Wednesday, September 07, 2011

கோவை சரளா இன் காபி வித் அப்பாவி...:) - (150வது பதிவு)
அப்பாவி : (ஒரு மஞ்ச கலர் சோபால உக்காந்துட்டு) வணக்கம் அண்ட் வெல்கம் டு...

டைரக்டர் : கட் கட் கட்... (என டென்சனாய் கூறுகிறார்)

அப்பாவி : என்ன சார் ஆச்சு? (என்கிறார் எரிச்சலாய்)

டைரக்டர் : இருங்க மேடம்.. இன்னும் கேமராவே ஆன் பண்ணல

அப்பாவி : ம்க்கும்... பண்ணிட்டாலும்... (என சலிப்பாய் முணுமுணுக்க)

டைரக்டர் : நான் ஏக்சன் சொன்னப்புறம் நீங்க ஸ்டார்ட் பண்ணுங்க மேடம்

அப்பாவி : நீங்க ஏக்சன் சொல்றதுக்குள்ள நான் ஏக்சன் 500 போடணும் போல இருக்கு

டைரக்டர் : ஊர் குசும்பு ஓவரா போச்சு (என முணுமுணுக்கிறார்)

அப்பாவி : என்ன சொன்னீங்க? (என முறைக்க)

டைரக்டர் : உங்க ஊர்காரங்க எல்லாம் ரெம்ப நல்லவங்கனு சொன்னேன் மேடம் (என சமாளிக்கறார்)

அப்பாவி : சரி சரி, பேசி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க... எனக்கு அடுத்தது BBCல ஒரு பேட்டி இருக்கு (என அலுத்து கொள்கிறாள்)

டைரக்டர் : ABC தெரியாத கேஸ் எல்லாம் BBC பத்தி பேசுது... ஹ்ம்ம் (என அசிஸ்டென்ட்'இடம் முணுமுணுக்கிறார்)

அப்பாவி : இன்னுமா முடியல... சீக்கரம் ஏக்சன் சொல்லுங்க

டைரக்டர் : ஒகே மேடம்...ஸ்டார்ட்..கேமரா... ஏக்சன்

அப்பாவி : வணக்கம் அண்ட் ம்...க்கும்... கட் கட் கட்

டைரக்டர் : கட் கட் எல்லாம் நான் சொல்லணும் மேடம் (என புலம்புகிறார்)

அப்பாவி : பாருங்க, உங்க வேலைய கூட நானே செய்ய வேண்டியிருக்கு. அதான் தொண்டை ட்ரை ஆய்டுச்சு பேச முடியல (என இருமுகிறாள்)

டைரக்டர் : இந்த லொள்ளுக்கு தொண்டை இல்ல மண்டையே ட்ரை ஆகும் (என முணுமுணுத்தபடி) மேடம்க்கு தண்ணி குடுங்க (என ப்ரொடக்சன் யூனிட்டை பார்த்து கத்துகிறார்)

அப்பாவி : (தண்ணி குடித்ததும்) டச் அப் ஆள் வரசொல்லுங்க

டைரக்டர் : என்ன பண்ணினாலும் இருக்கற மூஞ்சி தான இருக்கும்

அப்பாவி : என்னது? (என முறைக்க)

டைரக்டர் : உங்களுக்கு மேக்அப் தேவையே இல்லைன்னு சொன்னேன்

அப்பாவி : ஒகே ஒகே...ஸ்டார்ட்... கேமரா... ஏக்சன்

டைரக்டர் : (கடுப்பாய் பார்த்தபடி) அதான் அவங்களே சொல்லிட்டாங்களே... ஆரம்பிங்க... (என கத்துகிறார்)

அப்பாவி : வணக்கம் அண்ட் வெல்கம் டூ காபி வித் அப்பாவி. இன்னிக்கி நம்ம ஷோவுக்கு ஒரு ஸ்பெஷல் கெஸ்ட் வர போறாங்க. அவங்கள பத்தி சொல்லணும்னா சொல்லிட்டே இருக்கலாம். கொங்கு நாட்டு சிங்கி, கோவை மண்ணின் மைந்தி.......

அசிஸ்டென்ட் டைரக்டர் : (மிரண்ட லுக்குடன்) என்ன சார் இது? ஏதோ ஜூ'வுக்குள்ள போன எபக்ட் வருது...

