Tuesday, September 20, 2011

இனியொரு தருணம்... (சிறுகதை)

(எனது இந்த படைப்பு அதீதம் இணைய இதழில் வெளியானதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி அதீதம்)

***********************

"ஹலோ..."

"...."

"ஆமாம்.. நீங்க?"

"...."

"ஒரு நிமிஷம் இருங்க" என பேசியை கையால் மறைத்தபடி "ஏங்க... உங்களுக்கு தான் போன். யாரோ உங்க பிரெண்ட் பிரபாகர்னு சொல்றார்"

"......" பின் வாசல் கதவில் சாய்ந்து ஒரு கையில் நாளிதழும் ஒரு கையில் காபி டம்ளருமாய் நின்றிருந்த வாசு, பிரபாகர் என்ற பெயரை கேட்டதும் அதிர்ச்சியில் காபி டம்ளரை தவறவிட்டு தடுமாறி நின்றான்

"என்னங்க ஆச்சு?" என போன் கீழே விழுவது கூட கவனிக்காமல் பதறியபடி அருகில் வந்தாள் வாசுவின் மனைவி சுஜாதா

'ஒன்றுமில்லை' என்பது போல் தலையை அசைத்தவன், பின் மெல்லிய குரலில் "நான் இல்லனு சொல்லிடு" என்றான்

சுஜாதா புரியாமல் கணவனை பார்த்தபடி நிற்க, "என்னாச்சுப்பா?" என பத்தும் பனிரெண்டும் வயதுடைய மகள்கள் இருவரும் ஓடி வந்து வாசுவின் கையை பற்றி கொண்டனர்

"ஒண்ணுமில்லடா கண்ணா... நீங்க போய் விளையாடுங்க" என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் முன்னறை ஹேங்கரில் தொங்கிய சட்டையை எடுத்து அணிந்தவன், வெளியே வந்து முன் வாசலில் கிடந்த செருப்பை மாட்டியபடி தெருவை நோக்கி நடந்தான்

******************

அருகில் இருந்த பார்க்கில் சென்று அமர்ந்தவனின் மனம் இருபது வருடங்கள் பின்னோக்கி சென்றது

"அம்மா எனக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சு... நான் கிளம்பறேன்" என்றபடி தன் அறையை விட்டு வெளியே வந்தவனை இடைமறித்த அவன் அன்னை

"என்ன வாசு இது? மணி எட்டு தான ஆச்சு, பத்து மணி காலேஜ்க்கு இப்பவே ஏன் பறக்கற? ரெண்டு இட்லியாச்சும் சாப்ட்டுட்டு போ" என தட்டை நீட்டினாள்

"வேண்டாம்... நான் கேண்டீன்ல சாப்ட்டுக்கறேன்" என வெளிய செல்ல முயன்றவனை "நில்லு" என்ற தந்தையின் குரல் தடுத்தது

"ஹிட்லர் இன்னும் போகலயா?" என முணுமுணுத்தான் வாசு, அருகில் இருந்த தன் தமக்கையிடம், அவள் சிரிப்பை அடக்கி நிற்க

"ஆமாண்டா... பெத்தவன் நான் ஹிட்லர், அந்த பொறுக்கி பய பிராபாகர் பிரெண்ட் உனக்கு... அவன பாக்கத்தான இந்த ஓட்டம் ஓடற.. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் அவன் கூட தான சகவாசம்... நீ உருப்பட்ட மாதிரி தான்" என்றார் கோபமாய்

"அவன திட்டலைனா உங்களுக்கு தூக்கம் வராதே... நீங்க நெனக்கற மாதிரி ஒண்ணுமில்ல... அவன் ரெம்ப நல்லவன்" என எரிச்சலாய் கூறியவன் "அம்மா நான் கிளம்பறேன்" என பதிலுக்கு கூட காத்திராமல் சைக்கிளை எடுத்து கொண்டு விரைந்தான்

"அங்கிள்... என்னோட பலூன் அந்த ட்ரீ'ல மாட்டிக்குச்சு... எடுத்து தரீங்களா?" என்ற ஒரு குழந்தையின் குரலில் பழைய நினைவில் இருந்து மீண்டான் வாசு

