Sunday, August 28, 2011

கதை சொல்லும் நேரமிது.. :)) (சிறுகதை)

"ப்ரீத்தி...தூங்குடி... ஏன் இப்படி படுத்தற... மணி பத்தாச்சு...எனக்கு தூக்கம் வருது"


"மம்மி ஸ்டோரி சொல்லு...அப்போ தான் தூங்குவேன்..." என அடம் செய்தாள் ராதிகாவின் நாலு வயது மகள் ப்ரீத்தி


"என் கதையே பெரிய கதையா இருக்கு... இதுல உனக்கென்ன கதை சொல்றது..."


"அப்போ உன் கதையே சொல்லு மம்மி"


"ஆமா... சோழ நாட்டு இளவரசனை கட்டிகிட்ட கதை... அதை வேற சொல்லனுமாக்கும்...   ஹ்ம்ம்" என சலித்தாள் ராதிகா


"ஏய்... சந்தடி சாக்குல மறைமுகமா என்னை ஏண்டி தாக்கற" என்றான், அதே அறையின் ஒரு மூலையில் கணினியில் அமரந்திருந்த ராதிகாவின் கணவன் பிரகாஷ்


"நான் பொதுவா சொன்னேன்... உங்களுக்கேன் குத்துது" என சீண்டினாள் ராதிகா


"பாப்பாவ தூங்க வெச்சுட்டு வா... உன்னை அப்பறம் கவனிச்சுக்கறேன்" என மகள் அறியாமல் மனைவியை பார்த்து கண்சிமிட்டி சிரித்தான் பிரகாஷ்


"கவனிக்கரதுன்னா என்ன டாடி" என ப்ரீத்தியின் கவனம் இப்போ கதை கேட்பதில் இருந்து மாறியது


"அது வந்து குட்டிமா..." என்று ஆரம்பித்தவனை இடைமறித்தாள் ராதிகா "கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? கொழந்த முன்னாடி என்ன பேசறதுன்னு இல்ல" என பொய் கோபம் காட்டியவள்


"ப்ரீத்தி, இப்ப நீ தூங்க போறியா இல்லையா?" என்றாள் சற்று கண்டிப்பாய்


"அப்படினா நீ ஸ்டோரி சொல்லு மம்மி" என்றாள் மீண்டும்


"மறுபடி மொதல்ல இருந்தா..." என வடிவேலு ஸ்டைலில் கூறி சிரித்தான் பிரகாஷ்


"நீங்க லாப்டாப் எடுத்துட்டு கீழ ஹால்க்கு போங்க..." என்றாள் ராதிகா


"சரி சரி...நான் இனி பேசலை..." என அமைதியானான் பிரகாஷ்


"ஸ்டோரி சொல்லு மம்மி... " என ப்ரீத்தி மீண்டும் ரகளை ஆரம்பித்தாள்


"இருடி சொல்றேன்... இவ வேற... ம்... ஒரு ஊர்ல ஒரு பாட்டி வடை சுட்டுட்டு இருந்தாங்களாம்"


"ஏன் மம்மி எப்பவும் பாட்டியே வடை சுடறாங்க... மம்மிக்கெல்லாம் வடை சுட தெரியாதா?" என ப்ரீத்தி கேள்வி கேட்கும் படலத்தை ஆரம்பிக்க


"ஹா ஹா ஹா... சூப்பர்டி செல்லம்... ஒரு கேள்வினாலும் நெத்தியடியா கேட்ட" என இதுதான் சாக்கென மனைவியை கேலியாய் பார்த்தபடி சிரித்தான் பிரகாஷ்


"உங்கப்பாவுக்கு சும்மாவே பேச சொல்லிதர வேண்டாம்... இவ வேற பாயிண்ட் எடுத்து குடுக்கறா" என இருவரையும் முறைத்தாள் ராதிகா


"ஸ்டோரி சொல்லு மம்மி" என ப்ரீத்தி மீண்டும் அனத்த தொடங்க


"சரி சொல்றேன்... சும்மா சும்மா கேள்வி கேட்டா ஒதை படுவ..."


"ம்...ஒகே" என்றாள் ப்ரீத்தி சமத்தாய்


"ம்... அந்த பாட்டி வடை சுட்டுட்டு இருந்தப்ப..."


