Monday, September 26, 2011

Accountancyயும் அப்பாவியின் வாழ்க்கையும்... (இதை படிச்சா ரெண்டு ஜெலுசில் free ...:))))


முன் குறிப்பு:
ட்ரெயின்ல உக்காந்து பராக்கு பாத்தா கதை, மொக்கைனு தோணுது. அதான் உங்கள சிரமப்படுத்த வேண்டாம்னு ஒரு நல்ல எண்ணத்துல, அதோட ஒரு எக்ஸாம்க்கும் படிக்க வேண்டி இருந்ததால அதை படிப்போம்னு ட்ரெயின் ஏறினதும் Accounts புக் எடுத்து வெச்சேன் கைல...

ஆனா "காசிக்கு போனாலும் கர்மம் தீரலை"னு சொல்ற கதையா, காலக்கொடுமை அப்பவும் மொக்கை தான் தோணுது... I think, அந்த ட்ரெயின்க்கு தான் ஏதோ ஜாதக கோளாறுனு... Not my mistake you see.. :)) அப்படி Accounts படிச்சப்பவும் தோணின மொக்கை இதோ உங்கள் பார்வைக்கு... எப்பவும் போல் "எல்லா புகழும் ட்ரெய்னுக்கே"....:)))

இன்னொரு முன் குறிப்பு:
இந்த தலைப்புல அப்பாவினு சொல்லப்படுவது என்னை குறிப்பதல்ல... சும்மா commonman(woman) என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள படவேண்டுமென தெரிவித்து கொள்கிறேன்...

இன்னுமொரு முன் குறிப்பு (சத்தியமா இதான் கடைசி):
இதை பொலம்பல்னு நெனச்சா உங்களுக்கு ஜஸ்ட் பாஸ்...அதாங்க 40 Marks
சூப்பர் கற்பனைனு நெனச்சா 50 Marks
கவிதைனு நெனச்சா 60 Marks
தத்துவம்னு நெனச்சா 70 Marks
Self realisationனு நெனச்சா (ஹி ஹி ஹி) 80 Marks
Soul realisationனு நெனச்சா (ஹையோ...) 90 Marks
எல்லாத்துக்கும் அப்பார்பாட்டது(!!!)னு நெனச்சா cent % ... அதாங்க நூத்துக்கு நூறு... (100 / 100)

இதுல குடுத்துருக்கறத தவிர வேற என்ன நெனச்சாலும் imposition "Read and write this post for 100 times":-)

இதோ, ஒரு Accounts Student'ன் எண்ணத்தடங்கல்... ச்சே எண்ணத்தடங்கள்....

Debit the Receiver
Credit the Giver
பதினொன்றாம் வகுப்பில்படித்தது
பசுமரத்தாணியாய் பதிந்ததுமனதில்

Personal Real Nominalஎன
பலதும் படித்திருந்தாலும்
பரீட்சை முடிந்தபின்னே
பறக்கவிடுவதே பழக்கமென்றபோதும்
Personalஅக்கௌன்ட் ரூல்ஸ்மட்டும்
பெர்சனலாய் நின்றதுநெஞ்சில்

வாங்கிக்கரவனுக்கு Debitஆம்
வந்துகுடுக்கறவனுக்கு Creditஆம் - அதாவது
பணம்கேக்கறவன் பங்காளி
பாசமாகுடுக்கரவன் பரமயோகி - ஆஹா
வள்ளுவம் போல்ஈரடியில்
வாழ்க்கை தத்துவமேஇதில்

இப்படியும் சொல்லிபோட்டு
ஐயமிட்டுஉண் என்றும்
ஏற்பது இகழ்ச்சிஎன்றும்
ஏனப்பா குழப்புனாங்க?

அதெல்லாம்இருக்கட்டும் ஒருபக்கம்
Accountancy என்றாலே
அச்சுபிச்சுன்னு அங்கயும்இங்கயும்
அலைஅலையாய் பலநினைவுகள்

JournalEntry கற்றநாளில்
GeneralMajor ரேஞ்சுக்குஅலட்டலென்ன
TrialBalance புரிந்தபோதோ
Tieகட்டகூட T-Formatஎன அலம்பலென்ன

Balancesheet Tallyசெய்த முதல்முறை
பேலன்ஸ்இன்றி ஆடியநினைவுகள்
BankReconciliation கற்றுகொண்டநாளில்
அப்பாவின் Passbookகொண்டு செய்தஅலப்பறைகள்

