித்தாள்

அவளின் அந்த தோற்றம் அங்கு நின்றிருந்தவனை உயிரோடே கொன்றது. விரைந்து அருகில் வந்தவன், அதற்கு மேல் விலகி இருக்க இயலாதவனாய் எதுவும் பேசாமல் அவளை இறுக அணைத்துக் கொண்டான்

மீராவிடம் எந்த அசைவும் இல்லாததை உணர்ந்தவனாய் அவளை விலக்கி முகம் பார்த்தவன், இன்னும் நடப்பதை நம்பாத பார்வையுடன் கண்ணில் நீர் வழிய இருந்தவளை காண குற்ற உணர்வில் குறுகினான்

"மீரா... ஏன் மீரா இப்படி பாக்கற? மீரா.... இன்னும் நம்பலையா? நான் தான் மீரா... உன் ஸ்டீவ் மீரா. மீரா...மீரா..." என்றவன் குழந்தையை அணைக்கும் அன்னை போல் மார்போடு அணைத்து நெற்றியில் இதழ் பதித்தான்

"உன் ஸ்டீவ்" என்ற சொல்லில் தூக்கத்தில் இருந்து விழித்தவள் போல், அவனிடமிருந்து தன்னை விடுவித்து கொண்டு எழுந்து நின்றாள்

"மீரா..." என மீண்டும் அவன் அருகில் வர, விலகினாள். அதை தாங்க இயலாதவனாய் "ப்ளீஸ் மீரா..." என அவள் எதிர்ப்பையும் மீறி அணைத்தவன்

"கொஞ்சம் நேரம் கிட்ட இரு மீரா... ப்ளீஸ்... ஐ லவ் யு பேபி... ஐ லவ் யு" என அவன் கூற கேட்டதும், மொத்த மன உறுதியும் வடிய மனதின் பாரம் மொத்தத்தையும் அழுதே தீர்ப்பவள் போல் அழுதாள் மீரா

சற்று பொறுத்தவன் "மீரா, ப்ளீஸ்... ப்ளீஸ் மீரா... அழாத பேபி. ப்ளீஸ்... ப்ளீஸ் ப்ளீஸ்" என்றவனின் குரல் அவள் செவிக்கு எட்டியதாய் கூட தெரியவில்லை

"ஒரு மாசத்துல ஒரு நிமிஷம் கூட என் ஞாபகம் வரலையா? நான் அவ்ளோ அவசியமில்லாம போயிட்டேனா? ஏன் இப்படி என்னை அழ வெக்கற ஸ்டீவ்? என்னால தாங்க முடியல" என அழுகையினூடே பிதற்றினாள்

"ஐயோ இல்ல மீரா... இந்த ஒரு மாசத்துல ஒரு நிமிஷம் கூட உன்ன நினைக்காம இருக்கல... அதுக்கு முன்னாடி விட அதிகமா நீ என்னை ஆக்ரமிச்சுட்ட. நீ இல்லாத லைப்ல எனக்கு ஒண்ணுமே இல்ல மீரா. இன்னும் என்னை நம்ப மாட்டியா?" என கண்ணில் நீர் பனிக்க கேட்டவனை கண் எடுக்காமல் பார்த்தாள்

இன்னும் நம்பாத பார்வை பார்த்தவளை மெல்ல நடத்தி அங்கிருந்த சோபாவில் அமர்த்தியவன், அவளை விட்டு விலக மனமின்றி தன் கை அணைப்பிலேயே பற்றி அருகில் அமர்ந்தான்

அமர்ந்ததும் அவனை விட்டு விலகினாள் மீரா. "மீரா..." என அருகில் வந்தவனை தடுத்தாள். அவன் அருகாமையே அவளை பலவீனபடுத்தியதெனில் அவன் தொடுகை அவளை செயலற்றவளாக்கியது

இன்னொரு முறை எந்த ஏமாற்றத்தையும் தாங்கும் சக்தி தனக்கு இல்லை, எனவே எதை கூறும் முன்னும் எல்லாம் தெளிவுபடுத்தி கொள்ளவேண்டுமென நினைத்தாள்

சற்று யோசிக்க வேண்டுமெனில் அவனது கை அணைப்பிலிருந்து விடுபட வேண்டுமென விலகினாள்

ஆனால் அதை அவளின் கோபம் என எடுத்து கொண்ட ஸ்டீவ் "என்னை வெறுத்துட்டியா மீரா? ப்ளீஸ் மீரா...." அதற்கு மேல் பேச இயலாமல் கெஞ்சிய அவனின் பார்வை அவளை கொன்றது

"வெறுப்பதா? ஹும்... அது மட்டும் முடிந்தால் சுலபமாய் இருக்குமே" என மனதினுள் நினைத்து கொண்டாள்

"ஸ்டீவ்... எனக்கு சில விளக்கங்கள் வேணும்... ப்ளீஸ்..." என இன்னும் சற்று விலகி நின்றவளின் குரலில் இருந்த அந்நியதன்மை அவனை உறைய செய்தது

"சொல்லு மீரா... என்ன தெரியணும்?" என்றான் அவனும் கட்டுப்படுத்திய குரலில்

"அந்த... அந்த... பொண்ணு பத்தி... உங்க கா...காதல்..." வாக்கியத்தை முடிக்க இயலாமல் தொண்டை அடைத்தது அவளுக்கு

அதை புரிந்தவன் போல், அதற்கு மேல் அவளை வருத்தப்படுத்த விருப்பமின்றி "காதல்னு எதுவும் இல்ல மீரா. என்ன நடந்ததுனு நான் எல்லாமும் சொல்றேன். அதுக்கப்புறம் என்னை ஏத்துக்கறதும்...." ஏத்துக்காததும் என்ற சொல்லை கூட சொல்ல விருப்பமின்றி அதோடு நிறுத்தினான்

மீரா எதுவும் பேசவில்லை "சொல்ல வந்ததை சொல்" என்பது போன்ற பாவனையுடன் மௌனமாய் நின்றாள்

"நான் இந்தியால இருந்து 11th grade ஆரம்பிச்சப்ப கனடா வந்தேன்னு உன்கிட்ட மொதலே சொல்லி இருக்கேன்னு நினைக்கிறேன். கனடா வந்த புதுசுல அந்த சூழ்நிலைல என்னால சட்டுன்னு பொருந்தி போக முடியல. பிரெண்ட்ஸ் யாரும் சரியா அமையல. கொஞ்சம் லோன்லியா இருந்தேன். மது கொஞ்சம் லேட்டா தான் வந்து ஜாயின் பண்ணினா.இண்டியன் கல்ச்சர், இட்டாலியன் கல்ச்சர், அமெரிக்கன் கல்ச்சர் எல்லாம் சேந்து ஒரு குழப்பமான மனநிலை. எது சரி, எது தப்புனு புரியல. என்னோட செய்கை பலரும் கேலி செய்யற விதமா இருந்தது. ஸ்கூல் போக மாட்டேன்னு பிரச்சனை பண்ற அளவுக்கு வெறுத்து போச்சு. அப்போ அவளாவே என்கிட்ட வந்து பிரெண்ட்லியா பேசினா ஏஞ்சலினா..." என்றவனை இடைமறித்தவள்

"ஏஞ்சல்னு செல்லமா கூப்பிடுவியா?" என்றவளின் கண்ணில் தெரிந்த வலி அவனை மேலே பேச விடாமல் செய்தது

அவள் அருகில் வந்து முகத்தை கையில் ஏந்தியவன் "Don't hurt yourself Meera...please..." என்றவனின் பார்வையை சந்திக்க முடியாமல் அவன் கை விலக்கி ஜன்னல் கம்பியை ஆதாரமாய் பற்றி வெளியே பார்க்கும் பாவனையில் நின்றாள்

அவளை நோக்கி நீண்ட கைகளை கட்டுப்படுத்தியவன், நடந்ததை மறைக்காமல் கூறுவது ஒன்றே இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் என மீண்டும் ஏஞ்சலினா பற்றி தொடர்ந்து கூறினான்

