Tuesday, December 06, 2011

என்ன சத்தம் இந்த நேரம்...(சிறுகதை)


"கிர்த்தி...காலிங் பெல் அடிக்குது பாரு" என டிவி முன் அமர்ந்து இருந்த கெளதம் குரல் கொடுக்க

"ஏன் நீங்க தெறந்தா கதவு தெறக்காதா?" என சலித்து கொண்டே உள்ளிருந்து வந்தாள் கிருத்திகா

"லீவ் நாள்... யாராச்சும் உன் பிரெண்ட்ஸ் தான் வெட்டி அரட்டைக்கு வருவாங்க... போய் பாரு" என வேண்டுமென்றே மனைவியை சீண்டினான்

"நீங்க மட்டும் இப்ப என்ன நாட்டுக்கு ரெம்ப முக்கியமான வேலை எதாச்சும் பாக்கறதா நெனப்பா" என டிவியை கை காட்டி கேட்க

"பின்ன... என்ன மாதிரி ஆளுங்க டிவி பாக்கலைனா மேட்ச் ஆடறவன் நிலைமை என்ன" என குறும்பாய் கண்சிமிட்டியவனை ஏதோ சொல்ல வாயெடுத்தவள் மீண்டும் அழைப்பு மணி சத்தம் கேட்க முறைத்து கொண்டே சென்றாள்

கதவை திறந்தவள் பரிச்சியமில்லாத ஒரு ஆண் நின்றிருக்க யார் என புரியாமல் விழித்தாள்

"Hello... I'm John" என வந்தவன் கூற

"And?" என கிருத்திகா கேள்வியாய் நோக்கினாள்

"You asked for a plumber to fix your pipe right?" என அவன் விளக்கமளிக்க அப்போது தான் நினைவு வந்தவளாய்

"Oh...yeah... sorry... didn't catch your name in phone... come on in" என விலகி நின்றாள்

அதற்குள் "யாரு கிர்த்தி?" என வந்த கணவனிடம்

"ம்...அதான் சொன்னீங்களே... வெட்டி அரட்டைகினு" என கோபப்பார்வை பார்த்தாள்

அதற்குள் ஜான் தன்னை சுய அறிமுகம் செய்து கொண்டான் கௌதமிடம்

சமையலறை குழாயில் நீர் சரியே வராமல் இருக்க அதை பார்வையிட்டவன்  அங்கு எதுவும் தவறு புலப்படாமல் போக Basement செல்ல வழி கேட்டு கீழே சென்றான்

"நீங்களும் போங்க கூட" என கௌதமை விரட்டினாள் கிருத்திகா

"அவன் பாத்துப்பான் நீ சும்மா இரு" என அவன் பார்வை டிவியில் பதிய

"ஐயோ...அங்க சாமான் எல்லாம் இருக்கு கெளதம்... இப்ப போக போறீங்களா இல்லையா?"

"ஹா ஹா ஹா... ஆமா.. அந்த வேண்டாத தட்டு முட்டு சாமானை அவன் தூக்கிட்டு போனா தூக்கி போடற வேலையாச்சும் எனக்கு மிச்சம்" என அவன் சிரிக்க

"ச்சே... உங்ககிட்ட பேசி ஜெய்க்க முடியாது... என்னமோ பண்ணுங்க..." என்றவள்

அதற்குள் மேல் அறையில் பிள்ளைகளின் சண்டை சத்தம் கேட்க, "ஏய் வினு... என்னடி சத்தம் அங்க?"

"நான் இல்லம்மா... இந்த நித்தின் தான்"

"இனி சத்தம் வந்தா ரெண்டு பேருக்கும் டைம் அவுட் குடுப்பேன் இப்போ" என மிரட்ட அவள் எதிர்பார்த்தது போலவே அமைதி ஆனார்கள் பிள்ளைகள்

பேஸ்மென்ட் சென்ற ஜான் சற்று நேரத்தில் வந்து சமயலறையில் இருந்த குழாயை கழற்றி மாட்டினான்

என்ன செய்கிறான் என புரியாமல் கிருத்திகா பார்த்து கொண்டு இருக்கும் போதே "Its done... try it now" என்றான் ஜான்

குழாயை திருகி பார்க்க தடையின்றி நீர் வந்தது. அப்பாடா என நிம்மதியானாள் கிருத்திகா

அதற்குள் தான் செய்த பணிக்கான பில்லை நீட்டினான் ஜான்

"இந்த பில்லயாச்சும் கொஞ்சம் பே பண்றீங்களா...இல்ல அதுவும் நானே செய்யணுமா?" என கிருத்திகா குரல் கொடுக்க

"நான் மேட்ச் பாத்தா பொறுக்காதே உனக்கு...இப்ப தான லாண்டரி போட்டுட்டு வந்து உக்காந்தேன்... சரி.. எவ்ளோ பில்?"