"ஏன் மம்மி பாட்டி எப்பவும் வடையே சுடறாங்க... டோநட், பிரெஞ்சு ப்ரைஸ் எல்லாம் செய்ய மாட்டாங்களா?"


"ஆண்டவா..." என ராதிகா தலையை பற்றிக்கொள்ள, அதற்கு மேல் சிரிப்பை அடக்கமாட்டாமல் சிரித்தான் பிரகாஷ்


"இன்னொரு வாட்டி சிரிச்சீங்கன்னா நீங்க தான் கதை சொல்லணும்" என மிரட்டினாள் ராதிகா


"ஒகே ஒகே...மீ சைலண்ட்" என கணினியில் கவனம் பதித்தான் பிரகாஷ்


"சொல்லு மம்மி" என ப்ரீத்தி மீண்டும் ஆரம்பிக்க


"ம்... அந்த பாட்டிக்கு யாரும் சொல்லி தரல... நீ வேணா போய் க்ளாஸ் எடு" என்றாள் கடுப்புடன்


"ம்...அப்புறம் என்னாச்சு?" என்றாள் ப்ரீத்தி ஆர்வமாய்


"அப்பறம்... ஒரு காக்கா வந்து ஒரு வடைய தூக்கிட்டு போயிடுச்சாம்"


"காக்கா எப்படி இருக்கும் மம்மி" என அடுத்த கேள்வியை ஆரம்பித்தாள் ப்ரீத்தி


"கேள்வியின் நாயகி ஆரம்பிச்சுட்டா... கடவுளே... போன வாட்டி இந்தியா போனப்ப நீயும் தாத்தாவும் மொட்டை மாடில போய் காக்காவுக்கு சாப்பாடு எல்லாம் வெச்சீங்களே மறந்து போச்சா"


"ம்...மறந்து போச்சு மம்மி... எப்படி இருக்கும்னு சொல்லு"


"எப்படினா... எப்படி சொல்றது... கருப்பா இருக்கும்" கிட்டத்தட்ட அழும் நிலைக்கு போய் விட்டாள் ராதிகா


"பெங்குயன்ஆ?" ப்ரீத்தி தனக்கு தெரிந்த பெயர்களை சொல்ல தொடங்கினாள்


"இல்ல ப்ரீத்தி... இது குட்டியா இருக்கும்...ரெக்கை இருக்கும்..."


"பீஜியனா?"


"அட ஈஸ்வரா....கொடுமைக்கு இவளுக்கு காக்காவை எப்படி எக்ஸ்ப்லைன் பண்றது" என விழித்தாள் ராதிகா


"போ மம்மி உனக்கு கதை சொல்லவே தெரியல...டாடி தான் சூப்பர் கதை எல்லாம் சொல்லுவாங்க" என மழலையில் பழித்தாள் ப்ரீத்தி


அதற்கு மேல் கணினியில் அமர்ந்திருக்க மனமின்றி மகள் அருகில் வந்த பிரகாஷ் "என் செல்லகுட்டி... டாடி செல்லம் தானே ப்ரீத்தி..." என மகளை கொஞ்சினான், மனைவி முறைப்பதை பொருட்ப்படுத்தாமல்


"எஸ், மீ டாடி செல்லம்" என தந்தையை முத்தமிட்டாள் ப்ரீத்தி


"நேரண்டி... உன்னோட நாள் பூரா படறது நான்... டாடி செல்லமா... போ உங்க டாடிகிட்டயே கேளு கதை....நான் தூங்கறேன்" என திரும்பி படுத்தாள் ராதிகா


"சொல்லு டாடி...காக்கா எப்படி இருக்கும்?"


"டாடி நாளைக்கு கம்ப்யூட்டர்ல தேடி தரேன்...சரியா..." என பிரகாஷ் சமாளிக்க


"கூகிள் பண்ணியா டாடி?" என மகள் கேட்க


"அட... உனக்கெப்படி கூகிள் எல்லாம் தெரியும்?" என பிரகாஷ் ஆச்சிர்யமாய் கேட்க


"ஹும்க்கும்... அவ பொறந்ததுல இருந்து நீங்க எப்பவும் அதை செய்யறத பாத்துட்டு தானே இருக்கா... பில்ட் அப் மட்டும் என்னமோ ஆபீஸ் வேலை பாக்கற மாதிரி தான்.." என இது தான் சமயமென கணவனை வம்பு செய்தாள் ராதிகா


