Friday, November 18, 2011

ரங்கமணிக்கு வந்த சோதனை... (தங்கமணி ரங்கமணி சீரிஸ்..:)))
"என்னங்க?"

"சொல்லு..." என்றார் ரங்கமணி டிவியில் இருந்து கண்ணை எடுக்காமலே

தான் பேசுவதை அவர் காதில் வாங்கவில்லை என்பதை உணர்ந்த நம்ம புத்திசாலி தங்கமணி ரிமோட் எடுத்து டிவிய ஆப் பண்ணினாங்க

"ஐயோ... ஏய் ஏய்... ரிமோட் குடு தங்கம்... " என பதறினார் ரங்கமணி

"வீட்டுல இருக்கிற கொஞ்ச நேரமும் இந்த டிவிய கட்டிட்டு அழறதே வேலையா போச்சு... நான் சொல்றத காது குடுத்து கேளுங்க அப்புறம் தர்றேன்..."

"காது மூக்கு எல்லாம் குடுக்கறேன்... மொதல்ல ரிமோட் குடு"

"நான் சொல்றதுக்கு ஒரு நிமிஷம் தான் ஆகும்... அப்புறம் நீங்க தாராளமா பாருங்க... எங்க..." என தங்கமணி ஏதோ சொல்ல வர அதற்குள் இடைமறித்த ரங்கமணி

"தங்கம் டென்ஷன் பண்ணாதம்மா... இந்த நடிகை பேட்டி முதல் வாட்டி போட்டப்பவே மிஸ் பண்ணிட்டேன்னு பீல் பண்ணிட்டு இருந்தேன்... கடவுளா பாத்து அந்த சேனல்காரனுக்கு தோண வெச்சு மறுபடி போட்டுருக்கான்... ரிமோட் குடு" என ரங்கமணி பதட்டப்பட தங்கமணி பூலான்தேவி மாதிரி முறைச்சாங்க

(பூலான்தேவி மொறைச்சு நீ எப்ப பாத்தேன்னு யாராச்சும் கேட்டீங்கன்னா உங்கள சாம்பல் பள்ளதாக்குக்கு அனுப்பிடுவேன்...:)))))

இதுக்கு மேல பேசினா வம்பாய்டும்னு ரங்கமணி "சரி சொல்லு... என்ன விசயம்?" னார்

"எங்க சித்தப்பா பொண்ணு சுசிலா இருக்கால்ல.."

"ம்... இருக்கா இருக்கா... அவளுக்கென்ன இப்போ..." என்றார் ரிமோட்டை ஒரு பார்வை பார்த்து கொண்டே

"அவ வீட்டுகாரருக்கு கால்ல அடிபட்டு ஆஸ்பத்திரில இருக்காராம்... எங்கம்மா போன் பண்ணினாங்க... போய் பாத்துட்டு வந்துடலாம்"

"இப்பவா...?" என பயந்து போய் கேட்டார், அவருக்கு அந்த நடிகை பேட்டி மிஸ் ஆய்டுமேனு கவலை

"இல்ல... இப்ப நேரமாய்டுச்சு... நாளைக்கி ஒரு ஒன் ஹவர் பர்மிசன் போட்டுட்டு வாங்க... போயிட்டு வந்துடலாம்"

"நாளைக்கி போறதுக்கு இப்பவே என்ன... மொதல்ல ரிமோட் குடு" என டென்ஷன் ஆனார் ரங்க்ஸ்

"நேரத்துல வரீங்க தானே, அதை சொல்லுங்க மொதல்ல"

"சரி வரேம்மா... ரிமோட் குடு" என்றார் பொறுமை இழந்தவராய்

"ச்சே... '16 வயதினிலே கமல் ஆத்தா வெயும் காசு குடு' டயலாக் மாதிரி ரிமோட் குடு ரிமோட் குடுனு.... சகிக்கல" என்றவாறே ரிமோட்டை குடுத்தார் தங்கமணி

தங்கமணி சொல்வது ரங்கமணி காதில் விழுந்தால் தானே சண்டை எல்லாம்... ரிமோட் கையில் கிடைத்ததும் டிவியில் மூழ்கினார்

