Sunday, August 07, 2011

காயத்ரி மந்த்ரம்... (சிறுகதை)
"மூணு பேரும் அங்க தானே இருக்கேள், அந்த போன் கத்தறதோன்னோ... ஏண்ணா, நீங்களாச்சும் எடுங்கோளேன்...நான் தளிகை பண்ணின்டுருக்கேன்" மனைவி ருக்மணியின் குரலில், பத்திரிகையில் மூழ்கி இருந்தவர் கவனம் கலைய

"இந்த நேரத்துல கூப்பிடறது வெட்டியா இருக்கற உங்காத்து மனுசாளாத்தான் இருக்கும்... நான் எடுத்து எதுனா பேசினா பின்ன 'ஏன் இப்படி சொன்னேள், ஏன் இப்படி சொல்லலை'னு உன் வம்பு நேக்கு வேணாம் தாயே" என்றார் ரங்கராஜன் நமுட்டு சிரிப்போடு

"என் பொறந்தாத்து மனுசாளை சீண்டாம ஒரு நாள் விடியுமா என்ன உங்களுக்கு... ஹ்ம்ம்... " என கணவனிடம் சலித்தவள் "ஏன்டா சின்னவனே இப்ப நீ போன் எடுக்க போறியா இல்லையா... திரும்பவும் மணி அடிக்கறது பாரு" என்றாள் ருக்மணி சற்று கோபமாய், தன் இளைய மகனிடம்

"ஆமா... இப்படி ஏவறதுக்கு மட்டும் சின்னவன் நான் வேணும்... தலைல தூக்கி வெசுக்கரச்ச உன் சீமந்த புத்தரன் பெரியவன் வேணும்...ஹ்ம்ம்..." என சலித்து கொண்டே போய் தொலைபேசியை எடுத்தான் கேசவ்

"ஹலோ..."

"ஹலோ ராகவ் இருக்காரா?" என்றது எதிர்முனை பெண் குரல்

பெண் குரல் என்றதும் சுவாரஸ்யம் தூண்ட "நீங்க?" என கேசவ் கேள்வியாய் நிறுத்த, எதிர்முனையில் சிறிது நேரம் மௌனம் நிலவியது

"ஹலோ...யார்னு கேட்டேனே?" என்றான் கேசவ் மீண்டும், சற்று அதட்டலாய்

"ம்... பார்வதி நம்பியார்" என்றது எதிர்முனை சற்று கேலியாய்

ஒரு கணம் மௌனமாய் யோசித்த கேசவ், புரிந்தவனாய் சிரிப்பை அடக்கி கொண்டு "என்னது... பார்வதி நம்பியாரா? ராகவ்கிட்ட பேசணுமா?" என்றான் வேண்டுமென்றே சத்தமாய், ஓரகண்ணால் அண்ணன் ராகவ்'ஐ பார்த்தபடியே

அவன் எதிர்பார்த்தது போலவே அவசரமாய் எழுந்து வந்தான் ராகவ். போனை கேசவ் கையில் இருந்து பிடுங்கியவன் "போ..." என்பது போல் ஜாடை காட்டினான்

"டேய் அண்ணா... யாரது பார்வதி நம்பியார்? புதுசா இருக்கே உன் பிரெண்ட் பேரு... 1947 பேர் போல இருக்கே" என நகராமல் வம்பு செய்தான் கேசவ்

"ம்... என் பிரெண்ட் உடைய அம்மா.. போறுமா? இன்னும் விளக்கம் சொல்லணுமா?" என முறைத்தான் ராகவ்

ஒன்றும் பேசாமல் கேலியாய் சிரித்தவாறே நகர்ந்தான் கேசவ். அவன் சென்று விட்டான் என உறுதி செய்து கொண்டதும், தன் தந்தை முன்னறையில் அமர்ந்திருப்பதை ஊர்ஜிதப்படுத்தியவன் "அறிவிருக்காடி நோக்கு.." என தொலைபேசியில் அடிக்குரலில் சீறினான் ராகவ்

"அது இருந்தா உன்ன லவ் பண்ணி இருப்பேனா ராகவ்" என சிரித்தாள் காயத்ரி

"இந்த கொழுப்புக்கு கொறச்சல் இல்ல... போன் வெய்... நான் செல்லுல இருந்து கூப்பிடறேன்" என தன் அறைக்குள் சென்று செல்போன் எடுத்து அழுத்தினான்

அவள் ஹலோ எனும் முன் "எதுக்கு லேன்ட் லைன்ல கூப்ட்ட?" என்றான் கோபமாய்

"செல்போன் அடிச்சா எடுக்கல.... அதான் அதுல கூப்ட்டேன்..." என்றாள் வேண்டுமென்றே சிரிப்புடன்

"நேத்து ரெண்டு மணி நேரம் வெயிட் பண்ணின்டிருந்தேன் நீ வருவேனு... ஒரு போன் பண்ற கர்டசி கூட இல்ல... அதான் உன் கால் எடுக்கல... இப்பவும் உன்னிட்ட பேசற எண்ணமில்ல.. வெய் போனை" என்றான் கோபம் குறையாத குரலில்

"சாரி சாரி சாரி, நேத்தைக்கு எங்க மாமா ஆத்துல இருந்து எல்லாரும் வந்திருந்தா... சட்டுன்னு கிளம்ப முடியல... என் ரூம்ல ஒரு கும்பலே இருந்தது... அதான் போன் கூட பண்ண முடியல... சாரி ராகவ்" என்றாள் நிஜமான வருத்ததுடன்

"ஓ... இப்ப புரியறதுடி நேக்கு... உன் அம்மாஞ்சிய(மாமன் மகன்) பாத்ததும் என்னை பாக்க வரேன்னது மறந்து போய்டுத்து இல்ல" என்றவனின் குரலில் இருந்த உரிமை கலந்த கோபத்தை புரிந்து கொண்டவளாய் சிரித்தாள்