"கொலஸ்ட்ரால் ஓவரா போச்சு உன் மம்மிக்கு..." என சிரித்தான் பிரகாஷ்


ஒருவழியாய் மாறி மாறி ஏதோ கதை சொல்லி சமாளித்து மகளை தூங்க செய்தனர் இருவரும்


"ஏய் ராதி.... ஊருக்கு போன் பண்ணனும்னு சொல்லிட்டு இருந்தியே மறந்துட்டயா?" என பிரகாஷ் நினைவுபடுத்த


"அட...ஆமாம்ப்பா... அம்மா பாத்துட்டு இருப்பாங்க... கொஞ்சம் போன் எடுங்களேன் ப்ளீஸ்"


"வரவர எடுபிடி ரேஞ்சுக்கு ஆகி போச்சுடா பிரகாஷ் உன் நிலைமை" என பிரகாஷ் பொய்யாய் சலித்து கொண்டே மனைவியிடம் போனை எடுத்து தர


"ரெம்பத்தான்... " என கணவனுக்கு பழிப்பு காட்டிவிட்டு எண்களை ஒற்றினாள்


"ஹலோ"


"ஹலோ...அம்மா நான் ராதிகா பேசறேன்"


"சொல்லு ராதிம்மா... எப்படி இருக்க? மாப்ள நல்லா இருக்காரா? குட்டி என்ன பண்றா?"


"அது இத்தன நேரம் படுத்தி எடுத்துட்டு இப்பதான் தூங்குதும்மா"


"அவ முழிச்சுட்டு இருக்கறப்ப கூப்ட்டு இருக்கலாமேடி... ரெண்டு வார்த்த பேசி இருப்பாள்ல"


"நாளைக்கு மறுபடி பேச வெக்கறேன்மா..."


"ம்... அப்புறம் ராதிம்மா... நம்ம கோகிலா அத்தையோட மச்சினர் பொண்ணு ஏதோ ப்ராஜெக்ட் வேலையா அமெரிக்கா வராளாம்... ஒரு மாசம் தான் ப்ராஜெக்ட்'ங்கறதால நெறைய சாமான் ஒண்ணுமில்ல... நீங்க ராதிகாவுக்கு எதுனா குடுத்து அனுப்பரதுன்னா குடுங்கனு சொன்னா... என்ன அனுப்பட்டும்" என்றாள் அம்மா ஆர்வமாய்


"எல்லாம் இங்கயே கிடைக்குதும்மா" என்றாள் ராதிகா வழக்கம் போல்


"இருக்கட்டும் ராதிம்மா... கொஞ்சம் முறுக்கு, அதிரசம் அப்படி செஞ்சு அனுப்பறேன்... வேற எதுனா வேணும்னா சொல்லுடா"


ஒரு கணம் யோசித்த ராதிகா "அம்மா... காக்காவை ஒரு போட்டோ எடுத்து அனுப்பும்மா" எனவும்


"என்னது?" என தான் சரியாய் தான் கேட்டோமா என மீண்டும் கேட்டாள் அம்மா


ஸ்பீக்கர் போன் என்பதால் பேச்சை கேட்டு கொண்டிருந்த பிரகாஷ், ராதிகா காக்கை படம் கேட்டதும், கட்டுப்படுத்த இயலாமல் சத்தமாய் சிரித்தான்


*******************************************************


அப்பாவி அப்டேட்:

உண்மைய சொல்லணும்னா, நான் இந்த கதை எழுத முக்கிய காரணம், எங்கூரு  அம்மணி... கொங்கு நாட்டு சிங்கி (சிங்கத்தின் பெண் பால்)... சமையல் அரசி... (!) மகி தான்...

என்னோட இந்த போஸ்ட்ல மகி போட்ட கமெண்ட்:-
//மகி சொன்னது… புவனா, 'ல்'-ஐக் காணமே?காக்கா தூக்கிட்டுப் போயிருச்சா?! :) :)//

அதை பாத்ததும் "அட நாம காக்காவை வெச்சு ஒரு போஸ்ட் கூட போடலியே" னு ஒரே பீலிங்க்ஸ் ஆகி, அப்ப தோணினது தான் இது... அதனால திட்டனும்னா அவங்கள திட்டுங்க... மீ அப்பாவி யு நோ...:)

ஹா ஹா ஹா... ஹா ஹா ஹா... (வில்லி சிரிப்பு) பழிக்கு பழி... என்னை பாத்து என்னை பாத்து என்னை பாத்து, இந்த அப்பாவிய பாத்து, எப்படி அப்படி  நம்பிக்கை இல்லாம ஒரு கேள்வி கேக்கலாம்...