"நூறு டாலர்"

"நூறா? என்னடி செஞ்சான் நூறுக்கு?" என்றவாறே பணத்தோடு வந்தான் கெளதம்

"அவனுக்கு தமிழ் தெரியாதுங்கர தைரியத்துல பேசாதீங்க... என்ன செஞ்சான்னு போய் பாக்க சொன்னப்ப நகராம இப்ப என்னை கேட்டா"

"நம்ம சண்டைய அப்புறம் போடலாம் என் அழகான ராட்சசி...  அவன அனுப்பறேன் இரு" என மற்றவன் அறியாமல் மனைவியாய் பார்த்து  கண் சிமிட்டியவன் "whats the problem?" என ஜானிடம் கேட்டான்

"Filters in main pipeline is blocked as well damaged...that's what I expected... it's replaced now... including the filter and labour it's 100 dollars" என இதற்கு தானே கேட்டாய் என புரிந்தவன் போல் விளக்கம் கூறி பணத்தை பெற்று சென்றான்

மதிய உணவை முடித்து பிள்ளைகள் வெளியே விளையாட செல்ல கணவனும் மனைவியும் டிவி முன் அமர்ந்து இருந்தனர். ஏதோ பழைய படம் ஓடி கொண்டு இருந்தது

மனைவியை சீண்டி பார்க்க எண்ணி ரிமோட் எடுத்து வேண்டுமென்றே ஸ்போர்ட்ஸ் சேனல் மாற்றினான் கெளதம்

சற்று நேரம் அவளிடமிருந்து ஆட்சேபனை வராமல் போக அவளை திரும்பி பார்த்தவன் பெரும் யோசனையுடன் இருந்தவளை தோள் பற்றி உலுக்கினான்

"ம்...என்ன?" என விழித்தவளிடம்

"எந்த கோட்டைய பிடிக்க இவ்ளோ யோசனை இப்போ?" என கேலியாய் கேட்க

"ப்ச்... ஒண்ணுமில்ல" என அவள் சோர்வாய் தலை அசைக்க

"என்னடா டையர்டா?" என அவள் கை பற்றி விரல்களை சொடக்கு எடுக்க விழைந்தான்

"இல்லப்பா... அந்த ப்ளம்பர் வந்தான்ல... அவன பத்தா என்னமோ பயமா இருக்கு"

"அவன் என்னடி பண்ணான் உன்ன" என கெளதம் சிரிக்க

"இல்ல கெளதம்...அவன் அப்படியே 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்துல பாத்தோமே ஒரு வில்லன் கேரக்டர் அவன மாதிரியே இல்ல?" என ஆர்வமும் பயமுமாய் அவள் கூற

"ஹா ஹா ஹா...போடி நீயும் உன் கற்பனையும்... ரெம்ப சினிமா பாத்து கெட்டு போய்ட்ட நீ"

"நான் என்ன சொன்னாலும் இப்படி தான்...ச்சே... " என அவன் கை உதறி விலகி அமர்ந்தாள்

"சரி சரி... அந்த ப்ளம்பர போலீஸ்கிட்ட பிடிச்சு குடுத்துடலாம் சரியா செல்லம்" என சிறுபிள்ளைக்கு சமாதானம் சொல்வது போல் கிண்டலாய் கெளதம் கூற கோபத்துடன் எழுந்து சென்றாள் கிருத்திகா

***************

"கெளதம் கெளதம்" என கிருத்திகா கணவனை உலுக்க

"ம்..." என தூக்கத்தில் புரண்டான் கெளதம்

"ப்ளீஸ்...கொஞ்சம் எழுந்திரிங்க"

"என்ன கிர்த்தி இது? நல்ல தூக்கத்த ஏன் கெடுக்கற" என சலித்து கொண்டே கெளதம் எழுந்து அமர

"ம்...கொஞ்சறதுக்கு" என அவள் கோப முகம் காட்ட அந்த தூக்கத்திலும் கெளதம் முகம் மலர

"இப்பவாச்சும் என் மேல கருணை வந்ததே... குட் கேர்ள்" என அவன் சிரித்தான்

"போதும் போதும்... கீழ ஏதோ சத்தம் வர்ற மாதிரி இருக்கு...எனக்கு பயமா இருக்கு போய் பாக்கலாம் வாங்க"

"சத்தமா? எனக்கொண்ணும் கேக்கலியே"

"உங்களுக்கு எப்ப தான் கேட்டு இருக்கு... யாரோ ஷூ காலுல நடக்கற மாதிரி சத்தம் கேக்குது"

"உனக்கு மட்டும் ஸ்பெஷல் காதுடி... எங்கேருந்து தான் சத்தம் கேக்குமோ நடுராத்ரில...ஹும்.... பேசாம படு, காலைல பாக்கலாம்"

"என்னது காலைலயா? விளையாடறீங்களா? நடக்கற சத்தம்னு சொல்றேன்... கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா"

"ஏண்டி உயிர வாங்கற?"