"ஏஞ்சலினாவுக்கு எங்க க்ளாஸ்ல fan club ஏ இருந்தது. அப்படி ஒருத்தி தானே வலிய வந்து பேசினத பாத்து மத்தவங்களும் என்கிட்ட நல்லா பழக ஆரம்பிச்சாங்க. அதனால அவ மேல எனக்கு ஒரு மதிப்பு வந்தது. மத்தவங்க முன்னாடி என்கிட்ட அதிகம் நெருக்கம் காட்டுவா. இந்த ஊர் கல்ச்சர்ல இது ஒரு பெரிய விஷயம் இல்ல போலனு நான் அதை பெருசா எடுத்துகிட்டதில்ல. நாங்க 12th grade வந்த சமயம், திடீர்னு ஒரு நாள் அவ என்னை விரும்பறதா சொன்னா..." அந்த வார்த்தையில் மீராவின் முகம் இறுகியதை கண்டவன் மேலே சொல்ல பயந்தவன் போல் நிறுத்தினான்

அதை "அந்த நாள் நினைவில் உழன்று கொண்டிருக்கிறான் போலும்" என தவறாய் புரிந்து கொண்ட மீரா "அப்புறம் நீயும் அவ காதலை ஏத்துகிட்டு சந்தோசமான ஜோடியா இருந்தீங்க இல்லையா?" என்றவள் எத்தனை கட்டுப்படுத்த முயன்றும் இறுதியில் விசும்பல் வெளியேறியது

அதை காண சகியாமல் "மீரா ப்ளீஸ்..." என அவள் கை பற்றினான். கையை உதறியவள், அவன் பழைய காதல் கதையை கேட்கும் சக்தி கூட தனக்கு இல்லை என உணர்ந்தவளாய்

"வேண்டாம் எனக்கு எதுவும் தெரிய வேண்டாம். நான்... எனக்கு யாரும் வேண்டாம். போய்டு இங்கிருந்து போய்டு ஸ்டீவ் ப்ளீஸ்" என்றாள்

அவளின் பேச்சு வேதனை தந்த போதும், அதை காட்டிக்கொள்ளாமல் "நான் போய்டறேன் மீரா... ஆனா நீயும் என்கூட வரணும். என்னால நீ இல்லாம இருக்க முடியாது மீரா" என்றான் தீர்மானம் போல்

"இதையே தானே அவகிட்டயும் சொல்லி இருப்ப... இப்படித்தானே அவ மேலயும்... " என அதற்கு மேல் பேச இயலாமல் ஜன்னல் கம்பியே பிடிமானமாய் சாய்ந்து அழுதாள்

தன்னால் தானே இவளுக்கு இந்த வேதனை, அவள் சொல்வது போல் விலகி சென்று விட்டால் இவளின் வேதனையை காண்பதிலிருந்தேனும் விடுதலை கிடைக்குமே என ஒரு கணம் நினைத்தான் ஸ்டீவ்

ஆனால், இந்த ஒரு மாத பிரிவு அது இயலாத காரியம் என்பதை அவனுக்கு உணர்த்தி இருந்தது. அவளும் தன்னை கண்டவுடன் "ஒரு மாதமாய் என் நினைவே வரவில்லையா?" என்று தானே அழுதாள்

பல நாள் பட்டினி கிடந்தவள் போன்ற அவளின் உடல் மெலிவும் சிரிக்க மறந்த கண்களும், அவளுக்கும் இந்த பிரிவு உயிர் வதை தான் என்பதை அவனுக்கு உணர்த்தியது

ஒருவர் மீது ஒருவர் கொண்ட அளவு கடந்த காதலே இப்போது இருவரையும் பிரித்து நிறுத்தி இருக்கிறது என நினைத்தான். நடந்ததை எல்லாம் அறிந்ததும் மீராவின் கோபம் நிச்சயம் மாறும், அதன் பின் எல்லாம் சரியாகி விடும் என நினைத்தவன் போல் மேலே சொல்ல தொடங்கினான்

"பதினெட்டு வயசுல ஒரு பொண்ணு என்னை விரும்பறதா சொன்னப்ப அது ஒரு பெரிய அங்கீகாரமா தோணுச்சே தவிர வேற எந்த உணர்வும் எனக்கு இருக்கல மீரா ஆனாலும் எனக்கு குழப்பமா இருக்குனு அவகிட்ட சொன்னேன். அதுக்கு அவ இது காதலின் ஆரம்ப நிலை அப்படி தான் இருக்கும்னும் மத்தபடி இந்த ஏஞ்சலினாவை விரும்பாம கூட ஒருத்தர் இருக்க முடியுமான்னு கேட்டா. எனக்கு பதில் சொல்ல தெரியல. அதுக்கப்புறம் மத்தவங்க முன்னாடி நாங்க காதலர்கள்னு சொல்லிக்க ஆரம்பிச்சா. மத்தவங்க என்னை ஹீரோ மாதிரி பாத்ததும், நீ ரெம்ப லக்கினு சொன்னதும் டீனேஜ்ல ஏதோ பெருசா சாதிச்ச மாதிரி இருந்தது. சத்தியமா காதல்னா என்னனு புரிஞ்சுக்கற மன பக்குவம் கூட எனக்கு இருக்கல மீரா..."

"காதல்னு எதுவும் இல்லாமையே கல்யாணம் நிச்சியம் பண்ணிக்கற அளவுக்கு போனதை நான் நம்பனுமா?" என்றாள் நிராசை நிறைந்த கண்களுடன்

சிறிதும் தன்னை நம்பாமல் மீரா கேட்ட அந்த கேள்வி ஸ்டீவின் கோபத்தை தூண்டியது. தன் வழக்கமான முன் கோபத்தில் எதுவும் பேசி அவளை மேலும் வருத்தப்படுத்தி விடக்கூடாதென சற்று நேரம் மௌனமாய் இருந்தான். தன் பேச்சு அவனை வருத்தப்படுத்தியதை உணர்ந்தவளாய் மீராவும் மௌனமானாள்

"அப்படி எதுவும் இல்ல மீரா. எப்பவும் நாங்க வெளிய போறப்ப டிரஸ் காஸ்மெடிக்ஸ் நெறைய வாங்குவா. உரிமையா கேக்கறப்ப எனக்கும் மறுக்க தோணாம வாங்கி தந்திருக்கேன். அதை போட்டுட்டு வந்து எல்லார்கிட்டயும் நான் வாங்கி தந்ததுனு பெருமையா சொல்லுவா. கெளரவம் பாத்துட்டு மறைக்காம உண்மையா இருக்கானு தான் அப்போ நான் அதை எடுத்துக்கிட்டேன். ஆனா அதுக்கு காரணம் வேறனு பின்னாடி புரிஞ்சது. அதே போல அவளோட பர்த்டேக்கு ரிங் வாங்கிதரணும்னு கேட்டா. அம்மாவோட செல்லமா இருந்ததால என் கைல பணத்துக்கு குறைவு இருந்ததில்ல, அண்ணா அக்கா எல்லாரும் கூட வொர்க் பண்ண ஆரம்பிச்சதால அவங்ககிட்ட இருந்தும் கிடைக்கும். சும்மா ஒரு கிப்ட்னு தான் அந்த ரிங் அவளுக்கு வாங்கி தந்தேன். ஆனா அதை engagement ring னு அவ எல்லார்கிட்டயும் சொன்னப்ப கொஞ்சம் அதிர்ச்சியானேன்" என அந்த அதிர்ச்சி இப்போதும் பாதித்தது போல் சற்று நிறுத்தினான்

மீராவின் முகத்தில் இன்னும் தெளிவு வந்திடாத போதும், எதுவும் குறிக்கிடாமல் மௌனமாய் இருந்தாள். ஸ்டீவ் தொடர்ந்து கூறினான்

"ஏன் அப்படி சொன்னேனு கேட்டப்ப, அப்போ உனக்கு என் மேல அன்பில்லையானு அழுது ரகளை பண்ணினா. அவளோட அழுகையோ வருத்தமோ என்னை பாதிக்கல. ஆனா முழுசா விலகவும் முடியல. அந்த வருஷம் கிறிஸ்துமஸ்க்கு எங்க வீட்டுக்கு வரணும்னு அடம் பிடிச்சா. கிறிஸ்துமஸ் டின்னருக்கு குடும்பத்துல இருக்கறவங்க மட்டும் தான், நண்பர்கள் கூடாதுங்கறது எப்பவும் எங்க அப்பாவோட ஆர்டர். அதை சொன்னப்ப அவ ஏத்துக்கலை. வேற வழி இல்லாம கூட்டிட்டு போனேன். அன்னைக்கி வீட்டுல எல்லார் முன்னாடியும் நாங்க கல்யாணம் பண்ணிக்க போறோம்னு சொல்லி நான் குடுத்த மோதிரத்த காட்டினா. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல. அதுக்குள்ள அப்பா ரெம்ப கோபமா சத்தம் போட்டார். உடனே அவள கூட்டிட்டு நான் கிளம்பிட்டேன்..." என்றவன் சற்று ஆசுவாசபடுத்தி கொள்பவன் போல் மீராவின் முகத்தை இமைக்காமல் பார்த்தான்

