Thursday, November 10, 2011

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை...
அவள நான் மொதல் மொதலா பாத்தது ஒரு இலையுதிர் காலத்துல... 2009ம் வருஷம்னு நினைக்கிறேன்... எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு... அது ஒரு திங்கக்கிழமை

 
பாத்த மொதல் நாளே என்னமோ ஒரு ஈர்ப்பு... அவ அப்படி ஒண்ணும் அழகில்லனு தோணினாலும் என்னமோ அடிக்கடி பாத்தேன்.. அவள பாக்காம போனா என்னமோ ஏதோ விட்டுப்போன ஒரு உணர்வு வர்ற அளவுக்கு ஒட்டுதல் உருவாச்சு

என்னை சுத்தி இருந்தவங்க அப்பவே எச்சரிச்சாங்க... "வேண்டாம், இது நல்லதுக்கில்ல, அவ சரியில்ல, ஒத்துவராது"னு எவ்வளவோ சொன்னாங்க

ஆனா, யார் பேச்சையும் கேக்கற மனநிலைல நான் அப்ப இருக்கல. "பட்டாதான் உனக்கு புத்தி வரும்"னு நட்புகளும் உறவுகளும் தண்ணி தொளிச்சு விட்டுட்டாங்க

உண்மைய சொல்லணும்னா இவள விட அழகான எத்தனையோ பேரை பாத்த போது கூட தோன்றாத ஒரு உணர்வு இவகிட்ட தோணினதுக்கு என்ன காரணம்னு இப்ப வரைக்கும் எனக்கு புரியல

ஆரம்பத்துல ரெம்ப நல்லவளா இருந்தவ, கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சா. சிரிப்பு விளையாட்டுனு இருந்தது மாறி வேளைக்கு ஒரு சண்டையும் பொழுதுக்கு ஒரு போராட்டமும்னு நிலைமை மாறுச்சு

அப்பவாச்சும் நான் சுதாரிச்சு விலகி இருக்கணும். விதி வேற மாதிரி இருக்கறப்ப எப்படி விடும் சொல்லுங்க?

எல்லாம் சரியா போச்சு, இனி சுபம்னு நினைக்கற நேரத்துல புதுசா ஒரு பிரச்சனை வரும். மறுபடி மறுபடி இதே நிலைமை. இதுக்கு என்ன தான் முடிவுனு மனசு வெறுத்து போச்சு. ஆனாலும் விட முடியல

ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் இல்ல, ரெண்டு வருஷம் இப்படியே போச்சு. கோபம் வராத எனக்கே கோவம் வந்தது, பொறுமையான எனக்கே பொறுமை போனது. பொறுத்தது போதும் பொங்கி எழுனு தோணின மனதை கட்டுப்படுத்தினேன்

ஒரு வழியா முடிவுக்கு வந்தது. அந்த நாள்... போன வெள்ளிக்கிழமை, நவம்பர் நாலாம் தேதி, பறவைகள் எல்லாம் கூட்டில் அடங்கிய நேரம். சூரியன் விடைபெற்று வேறு ஊருக்கு விடியல் தர புறப்பட்ட நேரம்...

மைண்ட்வாய்ஸ் : பில்ட் அப் போதும் விசயத்த சொல்லு

அப்பாவி : அப்பவே பிரகாஷ் படிச்சு படிச்சு சொன்னான் இந்த பொண்ணு கேக்கலியே

மைண்ட்வாய்ஸ் : என்ன சொன்னான்? யாரு பிரகாஷ்? என்ன படிச்சான்? பி.எ'வா இல்ல பி.காம்'ஆ?

அப்பாவி : யாருக்காக இல்லைனாலும் உயிரா இருந்த பிரெண்ட் அவளுக்காக யோசிச்சுருக்கணும்

மைண்ட்வாய்ஸ் : என்ன யோசிக்கணும்?

அப்பாவி : தப்பு மேல தப்பு, சதி மேல சதி, இப்ப எங்க போய் நிக்குது பாருங்க

மைண்ட்வாய்ஸ் : எங்க நிக்குது? தெருமுனைலையா?

அப்பாவி : என்ன தான் சொன்னாலும் அவ பிரகாஷ்'க்காக தானே எல்லாமும் செஞ்சா... அதை நெனச்சா பாவமா தான் இருக்கு

மைண்ட்வாய்ஸ் : என்ன செஞ்சா? சொல்லு நாங்களும் பாவப்படணுமா கோவப்படணுமானு சொல்றோம்

அப்பாவி : மகா மேலயும் தப்பிருக்கு

மைண்ட்வாய்ஸ் : என்ன தப்பு?

அப்பாவி : அந்த தோப்பியாஸ் எவ்ளோ மோசமானவனா இருந்தாலும் ராணிக்காக இவ்ளோ செஞ்சான்...ச்சே... இப்படி கொன்னுட்டாளே ராணி

மைண்ட்வாய்ஸ் : ஏய் அப்பாவி... இங்க என்ன சிவகார்த்திகேயனோட "மாத்தி யோசி" கேம் நடக்குதா? கேக்கற கேள்விக்கு சம்மந்தமில்லாம லூசு மாதிரி ஒளரிட்டு இருக்க

அப்பாவி : என்னை பாத்தா லூசு மாதிரி இருக்கா? (என அப்பாவி முறைக்க)

மைண்ட்வாய்ஸ் : பாத்தா அப்படி தெரில...ஆனா...