*************************

ஒருவழியா நடிகை பேட்டி முடிஞ்சு ரங்கமணி சுயநினைவுக்கு வந்தார்

அதுக்கே காத்திருந்த மாதிரி தங்கமணி அவர் பக்கத்துல போய் உக்காந்தாங்க

"ஏங்க....?" என தங்கமணி அன்பாய் ஒரு பார்வை பார்க்க

"என்ன தங்கம்?" என ரங்கமணி திகிலாய் விழித்தார்

"அது... உங்களுக்கு ஒரு சவால் தர போறேன்..." என தங்கமணி சிரித்து கொண்டே கூற

"அதான் உங்கப்பா நாலு வருஷம் முன்னாடியே குடுத்துட்டாரே... கன்னிகாதானமா" என ரங்கமணி முணுமுணுக்க, தங்கமணி முறைப்பதை பார்த்ததும்

ரங்கமணி சமாளிப்பாக "அது.... உன்னை போல ஒரு புத்திசாலிய சமாளிக்க வேண்டிய பொறுப்பை குடுத்துட்டாறேனு சொல்ல வந்தேன்... " என்றார்

"சரி... என்னை நல்லா பாருங்க..." என தங்கமணி அன்போடு கூற

"ஐயயோ... என்னாச்சு தங்கம்..." என ரங்கமணி பதற

"என் முகத்துல ஒரு மாற்றம் இருக்கு, என்னனு கண்டுபிடிங்க பாக்கலாம்..." என சவால் பார்வை பார்த்தார் தங்கமணி

"அடக்கடவுளே... தங்கம்... வேண்டாம் இந்த சோதனை... இதுக்கு பதிலா நீ டிவில பாத்து புதுசா எதாச்சும் சமைப்பியே...அது வேணும்னாலும் செஞ்சு குடு... சத்தமில்லாம சாப்பிடறேன்..." என ரங்கமணி டெர்ரர் ஆனார்

"இங்க பாருங்க... நீங்க சொல்லித்தான் ஆகணும்... அது பெரிய மாற்றம் ஈஸியா கண்டுபிடிக்கலாம்..." என்றார் தங்கமணி தீர்மானம் போல்

"ஐயோ... யார் மூஞ்சில முழிச்சேன் இன்னிக்கி..."என ரங்க்ஸ் விழிக்க "அடடா... இவ மூஞ்சில தான் முழிச்சேனா.... ஹும்... " என முணுமுணுத்தவர் "சரி சரி...சொல்றேன்" என வசீகரன் சிட்டி ரோபோ தயாரிக்க செஞ்ச ஆராய்ச்சி ரேஞ்சுக்கு ரெம்ப யோசிச்சார் ரங்கமணி

"என்ன இவ்ளோ யோசனை...சட்டுன்னு சொல்லுங்க... என்ன மாற்றம்..." என தங்கமணி அவசரப்பட

"இரும்மா... தப்பா சொன்னா பின் விளைவுகள் எனக்கில்ல தெரியும்" என டென்ஷன் ஆனார்

"சரி சரி...சீக்கரம்..." என்றார் தங்க்ஸ்

"ம்... ஆ... கண்டுபிடிச்சுட்டேன்... " என்றார் ரங்க்ஸ். பல்பு கண்டுபிடிச்சப்ப தாமஸ் ஆல்வா எடிசன் கூட இவ்ளோ சந்தோசப்பட்டு இருக்க மாட்டார்னா பாத்துக்கோங்களேன்

"சொல்லுங்க சொல்லுங்க... " என எக்ஸ்சைட் ஆனார் தங்கமணியும்

"அது... நீ கம்மல் போட்டு இருக்க" என ரங்கமணி பெருமையாய் கூறவும்

"பின்ன இதுக்கு முன்ன கமண்டலமா போட்டிருதேன்" என தங்கமணி முறைக்க

"இல்லம்மா... வேற மாதிரி தானே போட்டு இருப்ப" என ரங்க்ஸ் தப்பிக்க பார்த்தார்

"அதெல்லாம் இல்ல... நான் சொன்ன மாற்றம் வேற...கண்டுபிடிங்க" என்றார் தங்கமணி விடுவென என

"அதில்லையா... ஹும்... வேற என்ன...?" என மீண்டும் வசீகரன் ஆனார் ரங்க்ஸ்

கொஞ்சம் நேரம் யோசித்தவர் "அடப்பாவமே...உன்னை பொண்ணு பாத்த அன்னைக்கு கூட இவ்ளோ டீப்பா பாக்கலையே தங்கம்...எதாச்சும் க்ளூ குடேன் ப்ளீஸ்..." என ரங்கமணி பாவமாய் பார்க்க

ஒரு நிமிஷம் மௌனமாய் யோசித்த தங்கமணி "சரி விடுங்க... உங்களுக்கு இதெல்லாம் வராது" என எழுந்து போய் விட்டார்

"அப்பாடா தலைக்கு வந்தது தலை பாகையோடு போச்சுனு சொல்றதை இன்னிக்கி தான் உணர்றேன்" னு ரெம்ப ஹாப்பி ஆனார் ரங்கமணி, பின்னால் வரப்போகும் விபரீதத்தை உணராமல் (ஹா ஹா ஹா...!!!)