"நம்ம உயிர எவனாச்சும் எடுத்துட கூடாதுன்னு தான்"

"கடவுளே...ஆரம்பிச்சுட்டயா?"

"உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...இப்படி தான் 'The skeleton key' னு ஒரு படம்... அதுல..." என்றவளை இடைமறித்தவன்

"போதும் தாயே... உன் புராணத்த ஆரம்பிக்காத"

"எல்லாம் உங்களால தான்"

"நான் என்னடி செஞ்சேன்...கண்ட கண்ட சினிமாவ பாத்துட்டு என் உயிர எடுக்கற நீ... மொதல்ல இந்த movie சேனல்ஸ் எல்லாம் கட் பண்ணினாலே வீட்டுல பாதி சண்டை வராது"

"அதில்ல... மத்தியானம் அந்த ப்ளம்பர் வந்தப்பவே கூட போங்கனு சொன்னேன்ல..."

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்"

"அவன் எதுனா நோட்டம் பாத்துட்டு உள்ள வந்திருந்தா"

"அட ராமா" என தலையில் அடித்து கொண்டான் கெளதம்

"ப்ளீஸ் கெளதம்... சத்தம் என்னனு பாக்கலாம் வாங்க... கொழந்தைங்க முழிச்சுட்டா பயந்துடுவாங்க" என கெஞ்சல் பார்வை பார்க்க அதற்கு மேல் மறுக்க இயலாதவனாய் எழுந்தான்

"நீ இரு நான் போய் பாக்கறேன்" என்றவனிடம்

"ஹுஹும்...நானும் வரேன்... ஆயுதம் எதுனா வெச்சுருந்தா" என்றவளை முறைத்தவன்

"வெச்சிருந்தா? நீ என்ன செய்ய போற, "Wanted" படத்துல ஏஞ்சலினா ஜோலி சண்டை போட்ட மாதிரி போட போறியா"

"நீங்க மட்டும் சினிமா example சொல்லலாமோ"

"உனக்கு புரியணும்னா அப்படி தான சொல்லணும்"

"ஐயோ...டைம் வேஸ்ட் பண்ணாத கெளதம்... ப்ளீஸ்"  அதீத பயம், அதீத கோபம், அதீத காதல் மூன்றின் போது மட்டுமே ஒருமையில் தன்னை அழைப்பாள் என்பதை அனுபவத்தில் உணர்ந்த கெளதம், அவள் ஒருமையில் பேசியதும் மௌனமாய் படி இறங்கினான்

"ஒரு நிமிஷம் போன் எடுத்துட்டு வரேன்" என்றாள்

"அது எதுக்கு இப்ப"

"ஒருவேள 911 கூப்பிடணும்னா?" என்றவளை, அடித்து விடுவேன் என்பது போல் கை உயர்த்தினான்

ஒரு வழியாய் எல்லா அறைகளிலும் பார்த்து விட்டு பேஸ்மென்ட் செல்ல "பாத்து பாத்து கெளதம்" என்றவளை "நீ வாய தெறந்தா அடி படுவ இப்ப" என பாய்ந்தான்

எங்கும் எந்த சலனமும் இல்லாமல் போக "இப்ப திருப்தியா... ஒண்ணும் காணோம்... ஏண்டி இப்படி மனுசன கொல்ற" என முறைத்தான்

"ஆனா சத்தம் வந்ததே கெளதம்"

"ம்...அது உன் கனவுல எதாச்சும் சினிமா ட்ரெய்லர் ஓடி இருக்கும்" என்றான் ஏளனமாய்

"ஐயோ இல்ல..."என சட்டென பேச்சை நிறுத்தியவள் "இப்ப மறுபடியும் கேட்டுச்சு... பாரு பாரு" என்றாள்

திரும்பி பார்த்தவன் என்னவென புரிந்தவனாய் "அங்க பாரு..." என கை காட்டி அவளை எரித்து விடுபவனை போல் முறைத்தான்

அங்கு பேஸ்மென்ட் பைப்பில் தண்ணீர் சரியாய் மூடப்படாமல் சிறிது நேரத்திற்கொரு முறை சொட்டி கொண்டு இருந்த சத்தமே அது

