Tuesday, October 11, 2011

உன்னாலே உன்னாலே... (சிறுகதை)"என்ன இது?"

"எது?"

"இதான்"

"தண்ணி"

"அதான் ஏன் கீழ சிந்தியிருக்கு?"

"கை கழுவினேனா அ...."

"கை கழுவினா டவல் யூஸ் பண்ணுங்க இப்படி கைய ஓதராதீங்கனு எத்தன வாட்டி சொல்லி இருக்கேன்"

"எத்தன வாட்டி சொல்லி இருக்க? சாரிம்மா கவுன்ட் பண்ணல"

"என்னை பாத்தா எப்படி இருக்கு உங்களுக்கு?"

"வேண்டாம்... சொன்னா திட்டுவ" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள்

***********************************

"என்னங்க... இன்னிக்கி கோயிலுக்கு போலாமா?"

"ஏன்? திடீர்னு?"

"ஆண்டவா... எதுக்கு எடுத்தாலும் ஏன் ஏன் ஏன்... பதில் சொல்லி எனக்கு சலிச்சு போச்சு... ஒரு நாளாச்சும் கேள்வி கேட்டா பதில் சொல்லுங்க... திருப்பி கேள்வி கேக்காதீங்க ப்ளீஸ்"

"ஏன் எதற்கு எப்படினு கேள்வி கேட்டா தான் பிரைன் நல்லா ஷார்ப் ஆகும்னு யாரோ ஒரு பெரிய மனுஷன் சொல்லி இருக்கார் தெரியுமா?"

"அந்த கவலை பிரைன் இருக்கறவங்களுக்கு தானே வரணும்"

"கரெக்ட்... அது இருந்துருந்தா உன்கிட்ட சிக்கி இருப்பனா" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள்

***********************************

"பதினஞ்சு நாள்... தனியா சமாளிச்சுக்குவியா?"

"ம்"

"நேரத்தோட வீட்டுக்கு வா? இப்ப சாயங்காலமானா மழை வேற வந்துருது"

"ம்"

"தூங்கறப்ப பக்கத்துல போன் வெச்சுக்கோ"

"ம்"

"ஒழுங்கா சாப்பிடு... கேக்கறது ஆள் இல்லைனு ஏமாத்தாத"

"ம்"

"ஏய்... ஏன் உம்முன்னு இருக்க?"

"ஒண்ணுமில்ல"

அவள் முகத்தை உயர்த்தி பார்த்தவன், "இதுக்கு தான் சொன்னேன்... உனக்கும் லீவ் கிடைக்கறப்ப ஊருக்கு போலாம்னு"

"அந்த கடன்காரன் தான் லீவ் குடுக்கமாட்டேங்கரானே" என்றாள் எரிச்சலாய்

"கடன்காரன் கடன் தான் குடுப்பான், லீவ் கூடவா குடுப்பான்" என கேலியாய் அவள் மனதை திசை திருப்ப முயன்றான்

"ஜோக்கா, ஈ... சிரிச்சுட்டேன் போதுமா?" என்றாள் சற்றே கோபமாய்

"சிரிச்சியா... மொதலே சொல்லிடு... பயமா இருக்கில்ல" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள்

***********************************

வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு அங்கிருந்த அமைதி தாங்க முடியாதது போல் தோன்ற, வேகமாய் சென்று ரேடியோவை உயிர்பித்தாள்

உடை மாற்றி சமையல் அறைக்குள் வர, ஒரு தூசு கூட இல்லாத தரை அவளுக்கு ஏனோ உறுத்தியது

அந்த நிசப்த நொடியில் கேட்ட டெலிபோன் மணி சத்தத்தில் தூக்கி வாரி போட நிமிர்ந்தாள்

"ஹலோ"

"நான் தான்... என்ன பண்ணிட்டு இருக்க?"

"......." அவன் குரல் கேட்டதும் கண்ணில் நீர் துளிர்க்க அமைதியாய் நின்றாள்

"ஹலோ... ஹலோ"

"ம்"

"என்னாச்சு?"

"ஒண்ணுமில்ல" என்றவளின் குரல் காட்டி கொடுத்தது

"தனியா போர் அடிக்குதா?"

"ம்"

"ஒரு வாரம் ஓடி போச்சு... இன்னும் ஒரே வாரம்... வந்தர்றேன், சரியா?"