டைரக்டர் : அத உடுய்யா... இப்ப என் கவலை எல்லாம், ஒரு கோயம்புத்தூர் அம்மணியவே நம்மளால சமாளிக்க முடியலியே, இப்ப இன்னொன்னு வேற வருதே... என்ன நடக்க போகுதோ...ஹ்ம்ம் (என சோகமாய் மானிட்டரை பார்க்கிறார்)

அப்பாவி : (தொடர்ந்து பேசி கொண்டே).... இப்படி அவங்கள பத்தி நெறைய சொல்லலாம். அவங்க யாருன்னு நீங்க இப்ப கண்டு பிடிச்சு இருப்பீங்கனு நினைக்கிறேன். நம்ம கோவை சரளா மேடம் தான்

கோவை சரளா : (ஸ்டைலாய் சிரித்து வணங்கியபடி வருகிறார்)

அப்பாவி : ஆயியே ஜி ஆயியே ஜி (என என பூங்கொத்தை நீட்ட)

கோவை சரளா : என்ன கெரகம் இது? (என மிரளுகிறார்)

அப்பாவி : (பவ்யமாய்) வாங்கனு சொன்னனுங்... இந்தில...(என பம்ம)

கோவை சரளா : இப்படி அழகா சொல்றத உட்டு போட்டு என்னத்துக்கு அம்மணி அசிங்க அசிங்கமா பேசற

அப்பாவி : ஹி ஹி... அப்ப தானுங்... நமக்கும் நாலு மொழி தெரியும்னு புரிஞ்சு மத்த மொழி டிவில இருந்து சான்ஸ் கிடைக்குமுங்...

கோவை சரளா : (கழுத்தை ஒடித்து சலித்தபடி) ம்க்கும்... கேக்கறவன் கேணயனா இருந்தா எருமைங்கோட ஏரோப்ளேன் ஒட்டுமாம்

டைரக்டர் : (மெல்லிய குரலில்) சூப்பர்... நல்லா வேணும் இந்த அப்பாவிக்கு... நம்மள என்ன பாடு படுத்துது (என சிரிக்கிறார்)

அப்பாவி : ஹி ஹி... (என சமாளித்தபடி) மோர் எளனி எதுனா குடிக்கரீங்ளாங் ...

கோவை சரளா : என்னம்மணி என்னமோ கெழக்கால தோட்டத்துக்கு களை எடுக்க வந்தாப்ல கேக்கற... அதான் காபி வித் அப்பாவினு போர்டு போட்டுருக்கில்ல... காபி கீபி ஒரு கிளாஸ் குடுக்க சொல்லு

அப்பாவி : காபி இருக்குதுங்... கீபி இல்லீங்... ஹா ஹா ஹா (என தன் ஜோக்குக்கு தானே சிரிக்க)

கோவை சரளா : சோக்காக்கும்... இனிமே முன்னாடியே சொல்லி போடம்மணி... சிரிக்க சுளுவா இருக்கும்... (என பல்பு கொடுக்க)

அப்பாவி : (கடுப்பை மறைத்து சிரித்தபடி) இன்னுமா மேடம்'க்கு காபி கொண்டு வர்ல... (என ப்ரொடக்சன் பக்கம் சவுண்ட் விடுகிறாள்)

கோவை சரளா : (காபியை கையில் வாங்கியபடி) ம்... அப்பறம்... நமக்கு கோயமுத்தூர்ல எந்த பக்கம் அம்மணி

அப்பாவி : தெக்காலைங்க...

கோவை சரளா : தெக்கால தொள்ளாயிரம் ஊர் கெடக்கு...அதுல எங்க?

அப்பாவி : வெள்ளிகிழம சந்தைக்கும் திங்ககிழம சந்தைக்கும் நடுப்பட்ட ஊருங்... (என சிரிக்கிறார்)

கோவை சரளா : விடுகதயாக்கும்... ம்க்கும்... சரி, இன்னொரு கூழ் குடு..

அப்பாவி : அதுங்... கூழ் எல்லாம் ஆடி மாசம் நம்மூரு அம்மங்கோயில்லயே தீந்து போச்சுங்... காபி இல்ல சூஸ் வேணா குடுக்க சொல்லட்டுமுங்களா?

கோவை சரளா : அட அதில்லம்மணி... நீ போட்ட விடுகதைக்கு இன்னொரு கூழ்... அதான் கண்டுபுடிக்கரதுக்கு சௌகிரியமா என்னமோ சொல்லுவாங்கல்ல... (என தடுமாற)

அப்பாவி : ஓ... க்ளூ'வா? (என பல்லை படித்து சிரித்தபடி) ஸ்ஸ்ஸ்ப்ப்பப்பா...(என பெருமூச்சு விடுகிறாள்)

டைரக்டர் : ஹா ஹா ஹா... இதான் எலிபென்ட்க்கு ஒரு காலம் வந்தா cat'க்கு ஒரு காலம் வரும்ங்கறது... அனுபவி அப்பாவி அனுபவி (என தனக்குள் சிரிக்கிறார்)

அப்பாவி : க்ளூ'னு பாத்தீங்கன்னா...எங்க ஊர் வழியா 102A பஸ் போகுமுங்...

