Friday, October 21, 2011

திரிசங்கு சொர்க்கம்...(சிறுகதை)"என்னடி இந்த நேரத்துல போன் பண்ற...?" என பதட்டமாய் கேட்ட கணவனின் அக்கறையில் மனம் நெகிழ

"ம்...ஒண்ணில்ல....சும்மா தான்" என்றாள் வைஷ்ணவி

"நெஜமா சொல்லு, இஸ் எவரிதிங் ஆல்ரைட்?"என இன்னும் முழுதும் சமாதானமாகாத குரலில் கேட்டான் ஸ்ரீதர்

"ஒண்ணுமில்லப்பா...சும்மாதான் கூப்டேன்..." என்றாள் அழுத்தமாய்

"அப்ப சரி... அம்மு தூங்கிட்டாளா?"

"ம்..."

"நீ இன்னும் தூங்கலையா செல்லம்?"

"நடுராத்திரில போன்ல கொஞ்சுங்க...ஹும்" என அவள் சலித்துக் கொள்ள

"நடுராத்ரில நேர்ல கொஞ்சவும் நான் ரெடி... நீ தான் ஒம்பது மணிக்கே சாமி ஆடுவியே.." என ஸ்ரீதர் சிரிக்க

"ப்ச்..."என அசுவாரசியமாய் சலித்தவள் "எப்ப வரீங்க?" என்றாள் சன்ன குரலில்

"ஆஹா... மழை கொட்ட போகுது இன்னிக்கி" என்றான் கேலியாய்

"ஏன்?"

"ம்... பொண்டாட்டி புள்ளைய தனியா விட்டுட்டு வாரத்துல நாலு நாள் வெளியூர்ல ப்ராஜெக்ட் ப்ராஜெக்ட்னு போயிடறமே... எப்படா வியாழக்கிழமை சாயங்காலம் வரும்னு எப்பவும் நான் தான் காத்துட்டு இருப்பேன்... இன்னிக்கென்ன மேடம் விசாரணை" என கேலி செய்ய

"ஓ...அப்போ எனக்கு வருத்தமே இல்லைன்னு சொல்றீங்களா?" என்றாள் ஊடலாய்

"இல்லம்மா... அதான் திங்கக்கிழமை காலைல கெளம்பறப்ப கண்ண கசக்குவியே... எனக்கு தெரியாதா... ஆனா இப்படி நடுவுல எல்லாம் எப்ப வருவீங்கன்னு கேக்க மாட்டியே அதான் கேட்டேன்"

"சும்மா கேட்டேன்..." என்றாள்

"ஏய் நெஜமா சொல்லு...ஒடம்புக்கு எதுனா சரி இல்லையா?" என கரிசனையாய் ஸ்ரீதர் கேட்க தனிமையின் வெறுமையில் வைஷ்ணவியின் கண்கள் நிறைந்தது

அவளிடமிருந்து பதில் வராமல் போக "வைஷு...என்னடா?" என பதறினான் ஸ்ரீதர்

"அதெல்லாம் இல்லப்பா... என்னமோ... இன்னிக்கி..." என மௌனமானாள்

"ஏய்..என்னாச்சு? மூட் அவுட்டா? ஆபீஸ்ல எதுனா டென்சனா?"

"இல்லப்பா... கொஞ்சம் முன்னாடி ஊருக்கு பேசினேன்.. அக்கா அண்ணா எல்லாரும் அம்மா வீட்டுக்கு வந்து இருந்தாங்க... அங்க  இப்பவே தீபாவளி கொண்டாட்டம்  ஆரம்பிச்சாச்சு. அண்ணா பசங்க அக்கா பசங்க எல்லாம் பட்டாசு புது டிரஸ் ஸ்வீட்ஸ்னு ஏக ரகளையா இருந்தது போன்ல கேக்கவே.... ப்ச்... நான் மட்டும் இங்க தனியா" என வேதனையுடன் கூற

"என்னடா இது? கல்யாணம் ஆகி பத்து வருசமா அமெரிக்கால தானே இருக்கோம்... புதுசா பொலம்பினா எப்படி கண்ணம்மா?"