"ம்"

சற்று நேரம் பேசியபின் "சரிடா... நான் வெக்கறேன்"

"ஏன்?"

"எப்பவும் நான் தான் ஏன் ஏன்னு கேள்வி கேப்பேன்... இன்னைக்கி நீ கேக்கற" என அவன் சிரிக்க, அவள் மௌனமானாள்

போனை வைத்ததும் அவள் தனக்கு தானே செய்து கொண்ட முதல் சங்கல்பம் "இனிமே அவர்கூட சண்டையே போடக்கூடாது" என்பது தான்

அன்றிரவு உணவருந்தி கை கழுவிய பின், பேப்பர் டவல் நோக்கி நீண்ட கையை பின்னுக்கு இழுத்தாள்

வேண்டுமென்றே தரையில் நீர் படும் படி கையை உதறியவள், தனக்குள் மெல்ல சிரித்து கொண்டாள்


***********************************

"என்னங்க இது? ஈர துண்டை அப்படியே மத்த துணிக கூட போட்டு வெச்சுருக்கீங்க?"

"...... " மௌனமாய் அவளை பார்த்தான்

"என்ன பார்வ?"

"...... " பதில் கூறாமல் முறுவலித்தான்

"ஊர்ல இருந்து வந்து ரெண்டு நாளாச்சு... இன்னும் சூட்கேஸ் எடுத்து உள்ள வெச்ச பாடா காணோம்"

"...... " சிரிப்புடன் அருகில் வந்தான்

"என்ன சிரிப்பு இப்போ? நான் என்ன ஜோக்கா அடிச்சேன்?"

"Now I know...Why I missed you so much?" என அவன் சிரிக்க, அவள் முறைத்தாள். பின் அவளும் சிரித்தாள்


(தொடரும்... சிரிப்பும் முறைப்பும்... பின் சிரிப்பும்...:)


58 பேரு சொல்லி இருக்காக:

நிஜாம் என் பெயர் said...

iiiiiiiiiiii jooollly

விச்சு said...

சூப்பரா இருக்கு..

vanathy said...

well written, Appavi.

மகி said...

/அந்த கடன்காரன் தான் லீவ் குடுக்கமாட்டேங்கரானே/ :) கொரங்கு கடங்காரனான ரகசியம் என்னன்னு நான் கேப்பேன்??ம்ஹும், கேக்கவேஏஏஏஏஏஏ மாட்டேன்!

குட்டிக்குட்டி உரையாடல்ல அழகான கதை அப்பாவி!

மகேந்திரன் said...

அட அட அட...
இங்கே பாருங்க..
மௌனத்துக்கு பிறகு வரும் வார்த்தை ஜாலங்களால் ஆன
சந்தோசம் ... அப்பாட அளவிட முடியாதது..
அவன் சிரித்தான் ... அவளும் சிரித்தாள்..
அழகா எழுதியிருகீங்க..

பத்மநாபன் said...

சேர்ந்தா சண்டை ..பிரிஞ்சா வலி .. சிரிக்க சிரிக்க வரிகள்..

Madhavan Srinivasagopalan said...

யதார்த்தமான, அன்நோன்யமான வாழ்க்கை.. -- நன்றாகச் சொல்லியுள்ளீர்கள்..

//வீட்டுக்குள் நுழைந்தவளுக்கு அங்கிருந்த அமைதி தாங்க முடியாதது போல் தோன்ற, வேகமாய் சென்று ரேடியோவை உயிர்பித்தாள் //

இப்பலாம் எல்.சி.டி டீ.வி, 5 .1 மியூசி சிஸ்டம், எம்.பி3/4 பிளேயர் தான இருக்கு.. அதென்ன ரேடியோ ?

திவா said...

good! :-)))

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கதை.... கவிதையான வாழ்க்கை - பிரிவின் போதுதான் அருகாமையின் சுகம் புரிகிறது....

kggouthaman said...

கதை நன்றாக உள்ளது.

Thamizhmaangani said...

Awesome!! Loved it:)))

Thanai thalaivi said...

அழகான கதை !, ஒவ்வொரு சம்பாஷணையின் முடிவிலும் அவள் முறைத்தாள் என்று முடித்திருகிறீர்களே இது தற்செயலாய் அமைந்ததா, முனைந்து செய்தீர்களா? மிகவும் நன்றாக உள்ளது, ரசித்தேன்.