இந்த ஊரின் குளிருக்காக கட்டப்பட்ட மர வீடுகளில் வீட்டின் எந்த மூலையில் சிறு சத்தம் ஏற்பட்டாலும் வீடு முழுக்க எதிரொலிக்கும், அதுவே இரவின் அமைதியில் காலடி சத்தம் போல் தன்னை பயமுறுத்தியது  என்பதை உணர்ந்த கிருத்திகா "சாரி.." என அசடு வழிய நின்றாள்

கெளதம் ஒன்றும் பேசாமல் முறைத்து விட்டு அறைக்கு வந்து படுத்தான்

சற்று நேரத்தில் "கெளதம்..." என மீண்டும் கிருத்திகா அழைக்க

அவன் கண் திறக்காமலே "பேசினா கொன்னுடுவேன்... தூங்கு" என்றான்

"ப்ளீஸ்...ஒன்னே ஒண்ணு கேட்டுக்கறேன் கெளதம்"

"கேட்டு தொல"

"அதென்ன ஏஞ்சலினா ஜோலி... உனக்கு சொல்றதுக்கு ஆம்பள ஏக்டர் பேரு ஒண்ணும் தோணலியா கெளதம்?" என ஏதோ அதிமுக்கிய விடயம் போல் கிருத்திகா கேட்க

கோபத்துடன் கண்ணை திறந்த கெளதம் "நடுராத்ரில கேக்கற கேள்வியாடி இது...?" என முறைத்தவன், அவளின் குறும்பு சிரிப்பில்  தூக்கம்  தொலைத்தான்

அந்த இரவின் அமைதியில் எங்கிருந்தோ கசிந்த ஓர் இனிய இசை மட்டுமே அவர்கள் காதலுக்கு சாட்சியாய் நின்றது

(முற்றும்)

...

54 பேரு சொல்லி இருக்காக:

இராஜராஜேஸ்வரி said...

வெச்சிருந்தா? நீ என்ன செய்ய போற, "Wanted" படத்துல ஏஞ்சலினா ஜோலி சண்டை போட்ட மாதிரி போட போறியா"

அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் அருமை. நன்றி நண்பரே
நம்ம தளத்தில்:
"இரண்டாம் பகுதி - அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா?"

அப்பாவி தங்கமணி said...

test

geethasmbsvm6 said...

சே, ஏதோ த்ரில்லர் கதைனு நினைச்சா சொந்த அனுபவமா? :))))))

geethasmbsvm6 said...

தொடர

Vasudevan Tirumurti said...

hihi!

தெய்வசுகந்தி said...

ஹா ஹா ஹா!! அந்த பயத்துலயும் சரியா கேட்டுருக்கம்ல!!!

மகேந்திரன் said...

நிறைவான முடிவு...
கதை நன்று.

asiya omar said...

நானும் அச்சமுண்டு அச்சமுண்டு ரேஞ்சிற்கு எதுவும் நடந்திடக்கூடாதேன்னு பயந்திட்டேன்.நல்ல கதை.

Nithu Bala said...

:-)rombhavum arumayana kathai bhuvana

Jagannathan said...

சிறு கதைக்கு எதற்கு ‘முற்றும்’?

எப்பவும் ஊடலுக்குப் பின் தான் காதலா!

உங்கள் பார்லியமென்டில் ஒரு பேச்சு - கேட்டீர்களா?-ஜெ.

Jagannathan said...

லின்க் மிஸ்ட்:
http://www.youtube.com/watch?v=K9yqU37MhT4&feature

-ஜெ.

Madhavan Srinivasagopalan said...

நல்லா கதை எழுதுறீங்க.. Congrats.

911னு சொன்ன இடத்துல பொதுவா, எமர்ஜென்சி நம்பர்னு சொல்லி இருக்கலாமே !

Lakshmi said...

ஹா ஹா, நல்லாவே கதை சொல்ரீங்க.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அதீத பயம், அதீத கோபம், அதீத காதல் மூன்றின் போது மட்டுமே ஒருமையில் தன்னை அழைப்பாள் என்பதை அனுபவத்தில் உணர்ந்த கெளதம்//

//அவன் கண் திறக்காமலே "பேசினா கொன்னுடுவேன்... தூங்கு" என்றான்//

அன்றாட நிகழ்வுகள், கணவன் மனைவி உறவுகள், ஊடல்கள், அருமையாகவே உங்கள் பாணியில் நகைச்சுவை என்ற தேன் கலந்து தரப்பட்டுள்ளது.
மகிழ்ச்சியுடன் vgk

Thamizhmaangani said...

ஹாஹாஹா... i love the dialogues!!!

தி. ரா. ச.(T.R.C.) said...