CompanyAccounts புரிந்தநாளில்
பில்கேட்ஸ்ஆனதாய் கண்டகனவுகள்
GoodwillConcept மண்டையில்ஏற
ஒண்டிவில்ஆட்டத்திலும் AverageProfitMethod

Depreciationபற்றி அறிந்தநாளில்
DustBinக்கும் Wear&Tearபார்த்த ஆர்வக்கோளாறு
RatioAnalysis அறிந்தஅன்று
ரசம்சாப்பாடுகூட AbsoluteLiquidRatio

Jain&Narangசுமந்த கைகளுக்கு
Zandubalm தடவியநினைவுகள்
பஸ்சுல "Luggageகட்டு"னுகேட்ட
பழகியநடத்துனர் கேலிகள்
தலைக்குள் ஏறுச்சோஇல்லையோ
தலையணைக்கு substituteஆச்சு :-)

சின்னப் புள்ளதனமுன்னு
சிரிப்பா இப்பநெனச்சாலும்
நெனச்சு பாக்கஎப்பவும்
நினைவுகள் பசுமைதான்

ஏதோ சொல்லவந்து
ஏதேதோ சொல்லிப்போறேன்
என்னைக்கும் போலத்தான்
இன்னைக்கும் ஆகிபோச்சு

கட்டைஎடுத்துநீங்க அடிக்கும்முன்ன
கன்னாபின்னானு திட்டும்முன்ன
சோலியபாக்க நானும்போறேன்
Show-CauseNotice வர்றதுக்குமுன்ன ...:)))

பின் குறிப்பு (in response to some comments):-
Ledger மட்டுமில்ல, Balancesheetம் Tally ஆகணும், இல்லைனா அது im-balancesheet ஆய்டும்... :))))

76 பேரு சொல்லி இருக்காக:

Philosophy Prabhakaran said...

Accounts subject எடுத்து படிக்காததால் முன்குறிப்பு தவிர வேறு எதுவும் புரியவில்லை... எனக்கு எவ்வளவு மதிப்பெண் தருவீங்க...

அனாமிகா துவாரகன் said...

Wow, first comment in 3 mins.

அனாமிகா துவாரகன் said...

ஏன்ப்பா, அப்பாவிய‌ ப‌திவு போடு போடுன்னு இம்சை ப‌ண்ணி அவ‌ங்க‌ போட்ட‌தும், ஹை வ‌ட‌ன்னு வ‌ந்தா இப்ப‌டியா செய்வீங்க‌. பிலோச‌பி பிர‌பாக‌ர‌ன் ட‌வுன் ட‌வுன்

தங்கம்பழனி said...

எனக்கு எல்லாமே புரிஞ்சுடுச்சி.. ஆனா என்னன்னு கேட்கப் படாது.. ஏன்னா? எனக்கு அக்கவுண்ட் சுத்தமா....?!!!!

தங்கம்பழனி said...

இன்னொரு முன்குறிப்பும் கொடுத்திருக்கலாம்..!! ரொம்ப நாள் இடைவெளியில இப்படியொரு ஒரு..ஒரு... ம்ஹீம் சொல்ல வார்த்தை இல்லை.. சும்மா... பிச்சுட்டீங்க...!! என்னமா அக்கவுண்ட்ஸ் கவிதை எழுதியிருக்கீங்க...அவ்அவ்வ்...!!

மகி said...

அக்கவுண்ட்ஸ்க்கும் எனக்கும் ரெம்ப தூரம்! Jain & Narang மட்டும் எங்கயோ தூக்கத்தில கேள்விப்பட்ட பேரா இருக்குது. :)

ஹும்,இம்போஷிஷன் எழுதத் தெம்பில்லாதால "இந்தப் பதிவு அப்பாவியின் பதிவுகள் எல்லாத்துக்கும் அப்பாற்பட்டது(!!!), எல்லாத்தையும் தாண்டிப் புனிதமானது(!!!)"னுசொல்லிகிட்டு அப்பீட் ஆகிக்கறேன்! ஹிஹி!

பி.கு.இன்னிக்கு முகப்புத்தகச் செய்திகளைப் படிக்கலீங்களாங்கம்மிணி? ;) ;)

ஷீ-நிசி said...

40 Marks :)

ஸ்ரீராம். said...