அப்பாவி : வேண்டாம் மைண்ட்வாய்ஸ்... நானே டென்ஷன்ல இருக்கேன்

மைண்ட்வைஸ் : ஆரம்பத்துல என்னமோ "அவள நான் மொதல் மொதலா பாத்தது ஒரு இலையுதிர் காலத்துல"னு கவித்துவமா ஆரம்பிச்சத பாத்து ஏதோ கதையோனு வந்தேன்... ஆனா...

அப்பாவி : என்ன புரியலையா?

மைண்ட்வாய்ஸ் : என்னிக்கி நீ புரியற மாதிரி பேசி இருக்க

அப்பாவி : சரி விடு, நேரா விசயத்துக்கு வரேன். வேற ஒண்ணுமில்லை. தெரியாத்தனமா ஒரு சீரியல் பாக்க ஆரம்பிச்சு இப்படி ஆய்ட்டேன்

பொதுவா நான் இந்த சீரியல் எல்லாம் பாக்கவே மாட்டேன், 2009ல எங்க மாமனார் மாமியார் கனடா வந்திருந்தப்ப அவங்களுக்காக விஜய் டிவி கனக்ட் பண்ணி இருந்தோம், அப்ப ஒரு நாள் தெரியாத்தனமா இதை பாத்து சிக்கிட்டேன்

அதுக்கப்புறம் ஏதோ திருட்டுத்தனம் பண்ற மாதிரி ஒளிஞ்சு ஒளிஞ்சு பாத்தேன், காரணம் என்னனா, என்னமோ தெரியல நான் இதை பாத்தாலே எங்க வீட்ல ஒருத்தருக்கு ப்ளட் பிரசர் ஏறிடும். "மக்குராணி ஆரம்பிச்சுருச்சா?"னு மொறைப்பார்

இந்த சீரியல் பேரு "மகராணி", அதை தான் அவர் செல்லமா(!) மக்குராணினு சொல்லுவார்...:)

எனக்கு இதுல வர்ற ஹீரோயன் சுஜிதாவை குழந்தை நட்சத்திரமா "பூவிழி வாசலிலே"ல இருந்தே பிடிக்கும். அதான் ஆர்வமா பாத்தேன். கதை பெருசா ஒண்ணுமில்ல...

அனாதை ஆசிரமத்துல வளர்ற ரெண்டு பொண்ணுங்க, ஒருத்தி மகா ஒருத்தி ராணி. மகா ரெம்ப நல்லவ, பொறுமையில் பூமாதேவி, கலியுக கர்ணி (கர்ணனின் பெண் பால்), எவ்ளோ அடிச்சாலும் தாங்குவா, மொத்தத்துல ரெம்ம்ம்ம்பப நல்லவ, ஒரே வார்த்தைல சொல்லணும்னா என்னை மாதிரி அப்பாவி...

சரி சரி.. நோ டென்சன்... பேச்சு பேச்சாதான் இருக்கணும்...:))

ஆனா இந்த ராணி இருக்காளே சரியான சுயநலவாதி, தனக்கு ஒண்ணு வேணும்னா யாரை வேணாலும் என்ன வேணாலும் செய்வா. அப்படி ஒரு கேரக்டர், இந்த மைண்ட்வாய்ஸ் மாதிரினு வெச்சுக்கோங்களேன்...:) 


மைண்ட்வாய்ஸ் : உண்மையை உலகறியும்

அப்பாவி :  இப்படி இருக்கறப்ப மகாவோட பெத்தவங்க பெரிய பணக்காரங்கனு தெரிஞ்சு, தான் தான் அவங்க பொண்ணுன்னு பொய் சொல்லி அவங்க கூட போய்டுவா ராணி. மிச்ச கதை என்னனு உங்களுக்கே புரிஞ்சுருக்கும்னு நினைக்கிறேன்

ஆமா, இவங்க ரெண்டு பேருக்கு நடுல நடக்கற உரிமை போராட்டம் தான் ரெண்டு வருஷம் ஓடுச்சு. இதுல பெரிய கொடுமை என்னனா மூணு மாசத்துக்கு ஒருக்கா முடியற மாதிரி வரும், டபால்னு ஒரு வில்லன் வருவான், இன்னும் மூணு மாசம் இழுப்பாங்க

அப்புறம் அந்த வில்லன் செத்து போவான், அவன யார் கொன்னாங்கன்னு ஒரு மூணு மாசம் விசாரணை, அப்புறம் ஒரு வழியா யாருன்னு கண்டுபுடிச்சதும் அந்த குற்றவாளி தலைமறைவு. அப்புறம் அவங்கள கண்டுபிடிக்க இன்னொரு மூணு மாசம். நிஜத்துல கூட கண்டுபிடிக்க இவ்ளோ நாள் ஆகுமான்னு தெரில

அப்புறம் இன்னொரு ஆளை யாரோ கொலை செய்ய, அப்புறம் விசாரணை, அதுக்கு பழிவாங்கல்னு சிந்துபாத் ரேஞ்சுக்கு இழுத்துட்டு போச்சு. இப்படியே ஒரு ஒருத்தரா கொன்னு, கடைசீல பாத்தா சீரியல் ஆரம்பிச்சப்ப இருந்த பாதி கேரக்டர்ஸ் கடைசீல உசுரோட இல்ல