"என்னமோப்பா... சில நேரம் ரெம்ப எரிச்சலா இருக்கு... பேசாம ஊருக்கே போய்டலாம்னு தோணுது... என்ன தான் இருந்தாலும் எல்லாரோடவும் சேந்து இருக்கற லைப்ல இருக்கற சந்தோஷம் இந்த டாலர்லயும் US வாழ்க்கை பந்தாலையும் இருக்கா சொல்லுங்க"

"நீ சொல்றது சரி தான் வைஷும்மா... ஆனா என்ன செய்ய? நாம போன  வாட்டி ஊருக்கு லீவுக்கு போனப்ப, நம்ம அம்மு பாதி நாள் சளி காய்ச்சல்னு அவதிபட்டது பாத்து எப்படா இங்க வந்து சேருவோம்னு நீ தான சொன்ன"

"வாஸ்துவம் தான்... அங்க போனா இங்க வரலாம்னு இருக்கு, இங்க வந்தா அங்க போலாம்னு இருக்கு...என்னப்பா வாழ்க்கை இது?"

"கரெக்ட் தான் வைஷுமா... இங்கயும் முழுசா மனசு ஓட்டரதில்ல... அங்கயும் சௌகரியம் சரிப்படரதில்ல. இங்க வாழற நம்ம மக்கள் பலபேருக்கு உள்ள நிலை தான் இது... திரிசங்கு சொர்க்கம்..."

"இது ஊர்ல இருக்கறவங்களுக்கு புரியரதில்லையேங்க... உனக்கென்னமா ஜாலிங்கறாங்க எங்க அண்ணி போன் பேசினப்ப"

"இக்கரைக்கு அக்கரை பச்சை" என்றான் ஸ்ரீதர்

"என்ன அய்யா இன்னிக்கி ஒரே பழமொழியா கொட்டறீங்க?" என வைஷ்ணவி கேலியாய் கேட்க, மனைவியின் மனம் சற்று தெளிவானதை உணர்ந்து தானும் பேச்சை மாற்றும் எண்ணத்துடன்

"ம்... எல்லாம் என் வீட்டுக்காரி ட்ரைனிங் தான்" என்றான் ஸ்ரீதர் கேலியாய்

"ஓஹோ... அப்படியா சார்... உங்க வீட்டுக்காரி பாவம் வழி மேல விழி வெச்சு காத்துட்டு இருக்காளாம்... நீங்க ஜாலியா லாஸ் வேகஸ்ல காஸினோ லைப் என்ஜாய் பண்றதா கேள்வி" என்றாள் அவளும் விடாமல்

"அடிப்பாவி, இப்படி வேற ஒரு நெனப்பா உனக்கு... லாஸ் வேகஸ் என்ன, சொர்க்கமாவே இருந்தாலும் நீ இல்லாத இடம் எனக்கு நரகம் தான் வைஷும்மா" என கணவன் உணர்ச்சி வயப்பட, மனமுருகியது வைஷ்ணவிக்கு

இந்த அன்பு தானே பத்து வருடமாய் பெற்றோரையும் உடன் பிறப்புகளையும் விட்டு பிரிந்திருக்க பலம் தரும் சஞ்சீவி என தோன்றியது

மற்றபடி வீட்டின் செல்ல கடைகுட்டியாய் இளவரசியாய் வலம் வந்தவள் இப்படி நாடு விட்டு நாடு வந்து ஒற்றையாய் சமாளித்தது ஸ்ரீதரின் அன்பால் மட்டுமே சாத்தியமானது என்பதில் சந்தேகமில்லை

ஊரில் மற்ற சொந்தங்களுடன் இருந்தால் கூட இந்த நெருக்கம் சாத்தியம் ஆகி இருக்காதோ என பலமுறை தோன்றியதுண்டு அவளுக்கு

இங்கு எனக்கு நீ உனக்கு நான் என வாழும் வாழ்வில் தான் இந்த சரணாகதி ஆனதோ மனம் என தனக்கு தானே நினைப்பாள் வைஷ்ணவி

என்ன பைத்தியகாரத்தனமான எண்ண ஓட்டம் இது என எண்ணி கொள்வாள்

"என்ன பேச்சே காணோம்?" என ஸ்ரீதரின் குரலில் கலைந்தவள்

"ம்... என்ன செய்ய? ராமனனுள்ள இடமே சீதைக்கு அயோத்தி போல உங்களுக்கு கிளையன்ட் உள்ள இடமே ஆபீஸ்..."