அவனது துளைக்கும் பார்வை காந்தம் போல் தன்னை இழுப்பதை உணர்ந்தவள், அவனது கவனத்தை கலைக்கும் பொருட்டு "அப்புறம் என்ன நடந்தது?" என்றாள்

"அப்புறம் ரெண்டு மாசத்துல திடீர்னு அவளாவே என்கிட்ட இருந்து விலகினா. என்னை அது பாதிக்கலைனாலும் சுத்தி இருந்தவங்களோட கேலி பார்வை கஷ்டமா இருந்தது. அவகிட்ட போய் என்னாச்சுனு கேட்டப்ப, நீ ரெம்ப பணக்காரன்னு தெரிஞ்சு தான் உன்கிட்ட க்ளோஸா பழகினேன், இப்ப உன்னை விட பெரிய பணக்காரன் தானாவே வந்து என் வலைல விழுந்துட்டான், இனி நீ தேவையில்லைனு சொன்னா. ஆரம்பத்துல இருந்தே உனக்கு என்கிட்ட பெரிய ஈடுபாடு இல்லைனு எனக்கு தெரியும், சாட்சிகளோட உன்னை என் பக்கம் இழுக்கணும்னு தான் மத்தவங்க முன்னாடி உன்கிட்ட நெருக்கமா இருந்தேன் , நீ கிப்டா குடுத்ததை engagement ring னு சொல்லி நம்ம உறவுக்கு சாட்சி உருவாக்கினேனு சொன்னா. இப்படி ஏமாந்து இருக்கனேனு தான் வருத்தப்பட்டேன். மத்தபடி என் மனசுல எந்த பாதிப்பும் அப்பவே இருக்கல மீரா. இப்பவாச்சும் என்னை நம்புவியா பேபி" என்றவனை மௌனமாய் பார்த்தாள்

அருகில் சென்று அவள் கை பற்றி தன் மார்போடு இழைத்தவன், அவள் கண்ணோடு கண் பார்த்து "மீரா... உன்னை பாத்த அன்னைக்கே  எனக்குள்ள என்னமோ ஒரு change. Love at first sightல எல்லாம் எனக்கு நம்பிக்கை இருந்ததில்ல. ஆனா, வேற எந்த பொண்ணும் என்னை இப்படி பாதிச்சதில்லைனு மனசுல தோணுச்சு. உன் இடத்துல வேற யாரையும் என்னால நினைக்க கூட முடியாது மீரா... உன்கிட்ட ஏஞ்சலினா விசயத்த சொல்லணும்னு நான் நெறைய வாட்டி நினைச்சுருக்கேன். ஆனா, நீ ரெம்ப சென்சிடிவ்னு எனக்கு தெரியும். அதான் சொல்ல பயமா இருந்தது, பிரியற அளவுக்கு இல்லைனாலும் என் மேல பழைய அளவுக்கு லவ் இல்லாம போயிடுமோனு எனக்குள்ள ஒரு insecurity. அதான் மீரா சொல்லாம மறைச்சேன். ப்ளீஸ் நம்புடா... ஐ லவ் யு பேபி... I just... I just can't live without you honey..." என்றான்

கண்கள் முழுக்க காதலையும் எதிர்பார்ப்பையும் தேக்கி நின்றவனை கண்டதும், எதுவும் பேசாமல் சிறு விசும்பலுடன் அவன் மார்பில் முகம் புதைத்தாள் மீரா

அவனும் மௌனமாய் அவளை அணைத்து நின்றான். பல நாட்களுக்கு பின் நிம்மதியாய் மூச்சு விட முடிவது போல் அவனுக்கு தோன்றியது. எங்கோ தொலைந்து விட்ட உணர்வு மாறி சேர வேண்டிய இடத்தில் வந்து சேர்ந்த ஒரு உணர்வில் இருவரும் பேசக்கூட அவசியமின்றி அணைத்து நின்றனர்

மெல்ல அவள் விலக, விடாமல் இன்னும் அருகே இழுத்தவன் "This is first and last ever... இனி எப்பவும் நாம ஒரு நாள் கூட இப்படி பிரிஞ்சு இருக்க கூடாது மீரா" என்றான்

அப்போது தான் நினைவு வந்தவள் போல் கோபமாய் அவனை பார்த்தவள் "பேசாத நீ... எல்லாம் பொய்... இப்ப இப்படி எல்லாம் டயலாக் விடு... ஒரு மாசம் திரும்பி கூட பாக்காம என்னை அழ வெச்சப்ப இது தோணலையா?" என்றாள்

அவளின் உரிமையான கோபத்தில் தன் மீதான அளப்பரிய காதலை ரசித்தவன் "வர்ற மாதிரி situation இருந்திருந்தா நீ இந்தியாவுக்கு பிளைட் ஏறவே விட்டிருக்க மாட்டேனே பேபி" என்றான்

அவன் குரலில் இருந்தே ஏதோ மோசமாய் நடந்திருக்கிறது என்பதை யூகித்தவளாய் "என்னாச்சு ஸ்டீவ்?" என பதட்டமானாள்

"அன்னைக்கி இனி எனக்கும் உனக்கும் எந்த சம்மந்தமும் இல்லைனு நீ சொல்லிட்டு கிளம்பினதும் ரெம்ப கஷ்டமா இருந்தது, அது மொத்தமும் அப்படியே எங்கப்பா மேல கோபமா திரும்புச்சு. போய் பயங்கரமா சண்டை போட்டேன். வீட்டுல யாருமே அப்பாகிட்டே அப்படி பேசினதில்ல, யாரோ ஒரு பொண்ணுக்காக எப்படி நான் இப்படி பேசலாம்னு அப்பாவுக்கும் என் மேல பயங்கர கோபம். எங்கள சமாதானப்படுத்த ட்ரை பண்ணி முடியாம அம்மா ரெம்ப டென்ஷன் ஆய்ட்டாங்க. அம்மாவுக்கு பிரஷர் சூட் அப் ஆகி திடீர்னு she just fell unconscious. எவ்ளோ ட்ரை பண்ணியும் கண்ணே திறக்கல. உடனே 911 கூப்ட்டு ஆம்புலன்ஸ் வந்ததும் ஹாஸ்பிடல் போனோம். அம்மாவுக்கு இதுக்கு முன்னாடியே ரெண்டு தடவை மைல்ட் அட்டாக்ஸ் வந்திருக்கு, ஆனா சுகர் பேஷன்ட்'ங்கறதால அந்த painஐ கூட அவங்க recognize பண்ணல. Heartல Total Block, உடனே மேஜர் சர்ஜரி பண்ணனும்னு சொல்லிட்டாங்க..."