"என்ன சிரிப்பு இப்போ... நான் வெக்கறேன்" என்றான் கோபமாய்

"ஏய் ஏய்... சாரி ராகவ்... அப்படி இல்லப்பா... நெஜமாவே சூழ்நில போன் பண்றாப்ல இல்ல...சாரி சொல்லிட்டேனே... ப்ளீஸ்" என காயத்ரி கெஞ்சலாய் கேட்க, அந்த கெஞ்சலில் இவன் கோபம் கரைந்தது

"தொலஞ்சு போ..." என்றவன் "கொஞ்சம் ஏமாந்தா ஆத்துல மாட்டி விட்டுருப்ப...ச்சே" என்றவனின் குரலில் நிஜமான பயம் தெறித்தது

"அதுக்கு தான் காவலன் படத்துல வர்ற code word சொன்னேன்...வடிவேலு சொல்ற மாதிரி பார்வதி நம்பியார்... அதாவது பிரைவேட் நம்பர்.... உன் காயத்ரி சமத்து தானே ராகவ்" என அவள் உரிமையாய் கொஞ்ச, அதை அவன் உள்ளூற ரசித்த போதும்

"உன் தலை... காவலன் படத்த நோக்கும் நேக்கும் மட்டும் தான் விஜய் exclusive ஷோ போட்டாரா? ஊரே தான் பாத்திருக்கும்... என் தம்பி வேற ஒரு மாதிரி சிரிச்சுண்டு போறான்... அவனை வேற சரி கட்டணும் இனி..... ஐயோ... இப்படி மாட்டி விடறியேடி" என புலம்பினான்

"சரி சரி நோ டென்ஷன் ராகவ்... இன்னிக்கி மீட் பண்ணலாமா அதை கேக்கதான் கூப்ட்டேன்"

"ஏன் உன் அம்மாஞ்சி ஆத்துல இல்லையா?" என வம்பு செய்தான்

"சரி... அவனோடயே போய்க்கறேன் வெய்" என்றாள் அவளும் சளைக்காமல்

"ஏய்... கொன்னுடுவேன்... விட்டா போதும்னு ஒடுவ போல...நேரத்தோட வந்து சேரு" என்றவன், அதன் பின்னும் சில மணி நேரம் (!) செல் போன் பேட்டரி "கொஞ்சம் சார்ஜ் போடேன்" என கெஞ்சும் வரை பேசி கொண்டே இருந்தான்

************************************************

அன்று இரவு உணவு உண்ணும் வேளையில் வழக்கம் போல் பெரியவனின் திருமண பேச்சை எடுத்தாள் ருக்மணி

"ஏன்னா... நேத்திக்கி எங்க மன்னி வந்திருந்தா..." என இழுக்க, பேச்சு போகும் திசையை உணர்ந்தவர் வேண்டுமென்றே

"அந்த சாற்றமுது கொஞ்சம் இப்படி எடு ராகவ்" என உண்ணும் விசையில் இருப்பது போல் பிடிகொடுக்காமல் பேசினார் ரங்கராஜன்

"நான் என்ன சொல்றேன்.. நீங்க என்ன கேக்கறேள்... எங்காத்து மனுசா பத்தி பேசினா எப்பவும் இப்படி தான்... " என ருக்மணி கண்ணை கசக்க

"டீ ருக்கு... சாப்பிடரச்சே சாற்றமுது பத்தி கேக்காம உன் அண்ணன் ஆராவமுதன் பத்தி கேக்க முடியுமா சொல்லு" என கேலியாய் சிரித்தார்

"இங்க பாருங்கோ... நீங்க என்ன பண்ணுவேளோ தெரியாது... வர்ற வைகாசில நம்ம ராகவ்க்கும் என் அண்ணா பொண்ணு வைதேகிக்கும் முஹுர்த்தம் பாக்கறோம்.... அதுக்கு நீங்க தான் பொறுப்பு" என்றாள் தீர்மானம் போல்

இதை கேட்ட அதிர்ச்சியில் ராகவ்க்கு புரை ஏறியது. எப்போதும் தன் அன்னை ருக்மணி இந்த பேச்சை எடுப்பது தான் என்றாலும் இந்த முறை முடிவு செய்தது போல் பேசியதில் அதிர்ச்சியானான்

ஒரு ஒரு முறையும் ஏதேனும் சாக்கு சொல்லி தப்பித்து வந்தவன் இன்று என்ன செய்யப்போகிறோம் என புரியாமல் விழித்தான். ஆனால் இன்று தன் தந்தையும் இதில் பிடி கொடுக்காமல் பேசியதில் ராகவ் சற்று குழம்பித்தான் போனான்

காயத்ரி போன் வந்ததில் இருந்து கிண்டல் பார்வை பார்க்கும் தம்பி கேசவ் ஏதேனும் உளறி விடுவானோ என்ற பயத்தில் அவன் பக்கம் பார்க்க, அவன் கேலியாய் சிரித்தான். அது வேறு வயிற்றில் புளியை கரைத்தது

"ருக்கு... இன்னும் கொஞ்ச நாள் போட்டும்டி... ஜாலியா இருக்கற வயசு... அவனையும் ஏன் சம்சார சாகரத்துல சிக்க வெக்கணும்னு துடிக்கறே" என ரங்கராஜன் தன் ஆட்சேபனையை தெரிவித்தார். அதன் பின் ராகவ் சற்று நிம்மதியானான்

"என்னண்ணா பேசறேள்... என் தங்கை பிள்ளை கிருஷ்ணா இவன விட ஆறு மாசம் சின்னவன். அவனுக்கு முஹுர்த்தம் குறிச்சாச்சு"