******************

இருள் சூழ தொடங்கிய நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்தவனை கவலையுடன் எதிர்கொண்டாள் சுஜாதா

அவள் எதுவும் கேட்கும் முன் "கொழந்தைங்க எங்க?" என பேச்சை மாற்றினான் வாசு

"அண்ணா அண்ணி வந்திருந்தாங்க... கூடவே போகணும்னு அடம் பிடிச்சதுக, நாளைக்கு ஸ்கூல் லீவ் தானேனு அனுப்பி வெச்சேன்" என்றாள், கணவனின் முகத்தில் இருந்து பார்வையை எடுக்காமலே

ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றவன் சோபாவில் சோர்வாய் அமர்ந்தான்

"என்னங்க ஆச்சு? யாரு அந்த பிரபாகர்... அவர் போன் வந்ததுல இருந்து தான் இப்படி இருக்கீங்க" என்றாள் கவலையாய்

"தல வலிக்குது சுஜி, காபி குடு ப்ளீஸ்" என்றான் நெற்றி பொட்டை அழுத்தியபடி

"ஆபீஸ்ல இருந்து வந்ததும் காபி குடிச்சு ரெண்டு மணி நேரம் தான் ஆச்சு.. அடிக்கடி காபி குடிச்சா நல்லதில்ல" என்றாள்

"ஒரு நாளைக்கி கொஞ்சம் அதிகமா காபி குடிச்சா செத்து போய்ட மாட்டேன்... இப்ப காபி குடுக்க முடியுமா முடியாதா?" என்றான் கோபமாய்

கண்ணில் நீர் துளிர்க்க ஒன்றும் பேசாமல் ஒரு கணம் கணவனை பார்த்தவள், மௌனமாய் சமையல் அறை நோக்கி சென்றாள்

அவன் முகம் பார்க்காமல் காபி டம்ளரை டீபாயின் மேல் வைத்தவளை நிமிர்ந்து பார்த்தவன் "சாரிம்மா" என்றான் வருத்தமாய்

"உங்க சாரி ஒண்ணும் வேண்டாம்" என முணுமுணுத்தவளை அருகில் இழுத்து அமர்த்தியவன்

"சாரி சுஜி. ஏதோ டென்ஷன்ல... " என மனைவியை அணைத்து கொண்டான்

"யாரு அந்த பிரபாகர்? என்கிட்ட சொல்ல கூடாதா?"

சாய்ந்து அமர்ந்தவன் "பிரபாகர் ஒரு காலத்துல என்னோட உயிர் தோழன். அவனுக்காக என்ன வேணா செய்வேன், அப்படி ஒரு நெருக்கம்" என்றான் பெருமூச்சுடன்

"நமக்கு கல்யாணமான இந்த பதிமூணு வருசத்துல ஒரு வாட்டி கூட அவரபத்தி நீங்க சொன்னதில்லையே" என்றாள் ஆச்சிரியமாய்

"ஹ்ம்ம்... அவன் பிரெண்ட்னு சொல்லிக்கவே வெக்கபடர மாதிரி செஞ்சுட்டு போய்ட்டான். எங்க ரெண்டு பேரையும் ரெட்டை பிறவிங்கன்னே சொல்ற மாதிரி எப்பவும் ஒண்ணாவே இருப்போம். எங்க ஊரு கவுன்சிலர் பொண்ணை இழுத்துட்டு போய்ட்டான், அவன் அந்த பொண்ணை காதலிச்சது கூட எனக்கு தெரியாது"

"அப்பறம் என்னாச்சு?"