கோவை சரளா : 102A பஸ்... என்ன நக்கலா? 102A பஸ் சாய்பாபா காலனில ஆரம்பிச்சு காரமடை வரைக்கும் போகும்... அதுக்கு நடுவால ஆயிரம் ஊர் இருக்கே (என முறைக்கிறார்)

அப்பாவி : கன்பியூஸ் ஆகிட்டீங்களா... ஹா ஹா ஹா... எனக்கு மத்தவங்கள கன்பியூஸ் பண்றது ரெம்ப பிடிக்குமுங்க (என சத்தமாய் சிரிக்கிறாள்)

கோவை சரளா : (முறைத்தபடி) எனக்கு மத்தவங்கள கன்பியூஸ் பண்றவங்கள கொல பண்றதுக்கு ரெம்ப பிடிக்கும் (என டெரர் லுக் விட)

அப்பாவி : (ஜெர்க்கானதை மறைத்து சிரித்தபடி) இன்னொரு க்ளூ தர்ரனுங்... எங்க ஊர் சின்ன ஊருக்கு எதுக்கால ஊருங்...

கோவை சரளா : சின்ன ஊருக்கு எதுக்கால.... (என தீவிரமாய் யோசித்தபடி) ஓ... புரிஞ்சு போச்சு, புரிஞ்சு போச்சு... என்ற ஒண்ணு உட்ட அக்கா மகள அந்த ஊருக்கு தான் கட்டி குடுத்து இருக்குதம்மணி (என சிரிக்கிறார்)

டைரக்டர் : (அசிஸ்டென்ட் பக்கம் திரும்பி) என்னடா இது... என்னமோ கொள்ளகாரங்க code word வெச்சு பேசிக்கற மாதிரி இருக்கு (என புலம்ப)

அசிஸ்டென்ட் : மாதிரி இல்ல சார்...அதே தான் (என விசும்புகிறார்)

அப்பாவி : ஓ... அப்படிங்களா... அப்ப நெம்ப நெருங்கிட்டோம் (என சிரித்தபடி கோவை சரளாவின் அருகில் சென்று அமர)

கோவை சரளா : இருக்கட்டும் இருக்கட்டும் (என ஜாக்கிரதையாய் தள்ளி அமர்கிறார்)

டைரக்டர் : சூப்பர் பல்பு.. (என சிரிக்கிறார்)

கோவை சரளா : அது கெடக்கட்டும்... நீ என்னமோ கேள்வி எல்லாம் கேப்பேன்னு சொன்னாக...

அப்பாவி : ஆமாங்... நெறைய மனப்பாடம் செஞ்சு வெச்சுருந்தனுங்... உங்கள பாத்த சந்தோசத்துல அல்லாம் மறந்துருச்சுங்... (என சமாளிக்க)

கோவை சரளா : சக்திவேல் கௌண்டராட்டவே நல்லா பொய் சொல்றம்மணி நீயி... (என முறைத்தார்)

அப்பாவி : ஐயோ... இல்லீங்... நெசமா தானுங்... அது சரிங்... இன்னும் அந்த பிரியா மேட்டர்ல நீங்க கௌண்டர் மேல கோபமாத்தான் இருக்கறீங்களாங்...? (என பேச்சை மாற்றினாள்)

கோவை சரளா : பொறவு...அந்த போக்கத மனுஷன் பண்ணின காரியத்துக்கு...

சக்திவேல் கௌண்டர் : (அவசரமாய் உள்ளே நுழைந்து கோவை சரளாவை பேச விடாமல் தடுக்கிறார்) பழனி பழனி பழனிக்கண்ணு... அப்படி அல்லாம் பேச கூடாதம்மணி.. அல்லாரும் பாக்கராங்கள்ல

கோவை சரளா : பாத்தா என்ன? பொறவு உங்க தண்டவாளம் வண்டவாளம் எரோனுமல்ல

அப்பாவி : அது தண்டவாளம் வண்டவாளம் ஏறறது இல்லீங்... வண்டவாளம் தண்டவாளம் ஏற்றதுங்... (என பணிவாய் திருத்தம் சொல்ல)

சக்திவேல் கௌண்டர் : இப்ப கேட்டமாக்கும்... (என முறைக்க)

கோவை சரளா : இந்தா... அந்த பிரியா புள்ளைய எப்படி புடிச்சுட்டு நின்னேன்னு என்ற ரெண்டு கண்ணால பாத்தனல்ல

அப்பாவி : அது மட்டுமா? அதுக்கு முன்னாடி 'அபிராமி அபிராமி' ஒண்ணு, அப்பறம் 'கண்மணி அன்போடு காதலன்' பாடினதெல்லாம் இருக்குதுங்களே (என உசுப்பி விட)

சக்திவேல் கௌண்டர் : இல்ல தெரியாமத்தான் கேக்கறேன்... (என ஏதோ சொல்ல வந்தவரை இடைமறித்து)

அப்பாவி : பரவால்லிங்... தெரிஞ்சுட்டே கேளுங்...

சக்திவேல் கௌண்டர் : ஏனம்மணி... நீங்க காபி வித் அப்பாவி ஷோ நடத்தரீங்களா இல்ல புருஷன் பொஞ்சாதிய பிரிச்சு வெக்கற ஷோ நடத்தறீங்களா? (என முறைக்க)

அப்பாவி : (பயத்தில் நாக்கு குழற) அதுங்... வந்துங்...