ஆனா ஒரு விஷயம் சொல்லியே ஆகணும், இதுல "ராணி"னு அந்த வில்லி கேரக்டர் பண்ணின பொண்ணுக்கு பெரிய எதிர்காலம் இருக்கு. நிஜமா ரெம்ப நல்லா நடிச்சது. பொதுவா நெகடிவ் கேரக்டர்ஸ் மனசுல பதியாது. பட் ஷி இஸ் குட்

இதுல அடிக்கடி வந்து எனக்கே மனப்பாடம் ஆன டயலாக் "இந்த விஷயம் மகாவுக்கு இப்ப தெரியக் கூடாது... ஏன்னா..." அப்படின்னு பயங்கர பில்ட் அப் குடுத்துட்டு "தொடரும்.." போட்டுடுவான்

ஒரு நாள் பக்கத்துல உக்காந்து பேப்பர் படிச்சுட்டு இருந்த ரங்க்ஸ் கடுப்பாகி "மிச்ச டைலாக் நான் சொல்றேன். இந்த விஷயம் மகாவுக்கு இப்ப தெரியக்கூடாது.... ஏன்னா, தெரிஞ்சா இன்னைக்கே சீரியல் முடிஞ்சு போயிரும்... அப்புறம் இன்னும் ரெண்டு வருஷம் எப்படி உயிர வாங்கறது. இதுக்கு உன் ஜில்லு கதையே பெட்டர்"னு பல்பு கொடுத்துட்டு போய்ட்டார்

என்னமோ போங்க... ஊர்ல பத்து பதினஞ்சு சீரியல் பாக்கரவன்லாம் சந்தோசமா இருக்கான், இந்த ஒரு சீரியல் பாத்துட்டு நான் பட்ட பாடு இருக்கே... அய்யயயயயயயோ...:))))

மோரல் ஆப் தி ஸ்டோரி:
தயவு செஞ்சு யாரும் சீரியல் பாக்காதீங்க. அப்படி பாக்கறதா இருந்தாலும் வீட்ல யாரும் இல்லாத நேரம் பாருங்க, அட்லீஸ்ட் பலப் வாங்காமயாச்சும் தப்பிக்கலாம்...

மேல இருக்கற அந்த படத்துக்கும் நீ எழுதினதுக்கும் என்ன சம்மந்தம் அம்மணினு நீங்க கேக்கலாம். சொல்றேன், ஒரு சம்மந்தமும் இல்ல, சும்மானாச்சிக்கு பில்ட் அப் பண்ணி உங்கள கன்பியூஸ் பண்றதுக்கு போட்டது... :)))

மைண்ட்வாய்ஸ் : மத்ததெல்லாம் கூட நான் ஜெலுசில் போட்டு ஜீரணிச்சுகுவேன், ஆனா கடைசீல சொன்னியே ஒண்ணு.... கன்பியூஸ் பண்றதுக்கு படம் போட்டேன்னு.....என்னா ஒரு வில்லத்தனம்... அவ்வ்வ்வவ்... அந்த சீரியல் டைரக்டர் இதை படிச்சாரு, அடுத்த சீரியல்ல உனக்கு வில்லி கேரக்டர் நிச்சியம்


51 பேரு சொல்லி இருக்காக:

இராஜராஜேஸ்வரி said...

அப்புறம் இன்னும் ரெண்டு வருஷம் எப்படி உயிர வாங்கறது. இதுக்கு உன் ஜில்லு கதையே பெட்டர்"னு பல்பு கொடுத்துட்டு போய்ட்டார்


பல்பு வாழ்க..சேம் பல்ப்..

நாம பார்க்கற் சீரியலுக்கெல்லாம் சீரியல் பல்பு கொடுக்கிறதே ரங்க்ஸ்களுக்கு வேலையாய்ப் போச்சுப்பா!

divyadharsan said...

hahaha..lol...sema mokkai appavi..but interesting ..nanum mindvoice marri yetho lov storynu yeamanthuteyn..

antha serial add poata kooda yenku pressure yegirudum..neenga ukaarnthu vilavariya athuvum thiruttu thanama parthurukeenga...hayyo hayyo..

yaru petho pillayo..paavam nalla ??? kathaiyelam
yezhuthiruntha ponnu epdi serial paarthu daarayiducheyy:(( awwwwwwww:0

hehe aana nijamvey nanga rmbheee paavam..confuse panrathukaaga padam poteynu sonnenga parthengala...angathan neenga nikurenga appavi..

unagala yaaralyum adichikja mudiyathu..chancey ela..yena oru planning yena oru planning.neenga matum arasiyalukku vanthaa...nenaikavey mudila..(avlo payangarama eruku)yelarum appeetu!!

anyway...yetho neenga adikadi epdi mokkka potalum yepovo oru nala kathaiya solreenga garathaala ungala chumma vidreyn!!

but very nice as alwyzzz..appavi vaazhga:)) varataa!!

(Mis)Chief Editor said...

வாழ்க வளமுடன், மக்குராணி..ஸாரி..மகாராணி...!
வேறென்னத்தை சொல்லுறது...??!

-பருப்பு ஆசிரியன்

asiya omar said...