ஆஹா....'பொலம்ப'லில் தத்துவமா வந்த தத்துவக் கவிதை...தன்னை உணர்ந்து விட்ட ஆன்மாவின் சுய அல்சல்னு சொல்லலாம் அல்லது அதற்கும் அப்பாற்பட்டதுன்னும் சொல்லலாம். என்ன, எனக்குதான் ஒண்ணும் புரியலை. அதனால் என்ன...கட் அண்ட் பேஸ்ட் ஐம்பது தடவை பண்ணிட்டேன்..கூடவே கண்ட்ரோல் இஜட்டும்! இன்னும் ஐம்பது பாக்கியா...

(Mis)Chief Editor said...

Trial Balanceக்கு 'T' இல்லை....அது ledgerக்கு உரியது...!

Trial balance tally ஆச்சின்னா automatic-ஆ balance sheet வழிக்கு வந்துரும்...! நீங்க balance sheet-ஐயே tally பண்றீங்கன்னா பெரிய ஆளு மேடம்...!

எதுகை மோனைக்கு சப்ஜக்ட்டையே மாத்திப் புட்டீங்களே அம்மணி...! ஓஹோ...! இதுதான் நகைச்சுவையா...சரி சரி! (எனக்கு சைபர் மார்க் போட்டுடுங்கோ!)

மற்றபடி அந்நாளைய நெனப்புக்கு நன்னி!

-பருப்பு ஆசிரியன்

(Mis)Chief Editor said...

பர்சனலா ஒரு கேள்வி - அப்போ உங்களுக்கும் வயசு முப்பது - நாற்பது ரேஞ்சு??!!

-பருப்பு ஆசிரியன்

எல் கே said...

you are fail

accountancy professor

பத்மநாபன் said...

அக்கௌண்ட்ஸ் ன்னா சும்மா கூட்டல் கழித்தல் மட்டும் தான்னு நினைச்சுட்டு இருந்தேன் ... இவ்வளவு விஷயம் இருக்கா ....
''இப்படித்தானே படிக்கணும் ஒவ்வொரு சப்சஜ்க்டையும்'' அப்படி ஓரு வழிகாட்டியா இந்த பதிவு ... நீங்க கணக்கு புலி சிங்கம் .....

siva said...

பர்சனலா ஒரு கேள்வி - அப்போ உங்களுக்கும் வயசு முப்பது - நாற்பது ரேஞ்சு??!!

//
இதை எதிர்த்து அப்பாவி அவர்கள் மூன்று நாள் உண்ணாவிரதம் இருப்பார்கள்

siva said...

mee the firstuuu

திவா said...

என்னாது? அக்.. அக்.. அக்.. அக்கவுண்டன்ஸியா? அப்புடின்னா?

வெங்கட் நாகராஜ் said...

நமக்கும் அக்கவுண்ட்ஸ்-க்கும் ரொம்ப தூரம்...

:)

இராஜராஜேஸ்வரி said...

"எல்லா புகழும் ட்ரெய்னுக்கே"....:)))

Thanai thalaivi said...

//depriciation அறிந்த நாளில் dust bin கும் wear & tear பார்த்த ஆர்வ கோளாறு //
good,very good.I enjoyed fulled especially this place(it resembled me).

S.Menaga said...

எனக்கு எதுவும் புரியல..எல்லாபுகழும் அப்பாவிக்கே!!

தக்குடு said...

ஒரு கணக்குபுள்ளைக்கு தான் இன்னோரு கணக்குபுள்ளையோட சுக/துக்கம் புரியும். யோகி நிலையை நோக்கி முன்னேறிண்டு இருக்கேள் அக்கா. ஆனா என்ன ஒரு பிரச்சனைனா உங்க கூட இருக்கரவாளுக்கு கூடிய சீக்கரம் கீழ்பாக்கம் தான் :P

(குறிப்பு - //இந்த தலைப்புல அப்பாவினு சொல்லப்படுவது என்னை குறிப்பதல்ல// இதுல மட்டும் இல்லை எப்போதுமே நீங்க 'ஒரு அடப்பாவி'னு லோகத்துக்கே தெரியும்) :))

Kriishvp said...

என்னடா அப்பாவி இப்படி ஒரு இடுகை (இனியொரு தருணம்... ) போட்டு கலக்குறாங்க அப்படின்னு மயக்கத்திலிருந்து தெளியரதுக்குள்ள சகோதரி back to form
அனேகமா எனக்கு இதுதான்னு நினைக்கிறேன் "Read and write this post for 100 times" :-)

வேங்கட ஸ்ரீனிவாசன் said...