"ஐயோ... ஸ்டீவ் ப்ளீஸ் மொதல்ல இப்ப ஆன்ட்டிக்கு எப்படி இருக்குனு சொல்லு ப்ளீஸ்" என பதறியவளை கண்டதும், தன்னை சேர்ந்தவர்களிடம் கூட அவள் கொண்ட அன்பை மகிழ்வுடன் ரசித்தவன்

"டோண்ட் வொர்ரி மீரா. இப்ப எல்லாம் சரி ஆய்டுச்சு. ஆனா ரெம்ப பெரிய சர்ஜரி தான், அம்மாவை பாக்கறத விட அப்பாவை சமாளிக்கறது தான் ரெம்ப கஷ்டமா போய்டுச்சு. எப்பவும் ரெம்ப Strict Daddyயா மட்டுமே பாத்து பழகின அவர் அப்படி மொத்தமா collapse ஆகி அழுததை பாக்கவே முடியல மீரா. அம்மா கண் முழிச்சு பாக்கற வரைக்கும் அவர் அந்த இடத்த விட்டு நகரவே இல்ல"

"ச்சே பாவமில்ல..."என்றாள்

"ஆமா...அந்த நிலைமைல அப்பாவ விட்டுட்டு வர மனசில்ல. ஆனா அப்பவும் நீ இந்தியா கிளம்பற அன்னைக்கி உனக்கு பேச ட்ரை பண்ணினேன். நீ போன் எடுக்கவே இல்ல"

"கோபத்துல போனை தூக்கி போட்டு ஓடைச்சுட்டேன்" என்றாள் பாவமாய்

"ஹா ஹா... நீ போனை ஒடைச்சுட்ட நான் என் போனை எங்கயோ மிஸ் பண்ணிட்டேன். இன்னும் கிடைக்கல. ஹாஸ்பிடல்ல போன முதல் நாளே அந்த டென்ஷன்ல எங்கயோ போட்டுட்டேன் போல இருக்கு" என்றான்

"அப்புறம் என்னாச்சு?" என அவள் கவலையாய் கேட்க

அவள் மனதை இலகுவாக்கும் எண்ணத்துடன் "நான் என்ன கதையா சொல்றேன்... இவ்ளோ இண்டரெஸ்ட்ஆ கேக்கற?" என கேலி செய்தான்

அவன் கேலியை புரிந்தவளாய் முறைத்தவளை "இந்த கண்ண ரசிச்சு எவ்ளோ நாளாச்சு மீரா?" என குறும்பாய் சிரித்தான்

தான் கவலையாய் கேட்பதை பொருட்படுத்தாமல் விளையாட்டாய் பேசுகிறானே என்ற கோபத்தில் அடிக்க ஓங்கிய அவள் கைகளை பற்றி முத்தமிட்டவன்

"சரி சரி சொல்றேன். ஒரு வழியா அம்மா ரெகவர் ஆகி ரெண்டு வாரத்துல Ottawa வீட்டுக்கு போனோம். ஆனா அம்மாவுக்கு மொதல்ல இருந்த தைரியம் சுத்தமா போய்டுச்சு மீரா, கொஞ்ச நாள், தூக்கத்துல கூட திடீர்னு எழுந்து அப்பாவையும் என்னையும் கூப்ட்டுட்டே இருந்தாங்க. அம்மாவுக்கு இனி எதுவும் ஆகாதுனு தெரிஞ்சாலும் அப்படி இருக்கற நிலைமைல விட்டுட்டு வர மனசு வர்ல"

"ஒரு போன் பண்ணி சொல்லி இருக்கலாம்ல ஸ்டீவ். இது தெரியாம நான் உன்னை எப்படி எல்லாம் தப்பா நினைச்சுட்டேன் சாரி" என்றாள் நிஜமான வருத்ததுடன்

"ஆஹா... என்ன தப்பா நினைச்சேன்னு அப்புறம் மெதுவா கேட்டுட்டு அதுக்கு ஏத்த பனிஷ்மென்ட் கண்டிப்பா தருவேன்..." என கண்சிமிட்டி சிரித்தவன் "எங்க அப்பாவும் போனாச்சும் பண்ணி பேசிடுனு தான் சொன்னாரு" என்றவனை

"அப்பாவா?" என ஆச்சிர்யமாய் பார்த்தாள்

"எஸ்... அப்பா தான். உன்னை அப்படி பேசினதுக்கு ரெம்ப பீல் பண்ணினார், உன்கிட்ட சாரி கேக்கணும்னு சொல்லிட்டு இருக்கார். பதினெட்டு வயசுல ஒரு பொண்ணுகிட்ட நான் ஏமாந்ததுல அப்பாவுக்கு மறுபடி அப்படி எதாச்சும் ஆய்டுமோனு பயம். போதாதுக்கு நான் 'நீங்க சம்மதிச்சாலும் இல்லைனாலும் இவ தன் என் வைப்'னு சொன்னதும் அவர் என்னை protect பண்றதா நினைச்சு என்னனென்னமோ பேசி நீ டென்ஷன் ஆகி... ஹ்ம்ம்..." என எல்லாம் சரியான நிம்மதியில் பெருமூச்சு விட்டான்

அவனே தொடர்ந்து "ஆனா ஹாஸ்பிடல்ல இருந்தப்ப கூடவே இருந்ததால, நான் உன்னை நினைச்சு டென்ஷன் ஆகறத புரிஞ்சுட்டு சாரி சொன்னார். உன்னை பத்தி நானும் அவர்கிட்ட மனசுவிட்டு பேசினேன். அப்பத்தான் போன் பண்ணியாச்சும் பேசிடுனு சொன்னார்" என்றான்

"ஏன் நீ போன் கூட பண்ணல ஸ்டீவ்... என்னை நீ மறந்துட்டயோனு நான் எவ்ளோ பீல் பண்ணினேன் தெரியுமா?" என்றாள் வருத்தமாய்

"தெரியும் பேபி... நீயும் இங்க ஹப்பியா இருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும். ஆனா என்மேல ரெம்ப கோபமா வேற இருந்தயே, கனடால இருந்து கிளம்பற அன்னைக்கி போனும் எடுக்கலைனதும் மறுபடி போன் பண்ண பயமா இருந்தது. மொத்தமா கட் பண்ணிடுவயோனு டென்ஷன். நேர்ல போய் பேசினா நிச்சியமா உன்னை கன்வின்ஸ் பண்ணிடலாம்னு போன் பண்ணாம கண்ட்ரோல் பண்ணிட்டு இருந்தேன்" என்றவன் முறுவலித்து

"போதாததுக்கு சதீஷ் பயங்கரமா திட்டி ஈமெயில், பேஸ்புக் மெசேஜ், ஆர்குட் மெசேஜ்னு பயப்படுத்திட்டான். என்ன நடந்ததுனு கேட்டு மொதல் ஈமெயில் வந்தது, என்னனு சொன்னா நேர்லயே வந்து கொன்னுடுவான்னு தெரியும். நான் ரிப்ளை பண்ணவே இல்ல. அப்புறம் அவன்கிட்ட இருந்து வந்த அடுத்த ஈமெயில் தான் போன் பண்ணாம இருக்கறது பெட்டர்னு முடிவு பண்ண வெச்சது. 'இனி மீராவை பத்தி நினைக்க கூட எனக்கு தகுதி இல்லைனு ஒரே திட்டு, அவ வாழ்க்கைல உனக்கு இடமில்லை, இனி அவ கனடாவுக்கு வர்றதில்லனு முடிவு பண்ணிட்டா'னு பயங்கர டென்ஷன் பண்ணி விட்டுட்டான்" என்றான்

"ஹ்ம்ம்... நீ தான சொல்லுவ என் பாடிகார்ட்னு.. அப்படி தான் இருப்பான்" என சிரித்தாள் மீரா . பல நாட்களுக்கு பின் அவள் சிரிப்பை கண்ட மகிழ்வில் தன்னை மறந்து ரசித்தான்

"அது சரி... இப்ப மட்டும் எப்படி வரணும்னு தோணுச்சாம்" என்றாள் அவன் கவனத்தை திசை திருப்பும் எண்ணத்துடன், அவளுக்கும் அறிந்து கொள்ள வேண்டி இருந்தது

"அதுக்கும் சதீஷ் தான் காரணம்" என்றான்

"வாட்?" என மீரா விழிக்க

"உடனே அவன் என்னை வர சொன்னான்னு நீ ட்ரீம் அடிக்காத. அதுக்கு சான்சே இல்லயே" என சிரித்தவன்

"Actual ஆ அம்மாவுக்கு நெக்ஸ்ட் வீக் டாக்டர்கிட்ட review appointment இருக்கு. அது முடிஞ்சதும் வரணும்னு முடிவு பண்ணி டிக்கெட் எல்லாம் புக் பண்ணிட்டேன். லாஸ்ட் வீக் சதீஷ்கிட்ட இருந்து ஒரு ஈமெயில். நீ யாரையோ பாத்து நான்னு நினைச்சு ஏமாந்து அழுதேனு, அவள இப்படி பண்ணிட்டயேனு என்னை கண்டபடி திட்டி எழுதி இருந்தான். அதை கேட்டதும் எனக்கு அப்பவே உன்னை பாக்கணும்னு தோணிடுச்சு. அப்பா அக்கா எல்லாரும் நான் டென்சனா இருந்ததை பாத்துட்டு நாங்க அம்மாவ பாத்துக்கறோம் நீ கிளம்புனு சொன்னாங்க. அன்னைக்கே வரணும்னு ட்ரை பண்ணினேன், டிக்கெட் கிடைக்கல. இங்க வந்ததும் எனக்கு வீட்டு அட்ரஸ் எல்லாம் தெரியாதே, ஆனா நீ கம்பெனி பேர் சொன்ன ஞாபகம் இருந்தது. நேரா உங்க அப்பாவையே பாக்கலாம்னு போனேன். அங்க சதீஷும் இருந்தான், உங்கப்பா மட்டும் அவன கண்ட்ரோல் பண்ணாம இருந்திருந்தா என்னை அனேகமா நீ எமெர்ஜென்சி வார்ட்ல தான் வந்து பாத்திருக்கணும்" என சிரித்தான்