நல்லவேளை நான் அந்த சீரியல் பார்க்கலை,இந்த மொக்கைராணிக்கு அந்த மகாராணியே தேவலாம்னு மைண்ட்வாய்ஸ் சொன்னதாக தகவல்..

மகி said...

/அவள நான் மொதல் மொதலா பாத்தது ஒரு இலையுதிர் காலத்துல... 2009ம் வருஷம்னு நினைக்கிறேன்... எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு...அது ஒரு திங்கக்கிழமை/ இதயப் படிச்சதுமே எனக்கு மண்டைக்குள்ளாற "கிண்கிண்...டாண்,டாண்..டிங்டிங்!" இப்படில்லாம் மணி அடிச்சது, அப்பாவி ஏதோ வில்லத்தனம் பண்ணறதா தெரிஞ்சுபோச். அதனாலா எச்சரிக்கையாத்தேன் மிச்சத்தப்படிச்சேன். :))))))))

ஹும்,மகாராணியாவது,மக்குராணியாவது..எனக்கு இது எதுமே தெரியாது,தப்பிச்சேன் சாமீ!

moosa shahib said...

ஃபேஷன் நகைகள் செய்ய தேவையான பொருட்களை எங்களுக்கு ஒரு போன் கால் மூலமாகவோ அல்லது ஒரு மெயில் மூலமாகவோ தொடர்புக்கொண்டால் உங்கள் வீடு தேடி பொருட்களை அனுப்பி வைக்கிறோம்..
பொருட்கள் தேவைக்கு தொடர்புக்கொள்ளவும்:
moosa shahib
e.mail : moosafs69@gmail.com
contact no: 0476 - 3293737 Mobile no : 09387044070
NEW JANATHA FANCY JEWELLERY
B.R.Complex, K.S.R.T.C.Bus Stand,
Thevarkaavu Road
karunagappally - 690518

Egos Eno said...

Watch Sourashtra First Movie egos eno Trailer
Thank You
http://www.youtube.com/watch?v=x60jdgLve70

ஹேமா said...

எனக்கு ஒண்ணுமே புரில தங்கமணி.ஏதாச்சும் சீரியசா சீரியலைப் பத்திச் சொன்னீங்களா !

சுசி said...

நான் பார்த்த ஒரே சீரியல் அண்ணாமலை. அதுக்கப்புறம் அந்த அளவுக்கு எந்த சீரியலும் எனக்கு பிடிக்காததால பாக்கிறதே இல்லை :)

தெய்வசுகந்தி said...

நல்லவேளை நான் சீரியல் எல்லாம் பாக்கறது இல்லை!

ஸ்ரீராம். said...

பயங்கர ட்விஸ்ட். நான் கூட வழக்கம் போல கண் கலங்கினாள், முகம் சிவந்தாள், தோளில் முகம் புதைத்தாள்னு 'ஃபீலிங்க்ஸ் ஆஃப் இந்தியா' வோட கதை வரும்னு படிக்க ஆரம்பிச்சேன்! நல்ல வேளை சீரியல் பார்ப்பதால் பார்த்ததும் அதை வைத்து சீரியலாய்ப் பதிவுகள் வரும்னு சொல்லலை! "இதுக்கு உன் ஜில்லு கதையே பெட்டர்", "ஊர்ல பத்துப் பதினஞ்சி சீரியல் பார்க்கறவன்லாம்.." - ஹா...ஹா...ஹா..

விச்சு said...

உங்க மைண்ட்வாய்ஸ் செம கலக்கல்.

Porkodi (பொற்கொடி) said...

paakardhu dabba serialnalum, englipis paaraatu uraiku onnum korachal illai! ("but she was good") :D

தங்கம்பழனி said...

ஆரம்பத்தில் வர்ணயைப் பார்த்துட்டு நான் கூட நல்ல கதையை ஆரம்பிச்சுட்டாங்கன்னு நெனைச்சேன்..! இனி உங்கள அப்பாவின்னு நான் எப்படி சொல்லுவேன்.. அடப்பாவி..!!

தங்கம்பழனி said...

எனது வலையில் இன்று:

உங்கள் செயல்களை யுக்தியுடன் செய்யுங்கள்

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

வெங்கட் நாகராஜ் said...

நமக்கும் சீரியலுக்கும் ரொம்ப தூரம்..... :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//உண்மைய சொல்லணும்னா இவள விட அழகான எத்தனையோ பேரை பாத்த போது கூட தோன்றாத ஒரு உணர்வு இவகிட்ட தோணினதுக்கு என்ன காரணம்னு இப்ப வரைக்கும் எனக்கு புரியல//

என்று சொல்லி என்னை மேலும் படிக்கத் தூண்டிவிட்டீர்கள்.

நல்ல அருமையான அழகானதொரு பதிவு. எவ்வளவு யோசித்து நகைச்சுவையாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு வந்து முடித்துள்ளீர்கள் ! ஒரு முழு நீள சீரியல் பார்த்தது போன்ற மகிழ்ச்சி எனக்கு ஏற்பட்டது.

பாராட்டுக்கள்.
==========================================

இந்த வார தமிழ்மண நட்சத்திரப்பதிவரான நான் தினமும் காலை 11 மணிக்கு ஒரு புதிய பதிவும் பிற்பகல் 2 மணி, 4 மணி, மாலை 6 மணிக்கு ஒரு சில மீள் பதிவுகளும் கொடுத்து வருகிறேன்.