கொஞ்ச நேரம் கழிச்சு உள் அறையில் இருந்து வந்த தங்கமணி "ஏங்க... கொஞ்ச நேரம் முன்னாடி ஒரு ப்ரோக்ராம் பாத்தீங்களே..."என கேள்வியை முடிக்கும் முன்

"ஆமா...நடிகை ஜில்பா ரொட்டி ப்ரோக்ராம் தானே...  என்ன அழகு இல்லையா தங்கம்" என முகம் எல்லாம் பூரிக்க கேட்டார் ரங்கமணி

பல்லை கடித்து கோபத்தை அடக்கி கொண்ட நம்ம தங்கமணி "ஆமா ஆமா... அவங்க போட்டு இருந்த கம்மல் நல்லா இருந்தது இல்லிங்க" என வலை விரித்தார்

"ஆமாம் தங்கம்... அந்த ஸ்டார்க்கு ஏத்த ஸ்டார் டிசைன்ல சூப்பர் கம்மல்" என தங்கமணி எதிர்பார்த்தது போல் வலையில் விழுந்தார் ரங்கமணி

"அப்புறம் அவங்க டிரஸ் என்ன கலர் அது?" என தங்கமணி குழியை ஆழமாய் தோண்ட

தன் அபிமான நடிகை பற்றி மனைவி ஆர்வமாய் பேசியதும் உற்சாகமான ரங்கமணி "என்ன தங்கம் நீ? இது கூட கவனிக்கலையா... நல்ல டார்க் மெரூன் கலர் டாப்ஸ்... ப்ளாக் பேன்ட் ... நல்ல காம்பினேசன் இல்ல தங்கம்"

"ஆமா ஆமா...சூப்பர்... அது சரி... அவங்க பொட்டு வெச்சு இருந்தாங்களா என்ன?"

"என்ன தங்கம் நீ? உனக்கு சுத்தமா கவனிக்கற புத்தியே போய்டுச்சு போ... கம்மல்க்கு மேட்ச்ஆ ஸ்டார் டிசைன்ல டிரஸ்க்கு மேட்ச்ஆ மெரூன் கலர்ல எவ்ளோ அழகா ஒரு பொட்டு...நடுல கூட ஒரு ஸ்டோன் கூட இருந்ததே, நீ பாக்கலையா" என சிலாகித்தார் ரங்கமணி

அடுத்த கணம் தங்கமணி "நான் போறேன்..எங்க அம்மா வீட்டுக்கே போறேன்" என கண்ணை கசக்க, அப்போது தான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்தார் ரங்கமணி

"ஐயயோ...என்னாச்சு தங்கம்" என ரங்கமணி பதற

"யாரோ ஒரு நடிகை... அதுவும் கன்றாவியா நடிக்கற ஒரு ஜென்மம்... அந்த சிறுக்கி... அவ கம்மல், டிரஸ் கலர், பொட்டு டிசைன் நடுல ஸ்டோன் எல்லாம் ஞாபகம் இருக்கு ப்ரோக்ராம் பாத்து ஒரு மணி நேரம் கழிச்சு கூட... உங்கள நம்பி கழுத்தை நீட்டினவ நான்... எப்பவும் வட்ட பொட்டு வெக்கறவ இன்னிக்கி உங்களுக்கு பிடிக்கும்னு நீட்ட பொட்டு வெச்சுட்டு வந்து என்ன வித்தியாசம்னு ஆசையா கேட்டா... ஒரு மணிநேரம் ஆராய்ச்சி செஞ்சும் தெரில இல்ல...நான் போறேன்... எங்க அம்மா வீட்டுக்கே போறேன்" என தங்கமணி கண்ணை கசக்கி கொண்டே உள்அறைக்குள் சென்றார்

ரங்கமணி என்ன செஞ்சார்னு நான் சொல்லி தான் தெரியணுமா... வழக்கம் போல "சொந்த செலவுல சூனியம் வெச்சுக்கிட்டனே"னு பீலிங்ல இருக்கார்... ஹையோ ஹையோ...:)))

நிரந்தர பின் குறிப்பு:

என் இனிய ப்ளாக் குல மக்களே... இதுல வர்ற தங்கமணி நான் இல்ல... Just an imaginary character. நெறைய பேரு இது நான்னு நெனைச்சுட்டு இதுல வர்ற ரங்கமணிக்கு ஓவரா அனுதாபம் தெரிவிச்சு... விட்டா அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கற அளவுக்கு போறதா நியூஸ் வந்தது.... அதான் இந்த நிரந்தர குறிப்பு இந்த பதிவுகளில் இடம் பெறுகிறது... மேட்டர் மனசிலாயோ... ஒகே ஒகே...:-)))

தங்கமணி ரங்கமணியின் எல்லா கலாட்டாக்களையும் படிக்க... இங்கே கிளிக்கவும்

51 பேரு சொல்லி இருக்காக:

தங்கம்பழனி said...