சொந்த அநுபவத்தை பெயரைமாற்றி எழுதுவதில் கில்லாடி நீங்கள்.
இருந்தாலும் ஸ்வாரஸ்யமாக கொண்டு சென்றீர்கள்

Philosophy Prabhakaran said...

சினிமா காதல்... எனக்கும் அச்சமுண்டு அச்சமுண்டு கதை ஞாபகத்திற்கு வந்தது... ஏஞ்சலினா ஜோலி எத்தனை பேரை ஏங்க வைத்த அழகியவள்...

பதிவுலகில் பாபு said...

rachichu padikka mudinjathu.. nallarukku story..

siva said...

nalla eruku..appavi..

after long time one thiriller short story..

with love romantic..

nice..

Rishvan said...

romantic comedy.... www.rishvan.com

கீதா said...

அயல்நாட்டில் வாழும் ஒரு குடும்பத்தலைவியின் தவிப்பையும் பயத்தையும் அழகாகப் பிரதிபலிக்கிறது கதை. அச்சமுண்டு அச்சமுண்டு பார்த்த புதிதில் இப்படிதான் நானும் பார்ப்பவர்களையெல்லாம் சந்தேகக் கண் கொண்டு பார்த்து பயந்துகொண்டிருந்தேன். கணவன் மனவி ஊடல் கதைக்கு மேலும் வலு சேர்க்க உள்ளதை உள்ளபடியே உணர்த்திய அழகான கதைக்குப் பாராட்டுகள் புவனா.

RAMVI said...

ஒரு சின்ன விஷயம் தண்ணீர் லீக் ஆவது அதை வைத்து அழகான கதை.ரொம்ப நன்றாக எழுதியிருக்கீங்க.வாழ்த்துக்கள்,புவனா.

மகி said...

:)

arul said...

nalla kathai

www.astrologicalscience.blogspot.com

தங்கம்பழனி said...

தேங்ஸ்

Anonymous said...

நூல் பல வாங்க, நூல் உலகம் வாங்க..

www.noolulagam.com

ஹுஸைனம்மா said...

நல்ல கதை(யாருக்கே)!! :-)))))))

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான கதை. ரொம்ப நல்லாருக்கு.

priya.r said...

Nice :)

கோவை2தில்லி said...

நல்லாயிருக்குங்க.

அமைதிச்சாரல் said...

ஜூப்பருங்கோவ் :-))

இது சொந்தக் கதையில்லைன்னு நம்பிட்டோம் ;-)

divyadharsan said...

ஹாய் அப்பாவி!!

வழக்கம்போல கதை சூப்பர்..
டயலாக் சூப்பர்..
வர்ணனை சூப்பர்..
காமெடி சூப்பர்..
த்ரில் சூப்பர்..

ஆமா சொல்லவேல்ல!!!! அப்போ இது உங்க கதைதானா??
நான்கூட கற்பனையோனு ஒரு நிமிஷம் தடுமாறிட்டேன். அப்டி போடுங்க!!
அதான் ரியலிஸ்டிக்கா இருக்கு.
உபயம் - உங்களை நன்றாக தெரிந்து வைத்திருக்கும் ப்ளாக் குல நண்பர்கள்:)

நீங்க??? காஞ்சனா படத்த பயம் இல்லாம பார்த்தீங்க?? அதான!! நம்புறேன் நம்புறேன்:))
நல்ல கதை.. இல்லல்ல நிஜம்!! தாமரை இலை தண்ணீர் மாறி ரோமேன்ஸ் வேற :))
சரி விடுங்க..எனக்கு அந்த அளவு உவமை எல்லாம் சொல்ல வராது.

அச்சமுண்டு படம் பார்த்து நான்கூட இப்டிலாம் சுத்திட்ருந்த ஆளுதான்.. பார்க்கிறதுக்கு
முன்னாடி பல கதை.அதெல்லாம் சொன்னா நானும் ப்ளாக் எழுதவேண்டிதான்.

சரி விஷயத்துக்கு வருவோம்!! நீங்க த்ரில்லர்ல புலியா இருக்கறதால அடுத்து ஒரு பேய்
கதை எழுதுமாறு அப்பாவியை வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறோம்.
அதுலையும் உங்க திறமையை?? காண ஆவலோடு காத்திருக்கிறோம்..

ரசிகர்களோட விருப்பத்த நிறைவேத்துறது ஒரு படைப்பாளியா
உங்க கடமை அப்பாவி மேடம்..பி கேர்புள்!!

ஒரு காதல் கதை கேட்டா த்ரில்லர் கதை போடறீங்க..
ஒருவேளை பேய் கதை கேட்டா.. காதல் கதை போடுவீங்கன்னு
ஒரு நம்பிக்கையில தான் சொல்றேன் ஹிஹி!!