"உனக்கு தெரியாம எப்படி நடந்திருக்கும்னு, ஊரே சேந்து என்னை போட்டு அடிச்சு தொவைச்சுட்டாங்க. எங்க குடும்பத்தையே கேவலமா பேசினாங்க. அக்காவுக்கு நிச்சியம் பண்ணி இருந்த கல்யாணம் நின்னு போச்சு. அந்த அதிர்ச்சில அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக், கடவுள் புண்ணியத்துல பொழச்சுட்டாரு. அப்புறம் அந்த ஊரை விட்டே வந்துட்டோம். அவன் காதலிச்து தப்புன்னு நான் சொல்லல. தைரியமா பொண்ணு கேட்டு கல்யாணம் பண்ணி இருக்கணும். அதை விட்டுட்டு எல்லார் முன்னாடியும் என்னை குற்றவாளியா நிக்க வெச்சுட்டானேனு தான்"

"அதுக்கப்புறம் இத்தன வருசத்துல அவர நீங்க பாக்கவே இல்லையா?"

"பாக்கணும்னு நெறைய வாட்டி நெனச்சுருக்கேன் சுஜி. தப்பே செஞ்சிருந்தாலும் ஒரு காலத்துல நண்பனா மனசுல இருந்தானே... ஆனா ஊரே கேவலமா பேசினத என்னால மறக்க முடியல" என்றான் வருத்தமாய்

"இன்னைக்கி போன் பண்ணினப்ப பேசி இருக்கலாமே" என்றாள் ஆதரவாய் கணவனின் தோளில் கை பதித்தவாறே

அதே நேரம் ஹாலில் இருந்த போன் அலறியது. 'எடுப்பதா வேண்டாமா' என அவன் யோசிக்கவும் "எடுங்கப்பா... உங்க பிரெண்ட்'ஆ தான் இருக்கணும்" என்றாள் சுஜாதா சிரிப்புடன்

"ஹலோ" என்றான் வாசு

"..."

"அ...அது... ஆமா"

"..."

"எ...என்ன சொல்றீங்க? எப்போ?" என்றவனின் முகம் வெளிறியது

"..."

"நிச்சியமா தெரியுமா?"

"..."

"ஒகே... நா...நான் உடனே வ...வரேன்" என நடுங்கிய குரலில் உரைத்தவன், உள் அறைக்கு சென்று பைக் சாவியை எடுத்து, விரைந்து வெளி வாசல் நோக்கி சென்றான்

"என்னங்க? எங்க போறீங்க?" என பதட்டமாய் சுஜாதா கேட்க

"வந்து சொல்றேன் சுஜி" என்றவன், அவள் பதிலுக்கு கூட காத்திராமல் பைக்கை கிளப்பி சென்றான்

*********************

"சுஜி" என்ற கணவனின் ஸ்பரிசம் உணர்ந்து விழித்தவள், அவனது சிவந்த கண்களும் கவலை காட்டிய முகமும் உணர்ந்து பதறியவளாய்

"என்னங்க ஆச்சு? நேத்து சாயங்காலம் போனது, இன்னிக்கி நடு ராத்திரி வரீங்க. நேத்து நைட் பத்து மணிக்கு போன் பண்ணினப்ப நாளைக்கி தான் வருவேன்னு சொன்னீங்க. அதுக்கப்புறம் உங்க செல்போன்க்கு கூப்டப்ப எடுக்கவே இல்ல... எங்க தான் போனீங்க?" என்றாள் கவலையும் கோபமுமாய்

மௌனமாய் அவளருகில் அமர்ந்தவன், அவள் மடியில் முகம் புதைத்து விசும்பினான்

"என்னங்க ஆச்சு?" என பதறினாள்

"பிரபா...பிரபாகர் இப்ப உயிரோட இல்ல சுஜி" என்றான் கரகரத்த குரலில்

"ஐயோ... என்னாச்சுங்க?" என்றாள் ஒன்றும் புரியாமல்

"நேத்து நைட் வந்த போன் போலீஸ்கிட்ட இருந்து... ஏக்சிடன்ட் ஸ்பாட்ல கெடச்ச அவனோட செல்போன்ல இருந்து கடைசியா கூப்ட்ட நம்ம நெம்பருக்கு... " என அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல் அழுதான்

என்ன சொல்வது என அறியாமல் ஆதரவாய் அவனை அணைத்து கொண்டாள் சுஜாதா

"நேத்து அவன் போன் பண்ணினப்ப கூட...நான் என் கோபத்த இழுத்து பிடிச்சுட்டு... ஐயோ.. இனி நான் பேசணும்னு நெனச்சாலும் முடியாதே சுஜி... வேற ஒரு பிரெண்ட்கிட்ட இருந்து என் நம்பர் வாங்கி இருக்கேன். கடைசியா என்ன சொல்லணும்னு கூப்டானோ..." என அரற்றினான்

"ப்ளீஸ்பா... அழாதீங்க..."