///ச்சே... '16 வயதினிலே கமல் ஆத்தா வெயும் காசு குடு' டயலாக் மாதிரி ரிமோட் குடு ரிமோட் குடுனு.... சகிக்கல///


ஹா..ஹா... !!

BalajiVenkat said...

idhulaam overu aamaa... govindho mama paavam.....

angelin said...

.."வீட்டுல இருக்கிற கொஞ்ச நேரமும் இந்த டிவிய கட்டிட்டு அழறதே வேலையா போச்சு... நான் சொல்றத காது குடுத்து கேளுங்க //


இதுக்கு நான் ஒரு ஐடியா தரட்டா .ரங்க்ஸ் வீட்டிலிருக்கும்போது மட்டும் ரிமோட்டை ஒளிச்சி வச்சிருங்க .அப்புறம் பாருங்க வேற வழியே இல்லை
நீங்க சொல்றதைத்தான் கேட்டாகணு

Pooja said...

Super :)) can't control my laugh, here i'm laughing alone in front of my laptop :))))

இராஜராஜேஸ்வரி said...

அடுத்த கணம் தங்கமணி "நான் போறேன்..எங்க அம்மா வீட்டுக்கே போறேன்" என கண்ணை கசக்க, அப்போது தான் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை உணர்ந்தார் ரங்கமணி /

சோதனை மேல் சோதனை!

சிநேகிதி said...

நிறைய வீட்டில் இப்படி தானுங்க நடக்குது...

divyadharsan said...

hahahahahaha.....vizhunthu vizhunthu sirika vecheenga appavi..super!! another hit !! thool poanga..chancey ela.yepdi sixer sixeraa adikireenga..ethuku munnadi,onnu clean bold aanathu neyabagam erukatum:-0

apuram thangamani veyra vazhi ellama vazhakam pola kaala vizhuntaarunu unmaiya solveenganu paarthaa... sontha selavula sooniyamnu abruptaa mudichiteengalaey..too bad u knw:))

epdi readersaa yosika vidatheenga..apuram naanga yena yenavo karpana panipoam:))

Very very nice..Thanx for the humorous post.Tc.tata.

asiya omar said...

நல்ல காமெடி,வருங்கால அப்புசாமி&சீதாலஷ்மி பாட்டி..

வை.கோபாலகிருஷ்ணன் said...

Very Very Very Very Interesting.
Enjoyed very much but I expected this climax, well in advance. Thanks for sharing.

vgk

(Mis)Chief Editor said...

மேடம்! நடிகை சிறுக்கின்னு சொல்றது உங்க நகைச்சுவைக்கு வலிமை சேர்க்கும்னு நெனச்சீங்கன்னா ஸாரி! அதே போல, இதுக்காக 'நான் அம்மா வூட்டுக்கு போறேன்'...அதுக்கும் ஸாரி!

நடிகர்கள் வீட்டிற்குள்ளேயும், படுக்கை அறையினுள்ளேயும் வந்து விட்ட இந்நாளில், இது போன்ற படைப்புகள் பின்னால் இருக்கும் அறிவீனத்திற்கு வருத்தப்பட வேண்டியிருக்கிறது. இதனால் என்னுடைய 'நகைச்சுவை தன்மை' விமர்சிக்கப்பட்டாலும் - படலாம்!

வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியின் அன்னியோன்னியம் பற்றித் தெரிந்திருந்த படைப்பாளிக்கும் இதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம்?

arul said...

super kathai

Vasudevan Tirumurti said...

கோவிந்த் அனுதாபிகள் சங்கம் அட்ரஸ் கொடுங்க. மெம்பரா செரலாம்ன்னு பாக்கறேன்! :-))))

Vasudevan Tirumurti said...

என்ன ஒரே தமிளா இருக்கு! வாள்க!

Vasudevan Tirumurti said...

அருமையான படம்! பாவம், தூக்கம் கலையலை....

