Tuesday, November 29, 2011

தக்குடு கல்யாண வைபோகமே...:))"பாஸ்டன்ல இருந்து நாட்டாம வந்திருக்காக... சியாட்டில்ல இருந்து சிங்காரி(பொற்கொடி) வந்திருக்காக... அமெரிக்கா ரிடர்ன் கீதா பாட்டி, சாரி மாமி வந்திருக்காக...திருப்பூர்ல இருந்து திலகவதி(ப்ரியா) வந்திருக்காக... கனடால இருந்து அப்பாவி வந்திருக்காக... பெங்களுர்ல இருந்து பாலாஜி வந்திருக்காக... மற்றும் நம்ம வல்லிம்மா, திவாண்ணா, எல்.கே, அனன்யா எல்லாரும் வந்திருக்காக... வாப்பா தக்குடு" என TRC அங்கிள் அழைக்க, அப்பவும் தக்குடு தரிசனம் தந்த பாடாய் காணோம்

"ஜானவாசத்துக்கு நேரமாச்சே... புள்ளையாண்டான எங்க காணோம்" என ஒரு மாமி கேட்க

"மாப்பிள்ளை ரெடியானு கேட்டுண்டு வரசொன்னா" என பெண் வீட்டின் உறுப்பினர் ஒருவர் வந்து நிற்க

"ஏண்டிமா...ஆராத்திக்கு வேணுங்கறது எடுத்து வெச்சுண்டயா" என மற்றொரு மாமி நினைவூட்ட

"ஆர்த்தியா... எங்க? எங்க? காத்தால ஊஞ்சல் நேரத்துக்கு தான் வருவானு நெனச்சேன், இப்பவே பெங்களுர்ல இருந்து வந்துட்டாளா?" என்றபடி தக்குடு வெளிய வர, எல்லாரும் முறைக்கின்றனர்

"ஹி ஹி... ஆர்த்திகரன்னு என்னோட ஆத்ம சிநேகிதன்... அவன் தான் வந்துட்டானோனு நெனச்சேன்" என எப்பவும் போல் சமாளிக்கிறார் தக்குடு

"நம்பிட்டோம்" என மொத்த கூட்டமும் முணுமுணுக்கிறது

"அடடே... எப்ப வந்தேள் நீங்கள்லாம்?" என தக்குடு அப்போது தான் ப்ளாக் நண்பர்களை கவனிக்கிறார்

"அப்ப ஒரு மண்டலமா வந்திருக்காக வந்திருக்காகனு நான் கத்தினது உன் காதுல விழலயோ?" என TRC அங்கிள் டென்ஷன் ஆக

"இல்லையே மாமா... ஒருவேள நீங்க மறந்திருப்பேள்...சரி விடுங்கோ... உங்களுக்கும் கீதா பாட்டி மாதிரி ஞாபக மறதி போல" என சிரிக்கிறார் தக்குடு

"கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..." என பின்னால் இருந்து சத்தம் கேட்க

"அடேடே கீதா மாமி வந்துட்டேளா... வாங்கோ வாங்கோ... மாமா சௌக்கியமா... பக்கத்துல டீ கடைல எல்லாரும் நன்னா இருக்காளா?" என தக்குடு வழக்கம் போல் கச்சேரியை ஆரம்பிக்கிறார்

"வேண்டாம் தக்குடு அப்புறம் அப்பாவியோட இட்லி பார்சல் தான் கிப்ட் குடுப்போம்" என கார்த்தி (எல்.கே) மிரட்டல் விடுக்க

"ப்ரூட்டஸ்" என அப்பாவி முறைக்க

"வேணாம் எல்.கே... நீங்க தெனம் நாலு போஸ்ட் வேணாலும் போடுங்கோ படிக்கிறேன்... நல்ல நாளும் அதுவுமா ஏன் இட்லிய ஞாபகப்படுத்தரேள்? அது சரி, இப்ப நீங்க ப்ளாகே எழுதறதில்ல போலருக்கே, ஏன்?" என தக்குடு சாமார்த்தியமாய் பேச்சை மாற்றுகிறார்

"இந்த அப்பாவி என்னைக்கி எழுத ஆரம்பிச்சாங்களோ அன்னைக்கே நெறைய பேர் எழுதறத நிறுத்திட்டாங்க" என பொற்கொடி பெருமூச்சு விட

"தேங்க்ஸ் கொடி, நான் அவ்ளோ நல்லா எழுதறேன்னு சொல்றியா?" என அப்பாவி இல்லாத காலரை தூக்கி விட்டு கொள்ள

"நெனப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்" என பாலாஜி இதான் சாக்குனு பல்பு கொடுக்க

"ROFL LOL ...." என பொற்கொடிக்கு வாயெல்லாம் பல்லாகிறது

"என்ன இங்க சண்ட என்ன இங்க சண்ட?" என்றபடி அனன்யா என்ட்ரி

"இந்த அனன்யா, அப்பாவி, கேடி மாதிரி ஆண்டீஸ் இருக்கற எடத்துல எப்பவும் சண்டை தான்... நம்மள மாதிரி யூத்க மட்டும் இருந்தா கலகலப்பா இருக்கும், இல்லையா தக்குடு?" என பாஸ்டன் நாட்டாமை சமயம் பார்த்து தன் ட்ரேட்மார்க் டயலாக் சொல்கிறார்

"யாரு யூத்து?" என பொற்கொடி டென்ஷன் ஆக

"நாங்க தான்... இப்பதான கலை துறைல என்ட்ரி ஆகி இருக்கேன்... எனக்கெல்லாம் இன்னும் ஓட்டு போடற வயசே ஆகல யு சி" என நாட்டாமை சொல்லி முடிக்கும் முன்

"டாடி" என அவரின் மகள் ஸ்ரீஹிதா அழைக்க

"போய் புள்ள குட்டிய படிக்க வெய்ங்க பாஸ்" என பொற்கொடி தன் டீபால்ட் கமெண்ட் ஒன்றை எடுத்து விடுகிறார்

அதே நேரம் "தள்ளுங்க தள்ளுங்க" என்றபடி யாரோ வரும் சத்தம் கேட்கிறது

"இந்தா தக்குடு... ஐவர் அணி சார்பா இந்த முப்பது வகை திரட்டுப்பால் செய்வதெப்படி புக் கிப்ட்" என ப்ரியாக்கா சொல்ல

"வாங்க ப்ரியாக்கா... என்ன ஐவரணில இன்னும் ரெண்டு பேரை காணோம்?"

"ஆமாம் தக்குடு... அனாமிகாவுக்கு டிக்கெட் கிடைக்கலையாம்... ப்ரொபசர்க்கு எக்ஸாம் டைம்"

"ஸ்டுடென்ட்ஸ்'க்கு தானே எக்ஸாம் வெப்பா... இப்பெல்லாம் ப்ரொபசர்க்கு கூட வெக்கராளா?" என வழக்கம் போல் தக்குடு டைமிங்கில் அடிக்க, அங்கு ஒரு சிரிப்பு வெடி அதிர்கிறது

ப்ரியக்கா ஏதோ சொல்ல வர, அதற்குள் "ஜானவாசத்துக்கு நேரமாச்சுனு மாப்பிள்ளைய வர சொல்றா" என ஒரு குரல் கேட்க

"அதானே... எல்லாரும் மசமசன்னு பேசிண்டு நேரத்த விரயம் பண்றேள்... தள்ளுங்கோ தள்ளுங்கோ" என தக்குடு எஸ்கேப் ஆகிறார்

"அது சரி.. இன்னைக்கி மெனுல என்ன ஸ்வீட்?" என TRC அங்கிள், மாமி அருகில் இல்லை என்பதை உறுதிபடுத்தி கொண்டு கேட்கிறார்

"இதென்ன கேள்வி... சிவகாசின்னா பட்டாசு, தின்னவேல்லின்னா அல்வா, அம்பினா கேசரினு லோகத்துக்கே தெரியுமே... அம்பியாத்து விஷேசத்துல கேசரி இல்லாம வேறென்ன?" என வல்லிம்மா கூற

"சரியா சொன்னேள் அக்கா" என்கிறார் திவாண்ணா

********************************************

"தக்குடு காசி யாத்திரைக்கு நேரமச்சாம்... கெளம்பு கெளம்பு" என TRC அங்கிள் கூறி கொண்டிருக்க

"அச்சச்சோ... கல்யாணம் முடிஞ்சு ஹனிமூன் போற நேரத்துல எதுக்கு காசிக்கு போகணும்?" என அப்பாவி புரியாமல் விழிக்க