"இனியொரு தருணம் எனக்கு அவன் கூட கிடைக்காதே... இந்த பாழா போனா கோபத்தால என்னைக்கோ நடந்தத மனசுல வெச்சுட்டு கடைசியா கூப்ட்டப்ப கூட பேசாம விட்டுட்டனேனு தான் கஷ்டமா இருக்கு சுஜி... ஒருவேள நான் பேசி இருந்தா இந்த விபத்தே நடந்து இருக்காதோ. நான் பேசலைனு வருத்ததுல தான் கவனமில்லாமா வண்டி ஓட்டி இருப்பானோ" என குற்ற உணர்வில் மருகினான் வாசு

"என்னங்க இது? அப்படி எல்லாம் எதுவும் இல்ல. அவர் விதி முடிஞ்சு போச்சு. அதுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க?" என்றாள் சமாதானமாய்

"இனி என்ன அழுது என்ன பிரயோஜனம்" என்றான் தனக்கு தானே சமாதானம் செய்து கொள்பவன் போல்

(முற்றும்)

45 பேரு சொல்லி இருக்காக:

எல் கே said...

நல்ல கதை. தொடர்ந்து எழுதவும்.(மொக்கைகளை குறைத்து இதுமாதிரி எழுதினால் நல்லா இருக்கும் )

இராஜராஜேஸ்வரி said...

ஒருவேள நான் பேசி இருந்தா இந்த விபத்தே நடந்து இருக்காதோ. நான் பேசலைனு வருத்ததுல தான் கவனமில்லாமா வண்டி ஓட்டி இருப்பானோ" என குற்ற உணர்வில் மருகினான் வாசு

கனமான கதை.

ராமலக்ஷ்மி said...

நல்ல கதை புவனா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கதை நல்லாருக்குங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒருவழியா தமிழ்மணத்துல இணைச்சிட்டேன்....:)

ஸ்ரீராம். said...

மனதில் உருக்கத்தையும் ஏகப் பட்ட கேள்விகளையும் கிளப்பி விட்டு விட்டது கதை. அருமை.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இந்த பாழா போனா கோபத்தால என்னைக்கோ நடந்தத மனசுல வெச்சுட்டு கடைசியா கூப்ட்டப்ப கூட பேசாம விட்டுட்டனேனு தான் கஷ்டமா இருக்கு சுஜி... ஒருவேள நான் பேசி இருந்தா இந்த விபத்தே நடந்து இருக்காதோ. நான் பேசலைனு வருத்ததுல தான் கவனமில்லாமா வண்டி ஓட்டி இருப்பானோ" //

அடடா, இனி பேசமுடியாமலேயே போகிவிட்டதே!பேச நினைத்தாலும் இனியொரு தருணம் கிடைக்கப்போவதில்லையே!!
மனதை கனக்க வைத்த கதை.

[தமிழ்மணம் : 2] vgk

சேட்டைக்காரன் said...

அதீதத்திலேயே வாசித்தபோதிலும், பின்னூட்டமிட முடியவில்லை.

சற்றும் குழப்பமின்றி கோர்வையாக எழுதியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

Lakshmi said...

மனதை கனக்க வைத்தகதை

raji said...

கதை நல்லா இருக்கு புவனி.

கோபத்தினால் என்றுமே இழப்புதான்

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்....

S.KUMAR said...

கனமான கதை.
வாழ்த்துகள்...

divyadharsan said...

Super Appavi..
Classic! Did't find time to write..but marakama padichitrukan Guruvey:)
Oru kaaka oru paati kathai kooda
rmbha supera erunthuchu..comment podathan time ela..will do it soon.

yennachu ungaloda kaathal thodarkathai?seekiram oru stevayo meeravayo introduce panunga!!Thank you for the gd story.Tata.