Real accounts நடத்தும் பொழுது, கண்ணதாசன் போல்
“வருவதை வரவில் வைத்தோம்
வந்ததை செலவில் வைத்தோம்”
என்று சொன்னவுடன் மாணவர்கள் “எல்லோரும் கொண்டாட” ஆசிரியர் மட்டும் திட்ட “போனால் போகட்டும் போடா” என்று அதை Discount செய்தோமே அதௌ மறந்து விட்டதா?

ஹுஸைனம்மா said...

கவுஜயப் படிச்சு, ‘ஆ... ஆ... ஆ... நம்ம தொங்கமணி இன்னா அருவாளியா இருக்குப்பா...”னு கண்ணுல தண்ணி பொங்க, ”மளிகைக் கடை அக்கவுண்ட் மட்டுமே தெரிந்த எங்களுக்கெல்லாம், பாட்டாலேயே பாடம் சொன்ன அம்மணி”னு பாராட்டு விழா நடத்துவோமான்னு நெனச்சுகிட்டு இருக்கையில..

//(Mis)Chief Editor சொன்னது…
Trial Balanceக்கு 'T' இல்லை....அது ledgerக்கு உரியது...!
Trial balance tally ஆச்சின்னா automatic-ஆ balance sheet வழிக்கு வந்துரும்...! நீங்க balance sheet-ஐயே tally பண்றீங்கன்னா பெரிய ஆளு மேடம்...!//

இப்படி பொசுக்குன்னு உங்க குட்டை ஒடச்சுப் போட்டாரே!!

இதேபோல இன்னும் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏத்த எத்தினி பேரு வரப்போறாங்களோ!! வர்றவங்களை வருக வருகன்னு இப்பவே வரவேத்துக்கிறேன்!! :-)))))))))))))))))

IlayaDhasan said...

என்னா கவுத , எனக்கு மட்டும் இப்படி புரியற மாதிரி அச்குண்டன்சி சொல்லிகுடுதாங்கன்ன
நானும் ஒரு சீ ஏ , சீ எப் எ அப்படின்னு கலக்கிட்டு இருந்துருப்பேன்.

உனக்கு பெரிய "ரஜினி" ன்னு நெனப்பா?
கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்

V.N.Thangamani said...

ஒன்னும் இல்லாத விசயத்துக்கு இத்தனை பின்னுட்டம் யெப்படி ...
நிஙக அப்பாவியா இல்லை அடப்பாவியா.....

சே.குமார் said...

எல்லாம் புரியுது.... ஆனா மறந்து ரொம்ப நாளாச்சா... உங்க கவிதை (நல்லா கவனிங்க நான் கவிதையின்னு சொல்லியாச்சு) மறுபடியும் கணக்குப்பதிவியலை ஞாபகக்கூட்டுக்குள்ள கொண்டு வந்து விட்டுருச்சு....

அதுல பாருங்க journel (include narration) , ledger எல்லாம் அழகா முடிச்சு... balance sheet podurappo... total difference வந்து படுத்தும் பாருங்க... அப்பவே எல்லாம் படுத்துப் போகும்.

angelin said...

//எல்லாத்துக்கும் அப்பார்பாட்டது(!!!)னு நெனச்சா cent % ... அதாங்க நூத்துக்கு நூறு... (100 / 100)//

நான் dissection group அதனால நூறு என்ன இருநூரே உங்களுக்கு தான் .

athira said...

சிக்குப் புக்கு.... சிக்குப் புக்கு... கூஊஊஊஊஊஊஉ:))).

எல்லாத்துக்கும் அப்பாற்பட்டதேதான்:))).

//ஏதோ சொல்லவந்து
ஏதேதோ சொல்லிப்போறேன்
என்னைக்கும் போலத்தான்
இன்னைக்கும் ஆகிபோச்சு //

இனிமேல் ஆகாமல் பாத்துக்கோங்க....
Prevention is better than cure இல்லியா?:))...

ஹி..ஹி.. சும்மா சொல்லிப்பார்த்தேன்... இன்னைக்குப் போலவே என்னைக்கும் இருங்க... இதுதான் புடிச்.. சே..சே.. பிடிச்சிருக்கு:)).

கோவை2தில்லி said...

//இதுல குடுத்துருக்கறத தவிர வேற என்ன நெனச்சாலும் imposition "Read and write this post for 100 times":-) //

அய்யய்யோ!!!! இந்த வம்பே வேண்டாம்.
ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கு.....