"இங்க பாருடி ருக்கு... காதலிக்கறது பஸ்ல போற மாதிரி, பிடிக்கலேன்னா அடுத்த ஸ்டாப்ல எறங்கினுடலாம்... ஆனா கல்யாணங்கறது விமான பயணம்... பிடிக்கலேன்னு எறங்கினா பரலோகம் தான்" என மகன்கள் இருவரையும் பார்த்து அர்த்த புன்னகை பூத்தார்

"இதென்ன புது விளக்கம்மான்னா இருக்கு... யார் சொன்னதாம் இது" என்றாள் ருக்மணி ஆர்வமாய்

"அது... வடிவேல் சித்தர்னு ஒத்தர், மதுரை பக்கம் இருந்து 'புயல்' மாதிரி வருவாராம்... சமீபத்துல 'காவலன்'னு ஒரு காலட்சேபம் கூட நடந்ததாமே... நோக்கு தெரியாதா ருக்கு?" என சினிமா அதிகம் விரும்பாத மனைவியிடம் வினவியவர்

"ஏண்டா ராகவா, நான் சொல்றது சரி தானே..." என மகனை கேள்வியாய் நோக்க

"அப்பா அது வந்து... " என ராகவ் இழுத்தான்

"டேய் கேசவா, பார்வதி நம்பியார் கருத்து கூட அந்த சித்தர் சொன்னது தானே" என இளைய மகனை பார்த்து கண் சிமிட்ட, அதற்கு மேல் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சத்தமாய் சிரித்தான் கேசவ்

அப்போது தான் ஏதோ விஷயம் என உணர்ந்தாள் ருக்மணி "என்ன நடக்கறது இங்க... என்னமோ அப்பாவும் புள்ளைகளும் பூடகமா பேசிக்கறேள்... நேக்கு ஒண்ணும் புரியல" என்றாள் புரியாத எரிச்சலுடன்

"ருக்கு... உன் பசங்களுக்கு சினிமா அவா மட்டும் தான் பாக்கறதா நெனப்பு... அதான் நூறு சேனல்ல தெனமும் போடறானே எல்லா காமடி சீனும்..." என சிரித்தார்

"அப்பா... நான்...அது... நானே உங்கள்ட்ட..." தந்தை கண்டுபிடித்து விட்டார் என்பது புரிய, ராகவ்  தயக்கத்துடன் தலை குனிந்தான்

"டேய் ராகவ்... இப்ப என்ன தப்பு செஞ்சுட்டேனு தல குனியற... காதலிக்கறது எந்த தப்புமில்ல... சரியான இணையாங்கறது தான் என் கவலை" என்றார் பெற்றவருக்கே உரிய ஆதங்கமாய்

ராகவ் பதில் சொல்லும் முன் "என்ன சொல்றேள்... யாருக்கு காதல்... ராகவ் என்னடா இதெல்லாம்... என் தலைல கல்ல தூக்கி போடறியே" என ருக்மணி அழத்துவங்க

"ருக்மணி... நீ சும்மா இரு.. சொல்லு ராகவ்... யாரு அந்த பொண்ணு... இன்னிக்கி காத்தால பேசினவ தானே" எனவும்

அன்னையை யோசனையாய் பார்த்தபடியே "ஆமாம்ப்பா... அது... காயத்ரினு... எங்க பேங்க் மேனேஜர் வெங்கட்ராமன் சார் பொண்ணு" என தயக்கத்தோடு கூறினான்

ஒரு கணம் யோசனையாய் பார்த்தவர் "அவர் பத்தி கேள்விபட்டிருக்கேன்... நல்ல மனுஷன்... நல்ல குடும்பம்... பொண்ணு என்ன பண்றா? அவாத்துல தெரியுமா?" என கேள்விகனைகளை அடுக்க

"அவ CA Final எழுத போறாப்பா... அவ அப்பாவுக்கு தெரியும்... ஆனா நாங்களா பேசட்டும்னு நினைக்கறார் போல... எதுவும் கேக்கல அவர் இது வரை... காயத்ரி CA முடிச்சப்புறம் உங்கள்ட்ட பேசலாம்னு நான்  காத்துன்டுருந்தேன்... அதுக்குள்ள நீங்களே... சாரிப்பா.." என்றான்

ஏற்ற வரன் தான் என புரிந்தததும் மகிழ்வுடன் "பேஷ் பேஷ்...  ஆடிட்டர்  நாட்டுப்பொண்ணா... டீ ருக்கு.... நோக்கு இனி விடுதலை தான்...  ஆத்து கணக்கு  வழக்கெல்லாம்  அவள்ட்ட  ஒப்படைச்சுட்டு உங்காத்து மனுசாளோட ஜமாய்" என சிரித்தார்

"ஏண்ணா... என்ன பேசறேள்... விட்டா சம்மந்தம் பேசுவேள் போல இருக்கே" என படபடத்தாள் ருக்மணி

"ஆமா ருக்கு... சம்மந்தம் தான்... பிள்ளைங்க சந்தோஷம் தானே நமக்கு முக்கியம்"

"அப்போ...எங்க அண்ணாவுக்கு நான் என்ன சொல்லட்டும்" என ருக்மணி முகம் வாட, தந்தையின் சம்மதம் புரிந்து கொண்ட கேசவ், சூழ்நிலையை இளக செய்யும் நோக்குடன் "நீ வருத்தப்படாதேம்மா.. வைதேகிக்கு நானாச்சு" என்றான் சோகமாய் முகத்தை வைத்து கொண்டே

"அறிவு கெட்டவனே... அவ உன்ன விட ரெண்டு வயசு மூத்தவடா" என்றாள் அன்னை கோபம் குறையாமல்

"அதுகென்னம்மா... நம்ம சச்சின் ஆத்துக்காரி கூட அவன விட மூத்தவ தானாம்... இவ்ளோ ஏன்? மகாத்மா காந்தியோட ஆத்துக்காரிகூட மூத்தவ தான்" என அவன் சிரிக்கவும், அவன் கேலி செய்வது புரிந்து தந்தையும் தமையனும் சிரிக்க