"ச்சே...என்ன பேச்சு இது?" என கோபப்பட்டவள், அப்போது தான் நினைவு வந்தவள் போல் "ஐயோ... அப்பாவுக்கு எப்படி? நீ இப்போ என் ரூம்ல... ஓ மை காட்...அப்படினா அம்மாவுக்கு கூட..." என விழித்தாள்

அதையும் ரசித்தவன் "ஹா ஹா...இவ்ளோ நேரம் இதெல்லாம் ஞாபகம் வரலியா... சரி விடு பேபி, இருக்கறதே கொஞ்சம் பிரைன் தான், அது எவ்ளோ தான் யோசிக்கும்" என கேலியாய் சிரித்தவன், அவள் முறைத்ததும் "டென்ஷன் ஆகாத மீரா, எல்லா விசயமும் சதீஷ் உங்கப்பாகிட்ட சொல்லிட்டன். Infact , நான் அவனுக்கு இப்ப தேங்க்ஸ் தான் சொல்லணும்" என சொன்னா அதே நேரத்தில்

"தேங்க்ஸ் சொல்றதுக்கு முன்னாடி நான் உன்ன கொல்லனும்" என்றபடியே சதீஷ் அறையினுள் வர, அவன் பின்னோடு மீராவின் அம்மா அப்பாவும் வந்தனர். மீரா சட்டென ஸ்டீவிடமிருந்து விலகி பெற்றோரின் அருகில் சென்றாள்

கவலை மறைந்து மகிழ்வாய் இருந்த மகளை கண்டு நெகிழ்ந்த அன்னை, அவளை அணைத்துக் கொண்டாள்

"என்ன மீராம்மா, படிச்சு முடிச்சப்புறம் கல்யாணம் வெச்சுக்கலாமா, இல்ல இப்பவேவா?" என அவள் தந்தை கேலியாய் கேட்க, மீரா பதில் சொல்லாமல் சிரித்தாள்

"அங்கிள்... எனக்கு உங்க மாப்பிள்ளகிட்ட நெறைய கணக்கு தீக்க வேண்டி இருக்கு. அதனால கல்யாணம் ஒரு வருஷம் கழிச்சு வெய்யுங்க" என்றான் சதீஷ், கோபமும் கேலியும் கலந்த குரலில்

"ஹா ஹா... நம்ம கணக்கெல்லாம் கனடால போய் வெச்சுக்கலாம் சதீஷ், கரெக்ட் தானே மீரா?" என அவளை பார்த்து கண் சிமிட்டியவனை முறைத்தான் சதீஷ்

"ஆரம்பிச்சுட்டீங்களா ரெண்டு பேரும்..." என மீரா பொய் கோபமாய் பார்க்க

"மீராவுக்காக பாக்கறேன்... இல்லைனா நீ காலிடா" என சதீஷ் கூற

"சதீஷ் ரெம்ப பேசினா அப்புறம் காயத்ரிகிட்ட கனடால நீ சைட் அடிச்ச மேட்டர் எல்லாம் போட்டு தருவேன்" என ஸ்டீவ் விளையாட்டாய் மிரட்ட

"அடப்பாவி... உங்கள ஜோடி சேத்தி வெச்ச பாவத்துக்கு என் ஜோடிய பிரிக்க பாக்கறியே. நான் மொதல்ல இடத்த காலி பண்றேன்"

"உன்னை தொரத்தறது இவ்ளோ ஈஸினு தெரியாமே போச்சே..." என சிரித்தான் ஸ்டீவ்

தன் சிரிப்பை மீரா ரசிப்பதை உணர்ந்து அவளை பார்க்க, அவள் வேண்டுமென்றே பார்வையை விலக்கினாள்

"சரி சரி... எல்லாரும் சாப்பிடலாம் வாங்க..." என மீராவின் அன்னை இங்கிதமாய் விலக, அதை புரிந்தது போல் அவள் தந்தையும் சதீஷும் தொடர்ந்து சென்றனர்

தனித்து விடப்பட்ட நொடியில்,மீராவை தன் கை அணைப்பில் ஸ்டீவ் இழுக்க "ஐயோ...விடு ஸ்டீவ்... அம்மா அப்பா..." என விலகியவளை

"ஏய் நான் பாக்காதப்ப என்னை சைட் அடிச்ச இல்ல.. இப்ப எதுக்கு டிராமா பண்றே?" என சீண்டினான்

"நான் ஒண்ணும் உன்னை பாக்கல... நீ தான் என்னை பாத்த" என தன் முக சிவப்பை மறைக்க முகம் திருப்பினாள்

"அப்படியா... அழகா இருக்கறதை ரசிக்கறது தப்பா? Its not a sin in my religion" என்று அவன் கூற

முன்னொரு சமயம் ஸ்டீவின் அபார்ட்மென்ட்டில் இவர்கள் இருவர் மட்டும் தனித்திருந்த ஒரு நாளில் இதே போல் பேசிய நினைவு இருவருக்கும் வர ஒன்றாய் மனம் விட்டு சிரித்தனர்

அவள் சிரிக்கும் அழகில் தன்னை மறந்தவன் "அன்னைக்கே இந்த கன்னத்து குழில நான் விழுந்துட்டேன் மீரா... இந்த ஜென்மத்துல தப்பிக்கற சான்ஸ் இல்லைனு நினைக்கிறேன் பேபி..." என சோகமாய் நடித்தவன், அவள் செல்லமாய் முறைக்கவும்

"இதுவும் அழகா இருக்கே... ஹும்ஹும்... எஸ்கேப் ஆக சான்சே இல்ல... " என்றவன்

திடீரென விலகி நின்று அவள் முன் மண்டியிட்டு, தயாராய் வைத்திருந்த மோதிரத்தை எடுத்து நீட்டி "Will you marry me sweety" எனவும் மீரா சரி என்பது போல் தலை அசைத்தாள்

அவள் அழகு விரலில் மோதிரம் அணிவித்து உரிமையாய் அணைத்து கொண்டான்

உன்விரல்பற்றி நடந்தபொழுதில்
உலகம்என் கையில்என்றுணர்ந்தேன்
என்உலகமே நீதான்
என்பதையும் அன்றுணர்ந்தேன் !!!

ஸ்டீவ் / மீரா காதல் ஜில்லுனு தொடரும்... ஆனா இந்த கதை இதோட முற்றும்...;)

 

44 பேரு சொல்லி இருக்காக:

அனாமிகா துவாரகன் said...

Vada

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

அப்பாடா அப்பாவிகிட்டே இருந்து தப்பிச்சாச்சு. lol. அருமையான முடிவு, அபல் திருப்பங்களுடன் சகோ

இராஜராஜேஸ்வரி said...

உன்விரல்பற்றி நடந்தபொழுதில்
உலகம்என் கையில்என்றுணர்ந்தேன்
என்உலகமே நீதான்
என்பதையும் அன்றுணர்ந்தேன் !!!//

சுபம்!! சுப முடிவல்ல ஆரம்பத்திற்கு வாழ்த்துக்கள்.

பத்மநாபன் said...

ஓரு கதை எடுத்து ...இவ்வளவு தூரம் பாகம் பாகமாக வர்ணனை கொடுத்து முடிப்பது என்பது லேசு பட்ட காரியமல்ல .... . ஓரு நாவலுக்கு உண்டான அத்தனை அம்சங்களும் உள்ளது .... வாழ்த்துகள் .

Anonymous said...

எப்படி புவனா

இப்படி சொன்ன சொல்லை காப்பாத்தி

ஊரு பேரை கௌரவ படுத்திட்டியே .,

அதுவும் 15 நாட்களாக கருமமே கண்ணாக

எடுத்த காரியைதை முடித்தே பாரு அங்கே தான்

நீ நிக்கிறே .......

