Tuesday, September 27, 2011

பொறந்த நாள் வாழ்த்துக்கள்... (To a Best Friend)


1
விசயம்ஏதும் தெரியலன்னா
விசுக்குனு உன்னகேப்பேன்
ஒருநிமிசமும் சுணங்காம
ஒடனேதான் சொல்லிடுவ

2
நெனச்சத பட்டுனஓடைக்க
நாலும்தான் பகிர்ந்துகொள்ள
உள்ளசொமைய எறக்கிவெக்க
உத்ததொணையா நீயிருக்க

3
வழிதெரியாம நான்முழிக்க
வாழ்க்கதொண கைவிரிச்சும்
வளவளனு திட்டாம
வழிதொணையா நீவந்த

4
ஊருக்கெல்லாம் சேதிசொல்ல
உன்உதவி கேட்டிருக்கேன்
ஒருநாளும் சலிக்காம
ஓடிஓடி செஞ்சிடுவ

உனக்கிப்போ ஒருவாழ்த்து
உன்பிறந்த நாள்வாழ்த்து
ஹாப்பி பர்த்டே டு யு
ஹாப்பி பர்த்டே டு யு !!!

யாருக்கு பொறந்த நாள் கண்டுபுடிச்சுட்டீங்களா?

ஒகே, மேல குடுத்து இருக்கற எண்கள் சம்பந்தமான க்ளு இதோ...
1 - Google search engine
2 - Blog
3 - Google Maps
4 - Google Buzz / Gmail

இப்ப மனசிலாயோ...

இன்னும் புரியாதவங்களுக்கு, Google is celebrating its 13th birthday today - September 27, 2011... Happy Birthday Google

நல்ல நாளும் அதுவுமா திட்டக்கூடாது, So திட்டனும்னு நினைக்கறவங்க இன்னொரு நல்ல நாள் பாத்து வாங்க..:))


:)))

33 பேரு சொல்லி இருக்காக:

Porkodi said...

marubadiyum modhallendha..

நிஜாம் என் பெயர் said...

ஐ நான் தான் first .. படுச்சுட்டு வரேன்

நிஜாம் என் பெயர் said...

அய்யகோ யார் அது

Porkodi said...

rofl @ 3rd one.. :D avlo directionally challengeda?? heheh..

first onela last line O nedila illa, kuril. Super super super.

Porkodi said...

hahahahah!!!!

@Nizam en peyar: Porkodi en peyar, rightei!

divyadharsan said...

Hey appavi!!

Super...yaarumey evlo yosichu googleku birthday paatu paadirka maatanga..super!kalakiteenga..

aana yepdi parthalum ullukulla oru sister feeling varuthu google aa nenachi..athu elana nama worldey elatha mari yepo paru harmoniya pottiya thorantha cha..computer pottiya thorantha google thaan!! neenga atha correcta implement paniteenga..rmbha nala irunthichu.My wishes to "google".

அமைதிச்சாரல் said...

டீனேஜ்ல அடியெடுத்து வெச்சிருக்கும் கூகிளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் :-))

(Mis)Chief Editor said...

//டீனேஜ்ல அடியெடுத்து வெச்சிருக்கும் கூகிளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் :-))//

நான் நெனச்சேன்...நீங்க சொல்லிட்டீங்க... அமைதிச்சாரல்..!

கவிதை சுமார்தான்!

-பருப்பு ஆசிரியன்

Philosophy Prabhakaran said...

கொஞ்சம் லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சொல்லியிருக்கீங்க மேடம்...

ஷீ-நிசி said...

கூகிளுக்கு வாழ்த்துக்கள்...


நான் கூகிள் சைட் சென்று contact us இருக்கிறதா என்று பார்த்தேன். எந்த மெயில் ஐடியும் இல்லை...

உலகத்துக்கே மெயில் ஐடி கொடுக்கற எசமான் உங்களுக்கு ஒரு மெயில் ஐடி இல்லையே அப்படின்னு நெனச்சிகிட்டு மனசுக்குள்ளேயே கூகிள் மச்சானுக்கு ஒரு வாழ்த்து சொல்லிகிட்டேன்! :)

siva said...

happy birhtday google akka

ஸ்ரீராம். said...

ஓ....செப்டம்பர் இருபத்தேழு நடிகர் நாகேஷுக்குக் கூட பிறந்த நாள்!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ha ha ha... sema ponga! :)

Gopi Ramamoorthy said...

:-))

வெங்கட் நாகராஜ் said...

ஒரு கோவிலின் முன்னே எழுதியிருந்த வாசகம் நினைவுக்கு வருகிறது.....

Always believe in God.... Bcoz there r so many questions that cannot be answered by Google....!