"ஹா ஹா... நீ ஆரம்பிச்சுட்டியா இப்ப பழமொழி"

"ம்... " என மீண்டும் அமைதியானாள்

மனைவியின் அமைதியில் அவள் மனம் புரிந்தவனாய் "என்னடா? மறுபடியும் டல் ஆய்ட்ட" எனவும்

"ம்... நீங்க வீட்டுல இருந்தாலும் பரவால்ல... வாரத்துல நாலு நாள் எஸ்கேப் ஆய்டறீங்க... அதான்பா இன்னும் ஹோம் சிக் ஆய்டுது... போதாகுறைக்கு அம்மு வேற அடிக்கடி டாடி வேணும்னு ரகளை ஆரம்பிச்சுடுறா"

"எனக்கு மட்டும் ஆசையா சொல்லு... இந்த ஐ.டி பொழப்புல இதான்... comes with the package baby"

"ம்..."

"சரி நீ போய் தூங்கு... காலைல நீ ஆபீஸ் போகணுமே" என பேச்சை மாற்றினான்

"நீங்க தூங்கலையா இன்னும்? டைம் ஆச்சே"

"இங்க இப்பதான் மணி எட்டு லாஸ் வேகஸ்ல... உனக்கு தான் டெட்ராய்ட்ல பதினொன்னு... என்ன டைமிங் difference மறந்து போச்சா?"

"ஓ...ஆமால்ல மறந்துட்டேன் சட்டுன்னு"

"ஆமா...வயசானா இப்படி தான் மறந்து போகும்" என ஸ்ரீதர் கேலி செய்ய

"அப்படியா...அங்க மட்டும் என்ன பதினாறா இன்னும்?" என சிரித்தாள்

"பின்ன? இன்னிக்கி கூட கிளையன்ட் சைட்ல ஒரு வெள்ளைக்கார அம்மணி you're so handsomeனுச்சு you know?"

"அப்படியா? அப்ப அவகிட்டயே போய் பேசுங்க...பை" என வைஷ்ணவி பொய் கோபம் காட்ட

"ஏய் ஏய்.. என்னடி? நீ சொன்னதுக்கு தானே பதில் சொன்னேன்.. என்ன இருந்தாலும் உன் அழகு வருமா சொல்லு"

"ஐஸ் வெச்சது போதும்"

"ச்சே ச்சே...உண்மைய சொன்னா ஐஸா?"

"ஒகே...நான் போய் தூங்கறேன்ப்பா"

"ஒகே குட்நைட்...ஸ்வீட் ட்ரீம்ஸ் ஆப் மீ" என ஸ்ரீதர் கூற 

"ஒகே ஒகே பை..."

"பை"

அதற்குள் "ஒரு நிமிஷம்" என வைஷ்ணவி நிறுத்த

"என்னடா?"

"அவ எப்படி இருப்பா?" என்ற வைஷ்ணவியின் குரலில் பெண்மைக்கே உரிய உரிமையான கோபம் கலந்திருக்க

"எவ?" என்றான் ஸ்ரீதர் புரிந்தும் புரியாதவனாய்

"அதான் அந்த வெள்ளக்காரி"

"ஹா ஹா ஹா..." என அவன் நிறுத்தாமல் சிரிக்க, அவன் கேலியாய் சிரிப்பதை புரிந்தும் வேண்டுமென்றே

"அமாவாசை வருதில்ல, கெளம்பிடுச்சா? சரி நான் வெக்கறேன் பை" என்றாள்

"ஐ லவ் யு வைஷு" என்றான் ஸ்ரீதர் தனிச்சையாய், இந்த உரிமையான  கோபத்தையும் நான் காதலிக்கிறேன் என பறைசாற்றுவது போல்