இது வரை கடந்த நாலு நாட்களாக நான் வெளியிட்ட புதிய வெளியீடுகளுக்கான லிங்க் கீழே கொடுத்துள்ளேன்.

நேரம் இருக்கும்போது ஏதாவது ஒருசிலவற்றைப் படித்து விட்டு, கருத்துக்கூறுங்கள். அன்புடன் vgk

http://gopu1949.blogspot.com/2011/11/blog-post.html ஜாங்கிரி

http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_7307.html முனியம்மா

http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_798.html எல்லோருக்கும் பெய்யும் மழை

http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_874.html பிரார்த்தனை

Thanai thalaivi said...

அப்பாடி ! மனசு இப்பதான் நிம்மதியாச்சு ! appavi is back in her form ! இத்தனை நாள் நீங்கள் ஏதோ வருத்தத்தில் இருந்தது போலிருந்தது.

Thanai thalaivi said...

நான் பார்த்த ஒரே ஒரு சீரியல் "மெட்டி ஒலி" தான். அது அந்த டைரக்டரோட மாஸ்டர் பீஸ் அதுக்கப்புறம் அவராலேயே அந்த அளவுக்கு ஒரு நல்ல மக்களை ஈர்க்கக்கூடிய ஒரு சீரியலையோ திரை படத்தையோ தரமுடியவில்லை. நான் ஒரு "மெட்டி ஒலி" பேன். எத்தனை வாட்டி திரும்ப போட்டாலும் பார்ப்பேன்.

arul said...

mega serials are time waste and easily bring up high blood pressure (www.astrologicalscience.blogspot.com)

சே.குமார் said...

முதல்ல நல்ல சிறுகதையை அக்கா எழுதியிருக்காங்கன்னு பார்த்தேன்...
அப்புறம் மைண்ட் வாய்ஸ் வந்ததும் இது தொடர்கதைக்கான முன்னுரையின்னு நினைச்சேன்...
அதுக்கப்புறம் சீரியல்லுன்னு சொல்லி மாமா உங்களுக்கு கொடுத்த பல்பை எங்களுக்கு கொடுத்துட்ட்டிங்களே....
சீரியல்கள் நேரம் விழுங்கி... ஹி...ஹி... நானும் நாதஸ்வரத்துல விழுந்துட்டேன்ல... ஆபீஸ்ல இருந்து வர லேட்டான டவுன்லோட் பண்ணி பாக்கச் சொல்லுது...
சரி...
நல்லாத்தான் எழுதியிருக்கீங்க.... டீட்டெயிலா...

Lakshmi said...

நல்லவேளை நான் சீரியல் எல்லாம் பாக்கறது இல்லை


தப்பிச்சேன்

அமைதிச்சாரல் said...

ஆஹா.. சீரியல்ங்கற சுழல்ல சிக்கிக்கிட்டீங்களே ஆத்தாஆஆ.. :-))))))

இதுக்குத்தான் நான் எந்தச் சீரியலும் பார்க்கறதே இல்லை.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//தயவு செஞ்சு யாரும் சீரியல் பாக்காதீங்க. அப்படி பாக்கறதா இருந்தாலும் வீட்ல யாரும் இல்லாத நேரம் பாருங்க, அட்லீஸ்ட் பலப் வாங்காமயாச்சும் தப்பிக்கலாம்...
//
100 % உண்மை

"என் ராஜபாட்டை"- ராஜா said...

உங்களுக்காக இன்று

உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்

Kriishvp said...

உங்க ஸ்டைல்ல சொன்னா "ஊர்ல பத்து பதினஞ்சு இடுகையை பாக்கரவன்லாம் சந்தோசமா இருக்கான், இந்த ஒரே ஒரு இடுகையை பாத்துட்டு நான் பட்ட பாடு இருக்கே... அய்யயயயயயயோ...:)))) "

A.T.Mayuran said...

நன்றாக உள்ளது.

raji said...

புவனு! இதுக்கு நீ எனக்கு இட்லியே குடுத்துருக்கலாம்.
நீ சீரியல் சுழல்ல சிக்கினதில்லாமா எங்களை வேற இப்டி பழி வாங்கிட்டியே தங்கச்சி!:((

தி. ரா. ச.(T.R.C.) said...

புவனு! இதுக்கு நீ எனக்கு இட்லியே குடுத்துருக்கலாம்.
நீ சீரியல் சுழல்ல சிக்கினதில்லாமா எங்களை வேற இப்டி பழி வாங்கிட்டியே தங்கச்சி!:((


ரொம்ப சரியாச் சொன்னீங்க

Anonymous said...

unga blog padikka interest a iruku. but mind voice romba add panringa. thats frustating. ungala neengale mattam thatikurathu enna santhosam vara poguthu. unga skills a azhaga eduthu vainga. thavara irundha mannikavum. pala per itha sola ma irundhu irupanga. tc

அப்பாவி தங்கமணி said...