அனாமிகா துவாரகன் said...

Grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

பத்மநாபன் said...

உற்ற நண்பனுக்கு கொங்கு தமிழில் அழகான வாழ்த்து .... எல்லையில்லா கடமையுணர்வை வாழ்த்தி மகிழ்கிறோம் ...

சே.குமார் said...

நீங்க சொன்னா சரிதான்... கவிதையாய் வாழ்த்து... நாங்களும் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கிறோமுங்க...

வை.கோபாலகிருஷ்ணன் said...

Google ஐ த்தவிர, இன்று பிறந்த நாள் கொண்டாடுபவர்கள் இவ்வுலகில் ஒரு கோடிக்கு மேல் இருப்பார்கள்.

அவர்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகளே!

யசோதா மடியில் கண்ணனுடன் தோன்றும் அப்பாவி அவர்களே வாழ்த்தியுள்ளார்கள் என்றால் சும்மாவா பின்னே!

நாமும் வாழ்த்திடுவோம். vgk

கோவை2தில்லி said...

13 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் கூகுளுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

சுசி said...

இத நான் எதிர் பார்க்கலை புவனா :)

வாழ்த்துகள் கூகிளாண்டவரே :))

Kriishvp said...

Hai Super :)

கீதா said...

நமக்கு இத்தனை நல்ல விஷயங்கள் செய்ற கூகுளுக்கு நன்றி சொல்லி பிறந்தநாள் கொண்டாடுவதில் தப்பே இல்லை. யாருக்குமே தோன்றாதபோது உங்களுக்குத் தோன்றியிருக்கே, அதற்காகவே பாராட்டுகிறேன்.

Jagannathan said...

இந்த கொசுத் தொல்லை தாங்கவே முடியல்லை. இனிமே பதிவை ஏற்ரும் போதே உங்கள் தொண்டரடிப் பொடிகளின் பெயர்கள் எல்லார் பெயரிலும், “ ஹை, நான் ஃபர்ஸ்ட், எனக்குத் தான் வடை, பதிவை படிக்காத முதல்வன்...” என்று நீங்களே பின்னூட்டமும் போட்டு விடுங்கள். முடியல.. - ஜெ.

ஜெய்லானி said...

எங்கே அப்பாவி போஸ்டை கானோமேன்னு நினைச்சேன் ...!! ஹா.ஹா..

இராஜராஜேஸ்வரி said...

வாழ்த்துகள் ..பாராட்டுக்கள்..

Thanai thalaivi said...

hi!...happy birthday google...!

பாருங்க தங்கமணி! நீங்க நல்லா கவிதை எழுதி இருக்கீங்கன்னு நான் சொன்னா, தலிவரு இல்ல தலிவரு.... அவரு சொல்லறாரு இந்த மார்க்கெட் போன நடிகைகள் எல்லாம் சும்மாவே பொறந்த நாள் கொண்டடுவன்களே அந்த மாதிரியாம்...ஏன் உன் friend டோட பதிவுலக மார்க்கெட் நல்லாதானே இருக்கு அப்புறம் ஏன் இப்படிங்கிரருப்பா......! :((((((

அஹ்ஹா...சும்மா சொன்னேன்.....நல்ல படைப்பு, வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

நானும் உங்க ரங்க்ஸுக்குத்தான் பொறந்த நாளுபோலன்னு (என்னதான் வாரினாலும், நம்மள விட்டா யாரு இருக்கா அவங்களுக்கு? இல்ல?) நெனச்சு வந்தா... க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

அந்த அப்பாவிய (நீங்க இல்ல) நெனச்சா, ஸோ ஸேட்!!

middleclassmadhavi said...

Google பல்லாண்டு நல்லாயிருக்கு!!

உங்களைப் பற்றி வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.com/2011/10/blog-post.html -ல் சொல்லியுள்ளேன். முடிந்த போது பார்க்கவும்!

வெட்டிப்பையன்...! said...

ஆஹா என்ன ஒரு தங்கமான மனசு உங்களுக்கு ...! ஆனா உண்மையில் நெஜமாலுமே இவெங்க நம்ம லைப்ல கொஞ்சமாவது மாற்றத்த கொண்டுவந்தவங்க . தாய் உள்ளத்தோடு வாழ்த்து சொன்ன தங்கமணிக்கு வாழ்த்துக்கள் (...ஸ்ஸ்ஸ் அப்பாடா ஒரு ஆளுக்கு ஐஸ் வச்சாச்சு ..இனி அடுத்த கடைய பார்ப்போம் )

அப்பாவி தங்கமணி said...