அதான் மகி, இந்த பழிக்கு பழி வாங்கும் போஸ்ட்... உங்க ப்ளாக்ல வந்து விழும் முட்டை தக்காளி எல்லாம் பத்திரமா சேத்து வெச்சு ரோஸ்ட் அல்லது டோஸ்ட் செய்து மகிழும் படி கேட்டு கொள்கிறேன்... நன்றி வணக்கம்... :)))

இனிமே என்னை கேப்பீங்க கேள்வி..:))

45 பேரு சொல்லி இருக்காக:

RVS said...

சூப்பர்! டொனெட், ப்ரன்ச் ப்ரைஸ் பண்ற பாட்டியையும், ராகம் பாடும் காக்காவையும் வைத்து ஒரு கதை எழுதும் படி உங்கள் ரசிகர் மன்றம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி. :-)

Philosophy Prabhakaran said...

யப்பா முடியல...

Philosophy Prabhakaran said...

காக்கைகள் சங்கம் சார்பா உங்களுக்கு பாராட்டுவிழா எடுக்கப்போறாங்களாம்...

Anonymous said...

அப்பாவி, அந்த ராதிகாதான் கூகிள்ள தேடி, காக்கா காண்பிச்சிருக்கலாமே.:)
எங்க பேத்தி காக்கா கதை எல்லாம் வேணாம்,குருவி ஓட்ஸ் பாயாசம்
சாப்பிடற கதை சொல்லுனு இன்னிக்குதான் கேட்டாள்:)vallima

எல் கே said...

//அம்மா பாத்துட்டு இருப்பாங்க... //
அம்மா காத்துகிட்டு இருப்பாங்க ?
அப்பவே கூகிள் பண்ணி காமிச்சு இருக்கலாமே??

RAMVI said...

குழந்தைகளை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்தான்..
நன்னயிருக்கு உங்க கதை..

siva said...

அது சரி காக்க வடைய சுட்டுச்சா இல்லையா

பத்மநாபன் said...

கதையில கடைசியில் காக்கா படம் கேட்டாங்க பாருங்க... அங்க நிக்கிறிங்க அப்பாவி....

Thanai thalaivi said...

வெரி சாரி !, என்னமோ கதை முழுமையாவே இல்லை. காக்காவை காட்ட முடியவில்லை என்பது நம்பும்படியாக இல்லை. அப்போதே laptop இல் national geographical மாதிரியான ஏதோ ஒன்றின் மூலமாக ஒரு காக்கா காட்டியிருக்கலாமே ? ஒரு children story book வாங்கி அனுப்ப சொல்லி கூட அம்மாவை கேட்டிருக்கலாம்?

வெங்கட் நாகராஜ் said...

பாவம்... வேற யாரு கதை சொல்லும் அம்மாக்கள் தான்... இப்ப குழந்தைகளை சமாளிக்கறதே பெரிய கஷ்டம் தான்... :)

Lakshmi said...

குழந்தைகள் கேக்கும் கேள்விகளை சமாளிக்க இந்த
அம்மாக்கள் படும்பாடு வேதனையாகவும் வேடிக்கை
யாகவும் தான் இருக்கு.

திவா said...

/அம்மா பாத்துட்டு இருப்பாங்க...//
காக்கா 'கா' வ எடுத்துக்கிட்டு 'பா' போட்டு போச்சா? :-)))

Kasu Sobhana said...

குயில் பற்றி ஒரு பதிவு வேண்டும் என்று எங்கள் ப்ளாக் சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.

VELU.G said...

அப்படியே மயில் பற்றி ஒரு பதிவு வேண்டும் என்று பறவைகள் காப்போர் சங்கம் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கிறேன்

வை.கோபாலகிருஷ்ணன் said...

//"கவனிக்கரதுன்னா என்ன டாடி" என ப்ரீத்தியின் கவனம் இப்போ கதை கேட்பதில் இருந்து மாறியது //

சூப்பர் கதை. குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியாமல் தான் உள்ளோம்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.vgk

சுசி said...