"லவ் யு...பை" என தொலைபேசியை அதனிடத்தில் வைத்தாள் வைஷ்ணவி

கணவனிடம் பேசி சிரித்ததில் மனம் சற்று தெளிவுற்ற போதும், இந்த திரிசங்கு சொர்க்க நிலை இன்னும் எத்தனை நாளைக்கோ என யோசனையுடன் கண்ணயர்ந்தாள் வைஷ்ணவி

(முற்றும்)

51 பேரு சொல்லி இருக்காக:

ஷைலஜா said...

திரிசங்கு சொர்க்க நிலை! அதிலும் நரகம் இல்ல பாருங்க....சொர்க்கம் நோக்கிய நிலை அதனால சுகமான சுமைகள்னு நினச்சிக்கவேண்டியதுதான்.
கதை நடை இயல்பு.

நிஜாம் என் பெயர் said...

i think, it will be good, going to read

Thamizhmaangani said...

tooooooooooo good man!! ஒவ்வொரு வரியும் அவ்வளவு அருமை!

//"வாஸ்துவம் தான்... அங்க போனா இங்க வரலாம்னு இருக்கு, இங்க வந்தா அங்க போலாம்னு இருக்கு...என்னப்பா வாழ்க்கை இது?"//

beautiful lines! பின்னிட்டீங்க போங்க:)))

sriram said...

புவனாக்கா
இது கதையல்ல நிஜம்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

இராஜராஜேஸ்வரி said...

"வாஸ்துவம் தான்... அங்க போனா இங்க வரலாம்னு இருக்கு, இங்க வந்தா அங்க போலாம்னு இருக்கு...என்னப்பா வாழ்க்கை இது?";//


very nice story...

மனோ சாமிநாதன் said...

வெளி நாட்டு வாழ்கையில், அதுவும் குழந்தைகளுடன் வாழும் திரிசங்கு வாழ்க்கையை, அன்பின் அடி நாதத்துடன் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்!

36 வருடங்களின் வெளி நாட்டு வாழ்க்கையை மறுபடியும் ஒரு முறை திரும்பிப்பார்ப்பது போல இருந்தது உங்களின் முத்தான சிறுகதையை படித்தபோது!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமை. வெகு அருமை. பகிர்வுக்கு நனறிகள். பாராட்டுக்கள் மேடம்.

(Mis)Chief Editor said...

கதைல டுவிஸ்டு இல்லையே....!

போனை வைத்தவுடன்...அழைப்பு மணி 'டிடிஆங்' என்றது. பரபரப்பாய்ச் சென்று கதவைத் திறந்தான் ஸ்ரீதர். வாசலில் 'வெள்ளைக்கார அம்மணி'!

என்றிருந்தால் கொஞ்சம் நன்றாயிருந்திருக்குமோ?!

-பருப்பு ஆசிரியன்

geethasmbsvm6 said...

:( sontha anubavam

Porkodi said...

paruppu aasiriyan, ungluku yenga indha kola veri?

அமைதிச்சாரல் said...

கதை ரொம்ப நல்லாருக்கு புவன்ஸ் :-))

Madhavan Srinivasagopalan said...

// "இக்கரைக்கு அக்கரை பச்சை" என்றான் ஸ்ரீதர் //

இது யாவருக்கும், எதற்குமே பொருந்தும்.

மன நிம்மதியே முக்கியம். இருக்கும் நிலையை ரசிக்க வேண்டும்... வாழ்வின் ஒவ்வொரு நிமிஷத்தையும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டுமென்பதே எவருக்கும் இருக்கும் ஆசையாகும்.. ஆசைதான் கஷ்டத்திற்கும் காரணம்.. இல்லையா ?

Good Story.. I could feel it.

ஸ்ரீராம். said...

"வைஷ்ணவி....உன் பிரிவை சமாளிக்க மற்றும் சரி செய்து கொள்ளத்தான் குடும்பத்தினர் அனைவரும் அங்கு ஒன்று கூடி இருக்கிறார்கள்...ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்பதால் குடும்பத்தின் பிரிவால் ஸ்ரீதருடனான நெருக்கம் அதிகமாகத் தெரிகிறது அல்லவா...Don't worry...Be happy...!"