I am proud of you .,Well done my girl!


priya.r

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஹனுமார் வால் போல மிக நீண்ட பகுதியாகி விட்டது இது. இருப்பினும் சுந்தரகாண்டம் போல சுபமாய் முடித்து விட்டீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றி, நன்றி, ந்ன்றி.

//உன்விரல்பற்றி நடந்தபொழுதில்
உலகம்என் கையில்என்றுணர்ந்தேன்
என்உலகமே நீதான்
என்பதையும் அன்றுணர்ந்தேன் !!!//

நல்ல இனிமையான வரிகள்.
முற்றும் அல்ல.
அந்த இள்ம் ஜோடிகளின் வாழ்க்கை இனி தொடரும்........தானே!

பிரதீபா said...

எனக்கு மிகப் பிடித்திருந்தது தொடர்.. கிண்டல், கேலி, சிரிப்பு, அழுகை எல்லாம் கலந்து கட்டி நல்ல கதை..

நண்பர்கள், தோழிகள் பல பேருக்கும் மிகப் பிடித்தது #Msg Conveyed

Vaalthukkal Appaavi akka !

காற்றில் எந்தன் கீதம் said...

கொஞ்சம் நீ............ளமான பகுதி தான் ஆனால் அழகான முடிவு...நல்ல ஒரு தொடர் நாடகம் பார்த்த திருப்தி. வாழ்த்துக்கள்

BalajiVenkat said...

enakku kadha aarambhikkum pothey theriyum... but indha gayu yaarunu marandhu pochu.. ennala thirumbhavum aarambhathula irundhulaam padikka mudiyaathu soliten... :D

vinu said...

ok ok ....

gayathri said...

very nice story bhuvana congrats!

gayathri said...

very nice story bhuvana congrats!

Anonymous said...

very well written Bhuvan. fANTASTIC finish. you have done a marvellous job. ithu pola plot irukkira kathaiyai continuity vidaama kondu povathe siramam.
BUT YOU HAVE DONE IT. WONDERFUL NARRATION AND BEAUTIFUL LOVE STORY.
HEARTFELT CONGRATS.
VALLIMA.

Thanai thalaivi said...

அப்பாடி தங்கமணி கிடைசிட்டாங்க ! நான் ரொம்ப கவலைபட்டுட்டேன் உங்களை காணோமேன்னு. இப்பகூட ஒரு தோழி கிட்ட பொலம்பிட்டு வந்தேன். எதுக்கும் இருக்கட்டுமேன்னு சிஸ்டம் ஓபன் பண்ணி பார்த்தா நீங்க வந்துடீங்க. இல்லைனா நாளைக்கு அரை காசு அம்மனுக்கு தான் வேண்டிக்கலாமுன்னு இருந்தேன். இன்னும் ஜில்லை கூட படிக்கலைங்க படிச்சிட்டு சொல்றேன்.

Sathya's said...

அருமையான கதை, நல்ல முடிவு. ஸ்டீவ், மீரா மற்றும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் ;) கொஞ்சம் பிரேக் எடுத்துகிட்டு அடுத்த கதை ஆரம்பிங்கோ கோ கோ கோ கோ ..
வேற வலி (நோ ஸ்பெல்லிங் மிச்டகே) இல்ல நாங்க படிகிறோம்...
உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்!!!!

A and A said...

Glad you are just busy not sick or something! Finally good end!

Vasagan said...

Good, nice end. Detailed comment later.
Waiting for next hot summer thodar.

அமைதிச்சாரல் said...

ஒருவழியா படிச்சுமுடிச்சுட்டேன்.. அசத்தல்.

kriishvp said...

அருமை சகோதரி அருமை! மூன்று வாரம் காக்க வச்சாலும் finishing touch superrrrrrrrrrrrrrr!!!!!!!!!!!!!

siva said...

20...erunga na poitu padichut varen.

நசரேயன் said...

கதை சுருக்கமா ஏதாவது இடுகை போட வாய்ப்பு இருக்கா ?

geetha said...

romba superunga

Thanai thalaivi said...

nice ending. latea vanthalum lastesta vanthuteenga.

Madhuram said...

//கதை சுருக்கமா ஏதாவது இடுகை போட வாய்ப்பு இருக்கா//

கதை சுருக்கமா? சுருக்கமா எழுத தெரிஞிரிந்தா தான் அப்பவாவி இந்த கதைய 10 வாரத்துல முடிச்சிருப்பாங்லெ!

கோவிக்காதிஙக அப்பாவி, சும்மா தான் சொன்னேன். நான் உஙகலுடய மிக பெரிய fan. I'm sure you know that.

That was a lovely ending to the story. You are able to express the feelings of the characters very well.

அப்பாதுரை said...

படிக்காம விட்டுப்போனது பத்தாவது இருக்கும்னு தோணுது.. முடிச்சுட்டீங்கள்ள, மெள்ள படிக்கிறேன்.

ஜவ்வ்வ்வ்வுனு ஒரு காதலா அப்பப்ப தோணினாலும் ஒரு சிறிய கருவை வச்சு இப்படி எழுதி முடிக்க திறமையும் வேணும், உழைப்பும் வேணும். இரண்டும் உங்க கிட்டே இருக்கு. முனைப்போட எழுதி முடிச்சதுக்கு வாழ்த்துக்கள்.

divyadharsan said...

ஹாய் அப்பாவி!!

எப்படி இருக்கீங்க? சூப்பர்!! கத முடிஞ்சிடுச்சா??
சூப்பர் என்டிங்..ரொம்ப ரொம்ப நன்றி! அழகா இருந்துச்சு.
அப்பாவினா மாசு ( massu)!! அவங்க கவிதை என்னிக்குமே கிளாஸ்சு!!!
எப்ப்புடிடிடிடிடிடிடிடிடிடி???


உங்கள மாறி நானும் பிஸி ரெண்டு வாரமா..
Packed everythng and came here.I mean U.S.
Got settled dwn with everything and jus opened gmail..
பார்த்து நான் அப்டே "shock" ஆயிட்டேன்:-௦ "GOK" eruthi paguthiyaa??
எல்லா வேலையையும் அப்டே போட்டுட்டு இப்போதான் படிச்சு முடிச்சேன்.
me happy happy:)) thankyou.ஆனா இவ்ளோ சீக்கிரம் முடிபீங்கன்னு எதிர்பார்க்கல.
என் பாப்பா First Birthday வர போகும்னு எதிர்பார்த்தேன் (ஹிஹி).

யு ஆர் ச்சோ ஸ்வீட்..சீக்கிரம் முடிச்சிட்டீங்க. பின்குறிப்ப பார்த்தால்ல தெரிது...
ஏதோ பெரிய சபதம் போட்டு இந்த வாரம் முடிச்சிருகீங்கன்னு...இல்லல..முடிக்க வெச்சிருகாங்கனு!!

Anyway thanks for the wonderful story and making us
to live in the love world for some weeks..
Finally you did it appavi:))
அதுசரி அப்டே ( குடுத்த வாக்கை மீறும் பழக்கம் எங்க கோயம்புத்தூர் மண்ணின் மைந்தர்கள் / மைந்திகள் யாருக்கும் இல்லையே.
அதனால எழுதின மொத்தத்தையும் இதே போஸ்ட்ல போட்டுட்டேன்னு. ) உங்க ஊரு பெருமையில முழுகி மெத்தனமா இருந்துடாம
சீக்க்ரமா சூடா ஒரு பஜ்ஜி கடைய.. சே!! ஒரு காதல் கதைய ஆரம்பிங்க...

வார வாரம் weekend வருதோ இல்லையோ..உங்க கதை வந்தாகணும் எனக்கு.
பழக்கமாயிடுச்சு.வேற என்ன பண்றது:)

"விரைவில் எங்கள் "அபிமான அப்பாவியின்"
அதிரடி திருப்பங்கள் நிறைந்த அறுசுவையான அதிசய காதல் கதை ஆரம்பம்!!
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது / கதையை படித்து பாதிபடைபவர்களுக்கு
சங்கம் பொறுப்பல்ல...) அப்பாவி மட்டுமே முழுபொறுப்பு!!