இங்கே காக்கா இருக்கு.. ஆனா சாம்பல் கலர்ல இருக்கு..

நல்லா இருக்கு புவனா காக்கா கதை :)

கோவை2தில்லி said...

காக்கா தூக்கிட்டு போயிருச்சா என்றதற்காக காக்கா வைத்து கதையா சூப்பர்.....நல்ல வேளை தொடர்கதை இல்லை.... சும்மா தான் புவனா. :)))

குழந்தைகள் கேட்கும் கேள்விகள் இருக்கே .......

ஸ்ரீராம். said...

"பாப்பா பாப்பா கதை கேளு....காக்கா நரியின் கதை கேளு...தாத்தா பாட்டி சொன்ன கதை...அப்பாவி ப்ளாக்ல போட்ட கதை..."

raji said...

என்ன மகி இப்பிடி பண்ணிட்டீங்க?எங்களை பழி வாங்கிட்டீங்களே

முனைவர்.இரா.குணசீலன் said...

இந்தக் காலத்துல குழந்தைகளுக்குக் கதை சொல்றது அவ்வளவு சுலபமல்ல!!

அவர்கள் கேட்கும் கேள்விகளில் பலவற்றுக்கு நமக்கே பதில் தெரிவதில்லை..

vinu said...

kindly start new series soon sister feel so bored 2 day once when i visit............plzzzzzzzz!

me too new post visit when u have time sister????

இராஜராஜேஸ்வரி said...

கூகிளில் தேடினால் வெள்ளைகாக்கா கூட கிடைக்குமே. அம்மாவை போட்டோ எடுக்கச்சொன்னால் அவர்கள் எங்கே தேடுவார்கள்.

அமைதிச்சாரல் said...

அடுத்த படியாக, நம்ம தலைவி அப்பாவி அவர்களை, நரி திராட்சை சாப்பிட்ட கதையை புளி போட்டு விளக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் :-)

தெய்வசுகந்தி said...

மகி மொத்தமா எல்லாரையும் பழி வாங்கிட்டியா??
அருமை புவனா!!

ஷீ-நிசி said...

இப்ப இருக்கற பசங்க ரொம்ப ஷார்ப்.... :)

sriram said...

முடியல புவனா முடியல...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஜீ... said...

இன்றுதான் முதன்முதல் வருகிறேன்!
காக்காவை வச்சு இப்பிடியும் கதை சொல்லலாம்ல! அருமை!

அம்பாளடியாள் said...

மயிலப்பத்தி ஒருகதை சொல்லுங்கம்மா?.....அப்புடி இல்லீன்னா அப்பாவி தங்கமணியப்பத்தி ஒரு கத சொல்லீடுவ ஆமா........
பயந்துடாதீங்க உங்க கதை நகைச்சுவையோடுகூடிய
அருமையான புத்திமதிக் கதை அவ்வளவுதான் எனக்குத் தெரிஞ்சது .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .வாழ்த்துக்கள்
தொடந்து எழுதீற்று இருங்க .

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 9

மகி said...

அம்முணி, நான் நெசமாலுமே காக்கவ போட்டோ புடிச்சு வைச்சிருக்கரன்! அது மட்டுமில்ல, 85 ,102A ,பொன்னூத்து, கழுதை குட்டி இன்னும் சில பல முக்கிய இடங்கள் எல்லாம் படமெடுத்துட்டேதான் திரிஞ்சுட்டு இருக்கேன். பாம்பு மாதிரி படமெடுத்துட்டே திரியறயே-ன்னு சொந்த பந்தமெல்லாம் கிண்டல் பண்ணினாலும் காமராவை கையில வச்சுகிட்டே தான் இருக்கேன். ;) ;)


உங்களுக்கு அதிரசம், முறுக்கு வேணும்னா அம்மாகிட்ட சொல்லிட்டு எனக்கும் சொல்லுங்! வாங்கியாந்து டொராண்டோவுக்கு அனுப்புவனல்ல?!

Its good to be at home Bhuvana! :) :)

அப்பாதுரை said...

one of your best.

csmkrishna said...

Vera naatukku ponale indha gadhinna naallaikku vera gragathukke pona enna gadhi?

வெட்டிப்பையன்...! said...