RAMVI said...

திரிசிங்கு சொர்கம் என்பது சரிதான்.
//என்ன தான் இருந்தாலும் எல்லாரோடவும் சேந்து இருக்கற லைப்ல இருக்கற சந்தோஷம் இந்த டாலர்லயும் US வாழ்க்கை பந்தாலையும் இருக்கா சொல்லுங்க"//
இந்த வரிகள் அருமை. உங்க மனநிலையை அழகாக விளக்கியிருக்கீங்க புவனா.

Jagannathan said...

இதுவும் தேவை, அதுவும் தேவை என்று மனத்தை உழப்பி சுய பச்சாதாபம் கொள்வது எனக்கு கொஞ்ஜம் பைத்தியக்காரத் தனமாகத் தெரிகிறது. இதைவிட அது அதிகம் தேவை என்று போன பிறகு வருந்துவது நல்லதில்லை. இருக்குமிடமே சொர்கம்! - ஜெ.

BalajiVenkat said...

NRI vaazhkai pathi sonnathellam vasthavam thaan... but nadula nadula indha romantic scenes thaan enna maathiri bachelors manasa paadaa padutharthu... mudiyala.... :(

மகேந்திரன் said...

அருமையா இருக்கு சகோதரி...

கீதா said...

ஒரு வாரமா ஊருக்கு பேசும்போதெல்லாம் இதே எண்ணம்தான் எனக்கும். தீபாவளி களை கட்டிடுச்சு அங்க. இங்க அன்றைக்கு பிள்ளைகள் பள்ளிக்குப் போகணும். அயல்நாட்டு வாழ்க்கையில் நம்மோடு சேர்ந்து நம் குழந்தைகள் இழப்பதும் அதிகம். ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க புவனா.

ஸ்வர்ணரேக்கா said...

//ஊரில் மற்ற சொந்தங்களுடன் இருந்தால் கூட இந்த நெருக்கம் சாத்தியம் ஆகி இருக்காதோ என பலமுறை தோன்றியதுண்டு அவளுக்கு//

இப்படி ஒன்னு இருக்குதோ... ம்ஹீம்...

//இங்கயும் முழுசா மனசு ஓட்டரதில்ல... அங்கயும் சௌகரியம் சரிப்படரதில்ல//
--- உண்மையிலேயே திரிசங்கு நிலைமை தான்..

ராஜ ராஜ ராஜன் said...

என்னை கதை சொல்ல சொன்னா...
என்ன கதை சொல்லுறது...
சொந்த கதை சோகக் கதை...
:-)

தங்கம்பழனி said...

ரொம்ப நாளக்கி அப்புறம் கதை சொல்லியிருக்கீங்க. ரொம்ப நல்லாருக்கு. எனக்கு கதை பிடிச்சிருக்கு..!!

சுரேகா.. said...

அதிகபட்ச உரையாடல் மூலமாகவே கதையை நகர்த்தும் யுக்தி மிகவும் அருமை!

‘உங்கள்’ கதையை, உணர்வு ரீதியாக ஒன்றி எழுதியிருக்கிறீர்கள். அப்படியே வெளிப்பட்டிருக்கிறது.

வாழ்த்துக்கள்!

asiya omar said...

எதார்த்தமான கதை..

சே.குமார் said...

கதை எதார்த்தமா ரொம்ப நல்லாருக்கு புவனாக்கா.

தக்குடு said...

இது இட்லிமாமி எழுதின கற்பனை கதைதான் எல்லாரும் நம்புங்கடே!! :)

இது கதையா மேடம்?? நம்பிட்டோம்!! வைஷூ பேரை போட்டு தக்குடு வாயை வேணும்னா அடைக்கலாம் ஆனா ஊர் வாயை அடைக்க முடியுமோ?? :PP

வேங்கட ஸ்ரீனிவாசன் said...