அமைதிச்சாரல் said...

கதை அசத்தலா இருக்கு அப்பாவி..

காற்றில் எந்தன் கீதம் said...

very nice.......cute...

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் ரசித்தேன். மிக அருமையான இயல்பான யதார்த்தமான அன்றாட நிகழ்வுகளின் கோர்வை.

இருப்பினும் அவற்றை ரசிக்கும்படி கோர்த்தது நீங்கள் அல்லவா? பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

RAMVI said...

பிரிவு ஏற்படுத்தும் நெருக்கம்,அதை அழகான கதையாக கொடுத்துட்டீங்க.அருமை.

siva said...

Greateful..

தக்குடு said...

யாரோ ஒரு ஆள் யாரோ ஒரு ஆளை விட்டுட்டு இந்தியா போயிட்டாங்களாம், அந்த ஆள் இல்லாம அந்த அம்மா ஒத்த மரத்து குரங்காட்டமா கொசமுட்டிண்டு வந்தாங்களாம், திரும்பி ஊருக்கு அவர் வந்ததுக்கு அப்புறம் தான் அந்தம்மாவுக்கு ஜீவனே வந்துச்சாம் (அவரு இருந்தாதானே சண்டை போடமுடியும்). அந்தம்மா யாரு? ஐயா யாரு?னு யாரும் கேக்காதீங்கோ! எனக்கு நிச்சயமா தெரியாது! ஆனா அந்த மேனஜர் குரங்குக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் நன்னிஹை! :)

தங்கம்பழனி said...

ம்மம்மம்ம...!!

Anonymous said...

உறையாடலில்கூட ஊடலும் கூடலும்உண்டு.தொடர்ந்தகதை முடிந்துவிடும் முடிந்தகதை தொடர்ந்துவிடும் இதுதான் வாழ்க்கை

ஸ்ரீராம். said...

ஒரே வார்த்தையில்......அருமை. ஆனாலும் இரண்டு நாளில் பழைய நிலைமை திரும்பி விடும் இல்லையா....!!

Lakshmi said...

அந்நியோன்யமான தம்பதிகளின் ஊடலை இதைவிட நல்லா சொல்லி இருக்கவே முடியாது.

சே.குமார் said...

நல்லா இருக்கு,,,

சிறுகதைதானே... தொடரும் சிரிப்பும் முறைப்பும்... பின் சிரிப்பும் - அப்படின்னு வருதே...

அழகான க(வி)தை.

divyadharsan said...

Super super super..classic Appavi!
sema romance apdey naturalaaa...aana ungakita erunthu etha mari neriya yethirparkreyn:))

Rombha azhagaa erunthuchu ungala maariyey??? hehe..nijamathan!!

Appavi vaazhga!! Evlo lovable aa oru conversation potathuku..Hugs:)) tc.tata.

divyadharsan said...

Jus nw read your reply.nan kooda athey than feel panreyn..athenavo terila ungaluku type pannumpothu matum vaarthaa aruviya kotuthu..chey tsunaamiyaa kotuthu..
adika adika vanthutey eruku..avlo paasam appavi unga meyla..google matum ela..neengalum sweet sister aagiteenga athan entha pfeelingu:)

papa is very gd, started dng all naughty things..seekirama slim agiduvanu oru nambikaiye epothan varthu:) veyla bend nimiruthulaa.(awwwwhh)

Actually ungakita oru vaartha solitu facebookla ungalku sangam aarambiklaamnu oru plan eruku.,.ethapathi neenga yena nenaikireenga ur honour?? unga pughazha parapanumnu kai para paranguthu:)) yoschi solunga...tata.

Jagannathan said...

Excellent. A great piece of writing. Thanks for giving us the pleasure to read such conversations between the wonderful couple. With Very best wishes, - R. J.

இராஜராஜேஸ்வரி said...

தொடரும்... சிரிப்பும் முறைப்பும்... பின் சிரிப்பும்...:)

Excellent.

சுசி said...

கியூட்டா இருக்கு புவனா :))

ராஜ ராஜ ராஜன் said...

ஹ ஹ ஹா...
இது கதை அல்ல... நிஜம்...
(சரி தானே...?)