Avargal Unmaigal said...

நல்ல கதை........பிரபாகர் ஒரு மடையன். பேச முடியாலைன்னா என்ன ஒரு டெக்ஸ்ட் மெஜெஜ் கூடவா அனுப்ப தெரியாது..இப்படியா நண்பரை தவிக்கவிட்டு போவது....இல்ல அப்பாவி தங்கமணியோட Facebook க்கு ஒரு மெசேஜ்வாது அனுப்பி இருந்தா அவங்களாவது பாஸ் பண்ணியிருப்பாங்களே இப்படி என்னையை வேறு தனியா புலம்ப விட்டு போயிட்டானே பாவி

கீதா said...

தவறவிட்டத் தருணங்களை இனி மீட்கவே முடியாது. தாமதிக்கும், அல்லது தவறவிடும் அனைவருக்கும் ஒரு பாடம். பதறிய காரியம் சிதறிப்போகும் என்பார்கள். இப்படி சினத்தால் தள்ளுவதும் சேதாரமாகலாம் என்பதை கதை மூலம் அறிவுறுத்திவிட்டீர்கள். அதீதத்தில் வெளியானதுக்கு வாழ்த்துக்கள்.

siva said...

இது எங்கள் சங்கத்தலைவி அரைதூக்கத்தில் எழுதிய கதை போல உள்ளது
கொஞ்சம் கூட மொக்கை கருத்தே எல்லை
இருந்தாலும் வாழ்த்துக்கள்
அழகான கருத்துள்ள பதிவு :)

காற்றில் எந்தன் கீதம் said...

கண்ணில் நீர் நிறைந்து விட்டது ....இதே போல ஒரு தருணத்தை தவற விட்டு இன்றைக்கும் மருகுகிறேன் நான்...

RAMVI said...

மிக அருமையான கதை.முடிவு மனதை கனக்க வைத்துவிட்டது.

வாழ்த்துக்கள் புவனா, ஆதீதத்தில் வெளியானதற்கு.

துளசி கோபால் said...

அருமையா இருக்கு அப்பாவி!
இனிய பாராட்டுகள்.

அமைதிச்சாரல் said...

கதை ரொம்ப நல்லாருக்கு அப்பாவி..

Thanai thalaivi said...

கதை அருமை,அருமை,அருமை.
அதில் உள்ள கருத்து முற்றிலும் உண்மை, உண்மை,உண்மை.
உங்களுக்கு என் நன்றி,நன்றி,நன்றி.

மூன்று முறைக்கு மேல் சொன்னால் இலக்கண பிழையாமே...!?

Thanai thalaivi said...

முதல் கம்மேன்ட்டை நானும் ஆமோதிக்கிறேன்.

D. Chandramouli said...

Lovely, touching story. Congrats!

கோவை2தில்லி said...

நல்ல கதை. மனதை கனக்க வைத்து விட்டது.

அதீதத்தில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.

பாலா said...

வாழ்த்துக்கள் அக்கா !

Anonymous said...

நல்ல சுருக்குன்னு மனசில் குத்தினா மாதிரி இருக்கு
தி ரா ச

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

என்னங்க இது. நீங்க மொக்கை மட்டும் தான் எழுதுவேன்னு சொல்லிப்புட்டு, இப்படி ஒரு அருமையான கதைகள் எழுதுறீங்க.

கதை நல்லா இருக்கு சகோ

பத்மநாபன் said...

நீண்ட நாளைய வருத்தம் .. பிரிவு ...கோபம் ... இப்படி கோர்த்து ’சினம் தவிர்க்க வேண்டும்’ எனும் விழிப்புணர்வோடு சொன்ன ஒரு நல்ல கதை...

வாழ்த்துக்கள் அதீதம் வெளியீட்டுக்கும் சேர்த்து...

kriishvp said...

ஆழமான கருத்து, அச்சம் தவிர் போல கோபம் தவிர், ஆத்திரத்தில் எடுக்கும் முடிவு ஆக்கப்பூர்வமாக இருக்காது.