பாதி வாழ்க்கை தொலைபேசியிலேயே நடந்தால் அதுவும் திரிசங்கு சொர்கம் தான் இல்லையா?

விச்சு said...

நல்ல கொஞ்சல்...

Mahi said...

எரியற தீயில் எண்ணெய ஊத்தறது..வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சறது... ///திரிசங்கு சொர்க்கத்தைப் படிச்சப்ப ஏனோ இதெல்லாம் நினைவுக்கு வருது புவனா! :)

ஹேஏஏஏப்பி தீபாவளி! :)

அப்பாவி தங்கமணி said...

@ ஷைலஜா - உங்களோட எல்லாம் நன்மைக்கே அப்ரோச் சூப்பர்... நன்றிங்க..:)

@ நிஜாம் என் பெயர் - நன்றிங்க... படிச்சீங்களா...:)

@ Boston sriram - அப்பாடக்கர் சொன்னா சரியாதானுங்க இருக்கும்....நன்றி...:)

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க அம்மா

@ மனோ சாமிநாதன் - உங்கள் விமர்சனமும் அழகா இருக்கு....ரெம்ப நன்றிங்க...:)

@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்..

@ (Mis)Chief Editor - மன்னிக்கணும்...அந்த மாதிரி ட்விஸ்ட் எல்லாம் என் கதைகளில் இருக்காது

@ geethasmbsvm6 - யாருக்கு சொந்த அனுபவம் மாமி...:) தேங்க்ஸ்...:)

@ Porkodi - என்னமோ போங்க... :) அது சரி, தங்களின் மேலான சாரி femaleஆன கருத்தை தாங்கள் கடைசி வரைக்கும் கூறவில்லையே..:)

@ அமைதிச்சாரல் - நன்றிங்க அமைதி அக்கா...:)

அப்பாவி தங்கமணி said...

@ Madhavan Srinivasagopalan - நன்றிங்க சார்...:)

@ ஸ்ரீராம். - அதுவும் சரிதாங்க... எல்லாமும் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை... நன்றிங்க...:)

@ RAMVI - ரெம்ப நன்றிங்க ராம்வி

@ Jagannathan - சுய பச்சாதாபம்னு இல்லிங்க. மத்த நேரத்துல விட இந்த மாதிரி பண்டிகை சமயங்கள்ல ஊர் பற்றிய நினைவு எல்லாருக்கும் அதிகமாவது இயல்பு தானே. அதை மைய கருவாய் வைத்து எழுதப்பட்ட ஒரு படைப்பு, அவ்வளவே. நன்றி உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு... இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...:)

@ BalajiVenkat - ஹா ஹா ஹா... அடப்பாவி... :)))

@ மகேந்திரன் - நன்றிங்க பிரதர்...:)

@ கீதா - சரியா சொன்னீங்க கீதா... நன்றிங்க...:)

@ ஸ்வர்ணரேக்கா - அப்படித்தான்னு சொல்லலைங்க ஸ்வர்ணா... அப்படியோனு அந்த வைஷ்ணவியோட மனநிலைனு சொல்ல வந்தேன்...:) நன்றிங்க

@ ராஜ ராஜ ராஜன் - ஆஹா.. இதுவுமா? அடுத்த வாரம் Cindrella ஸ்டோரி போடறேன்... அப்பவும் இதே சொல்லிடுங்க சார்....:)

@ தங்கம்பழனி - ரெம்ப நன்றிங்க..:)

அப்பாவி தங்கமணி said...

@ சுரேகா.. - மிக்க நன்றிங்க...:)

@ asiya omar - தேங்க்ஸ்'ங்க ஆஸியா...:)

@ சே.குமார் - நன்றிங்க குமார்..:)

@ தக்குடு - அடப்பாவி...எனக்கு எதிரி வெளில இல்லைன்னு சொன்னது சரியா போச்சே...:) வைஷூ பேரு இன்னுமா வொர்க் அவுட் ஆகும் உன்கிட்ட?... ஹும்ஹும்... ஒண்ணும் சரியா படலை...:) (என்னையா கோத்து விடற) அடுத்த வாரம் Cindrella கதை போடலாம்னு இருக்கேன், அப்ப மறக்காம வந்து "இது எங்க அக்காவோட சொந்த கதை சோக கதை சோழ நாட்டு மண்ணை ஆண்ட கதை" னு சொல்லணும் சரியா...:))