வெங்கட் நாகராஜ் said...

:))))

siva said...

:)

தக்குடு said...

யெஸ்சூஸ்மி! அந்த போட்டோவுக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்? (கவுண்டமணி குரலில்) ஓஓஒ! அந்த புள்ளை மாதிரி தங்கமணி சின்னப்புள்ளையாம்! :P

Lakshmi said...

நல்லகாமெடிதான் போங்க இதுக்கெல்லா,மா அம்மாவீட்டுக்கு போவாங்க.

Priya said...

எப்பொழுதும் போல செம கலக்கல்...

அமைதிச்சாரல் said...

ஹைய்யோ..ஹைய்யோ.. இதுக்கெல்லாம் கோச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்குப் போவாங்களா என்ன :-))

கீதா said...

//அது... நீ கம்மல் போட்டு இருக்க" என ரங்கமணி பெருமையாய் கூறவும்

"பின்ன இதுக்கு முன்ன கமண்டலமா போட்டிருதேன்" என தங்கமணி முறைக்க//

இதைப் படித்தபோது சத்தமாகச் சிரித்துவிட்டேன். கற்பனை ரொம்ப நல்லா இருக்கு புவனா.

கோவை2தில்லி said...

நல்ல கதையால்ல இருக்கு....:))))

மாதேவி said...

:)))

priya.r said...

ரங்க மணியின் கொடுமையை உணர கிடைத்த பதிவு என்றும் சொல்லலாம் :)

என்ன கொடுமை இது அப்பாவி!

படிக்கும் போதே பதறுகிறதே !

நேரில் கேட்ட தங்க மணிக்கு எப்படி இருந்து இருக்கும் :)

அதுவும் அந்த ஹிந்தி கதா நாயகிக்கு எங்க தங்கமணி என்ன

குறைந்து போய்ட்டாளாம் !

அப்பாவி ;இதை சும்மா விடாதே

இதை வைத்து ஒரு வாங்கு வாங்கிடு

( எப்படியும் அப்பாவி அடுத்த பதிவையும் இதை வைச்சு தான் போட போறாங்க :))

எதுக்கு அம்மா வீட்டுக்கு எல்லாம் போயிட்டு ....

பேசாம ரங்க மணியை அவங்க அப்பா வீட்டுக்கு அனுப்பி

புரட்சி செய்யேன் :))

ராஜி said...

பாவம் உங்க தங்க்ஸ்

ராஜி said...

த ம 4

kg gouthaman said...

நானும் asiya omar போல, அப்புசாமி சீதாப்பாட்டி சீரீஸ் நகைச்சுவைக் கதைகளைப் பற்றி நினைத்தேன். சிரிக்க வைத்த பதிவுக்கு நன்றி.

vanathy said...

இதுல வர்ற தங்கமணி நான் இல்ல.// really??????
super post.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//பின்ன இதுக்கு முன்ன கமண்டலமா போட்டிருதேன்" என தங்கமணி முறைக்க //

...ஹா ஹா :)))

Nice imagination.. Well writtaen.

Thanai thalaivi said...

aha...Ahaaa! yet an another humarous post from ATM.

வேங்கட ஸ்ரீனிவாசன் said...

நிரந்தர பின் குறிப்பு:

//என் இனிய ப்ளாக் குல மக்களே... இதுல வர்ற தங்கமணி நான் இல்ல... Just an imaginary character. நெறைய பேரு இது நான்னு நெனைச்சுட்டு இதுல வர்ற ரங்கமணிக்கு ஓவரா அனுதாபம் தெரிவிச்சு... விட்டா அவருக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிக்கற அளவுக்கு போறதா நியூஸ் வந்தது.... அதான் இந்த நிரந்தர குறிப்பு இந்த பதிவுகளில் இடம் பெறுகிறது... மேட்டர் மனசிலாயோ... ஒகே ஒகே...:-)))//

ஆமாம் நீங்கள் குதிருக்குள் இல்லை என்று ஏற்கனவே கேள்வி பட்டுவிட்டோம்.

Sri Seethalakshmi said...

அமேசிங் !!! சூப்பர் !!

என்னால சிரிப்ப கட்டுபடுத முடியல போங்க.

ஆபீஸ்ல எல்லாரும் என்ன லூசுன்னு நெனச்சு இருபாங்க...

(சீக்கிரம் ஒரு தொடர்கதைய தொடங்குங்க)

Sri Seethalakshmi said...

பிரியா அக்கா நீங்க சொன்ன புரட்சி ரொம்ப நல்ல இருக்கு போங்க.