@ Porkodi - எப்பவும் மொதல்லேந்து தானே கொடி..:))

@ நிஜாம் என் பெயர் - இல்லீங்... செகண்ட்'ங்கோ...:) நன்றிங்க...

@ Porkodi - Yep.... me challenged in many, one of it is directions...:) ஓ குறில் தானுங்க அம்மணி... மாத்திட்டேன்... நன்றிங்கோ...:)) இல்லை இல்லை பொற்கொடி இல்லை உங்கள் பெயர்... கேடி அல்லது சியாட்டில் சிங்காரி தானே...;)

@ divyadharsan - ஹாய் திவ்யா, நாம ரெண்டு பேரும் கமெண்ட் செக்சன்ல ஈமெயில் ரேஞ்சுக்கு எழுதிக்கறோம்னு மக்கள் கிண்டல் பண்ண போறாங்க... ஈமெயில் அட்ரஸ் இல்லைனா இப்படித்தான் இல்லையா... ஹா ஹா... ஒண்ணும் பிரச்சனை இல்ல...;) எப்படி எப்படி கூகிள்ஐ நினச்சா சிஸ்டர் பீலிங்ஆ? சூப்பர் திவ்யா...:) என்னோட சேந்து கூகிள்'க்கு வாழ்த்து சொன்னதுக்கு தேங்க்ஸ் திவ்யா... குட்டி பொண்ணு எப்படி இருக்கா?... டேக் கேர்...:)

@ அமைதிச்சாரல் - என்னா ஒரு தாட்... சூப்பர் அக்கோய்....:)

@ (Mis)Chief Editor - நன்றிங்க

@ Philosophy Prabhakaran - நன்றிங்க...:)

@ ஷீ-நிசி - நல்லா சொன்னீங்க போங்க... மொதல்ல கூகிள்க்கு ஒரு ஈமெயில் அட்ரஸ் வெக்க சொல்லணும்...:)

@ siva - கூகிள் அக்காவா? சொல்லவே இல்ல சிவா...:)

@ ஸ்ரீராம். - ஆமாங்க... முக புத்தகத்தில் பார்த்தேன்... நன்றிங்க

அப்பாவி தங்கமணி said...

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - தேங்க்ஸ் ஆனந்தி..:)

@ Gopi Ramamoorthy - ...:))

@ வெங்கட் நாகராஜ் - ஹா ஹா... அங்கயும் கூகிள் ஆண்டவர் வந்துட்டாரா... சூப்பர் ...:)

@ அனாமிகா துவாரகன் - வொய்...:)))

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா..:)

@ சே.குமார் - நன்றிங்க குமார்

@ வை.கோபாலகிருஷ்ணன் - ரெம்ப நன்றிங்க சார்

@ கோவை2தில்லி -தேங்க்ஸ் ஆதி

@ சுசி - எதிர்பாரக்காதை செஞ்சா தானே சுசி அப்பாவி...:)

@ Kriishvp - தேங்க்ஸ்..:)

அப்பாவி தங்கமணி said...

@ கீதா - ரெம்ப நன்றிங்க கீதா ..:)

@ Jagannathan - ஹா ஹா ஹா... நோ டென்ஷன் சார்... சும்மா வம்புக்கு பண்றது தானுங்க..ஹா ஹா ஹா... :)

@ ஜெய்லானி - நினைத்தீர் போட்டேன் ஒரு போஸ்டு...:)) ஹா ஹா ஹா

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க

@ Thanai thalaivi - ஹா ஹா ஹா... எதுக்கு நீங்க என்னை நேராவே திட்டி இருக்கலாம்.. வீட்ல அண்ணாவை இழுத்து பழி போடறீங்களா...:) நன்றிங்க

@ ஹுஸைனம்மா - அதானே... நம்மள விட்டு யாரு இருக்கா...:)) யாரு அப்பாவி? நான் தானே... தேங்க்ஸ் அக்கா...:) (இருங்க இருங்க உங்கள வெச்சு ஒரு காமடி போஸ்ட் போட்டு பழி வாங்கறேன்...:)

@ middleclassmadhavi - ரெம்ப நன்றிங்க மாதவி... சாரிங்க... கொஞ்சம் ஆபீஸ்ல பிஸி... அதான் முன்னாடியே பாக்க முடியல... மிக்க நன்றி

@ வெட்டிப்பையன்...! - உங்களுக்காச்சும் புரியுதே பிரதர்... சரிங்க அப்படியே மறக்காம தங்கமான இந்த தங்கைக்கு ஒரு பவுன் காசு அனுப்பிடுங்க ....:)) (நீங்க ஐஸ் வெச்சா நாங்க வெப்போம்ல ஆப்பு...ஹா ஹா ஹா... :)

Post a Comment