அருமையான இடுகை!வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

very nice.. சிறு உறுத்தல்கள் தான் சில சமயம் வழிகாட்டிகளாக மாறுகின்றன. நல்ல புனைவு.

Jagannathan said...

உங்களுக்கு ரசிகர் வட்டம் பெரிது. நான் சாதாரண வாசிகன் தான். இந்த கதை என்னை உலுக்கவில்லை என்பதுதான் நிஜம். இந்த ஸ்டைல் உங்கள் forte இல்லை என்பது என் பணிவான கருத்து. நகைசுவையில் பின்னுகிறீர்கள். - ஜெ.

ஜெய்லானி said...

இனி அப்பாவிங்கிற பேரை நீங்க எடுக்குறீங்களா..? இல்ல நாங்களே எடுக்கவா..?

அருமையான கதை .. :-)))

vinu said...

எதிரிகளையும் மன்னிக்கலாம் துரோகிகள் அதற்குத் தகுதி இல்லாதவர்கள்!!!!

angelin said...

என் மனதை கனக்க வைத்து விட்டீர்கள் .காலம் கடந்து பின் யோசித்து ஒரு பயனும் இல்லை .

அனாமிகா துவாரகன் said...

This is cheating. Write a new one.

ஸ்வர்ணரேக்கா said...

கதை தீம்ல்லாம் சரி தான்.. ஆனா.. அப்பாவி டச் லைட்டா மிஸ் ஆகறமாதிரி இருக்கே!!!!

ஹுஸைனம்மா said...

முடிவு கனமானதுதான் என்றாலும், வாசுவின் வலி அப்படி. துரோகம் ஜீரணிக்கவே முடியாது. அதுவும் இத்தனை மோசமான விளைவுகள் (அக்கா கல்யாணம் நின்று போதல் போன்ற) ஏற்படுத்தியது என்றால், இப்படித்தான் ஒதுக்கத் தோன்றும்.

உங்க கதைபடிச்ச எஃபெக்ட்ல, இன்னொருத்தங்க அவங்க அனுபவத்தை எழுதிருக்காங்க. படிச்சுப் பாருங்க:
http://sutharsshini.blogspot.com/2011/09/blog-post.html

அப்புறம், நீங்க இந்தக் கதை எழுதினதுக்கு, I appreciate you. எப்பவுமே மொக்கை போட்டுட்டிருந்தா, kind of boring ஆகிடும். வெரைட்டி நிச்சயம் வேணும். தொடருங்க.

ஸாதிகா said...

முடிவு மனதை கனக்க வைத்துவிட்டது.

மாலதி said...

நல்ல கதை.....

அப்பாவி தங்கமணி said...

@ எல் கே - தேங்க்ஸ் கார்த்தி... மொக்கை வேண்டாமோ... ஹ்ம்ம்...:))

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க

@ ராமலக்ஷ்மி - நன்றிங்க ராமலக்ஷ்மி

@ பன்னிக்குட்டி ராம்சாமி - நன்றிங்க...இணைத்ததற்கும் நன்றி..:)

@ ஸ்ரீராம். - நன்றிங்க

@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்

@ சேட்டைக்காரன் - மிக்க நன்றி

@ Lakshmi - நன்றி லக்ஷ்மி'ம்மா

@ raji - தேங்க்ஸ் ராஜி'க்கா...

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க வெங்கட்

அப்பாவி தங்கமணி said...

@ S.KUMAR - நன்றிங்க

@ divyadharsan - ஹாய் திவ்யா, எப்படி இருக்க? ஆஹா, குருவா? அது சரி... வெளில சொன்னா உனக்குதாம்மா ஆபத்து..:) காக்கா பாட்டி கதை எல்லாம் இப்பவிருந்தே ப்ராக்டிஸ் பண்ணுங்க, குட்டி பொண்ணு இனி கேப்பா இல்ல... இன்னொரு ஸ்டீவ் மீராவை இந்த ப்ளாக் உலகம் தாங்குமானு தான் யோசிச்சுட்டு இருக்கேன் திவ்யா...ஹா ஹா (வேலைக்கு நடுலையும் விடாம படிக்கறதுக்கு தேங்க்ஸ்)