இல்லை தவறவர்க் காயினும் ஊடுதல்
வல்ல தவரளிக்கும் ஆறு (குறள்)

BalajiVenkat said...

///யாரோ ஒரு ஆள் யாரோ ஒரு ஆளை விட்டுட்டு இந்தியா போயிட்டாங்களாம், அந்த ஆள் இல்லாம அந்த அம்மா ஒத்த மரத்து குரங்காட்டமா கொசமுட்டிண்டு வந்தாங்களாம், திரும்பி ஊருக்கு அவர் வந்ததுக்கு அப்புறம் தான் அந்தம்மாவுக்கு ஜீவனே வந்துச்சாம் (அவரு இருந்தாதானே சண்டை போடமுடியும்). அந்தம்மா யாரு? ஐயா யாரு?னு யாரும் கேக்காதீங்கோ! எனக்கு நிச்சயமா தெரியாது! ஆனா அந்த மேனஜர் குரங்குக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் நன்னிஹை! :)// enakkum theriyum... ethuku theva illama atha velila solikittu... :)
//மிகவும் ரசித்தேன். மிக அருமையான இயல்பான யதார்த்தமான அன்றாட நிகழ்வுகளின் கோர்வை.

இருப்பினும் அவற்றை ரசிக்கும்படி கோர்த்தது நீங்கள் அல்லவா? பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk// ithu kathaiyalla nijam.... :)

asiya omar said...

//வேண்டுமென்றே தரையில் நீர் படும் படி கையை உதறியவள், தனக்குள் மெல்ல சிரித்து கொண்டாள்//

இந்த இடம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.அருமை.

athira said...

கலக்கிட்டீங்க... கதை அல்ல நிஜம்.

தக்குடு said...

@ Mahi - //கொரங்கு கடங்காரனான ரகசியம் என்னன்னு நான் கேப்பேன்// கொரங்கு லீவு குடுக்காத கதை உலகம் முழுசுக்கும் தெரிஞ்சுருக்கு போலருக்கே!!! :))

Anonymous said...

இது நிஜமாகவே நடந்த கதை. யாருன்னு தெரியனும்ன்னா, மெயில் போடுங்கோ சொல்றேன்.

இதுக்கு யாருப்பா மைனஸ்வோட்டு போட்டது. ஒரு வேளை மாம்ஸோ? ஹா ஹா

கோவை2தில்லி said...

அழகான கதையாக இருந்தது.

பிரிவில் தான் காதல் வளர்கிறது.....

வேங்கட ஸ்ரீனிவாசன் said...

”வீட்டுக்கு வீடு வாசப்படி” அல்லவா.

ஆஹா!! கதையென்று படித்தால், தக்குடு இது கதையல்ல நிஜம் என்று கூறிவிட்டாரோ?

அப்பாவி தங்கமணி said...

@ நிஜாம் என் பெயர் - ஆஹா... :))

@ விச்சு - நன்றிங்க

@ vanathy - தேங்க்ஸ் வாணி...:)

@ மகி - ஹா ஹா ஹா... அடப்பாவி ஊருக்கே ஒலிபரப்பா...அவ்வ்வ்வவ்...;)) Glad many of u liked it...thanks..:)

@ மகேந்திரன் - ரெம்ப நன்றிங்க

@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா

@ Madhavan Srinivasagopalan - நன்றிங்க... இப்ப தான் FM ரேடியோ எல்லாத்தோட இடத்தையும் பிடிச்சுக்குதுங்களே... வேலை செய்துட்டே பாட்டு கேக்க இதானே வசதி..:)

@ திவா - தேங்க்ஸ் திவாண்ணா...:)

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க

@ kggouthaman - நன்றிங்க கௌதமன் சார்

அப்பாவி தங்கமணி said...