(உங்க வீட்டுலயும் கொஞ்சம் கஷ்டம் தான் போல :))

உங்க கம்மெண்ட படிச்சி சத்தமா சிரிச்சிட்டேன் போங்க :)

சுசி said...

புவனா.. செம :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) நீட்ட பொட்டு .. பாவம் ரெண்டுபேருமே( ஒருத்தரை மட்டும் சொன்னா அடிவிழுமோ ந்னு தான்)

priya.r said...

ஆமாமா ;ரங்க்ஸ் கிட்டே மாட்டி கொண்டு முழிக்கும் அப்பாவி தங்க மணிகளில் நானும் ஒருவள் ! ))))
ஆனால் நாம யாரை அப்பாவின்னு நம்பிகிட்டு இருக்கோமோ அவங்க ஒரு அடப்பாவி என்ற ரகசியத்தை வெளியில் சொல்லாதீங்க :))

priya.r said...

@ சீதா:

நீங்க ஏன் ஒரு ப்ளாக் ஆரம்பிக்க கூடாது :))

@அனாமி :

எங்கேடி போய்ட்டே.,

ஐவர் அணியை ஆரம்பித்து இப்படி எங்களை அனாதையா விடலாமோ ;இது தகுமோ ;இது முறையோ !

priya.r said...

ஏன்(எனிமி! ) புவனா !

ஐம்பது கமெண்ட்ஸ் வந்தா தான் பதில் போடுவேன்னு இன்னுமா பிடிவாதாம் :))

பதில் போட்டு இருப்பே என்று எதிர்பார்த்து வந்த எங்களை ஏமாற்றலாமா !!

அப்பாதுரை said...

funny!

தி. ரா. ச.(T.R.C.) said...

eஎத்தனை பதில் பொட்டு என்ன பிரயோஜனம் பிரியா அக்கா உங்களோட னோ சமதானம்

அப்பாவி தங்கமணி said...

@ தங்கம்பழனி - :)))

@ BalajiVenkat - கோவிந்தோ மாமா எதுக்கு பாவம்... எனக்கு புரியலயே? உங்க யாருக்காச்சும் புரியுதா?...:)))

@ angelin - ஆஹா.. சூப்பர்... நீங்கள் அப்பாவி தங்கமணிகள் சங்கத்த்தின் கொள்கை பரப்பு செயலாளராக ஒரு மனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கபடுகிறீர்கள்...:)

@ Pooja - தேங்க்ஸ்ங்க பூஜா...:)

@ இராஜராஜேஸ்வரி - ஹா ஹா... தேங்க்ஸ்'ம்மா...:)

@ சிநேகிதி - ஆமாமுங்க...:)

@ divyadharsan - நன்றி நன்றி நன்றி...:) சிக்ஸர் அடிக்கறேனா, சரி விடு திவ்யா, இண்டியன் கிரிக்கெட் டீம்ல ஆள் செக்கறாங்களானு விசாரிப்போம்...:) கால்ல விழுந்த உண்மையா? ஆஹா, உங்க கதையெல்லாம் என்னை சொல்ல சொன்னா எப்படி மேடம்?..:) கற்பனை தானே பண்ணுங்க பண்ணுங்க, காசா பணமா...:)) தேங்க்ஸ் திவ்யா, டாடா...:)

@ asiya omar - ஆஹா... இப்படி எல்லாம் சொன்னீங்கன்னா எனக்கு கால் தரைல நிக்காதுங்க ஆஸியா, மெனி தேங்க்ஸ்...:))

@ வை.கோபாலகிருஷ்ணன் - ரெம்ப நன்றிங்க...:)

அப்பாவி தங்கமணி said...

@ (Mis)Chief Editor - மொதல்ல இவ்ளோ விமர்சனம் எழுதும் அளவுக்கு படிச்சதுக்கு நன்றிங்க... நடிகைய சிறுக்கினு சொல்றது எதுக்கும் வலிமை சேர்க்கும்னு நினைக்கலீங்க... அப்படி சேத்ததால எந்த வலுவும் சேந்ததா எனக்கு தோணவும் இல்லிங்க... பொதுவான பேச்சு வழக்கு தான் யூஸ் பண்ணினேன்

சார், ஒரு விஷயம் சொன்னா தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே, இது நகைச்சுவை பதிவு, All is fair in humourனு ஒரு புதுமொழி உண்டு... ரெம்ப ஆராய்ச்சி செஞ்சா நகைச்சுவை, நகசுத்து மாதிரி ஆகிடும், ரசிக்க முடியாது