"இந்த பிரம்மஹத்திய என்ன பண்ணலாம்?" என அனன்யா முறைக்க

"அட ராமச்சந்திரா... அப்பாவிக்கா, கொஞ்சம் இப்படி வாங்க. இத பத்தி தக்குடு ப்ளாக்ல ஒரு போஸ்ட் போட சொல்லி அப்புறம் படிச்சுக்கலாம்" என பொற்கொடி சமாளிக்க

"என் ப்ளாக்ல விரிவா இதை பத்தி எழுதினேனே படிக்கலையா ஏடிம்?" என கீதா மாமி கேட்க

"நீங்க 'கண்ணன் வருவான் கண்ணை குத்துவான்' மட்டும் தான் எழுதுவேள்னு தக்குடு சொன்னான் மாமி" என அப்பாவி சமாளிக்க

"காசி யாத்திரை முடிஞ்சு வரட்டும் கவனிச்சுக்கறேன்" என மாமி டென்ஷன் ஆகிறார்

பஞ்சகச்சம், குடை, விசிறி, கைதடி, அரிசிபருப்பு மூட்டை சகிதம் தக்குடு நடந்து செல்ல, பெண் வீட்டார் வந்து தடுத்து அழைத்து வருகின்றனர்

"இதானா காசிக்கு போறது... நான் கூட என்னமோனு நெனச்சேன்" என அப்பாவி சிரிக்க

"அம்மா தாயே புதுசா ஒரு விஷயம் தெரிஞ்சதும் இத வெச்சு ஒரு கதை எழுதிராத, உனக்கு புண்ணியமா போகும்" என பாலாஜி டென்ஷன் ஆக

"ஐ... நல்ல ஐடியா குடுத்திருக்கே பாலாஜி... என் கற்பனை குதிரைய தட்டி விடறேன் இரு" என அப்பாவி யோசிக்க தொடங்குகிறாள்

"சும்மா இருந்தா சங்கை ஊதி கெடுத்துட்டியே பாலாஜி" என எல்.கே ஒரே டென்ஷன்

********************************************

"ஆஹா பேஷ் பேஷ் சூப்பர்... என்ன ஸ்வீட் என்ன டேஸ்ட்" என அனன்யா சிலாகிக்க

"எது நரசூஸ் காபியா?" என அப்பாவி கேட்க

"இல்ல பாவக்காய் பிட்லை" என அனன்யா டென்ஷன் ஆக

"பிடிக்கலைனு விட்டுடேன் அனன்ஸ்... சரி சரி ஜஸ்ட் கிட்டிங்" என அப்பாவி சிரிக்க

"ஆமா சொல்றதெல்லாம் சொல்லிட்டு இந்த ஜஸ்ட் கிட்டிங் ஒண்ணு சிக்கி இருக்கு இந்த அப்பாவிகிட்ட" என கீதா மாமி முணுமுணுக்க

"சரியா சொன்னீங்க கீதாம்மா... இந்த அப்பாவிய என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க" என வழக்கம் போல ப்ரியக்கா கீதா மாமியின் கட்சியில் சேருகிறார்

"தேங்க்ஸ் ப்ரியா... அது சரி, எதை பத்தி அவ்ளோ புகழ்ந்தே அனன்யா?" என கீதா மாமி கேட்க

"அதான் மாமி காத்தால டிபன்ல போட்டாளே காசி ஹல்வா" என கூறும் போதே அனன்யாவின் முகம் மலர்கிறது

"அதென்ன காசி ஹல்வா? காசில இருந்து வாங்கிட்டு வந்தாங்களா?" என அப்பாவி அப்பாவியாய் கேட்க

"இல்ல கம்போடியால இருந்து இம்போர்ட் பண்ணினாங்க" என பொற்கொடி முறைக்க

"பொற்கொடி... நீ தான் என்ன என்னமோ கொலை கொள்ளை கதை எல்லாம் எழுதறயே... இவள ஒழிக்கரதுக்கு எதுனா வழி இருந்தா பாரேன்... இல்லேனா மொதலே திவாண்ணாகிட்ட சொல்லி அவங்க ஹாஸ்பிடல்ல இருந்து மயக்க மருந்து ஏற்பாடு பண்ண சொல்லி இருக்கணும்" என்கிறாள் அனன்யா தாங்க முடியாமல்

"அச்சோ... பாவம் கொழந்தை" என வல்லிம்மா ஒருவர் மட்டும் வழக்கம் போல் அப்பாவிக்கு சப்போர்ட் செய்கிறார்

"சரி சரி... கன்யா தானம் முடிஞ்சுது... இனி கங்கன தாரணம் ஆச்சுனா அப்புறம் மாங்கல்ய தரணம் தான்... நாத்தனார்களை அழைச்சுண்டுருக்கா, அங்க பாருங்கோ" என கீதா மாமி கூற, அங்கு பூரண அமைதி நிலவுகிறது

********************************************

"என்னதிது மணவறைல ஒரே கலாட்டா?" என கல்யாணத்துக்கு வந்திருந்த ஒருவர் மற்றவரிடம் கேட்க

"அதையேன் கேக்கறேள். நாத்தனார் முடிச்சு நான் தான் போடுவேன்னு ஒரு இருபது முப்பது பேருக்குள்ள ஒரே போட்டியாம்"

"அதென்ன... மாபிள்ளைக்கு கூட பிறந்தவா ஒரே அண்ணானு தானே கேள்வி"

"வாஸ்தவம் தான்... ஆனா மாப்பிள்ளை ப்ளாக் எழுதரவராம்... அதுல இவருக்கு ஏகப்பட்ட ரசிகாளாம்... அதுல பாதி பேருக்கும் மேல தக்குடுவை உடன் பிறவா தம்பியா நெனப்பாளாம்.. அதான் இந்த கலாட்டா"

"ஓஹோ.."

********************************************

தக்குடுவின் திருமதியிடம் "எங்க கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறோம்... அதுல வெங்காயம் உரிக்கரப்ப தவிர வேற எப்பவும் தண்ணி வர கூடாது. எங்க தம்பிய நல்லா பத்திரமா பாத்துக்கோ" என அந்த 'பத்திரமா' என்ற வார்த்தையில் சற்று அழுத்தம் கொடுத்து சொல்கிறார்கள் அக்காக்கள் எல்லாரும்

"இத்தனை நாத்தனாரா?" என மணப்பெண் கொஞ்சம் ஜெர்க் ஆக

"நீ ஒண்ணும் டென்ஷன் ஆகாதம்மா. உனக்கு என்ன சந்தேகம்னாலும் என்னை கேளு" என அப்பாவி கூற

"சமையல் சந்தேகம் எல்லாம் உங்ககிட்ட கேக்க கூடாதுன்னு அவர் சொன்னாரே" என மிசஸ் தக்குடு முதல் நாளே பல்பு கொடுக்கிறார்

டென்ஷன் ஆனாலும் சமாளித்தபடி "ச்சே ச்சே... அதெல்லாம் சும்மா... அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். தக்குடுவை அக்காக்கள் எல்லாம் பத்திரமா பாத்துக்கோனு சொன்னதுல ஒரு முக்கியமான பாயிண்ட் இருக்கு... அது என்னனா..." என அப்பாவி ஆரம்பிக்க

"தக்குடு... அப்பாவி உன் ஆத்துகாரிட்ட பேசிண்டிருக்கா..." என எல்.கே அலெர்ட் செய்ய

"அப்பாவி அக்கா... எல்.கே என்னமோ கேக்கறார் பாருங்கோ?" என அப்பாவி புயலை திசை திருப்பி, தலைக்கி வந்ததை தலைப்பாகையோடு நிறுத்துகிறார் தக்குடு

"என்ன கார்த்தி?" என அப்பாவி கேட்க

"என்னை ஏன் மாட்டி விடற?" என எல்.கே முணுமுணுக்க

அதற்குள் பாலாஜி "அப்புறம் தக்குடு ஹனிமூன் எங்க போறதா பிளான்?" என பேச்சை மாற்றி எல்.கே'வை காப்பாற்றுகிறார்

"அது... வந்து... இன்னும் முடிவு பண்ணலை" என தக்குடு மழுப்ப

"பெங்களுர் போலாம்னு சொன்னேளே மறந்துட்டேளா?" என சமயம் பார்த்து திருமதி தக்குடு போட்டு கொடுக்க

"என்னது பெங்(ண்)களூரா?" என மொத்த கூட்டமும் அதிர்ச்சியில் கோரஸ் பாட, தக்குடு பொதுமக்களுக்கு வணக்கம் கூற....