"எல்லாருக்கும் நான் இளப்பமா போயிட்டேன்... ஒண்ணு சேந்து என்னை ஒதுக்கிட்டேள் இல்ல... இருங்கோ அப்படியே இருங்கோ" என ருக்மணி வராத கண்ணீரை துடைத்து கொண்டே எழுந்து செல்ல முயல

"ருக்கு... நீ தானே நம்மாத்து அச்சாரம்... நீ இல்லாம நாங்க வெறும் சக்கரம் ஒண்ணும் செய்யரதுகில்லடி..." என மனைவியை தாஜா செய்தார் ரங்கராஜன்.  சமாதானம் செய்ய கூறியது என்றாலும், மனைவியின் மீது   கொண்ட அன்பு, அவர் குரலில் தெறித்தது

அது புரிந்த போதும், அப்போது இருந்த மனநிலையில் "இந்த பேச்சுக்கு ஒண்ணும் கொறச்சல் இல்ல... " என ருக்மணி முகம் திருப்ப

"இங்க பாரு ருக்கு... அத்தங்கா(அத்தை மகள்) அம்மாஞ்சி(மாமன் மகன்)னு பொறப்புல இருந்தே நெனப்புல வாழ்ந்ததெல்லாம் அந்த காலம்... அது நல்லதில்லனு டாக்டர்ஸ் எல்லாம் கூட சொல்றாளே இப்போ... வைதேகி இந்த காலத்து பொண்ணு... அவளுக்கும் இதுல விருப்பம் இருக்கறாப்ல நேக்கு தோணல... ராகவ் இஷ்டபட்ற பொண்ணும் நல்ல குடும்பத்து பொண்ணு தான்... அவன் விருப்படியே நடப்போமே...என்ன சொல்ற ருக்கு?" என மனைவியை கேள்வியாய் பார்த்தார் ரங்கராஜன்

தன்னிடம் கருத்து கேட்பது போன்ற தெனி தெரிந்தாலும், அவர் மனதின் தீர்மானம் அவர் குரலில் ஒலித்ததை இத்தனை வருட தாம்பத்யத்தில் புரிந்து கொண்டாள் ருக்மணி

மனைவியின் கருத்துக்கு எப்போதும் மதிப்பு கொடுப்பவர் தான் ரங்கராஜன், ஆனால் தனக்கு சரியென தோன்றுவதை எடுத்து சொல்லி புரிய வைத்து ஒப்புகொள்ள செய்வதிலும் வல்லவர் என்பதை ருக்மணி அறிந்தே இருந்தார்

அதோடு, அவர் எடுக்கும் முடிவுகள் என்றும் தவறாய் போனதில்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்தும் இருந்தாள். இருந்தாலும் தன் அண்ணன் மகளை மருமகளாய் கொண்டு வரும் கனவு சிதைந்ததில் சற்று வருத்தம் இருந்தது மனதில்

அதே வருத்ததுடன் "ம்...எல்லாம் அவன் இஷ்டப்படியே நடக்கட்டும்" என்றாள் பெரிய மகனை பார்த்தபடியே

"அம்மா... உன் இஷ்டமும் சேத்துனு சொல்லுமா... ப்ளீஸ்" என ராகவ் கெஞ்சலாய் பார்க்க, இந்த காலத்து சில பிள்ளைகள் போல் என் விருப்பம் தான் முக்கியம் என நினைக்காமல், பெற்றவளின் சம்மதமும் வேண்டுமென நிற்கிறானே தன் பிள்ளை என நெகிழ்ந்தாள் ருக்மணி

அந்த கணத்தில் மனதில் இருந்த சிறு வருத்தம் கூட தொலைந்து போக, மனம் நிறைந்த சந்தோசத்துடன்  "அப்படியே ஆகாட்டுண்டா கண்ணா" என மகனின் தலை தொட்டு ஆசீர்வாதம் போல் வருடினாள் ருக்மணி

"அப்போ இனிமே நம்மாத்துல தெனமும் 'ஓம் புர் புவஹா ஸ்வஹா' தான் இல்லையா" என கேசவ் சிரிக்க, ஒரு கணம் புரியாமல் விழித்த மற்றவர்களும் பின் சேர்ந்து சிரிக்க

"ஆனாலும் கொழுப்புடா கேசவ் நோக்கு" என்றான் ராகவ் சிரிப்பினூடே

"ஆஹா...மன்னி பேரை நெத்தில அடிச்சாப்பல சொல்ல வேண்டாம்னு காயத்ரி மந்திரம் சொல்றது தப்பா... ஹும்" என பொய்யாய் சலித்து கொண்டான் கேசவ்

"அம்மா, ஆனா ஒரு விஷயம் 'என் புள்ள சமத்து... வார கடேசீல கூட மேனேஜர் ஆத்துல ஏதோ கணக்கு வேலைனு போறான்.. நீயும் இருக்கியே ஊர் சுத்தி' னு என்னை திட்டுவியே அடிக்கடி... இப்போ பாரு உன் புள்ளாண்டான் என்ன கணக்கு பண்ணி இருக்கான்னு... எங்க மேனேஜர்க்கு இப்படி ஒரு பொண்ணு இருந்தா நானும் தான் ஞாயத்துக்கிழமை கூட ஜோலி பாக்க போவேன்" என இது தான் சாக்கென கேசவ் தன் அண்ணனை வம்பு செய்ய, அவன் காது பற்றி திருகினான் ராகவ்

"டேய் அண்ணா...விட்றா... ஆ.... வலிக்கறது... கொஞ்ச நாள்ல மன்னி நோக்கு செய்ய போறத நேக்கு Demonstrate பண்ணி காட்றியா?" என கேசவ் மேலும் வம்பு செய்ய, எல்லாரும் சிரிக்க, அப்போதே கல்யாண களை கட்டியது வீடு

காயத்ரி கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராகவ் கல்யாண வைபோகமே
காயத்ரி கல்யாண வைபோகமே
ஸ்ரீ ராகவ் கல்யாண வைபோகமே!!!