கதை ய ஆரம்பிக்கறது மட்டும்தான் அப்பாவிக்கு தெரியும்...
முடிக்கறது?? அந்த ஆண்டவனுக்கு (கூட தெரியாது) தான் தெரியும்.
சும்மா உங்க மைன்டுவாய்ஸ் மாறி ட்ரை பண்ணேன்.

என்னிக்குமே உங்க கதை சூப்பர்தான் அப்பாவி. Take care.Mt u soon.Tata.

Jaleela Kamal said...

நல்ல முடிவு கதை அருமை

Jaleela Kamal said...

ஜில்லுன்னே முடிந்தது/.

சுசி said...

//ஸ்டீவ் / மீரா காதல் ஜில்லுனு தொடரும்... ஆனா இந்த கதை இதோட முற்றும்...;)//

படிச்சு முடிச்சதும் ஜில்லுனு இருக்கு.. பாராட்டுகள் புவனா.. ரொமப நல்ல ரசனையோட கதைய கொண்டு போனிங்க..

அநியாயத்துக்கு சதீஷ திட்டி வச்சிட்டேன்.. அவர்ட்ட ஸாரி சொல்லிடுங்க..

அடுத்த கதை எப்போ தொடங்கும்??

ஹுஸைனம்மா said...

ஆமா, இந்தப் பதிவு ஏன் என் ரீடர்ல அப்-டேட் ஆகல? அதான் இவ்வளவு லேட்-கமிங்!!

டிவியில திடீர்னு சீரியலை முடிச்சு வெப்பாய்ங்களே, அந்த மாதிரி ஃபீலிங் வருது!! :-))))

//கோயம்புத்தூர் மண்ணின் மைந்தர்கள் / மைந்திகள்//

ச்சே.. மந்திகள்னு வாசிச்சுட்டேன், சாரி!!

உங்களை ஒரு தொடர்பதிவுக்குக் கூப்பிட்டிருக்கேன். சுற்றம் சூழ வருகை தந்து வாழ்த்தவும்!!

ஹுஸைனம்மா said...

நிஜமாவே என் பின்னூட்டத்துக்கப்புறம் வேற யாரும் இதுவரை பின்னூட்டம் எழுதலையா? இல்லை, வேற எதுவும் பிரச்னையா?

ஏன்னா, என் ரீடர்ல இந்தப் பதிவும் அப்-டேட் ஆகலை. பின்னூட்டமும் வரலைன்னா, ஏன்? புவனா, என்னை எதுவும் செஞ்சிட்டீங்களா? ;-))))

anubharat said...

உங்க ப்ளாக் ல எல்லாரும் தமிழ் ல தான் எழுதிருக்காங்க , நானும் அதையே ட்ரை பண்ணறேன். ஆபீஸ் ல ஒரு மூணு நாலா வேலை செய்ய முடியாம செஞ்சுடீங்க. நல்ல வேலை உங்க கதைய நீங்க முடிச்ச அப்பறம் தான் நான் படிக்க ஆரம்பிச்சேன் இல்லன கிளைமாக்ஸ் தெரியாம மண்டை ஓடஞ்சிருக்கும். ஒரு கதைல தேவையான சுவாரசியம் , விறு விருப்பு எல்லாம் தேவையான அளவு கொடுத்து நல்ல படியா மீரா வும் steve வும் ஒண்ணு சேத்து வெச்சதுக்கு மிக்க நன்றி. உங்களின் அடுத்த கதைக்காக மிகவும் ஆவலாக இருக்கிறேன் . ஆல் தி பெஸ்ட்

நிஜாம் என் பெயர் said...

வாழ்த்துக்கள்.... ஒரு வழியா கதைய முடிச்சதுக்கு..
i like ur POSITIVE thoughts rather than ur all stories, since u fixed the end of story in a well manner and writing.
குஷி படத்துல வர மாதிரி
இத்தாலிகாரனும், நம்ம தமிழ்நாட்டு பொண்ணுக்கும் லவ்வு.
இவங்க எப்படி இணையிரங்க தாங்க கதை
இவங்க தான் சேர போறாங்க எப்படி சேர போறாங்க
let us see the play.

இப்படிக்கா தொடங்கி ஒரு வழியா முடிச்சுடிங்க ..

ஆனா climax சும் குஷி மாதிரி வச்சுடிங்க
நம்ம தல பாலா படத்துல வர மாதிரி climax ல ஒரு fight வச்சு , ஸ்டீவும் சதிசும் அடிச்சு புரண்டு
நாரி போய் நாருநாரா கிழிஞ்சு , எவன் குரல்வளைய எவனாவது கடிச்சி, மீரா வந்து விளக்கு மாத்தாலையே அடிச்சு
(mindvoice - ஏன் இந்த கொல வெறி )
இப்படிக்கா முடிச்சா ,
பதிவுலக ராணியாக வலம் வர தங்களுக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது
(இது மேல சொன்ன கிளைமாக்ஸ் அ விட terror அ இருக்கே !!!)

/கொஞ்சம் பிஸி.../
இத படிச்சதும் ஒரே சிப்பு சிப்பா வந்துச்சு
யே.. ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன்
எல்லாரும் பாத்துகங்க நானும் பெரிய ரவுடி தான்

சீக்கிரம் சட்டு புட்டுன்னு அடுத்த கதை(தி)ய ஆரம்பிங்க

kriishvp said...

//@ Kriishvp - என்ன வார்த்தை சொல்லி விட்டீர்கள் சகோதரி....:)) இதோ போட்டுட்டேன் ஜில்லு... நீங்க போய் சல்லுனு படிங்க பாப்போம்... உங்கள் ஆவலுக்கு மிக்க நன்றி ...:)21 ஜூலை, 2011 4:16 am //

அன்புள்ள அப்பாவி சகோதரிக்கு , மன்னிக்கவும் நான் சகோதரி அல்ல சகோதரன்!. என் துணைவியார் தான் உங்கள் இடுகைக்கு என்னை அறிமுகப்படுத்தியது -
அன்புடன் -ப.இராமகிருஷ்ணன்

RAMVI said...

ஒரு அழகான நாவலே எழுதி முடிச்சுட்டீங்க அப்பாவி மேடம். சுபமான முடிவு, வாழ்த்துக்கள்.

கீதா said...

பாதியிலிருந்துதான் படிக்க ஆரம்பிச்சேன். ரொம்ப அழகாக் கொண்டுபோய் அழகா முடிச்சிட்டீங்க. அதிலும் இறுதிப் பகுதியில் காதலின் வலி சுமந்த பெண்ணின் உணர்வுகளை ரொம்ப அற்புதமா வெளிப்படுத்தியிருக்கீங்க, மனம் நிறைந்த பாராட்டுகள் புவனா.

Thanai thalaivi said...

எப்போவாவது காணமல் போனால்தான் எல்லோரும் தேடுவார்கள். இப்படி எப்போவுமே காணமல் போனால் யாரும் தேட மாட்டார்கள். நீங்க என்ன இயக்குனர் ஷங்கர் வீட்டுக்கு பக்கத்துக்கு வீடா? ஒரு படைப்புக்கு பின் இப்படி நீண்ட இடைவெளி எடுக்க.

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா - :)


@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - நன்றிங்க சகோ..:)


@ இராஜராஜேஸ்வரி - ரெம்ப நன்றிங்க


@ பத்மநாபன் - ரெம்ப நன்றிங்க அண்ணா...:)


@ priya.r - ஹா ஹா... தேங்க்ஸ் அக்கா...:)


@ வை.கோபாலகிருஷ்ணன் - ரெம்ப நன்றிங்க தொடர்ந்து படித்ததற்கு


@ பிரதீபா - ரெம்ப தேங்க்ஸ் தீபா... உன் நண்பர்கள், தோழிகள் பல பேருக்கும் என்னோட தேங்க்ஸ் சொல்லிடு...:)


@ காற்றில் எந்தன் கீதம் - ரெம்ப நன்றிங்க


@ BalajiVenkat - காயு யார்னு மறந்து போச்சா... போய் மொதல்ல இருந்து படி, டெஸ்ட் வெப்பேன்...:))


@ vinu - இந்த கமெண்ட் போடறதுக்கு தான் ரெண்டு வாரமா போஸ்ட் எங்க போஸ்ட் எங்கனு கேட்டீங்களா? அவ்வ்வவ்வ்வ்


@ gayathri - ரெம்ப நன்றிங்க காயத்ரி வெயிட் பண்ணி படிச்சதுக்கு... :)