//இது போன்ற படைப்புகள் பின்னால் இருக்கும் அறிவீனத்திற்கு வருத்தப்பட வேண்டியிருக்கிறது.//
இதில் என்ன அறிவீனம்னு எனக்கு புரியல, அதனால உங்க வருத்தமும் புரியலைங்க

//வெளிநாட்டில் வசிக்கும் தம்பதியின் அன்னியோன்னியம் பற்றித் தெரிந்திருந்த படைப்பாளிக்கும் இதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம்? //
சாரி, நீங்க என்ன சொல்ல வரீங்கன்னு எனக்கு சத்தியமா புரியல. அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம். அன்னியோன்யம் பத்தி எழுதறவங்க இப்படி எழுத கூடாதுன்னு எதுவும் இல்லீங்களே

என் மேல தப்பு சொன்னாலும், சரியான விமர்சனங்களுக்கு நான் எப்பவும் செவி சாய்ப்பவள்னு எல்லாருக்கும் தெரியும். இது ஒரு சாதாரண நகைச்சுவை புனைவு. இதில் யார் மனதையும் நோகடிக்கும் எண்ணமில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். அப்படி இருந்தா சாரி, போதுங்களா...:)

அப்பாவி தங்கமணி said...

@ arul - நன்றிங்க அருள்...:)

@ Vasudevan Tirumurti - திவண்ணா, இதெல்லாம் அநியாயம், மீ தி அப்பாவி ஆல்வேஸ்... சோ, எனக்கு தான் சப்போர்ட் பண்ணனும்...அது தான் நியாயம், அது தான் தர்மம்...:) ஐயயோ, தமி"ளா" இருக்கா? என் கண்ணுக்கு ஒண்ணும் தெரியலயே? சொல்லுங்க திருத்திடறேன்... நன்றிங்க...:)

@ வெங்கட் நாகராஜ் - நன்றிங்க... :))

@ siva - ... :)

@ தக்குடு - எஸ் எஸ்... நீ தான் போட்டோவை கரெக்டா புரிஞ்சு சொல்லி இருக்கா... தக்குடு வாழ்க... தக்குடு வளர்க...:)))

@ Lakshmi - ஹா ஹா... சும்மா சொல்றாங்க, நிஜமா போனாங்களானு தெரிலிங்க... கேட்டு சொல்றேங்க..:))

@ Priya - தேங்க்ஸ் ப்ரியா..:)

@ அமைதிச்சாரல் - அதானே... நீங்க சொன்னதா அந்த தங்கமணிகிட்ட சொல்லிடறேன் அக்கோய்...:))

@ கீதா - ரெம்ப நன்றிங்க கீதா..:)

@ கோவை2தில்லி - ஆமாங்க ஆதி.. நல்ல கதை தான்...:)

அப்பாவி தங்கமணி said...

@ மாதேவி - நன்றிங்க..:)

@ priya.r - ஆஹா.. ஆரம்பமே அமர்க்களமா இருக்கே ப்ரியாக்கா...:) என்னை தான் சப்போர்ட் பண்ற மாதிரி இருக்கு, ஆனா பின்னாடி என்ன ஆப்பு வெக்க போறீங்கனு தெரில...:) அடுத்த பதிவும் இதை வெச்சா... இதை முடிக்கரதுக்குல்லையே நாக்-அவுட் ஆய்டுச்சு...:) ரங்கமணியை அப்பா வீட்டுக்கு அனுப்பறதா, ஓஹோ, இப்ப தான் ஏன் மாம்ஸ் அடிக்கடி ஊர்ல இல்லைனு சொல்றீங்கனு புரியுது...:)

@ ராஜி - இந்த கதைல வர்ற தங்க்ஸ் மட்டுமில்லைங்க... எல்லா தங்க்ஸ்'ம் பாவம் தானுங்க... உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிங்க ராஜி...:) ஓட்டுக்கும் தான்..:)

@ kg கௌதமன் - ஆஹா... பேசாம ஒரு புக் போடலாமான்னு யோசிக்கறேன்... தங்கமணி ரங்கமணி சீரிஸ்னு...:) பாருங்க சும்மா இருக்கறவளை இப்படியெல்லாம் சொன்னா இப்படி தான் விபரீதமாகும்... :) ரெம்ப நன்றிங்க...:)

@ vanathy - எஸ் எஸ், ரியல்லி...:)) தேங்க்ஸ் வாணி...:)

@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - தேங்க்ஸ் ஆனந்தி..:)

@ Thanai thalaivi - தேங்க்ஸ் தலைவி அக்கோய்..:)

@ வேங்கட ஸ்ரீனிவாசன் - ஆஹா... நம்ம புகழ் ரெம்பத்தான் பரவிடுச்சு போல இருக்கே... அதெல்லாம் நமபதீங்க சார்... நான் ரெம்பவும் அப்பாவி... வேணும்னா என் ப்ளாக்ல இருக்கற எல்லா போஸ்ட்யும் படிச்சு பாருங்க, உங்களுக்கு புரியும்...:))

அப்பாவி தங்கமணி said...