காக்கைக்கு கூட பஞ்சமா ...?! சிட்டு குருவிய தான் இப்போ காசு கொடுத்தா கூட பாக்க முடியல .
அது சரி இப்படி எல்லாம் ரொமான்ஸா பேசறது எங்க வூட்டுல ஏன் நடக்க மாட்டேங்குது ...?
(ஒரு விஷயம் நல்லா தெரிய வருது தங்கமணி இருக்குற ஊருல(நாட்டுல ) காக்கா இல்லை ...!)

Thanai thalaivi said...

நீங்க தான் காக்கைபாடிநியாரா !? சொல்லவே இல்ல....!? மகி படமேடுக்கரதால அவங்க பாம்பாம்......காக்கா,பாம்பு நிறைய பேர் மயில்,குயில் எல்லாம் கேட்டிருகாங்க, இன்னும் என்னென்ன வர போகுதோ......! உங்க ப்ளாக் ஒரு ஜூ ஆகிட போகுது.

Thanai thalaivi said...

உங்கள் கதை என் மகளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது.நிறைய அம்புலி மாமா கதை எழுதுங்கள். விரைவில் மழலையர் ப்ளாக் ஒன்றும் தொடங்கவும்.

கவிநயா said...

சூப்பர் கதை :)

சுரேகா said...

:)

காக்கா...காக்கா!

சூப்பர்!

கோவை ஆவி said...

aduthu kaakkaa biriyaani kathai poduvaangalo??

கீதா said...

கதை சொல்லிய விதம் மிகவும் சுவாரசியாமாக இருந்தது. குழந்தைகளை அதுவும் இப்போதிருக்கும் குழந்தைகளைச் சமாளிப்பது ஒரு பெரிய கலைதான்.

அப்பாவி தங்கமணி said...

@ RVS - ஹா ஹா ஹா... அதுக்கென்னங்க எழுதிட்டா போச்சு... ஆனா ரசிகர் மன்றம்னு எல்லாம் சொல்லி பயப்படுத்துவது சரியா? நானோ அப்பாவி...:))

@ Philosophy Prabhakaran - ஹி ஹி... பாராட்டு விழாவா? நன்றிங்கோ...:)

@ வல்லிம்மா - என்ன இருந்தாலும் ரியல் காக்கா மாதிரி வருமா'ம்மா...:))

@ எல் கே - அதை தான் டாடி செய்ய போறாராம்...:)

@ RAMVI - நன்றிங்க ராம்வி...:)

@ siva - அது காக்காவை தான் கேக்கணும்...:))

@ பத்மநாபன் - இல்லீங்...ண்ணா... நான் இங்க தானுங் நிக்கறேன்...:))

@ Thanai thalaivi - ஹா ஹா... என் கதைல எல்லாம் லாஜிக் தேடலாமோ தானை தலைவி அக்கா...:))

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க... உங்க குட்டி பொண்ணும் இப்படி தான் கேள்வியின் நாயகியோ...:)

@ Lakshmi - ஆமாங்க... அப்படி தான் சொல்றாங்க

அப்பாவி தங்கமணி said...

@ திவா - ஹா ஹா...:)

@ Kasu Sobhana - குயிலே குயிலே குயிலக்கா போட்டுடுவோம் சார்...:)

@ VELU.G - ஆஹா... கடைசீல ஜூ வாக்கிட்டீங்களே எல்லாரும் சேந்து...ஹஹா...:)

@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்

@ சுசி - நன்றிங்க சுசி... இங்க காக்கா இல்லீங்க... குருவி தான் கலர் கலரா இருக்கு...:)

@ கோவை2தில்லி - ஹா ஹா... தேங்க்ஸ் ஆதி...:)

@ ஸ்ரீராம். - ஆஹா... பாட்டு சூப்பர்... நானும் இதை ரீமிக்ஸ் பண்ணி ஒண்ணு போட்டுடறேன்... சரி சரி... ஓடாதீங்க...:)

@ raji - ஹா ஹா ஹா... மகிய நல்லா திட்டுங்க ராஜி'க்கா..:)

@ முனைவர்.இரா.குணசீலன் - சரியா சொன்னீங்க சார்...:)

@ vinu - ஆஹா.. புது கதை வேணுமா பிரதர்... எல்லாரும் சேந்து உங்கள அடிக்க வர போறாங்க இப்போ இதை கேட்டதுக்கு... உங்க போஸ்ட் எல்லாம் கலக்கல் தான் போங்க...:)

அப்பாவி தங்கமணி said...