@ இராஜராஜேஸ்வரி - ஹா ஹா ஹா... தேங்க்ஸ்'ம்மா... நான் பாத்த ஒரே சீரியல் இதானுங்க...அதுக்கே இப்படி ஒரு பல்பு...:)

@ divyadharsan - நீயும் ஏமாந்தியா திவ்யா.. அப்ப மிஷன் accomplished ஹா ஹா ஹா...:) எனக்கும் சீரியல்ஸ் அவ்ளோ விருப்பம் இல்ல... தெரியாத்தனமா பாத்து சிக்கிட்டேன்... இதான் முதலும் கடைசியும்னு நினைக்கிறேன்...;) சான்ஸ் கிடைச்சதுன்னு நல்லா கலாய்கிறயா... இரு இரு உன் குட்டிபொண்ணுகிட்ட சொல்லி வீட்ல கார்பெட் பூரா காலி பண்றேன்..:) ஹா ஹா... தேங்க்ஸ் திவ்யா..:)

@ (Mis)Chief Editor - இதை மகாராணிகிட்ட சொல்லிடறேன்... நன்றி...:)

@ asiya omar - அவ்வ்வ்வ்... யு டூ ஆசியா?... நானும் தெரியாத்தனமா பாத்து மாட்டிட்டேன்..:)

@ மகி - பாம்பின் கால் பாம்பறியும்...அதான் நீ மொதலே கண்டுபிடிச்சுட்டே மகி...:))) உனக்கு மக்குராணி தெரியாதா? எனக்கு ஒரு மக்குராணிய தெரியுமே.. அவங்க பேரு கூட கிட்டத்தட்ட இதே தான்... யாருன்னு, தனியா சொல்றேன் அம்மணி...:))))))

@ moosa shahib - ஆஹா... நான் எப்பவோ ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி பேஷன் நகைகள் செஞ்சு பழக விருப்பமா இருக்கு... யாருக்காச்சும் அதை பத்தி தெரிஞ்சா சொல்லுங்கன்னு Buzzல கேட்டிருந்தேன்... அதை பாத்துட்டு சொல்லி இருக்கீங்களோ... நன்றிங்க

@ Egos Eno - ஏங்க, நான் என்னங்க தப்பு செஞ்சேன்... இப்படி ஒரு லிங்கு குடுத்து இருக்கீங்க... அவ்வ்வ்வவ்... டைட்டில் கார்டு தமிழ்ல வருது... போதாகுறைக்கு கரகாட்டகாரன் மியூசிக் எல்லாம் பின்னணில வருது... ஆனா பேசற பாஷை மட்டும், தமிழ் தெலுகு கன்னடம் மலையாளம் ஹிந்தி இங்கிலீஷ் எல்லாத்தையும் சரி விகிதத்தில் கலந்து கட்டி வருதே... அவ்வ்வ்வவ்... ஸ்கூல் படிக்கறப்ப எங்க ஊர்ல இருந்த ஒரு சௌராஷ்டிராகாரர்கிட்ட சயின்ஸ் tuition போய் இருக்கேன்.... அப்படி ஒரு பாஷை இருக்கரதே அப்ப தான் தெரியும்... ஆனா என் ப்ளாக் மேல சத்தியமா ஒரு வார்த்தை கூட எனக்கு அதுல தெரியாது... மீ எஸ்கேப்...;)))

@ ஹேமா - அதே தானுங்க... தெரியாத்தனமா ஒரு சீரியல் பாத்து சிக்கின கதை தாங்க...:)

@ சுசி - நான் கொழந்தையா இருக்கறச்சே எங்கம்மா அந்த சீரியல் தான் பாப்பாங்க சுசி.....:) சரி சரி நோ டென்ஷன்... கொஞ்சம் பெரிய பொண்ணா இருக்கும் போதுனு மாத்திடறேன்...:)

@ தெய்வசுகந்தி - நானும் இப்படிதாங்க சொல்லிட்டு இருந்தேன்... எப்படியோ சிக்கிட்டேன்... இனி அந்த பக்கமே போக மாட்டேன்...:)

அப்பாவி தங்கமணி said...

@ ஸ்ரீராம். - ஹா ஹா ஹா... நீங்களும் ஏமாந்தீங்களா... சந்தோஷம்... :)) நன்றிங்க...:)

@ விச்சு - ஆஹா... அப்ப பாராட்டு எனக்கில்லையா... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்... நன்றிங்க...:)

@ Porkodi (பொற்கொடி) - ஹி ஹி ஹி... எல்லாம் சேர்க்கை அப்படி அம்மணி...:)))

@ தங்கம்பழனி - இனியும் நீங்க என்னை அப்பாவினு தான் சொல்லணும்...அடப்பாவியா இருந்தா இப்படி சீரியல்ல சிக்குவேனா...:) நன்றிங்க... உங்கள் பதிவுகள் நல்லா இருக்குங்க...

@ வெங்கட் நாகராஜ் - இனிமே நானும் இதே டயலாக் தான் சொல்ல போறனுங்க...;)

@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்..:) தினம் நாலு பதிவா... வாவ்... கிரேட்... ரெம்ப நல்லா இருக்குங்க கதைகள் எல்லாமும்...:)

@ Thanai thalaivi - வருத்தத்தில் இருந்ததும் ஒரு வகையில் நிஜம் தாங்க... உங்கள் வரவேற்ப்புக்கு ரெம்ப நன்றிங்க அக்கா...:) நீங்களும் சிக்கி இருக்கீங்க போல சீரியல் சுனாமில... அந்த "மெட்டி ஒலி" பல வருஷம் ஓடுச்சுனு யாரோ சொன்ன நினைவு...:) ஹா ஹா