@ Thamizhmaangani - மெனி தேங்க்ஸ்..:)

@ Thanai thalaivi - சிரிப்பும் முறைப்பும் வாழ்வில் தற்செயல் தானே தலைவி அக்கா... ரசிதததிர்க்கு நன்றி..;)

@ அமைதிச்சாரல் - தேங்க்ஸ் சாரல் அக்கா...:)

@ காற்றில் எந்தன் கீதம் - நன்றிங்க

@ வை.கோபாலகிருஷ்ணன் - ரெம்ப நன்றிங்க சார்

@ RAMVI - ரெம்ப நன்றிங்க

@ siva - நன்றிங்க சிவா

@ தக்குடு - ஹா ஹா ஹா... இப்படி எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைனு சொன்னதுக்கு நீ விளக்கமே சொல்லி இருக்கலாம்... அதான் கதைல(!) கவனமா வார்த்தைகளை யூஸ் பண்ணினேன்...:)))

@ தங்கம்பழனி - ம்ம்ம்ம்:)

@ பெயரில்லா - நல்லா சொன்னீங்க... :)

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம். - நன்றிங்க... இரண்டு நாளா? இரண்டு மணி நேரம் போதுமே...:))

@ Lakshmi - ரெம்ப நன்றிங்க லக்ஷ்மி'ம்மா...:)

@ சே.குமார் - நன்றிங்க... சிரிப்பும் முறைப்பும் பின் சிரிப்பும் வாழ்வில் எப்போதும் தொடரும் அப்படிங்கற அர்த்ததுல 'தொடரும்' போட்டு இருந்தேங்க... இந்த கதைக்கு "முற்றும்" போட மனமும் கையும் வரவில்லை...:)

@ divyadharsan - ஹாய் திவ்யா... ரெம்ப தேங்க்ஸ்... அழகா இருந்துச்சு சரி, அதென்ன என்னை மாதிரி, என்னை வெச்சு காமடி கீமடி பண்ணலியே... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... :)) எனக்கு டைப் பண்ணும் போது வார்த்தை கொட்டுதா, அது வேற ஒண்ணுமில்ல என்னோட பதிவுகள் படிச்ச பாதிப்புனு நினைக்கிறேன்... :)) Naughtyயா இருந்தா தான் Cutie பாப்பா இல்லையா? Freeயா வொர்க் அவுட் குடுக்கறதுக்கு பாப்பாவுக்கு நீங்க தான் தேங்க்ஸ் சொல்லணும்...:) எனக்கு சங்கமா? ஹா ஹா ஹா... சங்கம் ஆரம்பிக்கறதால உங்களுக்கு ஏற்படும் damagesக்கு அப்பாவிசங்கம் பொறுப்பில்லை...:))) இதை பத்தி நான் என்ன நினைக்கிறேங்கரத விட இதை சொன்ன உங்களை என்ன செய்யலாம்னு ஊர் மொத்தமும் நினைக்குதுனு பாத்துகோங்க அம்மணி... :))) அன்புக்கு நன்றி திவ்யா

@ Jagannathan - ரெம்ப நன்றிங்க... :)

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க'ம்மா

@ சுசி - தேங்க்ஸ் சுசி...:)

@ ராஜ ராஜ ராஜன் - நிஜமா? அப்படியா? எனக்கு தெரியாதே சார்... ஹா ஹா ஹா... ஆஹா, இதுக்கும் வள்ளுவர் எழுதி வெச்சு இருக்காரா? சொல்லவே இல்ல... நன்றி பகிர்ந்து கொண்டதற்கு... :)))

@ BalajiVenkat - ப்ரூட்டஸ் நம்பர் டூ...;)) தம்பிகளை உடையாள் விமர்சனத்துக்கு பஞ்சாள்(பஞ்சமில்லை என்பதின் சுருக்கம் for rhyming)...:)))

@ asiya omar - ஹா ஹா.. எனக்கும் தான்.. தேங்க்ஸ் ஆசியா..:)

அப்பாவி தங்கமணி said...

@ athira - என்னது கதையல்ல நிஜமா? யாருங்க அப்படி எல்லாம் புரளி கெளப்பி விடறது... அவ்வவ்.. ஹா ஹா...:))

@ தக்குடு - ப்ரூட்டஸ் ப்ரூட்டஸ் ப்ரூட்டஸ்... ஐவர் பேரவை தவிர ஒரு நாலு பேருக்கு மட்டும் தெரிஞ்சிருந்தத்து... இப்ப....:))))

@ பெயரில்லா - வந்துட்டாங்க ப்ரூட்டஸ் நம்பர் மூணு... யாருப்பா இந்த பெயரில்லா? எழுதின விதத்தை பாத்தா அனாமிகானு தோணுது... :))

@ கோவை2தில்லி - தேங்க்ஸ் ஆதி...:)

@ வேங்கட ஸ்ரீனிவாசன் - நன்றிங்க... தக்குடு சொல்றதை நம்பாதீங்க சார்... இது கதை, கதை தவிர வேறில்லை.. :)

ஷைலஜா said...