...:)

52 பேரு சொல்லி இருக்காக:

எல் கே said...

simple and nice

இராஜராஜேஸ்வரி said...

இங்க பாருடி ருக்கு... காதலிக்கறது பஸ்ல போற மாதிரி, பிடிக்கலேன்னா அடுத்த ஸ்டாப்ல எறங்கினுடலாம்... ஆனா கல்யாணங்கறது விமான பயணம்... பிடிக்கலேன்னு எறங்கினா பரலோகம் தான்" என மகன்கள் இருவரையும் பார்த்து அர்த்த புன்னகை பூத்தார் //

காயத்திரி மந்திரம் அருமை.

பத்மநாபன் said...

ஜில் காதல் கதை இந்த பாஷையிலும் நன்னாவே வந்திருக்கு ... வாழ்த்துக்கள்

Anonymous said...

அட நிஜமாவே சின்ன கதைதான் பிரியா இனி நீங்க வெளிலே வரலாம். இந்தக்கதையிலிருந்து நான் தெரிந்து கொள்வது
1 அப்பாவிக்கு ஐயங்கார் பாஷை தெரியும்.2.உறவுக்குள் திருமணம் தவிர்க்கவும்
3. சிவ வைஷ்ணவ பேதம் வேண்டாம். 4.குழந்தைகளின் தகுதியான காதலை ஆதரியுங்கள் 5. அப்பாவிக்கு ஆடிட்டர்களை பிடிக்கும்.6 மகனோ மகளோ போனில் பேசும்போது ஒரு கண் இருகட்டும்.

ஸாதிகா said...

அழகிய நடையில் அருமையானதொரு கதை.

Chitra said...

பெயரில்லா சொன்னது…

அட நிஜமாவே சின்ன கதைதான் பிரியா இனி நீங்க வெளிலே வரலாம். இந்தக்கதையிலிருந்து நான் தெரிந்து கொள்வது
1 அப்பாவிக்கு ஐயங்கார் பாஷை தெரியும்.2.உறவுக்குள் திருமணம் தவிர்க்கவும்
3. சிவ வைஷ்ணவ பேதம் வேண்டாம். 4.குழந்தைகளின் தகுதியான காதலை ஆதரியுங்கள் 5. அப்பாவிக்கு ஆடிட்டர்களை பிடிக்கும்.6 மகனோ மகளோ போனில் பேசும்போது ஒரு கண் இருகட்டும்.


..... இந்த கதைக்கும் நோட்ஸ் எடுத்து படிச்சு பாஸ் பண்ணிட்டாங்க.... :-)))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"அம்மா, ஆனா ஒரு விஷயம் 'என் புள்ள சமத்து... வார கடேசீல கூட மேனேஜர் ஆத்துல ஏதோ கணக்கு வேலைனு போறான்.. நீயும் இருக்கியே ஊர் சுத்தி' னு என்னை திட்டுவியே அடிக்கடி... இப்போ பாரு உன் புள்ளாண்டான் என்ன கணக்கு பண்ணி இருக்கான்னு... எங்க மேனேஜர்க்கு இப்படி ஒரு பொண்ணு இருந்தா நானும் தான் ஞாயத்துக்கிழமை கூட ஜோலி பாக்க போவேன்" //

மிகவும் அருமையான, ஜாலியான, காதலை அங்கீகரித்தக் குடும்பக்கதை. மிகவும் ரஸித்தேன்.

மிகவும் அனாயாசமாக சரளமாக யதார்த்தமாக நகைச்சுவையாக வார்த்தைகளை அள்ளி வீசி
கதையொன்றை சமைத்துப்பரிமாறி விடுகிறீர்கள்.

நல்லதொரு திருப்தியான சாப்பாடு சாப்பிட்ட மகிழ்ச்சி ஏற்பட்டது, இந்தக் கதையைப் படித்ததும்.

வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். நன்றி.

Thanai thalaivi said...

அற்புதமான கதை, வாழ்த்துகள்.

நேற்று இரவு கூட வந்து பார்த்தேன் இந்த கதை அப்போது இல்லையே? இன்று காலைக்குள் ஒரு அழகான ஜாலியான கதையை ரெடி பண்ணிவிட்டீர்களே !! என் ப்ளோகிற்கு ஏன் வரமுடியவில்லை ? தெரியவில்லையே? நம்ம மதுராகவி ரமாஜி எப்படி வருகிறார்?

Anonymous said...

புவன் ஐய்யங்காராகவே மாறிட்டயே:)
ஆனால் இப்ப நேக்கு நோக்கு எல்லாம் ரொம்ப குறைந்துவிட்டது. பாலாக்காட்டுக்காராளுக்கு இருக்கோ என்னவோ.:)
ஷார்ட் அண்ட் ஸ்வீட். நல்ல கதை.மங்களமா முடிந்ததுகல மஹா சந்தோஷம்.
vallima-.

அமைதிச்சாரல் said...

உறவுக்காரா அவாளுக்குக்குள்ளே கல்யாணத்தை தவிர்க்கறது நல்லதுங்கறதை, கதை ரொம்ப நன்னா ஸ்பஷ்டமா விளக்கிடுத்து.. நேக்கு கதை ரொம்ப பிடிச்சிருக்கு அப்பாவி :-))))

ஷர்புதீன் said...

:-)

தக்குடு said...

தம்பிக்கு தெரியாம எந்த அண்ணாவும் லவ் பண்ணமுடியாது என்பதை லோகத்துக்கு சொன்ன இட்லி மாமி வாழ்க! :)

//தந்தையின் சம்மதம் புரிந்து கொண்ட கேசவ், சூழ்நிலையை இளக செய்யும் நோக்குடன் "நீ வருத்தப்படாதேம்மா.. வைதேகிக்கு நானாச்சு" என்றான் சோகமாய் முகத்தை வைத்து கொண்டே // but, இந்த டீலிங் ரொம்ப நன்னா இருக்கு! :P

Jaleela Kamal said...