அவ்ளோ தாங்க, டாட்டா பை பை வணக்கம் போட்டாச்சு

இப்படியாக "தக்குடு கல்யாண வைபோகமே" நல்லபடியா முடிஞ்சுது அப்படினு ஒரு கற்பனை பதிவு தான் இது... நிஜத்துல கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் இருக்கு. அழைப்பு வந்தும் போக முடியாத தூரத்துல இருக்கறதால, இப்படி போஸ்ட் போட்டு மனசை தேத்திக்கறேன்..:)

அதுவும் இந்த ஒரு வாரமா சிலர் "நான் தக்குடு கல்யாணத்துக்கு போறேன், நான் தக்குடு கல்யாணத்துக்கு போறேன்"னு சொல்லி என்னை வெறுபேத்திட்டு இருக்காங்க, அவங்களை எல்லாம் முடிஞ்ச வரை இந்த போஸ்ட்ல கலாய்ச்சு இருக்கேன்

கல்யாண வைபவம்ங்கறதால ரெம்ப கலாய்க்க முடியல, சரி விடுங்க இன்னொரு சான்ஸ் கிடைக்காமையா போகும்..:)

எப்படியும் இன்னும் ஒரு மாசத்துக்கு தக்குடு இந்த பக்கம் வரபோறதில்லைங்கற ஒரு தைரியத்துல  அடிச்சு  விட்டுருக்கேன்...  நாள பின்ன பிரச்சன வந்தா நீங்க எல்லாம் என் பக்கம் தான் பேசுவீங்கனு எனக்கு தெரியுமே...;)

ஒகே ஜோக்ஸ் அபார்ட்... திரு அண்ட் திருமதி தக்குடுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு எல்லா செல்வமும் பெற்று வாழ வாழ்த்துக்கிறேன்

அதோட தம்பதிகள் பெரிய மனசு பண்ணி இந்த பரிசையும் ஏத்துக்கணும்...:)அன்புடன்,
அப்பாவி

85 பேரு சொல்லி இருக்காக:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் நண்பரே! நான் பதியுலகில் புதியவன். தங்களின் பதிவு அருமை. முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

இராஜராஜேஸ்வரி said...

திரு அண்ட் திருமதி தக்குடுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு எல்லா செல்வமும் பெற்று வாழ வாழ்த்துக்கிறேன்


வாழ்த்துகள்.. வாழ்த்துகள்..

Lakshmi said...

அப்பாவி உண்மையிலேயே தக்குடு கல்யாணத்துக்குபோய் வந்தாப்ல இருக்கு. நீங்க வெரும் அப்பாவி இல்லே. சூப்பர் அப்பாவிதான்.

geethasmbsvm6 said...

அமெரிக்கா ரிடர்ன் கீதா பாட்டி, //

இதுக்கே உங்களை என்ன செய்யணும் தெரியுமா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான நகைச்சுவையான எழுத்துக்கள்.

வாஷிங்டனில் திருமணம் மாதிரி பாணியில் உள்ளது.

அவங்க வந்திருக்காக; இவங்க வந்திருக்காக ...

நல்ல சிரிப்பு தான்.

தக்குடு தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன் vgk

geethasmbsvm6 said...

போனால் போகட்டும், எல்லாரையும் மானசீகமா தக்குடு கல்யாணத்துக்கு அனுப்பி வைச்சதுக்கு நன்னி ஹை. என் சார்பிலே நானும் டாலர் அனுப்பி வைக்கிறேன் தக்குடுவுக்கு. :))))))

geethasmbsvm6 said...

ஏடிஎம், சிரிச்சுச் சிரிச்சு!!! முடியலை!

geethasmbsvm6 said...

தக்குடுவுக்கும், பல நாத்தனார்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் ஜெயஶ்ரீ(மிஸஸ் தக்குடு)க்கும் வாழ்த்துகள்.

அது சரி, ஏடிஎம், போற போக்கிலே ஒண்ணை மறந்துட்டேனே!

நாத்தனார் தாலி முடிஞ்சால் பட்டுப் புடைவை, வைச்சுத் தருவாங்க பொண்ணு வீட்டிலே! உங்க எல்லாருக்கும் கிடைச்சுதா? என்ன புடைவை? அதைச் சொல்லவே இல்லையே?

geethasmbsvm6 said...

நாராயணா! நாராயணா!

sriram said...

அப்பாவி அக்கா, பதிவு சூப்பர், செம ஃப்ளோ..

எனக்கு இன்விடேஷன் அல்ல இன்ஃபர்மேஷன் கூட வரலை. எனினும் தக்குடுவுக்கு வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

angelin said...

கண் முன்னே கல்யாண மண்டபம் சீன் சீனா தெரியுது .நல்லா சிரிக்க வச்சிட்டீங்க .தக்குடுவுக்கும் திருமதி தக்குடுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் .

divyadharsan said...

Very good post appavi.very nice to read.kalyanathula kalanthukittu paartha feel kedaichathu..athavathu neenga yellam ragala pannatha padam pudicha mari...kalyanam panravangala parthamari ela.

unmaiya neenga yelarum anga erunthuruntha unga kacheriya thaan parthirupanga yelarum..bore adichathuna ponnu maapilaya parthurupanga..hehe..

anyway congrats to mr & mrs. thakkudu. tirumbha india la yethavathu kalyanathuku ponumpola eruku.nama ooru na nama ooruthan keyli kindal..saapadu..wonderful memories!!

Thanx for the post Appavi..tata.tc.

மகி said...

மோதிரம் ஓகே..ஜிமிக்கிதான் கொஞ்சம் பழைய மாடலா இருக்கோ?? ;) ஓக்கே..ஓக்கே,இப்பல்லாம் இந்த டெம்பிள் டிசைன்தான் ஃபேமஸா இருக்குதாம்! ;)

கனவிலயே கல்யாணத்துக்குப் போயிட்டுவந்தாச்சா? நல்ல பதிவு புவனா!

Arun Ambie said...

Happy Married life to Thakkudu.

வல்லிசிம்ஹன் said...

அன்பு புவன், அருமையான போஸ்ட். தக்குடு கிட்டக் கூடப் போக முடியுமோனு தெரியலை:) அவ்ளோ கூட்டம் இருக்கப் போறதுனு ஹேஷ்யம். டிஆர்சி மாமி கிட்டப் பேசினேன். ராதா கல்யாணம் லாம் இருக்காம் இன்னிக்கு. நமக்கு நெட்ல வந்த இன்விட்டேஷன் இருக்கிற தைரியத்திலதான் நானும் போகணும். கவிநயா கொடுத்த செக் திராச அண்ணா கிட்டக் கொடுக்கணும். இந்தப் பதிவை அவரும் பார்ப்பார்னு நினைக்கிறேன். நால பொண்ணுமா. சிரிச்சுசிரிச்சு வாய் வலிக்கீறது. இந்தப் பின்னூட்டம் உன்னை வந்தடையும்னு நினைக்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

அப்பாவி இதை படிச்சுட்டு நிச்ச்சியம் போகப்போறேன்.இன்னிக்கி பிளாக்,முகபுத்தக குழுவினரின் பட்டி மண்டபம் தக்குடு கல்யாணமண்டபத்தில்.தலைப்பு ”எது சிறந்த தண்டனை அப்பாவியின் போஸ்ட் படிப்பதா? இல்லை இட்லி சாப்பிடுவதா.
கவிநயா எதுக்கு செக்கு எண்ணைன்னு பேசாம டாலரா கொடுக்கலாம் இல்லை அப்போதான் என் கணக்கு சரியாவரும்:)-- தி ரா ச

geethasmbsvm6 said...

சரியா சொன்னேள் அக்கா" என்கிறார் திவாண்ணா//

ஏடிஎம், அப்போவே சொல்ல நினைச்சேன்; சொல்ல மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்.

இதான் உங்க பதிவிலேயே சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர் அப்சர்வேஷன். இதுக்கே உங்களுக்கு ஒரு ஒரு ஒரு ஒரு சே என்ன கொடுக்கிறதுனு தெரியலை; அதனால் ஒண்ணும் இல்லை! :))))))))

geethasmbsvm6 said...

திராச சார், போயிட்டு வந்து நல்லா விபரமா காமென்ட்ரி கொடுங்க.

geethasmbsvm6 said...

அது என்ன கவிநயா டாலர் கொடுத்தால் உங்க கணக்குச் சரியாகுமா?? என்ன விஷயம்? :)))))

geethasmbsvm6 said...

"சரியா சொன்னீங்க கீதாம்மா... இந்த அப்பாவிய என்ன பண்ணலாம் நீங்களே சொல்லுங்க" என வழக்கம் போல ப்ரியக்கா கீதா மாமியின் கட்சியில் சேருகிறார் //


ஹிஹிஹிஹி, இதுவும்,இதுவும், நல்லாவே ரசிச்சேன்.

அப்பாதுரை said...

தக்குடுவுக்கு வாழ்த்துக்கள். உங்களுக்குப் பாராட்டுக்கள்.