கோவை சரளா : இந்தா... என்னத்துக்கு இப்ப அந்த புள்ளைய மிரட்டுரீக... அதே பாவம் பேருக்கேத்தாப்ல அப்பாவியா இருக்கு (என ஆதரவாய் அப்பாவியின் கையை பற்ற)

அப்பாவி : ஆமாங்... நான் அப்பாவினு சொன்னா ஆரும் நம்பறதில்லீங்... நீங்களாச்சும் என்னை புரிஞ்சுகிட்டீங்களே... (என வராத ஆனந்த கண்ணீரை துடைத்து அப்பாவி லுக் கொடுக்கிறாள்)

சக்திவேல் கௌண்டர் : ஆத்தா... அப்பாவி... உலக நாயகி பட்டத்த வேணா உனக்கே குடுக்க சொல்றேன்... கல கல கலனு இருக்கற என்ற குடும்பத்த லக லக லகனு ஆக்கி போடாத (என பாவமாய் கேட்கிறார்)

அப்பாவி : (சரளாவை சமாதானம் செய்வது போல) சரி சரி உடுங்க... ஏதோ கௌண்டர் புத்தி கெட்டு போய் தப்பு பண்ணிட்டாரு...

சக்திவேல் கௌண்டர் : தப்பா.. என்ன தப்பு? ஐயோ... (என பயமாய் சரளாவை பார்க்க)

அப்பாவி : அதான் சரளாக்கா மன்னிச்சுட்டாங்கள்ல உடுங்க...

சக்திவேல் கௌண்டர் : ஹும்... மணாளனே மங்கையின் பாக்கியம்னு இருந்த என்ற பழநிய எப்படி பண்ணிட்டியே அப்பாவி (என கௌண்டர் பீல் செய்ய, சரளா அப்பாவியை சந்தேகமாய் பார்க்க)

அப்பாவி : (சுதாரித்து) அதாருங்க பாக்கியம்? (என அப்பாவியாய் கேட்கிறாள்)

சக்திவேல் கௌண்டர் : ஆரு? (என கௌண்டர் புரியாமல் விழிக்க)

அப்பாவி : நீங்க தானுங்... இப்ப சொன்னீங்... மணாளனே மங்கையின் பாக்கியம்னு... (என்றவள், சரளாவின் பக்கம் திரும்பி) உடாதீங்... ஏதோ விசியமிருக்குதுங், விசாரிங்... (என ஓதுகிறாள்)

கோவை சரளா : (கோபமாய் எழுந்தபடி) நான் போறேன்... எங்க ஆத்தா ஊட்டுக்கே போறேன்... (என அழத்துவங்க)

சக்திவேல் கௌண்டர் : ஐயோ... பழனிக்கண்ணு... இந்த அப்பாவி சொல்றத நம்பாத... நான் சீதாராமன்

கோவை சரளா : மொதல்ல அந்த பிரியா... அப்பறம் பாக்கியம்... இப்ப சீதாவா... ஐயயோ... நான் இப்படி மோசம் போயிட்டனே.. (என ஒப்பாரி வைக்க)

சக்திவேல் கௌண்டர் : ஐய... பழனி... இல்ல

கோவை சரளா : ஆமா... பழனி இல்லாமத்தான் போயிட்டேன் உங்க மனசுல...

(என மூக்கை துடைத்து அப்பாவியின் அருகில் கையை கொண்டு வர, அப்பாவி விவரமாய் விலகுகிறாள். வழக்கம் போல் சக்திவேல் கௌண்டரின் சட்டை சிக்குகிறது)

அப்பாவி : (சாமதானமாய் சரளாவை அமர்த்தியபடி) நடந்தது நடந்து போச்சு...

சக்திவேல் கௌண்டர் : என்ன நடந்ததுனு எனக்கொண்ணும் வெளங்கல (என தலையில் கை வைத்து அமர்கிறார்)

அப்பாவி : சரளாக்கா... சதிலீலாவதில டேமேஜ் ஆன உங்க இமேஜை சரி கட்டணும்னா நீங்களும் கௌண்டரும் சேந்து ஒரு பெரிய பேனர் படத்துல நடிக்கோணும்

டைரக்டர் : சோழியும் குடுமியும் சும்மா ஆடாதே... ம்ம்... என்ன பிளான் பண்றா இந்த அப்பாவி? (என யோசனையாய் பார்க்கிறார்)

கோவை சரளா : பெரிய படமா? எங்கள வெச்சு யாரு பண்ணுவா?