நோன்பு என்பதால் படிக்க நேரமில்லை, பிறகு ஜில்லுன்னு ஒரு காதல மொத்த்மா உட்கார்ந்து படிச்சாப்பல பிறகு மொத்தமா படிச்சிக்கிறேன்....தொடருஙக்ள்

சே.குமார் said...

காயத்திரி மந்திரம் அருமை.

Sri Seethalakshmi said...

சூப்பர்.

அய்யர் ஆத்து பாஸைய அப்படியே எழுதி இருக்கீங்க. பாராட்டுக்கள்.

ஒன்னும் சொல்லறதுக்கு இல்ல போங்க பின்னிடீங்க (கதைய :-))

raji said...

simply superb

Unknown said...

ரஜினி எப்போதும் அவரது எண்ணங்கள் மற்றும் வெள்ளி திரையில் ஒரு ஹீரோ தனது சித்தரிப்பு அசல் வருகிறது. அது மிக பெரிய செய்து அவரை உதவியது என்ன இருக்கிறது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்
http://bit.ly/n9GwsR

N.Manivannan said...

மிகவும் ரசித்து படித்தேன்

ஸ்ரீராம். said...

மனதை வருடும் பரவச கதைகள் எழுதுவதில் 'மன்னி' ஆகி வருகிறீர்கள். பாராட்டுகள். (மன்னி=மன்னனுக்குப் பெண்பால்!)

திவா said...

இது சின்ன கதையா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

திவா said...

யார் இந்த சித்ரா அக்கா? பாக்கணும். பயங்கர அனாலிஸிஸ் ஆ இருக்கு!

திவா said...

தக்குடு! ஓஹோ, அதுவும் அப்படியா? :-)))

siva said...

:)good one.

Rathnavel said...

வாழ்த்துக்கள்.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

இந்திரா said...

இதுக்குப் பேர் தான் உங்க ஊர்ல சிறுகதையா??????

இந்திரா said...

களை கட்டும் கதை

S.Menaga said...

கதை ரொம்ப நல்லாயிருக்கு அப்பாவி...

Faizal said...

நல்ல கதை அப்பாவி ,,,,

தெய்வசுகந்தி said...

Nice story!!

En Samaiyal said...

ரொம்ப நல்லா இருக்குங்க. திருமண விஷயத்தில பெத்தவங்க குழந்தைகளோட ஆசை இல்லே அபிப்பிராயம் கண்டிப்பா கேட்டுக்கணும். கதையில வர்ற ரங்கராஜன் நல்ல அப்பா

SRINIVAS GOPALAN said...

புவனா
ரொம்ப நாட்கள் கழித்து நான் படித்து, ரசித்த கதை. தலைப்பு என்னை இழுத்து வந்தது. நல்ல மொழி நடை.
அத்தங்கா, அம்மாஞ்சி - இந்த வார்த்தைகளை எல்லாம் கேட்டு ரொம்ப காலமாகி விட்டது. அப்படி சொல்ல உறவுகளும் இன்றைய nuclear family ல் இல்லை. இருந்தாலும் cousin என்று ஒரு வார்த்தையில் சொல்லி விடுகிறோம்.

Thanai thalaivi said...

அடுத்த வாரம் போட்டிருந்தால் "காயத்ரி ஜபம்" ஸ்பெஷல் சிறுகதையாய் இருந்திருக்கும். வர்ற ஞாயிற்று கிழமை காயத்ரி ஜபம்.

RAMVI said...

கதை நன்னாயிருக்கு புவனா. வாழ்த்துக்கள்.

கீதா said...

சிறுகதையாயிருந்தாலும், அந்தக் கதைக்குள் குடும்ப அந்நியோன்னியம், கணவன் மனைவிக்கிடையிலான புரிதலுணர்வு, காதலுக்கு பெற்றவர் கொடுக்கும் மரியாதை, பெற்றவர்களை மதித்து பிள்ளைகள் எடுக்கும் முடிவு என்று பல செய்திகளையும் புகுத்தி இதமாக இதயம் இளக்கிவிட்டீர்கள். பாராட்டுகள் புவனா.

kriishvp said...

மந்திரம் க(வி)தைத்துவம்! :)

Priya said...

நல்ல கதை.
நன்றி,
பிரியா
http://www.tamilcomedyworld.com

mathangi said...

கருத்து ஆழம் மிக்க உள்ள நல்ல சுவாரஸ்யமான கதை,நான் நினைச்ச படியே முடிந்தது .
http://scorpionwings-mathangi.blogspot.com/
http://karaimodumalaigal-mathangi.blogspot.com/

கோவை2தில்லி said...

கதை ரொம்ப நன்னா வந்திருக்கு.

திருக்கண்ணமுது குடித்தது போல் இருந்தது.

காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா..... என்று ராகவ் பாடப் போகிறாரா?

அம்பாளடியாள் said...

வணக்கம் நான் இன்றுதான் தங்களின் தளத்துக்கு
முதன் முதலாக வந்துள்ளேன்.அருமையான படைப்புகளை
பகிர்ந்துகொள்ளும் தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளும்
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி பகிர்வுக்கு....

அப்பாதுரை said...

sweet

Jagannathan said...

கொஞ்ஜம்கூட காரம் சேர்க்காத தளிகை! ஆனாலும் திகட்டாத அக்காரவடிசில்!(எழுதும்போதே நாக்கில் நீர் ஊருகிறதே!) - ஜெ.

vanathy said...

super. Well written, Appavi.

மகி said...