தி. ரா. ச.(T.R.C.) said...

அனைத்து பிளாக் நண்பர்களும் மாலை 7 மணிக்கு கூடவும் கொறடா உத்தரவு. தனி பந்தி உண்டு.கூட்டத்தில் அம்பி அண்ட் பேமிலியை கண்டுபிடிட்த்து கொடுப்பவர்களுக்கு என் சார்பில் அப்பாவி 10000 டாலர் கொடுப்பார்கள்

ஸாதிகா said...

சாவியின் வாஷிங்டனில் திருமணம் ஞாபகத்தில் வருகின்றது.நகைச்சுவையை மிகவுமே ரசித்தேன்.

Jaleela Kamal said...

ஹா ஹா ஒரு கலாட்டா கல்யாணத்து போய் வந்த் எஃபக்ட் இருக்கு

Thanai thalaivi said...

நெகிழ்ந்து விட்டேன் உங்கள் பதிவை படித்து ! என்னே உங்கள் அன்பும், நட்பும்...!!!

எனக்கே இப்படி இருக்கிறதே ! தக்குடுவும் படித்தால் மிகவும் நெகிழ்ந்து விடுவான்.

கல்யாணத்திற்கு போவதை விட இந்த கற்பனை இன்பம்தான் அதிகம் கனமானது.

................................................................................................

ஆமா ! கல்யாணத்துல நான், ரமாஜி எல்லாம் எங்கே? :)))))

siva said...

Engeyum enathu vaalthukalai therivithu kolkiren.

Vaalga valamudan.

ராமலக்ஷ்மி said...

தக்குடு தம்பதியருக்கு என் நல்வாழ்த்துக்கள்:)!

siva said...

நன்னா சேமமா
இருக்கணும்

siva said...

வழக்கம் போல அப்பாவியின்
கற்பனை அலாதி

நிஜகல்யணம் நேரில் கண்டதை போல

வாழ்த்த வயதில்லை
அதனால் வாழ்க வளமுடன் அப்பாவி

siva said...

௨௯ நவம்பர், ௨௦௧௧ ௧௧:௦௭ முற்பகல்?? what is this...

Rathnavel said...

அருமை

Sri Seethalakshmi said...

தக்குடு திருமதி தக்குடுவிர்ற்கு எனது இனிய திருமண நல்வாழ்துக்கள்...

உங்களுக்கு எனது பாராட்டுக்கள்...

தாக்கிடு விறுகு வாழ்து பதிவு போட்டு கூடவே ஆப்பும் வச்சுடலே...

My days(Gops) said...

திரு அண்ட் திருமதி தக்குடுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பல்லாண்டு பல்லாண்டு எல்லா செல்வமும் பெற்று வாழ வாழ்த்துக்கிறேன்

RAMVI said...

தக்குடு கல்யாணம்,கலாட்டா கல்யாணம்..


//"ஆமாம் தக்குடு... அனாமிகாவுக்கு டிக்கெட் கிடைக்கலையாம்... ப்ரொபசர்க்கு எக்ஸாம் டைம்"

"ஸ்டுடென்ட்ஸ்'க்கு தானே எக்ஸாம் வெப்பா... இப்பெல்லாம் ப்ரொபசர்க்கு கூட வெக்கராளா?" என வழக்கம் போல் தக்குடு டைமிங்கில் அடிக்க, அங்கு ஒரு சிரிப்பு வெடி அதிர்கிறது //

தக்குடு டைமிங்க உங்க வரிகளிலே..சூப்பர்..

ரொம்ப நன்னாயிருக்கு புவனா, சிரிச்சு சிரிச்சு மாளலை..

வினோத் said...

nice
pls visit my blog
mydreamonhome.blogspot.com

priya.r said...

தம்பி தக்குடு & திருமதி தக்குடுவிர்ற்கு எனது இனிய திருமண நல்வாழ்துக்கள்...
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

பதிவு சூப்பர்! உனது homework பார்த்து சற்று வியப்பும் ஏற்பட்டது !!
நல்ல பதிவு ;வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள் புவனி!!

priya.r said...

ரிசப்சன் ,திருமணம் எல்லாம் போக வேண்டி இருப்பதால்
எனது நகைகளை எல்லாம் அனுப்பவும் :))
கீதாம்மாவிடம் இரவலாக வாங்கிய தங்க ஒட்டியானத்தையும் அனுப்ப மறக்க வேண்டாம் :))

கோவை2தில்லி said...

கலாட்டா ரொம்ப நல்லா இருக்கு.

தக்குடு தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

priya.r said...

பாஸ்டன்ல இருந்து நாட்டாம வந்திருக்காக... சியாட்டில்ல இருந்து சிங்காரி(பொற்கொடி) வந்திருக்காக... அமெரிக்கா ரிடர்ன் கீதா பாட்டி, சாரி மாமி வந்திருக்காக...திருப்பூர்ல இருந்து திலகவதி(ப்ரியா) வந்திருக்காக... கனடால இருந்து அப்பாவி வந்திருக்காக... பெங்களுர்ல இருந்து பாலாஜி வந்திருக்காக... மற்றும் நம்ம வல்லிம்மா, திவாண்ணா, எல்.கே, அனன்யா எல்லாரும் வந்திருக்காக... வாப்பா தக்குடு" என TRC அங்கிள் அழைக்க, அப்பவும் தக்குடு தரிசனம் தந்த பாடாய் காணோம் //

எப்படி தரிசனம் தருவார் ?! இல்லே.............

பட்டு சாரி யும் பத்து பவுனும் அக்கா களுக்கு கிப்ட் டா கொடு ன்னு கேட்டா எப்படி வருவார் ?!

priya.r said...

"அடடே... எப்ப வந்தேள் நீங்கள்லாம்?" என தக்குடு அப்போது தான் ப்ளாக் நண்பர்களை கவனிக்கிறார்//

நல்ல வேளை! ஏன் வந்தேள் என்று கேட்கவில்லை :)) என்று அப்பாவி பெரு மூச்சு விட்டு கொள்வதை யாரும் பார்க்க வில்லை :)

priya.r said...

அப்ப ஒரு மண்டலமா வந்திருக்காக வந்திருக்காகனு நான் கத்தினது உன் காதுல விழலயோ?" என TRC அங்கிள் டென்ஷன் ஆக //

மண்டலம் ன்னா 48 நாளா அப்பாவி ?"இல்லையே மாமா... ஒருவேள நீங்க மறந்திருப்பேள்...சரி விடுங்கோ... உங்களுக்கும் கீதா பாட்டி மாதிரி ஞாபக மறதி போல" என சிரிக்கிறார் தக்குடு //

பொண்ணு பார்த்து கொடுத்த TRCSir ன்னு ஒரு மதிப்பு வேணாம் :) அவரயே கலாய் க்கலாமோ :)

"கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..." என பின்னால் இருந்து சத்தம் கேட்க

"அடேடே கீதா மாமி வந்துட்டேளா... வாங்கோ வாங்கோ... மாமா சௌக்கியமா... பக்கத்துல டீ கடைல எல்லாரும் நன்னா இருக்காளா?" என தக்குடு வழக்கம் போல் கச்சேரியை ஆரம்பிக்கிறார்
தோ பாரு அப்பாவி ! மீண்டும் மீண்டும் எங்க தலைவியை விமர்சிக்கறே ! உனக்கு நோட்டீஸ் வர்ற மாதிரி வைத்து கொள்ளாதே:)
"வேண்டாம் தக்குடு அப்புறம் அப்பாவியோட இட்லி பார்சல் தான் கிப்ட் குடுப்போம்" என கார்த்தி (எல்.கே) மிரட்டல் விடுக்க //

அதுக்கு பேரு கிப்ட் இல்லை ;தண்டனை என்று யார் அங்கே சொல்றது ?!

priya.r said...

"இந்த அப்பாவி என்னைக்கி எழுத ஆரம்பிச்சாங்களோ அன்னைக்கே நெறைய பேர் எழுதறத நிறுத்திட்டாங்க" என பொற்கொடி பெருமூச்சு விட

"தேங்க்ஸ் கொடி, நான் அவ்ளோ நல்லா எழுதறேன்னு சொல்றியா?" என அப்பாவி இல்லாத காலரை தூக்கி விட்டு கொள்ள //

என்ன இருந்தாலும் நீ கொடியை பார்த்து

அமலாபால் அக்கா ரோஜாபால் நீங்க தானா ன்னு கேட்டு இருக்க கூடாது ;அப்புறம் அடுத்த கதையில் உன்ற பேரை போட்டு அப்புறம் போட்டு தள்ளி டுவாங்களோ ன்னு பயந்து கிட்டும் இருக்க கூடாது :))

geethasmbsvm6 said...