அப்பாவி : (நெருங்கி அமர்ந்தபடி) அதை பத்தி நீங்க கவலை பட வேண்டாம்... அதுக்கு நானாச்சு (என சிரிக்கிறாள்)

கோவை சரளா : நீயா? (என விழிக்க)

அப்பாவி : ஆமாங்... அட்டகாசமா ஒரு கதை என்கிட்ட இருக்கு... உங்களுக்கோசரம் கௌண்டர் பைனான்ஸ் பண்ண மாட்டாரா என்ன? (என அப்பாவி ஒரு அப்பாவி லுக்குடன் சொல்ல சக்திவேல் கௌண்டர் மயக்கம் போட்டு விழுகிறார்)

டைரக்டர் : பத்த வெச்சுட்டியே பரட்ட (என முணுமுணுக்கிறார்)


சக்திவேல் கௌண்டர் விழித்து எழுந்தாரா?

அப்பாவி இருவரையும் வைத்து படம் எடுத்தாளா?

அதை பார்த்த மக்களின் நிலை என்ன?


அறிந்து கொள்ள காத்திருங்கள்...

பின்னூசி குறிப்பு:-
நான் 150 பதிவு எழுதி இருக்கேன்னு என்னால நம்பவே முடியல, எங்களாலையும் தான்னு நீங்க பொலம்பறது கேக்குது... ஹி ஹி ஹி... தொடர்ந்து எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்களுக்கு மிக்க நன்றி...:)

(இதன் தொடர்ச்சி இன்னொரு மொக்கையாய் விரைவில் வெளிவரும்...:))

54 பேரு சொல்லி இருக்காக:

நிஜாம் என் பெயர் said...

i think i am first

அமைதிச்சாரல் said...

//நடந்தது நடந்து போச்சு...//

நடக்காதது ஓடிப்போச்சா இல்ல பறந்து போச்சா :-)))))

150-க்கு வாழ்த்துகள்.

ஜெய்லானி said...

///அப்பாவி : கன்பியூஸ் ஆகிட்டீங்களா... ஹா ஹா ஹா... எனக்கு மத்தவங்கள கன்பியூஸ் பண்றது ரெம்ப பிடிக்குமுங்க (என சத்தமாய் சிரிக்கிறாள்)

கோவை சரளா : (முறைத்தபடி) எனக்கு மத்தவங்கள கன்பியூஸ் பண்றவங்கள கொல பண்றதுக்கு ரெம்ப பிடிக்கும் (என டெரர் லுக் விட)//


என்னா கொலவெறி ஹா...ஹா.

ஜெய்லானி said...

150 ஆ...ரொம்பவும் கம்மியா இருக்கே இன்னும் பக்கத்துல 4 சைபர் வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :-)

(Mis)Chief Editor said...

அ(ப்பாவி தங்க)ம்மணி அவர்களுக்கு,

வணக்கம்! நூற்றி ஐம்பதை எட்டியமைக்கு நன்றி...வாழ்த்துக்கள்!

என்றும் அன்புடன்,
பருப்பு ஆசிரியன் (எ) மிஸ்சீஃப் எடிட்டர்

துளசி கோபால் said...

ஆஹா..... ஒன்னரைச்சதமா அப்பாவி??????

கலக்கிட்டீங்:-))))))

ஸ்ரீராம். said...

அப்பாவித்தனமான சரள நகைச்சுவை. பிராக்கெட்டில் இருக்கும் விளக்க வார்த்தைகள் இல்லாமலேயே கூட அந்தந்த வார்த்தைகளின் பாவம் வசனங்களில் உணர முடிகிறது. சரள பேசும் வசனங்களைப் படிக்கும்போது மனதுக்குள் அவர் குரலே ஒலிப்பது போல பிரமை!

ஸ்ரீராம். said...

சரள பேசும் வசனங்களை...சரளா பேசும் வசனங்களை என்று திருத்திப் படிக்கவும் ஸாரி!

அதீதம் said...
This comment has been removed by the author.
எல் கே said...

அம்மணி மொதல்ல நூத்தம்பது பதிவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிக்கறேனுங்க. நம்மூர் அம்மணி குடும்பத்துல இம்புட்டு கும்மி அடிக்கறீங்களே இது நியாயமா ??

ஐவர் பேரவை இல்லீன்கர தெகிரியமா ??

தோழி said...

நூற்றி ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

முனியாண்டி said...

இது மற்றொரு சதிலீலாவதி

RAMVI said...

//சோழியும் குடுமியும் சும்மா ஆடாதே... ம்ம்... என்ன பிளான் பண்றா இந்த அப்பாவி//

அருமை.சிரிச்சு சிரிச்சு வயத்த வலிக்கறது.

150க்கு வாழ்த்துக்கள்,புவனா சீக்கிரமே அது1500 ஆகவும் வாழ்த்துக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

இப்ப என் கவலை எல்லாம், ஒரு கோயம்புத்தூர் அம்மணியவே நம்மளால சமாளிக்க முடியலியே, இப்ப இன்னொன்னு வேற வருதே... என்ன நடக்க போகுதோ...ஹ்ம்ம் (என சோகமாய் மானிட்டரை பார்க்கிறார்)/

நல்ல ஆ..ர..ம்பம்!

இராஜராஜேஸ்வரி said...