டாட்டா அப்பாவி.. வாழ்க அப்பாவி!!வளர்க அவர் புகழ்!!
ஏதோ என்னால முடிஞ்சது:)) வரட்டா!!

Anuradha Kalyanaraman said...

ஹலோ அப்பாவி கதை நல்ல இருக்கு. ஆனா எனக்கு உங்க ஒரு ஊரு, ஒரு பாட்டி, ஒரு வடை அண்ட் உன்னாலே உன்னாலே அந்த ரெண்டு கதை இன்னும் பிடிச்சி இருந்தது.

கீதா மேடம் இன்னும் நான் கூகிள்ல தான் அடிக்கறேன். http://thamizha.com/ekalappai-அஞ்சல் ட்ரை பண்ணலை (சோம்பேறி :-))

பிரியா நீங்க சொன்ன Bhuvana Govind - Buzz - Public - mute வொர்க் ஆகலை.

Thanai thalaivi said...

ஹை......பூச்சாண்டி கதை ! ஆனா பூச்சாண்டி தான் இல்லை !

Kriishvp said...

//"அதீத பயம், அதீத கோபம், அதீத காதல் மூன்றின் போது மட்டுமே ஒருமையில் தன்னை அழைப்பாள் என்பதை அனுபவத்தில் உணர்ந்த கெளதம்"//

இது எல்லா தங்கமணிகளுக்கும் பொருந்தும் :)

திரில்லர் + ரொமான்ஸ் =
என்ன சத்தம் இந்த நேரம்... மொத்தத்தில் சூப்பர்!

Sri Seethalakshmi said...

அப்பாவி நீங்க நல்லவங்களா இல்ல கெட்டவர ? (புரியலேபபபபபபப ஸ்ஸ்ஸ்ஸ்) :) அதே போல் இது திரில்லர் கதைய இல்ல காமடி கதைய ? :)

கதை ரொம்ப சூப்பரா இருந்துச்சு :)
நான்கூட அச்சமுண்டு அச்சமுண்டு படத்தோட பாகம் - 2 னு நினைத்தேன்... :)

நான்கூட கொஞ்சகாலம் (watch your step , caution wet floor ) பாக்கும் போது Final Destination படம் தான் நினைவுக்கு வரும்... :(

priya.r said...

பிரியா நீங்க சொன்ன Bhuvana Govind - Buzz - Public - mute வொர்க் ஆகலை. //

Hi Anu!
Hope Appaavi will look into t matter
ans do the needful at the earliest :)

priya.r said...

அன்புள்ள அப்பாவி தங்கை கிறுக்கிக்கு மன்னிக்கவும் கிருத்திக்கு !

நடந்த விஷயம் கேள்விட்டு வருத்தப்பட்டேன்

இனி ஜான் வந்தாலும் சரி முழம் வந்தாலும் சரி

உன்ற கையால் செய்த இட்லி யை போடவும்

என்ன தலையில போடட்டுமா ன்னு கேட்கிறாயா

வேண்டாம் அப்புறம் ஒருவேளை கொலை குத்தமா போய்ட்டா......

நாளையும் யோசிக்கோணும் அம்மணி ......

வர்றவனுக்கு இலையிலே போட்டு சாப்பிட வச்சு போடு

அப்புறம் உன்ற ஊட்டுக்கு என்ன ...ஊரு பக்கமே வர மாட்டானாக்கும் :))

வெட்டிப்பையன்...! said...

அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் ...பழமொழி ஞாபகம் வருது . தங்கமணியோட சொந்த எக்ஸ்பீரியன்ஸ்ஸ தானே கதைன்கிற பேர்ல போட்டு இருக்கீங்க ...!

வெட்டிப்பையன்...! said...

//# priya.r: உன்ற கையால் செய்த இட்லி யை போடவும் //
:-))

Gayathri said...

Helllo..super nan kuda andha plumber vandhutanonu bhayandhuten.hehe varaathavarai sandhosham.hehehehe

அப்பாவி தங்கமணி said...

@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்கம்மா...:)

@ திண்டுக்கல் தனபாலன் - நன்றிங்க

@ geethasmbsvm6 - அடவம்பே நீங்களுமா மாமி? சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல... ஜஸ்ட் கதை தான்.. :) தொடருங்க தொடருங்க...:)

@ Vasudevan Tirumurti - என்னாச்சு திவாண்ணா...:)

@ தெய்வசுகந்தி - அதானே...;) நன்றிங்க

@ மகேந்திரன் - ரெம்ப நன்றிங்க

@ asiya omar - தேங்க்ஸ்'ங்க ஆஸியா...:)

@ Nithu Bala - தேங்க்ஸ் நித்து... எப்படி இருக்கீங்க? ரெம்ப நாளாச்சு இந்த பக்கம் பாத்து...:)

அப்பாவி தங்கமணி said...