இனி கங்கன தாரணம் ஆச்சுனா//

ஹிஹிஹி, ஏடிஎம், எங்கள்ளே கங்கணதாரணம் முதல் நாளே ஆயிடும். :))))))

geethasmbsvm6 said...

ப்ரியா, தங்க ஒட்டியாணத்தைக் கேட்கிறச்சே மறக்காமல் வைர செட்டையும் கேட்டு வாங்கிடுங்க. கல்யாணமாச்சேன்னு கொடுத்தேன். பத்திரம்! :)))))))

priya.r said...

அதே நேரம் "தள்ளுங்க தள்ளுங்க" என்றபடி யாரோ வரும் சத்தம் கேட்கிறது //

அது என்ன யாரோ ? ! கீதாம்மா கட்சியின் உப தலைவியை பார்த்து யாரோவாம் :)

"இந்தா தக்குடு... ஐவர் அணி சார்பா இந்த முப்பது வகை திரட்டுப்பால் செய்வதெப்படி புக் கிப்ட்" என ப்ரியாக்கா சொல்ல//

கூடவே எங்கள் அணி சார்பாக திருமதி தக்குடு அவர்களை எங்கள் அணிக்கு வருக வருக என்று அழைப்பும் விடுத்து இருக்கிறோம்
"வாங்க ப்ரியாக்கா... என்ன ஐவரணில இன்னும் ரெண்டு பேரை காணோம்?" //

வர்றோம் ;இப்போவாவது ஐவரணி பத்தி யாபகம் வந்ததே !

"ஆமாம் தக்குடு... அனாமிகாவுக்கு டிக்கெட் கிடைக்கலையாம்... ப்ரொபசர்க்கு எக்ஸாம் டைம்"

"ஸ்டுடென்ட்ஸ்'க்கு தானே எக்ஸாம் வெப்பா... இப்பெல்லாம் ப்ரொபசர்க்கு கூட வெக்கராளா?" என வழக்கம் போல் தக்குடு டைமிங்கில் அடிக்க, அங்கு ஒரு சிரிப்பு வெடி அதிர்கிறது

ப்ரியக்கா ஏதோ சொல்ல வர, அதற்குள் "ஜானவாசத்துக்கு நேரமாச்சுனு மாப்பிள்ளைய வர சொல்றா" என ஒரு குரல் கேட்க //

சரி சரி .. தக்குடு ! உங்கள் இருவருக்கும் திருமண நல்வாழ்த்துக்கள் !

priya.r said...

அப்பாவி அடிக்கடி சமையல் செய்யும் இடத்துக்கு போய் பரிமாற தயாராக இருந்த இட்லியை பார்த்து பின் சமையல் காரரை பார்த்து செய்முறை விளக்கத்தை ஒரு 1000 பக்க நோட் இல் குறிப்பு எடுத்து வைத்து கொண்டதையும்

அப்பாவியை முதல் முறையாக பார்த்து பேசிய பெண்கள் அனைவரும் அப்பாவி எழுத்தை பார்த்து ரெம்ப கற்பனை செய்து இருந்தோம்

இவ்வளோ யூத்தா இருக்காளே என்று வியந்து சொல்லியதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டிய விஷயங்கள் !

priya.r said...

ப்ரியா, தங்க ஒட்டியாணத்தைக் கேட்கிறச்சே மறக்காமல் வைர செட்டையும் கேட்டு வாங்கிடுங்க. கல்யாணமாச்சேன்னு கொடுத்தேன். பத்திரம்! :))))))) //

கேட்டேன் கீதாம்மா ! அதெல்லாம் காந்தி கணக்கு ன்னு டயலாக் பேசறா !

priya.r said...

கீதாம்மா! இந்த அப்பாவி பன்ற பந்தாவுக்கு வர வர ஒரு அளவே இல்லாம போச்சு

சீரியல் ல நுழைய போறாளாம் ;கதை வசனம் நடிப்பு எல்லாம் இவளேவாம்!

இன்னும் கொஞ்ச நாள்லே தமிழ் நாடே திரும்பி பார்க்க போகுதாம் :))))

மண்டபத்துக்கு வந்தவங்க பாதி பேருக்கு இவ புக்ல ஆட்டோ கிராப் போட்டு ப்ரீயா கொடுத்தாளாம் !

அடுத்து அனாமி கல்யாணத்துக்கு கொடுக்கறதுக்கு 10000 புக்ஸ் இப்போவே ரெடியாம்:))

middleclassmadhavi said...

வாழ்த்துக்கள் - தக்குடுவுக்கும் அழகாகப் பதிவிட்ட உங்களுக்கும்

சுசி said...

தம்பதிக்கு வாழ்த்துகளும் உங்களுக்கு பாராட்டுகளும்.

செம புவனா :)

ஸ்ரீராம். said...

கற்பனையாக இருந்தாலும் கலந்து கொள்ள முடியாத உங்கள் சோகம் தெரிகிறது. தக்குடு தம்பதியருக்கு எங்கள் வாழ்த்துகளும்.

துரைடேனியல் said...

Sema Comedy.

துரைடேனியல் said...

TM 4.

மங்கையர் உலகம் said...

வணக்கம்...
புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...
மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவில் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..
http://ithu-mangayarulagam.blogspot.com/

வெட்டிப்பையன்...! said...

//நாள பின்ன பிரச்சன வந்தா நீங்க எல்லாம் என் பக்கம் தான் பேசுவீங்கனு எனக்கு தெரியுமே...;)//எப்படி இம்புட்டு தகிரியமா சொல்லுரிங்க ....?
இப்படி பயங்கரமாய் கலாய்கிறீய்ங்க...! நேர்ல கல்யாணதுக்கு போனா கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்து இருக்கும்... !
திரு . தக்குடுவுக்கும் திருமதி. தக்குடுவுக்கும் மனமார்ந்த கல்யாண வாழ்த்துக்கள் .

Thanai thalaivi said...

தக்குடு கல்யாண முன்னோட்டத்தை நீங்கள் எழுதிவிட்டீர்கள். ஜனவாசத்தை நானும் தி.ரா.ச மாமாவும் எழுதுகிறோம். கல்யாணத்தை வல்லி மாமியோ இல்லை கல்யாணத்துக்கு போயிட்டுவந்த வேற யாராவது எழுதட்டும். ஒரு தொடர் பதிவா ஆகிடும்.

Anuradha Kalyanaraman said...

Hello madam,

Naan unga situkku pudusu. Thena blogspotlerundhu unga site parthu vandhen. Romba jolly site. Unga thangamani and rangamani irukkaradhilleye best (my favourite). Adha ellam husbanda padikka solli (force pannennu sollanuma) enjoy pannen.

Unga idli story very nice (even I struggled same as you with idlies before reading the recipe in thena's kitchen).

Your writing style is really humorous. I think everyone who comes to your blog will surely be stress relieved.

My request to you: Yaaravadhu serious aa comment panna adhukkaga indha madhiri ezhudharadha niruthidadhinga please. Ellarallayum sirikka vekka mudiyadhu. It is also a gift. Please continue.

Unga article padichi neraya sirikkaren. Thank you very much.

asiya omar said...

கற்பனை கல்யாண முன்னோட்டம் சூப்பர்.ஜில்லுன்னு அவர்கள் வாழ்க்கை தொடரட்டும்.நல்வாழ்த்துக்கள்.அட்டகாசமான பகிர்வு.அன்பளிப்பு அசத்தல்.

priya.r said...

//Unga idli story very nice (even I struggled same as you with idlies before reading the recipe in thena's kitchen).//

டெல்லி யில் இருந்து ஒரு அனுராதா

பின்னூட்டம் போட்டு அதற்கு தேனு

தேங்க்ஸ் அனு You made my day. :) அப்படின்னு பதில் போட்டாங்களே

அந்த அனுவா நீங்க !

நீங்களும் RC ரசிகையா !

வாங்க வாங்க உங்கள் முதல் வருகைக்கு எங்களின் வாழ்த்துக்கள் !

priya.r said...

//தாக்கிடு விறுகு வாழ்து பதிவு போட்டு கூடவே ஆப்பும் வச்சுடலே... //

தக்குடு விற்கு வாழ்த்து பதிவு போட்டு கூடவே ஆப்பும் வச்சுடீங்களே ..

என்று சீதா சொன்னதை நீ புரிந்து கொள்வாய் தானே புவனி :))

priya.r said...

LK ! சங்கர் சார் தக்குடு திருமணத்திற்கு வந்திருந்தாரா ?

தக்குடு நமது ஐவர் அணிக்கு அழைப்பிதழ் அனுப்பி இருந்த இருந்த போது ப்ரொபசர்

நேரில் வந்து வாழ்த்துகிறேன் என்று சொன்னதா நினைவு ..