150 க்கு வாழ்த்துக்கள்!

asiya omar said...

வாழ்த்துக்கள்,கோவை அப்பாவி vs கோவை சரளாவா,எப்படீங் அம்மணி?

திவா said...

இப்படியே நூல் நூத்து நூத்து நூத்து ஐம்பது ஆயிடுத்தா? வாழ்த்துகள்!

தங்கம்பழனி said...

150 க்கு வாழ்த்துக்கள்! வழக்கம்போலவே பதிவும் நன்றாக இருந்தது.

ஹுஸைனம்மா said...

//இதன் தொடர்ச்சி இன்னொரு மொக்கையாய்//

.....பொத்....

(ம்ம்.. நான் மயக்கமாகி விழுந்த சத்தம்.. டைல்ஸ்ல ஒரு கீறல் வேற... என் மனசப் போல...:-(((( )

;-)))))))

ஹுஸைனம்மா said...

150க்கு வாழ்த்துகள் புவனா!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

150 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

//அப்பாவி : ஹி ஹி... அப்ப தானுங்... நமக்கும் நாலு மொழி தெரியும்னு புரிஞ்சு மத்த மொழி டிவில இருந்து சான்ஸ் கிடைக்குமுங்...//

கோவை சரளாவின் நகைச்சுவையான நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். தங்கள் எழுத்துக்களைப் படிக்கும் போது அவங்களுக்கு அக்காவோ என்றும் நான் நினைத்ததும் உண்டு.

நல்ல ஆ....ரம்பமே!. தொடருங்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk

Thanai thalaivi said...

150 வது பதிவிற்கு வாழ்த்துக்கள். எல்லாம் சரி, டைரக்டர் யாருன்னு நீங்க சொல்லாமலேயே நாங்க கண்டுபிடிசிடோம்ல்ல....!! உங்க ரங்கமணியே தான். உங்ககிட்ட மாட்டிகிட்டு மண்டைய பிச்சிகிறது வேற யாரா இருக்க முடியும்...!?

மோகன்ஜி said...

நூற்றியைம்பது தானா? இன்னுமிருக்குமின்னே தானே நெனச்சுகிட்டுருக்கேன் அப்பாவி?

இன்னும் அடிச்சு ஆடுங்க.. வாழ்த்துக்கள்!

Lakshmi said...

அப்பாவி 150-க்கு வாழ்த்துக்கள்.

ஸ்வர்ணரேக்கா said...

அதாரு பாக்கியம்..??

யப்பா.. சான்ஸே இல்ல... அம்புட்டு அப்பாவியா நீங்க..

//அதை பார்த்த மக்களின் நிலை என்ன?//

வேறேன்ன.. மயங்கி விழறது தான்..

Jagannathan said...

ஆஹா, என்ன ஒரு சரளமான பேட்டி! சமீபமாக நான் உங்கள் ப்ளாக்-கை அடிக்கடி படித்து ரசிக்கிறேன். போன பதிவான காக்கா கதையை ஐந்தாறு தடவை படித்து சிரித்து மகிழ்ந்தேன். நன்றாக எழுதும் உங்களுக்கு வாழ்த்துகள். - ஜெ.

பத்மநாபன் said...

நூத்தம்பது பதிவுக்கு வாழ்த்துக்கள் ... சரளாக்காவுக்கு சரியான சோடியத்தா சேர்ந்துருக்கிங்க.. நூத்தி ரெண்டாம் நம்பர் பஸ்லே போய் ஐஞ்சு வருஷ மாச்சுங்க அம்மணி ...திருப்பி பஸ் எத்தி விட்டுட்டிங்க ... அடுத்த ரகளையும் பார்த்துட்டு எறங்கிக்றேன்

Jaleela Kamal said...

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
pathivu innum padikkala
apparam vanthu padikkireen

சுசி said...

வாழ்த்துகள் புவனா..
சிரிச்சுட்டே இருக்கேன்.. அசத்தல்தான் போங்க :))

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Kalakkal comedy

கோவை2தில்லி said...

நம்மூர் அம்மணிக்கு 150 பதிவுகள் தந்ததுக்கு முதல்ல வாழ்த்து சொல்லிக்கிறேன்.

”கோவை சரளா : என்னம்மணி என்னமோ கெழக்கால தோட்டத்துக்கு களை எடுக்க வந்தாப்ல கேக்கற... அதான் காபி வித் அப்பாவினு போர்டு போட்டுருக்கில்ல... காபி கீபி ஒரு கிளாஸ் குடுக்க சொல்லு ”

அதான அத உட்டுப்போட்டு என்னன்னத்தையோ கேட்டுகிட்டு இருந்தா....

சதிலீலாவதியில் வரும் கோவை சரளாவின் ...
”என்னயே புடிக்கல இதுல ப்ரேக் புடிச்சா என்ன புடிக்காட்டா என்ன” தான் ஞாபகம் வந்தது.