அப்பாவீ,நான் ப்ரஸென்ட்டு! ;)

அத்தங்கா-அம்மாஞ்சி இதுக்கெல்லாம் அர்த்தம் தெரிஞ்சுகிட்டேன். உங்களுக்கு காயத்ரின்ற பேர் ரெம்ப புடிக்குமா? முதல்லயே காயத்திரி வர தொடர் ஒண்ணு எழுதினீங்கள்ல?

நல்ல கதை புவனா! ருக்மணி கேரக்டர்தான் கொஞ்சம் மனசில் ஒட்டலை,ஏன்னு சொல்லத் தெரில! ;)

ANaND said...

ஆகா மாமி ...பின்றேல் போங்கோ ...

கதை படிக்கும்போது ஏதோ ஒரு சிவாஜி படம் ஞாபகம் வந்துச்சி ....

அப்பறம் உங்க கதைல வர்ற அப்பா லாம் ரொம்ப நல்லவால இருக்காளே இப்படி ஒரு அப்பா made பண்ணி தர முடிமா மாமி

மாலதி said...

காயத்திரி மந்திரம் அருமை.

ஜெய்லானி said...

ஒரு வழியா இன்னைக்கிதான் இந்த பிளாக் திறந்தது அதனால் நோ கமெண்ட்ஸ் :-)).
//காதலிக்கறது பஸ்ல போற மாதிரி, பிடிக்கலேன்னா அடுத்த ஸ்டாப்ல எறங்கினுடலாம்... ஆனா கல்யாணங்கறது விமான பயணம்... பிடிக்கலேன்னு எறங்கினா பரலோகம் தான்"//

சூப்பர் டையலாக் :-))

பிரவின்குமார் said...

வழக்கம் போல் கதை மிகவும் சுவாரஸ்யமாகவே செல்கிறது. இவ்வளவு பெரிய கதையை எப்படி ஒரே டைம்ல படிச்சு முடிச்சேன். இப்ப மவுஸ ரொட்டேட் பண்ணும் போது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. கதையை நகைச்சுவை கலவைகளுடனும் சினிமா கோர்வையுடனும் கொண்டு சென்றது தனிச்சிறப்பு. தொடர்ந்து கலக்குங்க தங்கமணி மேடம்.

BalajiVenkat said...

//தம்பிக்கு தெரியாம எந்த அண்ணாவும் லவ் பண்ணமுடியாது என்பதை லோகத்துக்கு சொன்ன இட்லி மாமி வாழ்க! :)

//தந்தையின் சம்மதம் புரிந்து கொண்ட கேசவ், சூழ்நிலையை இளக செய்யும் நோக்குடன் "நீ வருததப்படாதேம்மா.. வைதேகிக்கு நானாச்சு" என்றான் சோகமாய் முகத்தை வைத்து கொண்டே // but, இந்த டீலிங் ரொம்ப நன்னா இருக்கு! :P /// oho.... :P

inimey naan love storye padikka maaten,.. :( #avanavan kashtam avanukku...

sathishkumar said...

gayathri manthram arumai..

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - நன்றி நக்கீரரே...;)

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்'ம்மா...

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா..:)

@ பெயரில்லா - ஹா ஹா ஹா.. சூப்பர்... PHD பண்ணலாம் போல இருக்கே...நன்றிங்க... :)

@ ஸாதிகா - நன்றிங்க ஸாதிகா...

@ Chitra - ஹா ஹா... ஆமாங்க... எக்ஸாம் வெக்கலாம் போல இருக்கு இனி...நன்றிங்க... ;)

@ வை.கோபாலகிருஷ்ணன் - ரெம்ப நன்றிங்க... ரசனையான விமர்சனத்துக்கு...:)

@ Thanai thalaivi - நன்றிங்க தானை தலைவி அக்கா... இதுல நீங்க கமெண்ட் போடறப்ப உங்க பேரு லிங்க் வருதில்லையா? அதை கிளிக் பண்ணினா உங்க profile page ஓபன் ஆகி அதுல உங்க ப்ளாக் பத்தின விவரம் வரணும்... அது ஏன் வரலைனு கேட்டனுங்க... settings எதுனா மாத்தனும்னு நினைக்கிறேன்... இருங்க, எப்படியாச்சும் உங்க ப்ளாக் அட்ரஸ் தேடி புடிச்சு வரேன்... விட மாட்டோம்ல...:))

@ பெயரில்லா - தேங்க்ஸ் வல்லிம்மா... எழுதி வெச்சு கொஞ்ச நாளாச்சு... பாஷைல எதுனா தப்பு இருக்குமோனு போடலாமா வேண்டாமான்னு யோசனையா இருந்தேன்... தப்பிருந்தா சுட்டி காட்ட ஆள் இருக்குனு தைரியத்துல போட்டுட்டேன்... மிக்க நன்றி...;)

@ அமைதிச்சாரல் - ரெம்ப தேங்க்ஸ் சாந்தி அக்கா...:)

@ ஷர்புதீன் - :))

@ தக்குடு - ஹா ஹா... நீ உனக்கு வேணுங்கற பாயிண்ட் மட்டும் நன்னா எடுத்துக்கற பாரேன்... :) ஐ நோ, உனக்கு அந்த டீலிங் நல்லா இருக்கும்னு... பட் டீல் பண்றவாளுக்கு இந்த மேட்டர் தெரிஞ்சா இன்னும் நல்லா டீலிங்'ஆ இருக்கும்னு சென்னை டைம்ஸ் நியூஸ் பேப்பர் சொல்லுது..:)))

@ Jaleela Kamal - நன்றிங்க ஜலீலா'க்கா...;)

@ சே.குமார் - நன்றிங்க குமார்

@ Sri Seethalakshmi - ரெம்ப நன்றிங்க சீதா... நீங்க தொடர் மட்டும் தான் படிப்பீங்கன்னு நெனச்சேன்... இதுவும் படிச்சதுக்கு நன்றி...:)

@ raji - தேங்க்ஸ் ராஜி'க்கா...:)

அப்பாவி தங்கமணி said...