@ வேங்கட ஸ்ரீனிவாசன் - ரெம்ப அழகா சொன்னீங்க சார்... ஆனா இப்ப அந்த நிலை உள்நாடு வெளிநாடு எல்லா எடத்துலயும் அதிகமாய்டுச்சு... நன்றிங்க...:)

@ விச்சு - :))

@ Mahi - What do do Mahi? What do do? எனக்கும் அதே தான் தோணுது... ஆனா, புண் பட்ட மனதை போஸ்ட் போட்டு ஆத்துனு போட்டுட்டேன்... நீயும் ஒண்ணு போடு, வந்து நானும் சேந்து பொலம்பறேன்... :)) ஏப்பி ஏப்பி தீபாவளி அம்மணி...:))))

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்

Thanai thalaivi said...

என்னப்பா வர வர சொந்த சோக கதைகள் அதிகமாகிட்டு வரமாதிரி இருக்கே? ம்ம்... சீக்கிரமா ஒரு மொக்கை போஸ்ட் போட்டு மூடுக்கு வாங்க ! நானும் ரெண்டுநாள் வைகுண்டத்துக்கு (ஸ்ரீரங்கம்) போய் என்னை புதுபிச்சுகிட்டு வந்தேன்.

Wishing you and your family a very very happy deepavali.

Kriishvp said...

// "வாஸ்துவம் தான்... அங்க போனா இங்க வரலாம்னு இருக்கு, இங்க வந்தா அங்க போலாம்னு இருக்கு...என்னப்பா வாழ்க்கை இது?"

"கரெக்ட் தான் வைஷுமா... இங்கயும் முழுசா மனசு ஓட்டரதில்ல... அங்கயும் சௌகரியம் சரிப்படரதில்ல. இங்க வாழற நம்ம மக்கள் பலபேருக்கு உள்ள நிலை தான் இது... திரிசங்கு சொர்க்கம்..."

"இது ஊர்ல இருக்கறவங்களுக்கு புரியரதில்லையேங்க... உனக்கென்னமா ஜாலிங்கறாங்க எங்க அண்ணி போன் பேசினப்ப"

"இக்கரைக்கு அக்கரை பச்சை" என்றான் ஸ்ரீதர் //

உண்மைதான் சகோதரி.

மேலும் உங்களுடைய நெடுந்தொடர் ஒன்றை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

Kriishvp said...

மனம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தக்குடு said...

//மேலும் உங்களுடைய நெடுந்தொடர் ஒன்றை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்//

இட்லி மாமி, "இன்னுமாடா இந்த உலகம் நம்பளை நம்பிண்டு இருக்கு????" அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))

ராஜி said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரி. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

ராஜி said...

தமிழ்மணம் 3

angelin said...

இனிய தீபாவளித்திரு நாள் நல் வாழ்த்துக்கள்

மஞ்சுபாஷிணி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
அன்புடன்
மஞ்சுபாஷிணி

kunthavai said...

வெளிநாடுகளில் வசிக்கும் எல்லோரும் அனுபவிப்பதை ரெம்ப அழகாக எழுதியிருக்கிறீர்கள். அதான் நாங்க ஊருக்கு வந்திட்டோம். :)

துளசி கோபால் said...

ரொம்பச் சரி.

உரலுக்குள்ளே தலையைக் குடுத்தாச்சுப்பா:-)))))

Jagannathan said...