@ Jagannathan - சிறுகதைக்கு தானுங்க முற்றும் போடணும்... தொடர்கதைனா தொடரும் போட்டு இருப்பனே...:) ஜஸ்ட் கிட்டிங்... நன்றிங்க... அந்த பார்லிமென்ட் பேச்சு இங்க ஒரே பேச்சா இருக்கு சில மாதங்களாய்... ரியல்லி கிரேட்... லிங்க் போட்டதுக்கு நன்றிங்க...;)

@ Madhavan Srinivasagopalan - நன்றிங்க சார்... நீங்க சொல்றதும் ஒரு வகைல சரி தான்... இந்த ஊர் வழக்குல சட்டுன்னு 911னு வந்துடுச்சு...:)

@ Lakshmi - நன்றிங்க லக்ஷ்மிம்மா...:)

@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்..:)

@ Thamizhmaangani - தேங்க்ஸ்ங்க... உங்க ப்ளாக் இப்பதான் பாத்தேன்... கலக்கலா எழுதறீங்க...:)

@ தி. ரா. ச.(T.R.C.) - இதெல்லாம் அநியாயம்... எவ்ளோ கஷ்டப்பட்டு யோசிச்சு கற்பனை பண்ணி எழுதறேன்...ஆள் ஆளுக்கு சொந்த அனுபவம்னு கிரெடிட் கிடைக்காம செய்யறீங்க...அவ்வ்வ்வவ்...;)

@ Philosophy Prabhakaran - ஹா ஹா.... உங்க பாயிண்ட்ல நீங்க நிக்கறீங்க...:)

@ பதிவுலகில் பாபு - நன்றிங்க பாபு...;)

@ siva - த்ரில்லர் ஸ்டோரியா? இதுலையே புரிஞ்சு போச்சு சிவா படிக்காம கமெண்ட் போட்டு இருக்காருன்னு... ஹா ஹா... ஜஸ்ட் கிட்டிங்...தேங்க்ஸ்...:)

@ Rishvan - நன்றிங்க ரிஷவன்...

அப்பாவி தங்கமணி said...

@ கீதா - ரெம்ப நன்றிங்க கீதா... அந்த படத்த பாத்துட்டு நானும் நாலு நாள் தூங்கல...:)

@ RAMVI - ஹா ஹா... தண்ணி லீக் ஆகறது சின்ன விசயமுங்களா...;) ஜஸ்ட் கிட்டிங், நன்றிங்க ராம்வி...:)

@ மகி - அப்டீனா...:)))))

@ arul - நன்றிங்க அருள்...:)

@ தங்கம்பழனி - நன்றிங்க

@ Anonymous - சரிங்க, நன்றிங்க...:)

@ ஹுஸைனம்மா - ஆமாமுங்கோ..:)))))

@ Starjan ( ஸ்டார்ஜன் ) - நன்றிங்க...;)

@ priya.r - எனக்கு ஒரே டவுட் என்னனா ப்ரியா அக்கா அக்கௌன்ட்ஐ யாரும் ஹேக் பண்ணிட்டாங்களோனு தான், ஏன்னா எங்க அக்காவுக்கு "ஒருவார்த்தை"ல எல்லாம் கமெண்ட் போட தெரியாதே...:)))

அப்பாவி தங்கமணி said...

@ கோவை2தில்லி - நன்றிங்க ஆதி...:)

@ அமைதிச்சாரல் - நம்பனுங்கோ... நன்றிங்கோ...:))

@ divyadharsan - ஆஹா...அஞ்சு சூப்பரா? சூப்பரோ சூப்பர்...:) அம்மா தாயே, நீயும் சொந்த கதைனு சொல்லாதே, எனக்கு ரெம்ப புடிச்ச என் ப்ளாக் மேல சத்தியமா இது கற்பனை தானுங்க...:) காஞ்சனா படம் பாத்துட்டு நாலு நாள் முக்காடு போட்ட கதை எல்லாம் நமக்குள்ள இருக்கட்டும்... பப்ளிக் வாட்சிங்...:))) நீ ப்ளாக் எழுது திவ்யா படிக்க நான் ரெடி...:) என்னது பேய் கதை எழுதறதா, சும்மாவே அப்படிதான் பேரு, இனி அதை வேற எழுதுனா கிழிஞ்சது கிருஷ்ணகிரி... ஆனா உன்னோட அப்ரோச் சூப்பர்... எனக்கும் அப்படி தான் தோணுச்சு... ட்ரை பண்றேன் திவ்யா...:)))