ஆனா எனக்குத் தான் ஒண்ணுமே புரியல....

உண்மையான அப்பாவி, QATAR said...

அப்பாவி ஆங்கில மீடியத்துல படிச்சீங்களா?? அதனால தான் Debit, Credit ன்னு கொஞ்சம் புரியற மாதிரி எழுதி இருக்கீங்க.
"பற்று சீட்டு (Debit note)", "வரவு சீட்டு (Credit Note)" "பெறுபவர் - பற்று" "கொடுப்பவர் - வரவு (ஆஹா...)" "தனி கணக்கு, சொத்து கணக்கு, பெயரளவு கணக்கு (Personal, real, nominal accounts)" "இருப்பு நிலை குறிப்பு (Trial Balance)", "இருப்பு பட்டியல் (Balance sheet)", இடாப்பு (இட ஆப்பு.. இல்ல) (Invoice)" ... என்றெல்லாம் தமிழ் படுத்தி இருந்தீங்கன்னா (அ) தமிழுக்கு சேவை செய்த மாதிரியும் இருக்கும். (ஆ) மத்தவங்கள கொழப்ப நினச்ச உங்க நல்ல்லல்ல எண்ணமும் ஈடேறி இருக்கும்.
(இந்த கடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா.. ...:-))))))

ஜெய்லானி said...

அப்பாவி ...நல்லாதானே இருந்தீங்க ..? என்ன ஆச்சு ...ஹா..ஹா... :-)))


எனக்கு ரெண்டு ஜெலுசில் போட்டும் சரியாகல..இன்னும் 2 பிளீஸ் :-)))))

சுசி said...

செம சிரிப்புதான் போங்க :))

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்லாவே எழுதியிருக்கீங்க. ஆனால் Accounting Basic Knowledge இல்லாதவர்களுக்கு, இதை ரசிக்க முடியாது அல்லவா?

வந்துள்ள பின்னூட்டங்களிலிருந்தே ஒரு நாலு பேர்கள் மட்டுமே புரிந்து ரசித்துள்ளார்கள் என்று புரிந்து போய் விட்டது. மீதிபேரெல்லாம் ஏதோ அப்பாவித்தனமாக எழுதியுள்ளனர் போலிருக்கு.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

kggouthaman said...

டர்ர்ர்ர்ர்ர் ............
துணியைக் கிழித்துக் கொண்டு .....

ஜெலுசில் எல்லாம் இதை கியூர் பண்ணாது.

சேட்டைக்காரன் said...

ஜெயின் & நரங்கா? நானு தூக்குனது ஷுக்லா & க்ரேவல்! அதுக்குன்னே கூட நாலு இட்டிலி சாப்பிட்டாத்தான் தெம்பாத் தூக்கிட்டு காலேஜ் போவ முடியும்! :-)

Straight Line Method-ல் செப்பினீர் கவிதை!
சொல்லுடன் கற்பனையின் Amalgamation அபாரம்!
Going Concern போல தொடரட்டும்! :-)

அப்பாவி தங்கமணி said...

@ Philosophy Prabhakaran - நீங்க நேர்மையா பதில் சொன்னதுக்காக உங்களுக்கு full மார்க்ஸ்... :))))

அப்பாவி தங்கமணி said...

@ அனாமிகா துவாரகன் - வட போச்சே அனாமிகா... ;)

அப்பாவி தங்கமணி said...

@ தங்கம்பழனி - ஹா ஹா ஹா... ரெம்ப நொந்துட்டீங்க போல இருக்கு... :))

அப்பாவி தங்கமணி said...

@ மகி - எவ்ளோ தூரம் மகி, நம்ம காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து மருதமலை வரைக்கும் இருக்குமா... :)) அந்த Jain & Narang சுமந்து சுமந்து கை எல்லாம் ரெத்தம் கட்டின நாட்கள் உண்டு..:) இப்பதானுங்க அம்மணி பாத்தேன்... மெனி தேங்க்ஸ்...:) Check your email...:)

அப்பாவி தங்கமணி said...

@ ஷீ-நிசி - உங்களுக்கு நீங்களே மார்க் திட்டமா... சூப்பர்...:)

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம். - ஹா ஹா ஹா.. இவ்ளோ பயமா சார்...:)

அப்பாவி தங்கமணி said...