உங்கள் பதிலைப் படித்து நான் என்மேலேயே கொஞ்ஜம் கோபித்துக் கொண்டேன். உண்மை தான், வெளிநாட்டில் / ஊரில் இருப்போருக்கு அப்பப்ப / பண்டிகை சமயங்களில் ஊர் ஞாபகம் வரும் / சொந்தங்கள் நெருக்கம் தேவைப்படும். நானே தீபவளிக்கு என் பையனை 2 நாளாவது வந்து இருந்து போகச்சொன்னேன். பெண்களுக்கு இந்த ஏக்கம் கொஞ்ஜம் அதிகமாகவே இருப்பதும் தப்பில்லை. தீபாவளி வாழ்த்துக்கு நன்றி. நீங்களும் உங்கள் நண்பர்களுடன் சிறப்பாக இந்த வீக் எண்டில் கொண்டாட வாழ்த்துக்கள். - ஜெ.

vinu said...

he he he he already ingittu ippudiththaan thinamum nadakkuthungowwwwwwwwww!!!!

vinu said...

when will be the next series, love story pleazzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz!!!!!

Thanai thalaivi said...

நான் போட்ட கமெண்டை காணோம்.

அப்பாதுரை said...

nice

Jagannathan said...

இந்த தமிழ் தேதி, வருஷம், நேரம் இவைகளை மாற்ற முடியுமா? ஒன்றும் புரியவில்லை. - ஜெ.

அப்பாவி தங்கமணி said...

@ Avargal Unmaigal - ரெம்ப நன்றிங்க... உங்களுக்கும் தாமதமான வாழ்த்துக்கள்...;)

@ Kriishvp - ரெம்ப நன்றிங்க... நெடுந்தொடர் எழுத எனக்கும் ஆசை தாங்க.. நேரம் தான் அமையவில்லை... ரெம்ப நன்றி கேட்டதற்கு...இனிய தீபாவளி வாழ்த்துக்கள்... அடுத்த வருசத்துக்கு இப்பவே சொல்லிடறேன்... ;)

@ தக்குடு - ப்ரூட்டஸ்... வர்ற ஒத்தர் ரெண்டு பேரையும் இப்படியே பயப்படுத்துவ...:)))

@ ராஜி - ரெம்ப நன்றிங்க ராஜி'க்கா... உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்...:)

@ angelin - நன்றிங்க... உங்களுக்கும் வாழ்த்துக்கள்...:)

@ மஞ்சுபாஷிணி - நன்றிங்க மஞ்சு... இனிய வாழ்த்துக்கள் உங்களுக்கும்...:)

@ kunthavai - என்ஜாய் இண்டியன் தீபாவளி... நாங்களும் ஒரு நாள் வருவோம் இருங்க...:) நன்றிங்க பாட்டி...:)

@ துளசி கோபால் - ரெம்ப சரியா சொன்னீங்க துளசிம்மா...:) உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்...:)

@ Jagannathan - நன்றிங்க... இதில் வருந்த ஒன்றுமில்லை... உங்கள் மனதிற்கு பட்டதை சொன்னது சரி தானே சார்...:) நாங்க ரெம்ப advanced... தீபாவளிக்கு முந்திய சனிக்கிழமையே ஒரு பெரிய கூட்டமா கூடி (கிட்டத்தட்ட 75 பேர்) நல்லா கொண்டாடியாச்சுங்க...:)

@ vinu - தினமும் நடக்குதா...நடத்துங்க நடத்துங்க...;) லவ் ஸ்டோரியா? யாரும் கேட்டா உங்கள அடிக்க வர போறாங்க எஸ்கேப் ஆய்டுங்க வினு...;))) ஆனா, நன்றி கேட்டதுக்கு...:)

@ Thanai thalaivi - ஐயையோ...எங்க போச்சு...நானும் பாத்த மாதிரி தான் ஞாபகம்... ப்ளீஸ் ப்ளீஸ் இன்னொரு வாட்டி போட்டுங்களேன் தலைவி அக்கா...;)))

@ அப்பாதுரை - நன்றிங்க..:)

@ Jagannathan - எனக்கும் அது என்னனு புரியலைங்க... ஏதோ செட்டிங்க்ஸ் மாத்தனும் போல இருக்கு...பாக்கறேங்க... நன்றி...:)

arul said...

romba arumayana kathai.(astrologicalscience.blogspot.com)

அப்பாவி தங்கமணி said...

@ arul - Many thanks...:)

Post a Comment