சாய்பாபா காலனி, காரமடையா..கோவைக்கு சீக்கிரம் ஒரு டிக்கட் போடணும்.

தமிழ்வாசி - Prakash said...

150 க்கு வாழ்த்துக்கள். மொக்கை தொடருமா? அவ்வ்வ்வ்வ்

Kasu Sobhana said...

150 வாழ்த்துகள்.

கண்ணன் ஜே நாயர் said...

நூற்றி ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

kriishvp said...

150 பதிவு போட்டாச்சுங்களா! மேலும் செஞ்சுரி மேல் செஞ்சுரி அடிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் அப்பாவி சகோதரி

//கோவை சரளா இன் காபி வித் அப்பாவி

:) :) :) :) :) ஏனுங்க அம்மிணி செம கூத்து போங்க

Yoga.s.FR said...

150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்கள்!!!
வாழ்த்துக்கள்!!!!

vgr said...

congrats on 150th post.

padatha eduku thirumba ezhudeerukeenga :)?

சி.பி.செந்தில்குமார் said...

150 15000 ஆக வாழ்த்துக்கள்

Anonymous said...

//அப்பாவி : கன்பியூஸ் ஆகிட்டீங்களா... ஹா ஹா ஹா... எனக்கு மத்தவங்கள கன்பியூஸ் பண்றது ரெம்ப பிடிக்குமுங்க (என சத்தமாய் சிரிக்கிறாள்)

கோவை சரளா : (முறைத்தபடி) எனக்கு மத்தவங்கள கன்பியூஸ் பண்றவங்கள கொல பண்றதுக்கு ரெம்ப பிடிக்கும் (என டெரர் லுக் விட)//


ஹா ஹா ஹா ஹா ஹா.

@ கார்த்தி சார்,
இல்லைன்னு யார் சொன்னா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

@ஹூஸைன்னம்மா,
ஹா ஹா ஹா. தண்ணி தெளிச்சப்புறமும் மயக்கம் மாதிரி சமைக்கற பஞ்சியில நடிக்கறீங்களாமே. அப்படியா?

//சி.பி.செந்தில்குமார் சொன்னது…

150 15000 ஆக வாழ்த்துக்கள் //
வை கொலவெறி... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

கீதா said...

புவனா, எப்படித்தான் இப்படி உங்களுக்கு நகைச்சுவை கைவருதோ? ஒவ்வொரு வரியிலயும் சிரிக்கவைக்கறீங்க. அதுவும் கோவை சரளாவையும் பக்கத்தில் வச்சுகிட்டு. மனசில் எவ்வளவு பாரம் இருந்தாலும் உங்க பதிவைப் படிச்சால் போதும், லேசாகிடும். 150 பதிவுகளுக்கு என் பாராட்டுகளும், இன்னும் பல பதிவுகள் இட்டு தொடர்ந்து எங்களை நகைக்கவைக்க வாழ்த்துகளும்.

அப்பாவி தங்கமணி said...

@ நிஜாம் என் பெயர் - ஆமாங்க... நீங்க தான் மொதல் போணி...நன்றிங்க...:)

@ அமைதிச்சாரல் - ஆமாங்... பறந்து போச்சு... ஹா ஹா... நன்றிங்க

@ ஜெய்லானி - இன்னும் நாலு சைபரா? உலகம் தாங்குமாங்'ண்ணா...நன்றிங்க... :))

@ (Mis)Chief Editor - ரெம்ப நன்றிங்க

@ துளசி கோபால் - ஆயிரம் பதிவு தாண்டிய துளசிம்மா'கிட்ட இருந்து வாழ்த்து கிடைப்பது மிக்க மகிழ்ச்சி...:)

@ ஸ்ரீராம். - ஆஹா... நன்றிங்க... 'சரள' நகைச்சுவை என்பதை பாராட்டாவே எடுத்துக்கறேங்க... noun turned as an adjective thank you...:))

@ எல் கே - அட அட அட... எங்கூர் பாஷைல கலக்கற கார்த்தி... திவ்யாம்மா சொல்லி குடுத்தாங்களோ...:) ஐவர் பேரவையா? அப்படினா?...:))

@ தோழி - நன்றிங்க தோழி

@ முனியாண்டி - ஹா ஹா.. நன்றிங்க... :)

@ RAMVI - 1500 ஆ? ஐயோ பாவம் நீங்க எல்லாம்..ஹா ஹா... ரெம்ப நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்'ம்மா...

@ asiya omar - ஹி ஹி... எல்லாம் உங்க ட்ரைனிங் தானுங்...:))

@ திவா - ஆமாங் திவாண்ணா... நூத்து நூத்து நூத்தம்பது ஆயாச்சு...:))

@ தங்கம்பழனி - நன்றிங்க

@ ஹுஸைனம்மா - ஹா ஹா ஹா... mission accomplished .. உங்க ஊட்ல அண்ணன் தானுங்க இப்படி செய்ய சொல்லி கேட்டுகிட்டாரு... நீங்க மயங்கி விழுந்த கொஞ்ச நேரம் "நானும் பசங்களும் நிம்மதியா இருந்தோம்"னு தனி மெயில் வந்ததுங்க... நாராயண நாராயண...:))

@ வை.கோபாலகிருஷ்ணன் - ஆஹா.... நான் அவங்களுக்கு அக்காவா? பொண்ணு வயசு தானுங்... நன்றிங்க?