@ arul - ரெம்ப சரி.... அதுக்கு standing sitting walking எல்லா உதாரணமும் நானே... இனி அந்த தப்பை செய்யறதில்லைனு பிரமாணம் செய்திருக்கேன்...:)

@ சே.குமார் - ஹா ஹா ஹா... இவ்ளோ யோசனை வர்ற அளவுக்கு இருந்ததுங்களா... சூப்பர்... பின்ன பல்பு எல்லாம் நானே வெச்சுட்டா எடம் இருக்குமா சொல்லுங்க...அதான் இந்த பக்கம் வாங்கி அந்த பக்கம் குடுத்துடுறது...:) நாதஸ்வரமா...அதுவும் டவுன்லோட் பண்ணி...ஐயோ பாவம்... சரி நல்லா சீரியல் பாத்து கஷ்டப்பட வாழ்த்துக்கள் குமார்...:)
நன்றிங்க...சுருக்கி எழுதறது தான் எனக்கு பனிஷ்மென்ட் மாதிரி... detail எல்லாம் பீஸ் ஆப் கேக்...படிக்கறவங்களுக்கு தான் பீஸ் ஆப் பாய்சன்னு நீங்க சொல்றது கேக்குது...:))

@ Lakshmi - நானும் இனி பாக்கறதில்லைனு முடிவு பண்ணிட்டேன் லக்ஷ்மி'ம்மா... ஒண்ணு பாத்தே இந்த பாடு...:)

அப்பாவி தங்கமணி said...

@ அமைதிச்சாரல் - நானும் இனி நோ சீரியல் அக்கோய்...சீரியல் பல்பு பாத்தா கூட வேற பக்கம் திரும்பிக்குவேன்...:)

@ "என் ராஜபாட்டை"- ராஜா - ஹா ஹா ஹா... நீங்களும் பாதிக்கப்பட்டு இருக்கீங்க போல இருக்கே...;) நன்றிங்க

@ Kriishvp - ஆஹா...எனக்கே ரிபீட்ஆ? அவ்வ்வவ்வ்வ்... ஹா ஹா ஹா... சூப்பர்...:)

@ A.T.Mayuran - நன்றிங்க...:)

@ raji - யு டூ ராஜிக்கா...அவ்வ்வ்வவ்.... அக்கா என்னங்க தங்கச்சி என்னங்க சீரியல் பார்க்கும் உலகத்திலே... :)) உங்களுக்கு பார்சல் கண்டிப்பா வரும் இருங்க...:)

@ தி. ரா. ச.(T.R.C.) - அவ்வ்வ்வவ்

@ பெயரில்லா - மனசுல பட்டதை சொன்னதுக்கு நன்றிங்க... அது பிளான் பண்ணி எல்லாம் மைண்ட்வாய்ஸ் திணிக்கரதில்லைங்க... எழுதும் போது படிக்கறவங்க ரியாக்சன் இப்படி இருக்கும்னு தோணும் இடத்தில் சும்மா மைண்ட்வாய்ஸ் யூஸ் பண்ணுவேன், அவ்ளோ தான்... சில சமயம் அது கொஞ்சம் irritating நிலைக்கு போய்டுதுனு நீங்க சொன்னப்புறம், படிக்கறவங்க பாய்ன்ட் ஆப் வியூல இருந்து பாத்தா இப்ப புரியுது... இனி அதை மனதில் வைத்து எழுதுகிறேன்... மிக்க நன்றி மீண்டும், honestஆ கருத்தை சொன்னதுக்கு...:)

Pooja said...

I accept that பெயரில்லா சொன்னது… comment. Your mind voice is irritating. Your way of writing is so good. Read your article as a third person before you post. Hope you will understand what i'm trying to say.

அப்பாவி தங்கமணி said...

@ Pooja - Thanks Pooja, will make a note of it for upcoming posts... and that reading as 3rd person is a nice suggestion... will try that... thanks...:)

Gayathri said...

aaaha akka rombha naal apram blog pakkam vandhen super serial padhivu...sari enna thaan aachu mokkarani...sorry maga (mokka) raani

middleclassmadhavi said...

நான் இந்த சீரியலை அப்பப்போ பார்த்திருக்கேன்; நான் இதை டோபியாஸ் சீரியல்னு தான் சொல்வேன்!! வில்லியாக நடித்தவரின் நடிப்பு நன்றாக இருக்கும்! இறுதி ஒரு மாதமே பார்த்தாலும் கதையெல்லாம்(??) புரிந்தது!! வாழ்க சீரியல்கள்!!
(தற்சமயம் பார்க்கும் ஒரே சீரியல் ஜான்சி ராணி)

தக்குடு said...

மறுபடியும் ஒரு 'ஜில்'லோனு பயந்தே போயிட்டேன். ஆத்த்த்தாடி பீதியை என்னமா கிளப்பராங்கப்பா!! :)) உங்க வீட்டுக்காரர் சொன்னது எல்லாத்தையும் ரொம்ப ரசிச்சேன். இவ்ளோ களேபரத்துக்கு நடுல ரெண்டு பேர் ஒரு 'விளம்ம்ம்பரம்'னு போஸ்டர் ஒட்டி இருக்காளே அது தான் செம காமெடி! :)

parvathapriya said...