@ வல்லிம்மா - ரெம்ப தேங்க்ஸ் அம்மா... :)


@ Thanai thalaivi - ரெம்ப நன்றிங்க அக்கறையா தேடினதுக்கு... ஆஹா... காசு முடிஞ்சு வெக்கற அளவுக்கு போயாச்சா... ஹா ஹா... :)


@ Sathya's - ரெம்ப நன்றிங்க சத்யா... தட்ஸ் குட்.. உங்க தைரியத்த நான் பாராட்டுறேன்... ஹா ஹா...:)


@ A and A - ரெம்ப நன்றிங்க அக்கறையா விசாரிச்சதுக்கு... கொஞ்சம் வேலை அதிகம்... அதான் லேட் போஸ்ட்... ரெம்ப நன்றி கதைய படிச்சதுக்கும்


@ Vasagan - ரெம்ப நன்றிங்க... கொஞ்சம் பிரேக் (படிக்கறவங்களுக்கு) எடுத்து அப்புறம் மறுபடி உயிரை வாங்க வரேன்...:)


@ அமைதிச்சாரல் - ரெம்ப நன்றிங்க அக்கா


@ kriishvp - ரெம்ப நன்றிங்க பொறுமையா படிச்சதுக்கு


@ siva - படிச்சுட்டு வரேன்னு போறவங்க யாரும் வர்றதில்ல திரும்பி... என்ன நடக்குது இங்க...:))


@ நசரேயன் - இதானுங்க சுருக்கம்.. இனி சுருக்கணும்னா கஷ்டம்...:)


@ geetha - ரெம்ப நன்றிங்க கீதா


@ Thanai thalaivi - ரெம்ப நன்றிங்க பொறுமையா காத்திருந்து படிச்சதுக்கு


@ Madhuram - அதானே... சுருக்கமா எழுதறதுக்கும் எனக்கும் இந்தியா கனடா அளவுக்கு தூரமாச்சே... :))... Oh yes I know, you're my fan, AC , காத்தாடி எல்லாமும்...:)) ஜஸ்ட் கிட்டிங்... ரெம்ப நன்றி மது...


@ அப்பாதுரை - ரெம்ப நன்றிங்க


@ divyadharsan - ஹேய் திவ்யா, எங்க ஆளை காணோம்னு நினைச்சுட்டு இருந்தேன்... என்னாது மாஸு கிளாசுவா? அவ்வ்வ்வவ்... நீங்க டி.ஆர் fan னு சொல்லவே இல்லையே...:)) ஓ... இங்க வந்து செட்டில் ஆயாச்சா... சூப்பர்... உடனே படிச்சதுக்கு ரெம்ப நன்றி... ஹா ஹா... பாப்பா பர்த்டே எப்போன்னு சொல்லுங்க, புதுசா ஒரு கதை ஆரம்பிச்சு அடுத்த பர்த்டே'குள்ள முடிப்போம்... :)) I should thank you all readers for the encouraging words and ragalais which is driving me to write more...:)) ha ha... மறுபடி ஆரம்பிக்கறதா? கண்டிப்பா... கொஞ்ச நாள் நிம்மதியா இருங்க, அப்புறம் உயிர வாங்க வரேன் புது தொடர்கதையோட...:) வர வர நீங்க மைண்ட்வாய்ஸ்'ஐ விட அதிகமா வார ஆரம்பிச்சுட்டீங்க திவ்யா... இருங்க, அடுத்த வாட்டி மிஸ்டர் ஒபாமாவை மீட் பண்றப்ப போட்டு தரேன்...:)) ரெம்ப தேங்க்ஸ் திவ்யா... குட்டி பாப்பாவை பாத்துக்கற பிஸிலயும் தொடர்ந்து படிச்சதுக்கு... :)


@ Jaleela Kamal - ரெம்ப நன்றிங்க ஜலீலா அக்கா...:)


@ சுசி - ரெம்ப நன்றிங்க சுசி... :) அடுத்த கதை எப்ப வேணா தொடங்க நான் ரெடி... நீங்க எல்லாம் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க... ஆரம்பிச்சுடுவோம்...:)


@ ஹுஸைனம்மா - பிளாக்கர் ஏதோ பிரச்சனை போல இருக்குங்க அக்கா... நெறைய பேருக்கு அப்டேட் ஆகலை... என்னது மந்திகளா? சரி விடுங்க, நாம எல்லாரும் அதுல இருந்து வந்தவங்க தானே...:)) தொடர்பதிவா... சூப்பர்... எழுதிடறேன்...நன்றிங்க...:)


@ anubharat - ரெம்ப நன்றிங்க முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்... :)


@ நிஜாம் என் பெயர் - ஹா ஹா ஹா... நீங்க தனியா ஒரு ஸ்க்ரீன்ப்ளே எழுதிட்டீங்க போல இருக்கே... சூப்பர்... நன்றிங்க...:)


@ kriishvp - ஓ... அப்படிங்களா... உங்கள் துணைவியாருக்கு என் நன்றிய சொல்லிடுங்க..:)


@ RAMVI - ரெம்ப நன்றிங்க


@ கீதா - ரெம்ப நன்றிங்க கீதா... வருகைக்கும் பாராட்டுக்கும்...:)


@ Thanai thalaivi - ஹா ஹா ஹா... தலைவிஜி, நான் என்னமோ கொட நாட்டுல ரெஸ்ட் எடுக்க போன மாதிரி நீங்க சொல்றது கேக்க நல்லாத்தான் இருக்குங்க... ஆனா, சங்கர் சார் உங்க கமெண்ட் படிச்சுட்டு உங்க மேல வழக்கு போட்டா நான் பொறுப்பில்ல சொல்லிட்டேன்... ஹா ஹா... நானும் blogging மிஸ் பண்றேன்... ஆபீஸ்ல வீட்ல ரெண்டு பக்கமும் கொஞ்சம் வேலை அதிகம்ங்க, அதான் ஒண்ணும் எழுத முடியல... விட்டது தொல்லைனு மக்கள் எல்லாம் நிம்மதியாக வேண்டாம்... மறுபடி உயிர வாங்க வருவேன்... இதோ இப்பவே ஒரு போஸ்ட் போட போறேன்... என்ஜாய்....:))) (இதான் சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கறது தலைவிஜி...:)))

Sri Seethalakshmi said...

வழக்கம் போல கதை அருமைனு ஒருவரில சொல்லிட முடியாது, ஏனெனில் அத்துனை அற்புதமாய் இருக்கு.

இதுவரை கமெண்ட் போடலன்னு ரொம்ப சந்தோஷ பட்டு இருபாங்க பாவம் (அப்பாவி தான் வேற யாரு ?!)

இனிமே அது முடியாது.... வந்துட்டேன் வந்துட்டேன் :-)

ரொம்ப கஷ்டப்பட்டு எழுதி இருக்கீங்க (அவ்வ்வ்வவ்வ்வ்வவ் எவ்வ்வ்வவ்ளோ பெரியாஆஆஆஅ கதை)

(என்னடா இவ ஜூலை போஸ்ட் இவ்வளோ சீக்கிரமா கமெண்ட் போடறலேனு எதுவும் சொல்லிடாதீங்க அப்பாவி :-))

அப்பாவி தங்கமணி said...

@ Sri Seethalakshmi - எங்க உங்கள காணோம்னு நெனச்சுகிட்டேன்.... பயந்து எஸ்கேப் ஆயட்டீங்கணும் முடிவே பண்ணிட்டேன்... :)) நல்லவேள அடுத்த கதை ஆரம்பிக்கறதுக்குள்ள வந்துட்டீங்க... சூப்பர்... ஹா ஹா... ஆனா லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்ஆ நல்லா கமெண்ட் போட்டு இருக்கீங்க... ஜோக்ஸ் அபார்ட்... ரெம்ப நன்றிங்க தொடர்ந்து படிச்சதுக்கு...:)

தெய்வசுகந்தி said...

மொத்தமா இன்னிக்குதான் படிச்சேன். சூப்பர்!!!

அப்பாவி தங்கமணி said...

@ தெய்வசுகந்தி - Thanks a lot Suganthi...:)

விச்சு said...

இன்றைய வலைச்சத்தில் தங்களின் பதிவு http://blogintamil.blogspot.in/

அப்பாவி தங்கமணி said...

@ விச்சு - ரெம்ப நன்றிங்க...;)

Post a Comment