@ Avargal Unmaigal - மெசேஜ் அனுப்பறதா.. அவர் கூப்பிட்டது லேன்ட் லைன்ல... சோ, இவர்கிட்ட நண்பரோட நம்பர் இல்லீங்க... அதான் அனுப்பலை.. ஆஹா... எப்படி எல்லாம் டவுட் வருது...:)

@ கீதா - ரெம்ப நன்றிங்க கீதா

@ siva - என்னது அரை தூக்கத்தில் எழுதியதா... சரி இனிமே முழுசா தூங்கிட்டு அப்புறம் எழுதறேன் பிரதர்... :) இந்த உலகம் நம்மள காமடி பீஸாவே பாக்குது போங்க

@ காற்றில் எந்தன் கீதம் - எல்லார் வாழ்விலும் இது போன்ற தருணங்கள் இருக்கத்தான் செய்யும் போலும்... நன்றிங்க

@ RAMVI - நன்றிங்க ராம்வி

@ துளசி கோபால் - ரெம்ப நன்றிங்க துளசிம்மா

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ் சாரலக்கா...

@ Thanai thalaivi - இலக்கண பிழை என்றாலும் இக்கண பிழை இல்லீங்க... :) நன்றிங்க தலைவி'க்கா...

அப்பாவி தங்கமணி said...

@ D. Chandramouli - மெனி தேங்க்ஸ் சார்

@ கோவை2தில்லி - ரெம்ப தேங்க்ஸ் ஆதி

@ பாலா - தேங்க்ஸ்'ங்க பாலா

@ பெயரில்லா(TRC) - தேங்க்ஸ் அங்கிள்

@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) - ரெம்ப நன்றிங்க சகோ... மொக்கையும் போடறது தான்...அப்பப்பா இப்படியும் தோணும்... :)

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா

@ kriishvp - ரெம்ப நன்றிங்க

@ அப்பாதுரை - மிக்க நன்றி சார்

@ Jagannathan - ஐயோ, 'பெரிய ரசிகர் வட்டம்'னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லாதீங்க சார். அப்படி ஒன்றும் இல்லை. நானும் சாதாரண வாசகி தான், வாசிக்கும் / கேட்கும் / பார்க்கும் சில சம்பவங்கள் இது போன்ற சில பதிவுகள் உருவாக காரணமாகிறது. மனதில் தோன்றியதை கூறியமைக்கு நன்றி சார்... I totally agree that I do better in that zoner... Many thanks

@ ஜெய்லானி - மகி ப்ளாக்ல ஆயிரம் வாட்ஸ் பல்பு குடுத்துட்டு இங்க பாராட்டா... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ vinu - சூழ்நிலையும் சந்தர்ப்பமும் தீர்மானிக்கும் விடயமது வினு... கோபம் கொறைஞ்ச பின்னாடி யோசிச்சு பாத்தா கோணம் வேறுபடும்... சில கோபங்கள் நிலைத்தும் விடும்... உண்மை தான்

@ angelin - ரெம்ப சரி... நன்றிங்க

@ அனாமிகா துவாரகன் - அடப்பாவி... :))

@ ஸ்வர்ணரேக்கா - காமெடி பீஸ் மிஸ்ஸிங்னு சொல்றீங்களோ... :)) நன்றிங்க

@ ஹுஸைனம்மா - ராஜி'க்கா லிங்க் குடுத்ததுக்கு தேங்க்ஸ்'ங்க, படிச்சேன்... மனம் கனத்து போனது... உங்க பாராட்டு ரெம்ப சந்தோசமா இருக்கு... நன்றிங்'க்கா

@ ஸாதிகா - நன்றிங்க ஸாதிகா

@ மாலதி - தேங்க்ஸ் மாலதி

தக்குடு said...

நடுல நடுல 'சீரியஸ் செல்லாத்தாவா' நம்ப இட்லி மாமி மாறிடராங்க...:)

அப்பாவி தங்கமணி said...

@ தக்குடு - Thanks..:)

Post a Comment