@ Thanai thalaivi - ஹா ஹா ஹா... அப்படியா? அவர் டைரக்ட் பண்ணி நான் ஷோ பண்ணி மக்கள் பாத்து... ஐயோ பாவம்... தானை தலைவி அக்கா சூப்பர்...:)))

@ மோகன்ஜி - ஆடிடுவோம்ங்க...நன்றிங்க... :)

@ Lakshmi - நன்றிங்க லக்ஷ்மி'ம்மா...:)

@ ஸ்வர்ணரேக்கா - ஹா ஹா... நன்றிங்க ஸ்வர்ணா ..:)

அப்பாவி தங்கமணி said...

@ Jagannathan - ரெம்ப நன்றிங்க சார்...:)

@ பத்மநாபன் - நன்றிங்'ண்ணா.. நானும் 102Aல போயி பல காலம் ஆச்சுங்க... நன்றிங்க...:)

@ Jaleela Kamal - தேங்க்ஸ்'க்கா...:)

@ சுசி - ரெம்ப தேங்க்ஸ் சுசி...:)

@ "என் ராஜபாட்டை"- ராஜா - மிக்க நன்றிங்க

@ கோவை2தில்லி - நன்றிங்க ஆதி... உங்களுக்கும் ஊர் ஞாபகம் வந்துடுச்சா.. எனக்கும் தாங்க...அவ்வ்வ்வ்

@ தமிழ்வாசி - Prakash - ஹா ஹா... தொடரும் தொடரும் தொடரும் என்றென்றும்... நன்றிங்க

@ Kasu Sobhana - நன்றிங்க...:)

@ கண்ணன் ஜே நாயர் - ஆஹா...என்ன அதிசியமா இந்த பக்கம்? தேங்க்ஸ் கண்ணன்...:)

@ kriishvp - ஹா ஹா... ரெம்ப நன்றிங்க... நீங்கள் ரசித்ததில் மகிழ்ச்சி...:)

அப்பாவி தங்கமணி said...

@ Yoga.s.FR - நன்றி நன்றி நன்றி...:)

@ vgr - இது ஒரு epilogue மாதிரி வெச்சுக்கோங்களே...:)) நன்றிங்க

@ சி.பி.செந்தில்குமார் - ஆஹா... படிக்கறவங்க நிலைமை?...:)

@ பெயரில்லா - Is this Anamika? I think so.. :)

@ கீதா - ரெம்ப நன்றிங்க கீதா... இந்த பாராட்டுக்கள் தான் எனக்கான பூஸ்ட் காம்ப்ளான் எல்லாமும்... :)

A and A said...

Very nice

வெங்கட் நாகராஜ் said...

150-ஆவது பகிர்வுக்கு வாழ்த்துகள்.....

தக்குடு said...

ஜாடிக்கு ஏத்த மூடிதான். இட்லிமாமியோட வாயை அடக்கனும்னா சரளா மாதிரி ஆள் தான் சரி! :)) உங்களோட எழுத்தாளுமைக்கு முன்னாடி 150 எல்லாம் ஜுஜூப்பி தான் அக்கா :))

siva said...

48..

siva said...

49..

siva said...

151..appda 150thavathu comment,,

siva said...

தொடர்போடும்
ராணி புதிய விமலா ரமணி
அப்பாவி தங்கமணி
வாழ்க

எழுதிய கதைக்கு
கவிதைகள் சொல்லும் கவிதாயனி வாழ்க

போராட்டம் நடத்த
இட்லி சுட்ட மாமி வாழ்க

பதிவு போடவில்லை என்று போட்டாலும்
கம்மெண்டு வாங்கும்
பிரபலம் அப்பாவி வாழ்க

இப்படிக்கு
ரசிகர்மன்றம்
கிளை எண் 1825.

siva said...

வாழ்த்த வயது இல்லை என்றாலும் எங்கள் சங்கம்
உங்களை வாழ்த்துகிறது

goma said...

காபியோட சேர்த்து கோவையம்மாவையும் ஒரு கலக்கு கலக்கிட்டீங்க......நல்ல கலக்கல்

அப்பாவி தங்கமணி said...

@ A and A - நன்றிங்க...

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க பிரதர்

@ தக்குடு - நீங்க சொன்னா சரி தான் தக்குடுவாள்(ல்)... :)))

@ siva - ஆஹா... சூப்பர்...மறைமுகமா ஏதோ திட்டற மாதிரி தோணுதே அப்படியா? ... :)

@ goma - ஏதோ என்னால ஆனதுங்க... நன்றிங்க...:))

Post a Comment