@ Sri Seethalakshmi - ஆஹா, எங்கிங்க ரெம்ப நாளா ஆளை காணோம் உங்கள... "ஜில்லு" போனதும் போனவங்க இப்பதான் வந்திருக்கீங்க... ச்சே ச்சே, ஆபீஸ்ல அப்படி எல்லாம் இப்பதான் நினைப்பாங்களா என்ன?... சாரி சாரி ஜஸ்ட் கிட்டிங்... :) தொடர்கதை எழுதணும்னு தாங்க நினைக்கிறேன், கைவசம் நெறைய யோசனைகளும் இருக்கு... கொஞ்சம் நேரம் அமைஞ்சதும் ஆரம்பிக்கறேங்க, கேட்டதுக்கு மிக்க நன்றி...:) பிரியா அக்கா சொல்ற புரட்சி எல்லாம் அவங்க சொந்த கதைங்க...:)

@ சுசி - தேங்க்ஸ் சுசி..:)

@ முத்துலெட்சுமி/muthuletchumi - ஹா ஹா ஹா... என்னங்க இப்படி பயந்துக்கறீங்க... :))

@ priya.r - அதானே பாத்தேன்.. என்னடா இன்னும் ஆப்பு வெக்கலயேனு நெனச்சேன்..:)) சாரி பார் லேட் கமெண்ட்ஸ் ப்ரியக்கா, damager செஞ்ச சதியால் வேலை அதிகம்..:))

@ அப்பாதுரை - நன்றிங்க...:)

@ தி. ரா. ச.(T.R.C.) - ஹா ஹா... ச்சே ச்சே... நாங்க எப்ப அங்கிள் சண்டை போட்டோம் சமாதானமாக...:))

geetha santhanam said...

உங்கள் பதிவைப் படித்து மனம்விட்டு சிரித்தேன். அதுவும் 'காதிலென்னே கமண்டலமா போட்டிருந்தேன்' சூப்பருங்க

புதுகைத் தென்றல் said...

சூப்பர். சிரிச்சு சிரிச்சு ஒரு வழியா படிச்சேன்.

முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே பாட்டுல வரும் பாடல் வரிகள் போல இருக்கு. இரண்டாம் பார்ட். “யார் அந்தப் பெண். ஒரு நடிகையம்மா.
நடிகையைப்போல் என்னைப் பார்ப்பது தவறு” அப்படின்னு வரும்.

middleclassmadhavi said...

ஸாரி, லேட்டா வந்ததுக்கு! ரொம்ப நாளைக்கு அப்புறம் நல்லா சிரிச்சேன்! thanks!

அப்பாவி தங்கமணி said...

@ geetha santhanam - ரெம்ப நன்றிங்க கீதா...:)

@ புதுகைத் தென்றல் - தேங்க்ஸ் அக்கா... நானும் அந்த பாட்டு கேட்டு இருக்கேன்...ஆனா நீங்க சொல்ற வரைக்கும் அது strike ஆகலை... சூப்பர்...:)

@ middleclassmadhavi - ரெம்ப நன்றிங்க மாதவி...:)

priya.r said...

// ரங்கமணியை அப்பா வீட்டுக்கு அனுப்பறதா, ஓஹோ, இப்ப தான் ஏன் மாம்ஸ் அடிக்கடி ஊர்ல இல்லைனு சொல்றீங்கனு புரியுது...:) //

இதோ பாரு அப்பாவி

உன்னோட ரங்க்ஸ் (கோவிச்சு கிட்டோ இல்லாமையோ!) கோவை போயிட்டு வந்தார் ன்னு சொன்னே

நான் ஒருத்தர் கிட்டே அதை பத்தி மூச்சு விட்டு இருப்பேனா !!

போ அப்பாவி ;என்னை மாதிரி நம்ம குடும்ப விசயங்களை ரகசியமாகவே வச்சுக்க தெரியலை நோக்கு :))

அப்பாவி தங்கமணி said...

@ Priya R- okay from now on all secret....:))))

Post a Comment