தக்குடு சொல்றத நான் நம்பல அப்பாவிதங்கமணி...உன்னாலே உன்னாலே கதை தலைப்பே சூப்பர்!

கீதா said...

கையைக் கழுவிட்டு தண்ணியை உதறுறதும், ஈரத்துண்டை மத்தத் துணிகளோட போடுறதும், அதுக்காக தலைவிகள் சண்டை போடுறதும் புலம்புறதும், தலைவர்கள் அதை அலட்சியப்படுத்திப் பரிகசிக்கிறதும், அப்புறம் ஆள் ஊர்ல இல்லையென்றால் அங்கலாய்க்கிறதும்.... அட, எல்லா இடத்திலயும் இப்படித்தானா? அழகான கதை. ஊடலும் கூடலுமாய்... பிரமாதம்.

ஜெய்லானி said...

//"ஏன் எதற்கு எப்படினு கேள்வி கேட்டா தான் பிரைன் நல்லா ஷார்ப் ஆகும்னு யாரோ ஒரு பெரிய மனுஷன் சொல்லி இருக்கார் தெரியுமா?" //


இந்த டயலாக்கை எங்கையோஓஓஓ கேட்டமாதிரி இருக்கே ஹா...ஹா :-))


சிம்பிள டயலாக் கதை தொடருங்கள சூப்பர் :-)

Thanai thalaivi said...

ஆஹா...! கதை அருமையா இருக்கேன்னு நான் பாராட்டி தள்ளினா அத்தனையும் சொந்தமான சோக கதை தானா...!, மாட்டிவிட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

vinu said...

45

vinu said...

46

vinu said...

47

vinu said...

48

vinu said...

49

vinu said...

50

King Vishy said...

Commonplace scenes.. Usual dialogs.. Regular responses..
ஆனாலும் அழகு!
அல்லது: அதனால் தான் அழகோ?!
Nice story!! :)

வல்லிசிம்ஹன் said...

அருமை அருமை அருமை.

Matangi Mawley said...

அழகான- empathize பண்ணக்கூடிய கதை... :) very cute actually... :)

அப்பாவி தங்கமணி said...

@ ஷைலஜா - நன்றிங்க.... அதான் கரெக்ட் தக்குடு சொல்றதை நம்பாதீங்க... :)

@ கீதா - எல்லா இடத்துலயும் இப்படிதான் போல... :) நன்றிங்க கீதா..:)

@ ஜெய்லானி - ஹா ஹா... எங்கயோ கேட்ட மாதிரியா? அப்படியே திரும்பி பாருங்க புரியும்... நன்றிங்க...:)

@ Thanai thalaivi - ச்சே ச்சே... நமபதீங்க... இது நிஜமல்ல கதை கதை கதை...:)

@ vinu - என்ன வினு, நம்பர் மட்டும் தான் போடுறதுன்னு வேண்டுதலா?..:))

@ King Vishy - அதனால் தான் அழகோ? நன்றி...:)

@ வல்லிசிம்ஹன் - தேங்க்ஸ் வல்லிம்மா..:)

@ Matangi Mawley - தேங்க்ஸ் மாதங்கி... உங்க தமிழ் விடவா இது cute?...:))

மனோ சாமிநாதன் said...

கணவன் மனைவி இருவருக்கிடையே நிலவுகின்ற சிறு சிறு ஊடல்கள், கோப தாபங்கள், பிரிவின் வலி, இத்தனைக்கும் இடையே மெல்லிய இழையாய் பின் தொடர்ந்து வரும் அன்பின் சுகந்தம்..... அருமை! மிக அழகிய பதிவு!

அப்பாவி தங்கமணி said...

@ மனோ சாமிநாதன் - Thanks Madam...:)

அப்பாதுரை said...

தவளைக்கதை எப்போ எழுதப் போறீங்க?

அப்பாவி தங்கமணி said...

@அப்பாதுரை - next week தவளைக்கதை... week after crocodile story...:)))

Post a Comment