ராஜி said...

"வாஸ்தவம் தான்... ஆனா மாப்பிள்ளை ப்ளாக் எழுதரவராம்... அதுல இவருக்கு ஏகப்பட்ட ரசிகாளாம்... அதுல பாதி பேருக்கும் மேல தக்குடுவை உடன் பிறவா தம்பியா நெனப்பாளாம்..
>>>
எல்லாரும் நாத்தனார் சீர் செய்ய சொன்னால் அப்பெண்ணோட அதோகதிதான்....

Anuradha Kalyanaraman said...

Yes andha anudaan. Amam RC rasigaidaan naanum. Thamizhla eppadi adikkaringa neenga. Naan google transliterationla try pannen. But spelling differ aaradhu. Please let me know. I never thought I would get a reply. Happy to receive. Thank you very much.

priya.r said...

வாங்க அனு., ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும் ;ஆரம்பத்தில் ஒரு பக்கம் டைப் செய்ய எனக்கு சுமார் 10 மணி நேரம் ஆகிற்று
இப்போது சுமார் 20 நிமிடத்தில் முடித்து விடுகிறேன் ;அப்பாவி பத்து நிமிடத்தில் முடித்து விடுவார் என்று நினைக்கிறேன் !

இப்போ amma ன்னு டைப் செய்யும் போது அம்ம,அம்மை,அம்மா ,அமமா,அமம என்று வரிசையாக வரும்
நீங்க அதில் வேண்டியதை கிளிக் செய்தால் போதுமானது .,
எங்கே இப்போ அப்பாவியை கலாய்த்து ஒரு இரண்டு வரிகளுக்குள் ஒரு கமெண்ட்ஸ் போடுங்கோ பார்ப்போம் :)
ஆல் தி பெஸ்ட் அனு !

Anuradha Kalyanaraman said...

நன்றிங்க ப்ரியா, எனக்கு கலாய்க்க எல்லாம் தெரியாது. என்னதான் எல்லாரும் கலாயபாங்க. அவர் கிட்ட சொன்னேன் என்ன போய் கலாய்க்க சொல்றாங்க எனக்கு என்ன தெரியும்னு, அதான உனக்கு என்ன மட்டும்தான கலாய்க்க தெரியும்னு சொல்றாரு. ஹா வெற்றிகரமா தமிழ்ல அடிச்சிட்டேன். மீண்டும் நன்றி.

geethasmbsvm6 said...

http://thamizha.com/ekalappai-anjal

Anuradha Kalyanaraman, மேற்கண்ட சுட்டியில் இலவசமாக மென்பொருளைத் தரவிறக்கிக் கொண்டு தமிழில் அடிக்கலாம். உங்களுக்குத் தமிழ் டைப்பிங் பழக்கமெனில் அஞ்சலிலும், இல்லை என்றால் ஃபோனெடிக் எனக்கொடுத்திருப்பதிலும் அடியுங்கள். ஃபோனொடிக் நாம் தமிழில் அடிக்க எண்ணுவதை அப்படியே ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும். உ.ம். அம்மா என்பதற்கு ammaa

priya.r said...

@Anu
ஆஹா! அனு !!

பிசிற கிளப்பறீங்களே !!

என்னமா தப்பு இல்லாம தமிழில் கமெண்ட்ஸ் போட்டு இருக்கீங்க !!

உங்கள் உழைப்புக்கும் முயற்சிக்கும் எனது வாழ்த்துக்கள் அனு..


உங்களை நிறைய பேர் கலாய்ச்சா நீங்க (புவனி மாதிரி ) பிரபல பதிவர் ஆக போறீங்கன்னு அர்த்தம்!!

Anuradha Kalyanaraman said...

நன்றி கீதா மேடம் நான் அதை ட்ரை பண்றேன்.

ஒரு இட்லி மேட்டர்ல அந்த அனுவா நீங்கன்னு என்ன கண்டுபிடிசீங்களே ப்ரியா, ஹப்பா என்ன ப்ரில்லியன்ட் நீங்க. தனியா ஒரு போலீஸ் ஸ்டேஷன் நடத்தலாம் (இத உங்கள பாராட்ட தான் சொல்றேன். இதவெச்சி உங்க நண்பர்கள் உங்கள கலாய்ச்சா நான் பொறுப்பில்லை).

அப்பாவி தங்கமணி said...

@ திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்கம்மா...;)

@ Lakshmi - நன்றிங்க லக்ஷ்மி'ம்மா...:)

@ geethasmbsvm6 - ஹா ஹா ஹா... க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என கேட்கையிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே...;)

@ வை.கோபாலகிருஷ்ணன் - ரெம்ப நன்றிங்க சார்

@ geethasmbsvm6 - நன்றி நன்றி நன்றி, அப்புறம் போஸ்ட் போட்டதுக்கு எனக்கு டாலர் இல்லயா மாமி?...:) நானும் உங்க கமெண்ட்ஸ் பாத்து சிரிச்சு சிரிச்சு முடியல...:) ஆஹா... இந்த Saree மேட்டர் அங்கயும் உண்டா... இல்லைன்னு நெனசுட்டேனே... சரி விடுங்க collect பண்ணிடுவோம்... ஆனா நாத்தனார்களுக்கு மட்டும் தானாம்... பாட்டிகளுக்கு இல்லையாம் உங்ககிட்ட சொல்ல சொன்னா...சரி சரி ஜஸ்ட் கிட்டிங் மாமி...:)

@ Boston Sriram - ரெம்ப நன்றிங்க... :)

@ angelin - நன்றிங்க...:)

@ divyadharsan - ஹா ஹா ஹா... நாங்க எல்லாம் போய் இருந்தா அட்டென்சன் அவங்களுக்கு கிடைக்காதுன்னு தான் போகலை திவ்யா, கரெக்டா சொல்லிட்டீங்க...:) எனக்கும் ஊருக்கு போகணும்னு ரெம்ப தோணுது...ஹ்ம்ம்... மேனேஜர் மனசு வெச்சா உண்டு, பாப்போம்...Thanks...:)

@ மகி - உனக்கு ஜிமிக்கி மேட்டர் தெரியாதா என்ன? தக்குடு அதுல PHDனு ஊருக்கே தெரியுமே..அதுக்கு தான் இந்த ஸ்பெஷல் கிப்ட்...:) தேங்க்ஸ் மகி

அப்பாவி தங்கமணி said...

@ Arun Ambie - வாழ்த்துக்கு நன்றிங்க... :)

@ வல்லிசிம்ஹன் - தேங்க்ஸ் வல்லிம்மா... எல்லாரும் கல்யாணத்துல நல்ல கலாட்டா போல இருக்கே... :)

@ தி. ரா. ச.(T.R.C.) - ஆஹா... பட்டிமன்றத்தின் முடிவு என்ன அங்கிள்? :))

@ geethasmbsvm6 - தேங்க்ஸ் மாமி... அதிகம் ஒண்ணும் வேண்டாம், ஒரே ஒரு வைர செட் மட்டும் அனுப்பி வைங்க போறும்...:)))

@அப்பாதுரை - நன்றிங்க ...:)

@ தி. ரா. ச.(T.R.C.) - டாலர் அனுப்பிட்டேன் வந்து சேந்ததா என்பதை தெரிவிக்கவும்..:)

@ ஸாதிகா - ஆஹா... சூப்பர் பாராட்டு இது... நன்றிங்க ஸாதிகா...:)

@ Jaleela Kamal - தேங்க்ஸ் ஜலீலா'க்கா ...:)

@ Thanai thalaivi - நன்றி தலைவி'அக்கா... நீங்களும் கல்யாணத்துக்கு போனதா தகவல் வந்தது... தக்குடுவாள் என்ன சொல்றார்?...:))

@ siva - நன்றிங்க சிவா...:)

அப்பாவி தங்கமணி said...