@ N.Manivannan - நன்றிங்க... முதல் வருகைக்கும்...

@ ஸ்ரீராம். - நான் மன்னி ஆகி சில வருடங்கள் ஆச்சுங்க... நான் ரியல் 'மன்னி' சொன்னேன்... நீங்க சொன்ன மன்னிக்கு நன்றிகள்...;)

@ திவா - பின்ன... ஜில்லை கம்பேர் பண்ணி பாருங்க, இது சின்ன கதை தானே திவாண்ணா...;)

@ siva - நன்றிங்க சிவா..:)

@ Rathnavel - நன்றிங்க அய்யா...

@ இந்திரா - எஸ் எஸ்... எங்கூர்ல இதானுங்க சிறுகதை..:) நன்றிங்க

@ S.Menaga - ரெம்ப நன்றிங்க மேனகா...

@ Faizal - மிக்க நன்றிங்க Faizal

@ தெய்வசுகந்தி - ரெம்ப தேங்க்ஸ்'ங்க சுகந்தி

@ En Samaiyal - சரியா சொன்னீங்க... நன்றிங்க

@ SRINIVAS GOPALAN - ரெம்ப நாள் கழித்து ரசித்து படித்தேன்னு சொன்னது மிக பெரிய பாராட்டு... ரெம்ப நன்றிங்க...

@ Thanai thalaivi - ஆஹா.. எனக்கு தெரியாம போச்சே... சரி விடுங்க... நான் கொஞ்சம் அவசர குடுக்கை...அதனால முன்னாடியே போட்டுட்டேன்னு வெச்சுக்கலாம்...:))

@ RAMVI - ரெம்ப நன்றிங்க ராம்வி

@ கீதா - வாவ்... வரி விடாம நிதானமா படிச்சு விமர்சனம் செஞ்சதுக்கு நன்றிங்க கீதா... ரெம்ப சந்தோசமா இருக்கு இப்படி வார்த்தைகள் கேட்கும் போது

@ kriishvp - ஒரே வார்த்தைல எங்கயோ கொண்டு போயிட்டீங்க... நன்றிங்க

@ Priya - நன்றிங்க ப்ரியா

@ mathangi - நன்றிங்க மாதங்கி

@ கோவை2தில்லி - தேங்க்ஸ் ஆதி... ராகவ் ஏற்கனவே அதை பாட ஆரம்பிச்சாச்சாம்...:)

@ அம்பாளடியாள் - ரெம்ப நன்றிங்க... முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்

@ அப்பாதுரை - ரெம்ப நன்றிங்க

@ Jagannathan - ஆபீஸ்ல உக்காந்துக்கு காஞ்ச ரொட்டி சாப்ட்டுட்டு "அக்காரவடிசில்"னு படிக்கும் போது கண்ணில் தான் நீர் வருது... ஹா ஹா... நன்றிங்க

@ vanathy - தேங்க்ஸ் வாணி...:)

@ மகி - நான் first சொல்றது போய் இப்ப நான் பிரெசென்ட்ஆ? ஹ்ம்ம்... போங்க... உங்களுக்கு இனிமே நோ வடை...:) எஸ் எஸ், எனக்கு காயத்ரி'ங்கற பேர் ரெம்ப பிடிக்கும்... ஆமாங்க "பிரியமானவளே" தொடர்ல ஹீரோயன் பேரு காயத்ரி... பரவால்லையே அதெல்லாம் ஞாபகம் இருக்கா...;) ருக்மணி கேரக்டர்க்கு இன்னும் கொஞ்சம் weightage குடுத்து இருக்கணும் போல இருக்கு... சுட்டி காட்டினதுக்கு நன்றி'ப்பா... இனி எழுதும் போது ஞாபகம் வெச்சுக்கறேன்...:)

@ ANaND - ஆஹா.. தமிழை கொல்றேல் போங்கோ... :) என்னது, அப்பா made பண்ணி தர்றதா? இருங்க வசீகரன் சார்'கிட்ட (ரோபோ ரஜினி) சொல்லி வெக்கறேன்... அவர் செஞ்சு தருவார்...;)

@ மாலதி - ரெம்ப நன்றிங்க மாலதி

@ ஜெய்லானி - அந்த டயலாக் நான் சொன்னது இல்லிங்க... "காவலன்" படத்துல வடிவேலு சொன்னது... அதை அய்யங்கார் ஸ்லாங்'க்கு மாத்தினது மட்டும் தான் நான்...;)

@ பிரவின்குமார் - ரெம்ப நன்றிங்க பிரவீன்... நீளம் ஒரு குறையா தெரியலைனு சொன்னதுக்கு...அதானே சொல்ல வந்தீங்க..;))

@ BalajiVenkat - ஹா ஹா... y டென்ஷன் பாலாஜி நோ டென்ஷன் ஒகே... :)

Thanai thalaivi said...

அடடா !, இப்போ நான் அக்காவா !? ஒவ்வொரு பதிவின் போதும் எனக்கு புது புது பேரா வக்கிரீங்களே !? என்னமோ போங்க எல்லாம் உங்க மூட பொருத்தது போலிருக்கு. நம்ம மதுராகவி ரமாஜி settings மாற்ற வழிகாட்டினார்கள். இப்போது வர முடியும் என்று நினைக்கிறன். அவர்களுடைய மன தைரியத்தை பாருங்கள். google சர்ச் இல் போய் தேடிபிடித்து என் ப்லோக்கிற்கு வந்து கொண்டிருந்திருகிறார்கள். ம்ம்ம்....கஷ்டப்பட்டு, கஷ்ட்ட படனும்னு அவங்களுக்கு இருக்கு.

நீங்க ரொம்ப நாளா reply போடததால,ஒரு வேளை நூறு கமெண்ட்ஸ் டார்கெட் வச்சிருகீங்கலோனு நினைச்சேன்.

Post a Comment