@ இராஜராஜேஸ்வரி - சும்மா ஒரு ரகளைக்கு தானுங்'ம்மா..:)

@ அமைதிச்சாரல் - எங்கூட்ல புளி தட்டுப்பாடு எனவே சபீனா போட்டு விளக்கினால் போதுமா அக்கா...:)

@ தெய்வசுகந்தி - ஹா ஹா... தேங்க்ஸ்'ங்க...:)

@ ஷீ-நிசி - ரெம்ப கரெக்ட்'ங்க..

@ sriram - ஹா ஹா... நன்றிங்க பாஸ்டன் ஸ்ரீராம்...:)

@ ஜீ... - நன்றிங்க ஜி...:)

@ அம்பாளடியாள் - ரெம்ப நன்றிங்க... தொடர்ந்து எழுதுனு சொல்ற உங்க தைரியம் எல்லாருக்கும் இல்ல பாருங்க... அதுக்கு ஸ்பெஷல் நன்றி...:)

@ மகி - ஹா ஹா ஹா... எப்படி பழிக்கு பழி வாங்கினேன் பாருங்க மகி.. :) என்னது ஊர்ல இருக்கீகளா? அவ்வ்வ்வவ்... நானு... 85 ,102A ,பொன்னூத்து, கழுதை குட்டி அவ்வ்வவ்வ்வ்... ஒரே அழுவாச்சியா வருது... சரி சரி நீங்களாச்சும் என்ஜாய் பண்ணுங்க... மறக்காம அன்னலட்சுமில ஒரு வெட்டு வெட்டுங்க, அப்படியே மருதமலை ஒரு விசிட், அய்யங்கார் பேக்கரி பப்ஸ், ஏ.ஆர். பேக்கரி தேங்காய் பன் எல்லாம் ஒரு கை பாருங்க... மறக்காம சந்தைல அந்த பொரிக்கார ஆயாவை கேட்டேன்னு சொல்லிடுங்க... ஹ்ம்ம்... லிஸ்ட் நீண்டுட்டே போகுது...... கம் பேக் சூன் மகி , வி மிஸ் யு (நீ மட்டும் எப்படி ஊர்ல ஜாலியா இருக்கலாம்...:))

@ அப்பாதுரை - நன்றிங்க

@ csmkrishna - நல்லா கேட்டீங்க ஒரு கேள்வி... அதானுங்க, நீல் ஆர்ம்ஸ்ஸ்ட்ராங் எவ்ளோ கூப்ட்டும் நான் நிலாவுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டனுங்க...:)

அப்பாவி தங்கமணி said...

@ வெட்டிப்பையன்...! - ஹா ஹா ஹா... இங்க குருவிக்கு பஞ்சமில்லைங்க... காக்கா தான் டேக்கா குடுக்குது... :)௦

@ Thanai thalaivi - காக்கைபாடினியார் மட்டுமில்லைங்க, காக்கை பேசினியார் நடந்தினியார் கத்தினியார் எல்லாமும் நான் தானுங்'க்கா... ஐ, மழலையர் ப்ளாக் நல்ல ஐடியா... உங்க கிட்ட எல்லாம் பல்பு வாங்கி முடிஞ்சுது இனி சின்ன புள்ளைகள தான் ஏமாத்தனும்...உங்க குட்டி பொண்ணுக்கு தேங்க்ஸ் சொல்லிடுங்க...:)

@ கவிநயா - நன்றிங்க கவிநயா...:)

@ சுரேகா - ஹா ஹா... நன்றிங்க...:)

@ கோவை ஆவி - ஐயையோ... அந்த ரெசிபி எனக்கு தெரியாதுங்'ண்ணா...:)

@ கீதா - ரெம்ப நன்றிங்க கீதா...

goma said...

நீங்க வேணுன்னா பாருங்க ...அடுத்த வாரிசுகள்,”கதை சொல்றதுன்னா என்ன மம்மி?”ன்னு கேட்டாலும் கேப்பாங்க...

அப்பாவி தங்கமணி said...

@ goma - ரெம்ப சரியா சொன்னீங்க கோமா... கதை சொல்லிகள் மட்டுமல்ல... ஆர்வமாய் கேட்பவர்களும் கூட அழிந்து கொண்டு தான் வருகிறார்கள்...

Post a Comment