@ (Mis)Chief Editor -
//Trial balance tally ஆச்சின்னா automatic-ஆ balance sheet வழிக்கு வந்துரும்...! //

No way,Balanced Trial Balanceஐ கொஸ்டினா குடுத்து அதுல இருந்து Trading account, P & L, Balance Sheetனு tally பண்ண சொல்லுவாங்க. Trial balance tally ஆச்சுனாலும் மத்ததுல நாம சொதப்பினா காலி தான்... :) +1 +2 ல நூத்து கணக்குல Final Accounts போட்டு போட்டு tally பண்ண வெச்சு ப்ராக்டிஸ் குடுத்து உசுர வாங்கி இருக்காங்க... :)) But that pays off now for sure, thanks to my Sridevi teacher...//அப்போ உங்களுக்கும் வயசு முப்பது - நாற்பது ரேஞ்சு//

ஏன் இப்படி ஒரு சந்தேகம்..:) முப்பது ஆரம்பங்கள்னு சொல்லிக்கரதில் எனக்கொண்ணும் வருத்தம் இல்லீங்க...:)) "Wiser wouldn't mind admitting their வயசு"னு நானே ஒரு புதுமொழி உருவாகிட்டேன்ங்க.. :)

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - பெயில்'ஆ சூப்பர் ஜோக். Excuse me, Accountancyல 200/200 வாங்கினவ நான் ...:))

அப்பாவி தங்கமணி said...

@ பத்மநாபன் - நன்றிங்'ன்னா... accountancyல இது சும்மா ஒரு trailer தான்... மெயின் பிக்சர் சும்மா அதிருமில்ல... :))

அப்பாவி தங்கமணி said...

@ siva - ஹா ஹா ஹா... no way, தூங்கா விரதம் வேணா ட்ரை பண்றேன், உண்ணா விரதம் வாய்ப்பே இல்லீங்... ;))

அப்பாவி தங்கமணி said...

@ திவா - அப்படின்னா... அப்படி தானுங்... :)

அப்பாவி தங்கமணி said...

@ வெங்கட் நாகராஜ் - கோவைக்கும் டில்லிக்கும் உள்ள தூரமோ... :))

அப்பாவி தங்கமணி said...

@ இராஜராஜேஸ்வரி - ஆமாங்க... :)

அப்பாவி தங்கமணி said...

@ Thanai thalaivi - ha ha... glad u liked... yes, subject புரிஞ்சா என்ஜாய் பண்ண முடியும்... :)

அப்பாவி தங்கமணி said...

@ S.Menaga - ஹா ஹா... தேங்க்ஸ் மேனகா... :)

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - ஹா ஹா ஹா... என் கூட இருக்கறவாளுக்கு கீழ்பாக்கம்னா.........:))) கிர்ர்ரர்ர்ர்... பாய்ண்ட்'ஐ கரெக்டா புடிக்கறியே...:)

அப்பாவி தங்கமணி said...

@ Kriishvp - ஹா ஹா... ஒரே மாதிரி எழுதி உங்கள போர் அடிக்க வேண்டாம்னு தாங்க... :) நூறு வாட்டி எழுதியாச்சா...:)

அப்பாவி தங்கமணி said...

@ வேங்கட ஸ்ரீனிவாசன் - வாவ்... கண்ணதாசன் நினைவு வந்ததில்லங்க... இனி நெனச்சுக்குவேன்'ங்க... சூப்பர் கம்பேரிசன்... நன்றிங்க பகிர்ந்து கொண்டதற்கு... :)

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - எக்கோய்... எனக்கு யாராச்சும் பலப் குடுத்தா ஒரே குஷி ஆய்டுவீங்களே... ஆனா accountsல நான் கொஞ்சம் ஸ்ட்ராங்... +1ல ஆரம்பிச்சு PG வரைக்கும் ஏழு வருஷம் அதையே படிச்சு, இப்ப ஆறேழு வருஷமா அதுல குப்ப கொட்டிட்டு இருக்கேன்... என்கிட்டயேவா... :)) Ledger மட்டுமில்ல, Balancesheetம் Tally ஆகணும், இல்லைனா அது im-balancesheet ஆய்டும்... :)))) என்னா ஒரு வில்லத்தனம்... இந்த வருஷ DSFல அண்ணா உங்களுக்கு ஒண்ணுமே வாங்கி தரக்கூடாதுன்னு சாபம் போடுறேன்... :))

அப்பாவி தங்கமணி said...

@ IlayaDhasan - ஆஹா... நன்றி நன்றி... (அது சரி, உங்க பதிவு தலைப்புல உள்குத்து ஏதும் இருக்கோ...:))

அப்பாவி தங்கமணி said...