@ Anuradha Kalyanaraman - தேங்க்ஸ்'ங்க அனுராதா, எனக்கும் "உன்னாலே உன்னாலே" டாப் மோஸ்ட் பேவரெட் ஸ்டோரி...:) buzz சர்வீசையே இப்ப க்ளோஸ் பண்ணிட்டாங்க அனுராதா, நிஜமாதான்... கூகிள் டௌன் டௌன்னு சொல்லிட்டு இருக்கேன்...ரியல்லி ஐ மிஸ் பஸ்...:((

@ Thanai thalaivi - அதான் பூச்சாண்டி கமெண்ட் போட வந்துட்டாங்களே...ஹி ஹி... சரி சரி நோ டென்ஷன் தலைவி அக்கா...:))

@ Kriishvp - ரெம்ப நன்றிங்க...:)

@ Sri Seethalakshmi - ஹா ஹா ஹா... உங்க கமெண்ட் பாத்து ஒரே சிரிப்பா சிரிக்கறேன்...:) Final Destination பேரை சொன்னாலே சும்மா அதிருதில்ல தானுங்க எனக்கும்... பிளைட் ஏறக்கூட பயமா இருந்தது... also ரோலர் கோஸ்டர்...:) இல்லேனா மட்டும் ரோலர் கோஸ்டர் ஏறுவியோனு என் மைண்ட்வாய்ஸ் திட்டுதுங்க...:)

அப்பாவி தங்கமணி said...

@ priya.r - அதான் இழுத்து சாத்திட்டாங்களே ப்ரியாக்கா... அவ்வ்வ்வவ்...ஐ மிஸ் buzz...;((((


//அப்பாவி தங்கை கிறுக்கிக்கு மன்னிக்கவும் கிருத்திக்கு//
அதான் உங்க தங்கைனு சொல்லி போட்டீங்கல்ல, கிறுக்கியா இல்லாம பொறவு வெவரமாவா இருக்கும்...;))


//இனி ஜான் வந்தாலும் சரி முழம் வந்தாலும் சரி //
அப்ப மீட்டர் சென்டிமீட்டர் வந்தா என்ன செய்யறது ப்ரியாக்கா...;)


//உன்ற கையால் செய்த இட்லி யை போடவும் //
இட்லிய கைல செய்ய முடியாதுங்... இட்லி சட்டில தானுங் செய்யோனுங்...;)//என்ன தலையில போடட்டுமா ன்னு கேட்கிறாயா //
உங்க தலைலையா? நீ கேட்டால் நான் மாட்டேனென்றா சொல்வேன் அக்கா...;))


//வேண்டாம் அப்புறம் ஒருவேளை கொலை குத்தமா போய்ட்டா//
உங்க மேல போட்டா தியாகி பட்டம் தர்றதா கேள்விப்பட்டனே...:)


//நாளையும் யோசிக்கோணும் அம்மணி //
அப்ப இன்னைக்கி யோசிக்க வேண்டாமா ப்ரியக்கா...;)


//வர்றவனுக்கு இலையிலே போட்டு சாப்பிட வச்சு போடு //
இலைய சாப்பிடறதுக்கு அவன் என்ன ஆடா...:)

அப்பாவி தங்கமணி said...

@ வெட்டிப்பையன்...! - ஆஹா.. நீங்களுமா? நான் எழுதுவதெல்லாம் கதை, கதை தவிர வேறில்லை...;))) இட்லி பார்சல் உங்களுக்கு தான் அனுப்பனும் போல இருக்கு'ங்க...:)

@ Gayathri - ப்ளம்பர் வந்திருந்தா கதை கந்தலா போய் இருக்குமே காயத்ரி... அவ்வ்வ்வவ்..;)

Thanai thalaivi said...

பூச்சாண்டி என்று ஒரு பதிவர் இருக்கிறார் என்று இப்போது தான் தெரிந்தது. நாம் அவரைத்தான் சொல்கிறோம் என்று நினைத்து சண்டைக்கு வந்து விட போகிறார்.

அப்பாவி தங்கமணி said...

ஆஹா... அப்படி ஒருத்தங்க இருக்காங்களா... நான் வல்ல இந்த விளையாட்டுக்கு...;))

மதுமதி said...

நல்லதொரு கதை தோழர்..இதை வலைச்சரத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.நேரமிருந்தால் பார்வையிடவும்.

அப்பாவி தங்கமணி said...

@ மதுமதி - Thanks Madhumadhi...;)

Anonymous said...

hahaha, kadhai aanalum romba interestinga irunthathu naina.

அப்பாவி தங்கமணி said...

@ Anonymous - Nanringa...:)

Post a Comment