@ ராமலக்ஷ்மி - நன்றிங்க...:)

@ siva - ஆஹா... நன்றி நன்றி நன்றி.:) ஒரு வழியா Date Format மாத்திட்டேன்...:)

@ Rathnavel - நன்றிங்க...:)

@ Sri Seethalakshmi - நன்றிங்க சீதா...:) ஆப்பா? நானா? ச்சே ச்சே....மீ அப்பாவி யு நோ...:)

@ My days(Gops) - நன்றிங்க கோப்ஸ்... அப்ப அப்ப காணாம போய்டறீங்க..:)

@ RAMVI - ரெம்ப நன்றிங்க ராம்வி..:)

@ வினோத் - நன்றிங்க வினோத்... உங்க கனவு இல்லம் அட்டகாசமா இருக்கு... வாழ்த்துக்கள்'ங்க

@ priya.r - தேங்க்ஸ் ப்ரியாக்கா... ஆப்பு எல்லாம் பின்னாடி வரும்னு தெரியும்...:) உங்க நகைகள் தானே, அது திவாளிக்கே அனுப்பிட்டனே... ஆனா தங்க ஒட்டியாணம் எனக்கு உயில் எழுதி வெச்சுட்டாங்க கீதா மாமி, எனவே அது தருவதற்கில்லை...;) என்ன தண்டனையா? இருங்க பார்சல் ரெடி பண்றேன்...:)

@கோவை2தில்லி - ரெம்ப நன்றிங்க ஆதி...:)

@ geethasmbsvm6 - ஓ...கங்கணதாரணம் முதல் நாளேவா? சாரி சாரி...:) வைர செட் எனக்கே எனக்குனு குடுத்தது மறந்து போச்சா மாமி, வாங்கினத திருப்பி குடுக்கற பழக்கம் எங்க பரம்பரைக்கே இல்ல...:)

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - அவ்வ்வ்வவ்... எத்தன இட்லி ரெசிபி கேட்டு என்ன புண்ணியம் ப்ரியாக்கா...:) இல்ல இல்ல அப்பாவி கணக்குனு தான் சொன்னேன்...:) எஸ் எஸ்...அந்த சீரியல்ல உங்களுக்கு வில்லி வேஷம் குடுத்தேனே அதை விட்டுட்டீங்களே ப்ரியா...:)

@middleclassmadhavi - நன்றிங்க மாதவி...:)

@ சுசி - ரெம்ப தேங்க்ஸ் சுசி ...:)

@ ஸ்ரீராம். - ரெம்ப நன்றிங்க...:)

@ துரைடேனியல் - மிக்க நன்றிங்க...:)

@ மங்கையர் உலகம் - ரெம்ப நன்றிங்க... நல்ல முயற்சி...:)

@ வெட்டிப்பையன்...! - நேர்ல போகாத குறையை தான் போஸ்ட் போட்டு தீத்துக்கறோம்'ங்க...;) ரெம்ப நன்றிங்க...:)

@ Thanai thalaivi - நல்ல ஐடியா தலைவி அக்கா... தொடரட்டும் தொடர் பதிவு...:)

@ Anuradha Kalyanaraman - Welcome Anuradha, Madam எல்லாம் வேண்டாங்க, அப்பாவினே சொல்லுங்க..:) தேனுவோட நாவல் நானும் படிச்சுருக்கேன், கலக்கலா எழுதி இருக்காங்க... ஆஹா, நீங்க படறது போதாதுன்னு உங்க வீட்ல அவரையும் படிக்க வெச்சீங்களா... ஹா ஹா...:) இட்லி பிரச்சனை universal போல இருக்குங்க...:) உங்க பாராட்டுக்கு ரெம்ப நன்றிங்க... real boost to write more, many thanks for your encouraging words Anu...:)

@ asiya omar - ரெம்ப நன்றிங்க ஆசியா..:)

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - ஆஹா... அனுராதாவையும் உங்க கட்சிக்கு சேத்தும் வேலையா ப்ரியாக்கா? அவ்வ்வ்வ்....இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்... ஆப்பு எல்லாம் நல்லாவே புரிஞ்சது ப்ரியாக்கா, நீங்க அடிக்கடி எனக்கு வெச்சு நல்லாவே பழகிருச்சு...:)

@ ராஜி - ஹா ஹஹா... நல்லா சொன்னீங்க ...:)

@ Anuradha Kalyanaraman - நானும் ஆரம்பத்துல ஒரு போஸ்ட் டைப் பண்ண ஏழு நாள் ஆகுங்க... இப்ப ஒன்லி ஜிமெயில் compose page தான்... அதான் எனக்கு தெரிஞ்சு faster ...:) உங்களுக்கு கலாய்க்க தெரியாதுன்னு சொல்லி இருக்கீங்க... ப்ரியாக்கா அதுக்கும் கோர்ஸ் நடத்திட்டு இருக்காங்க...:) உங்க வீட்ல அவர் சொல்றத பாத்தா உங்களுக்கு க்ளாஸ் வேண்டியதில்லைனு தோணுது...:) அதை ப்ரூவ் பண்ற மாதிரி கடைசி கமெண்ட்ல ப்ரியாக்காவை கலாய்ச்சதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் from appavi blog...:) அதுக்குள்ள ப்ரியக்கா தமிழ் க்ளாஸ் எடுத்து நீங்க தமிழ்ல டைப் பண்ணிட்டீங்க போல இருக்கே சூப்பர்... தேங்க்ஸ் ப்ரியாக்கா அண்ட் கீதா மாமி டூ...:)

priya.r said...
This comment has been removed by the author.
priya.r said...

@ அனு!

இப்படி அணுகுண்டு மாதிரி ஒரு கமெண்ட்ஸ் போட்டுடீங்களே :)

எனக்கு துப்பறியும் புலின்னு தோழி குந்தவை ஏற்கனவே பட்டம் கொடுத்துட்டா :)

மற்றபடி தேனு எனக்கும் ஒரு ப்ளாக் மற்றும் வலை தோழியா ;அதனால் தான் கேட்டேன் பா

நீங்க நேரம் கிடைக்கும் போது ஜிமெயில் லில் அப்பாவி யோட Buzz பாருங்க

அங்கே என்னை விட சிறந்த ஜாம்பவான்களை (இரு பாலாரும் தான் !) பார்த்து ரசிக்கலாம்

இதோ அதன் லிங்க் bhuvanaa
கொடுப்பாங்க !
Bhuvana Govind - Buzz - Public - Muted
தக்குடு கல்யாண வைபோகமே...:))

priya.r said...

@அப்பாவி

உனக்கு எவ்வளோ விளம்பரம் ஏற்படுத்தி கொடுக்கிறேன் பார்த்துக்கோ :))

பார்த்து போட்டு கொடுடி !

நீ வேற தப்பா அர்த்தம் பண்ணி கிட்டு கீதா மாமியிடம் போட்டு கொடுத்துடாதே தாயே :)

geethasmbsvm6 said...

நான் கொஞ்ச நேரம் அந்தண்டை போனால் இது வேறேயா? சரியாக் கணக்குக் காட்டலைனா கட்சியை விட்டு வெளியேற்றிடுவேன். :)))))

(அப்புறம் கட்சியிலே யார் இருப்பாங்கனு கேட்டு மானத்தை வாங்கிடாதீங்க!)

Thanai thalaivi said...

கல்யாணத்துக்கா.....நானா...ஆரு சொன்னா... இவ்வளவு பெரிசாய் வளர்ந்திருக்காய்.....ப்ளாக் எல்லாம் எழுத்தராய்....யாராவது எதாவது சொன்னா உடனே நம்பிடறதா....நான் ஜனவாசத்துகில்ல போனேன்... :))))

ஹா...ஹா...ஹா....மைகேல்,மதன,காமராஜன் காமேஸ்வரன் ஸ்டைலில் படித்துக்கொள்ளவும்.

jokes apart, ரொம்ப நல்லா இருந்தது தங்கமணி, பதிவு போட்டிருக்கேன். வந்து படிச்சு பாருங்க.
----------------------------------------------------------------

பிரியா யாரு புதுசா வந்தாலும் தன் கோஷ்டில சேர்த்துக்க ட்ரை பண்றாங்க. நான் புதுசா வந்த போது கூட இப்படித்தான் நடந்தது. தங்கமணியை கலாய் பீங்களான்னு, நைசா பிட் வேற போட்டு பார்கிறாங்க... :))))

priya.r said...

@BOSS

BALANCE ASON 30.11.11 :Rs4.50

கட்சி ஆபீஸ் பக்கத்தில் உள்ள டீ கடை க்கு கொடுக்க வேண்டியது ரூ 264
மறக்காமல் RTGS ஐந்து டாலர் செய்யவும் :)

priya.r said...

@தா த
என்ன செய்து என்ன பிரயோஜனம் :(
அது தான் அப்பாவி உங்களை மயக்கி வைச்சுட்டாளே :)
ஆனா அன்னைக்கே அனாமிகா ஏதோ சொன்னா! எனக்கு மறந்துருச்சு
ஏண்டி சுனாமி.. என்ன சொன்னே ன்னு வந்து சொல்லிட்டு போறியா ?

Jagannathan said...