@ V.N.Thangamani - என்னங்க எங்க accountancyய ஒண்ணுமில்லாத விஷயம்னு சொல்லிட்டீங்க... :)))

அப்பாவி தங்கமணி said...

@ சே.குமார் - நல்லா சொன்னீங்க... சின்ன டிபரன்ஸ் என்னனு தெரியாம மண்டை ஒடைச்சுட்டு இருந்தா "drawings" அது இதுனு எதாச்சும் விட்டுருப்போம்...அதெல்லாம் ஒரு காலம்... ஆனா tally பண்ணி முடிச்சதும் வரும் பாருங்க ஒரு சந்தோஷம். அதுக்கு ஈடில்லை... :))

அப்பாவி தங்கமணி said...

@ angelin - ஹா ஹா ஹா... டோட்டல் சர்ரண்டர் போல இருக்கே... சூப்பர்.. :)

அப்பாவி தங்கமணி said...

@ athira - ஆஹா... இதான் புடிச்சுருக்கா... எனக்கும் உங்க டீல் புடிச்சுருக்கு... :)

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - ஹா ஹா ஹா... நீங்களும் dissection க்ரூப் தானா ஆதி....:)

அப்பாவி தங்கமணி said...

@ உண்மையான அப்பாவி, QATAR - என்னங்க நீங்க தான் உண்மையான அப்பாவினு குண்டை தூக்கி போடறீங்க... :) ஆமாங்க ஆங்கில மீடியம் தான்... நீங்க சொன்ன தமிழாக்கங்களும் கேக்க நல்லாவே இருக்கு... முன்னாடியே ஐடியா குடுத்து இருந்தீங்கன்னா தமிழ்படுத்தி மத்தவங்களையும் படுத்தி இருக்கலாம்... மிஸ் ஆய்டுச்சு... சரி விடுங்க இன்னொன்னு எழுதிட்டா போகுது... :))

அப்பாவி தங்கமணி said...

@ ஜெய்லானி - நல்லாதானுங்க இருந்தேன்... ஒருத்தர் சும்மா சும்மா சந்தேகம் கேட்டு கேட்டு இப்படி ஆய்ட்டேன்... :) ஜெய்லானி அண்ணாத்தைக்கு ஒரு கண்டெய்னர் ஜெலுசில் பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்....:))

அப்பாவி தங்கமணி said...

@ சுசி - தேங்க்ஸ் சுசி... :)

அப்பாவி தங்கமணி said...

@ வை.கோபாலகிருஷ்ணன் - ஆமாங்க... accounts தெரியாதவங்க ரசிக்க முடியாது தான்... சும்மா ஒரு ஆசைக்கு எழுதினது தான்... :) நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ kggouthaman - ஹா ஹா ஹா... நிலைமை அவ்ளோ மோசமா போயிடுச்சா... :))

அப்பாவி தங்கமணி said...

@ சேட்டைக்காரன் - ஓ நீங்க ஷுக்லா & க்ரேவல் கோஷ்டியா? எங்க மேடம் அதுல இருந்தும் ப்ராப்ளம்ஸ் எடுத்து உசுர வாங்கி இருக்காங்க... ஆனா அதிகம் சுமந்தது ஜெயின் & நாரங் தான்...:) இட்லி சாப்பிடனுமா... ஹ்ம்ம், அப்பவெல்லாம் அம்மா செஞ்ச இட்லி தானே, நல்லாத்தான் சாப்டேன்... :) ஆஹா, ஆஹா, Straight Line Method என்ற போதினிலே இன்பதேன் வந்து பாயுது காதினிலே... :) Amalgamation நெனச்சா இப்ப கூட ஒதறுது... :)

ஹுஸைனம்மா said...

//இந்த வருஷ DSFல அண்ணா உங்களுக்கு ஒண்ணுமே வாங்கி தரக்கூடாதுன்னு சாபம் போடுறேன்... :)) //

அய்யோ, அப்பாவி நீங்க மட்டும் என் பக்கத்துல இருந்தீங்கன்னா, கட்டிப்புடிச்சு என் சந்தோஷத்தைத் தெரிவிச்சுருப்பேன். சாபத்துக்கு நன்றி, கண்டிப்பா பலிக்கணும்னு வேண்டிக்கிறேன்.