புவனி !
பதிவு நல்லா இருந்தது( அட !நெஜமா தான் :)) )
இன்னும் இன்னும் உன்கிட்டே இருந்து எதிர்பார்கிறோம் :))
சரி .,உன்ற ஜில்லு கதையை சீரியலா எடுக்க போறதா பேசிக்கிறது உண்மையா !

புவனேஸ்வரி ராமநாதன் said...

அன்புள்ள புவனா அவர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களாக பதிவுலகம் பக்கம் வர முடியவில்லை. அதனாலேயே தாங்கள் என்னை வலைச்சரத்தில்
செய்வித்த அறிமுகத்திற்கு நன்றி சொல்ல இயலவில்லை. மன்னிக்கவும்.

மிக்க நன்றி. வணக்கம். நட்புடன் புவனா

அப்பாவி தங்கமணி said...

@ Gayathri - ஹா ஹா... கடைசீல என்ன ஆகும் காயத்ரி, எப்பவும் போல வில்லி க்ளோஸ் / ஹீரோவும் ஹீரோயினும் சேந்துட்டாங்க...இந்த ஒரு வரிய வெச்சுட்டு எப்படி தான் ரெண்டு வருஷம் இழுத்தாங்களோ... நான் அந்த கதை எழுதினவர்கிட்ட டியூசன் போலாம்னு இருக்கேன்... :)

@ middleclassmadhavi - ஹா ஹா... எங்க வீட்ல அவரும் அதான் சொல்லுவார் "வாரத்துல ஒரு நாள் பாத்தாலும் புரியும், ஏன் ஒரு எபிசொட் விடாம பாக்கறே"னு. ஜான்சி ராணியா? ஐயோ நான் எஸ்கேப்...:)

@ தக்குடு - இப்படி எல்லாம் சொன்னா மறுபடி ஒரு ஜில்லு ஆரம்பிச்சுடுவேன் சொல்லிட்டேன்...:) விளம்பரம் எப்பவும் நடக்கறது தானே தக்குடு... ஏதோ நம்மளால ரெண்டு பேரு நாலு கமெண்ட் வாங்கினா சரி தான்...:))

@ parvathapriya - ஹாய் ப்ரியாக்கா, வெல்கம் வெல்கம்... தங்கள் இன்கம் நல்இன்கம் ஆகுக..:) நெறைய எதிர் பாக்கறீங்களா? ஐயோ இன்னுமா இந்த உலகம் என்னை நம்புது..:) ஜில்லு கதை சீரியலாவா? நான் சினிமாவா எடுக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன், நீங்க என்ன இப்படி "சின்ன"தா சொல்லிட்டீங்க...:)

@ புவனேஸ்வரி ராமநாதன் - நோ ப்ராப்ளம்... நன்றிங்க...:)

அன்னு said...

theriyaathanamaa vazi maatri vanthutten appaavi... inime inga varave koodathunnu naane enakku condition pottukaren..... ithukku pesaama T.Rajendar-in 'thinam oru kural' aavathu keetirukkalaam pola. :((

அன்னு said...

//௧௬ நவம்பர், ௨௦௧௧ ௧௧:௦௩ முற்பகல்//

en ippadiyellaam?????

sssssssssssss...............mudiyala!!!

அப்பாவி தங்கமணி said...

@ அன்னு - வழி மாறி வந்தாலும் வலியவே வந்தாலும் வந்தது வந்தது தானுங்க அம்மணி...:) என்னை பாத்து... என்னை பாத்து...டி.ஆர். னு எப்படி எப்படி சொல்லலாம் அன்னு.... இதை கேட்டா டி.ஆர் இவ்ளோ பீல் பண்ணுவாருனு நீங்க யோசிச்சு பாத்தீங்களா...:))) அந்த date formatting உசுர வாங்குது அம்மணி, நானும் தலையால தண்ணி குடிக்காத கொறை தான்.. ஒண்ணும் பண்ண முடியல...:)))

Jagannathan said...

நல்லவேளை, தொடரும் என்று போடாமல் விட்டிர்களே! நீங்கள் மெகா சீரியல் பார்த்து நொந்ததற்கு நாங்கள் என்ன பாவம் செய்தோம்! இப்படிக்கூட உங்களால் மொக்கை போட முடியுமா?! - ஜெ.

கோவை2தில்லி said...

சீரியல்லாமே இப்படித் தான்!!!!!! இழு இழுன்னு இழுப்பாங்க.

கதையோன்னு வந்தா இப்படி பண்ணீட்டீங்களே!!!!

வெட்டிப்பையன்...! said...

//கலியுக கர்ணி (கர்ணனின் பெண் பால்),//
அப்பாவி தங்கமணி டச் ...!

அப்பாவி தங்கமணி said...

@ Jagannathan - ஹா ஹா ஹா.. .அவ்ளோ பயமா சார்...;) தெரியாத்தமா ஒரு சீரியல் பாத்து மாட்டிட்டேன்... இனிமே இந்த தப்பை செய்யறதில்ல நன்றிங்க....:))

@ கோவை2தில்லி - ஹா ஹா...இதுவும் கதை தான் ஆதி... நான் நொந்த கதை...நன்றி... ;)

@ வெட்டிப்பையன்...! - ஹா ஹா... நன்றிங்க ...:)

vinu said...

49

vinu said...

50

அப்பாவி தங்கமணி said...

@ Vinu - again only numbers? ha ha...:)

Post a Comment