இந்த கும்பலில் நான் ஒரு ஓரமாக நின்றிருந்ததை யாரும் பார்க்கவில்லை போலிருக்கிறது. அதனால் என்ன, நானும் தக்குடு தம்பதிகளுக்கு அக்‌ஷதை தூவி ஆசீர்வாதம் செய்துவிட்டேன். என்ன ஒரு விஷயம், இத்தனை பிரபலங்களுக்கு / இத்தனை உடன் பிறவா சகோதரிகளுக்கு இடையே இப்படியெல்லாம் ஹ்யூமரஸ் ஆக பேசமுடியாததால், பந்திக்கு போகாமல் ரெண்டு கார்லிக் பேர்ள்ஸ் சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டேன்!

ஆமாம், நீங்கள், தக்குடு, டுபுக்கு எல்லாம் கல்யாணங்களுக்கு போவதே இந்த மாதிரி ஒட்டுக் கேட்டு ப்ளாகில் எழுதத்தானா? எப்படி அவ்வளவு பேர் பேசுவதையும் நோட் செய்கிறீர்கள்!

- ஜெ.

priya.r said...

புவனிக்கு ஒரு விண்ணப்பம் !
தாங்கள் அடுத்து ஒரு தொடர் கதை எழுதுவதாக கேள்வி பட்டோம்
அதற்கு முன்பு இந்த மடலை தங்கள் பார்வைக்கு வைக்கவே இவ்வளோ அவசரமாக எழுத வேண்டிய நிர்பந்தம்
"திருவாய் மலர்ந்து ஒரு காதல் திங்கள் தோறும்"
"புன்னகையோடு ஒரு மோதல் புதன் தோறும்"
"விறுவிறுவென்று ஒரு காதல் வியாழன் தோறும்"
" விளையாட்டாய் ஒரு காதல் வெள்ளி தோறும்"
"சண்டையோடு ஒரு காதல் சனி தோறும்"

என்று எப்படி வேண்டுமானாலும் பேரு வைத்து கொள்வது தங்கள் உரிமை :)

ஆனால் அதை ஒரு சில நாள் தள்ளி வெளியிடுவதோ ,ஒரு நாள் முன்னர் வெளியிடுவதையோ எங்கள் சங்கம் கண்டிக்கிறது
ஒரு வாரம் கதையை போடாமல் ஏன் போடவில்லை என்று, ஏன் என்னை கேட்க வில்லை என்று, எங்களையே கேள்வி கேட்கும் உங்கள் அடபாவி தனத்தை எங்கள் பேரவை கண்டிக்கிறது .,அதை விட ஏன் சரியான சரியான நேரத்தில் போட முடியவில்லை என்று அதற்கு விளக்கம் என்ற பெயரில் எங்களை யே குறை சொல்ல நினைக்கும் உங்கள் சர்வாதிகாரத்தை யும் கண்டிக்கிறோம்

சில சமயம் கதை மெதுவாக போகிறது என்று சொல்லும் போது ,ஒரு வேளை ஒரு புத்தகமா இதை படித்தால் உங்களுக்கு இப்படி எல்லாம் தோணவே தோணாது என்று எங்கள் வாயை அடைக்கும் நிகழ்வையும் எங்கள் அணி கண்டிக்கிறது
ஏக்கா! எருமை மேல போற மாதிரி கதை ஏன் இவ்வளோ மெதுவாக போகிறது என்று கேட்ட கொடிபாஸ் ஐ பாராட்டவும் எங்கள் சங்கம் கடமை பட்டு இருக்கிறது .,

உங்களை முழுவதும் அறியாத ஒரு சில ரியல் அப்பாவிய்ஸ் ,சூப்பர் மேடம் ; உங்க கதையை நான் ஆபிசில் லூசு மாதிரி சிரித்து கொண்டே இருந்தேன் என்று சொல்லும்போது தாங்களோ ,இப்போ மட்டும் தான் நீங்க லூசா என்று அனாமியில் ஆரம்பித்து சீதா வரை
சொல்லி காட்டியதையும் தான் கண்டிக்கிறோம் !

கதைப்படி நாயகியின் தாய் மொழி பிரெஞ்சு ;அதனால் பாரிஸ் பத்து நாள் கூட்டி போங்கோ என்று உங்கள் ரங்கமணியின் பர்சை காலி செய்யும் உங்கள் வருங்கால திட்டத்தையும் எங்கள் கழகம் கண்டிக்க கடமை பட்டு இருக்கிறது :))

இப்படி தங்களை பற்றி மாற்று கருத்து சொல்லும் போது இனி வரும் கதையில் அவர்களின் பெயரை வில்லி பாத்திரத்திற்கு வைத்து அவர்களை ஒரு வழி செய்யும்
தங்களின் திட்டத்தையும் அதற்கும் அவர்கள் மசியாது போனால்
அவர்களுக்கே தங்கள் கையால் செய்த இட்லி பார்சல் என்று கடைசி ஆயுதத்தை பிரயோகிப்பதை
திகிலுடன்,பயத்துடன் கண்டிக்கிறோம் :))

divyadharsan said...

@ priya - supernga vizhunthu vizhunthu siricheyn..hehe..appavi paavam.ethukagalam kathaiya yezhuthama vitamateengathaana??? athusari apdilam nadanthutaa ulagam ninudaatha..

chumma appavi priya akka mari try paneyn.sari yela precautionsoada seekiram start panunga!!

priya.r said...

@திவ்யா

விழுந்து விழுந்து எல்லாம் சிரிக்க கூடாது :)

அப்புறம் அடி கிடி பட்டுடுமோ இல்லையா :)

இப்படி தான் இப்படியே தான் ;பலே பலே அப்பாவியை கலாய்ப்பதில் தேர்ச்சி பெற்று விட்டீர்களே பேஷ் பேஷ் :))

அப்பாவி இதெற்கெல்லாம் அசர கூடிய ஆள் இல்லை ;பாருங்க இதற்கும் பதில் ரெடி யாக இருக்கும்

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - ஹா ஹா ஹா... சூப்பர் பப்ளிசிட்டி ப்ரியாக்கா... மிக்க நன்றி உங்கள் சேவைக்கு... உங்கள் சேவையை பாராட்டி ஒரு பாக்கெட் லெமன் சேவை பார்சலில் அனுப்பி வைக்கப்படும்...:))

@ geethasmbsvm6 - கட்சி-கணக்கு-வெளியேற்றம்... ஹையோ ஹையோ... comedy of 2011...:))

@ Thanai thalaivi - அவ்வ்வ்வ்... யு டூ தலைவி அக்கோய்... மீ பாவம் யு சி... பட் சூப்பர் காமெடி that slangu...:)) உங்க post இப்ப தான் ஓபன் பண்ணி வெச்சுருக்கேன்... இருங்க படிச்சுட்டு வரேன்...ரெம்ப கரெக்ட் அக்கா, இந்த ப்ரியக்கா எல்லாரையும் அவங்க பக்கம் இழுக்க பாக்கறாங்க... :)

@ priya.r - ஹா ஹா ஹா... உங்க கட்சிக்கு வேற எங்கயும் கிளைகள் இல்லையா ப்ரியாக்கா...:))) நீங்க என்ன ட்ரை பண்ணினாலும் தானை தலைவி அக்கா உங்க கட்சில சேர மாட்டாங்களாம்...;))

@ Jagannathan - ஓரமா இருந்ததால கவரேஜ்ல மிஸ் ஆய்டுச்சு போல இருக்குங்க... :)) நான் மொத்தமா அட்டென்ட் பண்ணினதே ஒரு பத்து கல்யாணம் கூட இருக்காதுங்க இது வரை..:))

@ priya.r - உங்கள் விண்ணை தாண்டிய விண்ணப்பம் பரிசீலனையில் இருக்கிறது... நெறைய தலைப்புகள் பரிந்துரை செய்ததற்கும் நன்றிகள்... வஞ்சபுகழ்ச்சி அணியை கொஞ்சம் ஓவராவே ஸ்கூல்ல உங்களுக்கு சொல்லி குடுத்து இருக்காங்கனு புரியுதுங்க அக்கோய்... இதுக்காகவே என் அடுத்த கதையில் வில்லி பெயர் ப்ரியா தான்...அதோட ஸ்பெஷல் பார்சலும் அனுப்பப்படும்...;))

@ divyadharsan - வெரி குட் திவ்யா... இப்படி தான் நாசூக்கா எதிர்கட்சில spyயா சேரணும்... நான் சொல்லி குடுத்த மாதிரியே நடிச்சதுக்கு உனக்கு ஒரு ஸ்பெஷல் பார்சல் ரெடி ஆகிட்டு இருக்கு அம்மணி.... எனகிட்டயேவா.....:)

@ priya.r - ஹையோ ஹையோ... ஆயிரம் ப்ரியாக்கள் புரளி கிளப்பினாலும் இந்த அப்பாவி துவள்வதில்லை ப்ரியக்கா, துவள்வதில்லை... :))

Post a Comment