என்னா பேய்முழி? ஆமாங்க, ஒவ்வொரு டிஎஸ் எஃப் அல்லது GETEX-லயும் அத வாங்கப் போறேன், இத வாங்கப் போறேன்னு கிளம்பறதும், நான் வாங்க கூடாதுன்னு சண்டை போடறதும்.. நினைச்ச நாலு இல்லன்னாலும் ரெண்டாவது வாங்கிட்டு வந்து சாதிக்கீறதும், பணமும் வேஸ்ட், தேவைக்கும் மிஞ்சிப் போவுதுன்னு நான் கொதிக்கிறதும்.. ஹூம்.. இதோ அடுத்த மாசம் GETEXல என்ன வாங்கலாம்னு இப்பவே லிஸ்ட் போட்டாகுது!! எங்க வீட்டில மட்டும் ஏன் இப்படி தலைகீழோ??!!! :-))))))

அமைதிச்சாரல் said...

உங்கள மாதிரியே நாங்களும் j.l.jordan, p.s. verma, agarwalன்னு ஏழெட்டு கிலோ புக்குகளை தூக்கி செமந்திருக்கோமாக்கும்..

எங்க காலேஜ்ல எல்லா க்ரூப் பெண்களுக்கும் ஒரே வெயிட்டிங் ஹால்தான். மத்தியானம் ரீஸஸ் சமயத்துல எல்லா பி.காம் க்ரூப் வாலுங்களும் இதே மாதிரித்தான் புலம்பிக்கிட்டு அலையும். பாலன்ஸ் ஷீட் டேலி ஆகலைன்னா அன்னிக்கு ரெண்டு பக்கத்துக்கு கூடுதலாவே புலம்புவாளுங்க :-)))

ஜெகன்னாதன் said...

பேசாம நீங்க மேயர் போஸ்ட்டுக்கே நின்னுருக்கலாம் (இந்த்யாவிலிருந்திருந்தால்) - எவ்வளவு உபாசகர்கள் உங்களுக்கு இந்த மொக்கைக்குக் கூட! - ஜெ.

RVS said...

ஒரே பதிவுல Accountancy பாடம் எடுக்க உங்களால மட்டும் தான் முடியுங்க.... சூப்பர்ப். :-)

RAMVI said...

புவனா உங்க முன் குறிப்புகள், பின் குறிப்பு எல்லாம் நன்னாயிருக்கு.
நடுல நீங்க என்னாமோ கவிதை மாதிரி எழுதியிருக்கீங்களே அதுதான் கொஞ்சம் புரியவில்லை.

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃஇந்த தலைப்புல அப்பாவினு சொல்லப்படுவது என்னை குறிப்பதல்ல.ஃஃஃஃ

நம்புவமா ? கடைசி வரைக்கும் இல்ல.. ஹ..ஹ..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்

அப்பாவி தங்கமணி said...

@ ஹுஸைனம்மா - ஹா ஹா... சூப்பர் அக்கா... ஓ, கதை அப்படி போகுதா? எங்க வீட்டு கதை எப்படி தெரியுமா? நான் வாங்கலாம்னு சொல்றதை அவர் வேண்டாம்பார், அவர் வாங்கலாம்னு சொல்றதை நான் வேண்டாம்பேன்... மொத்ததுல ஒண்ணும் வாங்காம சண்டைய மட்டும் வாங்கிட்டு வீட்டுக்கு வருவோம்.. இதெப்படி இருக்கு?...:)))

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - ஓ... நீங்களும் ஆர்ட்ஸ் தான் இல்லையா, மறந்துட்டேன்... நல்லா சொன்னீங்க போங்க...:)

@ ஜெகன்னாதன் - ஆஹா... ஏங்க? நல்லாதானே போயிட்டு இருக்கு?...:))

@ RVS - ஹா ஹா... நன்றிங்க..:)

@ RAMVI - அவ்வ்வ்வவ்.... பயங்கர பல்ப் இதான்...:))

@ ♔ம.தி.சுதா♔ - நம்பனும்... நம்பிக்கை தானே வாழ்க்கை..;))

ஸ்வர்ணரேக்கா said...

//ஏதோ சொல்லவந்து
ஏதேதோ சொல்லிப்போறேன்
என்னைக்கும் போலத்தான்
இன்னைக்கும் ஆகிபோச்சு //

-- இது தான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு புவனா..

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்வர்ணரேக்கா - எனக்கும் தான்... ரெம்ப நன்றிங்க ஸ்வர்ணா...:)

Post a Comment